Archive for the ‘தேவ ஊழியர்’ Category

பாஜக-இந்துத்துவவாதிகளின் கிறிஸ்துவர்களுக்கான கிறிஸ்துமஸ் கால சினேஹ யாத்திரை ஏன்? (1)

திசெம்பர் 23, 2023

பாஜகஇந்துத்துவவாதிகளின் கிறிஸ்துவர்களுக்கான கிறிஸ்துமஸ் கால சினேஹ யாத்திரை ஏன்? (1)

தமிழக இந்துத்துவவாதிகளால் இந்துகளுடனே உரையாடல் வைத்துக் கொள்ள முடிவதில்லை: தமிழகத்தில் இருக்கும் இந்துத்துவவாதிகள் இரட்டை வேடம் போடுகிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி வந்ததுண்டு. அடிக்கடி அவர்களது குழுக்கள், கோஷ்டிகள், கும்பல்கள் திடீரென்று வருடாவருடம் அல்லது காலத்திற்கு ஏற்றபடி மாறுவதும் கவனிக்கப் படுகிறது. ஏதோ கொள்கை, நியாயம், தர்மம் எண்றெல்லாம் பெரிய யோக்கியர்கள் போல பேசினாலும், சிலரின் போக்கு, நடத்தை முதலியவை நிச்சயமாக அவ்வாறில்லை. துரோகம் செய்வதிலும் வல்லவர்களாகி விட்டனர். அரசியல் ஒருவேளை அவர்களை அவ்வாறு செய்து விட்டது போலும். “குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று தமிழக அரசியலில் சொல்வதைப் போல, இப்பொழுது, இவர்களும் மாறத்தான் மாறியிருக்கிறார்கள். அரசியலில் சேர்ந்த பிறகு ஒழுக்கத்தை எல்லாம் பற்றி பேச முடியாது, பேசக் கூடாது என்றால், பிறகு அவ்வாறே அரசியல்வாதியாக இருந்து விட்டுப் போகலாம். பிறகு, ஏதோ “ரிஷி-முனி-மகான்” போன்றெல்லாம் பேசக் கூடாது. தமிழக இந்துத்துவவாதிகளால் இந்துகளுடனே உரையாடல் வைத்துக் கொள்ள முடிவதில்லை, நண்பர்களாக இருக்க முடிவதில்லை. பிறகு, கிறிஸ்தவர்களின் மீது எப்படி பாசம் கிளம்புகிறது?

கிறிஸ்தவஇந்துத்துவ உரையாடல்கள்: இந்த “கிறிஸ்துவ” உறவுகள், பாசங்கள், நேசங்கள் விவகாரங்களில் அவர்களது போக்கு விசித்திரமாக, வினோதமாக, முரண்பாடாக, திகைப்பாகத்தான் இருக்கிறது. நட்பு ரீதியில் நண்பர்களாக எல்லோருடனும் இருக்கலாம், அந்த நட்பைப் போற்றலாம், வாழலாம். ஆனால், ஒரு பக்கம் இப்படி- இன்னொரு பக்கம் அப்படி என்று இருக்கக் கூடாது- முடியாது. அப்படி இருக்க முடியும், இருக்கிறார்கள் என்றால், நிச்சயாமாக அவர்களிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று தான் முடிவாகிறது. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,” என்று சொல்லிவிட்டால், யாரும் கேட்கப் போவதில்லை. மற்ற நம்பிக்கையாளர்களுடன், மதத்தவர்களுடன் “உரையாடல்” என்று வைத்துக் கொள்வது, கிறிஸ்தவர்களின் திட்டங்களுள் ஒன்றாகும். அவர்கள் அதை மறைத்ததில்லை, தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேரளாவில் கிறிஸ்தவஇந்துத்துவ உரையாடல்கள்: கேரளாவைப் பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் கிறிஸ்துவர்கள் அல்லது சர்ச்சுகளிடையே மோதல்கள் இருந்து கொண்டிருந்தன. அதனால், அவ்வப்பொழுது, அவர்கள் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஶ்ரீசுதர்சன்ஜி இருக்கும் பொழுது, அத்தகைய உரையாடல்கள் நடந்துள்ளன. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பலமுறை உரையாடல்கள் நடந்துள்ளன. மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பொழுதும், அத்தகைய சந்திப்புகள் நடந்துள்ளன.  இஸ்ரேலுடனான உறவும் அவ்வாறே கவனிக்கப் படுகிறது. மணிப்பூர் விவகாரம் விரிசலை ஏற்படுத்தியது. அதனால், இந்துத்துவவாதிகள் கிறிஸ்துவர்களுடன் “உரையாடல்” வைத்துக் கொள்வது அரசியல் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது, ஏனெனில், அவர்களுக்கு ஒன்றும் “’இறையியல்” உரையாடல் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களுக்கு இறையியலில் எல்லாமே உண்டு. ஆக, அந்ந்நிலையில் “சிநேக யாத்திரை” கவனிக்கப் படுகிறது.

05-12-2023 அன்று நடைபெற்ற கேரளா மாநில பா.. உயர்மட்டக்குழுக் கூட்டம்: ஐந்து மாநிலத் தேர்தலில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருகிறது பா.ஜ.க. இந்த நிலையில் கேரளா மாநில பா.ஜ.க உயர்மட்டக்குழுக் கூட்டம் 05-12-2023 அன்று கோட்டயத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்த திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. மக்களவைத் தோ்தல் நெருங்கிவரும் சூழலில், கேரள மக்கள்தொகையில் கணிசமான பங்கு வகிக்கும் கிறிஸ்தவா்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில், இந்த ஆண்டு ஈஸ்டா் திருநாளையொட்டி முதன்முதலாக இந்தப் பரப்புரை தொடங்கி நடத்தப்பட்டது[1]. தற்போது ‘கிறிஸ்துமஸ்’ மற்றும் ‘ஆங்கிலப் புத்தாண்டு’ பண்டிகை காலத்தையொட்டி, ஸ்நேக யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது[2].

டிசம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஸ்நேஹ யாத்ரா: மேலும், கிறிஸ்தவ மக்களை நெருங்கிச் செல்லும்விதமாக ‘சினேக யாத்திரை’ என்ற திட்டத்தை செயல்படுத்துவது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது[3]. அதன்படி கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, வரும் டிசம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கிறிஸ்துவ மக்களின் வீடுகளுக்கு பா.ஜ.க நிர்வாகிகள் செல்ல வேண்டும் எனவும், கிறிஸ்துவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது[4]. இந்த “சகஜமான” யாத்திரை, மேலிடம் ஆசிர்வாதத்துடன் தான் நடைபெறுகிறது என்றும் உறுதியாகத் தெரிகிறது. ஏனெனில், கார்டினலிடம், “சுரேந்திரன், அவரிடம் பிரதமா் நரேந்திர மோடியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்,” என்றதிலிருந்து தெரிகிறது.

21-12-2023 கார்டினல் ஜார்ஜ் ஆலன்செரியை சுரேந்திரன் சந்தித்தது: அன்று ஸ்நேக யாத்திரையின் தொடக்கமாக காக்காநாடு பகுதியின் பிரபல சீரோ மலபார் தேவாலயத்தின் முன்னாள் தலைவா் கார்டினல் ஜார்ஜ் ஆலன்செரியை 21-12-2023 வியாழக்கிழமை நேரில் சென்று சந்தித்த பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன், அவரிடம் பிரதமா் நரேந்திர மோடியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்[5]. தேவாலயப் பிரதிநிதிகளைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களையும் சுரேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்[6]. தேவாலயப் பிரதிநிதிகளுடன் 45 நிமிஷங்களுக்கும் மேலாக நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டவை குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை[7]. இது நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே எனத் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவா் கே.எஸ்.ஸாய்ஜு மேலும் கூறுகையில், ‘பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவா்களிடம் தெரிவித்தோம்[8]. மணிப்பூா் விவகாரத்துக்குப் பிறகு தேவாலயத்துக்கும் பாஜகவுக்கும் மோதல் நிலவுவதாகப் பரவிய செய்தியில் உண்மையில்லை. எங்களுக்கிடையே எப்போதும் நல்லுறவு நீடித்து வருகிறது. டிசம்பா் 30-ஆம் தேதி வரை கிறிஸ்தவா்களின் வீடுகளுக்குச் சென்று பாஜக நிர்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள்’ என்றார்.

கிறிஸ்துவுக்குத் துரோகம்’-காங். விமா்சனம்: பாஜகவின் பரப்புரையை விமா்சித்து கேரள காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘கேரள கிறிஸ்தவ மதத்தினரைச் சந்தித்து பாஜகவினா் வாழ்த்து தெரிவிப்பது ‘ஸ்நேக யாத்திரை’ அல்ல, ‘கிறிஸ்துவுக்கு இழைக்கப்பட்ட துரோகம்’. நாடு முழுவதும் சிறுபான்மையினரை ஏமாற்றும் வரலாறு கொண்ட பாஜகவினா், கேரளத்தில் மட்டும் அவா்கள் மீது அன்பைப் பொழிகின்றனா்’ எனக் குறிப்பிட்டார். ஒருவேளை கிறிஸ்தவ மதத்திற்கு நெருக்கமாக நாங்கள் தான் இருக்கிறோம் என்பதனை காட்டுவதற்காக காங்கிரஸ்காரர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள் போலும். ஏனெனில், சோனியா மைனோ என்கின்ற சோனியா காந்தி கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்த விஷயமே. அதே போல அவர்களது குடும்பமும் சர்ச்சுடன் மிகுந்த நெருக்கத்தை கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே. ஆகையால் இப்பொழுது திடீரென்று பாஜககாரர்கள் கிறிஸ்தவர்களுடன் நெருக்கத்துடன் வரும் போக்கை பார்க்கும் பொழுது, அவர்களுக்கு ஒரு வேலை ஏற்பட்ட பொறாமையால் இவ்வாறு சொல்கிறார்களோ என்றும் கவனிக்கலாம். எப்படி இருந்தாலும் “கிறிஸ்துவுக்கு செய்த துரோகம்” என்று சொல்லும் பொழுது இது மேலும் விசித்திரமாக தான் இருக்கிறது. எனவே அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தும், இவ்வாறு நடக்கிறதே என்று திகைத்து விட்டார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

23-12-2023.


[1] காமதேனு, கேரளாவில் கிறிஸ்துவர்களின் வீடுகள், சர்ச்சுகளுக்கு சினேக யாத்திரைபாஜகவின் பலே வியூகம்!, Updated on: 22 Dec 2023, 11:45 am.

[2] https://kamadenu.hindutamil.in/politics/sneha-pilgrimage-to-christian-homes-and-churches-in-kerala-bjps-strategy

[3] விகடன், சினேக யாத்திரை: கிறிஸ்தவர்களைச் சந்திக்கச் செல்லும் பாஜகசிறுபான்மை வாக்குகளை வளைக்க திட்டம்!, சிந்து ஆர், Published:06 Dec 2023 10 AM; Updated:06 Dec 2023 10 AM.

[4] https://www.vikatan.com/government-and-politics/bjp-plans-for-sneha-yatra-to-target-christian-voters

[5] தினமணி, பாஜக: கேரளத்தில் மீண்டும் தொடங்கும்ஸ்னேக யாத்திரை, By DIN  |   Published On : 21st December 2023 03:22 PM  |   Last Updated : 21st December 2023 03:48 PM  |

[6] https://www.dinamani.com/india/2023/dec/21/bjp-relaunches-sneha-yatra-to-connect-with-christians-in-kerala-4126575.html

[7] தினமணி, கிறிஸ்தவா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் கேரள பாஜகவின் யாத்திரை மீண்டும் தொடக்கம், By DIN  |   Published On : 22nd December 2023 12:00 AM  |   Last Updated : 22nd December 2023 12:00 AM.

[8] https://www.dinamani.com/india/2023/dec/22/kerala-bjps-pilgrimage-to-greet-christians-begins-again-4126858.html

கணவனை இழந்த பிரின்சி, பாஸ்டர் டேனியலுடன் சேர்ந்து வாழ்ந்தது, அதிக செக்ஸ் சதாய்ப்பால், கொலை செய்தது!

திசெம்பர் 12, 2023

கணவனை இழந்த பிரின்சி, பாஸ்டர் டேனியலுடன் சேர்ந்து வாழ்ந்தது, அதிக செக்ஸ் சதாய்ப்பால், கொலை செய்தது!

டேனியல்பிரின்சி கிறிஸ்தவ ஊழியம்வேலை: பாலியல் தொல்லை கொடுத்த மத போதகரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வேலைக்கார பெண்ணை 07-12-2023 அன்று கைது செய்தனர்[1]. வழக்கம் போல, ஊடகங்கள் இச்செய்தியை பி.டி.ஐ பாணியில் வெளியிட்டுள்ள, ஆனால், நேரில் சென்றோ, விசாரித்தோ, ஆய்ந்தோ மேலும் விவ்ரங்கள் எதையும் வெளியிடவில்லை. இணைதள பதிப்புகள் தலைப்பு மட்டும் மாற்றி-மாற்றி, அரைத்த மாவையே அரைத்துள்ளது. கதிர் செய்தி, தினத்தந்தி-உபயம் என்றே வெளிப்படையாகப் போட்டுள்ளது. கடலூரை சேர்ந்தவர் வீராசாமி (எ) டேனியல் (62)[2]. வழக்கம் போல இவ்வாறு இரண்டு பெயர்களை வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போட்டு வரும் “மைனாரிட்டி” மற்றும் “இந்து” என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் கும்பலில் இவனும் ஒருவன் என்று தெரிகிறது. மதபோதகரான இவர், கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மண்டையூரில் வாடகை வீட்டில் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் மத போதனையில் ஈடுபட்டு வந்தார்[3]. சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி, மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்[4]

செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கொலைவெறி தாக்குதல்: இவரது வீட்டில் சமையல் வேலை செய்து வந்த மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி செல்வி (எ) பிரின்சி (46) என்பவருக்கு டேனியல் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது[5]. ஆக, பெண்களும் இப்படி இரண்டு பெயர்களை வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், செல்வியோடு டேனியலுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது[6]. இந்நிலையில் நேற்று முன்தினம் 06-12-2023 நள்ளிரவிலும் டேனியல், மீண்டும் பிரின்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது[7]. அதிகாலை 2 மணிக்கு பாலியல் உறவுக்கு டேனியல் அழைத்தான் என்கிறது தினமலர்[8]. அதாவது, இது தொடர்ந்து நடந்து வரும் விவகாரமாக இருக்கிறது போலும். இதில், ஆத்திரமடைந்த பிரின்சி, டூவீலரில் உள்ள இரும்பு கம்பியை எடுத்து / சைக்கிள் பல் சக்கரத்தால் டேனியலை சரமாரியாக தாக்கினார்[9]. இதில், பலத்த காயமடைந்த டேனியல் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்[10]. வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் டேனியலின் வீட்டிலிருந்து சப்தம் கேட்டதாக அக்கம்பக்கத்து வீட்டார் மண்டையூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து வீட்டுக்கு போலீஸார் வந்து பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் டேனியல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பிரின்சியும் அங்கே இருந்துள்ளார்.

சேர்ந்து வாழ்ந்த பிரின்சியும், அதிக செக்ஸ் சதய்ப்பில் ஈடுபட்ட டேனியலும்: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியல் வீட்டுக்கே சென்று தங்கிய செல்வி அங்கேயே தங்கியுள்ளார்[11]. சேர்ந்து வாழலாம் என்று உச்சநீதி மன்றமே தீர்ப்புக் கொடுத்துள்ளதால், பாஸ்டர் அமூல் படுத்தியுள்ளார் போலும். இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் செல்வி அழுதுகொண்டு அமர்ந்திருந்திருக்கிறார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், விசாரித்தபோது, மத போதகர் டேனியலை, தான் கொலை செய்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்[12]. அங்கே கொலை செய்யப்பட்டுக் கிடந்த டேனியல் உடலைப் பார்வையிட்டு, அங்கிருந்த செல்வியிடம் விசாரணை நடத்தினர்[13]. அவர்களின் விசாரணையில் செல்வி, “மத போதகர் டேனியல் எனக்கு தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். அதேபோல நேற்று முன்தினம் இரவும் என்னிடம் அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்துக்கொண்டு, டார்ச்சர் செய்தார்[14]. அதனால், எனக்கு அவர்மீது கோபம் ஏற்பட்டு, அவரைக் கீழே தள்ளியதில் அவர் மயக்கமடைந்தார்[15]

பணம் கேட்டுக் கொடுக்காதலால் கொலை: இதுகுறித்து தகவல் அறிந்து நேற்று 07-12-2023 காலை அங்கு வந்த மண்டையூர் போலீசார் டேனியலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக / உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பிரின்சியை கைது செய்தனர்[16]. இதுபற்றி போலீசார் கூறுகையில், “கடந்த ஒரு மாதமாக வேலைக்கார பெண் பிரின்சிக்கு, மதபோதகர் டேனியல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதவிர மதபோதகரிடம், பிரின்சி பணம் கேட்டு கடந்த மூன்று தினங்களாக தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு டேனியல், அடிக்கடி பணம் தரமுடியாது. கொடுக்கும் போது வாங்கி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் பிரின்சி, இரும்பு கம்பியால் டேனியலை தாக்கி கொன்றது தெரியவந்துள்ளது. பாலியல் தொந்தரவால் டேனியலை அடித்து கொன்று விட்டு பணத்துக்காக கொன்றதாக பிரின்சி நாடகமாடுகிறாரா என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,” என்றனர்.

மண்டையூரில் ஊழியம் செய்யும் இவனது வேலை என்ன?: மண்டையூர் ஊராட்சி (Mandaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4283 ஆகும். இவர்களில் பெண்கள் 2178 பேரும் ஆண்கள் 2105 பேரும் உள்ளனர். இவ்வாறு 4,000 மக்கள் இருக்குமிடத்தில் வாடகை வீட்டில் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் மத போதனையில் ஈடுபட்டு வந்தான் என்றால், அவ்வாறு அவனை ஊக்குவிப்பது யார், நிதியுதவி எப்படி கிடைக்கிறது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. மேலும், பாலியல்-செக்ஸ், வன்முறை-கொலை என்பதெல்லாம் கிருத்துவர்களுக்கு சகஜமாகியுள்ளது, தொடர்ந்து வரும் செய்திகளும் வெளிப்படுத்துகின்றன.

ஒழுக்கத்தை மீறி, ஒழிங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை தான் கிடைக்கும்: பிரின்சி கணவனை இழந்தது, சமையல் வேலை செய்ய டேனியலிடம் சென்றது; டேனியல் (62) மற்றும் பிரின்சி (46) சேர்ந்து வாழ்ந்தது. சேர்ந்து வாழும் உறவு தொடர்ந்தது; திடீரென்று வெறுப்பு-கொலைவெறி உண்டானது; அந்த அளவுக்கு செக்ஸ்-டார்ச்சர் கொடுத்தது; கொலையில் முடிந்தது..ஆகவே, மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று இருப்பவர்கள், வேலை செய்பவர்கள் அவ்வாறே புலன்களை அடக்கிக் கொண்டு சேவை செய்ய வேண்டும். இல்லையெனில், அத்தகைய கூடா ஒழுக்கம் முதலியன, ஒழிங்கினங்களில் தான் முடியும். கடவுள் தண்டனை கொடுப்பார், மன்னிக்க மாட்டார்.

கிறிஸ்துவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்: கிறிஸ்துவத்தில் தொடர்ந்து எவ்வாறு பாஸ்டர்கள், பாதிரியார்கள், பிஷப்புகள் என்று பலர் அடிக்கடி இத்தகைய பாலியல் வன்மங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது பற்றி நிறையவே எழுதியாகிவிட்டது. அலசி-ஆய்ந்தும் செய்தாகிவிட்டது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக தமிழகத்திலும், பாலியல் வன்மங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், கிறிஸ்துவ மேல் இடங்கள் ஏன் இப்பிரச்சனையைப் பற்றி முறையாக ஆய்வு செய்யவில்லை அல்லது இத்தகைய ஒழுங்கினங்களில் ஈடுபடும் பாஸ்டர்கள் பாதிரிகள் முதலியோரை கட்டுப்படுத்த அல்லது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை செய்யாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது. ஏனெனில் இது அடிக்கடி நடக்கின்றன, ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. கற்பழிப்பு, பாலியல் சதாய்ப்பு, செக்ஸ்-வன்மம், ஏன் கொலைகளும் நடந்து கொண்டிருப்பதால், போலீஸ்காரர் நடவடிக்கைகளும், நீதிமன்ற தண்டனைகளும் நிறைவேறிக் கொண்டுதான் இருக்கின்றன, அபயா கொலை வழக்கு என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் இவை தொடர்ந்து நடந்து வருவது என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது அல்லது நடக்கிறது நடந்து விட்டு போய் போகட்டும் என்று தொடர்ந்து இவ்வாறு அமைதியாக இருந்து காலத்தை கழித்து விடுவார்களா என்றெல்லாம் புரியாமல் தான் இருக்கின்றன. இருப்பினும் இந்தியாவில்- தமிழகத்தில் பலர் இதனை உன்னிப்பாக பார்க்க கவனித்து கொண்டிருப்பதால், நிச்சயமாக அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களை திருத்தி கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

© வேதபிரகாஷ்

09-12-2023


[1] தினகரன், பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் அடித்து கொலை: வேலைக்கார பெண் கைது, December 8, 2023, 12:31 am.

[2] https://www.dinakaran.com/priest_beaten_death_sexual_harassment_girl_arrested/ – google_vignette

[3] தினமலர், பாலியல் தொல்லை தந்த மத போதகர் கொலை: வேலைக்கார பெண் கைது, பதிவு செய்த நாள்: டிச 08,2023 07:26.

[4] https://m.dinamalar.com/paytm/detail.php?id=3499019

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நேரம் காலம் பார்க்காமல் ஓயாமல் செக்ஸ் டார்ச்சர்.. 61 வயது மத போதகரை ஆத்திரத்தில் கொலை செய்த 46 வயது பெண்..!, First Published Dec 9, 2023, 1:41 PM IST.

[6] https://tamil.asianetnews.com/gallery/gallery/christian-father-murder-women-arrest-in-pudukottai-tvk-s5e43v

[7] தினமலர், மத போதகர் கொலை வேலைக்கார பெண் கைது, பதிவு செய்த நாள்: டிச 07,2023 23:28.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3498455

[9] கதிர்.நியூஸ், தகாத முறையில் தொல்லை கொடுத்த மத போதகர் அடித்துக் கொலைபெண் பரபரப்பு வாக்குமூலம், By : Karthiga  |  SOURCE :DAILY THANTHI, 8 Dec 2023 12:15 PM.

[10] https://kathir.news/news/religious-preacher-beaten-to-death-for-harassing-her-inappropriately-woman-sensational-confession-1508412

[11] காமதேனு, தினமும் பாலியல் டார்ச்சர்தாங்க முடியாமல் மத போதகரை கொலை செய்த பெண்!, Updated on : 09 Dec 2023, 9:38 am

[12] https://kamadenu.hindutamil.in/crime-corner/young-woman-arrested-for-murdering-religious-pastor

[13] தமிழ்.ஒன்.இந்தியா, “அதுவிஷயமே வேற.. கடலூரை கலங்கடித்த செல்வி.. வீட்டில் நுழைந்து பார்த்தால்.. ஐய்யயோ சைக்கிள் செயினா?, By Hemavandhana, Updated: Saturday, December 9, 2023, 18:41 [IST].

[14] https://tamil.oneindia.com/news/cuddalore/cuddalore-young-woman-and-who-is-this-young-woman-what-did-she-confessed-to-the-pudukkottai-police-564449.html

[15] தினமணி, மதபோதகா் கொலை: பெண் கைது, By DIN  |   Published On : 08th December 2023 12:23 AM  |   Last Updated : 08th December 2023 12:23 AM.

[16] https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2023/dec/08/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4118750.html

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

நவம்பர் 11, 2022

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

இந்து குடும்பம் மதம் மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5].  சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6].  போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.

பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8].  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர்.  இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.

உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.

மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].

2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12].  இங்கும், அது பொறுந்தும்..

© வேதபிரகாஷ்

11-11-2022


[1] மாலைமலர், இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர , Byமாலை மலர்11 நவம்பர் 2022 8:01 AM.

[2] https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-search-youth-for-harassment-case-535220?infinitescroll=1

[3] தினத்தந்தி, இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர், தினத்தந்தி நவம்பர் 11, 1:29 am.

[4] https://www.dailythanthi.com/News/State/the-doctors-family-was-with-the-dead-womans-body-for-2-days-834297

[5] விகடன், மதுரை: உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!, செ.சல்மான் பாரிஸ், Published: 11-11-2022- Today at 10 AM; Updated: Today at 10 AM

[6] https://www.vikatan.com/news/tamilnadu/family-members-kept-body-for-three-days-hoping-that-she-will-come-back-in-prayers

[7] பாலிமர் செய்தி, இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்…! மதுரையில் சம்பவம், நவம்பர்.11, 2022 06:28:51 AM; https://www.polimernews.com/dnews/191621

[8] https://www.polimernews.com/dnews/191621

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!, By Rajkumar R, Published: November 11 2022, 12:07 [IST].

[10] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/the-husband-prayed-for-3-days-that-the-dead-woman-would-come-back-to-life-484738.html

[11] வேதபிரகாஷ், இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?, ஜனவரி 1, 2021.

[12] https://christianityindia.wordpress.com/2021/01/01/would-the-dead-raise-again-christians-keeping-dead-bodies-tamilnadu-case/

கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாசபடம் பார்க்கின்றனர்” – போப் வேதனை – இன்டர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?

ஒக்ரோபர் 31, 2022

கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாச படம் பார்க்கின்றனர்” – போப் வேதனைஇன்டர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?

கத்தோலிக்கக் கிறிஸ்தவம் உலகை ஆட்டிப் படைத்தது: கிருத்துவம், குறிப்பாக, கத்தோலிக்க கிருத்துவம், இடைகாலத்திலிருந்து உலகை ஆட்டி படைத்து வருகிறது. காலனிய ஆதிக்கம் மூலமும் ஆதிக்கத்தை செல்லுத்தி வந்தது. உலக யுத்தங்களிலும் நாசத்தை உண்டாக்கி, பிறகு பிரிந்த நாடுகளில் தனது தாக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. பற்பல தொன்மையான நாகரிகங்களை மக்களை அழித்த வரலாறும் உண்டு. ஏனெனில், கத்தோலிக்கம் தான்தான் உண்மையான மதம் என்ற அகம்பாவம், ஆணவம் கொண்டது. இத்தாலியில், வாடிகன் “ஸ்டேன் வித்தின் ஸ்டேட் ஓரு நாட்டிற்குள் இன்னொரு நாடு என்ற ரீதியில் கோலோச்சி வருகிறது. இத்தகைய அதிகார, ஆதிக்க, ஆளுமை கொண்ட நிலையில், போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே அந்தந்த மயக்கங்களில் பற்பல பாவங்களை செய்து வருகிறார்கள் என்பதை, கடந்த காலங்களில் அவரவர் எழுதி வந்த புத்தகங்கள், அறிக்கைக்கள், வாடிகனின் நடபடிகள் என்று பல ஆவணங்களில் பதிவாகியுள்ளதையும் கவனிக்கலாம்.

கத்தோலிக்கத்தில் திருமணம் கூடாது: திருமணம் செய்து கொள்ளக் கூடாது, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் போதிக்கப் பட்டாலும், கன்னியாஸ்திரிக்கள் விவகாரங்களில் போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே, பல நிலைகளில், பல காலங்களில் வரம்புகள் மீறி காதலில், காமத்தில் ஆண்-பெண் உறவுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது சகஜமாகி விட்ட நிலையில், பற்பல சமரசங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. அக்காலத்திலேயே “கான்வென்டுகள்” அதற்காக உருவாக்கப் பட்டன. இந்தியாவிலேயே கன்னியாஸ்திரிக்கள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாவது, கற்பழிக்கப் படுவது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் மாட்டிக் கொள்வது வாடிக்கையான விவகாரங்களாகி விட்டன.  கேரளாவில், இது தினம்தினம் செய்திகளாகவும் மாறி விட்டன. இருப்பினும், அத்தகைய பாலியல் குற்றங்கள் பல மறைக்கப் படுகின்றன, செய்திகளில் வெளிவந்தாலும், கொஞ்சம்-கொஞ்சமாக சரிகட்டப் பட்டு, அமுக்கப் படுகின்றன. சில நாட்களில், பொது மக்களும் அவற்றை மறந்து விடும் நிலைக்கு சென்று விடுகிறது.

வாடிகனே அத்தகைய குற்றங்களில் பாதிக்கப் பட்டுள்ளது: பொருளாதார குற்றங்கள் சாதாரணமாக உள்ள நிலையில், பாலியல் குற்றங்கள் பிடோபீலியா, போர்னோகிராபி, ஓரின சேர்க்கை, என்று பலவித உருவங்களில் நவீன காலங்களில் அதிகமாகியுள்ள. இவையெல்லாம், போப் அவ்வப்பொழுது விவாதித்து வருகிறார். அறிக்கை-ஆணைகள் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது, வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தளத்தை எப்படி நல்ல விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது[1]. இத்தகைய கூட்டங்கள், மாநாடுகள், உரையாடல்கள் நடப்பது சாதாரணமான விசயங்கள் ஆகிவிட்டன. அப்போது பேசிய அவர், “இணையத்தில் வரும் ஆபாசப்படங்கள் தீமையை விளைவிக்கிறது[2]. மேலும் அதன் மூலம் ஏற்படும் விளைவுகள்,” அபாயத்தைப் பற்றி எச்சரித்துள்ளார்[3]. செல்போன் உபயோகம் பற்றி வாத-விவாதங்கள் நடந்த போது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரிக்கள் அவற்றில் மூழ்கியுள்ளார்கள் என்றும், போர்னோகிராபி என்கின்ற மோசமான ஆபாசப் படங்களைப் பார்த்து வருகிறார்கள் என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சாத்தான் இப்பொழுதெல்லாம், ஆப்பிள் கொடுத்து தான் வரவேண்டும் என்பதில்லை, “ஆப்பிள்” மூலமும் வந்டு கொண்டிருக்கிறான். இனைதளம், ஆன்லைனில் வருகிறான், சாபிட வைக்கிறான், ஆதிக்கம் செல்லுத்துகிறான்.

கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை: அதற்கு கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை[4]. ஏனெனில், அடக்கி வைக்கப் பட்ட இயற்கையான பெண்ணின் காமம், இதனால், எளிதில் தூண்டப் படுகிறது. செயல்பாட்டில் இறங்கும் போது, சுய-இன்பம் என்று ஆரம்பித்து, ஒரு ஆடவனுடன் புனைய காமம் தலைத் தூக்குகிறது. இதை இயற்கையாக உண்டாவதால், தடுக்க முடியாது. இதனால், பெண்மை சீரழிகிறது, ஏசுகிறிஸ்துவின் பந்தம் அறுபடுகிறது, சாத்தான் அதிலிருந்து வருகிறது. மனத்திற்குள்ளே செல்கிறது[5]. போதகர்களின் இதயத்தை நலினப்படுத்துக்கிறது என்றெல்லாம் விளக்கி கூறினார், வருத்தப் பட்டார்[6]. ஆனால், அதே நேரத்தில், பிடோபிலியா, ஓரின சேர்க்கை, கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பதனையும் கவனிக்க வேண்டும். கடந்த வருடங்களாக போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஆபாசப்படங்களினால் ஏற்படும் தீமையைப் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறார்[7].

இன்டெர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?: தொடர்ந்து, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்களை நல்ல முறையில் உபயோகிக்க வேண்டும், அதில் அதிக நேரம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்[8]. நல்ல இதயங்களில் தினமும் ஏசுவை வரவழைத்துக் கொள்ள வேண்டும், ஆனால், இத்தகைய விவகாரங்களை அல்ல.  மேலும் தூண்டுதல்கள் ஏற்படுத்தாத வகையில் ஆபாசப்படங்களை போனில் இருந்து நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்[9]. கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப்படங்கள் பார்ப்பதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்[10].  ஆபாசப் படங்களை போனிலிருந்து, நீக்கிவிடலாம்,  ஆனால், இன்டர்நெட் இருக்கும் வரை பார்த்துக் கொண்டு தானே இருப்பார்கள். இது போப்பிற்குத் தெரியாடா என்ன, பிறகு, செல்போன் தடை செய்ய முடியுமா. கம்ப்யூட்டர், லாப்டாப், போன்றவை உபயோகப் படுத்தக் கூடாது என்று ஆணையிட முடியுமா?

போர்னோகிராபி சமூகத்தை சீரழிக்கிறது: ரோமில் நடைபெற்ற கருத்தரங்கில் அலவித பிரச்சினைகள், விவகாரங்கள் அலசப் படும். குறிப்பாக, உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரப்பப் படவேண்டும், மதமாற்றம் செய்யப் படவேண்டும், அதர்கு ஊழியர்கள் விசுவாசமாக வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசுவர். அதற்கான திட்டங்கள், வழிமுறைகள், முதலியவை விவாதிக்கப் படும். ஆனால், இப்பொழுது, கிறிஸ்தவ சமூகம் சீரழிந்து வருகிறது. அபார்ஷன் / கருக்கலைப்பு சாதாரணமான விசயமாகி விட்டது. பள்ளி சிறுமிகள், மாணவிகள், திருமணம் ஆகாமலேயே கருவுருகிறார்கள், குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால், “கன்னித் தாய்களும்” நிதர்சனமாகி விட்டது. அதாவது, கத்தோலிக்கத்தில் அபார்ஷன் கூடாது. அந்நிலையில், கர்ப்பமுற்ற சிறுமி, மாணவி அல்லது திருமணமாகாத இளம் எண் கருவை ஏற்று குழந்தை பெறவேண்டும். இது குடும்பங்களை பாதிக்கிறது. இப்பொழுது, செல்போன் மூலம், போர்ன் படம் ஆர்த்து வருகிறார்கள் உடலுறவு போன்றவை வெளிப்படையாகப் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். அவர் கலந்து கொண்ட போது, செல்போன் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்ப‌ப்பட்டது. அதற்கு பதிலளித்த போப், டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்கள், கிறிஸ்தவர்களிடையே மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக இருக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில் ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் பலருக்கு உள்ளதாக தெரிவித்த போப், கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப் படங்களை பார்ப்பதாக வேதனை தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

30-10-2022


[1] தினத்தந்தி,கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாச படம் பார்க்கின்றனர்” – போப் வேதனை, By தந்தி டிவி 28 அக்டோபர் 2022 12:45 PM

[2] https://www.thanthitv.com/latest-news/priests-also-watching-porn-pope-145113

[3] தமிழ்.நியூஸ்.18, ஆபாசப் படத்தில் சாத்தான் இருக்கு.. டெலிட் பண்ணுங்க‘.. டிஜிட்டல் உலகம் குறித்து பேசிய போப் பிரான்சிஸ்!, Published by: Janvi, First published: October 27, 2022, 19:06 IST   LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:06 IST.

[4] https://tamil.news18.com/news/international/pope-francis-spoke-about-pornography-826115.html

[5] தமிழ்.ஏபிபி.லைவ், Pope Francis : ”கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படம் பாக்குறாங்கபோப் ஆண்டவர் வேதனை, By : ABP NADU | Updated : 28 Oct 2022 01:56 PM (IST)

[6] https://tamil.abplive.com/videos/news/world-pope-francis-gets-worried-watch-video-81515

[7] தமிழ்.வெப்.இந்தியா, கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படங்களை பார்க்கின்றனர்: போப் வேதனை!, Written By Mahendran, Last Modified, வியாழன், 27 அக்டோபர் 2022 (18:52 IST)

[8] https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/pope-says-about-porn-movie-122102700050_1.html

[9] புதியதலைமுறை, கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படம் பாக்குறாங்கபோப் ஆண்டவர் பேச்சு,  ஞானி கோவிந்தன்,  Published; 27 October 2022 10;41 PM.

[10] https://www.puthiyathalaimurai.com/newsview/149774/Pornography-is-a-vice–even-nuns-and-priests-watch–Pope-Francis

சி.எஸ்.ஐ / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆனதும், ஜாதியப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதும்! –மதமா, ஜாதியமா, இறையியலா, எது?

ஓகஸ்ட் 19, 2022

சி.எஸ்.ஐ / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆனதும் ஜாதியப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதும்! – மதமா, ஜாதியமா, இறையியலா, எது?

இறையியல் ரீதியாக கிருத்துவ மதமாற்றம் தோற்றது: கிருத்துவ மிஷினரிகள் இந்தியர்களை / இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற போக்கு, கொள்கை மற்றும் சமூக அடக்குமுறை போர்ச்சுகீசியர் காலத்திலேயே கொடியமுறையில் பின்பற்றப் பட்டு வந்தது. சுதந்திரம் பெற்றப் பிறகு, கோடிக் கணக்கில் இருக்கும் சொத்துக்களை அனுபவிக்க, கத்தோலிக்கம் மற்றும் கத்தோலிக்கர் அல்லாத என்ற பிரிவுகளாகப் பிரிந்து, ஆளுமையை, அதிகாரத்தை, கட்டுப்பாடுகளை தங்களுக்குள் தக்க வைத்துக் கொண்டனர். பெரும்பாலும், வெள்ளைக்காரர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள், உயர்ஜாதி-கிருத்துவர்கள் என்று தான் பெரிய பதவிகளில் தங்களை நிலைநிறுத்துக் கொண்டு, அனுபவித்து வந்தனர். எஸ்.சி, எஸ்.டி போன்றோரை ஏமாற்றி மதம் மாற்றினாலும், மறுபடியும், சர்ச்சிற்குள் இருக்கும் இறையியல் சித்தாந்த ரீதியில், இருக்க வேண்டிய கட்டுப் பாட்டை அறிந்து-புரிந்து கொண்டனர். “விடுதலை இறையியல்” எல்லாம் பொய்த்துப் போய், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் முடிந்தன. இதனால், சர்ச்சில் இருக்கும் அத்தகைய இறையியல்-ஜாதியினரை எதிர்க்க ஆரம்பித்தனர்.  கத்தோலிக்கக் கிருத்துவ ஆதிக்கத்தினர் மட்டும் ஆதிக்கம், பணம், அதிகாரம் முதலியவற்றை ஐத்துக் கொண்டு, இந்திய ஜாதியம், வர்ணாஷ்ரமம் என்றெல்லாம் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தது. ஆனால், உண்மை வெளிவந்தது. சூசை தீர்ப்புக் கூட அவர்களது முகமூடியைக் கிழித்தது. இருப்பினும், அம்பேத்கரின் ஆணையினையே எதிர்க்க முற்பட்டனர்.

பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் திருத்தம் கொண்டு வர முயற்சி: பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் உள்ள பிரிவை மாற்ற வேண்டும் என்று போலித் தனமாக போராட்டங்களை நடத்தி, திசைத் திருப்பப் பார்த்தது. ஆனால், அது இந்துக்களுக்கு என்பது சட்டரீதியாக எல்லோருக்கும் தெரியும். இதனால், எஸ்.சி மற்றும் மதம் மாறிய எஸ்.சி-கிருத்துவர்களிடையே துவேசம், எதிர்ப்பு, மோதல்கள் கூட ஏற்பட்டன.  இருப்பினும், ஆகஸ்ட் 10 அன்றை கருப்புநாள் என்று கொண்டாடுவோம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். இதனை, பொதுவாக யாரும் கண்டுகொள்வதில்லை என்றாலும், தங்களது அரசியல், பலம், பணம், அனைத்துலக சக்தி முதலியவற்றின் மூலம், இந்திய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன.. பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் திருத்தம் கொண்டு 2/3 எம்.பிக்களின் ஆதரவு தேவை. ஒரு முறை, பிஜேபி எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்து, கையெழுத்துப் போட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.  எஸ்ரா சற்குணத்திற்குப் பிறகு, இன்னொரு எஸ்.சி கிருத்துவர் பிஷப் ஆவது, அடக்கித் தான் வாசிக்கப் பட்டுள்ளது.

சி.எஸ். / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆகியுள்ளார்: தென்னிந்திய திருச்சபையின் அங்கமாக மதுரை- இராமநாதபுரம் மண்டல 7வது பேராயராக பாதிரியார் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் 17-07-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டார்[1]. மதுரை-ராமநாதபுரம் திருமண்டல பேராயா் ஜோசப்பின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவா் அண்மையில் ஓய்வு பெற்றார்[2]. இதைத்தொடா்ந்து புதிய பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் []Jeyasingh Prince Prabhakaran தோ்ந்தெடுக்கப்பட்டார்.  இவ்விழாவில், சிறப்புத் திருப்பலி ஆராதனையைத் தொடா்ந்து மதுரை-ராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருநிலைப்படுத்தப்பட்டார்[3]. தென்னிந்திய திருச்சபையின் தலைமைப் பேராயா் ஏ.தா்மராஜ் ரசலம் புதிய பேராயருக்கு அருட்பொழிவு செய்து திருநிலைப்படுத்தினார்[4]. முன்னதாக மதுரை நரிமேடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து தென்னிந்திய திருச்சபையின் மதுரை இராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் முறைப்படி ஆராதனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து திருச்சபையின் பேராயர்கள் அவருக்கு வெள்ளி செங்கோல் மற்றும் மோதிரத்தை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பிற மாநிலங்களை சேர்ந்த 11 பேராயர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்சி / தலித் பிரச்சினை கிருத்துவமத உள்விவகாரம் ஆகிவிட்டது: வின்சென்ட் மனோஹரன் ஒரு தலித் பிஷப்பாக பதவி ஏற்பதை பாராட்டி, அதே நேரத்தில், சர்ச்சிற்குள் இருக்கும் ஜாதீயத்தை ஒழிக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[5]. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இவ்விசயத்தில் போராட வேண்டும் என்று வற்புருத்தி பேசினார்[6]. ஏற்கெனவே மற்ற சர்ச்சுகளிலும் இப்பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது. மதம் மாறி எஸ்சி அந்தஸ்து இழப்பதால், பல கிருத்துவர்கள் அதம் மாறியும், சலுகைக்காக, இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அடிக்கடி அவர்களுக்குள் பிரச்சினை ஏர்ப்ட்டு மோதல்களில் முடிகின்றன. கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், ஏற்கெனவே எண்ணிக்கை ரீதியில் சலுகைப் பெற்று வருவதால், “உள்-ஒதுக்கீடு” கூட தேவையில்லை என்று அறிவித்துள்ளதை ஞாபகத்தில் கொள்ளலாம். எனவே, இந்துக்களாக இருந்தே எஸ்சி சலுகைகளை அனுபவிக்கலாம், சமூகப் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம் என்ற கருத்து கூட வலுப்பட்டு வருகிறது.

சர்ச்சிற்குள் இருக்கும் ஜாதியப் பிரச்சினைமே 2022: தலித் கிறிஸ்தவர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் மருத்துவர் மேரிஜான் தலைமையில் மே 15, 2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 18 மறை மாவட்டத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இயக்கத்தைச் சார்ந்த பல்வேறு வளர்ச்சி நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநில தலைவர் டாக்டர் மேரிஜான் கூறியதாவது[7]:- “தலித் கிறிஸ்தவர்கள் பிரச்சனை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக திருச்சபையில் இந்த இயக்கம் சமத்துவம் சம உரிமை பெற போராடிக் கொண்டிருக்கிறது. திருச்சபை அதிகாரிகள் இதுவரை தீர்வு காணவில்லை. இந்திய ஆயர் பேரவை, இந்திய கத்தோலிக்க பேரவையும் அறிவித்த கொள்கைப்படி தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், உயர்பதவிகளில், ஆயர் பதவிகளில் 64% வழங்காமல் இன்றும் ஏமாற்றி வருகின்றனர். சமீபத்தில் தலித் கிறிஸ்தவர்கள் இதுவரை யாரையும் நியமிக்கவில்லை அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். தற்போது கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மன்ற மாவட்டத்தில் காலியாக உள்ள ஆயர் பதவிக்கு தலித் ஆயிரை நியமனம் செய்யவேண்டும், தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் அரசியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது,” இவ்வாறு கூறினார்[8].

மதமா, ஜாதியமா, இறையியலா, எது?: இந்நிலையில் தான், ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருமவளவனை ஆதரித்துப் பேசியதை வைத்து, “குமுதம் ரிப்போர்ட்டர்”  இக்கதையினை உருட்டியுள்ளது[9]. கிருத்துவ மதத்தில் மாறியும் சமத்துவம் ஏற்படவில்லை என்றால், அது அம்மதத்தின் பிரச்சினை ஆகிறது. ஏனெனில், பைபிளின் படி சமத்துவம் கிடையாது, எல்லோரும் ஒரே மாதிரி கிடையாது. மரம் வெட்டுகிறவன், மாம் வெட்ட வேண்டும்; தண்ணீர் இழுத்த்க் கொட்டுகிறவன், அந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன………. ஆரம்பத்திலிருந்தே, கிருத்துவத்தில் வேறுபாடுகள், சமூகக் கட்டமைப்புகள், இந்திய-ஜாதியத்தை விட இறுக்கமாக கட்டமைக்கப் பட்டுள்ளன. இதனை உலகெங்கும், எல்லா கண்டங்களிலும் பார்க்கலாம். வெள்ளையர் மற்றவர்களை அல வழிகளில் அடக்கி ஆண்டுதான், வருகிறார்கள். கருப்பினத்தவர்கள் தங்களது உழைப்பினை கடினமான காரியங்களில் காட்டித்தான் முன்னேறியுள்ளனர், பிரபலமாகியுள்ளனர். தங்களது, சமூக நிலை அல்லது சலுகை வைத்து முன்னேறி விடவில்லை. இன்று ஐ.டி-தொழிற்நுட்பம் என்றெல்லாம் பார்த்தாலும், வெள்ளையர் அல்லாதவர்கள் முதலாளிகளாக இருப்பவர் சிலரே. எனவே, இந்திய, அதிலும், தமிழகத்து நிலையில், இப்பிரச்சினையை திசைத் திருப்ப வேண்டிய அவசியம் இல்லை. சமூக முன்னேற்றத்திற்கு எது தேவை என்பதை அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஜாதிதான், எஸ்சி-அந்தஸ்து தான், இல்லை மதம் தான் என்றால், அவ்வாறே நேர்மையாக நம்பிக் கொண்டு இருக்கலாம். கடவுளை, முன்னோர்களை, பெற்றோர்களை, சொந்தக்காரர்களை, சமூகத்தினரை ஏமாற்ற வேண்டாம்.

© வேதபிரகாஷ்

19-08-2022


[1] டாப்.நியூஸ்.தமிழ், மதுரை ராமநாதபுரம் தென்னிந்திய திருச்சபையின் ஏழாவது பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார், By admin, July 18, 2022

[2] https://www.topnewsthamizh.com/jayasinghe-prince-prabhakaran-assumed-office-today-as-the-seventh-archbishop-of-madurai-ramanathapuram-church-of-south-india/

[3] தினமணி, தென்னிந்திய திருச்சபையின் மதுரைராமநாதபுரம் திருமண்டல பேராயா் பதவியேற்பு, By DIN  |   Published On : 17th July 2022 11:08 PM  |   Last Updated : 17th July 2022 11:08 PM. 

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/jul/17/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3881887.html

[5] First Dalit Bishop is appointed for Madurai – Ramnad, CSI Diocese, Tamilnadu< By Dalit Christian Digest -July 18, 2022.

[6] The National Dalit Christian Watch (NDCW), a National Platform which is committed to cleanse the Church and Society by annihilating caste and its inhuman oppressive dynamics mainly to ensure equality, justice and rightful space for Dalit Christians within Church and its Institutions, looks forward to the serious interventions by the newly appointed Bishop, who held several positions in this Diocese already, not only to perform his pastoral services but also through his prophetic voice and deeds to uphold justice and peace both within Church and Society, especially for the dignified life and rightful space of the Dalit Christians.

[7] சமயம்.தமிழ், ஆயர் நியமனத்தில் ஏமாற்றப்படும் தலித் கிறிஸ்துவர்கள்பகீர் தகவல்!, Govindaraji Rj | Samayam Tami, Updated: 16 May 2022, 5:21 pm

[8] https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/dalit-christian-liberation-movement-slams-for-the-bishop-appointment-in-trichy/articleshow/91572892.cms

[9]  டி. பாலமுருகன், சர்ச்சையில் மதுரை பேராயர்மதம் கசக்குது, சலுகை இனிக்கிதா?, குமுதம் ரிப்போர்ட்டர், 19-08-2022, பக்கங்கள்.14-15.

‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற புத்தகம், நிவேதிதா லூயிஸ், ஸ்டாலின், கவிதா ராமு, கிழக்குப் பதிப்பகம் (1)

ஜூன் 21, 2022

அறியப்படாத கிறிஸ்தவம்என்ற புத்தகம், நிவேதிதா லூயிஸ், ஸ்டாலின், கவிதா ராமு, கிழக்குப் பதிப்பகம் (1)

ஸ்டாலின், கவிதா ராமு முதலியோர் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கிய ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூல் தொடா்பாக எழுந்த சா்ச்சை 13-06-2022 திங்கள்கிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது[1]. கடந்த 8ஆம் தேதி (08-06-2022, புதன் கிழமை) புதுக்கோட்டை வந்த முதல்வா் ஸ்டாலினை வரவேற்ற ஆட்சியா் கவிதா ராமு, அவரது தோழி நிவேதிதா லூயிஸ் எழுதிய ’அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைப் பரிசளித்தார்[2]. மேலும் அப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்[3]. இதையடுத்து, இதுதொடா்பான சா்ச்சை எழுந்தது. கடந்த 11ஆம் தேதி [11-06-2022] மாவட்ட பாஜக தலைவா் பிஆா். செல்வம் அழகப்பன், முதல்வா் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் மத வேற்றுமையை விதைக்கும் வகையில் செயல்பட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்[4]. ஸ்டாலின் மாலை / சால்வை பதிலாக புத்தகம் கொடுக்கலாம் என்று ஐடியா கொடுத்திருந்தார். ஆனால், அதுவே “திராவிட மாடலில்” சர்ச்சையில் தான் சென்று கொண்டிருக்கிறது[5].

வழக்கம் போல இடதுசாரி போர்வையில் வகையறாக்கள் ஆதரவு: இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், பொதுச்செயலா் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், இந்நூல், கிறிஸ்தவத்துக்குள் இருக்கும் உள் முரண்களையும், மோதல்கள் குறித்தும் ஓரச்சார்பின்றிப் பேசுகிறது. எனவே, ஆட்சியா் நடுநிலை தவறிவிட்டார் என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனா்[6]. இதேபோல, அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து, புத்தகத்தின் அட்டை, தலைப்பை வைத்துக் கொண்டு, அப்புத்தகம் கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்கிறது என்ற முடிவுக்கு பாஜகவினா் வர வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்[7]. ஆனால், வலதுசாரி இயக்கத்தினர் வழக்கம் போல, எதிர்மறை பிரச்சாரம் செய்து விளம்பரம் கொடுத்துள்ளனர் எனலாம். அவர்களிடத்தில் இத்தகைய ஆளுமையும் இல்லை, ஒற்றுமையும் இல்லை. இந்தச் சூழலில், ஆட்சியா் கவிதா ராமு தனது முகநூல் பதிவை அகற்றியுள்ளதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும், மாவட்ட பாஜக தலைவா் செல்வம் அழகப்பன் திங்கள்கிழமை 13-06-2022 ஆட்சியருக்கு ஒரு கடிதம் அளித்துள்ளார்[8]. அத்துடன் கவிஞா் கண்ணதாசன் எழுதிய ‘அா்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நூலை ஆட்சியருக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்[9]. பரிசளிக்கப்பட்ட நூல் குறித்து எழுந்த சா்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது[10]. இப்படியாக ஊடகங்கள் தலைப்பை மட்டும் மாற்றி, அரைத்த மாவையே அரைத்து ஊற்றியுள்ளன[11]. இதில் யாராவது அப்புத்தகத்தைப் படித்து, எழுதியுள்ளார்களா என்று தெரியவில்லை.

எஸ்.வி.ராஜதுரையின் ஆதரவுபிரீமியம்கட்டுரை[12]: தமிழ்நாட்டின் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர் என்று பொதுமக்களிடம் நற்பெயர் எடுத்துள்ள புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு முதல்வருக்கு விடுத்துள்ளார், அந்த மாவட்ட பாஜக தலைவர்[13]. ஆட்சியர் செய்த குற்றம் என்ன? – இரு பாகங்கள் கொண்டதும், நிவேதிதா லூயிஸ் எழுதியதுமான ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைத் தமிழக முதல்வருக்கு அவர் பரிசாக அளித்ததுடன் அதற்கான காரணத்தை ஆட்சியரின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் என்பதுதான்![14]சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல், அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பில் உள்ள மாவட்ட கலெக்டர், ஒரு மதத்தைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அவரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்,” என்று அத்தலைவர் தன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாகவும், இதனால் ஒரு பெரும் ‘சர்ச்சை’ வெடித்துள்ளதாகவும், ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது[15].

மார்க்சீய காந்தியின் முன்னுரை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீதான பாஜக தலைவரின் குற்றச்சாட்டு, அந்த நூல் மீதும் அதை எழுதியவர் மீதுமான குற்றச்சாட்டுமாகும். .‘அறியப்படாத கிறிஸ்தவம்’ நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில், “நேருவின், காந்தியின், போஸின் இந்தியாவின் ஒரு துளிஎன்று அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும், “என் பெயர் நான் விரும்பியோ, விரும்பாமலோ என் அடையாளமாகிவிட்டது. அதை நான் மாற்றுவதற்கில்லை. ஆனால், அது என் மதம், சாதி சார்ந்த அடையாளமல்ல,” என்றும், தமிழகத்தைப் பொறுத்தவரை, “கிறிஸ்தவம் என்ற மதம் இம்மண்ணில் வெளியிலிருந்து வந்ததே என்பதை மறுப்பதற்கில்லைஇதுதான் என் மண். இந்த நிலம் என் மூதாதையர்களின் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த நிலம். தமிழ் எங்கள் அடையாளம், உயிர் மூச்சு. அந்த உணர்வே முதல். மற்றவை எல்லாம்அது சாதியாகட்டும், மதமாகட்டும், பின்னர்தான்தமிழக தேவாலயங்களுக்கானகைடு புக்அல்ல இந்நூல்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்[16].

© வேதபிரகாஷ்

21-06-2022


[1] தினமணி, முதல்வருக்கு நூல் பரிசளிப்புசா்ச்சைக்கு ஆட்சியா் முடிவு, By DIN  |   Published On : 14th June 2022 12:36 AM  |   Last Updated : 14th June 2022 12:36 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2022/jun/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3861607.html

[3] கதிர்.நியூஸ், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ புத்தகத்தை பரிசளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!, By : Thangavelu  |  12 June 2022 4:30 PM.

[4]https://kathir.news/tamil-nadu/–1373752

[5]  பாலகிருஷ்ணனின் புத்தகம் ஊக்குவிக்கப் பட்டு, வியாபாரம் நடக்கிறது. ஸ்டாலினே, அப்புத்தகத்தை மற்ற அரசியல் தலைவர்களுக்குக் கொடுத்து வருவதை கவனிக்கலாம்.

[6] NEWS18 TAMIL, முதல்வர் ஸ்டாலினிடம் கிறிஸ்தவ புத்தகம் கொடுத்த கவிதா ஐஏஎஸ்அர்த்தமுள்ள இந்துமதம் தந்து பாஜக பதிலடி, LAST UPDATED : JUNE 14, 2022, 10:38 IST.

[7] https://tamil.news18.com/news/pudukkottai/kavita-ias-who-gave-christian-book-to-chief-minister-stalin-rather-bjp-gave-arthamulla-indhumadham-sur-758015.html

[8] ஏசியாநெட்.நியூஸ், முதல்வருக்கு கிறிஸ்தவ மத புத்தகம் வழங்கிய கலெக்டர்.. அர்த்த முள்ள இந்து மதம் புத்தகம் கொடுத்து அலறவிட்ட பாஜக.Ezhilarasan Babu, Chennai, First Published Jun 14, 2022, 1:32 PM IST; Last Updated Jun 14, 2022, 1:32 PM IST.

[9] https://tamil.asianetnews.com/politics/the-collector-who-gave-a-christian-religious-book-to-the-chief-minister-the-bjp-who-gave-a-meaningful-hindu-religious-book–rdgjo1

[10] தமிழ்.ஒன்.இந்தியா, ஸ்டாலினிடம்கிறிஸ்துவபுத்தகத்தை தந்த கவிதா ஐஏஎஸ்! சீறிய பாஜக.. அர்த்தமுள்ள இந்துமதம் தந்து பதிலடி, By Shyamsundar I Published: Monday, June 13, 2022, 13:40 [IST]

[11] https://tamil.oneindia.com/news/chennai/bjp-opposes-pudukottai-ias-kavitha-ramu-for-giving-a-christian-book-cm-stalin-462035.html

[12] அதாவது, காசு கொடுத்து தான், இந்த செய்தியைப் படிக்க முடியும். அவர் / அவாள் பொதுவுடமை எல்லாம் பேசலாம், ஆனால் காசில்லை என்றால், கம்யூனிஸம்-மார்க்சிஸம் எல்லாம் பேசாது.

[13] தமிழ்.இந்து, அறிவுத் தளத்தின் மீது இன்னொரு தாக்குதல், எஸ்.வி.ராஜதுரை, Published : 15 Jun 2022 07:56 AM; Last Updated : 15 Jun 2022 07:56 AM

[14] https://www.hindutamil.in/news/opinion/columns/814163-knowledge-base.html

[15] தமிழ்நாடு.லைவ்.நியூஸ், முதல்வருக்கு பரிசாக அளிக்கப்பட்ட நூலை முன்வைத்து பாஜகசர்ச்சை‘ – அறியாமையா, அரசியல் ஆதாயமா? – Hindu Tamil, சனி, ஜூன் 18 2022

[16]http://tnlivenews.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை:  பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் நீர் நிலைகளை சரி செய்ய ரூ.3000 கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் தற்போது விரைவாக மீட்புப் பணிகள் நடைபெறுகிறது என்றால் கடந்த ஐந்து மாதத்தில் திமுக அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் தேர்தலுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட 3000 கோடி ரூபாய் சென்னையில் எங்கு செலவழிக்கப்பட்டது. பீட்டர் அல்போன்ஸ் பேட்டிசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருப்பதால், ஆணையம் விசாரணையை தொடரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை. பொதுவாக எந்த மதங்களிலும் புறம்போக்கு இடங்களில் தேவாலயங்களையும், வழிபாட்டுக் கூடங்களையும் அமைக்காதீர்கள். புறம்போக்கு இடத்தில் கட்டி விட்டு அனுமதி கேட்கும்போது, அரசால் அனுமதி கொடுக்க முடியாது. பட்டா இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதாக இருந்தால், அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து அளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். இனி, எஸ்ரா சற்குணம் பற்றி கவனிப்போம்.

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை சொல்வது எஸ்ரா சற்குணம்!: சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை,” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்! கருணாநிதி நூறான்டுகள் வாழ்வார் என்று நற்செய்தியாக, தீர்க்கதரிசனம் சொன்னவர்.

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்!: திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்[4]. திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது! ஆக, எஸ்ரா சற்குணம் 1974ல் சொல்லிய திட்டத்தை வைத்துக் கொண்டு தான் 50 ஆண்டுகளாக கிருத்துவர்கள் இத்தகைய நில ஆக்கிரமிப்பு, புறம்போக்கு நிலத்தை அபகரித்தல், சர்ச் கட்டுதல், பிறகு பட்டா வாங்குதல், முதலியன நடந்து வருகின்றன. பீட்டர் அல்போன்ஸும், நாஜுக்காக, “திராவிடியன் மாடல்,” எறு சொல்லியிருக்கிறார், ஆகவே, அட்த்தகைய சட்டமீறல்கள் எல்லாமே ஒழுங்குப் படுத்தப் படும். இடிக்கப் பட்ட கோவில்கள் அம்பேல், இந்து நம்பிக்கையாளர்கள் முட்டாள்கள்!

இந்துவிரோதி எஸ்டா சற்குணத்தின் பேச்சு ஜூன் 2029: ஜூன் 2019ல் மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்[5], கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 16-ந் தேதி 2019 அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். பிறகு என்னவாயிற்று என்று யாரும் கவலைப்படுவதில்லை, மன்னிப்பு கேட்டார், என்று வழக்கு முடிக்கப் பட்டிருக்கும். ஆனால், தூஷணங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.

கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது பொன்றிருந்த கூட்டம்: தமிழகத்தில் சிறுபான்மையினர் / மைனாரிடி என்றால் துலுக்கர் மற்றும் கிருத்துவர் என்றுதான் உள்ளனர் போலும். ஜெயின், பௌத்தர், பார்சி என்றெல்லாம் இருந்தாலும், அவர்கள் உறுப்பினர்கள் இருந்தாலும், கூட்டத்தில் பங்கு கொண்டாலும், அவர்கள் பிரச்சினை, அவர்கள் நலன், அவர்கள் பேசியது பற்றி செய்திகளில் ஒன்றையும் காணோம். ஏதோ, சர்ச்சுகளை எப்படி கட்டுவது, நிலத்தை எப்படி வாங்குவது, சட்டப்படி ஸ்வீகாரம் செய்து கொள்வது, பட்டா பெறுவது, கட்டிய சர்ச்சை சட்டப் படி முறைப் படுத்துவது, அதற்கு முதலமைச்சர் ஆணை பிறப்பிப்பார் என்பது…… என்று தான் “அறிவுரை” ஆலோசனையாக இருந்ததே தவிர, கண்டிப்பாக, சட்டப் படி நடவடிக்கை எடுப்பதாக இல்லை. ஆகவே, இது ஏதோ கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது போன்றிருந்தது. 1974ல் எஸ்றா சற்குணம் குறிப்பிட்டதற்கும், இப்பொழுது 2022ல் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட மாடல், பெரியாரிஸ போதையில், இந்துவிரோதத்துடன் ஊறி நன்றாகவே வேலை செய்கிறது போலும்!

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1]  M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

[4] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்து மதம் குறித்து அவதூறு பேச்சு ! மத போதகர் எஸ்றா சற்குணம் மீது வழக்குப் பதிவு !!, Last Updated Jun 21, 2019, 9:40 PM IST

https://tamil.asianetnews.com/politics/esra-srgunam-case-file-ptgi8u

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

29-03-2022 அன்று நடந்த சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது[1]. இந்த கூட்டத்திற்கு தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்[2]. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன், ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரவீன்குமார் டாட்டியா, ப்யாரேலால் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது: கூட்டம் முடிந்த பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடப்பாண்டில், சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் மத மோதல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்”. அவர்களின் ஜனத்தொகைக்கு மேலாக, விகிதாச்சாரமே இல்லாத அளவுக்கு சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் படவேண்டும் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி கட்டி விட்டு, பிறகு, இந்துக்களில் விழாக்கள் அங்கு நட்த்தப் படக் கூடாது, ஊர்வலங்கள் செல்லக் கூடாது என்று பிரச்சினை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அத்தகைய கலவரங்கள் உண்டாக்கும் சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் பட வேண்டும்?

தனிப்பட்ட பிரார்த்தனை, வழிபாடுகளுக்கு பிரச்சினை இல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “மேலும், மக்கள் அவர்களின் இல்லங்களிலிருந்தோ, சில தனி இடத்தில் இருந்தோ வேண்டுதல்கள் செய்வதற்கு எவ்வித இடையூறுகளும் இருக்காது என்ற உறுதியை மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் அளித்துள்ளனர். அதே சமயம், சிறுபான்மையின மக்கள் ஆராதனை, வேண்டுதல் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். சமூக அமைதிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்ற ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் எந்த அளவுக்கு சமூக அமைதி நிலவுகிறதோ, அந்த அளவுக்கு இம்மாவட்டத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். சமூக அமைதியை சீர்குலைக்கவும், மக்களை மத ரீதியாக பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்யவும் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி”. எல்லாம் சரிதான், ஆனால், மைக்குகள் வைத்து தான் கலாட்டா செய்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்கள் செய்யும் கலாட்டாக்களை நகர்புறப் பகுதிகள், கிராமங்களில் கவனிக்கலாம். பது பேர் வந்து சப்தம் போட்டுக் கொண்டு, கத்திக் கொண்டு ஆர்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள். ஆளே இல்லாமல் இருந்தாலும், ஒலிப்பெருக்கியில் கத்தல்கள் வந்து கொண்டே இருக்கும்.

29-03-2022 அன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள், பள்ளிக்கூடம், வங்கி கிளை வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து கூறியது, “மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். சிறுபான்மை இன மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்களில் சிறுபான்மையின மக்கள் வசிக்கக்கூடிய சில பகுதிகள் விடுபட்டு உள்ளது. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மயானம் மற்றும் எரியூட்டும் மேடை ஆகியவை அனைவருக்கும் பொதுவானது. இங்கு செல்கின்றவர்கள் மத அடையாளங்களை துறந்துவிட்டு தான் செல்ல வேண்டும். முதல்வரின் எண்ணமும் அதுதான். மதத்தின் அடிப்படையில் சடங்குகளை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அவர்கள் சொந்த செலவில் கல்லறைகளை வைத்துக் கொள்ளலாம்,” இவ்வாறு அவர் கூறினார். கிருத்துவர் மற்றும் துலுக்கர்களுக்குத் தனியகத் தான் புதைக்க மயானங்கள் உள்ளன. ஆகவே, இதில் சமத்துவம், வெங்காயம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே குழப்பத்தை உண்டாக்க, இல்லை அவ்வாறு இடங்களை ஆக்கிரமிக்க வித்திடுவது போலிருக்கிறது.

 “அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது,”: என, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிவுரை வழங்கினார்[3]. அறிவுரை 2002ல் கூறினால் ஏற்றுக் கொள்வார்களா என்ன? 221லும் சொல்லியாகி விட்டது. ஆனால், அதே பிரச்சினைகள் தான் 2022லும் பேசப் படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது[4]. கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: “சிறுபான்மையின மக்களுக்கு உரிமை இருப்பது போல், கடமைகளும் உள்ளன. மாற்று சமூகத்தினருடன் இணைந்து அவர்களை வாழ வைக்க வேண்டும்; நாமும் அவர்களால் வாழ வேண்டும். பிற சமூக மக்களுக்கும் உதவிகளை செய்து, மனிதநேயம் மிகுந்த சமுதாயமாக மாற்ற வேண்டும். ஜாதி, மதத்தை மறந்து, எல்லாரும் தமிழர்களாக ஒன்றிணைந்து, எழுந்து நிற்க வேண்டும்.அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி, அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது. கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்ற பின் கட்ட வேண்டும். மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, மத பிரசாரம் செய்வது போன்ற பணிகளை தவிர்க்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் கோரிக்கையின் மீது, மாவட்ட நிர்வாகம், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் பேசினார்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலாக இருந்த இடத்தில் தற்போது கட்டிட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று கேட்டு புகார் எழுந்தால் மாவட்ட நிர்வாகம் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். புறம்போக்கு நிலத்தில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் கட்டி விட்டு அதற்கு அனுமதி தாருங்கள் என்று அரசிடம் கேட்டால் இப்போது அனுமதி கொடுக்க அரசு சட்டத்தில் இடமில்லை. புறம்போக்கு இடம், அரசுக்கு சொந்தமான நீர்வழிப்பாதை, நீர்ப்பிடிப்பு பகுதி, மேய்ச்சல் புறம்போக்கு போன்ற நிலங்களில் தனியாருக்கோ, வழிபாட்டுக்கோ கொடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நினைத்தால் கூட விதியை தளர்த்த இடமில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்பதே விவகாரமாக உள்ளது. அப்படியென்றால் அதில் பிரச்சினை உள்ளது. “யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி” என்பதே கேலிக் கூத்தானது, அதாவது, அவர்களது சர்ச்-மசூதிகளும் சட்ட் விரோதமானது, போதாக்குறைக்கு அவற்றினுள் வழிபாடு செய்யாமல், பொது இடங்களில், தெருக்களில் செய்வார்கள் போலும், அதற்கும் அனுமதி கேட்பார்கள் போலும், இதெல்லாமா சமத்துவம், சமதமம், செக்யூலரிஸம். பீட்டர் அல்போன்ஸுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1] தமிழ்.இந்து,  மத ரீதியாக மக்களிடம் பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர்பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு, டி.ஜி.ரகுபதி, Published : 29 Mar 2022 22:04 pm; Updated : 29 Mar 2022 22:04 pm.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/782764-some-are-trying-to-divide-the-people-religiously-and-do-politics-accuses-peter-alphonse.html

[3] தினமலர், அரசு நிலத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாதுசிறுபான்மையினர் ஆணைய தலைவர் அறிவுரை,  Added : மார் 31, 2022  00:52.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2995988

ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?

மார்ச் 22, 2022

ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?

நசரேத் சிஎஸ்ஐ சர்ச் பிரச்சினைகளுக்கும், வழக்குகளுக்கும் சளைத்தது அல்ல: நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் பிரச்சினை நடந்து முடிந்து விட்ட நிலையில், இப்பொழுது “குமுதம் ரிப்போர்ட்டர்” செய்தி-கட்டுரை வெளியிட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[1]. குளோபல் மிஷனரி சொசைடி நடத்தி வருவதாகவும், அதில் பிரச்சினையுள்ளதாகவும் எஸ்.அண்ணாதுரை நிருபர் விளக்குகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கீதா ஜீவன் மூலம், கனிமொழி உதவியுடன் பிரச்சினையை சுமுகமாக்கி விட்டது போலிருக்கிறது. பிஷப்பும் ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிதி கொடுப்பது போல சந்தித்தாகி விட்டது. ஆக தேவசஹாயமும், சஹாயமாகி விட்டார், சமரசமாகி விட்டார் போலும். பல கோடிகள் சொத்துக்கள் உள்ள சிஎஸ்ஐ மற்றும் அதன் பிஷப்புகள், பாதிரிகள், அதிகாரிகள் கோர்ட்டுகளிலும், வெளியிலும் அடித்துக் கொள்வது புதியதல்ல. நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றில் பற்பல பிரச்சினைகள் வெளி வந்துள்ளன. நசரேத் சிஎஸ்ஐ சர்ச் எதற்கும் கவலைப்படுவதாக இல்லை.

குடும்பப் பிரச்சினை சர்ச் பிரச்சினை ஆகலாம்: நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், திருமண்டல பேராயரின் துணைவியார் சாந்தினிதேவசகாயம், திருமண்டல உபதலைவர் தேவராஜ் ஞானசிங், குருத்துவ காரியதரிசி மோசஸ் ஜெபராஜ், திருமண்டல ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், திருமண்டல சமூக நலத்துறை இயக்குநர் மைக்கேல்ராஜ், பாலியர் நண்பன் இயக்குநர் கிளாட்சன், வாலிபர் ஐக்கிய சங்க இயக்குநர் ஜான்சன், ஜிஎம்எஸ் செயலாளர் டேனியல், குருமார்கள் கோல்டுவின், தாமஸ், லூர்துராஜ்,  ஆல்வின், ரவி, நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ்,  ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முன்னாள் தாளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மாமல்லன், ஆண்ட்ரூஸ், பில்லிகிராம்,  மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லயன் புஷ்பராஜ் மற்றும் திருமண்டல குருமார்கள், பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள்.

நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் மிகவும் பரபரப்புடன் நடந்தது: தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு 2021-ல் நடைபெறும் தேர்தல் குறித்து மகாகனம் பேராயர் தேவசகாயம் அவர்களால் தேர்தல் கால ஒழுங்கு முறைகள் வெளியிடப்பட்டு கடந்த ஜுன் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 20ம் தேதி 2021 அன்று நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நிர்வாகஸ்தர் தேர்தலோடு நிறைவு பெற்றது[2]. இந்த தேர்தலில் டி.எஸ்.எப். அணி மற்றும் எஸ்டிகே ராஜன் அணி என இரண்டு அணிகளாக போட்டியிட்டனர்[3]. தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் இருந்து முதல் கட்டம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பொழுது பல்வேறு குளறுபடிகள் குழப்பங்கள் என புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் சேகரத்தின் முக்கிய ஆவணமான ‘சபை டாப்’ திருத்தப்பட்டதாக வந்தப் புகார்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் போன்ற பிரச்சினைகளால் கொதித்தெழுந்த சபையார் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது[4].

வெற்றி பெற்றப் பிறகும் தொடர்ந்த பிரச்சினைகள்: டிஎஸ்எப் அணியில் போட்டியிட்ட லே செயலாளர் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உபதலைவர் அருட்திரு தமிழ்செல்வன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்டக் ஆகிய அனைவரும் வெற்றிபெற்றதாக பேராயரே அறிவித்து, அவர்களுக்கு ஜெபித்து ஆசியும் வழங்கியதாக, வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்ட பலர் தெரிவித்தனர்[5]. 21.10.2021 அன்று செயற்குழுவை கூட்டி பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கூறிச் சென்ற பேராயர் தேவசகாயம் திடீரென தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி அன்றைய தினமே (21.10.2021) நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்[6]. பேராயர் தேவசகாயம் தனது அலுவலகத்திற்கோ, இல்லத்திற்கோ வராமல் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தில் வைத்து கடந்த 23.10.2021 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து, வருகிற 1.11.2021 அன்று மறுதேர்தல் நடக்க இருப்பதாக தெரிவித்து, பத்திரிகையில் விளம்பரமாக பொதுஅறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்[7].

போலீஸார் வந்து சமரசம் செய்து வைத்தது: வெற்றிபெற்றவர்கள் பதவியேற்பதற்காக தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. பேராயர் தேவசகாயமும் அங்குஇல்லாததால் ஏமாற்றமடைந்த நிர்வாகிகள், அலுவலக வாசலில்அமர்ந்திருந்த பிரதம பேராயரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம் அலுவலகத்தை திறக்குமாறுகூறினர். அதற்கு அவர், பேராயர் வந்தால் தான் திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எதிரணியினரும் அங்கு வந்தனர். இரு அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்[8]. பின்னர், நாசரேத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டியை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து போலீஸார் சீல் வைத்தனர்[9].

போலீஸாரையே மதிக்காத சர்ச் விசுவாசிகள்: பின்னர், அனைவரையும் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் தாங்கள் பதவியேற்க வேண்டும் என்று கூறி வெளியில் செல்ல மறுத்தனர். அவர்கள் தவிர மற்றவர்களை போலீஸார் வெளியேற்றினர். புதிய நிர்வாகிகள் அங்கிருந்த அறையில் மாலைவரை அமர்ந்திருந்தனர். லே செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் நிருபர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் எங்கள் அணி முழுமையாக வெற்றிபெற்றது. இதனால், தேவையில்லாத குற்றசாட்டுகளை கூறுகின்றனர். பேராயரை கூட மாலை வரை வரவிடாமல் செய்து விட்டனர். அவர் வராததால் விதிப்படி உபதலைவர் முன்னிலையில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தினோம்” என்று கூறினார்.

©  வேதபிரகாஷ்

22-03-2022


[1]  குமுதம் ரிப்போர்ட்டர், ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்?, மார்ச்.11-03-2022, பக்கங்கள்.28-29.

[2] Policeseithitv, பிரதம பேராயரின் உத்தரவை மதித்த தூத்துக்குடிநாசரேத் திருமண்டல குருமார்கள், by policeseithitv  October 30, 2021

policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!, by policeseithitv  October 31, 2021

Onetamil News, தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு, லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மகிழ்ச்சி ,  Oct 31, 2021

http://www.onetamilnews.com/News/thoothukudi-nazareth-csi-bishop-devasakayam-new-executi

[3] https://policeseithi.com/?p=8324

[4] policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!, by policeseithitv  October 31, 2021

[5] https://policeseithi.com/?p=8327

[6] Onetamil News, தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு, லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மகிழ்ச்சி ,  Oct 31, 2021

[7] http://www.onetamilnews.com/News/thoothukudi-nazareth-csi-bishop-devasakayam-new-executi

[8] தமிழ்.இந்து, தூத்துக்குடிநாசரேத் திருமண்டல தேர்தல்புதிய நிர்வாகிகள் பதவியேற்க சென்றபோது அலுவலகம் பூட்டு : இரு தரப்பினர் இடையே வாக்குவாதம், செய்திப்பிரிவு, Published : 22 Oct 2021 03:07 AM; Last Updated : 22 Oct 2021 03:07 AM.

[9] https://www.hindutamil.in/news/todays-paper/regional02/728923–1.html

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜார்ஜ் பொன்னையா கடுமையாக, கொடூர, குரூர வார்த்தைகளினால் திட்டி சாடியது: கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: “அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை. மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை[1]; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை[2]. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை. பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டு மிதிக்கிறோம்,” இவ்வாறு பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய மோசமான-குரூர கருத்துகளை தெரிவித்தார். ஆனால், இப்பொழுது, அவற்றிற்கு பாவ மன்னிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

 பிஷப் போல பாஸ்டருக்கே பாவ மன்னிப்புக் கொடுக்கப் பட்ட நிலை: ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த வழக்கில், ‘கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என உறுதியாக நம்புகிறேன்’ என்ற கருத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது[3]. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது[4]. பின்னர், பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், முறையாக போலீஸ் அனுமதி பெற்று கூட்டம்நடந்தது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகள் தவறான புரிதலைஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாதுஇந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களைப் போல் இல்லை. மத பதற்றமான பகுதியாகும். அங்குநிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.மத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசக் கூடாது. அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அதாவது அம்பேத்கர் இந்து மதத்தைக் கொடுமையாக, கடுமையாக விமர்சித்துள்ளார்.

பூமிமாதா, பூமாதேவி, பாரத்மாதா எல்லாம் வேறுவேறு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: இந்த தேசத்தில் பூமி, ‘பூமா தேவி’ என வணங்கப்படுகிறது. அவள் தெய்வீகத்தின் துணையாக பார்க்கப்படுகிறாள். தேசம், அன்னை தெய்வத்திற்கு சமமானது. அவள் காவி உடை அணிந்து, புத்தகம், நெற்கதிர்கள், வெள்ளைத் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை நான்கு கைகளில் ஏந்தியிருக்கிறாள். தேசத்தந்தை மகாத்மா காந்தி, 1936ல் வாரணாசியில் பாரத மாதா கோவிலை திறந்து வைத்தார். நாடு முழுதும் பல ஹிந்து கோவில்களின் வளாகத்தில் பாரதமாதா ஒரு தெய்வமாக நிறுவப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எசக்கியம்மன் தேவி கோவில் வளாகத்திலும் காணப்படுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பப்பாரபட்டியில் அத்தகைய ஒரு கோவிலை எழுப்ப விரும்பினார். அந்நுாற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்றுஆனால், பொன்னையா தொற்றை எல்லாம் பரப்பவில்லை: பூமி அன்னைக்கு மரியாதை செலுத்தி, வெறுங்கால்களுடன் நடப்பவர்களை மனுதாரர் கேலி செய்துள்ளார். பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்று மற்றும் அழுக்கு படிந்திருப்பதாக சித்தரித்துள்ளார். மனுதாரர், ஹிந்து சமூகத்தை ஒரு இலக்காகக் கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார். பழைய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள பல கோவில்களில், ஆண் பக்தர்கள் மேலாடை அணியாமல் நுழைய வேண்டும். பாரம்பரியமான வேஷ்டியை அணிந்து, ஒரு துண்டால் உடலை சுற்றிக் கொள்கின்றனர். இப்பாரம்பரிய நடைமுறையை மனுதாரர் கேலி செய்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. அரசியலமைப்பின் புனிதத்தை நிலைநிறுத்த மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், மத அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது–  தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளதுஅதனால், வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன்: ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில், மனுதாரர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாகவும், தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும் கூற முடியாது. யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிந்தது பொருந்தும் வகையில் இல்லை. அப்பிரிவுகளில் வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் கோரிக்கை பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார்[5]: பால் ஜான்சனின் ‘ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும்[6]. அவர், ‘பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்[7]. நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்[8].

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] தினகரன், கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து: ஐகோர்ட் கிளை ஆணை, 2022-01-07@ 17:19:34. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[3] தமிழ்.இந்து, குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு: 4 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு, கி.மகாராஜன், Published : 09 Jan 2022 08:56 AM, Last Updated : 09 Jan 2022 08:56 AM. https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[5] தினமலர், கிறிஸ்துவத்திற்கு மாறான செயலுக்காக பாதிரியாரை கடவுள் கண்டிப்பார்: ஐகோர்ட்,  Updated : ஜன 08, 2022  06:48 |  Added : ஜன 08, 2022  06:37.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2932776

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாதிரியாரை இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் கண்டிப்பார்ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நீதிபதி கருத்து, By Jeyalakshmi C, Updated: Saturday, January 8, 2022, 15:27 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/pastor-george-ponniah-case-god-will-reprimand-the-petitioner-during-judgment-day-says-hc-444741.html