Archive for பிப்ரவரி, 2011

செக்ஸ் டார்ச்சர் பாதிரிக்கு ஆதரவாக விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம் ஆனால் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு யாரும் ஆதரவாக இல்லையாம்!

பிப்ரவரி 23, 2011

செக்ஸ் டார்ச்சர் பாதிரிக்கு ஆதரவாக விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம் ஆனால் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு யாரும் ஆதரவாக இல்லையாம்!

 

ஆசிரியைக்கு “செக்ஸ் டார்ச்சர்‘: பாதிரியார் மீது போலீசார் வழக்கு[1] ஆசிரியர் சகாயராணி, நேற்று முன்தினம், கலெக்டர் முத்துவீரன், பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் குறித்து புகார் அளித்தார்[2]. உத்தமபாளையம்: தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி புனித சூசையப்பர் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி தாளாளரான பாதிரியார் பீட்டர் சகாயராஜ், அங்கு பணிபுரியும் ஆசிரியை சகாயராணிக்கு, “செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்ததாக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செக்ஸ் டார்ச்சர் பாதிரிக்கு ஆதரவாக விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம்! இதில் வேடிக்கையென்னவென்றால் நேற்று காலை பள்ளி சென்ற சகாயராணியை, பாதிரியாரின் ஆதரவாளர்கள், 500 பேர் திரண்டு, “பாதிரியார் மீது பொய் புகார் கூறியதால், உள்ளே நுழைய விடமாட்டோம் என, பள்ளி கேட்டை மூடி மறித்தனர். போலீசார் தலையிட்டு, சகாயராணியை உள்ளே அனுப்பி வைத்தனர். ஆனால், பாதிக்கப் பட்ட பெண்மணிக்கு ஆதரவாக, ஒரு விசுவாசியும் இல்லை போலிருக்கிறது! கர்த்தரோ, தேவனோ, பரிசுத்த ஆவியோ வரவேண்டும் போலிருக்கிறது!

 

எல்வின் சர்ச்சில் சிங் விசாரணை நடத்தி வருகிறார்: பள்ளியில் நடந்துள்ள பிரச்னை குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எல்வின் சர்ச்சில் சிங் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், சகாயராணி கொடுத்துள்ள மனு அடிப்படையில், ஆபாசமாக பேசுதல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், மானபங்கம் செய்ய முயற்சித்தல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளில், பாதிரியார் பீட்டர்சகாயராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியாருக்கு ஆதரவாக செயல்பட்டு பள்ளியை மூடி, சகாயராணியை உள்ளே நுழைய விடாமல் தடுத்த 500 பேர் மீதும் தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சற்றும் சளைக்காத சகாயராஜ்: குற்றஞ்சாட்டப் பட்டுள்ள சகாயராஜ் இதர்கெல்லாம் சளைத்ததாகத் தெரியவில்லை. மேலும் சர்ச்சும் இம்மாதிரி பல வழக்குகள், செக்ஸ் விவகாரங்கள் முதலியவற்றை தினம்-தினம் ஆறிந்து அலுத்துவிட்டது போலும். ஆகையால், பாதிரிகள் தைரியமாகவே உள்ளனர். பாதிரிகளைப் போலல்லாது, அரசியல்வாதியைப் போல பேச ஆரம்பித்துவிட்டனர்! பாதிரியார் பீட்டர்சகாயராஜ் கூறுகையில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முழுக்க முழுக்க பொய்யானவை. ஊதிய உயர்வு வழங்காததற்கு அவர் அறிக்கை சமர்ப்பிக்காததே காரணம் என்றார். ராஜா தோரணையில் தான் பேசாஅரம்பித்து விட்டனர்!

 

வேதபிரகாஷ்

23-02-2011


[1] ஆசிரியைக்கு “செக்ஸ் டார்ச்சர்‘: பாதிரியார் மீது போலீசார் வழக்கு, பிப்ரவரி 22,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=193494

[2] வேதபிரகாஷ், செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்!, https://christianityindia.wordpress.com/2011/02/22/more-about-sex-torture-catholic-priests/

 

செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்!

பிப்ரவரி 22, 2011

செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்!

கிருத்துவப் பாதிரிகள் செக்ஸில் ஈடுபடுவது ஏன்? தொடர்ந்து கிருத்துவப் பாதிரிகள் செக்ஸ் விவகாரங்களில் தாராளமாக ஈடுபடுவது தெரிந்தும், கிருத்துவ மேலிடங்கள் அமைதியாக இருப்பது, அவற்றின் ஒத்துழைப்பு அல்லது உடன்பாடு முதலியவற்றைக் காட்டுவது போலாகும் என்று தெரிகிறது. யாரும் கேட்பார் இல்லாமல், இந்த அரிப்பெடுத்த செக்ஸ் பாதிரிகள் அலைகிறார்கள் என்று நன்றாகவே தெரிக்கிறது. இருப்பினும் சட்டத்தை அமூல்படுத்தவேண்டிய அதிகாரிகள், துறைகள் முதலியன மெத்தனமாக இருப்பது, அத்தகைய கொடுங்கோலர்களுக்கு சாதகமாக இருப்பது சர்ச்சின் சட்டமீரல்கள், ஊழல் முதலிய அசிங்கங்களைக் காட்டுகின்றன. செக்ஸ் வியாதியில் பீடுத்துள்ளதால், தகுந்த மருந்து கொடுக்கப் படவேண்டும். இல்லையென்றால், வியாதி முற்றி தீங்கு விளையும் முன்பு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாதிரியார் பீட்டர் சகாயராஜின் செக்ஸ் டார்ச்சர்[1]: தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி புனித சூசையப்பர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி தாளாளரான பாதிரியார் பீட்டர் சகாயராஜ், அங்கு பணிபுரிபவர்களை, “செக்ஸ் டார்ச்சர்’ செய்வதாக, கலெக்டர் முத்துவீரன் மற்றும் பாலகிருஷ்ணன் எஸ்.பி., யிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் பணியாற்றும் இடை நிலை உதவி ஆசிரியை ஒருவர், தன் கணவருடன், கலெக்டர் முத்துவீரனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: “பணி நேரம் முடிந்த பின், அவரது அறைக்கு தினமும் வரச்சொல்கிறார். மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், கற்பிக்கும் திறனை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி பங்களாவிற்கு வரச்சொல்லி[2], உடலை தொட்டுப் பேசுகிறார். கணவனிடம் மனைவி நடந்து கொள்வதைப் போன்று கையைப் பிடித்து இழுத்து, பணிவிடை செய்ய சொல்கிறார்[3]. இதற்கு இணங்கவில்லை என்றால், தரக்குறைவாக பேசுகிறார். ஒருமுறை பிடரியை பிடித்து என்னை வெளியே தள்ளிவிட்டார். ஒரு ஆசிரியை என்றும் பாராமல், காது கூசும் அளவிற்கு தகாத வார்த்தைகளை பேசுகிறார். பல மணி நேரம் நிற்க வைத்து விட்டு, “காலை 6 மணிக்கு என்னை வந்து பார்எனக் கூறுகிறார்.

 
புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட ஆசிரியை: ஆசிரியை தொடர்கிறார், “பாதிரியார், என் பள்ளி தாளாளர் என்பதால் வெளியே சொல்ல முடியாமல், மனநிலை பாதிக்கும் நிலையில் தற்கொலை செய்யலாம் என நினைத்தேன். என் நடவடிக்கையில் மாற்றம் கண்ட கணவர் கேட்டதால், அவரிடம் விஷயத்தைக் கூறினேன். இச்செயல்களால் மாணவர்களுக்கு முழு கவனத்துடன் பாடம் நடத்த முடியவில்லை. தாளாளர் ஒரு பாதிரியார் என்பதால், அனைவரும் அவரை மதிக்கின்றனர். அவரோ மோசமான மனநிலை உள்ளவராக இருக்கிறார். இவர், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் பங்குதந்தையாக இருந்த போது, அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. செம்பட்டி ஆத்தூரில் ஒரு குடும்ப பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததால், ஊர் மக்கள் அடித்து விரட்டியுள்ளனர்[5]. தற்போது, அனுமந்தன்பட்டி பங்கில், தனது உதவியாளர் என்ற பெயரில் ஒரு பெண்ணை பணிக்கு வைத்துள்ளார். அவர் ஆசிரியர்களிடம் தரக்குறைவாக பேசுகிறார். என்னைப் போல் ஆசிரியைகள் பலரும் பாதிக்கப்பட்டு, வெளியில் சொல்ல முடியாமல் உள்ளனர். அவருக்கு உடன்படாததால், 2011 ஜனவரியில் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வில், இதுவரை கையெழுத்து போடாமல் அலைக்கழிக்கிறார்[6]. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறுகையில், “ஆசிரியை புகார் குறித்து, பள்ளி தாளாளரிடம் விசாரணை நடத்த உத்தமபாளையம் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

அலையும் பாதிரிகளுக்கு முதலில் கவுன்சிலிங் கொடுக்கப்படவேண்டும்; முதலில் இந்த கிரித்துவப் பாதிரிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சோதிக்கப் பட்டு, பாதிரி வேலை கொடுக்கப் படவேண்டும். இல்லையென்றால், அந்த காலத்தில் போன்று, கன்னியாஸ்திரிக்களுக்கு மட்டும் அல்ல, இந்த பாதிரிகளுக்கும் “கர்டில்”[7] போன்ற மூடும் கருவிகொண்டு ஆண் உருப்பை மறைத்து, பூட்டிவிட வேண்டும். அப்பொழுது தான், சும்மா இருப்பார்கள் போலும். பழைய செய்திகள் சில[8]:

பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர்தாங்க முடியவில்லை (17-11-2009)[9]: பாதிரியாரின் ‘செக்ஸ் டார்ச்சர்’ தாங்க முடியவில்லை. என்னை கற்பழித்துவிட்டு, அடியாட்கள் முலம் மிரட்டுகிறார் என்று பெண் ஒருவர் திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்[10]. திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை என்ற பெண் அளித்துள்ள புகார் மனு விவரம்: நான் சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகள். கடந்த சில ஆண்டுக்கு முன்பு சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். வரதட்சணை பிரசனையால், நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன். திருச்சி செவன்த் டே கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார். பின்னர் வேறு ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த பாதிரியார், அதன் பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார். இதன் விளைவாக பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை. இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். இதி்ல், ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். பாதிரியார் சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாமல் மகளிர் அமைப்புகளை கூட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் பூங்கோதை கூறியுள்ளார்.

வேதபிரகாஷ்

22-02-2011


[1] தினமலர், செக்ஸ் டார்ச்சர்‘ : பாதிரியார் மீது ஆசிரியை புகார், பிப்ரவரி 21, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=192708

[2] பிரைட்டைப் போன்றே அதே வழியைப் பின்பற்றுகிறார் என்பதை பார்க்கலாம்.

[3] இதில் கிருத்துவர்களின் உடன்பாடு நன்றாகவே தெரிகிறது. தொடர்ந்து இத்தகைய செக்ஸ் டார்ச்சர்கள் நடைபெறுவதால், இக்குற்றங்களை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.

[4] பிறகு எப்படி போலீஸார் மெத்தனமாக இருக்கிறார்கள், இந்த ஆளும், சென்ற இடங்களில் எல்லாம் குற்றங்களை செய்து வருகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

[5] அடித்தும் திருந்தாத கேஸாக இருக்கும் போது, எப்படி அத்தகைய மிருகங்களுக்கு தொடர்ந்து பொறுப்புள்ளப் பதவிகளைக் கொடுக்கிறார்கள், மற்றவர்களும் அம்மிருகங்களை மதீகிறார்கள்?

[6] சலுகைக்கு பதிலாக செக்ஸ் விரும்பும் ஆள் எனத்தெரிகிறது. இது ஒரு திட்டத்துடன் செயல்படுத்துவதைப் போல உள்ளது.

[7] பாதிரியார்கள் கன்னிமார்களை எப்பொழுது பார்த்தாலும் தள்ளிக் கொண்டு போய் உடலுறவு கொள்வதால், பெண் உறுப்பை மறைக்க இந்த கர்டிலை உபயோகப் படுத்தி வந்தனர். அதை பூட்டி வைக்கவும் முடியுமாறு அமைப்புட இருந்தது. அதாவது, வேண்டுமென்றால், பூட்டைத் திறந்து செய்வார்கள் போல. ஆனால் இதற்க்கெல்லாம், யார் அனுமதி அளிப்பார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

[8] உதாரணத்திற்கு ஒன்று கொடுக்கப் பட்டுள்ளது. மற்ற அசிங்கங்களை, பல செய்திகள் எடுத்துக் காட்டுகின்ரன. ஒரு கூகுள் தேடல் விவரங்களை எடுத்துக் காட்டும். என்னுடைய இடுகைகளும் பல உள்ளன:

https://christianityindia.wordpress.com/2010/12/20/sudden-death-of-sausai-raises-questions/

https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-catholic-sex/

https://christianityindia.wordpress.com/2010/11/17/543-habitual-sex-offender-kidnaps-woman/

https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catholic-priest/

https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catholic-priest/

https://christianityindia.wordpress.com/2010/11/02/catholic-rape-accused-hearing-adjourned/

https://christianityindia.wordpress.com/2010/11/02/catholic-rape-accused-hearing-adjourned/

https://christianityindia.wordpress.com/2010/11/02/catholic-rape-accused-hearing-adjourned/

https://christianityindia.wordpress.com/2010/10/23/clinus-usha-mary-the-raped-list-increases-catholic-sex-case/

https://christianityindia.wordpress.com/2010/10/22/jesuit-sex-scandal-trichy/

https://christianityindia.wordpress.com/2010/10/20/nun-raped-case/

https://christianityindia.wordpress.com/2010/10/19/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA/

https://christianityindia.wordpress.com/2010/10/14/christian-orphanages-phedophile-sex-rape-arrest-2/

https://christianityindia.wordpress.com/2010/10/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/

https://christianityindia.wordpress.com/2010/10/13/catholic-priest-drugs-rapes-aborts-takes-porn-video/

https://christianityindia.wordpress.com/2010/09/28/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/

https://christianityindia.wordpress.com/2010/09/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8/

[10] தட் ஈஸ் தமிள், செக்ஸ் டார்ச்சர்: திருச்சி பாதிரியா மீது பெண் புகார், தன்கிழமை, நவம்பர் 18, 2009,, http://thatstamil.oneindia.in/news/2009/11/18/sex-torture-complaint-against-priest.html

நிர்வாண நிலையில் கத்தோலிக்க சாமியாரின் பிணம்: மர்மமான முறையில் மூச்சுமுட்டி இறந்தாராம்!

பிப்ரவரி 18, 2011

நிர்வாண நிலையில் கத்தோலிக்க சாமியாரின் பிணம்: மர்மமான முறையில் மூச்சுமுட்டி இறந்தாராம்!

“நெருங்கி பழகிய உதவியாளாரே கொலை செய்தாராம்! திருநெல்வேலி: பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் பாதிரியாராக இருந்தவர் அமலன் (54). பாளை., குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் உள்ள தேம்பாவணி தோட்டத்தில் தங்கியிருந்த அவர், கிறிஸ்தவர்களுக்கான “குடும்ப நல்வாழ்வு ஆலோசகராக’ செயல்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் தனது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கை, கால்கள் கட்டிலில் கட்டப்பட்டிருந்தன[1]. பாளை., போலீசார் விசாரித்தனர். அவரது மொபைல் போனில் பதிவாகியிருந்த எண்களை சோதித்தபோது, பாளையங்கோட்டை கீழநத்தத்தை சேர்ந்த பொன்ராஜ் (23) என்பவர் இவரது அறைக்கு அடிக்கடி வந்துசென்றது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பொன்ராஜ், பாதிரியாருடன் “நெருங்கி’ பழகுவாராம். அவரது அறையில் ஆயிரத்து 500 ரூபாய் காணாமல் போயிருந்தது. அதை தரும்படி பாதிரியார் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தலையணையால் அவரது முகத்தை அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது[2].

Fr. Amalan G.J

Fr. Amalan G.J

நிர்வாணமான நிலையில் கிடந்த அமலன்: பூட்டிய அறையில், நிர்வாணநிலையில் அமலனது உடல் கிடந்துள்ளது[3]. அப்படியென்றால், யார் அமலனை நிர்வாணமாக்கியது? தமிழ் ஊடகங்களோ, “சம்பவத்தின் போது அவர் லுங்கி அணிந்திருக்கிறார்.” என்றுதான் சொல்கின்றன. மேலும், நாற்றம் வந்ததால் தான் கதவை உடைத்து[4] உள்ளே சென்று அமலன் கொலை செய்யப் பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். பொன்ராஜ் கொலைசெய்து சென்றதால், அறை எப்படி உள்ளே பூட்டப் பட்டிருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வீட்டை உடைத்துக் கொண்டு, போலீஸார் உள்ளே சென்றனர் என்று செய்திகள் கூறுகின்றன. PTI ஆதாரமாக தி ஹிந்து மற்றும் என்.டி.டிவி முதலியன செய்திகளை இவ்வாறு வெளியிட்டுள்ளன[5].

Fr. Arul-complained-to-the-police

Fr. Arul-complained-to-the-police

நெருங்கி பழகிய பொன்ராஜும், நிர்வாண நிலையில் பாதிரியாரும்: போலீஸ் விசாரணையில் பொன்ராஜ், பாதிரியாருடன் “நெருங்கி’ பழகுவாராம்”, கூறியிருப்பது விசித்திரமாக உள்ளது. அதே நேரத்தில் “நிர்வாணமாக, கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணம் அவரது வீட்டில் கிடந்தது”, என்று குறிப்பிடப்பட்டுள்ளதும் வித்தியாசமாக உள்ளது. மூச்சு முட்டத்தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது என்றும் சொல்கின்றனர்[6]. அப்படியென்றால், ஒருவேளை, ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டபோது, மூச்சித் திணறி இறந்தாரா? ஏனெனில், சர்ச்சுகளில் இன்றைய நிலையில், இதெல்லாம் சாதாரணமாகிவிட்ட விஷயங்கள்தாம்! வெறும் ரூ. 1,500/- காணாமால் போய் விட்டதால், யாரும் இப்படி சண்டைப் போட்டு, கொலை செய்து கொள்வார்களா என்று தெரியவில்லை.

Counselling-Amalan

Counselling-Amalan

மேலே படத்தில் இருப்பது – பாதிரி அருள்………………………………………..உண்மைகள் மறைக்கப் படுகின்றனவா? பொன்ராஜ் என்பவர், அமலனுக்கு உதவியாளராக வேலை செய்து வந்ததாக, குற்றஞ்சாட்டப்பட்ட, அவரே (பொன்ராஜே) ஒப்புக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட நாளில் [திங்கட்கிழமை] பொன்ராஜ் சென்றபோது, ரூ. 1,500/- எடுத்துவிட்டதாக, அமலன் சொல்ல ஆரம்பித்தார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எடுக்காத பணத்தை எடுத்ததாக திருட்டுப் பட்டம் கட்டுவதை பொன்ராஜால் ஒப்புக்கொள்ள முடியவில்லை[7]. இதனால், எப்படியாவது, அமலனை மௌனமாக்குவது என்று தீர்மானித்தான். ஆனால், அமலன் விடுவதாக இல்லை, எல்லோரிடமும் சொல்லிவிடுவேன் என்றதால், அத்தகைய முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், ரூ. 1,500/-ற்காக கொலை நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[8].

வேதபிரகாஷ்

18-02-2011


 


[1] வேதபிரகாஷ், பாதிரி கொலை: இன்னொமொரு கத்தோலிக்க சாமியார் மர்மமான முறையில் கொலை!, https://christianityindia.wordpress.com/2011/02/17/another-catholic-priest-found-murdered-in-the-church-campus/

[3] The nude body of Father Amalan, 54, Secretary of the Palayamkottai Diocese’s Family Welfare Service Committee, was found with his hands and legs tied inside his house in the Child Jesus church complex, they said.

The Hindu, Body of Christian priest found in Tirunelveli Distict,  February 17, 2011, http://www.thehindu.com/news/cities/Madurai/article1464893.ece

[4] Police, who broke open the house on a complaint that foul smell was emanating from it, said initial inquiry revealed that the victim could have been asphyxiated to death using a pillow, which had been seized.

The Hindu, Body of Christian priest found in Tirunelveli Distict,  February 17, 2011, http://www.thehindu.com/news/cities/Madurai/article1464893.ece

[6] “….initial inquiry revealed that the victim could have been asphyxiated to death using a pillow, which had been seized”. Read more at: http://www.ndtv.com/article/cities/body-of-christian-priest-found-in-tirunelveli-86080?cp

[7] கலைஞர் டிவி செய்திகளின் படி – நேற்று 17-02-2011 மற்றும் இன்று.18-02-2011 ஒலி-ஒளி பரப்புகளின் மீது ஆதாரமாக செர்த்துக் கொள்ளப்பட்டது.

[8] சன் டிவி செய்திகளின் படி – நேற்று 17-02-2011 மற்றும் இன்று.18-02-2011 ஒலி-ஒளி பரப்புகளின் மீது ஆதாரமாக செர்த்துக் கொள்ளப்பட்டது..

பாதிரி கொலை: இன்னொமொரு கத்தோலிக்க சாமியார் மர்மமான முறையில் கொலை!

பிப்ரவரி 17, 2011

பாதிரி கொலை: இன்னொமொரு கத்தோலிக்க சாமியார் மர்மமான முறையில் கொலை!

“குடும்பநல்வாழ்வு பிரிவு செயலராகசெயல்பட்டுவந்த பாதிரி: நெல்லையில் பாதிரியார் ஒருவர் மர்மமான முறையில் கொலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்[1]. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ஞானசவுந்தர் மகன் அமலன் (54). கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரியாரான இவர், கழுகுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் “குடும்பநல்வாழ்வு பிரிவு செயலராக’ ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிவந்தார்.பாளையங்கோட்டை, சாந்திநகர், குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் உள்ள  ஜூப்ளி அருட்பணி இல்லத்தில் தங்கி பணியாற்றி வந்தார். அங்கேயே இருக்கும் தேம்பாவணி தோட்டத்தில், மாடியறையில் தங்கியிருந்தார்.

Fr. Amalan G.J

Fr. Amalan G.J

காதலர் தினத்தன்று கொலை செய்யப்பட்ட மர்மம் என்ன?: இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், இறக்குமதி செய்யப்பட்ட மதங்கள் மட்டுமல்ல, திஒனங்கள் / விழக்களும் வினோதமாகவே நடக்கின்றன அதாவது, ஒருவருக்குக் கொண்டாட்டம் என்றால், அடுத்தவருக்கு திண்டாட்டம் தான்! கோயம்புத்தூரைப் பொறுத்தவரைக்கும் பிப்ரவரி 14, தொடர்குண்டு, கொலை, சசவு, கலவரம் முதலியவைக் கொண்ட கொடுடூர-குரூரமான தினம். ஆனால், இம்முறை, ஒரு பாதிரியின் மர்மமான கொலை செய்திகளில் வர ஆரம்பித்தி இருக்கிறது.

சாந்திநகர் சர்ச் வளர்ந்த விதம்: 25 வருடங்களில், இந்த சாந்திநகர் வளாகம், மிகவும் பெரியதாக வளர்ந்து, அனைத்துலக ரீதியில் பல வேலைகளை செய்து வருகின்றது.  இதில் பல பிரிவுகள் இயங்கி வருகின்றன[2]. Franciscan Third Order, Youth Youth Women Association, Legion of Mary, Vincent De Paul, Good News Groups போன்றவை குறிப்பாக மாற்றம் மாற்றம் காரியங்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றன. இவையெல்லாம் அந்நிய பணவுதவி பெற்றுவருகின்றன. 1985ல் இங்கு, சிறிய சர்ச் கட்டப்பட்டது. அப்பொழுது அங்கு கத்தோலிக்கர் சிலரே இருந்தனர். 15-05-1990 அன்று, இது தனி “பாரிஷ்” ஆக அறிவிக்கப்படது[3]. மற்ற கத்தோலிக்க சாமியயர்கள் கூட, சாந்திநகருக்கு மாற்றம் செய்தால், நல்லது என்ற அளவில், அமோகமாகவே வளர்ந்து விட்டது. மேலும் விவரங்களுக்கு, கேழே தொடர்பு கொள்ளலாம்: Contact : Shanthinagar, Maharajanagar, Tirunelveli – 627 011; Telephone: 0462-2540312

14ம் தேதி மாலை-இரவு நடந்தது என்ன? மேலே விவரித்துள்ளபடி, இந்த வளாகத்தில், சாதாரணமாக, அப்படி யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது. ஞாயிற்றுக் கிழமை 13-02-1011 அன்று வழக்கம் போல, திருப்பலி சடங்களில் கலந்து கொண்டிருப்பார்.கடந்த 14ம் தேதி-திங்கட்கிழமை இவரை கடைசியாக பார்த்துள்ளனர். கடந்த 14ம் தேதி அமலன் தனது பெற்றோருடன் செல்போனில் பேசினார். அதன்பின் அவர் யாருடனும் பேசவில்லை. 15ம் தேதி – செவ்வாய் கிழமை இவரைப் பற்றி யாரும் கண்டுகொள்ளாதது ஆச்சரியமான விஷயம் தான்! 16ம் தேதி- புதன்கிழமை பிற்பகலில் இவரது அறையை சுத்தம் செய்ய சென்ற பெண், அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தகவல் தெரிவித்தார். உள்ளே சென்று பார்த்த போது, அவர் படுத்திருந்த கட்டிலில் இரண்டு கால்களும் கட்டப்பட்டிருந்தன. கைகள் சேர்த்து கட்டப்பட்டிருந்தன. தலையணையை கொண்டு முகத்தை அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. சம்பவத்தின் போது அவர் லுங்கி அணிந்திருக்கிறார். திருச்சி பாதிரி கொலையும், இக்கொலையும், பலவிதங்களில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

Counselling-ஆலோசனை கூறும் கிருத்துவ பாதிரிகள்

Counselling-ஆலோசனை கூறும் கிருத்துவ பாதிரிகள்

அமலனுக்கு நெருக்கமானவர்களே இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்: ஆலய வளாகத்திற்குள் வேறு நபர்கள் யாரும் வரவாய்ப்பில்லை என தெரிவித்த போலீசார், அவரது உடலை பரிசோதனைக்கு, நெல்லை ஐகிரவுண்ட் – மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிரியார் அமலனுக்கு நெருக்கமானவர்களே இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் இன்று (17ம் தேதி) பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது[4].

மற்றவர்களுக்கு அறிவுரை கூறிவந்தவர், தமக்கு நல்லமுடிவைத் தேடிக்கொள்ள முடியவில்லை! கிருத்துவர்கள் முன்பு, பாவ-மன்னிப்பு [கன்ஃபெஷன் – confession] என்ற முறையில், அடாத வேலைகளையெல்லாம் செய்து வந்தனர். இப்பொழுது கவும்சிலிங் என்ற போர்வையில், இறங்கியுள்ளனர். அவ்வாறு வரும் நபர்களின் தனிப்பட்ட விவரங்கள், தெரியவரும் போது, அவற்றை வைத்துக் கொண்டு மிரட்ட ஆரம்பிக்கின்றனர். பெண்களாக இருந்தால், அவ்விஷயங்களை வைத்துக் கொண்டு, தமது காமப்பசிக்கு சமயம் வரும் போது தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில், குடும்ப பிரச்னைகள், கணவன், மனைவி பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் போதகராக செயல்பட்ட இவருக்கு அதன் மூலம் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. உடன் பணியாற்றும் பாதிரியார் அருள் புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாளையங்கொட்டை டையோசிஸில் இருக்கும் ஜி.ஜே. அமலன்[5] இவராக இருக்கலாம் போலிருக்கிறது. ஏனெனில், குறிப்பிட்டுள்ள விவரங்கள், அவருக்குப் பொருந்துகிறது. மேலும், புகார் கொடுத்தவர், அருள்[6] என்று இருப்பதாலும், அவரும், இவரைப் போன்ர பணிகளில் ஈடுபட்டுள்ளார் மற்றும் ஒரே இடத்தில் தங்கி வேலை செய்து வருவதாலும், இவரே அந்த அமலனா என்று ஆராயவேண்டியுள்ளது.

வேதபிரகாஷ்

17-02-2011


[1] , நெல்லையில் பாதிரியார் கொலை, பிப்ரவரி 16,2011,, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=189443

[3] Taking into consideration of the spiritual needs of the faithful, the most Rev. Dr. S. Iruthayaraj, first Bishop of Palayamkottai, made Shanthinagar a separate parish on 15th May 1990.

[4] , கை,கால்களை கட்டி பாதிரியார் கொடூர கொலை , பிப்ரவரி 16,2011, ,http://www.dinamalar.com/district_detail.asp?id=189555

[5] Rev. Fr. Amalan, G. J, Secretary, Dialogue Commission, Jubilee Pastoral Centre, THEMBAVANI THOTTAM, Shanthi Nagar, TIRUNELVELI – 627011 Name: Rev. Fr. Amalan G J ; Date of Birth: 19.04.1957; Date of Ordination: 17.04.1983;

Ecumenism: Organizes services of worhip among different churches and communities. Strives to promote unity among Christian in facing some social changes. Conducts ecumenical prayer services, fasting etc. Gives special stress to the observance of the Unity Octave as per the norms of Church.

Education :This commission consists of 65 primary schools, 23 middle schools, 10 High Schools and 4 higher secondary schools, all aided by Tamilnadu Government and abides by the rules and regulations of the Tamilnadu Government, enjoying the minority rite privilege in appointing the teachers independently of the Government. It focuses on the education of poor students (mostly village poor students) not only on the academic education but also on catechism to the Christians, moral and value education to the non-Christians. Periodical training programmes and refresher courses are given to the teachers in order to update themselves to the signs of the times. It helps catholic trained teachers get job opportunities if and when vacancies arise in the schools, following seniority lists of the unemployed trained hands.

Healthcare: It focuses on the health care of the people, not only of the sound body but also the mind and the soul. Through 22 primary health care centres, supervised by T.S.S.S., it caters the health needs of the poor villagers. It also helps mentally and emotionally affected people by counseling and psychotherapy, having a centre called “Nesan Counselling Centre”. It also conducts periodical awareness programmes and free medical camps to help people to take preventive steps as to be free from sickness and to keep the home and the surroundings clean and neat.

[6] Rev. Fr.M. Arul, Secretary, Health care Commission, Jubilee Pastoral Centre, THEMBAVANI THOTTAM, Shanthi Nagar, TIRUNELVELI – 627011

Justice, Peace and Development : This commission known as Tirunelveli Social Service Society (T.S.S.S), a registered independent society in the Diocese, focuses on Justice, peace and development of the so called suppressed, oppressed and downtrodden of the society, irrespective of Caste and Creed. It also focuses on the development of women, through self-help groups, providing loans through banks. This commission also has homes to shelter the street children, abandoned babies and unwed mothers in the name of Saranalayam and Vidiyal . It goes hand in hand with Government schemes and developmental projects of the two districts of Tirunelveli and Thoothukudi.

கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்!

பிப்ரவரி 11, 2011

கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்!

கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்!

மர்மமான மரணம்: மண்டையுடைப்பு / மாரடைப்பு: திருச்சி செயின்ட் ஜோஸப் பாதிரி, புளோரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டார்[1]. கைது செய்யக் கூட போலீஸார் காலம் தாழ்த்தினர்[2]. பிறகு, நிபந்தைகள் கூடிய ஜாமீனில் வெளியே வந்தார்[3]. மற்ற பாதிரிகளோ, நிபந்தைகள் இல்லாமல் ஜாமீனில் வந்தனர்[4]. தினமும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துப் போட்டு வந்தார். மருத்துவ பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் மறைக்கப் பட்டன[5]. வீருகொண்டு எழுந்த சில இயக்கங்களும் காணாமல் போய்விட்டன[6]. ஊடகங்கள் வழக்கம் போல அமைதியயகி விட்டன. இந்நிலையில், பாதிரியார்கள் மறுபடியும், இந்த வழக்கை மூடி மறைக்க வேலைசெய்து வருவது தெரிய வந்துள்ளது. இன்னொரு பாதிரி சூசை மர்மமான முறையில் இறந்துள்ளார். சூசையின் உதவியாளர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, பின் மண்டை உடைந்து, மூக்கில் ரத்தம் வழிந்து, கைலி கட்டிய நிலையில், தரையில் சூசை பிணமாகக் கிடந்தார். ஆனால், கல்லூரி முதல்வர் செபாஸ்டின் வெளியிட்ட அறிக்கையில், படுக்கையில் உயிரற்ற நிலையில் சூசை இறந்திருந்தார்”, என்றுள்ளது!

புளோரன்ஸ்-மேரி-புகார்-கலெக்டர்

புளோரன்ஸ்-மேரி-புகார்-கலெக்டர்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்மமரணம்[7]: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர், ரெக்டார், சாமியார் P. சூசை மர்மமான முறையில் 19-12-2010 அன்று இறந்து கிடந்தார். ஏற்கனவே, கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சையில் இக்கல்லூரியின் முதல்வர் சிக்கியுள்ள நிலையில், அதிபரின் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிரிகள் நீக்கம் பற்றிய ஆணையை பிறப்பித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேகமடைந்த திரவியநாதன் அவரது அறையின் ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது, பின் மண்டை உடைந்து, மூக்கில் ரத்தம் வழிந்து, கைலி கட்டிய நிலையில், தரையில் சூசை பிணமாகக் கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[8]. கல்லூரி முதல்வர் செபாஸ்டின் வெளியிட்ட அறிக்கை: “நேற்று காலை நடந்த திருப்பலிக்கு, சூசை அடிகளார் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்து, கல்லூரி முதல்வர் செபாஸ்டின், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைராஜ், இல்ல நிர்வாகி ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸ் ஏ.சி., சீனிவாசன் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். பூட்டியிருந்த அவரது அறை கதவை உடைத்து உள்ளே சென்ற போது, படுக்கையில் உயிரற்ற நிலையில் சூசை இறந்திருந்தார். இதைப் பற்றி, விவரங்களை மறைத்து, மாரடைப்பினால் இறந்தார் என்று, உடலை புதைத்துவிட்டனர்.

புளோரன்ஸ்-மேரி-கமிஷனரிடம்-புகார்

புளோரன்ஸ்-மேரி-கமிஷனரிடம்-புகார்

திருச்சி கன்னியாஸ்திரி, மக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு (07-02-2011): திருச்சி கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், புனித ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் குற்றப்பத்திரிகையை போலீசார் திரும்பப்பெற்றனர். இதனையடுத்து குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ள பெயர்களில் அரசியல்வாதிகள் நெருக்கடியாலும், போலீஸ் கமிஷனர் நெருக்கடியால் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்[9].இதுகுறித்து அறிந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, பிப்.,7ம் தேதி, தன் வக்கீல் இருதயசாமியுடன், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் புகார் மனு அளித்தார். அதில், “போலீஸ் உயரதிகாரிகளும், ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட்டும் சேர்ந்து, குற்றப்பத்திரிகையில் உள்ள சில குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர்‘ என்று கூறியிருந்தார்

புளோரன்ஸ்-மேரி-ரகசியங்கள்

புளோரன்ஸ்-மேரி-ரகசியங்கள்

போலீஸ் கமிஷனரிடம் புகார் (10-02-2011):.கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி 10-02-2011 மதியம் ஒரு மணியளவில் திடீரென திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம் புகார் மனு அளித்தார். அதில், “குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றவாளிகளின் பெயர்களை நீக்க கோட்டை போலீசார் மேற்கொண்டுள்ள முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்‘ என்று கூறியுள்ளார்[10]. பின்னர் கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி நிருபர்களிடம் கூறியதாவது: “குற்றப்பத்திரிகையில் உள்ள இரண்டு பெயர்களை நீக்கவும், ஆவணங்களை அழிக்கவும் கோட்டை போலீசார் முயற்சித்து வருகின்றனர். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்தேன். குற்றவாளிகளுக்கு அரசியல் பலம், பணபலம், போலீஸ் உயரதிகாரிகள், நீதித்துறையில் உள்ளவர்கள் என பலரும் ஆதரவாக இருப்பதால், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்[11]. கடந்த 7ம் தேதி, போலீஸ் கமிஷனரும், மாஜிஸ்திரேட்டும் இணைந்து தான், குற்றப்பத்திரிகையில் உள்ளவர்களை காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்று கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்[12]. ஆனால், அவர் குற்றஞ்சாட்டிய, போலீஸ் கமிஷனரிடமே, ப்ளாரன்ஸ் மேரி நேற்று முன்தினம் மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்[13]: ஜனவரி 8,9,1.2011 ஆகிய 2 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் பாதிரியார் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். இதற்கிடையே பாதிரியார் ராஜரத்தினம் தரப்பில் நிபந்தனை ஜாமீனை தளர்த்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணை 15.2.2011-ந்தேதி வருகிறது.   இதற்கிடையே வழக்கு தொடரப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால் கோட்டை மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பிளாரன்சு மேரி வழக்கில் சாட்சியங்கள் சந்தர்பங்களை திரட்டி குற்றப்பத்திரிகை தயார் செய்தனர். இறுதியில் பாதிரியார் ராஜரத்தினம் மீது சுமார் 110 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை திருச்சி மாஜிஸ்திரேட்டு நடுவர் எண்.1ல் மாஜிஸ்திரேட்டு ஆபிரகாம் லிங்கனிடம் தாக்கல் செய்தனர். இதில் பாதிரியார் பிளான்சுமேரியை மிரட்டிய, பாதிரியார்கள் மற்றும் பிளாரன்சுமேரிக்கு கருகலைப்பு செய்த தென்னூர் ஆஸ்பத்திரி டாக்டர் ஆகியோர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பிடித்து உள்ளது. மேலும் இவ்வழக்கில் சாட்சிகளாக பிளாரன்சுமேரி அவரது அக்காமேரி, உள்பட 28 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். பாதிரியார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து விரைவில் விசாரணை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு சூடுபிடித்து உள்ளது

பாதிரியார்களின் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்: இது பாதிரியார்களின் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் எனலாம் போலிருக்கிறது. எப்படி கோடிகள் வளர்ந்தனவோ, இதிலும் கற்பழிப்பு கன்னியாஸ்திரிகளின் எண்ணிக்கையும் வளர்ந்தது[14]. கன்னியாஸ்திரிகளின் புகார்களும் பெருகின[15]. அந்நேரத்தில் தமிழகத்திற்கு வந்த கந்தர்புரி பிஷப் கூட நொந்து விட்டார்[16]. ஆனால், எல்லாவற்றையும் மறைத்துவிட்டனர். எப்படி ஊழலில் கூட நம் நாட்டில் பாரபட்சம் பார்க்கின்றனரோ, அதே போல, செக்ஸ் குற்றங்களில் கூட, பாரபட்சமமகவே, ஊடகங்கள், நீதிமன்றங்கள், சட்டத்தை அமூல் படுத்தும் அதிககரிகள், நிறுவனங்கள் எல்லாமே அவ்வாறுதான் நடந்து கொள்கின்றன.

வேதபிரகாஷ்

11-02-2011


[3] வேதபிரகாஷ், செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜி முதல்வருக்குநிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!, https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-catholic-sex/

[4] வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது: மற்ற பாதிரிகளுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

, https://christianityindia.wordpress.com/2010/11/04/rape-accused-jesuit-gets-conditional-bail/

[5] வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது, வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!, https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catholic-priest/

[7] தினமலர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்ம மரணம், டிசம்பர் 20,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149603

[9] தினமலர், திருச்சி கன்னியாஸ்திரி, மக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு,  பிப்ரவரி 07, 2011,, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182677

[10] தினமலர், குற்றப்பத்திரிகையில் உள்ளவர்களை நீக்க முயற்சிப்பதை தடுக்க கோரிக்கை:கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2011,00:10 IST; மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 11,2011,02:00 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=185315

[12] தினமலர், குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி: கன்னியாஸ்திரி பரபரப்பு குற்றச்சாட்டு, பிப்ரவரி 07,2011,,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182795

[13] மாலைமலர்,கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு: திருச்சி பாதிரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் , http://www.maalaimalar.com/2011/02/04152351/wimple-case-charge-sheet-appl.html

[14] வேதபிரகாஷ்,, கிளினஸ், உஷா, மேரி என தொடரும் பட்டியல்: பலான பாதிரியின் பலே லிஸ்ட்!, https://christianityindia.wordpress.com/2010/10/23/clinus-usha-mary-the-raped-list-increases-catholic-sex-case/

கிருத்துவர்களின் நிலம் அபகரிப்பு தொடர்கிறது!

பிப்ரவரி 10, 2011

கோவில் நிலம், அரசு நிலம், புறம்போக்கு நிலம் அபகரிப்பது என்பது கிருத்துவர்களுக்குக் கைவந்த கலை.

கோவில் நிலம், அரசு நிலம், புறம்போக்கு நிலம் அபகரிப்பது என்பது கிருத்துவர்களுக்குக் கைவந்த கலை. முதலில், அமைதியாக சிலுவையை வைப்பார்கள்; சிறியதாக கொட்டாய் போடுவார்கள்’; ஜெபம் செய்கிறேன் என்று 10-20 பேர் வர்வார்கள்; பிறகு சுவர் கட்டுவார்கள், சிமென்ட் கூறை போடுவார்கள்; அதற்குள் யாராவது எதிர்ப்புத் தெரிவித்தாலோ, தட்டிக் கேட்டாலோ, உள்ளூர் போலீஸாரை வாலைத்துப் போட்டு அமைதியாக்கி விடுவார்கள். அதற்குள் உள்ளூர் அரசியல்வாதி அல்லது பெரியமனிதர்களைப் பார்த்து சரிகட்டி, பட்டா வாங்க கிளம்பிவிடுவார்கள்; இவ்வாறான காரியங்களில் இடையில் கிருத்துவ அதிகாரிகள் இருந்தால், அவ்வளவு தான், புகார் செய்தால் கூட கண்டு கொள்ளமாட்டார்கள் அல்லது புகார் கொடுத்தவர்களுக்கு எதிராக செய்ல்படுவார்கள். ஆவணங்கள் மறைந்துவிடும் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படமாட்டாது. இப்படித்தான், அச்சரப்பாக்கத்தில், ஒரு குன்றின் மீது சர்ச் ஒன்று பெரிய அளவில் கட்ட்ப்பட்டுள்ளது.

அச்சறப்பாக்கம் ஆக்கிரமிப்பு (2009): அச்சிறுப்பாக்கத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் குன்று புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பதாக கிராம நிர்வாக அலுவலர், போலீசில் புகார் செய்துள்ளார்[1].அச்சிறுப்பாக்கத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் வஜ்ஜிரகிரி மலை உள்ளது. இதன் உச்சியில் பசுபதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குன்று புறம்போக்கு நிலம், வருவாய்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில், மழைமலை மாதா என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. அரசு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதியின்றி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதும் ஆலயத்தை விரிவுபடுத்தி கட்டடங்கள் கட்டப்படுகின்றன.ஆலய நிர்வாகம், பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையையும் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பிரச்னை ஏற்பட்டது.வருவாய்த் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து அவ்வப்போது அமைதி கூட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு 2009 நடந்த அமைதி கூட்டத்தின்போது மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என உறுதி அளித்தனர். தற்போது அதையும் மீறி தொடர்ந்து கட்டடம் கட்டி வருகின்றனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, குன்று புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் அத்துமீறி அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதை தடுக்கக் கோரி அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் பூங்காவனம், அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்ட எதிர்ப்பு[2] (2011): திருப்பூர் அருகே பிச்சம்பாளையம்புதூரில் புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்ட, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது; போலீசார் சமரசம் செய்தனர். திருப்பூர், பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர், கிழக்கு ஸ்ரீநகர் பகுதியில் குடியிருப்பையொட்டி ரோட்டோரத்தில் 15 சென்ட் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் சி.எஸ்.ஐ., சர்ச் கட்டப்பட்டுள்ளது. சர்ச்க்கு பின்னால் 2 சென்ட் காலி இடம் உள்ளது. காலி இடத்தில் சர்ச்சை விரிவுபடுத்த கிறிஸ்தவ அமைப்பினர் பலமுறை முயற்சி செய்துள்ளனர். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அந்த இடத்தில் ரேஷன் கடை, நூலகம், புறகாவல் நிலையம் என பொது காரியத்துக்கு பயன்படுத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று காலை கிறிஸ்தவ அமைப்பினர் 200 பேர் திடீரென சிமென்ட், கம்பி, கருங்கல் கொண்டு வந்து சர்ச் கட்ட முற்பட்டனர். தகவல் அறிந்ததும் இந்து அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் கூடி, சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. எஸ்.பி.அருண், டி.எஸ்.பி.ராஜா சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். காலி இடத்தில் எந்த கட்டடமும் கட்டக்கூடாது; மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைபடி நடந்து கொள்ள அறிவுறுத்தினார். பிரச்னை ஏற்படாமல் இருக்க 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புறம்போக்கு இடத்தில் சர்ச்:: மதிற்சுவர் கட்ட எதிர்ப்பு[3] (2010): தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே கிறிஸ்துவ ஆலய காம்பவுண்ட் சுவர் கட்ட அப் பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு்பட்டனர். ஆறுமுகநேரி அருகே உள்ளது தலைவன்வடலி கிராமம். இங்கு 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இக் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் இடத்தில் சர்ச் கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இப் பிரச்சனை தொடர்பாக கிராம மக்கள் பலமுறை பலகட்ட போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.மேலும், சர்ச் கட்டுவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய 3 ஏக்கர் 48 சென்ட்டில் காம்பவுண்ட் சுவர் அமைப்பதற்கு கோர்ட்டில் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த இடத்திற்கு அருகில் இசக்கியம்மன் கோயில் மற்றும் இடுகாடு ஆகியவை உள்ளது. எனவே சர்ச்சைக்குரிய இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் வந்த காவல்துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தார். இதனையடுத்து, காம்பவுண்ட் சுவர் கட்டுவது தொடர்பாக திருச்செந்தூர் ஆர்டிஒ முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதனால் ஆறுமுகநேரி – ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை சொல்வது எஸ்ரா சற்குணம் (1973)! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது[4], “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[5]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[6] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்!

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம் (1973)! திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[7] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்! திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது!

1973-2011 கிருத்துவர்கள் எப்படி முன்னேறியிருக்கிறார்கள்: சுமார் 40 ஆண்டுகளில் எல்லாமே முன்னேறித்தான் உள்ளன. திமுக ஊழலில் முன்னேறி கோடிகளில் கொடிக் கட்டிப் பறக்கிறது! அப்பொழுது ஹண்டே கோதுமை ஊழலுக்கு வழக்குப் போட்டார்[8], இப்பொழுது சுப்ரமணிய சுவாமி வழக்குப் போடுகிறார்! கிருத்துவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், கற்பழிப்பு, செக்ஸ், பாலியல், சிறுவர்-சிறுமி வன்புணர்ச்சி இத்யாதி………….முதலியவற்றில்[9], அமெரிக்க-ஐரோப்பிய நாட்டவர்களையே மிஞ்சிவிடும் அளவிற்கு முனேற்றி விட்டார்கள்[10]! ஒரு விளம்பரத்தில் சிறுவன் ஒருவன் கவலைப்பட்டுக் கொள்வான், “வயது தான் ஆகிறது, ஆனால், எனக்கு மட்டும் ஏன் இவை எல்லாம் முடியவில்லை, என்று அம்மாவிடம் கேட்பான். ஆனால், இவ்விஷயத்தில், அம்மாவிடம் எதையும் கேட்க வேண்டாம், ஒழுங்காக இருந்தாலே போதும்!

வேதபிரகாஷ்

10-02-2011


[1] தினமலர், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் மீது புகார், அக்டோபர் 02,2010 , http://www.dinamalar.com/News_Detail.asp?Id=97459&Print=1

[2] தினமலர், புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்ட எதிர்ப்பு, பிப்ரவரி 07, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182576

[3] தினமலர், சர்ச் காம்பவுண்ட் சுவர் கட்ட பொது மக்கள் எதிர்ப்பு-சாலை மறியல்,  நவம்பர் 17, 2010, http://thatstamil.oneindia.in/news/2010/11/17/arumuganeri-church-wall-villagers-protest.html

[5] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[6] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[7] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[9] பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் உள்ள அகரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் ஓவியா(12) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் பெரம்பலூரில் தனியாரால் நடத்தப்படும் விடுதியில் தங்கி 7ம் வகுப்பு படித்து வருகிறார். விடுதி வார்டன் ஜேம்ஸ்(40) என்பவர் கடந்த சில மாதங்களாக ஒவியாவிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்து வந்துள்ளார். இதனை ஓவியா தனது தாயார் கவிதாவிடம் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து கவிதா அளித்த புகாரின் பேரில் ஜேம்ஸ் விடுதியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182713

[10] இதைப் பற்றிய இடுகைகளை இங்கே பார்க்கவும்: www.christianityindia.wordpress.com, www.womanissues.wordpress.com, etc

அமெரிக்க மற்றும் இந்திய கிருத்துவர்களின் மிரட்டல்!

பிப்ரவரி 9, 2011

அமெரிக்க மற்றும் இந்திய கிருத்துவர்களின் மிரட்டல்

மத்திய பிரதேசத்தில் நடக்கும் கும்ப மேளா: பிப்ரவரி 10 முதல் 12 வரை நடக்கவிருக்கின்ற கும்பமேலாவில், இரண்டு மில்லின்களுக்கும் மேலான இந்துக்கள் நர்மதா நதிக்கரையில் கூடுவதாக எதிர் பார்க்கப் படுகிறது. இதனால், கிருத்துவ நிறுவனங்கள் கதிகலங்கிவிட்டதாகத் தெரிகின்றது. வழக்கம் போல திசைத் திருப்ப, பாஜக ஆட்சி செய்யும் மாநிலமாக இருப்பதால், இதை வைத்துக் கொண்டு பிரச்சினை செய்ய திட்டம் தீட்டியுள்ளது. அதன்படியே அகில் இந்திய கிருத்துவ கவுன்சில் [All India Christian Council (AICC)] இந்து அமைப்புகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கிருத்துவர்களுக்கு எதிராக பேசவோ, பிரச்சாரம் செய்யவோக் கூடாது என்று அறிவித்துள்ளது[1].

ஒரிஸா ராப் பிரச்சினை ஜான் தயாலிஒன் மிரட்டல்: ஜான் தயால் என்ற அதன் செகரட்டரி ஜெனரெல், பெருபான்மையாக உள்ள இந்துக்களின் உரிமைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சிருபான்மையினர் தாக்கப் படலாம், அதாவது, குறிப்பாக, கிருத்துவர்கள் மதம் மாற்ற தூண்டலாம். ஆகவே அத்தகைய நிகழ்ச்சி ஏற்படாமல், அரசு தடுக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் அவர் சொல்கிறார், “கர் வாபஸி, அதாவது வீட்டிற்கு திரும்புதல் [homecoming celebration] என்ற விழா நடத்தப் படபோகின்றதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதன்படி, கோண்ட் எனப்படுகின்ற காட்டுவாசிகளை இந்துக்களாக மதம் மாற்றப் போவதாக தெரிகிறது. இதனால், எதிமறை விளைவுகள் ஏற்படக்கூடும்”, என்று மிரட்டும் விதத்தில் முடிக்கிறார். அதாவது, கிருத்துவர்களைப் பொறுத்தவரையில், மலைவாசிகள், வனவாசிகள் முதலியோர் இந்துக்கள் இல்லையாம். ஆகையால், அவர்களை கிருத்துவர்களாகக் கூட மாற்றலாமாம். இன்னொருவிதமாக சொல்லுவதானால், மதம் மாற்றும் வேலையிலும் தங்களுக்கு ஒதுக்கீடு / பங்குத் தரவேண்டும் என்ரு மறைமுகமாகக் கூறுகிறார்.

 

இன்னுமொரு அயல்நாட்டு கிருத்துவ நிறுவனம் மிகவும் மோசமாக மிரட்டியுள்ளது[2]. “அவர்கள் கும்ப மேளாவின் மூலம், சுத்தப்படுத்துவோம் என்கிறார்கள். அப்படியென்றால், கிருத்துவர்களை ஒன்று மதம் மாற்றுவார்கள் அல்லது கொண்ருவிடுவார்கள்”, என்று விளக்கம் அளிக்கிறார்!


[2] Christians may face a wave of violence tomorrow, Posted: 9 February, 2011, http://www.mnnonline.org/article/15332

“The religious extremists in Madhya Pradesh have been saying for months now that this will be the time to cleanse the state of Madhya Pradesh–as well as this particular district where this celebration is–of all Christians,” says Dave Stravers with Grand Rapids, Michigan-based Mission India. “That means either a Christian must reconvert back to Hinduism, must leave, or must be killed.”

 

இந்து கோவிலைக் கண்டு நடுங்கி சாகும் கிருத்துவர்கள்!

பிப்ரவரி 4, 2011

இந்து கோவிலைக் கண்டு நடுங்கி சாகும் கிருத்துவர்கள்!

இந்தியாவில் இருக்கும் கிருத்துவர்கள் எல்லோரும் இந்துக்களே, ஒருசில அந்நியர்களைத் தவிர. அந்நிலையில் இந்துக் கோவில்களைக் கண்டு அஞ்சி நடுங்கி சாகும் நிலைக் கண்டு வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதில் இரண்டு விஷயங்கள் வெளிப்படுகின்றன.

  1. இந்துக்களாக இருந்து, கிருத்துவர்களாக மாறிவிட்டாலும், பழைய நினைவுகள், உறவுகள், சம்பந்தங்கள் முதலியன அவர்களை உறுத்திக் கொண்டே இருக்கின்றன.
  1. கிருத்துவர்களா மாறியப் பிறகும், ஒன்றும் பிரமாதமாக, அவர்கள் நினைத்தபடி, இறையியலில் உயர்ந்ததாக எதையும் கண்டுவிடவில்லை. மாறாக, மிகவும் தாழ்வாக உள்ளவற்றைத்தான், ஏதோ சிந்தாந்த ரீதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்ற உண்மை அறிந்து கொண்டுள்ளார்கள்.

இதனால் தான், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்துக் கொண்டே இருக்கிறது. அடாடா, தேவையில்லாமல், மதம் மாறிவிட்டோமோ என்றும் நினைத்துப் பார்க்கின்றனர். மேலும், உள்கலாச்சாரமயமாக்கல்[1], கிருத்துவர்களின் போலித்தனத்தைத் தோலிருத்திக் காட்டுகிறது.

கோவில் கட்ட எதிர்ப்பு : இரு தரப்பு பிரச்னையால் பதட்டம் நீடிப்பு[2]: கும்மிடிப்பூண்டி : கோவில் கட்டுவதில் வலுத்து வரும் பிரச்னையின் ஒரு கட்டமாக, கிறிஸ்துவ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களின் செயல்பாட்டினை கண்டிக்கும் விதமாக, இந்து அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இரு தரப்பினரின் செயல்பாடுகளால் ஆரம்பாக்கத்தில் பதட்டம் நீடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், பெந்தெகோஸ்தே[3] என்ற கிறிஸ்துவ அமைப்பு இயங்கி வருகிறது. அப்பகுதியை சுற்றியுள்ள நொச்சிக்குப்பம், பாட்டைகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் அந்த கிறிஸ்துவ சபையில் வழிபட்டு வருகின்றனர். அந்த சபைக்கு சற்று எதிரே, வெங்கய்யா சாமி கோவிலை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நிறுவி வருகிறார்.

சர்ச்சுக்கு எதிரே கோவில் அமைந்தால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கிறுஸ்துவ அமைப்பினர் கருதினர்: தங்கள் சபைக்கு எதிரே இந்து கோவில் அமைந்தால், இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கிறுஸ்துவ அமைப்பினர் கருதினர். இதையடுத்து, கிறிஸ்துவ சபையினர் கடந்த ஆண்டு கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக கோவில் கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆர்.டி.ஓ., தலைமையிலான அமைதி பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. இந்துக்கள் விட்டுக் கொடுக்கும் போக்கில் இருந்தாலும், கிருத்துவர்கள் அடாவடித் தனமாக செயல்படுவது நன்றாகவேத் தெரிகிறது.

சர்ச்சுக்கு எதிரே கோவில் அமைந்தால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்றால், கோவிலுக்கு எதிரில், அருகில் எப்படி சர்ச்சுகள், மசூதிகள் கட்டப்பட்டன? இருப்பினும், கோவில் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி, அதனை கண்டிக்கும் விதமாக கிறிஸ்துவ அமைப்பினர் சில தினங்களுக்கு முன், ஆரம்பாக்கம் – நாயுடுகுப்பம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின் நடந்த பேச்சுவார்த்தையில், பிரச்னையின் நிலையை அறிந்து இந்த மாதம் 4ம் தேதி மீண்டும் ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் முனியசாமி தெரிவித்திருந்தார். சாலைமறியல் முதலியன விளம்பரத்திற்காகவே என்பது தெரிந்த விஷயமே. தாங்கள் சிறுபான்மையினர் என்ற திமிரில், மமதையில் அவ்வாறு செயல்படுகின்றனரேத் தவிர, உண்மையில் நம்பிக்கை அல்லது விசுவாசம் பெயரில் இல்லை என்பது தெரிகிறது.

இந்துக்கள் பதிலுக்கு உண்ணாவிரத போராட்டம்: இந்து கோவில் கட்ட தடையாக செயல்பட்டு வரும், கிறிஸ்துவ அமைப்பினரின் செயல்பாட்டினை கண்டித்து, இந்து அமைப்பினர், கிருத்துவர்கள் போலில்லாது, நேற்று (03-02-2011) ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் எதிரே உண்ணாவிர போராட்டம் மேற்கொண்டனர். வெங்கய்யா கோவில் நிறுவனர் ராஜேந்திரன், அகில இந்திய சிவசக்தி தர்ம சமிதி நிறுவன தலைவர் பாலாஜி, ஆரம்பாக்கம் வியாபாரிகள் சங்க துணை தலைவர் முருகன் உள்ளிட்ட பலரின் முன்னிலையில், 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

“JESUS NEVER FAILS” என்று தம்பட்டம் அடிப்பவர்கள் கோவிலைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? இதனால், கிருத்துவர்கள் கருவிக் கொண்டிருக்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படாதபடி, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே வலுத்து வரும் பிரச்னை காரணமாக, ஆரம்பாக்கம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தையில், சுமூக தீர்வு காணும் நோக்கில், அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். “JESUS NEVER FAILS”[4] என்று தம்பட்டம் அடிப்பவர்கள் கோவிலைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? என்று சிலர் வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்து விட்டனர்! சென்ற மாதத்தில் இதே மாதிரியான நிகழ்ச்சி, வேறு மாதிரி நிகழ்ந்தது.

கோவில் கட்ட எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் மனு[5]: கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே தனியாரால் கட்டப்படவுள்ள கருப்பராயன் கோவிலை வேறு பகுதியில் கட்டக்கோரி ஊர்ப் பொதுமக்கள் ஆர்.டி.ஓ., மீனா பிரியதர்ஷினியிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கரட்டூர் எஸ்.பி., நகர் இரண்டாவது தெருவில் கருப்பராயன் மற்றும் முனியப்பன் கோவிலை ரங்கசாமி என்பவர், அவரது வீட்டுமனை நிலத்தில் கட்ட முயற்சி செய்து வருகிறார். வழக்கமாக ஊரின் எல்லைப் புறத்தில் கட்டப்படும், கருப்பராயன் கோவிலை ஊர் நடுப்பகுதியில் கட்டினால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் கோவில் கட்டப்பட்டால், அந்த பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் செல்ல முடியும். குழந்தைகளும் அந்த பகுதியில் செல்ல அஞ்சுவர். எனவே கருப்பராயன் மற்றும் முனியப்பன் கோவிலை வேறு பகுதியில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோபி நான்கு நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் முருகேசன் மற்றும் எஸ்.பி., நகர், திலக்நகர், சாதனை செம்மல் நகர், செல்வகணபதி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனிருந்தனர்.

ஊரின் எல்லைப் புறத்தில் கட்டப்படும், கருப்பராயன் கோவிலை ஊர் நடுப்பகுதியில் கட்டினால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு: இப்படி நம்புவது பகுத்தறிவாகுமம? இல்லை அந்த மாதிரி, ஆகம சாத்திரங்கள் முதலியன இருக்கின்றனவா? இப்படியெல்லாம் கேள்வி கேட்டால், அந்த எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களின் போலித் தனம், வெளிப்பட்டு விடுகிறது. கருப்பராயன் கோவிலை இங்குதான் கட்டவேண்டும் என்றும் எங்குச் சொல்லப் பட்டிருக்கின்றது? உண்மையில், இந்துக்களுக்கு எதிராக செயல்படும் சக்திகளே, இவ்வாறு வேலை செய்கின்றன என்பதனை கண்டுகொள்ள வேண்டும். மேலும், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம்….என்றெல்லாம் பேசுகிறவர்களும், யார் காப்புகின்றனர், யார் எதிர்க்கின்ரனர், அழிக்கின்றனர் என்பதனை அடையாளங் காண வேண்டும்.

© வேதபிரகாஷ்

04-02-2011


[1] “Inculturation” என்ற பெயரில், இந்துக்களைப் போன்று உலவி வந்து, அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் வேலைதான் இது. இது முழுக்க முழுக்க இந்திய விரோத கிருத்துவக் குழு

[2] கோவில் கட்ட எதிர்ப்பு : இரு தரப்பு பிரச்னையால் பதட்டம் நீடிப்பு, பிப்ரவரி 03,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=180303

[3] இது முழுக்க முழுக்க இந்திய விரோத கிருத்துவக் குழு. இருப்பினும், கிருத்துவர்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஜேஹோவா விட்னஸஸ் என்ற மற்றொரு குழு / பிர்வு, தேசிய கீதத்தை பாட மறுத்ததையும், நினைவு கொள்ளவேண்டும்.

[4] இது ஏதோ பொருளை விற்பதற்கு சமமாகும். எப்பொழுதுமே பழுதாகாது என்றால் என்ன அர்த்தம், ஒரு நேரத்தில் பழுதாகும் என்றுதானே அர்த்தம்?

[5] கோவில் கட்ட எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் மனு, ஜனவரி 25,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=173515