Archive for பிப்ரவரி, 2012

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது? கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (4)!

பிப்ரவரி 27, 2012

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது?  கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (4)!

மறுபடியும் நாராயணசாமியின் குற்றச்சாட்டு: கூடங்குளம் பிரச்சினையில், கிருத்துவர்களின் தேவையற்ற தலையீடு[1] பலவழிகளில், அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது[2]. தமக்கு அனைத்துலக ஆதரவு உள்ளது என்ற மமதையில் பிஷப்புகள் வேலை செய்வதும் தெரிகிறது[3]. இதில் வியாபார நோக்கம் அதிகமாக உள்ளதாகத்தான் தெரிகிறது என்று முன்னமே விளக்கப்பட்டது[4]. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக அரசு சாரா நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணத்தின் மதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் நாராயணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் அமைப்புக்கு 54 கோடி நிதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் 11 நிதிநிறுவனங்களுக்கும் வெளிநாட்டில் இருந்து நிதி வந்துள்ளது. இப்படி சொன்னதையே திரும்பத்திரும்ப ஏன் சொலிறார் என்றும் தெரியவில்லை.

ஐடியாஸ், ஸவீடன் அமைப்பிலிருந்து உதயகுமாருக்குப் பணம்: வெளிநாட்டு நிதி பெற 9 அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. முறையாக கணக்கு பராமரிக்காததால் 3 நிறுவனங்களின் உரிமர் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். உதயகுமாருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வந்துள்ளதாகவும், “ஐடியாஸ்” என்ற ஸ்வீடன் தொண்டு அமைப்பிலிருந்து[5] உதயகுமார் அமைப்பிற்கு நிதி பெறப்பட்டுள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சாக்கர் என்ற அமைப்பில் உதயகுமார் மற்றும் அவரது மனைவி உறுப்பினர்களாக உள்ளனர்[6]. சாக்கர் அமைப்பிற்கு ரூ.5 கோடியே 32 லட்சம் நிதி வந்துள்ளது. சாக்கர் என்ற நிறுவனத்திற்கு சுவீடன் நாட்டிலிருந்து முதற்தவணையாக ரூ. 38 லட்சமும், மற்றொரு முறையாக ரூ. 5.2 கோடியும் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[7]. கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் பணம் பற்றி கணக்கு கேட்டால் சோனியாவின் வருவாய் பற்றி உதயகுமார் கேட்கிறார் என்றும் தனி நபர் வருவாய் பற்றி கணக்கு கேட்க வருமான வரித்துறைக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்[8].

உதயகுமார் வழக்கு தொடரப்போவதாக எச்சரிக்கை: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதத்தில் பேசியுள்ள பிரதமர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு தொடர உள்ளதாக கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், போராட்டக் குழுவினருக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருவதாகவும், அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களை சிந்திக்கும் திறன் அற்றவர்கள் என்ற அர்த்தத்திலும் பிரதமர் மன்மோகன் சிங் கொச்சை படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்[9]. மேலும், எனக்கு சுவீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமியும், போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக அமெரிக்காவில் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். இதுபோன்று உண்மைக்குப் புறம்பாக எனக்கு எதிராகவும், போராடும் மக்களை அவதூறாகவும் பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மீது வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார்[10].

டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பி ஜனவரியில் ரெய்டாம்!: கடந்த டிசம்பர் 17ம் தேதியே ஆறு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி, எப்படி அயல்நாடுகளிலிருந்து பணம் வருகிறது என்று கேட்டதாம்[11]. ஆனால், அந்த நிறுவனங்களின் பெயர்களை[12] மட்டும் சொல்ல மறுகிறதாம்! இதுவே சரியான கூத்து, ஏனெனில், உள்துறை அமைச்சகத்திற்கு தெரியாமல் பணம் வருவதில்லை[13]. வந்த பணத்தை எப்படி, எவ்வாறு, எங்கே, ஏன் செலவழிக்கிறார்கள் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. பைபிளை அச்சடித்து, இலவசமாக விநியோகிக்கிறேன் என்று பணம் வருகிறது, ஆனால், அப்பணம் வேறு செயல்களுக்கு செலவழிக்கப் படுகிறது. அவர்களது கணக்குகளை அரசு தணிக்கை செய்ய முடியாது. பிறகு அவர்களிடமே, “அப்பா எப்படியப்பா பணத்தை செலவழிக்கிறாய்”, என்று கேட்டால் சொல்லி விடுவார்களா என்ன?

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது?  கிருத்துவர்கள் கூடங்குளம் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்ற நிலையில், சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது? ஒன்று அவருக்கு உண்மையிலேயே அத்தகைய தைரியம் / அதிகாரம் இருக்க வேண்டும் அல்லது எல்லோருமே சேர்ந்து போடும் நாடகமாக இது இருக்க வேண்டும். யார் பணம் பெருகிறார்களோ இல்லையோ, தேவையில்லாமல், தமிழக மக்கள் மின்சாரம் இல்லாமல் மூன்று மாதங்களாக அவதிப் படுகிறர்கள். இதில் கூட்டணி மாறப்போகிறதா, அணுஉலை உதிரிகள், பராமரிப்பு முதலியவற்றிற்கு ரஷ்யா அல்லது அமெரிக்கா சப்ளை செய்யப் போகிறதா, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது, யாருக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கப் போகிறது என்றெல்லாம் இருக்கும் நிலையில் நாடகம் தொடரத்தான் போகிறது.

வேதபிரகாஷ்

27-02-2012


[5] The International Institute for Democracy and Electoral Assistance (International IDEA) is an intergovernmental organization that supports sustainable democracy worldwide. International IDEA’s mission is to support sustainable democratic change by providing comparative knowledge, and assisting in democratic reform, and influencing policies and politics.  http://www.idea.int/

[6] Mr. Narayanasamy sent the reply after Mr. Udayakumar threatened to sue him for the allegations that the NGO run by him had received funds. He stated that Mr. Udayakumar and his wife Meena, the trustees of SACCER, an NGO, had registered with IDEA’s Reconciliation Resource Network as its organisation.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2932944.ece

[13] The Home Ministry has sent notices to six NGOs, based in Tuticorin, asking them to explain the utilisation of the funds received under Foreign Contribution (Regulation) Act, the source said without identifying these NGOs.

மீனவர்கள் கொலை விஷயத்தில் வாடிகன் போடும் இரட்டை வேஷம் – கொலை செய்தவர்கள், கொலையுண்டவர்கள் கிருத்துவர்கள் என்பதால் முன்னுக்கு முரணான செய்திகளை வெளியிடும் வாட்கன் ஊடகங்கள்!

பிப்ரவரி 24, 2012

மீனவர்கள் கொலை விஷயத்தில் வாடிகன் போடும் இரட்டை வேஷம் – கொலை செய்தவர்கள், கொலையுண்டவர்கள் கிருத்துவர்கள் என்பதால் முன்னுக்கு முரணான செய்திகளை வெளியிடும் வாட்கன் ஊடகங்கள்!

கிருத்துவ மீனவர்கள் கொலை விஷயத்தில் வாடிகன் போடும் இரட்டை வேஷம்: “ஆஜென்ஸியா ஃபைட்ஸ்” என்பது வாடிகனின் ஊடகப்பிரிவில், உலகம் முழுவதும் செய்திகளை வெளியிடும் பிரிவாகும். வாடிகனிலிருந்து வெளியிடுவதால், அதிகாரப்பூர்வமாக அது கருதப்படுகிறது. ஜியார்ஜ் மார் அலென்சேரி வாடிகனுக்கு கேரள கிருத்துவ அமைச்சர்களுடன், கார்டினல் பதவியேற்க வந்தார். அந்நிலையில், இரு கிருத்துவ மீனவர்கள் இத்தாலிய கப்பல் ஊழியர்களால் கொல்லப்பட்டதால், பிரச்சினையாகியது. வாடிகனைப் பொறுத்த வரையிலும், இந்தியாவில் எது நடந்தாலும் சந்தோஷம் தான், அதாவது, குறிப்பாக கிறித்துவர்கள் கொல்லப்பட்டால், அவர்கள் “மதத்திற்காக உயிர்த்தியாகம் செய்தார்கள்” என்று செய்திகளைத் திரித்து வெளியிடுவதில் வல்லவர்கள்.

கொலை செய்தவர்கள், கொலையுண்டவர்கள் கிருத்துவர்கள் என்பதால் முன்னுக்கு முரணான செய்திகளை வெளியிடும் வாடிகன் ஊடகங்கள்!: ஆனால், இங்கு கொல்லப்பட்டவர்கள், கொன்றவர்கள் எல்லோருமே கத்தோலிக்கக் கிருத்துவர்கள் என்றதும், முன்னுக்கு முரணான செய்திகள், நிலைமை, பேச்சுகள் என்று வர ஆரம்பித்தன. முதலில் வாடிகன் சார்பாக புதியதாக தேர்ந்தெடுக்கப் பட்ட கார்டினல் சுமுகமாகப் பேசி விஷயத்தை அமுக்கிவிடுவார் என்ற கோணத்தில் செய்தியை வெளியிட்டது. ஆனால், அது சாதகமாக இருக்காது என்றதும், அந்த செய்தியை இருட்டடிப்பு செய்து விட்டு, நீக்கி, மாற்றி, வேறுவிதமாக வெளியிட்டுள்ளது[1]. உடனே, “தி ஹிந்து” அதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. ராமின் மனைவி, மிரியம் சாண்டி ஒரு கத்தோலிக்கப் பெண்மணி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது, முன்னர் ராம் பிரத்யேகமாக, கத்தோலிக்க பிஷப் மாநாட்டிற்கு வரவேற்க்கப் பட்டு, அங்கு ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, ஒருவேளை ராம் கிருத்துவராகி விட்டார் போலும்!

வாடிகன் வெளியிட்ட செய்திகள்: 20-02-2012, 21-02-2012, மற்றும் 23-02-2012 அன்று வெளியிடப்பட்ட வாடிகன் செய்திகள் இதோ:

2012-02-20

ASIA/INDIA – “Enrica Lexie” case: the two fishermen killed are Christians, the community wants justice[2]

Kollam (Agenzia Fides) – “The two fishermen killed in the incident where Italian soldiers are involved were both Christians from Moothakara. The family of one of them lives in our diocese of Quilon. With Bishop, Mgr. Stanley Roman, we went to give the family our condolences, overwhelmed with grief. It is a tragedy for our small community, where fishing is the primary means of subsistence ” says to Fides Fr. John Jerry Issac, Chancellor of the Diocese of Quilon, the ancient name of Kollam. The incident happened off the coast of the port of Kollam on February 15 where the Italian oil tanker “Enrica Lexie” and the two Italian soldiers on board were involved, accused of killing two local fishermen on a fishing boat, mistaking them for pirates. The two who were killed were Ajesh Binki 25 and Jalastein 45, both natives of Tamil Nadu but residing in Kerala. Kerala is the Indian state with the highest percentage of Catholics (more than 20%) and is home of the new Indian Cardinal, His Exc. George Alencherry Em, as well as the heart of the Catholic community of the Syro-Malabar Church.

Fr. Issac told Fides that “the community is very upset, because this is not the first incident in which local fishermen have been victims: victims in several cases in recent months of large commercial vessels. This is why public opinion expresses its strong demand for justice to the civil authorities. One does not want this episode to remain unpanished”. On the other hand, notes the priest, “in front of our coasts piracy is widespread: it is much more elsewhere.”

Fr. Issac emphasizes a danger: “There is a risk, on the other hand, that some political leaders want to exploit the incident for propaganda purposes, given that in the coming months there will be elections in the state. As a local Church, we hope all the procedures are carried out within the respect of the law and justice, to render good service to the truth”. (PA) (Agenzia Fides 20/2/2012)

2012-02-21

ASIA/INDIA – The murder of the fishermen in Kerala seen as a “national outrage”, but “religion has nothing to do with it”[3]

 invia articolo  printable version  preferiti

Cochin (Agenzia Fides) – The death of two innocent Indian fishermen took place off the coast of Kerala on February 15, the accident with an Italian oil tanker, is considered a “national outrage”, but this story should “hold off nationalism and religion, to ensure truth and justice”: is what brother Raphael Paliakkara, OFM Cap, Provincial Minister of the Capuchin Monks of the Province of St. Thomas the Apostle said to Fides, based in Cochin.
The Friar tells Fides what the atmosphere in Cochin is like: “People are pretty angry, but it is also stirred up by the media and politicians. The problem in public opinion is that this murder was seen as a national outrage. In any case it seems that the public outcry is decreasing. The fishermen killed were Catholics and the Catholic community feels touched. But this story has nothing to do with religion, one must not stimulate nationalism or religious sentiments. The only thing we hope is that the Church can bring a word of peace. I think that, after questioning, the case can be clarified and the Italian soldiers can be freed. It is only a matter of justice.”
The Friar reminds Fides that there are several dioceses, schools and Catholic groups, like the Franciscans, who are engaged in pastoral care of the fishing communities in the ‘”AOS”- Apostolate of the Sea . Fishermen, he underlines ” earn a living from the sea, in a daily life full of dangers, going to sea for weeks.”
In Kerala, the fishing industry occupies an important place in the economy. Its share in the domestic production of marine fish touches 25%. There are over 100,000 people involved in fishing in Indian territorial waters and nearly 350,000 fishermen are engaged in fishing operations off the territorial waters. The coast of Kerala is 590 km long, includes nine ports with an extensive fishing activity and 17 major sorting centers of fish. In 2010-2011, the export earnings of fish and seafood from Kerala exceeded $ 2.8 billion. (PA) (Agenzia Fides 21/2/2012)

2012-02-22

ASIA/INDIA-Fishermen killed in Kerala: Cardinal Alencherry defends “truth and justice”[4]

invia articolo  printable version  preferiti

Rome (Agenzia Fides) – “Truth and Justice” on the case of the fishermen killed in Kerala on February 15: this is what Cardinal George Alencherry, Major Archbishop of the Syro-malabrese Church, based in Kerala asks for in an interview with Fides.
The Cardinal today released the following statement to Fides: “I would like to precise my views reported by the news agency “Fides” regarding the incident in which two fishermen were killed in the sea. This event has to be investigated and if there is a culpable action it has to be dealt with legally and the culprits have to be punished. Truth and justice have to be established. What I said the other day parenthetically was that this event shall not become a cause for conflicts and enemity in the communities and between nations. I have no intention to take a mediatory role in the setting of this matter”. (PA) (Agenzia Fides 22/2/2012)

கார்டினல் வாடிகனின் மத்தியஸ்தராக செயல்படுகிறாரா? கார்டினல் ஜியார்ஜ் மார் அலென்சேரியின் தலையீடு கிருத்துவர்களின் இரட்டை வேடம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக வேலைசெய்யும் குணத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. கொல்லப்பட்ட மீனவர்களில் கூட மதத்தைப் பார்த்து வேலை செய்யும் போக்கைக் காணும் போது, அவர்களின் மத-அடிப்படைவாத பாரபட்ச போக்கும் வெளிப்படுகிறது. “நான் கத்தோலிக்க அமைச்சர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளேன். அவர்கள் இந்த பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக கே.வி. தாமஸ் கத்தோலிக்க கார்டினகளுக்கு நடந்த வழிப்பாடு மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் அவர் மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளார். ஆதலால், அவர் மிகுந்த முயற்சி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்”, என்றெல்லாம் அந்த கத்தோலிக்க கார்டினல் கூறியிருந்தார்[5]. லத்தீன் கத்தோலிக்கர்களும், மீனவர்களும் கிருத்துவர்கள் என்றாலும், கார்டினலின் இத்தகைய பேச்சு, அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்[6]. பிறகு, “நான் அப்படி சொல்லவில்லை, பிரச்சினை சுமூகமாக முடியும் என்றுதான் சொன்னேன், ஆனால், வாடிகன் தரப்பில் மத்தியஸ்த்தம் செய்ய தான் ஈடுபடவில்லை”, என்று விளக்கம் அளித்தார்[7]. உடனே “ஆஜென்ஸியா ஃபைட்ஸ்” என்ற கத்தோலிக்க பத்திரிக்கை, கார்டினல் மாற்றிச் சொன்னதை வெளியிட்டுள்ளது[8]. ஆகவே –

  • ஒன்று அவர் பாதி உண்மையை சொல்லியிருக்க வேண்டும்
  • அல்லது பாதி பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
  • ஒன்று அவர் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது வாடிகன் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
  • இல்லை வாடிகன் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது அவர் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;

எது எப்படியாகிலும், பொய் சொல்வதில் கிருத்துவர்கள் போப் வரையில் கூட வல்லவர்கள் என்று தெரிகிறது.

வாடிகன் இந்திய சட்டத்துறையில், நீதிமன்ற வழக்குகளில் தலையிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டே கொலையாளிகளுக்கு “உயர்வான தண்டனை” கொடுக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்து என்ன என்று புரியவில்லை:   கேரள கத்தோலிக்க பிஷப் பேரவை கொலைகாரக் கிருத்துவர்களுக்கு “உயர்வான தண்டனை” (exemplary punishment) அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது[9]. “உயர்வான தண்டனை” என்பது கத்தோலிக்கக் கிருத்துவத்தில் “விடுதலை” என்பதுதான் என்பது தெரிந்த விஷயம். பிறகு முன்னமே எடுத்துக் காட்டியபடி, கொலையுண்டவர்கள் “கிருத்துவ மதத்திற்காக உயிர்த் தியாகம் செய்த போராளிகள்” என்று பட்டம் கொடுக்கப் பட்டு, திருட்டுத்தனமான, பொய்யான சரித்திரம் எழுதப்படும். திருவனந்தபுரம் ஆர்ச்-பிஷப்போ, “வாடிகன் இந்திய நீதித்துறையில் தலையிடுகிறது என்பது தவறான விஷயம் ஆகும். கார்டினல் சொன்னதை சற்று மிகுதிபடுத்தப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளன, அவ்வளவே”, என்று சப்பைக் கட்டியுள்ளார்[10]. ஆனால், கொலையுண்ட மீனவரின் மனைவி தோரம்மா என்பவர், கார்டினல் கொலையாளிகளுக்கு சாதகமாக வேலை செய்ட்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்[11].

சோனியா மெய்னோ கிருத்துவர்களுக்கு உதவி வரும் நிலை: கிருத்துவர்களுக்கு சோமினா மெய்னோ என்ற கத்தோலிக்கர் அதிகாரத்தில் உள்ளார், இந்தியாவை மறைமுகமாக ஆண்டு வருகிறார் என்பது நன்றாகவேத் தெரியும். அதனால்தான், அவர்கள் அந்த அளவிற்கு அதிகமான சட்டமீறல்கள், குற்றங்கள் செய்து வருகிறார்கள்.

  1. மும்பை வெடிகுண்டு 26/11 வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு கிருத்துவப் பாதிரியை, அமெரிக்கா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி திரும்ப அழைத்துக் கொண்டது.
  2. அமெரிக்க ஜிஹாத் – இஸ்லாமியத் தீவிரவாதத்தை மறைக்க, தாவூத் ஜிலானி என்ற முக்கிய தீவிரவாதியை, டேவிட் கோல்மென் ஹெட்லி என்ற பெயரில் குறிப்பிட்டு மறைத்து வருகிறது.
  3. ஒசாமா பின் லேடனை வளர்த்தது மாதிரி, தாவூத் ஜிலானியை ஏஜென்டாக வேலைக்கு வைத்துக் கொண்டது அமெரிக்கா.
  4. மெட்டாலிக்கா பாதிரி கைது செய்யப் பட்டும், அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது கேரளா போலீசார்.
  5. ஓசூரில் டோரதி வாட்ஸ் தம்பதியினர் அடாவடியில் ஈடுபட்டு, நீதிபதியால் நாடுகடத்தியபோது, நேராக சோனியா காந்தியை சந்தித்து பேசி, ஏதோ ஒன்றும் குற்றமே செய்யாதவர்கள் போன்று காண்பித்துக் கொண்டு சென்று விட்டனர்.
  6. இது போன்று ஆயிரக்கணக்கான பாதிரிகள், மதப்பிரசாரகர்கள் இந்தியாவில் (வககிழக்கு மாநிலங்கள், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா முதலியன) அப்படியே தங்கி விடுகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

 

வேதபிரகாஷ்

23-02-2012


[1] Cardinal Mar Alencherry, who is Major Archbishop of the Syro-Malabar Church, said that Fides, the information service of the Pontifical Mission Societies, had withdrawn its version of the interview with him and put out a new report.

http://www.thehindu.com/news/states/kerala/article2920951.ece

[5] “I am and will remain in close contact with the Catholic ministers of Kerala and I hope that they will help to pacify the situation. In particular, I trust in the work of the Tourism Minister, the Catholic KV Thomas, who participated in the consistory in Rome in past days and attended the mass with the Holy Father and the new cardinals: he is a man of great moral stature and of significant influence, both in the local and central government, and he assured me his maximum effort. I guarantee, in the next few days, my constant involvement with the Indian authorities on the matter”.

http://www.firstpost.com/india/why-is-keralas-newest-cardinal-batting-for-italian-killers-221271.html

[6] This controversy is likely to amplify the socio-political divide between the two communities, although both are Catholics.

[9] In a statement in Kochi, the Kerala Catholic Bishops Council (KCBC) also sought to clear the air, saying that the Italian marines should be given exemplary punishment within the Indian legal system.

[10] Metropolitan Archbishop of the Latin Archdiocese of Thiruvananthapuram Susai Pakiam said that there was no question of the Vatican interfering with the Indian legal processes or its being allowed to do so. The Cardinal’s reported statement was blown out of proportion, he felt.

[11] Doramma, wife of Valentine, one of the two fishermen shot dead by the marines, feared that high-level attempts were on to whisk the ship away from Kochi. Her son said the Cardinal seemed to be taking sides with his father’s killers

அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் கொலையில் கூட வாடிகனின் தலையீடு – இந்தியாவில் கத்தோலிக்கக் கிருத்துவத்தின் ஆதிக்கம்!

பிப்ரவரி 23, 2012

அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் கொலையில் கூட வாடிகனின் தலையீடு – இந்தியாவில் கத்தோலிக்கக் கிருத்துவத்தின் ஆதிக்கம்!

அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் என்ற மீனவர்களை சுட்ட லட்டோர் மாசிமிலானோ மற்றும் சால்வடோர் கிரோன்: ஜியார்ஜ் மார் அலென்சேரி கிழக்குதிசை சிரிய-மலபார் சர்ச்சின் (Eastern Syro-Malabar Church) தலைவராக இருந்து, சில நாட்கள் முன்னர்தான், கார்டினர் நிலைக்கு உயர்த்தப் பட்டுள்ளார். அதற்காக அவர், வாடிகனுக்குச் சென்றுள்ளார். அந்நிலையில் தான், லட்டோர் மாசிமிலானோ மற்றும் சால்வடோர் கிரோன் என்ற (Latorre Massimillano and Salvatore Girone)  இத்தாலி கப்பலின் இரண்டு ஊழியர்கள் கண்மூடித்தனமாகச் சுட்டதில் இரு கேரள மீனவர்கள் அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் கொலை செய்யப்பட்டனர்[1]. அவர்கள் பாதுகாப்பிற்கு வானத்தில் சுட்டேன் என்று வாதிட்டாலும், படகின் மீது பாய்ந்துள்ள 16 குண்டுகளில் மூன்று குண்டுகள் ஒரு மீனவனின் உடலிலும், இரண்டு குண்டுகள் அடுத்த மீனவனின் உடலிலும் பாய்ந்துள்ளதிலிருந்து, அவர்கள் குறிபார்த்துதான் சுட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. பிறகு தாங்கள் இந்தியாவின் எல்லைகளில் இருந்து சுடவில்லை என்று வாதிட ஆரம்பித்தனர். அதுவும் எடுபடாத போது, அவர்கள் இத்தாலிய சட்டத்தின் படி விசாரணைச் செய்யப் பட்டு தண்டிக்கப் படுவார்கள் என்று வாதத்தை மாற்றிக் கொண்டனர். அதுவும் எடுபடாமல் போக, மதரீதியில் இறங்கியுள்ளதை அந்த புது கார்டினல் சொல்வதிலிருந்து வெளிப்படுகிறது[2].

தூதரக அதிரடி தாக்கம் – கேரள முதல்வருடன் இத்தாலிய மந்திரி ஆலோசனை[3]: டெல்லி வந்துள்ள இத்தாலி வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸ்டபான் மிஸ்துரா, இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரனீத் கவுரை சந்தித்து பேசினார். அப்போது, துப்பாக்கிச் சூடு சர்வதேச எல்லையில் நடந்துள்ளது. எனவே இந்தியா ஒருதலைபட்சமாக விசாரணை நடத்த கூடாது என்று கூறினார். அதற்கு, இந்திய எல்லையில்தான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. எனவே இந்திய சட்டத்துக்கு உட்பட வேண்டும் என்று பிரனீத் வலியுறுத்தினார்.  இதற்கிடையே, மீனவர்களை சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கிகளை கைப்பற்ற, கப்பலில் சோதனை நடத்த கொல்லம் 2வது வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஆனால், கப்பலில் சோதனை நடத்த உத்தரவிட இந்தியாவிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கப்பல் கேப்டன் உம்பர்டோ கூறியுள்ளார். இந்நிலையில் இத்தாலிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸ்டபான் மிஸ்துரா இன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி இத்தாலிய கடற்படையினர் மனு[4]: கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய கடற்படையைச் சேர்ந்த இருவரை கேரள காவல்துறையினர் கொல்லம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். இத்தாலிய கடற்படையினர் சார்பில், கேரளா காவல்துறையினர் தங்கள் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இருநாட்டு எல்லையில் நடந்த பிரச்சினை என்பதால், இச்சம்பவத்திற்கு இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தவறு என்று அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் 2 பேரை கொன்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள இத்தாலிய கப்பல் ஊழியர்களின் போலீஸ் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து கொல்லம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ. 25 லட்சத்திற்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்திய பின், கப்பலை இந்திய கடற்எல்லையில் இருந்து செல்லலாம், அதுவரை, இங்குதான் இருக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது[5].

கார்டினல் வாடிகனின் மத்தியஸ்தராக செயல்படுகிறாரா? கார்டினல் ஜியார்ஜ் மார் அலென்சேரியின் தலையீடு கிருத்துவர்களின் இரட்டை வேடம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக வேலைசெய்யும் குணத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. கொல்லப்பட்ட மீனவர்களில் கூட மதத்தைப் பார்த்து வேலை செய்யும் போக்கைக் காணும் போது, அவர்களின் மத-அடிப்படைவாத பாரபட்ச போக்கும் வெளிப்படுகிறது. “நான் கத்தோலிக்க அமைச்சர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளேன். அவர்கள் இந்த பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக கே.வி. தாமஸ் கத்தோலிக்க கார்டினகளுக்கு நடந்த வழிப்பாடு மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் அவர் மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளார். ஆதலால், அவர் மிகுந்த முயற்சி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்”, என்றெல்லாம் அந்த கத்தோலிக்க கார்டினல் கூறியிருந்தார்[6]. லத்தீன் கத்தோலிக்கர்களும், மீனவர்களும் கிருத்துவர்கள் என்றாலும், கார்டினலின் இத்தகைய பேச்சு, அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்[7]. பிறகு, “நான் அப்படி சொல்லவில்லை, பிரச்சினை சுமூகமாக முடியும் என்றுதான் சொன்னேன், ஆனால், வாடிகன் தரப்பில் மத்தியஸ்த்தம் செய்ய தான் ஈடுபடவில்லை”, என்று விளக்கம் அளித்தார்[8]. உடனே “ஆஜென்ஸியா ஃபைட்ஸ்” என்ற கத்தோலிக்க பத்திரிக்கை, கார்டினல் மாற்றிச் சொன்னதை வெளியிட்டுள்ளது[9]. ஆகவே –

  • ஒன்று அவர் பாதி உண்மையை சொல்லியிருக்க வேண்டும்
  • அல்லது பாதி பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
  • ஒன்று அவர் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது வாடிகன் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
  • இல்லை வாடிகன் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது அவர் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;

எது எப்படியாகிலும், பொய் சொல்வதில் கிருத்துவர்கள் போப் வரையில் கூட வல்லவர்கள் என்று தெரிகிறது.

கேரள நீதிமன்றத்தின் ஆணை[10]: இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இத்தாலிய கடற்படையினர் இருவரும் நேற்று முன்தினம் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு, நேற்று அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் விருந்தாளிகள் போல் போலீசாரால் கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். இந்தியர்களை கொலை செய்தவர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் இருந்து உணவு சப்ளை செய்யப்படுகிறது என்றும், கொச்சின் துறைமுகத்தை சுற்றிப்பார்த்து மகிழ்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன[11]. வந்துள்ள மந்திரியும் இதைக் கேட்டதும் பூரித்து போயிள்ளார்[12].

கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் 1 கோடி நஷ்டஈடு கோரல்[13]: இத்தாலிய கப்பற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு கேரள மீனவர்களில் ஒரு மீனவரின் குடும்பத்தினர் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். மேலும், நஷ்ட ஈடு கொடுக்காமல், இத்தாலிய கப்பலை இந்திய எல்லையில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். கடற்கொள்ளையர் என்று தவறாக நினைத்து கேரள மீனவர்களை இத்தாலிய கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். இத சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு இத்தாலிய மாலுமிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில், கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் நீதி கிடைக்குமா? போர்ச்சுகீசிய காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை வெள்ளைக்காரர்களால் நடத்தப் பட்ட கொலைகள் இவ்விதமாகத்தான் பாரபட்சம் காட்டப் படுகின்றன. இந்தியர்களின் உயிர் அவர்களுக்குக் கிள்ளுக்கீரைதான். இப்பொழுது, ஏதோ சட்டங்கள் உள்ளன என்று தயங்குகிறார்கள் இல்லையென்றால், தாக்கிக் கொன்றுவிட்டு சென்று விடுவார்கள். மேலும் இப்பொழுது உல்கம் முழுவதும் இந்நிகழுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏனெனில், கத்தோலிக்க சோனியாயாவே அதிகாரத்துடன் இருக்கும் போது, கேரளாவில் ஆட்சியில் உள்ளவர்களும், போலீஸ் கமிஷனர் என்று எல்லோருமே கத்தோலிக்கக் கிருத்துவர்கள் என்று இருக்கும் போது என்ன நடக்கும் என்று பார்க்கின்றனர்! நாமும் பார்க்க வேண்டியதுதான்.

வேதபிரகாஷ்

23-02-2012


[1] Two Indian fishermen, Ajesh Binki and Gelastine, were allegedly mistaken as pirates and shot dead by the security crew of cargo vessel Enrica Lexieon February 15 off Alappuzha. Two Marines have been arrested for the shooting.

[6] “I am and will remain in close contact with the Catholic ministers of Kerala and I hope that they will help to pacify the situation. In particular, I trust in the work of the Tourism Minister, the Catholic KV Thomas, who participated in the consistory in Rome in past days and attended the mass with the Holy Father and the new cardinals: he is a man of great moral stature and of significant influence, both in the local and central government, and he assured me his maximum effort. I guarantee, in the next few days, my constant involvement with the Indian authorities on the matter”.

http://www.firstpost.com/india/why-is-keralas-newest-cardinal-batting-for-italian-killers-221271.html

[7] This controversy is likely to amplify the socio-political divide between the two communities, although both are Catholics.

[12] “We have expressed our appreciation in the manner in which they have been treated,” the minister told reporters here.

http://www.dnaindia.com/india/report_happy-that-arrested-italians-are-being-treated-well-staffan-de-mistura_1653902

இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் “நவீன ராமாயண” நாடகம் கிருத்துவப் பள்ளியில் நடந்தது – அதிமுக எம்.எல்.ஏ சசித்துப் பார்த்து கைத்தட்டிக் கொண்டிருந்தார்; இந்து முன்னணியினர் எதிர்ப்பு; 2 ஆசிரியர்கள் கைது!

பிப்ரவரி 19, 2012

இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் “நவீன ராமாயண” நாடகம் கிருத்துவப் பள்ளியில் நடந்தது – அதிமுக எம்.எல்.ஏ சசித்துப் பார்த்து கைத்தட்டிக் கொண்டிருந்தார்; இந்து முன்னணியினர் எதிர்ப்பு; 2 ஆசிரியர்கள் கைது!

கிருத்துவ பள்ளியில் நடந்தேறிய நாடகம்: தனியார் செயின்ட் மேரீஸ் கிறிஸ்தவ பள்ளியில்[1] “நவீன ராமாயணம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகத்தில் இந்து கடவுள்களை அவமதித்தாக கூறி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றனர். இதைத் தொடர்ந்து அந்த பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்திய பள்ளித் தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்யக் கோரி மீஞ்சூர் கடை வீதியில் இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலர் பரமேஸ்வரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்துச் செல்ல மறுத்தனர். இதையடுத்து சாலை மறியிலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 32 பேரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர்[2].

ஆளும் கட்சி அதிமுக எம்எல்ஏ பொன். ராஜா கைகளைத் தட்டி சிரித்து ரசித்துப் பார்த்த நாடகம்: சென்னையை அடுத்த மீஞ்சூரில் உள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தாளாளர் செல்வராணி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜான்சிராணி முன்னிலை வகித்தார். விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் நடைபெற்ற நாடகத்தில் இந்து கடவுள்களான ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து கடவுள்கள் சினிமா பாடல்களை பாடி கேலி செய்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. விழாவில் அதிமுக எம்எல்ஏ பொன். ராஜாவும் கலந்துகொண்டுள்ளார். அவர் கைகளைத் தட்டி சிரித்து ரசித்துக் கொண்டிருந்தார்[3]. இந்த நிகழச்சி சி.டி.யும் வெளியானது[4]. இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், இந்துக்களின் கடவுள்களை விமர்சனம் செய்யும் வகையிலும் இருந்ததாக கூறி ஒன்றிய இந்து முன்னணி தலைவர் சசிக்குமார் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்[5].

செக்யூலரிஸ நாட்டில் கிருத்துவர்கள் எப்படி இவ்வாறு அவதூறு செய்கிறர்கள்: இதில் அதிசயம் என்னெவென்றால், ஊடகங்கள் மௌனமாக இச்செய்தியை இருட்டடிப்பு செய்துள்ளன. இதே ஒரு கிருத்துவ-முஸ்லீம் கடவுளர்களை தூஷித்து, கிண்டல் செய்து, இப்படி – நவீன பைபிள், நவீன குரான் என்று நாடகம் நடத்தியிருந்தால், ஆளும் கட்சி அதிமுக எம்எல்ஏ பொன். ராஜா கைகளைத் தட்டி சிரித்து ரசித்துப் பார்ப்பாரா? அதை சிடி போட்டு கொடுப்பார்களா? போலீசார் இப்படி ஏனோ-தானோ என்று நடவடிக்கை எடுப்பார்களா? கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் இத்தகைய விஷத்தனத்தை விஷமத்தைச் செய்வார்களா? அந்த அளவிற்கு அவர்களது எண்ணம், ரசிப்பு உள்ளது என்றால், அவர்களின் கோரமான, அழுக்குள்ள, அசிங்கமன மனங்களைத் தான் அது வெளிப்படுத்துகிறது. பிறகு ஏன் சேவை செய்கிறேன் என்று பீத்திக் கொள்ள வேண்டும்? இத்தகைய குரூரங்களை மனங்களில் வைத்துக் கொண்டு செய்யும் சேவை, சேவையா அல்லது விபச்சாரத்தை விட கேடு கெட்ட செயலா? உண்மையில் கர்த்தரோ, ஏசுவோ, மேரியோ இதை ஏற்றுக் கொள்வார்களா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. ஆக இந்துக் கடவுளர்களை, இந்துக்களை எப்படி வேண்டுமானாலும் தூஷிக்கலாம், அவதூறு பேசலாம் இந்திய சட்டங்கள் ஒன்றும் செய்யாது.

தாமதம் செய்த போலீசார், பதட்டம் ஏற்பட்ட நிலை: அந்த புகாரின் பேரில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்று கூறி பொன்னேரி டி.எஸ்.பி ஜெகதீஸ்வரனிடம் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்ட நிலையில் பதற்றம் ஏற்படாத வண்ணம் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.குமார், பொன்னேரி டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், வெங்கடேசன், அப்துல்காதர் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், விஜயன், பிரபாகரன், ஆனந்தன், ரகு, உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு வழக்கறிஞர் தைரியமாக புகார் கொடுத்தார்: நிலைமை மோசமாகிக் கொண்டிருந்த நிலையில், ஒரு வழக்கறிஞர் தைரியமாக கிரிமினல் புகார் கொடுத்தார். அதனால், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் நாடகம் நடத்திய பள்ளி நிர்வாகிகள் மீது மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளிக்கூட உடற்கல்வி ஆசிரியர் சரவணமுரளி (வயது 32). தாவரவியல் ஆசிரியர் காந்திநாத் (31) ஆகிய இருவரை கைது செய்தனர். கன்னியாஸ்திரிகளான பள்ளியின் தாளாளர் செல்வராணி, பள்ளி முதல்வர் ஜான்சிராணி ஆகியோரை பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்து முன்னணியினர் குறை கூறினார்கள். இந்து முன்னணியினரின் அழைப்பின் பேரில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளான ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், பாஸ்கர், சோமுராஜசேகர், ஒன்றிய பொறுப்பாளர் குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்த மீஞ்சூர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.

நாடகத்தை அரங்கேற்றிய கிருத்துவர்களை விடுத்து, பெயருக்கு இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நாடகம்: அவர்களிடம், ‘இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சரவணமுரளி, காந்திநாத் ஆகியோரை போலீசார் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் மீஞ்சூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மீஞ்சூரில் தொடர்ந்து கிருத்துவர்களின் சட்டமீறல்கள்: மீஞ்சூரில் கிருத்துவர்களின் சட்டமீறல்கள் அதிகரித்து வருகின்றன. சென்ற செப்டம்பரில் கூட, மதப்பிரச்சார கூட்டம் நடத்தியபோது, போலீசார் மற்ற அதிகாரிகள் கிருத்துவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டனர். உதாரணத்திற்கு, ஒரு நிகழ்ச்சிக் கொடுக்கப் படுகிறது.

மீஞ்சூரில்அரசுஇடத்தில்கிறிஸ்தவவிழாநடத்தகிராமமக்கள்எதிர்ப்புஆர்ப்பாட்டம்-43 பேர்கைது: மீஞ்சூர், லட்சுமிபுரம் காலனி 1-வது தெருவில் கிறிஸ்தவ சபை உள்ளது. இச்சபையின் 7-ம் ஆண்டு விழாவை அப்பகுதியில் உள்ள சென்னை குடிநீர் அலுவலகத்திற்கு சொந்தமான காலி இடத்தில் நடத்த முடிவு செய்தனர். இதற்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் அனுமதி அளித்ததாக தெரிகிறது. நேற்று மாலை கிறிஸ்தவ விழா நடப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இதுபற்றி தெரிந்ததும் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு பொது இடத்தில் விழா நடத்த அனுமதி வழங்கியதை கண்டித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் குடிநீர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்ததும் தாசில்தார் காண்டீபன், கிராம நிர்வாக அலுவலர்கள் சண்முகசுந்தரம், கோதண்ட ராமன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிறிஸ்தவ விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிருத்துவர்களுக்கு அனுமதி, இந்துக்களுக்கு கைது: இரு தரப்பினரும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 43 பேரை கைது செய்தனர்[6]. இதைத் தொடர்ந்து மாலையில் திட்டமிட்டப்படி கிறிஸ்தவ விழா அங்கு நடை பெற்றது. பொன்னேரி உதவி கலெக்டர் கந்தசாமி நேற்று இரவு கைது செய்யப் பட்ட கிராமமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். கிராமமக்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி அமைப்பினரும் கலந்து கொண்டனர். அப்போது இன்று காலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப் பட்ட 43 பேரும் விடுவிக்கப்பட்டனர். அதன்படி இன்று காலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள், கிராமமக்கள் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடந்தது.



[1] St. Mary’s Matric School, Ramananagar, Minjur, Tiruvallur (Dist.) – 601 203 (Tamilnadu),  2793 3053

ஜனாதிபதியாக கிறிஸ்தவரை தேர்வு செய்ய செக்யூலரிஸ சிவகாமியின் கம்யூனல் கோரிக்கை – சரி ஏன் பௌத்தர், ஜைனர், யூதர் என்றெல்லாம் இருக்கக் கூடாது”?

பிப்ரவரி 19, 2012

ஜனாதிபதியாக கிறிஸ்தவரை தேர்வு செய்ய செக்யூலரிஸ சிவகாமியின் கம்யூனல் கோரிக்கை – சரி ஏன் பௌத்தர், ஜைனர், யூதர் என்றெல்லாம் இருக்கக் கூடாது”?

சிவகாமி தலித் பெண்ணிய எழுத்தாளர் – இப்பொழுது அரசியல்வாதி: “ஜனாதிபதியாக கிறிஸ்தவரை தேர்ந்தெடுக்க வேண்டும்,” என, சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி கூறியுள்ளார். தலித் பெண்ணிய எழுத்தாளர் என்று சொல்லப்படும் இவர் 1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர். தலித்தியம், பெண்ணியம் சார்ந்து செயல்பட்டவர். பழையன கழிதலும், ஆனந்தாயி அவருடைய நூல்கள். தமிழில் எழுத்து பற்றிய புனைவு எனப்படும் ப.க.ஆ.கு. இவருடையதாகும். குறுக்கு வெட்டு, சிவகாமி சிறுகதைகள் போன்ற படைப்புகளும் உண்டு. ஊடாக என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கிறார். முன்பு கோடாங்கி என்றும் இப்போது புதிய கோடாங்கி என்றும் வெளியாகும் பத்திரிகையின் பின்னணியாய் இருந்து இயங்கிவருபவர். கவிதைகளும் எழுதியுள்ளார். கருத்தம்மா, முனிமா போன்ற பெயர்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய நாவல் அண்மையில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது[1]. ஆனால், இப்பொழுது அரசியல்வாதியாக மாறிவிட்டார்[2].
செக்யூலரிஸ (மதசார்பற்ற) சிவகாமியின் கம்யூனல் (மதசார்புடைய) கோரிக்கை: செக்யூலரிஸம் பேசிக்க்கொண்டு மதரீதியில் சிந்திப்பது, பேசுவது, ஆதரவு தெரிவிப்பது முதலியவை ஏன் என்று ஆராய்ந்தால், அதன் பின் அத்தகைய மதவாதிகளின் பலம், தாக்கம், முதலியவை இருப்பது தெரிய வருகிறது. தினமலர், செய்தியாக வெளியிட்டிருப்பது கொஞ்சம், ஆனால், பக்கத்தில் இருக்கும் படம் வேறு கதை சொல்கிறது. ஆமாம், பாதிரிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான், அந்த சிவகாமி அம்மையார் அப்படி பொன்முத்துகளை உதிர்த்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி[3]: “நாட்டின் ஜனாதிபதியாக இதுவரை கிறிஸ்தவர் ஒருவர் தேர்வு செய்யப்படவில்லை. சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவரை தேர்ந்தெடுக்க, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். அனைத்து மதங்களையும், இனங்களையும் சமமாக நடத்தும் இந்தியாவில், கிறிஸ்தவர் ஒருவரை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டுமென, நாடு முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளோம். முதல் கட்டமாக, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், புவனேஸ்வர் நகரங்களில், இதற்கான கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதையொரு இயக்கமாகவும் கொண்டு செல்ல விரும்புகிறோம். வேட்பாளரை நாங்கள் முன்னிறுத்தவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் கிறிஸ்தவர் யாராக இருந்தாலும், அவரை ஏற்றுக்கொள்கிறோம்”, இவ்வாறு சிவகாமி கூறினார்.

இதற்கான கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதையொரு இயக்கமாகவும் கொண்டு செல்ல விரும்புகிறோம்: இப்படி பன்மையில் பேசும் போது, இவரைத் தவிர யார் அந்த மற்றவர்கள் என்ற கேள்வி எழுகிறது. பக்கத்தில் பார்த்தால் சிலுவை அணிந்து கொண்டு ஒரு பாதிரி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி “தினமர்” ஒன்றும் கூறவில்லை. எனெவே, கிறிஸ்தவ கூட்டுடன் அத்தகைய கோரிக்கையை இட்டுள்ளபோது, அவரது மதசார்பற்ற நிலை கேள்விக்குறியாகிறது. செக்யூலிஸம் பேசிக்கொண்டு கம்யூனல் கோரிக்கை இடுகிறார் என்று ஐ.ஏ.எஸ் படித்த அப்பெண்மணிக்கு தெரியாது என்று சொல்ல முடியாது. ஆகவே, தர்ந்து கொண்டே அவ்வாறு பேசியிருப்பது அவரது கிறிஸ்தவ / கிருத்துவ சார்பு / ஆதரவைக் காட்டுகிறது. ஏற்கெனெவே கடந்த தேர்தலில், இவர் அத்தகைய உதிரு கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு போட்டியிட்டுள்ளார்.

“கிறிஸ்தவர் யாராக இருந்தாலும், அவரை ஏற்றுக்கொள்கிறோம்”: இப்படி சொன்னதில் முழுவதுமாக குட்டு வெளிப்பட்டு விட்டது. அதாவது, ஒரு குறிப்பிட்ட கிருத்துவப் பரிவு அவருக்குக் கட்டளையிட்டுள்ளது என்று தெரிகிறது. அதாவது, கிருத்துவம் என்றால் ஒரு மதம் என்று நினைக்க வேண்டாம், அதிலும் ஏ முதல் இஜெட் வரை 3,000ற்கும் மேலான பிரிவுகள் உள்ளன. ஜேஹொவாவை  ஏற்றுக் கொள்ளும்-ஏற்றுக் கொள்ளாத, மேரியை ஏற்றுக் கொள்ளும்-ஏற்றுக் கொள்ளாத, ஏசுவை ஏற்றுக் கொள்ளும்-ஏற்றுக் கொள்ளாத, திரியேகத்துவத்தை ஏற்றுக் கொள்ளும்-ஏற்றுக் கொள்ளாத, என பிரிவுகள் உள்ளன. எனெவே, அமெரிக்கா பொரொடெஸ்டென்ட் பிரிவுகளை ஆதரிக்கும் நிலையில், சோனியா மெய்னோ கத்தோலிக்கக் கிருத்துவராக உள்ளார். அதாவது, வாடிகன் முழு அளவில் அவர் மீது அதிகாரம் செல்லுத்தி வருகிறது. அந்நிலையில் தான் இந்த சிவகாமி அம்மையார், “கிறிஸ்தவர் யாராக இருந்தாலும், அவரை ஏற்றுக்கொள்கிறோம்”, என்கிறார். “கத்தோலிக்கக் கிருத்துவராக இருந்தாலும் அவரை ஏற்றுக்கொள்கிறோம்”,” என்றால் நடப்பதே வேறு.

 

மூன்றாவது அணி என்று சொல்லிக் கொண்ட வகுப்புவாத-அடிப்படைவாத-மதவாத கோஷ்டிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டது: சமூக சமத்துவப்படையின் நிறுவனத் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., கெங்கவல்லி (தனி) சென்ற சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். தமிழகத்தில், ஐ.ஜே.கே., தலைமையில் மூன்றாவது அணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்தித்தது. அதில், சமூக சமத்துவப்படை, யாதவ மகா சபை, தமிழ்நாடு வாணியர் பேரவை, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், வ.உ.சி., பேரவை உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சங்கங்கள் கூட்டணியில் இடம்பிடித்தன. அந்நிலையில் அந்த தொகுதிக்குட்பட்ட பெரிய புணவாசல் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடி முன்பு தி.மு.க. கொடி, டி. சர்ட் அணிந்து கொண்டு சிலர் தி.மு.க. வுக்கு ஓட்டு கேட்டனர். இதுப்பற்றி தெரியவந்ததும் சிவகாமி ஐ.ஏ.எஸ். அங்கு விரைந்து சென்று அவர்களுடன் எப்படி நீங்கள் கட்சி சின்னத்தை அணிந்து கொண்டு ஓட்டு கேட்கலாம் என்று வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அவர் திடீரென வாக்குசாவடி முன்பு அமர்ந்து தர்ணா செய்தார்[4]. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் அங்கு தேர்தல் பார்வையாளர்கள் வந்தனர். அவர்களிடம் சிவகாமி ஐ.ஏ.எஸ். பரபரப்பு புகார் தெரிவித்து மனு கொடுத்தார்.

தலித் கிருத்துவ ஒதுக்கீட்டை ஆதரித்தது: தலித் போர்வையில் கிருத்துவர்கள் செய்து வரும் பொய் பிரச்சரத்தை அறிந்தும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை அறிந்தும், சிவகாமி தலித் கிருத்துவ ஒதிக்கீட்டை ஆதரித்து பேசி வருகிறார். முன்பு உமாசங்கர் என்ற அதிகாரி தான் கிருத்துவர் என்பதனை மறைத்து, “இந்து” என்று சொல்லிக் கொண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். பிறகு உண்மை வெளிப்பட்டபோது, பதவி நீக்கம் செய்யப்பட்டார்[5]. அப்பொழுதும் சட்டப்படி, உண்மையைக் கூறாமல், உமாசங்கரின் தந்தை பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்[6], அவரது சகோதர்கள் தலித்துகள் என்றுதான் பேசினாரேத் தவிர, உண்மையைக் கூறவில்லை[7].

ஐ.ஜே.கேவின் கிருத்துவ முகம்: முன்பே ஐ.ஜே.கே கிருத்துவ கட்சியா அல்லது கிருத்துவர்களை ஆதரிக்கும் கட்சியா என்ற கேள்வி எழுந்தது. காமராஜர் அரங்கத்தில், கிருத்துவர்கள் சார்பாக ஒரு பெரிய கூட்டமே ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது பச்சமுத்து அவ்வாறில்லை என்று சொல்வதற்கு நிரம்பவே கஷ்டப்பட்டார். இருப்பினும் அவர் கோடிக்கணக்கில் செலவழித்தது, பலரை பிரமிக்க வைத்தது. தேசிய கட்சிகளே அவ்வாறு செலவு செய்ய முடியாத நிலையில், பச்சமுத்து பணத்தை வாரியிரைத்தது அதிசயமே. சிவகாமி அத்தகைய கட்சியுடம் கூட்டு வைத்தார். ஆகவே, இவர்களுக்குள் உள்ளகிருத்துவ அவர்கள் மறுத்தாலும், மறைத்தாலும் தொடர்பு விளங்குகின்றது.

ஏன் பௌத்தர், ஜைனர், யூதர் என்றெல்லாம் இருக்கக் கூடாது?: அது சரி, ஏன் ஜனாதிபதி ஒரு பௌத்தர், ஜைனர், யூதர் என்றெல்லாம் இருக்கக் கூடாது? ஏன் அவர்கள் “சிறுபான்மை” மக்கள் இல்லையா? அம்மாதிரி ஏன் யாரும் நினைப்பதில்லை, பேசுவதில்லை, எழுவதில்லை, கோரிக்கை எழுப்புவதில்லை? அப்படி நினைக்க, பேச, எழுத – எது தடுக்கிறது? செல்யூலரிஸமா, கம்யூனலிஸமா? அது என்ன சித்தாந்தம்? இதென்ன முரண்பாடு? ஆக, இது சுயநினைவோடு, சுய-சிந்தனயோடு வருகின்ற எண்ணமோ, கோரிக்கையோ அல்ல யாரோ, ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் சொல்லி அல்லது வசதியோ, எதுவோ கொடுத்து பேச வைக்கும் வித்தையாக, யுக்தியாக உள்ளது. ஏதோ யாரும் சொல்லாதத்தை சொல்லி விட்டோம் என்றதல்ல, ஆனால், மறுபடியும் இந்தியாவை அடிமைத்தளையில் கொந்து செல்ல போடும் சதிதிட்டத்திற்கு உடந்தையாக, சிந்தனையை அடகு வைத்த நிலையாக உள்ளது. எப்படித்தான் இந்தியர்கள் முழித்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

19-02-2012


[1] தமிழக தலித் இயக்கங்கள், தலித் மேடைகள் பலவற்றிலும் பங்குபெற்ற இவர் 90களுக்குப் பிந்தைய தலித் கலை இலக்கிய அடையாள நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தென்னிந்திய தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பேரவையை ஏற்படுத்தியவர். தலித் நிலவுரிமை இயக்கத்தின் மூலம் பல்வேறு போராட்டங்களையும் மாநாடுகளையும் ஒருங்கிணைத்தார். பெண்கள் ஐக்கியப் பேரவையை ஏற்படுத்தினார். பெண்ணிய அடையாளம் பற்றிய உடலரசியல் நூலை எழுதியுள்ளார். அரசு அதிகாரியாய் இருந்தபோது தலித்துகள், பழங்குடியினர் சார்ந்து துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தவர். தலித்தியம் குறித்த கருத்துப் போராட்டத்திலும் முன்னிற்கும் இவர் அண்மையில் தான் வகித்து வந்த ஐஏஎஸ் பொறுப்பிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கன்னியாகுமரி பொதுத் தொகுதியில் போட்டியிட்டார்.

http://www.kalachuvadu.com/issue-112/page25.asp

[2] contested the Lok Sabha election on a Bahujan Samaj Party (BSP) ticket from Kanyakumari in 2009, but lost. The same year in December, she floated her own political party, Samuga Samathuva Padai (Forum for Social Equality).

[6] As for the community status, Mr. Umashankar said that his father was a Hindu and belonged to the community of Pallar (Devendra Kula Vellar). His mother was a Christian. In the school leaving certificate, his [Mr Umashankar’s] religion was mentioned as Christianity and he was known as Ashok. In February 1984, his father got him “reconverted” into Hinduism. His name was changed as Umashankar. The change of religion and name was notified in the government gazette two months later. In March 1985, he got a SC community certificate issued by the Sankarankoil [Tirunelveli district] tahsildar.

http://www.thehindu.com/news/cities/chennai/article612029.ece

[7] Ridiculing the government’s justification for the suspension, former IAS officer P. Sivakami, a popular dalit activist, said, “Umashankar’s father is a dalit pallar and all his siblings are dalits. Where does the question of producing a false SC certificate arise? Did the government suspend the many other officers against whom similar charge of using fake SC certificate was levelled? Some of them are now in prominent posts.”

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

பிப்ரவரி 18, 2012

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

 

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரியாரை கண்டித்து பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தால் பரபரப்பு[1]: நள்ளிரவில், கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த பாதிரியாரை கண்டித்து, இந்து முன்னணியினரும், பல்வேறு அமைப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குருசுக்குப்பம் சர்ச் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. கிருத்துவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் உள்ள தொடர்பும் வெளிப்பட்டுள்ளது. மார்ச் 13, 2003 அன்று ஜோஸப் என்பவன், திருமாவளவன் குரலில் பேசி பணம் கேட்டதும், இந்த சர்ச்சிலிருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது[2]. பிறகு அது மோசடி என்று தெரியவந்தது. இருப்பினும், திருமாவளவன் என்று கேட்டால் பணம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. திருமாவளவன் கிருத்துவர் என்று அவர் நண்பர்கள் கூறுவதுண்டு. கிருஸ்துமஸ் கொண்டாடி விட்டு, குல்லா போட்டு கஞ்சி கொடுக்கும் போது, கிருஸ்துவர்களுக்கு பலமுறை சங்கடமாகியுள்ளது. இருப்பினும், திருமாவளவன் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறார்.

152 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் சர்ச்: புதுச்சேரி, குருசுக்குப்பத்தில், 152 ஆண்டுகள்[3] பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் உள்ளது. 2009ல் 150 ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது[4]. இங்கு, திண்டிவனத்தை சேர்ந்த பெர்க்மான்ஸ் பீட்டர்[5]  (45), பாதிரியாராக உள்ளார். நேற்று முன்தினம் (16-02-2012), நள்ளிரவு 12 மணியளவில், கல்லூரி மாணவியுடன், பாதிரியார் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்க்லள் அம்மாணவி உள்ளே சென்றதை பார்த்து விட்டு மற்றவர்களிடத்தில் சொன்னதால், கையும் களவுமாக பிடிபட்டனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், ஆலயம் எதிரே திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பாதிரியார் பெர்க்மான்ஸ்[6], பேராயர் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையில், மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஆலயத்தில், நேற்று காலை திருப்பலி நடக்கவில்லை.

இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்: இந்நிலையில், கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியாரை கைது செய்ய வேண்டும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், திருச்சபையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணியினர், முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் குவிந்தனர். தலைவர் சனில்குமார், பொதுச் செயலர் முருகையன் ஆகியோர் தலைமையில், இந்து முன்னணியினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை, இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர். அதற்குள் விஷயம் அறிந்த மற்ற இயக்கத்தினர் வந்துவிட்டனர்.

பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பிய மற்ற இயக்கங்கள்: தகவலறிந்த அனைந்திந்திய மாணவர் கூட்டமைப்பு, பெற்றோர்-ஆசிரியர் கழகம், இந்திய மாணவர் சங்கம், மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் அருகில் உள்ள பள்ளி முன் திரண்டனர். பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மிஷன் வீதியில் உள்ள பேராயர் இல்லம் முன், நாம் தமிழர் கட்சி, சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக, சீனியர் எஸ்.பி., சந்திரன், எஸ்.பி., மோனிகா பரத்வாஜ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிரியார் மீதான குற்றத்தை, கல்லூரி மாணவி மறுத்தார். இதனால், அனைவருக்கும் வியப்பானது.

புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு நள்ளீரவில் மாணவி வந்துள்ளாராம்: இதுகுறித்து, சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறுகையில், “தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தனிமையில் இருந்த பாதிரியார் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்பெண், புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், எம்.சி.ஏ., படித்து வருகிறார். அந்தப் பெண்ணிற்கு, பாதிரியார் தான் பாதுகாவலராக உள்ளார். ஹாஸ்டலில் கணிப்பொறி வசதி இல்லாததால் எம்.சி.ஏ., புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை என, எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால், பகலில் கூட சென்றிருக்கலாம், ஆனால் நள்ளிரவில் ஏன் செல்ல வேண்டும் என்று தான் மக்களுக்கு புரியவில்லை. இல்லை, பாதிரியாரே காலையில் வரசொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாம். அவ்வாறில்லாதலால், மக்களுக்கு சந்தேகம் வந்தத்தில் வியப்பில்லை. மேலும் சமீபகாலங்களில் கிருத்துவப் பாதிரிகள் இத்தகைய பாலியல், செக்ஸ் விஷயங்களில் ஈடுபட்டுள்ளது, மாட்டிக் கொண்டுள்ளது சகஜமாகி விட்டதாலும், டிவி-நாளிதழ்களில் சில விஷயங்கள் வெளிவந்து விட்டதாலும் மக்கள் அவ்வாறே நினைத்திருக்கலாம்.  குருசுகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், பதட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தேவலாயத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு என்று “இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” அறிவித்ததும் ஆச்சரியமான விஷயம் தான்!


[2] Chennai youth held for `cheating’ Pondy Church heads By Our Staff Reporter, Saturday, Mar 15, 2003

Pondicherry March 14. Joseph alias Ravi (32) of Vyasarpadi, Chennai, was arrested here yesterday for allegedly cheating heads of a few churches in Pondicherry. The youth had allegedly spoken over phone to the church authorities mimicking the voice of the DPI convener, Tirumavalavan.

The Superintendent of Police, V.J. Chandran, said today that the youth had allegedly called the Bishop House on February 24 over phone mimicking the tone of the DPI leader. He told them that he wanted to hold a function to present tricycles to the handicapped children. Hence, he sought their contribution. Believing that it was only the DPI leader contacting them, the Bishop House assured that Rs. 10,000 would be given for the project. As requested, a cheque was prepared in the name of Ravi and handed over to the youth.

The same youth contacted the head of another church at Kurusukuppam on March 3 seeking Rs. 5,000 for the same project. This time also he spoke in the voice of Mr. Tirumavalavan. The head of the church reportedly gave Rs. 5,000 to the youth. When the Bishop House contacted Mr. Tirumavalavan, the cheating came to light. The management of the Bishop House filed a police complaint

http://www.hindu.com/2003/03/15/stories/2003031504890300.htm

[3] Peace meet to mark 150th year of church Staff Reporter, The Hindu, Thursday, Sep 24, 2009

PUDUCHERRY: A three-day conference on peace will launch the 150th year celebrations of the St. Francis of Assisi church at Kurusukuppam. The feast will start on September 25 and will go on till October 4. Parish Priest Fr. P. Arul Dass said the church was built in 1858 in honour of St. Francis of Assisi. The feast will seek to spread his spiritual views of love, peace and harmony and it is with this objective that the conference on peace has been organised from September 25 to 27, he said. Archbishop of Pondicherry-Cuddalore Anandarayar will celebrate the mass at 11 a.m on Sunday, September 27. He said about 500 persons from Puducherry,

http://www.hindu.com/2009/09/24/stories/2009092451090200.htm

[4] St.Francis of Assisi Church, Kurusukuppam, Pondicherry, Pin : 605 012,Tel.Ph: 0413- 2227626.

[6] இந்த பெர்க்மான்ஸ் வேறு மற்றும் பாட்டுப் பாடி ஆடும் பெர்க்மான்ஸ் வேறு என்று தெரிகிறது.

ஏசு, கிருஸ்து, மார்க்ஸ், லெனின்: இந்திய கம்யூனிஸ்டுகளின் போலி நாடகம்!

பிப்ரவரி 7, 2012

ஏசு, கிருஸ்து, மார்க்ஸ், லெனின்: இந்திய கம்யூனிஸ்டுகளின் போலி நாடகம்!

கேரளத்தில் கிருத்துவர்களும், கம்யூனிஸ்டுகளும்: செக்யூலரிஸம் பேசும் கம்யூனிஸ்டுகள், கேரளாவில் முஸ்லீம் லீக் மற்றும் கேரளா காங்கிரஸ் மற்றும் இதர கிருத்துவ-முஸ்லீம் உதிரிக் கட்சிகளுடமன் கூட்டு வைத்துக் கொள்ளத் தயங்குவதில்லை.  கோழிக்கோட்டில் 20வது மாநில மாநாடு ஏப்ரல் 4 முதல் 9 வரை நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பாக, மாநில மாநாடு கொல்லத்தில் நடத்தப் படுகிறது. கிருத்துவர்களை தாஜா செய்ய, கம்யூனிஸ்டுகள் முயல்கிறார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது[1].

ஒரு பக்கம் காங்கிரஸ் தலைவர்கள், நடுவில், ஒபாமா, மோடி, அத்வானி முதலியோர்!

ஏசு கிருஸ்து படங்கள் வைக்கப் பட்ட கம்யூனிஸ்ட் மாநாட்டுப் பந்தல்: பிப்ரவரி  “பீடைல் காஸ்ட்ரோ[2], “முதலாளித்துவத்தை விட, கம்யூனிஸத்திற்கும், கிருத்துவத்திற்கும் 10,000 மடங்கு ஒப்புமைகள் உள்ளன”, என்று கத்தோலிக்கப் பாதிரிகளின் கூட்டத்தில் சொன்னதைத்தான் நான் இப்பொழுது குறிப்பிட்டுக் காட்டுகிறேன், அதனால், கம்யூனிஸ கண்காட்சியில், ஏசுகிருஸ்துவின் படத்தை வைத்ததைப் பற்றி பெரிதாக பிரச்சினை செய்யவேண்டிய அவசியம் இல்லை”, என்று கேரளாவில் 20வது மாநில மாநாட்டை ஆரம்பித்து வைத்த போது பிரகாஷ் காரத் சொன்னார்[3]. அவருடைய மனைவி, பிருந்தா, இதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை[4]. இந்த தம்பதியினர், கிருஸ்துமஸ் விடுமுறை நாட்களில் ஐந்து நடசத்திர ஹோட்டல்களில் தான் செலவழிப்பது வழக்கம். கம்யூனிஸ்டுகளுக்கும், கிருத்துவர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் பிரச்சினை உள்ளது. ஏனெனில், கம்யூனிஸ்டுகள் கிருஸ்துவின் படத்தை புகைப்பட கண்காட்சியில் மற்ற கம்யூனிஸ்டு தலைவர்களின் படங்களுடன் சேர்ந்த்து வைத்திருந்தனர். இதற்கு கிருத்துவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  “மார்க்ஸ் சரிதான்” என்ற தலைப்பிலும், “ஏசுவின் கடைசி போஜனம்” என்ற படத்திலும் ஏசுவைப் போன்ற உருவத்தில் பல இந்திய மற்றும் உலகத் தலைவர்களின் படங்களை வரைந்து வைத்தனர். ஏசுதான் “உலகத்தின் முதல் புரட்சியாளர்” மற்றும் “உயிர்த்தியாகி”[5] என்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது[6].

மதத்தை எதிர்க்காத கம்யூனிஸ்டுகளாம்: கம்யூனிஸத்தில் மத எதிர்ப்பு இல்லை என்றாஸ்ல் யாராவது நம்புவார்களா? கேரளாவில் உள்ள அறிவுஜீவிகள் நம்புஆர்கள் போலிருக்கிறது. இதனால், கிருத்துவர்களை தாஜா செய்ய, “நாங்கள் மதத்திற்கு ஒன்றும் விரோதமானவர்கள் அல்லர், ஆனால் அடிப்படைவாதம், தீவிரவாதம் இவற்றை எதிர்ப்பவர்கள்”, பேசவேண்டியதாயிற்று. “தி ஹிந்து” தனக்கே உரிய பாணியில், கம்யூனிஸத்தில் திட்டம், கொள்கைகள் என்று செய்தி வெளியிட்டுள்ளது[7]. “இதன் பின்னால் ஏதோ சதி உள்ளது” என்று கூட பிரகாஷ் பேசியது வேடிக்கையாக இருந்தது[8].

விடுதலை இறையியலும், கம்யூனிஸ்டுகளும்: ஆனால், உண்மையில், “விடுதலை இறையியல்” போர்வையில் வேலை செய்யும் கிருத்துவர்கள் தாம், அத்தகைய படங்களை வைத்ததாக சொல்லப்படுகிறது. தென்னமெரிக்க / லத்தீன் அமெரிக்க நாடுகளில் கம்யூனிஸம், ஏசுகிருஸ்துவை இணைத்துக் கொண்டு, “விடுதலை இறையியல்” போர்வையில் பரப்புகிறார்கள். பொதுவாக கம்யூனிஸத்தில் கடவுள் இல்லை. ஆனால், இந்த சித்தாந்தத்தில், கம்யூனிஸத்தில் ஏசுகிருஸ்து உண்டு. அவர் ஏ.கே.47 ஏந்தி கொண்டு, ஒரு போராளி போல சித்தரிக்கப் படுகிறார். அதற்கேற்றப்படி, பைபிளில் வருகின்ற, சில நிகழ்ச்சிகள் வேறுவிதமாக விளக்கம் அளிக்கப் படுகிறது. ஏசு, கோவிலில் எப்படி யூதர்களை, கயிற்றால் அடித்து விரட்டினாரோ, அது போல கம்யூனிஸ்டுகள் முதலாளிகளை விரட்டுவார்கள் என்று விளக்கம் அளிக்கிறார்கள்.

வேதபிரகாஷ்

07-02-2012