Archive for ஏப்ரல், 2011

கொலையாளி ஜான் டேவிட், குரூரமாக கொலையுண்ட நாவரசு, தாமதமான நீதி (2)

ஏப்ரல் 29, 2011

கொலையாளி ஜான் டேவிட், குரூரமாக கொலையுண்ட நாவரசு, தாமதமான நீதி (2)


மேல் முறையீடு செய்ய ஏற்பாடு: 20-04-2011 அன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது[1]. 23-04-2011 (சனிக்கிழமை) கடலூரில் ஜான் டேவிட் சரண்டர் ஆகிறான். இவ்வளவு நடந்த பிறகும், போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்திற்காக, உச்ச நீதி மன்றத்தில் மறு ஆய்வு செய்ய / மேல் முறையீடு மனு செய்யப் போவதாக அவனது வழக்கறிஞர் ஏ. பத்மநாபன் என்பவர் 27-04-2011 அன்று தெரிவித்திருப்பது[2], சட்டமுறையை இன்னும் எந்த அளவிற்கு இழுக்கலாம், காலம் தாழ்த்தலாம் என்று தெரிகிறது. மறுபடி-மறுபடி நேரிடையான ஆதாரங்கள் இல்லை, மறைமுகமான, சந்தர்ப்பவசமான, ஆதாரங்கள்தான் உள்ளன என்று இப்படி வாதிட்டு வருவது, சட்டப் பிரிவுகளில், மேல்முறையிட்டு அமைப்பில் நியாயமாக இருக்கலாம். அதற்கு குற்றவாளிக்கு, உரிமையும் இருக்கலாம். ஆனால், குற்றத்தை பல நேரங்களில் ஒப்புக் கொண்டு இரண்டுமுறை சிறைக்கு வந்துவிட்டப் பிறகு[3], மறுபடியும் அத்தகைய முறையீட்டை பயன்படுத்தி பார்த்துவிடுவது என்ற முடிவு ஜான் டேவிட் உடையதா அல்லது அவ்வாறு யாராவது தூண்டிவிட்டுள்ளனரா அல்லது இன்னும் நீதித்துறையிலுள்ள சட்ட சலுகைகள், உரிமைகள் அல்லது ஓட்டைகளை வைத்து ஒருவேளை, கெட்ட முன்னுதாரத்தை உருவாக்க முயல்கிறார்களா என்பது, மறுபடியும் மூன்று-ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரியும்.

ஜான் டேவிட்டும், அவனது பெற்றோரும்: ஜான் மாரிமுத்து மற்றும் எஸ்தர் லட்சுமி என்கின்ற அவனது பெற்றோர்களுக்கு, அவனைப் பற்றிய விவரங்கள் நிச்சயமாகத் தெரியும் என்பது, அவர்களது நடவடிக்கைகளிலிருந்து அறியப்படுகின்றது. போலீஸார் ஊடகங்களில் ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான் என்றபோதே, அவர்கள் கரூரிலிருந்து சென்னைக்கு வந்து, வக்கீல்களை சந்தித்து என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டனர். அத்தகைய வதந்தி பரப்பியுள்ளது அவர்களின் வேலைதான் என்று தெரிய வந்துள்ளது. தம்முடைய மகன் விரைவில் சரணடைவான் என்று பெற்றோர் அறிவித்தனர்[4]. இணைத்தள நகலை வைத்துக் கொண்டு சரண்டரும் ஆகிவிட்டது.

ஜான் டேவிட்டைப் பற்றிய விவரங்களை மறைக்கும் ஊடகங்கள்: ஜான் டேவிட்டின் விஷயத்தில் மட்டும் ஊடகங்களில் அவனைப் பற்றிய விவரங்கள் மிகவும் குறைந்த அளவில்தான் வந்துள்ளன. அவனது முகத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் அளவிற்குக் கூட, புகைப் படமோ, அல்லது தொலைக்காட்சிகளில் செய்திகளிலோ காட்டவில்லை. ப்ழைய படங்களைத் தான் காட்டி வந்துள்ளனர். குறிப்பாக “தி ஹிந்து”வில் வந்த இரண்டு படங்களைத்தான், மாற்றி-மாற்றி மற்ற ஊடகங்கள் காட்டிவருகின்றன. மேலும் சதர்லாந்து கம்பெனியில் வேலைப் பார்க்க உண்மையான பெயர் மற்ற விவரங்களை மறைத்துள்ளதும் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் செய்வது போல இல்லை. ஏனெனில், முன்பு பைபிளை கையில் வைத்துக் கொண்டு, கடவுள்தான் தன்னைக் காப்பாற்றினனர் என்று அரைகூவலிட்டு பேசியது சிலருக்குத்தான் நினைவில் இருக்கும்[5].

ஜான் டேவிட்டைப் பற்றிய வதந்திகள்: தன்னுடைய மகன் திருமணம் செய்து கொண்டு விட்டான், பாதிரியாகி விட்டான், நட்டைவிட்டு ஓடி விட்டான், பாதிரியாகி விட்டான் என்றெல்லாம் வதந்திகள் வருவதை தாய் எஸ்தர் லட்சுமி விரும்பவில்லையாம். ஆகையால் தான், வக்கீல் துணையுடன் சரண்டர் ஆகத் தீர்மனித்தனராம். பிறகு எப்படி, இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தனர். உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கறிஞரை வைத்து வாதாடினர் என்பதெல்லாம் ரகசியமாகவே இருந்தன என்பதும் மர்மமமக இருக்கின்றது. இதே மற்ற வழக்கு எனும்போது, தினசரி அல்லது தொடர்ந்து அவ்வழக்கைப் பற்றி ஊடகங்களில் கூறிவருகின்றனர். ஆனால், கிருத்துவர்கள் சம்பந்தப் பட்டவை என்றால், ஆரம்பத்தில் பெரியதாக வந்து, பிறகு, ஒன்றுமே இல்லை என்பது போல அமைதியாகி விடுகின்றது. இந்த போக்கு என்ன என்று ஆராயவேண்டியுள்ளது.

ஆட்டோ சங்கரும், ஜான் டேவிட்டும், கிருத்துவர்களும்: ஆட்டோ சங்கர் விவகாரத்தில், எப்படி கிருத்துவர்கள் ஆபாசமாக விளம்பரத்தைப் பெற முயன்றனரோ, அதேமுறையில் ஜான் டேவிட் விஷயத்திலும் செயல்பட்டது. கொலைவிஷயத்தில் தீவிரமாக விசாரணை செய்தால், ஜான் டேவிட் அவ்வாறு தீவிரமாக கொலைவெறிப் பிடித்த குரூரனாக மாற, கிருத்துவ மதம் தான் காரணம் என்ற உண்மை தெரிய வரும் என்று தெரிந்துகொண்டு, அவ்வழக்கை அமுக்க முயற்சி மேற்க்கொண்டன்ர். சிறையில் இருக்கும் போதே கிருத்துவர்கள் தமது ஆதிக்கத்தை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். போதிய ஆதாரங்கள் இல்லை என்று அவன் விடுவிக்கப் பட்டதும், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கிருத்துவ அமைப்பை அவனை மதபோதக வேலைக்கு வைத்துக் ஆஸ்திரிலேயாவில் பாதிரியாக வேலைசெய்து வருகிறான் என்று செய்திகளை ஏன் பரப்பின என்பதும் வேடிக்கையாக உள்ளன..


[1] Ispector of Police, Tamilnadu vs John David, in Criminal Appeal No. 384 of 2002-Decided on 20-04-2011; http://www.stpl-india.in/SCJFiles/2011_STPL(Web)_404_SC.pdf

[5]  Waving the Bible, John David told waiting presspersons “Your pen is mightier than an ordnance and ammunition; don’t spoil my life with some publicity or the other, and please let me lead my life”, he said fluttering. Long-haired and bearded, David attributed his release to “Lord Christ’s mercy alone, and nothing else”.

http://www.hindu.com/2001/10/09/stories/0409223w.htm

கொலையாளி ஜான் டேவிட், குரூரமாக கொலையுண்ட நாவரசு, தாமதமான நீதி!

ஏப்ரல் 21, 2011

கொலையாளி ஜான் டேவிட், குரூரமாக கொலையுண்ட நாவரசு, தாமதமான நீதி!


சென்னை உயர்நீதி மன்றத்திற்கு உச்சநீதி மன்றம் கண்டனம்: 1997ல் ஜான் டேவிட் என்ற மருத்துவ மாணவன், தனது சக-மாணவன் நாவரசு என்பவனைக் கொலை செய்தான். பிறகு குரூரமாக அங்கம்-அங்கமாக வெட்டி முண்டத்தை பார்சல் செய்து சென்னைக்கு அனுப்பினான், மற்ற பகுதிகளை வீசியெறிந்தான். 1998ல் இதனால், சிதம்பரம் கீழ்நீதி மன்றம், தீர விசாரித்து, இரட்டை ஆயுள் தண்டனை அளித்தது. ஆனால், 1998ல் ஜான் டேவிட் தரப்பில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது. 2001ல் அதன்படியே, சென்னை உயர்நீதி மன்றம் அவனை விடுவித்தது. ஆனால், 2002ல் தமிழக அரசு, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதி மன்றம், 20-04-2011 அன்று ஜான் டேவிட்டிற்கு அளித்த தண்டனை சரியானதே என்று தீர்ப்பளித்ததுடன், சென்னை உயர்நீதி மன்றம் இவ்வாறு மெத்தனமாக நடந்துகொண்டதற்கு, கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மீதும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

1997ல் நாவரசனைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றது: மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில், அவரது சீனியர் மாணவரான குற்றவாளி ஜான் டேவிட்டிற்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது[1]. சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி மகன் நாவரசு (17); 1996ம் ஆண்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசு, அதே ஆண்டு நவம்பர் 6ம் தேதி, வகுப்பிற்கு சென்றவர் விடுதிக்குத் திரும்பவில்லை. நவம்பர் 7ம் தேதி, சென்னையில் மாநகர பஸ் ஒன்றில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில், தலை, கை, கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட ஆண் உடல் மட்டும் கிடந்தது. இதுகுறித்து சென்னை மாநகர போலீசார் வழக்கு பதிந்து, கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். நாவரசு காணாமல் போனது குறித்து அவரது தந்தை பொன்னுசாமி, நவம்பர் 10ம் தேதி கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நாவரசுவை நவம்பர் 6ம் தேதி மதியம், அதே மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஜான் டேவிட் தனது அறைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. நவம்பர் 11ம் தேதி ஜான் டேவிட், ராஜமன்னார்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார், நவம்பர் 18ல் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், தேர்வு எழுதி விட்டு வந்த நாவரசுவை, ஜான் டேவிட் வழிமறித்து தனது அறைக்கு அழைத்துச் சென்று ராகிங் செய்துள்ளார்.அப்போது, ஜான் டேவிட் தாக்கியதில் நாவரசு மயங்கி விழுந்துள்ளார். அவர் இறந்து விட்டதாகக் கருதிய ஜான் டேவிட், வெளியில் தெரியாமல் இருக்க, தனது படிப்பிற்காக ஆய்வகக் கூடத்தில் பயன்படுத்தும், “டிசக்ஷன்’ கருவிகளை பயன்படுத்தி நாவரசுவின் தலை, கைகள் மற்றும் கால்களை தனித்தனியாக துண்டித்துள்ளார்.

வெட்டிய உடல் பகுதிகளை பல இடங்களில் போட்டது: தலையை பாலிதீன் கவரில் சுற்றி, கல்லூரி வளாகத்தில் உள்ள குட்டையில் வீசியுள்ளார். பின்னர் உடலை பாலிதீன் கவரில் சுற்றி, பெரிய சூட்கேசில் அடைத்துள்ளார். அதேபோன்று, கைகள் மற்றும் கால்களை தனியாக, “பேக்’ செய்து, சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிச் சென்றுள்ளார். செல்லும் வழியில், கைகள் மற்றும் கால்களை ஆற்றில் வீசியுள்ளார். உடல் இருந்த சூட்கேசை, சென்னையில் டவுன் பஸ்சில் வைத்துவிட்டு சிதம்பரம் திரும்பி வந்ததும், போலீசார் சந்தேகிக்கவே கோர்ட்டில் சரணடைந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து, போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். ஜான் டேவிட் குறிப்பிட்ட அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள குட்டையில் தேடியதில், நாவரசுவின் தலை சிக்கியது; செங்கல்பட்டு அருகே கால்கள் சிக்கின. இதையும், சென்னையில் கண்டெடுக்கப்பட்ட உடலில் இருந்து எடுத்த திசுக்களை ஆய்வு செய்ததில், இறந்தது நாவரசு என்பது உறுதி செய்யப்பட்டது.கல்லூரியில், “ராகிங்’ கொடுமையால் மாணவர் நாவரசு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தியது. ஜான் டேவிட் மீது 1997ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வக்கீலாக முன்னாள் நீதிபதி கந்தசாமியும், ஜான் டேவிட் தரப்பில் பிரபல வக்கீல் விருத்தாசலம் ரெட்டியாரும் ஆஜராகி வாதிட்டனர்.

கீழ்நீதிமன்றத்தில் தண்டனை, உயர்நீதி மன்றத்தில் விடுதலை! நீதிபதி சிங்காரவேலு முன்னிலையில் நடந்த இந்த வழக்கில், 78 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 120 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, 1998, மார்ச் 11ம் தேதி தீர்ப்பு கூறினார். அதில், ராகிங் காரணமாக நாவரசுவை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்த தடயங்களை மறைத்ததற்காக மற்றொரு ஆயுள் தண்டைன என, ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதைத் தொடர்ந்து ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கடலூர் செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜான் டேவிட், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாததால், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேல்முறையீடு செய்த தமிழக அரசு: உலகமே அச்சுறும் வகையில் நடந்த கொடூர கொலை வழக்கில் கைதான ஜான் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு, டில்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், “மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவை கொடூரமான முறையில் கொன்ற, அவரது சீனியர் மாணவர் ஜான் டேவிட்டிற்கு, கடலூர் செஷன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனை சரியானதே’ என, தீர்ப்பளித்தது.

ஜான் டேவிட் சரணடைய உத்தரவு: நாவரசு கொலை வழக்கில் நீதிபதிகள் எழுதிய 41 பக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:விசாரணை நடவடிக்கைகளில் நடந்துள்ள சிறு தவறுகளை வைத்து, வழக்கில் உண்மையில்லை என, ஒட்டு மொத்தமாக கூறி விட முடியாது. இந்த வழக்கில் பலமான சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன. ஜான் டேவிட் தான் குற்றவாளி என்பதை தர்க்க ரீதியாகவும், நுட்பமான வகையிலும் விசாரணை அதிகாரிகள் நிரூபித்துள்ளனர். இந்த வழக்கை ஐகோர்ட் கையாண்ட விதம் சரியில்லை. சாட்சியங்கள் எல்லாம் திசை திருப்பப்பட்டுள்ளன.ஜான் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை, அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டியதில்லை. தண்டனை பெற்ற ஜான் டேவிட் உடனடியாக சிறை அதிகாரிகளிடம் சரண் அடைய வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த வழக்கின் உண்மை நிலவரங்களை பார்க்கையில் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மிகக் கொடூரமான முறையில் இளம் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டியது கொடூரமான மற்றும் அச்சமூட்டும் செயல்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கிறாரா ஜான் டேவிட்? மாணவர் நாவரசு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜான் டேவிட்டிற்கு, கடலூர் செஷன்ஸ் கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து ஜான் டேவிட், சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, போதிய சாட்சி இல்லாத காரணத்தால், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.ஆயுள் தண்டனையிலிருந்து விடுதலையான அவர், கிறிஸ்தவ மத போதகர் படிப்பு முடித்து ஆஸ்திரேலியா சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஐகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்து, செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை தற்போது சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

தமிழக போலீஸாரின் நிலை: இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, ஜான் டேவிட் தாமாகவே முன் வந்து கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் சரணடைய வேண்டும். தற்போது அவர் வெளிநாட்டில் உள்ளதால், அங்குள்ள இந்திய தூதரகத்தில் கூட சரணடையலாம்.அப்படி இல்லாத பட்சத்தில், கோர்ட் மூலம் தண்டனை பிடி ஆணை பிறப்பிக்கப்படும். அதன் பிறகு அவர் உள்நாட்டில் இருந்தால், அவரது பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டு பின்னர் போலீசாரால் கைது செய்யப்படுவார். வெளிநாட்டில் இருந்தால், நம் நாட்டில் உள்ள அந்நாட்டின் தூதரகத்திற்கும், அந்த நாட்டில் உள்ள நம் நாட்டு தூதரகத்திற்கும் கோர்ட் உத்தரவு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் ஜான் டேவிட்டை அந்நாட்டு போலீசார் கைது செய்து, அங்குள்ள நம் நாட்டு தூதரகத்தில் ஒப்படைப்பர். பின்னர் இந்தியா கொண்டு வரப்பட்டு, கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஜான் டேவிட் குறித்த தகவல் சேகரிக்க 2 தனிப்படை: எஸ்.பி., : சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகுறித்து கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் கேட்டபோது, “இந்த வழக்கில் ஜான் டேவிட்டிற்கு கடலூர் கோர்ட் அளித்த தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு எங்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் ஜான் டேவிட் தற்போது எங்குள்ளார் என்பது குறித்த தகவல்களை சேகரிக்க அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன[2]. கோர்ட் உத்தரவு கிடைத்த பின் ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


அமைதி என்ற பெயரில் கொடுங்கையூரில் சட்டவிரோத சர்ச், அதர்ம ஆக்கிரமிப்பு, கிருத்துவர்களின் அராஜகபோக்கு!

ஏப்ரல் 20, 2011

அமைதி என்ற பெயரில் கொடுங்கையூரில் சட்டவிரோத சர்ச், அதர்ம ஆக்கிரமிப்பு, கிருத்துவர்களின் அராஜகபோக்கு!

அமைதி-பரிசுத்தம் என்றிருந்தால் இப்படி அராஜகமாக ஆக்கிரமிப்புஇ செய்வார்களா? அமைதி / பரிசுத்தம் என்ற பெயரில், கிருத்துவர்களின் தெருவில் மேற்கொண்ட போராட்டம் செக்யூலார் நாட்டில் பல கேள்விகளை எழுப்புகின்றன. சட்டத்திற்குப் புறம்பாக எப்படி, ஒரு இடத்தை ஆக்கிரமித்து அதில் சர்ச் கட்டலாம்? அப்பொழுத் அவர்களுக்கு அமைதி என்ற எண்ணம் எல்லாம் ஏன் வரவில்லை? கொடுங்கையூரில் சட்டவிரோத சர்ச்சுகளும், அதர்ம ஆக்கிரமிப்புகளும், கிருத்துவர்களின் அராஜகபோக்கும் மறுபடியும் வெளிப்பட்டுள்ளது. எட்டு மாதம் முன்வரை குடிசையாக இருந்தது என்பது, இடத்தை ஆக்கிரமிப்பு செய்த செயலைத்தன் காட்டுகிறது[1]. கொடுனையூர் சர்ருகளும் அமைதிக்கு புறம்பான காரியங்களில் சம்பந்தப் படுவது புதியதல்ல[2]. ஆனால், செய்திகள் வினாஒதமாக கீழ்கண்டவாறு வந்துள்ளன.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் குடிசை போட்டு ஆக்கிரமிப்பு  செய்தது: கொடுங்கையூரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மூன்றாவது பிளாக்கில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. ஆப்ரகாம் என்பவர் ஆலயத்தை பராமரித்து வருகிறார்.  இந்நிலையில், ஆலய நிலத்தை மீட்க வீட்டு வசதி வாரியம் வழக்கு தாக்கல் செய்தது. அதை எதிர்த்து பொதுமக்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆலயம் இருக்கும் நிலத்தை மீட்க வீட்டுவசதி வாரியத்துக்கு கோர்ட் அனுமதி அளித்தது.  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் சிறு குடிசையாக இருந்த இந்த ஆலயம் கடந்த 8 மாதத்திற்கு முன்பு தான் கட்டடமாக ஆனது. இந்த ஆலயம் இருக்கும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக இல்லை என்றதும் விலைக்கு வாங்க முன்வந்துள்ள கிருத்துவர்கள்: இதையடுத்து அந்த இடத்தை பழைய விலைக்கு வாங்க சி.எஸ்.ஐ. திருச்சபை முடிவு செய்தது. அதற்கான முன் பணத்தை கொடுக்கவும் தயாராக இருந்தது. இந் நிலையில் இடத்தை காலி செய்து ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த ஆலயம் இடிக்கப்படும் அபாயம் உள்ளது என்று சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள் அஞ்சுகின்றனர். நேற்று காலையில் மின் இணைப்பைத் துண்டிக்க அதிகாரிகள் வந்தனர். இதையறிந்த கொடுங்கையூர் எம்.ஆர். நகர், மூலக்கடை, கண்ணதாசன் நகர், ஆர்.வி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு முன் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஐ.சி.ஐ. பேராயர் சிஷ்வா பிரகாஷ், பேராயர் சாம்சன், வடசென்னை போதகர்கள் ஐக்கியம் மற்றும் சபை கமிட்டி உறுப்பினர்கள் ஆலயத்தின் முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தனர். பேராயர்கள் சிஷ்வா பிரகாஷ், சாம்சன் ஆகியோர் கூறுகையில்,இந்த ஆலயத்தில் 75 சதவீதம் தலித் மக்களும், 25 சதவீதம் மற்ற இனத்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். நியாயமான விலைக்கு இடத்தை கொடுக்குமாறும், அதற்காக முன் பணமாக ரூ. 25 லட்சத்தை கொடுத்து இடத்தை வாங்க தயாராக உள்ளோம். ஆனால் அதை ஏற்காமல் ஆலயத்தை இடிப்பதிலேயே குறியாக உள்ளனர். இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு ஆலயத்தை இடிக்காமல் தடுக்க வேண்டும். இங்கு தொடர்ந்து வழிபாடு நடத்த உதவ வேண்டும், என்றனர்[3].

கொடுங்கையூரில் பதற்றம் அதிகாரிகள் திடீர் சமரசம் : கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 3வது பிளாக்கில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமானது. ஆப்ரகாம் என்பவர் ஆலயத்தை பராமரித்து வருகிறார். இந்நிலையில், ஆலய நிலத்தை மீட்க வீட்டு வசதி வாரியம் வழக்கு தாக்கல் செய்தது. அதை எதிர்த்து பொதுமக்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆலயம் இருக்கும் நிலத்தை மீட்க வீட்டுவசதி வாரியத்துக்கு கோர்ட் அனுமதி அளித்தது.

இதையடுத்து ஆலய நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் வீட்டு வசதி வாரியம் இன்று இறங்கப் போவதாக தகவல் பரவியது. இதனால் ஆலயத்துக்கு முன்பு 500க்கும் அதிகமானோர் கூடினர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

பொதுமக்கள் என்ற பெயரில் பொய்களைப் பரப்பும் ஊடகங்கள்: சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை எதிர்த்து பொதுமக்கள் வழக்குத் தொடர்ந்தனர் என்று ஒரு ஊஉடகம் கூறுகிறது. இன்னொரு ஊடகம் பொதுமக்கள் இந்த வாரம் பரிசுத்த வாரம் என்றேல்லாம் குறியுள்ளதாகக் கூறுகிறது. ஆனால், டிவி-செனல்களோ, அந்த பாதிரிகளே அவ்வாறு கூறுவதைப் போலக் காட்டியுள்ளனர். எதிர்ப்பு வலுப்பதால் ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினருடன் மாநகராட்சி மண்டல செயற்பொறியாளர் புகழேந்தி, உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியன், வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளர் அருணாச்சலம், உதவி பொறியாளர் கலாமணி, போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் அரி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் கொடுங்கையூரில் உள்ள திருமண மண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பொதுமக்கள் கூறுகையில், “இது கிறிஸ்தவர்களின் பரிசுத்த வாரம். இந்த வாரத்தில் ஆலயத்தை இடிக்கலாம் என தீர்ப்பு வந்திருப்பது வேதனைக்குரியது. ஆலயத்தை இடிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆலயம் உள்ள நிலத்தின் மதிப்பு எவ்வளவோ அதை ரொக்கமாக கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்றனர். சமரச பேச்சுவார்த்தையின் முடிவில் ஆலய நிர்வாகிகளுக்கு 10 நாள் அவகாசம் கொடுப்பது என்றும் அதன்பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது என்றும் அதிகாரிகள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டது.

சர்ச்கள் கட்ட சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கே எங்களது ஓட்டு[4]; சென்னை : “தமிழகத்தில் ‘சர்ச்’கள் கட்ட சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கே, எங்களது 50 லட்சம் ஓட்டுக்கள் போடப்படும், ” என, இந்திய சுயாதீன திருச்சபைகளின் மாமன்ற தலைமை பேராயர் பிரகாஷ் கூறினார்.சர்ச் கட்டும் விவகாரத்தில் கிருத்துவர்கள் சுத்தமாக இல்லை என்று பலமுறை வெளிப்பட்டுள்ளது[5]. நில ஆக்கிரமிப்பு, நில மோசடி என்ற விவகாரங்களில் அதிக அளவில் பிஷ்ப்புகள், பாதிரிகள் ஈடுபடுவது[6] மற்றும் அதனை சட்டத்தை அமூலக்கப்படவேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளமல் இருப்பது அல்லது அவர்களுக்கே ஒத்துழைப்பது முதலியன இவர்களுக்குள் இருக்க நெருக்கம் மற்றும் கூட்டுக் கொள்ளைகளைத்தான் காட்டுகிறது[7].

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை[8] சொல்வது எஸ்ரா சற்குணம்! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[9]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[10] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்!

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு  அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்! திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[11]– அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்! திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது!

வேதபிரகாஷ்

20-04-2011


[4] தினமலர், சுயாதீன திருச்சபைகளின் மாமன்றம் அரசியல் கட்சிகளுக்கு நிபந்தனை, பிப்ரவரி 27,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=196132

[6] வேதபிரகாஷ், நில மோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடிரூபாய்மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம்ரூபாய்க்குவிற்றுள்ளதாக குற்றச்சாட்டு!,https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/

[7] வேதபிரகாஷ், நிலமோசடியிலிருந்து முறைகேடு வரை: பிஷப்புக்கள் அளிக்கும் விளக்கம்!,https://christianityindia.wordpress.com/2010/09/27/land-grabbing-scam-explanations-given-by-the-bishops/

[8] வேதபிரகாஷ், நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை  சொல்வது எஸ்ரா சற்குணம்!,https://christianityindia.wordpress.com/2010/09/27/nothing-illegal-in-encroaching-land-for-church/

[9] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches ofIndia, 1974,Madras, p.97.

[10] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[11] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches ofIndia, 1974,Madras, pp141-142.

எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்சாரம் (3) !

ஏப்ரல் 11, 2011

எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்சாரம் (3) !

“ஓபஸ் தேவ்” – இந்தியாவில் எப்படி பரவியுள்ளது?: கத்தோலிக்கக் கிருத்துவம் ஏற்கெனெவே இருக்கும் போது, போப்பிற்கு ஆதரமாக, தீவிரமான ஒரு இயக்கத்தை ஏன் ஆரம்பிக்கவேண்டும் என்பதை கிருத்துவர்களே ஆராய்ச்சி செய்யட்டும். ஆனால், கிருதுவர்கள், இப்படி நாங்கள் எல்லோரும் “தனித்தனியானவர்கள்” என்று ஒரு பக்கம் காட்டிக் கொள்வதும், அதே நேரத்தில் நாங்கள் எல்லோருமே ஒன்றுதான் என்று, இந்திய அரசாங்கத்தின் மீது, அழுத்தம் எடுத்துவருவதும் பார்க்க நேரிடுகிறது. அப்பொழுதுதான், அஹா, இவர்கள் எல்லோரும் கிருத்துவர்களா, நமக்கு அவ்வாறு தெரியவில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி, அம்பிகா சோனி, மஹேஷ் பூபதி, என பலர் கிருத்துவர்கள் என்பது சில நேரங்களில் தான் வெளிப்படுகின்றது. அமைதியாக இருக்கும் இந்துக்கள் மீது ஆதிக்கத்தை, கிருத்துவர்க்கள் பல வழிகளில் ஏற்படுத்தும் போது தான், அவர்கள் தாங்கள் தங்களது உரிமைகளை இழந்து வருகிறார்கள் என்று உணர்கிறார்கள். அவ்வேலையில்தான், சமூகப் பிரச்சினைகள் வருகின்றன.

இந்தியாவிலும் A to Z சர்ச்சுகள் இப்படி இருக்கின்றன:

Christian Denominations in India
Church Name Population Orientation
Catholic- Latin Rite 11,800,000 Roman Catholic
Catholic- Syro-Malabar Church 3,947,396 Catholic East Syrian Rite
Malankara Jacobite Syrian Orthodox Church 900,000 Oriental Orthodox
Malankara Orthodox Syrian Church 1,600,000 Oriental Orthodox
Malabar Independent Syrian Church 35,000 Oriental Orthodox
Catholic- Syro-Malankara Church 500,000 Roman Catholics East Syrian Rite
Chaldean Syrian Church 30,000 Church of the East
Church of South India 3,800,000 Protestant
Church of North India 1,250,000 Protestant
Mar Thoma Syrian Church 900,000 (Approx) Reformed
Seventh-day Adventist Church 1,000,000 Protestant
Methodist Church in India 648,000 Protestant
Baptist 2,392,694 Protestant
Lutheran 1,267,786 Protestant
Indian Brethren 1,000,000 Protestant
Presbyterian Church of India 823,456 Protestant
St. Thomas Evangelical Church 30,000 Protestant
Worldwide Faith Missions 12,000 Protestant
Evangelical Church 250,000 Protestant
New Apostolic Church[119] 1,448,209 Protestant
India Pentecostal Church of God 600,000 Protestant
New Life Fellowship Association[119] 480,000 Protestant
Manna Full Gospel Churches[119] 275,000 Protestant
Philadelphia Fellowship Church of India[119] 200,000 Protestant
Unitarian Union of Northeast India 10,000 Unitarian
Jehovah’s Witnesses 33,089 Restorationism

உலக நாடுகள் கிருத்துவர்களுக்கு உதவுவது: உலகமயமாக்கல், தனியார்-மயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பொருளாதாரக் கொள்கைகளின் பின்னணியில், பல பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டன. ஓபஸ் தேவ் திட்டப்படி, ஐரோப்பிய நாடுகளிலினின்று, ரஷ்யா வழியாக, இந்தியாவிற்குள் 1999-1999 வருடங்களில் ஆரம்பித்து 2000-2009களில் வேறூன்ற வேண்டும் என்பதாகும். அதன்படியே, அவர்கள் தாராளமாக நுழைந்துவிட்டனர்[1]. 1993லேயே அவர்களது சர்ச் உருவவக்கப் பட்டது[2]. தில்லி மற்றும் மும்பையில் அவர்களது சர்ச்சுகள் உள்ளன[3]. சமீபத்தில் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்மீது, மிகவும் அழகான ரஷ்ய விபச்சாரிகள் வந்துள்ளனர். அவர்களில் சிலர் இந்த கத்தோலிக்கக் குழுமத்துடன் தொடர்பு உள்ளது. ஆன்மீக போர்வையில், அரசியலில் ஆதிக்கத்தைச் செல்லுத்துவது அவர்களின் முக்கியக் குறிக்கோள் என்று தெர்கிறது. சென்னையில், கத்தோலிக்கர்கள் நேரிடையாகவே செயல்பட்டு வந்தனர், வருகின்றனர். ஆனால், திராவிட கட்சிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின், இந்தியாவில் மற்ற பகுதிகளில் அல்லது மத்திய அரசில் ஏற்படுத்தும் தாக்கம், அசாத்தியமாக உள்ளது. சோனியா மெய்னோவின் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், திராவிடக் கட்சிகளின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. 2-ஜி விவகாரம் ஊழலப் பற்றி மட்டும் அலசும் நேரத்தில், மற்ற பரிமாணங்களை மறந்து விடுகின்றனர். ஆந்திராவில், சாமுவேல் ராஜரேகர ரெட்டி காலத்தில் தான், அதிகமாக சர்ச்சுகள் கட்டப் பட்டன. அதே ரீதியில் தமிழகத்திலும் ஆரம்பித்துள்ளனர். சில நேரங்களில் குழப்பத்தை உண்டாக்க ஆதாரமில்லாத செய்திகளையும் பரப்பி வருகின்றனர்[4]. டா வின்சி கோட் படம் வந்தபோது, அவர்கள் அதை எதிர்த்தனர்[5].

“ஓபஸ் தேவ்” செயல்படுகிறதா – சில உதாரணங்கள்: இருப்பினும் அத்தகைய காரியங்களை கிருத்துவர்கள் செய்யாமல் இருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்கள் செய்யும் காரியங்களே, அவர்களைத் தோலுறுத்திக் காட்டுகிறது. திருச்சியில் ஒரு பாதிரி, கன்னியாஸ்திரீயைக் கற்பழித்துள்ளார்[6]; அவர் பதவி விலக்கப்பட்டுள்ளர்; கைது செய்யப் பட்டாலும், ஜாமீனில் வெளியே உள்ளார்; திடீரென்று அவரை வெளியேற்றிய பாதிரி மர்மமான முறையில் பிணமாகக் கிடக்கிறார்; ……………….முன்பு “தாமஸ் கட்டுக்கதை” விவகாரத்திலும் இவ்வாறுதான் நிகழ்ந்தது[7]. அருளப்பா என்ற பிஷப்புதான், ஆச்சார்ய பால் என்ற நபருக்கு லட்சக் கணக்கில் (இன்று அது கோடிக்கணக்கில் மதிப்பு இருக்கும்) பணத்தைக் கொடுத்து போலி ஆராய்ச்சி செய்ய ஊக்குவித்தவர்; ஆனால் அவரே 1985-89களில் தன்னை ஏமாற்றிவிட்டதாக வழக்குத் தொடர்ந்து, பிறகு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்கின்றனர்; அருளப்பா இறக்கிறார், அந்த ஆச்சாரய பால் எங்கு சென்றார் என்று தெரியாமல் போகிறது. இப்படி மர்மங்கள், சந்தேகமான இறப்புகள், பணப்பட்டுவாடா, என்று திரைப்படங்களில் வருவதைப் போன்றே நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இருப்பினும் மக்கள் இவைப் பற்றி கண்டுகொள்வதில்லை, கவலைப்படுவதில்லை.

கிருத்துவர்களுக்கு சாதமாக எடுக்கப் பட்டுள்ள காரியங்கள், சட்டமீறல்கள் முதலியன: ஜனநாயக முறைக்கு விரோதமாக, மதசார்பின்மையை காலின்கீழ் போட்டு மிதித்து, இந்து கடவுளர்களை தூஷித்து, இந்துக்களின் மங்களைப் புண்படுத்தி, கிருத்துவர்களுக்கு சாதகமாக செய்துள்ள வேலைகள்:

 • “ஜீஸஸ் கிரைஸ்ட் – சூப்படர்ட் ஸ்டார்”, “டெம்ப்டேஷன்ஸ் ஆஃப் தி கிரைஸ்ட்” (கிருத்துவின் ஏக்கங்கொண்ட ஆசைகள், Temptations of the Christ), “தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் தி கிரைஸ்ட்” (The Last Temptation of the Christ) கிருத்துவின் கடைசி ஏக்கங்கொண்ட ஆசை), “டா வின்சி கோட்” (Davinci Code), “ஏஞ்செல்ஸ் அண்ட் டிமென்ஸ்” (Angels and Demons) திரைப்படங்களை தடுத்தது / தடை விதித்தது.
 • விநியோகஸ்தர்களுக்கு பணம் கொடுத்து, அவற்றை வெளியிடாமல் தடுத்தது.
 • கிருத்துவத்தை விமர்சித்து வரும் புத்தகங்கள் தமிழகத்திற்கு வராமல் தடுப்பது, வந்தாலும் பிரபலப் படுத்தாமல் அமுக்கிவிடுவது[8].
 • புதிய சமூக பைபிள்[9] என்ற பெயரில் (The New Community Bible – Catholic edition) உள்கலாச்சாரமயமாக்கல் என்ற திட்டத்தின்கீழ் வெளியிடப் பட்ட பைபிளின் விற்பனையைக் கட்டுப் படுத்தியது, நிறுத்தியது.
 • தொடர்ந்து தாமஸ் கட்டுக்கதை பரப்புவதற்கு எல்லாவழிகளிலும் உதவுவது.
 • கிருத்துவர்களின் பெரிய தொழிற்சாலை, வியாபார நிறுவனங்கள், முதலியவை நேரிடையாகவும், மறைமுகமாகவும் (அரசு சாரா நிறுவனங்கள் மூலம்) நிதியுதவி செய்து வருவது.
 • ஊடகங்களில் அளவிற்கு அதிகமாக கிருத்துவர்களின் ஆதிக்கம் இருப்பது[10].
 • கிருத்துவர்களுக்கு பாதகமான இருக்கும் செய்திகளை வரவிடாமல் தடுப்பது
 • சட்டவிரோதமாக, நிலங்களை சர்ச் கட்டிக் கொள்ள கொடுப்பது[11], புறம்போக்கு நிலங்களில் கட்டுவதை தடுக்காமல் இருப்பது, மாறாக மின்சாரம், தண்ணீர் இணைப்புகள் கொடுத்து, பிறகு பட்டாவையும் கொடுத்து, சரிசெய்வது[12].
 • இப்பொழுது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் உள்ள நிலங்களை, கல்லறைகளுக்கு என்ற போர்வையில் தாரை வார்த்துக் கொடுப்பது.
 • அவர்களது கடவுளர்கள் பாரபட்சமற்றவர்கள், சாதி போன்றவை அவர்கள் மதங்களில் இல்லை என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு, பிறகு சாதி ரீதியில் இட ஒதுக்கீடு- உள்-ஒதுக்கீடு என்றெல்லாம் கேட்பது, கேட்டு வருவது முதலிய செய்கைகள்.

மதசார்பற்ற நாட்டில், மதத்தின் பெயரால் ஓட்டுக் கேட்கலாமா, கூடாதா: மதசார்பற்ற நாட்டில், மதத்தின் பெயரால் ஓட்டுக் கேட்கலாமா, கூடாதா என்ற நுணுக்கத்தை சட்ட மேதைகள் தான் சொல்ல வேண்டும். முஸ்லீம்கள் மற்றும் கிருத்துவர்கள் இப்படி வெளிப்படையாக பலமுறை பேரம் பேசியே, ஓட்டுப் போடுகின்றனர்[13]. தமக்கு ஏதாவது சலுகைக் கொடுக்கப் படவேண்டும். அப்படி வாக்குறுதி கொடுத்தால், ஓட்டுப் போடத் தயாராக உள்ளார்கள்[14]. இப்பொழுதெல்லாம், அவர்கள் தேர்தல் அறிக்கையிலேயே, அத்தகைய வாக்குறுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கருணாநிதி எப்பொழுதுமே, தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இந்துக்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணம், அவர்களை அவமதிக்க, தூஷிக்க, அவதூறு பேச, கேலி-கிண்டல் செய்யத் தான் ஞாபகம் வருகின்றது. மற்ற நேரங்களில், அவர்களைப் பற்றிய கவலையே இல்லை. இந்த உண்மையினையும் கவனிக்க வேண்டியுள்ளது.

நுகர்வோர் என்ற முறையில் மக்கள் மீது இப்படி நிகழ்ச்சிகள் சுமத்தப் படலாமா? சன்-கலைஞர் டிவி செனல்கள் எல்லாமே, பொழுதுபோக்கு சாதனங்களாக இயங்கி வருகின்றன. ஆனால், இப்பொழுது, தேர்தல் பிரச்சாரத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது, கேபிள் கனெக்ஸன் வைத்திருப்பவர்கள் மீது இத்தகைய செனல்கள் மற்றும் அத்தகைய நிகழ்ச்சிகள் திணிக்கப்படுகின்றன. பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறார்கள். அப்பொழுது தான், இத்தகைய பாரபட்சத்தனம், ஜனநாயக விரோதத்தனம், முதலியவை வெளிப்படுகின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்த கட்டுரை.

வேதபிரகாஷ்

10-04-2011


[5] Opus Dei (The Work of God), which claims 85,000 members in 60 countries, is a theologically conservative movement that seeks to integrate religion into daily life. It was much admired by the late Pope who canonised its Spanish founder. Dan Brown’s depiction of Opus Dei is factually inaccurate: the organisation does not, for example, admit monks, though many of its lay members do live in communities. But its secrecy and allegedly cult-like methods and practices have made it a target for criticism long before the publication of The Da Vinci Code. Opus Dei members were appalled by its portrayal in the book as a murderous global conspiracy. But shortly before the release of the film, its leader, Monsignor Javier Echevarria, claimed Brown had done it more good than harm.He told the Italian daily Corriere della Sera last May that interest in Opus Dei had soared since the publication of the nove.

http://www.hindu.com/2007/02/18/stories/2007021801291800.htm

http://www.hinduonnet.com/fr/2006/05/26/stories/2006052600640200.htm

[6] திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி விவகாரம்.

[7] என்னுடைய “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகத்தைப் பார்க்கவும்.

[8] குறிப்பாக ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து என்பவர் சரித்திர ரீதியில் இருந்ததே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் இந்தியாவில் வரவிடாமல் தடுத்துள்ளனர்.

[9] இப்பைபிள், இந்துக்களைக் கவருவதற்க்காக வெளியிடப் பட்டது. ஆனால், கிருத்துவர்களே அதைப் படித்து பயந்து விட்டார்கள். ஏனெனில், அதில் கொடுக்கப் பாட்டிருந்த வேதம், உபநிஷத சுலோகங்களின் உண்மையினை அறிந்து எங்கு கிருத்துவர்களே, மனம் மாறிவிடுவார்களோ என்று பயந்து, எல்லோரிடமும் அவை செல்லாதவாறு தடுத்து விட்டனர்.

[10] இதை பலவிதங்களில் தெரிந்து கொள்ளலாம் – “நீயா, நானா?” நிகழ்ச்சிகள் பற்றி சமீபத்தில் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

[12] அச்சிறுப்பாக்கத்தில் ஒரு குன்றை ஆக்கிரமித்து, சிலுவையை நட்டு, பிறகு அங்கு ஒரு சர்ச்சைக் கட்டி, குறுகிய காலத்தில், அதனை ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றி விட்டனர். புகார்கள் கொடுக்கப் பட்டிருந்தாலும், அதிகாரிகள் எல்லா வழிகளிலும், கிருத்துவர்களுக்கு சாதகமாகவே செயல்படூள்ளனர். இதற்கான பணம் எப்படி, எங்கேயிருந்து வந்தது என்று விசாரிக்க வேண்டும்.

எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்சாரம் (2) !

ஏப்ரல் 11, 2011

எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்சாரம் (2) !

பிஷப்புகளின் போலிவேடம்: கிருத்துவ பிஷப்புகள் தங்களுடைய செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றைப் பற்றி பேசாதது, பிஷப்புகளின் பணக்கையாடல்கள், ஊழலைப் பற்றி மூச்சுக் கூட விடாதது வியப்பாகத்தான் இருந்தது[1]. அதே நேரத்தில் ஊழல், ஊழல் ஒழிப்பு முதலிவற்றைப் பற்றி மூக்குவிடவில்லை. அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தது பற்றி பேச்சில்லை. இப்படி ஊழலை முழுக்க மூழ்கவைத்து, மறைக்கப் பார்ப்பது, படு அசிங்கமாக இருந்தது. அந்த பிஷப்புகளுக்கு அங்கிகளும், குல்லாக்களும் ஒரு கேடா என்று தோன்றியது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான், இந்த சின்னப்பா பிஷப் ஒரு டிவி செனல் நிருபரை அடித்து, அவரது கேமராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டார்[2]. ஆனால், இன்றோ ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி உட்கார்ந்து கொண்டு, பொய்மாலங்களை – தொழிற்துறை வளர்ச்சி என்றெல்லாம் – அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்.

மதசார்பின்மை என்று பேசிக்கொண்டு, இப்படி மிகவும் மோசமாக, வெளிப்படையாக, கிருத்துவர்களுக்குச் சாதகமாக திமுக நடந்து கொள்வதும், அதற்கேற்றார்போல கிருத்துவ பிஷப்புகள் பேசுவதும், நடந்துகொள்வதும், செக்யூலரிஸத்தையே கேவலப்படுத்துவ்வது, கொச்சைப்படுத்துவது, ஆபாசப்படுத்துவது போல இருக்கிறது. மேலும் வேடிக்கையென்னவென்றால், முஸ்லீம்களை – அவர்களது பல பிரிவுகளை – சுன்னி, ஷியா, போரா, அஹ்மதியா, …………. – வைத்துக் கொண்டு, இத்தகைய நிகழ்ச்சியை நடத்தாதது, பல கேள்விகளை எழுப்புகின்றன.

பரிசுத்த ஆவி, கருணாநிதி அல்லது சோனியா – யார் இவற்றை ஊக்குவிப்பது? மேலும் கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்[3]. பாலியல் குரூரங்களில் மேல்நாடுகளையே வென்றுவிடும் அளவிற்கு காமக்களியாட்டங்கள்[4], மோக வெறியாட்டங்கள்[5], பலபாலியல் வன்புணர்ச்சிகள்[6], ஒருபால் கலவிகள், கற்ப்பழிப்புகள், கொலைகள், மர்மமான இறப்புகள்[7] என்று ஈடுபட்டு வந்தது யாருடன் ஆசியில்? பரிசுத்த ஆவிதான் அவ்வாறு செய்யத்தூண்டியதா? முடிவில், கன்னியாஸ்திரீக்களே பொறுக்க முடியாமல் புகார் செய்துள்ளனர். அதன்படி, பல பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • எல்லாமே கருணாநிதியின் ஆட்சியில்தான் நடந்துள்ளன. அதாவது, கருணாநிதி இத்தகைய மாபாதகக் குற்றங்களுக்கு துணைபோகிறாரா?
 • பரிசுத்த ஆவித்தான் அவரைப் பிடித்து அவ்வாறு இருக்கச் செய்கிறாதா?
 • அப்படியென்றால், கருணாநிதி இல்லையென்றால், ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் என்பது லட்சக்கணக்கில் இருக்குமா? இப்பொழுதே, பல குற்றங்கள், கொலைகள் முதலியவை மூடி மறைக்கப் படுகின்றன.
 • இவற்றிற்கெல்லாம் கூட பரிசுத்த ஆவிதான் உதவியதா அல்லது கருணாநிதி ஆட்சி உதவியதா?
 • இல்லை, தில்லியில் சோனியா மெய்னோ மூலம் ஆவி கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறதா?

கருணாநிதி ஆட்சியில் கிருத்துவர்கள் அதிகமாக செக்ஸ்-கொலைக் குற்றங்கள் செய்வது ஏன்? செக்ஸ்-பாலியல் வக்கிரங்கள், சிறுவர்-சிறுமியர் வன்புணர்ச்சிகள், ஆபாசப்படங்கள் (புளு பிலிம்) எடுப்பது, இணையத்தளங்களில் ஏற்றுவது முதலிய அக்கிரமமான, கொடூரமான, குரூரமான குற்றங்களில் ஏன் ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் ஈடுபடவேண்டும்? கருணாநிதி ஆட்சி செய்கிறார் என்ற தைரியமா? இல்லை கத்தோலிக்க சோனியாவே மத்திய அரசை ஆட்டிவைக்கிறார் என்ற ஆணவத்தினாலா? ஏற்கெனெவே, ஹோசூர் டோரதி, மும்பை அமெரிக்கப் பாதிரி, முதலிய விவகாரங்கள் அத்தகைய சம்பந்தங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. அப்படியென்றால், வாடிகனுக்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு என்ன? கத்தோலிக்கப் பாதிரி ஜெகத் காஸ்பர் மற்றும் கனிமொழிக்கும் உள்ள தொடர்பு உலகறிந்ததே. சி.பி.ஐ. அவர்களது தமிழ் மையத்திலும் ரெய்டு செய்துள்ளது. இதெல்லாம் நாடகமாக இருக்கட்டும் அல்லது சட்டம் தனது வேலையச் செய்யட்டும், செய்யாமல் நாடகம் ஆடி மக்களை ஏமாற்றட்டும். ஆனால், கிருத்துவ தொடர்புகள் அறியப்படவேண்டும்.

செக்யூலரிஸம் பேசிக்கொண்டு எப்படி முழுக்க-முழுக்க கிருத்துவர்களுக்கு சாதகமாக, ஆதரவாக, அரசாங்கம் செயல்படுத்தப்பட்டது? தமிழகத்தில், இந்தியாவில் பெருமளவில் இந்துக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கட்டுகின்ற வரிப்பணம்தான், அரசு கஜானாக்களுக்குச் பெருமளவில் செல்கின்றது. அந்நிலையில், அப்பணத்தை எப்படி சலுகைகள் என்ற போர்வையில், பாரபட்சமாக கிருத்துவர்களுக்கு, முஸ்லீம்களுக்கு மட்டும் உபயோகப் படுத்தப் படுகிறது என்ற கேள்வி எழுகின்றது. ஒரு அரசாங்க சலுகை என்றால், எல்லோருக்கும் கொடுக்கப் படவேண்டும், மதத்தின் பெயரால் அம்மதத்தவர்களுக்கு மட்டும் தான் என்று கொடுப்பதற்கு, இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் இடமில்லை. இருப்பினும், இப்படி சட்டவிரோதமான முறையில், அரசாணைகள் மூலம், உத்தரவாதங்கள், வாக்குறுதிகள் மூலம், அரசு அதிகாரிகளை வற்புறுத்தி, காரியங்களை செய்யவைப்பது போன்ற காரியங்களைத் தட்டிக் கேட்க, எல்லோரும் தயங்குவது, பயப்படுவது, அல்லது அமைதியாகவே இருந்துவிடுவது வேடிக்கையாக இருக்கிறது.

ஜனநாயகம் என்றும் பேசுகிறார்கள். இச்செயல்கள் ஜனநாயகம் ஆகுமா? இந்துக்கோவில்கள் கொள்ளையெடிக்கப் படுகின்றன, நிலங்கள்-சொத்துக்கள் அரசியல்வாதிகள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பலனை அனுபவித்து, பதிலுக்கு வாடகை-குத்தகைப் பணத்தை, கோடிக்கணக்கில் கட்டாமல் பாக்கிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம், இந்து அறநிலையத்துறை இணைத்தளத்தைப் படித்தாலே தெரியும். மக்கள் இவற்றையெல்லாம் எங்கு படிக்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் இப்படி அநியாயங்களை செய்து வருகின்றார்களா? ஆகவே இந்துக்களுக்கு எதிராக ஒருபுறத்தில் செயல்படுவது, கிருத்துவ-முஸ்லீம்களுக்கு ஆதரவாக மறுபுறத்தில் காரியங்களை செய்துவருவது என்ற போக்கு, மிகவும் மோசமான, துரோகச் செயல்களைக் காட்டுகின்றன. இங்குதான், இத்தகைய திடராவிட கட்சிகளுக்கும், கிருத்துவ இயக்கங்களுக்கும், அனைத்துலக ரீதியில் எந்த தொடர்பு, சம்பந்தம், ஒத்துழைப்பு முதலியன உள்ளன, அதற்காக என்ன பிரதிபலன்களை அடைந்து வருகிறார்கள் அல்லது பணமாகக் கொடுத்து வருகிறார்களா. அப்படி கொடுத்தால், எப்படி அவை, திராவிடக் கட்சிகளுக்கு அல்லது கருணாநிதி போன்றவர்களுக்கு சென்றடைகின்றது முதலியவற்றைக் கவனிக்க வேண்டும். ஏனெனில், கருணாநிதி போன்றவர்கள், நாத்திகம் பேசிக் கொண்டு, அரசு பலன்களை இப்படி அவர்களுக்கு, தர்மமாக-தானமாக வாரியிரைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆகவே அவர்களுடைய தொடர்புகளை வெளிப்படுத்தவேண்டியுள்ளது.

கருணாநிதி மற்ற மதத்தினரை ஏன் இப்படி கூப்பிட்டு பேசுவதில்லை, இதேபோல சமதர்மமான காரியங்களை செய்வதில்லை? சின்னப்பா தாங்கள் கருணாநிதியை பலமுறைச் சென்று பார்த்திருக்கிறோம் என்றெல்லாம் சொல்லியிருப்பதை கவனிக்கவேண்டும். வழக்கமாக பார்த்து என்ன செய்வார்கள், என்ன பேசுவார்கள்? அப்படியென்றால், அதேபோல இந்துக்களைக் கூப்பிட்டு பேசாதது ஏன்? இங்கும் சந்தேகம் எழுகின்றது. பலமுறை, மத்திய அரசு அளவில், கிருத்துவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்தாலும், தமிழக போலீஸார், அதாவது போலீஸ் துறையின் தலைவர் கருணாநிதி, மெத்தனமாகவே நடந்து கொண்டுள்ளார் என்று அப்பட்டமாகத் தெரிகின்றது. டோரதி தம்பதியர், இவரது ஆதரவு இல்லாமல், அப்படி இந்தியாவில் தங்கியிருந்திருக்க முடியாது. அவர்கள் நாடு கடத்தப் பட்டபோதும், சோனியாவை சந்திதுத்து விட்டுத்தான் செல்கின்றனர். அதாவது, அந்த அளவிற்கு தங்களுக்கு, கிருத்துவத் தொடர்பு உள்ளது, அதிகாரம் உள்ளது, ஆகையால் அரசாங்க ஒன்றும் எங்களை ஒன்றும் செய்யமுடியாது – என்பதனைக் காட்டிவிட்டுத்தான், நாட்டைவிட்டு ஓடியுள்ளனர் – நாடு கடத்தப் பட்டுள்ளனர்.

தமிழ் மையம்- கனிமொழி – காஸ்பர் ராஜ்- லயோலா கல்லூரி- ஜெசுவைட்ஸ் தொடர்புகள்: லயோலா கல்லூரி, போப்பின் உளவு பார்க்கும் மையும் போன்று செயல்படுகிறது என்றால் மிகையாகாது.

 • அங்குதான், வாடிகன் ரேடியோவே செயல்பட்டு வருகின்றது.
 • ஜெசுவைட்ஸ் இல்லம் (Jesuits House) அங்குதான் உள்ளது.
 • அது சொஸைடி ஆஃப் சீஸஸ் (Socioety of Jesus) என்ற நிறுவனத்தினரின் அங்கத்தினர்கள் பிரத்யேகமாக தங்குமிடம் ஆகும்.
 • குறிப்பிட்ட எஸ்.ஜெக்கள் வந்து தங்கிய பிறகு[8], சில குறிப்பிட்ட தீர்மானங்கள் எடுக்கப் படும். அவற்றை கருணாநிதி தப்பாமல் செய்து வந்துள்ளார்.
 • இக்கல்லூரியில் படித்து, இன்று அரசியல்-சித்தாந்தம்-வியாபாரம் என்ற பலநிலைகளில் நண்பர்களாக, கூட்டாக செயல்படுபவர்களாக பல பிரபலங்கள் உள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிருத்துவ அபிமானிகள் (Christian sympathaizers), ரகசிய கிருத்துவர்கள் (Crypto-Christians) ஆவர் [உதாரணத்திற்கு சிலர் – என். ராம், பிரகாஷ் காரத், கலாநிதி மாறன்[9], சரத்குமார் ரெட்டி, கே. சந்துரு[10], ……..].
 • ஓட்டுக்கள் எண்ணுவதும் அங்குதான்,
 • கருத்துக் கணிப்பு நடத்தி இந்த கட்சி வெல்லும் என்று ஆரூடம் கூறுவதும் அங்குதான்.

இந்நிலையில் தான், ஜகத் காஸ்பர் என்ற பாதிரிக்கு, அளவிற்கு அதிகமாக இடம் கொடுக்கப் படுகிறது. “தமிழ் மையம்” என்ற நிறுவனம் துவங்கப்பட்டு, அதில் கனிமொழியும் இயக்குனராக இருக்கிறார். “சென்னை சங்கமம்” நிகழ்ச்சிகள் நடத்த, இந்த மையத்திற்கு உரிமைக் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் கிருத்துவர்கள்தாம். ஒளிபரப்பும் கனிமொழி பங்குதாரராக உள்ள கலைஞர் டிவிக்குத்தான். இதனால்தான், 2-ஜி வழக்கு விஷயத்திலும், தமிழ் மையம், சி.பி.ஐ விசாரணைக்குட்பட்டது. செம்மொழி மாநாட்டிலும், கிருத்துவ நிறுவனங்களுக்கு தாராளமாக ஆர்டர்கள் கொடுக்கப் பட்டன. ஆன்டோ பீட்டர், முதலியோர் அமைதியாக பலவேலைகளை செய்தனர். லெனின் குருப்பும் இங்குதான் வருகிறான். கிருத்துவ சார்புள்ள “நக்கீரனும்” வருகிறான். அதனால்தான், நக்கீரன் அலுவலகத்திலும் ரெய்ட் நடந்துள்ளது. கோடிகளை அள்ளினர். இப்படி பரஸ்பர பண ஆதாயத்துடன் கூடிய நிகழ்ச்சிகளை நடத்துவதுதான், திமுகவின் காரியமாக-செயல் திட்டமாக இருந்து வந்தது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்து பேராசிரியர் வருகையும், கிருத்துவ அடிப்படைவாதம் அதிகமாதலும்: ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட பாதிரி-முனைவர் வருடத்திற்கு ஒருமுறை தமிழகத்திற்கு வந்து, சென்னையில் வந்து தங்கிவிட்டுச் செல்கிறார். அவ்வாறு அவர் வந்துவிட்டுச் சென்றதும், குறிப்பாக சில நிகழ்ச்சிகள் தமிழகத்தில் ஏற்படும். ஆனால் உன்னிப்பாக கவனித்தால், அதன் பின்னணியில் கிருத்துவர்களின் அடிப்படைவாதம், தீவிரவாதம் தான் வெளிப்படும். ஆனால், ஆளும் திமுகவினரை வைத்துக் கொண்டு, சாதகமாக, கிருத்துவர்கள் சில வேலைகளை பூர்த்திச் செய்து கொள்கின்றனர். இங்குதான், பலதரப்பட்ட பிரிவுகள் எதிராளிகள் போல இருந்தாலும், ஒன்றாகச் செயல்படுகின்றனர்.

கிருத்துவ “ஓபஸ் தேவ்” செயல்திட்டங்கள்: சொஸைடி ஆஃப் சீஸஸ் (Socioety of Jesus) என்ற நிறுவனத்திற்கு அடுத்து அல்லது அதைவிட தீவிரமாக செயல்படும் ரகசியக் கூட்டம் / குழுமம் “ஓபஸ் தேவ்” (Opus dei) என்று அழைக்கப் படுகிறது. இந்த குழுமங்களின் அங்கத்தினர்கள், ரகசிய-பிரமாணத்தை எடுத்துக் கொண்டுள்ளவர்கள், கத்தோலிக்கக் கிருத்துவத்தைக் காப்பாற்ற எதையும் எப்படியும் செய்யத் தயங்காதவர்கள். பலநேரங்களில் இக்குழுமங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள், தாங்கள் அவர்களுக்காக வேலை செய்கிறோம் என்றுகூட தெரியாத அளவிற்கு மற்றவர்களை தங்களது கட்டுக்குள் வைத்திருப்பர். அதாவது, சித்தாந்த ரீதியில் வேலைசெய்பவர்கள் எதிரும்-புதிருமாக செயல்பட்டால், அவர்களைத் ஊக்குவித்து / தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பர் அல்லது அவ்வாறு அவர்கள் மோதிக் கொண்டிருந்தால், தங்கள் திட்டங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்றால் அவர்களை சேர்த்து வைப்பர். இவ்வாறு மனோதத்துவ ரீதியில், கவனமாக, தீரச்சிந்தித்துச் செயல்படுவார்கள். அதுமட்டுமல்லாது, அவ்வாறு வேலைசெய்பவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப் படுவர்; வேண்டும்போது உதவிசெய்வர்; இல்லை தேவைப் பட்டால் அவர்களை தீர்த்தும் கட்டுவர்.

கிருத்துவத் திரைப்படங்கள் ஏன் தடை செய்யப் படுகின்றன? அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை கீழ்குறிப்பிட்ட திரைப்படங்களில் / புத்தகங்களில் விவரிக்கப் பட்டுள்ளன. புத்தகங்களைவிட, திரைப்படங்களின் தாக்கம் அதிகமாகும். அதிலும், சுவாரஸ்யமான, திகிலூட்டும், மர்மங்கள், கொலைகள் நிறைந்த திரைப்படங்கள் மக்களை வெகுவாகவே கவரும். சமீபத்தில், ஆங்கிலப்படங்களை தமிழில் உரையாடல்களை வைத்து வெளியிடுகிறார்கள். இவை சாதாரண மக்களிடம் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. அப்படி தமிழில் வசனங்கள் இருக்கும்போது, மக்கள் கதையினை, உண்மைகளை எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள். அந்நிலையில், கிருத்துவர்களுக்குப் பாதகமாக உள்ள கீழ்கண்ட படங்கள் வெளிவந்தால், மக்கள், கிருத்துவத்தின் கொடூர-குரூரத் தன்மையினைத் தெரிந்து கொண்டு விடுவார்கள் என்று பயந்துதான், ஆதிக்கச் சக்திகள் அவற்றை வரவிடாமல் தடுத்துள்ளன.

வேதபிரகாஷ்

10-04-2011


[2] சின்னப்பாவின் மீது தொடுக்கப் பட்டுள்ள வழக்குகள் பற்றி, செய்திகளில் சேர்ப்பதற்காக, தில்லியிலிருந்து “டைம்ஸ்-நௌ” என்ற செனலின் நிருபர்களின் வீடியோ கேமராவைப் பிடுங்கிக் கொண்டு, ஒரு அறையில் அடைத்து வைத்ததாக புகார் எழுந்தது.

[3] இதைப் பற்றிய விவரங்களை என்னுடைய கட்டுரைகளில் விளக்கமாகப் பார்க்கலாம்:

[5] வேதபிரகாஷ், செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜிமுதல்வருக்குநிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!,https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-catholic-sex/

வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது: மற்ற பாதிரிகளுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!https://christianityindia.wordpress.com/2010/11/04/rape-accused-jesuit-gets-conditional-bail/

வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது,வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!,https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catholic-priest/

[8] பிரான்ஸிஸ் சேவியர் குளூனி, மைக்கேல் விட்செல் முதலியோர் வந்துள்ளதாகத் தெரிகிறது. அவர்களுக்கு பல இந்துக்களே உதவியாக செயல்படுவதுதான் “ஓபஸ் தேவ்” விளையாட்டு எனலாம்.

[9] கலாநிதி மாறனும், ரெட்டியும் அங்கு படித்து வந்தபோதுதான் நட்பு ஏற்பட்டது. ரெட்டியின் ஆலோசனை-திட்டத்தின்படித்தான் சன்-டிவி துவக்கப் பட்டு, பகுறிப்பாக பழைய திரைப்படங்களின் உரிமைகளை குறைந்த விலைக்கு வாங்கி, விளம்பரத்தின் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் போன்றவற்றைப் பின்பற்றப் பட்டது.

[10] திருவாளர் கே. சந்துரு, இன்று சென்னை நீதிமன்றத்தின் நீதிபதிகளுகள் ஒருவர். என். ராமின் பரிந்துரையின் மீது, குறுகிய காலத்தில் நீதிபதியானவர். ஆனால், தீவிரமான கம்யூனிஸ்டான இவர், ராமஜென்மபூமி விவகாரத்தில் சிறுபுத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, சிந்தாந்த ரீதியில் செயல்படும் நபர் என்று சுட்டிக் கட்டப் படுகிறது.

எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்சாரம் (1) !

ஏப்ரல் 11, 2011

எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்சாரம் (1) !


டிவி செனல்கள் எல்லாமே கிருத்துவர்களின் பிரச்சார பீரங்கிகளாக செயல்படும் போக்கு: சாதாரணமாகவே, தினமும் காலை ஐந்து முதல் ஆறு மணி வரை, டிவியை வைத்துப் பார்க்க நேரிட்டால், எல்லா டிவி செனல்களிலும், சொல்லி வைத்தாற்போல, கிருத்துவர்களின் மதப்பிரச்சார சொற்பொழிவுகள் நடந்து கொண்டிருக்கும். சிறுபான்மையினர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களால், எப்படி இப்படி பெருபான்மையினரயே மூழ்கடித்துவிடும் வகையில்[1], எல்லா செனல்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு, ஊழியம், விசுவாசம், திருப்பலி, பேயோட்டுதல், சகலவியாதிகளையும் போக்கும் கண்கட்டு வித்தைகள் செய்தல் என்றெல்லாம் முழுக்க-முழுக்க மதப்பிரச்சார நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்ப முடிகிறது என்பது சாதாரண மக்களுக்குப் புரியாத புதிராக உள்ளது. சாதாரணமாக, கிராமப்புறம் அல்லது புறநகர்ப் பகுதி என்றாலோ, ஒரு டீக்கடை என்றால் கூட, வேங்கடேச சுப்ரபாதம், கந்தசஷ்டி கவசம் அல்லது குறைந்தபட்சம் டி.எம்.எஸ்.சின் முருகர் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கும். பிறகு எப்படி இந்நிலை மாறுகிறது? இதெல்லாம் சமீபத்தைய போக்காகத் தெரிகிறது. நாத்திகம் பேசும் தமிழர்களுக்கு, இவையெல்லாம் எப்படி நம்புகின்றது போல இருக்கிறது என்று தெரியவில்லை.

தேர்தல் களத்திலும் கிருத்துவப் பிரச்சாரம்[2]: இவ்வேளையில் தான், தேர்தல் என்ற போர்வையிலும், கிருத்துவப் பிரச்சார யுக்திகள் மற்ற நிலைகளில் வெளிப்படுவது, மதபிரச்சாரமா, பிரச்சார விபச்சாரமா, விபச்சார அபச்சாரமா, அபச்சார தந்திரமா, தந்திர வியாபாரமா, வியாபார கூட்டணி வியூகமா என்றெல்லாம் யோசிக்க வேண்டியுள்ளது. ஒன்று அந்த அளவிற்கு லட்சங்களில், அந்தந்த செனல்களுக்கு பணத்தை வாரியிரைத்து, நேரத்தை வாங்கியிருக்கவேண்டும் அல்லது அச்செனல்களே அவ்வாறு ஒத்துழைத்து இடம் கொடுத்திருக்கவேண்டும்[3]. எப்படியிருந்தாலும் அதற்கு அப்பணத்தைக் கொடுத்தவர்கள் அல்லது நிறுவனங்கள் யார்-எவை, அவ்வாறு காலைப்பொழுதில் பிரச்சார நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதின் குறிக்கோள், பின்னணி என்ன? இவ்வாறு வலியவந்து, பெருபான்மையினரின் மீது, அத்தகைய, இந்திய கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றிற்கு சிறிதும் பொறுந்தாதவற்றைத் திணிக்கும் போக்கு எதைக் காட்டுகிறது? இதுபோன்ற இயற்கையாக எழும் கேள்விகளுக்கு விடை காணவேண்டியுள்ளது[4].

அரசியலும் மதப்பிரச்சாரத்தில் மூழ்கிவிட்ட நிலை: எஸ்ரா சற்குணத்தின் பேட்டி ஏற்கெனெவே ஒளிபரப்பு செய்யப் பட்டது. சன் செய்திகள் தொலைக்காட்சி செனல் “தேர்தல் களம்” என்ற நிகழ்ச்சியில், நான்கு கிருத்துவ பிஷப்புகளை வைத்து, ஒரு நிருபர் முன்னமே தீர்மானித்து வைத்துக் கொண்டபடி, குறிப்பிட்ட பாரபட்சமான விசயங்களைப் பற்றி தூண்டுதல் கேள்விகள் கேட்பது (asking leading questions), வலியவந்து அவரே பிஷப்புகளை குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி பேச, அவற்றை முன்வைப்பது, அவர்களும் அதற்கேற்றப்படி, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், பொய்களைக் கலந்து, பதிலளிப்பது, விவரிப்பது முதலியவை நடந்தன. ஜெயலலிதா ஆட்சியில் கிருத்துவர்களின் நிலை எப்படியிருந்தது, கருணாநிதி ஆட்சியில் அவர்களது நிலை எப்படியிருந்தது, என்ற ரீதியில் “சிறுபான்மையினரின் நலம்” என்ற போர்வையில் அதை ஒளிபரப்பினார்கள். கருணாநிதிக்குச் சொந்தமான டிவி என்றால், என்னவேண்டுமானாலும், இப்படி பொய்களை, மாய்மலங்களை, கட்டுக்கதைகளை அள்ளிவிடலாம் என்றிருப்பது ஜனநாயக முறையில் நடப்பாதாகச் சொல்லப்படும் தேர்தலையே கேவலப்படுத்துவது போல இருக்கிறது.

கலைஞர் டிவி நடத்திய பாதிரிகளின் பிரச்சாரக்க் கூட்டம்: இது 08-04-2011 (6.30 – 7.30) மற்றும் 09-04-2011 (11.30 – 12.30) இருமுறை ஒளிபரப்புச் செய்யப் பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலப்பிரிவுகளைச் சார்ந்த (denominations) பிஷப்புகள்:

 1. எஸ். கே. ஜேசுபாதம், CSI – Protestant (கத்தோலிக்க எதிர்வாதக் குழுமம்), தூத்துக்குடி
 2. கே. பி. எடிசன் – பெந்தகோஸ்தே குழுமம்
 3. சின்னப்பா, கத்தோலிக்க பிஷப், மைலாபூர்
 4. இனிகோ இருதயராஜ்.

மாறி-மாறி ஒவ்வொருவரையும், இழுத்து வைத்து கேட்டு, அவர்கள் பதில் சொல்லிய விவரங்களின் தொகுப்பாகக் கீழே கொடுக்கப்படுகிறது:

பிஷப் சின்னப்பா: இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் உள்ள பிரிவுகளைச் சுட்டிக் காட்டி, பதிலளிக்க “இந்தியா எப்படி மதசார்பற்ற நாடு” என்று ஆரம்பித்தார். 25 முதல் 30 பிரிவுகளில் மைனாரிட்டிகளுக்குள்ள உரிமைக்மைகளைப் பற்றி எடுத்துக் காட்டினார்[5], பிறகு செக்யூலரிஸத்தைப் பற்றி பொதுவாக பேசினார்.

கருணாநிதி ஆட்சியில் தமிழகம் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது, முன்னேறியுள்ளது என்று கூறிமுடித்தார்.

நாங்கள் அவரை பலமுறைச் சென்று பார்த்துள்ளோம், பேசியுள்ளோம். நாங்கள் என்றால், உடனடியாக “அப்பாயின்ட்மென்ட்” கொடுத்துவிடுவார்[6].

(தலித் கிருத்துவர்களின் நிலைப் பற்றி கேட்டபோது, அவர் முகத்தில் ஈயாடவில்லை. சட்டப்படி ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தபிறகும், உளற ஆரம்பித்தார்). சட்டப்படி முடியாது என்றாலும் கருணாநிதி பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதினார். 1950ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது என்றெல்லாம் உளறிக் கொட்டினார்[7]. அதன்படி முதலில் மதம் மாறிய சீக்கியர்களுக்கு எஸ்.சி சலுகை கொடுக்கச்ப் பட்டது, பிறகு நியோ-புத்திஸ்ட்டுகளுக்குக் கொடுக்கப் பட்டது. அதனை “கருப்பு வடு” என்றும் வர்ணித்தார்.

இந்து மதத்திலிருந்து மாறிய S.C கிருத்துவர்கள் தமிழகத்தில் B.C என்றும் M.B.C என்ற நிலையிலும் உள்ளனர். இருப்பினும் கிருத்துவ வன்னியர்கள் B.C யிலும், இந்து வன்னியர்கள் M.B.C யிலும் இருப்பதே பாரபட்சம் என்று பேசி, எரையூரில் நடந்த உண்மைகளை ஒட்டுமொத்தமாக மறைத்து பேசினார்[8]. மதம் மாறிய எஸ்.சி கிருத்துவர்களுக்கு சலுகைத் தொடர கருணாநிதி, மூன்று முறை கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்[9].

தலைவர்களைத் தேர்ந்தெடுக்க அவர்கள் சபைகளில் ஜெபித்து வருவதுண்டு, ஆனால், இம்முறை, தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவர்கள் மாறவேண்டும் என்று ஜெபிப்பதற்கு பதிலாக, நேரிடையாகவே, கருணாநிதிதான் முதல்வராக வேண்டும் என்று எல்லோரும் ஜெபிக்கவேண்டும். அதன்படியே, கிருத்துவர்கள், திமுகவிற்கு ஓட்டளிக்கவேண்டும் என்றார்.

எஸ். கே. ஜேசுபாதம், தூத்துக்குடி: (ஒரிசாவில், ஸ்டைன் என்ற பாதிரி எரித்துக் கொல்லப்பட்டார், கந்தமாலில் கிருத்துவர்கள் தாக்கப்பட்டனர், கர்நாடகத்தில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தில் நிலைமை எப்படி இருந்தது என்று பேட்டிக் கண்டவர் இழுத்தார்.)

கருணாநிதி ஆட்சியில், தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. எந்த கலவரங்கள், வன்கொடுமைகள், கோரத்தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை. கருணாநிதி திரும்பவும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற வாஞ்சை எங்களுக்கு உள்ளது என்றார்.

ஆலயம் (சர்ச்) இல்லாத இடங்களில் எல்லாம் ஆலயம் கட்டிக் கொள்ள கருணாநிதி உதவியுள்ளார். அரசு நிலமே கொடுக்கப் பட்டுள்ளது என்றெல்லாம் விவரித்தார்[10].

கே. பி. எடிசன்: மதம் மாற்றச் சட்டம் இருந்தபோது, பல அடக்குமுறைகள் செய்யப்பட்டன[11]. அச்சட்டம் நீங்க நாங்கள் இந்தியா முழுவதும் பிரார்த்தனை செய்தோம்.

மதம் மாறுவது என்பது பரிசுத்த ஆவி செய்கிறது. நான் கூட ஒரு ஆர்க்கிடெக்ட்டாக இருந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டது…… (பிரச்சார ரீதியில் அதிகமாக விவரிக்கும் போது, நிருபர் குறிப்பிட்ட விஷயத்திற்கு இழுக்கிறார்).

சர்ச் கட்டுவதற்கு கலெக்டர் அனுமதி வேண்டும் என்றமுறை இருக்கிறது. இது ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லை-புரியவில்லை. ஆனால், சமீபத்தில் அவ்வாறு தேவையில்லை என்று கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசு நிலத்தை எங்களுக்குக் கொடுத்து, அதில் சர்ச் கட்டிக் கொள்ள செய்துள்ளார்.

இந்துக்கள் காஷ்மீரத்தில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; பஞ்சாபில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; அந்நிலையில் மற்ற இடங்களிலும் துன்புறுத்தப் பட்டால், என்னவாகும் என்று யோசிக்கவேண்டும்[12].

இனிகோ இருதயராஜ்: குஜராத்தில் மோடி போன்றவர்கள் இருப்பதனால், சிறிய பிரச்சினைகள் பொறியை ஊதி பெரிதாக்குவது போல செய்யப்படுகிறது. கோத்ராவிற்குப் பிறகு, ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது, அரசு நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆகவே மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பாகவே இருந்துள்ளனர்.

11307 ஆசிரியர்கள் நியமனம்: கருணாநிதிக்கு சிறுபான்மை பிரதிநிதிகள் நன்றி  

சென்னை, மார்ச். 1- 11307 ஆசிரியர்கள் நியமனம் செய்ததிற்காக முதல்வர் கருணாநிதிக்கு சிறுபான்மை பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 1991 ஜூன் மாதத்திற்குப் பிறகு -1999 ஆம் ஆண்டு மே மாதம் வரை அரசு அங்கீகாரம் பெற்றுச் செயல்படும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 331 கோடி ரூபாய்ச் செலவில் 11,307 ஆசிரியர் பணியிடங்களையும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் அனுமதித்து முதல்-அமைச்சர் கருணாநிதி அண்மையில் ஆணை பிறப்பித்திருந்தார். இந்த ஆணையை வரவேற்று முதல்-அமைச்சர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் -தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், அப்பாவு ஆகியோரும், தமிழ்நாடு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், பேராயர் எஸ்றா சற்குணம், சென்னை- மயிலை உயர் மன்ற மாவட்ட பேராயர் ஏ.எம். சின்னப்பா, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, தமிழ்நாடு சிறுபான்மை மேம்பாட்டுக் கழகத் தலை வர் சேவியர் அருள்ராஜ் உள்ளிட்ட கிறிஸ்தவ சமுதாய பிரதிநிதிகள். முஸ்லீம் லீக் மாநில அமைப்பாளர் எம்.கே.எம். முகமது ஷபி, தென்மாவட்ட இஸ்லாமிய பேரவைச் செயலாளர் மெகபூப் அலி, விருதுநகர் மாவட்ட இஸ்லாமிய பேரவை அமைப்புச் செயலாளர் கே.எஸ். மொகைதீன் உள்ளிட்ட சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத சமுதாயத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் – இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். வன்னியர் சமூக கிறித்துவ மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைப் பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதற்காகவும்; சென்னை வாழ் கிறித்துவ மக்களுக்காக, பழைய மாமல்லபுரம் சாலை, காரப்பாக்கம், தென் சென்னை, வடசென்னை ஆகிய 4 இடங்களில் கல்லறைத் தோட்டங்கள் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கித் தந்தமைக்காகவும் தங்களது நன்றியைத் தெரிவித்தனர். சிறுபான்மை மக்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிற முதல்- அமைச்சர் கருணாநிதிக்கும் தமிழக அரசுக்கும் தாங்கள் தொடர்ந்து ஆதரவு நல்குவதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி கிருத்துவர்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார்கள்.

(எந்த ஐரோப்பிய நாட்டிற்கும் கிடைக்காத பாக்கியம், ஜெர்மனி போன்ற நாடுகளுக்குக் கிடைக்காத சிலாக்கியம் சென்னைக்குக் கிடைத்துள்ளது. புனித தாமஸ் சென்னைக்கு வந்துள்ளார் என்று நிருபர் “தாமஸ் கட்டுக்கதையை”அவிழ்ந்துவிட்டதும்[13], எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இவர் அளந்து கொட்ட ஆரம்பித்து விட்டார்). கிபி 52க்கு வந்தார்…………..வந்ததாக வரலாறு………………….(என்று கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்)[14]. 2000ல் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பரங்கிமலை என்ற பெயரை “புனித தாமஸ்மலை” என்ற பெயர் மாற்றம் செய்தார். இந்த வருடம் 2011 ஜனவரி 8ம் தேதி, அகில் இந்திய கத்தோலிக்க பிஷப் மாநாடு[15] நடந்தபோது, ஸ்டாலின் மற்றும் கருணாநிதியைப் பார்த்து கேட்டதும், அது தேசியத் திருத்தலம் மற்றும் சுற்றுலாத்தலம் என்று அறிவிக்கப் பட்டது.

கிரீன்வேஸ் சாலை, டி.ஜி.எஸ். தினகரன் சாலை என்று பெயர் மாற்றப்பட்டது. அவர் இறந்ததற்காக சட்டசபையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செய்யப்பட்டது[16]. இதையெல்லாம், நாங்கள் கேட்காமலேயே கருணாநிதி செய்துள்ளார்.

வீரமாமுனிவருக்கு, இலயோலாக் கல்லூரியில் இருக்கும் ஜெசுவைட்ஸ்களின் வேண்டுகோளிக்கிணங்க, விழா நடத்தப் பட்டது[17].

கால்டுவெல் வாழ்ந்த வீடு நினைவிடமக மற்றப்பட்டது.

இந்தியாவில் எந்த மாநிலமும் கொண்டாடாத நிலையில், ஏன் மேற்கு வங்க அரசே செய்யாத நிலையில்[18], தமிழகத்தில் அரசு தரப்பில் அன்னை தெரசா நுற்றாண்டு விழா நடத்தப் பட்டது. வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள கைவினைஞ்சர் கட்டடத்திற்கு அன்னை தெரசா பெயர் சூட்டப்பட்டது.

ஒருமுறை ஒரு கிருத்துவக் குழந்தை இறந்தவுடன், அதனை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையை ஸ்டாலினிடம் சொன்னவுடன், காரப்பாக்கத்தில் நான்கு ஏக்கர் நிலத்தை கல்லறைக்குக் கொடுக்க மேயர்  மூலம் ஏற்பாடு செய்தார். ஐ.டி. பார்க்கு உள்ள அந்த இடத்தில் இப்பொழுது, ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ. 10 கோடிகளாகும்[19]. ஆனால், அரசு கிருத்துவர்களுக்காக, இலவசமாகவே கொடுத்துள்ளது. இதே மாதிரி நிலம் பல்லாவரம், நாமக்கல் முதலிய இடங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தம்மா போப்பை விமர்சித்துள்ளது. மதமாற்றச் சட்டம் மனித உரிமைகளை மீறக்கூடியது என்று போப் சொன்ன்னபோது, அவர் இந்திய உள்விவகாரங்களில் தலையிடுகிறார், அது அவருக்கு அழகல்ல, என்று பேசியது[20].

நிருபர் முடிவாகச் சொன்னதும் திட்டமிட்டு செய்த பேட்டியே (stage-managed) என்று தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டியது. “ஆயர்களுக்கு எவ்வளவோ இறைப்பணி இருந்தாலும், இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளார்கள். அவர்கள் சொன்னதை மக்கள் கவனமாகக் கவனித்து, ஆழ்மனங்களில் பதிவு செய்து கொள்ளாவேண்டும். பிரார்த்திக்கவேண்டும். அப்பிரார்த்தனை, ஓட்டாகமாறி, வெற்றிப்பெறச் செய்யவேண்டும்”, என்றுவேறு இவரே முடிவில் பரிந்துரைக்கிறார்.

வேதபிரகாஷ்

10-04-2011


[1] மனோதத்துவ முறையில், இவையெல்லாம் பொருட்களை விற்க்கும் ரீதியில் உள்ளன. எல்லோருக்கும் மற்ற வசதிகள் உள்ளனவோ இல்லையோ, டிவி வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இலவச டிவி என்று வேறு கொடுக்கிறார்கள். ஆனால், தனியார்மயமாக்கத்திற்குப் பிறகு, இந்த டிவி செனல்களில் எந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்பலாம் என்பதில், அரசு தலையீடு இல்லாததால், பணம் இருந்தால் போதும், எந்த நிகழ்ச்சியையும் ஒளிபடப்பலாம் என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது.

[2] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது…… ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (2)!.,https://christianityindia.wordpress.com/2010/12/25/elections-change-tn-politicians-change-ideology-also/

[2] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது…… ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (3)!.,https://christianityindia.wordpress.com/2010/12/25/591/

[3] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (1)!,https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebration/

https://christianityindia.wordpress.com/2010/12/25/appeasing-christians-dravidian-way/

[3] “சம்ஸ்கார்” என்ற பிரபலமான, பலரால் பார்த்துவந்த செனல் “பே-செனலாக்க”ப் பட்டது, அதாவது பணம் கொடுத்தால் தான், அந்த செனலை பார்க்கமுடியும்.

உத்திரபிரதேசத்திலிருந்து, வந்து இந்துக்களுக்காக என்று ஒரு சேனலை ஆரம்பிக்க வந்தவர்களிடம் ரூ.40 லட்சம் கேட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.

ஆனால், அதே நேரத்தில், கிருத்துவர்களின் பிரச்சார செனல்கள் அதிகமாவதுடன், மற்ற பிரபலமான செனல்களிலும், முக்கியமான நேரத்தில், அவர்களது பிரச்சார நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

[4] பலமுறை, கிருத்துவர்களின் அனைத்துலக மதம் மாற்றத்திட்டங்கள் – ஜோஸுவா திட்டம், அறுவடை 2010 திட்டம், ஏசு உலகத்திற்கே என்பனவற்றைப் பற்றி – அந்தந்த இணைத்தளங்களே, தங்களது செயல்திட்டங்களைப் பற்றி விவரித்துள்ளன. ஆகவே, இவற்றின் மூலம் பணம் பட்டுவாடா நடக்கிறது என்பது திண்ணம். சமீபத்தில் ஆயிரக்கணக்கான அயல்நாட்டு கம்பெனிகள் இந்தியாவில் தொழில் துவங்க ஆரம்பித்துள்ளன. அவற்றின் மூலமாகவும் பணம் கொடுக்கப்படுகின்றது.

[5] இந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், எப்படி கிருத்துவ, முஸ்லீம் மற்றும் இதர சிறுபான்மை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முதலியவற்றை ஒப்பிடும்போது, பாரபட்சமாக்கப் படுகின்றன முதலியவற்றைப் பற்றி மூச்சுவிடவில்லை.

[6] அத்தகைய ரகசிய பந்தத்தை-உறவின் தன்மையினை அறிந்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

[7] The Scheduled Caste Presidential Order 1950 என்பதைத்தான், அவர் சட்டம் என்று குறிப்பிட்டது. இது இந்துக்களுக்காக ஏற்படுத்தப் பட்டதே தவிர மற்றவர்களுக்கு அல்ல. சீக்கியர்களுக்கு, நியோ-பௌத்தர்களுக்கு அளிக்கப் பட்டது என்றால், பிரிவு 25ன் படி அவர்கள் “இந்துக்கள்” என்ற தொகுப்பில் வருகிறார்கள். ஆகவே, இந்துக்களாக இருப்பவர்களுக்கு அந்த தகுதி உள்ளது. ஆகவே, மதம் மாறியவர்கள் அட் ஹ்தகைய இட-ஒதுக்கீட்டு சலுகையைக் கேட்பது அர்த்தமே இல்லை.

[8] எரையூர் என்ற இடத்தில் வன்னியர்களுக்குள், சிலர் கிருத்துவ மதம் மாறியதால், பிரச்சினை ஏற்ப்பட்டது. ஜாதி ரீதியாக எப்படி, அதிகாரத்தில் உள்ள கிருத்துவர்கள், மற்றவர்களை அடக்கி ஆள்கிறார்கள், பலன்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதனை எதிர்த்து போராடிய போது, கிருத்துவர்களின் போலித்தனம் உலகத்திற்கே தெரியவந்தது. இருப்பினும், அது மற்ற ஜாதி-மோதல்கள் போன்று ஊடகங்களில் காட்டி, மக்களை கிருத்துவர்கள் ஏமாற்றினர்.

[9] மூன்று முறை அல்ல, மூன்று கோடி முறை எழுதினாலும், எந்த பிரயோஜனமும் இல்லை என்பது உலகத்திற்கே தெரியும். இருப்பினும், இப்படி கிருத்துவர்கள் நாடகம் ஆடிவருவது நோக்கத்தக்கது.

[10] முதலில் கேட்பவர்களுக்கு “ஆலயம்” என்பதும் சந்தேகம் வந்தது, பிறகுதான், நன்றாகவே புரிந்தது, அவர் சர்ச்சைத்தான் அப்படி வேண்டுமென்றே குறிப்பிடுகின்றார் என்பது தெரிந்தது.

[12] இது ஏதோ இந்துக்களை மிரட்டுவது போல இருந்தது. அது மட்டுமல்லாது, இந்துக்கள் எல்லோரையும் மதம் மாற்றி, சிறுபான்மையினராக மாற்றி விடுவோன் என்ற தோரணையில் பேசியது தெரிந்தது.

[13] அந்த நிருபர் திட்டமிட்டே, இந்த கட்டுக்கதையினைப் பற்றி பேசவேண்டும் என்ற சந்தர்ப்பத்தினை நஏற்படுத்துக் கொடுத்தது போல இருந்தது.

[16] மற்ற மதத்தலைவர்கள் இறந்தபோது, சமதர்ம அடிப்படையில் ஏன் அவ்வாறு மௌன அஞ்சலி செய்யவில்லை என்று எந்த எம்.எல்.ஏவும் கேட்காதது ஆச்சரியமான விஷயமே.

[17] இவர் சிவஞான முனிவரின் நூல்களை எரித்ததுப் பற்றி, தமிழர்களுக்கு தெரியாமலேயே இருப்பதும் கேவலம் தான். அவரை மறந்த தமிழர்கள், இந்த தமிழ் துரோகிகளுக்கு விழா நடத்துவது என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

[18] அதாவது, அந்த அளவிற்கு, கருணாநிதிக்கு பித்தம் ஏற்பட்டுவிட்டதா அல்லது கருணநிதியை, ஒரு கிருத்துவ அடிமை / ஏஜென்டு போல வைத்திருக்கின்றனர் என்று தெரிகிறது.

[19] அதாவது ரூ.40 கோடிகள் மதிப்பில் உள்ள நிலத்தை கல்லறைக்காகக் கொடுக்கப் பட்டது என்கிறார்கள். உண்மையில் அங்கு கல்லறைக் கட்டப் போகிறார்களா அல்லது வேறு எதையாவது கட்டப் போகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.

https://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/

[20] இப்படி ஜெயலலிதாவை அது-இது என்று ஒருமையில் பேசியது அவர்களுக்கு அந்த அளவிற்குக் கூட நாகரிகம் தெரியவில்லையா அல்லது அந்த அளவிற்கு தீர்மானமாக எதிர்ப்புத் தன்மையினை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்களா என்று தெரியவில்லை.