Archive for நவம்பர், 2014

மறுபடியும் கற்பழிப்பிற்காக இன்னொரு கிருத்துவ மதபோதகர் கைது – காதலித்து, உல்லாசமாக இருந்து, திருமணம் செய்துகொள்ள மறுப்பு!

நவம்பர் 28, 2014

மறுபடியும் கற்பழிப்பிற்காக இன்னொரு கிருத்துவ மதபோதகர் கைது – காதலித்து, உல்லாசமாக இருந்து, திருமணம் செய்துகொள்ள மறுப்பு!

பிரபுதாஸ் மதமோதர் கும்மிடிப்பூண்டி கற்பழிப்பு 2014

பிரபுதாஸ் மதமோதர் கும்மிடிப்பூண்டி கற்பழிப்பு 2014

கிறிஸ்தவ மதபோதகர் 2 அல்லது 4 ஆண்டுகளாக செவிலியர் பெண்ணுடன் காதல், உல்லாசம்: கும்மிடிப்பூண்டி அருகே செவிலி யரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார்[1] என்று எல்லா நாளிதழ்களும் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளபோது, தினகரன், “பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது” என்று செக்யூலரிஸ முறையில் வெளியிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை அருகே எ.என்.குப்பத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்தனர்[2] என்று தினகரன் கூடுதலாக விவரத்தைக் கொடுத்துள்ளது.  அதாவது 2010லிருந்து 2014 வரை காதலித்து வந்துள்ளார்கள் போலும்! ஆனால் தினமலர் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறது[3].

தினமலர் ஏ.என்.குப்பம் செய்தி

தினமலர் ஏ.என்.குப்பம் செய்தி

பெண் மதபோதகர் மீது பாலியல் குற்றப் புகார்: இவர் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதாவது நான்கு ஆண்டுகள் கழித்து கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘எனது பகுதியைச் சேர்ந்தவர் பிரபுதாஸ் (எ) தினகரன் (28). முதுநிலை பட்டதாரியான இவர், எ.என்.குப்பத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். இது சி.எஸ்.ஐ இல்லை[4] என்றால், வேறெந்த பிரிவு என்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மேற்படிப்பு சொல்லி தருவதாக கூறி பழவேற்காடு அழைத்துச் சென்றார். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். நான் குடித்து விட்டு மயங்கி விட்டேன். எழுந்து பார்த்த போது என் ஆடைகள் களைந்து இருந்தது.  பிறகு, அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார், என்று தி இந்து குறிப்பிடுகிறது. அவர் என்னை கற்பழித்து விட்டார் என்று மாலை மலர் குறிப்பிடுகின்றது[5]. தினமலரும் அவ்வாறே குறிப்பிடுகின்றது[6]. நான் கேட்டதற்கு என்னை கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டினார். பின்னர் அவர் செல்போனில் ஒரு நாள் தொடர்பு கொண்டார். இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாததால் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார். எனக்கு மோதிரம் வாங்கி கொடுத்தார். பின்னர், செங்குன்றத்துக்கு அழைத்துச் சென்று மீண்டும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று தி இந்துவும், கற்பழித்தார் என்று மாலை மலரும் குறிப்பிடுகின்றன[7]. ஆக இது வழக்கமாக இருந்திருக்கிறது என்றும் தெரிகிறது. பின்னர் என்னை திருமணம் செய்ய சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். இதுகுறித்து நான் பிரபுதாஸின் அக்காவிடம் கூறினேன். அதற்கு அவர் ரூபாய் ஒரு லட்சமும், 50 பவுன் நகையும் கொண்டு வா என கூறினார்’ என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது[8].

Sexy christianity - pastor sex India

Sexy christianity – pastor sex India

வழக்கமான விசாரணை, கைது, சிறையில் அடைப்பு: பெண் செவிலியர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகாபாய், பிரபுதாஸை நேற்று கைது செய்தனர்[9]. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்[10]. இதையே இணைதளத்தில் மற்றவையும் செய்தியாக போட்டுள்ளன[11].அதாவது விவரங்கள் உண்மை என்றாகின்றன. பிறகு, கிருத்துப் பாதிரிகள், பாஸ்டர்கள், போதகர்கள், பிஷப்புகள் என்று இவர்கள் ஏன் தொடர்ந்து இப்படி கற்பழிப்பு, பாலியல் வன்மங்களில் ஈடுபட்டு வருகின்றனர், அவற்றை ஏன் தடுப்பதில்லை என்று யாரும் ஆராய்வதாகத் தெரியவில்லை.

Pope and Cristina Fernández de Kirchner

Pope and Cristina Fernández de Kirchner

பெண்கள் ஏன் கிருத்துப் பாதிரிகள், பாஸ்டர்கள், போதகர்கள், பிஷப்புகள் இவர்களிடம் இப்படி சிக்கிக் கொள்கிறார்கள்?: இப்புகாரில் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கும் விவரங்கள் ஆய்வதற்குரியதாக உள்ளது:

·         மேற்படிப்பு சொல்லி தருவதாக கூறி பழவேற்காடு அழைத்துச் சென்றார்.

·         அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.

·         நான் குடித்து விட்டு மயங்கி விட்டேன்.

·         எழுந்து பார்த்த போது என் ஆடைகள் களைந்து இருந்தது.

·         பிறகு, அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்/கற்பழித்து விட்டார்.

மேற்படிப்பு சொல்லித் தருவதற்கு ஏன் பழவேற்காடு செல்லவேண்டும், அங்கேயே சொல்லிக் கொடுக்கலாம்-கற்றுக் கொள்ளலாமே? அப்படியென்றால், யாருடைய பனப்பாங்கில் குற்றம் உள்ளது என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இருப்பினும், மதபோதகராக இருக்கும் அவன், பென்மையை சீரழிக்கத் தயாரானது குற்றமே. குளிபானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்தார்……முதலிய செய்திகள் அவனது குரூர மனத்தை வெளிக்காட்டுகிறது. எதையோ வாக்குக் கொடுத்து இந்த கிருத்துப் பாதிரிகள், பாஸ்டர்கள், போதகர்கள், பிஷப்புகள் பெண்களை மயக்குகிறார்கள், இவ்வாறு உடலுறவு கொள்ளவும் செய்கிறார்கள், பிறகு ஏமாற்ற முயலும் போது, பெண்கள் புகார் கொடுக்கிறார்கள். இந்த அமைப்பு மற்ற வழக்குகளிலும் காணப்படுகிறது.

வேதபிரகாஷ்

28-11-2014

[1]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article6639388.ece

[2] தினகரன், பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது, பதிவு செய்த நேரம்:2014-11-27 09:47:27

[3] தினமலர், பெண்ணிடம் மதபோதகர் உல்லாசம் – திருமணம் செய்ய மறுத்ததால் கைது, சென்னை, வியாழன், 27-11-2014, பக்கம்.7.

[4] CSI St. Paul’s Church, No.3, Ma-Po-C Nagar Bye-pass Road, Gummidipoondi, Chennai 601201,  REV. C. ANAND ANTONY http://www.csimadrasdiocese.org/pastorate.php?cat=1

[5] மாலை மலர், கும்மிடிப்பூண்டி அருகே திருமண ஆசை காட்டி நர்சு கற்பழிப்பு: வாலிபர் கைது, பதிவு செய்த நாள் : புதன்கிழமை, நவம்பர் 26, 3:21 PM IST

[6] தினமலர், ,

[7] தி இந்து, செவிலியர் பலாத்கார வழக்கில் மதபோதகர் கைது, Published: November 27, 2014 12:30 IST; Updated: November 27, 2014 12:30 IST

[8] http://www.maalaimalar.com/2014/11/26152158/man-cheat-nurse-and-molested-i.html

[9]   தினமணி, திருமண ஆசை காட்டி தன்னை சீரழித்ததாக வாலிபர் மீது இளம்பெண் புகார், By பா.ஜான்பிரான்சிஸ், கும்மிடிப்பூண்டி, First Published : 26 November 2014 05:23 PM IST

[10] http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=397320

[11]http://www.dhinasangu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4/

Advertisements