சிறுமியர் காப்பகம் வைத்து, சிறுமியைக் கற்பழித்த கிருத்துவ காப்பகத் தலைவன் மற்றும் அதிகாரி! ரஸ் பவுண்டெஷனின் ராஸ லீலைகள்!
ரஸ் பவுண்டேஷன் புராணம்: மதுரை எல்லீஸ் நகரில் செயல்பட்டு வரும் ரஸ் [Russ foundation] என்ற அறக்கட்டளைக்குச் சொந்தமான காப்பகம், வாடிப்பட்டி அருகே தொண்டைமான்பட்டி என்ற ஊரில் இயங்கி வந்தது. கே.ஏ.கிருஷ்ணசாமி, சட்ட அமைச்சரால் 20 வருடங்களுக்கு முன்னர் துவக்கி வைக்கப் பட்டது[1]. ஜெர்மனி கிருத்துவ மிஷினரிகளின் மூலம் நிதியுதவி பெற்று நடத்தப் படுகிறது[2]. தாங்கள் என்னென்ன சேவைகளை செய்கிறார்கள் இன்று தங்களது இணைதளத்தில் அடுக்கியுள்ளனர்[3]. “தி இந்து”வில் பெர்லின் ஜோஸ் புராணம் அதிகமாகவே காணப்படுகிறது[4]. ஜவுளி வியாபரத்தை விட்டு, இந்த சேவைக்கு வந்தார், எச்.ஐ.வி பெரிய பிரச்சினை என்றும், அதனால் பாதிக்கப் பட்டவர்கள் காக்கப் படவேண்டும் என்றேல்லாம் சொன்னதாக செய்தி வெளியிட்டுள்ளது[5]. இவர் தான் இந்த அமைப்பை ஆரம்பித்தவர்களுள் ஒருவர்.
ஜப்பான் தூதுவர் [Seiji Baba, Consul-General of Japan] மூலம் இறந்தவர்களின் இறுதி சடங்கு செய்யும் ஷலோம் [பிணம் அப்புறப் படுத்தும்] நிறுவனமும் [Shalom Hospices] 2017ல் துவங்கி வைக்கப் பட்டது[6]. எச்.ஐ.வி நோயாளிகளுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று விளக்கப் பட்டது[7]. இந்த அளவிற்கு ஊடகங்களில் பிரசித்தி பெற்றுள்ள நிலையில், சிறந்த சேவையைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், மோசமான செய்தி இப்பொழுது வந்துள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த கதை: அந்தக் காப்பகத்தில், பெற்றோர் மூலம் பரவிய எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டோர் உள்பட 18 சிறுவர் சிறுமியர் தங்கி இருந்தனர்[8]. அவர்கள், அந்தக் காப்பகத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்ததால், நிர்வாகி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்[9]. காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது, என்றெல்லாம் திடீரென்று செய்திகள் வந்துள்ளன. உண்மையில் அந்த அளவிற்கு சேவை மனப்பாங்கு கொண்டவர்கள் என்றால், இத்தகைய விவகாரங்கள் இருப்பது திகைப்படைய செய்கிறது. ஊடகத்துறையினர் இங்கு வந்து, இவரை பேட்டி எடுத்ததாகத் தெரிகிறது.
பிறகு, அவர்கள், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளமல் இருக்கின்றனர் என்று தெரியவில்லை. மதுரை, சத்திரப்பட்டி தொண்டமான்பட்டி பகுதியில் தனியார் ஏழை சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது[10]. இதில் 20 குழந்தைகள் இலவசமாக தங்கி அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதில் 5ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமி கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் இந்த சிறுமியை மட்டும் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். வீட்டிலும் வயிற்று வலி ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் / சிகிச்சைக்கு சேர்த்தனர்[11].
பாதிக்கப் பட்ட சிறுமி உண்மையினை சொல்லிவிட்டாள்: டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி பாலியல் தொல்லையில் சிக்கி இருந்ததும், இதனால் உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காப்பக நிர்வாகி பெர்லின் ஜோஸ் (54), வார்டன் ஜான் பிரபாகரன் (63) ஆகியோர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது[12]. இந்த வயதில், அவர்களுக்கு அத்தகைய கொடுமையான எண்ணம் இருப்பதும் திகைப்பாக உள்ளது. பேத்தி வயதில் இருக்கும் பெண்ணை எப்படி கற்பழிப்பது, தொடர்ந்து புணர்வது போன்ற செயல்களை செய்ய முடியும் என்பதும் அதிர்ச்சியாக உள்ளது. அவர்கள் இவ்வேலைகளை செய்யவே லாயக்கற்றவர் என்றாகி விட்டது. அச்சிறுமி வாக்கு மூலமும் கொடுத்தாள். இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்தனர் [arrested under the provisions of Protection of Children from Sexual Offences Act, 2012]. விசயம் ஊர்ஜிதம் செய்து கொண்டதும், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பதிவு இல்லாமல் பள்ளி எப்படி நடத்த முடிந்தது?: சமுகநல மற்ற துறை அதிகாரிகள், போலீஸ் காவலுட வந்து ரஸ் வளாத்தை சோதனை இட்டனர். மேலும் அங்கு தங்கி படித்து வந்த சிறுமிகளை, குழந்தைகள் பாதுகாப்பு நல குழுத்தலைவர் டாக்டர் விஜயசரவணன் தலைமையிலான குழுவினர் மீட்டு வேறு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆண் மற்றும் பெண் குழந்தைகள் தனித்தனியாக இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கைதான 2 பேரும் வேறு யாரிடமும் சில்மிஷம், குற்றங்களில் ஈடுபட்டனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்[13]. அங்குள்ள பள்ளியும் அனுமதியில்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்படவே உடனடியாக பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தனை பிரபலங்கள் வருகிறார்கள், விழாக்களில் பங்கு கொள்கிறார்கள், விருதுகள் கொடுக்கப் படுகின்றன. ஆனால், பதிவு செய்யப்படாமல் எப்படி பள்ளி நடந்து வருகிறது என்பதே விசித்திரமாக உள்ளது. அப்படி என்றால், பள்ளித் துறையில், பள்ளிகளைக் கண்காணிக்க யாரும் இல்லையா என்ற கேள்வியும் எழுகின்றது.
கிருத்துவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்: கிருத்துவர்கள் நடத்தி வரும் சிறுவர் காப்பகங்கள், அனாதை இல்லங்கள், பெண்கள் காப்பகம் இவற்றில் எல்லாம் தொடர்ந்து பாலியல் சதாய்ப்புகள், துன்புறுத்தல் கற்பழிப்புகள் நடந்து வருதது தொடர்கதையாகவே இருக்கிறது. இதில் பொறுப்புள்ள கிருத்துவர்கள் தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவது, பலதடவை எடுத்துக் காட்டியும், சர்ச்-அதிகாரிகள் மற்ற பொறுப்புள்ள பெரியோர்கள் இது பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதும், தொடர்ந்து அதனை நிறுவனங்களிலேயே பிஷப் போன்றவர்கள் செய்து வருவதும் திகைப்பாக இருக்கிறது. தர்ம மற்றும் சேவை காரியங்கள் செய்யவா அல்லது செக்ஸ் கூடாரங்களாக செய்யப்பட்டு வர இவையெல்லாம் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது. இந்நிலையில் இத்தகைய குற்றங்கள் அதிகமாகி கொண்டே இருப்பது மட்டுமல்லாமல் பெரும்பான்மையாக மிக்க பொருப்புள்ளவர்கள், பெரிய இடங்களில் உள்ள மடாதிபதிகள், பிஷப் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதுதான் சமூக மற்றும் செக்ஸ் குற்றங்களாக இருக்கின்றன. அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று தோன்றுகிறது.
© வேதபிரகாஷ்
25-10-2019.
[1] http://www.russfoundation.in/
[2] RUSS FOUNDATION is a charity, registered as a non-profit organization under the Tamilnadu Societies Registration Act in India. Since its inception in the year 1992, it has developed into a dynamic organization with a history of bringing vital changes in the community it serves. Russ Foundation concentrates its developmental efforts at the grass-root level in sectors like Health, HIV/AIDS, Education, Socio-economic development, Life-skill Vocational Training and Ecology. Russ Foundation is focused to create sustainable and culturally relevant solutions by enabling communities to break the longstanding obstacles for their development. The primary object of Russ Foundation is to improve the quality of life of the children, women and the community at large.
[3] http://www.russfoundation.in/current-programmes.php
[4] The Hindu, Serving the deserving, SOMA BASU,, NOVEMBER 05, 2014 18:20 IST, UPDATED: NOVEMBER 05, 2014 18:20 IST.
[5] https://www.thehindu.com/features/metroplus/society/serving-the-deserving/article6567515.ece
[6] The Hindu, Hospice inaugurated, STAFF REPORTERMADURAI, DECEMBER 13, 2017 07:58 IST, UPDATED: DECEMBER 13, 2017 07:58 IST.
[7] https://www.thehindu.com/news/cities/Madurai/hospice-inaugurated/article21570922.ece
[8] பாலிமர் செய்தி, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…காப்பகத்திற்கு சீல்..!, Oct 24, 2019.
[9] https://www.polimernews.com/amp/news-article.php?id=86281&cid=10
[10] தினகரன், சிறுமிக்கு பாலியல் தொல்லை நிர்வாகி உட்பட 2 பேர் கைது : மதுரை காப்பகத்திற்கு சீல், 2019-10-25@ 00:06:36
[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=536074
[12] ஜெயா செய்தி, மதுரையில் 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : காப்பகத்திற்கு சீல் – நிர்வாகிகள் 2 பேர் கைது
Oct 25 2019 11:31AM.
[13] http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_95119.html