Archive for ஜூலை, 2013

லீலா சாம்சன் பதவி காலத்தில் ரூ. 3 கோடி மோசடி, ஊழல் நடந்துள்ளன, ராஜினாமா செய்தாலும் விவகாரங்கள் தொடர்கின்றன!

ஜூலை 19, 2013

லீலா சாம்சன் பதவி காலத்தில் ரூ. 3 கோடி மோசடி, ஊழல் நடந்துள்ளன, ராஜினாமா செய்தாலும் விவகாரங்கள் தொடர்கின்றன!

Leela Samson fraud

கலாக்ஷேத்ராவின் இயக்குனராக லீலாசாம்சன் (2005): முதலில் லீலா சாம்சனின் தேர்வு பற்றி சிலர் சந்தேகத்தை எழுப்பியபோது, அவர்களை மதவெறியர்கள் என்றெல்லாம் கூறி ஒதுக்கினர்.  அதாவது என்னத்தான் நாட்டிய வித்வான் என்றாலும், பாரம்பரிய பரத நாட்டியம் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கு ஒரு கிருத்துவர் இயக்குனராக நியமிக்கப்பட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. பொதுவாக இந்தியர்கள் இசை, நடனம், பாட்டு முதலியவற்றில் ஜாதி-மதம் பார்ப்பதில்லை. ஆனால், சோனியா ஆட்சியில் பொதுவாக உயர் அல்லது முக்கியமான பதவிகளில் கிருத்துவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போதா குறைக்கு, கலாசேத்திரத்தில் விக்கிரங்கள் அப்புறப்படுத்தப் படுகின்றன, மாற்றங்கள் செய்யப்படுகின்றன போன்ற புகார்களும் எழுந்தன. ஆனால், லீலாவின் ஆதரவாளர்கள் அவற்றை மறுத்தனர். இருப்பினும், பொது மக்களுக்கு இன்னும் உண்மை என்ன என்பதனை அறிவிக்கவில்லை. சாதாரண மக்களுக்கு எட்டாத நிலையில் தான் இந்த நிறுவனங்கள் உள்ளன. ஆனால், மக்களது வரிப்பணம் தான் இவற்றிற்கு செலவிடப்படுகின்றது. இருப்பினும் உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

Leela Samson - questioned for irregular financial activities

லீலா சாம்சனின் நிர்வாகத்தில் கலாக்ஷேத்ரம்  2005  முதல்  2012  வரை: யுபிஏ அரசு பதவிக்கு வந்ததும், 2005ல் இவர் இயக்குனராக நியமிக்கப் பட்டார். அப்பொழுது வயது 54. சங்கீத் நாடக அகடெமியின் தலைவர், சென்சார் போர்ட்டின் தலைவர் என்று அனைவற்றிலும் நியமிக்கப் பட்ட இவர் “யுபிஏவின் கலாச்சார ஜாரினா” [cultural czarina of the UPA] என்றே குறிப்பிடப்பட்டார்[1]. அம்பிகா சோனி (கிருத்துவர்), திக்விஜய சிங் (பொதுவாக இந்துவிரோத பேச்சுகள் பேசிவரும் சோனியாவின் விசுவாசி) போன்றோருக்கு தெரிந்தவர். இருப்பினும், வழக்குகள் போட்டதால், 30-04-2012 அன்று ராஜினாமா செய்தார். அப்பொழுதும் பிரபலங்கள் அவரை தொடர்ந்து இருக்குமாறு பணித்தன. ஏ.சி. முத்தையா, பிரீதா ரெட்டி, என். முரளி மற்றும் மாதவி முதுகல், சேர்மன் கோபாலகிருஷ்ண காந்திக்கு அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்ய அழைத்தனர்[2]. லீலா பதவி விலகியது பற்றி ஏற்கெனவே என்னுடைய பதிவு ஒன்று உள்ளது[3]. விளக்கமான படங்கள் கொண்ட பதிவும் உள்ளது[4]. ஆனால், இந்த ஐந்து வருடங்களில் கலாசேத்திரத்தில் நடந்துள்ளவை சரியாக இல்லை என்று வெளிப்பட்டு விட்டன. லீலா சாம்சனை அதரிப்போர்-எதிர்ப்போர் என்ற நிலையில் “அத்தை / மாமி” என்று இணைதளத்திலேயே விவாதங்கள் எற்பட்டன. அப்பொழுது, லீலாவின் முறைகேடுகள் எடுத்துக் காட்டப்பட்டன.  ஆனால், எல்லாமே ஒழுங்காகத்தான் நடக்கிறது என்று பதிலளித்தார்கள்.

Leela Samson - questioned for irregular financial activities2

சி..ஜி.யின் தணிக்கையில் நிதி முறைகேடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன:  சி.ஏ.ஜி. கலாக்ஷேத்ராவின் ஆண்டு நிதி அறிக்கைகளை வைத்துக் கொண்டு தணிக்கையில் மேற்கொண்டபோது, 2011ற்கான ஆண்டில் குறிப்பிட்ட முறைகேடுகளை எடுத்துக் காட்டியது. பிறகு மற்றவை 2012 வரை உள்ளன. இப்பொழுதெல்லாம் சி.ஏ.ஜி. ஊழலை கண்டுப்பிடித்து வெளியிட்டது, நிதிநிலைப் பற்றி ஆட்சேபணைகள் எழுப்பியுள்ளது மோசடி பற்றி விவரங்களைக் கொடுத்துள்ளது என்றால்தான், ஊடகங்கள் செய்திகளை போடுகின்றன. சாதாரண மக்கள் சொன்னால் கண்டுகொள்வதில்லை.

Leela Samson director of Kalakhetra

கூத்தம்பலம் அரங்கத்தின் மாற்றங்களில் விதிமுறைகள் மீறல்: “கூத்தம்பலம் அரங்கம்” என்பது ருக்மணி அருன்டேல் வடிவமைத்துக் கட்டியதாகும். ஆனால், லீலா சாம்சன் அதனை இடித்து மாற்றிக் கட்ட ஆணையிட்டுள்ளார். அதற்கான கட்டுமான வேலை மற்றும் ஒலிபெருக்கு அமைப்பை மேன்படுத்தும் வேலைகளில் ரூ.34 லட்சம் மற்றும் ரூ. 62 லட்சங்கள் செலவிடப்பட்டன. ஆனால், அந்த வேலைகள் டென்டர்கள் இல்லாமல், நேரிடையாகக் கொடுக்கப் படாமல், ஒரு மூன்றாவது நபர் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆகவேண்டிய செலவை விட, அதிகமாகும் போது இடையிலுள்ள நபருக்கு உதவுவது போலாகிறது. மேலும் அதற்காக வாங்கப் பட்ட ஒலி-ஒளி உபகரணங்கள், சாதனங்கள் முதலியவை ஏன் உபயோகப்படுத்தாமல் வைக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டுள்ளது[5]. நிதிசெலவீனக் கொள்கைகளிமன் படி லட்சங்கள் செலவிட்டு வாங்கி, அவற்றை வைத்துக் கொண்டால், சேதாரம் [depreciation] போல அதன் மதிப்பு குறைந்து விடுகிறது என்பது மட்டும் அல்லாது, யாருக்கோ வியாபரம் ஆகவேண்டும் என்று அப்பொருட்களை வாங்கி வைத்துள்ளார்கள் என்றாகிறது. அதற்குண்டான கமிஷனைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது தெரிந்த விஷயமே.

Madhu Ambat inside a temple shooting

ரூ. 3.9 கோடிகள் மதிப்புள்ள வேலை டென்டர் இல்லாமல் நண்பருக்குக் கொடுக்கப் பட்டுள்ளது: ருக்மிணி அருன்டேலுடைய நாட்டிய-நாடக நிகழ்சிகள் மற்றும் கலாக்ஷேத்ராவின் மற்ற நிகழ்சிகளை டிஜிடல் நுட்பம் மூலம் மாற்றுவதற்கு மது அம்பட் ப்ரொடக்சன்ஸ் [M/s Madhu Ambat Productions[6], Chennai] என்ற நிறுவனத்திற்கு ரூ.3.9 கோடி மதிப்பிற்கு ஆர்டர் கொடுக்கப் பட்டுள்ளது. டென்டர் முறை பின்பற்றாமல் இந்த வேலை நேரிடையாக அந்த நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்துள்ளது[7]. இந்த கம்பெனியின் சொந்தக்காரர், மது அம்பட் என்பவர் லீலா சாம்சனுக்கும், “மேனன் குடும்பத்தாருக்கும்” வேண்டியவர். இதனால், டென்டர் இல்லாமலேயே கொடுக்கப்பட்டுள்ளது போலும். இந்த மது அம்பட் என்பவரும் பெரிய சினிமாக்காரர். கேரளாவிலிருந்து வரும் இவர்கள் எல்லோரும் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் கொண்ட மேனன் என்ற ஜாதியை அல்லது பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

Madhu Ambat Productions

நேரிடையாக கலாக்ஷேத்ராவில் வேலைக்கு அமர்த்தியது: கலாக்ஷேத்ராவில், சில வேலைகள் உள்ளே இருப்பவர்களுக்கு பதவி உயர்வு என்ற முறையில் கொடுக்கப் படாமல், புதியதாக நேரிடையாக ஆட்களை வேலைக்கு எடுத்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளனர், ஏனெனில், இது சட்டப்படி விரோதமாகும் என்று அறிக்கை கூறுகிறது[8]. “கலாச்சார அமைச்சகத்திற்கு விவரங்களை அனுப்பியுள்ளோம், அவர்கள் இந்த வேலைநியமனத்தை அங்கீகாரம் செய்து சரிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்”, என்று பதில் சொல்லப்படுகிறதாம். அதாவது, குற்றங்களை மறைக்க அரசியல் ரீதியாக அதிகார பலம், செல்வாக்கு முதலியன உபயோகப்படுத்தப் படுகின்றாதே தவிர, நேரிடையாக பதில் சொல்ல தைரியம் இல்லை போலும். ஏற்கெனவே, சி. எஸ். தாமஸ் என்பவர் இவர் 60 வயதாகியும் தொடர்ந்து இயக்குனராக இருப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்[9]. இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இப்பொழுது கலாக்ஷேத்ரத்தில் கணிசமாக மலையாளிகள், கிருத்துவர்கள் இருக்கின்றனர் என்று மற்றவர்கள் குறை கூறுகிறார்கள்.

Leela Samson with Digvijaya singh, Anita Ratnam etcதிக்விஜய் சிங்குடன் – காங்கிரஸ் ஊடக தொடர்பாளர், சோனியாவின் விசுவாசி

முன்பணம் கொடுத்தும் கணிணிகள் வராமல் இருப்பது: ரூ.5.5 லட்சங்கள் கணிணிகள் வாங்க அட்வான்ஸ் / முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாண்டுகள் ஆகியும் அவை சப்ளை செய்யப்படவில்லை. மாறாக கொடுத்த பணத்திற்கு சரியான வரவையும் புத்தகங்களில் வைத்துக் கொள்ளவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், முந்தைய ஓய்வு நீதிபதி எஸ். மோகன் தான் இதை, கலாச்சாரத் துறை செயலாளர் அபிஜித் குப்தாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்[10].

Leela Samson with Madhu Ambatமுந்தைய நீத்பதி எஸ். மோகனுடன் – இவர்தாம் அபிஜித் குப்தாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். உடன் இருப்பவர் – மது அம்பட்

இந்தியா டுடேவிற்கு பதிலளிக்காத லீலா சாம்சன்: கலாக்ஷேத்ரா இந்த செலவுகளுக்கு அரசின் மொத்த நிதியிலிருந்து [Kalakshetra took Rs.8 crore from the consolidated fund] ரூ.8 கோடி எடுத்துள்ளது. ஆனால், டென்டர்கள் இல்லாமல், இவ்வாறு செலவு செய்ய முடியாது. லீலா சாம்சனுக்கு சமைத்துப் போடும் ஒரு நண்பர், இஞ்சினியர். அவர் உடையலங்காரம் பற்றிய வகுப்புகளை எடுத்தாராம். இப்படி அவருக்கு வேண்டியவர்கள் எல்லோரும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்களா. ஒப்பந்தங்கள் இருக்குமாறு காட்டுவதற்கு முன் தேதியிட்ட பத்திரங்கள் வாங்கப்பட்ட, இப்பொழுது தயாரிக்கப்பட்டனவாம். இப்படி விஷயங்களை வெளிப்படுத்துகிறார், சியாமளா என்ற சி. எஸ். தாமஸின் வக்கீல்[11]. இந்தியா டுடே இந்த விவகாரங்களப் பற்றி நேரிடையாக தொடர்பு கொண்டு பேச முயற்சித்தபோது – லீலா சாம்சனுக்கு போன் செய்தபோது, அவர் எடுக்கவில்லை. மேலும் இ-மெயில்களுக்கும் பதிலளிக்கவில்லை[12]. இது முன்பு பிஷப் சின்னசாமி ஊடகக்காரகளுடன் நடந்து கொண்டது போலிருக்கிறது.

Hiss - Leela - Ambhat

கலாக்ஷேத்ரத்தில் இன்றும் நடக்கும் யுத்தங்கள்,  கேட்கப்படும் கேள்விகள்: சி.ஏ.ஜி. அறிக்கை கலாசேத்திரத்தில் நடந்துள்ள நிதிமுறைகேடுகளைச் சுட்டிக் காட்டியபோது, ஏதோ பதில் கொடுக்க வேண்டும் என்று பதிலளித்தார்களே தவிர, முறைகேடுகளை மறைக்க முடியவில்லை[13]. இதனால், லீலா சாம்சன் ராஜினாமா செய்தார். அப்பொழுதும் அவரை ஆதரித்து, ராஜினாமாவை வாபஸ் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்[14]. ஆனால், சென்னை உயர்நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது[15]. இருப்பினும் அவரது காலத்தில் நடந்த முறைகேடுகளுக்கு அவர் காரணமாகிறார். நாட்டியம், கலை என்பவற்றை விடுத்து அதற்கும் மேலாக, ஏதோ ஒரு விருப்பம் அவருக்கு இருந்திருக்கிறது, அதனால்தான், இத்தகைய அவலத்தை உண்டாக்கி விட்டார் என்று நன்றாகவே தெரிகிறது. “அது எது?” என்று தான் வியக்கின்றனர்; சிலர் தெரிந்தும் தெரியாதது போல நடிக்கின்றனர்; சிலர் இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் நமக்கென்ன? என்று அமைதியாக இருக்கின்றனர்; இதில் நாம் தலையிட்டால், நமது சீட் கிழிந்து விடும் என்ற பயத்துடன் சிலர் இருக்கின்றனர். இதற்குள் அமெரிக்காவிலிருந்து அனிதா ரத்னம் போன்றோர், இவருக்கு சார்பாக இணைதளத்தில் ஆதரவு தெரிவித்தும், மறுபடியும் அவர் பதவியில் உட்கார வைக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், கீழ்கண்ட மூன்று வினாக்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்று கலாசேத்திரத்தில் உள்ளவகள் கூறுகிறார்கள்[16]:
1. அவர் நியமிக்கப்பட்டத்தில் எந்தவித விளக்கமும் தெரியப்படவில்லை.

2. சி.ஏ.ஜி. அறிக்கையில் எடுத்துக்க் காட்டப் பட்ட முறைகேடுகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

3. இந்த அமைப்பிற்கோ அல்லது சேர்மனுக்கோ எப்படி, எந்த அதாரத்தின் மீது இந்த நியமனம் செய்யப்படுகிறது என்றே தெரியவில்லையாம்.

All MEnons are together

குற்றஞ்சாட்டுபவர்களும்,  குற்றஞ்சாட்டப்பட்டவர்களும்: மாநில நெடுஞ்சாலை துறை கடற்கரை வழியாக “உயர சாலை வழி திட்டம்” விஷயமாக, தியோசாபிகள் சொசைடி, கலாக்ஷேத்ரா முதலிய இடங்களுடன், மீனவர்களில் குப்பங்களும் பார்வையிட்டபோது,அத்திட்டத்தை எதிர்த்து கூட்டம் நடத்தப் பட்டது. அப்பொழுது மாநில நெடுஞ்சாலை துறை கடற்கரை வழியாக அத்திட்டத்தை நிறவேற்ற “மோசடியான வழிகளை”ப் பின்பற்றுகிறது என்று குற்றஞ்சாட்டப்பட்டது. அப்பொழுது, இதே லீலா சாம்சன் ஆதரித்து பேசினார்[17]. அதிகாரம் இருந்தால், அது இப்படித்தான் ஆட்டி வைக்கும் போலிருக்கிறது. “கட்டப் படப்போகின்ற கட்டுமானங்கள் கலாக்ஷேத்ராவின் வளாகத்தில் வருகின்றது என்று தெரிகிறது. இதனால் சில மாணவர்கள் தங்கும் விடுதிகள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது”, என்று கவலைப் பட்டார்[18]. ஆனால், அவரே கலாக்ஷேத்ரத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தி, புனிதத்தைக் கெடுத்துள்ளார் என்று ஏற்கெனவே எடுத்துக் காட்டப்பட்டது.

Accused and accuseer

வேதபிரகாஷ்

© 19-07-2013


[1] she was appointed chairperson of the Sangeet Natak Akademi and the Censor Board and dubbed the cultural czarina of the UPA.

[2] Emergency meet of Kalakshetra board likely, The Hindu, May 4, 2012

The governing board of Kalakshetra is likely to meet soon, to discuss the issue of the resignation of Leela Samson, who held the post of director until April 30, 2012. Four members – A.C. Muthiah, Preetha Reddy, N. Murali and Madhavi Mudgal – wrote to chairman of the board Gopalkrishna Gandhi, asking for an “emergency meeting” to be convened. The members had expressed their shock and disappointment with how the resignation was dealt with.

http://www.thehindu.com/features/friday-review/music/emergency-meet-of-kalakshetra-board-likely/article3381388.ece

[5] One such was regarding the awarding of civil works and upgradation of audio system in Kalakshetra. The architect consultant for renovation of the kitchen, dining and associated facilities of the hostel block had obtained quotations from three firms and recommended one of them as the civil contractor. The value of the work allotted was about Rs. 34 lakh. The CAG questioned this method of allocation of work. It said that obtaining quotations from different sources was not acceptable and instead a tendering system should have been in place. The CAG also raised similar objections in the case of procuring sound systems worth Rs. 62 lakh.

http://www.thehindu.com/features/friday-review/dance/the-dirt-beneath-the-charm/article3371588.ece

[6] MAP is Owned by Madhu Ambat, An award winning Indian Cinematographer. He has worked in over 200 movies and is known for his lighting techniques. Address : “Fantasia”, 26, Vijayalakshmi Street, Mahalingapuram, Chennai 600 034, India.; Phones : (91) 44-28171007 / (91) 44-28171031/ (91) 44-28171032.
E-mail : ma@madhuambat.com ; http://www.madhuambat.com/site/; https://www.facebook.com/pages/Madhu-Ambat-Productions/104321916330342

[7] Another objection to the procedures adopted was regarding commissioning, for video documentation of Rukmini Devi Arundale’s dance dramas and other productions of Kalakshtera in ‘a broadcast quality digital format’. The contract value was Rs. 3.9 crore. The CAG did not deem such documentation work as being “specialised in nature” and observed that this work too should have been allotted through “established procedures of tendering.” The report also asked why the sound and light equipments bought for the ongoing Koothambalam renovation was not utilised.

http://www.thehindu.com/features/friday-review/dance/the-dirt-beneath-the-charm/article3371588.ece

[8] The audit report also raises another point pertaining to appointments, particularly some “direct recruitments” instead of promotions, which are at present being legally contested. In its reply to the CAG, the Kalakshetra Foundation stated that “the regularisation of selection and subsequent ratification had already been taken up with the Ministry of Culture and reply is awaited.

http://www.thehindu.com/features/friday-review/dance/the-dirt-beneath-the-charm/article3371588.ece

[9] Trouble began when former Kalakshetra teacher C.S. Thomas filed a writ petition against Samson in 2011 for continuing to serve in her post even though she had turned 60. This is the age limit for institutions under the Government. However, Samson sought an extension and remained director.

http://indiatoday.intoday.in/story/leela-samson-quits-kalakshetra-after-pil-questions-continuance/1/187348.html

[10] Samson is also accused of placing “arbitrary contracts with utter disregard to rules and procedures”. The then Chairman of Kalakshetra Foundation’s Governing Council, Justice S Mohan, a former Supreme Court judge, wrote to the then Culture Secretary Abhijit Sengupta stating: “To cite one such instance is the case of a contract being placed for development of computer software package at a cost of Rs 5.5 lakh. The advance amount of Rs 5.5 lakh paid has not been accounted properly nor the products delivered after almost two years despite repeated reminders.”

http://www.dailypioneer.com/todays-newspaper/leelas-kala-as-kalakshetra-director-questioned.html

[11] “All the renovations and spending meant Kalakshetra took Rs.8 crore from the consolidated fund. Where are the tenders?” asks Shyamala. Apart from renovation processes, the report showed irregularities in 16 appointments at the institution. An engineer was hired to teach theory and a costume designer at the academy used to be Samson’s cook, Shyamala alleges. While admittedly the document from the CAG is just a report and has not received final comments, it has strengthened the case against Samson.

http://indiatoday.intoday.in/story/leela-samson-quits-kalakshetra-after-pil-questions-continuance/1/187348.html

[12] Samson has not commented on the allegations (she did not respond to calls or emails from india today).

http://indiatoday.intoday.in/story/leela-samson-quits-kalakshetra-after-pil-questions-continuance/1/187348.html

[14] Sai Sankar vs Union Of India on 8 August, 2012

College of Fine Arts, Thiruvanmiyur, Chennai-41. 4.Mrs.Leela Samson … Respondents Petition filed under Article 226 of the Constitution … notification dated 28.02.2005, appointed the 4th respondent Ms.Leela Samson as Director of Kalakshetra Foundation, Chennai w.e.f. from..

http://www.indiankanoon.org/doc/59353825/

[15] The High Court on Wednesday set aside an order of the Centre, allowing Leela Samson to withdraw her resignation and asking her to join duty as the director of Kalakshetra Foundation in Tiruvanmiyur. Once Leela’s resignation was accepted, there was no provision in the Kalakshetra Foundation Act to permit withdrawal of the resignation, Justice S Nagamuthu pointed out. The judge was allowing a writ petition from Sai Sankar and 16 other employees of Kalakshetra, assailing the action of the Centre in permitting Leela to withdraw her resignation and re-appointing her in the same post. Accepting the arguments of petitioners’ senior counsel KM Vijayan, the judge observed that the resignation could not be allowed to be withdrawn as it was not permitted in law. “In such view of the matter, I have no doubt to hold that the impugned order is not sustainable,’’ the judge observed. Appointed in February 2005, Leela attained the age of 60 years in May 2011. Noting that it was the age of super annuation and that she had not resigned yet, a public interest writ petition was filed in the HC. Notice had been ordered.

http://ibnlive.in.com/news/leela-samsons-resignation-recall-as-kalakshetra-director-quashed/280492-62-130.html

[16] The contention of staff members revolves largely around three points — first, there is no clarity on the terms of her appointment now. Second, what happens to the CAG report findings? And third, neither the Foundation, nor the chairman of its governing board, reportedly, was aware of the basis of her appointment.

http://www.thehindu.com/news/cities/chennai/more-battles-ahead-for-leela-samson/article3632529.ece

[18] Kalakshetra Foundation director Leela Samson said that though preliminary drawings show that the superstructure would extend into the Kalakshetra compound and could affect some hostel buildings, no consultation was ever held.

http://www.hindu.com/2011/03/25/stories/2011032561850300.htm

கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததாக செய்திகளை வெளியிடுகிறார்கள்?

ஜூலை 18, 2013

கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததைப் போல செய்திகளை வெளியிடுகிறார்கள்?

Accusing cardinal with seven nuns

கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் ஆப் இன்டியாவின் அநாகரிகமான அறிவிப்பு: கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் ஆப் இன்டியா (Catholic Bishop Conference of India – CBCI) என்ற ஒரு நிருவனம், ஏதோ இந்தியாவையே ஆட்டிப் படைக்கத் தனக்கு ஏகோமித்த உரிமை உள்ளது என்பது போல நடந்து கொள்வது உண்டு. இந்தியாவின் கத்தோலிக்க ஆயர் கூட்டம், தங்களது பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் ஒழுங்காக இல்லையே என்று கவலைப் பட்டிருந்தால், அவர்கள் பல கொலைகள், கற்பழிப்புகள், பணம் கையாடல், நில அபகரிப்பு, சிறுவர்-சிறுமிய புணர்ச்சி (pedophile), என்று எண்ணற்ற குரூர குற்றங்களை, சமூக விரோத கொடூரங்களை செய்யாமல் தடுத்திருக்கலாம். ஆனால், அதை விடுத்து, ஓரு கிருத்துவப் பெண்ணை, கிருத்துவர்களேக் கற்பழித்தை ஏதோ இந்தியாவில், கன்னியாஸ்திரிகள் எப்பொழுதுமே கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல, முதலில் செய்திகளை வெளியிட்டு[1], பரப்பி[2], பிறகு ஒரு கார்டினல் மூலம் ஓலமிட ஆரம்பித்து விட்டனர்[3]. உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன.

Oswald Gracias nuns

1.    Catholic nun gang raped in Orissa – VATICAN RADIO – Official website

en.radiovaticana.va/news/2013/07/16/…nunrapedorissa/in2-711023

2 days ago – Catholic nun gang raped in Orissa. Bhubaneshwar, India, 16 July 2013: A 28-year-old nun was kidnapped and raped for a week by a group of 

 

1.    Cardinal decries rape of Orissa nun, low status of women in India 

http://www.catholicculture.org/news/headlines/index.cfm?storyid=18466

3 days ago – Cardinal Oswald Gracias of Mumbai (Bombay), the president of the Catholic Bishops’ Conference of India, has condemned the recent rape of a 

 

1.    Catholic nun kidnapped, raped in India – Christian Forums

http://www.christianforums.com › … › OBOB General Politics Forum

4 days ago – 3 posts

Catholic nun was abducted and repeatedly raped by a gang of men in India’s troubledOrissa state earlier this month. The 28-year-old victim 

 

1.    INDIA : Card. Gracias: Rape of Orissa nun, act of terrorism against 

http://www.preda.org Home  newsitems

21 hours ago – By Nirmala Carvalho Mumbai (AsiaNews via CNUA) I condemn this gangrape of this young nun in the strongest possible terms. This is gang 

 

Oswald Gracias with nuns

கேவலமான முறையில் நடத்தப்படும் இந்திய விரோத பிரச்சாரம்: கடவுளை, மதத்தை விற்கும் கிருத்துவர்களுக்கு, விளம்பரம், பிரச்சாரம், முதலியவை புதியதல்ல.

 • இந்தியாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு
 • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு
 • தொடர்ந்து இந்தியாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு
 • தொடர்ந்து இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு
 • இந்தியாவில் கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
 • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு (gang rape)
 • தொடர்ந்து இந்தியாவில் கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
 • தொடர்ந்து இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
 • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
 • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு, மைத்துனர்கள் கைது.

இப்படி ஒரே விஷயத்தை மாற்றி—மாற்றி தலைப்பிட்டு, உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனால், இவர்களுக்கு என்ன லாபம், இதன் பின்னணி என்ன, இந்த அதிரடி பிரச்சாரத்தின் உள்நோக்கம் என்ன?

Double standards about Yoga by the Vatican

குடும்பத் தகராறினால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள்: கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததைப் போல செய்திகளை வெளியிடுகிறார்கள்?: கிருத்துவ்வர்ர்கள் கிருத்துவப் பெண்ணைக் கற்பழித்திருக்கிறார்கள். கற்பழிப்பு மாபெரும் குற்றம் தான். ஆனால், கிருத்துவப் பெண்ணை இந்துக்கள் கற்பழித்தார்கள், கன்னியாஸ்திரியை இந்து அடிப்படைவாதிகள் கற்பழித்தார்கள், என்பது போல செய்திகளைப் பரப்பி, பொய் பிரச்சாரம் செய்வதைத் தான் கண்டிக்கப் படுகிறது. “இந்து அடிப்படைவாதிகள் கற்பழித்தார்கள் என்று முன்னர் குற்றச்சாட்டப்பட்ட்ட்டது போலல்லாமல் குடும்பத் தகராறினால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். என்று இப்பொழுது[4] ஒப்புக் கொள்கிறார்கள்! ஜபுவா வழக்கிலும் அதே மாதிரி கிருத்துவர்கள் கற்பழித்தார்கள், என்று தெரிய வந்தது[5]. 2008 வழக்கிலும் அவ்வாறே ஆனது[6]. பிறகு அமைதியாகி விட்டனர். ஆனால், உண்ம்மை தெரிவதற்கு முன்னர் இப்படி உலகம் முழுவம் இந்தியவிரோத, இந்துவ்விரோத பிரச்சஆரம் செய்யப்பட்டது, செய்வது, செய்து கொண்டிருப்பது ஏன்?

RAPE

கன்னியாஸ்திரிகள் ஏன் கற்பழிக்கப் படுகிறார்கள்: முதலில் கன்னியாஸ்திரிகள் ஏன் கற்பழிக்கப் படுகிறார்கள் என்பதனை அவர்கள் விளக்க வேண்டும். பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கன்னியாஸ்திரிக்களை கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள், கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், மாற்றி-மாற்றி வைத்துக் கொள்கிறார்கள் என்று இந்தியாவிலேயே செய்திகள் வந்தது மட்டுமல்லாது, மற்ற ஈனத்தனமான, கேடுகெட்ட காரியங்களையும் செய்து வருகிறார்கள். ஆமாம், சிறுவர்-சிறுமிகளை அனாதை இல்லங்களில் (orphanages) வளர்த்து, அவர்களையே பாலியல், வன்புணர்ச்சி முதலிய தங்களது காம வேலைகளுக்கு உபயோகப் படுத்துகிறார்கள்.

Nuns enjoying life

கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்களின் இந்திய விரோத பேச்சு: இந்நிலையில் தான் மும்பை கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் (Cardinal Oswald Gracias of Mumbai), “கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டதை நான் மிக்கவும் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது திட்டமிட்ட செயல். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை[7]. பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன…..ஒரிசா கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டது மனித இனத்திற்கு எதிரான தீவிரவாத செயலாகும்”, என்றெல்லாம் சேர்த்து ஒப்பாரி வைத்துள்ளார்[8]. ஆனால், இதே கார்டினல்,

 • இந்தியா முழுவதும் ஆயிரக்ககணக்கான சிறுவர்-சிறுமிகளை பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் எல்லோரும் பாலியல், வன்புணர்ச்சிகளில் ஈடுப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.
 • பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கன்னியாஸ்திரிக்களை கற்பழித்துக் கொண்டிருந்தபோது, என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.
 • கன்னியாஸ்திரிக்களை பிஷப்புகள் கொலை செய்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.

ஆனால், இப்பொழுது வெளிப்படையாக ஊடகங்களில் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். இந்திய விரோத பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன என்று முன்பே சுட்டிக் காட்டப்பட்டது[9].

Beatificazione_Devasayam_Pillai - fraud

இந்திய சமூகத்தை சீரழிக்கும் பணியை கிருத்துவர்கள் நிறுத்த வேண்டும்: உண்மையில் இன்றுள்ள பெரும்பாலான சமூக சீரழிவுகளுக்கு கிருத்துவ மதம் தான் காரணம். முன்பு, ஐரோப்பியர்கள் இப்பொழுது அமெரிக்கர்கள் இந்தியாவை கெடுத்து வருகிறர்கள். அவர்களது குடி, கூத்து, நடு இரவு கேளிக்கைகள், பெண்களுடன் பழகுவது, ஹோட்டல்களில் கும்மாளம் அடிப்பது, தாராளமான செக்ஸ் வைத்துக் கொள்வது, போன்ற மிருகத்தனமான செயல்களால், இளைஞர்களை கெடுத்து வருகிறார்கள். போதாகுறைக்கு போதை மருந்துகளையும் பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் ஏஜென்டுகளை வைத்து விற்கிறார்கள். இதனால், மேன்மேலும், இந்திய சமூகம் சீரழிந்து வருகிறது. ஆனால், ஒன்றுமே தெரியாதது போல, இவர் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டதை நான் மிக்கவும் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது திட்டமிட்ட செயல். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன . ஒரிசா கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டது மனித இனத்திற்கு எதிரான தீவிரவாத செயலாகும்”, என்று புலம்புகிறார். அப்படியென்றால், கிருத்துவ்வர்கள் இந்தியாவில் செய்து வருவது எத்தகைய வேலை? அது அமைதியான, சாந்தமான, சாத்துவிகமான வேலையா?

Sexy christianity - pastor sex India

இந்திய கிருத்துவர்கள் தங்களது கிருத்துவத்தை சுத்தப் பட்டுத்திக் கொள்ளவேண்டும்: கிருத்துவராக, உண்மையிலேயே, கிருத்துவத்தை சுத்தமாக்க வேண்டும் என்றால் அந்த வேலையை இந்திய கிருத்துவர்கள் முதலில் செய்யட்டும். அதை விடுத்து, இந்திய விரோத பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தொடர்ந்து அவ்வாறு செய்து வருவதால், அது எடுத்துக் காட்டப்படுகிறது, விமர்சனம் செய்யப் படுகிறது. ஆகவே, பொறுமையில்லாமல் மற்றவர்கள் மீது கோபிப்பதிலோ, வசை பாடுவதிலோ, கிருத்துவம் அசிங்கத்திலிருந்து, ஆபாசத்திலிருந்து விடுபட்டு விடாது. கிருத்துவம் வக்கிரமான செக்ஸ், பாலியல், பணம் கையாடல் குற்றங்களில் ஈடுப்பட்டுள்ளது, உலகளாவிய போக்காக உள்ளது. ஆனால், பாரம்பரியம் மிக்க மதம் மாறிய இந்திய கிருத்துவகளும் அவ்வாறு ஏன் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் கேள்வி.

வேதபிரகாஷ்

© 18-07-2013


[3] Catholic nun trainee gang-raped by her cousins for a week in India: report
http://www.nydailynews.com/news/world/catholic-nun-trainee-gang-raped-india-report-article-1.1401651

[4] The gang rape of a 28-year-old nun in India’s Orissa state appears to be the result of a family feud — not an act of Hindu fundamentalists, who were initially blamed.

http://cathnews.co.nz/2013/07/19/family-feud-apparently-led-to-gang-rape-of-indian-nun/

[5] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironical that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians..

[6] Defence questions identity of Kandhamal rape victim – CORRESPONDENT – http://www.thehindu.com/news/states/other-states/article876901.ece

[7] Cardinal decries rape of Orissa nun, low status of women in India, CWN – July 16, 2013
http://www.catholicculture.org/news/headlines/index.cfm?storyid=18466

[8] Nirmala Carvalho, Card. Gracias: Rape of Orissa nun, act of terrorism against humanity,
http://www.asianews.it/news-en/Card.-Gracias:-Rape-of-Orissa-nun,-act-of-terrorism-against-humanity-28479.html

மறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன!

ஜூலை 16, 2013

மறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன!

அந்நிய ஊடகங்களின் இந்திய விரோத பிரச்சாரம்: மறுபடியும் கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். “கூட்டு கற்பழிப்பு” [gange rape] செய்யப்பட்டிருக்கிறாள்[1]. அந்நிய நாளிதழ்களில் வழக்கம் போல பிரபலமாக, அதிரடி பாணியில் செய்திகளைக் கொடுத்துள்ளன:

ஒரு கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டுள்ளது[2]:

Catholic nun kidnapped, raped in India

Catholic Culture-9 hours ago

A Catholic nun was abducted and repeatedly raped by a gang of men in India’s troubled Orissa state earlier this month. The 28-year-old victim 

The Orissa state has a history of recent turmoil, much of it pitting Hindus against Christians.

இந்துக்களை கிருத்துவர்களுக்கு எதிராக மோத வைத்து கலவரங்களை ஏற்படுத்துவதில் ஒரிசா மாநிலம் தனக்கென சரித்திரத்தைக் கொண்டுள்ளது. சமீபத்தை நிகழ்சிகள் கூட அவற்றைக் காட்டுகின்றன என்று முடித்துள்ளது.

உடனே கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் இது பெண்களின் மீதான தீவிரவாதம். நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். “இது ஒரு திட்டமிட்ட செயல்”, என்றும் கூறியிருக்கிறார்.

“I condemn this gang rape of this young nun in the strongest possible terms.  This is gang rape is physical and emotional terrorism against our woman” Card. Oswald Gracias, president of the Bishops’ Conference of India (CBCI) tells AsiaNews reacting to the attack on a nun in Orissa. The religious of the Franciscan Missionaries of St. Joseph, lived in Chennai (Tamil Nadu) to continue her studies.

“This violation of our young woman religious – said the cardinal – is evil act inflicted on this woman religious who has consecrated  her life to God Rape is an abhorrent crime and an abominable transgression against the honour of women and reflects abysmal state of women in  our society, community and nation”.

Considering the dynamics of the attack, the cardinal stressed that “this wasn’t a random act of barbarism, it was meticulously planned allegedly as an act of retaliation and this heightens the gravity of the deplorable and utterly reprehensible crime.”

லண்டனிலிருந்து வெளிவரும் “டெயிலி மெயில்”, “ஒரிசாவில் கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக மைத்துனனும், நண்பனும் கைது” என்று அறிவிக்கிறது[3]. சம்பந்தமே இல்லாமல் சென்ற வருடத்தைய ஒரு புகைப்படத்தையும் போட்டுள்ளது.

சென்னையிலிருந்து கந்தமால் வரை: சென்னையில், செயின்ட் மேரீஸ் கான்வென்டில் [St Mary Convent] கன்னியாஸ்திரி பயிற்சி பெறும் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த மூவருள் இருவரை, போலீசார் கைது செய்தனர்[4]. இதில் ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder ] இருவரும் மைத்துனர்கள் ஆவர்[5]. மூன்றாமவன் தப்பித்து விட்டான், ஆனால், போலீஸார் தேடி வருகின்றனர்[6].

கன்னியாஸ்திரியின் உறவினர்கள் அழைத்தது: ஒடிசா, காந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த, 28 வயது பெண், சென்னையில் உள்ள தனியார் கான்வென்டில், கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரை தொலைபேசியில் அழைத்த மர்மப் பெண், அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, உடனே ஊருக்கு புறப்பட்டு வரும்படி தெரிவித்தார். இதனால் பதறிப்போன கன்னியாஸ்திரி, தன் தாயை பார்ப்பதற்காக, கடந்த, 5ம் தேதி (05-07-2013, வெள்ளிக்கிழமை), ரயிலில் சென்றார். தன் சொந்த ஊர் செல்வதற்காக, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது, அங்கு காத்திருந்த அவரது உறவினர்கள் இருவர் உட்பட மூவர், அவரை, கஜபதி மாவட்டம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களுக்கு கடத்திச் சென்று, ஒரு வாரத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்தனர்[7]. பின், அவரை, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில், 11ம் தேதி (11-07-2013, வியாழக்கிழமை) இறக்கிவிட்டு, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவோம் என, மிரட்டி விட்டுச் சென்றனர்.

கன்னியாஸ்திரி புகார் கொடுத்தது: ஜூலை 13 அன்று தப்பித்துச் சென்று, வீட்டுக்கு வந்த கன்னியாஸ்திரி, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து, தாயிடம் கூறினார். பின், இருவரும், பாலிகுடா போலீஸ் நிலைய அதிகாரி, கே.வி.சிங்கிடம் புகார் அளித்தனர்[8]. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களான, ஜதிந்திரா, ஜோகேந்திரா ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து, கந்தமால் மாவட்ட கூடுதல் எஸ்.பி., கோபிந்த் சந்திர மாலிக் கூறியதாவது[9]: “கன்னியாஸ்திரியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது, section, கடத்தல் -366 (kidnapping), நம்பிக்கை மோசடி, கற்பழிப்பு -376 (rape), பலாத்காரம் செய்யவேண்டி தாக்குதல்355 (assault to dishonour person), குற்றம் செய்ய சதிதிட்டம் தீட்டுதல் 120(B) (criminal conspiracy) of the IPC. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போன் செய்து தவறான தகவல் அளித்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகிறோம். குற்றவாளிகள் மற்றும் கன்னியாஸ்திரிக்கு MKCG மருத்துவமனையில் [MKCG Medical College Hospital in Berhampur] மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[10].

கிருத்துவர்களின் இந்தியாவிற்கு எதிரான விஷமத் தனமான பிரச்சாரங்கள்: கன்னியாஸ்திரியின் உறவினர்கள் கிருத்துவர்கள் தாமே, பிறகு ஏன் கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டு ஊளையிடுகிறது[11]. ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder] என்று பெயர்களை வைத்திருப்பதால் அவர்கள் இந்துக்கள் ஆவார்களா, இல்லை அவர்கள் ஏன் அப்படி இந்துபெயர்களை வைத்திருக்கின்றன என்று கேட்டால், அதற்குக் காரணமே, கத்தோலிக்க வாடிகனின் மோசடி வேலைகளே. முன்பு ஜபுவாவில் இதே போல “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று உலகம் முழுவதும் அலறி ஓலமிட்டன. ஆனால், கற்பழித்ததில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் என்றும் அடங்கி விட்டன. பிறகு “கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று கலாட்டா செய்தனர். மருத்துவ அறிக்கைகளில் அவள் ஏற்கெனவே உடலுறவுக் கொண்டிருப்பதால், கற்பழிக்கப் பட்டாளா என்று சொல்லமுடியாது என்று தெரிய வந்தது. தில்லியைச் சேர்ந்த அதிகாரம், செல்வாக்குக் கொண்ட ஒரு கத்தோலிக்க பாதிரி வேறு பெண்ணை முகமூடி இட்டு கொண்டு வந்து பேட்டியளிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால், அவர்களே அதனை அமுக்கிவிட்டனர்.

 • முன்பு ஜாபுவா என்ற இடத்தில் இதே மாதிரி ஒரு கன்னியாஸ்தீரி கற்பழிக்கப்பட்டாள் என்று உலகம் முழுவதும் ஊளையிட்டனர், ஆனால், கற்பழித்ததில் கிருத்துவர்களே இருந்தனர் என்றதும் அமைதியாயினர்[12].
 • அதே போல ஒரிஸாவிலும் – கந்தமால் – ஒரு கன்னீயாஸ்திரி கற்பழிப்பு என்றனர். சோதனையில் வேறு விதமான முடிவுகள் (அதாவது அவர் ஏற்கெனெவே யாருடனோ உடலுறவு கொண்டது, அபார்ஷன் ஆகியது……………..) வந்தது, கப்-சிப் என்றாகி விட்டனர். பெண்ணையே மாற்றி கேசை திசைத் திருப்பப் பார்த்தனர்[13].

கிருத்துவம் என்று மக்களை ஏதோ புனிதமானது ஒன்று என்றெல்லாம் விளம்பரப் படுத்திக் கொண்டாலும், ஒழுக்கம் இல்லாததால், தட்டிக் கேட்பர்கள் யாரும் இல்லாததால், “தாங்களே தமது நீதிபதிகள்” என்ற செருக்கினால், பெண்கள், குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் சுவை பார்த்து, போகத்தில் திளைத்து அலைய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, மறுக்கப் படுகிறது எனும்போது சண்டை வருகிறது, சர்ச்சிலே சச்சரவு வருகின்றன, ஏன் கொலைகள் கூட நடக்கின்றன! கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான்! ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க? இல்லை, அவர்கள் தாம் அந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறார்களா என்றெல்லாம் கேல்விகள் எழுந்தபோதுதான், அவர்கள் தங்களது கேவலத்தை அறிந்து மௌனமானார்கள் – உதாரணம் – ஜாபுவா கற்பழிப்பு (இதில் உண்மையில் கற்பழித்தது கிருத்துவர்கள்தாம்), கந்தமால் கற்பழிப்பு (பரிசோதனை முடிவு சாதகமில்லாததால் அமுக்கிவிட்டனர்)[14]. இப்பொழுது இப்பிரச்சினை எழுந்துள்ளது.

பெண்களை கற்பழிக்கத் தூண்டும் காரணிகள்,  சக்திகள்,  காரணங்கள் யாவை?: பெண்கள் கற்பழிக்கப்படுவது மிகவும் கொடுமையானது. ஆனால், பாரம்பரியம் மிக்க இந்தியாவில், இளைஞர்களை அவ்வாறு சீரழிய வைத்து, மனங்களைக் கெடுத்து, பெண்களை காமப் பொருட்களாக பாவிக்க வைத்து, அவர்களை கற்பழிக்கத் தூண்ட வைக்கும் சக்திகள் யாவை, அவை ஏன் அவ்வாறு செய்து வருகின்றன, இந்திய சமூகத்தின் மீது அவை எப்படி அத்தகைய செயல்களை செய்து வருகின்றன என்பதனையும் ஆராய வேண்டும்.

வேதபிரகாஷ்

© 16-07-2013


[6] The two cousins — Jatindra Subhasunder and Jogendra Subhasunder — were arrested, while the third accused was still at large, Kandhamal district Additional Superintendent of Police Gobind Chandra Mallick said. Trainee nun gang-raped by 3; 2 arrested, PTI | Jul 15, 2013, 07.01 PM IST.

[12] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironical that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians..

[13] Defence questions identity of Kandhamal rape victim – CORRESPONDENT – http://www.thehindu.com/news/states/other-states/article876901.ece

போப்பே பழைய போப்புகளுக்கு துறவி அந்தஸ்து கொடுக்கிறாராம்!

ஜூலை 6, 2013

போப்பே பழைய போப்புகளுக்கு துறவி அந்தஸ்து கொடுக்கிறாராம்!

துறவித்துவம் அல்லது துறவி அந்தஸ்து (Sainthood) அளிக்கப்படுவது என்பது கத்தோலிக்கக் கிருத்துவத்தில் ஒரு சிறப்பான நிகழ்சியாகக் கருதப் படுகிறது. ஒருவருக்கு அவ்வாறான நிலை, அந்தஸ்து அல்லது பதவி கொடுக்கப்படுவது பிரபலமாக அறிவிக்கப்படுகிறது. போப் 05-07-2013 வெள்ளிக்கிழமை அன்று இரண்டு போப்புகளுக்கு – போப் ஜான் பால் II [Pope John Paul II] மற்றும் போப் ஜான் XXIII [Pope John XXIII] துறவி அந்தஸ்து (Sainthood) கொடுக்கப்பட்டுவதாக அறிவித்தார்.

ஒன்றிற்கு மேற்பட்டஅற்புத / அதிசயநிகழ்சியை நடத்தியிருந்தால் துறவி அந்தஸ்து கொடுக்கப் படும்: அவ்வாறு அவர்கள் அறிவிக்கப்பட வேண்டுமானால், குறைந்த பட்சம் ஏதாவது ஒன்றிற்கு மேற்பட்ட அற்புத / அதிசய நிகழ்சியை நடத்தியிருக்க வேண்டும்[1]. போப் ஜான் XXIII 1958-1963 ஆண்டுகளிலும், போப் ஜான் பால் II 1978-2005 ஆண்டுகளிலும் போப்பாக இருந்தனர்[2]. ஆனால், இவ்விருவரும் இரண்டாவது அற்புத நிகழ்சியை (miracle) நடத்தவில்லையாம். இருப்பினும் போப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்து, சரத்துக்களைத் தளர்த்தி துறவி அந்தஸ்து (Sainthood) கொடுக்கத் தீர்மானித்துள்ளாராம்[3]. இப்பொழுது இரண்டு போப்புகள் இருப்பதால், இருவரும் துறவி அந்தஸ்து கொடுக்கும் நிகழ்சியில் பங்கு கொள்ளலாம். இது கிட்டத்தட்ட, கலைமாமணி விருது கொடுப்பது போல ஆகிவிட்டது எனலாம்.

கிழக்கத்தைய மதங்களில் துறவிகள் துறவிகளாகத்தான் அறியப் படுகின்றனர்: கிழக்கத்தைய மதங்களில் துறவிகள் அவர்களுடைய செயல்களால் அவர்கள் அறியப்படுகின்றனர். யாரும் அவர்களுக்கு அத்தகைய பட்டத்தையோ, சான்றிதழையோ, அங்கீகாரத்தையோ அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்கள் அவ்வாறு மதிக்கப்படுகிறார்கள், மரியாதை செய்யப் படுகிறார்கள். சில துறவியர், இறந்த பின்னரும் “ஜீவன் முக்தி” என்ற நிலையில் இறந்தும் இறவாமல், தமது சீடர்களுக்கு, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்கள். அத்தகைய அனுபவங்களை இந்தியாவில் இன்றும் பக்தர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

ஆதாரங்கள் இல்லையென்றல் உருவாக்கும் கத்தோலிக்கக் கிருத்துவம்: ஆனால், கிருத்துவத்தில் எல்லாவற்றிற்கும், விளம்பரம் செய்யப்படுகிறது, தேவைப்படுகிறது. ஒருவேளை, ஏதாவது இல்லை அல்லது தேவை என்றல் அவற்றை உருவாக்கி விடுகிறார்கள். இதனால் தான் போலிகள், கள்ளத்தனமான ஆவணங்கள், பொய்யான பொருட்கள், முதல்லியன்ன உருவாக்கப்பட்டுகின்றன. ஏனெனில், அவை இல்லையென்றால் நம்பிக்கையாளர்கள் நம்புவதில்லை. ஆரம்பத்திலிருந்து இப்படி பொய்யான விஷயங்கள் மீது ஆதாரமாக கிருத்துவ்ம் தோன்றியதால், உண்மை என்று அறிய முற்படும் போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தங்களது ஆதிக்கப்பலம், செல்வபலம், அரக்கத்தனமான சக்தி முதலியவற்றை வைத்துக் கொண்டு சமாளித்து விடலாம் என்ன்ற எண்ணம் தான் அவர்களை அப்படி தொடர்ந்து குற்றங்களை செய்யத் தூண்டுகிறது.

இந்தியக் கிருத்துவர்களின் இருதலைக் கொள்ளி எறும்பு நிலை: இந்தியாவில் இருப்பவர்களுக்கு உண்மை என்னவென்று நன்றாகவே தெரியும். அதனால் தான், தங்களது பொய்களை இங்கு விற்பதற்கு, ஆக்ரோஷமான யுக்திகளைக் கையாளுகின்றனர். புதிய பொருளை விற்பதற்கு எப்படி ஊற்பத்தியாளர் எல்லாவழிகளிலும் பொருளை விற்பதற்கு அதிரடி விளம்பரங்கள் முதலியவற்றை செய்வார்களோ, அதே பாணியில் இவர்களும் செயல்படுகின்றனர். மனம், ஆத்மா, உண்மை, உள்ளுணர்வு என்றெல்லாம் இருக்கும் இந்தியமதக் கொள்கைகளின் முன்பு அதனால்தான், ஒரு காலகட்டத்தில் செய்யலிழக்கிறது. இல்லையென்றால், இடைக்கால இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு, இந்து மதம் ஈடு கொடுத்திருக்க முடியாது. பிறகு வந்த ஐரோப்பிய கிருத்துவ அச்சுரத்தனத்திற்கு முன்பாகவும் நிலைத்திருக்க முடியாது. ஆனால், உலகத்தில் எங்குமே இல்லாத அளவிற்கு, இரண்டையும் எதிர்த்து இன்றும் இந்திய / இந்து மதம் தழைத்திருப்பதால், அவைகள் தாம், இந்துவேடமிட்டு, இந்துக்களை ஏமாற்ற முயல்கிறதே தவிர, இந்துக்கள் யாரும் அவர்கள் போல வேடமிட்டு ஏமாற்றுவதில்லை.

வேதபிரகாஷ்

© 06-07-2013