Archive for ஜூன், 2013

பாதிரிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது ஏன் – அதிகாரப்போரா, பதவி போராட்டமா, இறையியல் குழப்பமா?

ஜூன் 15, 2013

பாதிரிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது ஏன் – அதிகாரப்போரா, பதவி போராட்டமா, இறையியல் குழப்பமா?

Thomas with Ooty diocese membersபாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பாதிரி அமலன் கொலை: கிருத்துவப் பாதிரிகள் கொலை செய்யப்படுவது அதிகமாகி வருகிறது. அவற்றின் பின்னணியும் மர்மமாக இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ஞானசவுந்தர் மகன் அமலன் (54). கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரியாரான இவர், கழுகுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார்[1]. பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் “குடும்பநல்வாழ்வு பிரிவு செயலராக’ ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிவந்தார்[2]. பாளையங்கோட்டை, சாந்திநகர், குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் உள்ள  ஜூப்ளி அருட்பணி இல்லத்தில் தங்கி பணியாற்றி வந்தார். 14-02-2011 மர்மமான முறையில்[3] கொலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்[4]. செய்தி வந்ததோடு சரி பின்னர் என்னாயிற்று என்ற விவரங்கள் தெரியவில்லை[5].

Fr. Amalan G.J

Fr. Amalan G.J

ராமநாதபுரத்தி ல்உள்ள ஆர்.சி. சர்ச் பாதிரி செல்வராஜ் கொலை: திருச்சி கிராப்பட்டி 5வது தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா மேரி (40), ராமநாதபுரத்தில் உள்ள ஆர்.சி. சர்ச்சில் சமையல் வேலை செய்துவந்தார். 2008ம் ஆண்டு பாதிரியாராக இருந்தவர் செல்வராஜ் (48), ஸ்டெல்லா மேரியுடன் தொடர்பு கொண்டார், அவ்வப்போது உறவும் ஏற்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி, ஸ்டெல்லாமேரியை பாதிரியார் செல்வராஜ் நாகையை அடுத்த வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்து, ஒரு விடுதியில் தங்கினர். மறுநாள் 6ம் தேதி காலை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஸ்டெல்லா மேரி, பாதிரியார் செல்வராஜை வற்புறுத்தியபோது, பாதிரியார் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது, பாதிரி கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். ஆத்திரத்தில் இருந்த ஸ்டெல்லா மேரி, சிறிது நேரம் கழித்து பாதிரியார் கழிவறை கதவை திறந்ததும் அவர் மீது பாய்ந்து, அவரது கழுத்தைபிடித்து கழிவறை சுவரில் பலமாக மோதினார். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு கீழே விழுந்த செல்வராஜ் அதே இடத்தில் இறந்தார். ஸ்டெல்லா மேரி தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் ஸ்டெல்லாமேரி சிக்கினார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நாகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சோலைமலை நேற்று தீர்ப்பளித்தார். ஸ்டெல்லா மேரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Selvaraj - Stella Maryதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்மமரணம்[6]: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர், ரெக்டார், சமியார் P. சூசை மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தார். ஏற்கனவே, கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சையில் இக்கல்லூரியின் முதல்வர் சிக்கியுள்ள நிலையில், அதிபரின் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மைக்கேல்புரத்தைச் சேர்ந்த பாதிரியார் சூசை (52). சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்த இவர், கடந்த ஓராண்டுக்கு முன் 2009ல், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபராக (ரெக்டர்) நியமிக்கப்பட்டார். 1990ல் சொஸைடி ஆஃப் ஜீஸஸ் (Society of Jesus) என்ற கத்தோலிக்க அடிப்படை சபையில் பாதிரியாக சேர்க்கப்பட்டு அதில் 33 வருடங்கள் வேலை செய்தார். கல்லூரியின் கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேஷன்ஸ் மற்றும் ஹாஸ்டல் வார்டன் என்று பல்;அ பொறுப்புகளில் இருந்துள்ளார்[7]. கற்பழிப்புப் புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள ராஜரத்தினம் விலக்கல் ஆணையைப் பிறப்பித்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது[8].

ரோமன் கத்தோலிக்க குருமார்களுக்கான பயிற்சி கல்லூரி இயக்குநர் கே.ஜே.தாமஸ் கொலை: பெங்களூர், ஏப். 2, 2013 அன்று யஸ்வந்த்புரம் 8வது மெயினில் உள்ளது ரோமன் கத்தோலிக்க குருமார்களுக்கான பயிற்சி கல்லூரி. இங்கு இயக்குநராக பணியாற்றி வந்தவர் கே.ஜே.தாமஸ் (65). இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு இவர் பாடமும் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் ஈஸ்டரை முன்னிட்டு அனைவரும் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். பங்குதந்தை, தாமஸ் மற்றும் பேட்டரிக் ஆகிய 2 பேர் மட்டும் பயிற்சி கல்லூரியில் இருந்துள்ளனர். இருவரும் தனித்தனி அறையில் தங்கி வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்கள் தூங்கி கொண்டிருந்தபோது தாமசின் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்[9]. மழை அதிகமாக பெய்து கொண்டிருந்ததால் சத்தம் வெளியே கேட்கவில்லை. மற்றொரு பங்குத்தந்தை பேட்ரிக்கின் அறையை திறக்க முயன்றுள்ளனர். முடியாததால் தப்பிச்சென்றுள்ளனர். நேற்று காலையில் பேட்ரிக், தாமசின் அறையில் ரத்தம் வருவதை பார்த்து உள்ளே சென்றார். தாமஸ் கொல்லப்பட்டது தெரியவந்தது. போலீசுக்கு தகவல் அளித்தார்.

இரும்புக்கம்பி, செங்கல்ஆகியபொருட்களால் அடித்து அவர் கொல்லப் பட்டிருக்கலாம்: மாநகர கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி, சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அலோக்குமார், டிசிபி சித்தராமப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரும்புக்கம்பி, செங்கல் ஆகிய பொருட்களால் அடித்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை ஆர்.சி பிசோப் பெர்னாட் மோரஸ், பங்குதந்தை அந்தோணி சாமி ஆகியோர் பார்வையிட்டனர். போலீசார் விசாரணை யில் பங்குதந்தை தாமஸ் கேரளாவை சேர்ந்தவர். 30 வருடங்களாக பங்குத்தந்தை பணியில் உள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு பெங்களூருக்கு மாறுதலாகி வந்துள்ளார். தமிழ், கன்னடம், மலை யாளம், ஆங்கிலம் உள்பட பல மொழிகளை பேசும் திறமை கொண்டவர். கேரளாவில் பிறந்து ஊட்டி மறைமாவட்டத்தில் குருவான குரு.கே.ஜே. தாமஸ், தற்போது இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[10]. போலீசார் விசாரணை யில் பங்குதந்தை தாமஸ் கேரளாவை சேர்ந்தவர். 30 வருடங்களாக பங்குத்தந்தை பணியில் உள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு பெங்களூருக்கு மாறுதலாகி வந்துள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்பட பல மொழிகளை பேசும் திறமை கொண்டவர்.

Catholic sex fugitivesபெங்களூரு கொலைக்கு ஊட்டியில் ஊர்வலம்[11]: இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், கொலைக்கான காரணத்தை விரைவில் வெளிப்படுத்த வேண்டுமெனக் கோரியும், உதகை மறை மாவட்டத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை (18-04-2013) மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது. மறை மாவட்ட ஆயர் அருளப்பன் அமல்ராஜ்[12] தலைமை வகித்தார். இதில் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து குருக்களும், அருட்சகோதரிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர்.  உதகை காஃபி ஹவுஸ் சந்திப்பிலிருந்து தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. அங்கு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பிரகாஷிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  அதேபோல இப்பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசை வலியுறுத்தக் கோரி, முதல்வர், ஆளுநர் ஆகியோருக்கும், கர்நாடக மாநில ஆளுநருக்கும் நீலகிரி ஆட்சியர் மூலமாக கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

Fugitive-Joseph-Palanivel-arrested-March17-2012ஆனால் ஊட்டியில் ஒரு தாளாளர் சிறுமிகளை, இளம்பெண்களை செக்ஸ்-டார்ச்சர் செய்துவந்ததைத் தடுக்கவில்லை, கண்டிக்கவில்லை, போராடவில்லை. இன்னொரு பிஷப் மறைந்து வாழ்ந்தபோது தடுக்கவில்லை[13]. அப்படியென்றால், குற்றங்களை இவர்கள் ஆதரிக்கிறார்களா? குற்றவாளிகளை மறைக்கிறார்களா? மே மாதம் 2006ல் வாடிகணிலிருந்து வந்த பதில் கடிதத்தில், “………..அந்த ஆளுடைய நடவடிக்கை கண்காணிக்கப் படவேண்டும். இதற்கு மேலும் அவன் சிறுமியர்களுக்கு எந்த அபாயத்தையும் ஏற்படுத்தாதவாறும், நம்பிக்கையுள்ளவர்களிடையே அவதூறு ஏற்படும் வகையில் எதையும் செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்”, என்றும் பரிந்துரைத்தது. ஆனால் அதற்குள் அவன் மேல் மேலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்பொழுது அவன் எங்கே என்று தேடியபோதுதான், ஊட்டியில் ஜாலியாக இருந்தது தெரிய வந்துள்ளது. இணைதளத்தில் எல்லா கடிதங்களும் வெளியிடப் பட்டுள்ளன. அவை எல்லாமே பிஷப் / பாதிரி ஏ. மலையப்பன் சின்னப்பா, ஏ. அந்தோனிசாமி, அருளப்பன் அமல்ராஜ்…………………………என்ற எல்லோருக்கும் 2005லிருந்தே நன்றாகத் தெரியும். இருப்பினும்., அந்த காமுகனின் செயலை மறைத்த விதம் ஆச்சரியமாகவே உள்ளது[14].

Stop killing Catholics campaignகிருத்துவ பிரச்சாரம், உபன்யானம், விளக்கம் ஏன்?: “Tamil Catholic priests killed” என்று கூகுளில் தேடினால், இலங்கை சமாச்சாரம் தான் வருகிறது. ஏதோ இலங்கையில் அவர்கள் மட்டும்தான் கொல்லப்படுவதைப் போல பிரமிப்பை ஏற்படுத்துகிறது[15]. இதில் வேடிக்கையென்னவென்றால் தமிழ்நாட்டில் கொல்லப்படும் பாதிரியார்களின் விவரங்கள் கூட வருவதில்லை. ஆகவே இது அப்பட்டமான பிரச்சாரம் என்று தெரிகிறது. விகிபிடியா நம்பிக்கைக்காக உயிரிழந்தவர்கள் என்று பட்டியல் போட்டுக் காட்டுகிறது[16]. “Martyr” உயித்தியாகிகள், மதத்திற்காக உயிர்விட்டவர்கள் என்றுதான் பட்டியல் இட்டுக் காட்டுகிறது[17]. இதுவும் இடைக்கால பொய்பிரச்சரத்தை ஒத்திருக்கிறது. அதாவது, கிருத்துவர்கள் இறந்தது, கொல்லப்பட்டது எந்த காரணத்திற்காக இருந்தாலும், அவர்கள் மதத்திற்காக உயிவிட்டார்கள், உயிர்தியாகம் செய்தார்கள், அதனால் அவர்கள் தியாகிகள் என்று எல்லா உண்மைகளையும் மாற்றி, அவர்கள் புனிதர்கள் போல காட்டி எழுதுவார்கள்[18].

Jeypaul-the sex-priest

Jeypaul-the sex-priest

கிருத்துவர்களின் கொலைகளை,  இறப்புகளை இறையியல் ரீதியில் அணுகுவது ஏன்?: கத்தோலிக்க ஊடகங்கள் இவற்றை இறையியல் ரீதியாகத்தான் அணுகுகின்றன. “Priest murdered, nun commits suicide in southern India” என்று கத்தோலிக்க இணைதளம் இருமுறை தலைப்பிட்டு செய்திகளை “தினத்தந்தி” போல வெளியிட்டுள்ளது[19]. இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால், “ஈஸ்டர் தினக்காலத்தில் தென்னிந்திய கிருத்துவர்களுக்கு இரண்டு சோகநிகழ்சிகள் ஏற்பட்டுள்ளன. பெங்களூரில் ஒரு பாதிரி கொல்லப்பட்டுள்ளார் (ஏப்ரல் 1, 2013). ஒரு இளம் கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்டுள்ளாள் (30-03-2013)”, என்று விவரிக்கிறது[20].

17-03-2006: இஸெபயோ பெராவோ என்ற 61 வயது பாதிரி தலையணை வைத்து அமுக்கிக் கொல்லப்பட்டார். அவர் அமைதியை வேண்டிவந்ததால், அவருக்கு யாரும் விரொதிகள் இல்லை என்று வாதிட்டனர். ஆனால், கொல்லப்பட்டது ஏன் என்று சொல்லப்படவில்லை[21].

26-11-2006: ஜேகப் பெர்னான்டிஸ் என்ற பாதிரி செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் கொல்லப்பட்டார். காரணம், கொலை செய்தவர், அம்மலை இந்துக்களது சொத்து என்று கூறினானாம்[22].

24-08-2004: ஜாப் சிட்டிலப்பிள்ளி என்ற பாதிரி கத்தியால் குத்தப்பட்டு செத்துக் கிடந்தார். காரணம் தெரியவில்லை[23].

இவையெல்லாம் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்கர் உலகம் முழுவதும் அதிகாரத்தைப் பெற்றுள்ளவர், ஆதிக்கத்தைக் கொண்டவர், பணபலம்-ஆள்பலம் கொண்டவர் – அதனால், அவர்களால் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இந்தியாவைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது நம்பிக்கை என்ற எல்லகளைக் கடந்து இப்படி பலவழிகளில் இந்திய சமூக நடப்புகளில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொய்யான பிரச்சாரம், சரித்திர ரீதியில்லாத எழுத்துகள், ஊடக ஆதிக்கம், என்று தாக்கி வருகிறார்கள். அந்நிலையில் தான் இந்தியர்கள் அவர்களது போக்கை ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

15-06-2013


[4] தினமலர், நெல்லையில் பாதிரியார் கொலை, பிப்ரவரி 16,2011,,http://www.dinamalar.com/News_Detail.asp?Id=189443

[6] தினமலர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்ம மரணம், டிசம்பர் 20,2010,http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149603

[18] இது அப்படியே ஜிஹாதி மனப்பாங்கை எடுத்துக் காட்டுகிறது. ஆகவே, கிருத்துவர்கள் இந்தியாவில் அத்தகைய கிருத்துவ ஜிஹாதி எண்ணத்தை வித்திட்டு வளர்க்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.

[20] Catholics in southern India faced double tragedies at Easter time: the murder of the rector of a regional major seminary and the suicide of a young nun. Father K. J. Thomas, rector of St. Peter’s Seminary in Bangalore, was found murdered April 1. In Coimbatore Holy Saturday, March 30, Sister Angeline Nirmala Reena drank poison and told fellow nuns about it during breakfast before she collapsed and died in a hospital in southern Tamil Nadu state. http://www.catholicsentinel.org/main.asp?SectionID=2&SubSectionID=34&ArticleID=20997

[21] 2006/03/17, Fr. Eusebio Ferrao, aged 61, parish priest at St Francis, Macasana, southern Goa, India, was killed during the night. When the priest failed to appear for morning Mass, a few of the parishioners went to look for him and found him dead in his room, apparently suffocated with a pillow. According to the people Fr. Ferrao was a man of peace and had no enemies. He was a member of the diocesan Commission for liturgy and served his parish community of about 3,200 faithful with zeal and humility.

[22] 2006/11/26, Jacob Fernandez, a lay Catholic, who worked in a Religious Bookshop at the Shrine of Mount St Thomas in Chennai, in the Indian state of Tamil Nadu was murdered. He was attacked and killed for no reason in front of a crowd of terrified eyewitnesses present in the bookshop. Reportedly the assailant, in a state of violent excitement, demanded to see the parish priest and loudly claimed the Shrine area as Hindu property. The police said the suspect arrested was “mentally instable”, but local Catholics know the man as a fanatical extremist in contact with anti-social groups. Mr Fernandez was known as a devout Catholic who attended daily Mass at the Shrine and lived his life as a mission.

[23] 2004/08/28, Rev. Job Chittilappilly, Indian, aged 71, was found dead with numerous stab wounds in his home next to the parish church of “Our Lady of Grace” in the village of Thuruthiparambu, Kerala (India). Father Job was attacked and murdered while reciting the rosary in preparation for the celebration of Mass. Nothing was stolen or misplaced in the house where he had lived for 45 years ministering to the Catholic community of Syro-Malabar rite. The priest had received threats and warnings to stop “proselytising”. Although during his home visits to the needy, the priest used to visit Hindu families, he never proselytised.