ரூ. 54 கோடி – இவான் அம்ப்ரோஸ் நடத்தும் இரண்டு நிறுவனங்கள் அமெரிக்கா உட்பட பணம் பெற்றது தெரிய வந்துள்ளது!
கிருத்துவர்கள் அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறுவதது வெளிப்படையான ரகசியம்: கிருத்துவர்கள் அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறுவதது என்பது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. ஒவ்வொரு வருடமும் பாராளுமன்றத்தில் யாராவது கேள்வி கேட்டால், உள்துறை அமைச்சகம், அந்நிய செலாவணி கட்டுப்படுத்துதல்
இதற்கு முன்னர் கூட இஸ்லாமிய தீவிரவாதிகள் அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், அதற்குப் பிறகு, என்ன நடவடிக்கை எடுத்தது என்று ஒன்றும் தெரிவிக்கவில்லை. |
சட்டத்தின் கீழ் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில், கிருத்துவ நிறுவனங்கள் எப்படி கோடிக்கணக்கில் பணம் பெறுகின்றனர் என்று, பட்டியலையே கொடுக்கிறது, ஆனால், விவாதத்தை மட்டும் கட்டுப்படுத்துகிறது. இதைப் பற்றிய செய்திகள் ஆங்கில நாளிதழ்களுடன் நின்று விடுகின்றன. தமிழில் எந்த விவரமும் வரவிடுவதில்லை. கிருத்துவர்களுக்கு அந்த அளவிற்கு பக்கபலம், பத்திரிக்கைபலம், பணபலம் என்று எல்லாமே இருக்கின்றன.
நூறு நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த பணம் எப்படி கிடைக்கிறது?: நூறு நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது என்றால், குறைந்த பட்சம் ரூ 50 லட்சம் செலவழித்திருக்க வேண்டுமாம், இப்படி கணக்குப் போட்டுதான், ரெய்டு நடக்கிறதாம். அதாவது, நூற்றுக்கணக்கில் கூட்டத்தைக் கூட்டி, பந்தல் போட்டு, ஊடகங்களை வரவழைத்து அதிரடியாக போராட்டத்தை நடத்தி வருவதால், அந்த அளவிற்கு பணம் செலவழிக்கப் படுகிறது என்றாகிறது. ஒரு பெரிய அரசியல் கட்சி கூட அந்த அளவிற்கு, பணத்தை வாரியிறைக்கத் தயங்குகிறது. அந்நிலையில் தான் கிருத்துவர்கள் அப்படி எங்கிருந்து பணத்தைப் பெற்று இவ்வாறு செலவழிக்கிறார்கள் என்று சந்தேகம் வந்துள்ளாதாம்[1].
டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பி ஜனவரியில் ரெய்டாம்!: கடந்த டிசம்பர் 17ம் தேதியே ஆறு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி, எப்படி அயல்நாடுகளிலிருந்து பணம் வருகிறது என்று கேட்டதாம்[2]. ஆனால், அந்த நிறுவனங்களின் பெயர்களை[3] மட்டும் சொல்ல மறுகிறதாம்! இதுவே சரியான கூத்து, ஏனெனில், உள்துறை அமைச்சகத்திற்கு தெரியாமல் பணம் வருவதில்லை[4]. வந்த பணத்தை எப்படி, எவ்வாறு, எங்கே, ஏன் செலவழிக்கிறார்கள் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. பைபிளை அச்சடித்து, இலவசமாக விநியோகிக்கிறேன் என்று பணம் வருகிறது, ஆனால், அப்பணம் வேறு செயல்களுக்கு செலவழிக்கப் படுகிறது. அவர்களது கணக்குகளை அரசு தணிக்கை செய்ய முடியாது. பிறகு அவர்களிடமே, “அப்பா எப்படியப்பா பணத்தை செலவழிக்கிறாய்”, என்று கேட்டால் சொல்லி விடுவார்களா என்ன?
தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி தொண்டு நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் ரெய்டு: கூடங்குளம் அணுஉலைக்கு எதிரானவர்களுடன் தொடர்புடைய, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது,
அணுவுலையை தடுக்கப் போராடுகிறார்களோ இல்லையோ, இப்பணத்தை வைத்துக் கொண்டு, சிறுவர்-சிறுமிகளை கடத்துதல், அனாதை இல்லங்கள் என்ற பெயரில் செக்ஸ்-டூரிஸம் நடத்துதல், சிறார்-பாலியல் போன்ற வக்கிரங்களில் ஈடுபடுதல் முதலியவற்றைப் பற்றி சோதனை செய்தால் நன்றாக இருக்கும். இந்திய சமுதாயமும் காப்பாற்றப் படும். |
டெல்லியிலிருந்து வந்துள்ள, மத்திய அரசு அதிகாரிகள் கணக்குக்கேட்டு, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அணுஉலை எதிர்ப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர். தூத்துக்குடி தன்னார்வ நிறுவனங்களில், மத்திய அரசு அதிகாரிகள், நேற்று ரெய்டு நடத்தினர். டெல்லியிலிருந்து ரகசியமாக வந்துள்ள சிறப்பு படையினர், தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி தொண்டு நிறுவனம் (டீ.எம்.எஸ்.எஸ்) மற்றும் அதன் கிளை நிறுவன நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்[5].
இதுகுறித்து, மத்திய உள்துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுடில்லியிருந்து, மத்திய அரசில் பணியாற்றும் துணைச்செயலர் அந்தஸ்தில் உள்ள, ஜோகிந்தர் பிரசாத் மற்றும் கணக்குப்பிரிவு அதிகாரி, சுக்கிந்தர் சிங் ஆகியோர் கொண்ட சிறப்பு படையினர், தூத்துக்குடி தன்னார்வ நிறுவனங்களிடம் ரகசிய விசாரணை நடத்துகின்றனர்[6]. அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர், இவான் அம்ப்ரோஸ் (Rt. Rev. Ambroise, who is heading the 88-year-old Diocese since 2005) அலுவலக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்துள்ளது. இரவு வரை, தொண்டு நிறுவன ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வெளிநாட்டிலிருந்து வந்த பணம், அதற்கான முறையான செலவுக்கணக்கு மற்றும் அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் ரெய்டில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அணுஉலை எதிர்ப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்[7].
சோதனை நான்காவது நாளாக தொடர்கிறது: இந்த விசாரணை தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள 6 நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர்.
சோனியா கிருத்துவர்களின் ஆதரவாக செயல்படுவதால், இது ஒரு கண்துடைப்பு நாடகமே எனலாம்[8]. அமெரிக்கா இதற்கு பணம் கொடுக்கிறது எனும்போது, அந்த பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யும் கிருத்துவ கைக்கூலிகளின் துரோகத்தனத்தையும் கண்டு கொள்ளலாம். |
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களை வழிநடத்தும் நபர்கள் நடத்திவரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதி ஆதாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக சிறப்பு குழு ஒன்று கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்திவருகிறது. இந்த குழுவின் விசாரணை நாளை முடிவடையும் என கூறப்படுகிறது.
சோனியாவின் பங்கு இருப்பது, மன்மோஹனின் ரஷ்யப் பயணத்தில் தெரியவருகிறது[9]. அதற்கேறார்போலவே அவரும் பேசி வருகிறார்.அதுமட்டுமல்லாது, அமெரிக்காவிற்கு அறுவை சிகிச்சைக்கு சோனியா சென்றிருந்தபோது, கிருத்துவ இயக்க பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர்[10]. நவம்பரில் சில கிருத்துவர்களின் மீது வழக்குத் தொடரப்பட்டது[11]. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே இவ்விவகாரத்தில் பல கேள்விகள் ந்ழுகின்றன:
- கூடங்குள நாடகம் எதற்கு?
- கூடங்குளம் நாடகம் எதற்கு இப்படி லட்சங்கள் செலவழித்து நடத்துகிறார்கள்?
- அரசியலாக்குகிறார்களா? அல்லது திசைத்திருப்புகிறார்களா?
- அமெரிக்காவிற்கு சாதகமாக போராடுகிறார்களா?
- ரஷ்யாவை எதிர்க்கிறார்களா?
வேதபிரகாஷ்
19-01-2012
[1] “Money has been flowing into the protests. We have been inquiring this aspect for some time now,” a source told PTI. “Without money, how can they sustain the agitation for 100 days?” the source asked. http://news.outlookindia.com/items.aspx?artid=744761
[2] http://zeenews.india.com/news/tamil-nadu/kudankulam-govt-suspects-foreign-hand-behind-stir_747540.html
[4] The Home Ministry has sent notices to six NGOs, based in Tuticorin, asking them to explain the utilisation of the funds received under Foreign Contribution (Regulation) Act, the source said without identifying these NGOs.
[5] தொண்டு நிறுவனங்களில் ரெய்டு : அணு எதிர்ப்பாளர்கள் பீதி, பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2012,, http://www.dinamalar.com/News_detail.asp?Id=387528
[8] https://christianityindia.wordpress.com/2011/12/20/russia-christians-kudangulam-bhagawat-gita-danger-extremism/
[9] http://atrocitiesonindians.wordpress.com/2011/11/13/kudankulam-nuclear-plant-business-support-opposition-explanation/