Archive for the ‘தியாகம்’ Category

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது? கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (4)!

பிப்ரவரி 27, 2012

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது?  கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (4)!

மறுபடியும் நாராயணசாமியின் குற்றச்சாட்டு: கூடங்குளம் பிரச்சினையில், கிருத்துவர்களின் தேவையற்ற தலையீடு[1] பலவழிகளில், அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது[2]. தமக்கு அனைத்துலக ஆதரவு உள்ளது என்ற மமதையில் பிஷப்புகள் வேலை செய்வதும் தெரிகிறது[3]. இதில் வியாபார நோக்கம் அதிகமாக உள்ளதாகத்தான் தெரிகிறது என்று முன்னமே விளக்கப்பட்டது[4]. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக அரசு சாரா நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணத்தின் மதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் நாராயணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் அமைப்புக்கு 54 கோடி நிதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் 11 நிதிநிறுவனங்களுக்கும் வெளிநாட்டில் இருந்து நிதி வந்துள்ளது. இப்படி சொன்னதையே திரும்பத்திரும்ப ஏன் சொலிறார் என்றும் தெரியவில்லை.

ஐடியாஸ், ஸவீடன் அமைப்பிலிருந்து உதயகுமாருக்குப் பணம்: வெளிநாட்டு நிதி பெற 9 அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. முறையாக கணக்கு பராமரிக்காததால் 3 நிறுவனங்களின் உரிமர் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். உதயகுமாருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வந்துள்ளதாகவும், “ஐடியாஸ்” என்ற ஸ்வீடன் தொண்டு அமைப்பிலிருந்து[5] உதயகுமார் அமைப்பிற்கு நிதி பெறப்பட்டுள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சாக்கர் என்ற அமைப்பில் உதயகுமார் மற்றும் அவரது மனைவி உறுப்பினர்களாக உள்ளனர்[6]. சாக்கர் அமைப்பிற்கு ரூ.5 கோடியே 32 லட்சம் நிதி வந்துள்ளது. சாக்கர் என்ற நிறுவனத்திற்கு சுவீடன் நாட்டிலிருந்து முதற்தவணையாக ரூ. 38 லட்சமும், மற்றொரு முறையாக ரூ. 5.2 கோடியும் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[7]. கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் பணம் பற்றி கணக்கு கேட்டால் சோனியாவின் வருவாய் பற்றி உதயகுமார் கேட்கிறார் என்றும் தனி நபர் வருவாய் பற்றி கணக்கு கேட்க வருமான வரித்துறைக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்[8].

உதயகுமார் வழக்கு தொடரப்போவதாக எச்சரிக்கை: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதத்தில் பேசியுள்ள பிரதமர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு தொடர உள்ளதாக கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், போராட்டக் குழுவினருக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருவதாகவும், அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களை சிந்திக்கும் திறன் அற்றவர்கள் என்ற அர்த்தத்திலும் பிரதமர் மன்மோகன் சிங் கொச்சை படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்[9]. மேலும், எனக்கு சுவீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமியும், போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக அமெரிக்காவில் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். இதுபோன்று உண்மைக்குப் புறம்பாக எனக்கு எதிராகவும், போராடும் மக்களை அவதூறாகவும் பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மீது வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார்[10].

டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பி ஜனவரியில் ரெய்டாம்!: கடந்த டிசம்பர் 17ம் தேதியே ஆறு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி, எப்படி அயல்நாடுகளிலிருந்து பணம் வருகிறது என்று கேட்டதாம்[11]. ஆனால், அந்த நிறுவனங்களின் பெயர்களை[12] மட்டும் சொல்ல மறுகிறதாம்! இதுவே சரியான கூத்து, ஏனெனில், உள்துறை அமைச்சகத்திற்கு தெரியாமல் பணம் வருவதில்லை[13]. வந்த பணத்தை எப்படி, எவ்வாறு, எங்கே, ஏன் செலவழிக்கிறார்கள் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. பைபிளை அச்சடித்து, இலவசமாக விநியோகிக்கிறேன் என்று பணம் வருகிறது, ஆனால், அப்பணம் வேறு செயல்களுக்கு செலவழிக்கப் படுகிறது. அவர்களது கணக்குகளை அரசு தணிக்கை செய்ய முடியாது. பிறகு அவர்களிடமே, “அப்பா எப்படியப்பா பணத்தை செலவழிக்கிறாய்”, என்று கேட்டால் சொல்லி விடுவார்களா என்ன?

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது?  கிருத்துவர்கள் கூடங்குளம் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்ற நிலையில், சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது? ஒன்று அவருக்கு உண்மையிலேயே அத்தகைய தைரியம் / அதிகாரம் இருக்க வேண்டும் அல்லது எல்லோருமே சேர்ந்து போடும் நாடகமாக இது இருக்க வேண்டும். யார் பணம் பெருகிறார்களோ இல்லையோ, தேவையில்லாமல், தமிழக மக்கள் மின்சாரம் இல்லாமல் மூன்று மாதங்களாக அவதிப் படுகிறர்கள். இதில் கூட்டணி மாறப்போகிறதா, அணுஉலை உதிரிகள், பராமரிப்பு முதலியவற்றிற்கு ரஷ்யா அல்லது அமெரிக்கா சப்ளை செய்யப் போகிறதா, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது, யாருக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கப் போகிறது என்றெல்லாம் இருக்கும் நிலையில் நாடகம் தொடரத்தான் போகிறது.

வேதபிரகாஷ்

27-02-2012


[5] The International Institute for Democracy and Electoral Assistance (International IDEA) is an intergovernmental organization that supports sustainable democracy worldwide. International IDEA’s mission is to support sustainable democratic change by providing comparative knowledge, and assisting in democratic reform, and influencing policies and politics.  http://www.idea.int/

[6] Mr. Narayanasamy sent the reply after Mr. Udayakumar threatened to sue him for the allegations that the NGO run by him had received funds. He stated that Mr. Udayakumar and his wife Meena, the trustees of SACCER, an NGO, had registered with IDEA’s Reconciliation Resource Network as its organisation.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2932944.ece

[13] The Home Ministry has sent notices to six NGOs, based in Tuticorin, asking them to explain the utilisation of the funds received under Foreign Contribution (Regulation) Act, the source said without identifying these NGOs.

அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் கொலையில் கூட வாடிகனின் தலையீடு – இந்தியாவில் கத்தோலிக்கக் கிருத்துவத்தின் ஆதிக்கம்!

பிப்ரவரி 23, 2012

அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் கொலையில் கூட வாடிகனின் தலையீடு – இந்தியாவில் கத்தோலிக்கக் கிருத்துவத்தின் ஆதிக்கம்!

அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் என்ற மீனவர்களை சுட்ட லட்டோர் மாசிமிலானோ மற்றும் சால்வடோர் கிரோன்: ஜியார்ஜ் மார் அலென்சேரி கிழக்குதிசை சிரிய-மலபார் சர்ச்சின் (Eastern Syro-Malabar Church) தலைவராக இருந்து, சில நாட்கள் முன்னர்தான், கார்டினர் நிலைக்கு உயர்த்தப் பட்டுள்ளார். அதற்காக அவர், வாடிகனுக்குச் சென்றுள்ளார். அந்நிலையில் தான், லட்டோர் மாசிமிலானோ மற்றும் சால்வடோர் கிரோன் என்ற (Latorre Massimillano and Salvatore Girone)  இத்தாலி கப்பலின் இரண்டு ஊழியர்கள் கண்மூடித்தனமாகச் சுட்டதில் இரு கேரள மீனவர்கள் அஜேஸ் பிங்கி மற்றும் கெலஸ்டைன் கொலை செய்யப்பட்டனர்[1]. அவர்கள் பாதுகாப்பிற்கு வானத்தில் சுட்டேன் என்று வாதிட்டாலும், படகின் மீது பாய்ந்துள்ள 16 குண்டுகளில் மூன்று குண்டுகள் ஒரு மீனவனின் உடலிலும், இரண்டு குண்டுகள் அடுத்த மீனவனின் உடலிலும் பாய்ந்துள்ளதிலிருந்து, அவர்கள் குறிபார்த்துதான் சுட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. பிறகு தாங்கள் இந்தியாவின் எல்லைகளில் இருந்து சுடவில்லை என்று வாதிட ஆரம்பித்தனர். அதுவும் எடுபடாத போது, அவர்கள் இத்தாலிய சட்டத்தின் படி விசாரணைச் செய்யப் பட்டு தண்டிக்கப் படுவார்கள் என்று வாதத்தை மாற்றிக் கொண்டனர். அதுவும் எடுபடாமல் போக, மதரீதியில் இறங்கியுள்ளதை அந்த புது கார்டினல் சொல்வதிலிருந்து வெளிப்படுகிறது[2].

தூதரக அதிரடி தாக்கம் – கேரள முதல்வருடன் இத்தாலிய மந்திரி ஆலோசனை[3]: டெல்லி வந்துள்ள இத்தாலி வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸ்டபான் மிஸ்துரா, இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரனீத் கவுரை சந்தித்து பேசினார். அப்போது, துப்பாக்கிச் சூடு சர்வதேச எல்லையில் நடந்துள்ளது. எனவே இந்தியா ஒருதலைபட்சமாக விசாரணை நடத்த கூடாது என்று கூறினார். அதற்கு, இந்திய எல்லையில்தான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. எனவே இந்திய சட்டத்துக்கு உட்பட வேண்டும் என்று பிரனீத் வலியுறுத்தினார்.  இதற்கிடையே, மீனவர்களை சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கிகளை கைப்பற்ற, கப்பலில் சோதனை நடத்த கொல்லம் 2வது வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஆனால், கப்பலில் சோதனை நடத்த உத்தரவிட இந்தியாவிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கப்பல் கேப்டன் உம்பர்டோ கூறியுள்ளார். இந்நிலையில் இத்தாலிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸ்டபான் மிஸ்துரா இன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி இத்தாலிய கடற்படையினர் மனு[4]: கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய கடற்படையைச் சேர்ந்த இருவரை கேரள காவல்துறையினர் கொல்லம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். இத்தாலிய கடற்படையினர் சார்பில், கேரளா காவல்துறையினர் தங்கள் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இருநாட்டு எல்லையில் நடந்த பிரச்சினை என்பதால், இச்சம்பவத்திற்கு இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தவறு என்று அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் 2 பேரை கொன்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள இத்தாலிய கப்பல் ஊழியர்களின் போலீஸ் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து கொல்லம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ. 25 லட்சத்திற்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்திய பின், கப்பலை இந்திய கடற்எல்லையில் இருந்து செல்லலாம், அதுவரை, இங்குதான் இருக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது[5].

கார்டினல் வாடிகனின் மத்தியஸ்தராக செயல்படுகிறாரா? கார்டினல் ஜியார்ஜ் மார் அலென்சேரியின் தலையீடு கிருத்துவர்களின் இரட்டை வேடம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக வேலைசெய்யும் குணத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. கொல்லப்பட்ட மீனவர்களில் கூட மதத்தைப் பார்த்து வேலை செய்யும் போக்கைக் காணும் போது, அவர்களின் மத-அடிப்படைவாத பாரபட்ச போக்கும் வெளிப்படுகிறது. “நான் கத்தோலிக்க அமைச்சர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளேன். அவர்கள் இந்த பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக கே.வி. தாமஸ் கத்தோலிக்க கார்டினகளுக்கு நடந்த வழிப்பாடு மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் அவர் மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளார். ஆதலால், அவர் மிகுந்த முயற்சி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்”, என்றெல்லாம் அந்த கத்தோலிக்க கார்டினல் கூறியிருந்தார்[6]. லத்தீன் கத்தோலிக்கர்களும், மீனவர்களும் கிருத்துவர்கள் என்றாலும், கார்டினலின் இத்தகைய பேச்சு, அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்[7]. பிறகு, “நான் அப்படி சொல்லவில்லை, பிரச்சினை சுமூகமாக முடியும் என்றுதான் சொன்னேன், ஆனால், வாடிகன் தரப்பில் மத்தியஸ்த்தம் செய்ய தான் ஈடுபடவில்லை”, என்று விளக்கம் அளித்தார்[8]. உடனே “ஆஜென்ஸியா ஃபைட்ஸ்” என்ற கத்தோலிக்க பத்திரிக்கை, கார்டினல் மாற்றிச் சொன்னதை வெளியிட்டுள்ளது[9]. ஆகவே –

  • ஒன்று அவர் பாதி உண்மையை சொல்லியிருக்க வேண்டும்
  • அல்லது பாதி பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
  • ஒன்று அவர் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது வாடிகன் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
  • இல்லை வாடிகன் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது அவர் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;

எது எப்படியாகிலும், பொய் சொல்வதில் கிருத்துவர்கள் போப் வரையில் கூட வல்லவர்கள் என்று தெரிகிறது.

கேரள நீதிமன்றத்தின் ஆணை[10]: இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இத்தாலிய கடற்படையினர் இருவரும் நேற்று முன்தினம் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு, நேற்று அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் விருந்தாளிகள் போல் போலீசாரால் கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். இந்தியர்களை கொலை செய்தவர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் இருந்து உணவு சப்ளை செய்யப்படுகிறது என்றும், கொச்சின் துறைமுகத்தை சுற்றிப்பார்த்து மகிழ்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன[11]. வந்துள்ள மந்திரியும் இதைக் கேட்டதும் பூரித்து போயிள்ளார்[12].

கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் 1 கோடி நஷ்டஈடு கோரல்[13]: இத்தாலிய கப்பற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு கேரள மீனவர்களில் ஒரு மீனவரின் குடும்பத்தினர் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். மேலும், நஷ்ட ஈடு கொடுக்காமல், இத்தாலிய கப்பலை இந்திய எல்லையில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். கடற்கொள்ளையர் என்று தவறாக நினைத்து கேரள மீனவர்களை இத்தாலிய கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். இத சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு இத்தாலிய மாலுமிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில், கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் நீதி கிடைக்குமா? போர்ச்சுகீசிய காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை வெள்ளைக்காரர்களால் நடத்தப் பட்ட கொலைகள் இவ்விதமாகத்தான் பாரபட்சம் காட்டப் படுகின்றன. இந்தியர்களின் உயிர் அவர்களுக்குக் கிள்ளுக்கீரைதான். இப்பொழுது, ஏதோ சட்டங்கள் உள்ளன என்று தயங்குகிறார்கள் இல்லையென்றால், தாக்கிக் கொன்றுவிட்டு சென்று விடுவார்கள். மேலும் இப்பொழுது உல்கம் முழுவதும் இந்நிகழுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏனெனில், கத்தோலிக்க சோனியாயாவே அதிகாரத்துடன் இருக்கும் போது, கேரளாவில் ஆட்சியில் உள்ளவர்களும், போலீஸ் கமிஷனர் என்று எல்லோருமே கத்தோலிக்கக் கிருத்துவர்கள் என்று இருக்கும் போது என்ன நடக்கும் என்று பார்க்கின்றனர்! நாமும் பார்க்க வேண்டியதுதான்.

வேதபிரகாஷ்

23-02-2012


[1] Two Indian fishermen, Ajesh Binki and Gelastine, were allegedly mistaken as pirates and shot dead by the security crew of cargo vessel Enrica Lexieon February 15 off Alappuzha. Two Marines have been arrested for the shooting.

[6] “I am and will remain in close contact with the Catholic ministers of Kerala and I hope that they will help to pacify the situation. In particular, I trust in the work of the Tourism Minister, the Catholic KV Thomas, who participated in the consistory in Rome in past days and attended the mass with the Holy Father and the new cardinals: he is a man of great moral stature and of significant influence, both in the local and central government, and he assured me his maximum effort. I guarantee, in the next few days, my constant involvement with the Indian authorities on the matter”.

http://www.firstpost.com/india/why-is-keralas-newest-cardinal-batting-for-italian-killers-221271.html

[7] This controversy is likely to amplify the socio-political divide between the two communities, although both are Catholics.

[12] “We have expressed our appreciation in the manner in which they have been treated,” the minister told reporters here.

http://www.dnaindia.com/india/report_happy-that-arrested-italians-are-being-treated-well-staffan-de-mistura_1653902

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (2)

ஜனவரி 1, 2012

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (2)


இந்தியாவில் இருந்து கொண்டு, ஆங்கில நாளிதழுக்கு திரித்து செய்திகளைக் கொடுத்து வெளியிடும் போக்கு: “தி டெலிகிராப்” என்ற இங்கிலாந்து நாளிதழில், டீன் நெல்சன் என்ற, புது தில்லியைச் சேர்ந்த நிருபர் தான் அவ்வாறான, செய்தியை வெளியிட்டிருந்தார்[1].

The Indian preacher and the fake orphan scandal

An Indian missionary charity falsely portrayed young Buddhist girls from Nepal as “orphans” of murdered Christians in a global fund-raising operation involving British and American churches.

தல் பஹதூர் பதேரா என்ற நேபாளி தான் அவ்வாறு குழந்தைகளை தவறாக, ஜாபின் அனாதை இல்லத்திற்கு விற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, டீன் நெல்சன் எழுதியுள்ளார். ஆனால், நேபாளத்தில், கிருத்துவ மிஷனரிகள் தாம் தங்களை ஏமாற்றி, குழந்தைகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். எஸ்தர் பெஞ்சமின் நினைவு அமைப்பு [Esther Benjamins Memorial Foundation (EBMF)] என்ற நேபாள அரசு-சாரா நிறுவனம்[2] கொடுத்த தகவலின் படி, மாநில சமூதத்துறை, போலீஸ் உதவியுடன், கோயம்புத்தூரில் உள்ள பி.பி.ஜாப் அனாதை இல்லத்தை ரெயிட் செய்த போது, 23 நேபாள சிறுமிகளை கண்டு பிடித்து காப்பாற்றினர். 40 சிறுமிகள் நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது[3]. கோவை அருகே, அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்த, நேபாள சிறுமியர் 23 பேர் மீட்கப்பட்டதன் பின்னணி குறித்து, புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை: சூலூர், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில், 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில், 23 சிறுமியர் நேபாள நாட்டைச் சேசர்ந்தவர்கள் என்றும், அறக்கட்டளை ஒன்றின் மூலமாக, இவர்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருப்பதாகவும்[4], மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது[5]. இதையடுத்து, இரு நாட்களுக்கு முன், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில் சோதனை நடத்திய மாவட்ட நிர்வாகம், நேபாளத்தைச் சேசர்ந்த 23 சிறுமியரை மீட்டு பீளமேடு, காந்திமாநகரில் உள்ள, அரசு பெண்கள் மற்றும் குழுந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளது.

   


சிறுமிகளை அலைக்கழித்த விதம் சந்தேகத்தை எழுப்பியது: கோவையில் மீட்கப்பட்ட நேபாள சிறுமிகள் 23 பேர் தொடர்ந்து ஒவ்வொரு காப்பகமாக இடம் மாற்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். ÷கோவை மாவட்டம், சூலூரில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கான மைக்கேல் ஜாப் காப்பகத்தில் இருந்த 23 நேபாள சிறுமிகள் மீட்கப்பட்டனர். லண்டனில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில், நேபாளத்தில் உள்ள தன்னார்வ நிறுவனம் ஒன்று இந்தச் சிறுமிகளை மீட்டுள்ளது. கோவையில் உள்ள குழந்தைகள் நல கமிட்டி மற்றும் வருவாய்த்துறை உதவியுடன் சிறுமிகள் மீட்கப்பட்டனர். இதனிடையே நேபாளத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்திடம் சிறுமிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது[6]. ஆனால், நேபாள நாட்டு தூதரகத்தின் மூலம் சிறுமிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில், நேபாள சிறுமிகள் கணபதி மாநகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி ஆகியவை சரியில்லை என்று கூறப்படுகிறது. அங்கு நேபாள சிறுமிகள் யாரும் சாப்பிடாமல் இருந்தனர். ÷இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை, கணபதி- அத்திபாளையத்தில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனத்துக்கு அனைவரும் மாற்றப்பட்டனர். நேபாள சிறுமிகள் 23 பேரும் தொடர்ந்து ஒவ்வொரு காப்பகமாக மாற்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

விதிகளை-சட்டத்தை மீறி செயல்பட்ட ஜாபின் அனாதை இல்லம்: அனுமதி இல்லாமலே அந்த அனாதை இல்லம் நடப்பதோடு, எத்தனை சிறுமிகள் உள்ளார்கள், போன்ற விவரங்கள், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதனையும் கண்டு பிடிக்கப் பட்டது. போதிய அவகாசம் கொடுத்தும், அவர்களால், எந்த ஆவணத்தையும் காண்பிக்க முடியவில்லை[7]. நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகளின் தொல்லைத் தாங்காமல் தான், சிறுமிகளை அவ்வாறு விற்று விடுகிறார்கள் அல்லது இந்தியாவிற்கு அனுப்பி விடுகிறார்கள், அவர்களுக்கு வாழ்வு கொடுக்கத்தான், நாங்கள் அனாதை இல்லத்தில் சேர்க்கிறோம் என்று கிருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள், பிறகு விபச்சாரத்திலும் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இதுவரை (நவம்பர் மாதம் வரை), 43 சிறுமிகள், அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்கள்[8].

   

கிருத்துவ பெயர்களில் இந்து சிறுமிகள் சேர்ப்பு: உண்மையில் மாவோயிஸ்ட்டுகளின் கொடுமைகளினின்று தப்பிக்கத்தான் பெற்றோர்கள் ரூ.20,000/- வரை பணத்தையும் கொடுத்து, பெற்றோகள் அனுப்பியுள்ளார்கள்[9]. ஆனால், அவர்களுக்கு கிருத்துவ அனாதை இல்லங்களில் அத்தகைய குற்றங்கள் நடப்பதை அறியவில்லை[10]. இந்து சிறுமிகளுக்கு கிருத்துவ பெயர்கள் வைக்கப் பட்டு[11], அவ்வாறு சேவை செய்கிறோம் என்று அந்நிய நாடுகளிடமிருந்து, நிதிகளையும் பெற்று வருகிறார்கள்[12]. ஆனால், அப்பணத்தை வைத்துக் கொண்டு தான், மதமாற்றம் போன்ற வேலைகளை கிருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

  • உண்மையிலேயே சேவை செய்கிறார்கள் என்றால், இரண்டு வழிகளிலும் பணத்தை ஏன் பெறுகிறார்கள்?
  • இந்து பெயர்களை ஏன் மாற்றுகிறார்கள்?
  • கிருத்துவர்கள், அவர்களை மதம் மாற்றியுள்ளோம் என்று சொல்லி ஏன் வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்குறார்கள்?
  • இவ்வளவையும் செய்து விட்டு, அவர்கள் இருப்பதை ஏன் ஆவணங்களில் பதிவு செய்யாமல் மறைக்கிறார்கள்?
  • செக்ஸ்-டூரிஸம், எம்.எம்.சி கம்பெனிகளுக்கு ஏன் அனுப்பி வைக்கிறார்கள்?
  • ஒரு அனாதை இல்லத்திலிருந்து மறு அனாதை இல்லத்திற்கு ஏன் அனுப்பி வைக்கப் படுகிறார்கள்?

இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், கிருத்துவர்கள் தங்களுடைய பணம், அதிகாரம்,

An anti-trafficking charity run by Lt Col Philip Holmes, a retired British Army officer, assisted Indian officials in a raid on the Coimbatore centre last month, when 23 children were rescued.His group, the Esther Benjamins Trust, discovered that none of the children were from Christian families, very few were, in fact, orphans and some of the girls had been kept apart from their families for up to 10 years. Among those rescued were six girls from one extended Buddhist family in Humla district in northern Nepal who were all renamed on their first day at the Michael Job Centre.

அரசியல் செல்வாக்குகளினால், அனைவற்றையும் மூடி மறைக்கிறர்கள். மேலும், மாவோயிஸ்ட்டுகளுக்கும், கிருத்துவர்களுக்கும் அதிகமாகவே தொடர்புகள் உள்ளன. கந்தமாலில் 90 வயது இந்திய சாமியாரை மற்ற அப்பாவி சாதுக்களுடன் கிருத்துவர்கள் திட்டமிட்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று படுகொலை செய்தபோது, அவ்விவரங்கள் அதிகமாக வெளி வந்தன. கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இதனால், கலவரம் ஏற்பட்டது. ஆனால், உண்மையை மறைக்க, அந்த கிருத்துவர்கள் எல்லோரும் “மாவோயிஸ்ட்டுகள்” என்று முத்திரைக் குத்தி, திசைத்திருப்ப முயன்றனர். பிறகு ஒரு கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள் என்று கதையைக் கட்டி விட்டனர். ஆனால், இன்றும் வழக்கு நடந்து வருகிறது, அதில் கன்னியாஸ்திரியையே மாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, கற்பழிக்கப்பட்டவள் என்ற கன்னியாஸ்திரி சோதனையிட்டபோது, அவள் கற்பழிக்கப் படவில்லை என்று சோதனை முடிவில் தெரிந்தவுடன், கன்னியயஸ்ட் ஹிரியையே மாற்றி விட்டனராம். இதை பி.பி.ஜாபின் இணைத்தளமே சான்றாக, வக்காலத்து வாங்கிக் கொண்டு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்று (30-12-2011) இத்தளம் வேலை செய்யவில்லை[13].

குழந்தை கடத்தல் என்றாகிய விவகாரம்: கோவை மாவட்டம், சூலூர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட, நேபாளத்தை சேர்ந்த 23 சிறுமியர், நேற்று ரயில் மூலம் கோரக்பூர் புறப்பட்டனர். நேபாளத்தை சேர்ந்த சிறுமியர் பலர், சூலூரில் செயல்படும் மைக்கேல் ஜாப் காப்பகத்தில் இருப்பதாக, புகார் எழுந்தது. “அனாதைகள்’ என்று தவறான தகவலைக்கூறி, சிறுமியரை இந்தியாவுக்கு கடத்தி வந்து விட்டதாகவும், உண்மையில் அவர்களது பெற்றோர் நேபாளத்தில் இருப்பதாகவும், அங்கிருந்து வந்த தொண்டு நிறுவனத்தினர் கூறினர். இதையடுத்து, கோவை கலெக்டர் கருணாகரன் தலைமையில், ஆர்.டி.ஓ., சாந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, காப்பகத்தில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த 23 சிறுமியரை மீட்டனர். அவர்களை தாய்நாட்டுக்கு அனுப்ப, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. “கோவையில் இருந்து, சிறுமியரை உ.பி., மாநிலம் கோரக்பூர் அனுப்பு வது’ என்றும், “அந்த மாவட்ட கலெக்டர் மூலம் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பது’ என்றும், முடிவு செய்யப்பட்டது. “”சிறுமியர் 23 பேரும், திருவனந்தபுரம்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று பகல் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டனர். அவர்களுடன், போலீசார் எட்டு பேரும், சமூக பாதுகாப்புத்துறையை சேர்ந்த அலுவலர்கள் இருவரும் செல்கின்றனர்,” என்று கோவை ஆர்.டி.ஓ., சாந்தகுமார் தெரிவித்தார். நேபாளத்தில் இருந்து சிறுமியரை தேடி வந்த தொண்டு நிறுவனத்தினரும் உடன் செல்கின்றனர்[14].

பத்துவருடங்களுக்குப் பின்னர் சிறுமிகள் பெற்றொரிடம் சேர்க்கப்பட்டனர்: சுமார் பத்து-பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் சிறுமிகள், இப்பொழுது வயது வந்த இளைஞிகள் பெற்றொரிடம் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தங்களது துயரங்களை

Sabita Kadel, 14, from Nawalparasi has finally came back home after five years of living as an orphan in Michael Job Centre in Coimbatore in India. After the rescue, her aunt Mina Paudel came to receive her in Kathmandu.”I can’t explain my happiness. For five years, I looked all over for her, two years ago I travelled to Coimbatore but I was humiliated at the Centre and they refused to give me back my daughter.”

They did not even let Mina talk to Sabita over the phone for all these years. In the Centre’s newsletter, Tortured For Christ, July 2009 issue, Sabita aka Fay has been mentioned as the child of a murdered Christian mother whose other relatives were also slaughtered in a killing rampage by Maoists.

வெளியிட்டு உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். இணைதளத்திலேயே, அப்பெண்களிம் புகைப்படங்களை வெளியிட்டதில் தான் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். இப்பொழுது, அத்தளத்தையே மூடிவிட்டனர் என்பதிலிருந்து, அவர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்[15]. ஏனென்றால், அநியாயமாக அப்பெண்கள் எல்லோரும், உயிர்தியாகம் செய்த கிருத்துவர்களின் பெண்கள் / அனாதைகள் என்று இணைத்தளத்தில் அறிவித்து பணத்தை வசூல் செய்துள்ளனராம். அதுமட்டுமல்லாது, எங்கே உண்மையை அறிந்து வெளியே சொல்லிவிடுவார்களோ என்று, அவர்களை பூட்டியும் வைத்துள்ளனராம். மீனா பௌதல் என்ற பெண்மணி, தன்னுடைய மைத்துனியான, சபிதா காடில் (14 வயது) என்ற சிறுமியைப் பார்க்க கோயம்புத்தூருக்குச் சென்றிருந்த போது, பார்க்க விடாமல் தடுத்ததோடு, அவமானம் படுத்தினர் என்கிறார். கடந்த ஆண்டுகளில் தொலைபேசியில் கூட பேச அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அங்கு அனுப்பும் போது, எல்லா உத்திரவாதங்களையும் கொடுத்தனர் என்று அவர் விளக்கினார்.

   

உரிமைகள் பேசும் ஆர்வலர்கள் எங்கே இருக்கிறார்கள்? மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சிறுமியர் உரிமைகள், என்றெல்லாம் வாய் கிழிய பேசுபவர்கள், கொடி பிடிப்பவர்கள் இவ்வளவு நடந்தும் எதுவும் பேசாமல், எந்த போராட்டமும் நடத்தாமல், எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருப்பதைக் காணும் போது, அவர்களது தார்மீகத்தை நினைத்து உடம்பு சிலிர்க்கத்தான் செய்கிறது.

வேதபிரகாஷ்

30-12-2011


[2] இந்நிறுவனம் 2004கிலும், இதே போல சிறுமிகளைக் காபாற்றியுள்ளது:

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/nepal/1461314/Nepal-children-sold-into-a-life-of-slavery-and-abuse-in-Indian-circuses.html

[10] “Poor countries are turning into a missionary haven for religious zealots and this has led to a new form of trafficking,” says Philip Holmes of Esther Benjamins Memorial Foundation. The girls are now on their way home by train via Gorakhpur.

[11] In one of the pages of the website was where we first saw pictures of Anna Bella, Daniela, Persius and Jael (Christian names given by the centre, original names withheld).

[12] The charity Love in Action raised around £18,000 for the Michael Job Centre between 2007 and 2010, but Tom Reeves, churchwarden at St Mary’s, declined to comment on whether he and his colleagues had been duped.

[13] Dr Jobs Mission – This site is down for maintenance. Please check back again soon.

http://www.drjobsmission.org/home/

[15] There is not a shred of doubt that the Humla girls were trafficked to India to make money for the Michael Job Centre. The people who have objected to their children being embarrassed in public by the rescue might do well to remember that their girls were being advertised globally as orphans in the centre’s website. The images and profiles of the girls were displayed online for sponsors to choose from. The centre has removed its website after being exposed. (See archived webpage of the centre)

http://www.nepalitimes.com.np/issue/2011/09/30/ThisIsIt/18594

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (1)

திசெம்பர் 31, 2011

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (1)


பி.பி.ஜாப் மற்றும் மைக்கேல் ஜாப் அனாதை இல்லம்: கிருத்துவ அனாதை இல்லங்கள் குழந்தை, சிறுவர்-சிறுமியர்களை கடத்துதல், வாங்கல்-விற்றல், சட்டத்திற்குப் புறம்பாக தத்து எடுத்தல், மதம் மாற்றுதல், செக்ஸ்-டூரிஸத்திற்கு உபயோகித்தல், அயல்நாட்டு கம்பெனிகளின் இயக்குனர்கள், மற்றவர்களுக்கு விபச்சாரத்திற்கு அனுப்பி வைத்தல் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுதல் முதலியன வாடிக்கையான விஷயங்களாக மாறியுள்ளது, அதைப் பற்றிய விவரங்கள் இப்பொழுது ஓரளவிற்கு வெளிவந்து விட்டன. இந்நிலையில் தான் நேபாளத்திலிருந்து, ஒரு சமூக நிறுவனம், உரிய தகவல்களைக் கொடுத்ததும், இந்தியாவின் “குழந்தைகள் பாதுகாப்பு” இயக்கம், தமிழ்நாட்டு சமூகத்துறைக்கு அறிவிக்க, அத்துறை அதிகாரிகள், சூலூரில் உள்ள மைக்கேல் ஜாப் அனாதை இல்லத்தை சோதனையிட்டு, சிறுமிகளை மீட்டுள்ளனர்.

கிருத்துவ மிஷனரிகளின் உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம்: பி.பி.ஜாப் அனாதை இல்லத்தைப் பற்றி வந்துள்ள விஷயங்களை சில வெளிநாட்டு நாளிதழ்கள், பத்திரிக்கைகள் வேறுவிதமாக திரித்து செய்திகளை வெளியிட்டுள்ளது.

A British NGO, a Christian lady and some spurious social activists were behind the “rescue” of the girls who were being fed, clothed and educated so that they could stand on their own legs. Words like “trafficking” were bandied about to drive Job to the wall. The “rescuers” have taken away 23 girls from the orphanage, who could have become engineers, doctors, teachers and nurses if they had remained at Coimbatore. What will happen to these children now? That is what bothers me.

அதுமட்டுமல்லாது, அந்தந்த செய்திதாள்களின் செய்திகளின் கீழ் சம்பந்தப் பட்ட கிருத்துவ மிஷினரிகள் அதற்கு ஆதரவாக எழுதியும் வருகிறார்கள்[1]. வழக்கம் போல, இந்தியா, நேபாளம் போன்ற கீழ்திசை நாடுகள் வறுமையில், ஏழ்மையில் உழல்கின்றன, கர்த்தரின் ஆணைப்பை, அவர்கள் தாம் அந்நாட்டு மக்களை உய்விக்கிறார்கள் என்பது போல பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளனர்[2].

பி.பி.ஜாபின் சொந்த கதை, சோகக் கதை: பி.பி.ஜாபின் சொந்த கதை, சோகக் கதையாகத்தான் உள்ளது. பாவம்! ஆனால், அதையும் இந்தியர்களின் மீது பழி போட்டு, காசு சேகரிக்கும் கீழ்தரமான யுக்தியைக் கண்டு தான் இந்தியர்களுக்கு வியப்பாக உள்ளது. இவரது மூன்று மகன்களும், எதேதோ காரணங்களுக்கு, பல இடங்களில், பல நாடுகளில், சாலை விபத்துகளில் அடிபட்டு இறந்துள்ளனர். ஆனல், அவர்கள் ஏதோ இந்தியாவில் கிருத்துவ ஊழியம் செய்து, அதனால், தண்டிக்கப் பட்டு, உயிர் தியாகம் செய்தது போல சித்தரிக்கப் படுகிறார்கள்[3]. இது அப்பட்டமான, அசிங்கமான, கேவலமான பொய். எந்த உண்மையான தந்தைக்கும், அப்படி பட்ட மோசமான எண்ணம் வராது. ஆனால், திருவாளர் பி.பி.ஜாப் அதை செய்து வருகிறர். மற்ற கிருத்துவர்களும் துணை போகிறார்கள்.

The Michael Job Center was started in 2001 by Dr. PP Job, an internationally known Evangelist, Preacher and Missionary to the persecuted church. The home was built in memory of Dr. Job’s martyred son, Michael.In 1999 an attempt was made on Dr. Job’s life by radical Hindus in India, who did not like his Christian work and influence. In June of 1999, following the failed attempt on Job’s life, radical Hindus killed his 21 year old son, Michael by running him down with a car where he studied at a medical school.The following year, a plot of land was donated in Coimbatore in southern India for a possible future orphanage. With no idea of God’s planning, Dr. Job proceeded to accept the small, seemingly worthless plot which didn’t even have fresh water (salt water only), and no access to electricity.

A small home was erected and 30 children of persecuted and martyred Christians were taken in. Shortly after, God miraculously provided fresh water, full electricity and enough concrete to build a large chapel, and a school building! Adjoining plots of land were secured, and a 5 acre soccer stadium was added.

Now the Center stands as a testimony of God’s incredible love and provision with over 50 acres of land, a secondary school, an auditorium/dining hall, a chapel, a B.ed college, a Science & Arts College, and a hostel for the girls that as of June 27th, 2008, now has an addition built on, giving the Michael Job Centre 90 more rooms for the girls.

The Michael Job Centre is an all-girl orphanage located in Coimbatore, in the state of Tamil Nadu, in India. Currently, it is home to 351 girls from all different parts of Asia.

There is GREAT news! Sponsoring a child costs just $25 a month!

$100 a month covers all four aspects of a childs needs for one month.

$75 a month covers three aspects

$50 a month covers two aspects

However, sponsoring a child for just $25 a month makes such a difference.

You can also sponsor multiple girls!

You can write them letters, and they will write you back.

It brings them SO much joy when they recieve letters from their sponsors!

The Jordan Foundation was founded in 2001 by Steve and Ginny Cleary, it is a non-profit organization that allows you to sponsor a child at the Michael Job Centre or to make a donation to the centre of any amount.

Whats great about The Jordan Foundation is…100% of your sponsorship money/donation goes towards the Michael Job Centre, none of it is kept by the foundation since all of the costs of running the foundation are paid for by the Cleary family.

Also, all donations or sponsorship money given is tax-deductable!!!!!!
So please, I encourage you all on behalf of the 351 orphaned girls at The Michael Job Centre, please, sponsor a child, or if you cannot do that, make a donation (or both =D) Make sure that you write your child letters, its REALLY important to them!

For more information about the Michael Job Centre and what you can do to get involved, Please visithttp://www.jordanfoundation.com/  and http://www.michaeljobcenter.com/

உதாரணத்திற்கு, அந்த அனாதை இல்லத்தைப் பாராட்டியும், பணம் கேட்டும் பிரச்சாரம் செய்யும் இணைத்தளத்தில் உள்ளவற்றை இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் காணலாம்[4].ஒரு பக்கம் லட்சக்கணக்கில் / கோடிக்கணக்கில் மிஷனரிகள் அந்நிய நாடுகளிடமிருந்து வாங்குகின்றன. பிறகு மறுபடியும், இப்படி விளம்பரங்கள் மூலம், ஒரு குழந்தைக்கு / சிறுமிக்கு இவ்வளவு என்று ரூ.1,250/-, 2,500/-, 5,000/- மற்றும் 10,000/- என்று கணக்கு போட்டு வாங்கிக் கொள்கிறார்கள்[5].உங்கள் குழந்தைகளுக்கு படிப்பு, உத்தியோகம், முதலியவை வாங்கிக் கொடுக்கிறோம். அதுவரை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம், உங்கள் குழந்தைகளைப் பார்க்கலாம், கடிதங்கள் எழுதலாம் என்றெல்லாம் ஆசைக் காட்டித் தான், இப்படி மோசடி செய்கிறார்கள். ஆனால், பத்து-பதினைந்து ஆண்டுகள் ஆகியும், பொற்றோர்களை குழந்தைகளுக்கும், குழந்தைகளை பெற்றோர்களுக்கும் காட்டாமல் அலைக்கழிக்கப்பட்டார்கள் / படுகிறார்கள்.

கிருத்துவர்கள் எந்த அளவிற்கு தங்களது அயோக்கிய தனத்தை, குற்றங்களை, குரூரங்களை வெள்ளையடித்து மறைக்க பார்ப்பார்கள் என்று, மறுபடியும் தம்மை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்கள். எனது நண்பர்[6] தனது இடுகையில் அதைப் பற்றி பதிவு செய்த போது[7], உடல்நலம் சரியாக இல்லாத காரணத்தால், உடனடியாக பதில் கொடுக்கவோ, எனது பதிவை செய்யவோ முடியாமல் போய்விட்டது. ஆனால், அந்நிய நாளிதழ்களில் இந்த அநியாயத்தை மறைக்கும் விதத்தில் செய்திகள் வெளிவந்ததைக் கண்டதும், அதை எடித்துக் காட்டவே, இந்த பதிவை இடுகிறேன்.

இந்தியர்களின் / இந்துக்களின் மனோபாவம்: இப்பொழுது கூட இவ்வளவு உண்மைகள் வெளிவந்தாலும், தங்களைப் புனிதர்கள் போல சித்தரித்துக் காட்டிக் கொள்கிறார்கள்[8]. இந்தியர்களுக்கு, பொதுவாக மற்றவர்கள் செய்த குற்றங்களை மறந்து விடுவார்கள், இல்லை குரூரங்கள் செய்தவர்கள் ராட்சதர்கள் / அரக்கர்கள் என்று சொல்லி புராண கதைகளாக்கி விடுவார்கள். இதனால், அமைதியாக இருந்து, ஏதோ கடவுள் மறுபடியும் அவதாரம் எடுத்து தங்களைக் காப்பாற்றுவர் என்று நினைத்துக் கொண்டு, பக்தியோடு, தங்களது வேலைகளை செய்து கொண்டிருப்பர். இல்லை, இதெல்லாம் சென்ற ஜென்பத்தின் விலை / பாவம் என்றும் நினைத்துக் கொண்டு அமைதியாக இருப்பர். அத்தகைய குணத்தை, மனபாவத்தை, பொறுமையை, கிருத்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் தவறாக புரிந்து கொண்டு, அதையே இந்துக்களின் மீது பிரச்சார யுக்திகளில் உபயோகப் படுத்துகிறார்கள். தங்களது 700 / 300 ஆண்டுகளில் செய்த அநியாயம், அட்டூழியம், கொலைகள், கொள்ளைகள், கோவில்களை இடித்தது, பெண்களை கற்பழித்தது, அடிமையாக்கியது என்ற அனைத்தயும் மறைக்கப் பார்க்கிறார்கள்.

வேதபிரகாஷ்

30-12-2011


[1] A. J. Philip, Theology of Prosperity: Heaven to Hell, INDIAN CURRENTS • 07 – 13 November 2011, http://www.indiancurrents.org/admin/upload/8934Page%2022,23,24,25.pdf

[3] The orphanage is named after Dr. Job’s son Michael who was allegedly murdered as retaliation for Job’s evangelistic activities.

http://in.christiantoday.com/articles/charity-accused-of-admitting-trafficked-children/6787.htm

[5] இப்பிரச்சினைக்குப் பிறகு இத்தளங்கள் வேலை செய்யாமல் இருப்பதும் விந்தையாக இருக்கிறது: http://www.jordanfoundation.com/

http://www.michaeljobcenter.com/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/