Posts Tagged ‘முன்ஜாமீன்’

கற்பழிப்பு பாதிரி – திருச்சி கல்லூரி முதல்வர் புகாரில் கைதா? “உடனே கைது செய்யப் போகிறீர்களா?’- “தற்போது அதுபோன்ற எண்ணம் இல்லை”

ஒக்ரோபர் 28, 2010

கற்பழிப்பு பாதிரி – திருச்சி கல்லூரி முதல்வர் புகாரில் கைதா? “உடனே கைது செய்யப் போகிறீர்களா?’- “தற்போது அதுபோன்ற எண்ணம் இல்லை

முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை, நவ., 1க்கு ஒத்தி வைத்தது[1]. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை கற்பழித்து, கட்டாய கருக்கலைப்பு செய்ததாக கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு பதிந்த போலீசார், ப்ளாரன்ஸ் மேரிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியதுடன், கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் புத்தூர் கே.எம்.சி., மருத்துவமனையிலும் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, ஐகோர்ட் மதுரை கிளையில், முன்ஜாமீன் கேட்டு ராஜரத்தினம், மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை, வரும் நவ., 1க்கு ஒத்தி வைத்தது. பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி, ம.க.இ.க., மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் முழு முனைப்பு காட்டி வருகின்றன. அதனால், போலீசார் அவரை கைது செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கற்பழிப்பு பாதிரி தலைமறைவு ஏன்? இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அல்லது கொடைக்கானல் எஸ்டேட்டில் பாதிரியார் தலைமறைவாக இருப்பதாகவும், சென்னையில் முகாமிட்டுள்ள அவரது தீவிர ஆதரவாளரைப் பிடித்து விசாரிக்க, திருச்சி போலீசார் சென்னை சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊட்டி, கொடைக்கானலுக்குச் சென்றால், அவ்வளவுதான், ஏற்கெனவே இரண்டு – ஒரு பிஷப், ஒரு தாளாளர் / பாதிரி இதே வேலைக்கு மாட்டிக் கொண்டுள்ளனர்.

பாதிரியார் ஆதரவாளர் தரப்பில் கூறப்படுவதாவது: ஐகோர்ட் மதுரை கிளையில், பாதிரியார் ராஜரத்தினம் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டவுடன், உடனடியாக இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதி, “உடனே கைது செய்யப் போகிறீர்களா?’ என, அரசுத் தரப்பு வக்கீலிடம் கேட்டார். அதற்கு அவர், “தற்போது அதுபோன்ற எண்ணம் இல்லை என்று கூறினார். எனவே, இடைக்கால ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. பாதிரியார் சட்டரீதியாக வழக்கு எதிர்கொண்டு வரும் வேளையில், “பாதிரியார் கைது’ என்று தேவையில்லாத வதந்தியை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இவ்வாறு ஆதரவாளர் தரப்பில் கூறப்படுகிறது.

உடனே கைது செய்யப் போகிறீர்களா?’- “தற்போது அதுபோன்ற எண்ணம் இல்லை. மனுவை பரிசீலித்த நீதிபதி, “உடனே கைது செய்யப் போகிறீர்களா?’ என, அரசுத் தரப்பு வக்கீலிடம் கேட்டார். அதற்கு அவர், “தற்போது அதுபோன்ற எண்ணம் இல்லை என்று கூறினார். இந்த பரிபாஷையின் பொருள் விளங்கவில்லையே? நீதிபதியே அரசு வக்கீலிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை, பாதிரியார் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டாரோ என்னமோ?


[1] தினமலர், திருச்சி கல்லூரி முதல்வர் கன்னியாஸ்திரியின் கற்பழிப்பு புகாரில் கைதா? அக்டோபர் 26, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=114364