Archive for மார்ச், 2015

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல், கொலை, 21 வயதுக்கு கீழானவர்கள் ஈடுபடுதல், இத்யாதிகள்

மார்ச் 20, 2015

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல், கொலை, 21 வயதுக்கு கீழானவர்கள் ஈடுபடுதல், இத்யாதிகள்

Franklin christian priest murders March 2015.DM

Franklin christian priest murders March 2015.DM

தனது மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதுடன், தனது 2-வது திருமணத்திற்கும் இடையூறாக, கள்ளக்காதல் விவகாரத்தில் போட்டியாக இருந்த கல்லுாரி மாணவரை கொலை செய்த வழக்கில், மதபோதகர் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர் என்று வெளிவந்துள்ள செய்திகள் வழக்கம்போல உள்ளதேயன்றி, அதிலுள்ள தீவிரமான பிரச்சினைகளைப் பற்றி யாரும் அலசுவதாகத் தெரியவில்லை. வழக்கம் போல கொலைக்குற்றத்தில் சிக்கியுள்ளவர்களின் மத அடையாளங்களை மறைக்கவும், தமிழ் ஊடகங்கள் முயன்றுள்ளன. இதில் கொலை செய்யப்பட்டுள்ள மாணவன், வேன் டிரைவர் கிருத்துவர்கள் தான். சர்ச்சுகளில் பகுதிநேர ஊழியத்தில் கிருத்துவர் அல்லாதவர் ஈடுபடமுடியாது. டிரைவரும் கிறிஸ்தவப் பெயரை சும்மா வைத்துக் கொள்ளமுடியாது. இனி அந்த மூன்று 21வயதிற்கு கீழானவர்களின் அடையாளம் குறிப்பிடப்படவில்லை.

Franklin christian priest murders March 2015

Franklin christian priest murders March 2015

அழுகிய நிலையில் வாய்க்காலில் கிடந்த பிணம்: ஈரோடு மாவட்டம், கோபி, பங்களாப்புதுார் சாலையில், தடப்பள்ளி வாய்க்கால் அருகே, சந்தனத்துறை என்ற இடத்தில், கடந்த, 8ம் தேதி, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல், அழுகிய நிலையில் கிடந்தது. தனை கோபி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[1].  அருளாளனின் உடற்கூறு ஆய்வில் விஷத்தினால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், டி.என்.பாளையம், கொங்கர்பாளையம் அருகே, திருவள்ளுவர் வீதியை சேர்ந்த ராஜன் மகன் அருளாளன், 25, என்பவர், கொலையானதை உறுதி செய்தனர். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலையுண்ட அருளாளனின் மொபைல் போனை வைத்து துப்பு துலக்கினர். அருளாளனின் சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். நீச்சல் நன்கு தெரியும் என்பதால் அவர் வாய்க்காலில் விழுந்து இறந்திருக்க முடியாது என்று போலீசார் கருதினார்கள். போலீசார் தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மதபோதகரான பாஸ்டர் பிராங்கிளின்பால்

மதபோதகரான பாஸ்டர் பிராங்கிளின்பால்

அருளாளனும் கிருத்துவர் தாம், மதஊழியர் தாம்: கொலைசெய்யப்பட்ட மாணவனின் பெயர் அருளாளன். அவர், கோபி அரசு கலைக் கல்லுாரியில் எம்.ஏ., முதலாமாண்டு படித்து கொண்டே, பங்களாப்புதுாரில், விவேகானந்தா டியூசன் சென்டரில், டியூசன் எடுத்து வந்து உள்ளார். டி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மாலையில் ஆங்கில மொழியும் கற்பித்து வந்தார். அதுமட்டுமின்றி கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பகுதிநேர ஊழியராகவும் வேலை செய்துவந்தார்[2]. அதாவது அவர் கிறிஸ்தவர் என்று தெரிகிறது, இருப்பினும் தமிழ் ஊடகங்கள் அதைக் குறிப்பிடாமல் மறைத்துள்ளன. செக்யூலரிஸ போதையில் அவ்வாறு மறைத்தது, அப்பட்டமாகத்தான் தெரிகிறது.

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்.2

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்.2

பாஸ்டர் குடும்பத்தாருடன் பழகிய ஊழியன் அருளாளன்: கோபிசெட்டிபாளையம் அண்ணாவீதியை சேர்ந்தவர் பாஸ்டர் பிராங்கிளின்பால் (37). இவர் கோபி மற்றும் கொங்கர்பாளையத்தில் உள்ள சியோன் முதலிய கிறிஸ்தவ ஆலயங்களில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கவுரி என்கிற மனைவியும், கார்த்திக்பால் என்கிற மகனும் உள்ளனர். அப்போது, கோபி மற்றும் பாஸ்டர் பிராங்கிளின் பால், 37, என்பவருடன் அருளாளனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன. சரி, மணமாகி, ஒரு மகனும் உள்ள ஒரு கிறிஸ்த பெண் எப்படி, இன்னொரு ஆணுடன் பழகலாம் என்பது பற்றி விளக்கவில்லை. கணவன் – மனைவி பந்தத்தைதாண்டி, தொடர்ந்து கிருத்துவர்கள் எப்படி இத்தகைய கள்ள-பாலியல் உறவுகளை வைத்துக் கொள்கிறார்கள் என்று சர்ச்சோ, மற்ற கிருத்துவ பாஸ்டர்களோ, பிஷப்புகளோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அருளாளனின் பெற்றோர், கௌரி மற்றும் பிராங்க்ளினின் பெற்றோர் எப்படி சம்மதித்தார்கள் என்று புரியவில்லை. மாறாக, ஊடகங்கள், “திருச்சபைக்கு வந்து சென்றதால், அருளாளன், மதபோதகர் பிராங்கிளின் பால் மற்றும் அவரது குடும்பத்தாருடன் பழகினார்[3]. அப்போது அருளாளனுக்கும், கவுரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது[4]. சில மாதங்களுக்கு முன், திருச்சபை பணியாக வெளியூர் சென்றபோது, அவரது மனைவியுடன், அருளாளன் உல்லாசமாக இருந்ததை அறிந்து, பிராங்கிளின்பால் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதனால் அவருக்கும், கவுரிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. தவிர, பிராங்கிளின் பாலின் மனைவி, அவரை பிரிந்து கோவைக்கு சென்று விட்டார்”, என்று முடித்துள்ளனர்.

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்

பேபிராணியை காதலித்த அருளாளனும், பிராங்கிளினும்: இந்நிலையில், கொங்கர்பாளையத்தை சேர்ந்த பேபிராணி, 23, என்ற பெண்ணுடன், பிராங்கிளின் பாலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது[5]. மதபோதகர் விரும்பிய பெண்ணை, அருளாளனும் விரும்பியது, பிராங்கிளின் பாலுக்கு தெரியவந்தது. இதை அறிந்த பிராங்கிளின்பால் தனது மனைவியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு வேறு பெண்ணை காதலிக்கிறாயா? என்று ஆத்திரம் அடைந்தார். ஆனால் அவர் கோபத்தை வெளிக்காட்டாமல் அருளாளனுடன் பழகி வந்தார், என்கிறது ஒரு ஊடகம், அதாவது, தெரிந்தே அமைதியாக இருந்தார் என்றால், விசயம் என்ன சொல்லவில்லை. இன்னொரு ஊடகமோ, “இதற்கிடையே அருளாளனின் காதலிக்கும், பிராங்கிளின்பாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் பிராங்கிளின்பால் தன் மனைவியிடம் விவகாரத்து பெற்ற பிறகு காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்[6] என்கிறது. இதற்கு அருளாளன் தடையாக இருப்பதாகவும் அவர் எண்ணினார். அதனால், அருளாளனை தீர்த்துக்கட்ட பிராங்கிளின் பால் முடிவு செய்தார்[7].

கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல்

கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல்

விஷம் கொடுத்து / பூச்சி மருந்து கொலை[8]: பங்களாப்புதுார் தனியார் கல்லுாரியில் படிக்கும் மூன்று மாணவர்களை, மதபோதகர் உதவிக்கு அழைத்து உள்ளார். இவர்களுக்கும் அருளாளனுக்கும் டியூஸனுக்கும் வருவதால் பழக்கம் இருக்கிறது. ஆனால், பிராங்கிளின் கூப்பிட்டதும், அதுவும் கொலைசெய்யக் கூப்பிட்டதும், அம்மாணவர்கள் எப்படி ஒப்புக்கொண்டனர் என்பது புதிராக இருக்கிறது. அம்மாணவர்கள் என்ன அந்த அளவுக்கு குற்றமனப்பாங்கு கொண்டவர்களா அல்லது மூளைசலவை செய்து கொல்லத்தூண்டிவிட்டார் என்றால், தூண்டுதல் (Motive) முறை என்ன என்படும் தெரியவில்லை. ஆனால், பிராங்கிளின் சொல்லியபடி, கோகோ கோலாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்தனர்.  அதை குடித்த அருளாளன் ‘‘என்ன இந்த குளிர்பானம் ஒரு மாதிரியாக உள்ளதே..’’ ரொம்ப நாள் ஆகிவிட்டதா.. என்று கேட்டார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அருளாளன் அங்கேயே மயங்கி விழுந்தார்.

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்

அருளாளன் உடலை வாய்க்காலில் போட்டது: பிறகு, “இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதபோதகர் பிராங்களின் பால் மகிழ்ச்சியுடன் அங்கு வேனுடன் வந்தார்”, என்று ஊடகங்கள் சொல்கின்றன. அப்படியென்றால், அம்முன்று மாணவர்கள் போன் செய்து அறிவித்தார்கள் என்றாகிறது. அதாவது, அந்த அளவுக்கு ஒத்துழைத்துள்ளார்கள் என்றாகிறது. மயங்கிய நிலையில் கிடந்த அருளாளனை, டெம்போ டிராவலர் மூலம் கடத்திச் சென்று, வழியில் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதை கண்டு தண்ணீரில் போட்டால் தவறி விழுந்து இறந்திருப்பார் என போலீசார் கருதி விடுவார்கள் என எண்ணி அருளாளன் பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டு சென்று விட்டனர். பிறகு யாருக்கும் எதுவும் தெரியாததுபோல் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். போலீஸ் பிடியில் சிக்கமாட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் அவர்கள் வசமாக சிக்கிக்கொண்டனர்[9].

21 வயதுக்கு கீழான மூன்று பேர் கைது:  கொலைக்கு உடந்தையாக இருந்ததாக,

  1. டெம்போ டிராவலர் டிரைவர் ஜான் என்கிற ஆறுச்சாமி,
  2. மதபோதகர் பிராங்கிளின்பால் (37),
  3. அருண்குமார் (18),
  4. நாகராஜ் (18),
  5. கார்த்திகேயன் (20),

மற்றும் கல்லுாரி மாணவர்கள் மூவர் என, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்[10]. இங்கு “டெம்போ டிராவலர் டிரைவர் ஜான் என்கிற ஆறுச்சாமி” என்று ஒரு நாளிதழ்தான் குறிப்பிடுகிறது. விசாரணையில் அவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிகிறது[11]. மாணவர்கள் 3 பேரும் 21 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்[12].இன்று 21 வயதுக்குக் கீழானவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது, அவர்களை சட்டப்படி தண்டிக்க முடியாமல் இருப்பது, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்பது போன்ற விசயங்கள் இன்றைக்கு விவாதிக்கப் படுகின்றன. அதனால், கிருத்துவர்கள் இளைஞ்சர்களை இவ்வாறு ஈடுபடுத்தி பரிசோதனை செய்கிறார்களா அல்லது குற்றங்களை மறைக்க புதிய வழிகளை உருவாக்குகிறார்களா என்று தெரியவில்லை. சில நேரங்களில் மத-அடையாளங்கள் குறிப்ப்டப்படுவதில்லை, சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. இதெல்லாம் எதற்கு என்றும் நோக்கத்தக்கது.

வேதபிரகாஷ்

© 20-03-2015

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=136281

[2] http://www.dailythanthi.com/News/State/2015/03/17005209/The-missionary-who-killed-5-people-including-college.vpf

[3] தினமலர், மாணவர் கொலை வழக்கு மதபோதகர் உட்பட 5 பேர் கைது, மார்ச்.6, 2015.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/illicit-love-love-clash-murder-5-people-arrested-including-preacher-college-students-115031700016_2.html

[5]  தினத்தந்தி,  மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரம்: கல்லூரி மாணவரை கொலை செய்த மதபோதகர் உள்பட 5 பேர் கைது , பதிவு செய்த நாள்:

செவ்வாய், மார்ச் 17,2015, 12:52 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், மார்ச் 17,2015, 4:00 AM IST.

[6]  வெப்துனியா, கள்ளக்காதல், மோதல், கொலை: மதபோதகர், கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது, செவ்வாய், 17 மார்ச் 2015 (13:49 IST).

[7] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Pastor-Among-Four-Held-for-Killing-Student/2015/03/17/article2717021.ece

[8]  தினகரன், குளிர்பானத்தில் விஷம் கலந்து கல்லூரி மாணவனை கொன்ற கிறிஸ்தவ மதபோதகர் கைது, 16-03-2015; 00:08:49; திங்கட்கிழமை.

[9] http://www.maalaimalar.com/2015/03/16165150/College-student-who-killed-a-p.html

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1207108

[11] http://www.business-standard.com/article/pti-stories/pastor-and-4-others-held-for-murder-115031600407_1.html

[12] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/illicit-love-love-clash-murder-5-people-arrested-including-preacher-college-students-115031700016_1.html