கேரள பாதிரி வழக்கம் போல 10 வயது சிறுமியை நிர்வாணமாக்கி படம் பிடித்ததால், கற்பழிப்புப் புகாரில் தேடப்பட்டு விசாரணையில் வழக்காம் – தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்கிறது சர்ச் அதிகாரம்!
தமிழ் ஊடகங்களின் உண்மை மறைப்புத் தன்மை: வழக்கம் போல பத்து வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த கேரள தேவாலய பாதிரியாரை போலீஸார் தேடிவருகின்றனர் என்று தமிழ் ஊடகங்கள் ஏதோ ஒப்புக்கு ஒப்பாரி வைத்தன. சரி, என்னதான் உண்மை என்று தேடிபார்த்தால், 44 வயதான ராஜு கொக்கன் [Fr Raju Kokkan, 44,] என்ற பாதிரி 10 வயதான சிறுபெண்ணை கற்பழித்தக் குற்றத்திற்காக வியாழக்கிழமையிலிருந்து காணாமல் இருக்கும் அவனை போலீசார் தேடி வருவவதாக கேரள நாளிதழ்கள் மேலும் விவரமாக வெளியிட்டுள்ளன[1]. அடேங்கப்பா, பெயரே ஒருவிதமாகத்தான் உள்ளது. கொக்கன் அதனால் தான் கொக்கோகத்திற்கு செல்லத் துடித்தான் போலும்!
புனித கூடுதல் பெயரில் காமவலை விரித்த பாதகன்: கேரள மாநிலம் திருச்சூர் கத்தோலிக்க மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தளிக்கட்டுச்சேரியிலுள்ள புனிதபவுல் தேவாலயத்தில் [St Paul’s Church at Thaikkattusery belonging to Thrissur Catholic archdiocese,] பாதிரியாக இருப்பவர் ராஜு கொக்கன் (44). இந்த இரு தினங்களுக்கு முன்பு தேவாலயத்துக்கு வழக்கமாக வரும் குடும்பத்தைச் சேர்ந்த 10 வயதுசிறுமி மீது ராஜு கொக்கனுக்கு காமஎண்ணம் இருந்து வந்துள்ளது[2] (நம்ப ஆட்களின் வர்ணனை இது). ஏப்ரல் 8 அன்று புனிதகூடல் [holy communion ] என்ற பெயரில் அந்த பாதிரி அச்சிறுமிக்கு புதிய ஆடைகளைக் கொடுத்துள்ளான். பிறகு தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்துள்ளான். இச்செய்தியைப் பற்றிய மலையாள வீடியோவை இங்கு காணலாம்[3]. “புனித கூடுதல்” என்று இவன் கூட திட்டம் போட்டான் போலிருக்கிறது.
புத்தாடைக் கொடுத்து, அவிழ்த்து, படம் எடுத்த போதகன்: புத்தாடை உடுத்தி அறைக்கு வந்ததும், அதைப் பற்றி “விமர்சித்து” மறுபடியும் வரச்சொல்லியிருக்கிறான்[4]. அப்படியென்றால் என்ன என்று புரியவில்லை. வந்த அச்சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்ற பாதிரியார், ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி தனது செல்போனில் படம்பிடித்துள்ளார்[5]. இதனால் அதிர்ச்சிடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளாள். இதையடுத்து பாதிரியார் மீது சிறுமியின் பெற்றோர் திருச்சூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[6]. புகாரின் பேரில் போலீஸார் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு [under section 376 of IPC and the Protection of the children from section offices Act. ] செய்துள்ளனர்[7]. செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததுள்ளதால் அவர் மீது தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழும் [section 66 (E) of the IT Act] வழக்குப் பதிவாகியுள்ளது. புகார் பற்றிய தகவலறிந்ததும் பாதிரியார் தலைமறைவாகி விட்டார். போலீஸார் அவரை தேடி வருகின்றனர்[8]. இப்படி வழக்கமான செய்திகள் வந்துள்ளன.
தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்கிறது சர்ச் அதிகாரம்: திருச்சூர் மறைமாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜியோகடவில் இது குறித்து கூறுகையில், “நாங்கள் உண்மையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தவறு செய்தது நிரூபிக்கப் பட்டால் தேவாலய சட்டப்படி பாதிரியார் ராஜு கொக்கன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்[9].
ஆஹா, கேரளாவில் என்னமோ இவர்கள் உண்மையினைக் கண்டறிந்துதான், எல்லாமே நடக்கிறது போல பேசுகிறார்கள். ஆனால், எத்தனை பெண்கள் கற்பழிக்கப் பட்டிருக்கிறார்கள், கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். அவற்றில் பாட் ஹிரிகள், பாஸ்டர்கள் என்று கூட்டமே சம்பந்தப் பட்டிருக்கிறது.
“தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் தேவாலய சட்டப்படி பாதிரியார் ராஜு கொக்கன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”, அதென்ன, இவர்கள் பெரிய நீதிமான்களா? போப்பே அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்[10] என்ற செய்திகள் வந்து விட்டன[11]. அவரை தூக்கிலா போட்டு விட்டார்கள்? உள்ள ஆதாரங்களை அழிக்க ஆரம்பித்துள்ளனராம்[12]. தேவாலயச் சட்டம் என்ன, இவர்கள் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் இல்லையா?
© வேதபிரகாஷ்
26-04-2014
[2] http://tamil.oneindia.in/news/india/police-register-rape-case-against-catholic-priest-199231.html
[3] http://www.malayalamtv.in/play.php?id=VkYLY-3FzX8
[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=120599
[7] நக்கீரன், சிறுமியைநிர்வாணப்படுத்திபடம்பிடித்ததேவாலயபாதிரியார், 25-04-2014
[8]தினமணி, 10 வயதுசிறுமியைநிர்வாணப்படுத்திபடம்பிடித்ததேவாலயபாதிரியாருக்குவலைவீச்சு, By dn, திருவனந்தபுரம், First Published : 25 April 2014 04:45 PM IST
[9] தமிழ்-ஒன்-இந்தியா, 10 வயதுசிறுமியைநிர்வாணமாக்கிசெல்போனில்படம்பிடித்தபாதிரியார், Posted by: Veera Kumar, Updated: Friday, April 25, 2014, 18:24 [IST]
[10] http://www.youtube.com/watch?v=vNTTx7gZHS4&feature=youtu.be
[11] http://www.youtube.com/watch?v=vNTTx7gZHS4&feature=youtu.be