Archive for செப்ரெம்பர், 2016

காதல், மோதல், சாதல் – தூத்துக்குடி ஒருதலை காதல் வெளிப்படுத்தும் விவகாரங்கள்!

செப்ரெம்பர் 7, 2016

காதல், மோதல், சாதல் – தூத்துக்குடி ஒருதலை காதல் வெளிப்படுத்தும் விவகாரங்கள்!

franciana-and-keegan-2016

பேஸ்புக்கில் கீகன் ஜோஸ் கோம்ஸ்: கீகன் ஜோஸ் கோம்ஸ் [Keegan Jose Gomez] என்ற பெயரில் இன்றுவரை பேஸ்புக்கில் கணக்கு இருக்கின்றது[1]. ஆகஸ்ட்.31, 2016 வரை கீகன் அதில் புகைப்படங்களைப் போட்டுள்ளான். ஜே. பி. போடா இன்சூரன்ஸ் [J B Boda Insurance Surveyors and Loss Assessors Pvt. Ltd] கம்பெனியில் வேலைசெய்ததாகக் குறிப்பிட்டுள்ளான். நண்பர்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் காணப்படுகின்றன. கிறிஸ்தவன் என்ற ரீதியில், ஏசு, மேரி, சர்ச் போன்ற படங்களும் காணப்படுகின்றன. ஒரு கல்யாண புகைப்படத்தில் கோட்டு-சூட்டுடன் நின்று கொண்டிருக்கிறான். கப்பலில் வேலை செய்யும் சில நண்பர்கள் இருப்பதும் தெரிகிறது. மரணத்தைப் பற்றிய சில பதிவுகள் விசித்திரமாக இருக்கின்றன. இவன் ஆசிரியையை கொலை செய்ததை ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளார்.

keegan-facebook-photoதனக்கு கிடைக்காத அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்[2]: “தனக்கு கிடைக்காத அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்”, என்பதும் அதிர்ச்சியாக இருக்கிறது[3]. பெண்கள் என்ன பொருட்களா, பண்டங்களா “எனக்கு-உனக்கு” என்று தீர்மானித்துக் கொள்வதற்கு? அத்தகைய வக்கிரத்தன்மையை எப்படி ஒரு ஆண் உண்டாக்கிக் கொள்ளாலாம் அல்லது உண்டாகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள், இது அவனுடைய உரிமை என்று வாதிப்பார்களா? இன்றைய நிலையில் அருந்ததி ராய் போன்றோரே, தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளின் உரிமைகளைப் பற்றித்தான் பேசி, ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவர்களால் பாதிக்கப்பட்டு வரும் அப்பாவி மக்களின் துன்பங்களை, குரூர கொடுமைகளை, கொலைகளைப் பற்றி கண்டுகொள்வதில்லை. இதனால், இத்தகைய வன்முறைகள் நியாயப்படுத்தப் படுகின்றன. “எனக்குக் கிடைக்காதது, யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற மனப்பாங்கு கொண்டு, “அழித்து விடுகிறேன்” என்று கிளம்புவது, தற்கொலை ஜிஹாதியின் மனநிலையை காட்டுகிறது. எப்படி அவனை அதுபோல உருவாக்கி அனுப்புகின்றனரோ, அதேபோல, இக்கொலைகாரர்களும் உருவாக்கப் படுகிறார்கள். முறைகள் வெவ்வேறாக இருந்தாலும், முடிவுகள் ஒரேமாதிரியாக இருப்பதால், முதலில் பெண்மை, தம்பத்தியம், காதல், திருமணம் முதலியவற்றைக் கொச்சைப்படுத்தும், கேவலப்படுத்தும், ஆபாசப்படுத்தும் கொள்கைகளை யார் கொண்டுள்ளனர், அவற்றை யார்-எவ்வாறு-எங்கு-என்ன முறையில் பரப்புகின்றனர் என்பதையெல்லாம் அடையாளம் கண்டு, அவர்களும், சமூக சீரழிப்பாளிகளே என்று தோலுருத்திக் காட்ட வேண்டும்.

keegan-jose-gomezகாதலுக்கு கண்ணில்லை – உண்மையும், மாயையும்: காதலுக்கு கண்ணில்லை, காதில்லை, மூக்கில்லை, சுரணையில்லை….என்றெல்லாம் பேசி, எல்லோரையும் உசுப்பேற்றியுள்ளனர். மேலும் காதல் என்பது ஒருவழி பாதையோ, இருவருக்கு மட்டும் வருவம் உணர்ச்சி அல்ல. இரு நபர்களும் கொள்பவது தான் காதல். அதிலும், இக்காலத்தில் அதற்கும் மேலாக பற்பல காரணிகள் உள்ளன. முந்தைய காதல் நிரந்தரமானது, திருமண பந்தத்தில் கட்டுப்பட்டது, உடையாதது, பிரியாதது. ஆனால், இக்காலத்தில் அப்படியல்ல. மாறுவது, மாற்றப்படக் கூடியது. திருமணம் ஆனாலும், விவாக ரத்தில் கூட முடிவடைவது. பலதார  பல ஆண்களுடன் திருமணம் என்றளவிற்கு வந்துள்ளது. இதெல்லாம், சமுகத்தின் பிறழ்சிகளில் குறைவாகவே இருந்தாலும், மற்றவர்களின் கவனத்தை எளிதில் கவர்கிறது.

%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3பிஞ்சுகளின் நெஞ்சுகளில் காதல் உணர்வை தூண்டுவது ஆபத்து: காதல் என்பதை சினிமாக்களில் கொச்சைப்படுத்தி வந்ததாலேயே, இத்தகைய கூரூரக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது, பள்ளிகளிலேயே காதல் ஆரம்பித்து விடுகிறது, பத்து-பதினைந்து சிறுமிகள்-மாணவிகள் எல்லோரும் காதலிக்கிறார்கள், டூயட் பாடுகிறார்கள் என்றெல்லாம் சித்தரித்துக் காண்பிக்கப்பட்கிறது. பொறுக்கி, ரௌடி, கேப்மாரி, சோமாறி என்ற வகையறாக்கள் எல்லோரும் காதலிப்பது போலவும், அவர்களில் அழகான இளம்பெண்கள் தான் அப்படியே மயங்கி காதலித்து, டூயட் பாடி, படுக்கையறையில் ஜாலியாக இருப்பது போலவும் காண்பித்து வருகிறார்கள். படித்தவள், ஐடி கம்பெனியில் வேலையில் வேலைப் பார்ப்பவள், இங்கிலீஷ் பேசுபவள், நவநாகரிகமாக இருப்பவள் என்ற முறையில் காண்பித்து விட்டு, டூயட் பாடும் போது மட்டும், கொச்சையாக, அசிங்கமாக, ஆபாசமாக, கொக்கோகமான பாடல்களைப் பாடுவது, அதேபோல, உடலை, அங்கங்களை அரைகுறை உடல்களில் காட்டுவது போன்றவையும் சாதாரணமாகக் காட்டப் படுகின்றன. இவையெல்லாம் “முட்டாள் பெட்டியில்” காட்டும் போது, குடும்பத்தோடு பார்க்கும் நிலயினையும் உண்டாக்கி விட்டாகியுள்ளது.

cinema-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2016இக்காலத்தில் காதலுக்கு எல்லா தகுதிகளும் வேண்டும்: ஆட்டோக்காரனுக்கு ஆட்டோ தயாரிக்கும் முதலாளியின் மகள் வேண்டும் என்றும்; போட்டோகாரனுக்கு, கேமரா தொழிற்சாலையின் இயக்குனர் பெண் வேண்டும் என்றும்; தொண்டனுக்கு, கட்சியின் தலைவர் மகள் கோரும் எண்ணமும்; ஆப்பிரிக்க பிச்சைக்காரன், இங்கிலாந்து இளவரசியை விழைக்கும் போக்கும்; சினிமாவில் நடக்கலாம், நிஜத்தில் நடக்காது என்பதை இளைஞர்கள் நினைத்துப் பார்ப்பது இல்லை. அதையே உண்மை என்று நம்பி விடுகிறான். இளம் பெண்களும், தம் பெற்றோர் ஏழைகளாக இருக்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்க கஷ்டப்படுகிறார்கள் ஐந்து-ஆறு பெண்கள் இருப்பதால், தனக்கு கல்யாணம் நடக்குமா-நடக்காதா போன்ற எண்ணங்களில் தவறான நடவடிக்கைகளில் இறங்கி விடுகின்றனர். இனி தமது வாழ்க்கையை தாம்தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும் போன்ற போன்றமுடிவுகளுக்கு வந்து விடுகின்றனர். அதிலும், வேலை செய்யுன் பெண் எனும்போது, இத்தகைய முடிவுகள் சீக்கிரம் எடுக்கப்படுகின்றன. அவற்றில் தான் பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உண்மையில், இதற்கெல்லாம் காரணம் பெற்றோர் அல்லர், மற்றவர் தாம். ஏனெனில், பொதுவாக, இவ்விசயங்களில் பெண்கள் அவ்வளவு சீக்கிரமாக எநடவடிக்கை எடுக்க மாட்டார்கள், முடிவுக்கு வந்து விடமாட்டார்கள்.

%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1ஆசிரியர் தினத்தன்று ஆசிரியையின் உடலடக்கம் நடந்தது: ஒருபக்கம் “ஆசிரியர் தினமே” கேவலப்படுத்தப் பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகள் இல்லாத, துவேசம் திடீரென்று பீரிட்டு எழுந்துள்ளது. ஆமாம், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், உலகத்தின் தலைசிறந்த தத்துவவாதி, இந்தியாவின் முந்தைய ஜனாதிபதி, ஒரு தலைசிறந்த ஆசிரியர் என்றிருந்ததால், செப்டம்பர் 5ம் தேதியை, “ஆசிரியர் தினமாகக்” கொண்டாடி வருகின்ற வேலையில், அவர் “பார்ப்பனர்”, அவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது கூடாது, அது அசிங்கம், என்றெல்லாம் சில பெரியாரிஸ்டுகள், கம்யூனிஸவாதிகள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் வாழ்த்து சொல்பவர்கள், இதற்கு அமைதியாக இருக்கின்றனர். திடீரென்று அத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றை யார் உருவாக்கியுள்ளனர் என்று கவனிக்க வேண்டும். ஆசிரியர்களையே, இன்றைய ஊடகங்கள், சினிமா முதலியவை கொச்சைப்படுத்தி வருகின்றன.

%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4ஆண்கள் பெண்கள் பின்னால் செல்வது, சுற்றுவது கூடாது: ஆங்கில ஊடகங்கள், பெண்ணின் விவகாரங்களில் வலிய நுழைபவன் வேண்டுமென்றே நுழைந்தவன், மூக்கை நுழைக்கின்றவன், பின் தொடர்பவன், பிடிவாதமாக துரத்தி தொந்தரவு செய்பவன், வேவு பார்ப்பவன், [Stalker] இறந்தான் என்று குறிப்பிட்டன[4].  இத்தகைய போக்கிலிருந்து ஆண்கள் மாற வேண்டும். ஏனெனில், இச்செயல்கள் காதலை அல்ல மோதலைத் தான் உண்டாக்கும்[5]. அதாவது, நிச்சயமாக, எந்த ஆணும், ஒரு பெண்ணின் விசயத்தில் அதிகப்பிரசைங்கித்தனமாக மூக்கை நுழைக்கக் கூட்டாது என்ற ரீதியில் தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டன[6]. தொடர்ந்து நடந்து வரும் காதல் கொலைகளில், ஒரு ஒப்புமை இருப்பதையும் எடுத்துக் காட்டின[7]. பொதுமக்களின் உணர்ச்சிகளை இந்நிழ்சிகள் தூண்டிவிடும் வல்லமைப் பெற்றுள்ளன, என்பதையும் எடுத்துக் காட்டின[8]. ஒரேமாதத்தில், ஒரே வாரத்தில் இரண்டு-மூன்று என்று கொலைகள் நடப்பது திகைப்படைய வைப்பதாக உள்ளது[9]. கொலை செய்தவன் தற்கொலை செய்து கொள்வது, அல்லது கைதானவனை ஆதரிப்பது போன்றவையும் எதிர்விளைவுகளை உண்டாக்கலாம். சமூக பிரஞையுடன் எல்லோரும் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

© வேதபிரகாஷ்

07-09-2016

%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5

[1] https://www.facebook.com/fernando.vvvv

[2] மாலைமலர், தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: ஒருதலைக்காதலில் வாலிபர் வெறிச்செயல், பதிவு: ஆகஸ்ட் 31, 2016 11:27; மாற்றம்: ஆகஸ்ட் 31, 2016 11:35.

[3] http://www.maalaimalar.com/News/State/2016/08/31112734/1035857/teacher-attack-school-premises-in-Thoothukudi.vpf

[4] Times of India, Spurned TN man hacks woman to death inside church, commits suicide, Devanathan Veerappan| TNN | Aug 31, 2016, 04.07 PM IS.

[5] http://timesofindia.indiatimes.com/city/chennai/Spurned-TN-man-hacks-woman-to-death-inside-church-commits-suicide/articleshow/53944779.cms

[6] NDTVnews, Teacher Hacked, Student Clubbed By Alleged Stalkers In Tamil Nadu, Tamil Nadu | Written by J Sam Daniel Stalin | Updated: August 31, 2016 18:15 IST

[7] http://www.ndtv.com/tamil-nadu-news/teacher-hacked-student-clubbed-by-alleged-stalkers-in-tamil-nadu-1452806

[8] Indiatoday, Tuticorin: Woman school teacher hacked in church, dies in hospital, Akshaya Nath, Chennai, August 31, 2016 | UPDATED 15:36 IST.

[9] http://indiatoday.intoday.in/story/tuticorin-woman-school-teacher-hacked-in-church-dies-in-hospital/1/753034.html

 

பிரான்சினா – கீகன் ஜோஸ் கோம்ஸ் – விவகாரம்: ஒருதலை வக்கிர காதல், குரூரக் கொலை, ஜுஜுபி தற்கொலை!

செப்ரெம்பர் 7, 2016

பிரான்சினா – கீகன் ஜோஸ் கோம்ஸ் – விவகாரம்: ஒருதலை வக்கிர காதல், குரூரக் கொலை, ஜுஜுபி தற்கொலை!

n-fransina-cremated-on-05-09-2016-tutocorinகீகன் ஜோஸ் கோம்ஸின் ஒருதலை காதல்: தூத்துக்குடி, ஜார்ஜ் ரோடு, இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நியூமேன் [Newman] மகள் பிரான்சினா (N. Francina 25). இவர் தூத்துக்குடி கீழசண்முகபுரம் பேதுரு ஆலய [St Peter Church] வளாகத்தில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு ஆங்கில ஆசிரியையாக பணி புரிந்தார்.  இவரை மறக்குடிதெரு குருசடிசந்தை சேர்ந்த ஜோதி கோமஸ் மகன் கீகன் ஜோஸ் (26) என்பவர் பின்தொடர்ந்து சென்று காதல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.  கீகன் ஜோஸ் கோம்ஸ் [Keegan Jose Gomez] என்று ஆங்கில நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன. இதனால் தினமும் பள்ளிக்கு செல்லும் பிரான்சினாவை அவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் உள்ள ஆலயத்தில் தினமும் பிரார்த்தனை செய்த பின்னர் பிரான்சினா பள்ளிக்கு செல்வார். அதுவரை சீகன் ஆலயத்தின் வெளியே காத்திருப்பாராம்[1]. ஒருமுறை போலீஸாரிடம் புகார் கொடுத்து, கீகன் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளான். இருப்பினும், தொடர்ந்து, இவ்வாறு தொல்லை கொடுத்துள்ளான். அப்படியன்றால், அத்தகைய மனப்பாங்கை, தைரியத்தை, அடாத செயல் செய்யத் தூண்டும் போக்கை எது உண்டாக்குகிறது என்பது நோக்கத்தக்கது.  இவ்வாறு இவன் தொடர்ந்து செய்து வரும் போது, புகார் அளிக்கவும் இல்லை, இதனால், உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

murder-in-church-how-keegan-jose-gomez-lookedபெண்ணிற்கு நிச்சயதார்த்தம், திருமண தேதி தீர்மானம்: பலமுறை கீகன்ஜோசை கண்டித்தும், அவரது தொந்தரவுகள் குறையவில்லை. இதனால் பிரான்சினாவின் பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தனர். சமீபத்தில் அவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.  இவருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஜானுக்கும் வருகிற செப்டம்பர். 8ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆசிரியை வேலையை விட்டுவிட பிரான்சினா முடிவு செய்தார். இதையடுத்து இன்றுடன் ஆசிரியை வேலையில் இருந்து நின்றுவிடப் போவதாக அவர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். பிரான்சினாவிற்கு வருகிற 8-ந் தேதி திருணம் நடக்க இருப்பதையும், அவர் வேலையில் இருந்து நிற்கப்போவதையும் அறிந்த சீகன் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்[2]. இதையடுத்து இன்று காலை அரிவாளை தனது சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு பள்ளி அருகே சீகன் காத்திருந்தார்.

fransina-teacher-murdered-inside-church-01_09_2016_005_011சர்ச்சிற்குள் ஏசுகிருஸ்து, பாதிரி, பக்தர்கள் முன்பாக நடந்த கொலை: இவர் வழக்கம் போல 31-08-2016 அன்று பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற பிரான்சினா பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள செயின்ட் கிறிஸ்துவ ஆலயத்தில் நடந்த வழிபாட்டில் கலந்து கொண்டார். அப்போது அங்கே, அரிவாளுடன் வந்த கீகன் ஜோஸ் என்பவர் திடீரென ஆசிரியை பிரான்சினாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். தலை உள்ளிட்ட உடலில் பல இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. சர்ச்சில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த எல்லோர் முன்னிலையிலும் இது நடந்துள்ளது. பிரான்சினாவின் அலறல் சத்தம் கேட்டு பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரான்சினாவை மீட்டு, உடனே அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் [Tuticorin Government Medical College Hospital] சேர்த்தனர்.

%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%80%e0%ae%95%e0%ae%a9%e0%af%8dசர்ச் பாதியார் செல்வின் துரை கொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திந்தாரா?: “காலை 8.30 மணிக்கு சர்ச்சில் பிரான்சினா வெட்டப்பட்டுள்ளார். ஆனால் சர்ச் பாதியார் செல்வின் துரை அதை வெடிக்கை பார்த்துக் கொண்டிருந்திந்ததாகவும் 9.30 மணிக்கு தான் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அங்குள்ள முகநூல் நபர்கள் தெரிகிக்கின்றனர்”, என்று இன்னொரு செய்தி கூறுகிறது[3]. சர்ச்சிற்குள் எல்லோர் முன்னிலையில் எனும்போது, செல்வின் துரையும் இதைப் பார்த்திருப்பது திண்ணம்[4]. ஆபத்தான நிலையில் இருந்த ஆசிரியருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். கீஜன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட ஆசிரியை பிரான்சினா, தற்கொலை செய்து கொண்ட கொலையாளி கீகன்ஜோஸ் ஆகியோரது உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த 1–ந் தேதி ஆசிரியை பிரான்சினா, கீகன்ஜோஸ் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. கீகன்ஜோஸ் உடல் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டது.

n-fransina-cremated-on-05-09-2016சகோதரன் பிரான்ஸிலிருந்து பிராம்சினாவைப் பார்க்க வந்தது: பிரான்ஸ் நாட்டிலிருக்கும் பிரான்சினாவின் அண்ணன் பிராங்க்ளின்  வந்த பிறகே அவரது உடலை அடக்கம் செய்ய   குடும்பத்தினர்  முடிவு செய்தனர். பிராங்க்ளின் மாலுமியாக பணி புரியும் கப்பல் தற்போது பிரான்ஸ் நாட்டு கடல் பகுதியில் உள்ளது[5]. தங்கை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கப்பலில் இருந்து அருகில் ஒரு தீவில் இறக்கி விடப்பட்ட பிராங்க்ளின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரான்ஸ் வந்து அதன் பிறகே இந்தியா திரும்பினார்[6]. பிரான்சில் இருந்து அவருக்கு இந்தியா வர விமான டிக்கெட் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது[7]. இதனால் பிரேத பரிசோதனைக்கு பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலேயே பிரான்சினாவின் உடல்  வைக்கப்பட்டிருந்தது[8].

murder-in-church-keegan-francinaஆசிரியர் தினத்தன்று ஆசிரியையின் இறுதி சடங்கு, உடலடக்கம் நடந்தது: இந்நிலையில் பிராங்க்ளின் 04-09-2016 அன்று மாலை 6.30 மணியளவில் தூத்துக்குடி வந்து சேர்ந்தார்[9].  பெற்றோரை பார்த்ததும் தனது சகோதரிக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து கேட்டு  கதறி அழுதார்[10]. இதை பார்த்த உறவினர்களும் கண்ணீர் விட்டனர். இதையடுத்து ஆசிரியர் தினமான 05-09-2016 அன்று காலை 8.15 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  வைக்கப்பட்டிருந்த ஆசிரியை பிரான்சினாவின் உடல் அவரது உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களும், அவருடன் பணியாற்றிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினர். அதன் பின்னர் பாத்திமாநகர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு திருப்பலி நடந்தது[11]. தொடர்ந்து 9.45 மணியளவில் ஜார்ஜ் ரோடு மையவாடியில் பிரான்சினாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்[12].

© வேதபிரகாஷ்

07-09-2016

how-keegan-jose-gomez-looked-facebook-photo

[1] மாலைமலர், தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: ஒருதலைக்காதலில் வாலிபர் வெறிச்செயல், பதிவு: ஆகஸ்ட் 31, 2016 11:27; மாற்றம்: ஆகஸ்ட் 31, 2016 11:35

[2] http://www.maalaimalar.com/News/State/2016/08/31112734/1035857/teacher-attack-school-premises-in-Thoothukudi.vpf

[3] sattrumun.com, தூத்துக்குடியில் ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை, August 31, 2016.

[4] http://www.sattrumun.com/tuticorin-nursery-school-teacher-murdered-in-church/

[5] tutyonline.net, பிரான்சினா உடல் ஆசிரியர் தினத்தன்று அடக்கம்: வெளிநாட்டில் இருந்து சகோதரர் வருகை தாமதம், சனி 3, செப்டம்பர் 2016 10:44:05 AM (IST)

[6] நக்கீரன், பிரான்சினா உடல் 6 நாட்களுக்கு பின்னர் ஆசிரியர் தினத்தன்று அடக்கம், பதிவு செய்த நாள் : 5, செப்டம்பர் 2016 (20:42 IST) ; மாற்றம் செய்த நாள் :5, செப்டம்பர் 2016 (20:42 IST)

http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=172460

[7] http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=172460

[8] http://www.tutyonline.net/view/31_124195/20160903104405.html

[9] தினத்தந்தி, தூத்துக்குடியில், ஒருதலைக்காதலில் வெட்டிக்கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியை பிரான்சினா உடல் 6 நாட்களுக்கு பின் அடக்கம் ஆசிரியர் தினத்தில் மண்ணுக்குள் புதைந்த சோகம், பதிவு செய்த நாள்: திங்கள் , செப்டம்பர் 05,2016, 10:41 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 06,2016, 4:30 AM IST

[10] http://www.dailythanthi.com/News/Districts/Thoothukudi/2016/09/05224103/In-Tuticorin-in-orutalaikkatalVettikkollappatta-School.vpf

[11] தினகரன், ஒருதலைக்காதலில் வாலிபரால் கொல்லப்பட்ட பிரான்சினா உடல் ஆசிரியர் தினத்தில் அடக்கம், Date: 2016-09-06@ 00:26:22

[12] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=243691