Archive for திசெம்பர், 2013

கற்பழிப்பு, கருக்கலைப்பு பாதிரி பதவி நீக்கம் செய்யப்பட்டாராம் – ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் திடீர் அறிக்கை!

திசெம்பர் 25, 2013

கற்பழிப்பு, கருக்கலைப்பு பாதிரி பதவி நீக்கம் செய்யப்பட்டாராம் – ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் திடீர் அறிக்கை!

தலைமறைவான செக்ஸ்பாதிரி நீதிமன்றத்தில் சரண்: பேட்டை திருத்தேவாலய பற்று தந்தையான ஞானபிரகாசம் அந்தோனி செல்வன், ஒரு இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்து, ஐந்துமாதசிசுப் பிண்டத்தை செயின்ட் ஆன்டனி சர்ச் வளத்தின் கல்லறையில் புதைத்து விட்டார்[1]. போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவானார். தலைமறைவாக உள்ள பாதிரியாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்[2]. இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் பாதிரியார் செல்வன் 20-12-2013 அன்று வேறுவழியில்லாமல், உத்தமபாளையம் கோர்ட்டில் சரணடைந்தார்[3]. அவரை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில், தலைமறைவான பாதிரியார் ஞானப்பிரகாசம் செல்வன், நேற்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், நீதிபதி கீதா முன், சரணடைந்தார். அவரை, டிச., 26ல், திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க ஆணையிட்டார். இதையடுத்து, பாதிரியார் ஞானப்பிரகாசம் செல்வன், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[4].

ரைட் ரெவரென்ட் ஜூட் பால்ராஜ்: இவ்வளவு நடந்தும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்[5]. அதாவது, ஜூட் விட்டுவிட்டு ஒளிந்து கொண்டுள்ளார். முன்னர் போலீசார் தன்னிடம் ஒன்றும் சொல்லவில்லை என்றார்[6]. கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், இதைப் பற்றி மறைக்கிறார்கள். உலகமெலாம் கிருத்துவ செக்ஸ் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கின்றர்கள். போப்பே அதைப் பற்றிதான் சுற்றறிக்கை விட்டுக் கொண்டு, கேள்விகள் கேட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார். ஆனால், அவர் பட்டியிலில் இந்த இந்திய செக்ஸ் பாதிரிகளின் பெயர்கள் சென்றடையவில்லை போலும்[7]. ஆனால், 24-12-2013 அன்று அவர் திடீரென்று ஊடகங்களுக்கு அறிக்கை விட்டாராம்.

பிஷப்  ஜூடு  பால்ராஜ்  வெளியிட்டுள்ள  அறிக்கை: கிருஸ்துமஸ் வருகின்ற நேரத்தில், இத்தகைய விசயங்கள் ஊடகங்களில் வருவதைத் தடுக்க ஒரே வழி என்ற ரீதியில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது போலும். கிறிஸ்தவ திருச்சபை சார்பிலும் செல்வன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாளையங்கோட்டை மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் ஜூடு பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது[8]: “பேட்டை பங்குப்பணியாளர் பி.ஞானப்பிரகாசம் அந்தோணி செல்வன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், அதன் பின்னணியில் எழுந்துள்ள விமர்சனங்களும் திருச்சபையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து உள்ளன. சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் கருக்கலைப்பு செய்தது போன்ற குற்றங்கள் வன்மையான கண்டனத்துக்கு உரியவை[9].

மாணவி  பாலியல்  பலாத்காரம்  பாதிரியார்   “சஸ்பெண்ட்[10]: இந்த செயல்கள் கிறிஸ்துவின் போதனைகளுக்கும், திருச்சபையின் சட்டங்களுக்கும், மனித சமுதாயத்துக்கும், அரசு சட்டங்களுக்கும் எதிரானவை. நடந்த நிகழ்வுகள் மிகவும் வருந்தத்திற்கு உரியவை. இவை இதயத்தில் வலியையும், ஆறாத வடுவையும் ஏற்படுத்தி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த நிகழ்வுகளின் பின்னணியின் படியும், திருச்சபை சட்டத்தின் படியும் ஞானப்பிரகாசம் அந்தோணி செல்வன் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம்[11].

 1. பேட்டை பங்கின் அருட்பணி பொறுப்புகளில் இருந்தும், பள்ளிகளின் நிர்வாக பொறுப்புகளில் இருந்தும் செல்வன் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். அந்த பணியை பாளையங்கோட்டை மறை வட்ட அதிபர் கவனிப்பார்.
 1. காவல்துறையினரால் செல்வன் மீது முதல் குற்றஅறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர், குருத்துவ பணியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்படுகிறார். திருச்சபை சட்டத்தின் 133–ன் படி திருப்பலி, திருவருட்சாதனங்கள் போன்றவற்றை பொது இடங்களில் அவர் நிறைவேற்ற முடியாது.
 1. இத்தகைய பிரச்சினைகளை கையாளும் விதமாக செல்வன் பற்றிய முதல் நிலை அறிக்கை வாடிகனுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
 1. செல்வன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபணமானால், வாடிகன் நிர்வாகம் அவருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும்.
 1. இந்த வழக்கில் நீதி நிலை நாட்டப்படும். இது தொடர்பாக நேர்மையான விசாரணைக்கு திருச்சபை சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்பதை உறுதி செய்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[12].

செல்வன்  மீது  சுமத்தப்பட்ட  குற்றங்கள்   நீதிமன்றத்தில்  நிரூபணமானால்,   வாடிகன்  நிர்வாகம்  அவருக்கு  கடுமையான  தண்டனைகளை  வழங்கும்: இப்படி சொல்லியிருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. “செல்வன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபணமானால்” என்றால்லேதோ இதுவரை நடந்ததெல்லாம், செய்திகளில் வந்ததெல்லாம் கூட இன்னும் நிஜமல்ல என்ற தோரணையில் அறிக்கை விட்டிருப்பது, வாடிகனின் மறைப்பு வேலையைத்தான் காட்டுகிறது எனலாம். “வாடிகன் நிர்வாகம் அவருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும்”, என்றால், இதுவரை, நூற்றுக்கணக்கான பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்களுக்கு, வாடிகன் என்ன தண்டனை கொடுத்தது என்று தெரியவில்லை. இவர்கள் ஏதோ, இந்திய சட்டதிட்டங்கள் எல்லாம் தமக்குப் பொறுந்தாது என்ற ரீதியில் பேசுவதும் விபரீதமாக உள்ளது. இத்தகையப் போக்கினால் தான், கற்பழிப்புஇப் பிஷப் ஊட்ட்யில் ஜாலியாக வாழ்ந்து வந்திருக்கிறார். கேட்டால், அங்கிருப்பதுதான், அவருக்குக் கொடுக்கப் பட்ட தண்டனை என்று விளக்கமுன் அளித்தனர். இனி இவர் விசயத்தில் என்ன நடக்கும் என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.

வேதபிரகாஷ்

© 22-12-2013


[5] Repeated attempts to get Palayamkottai RC Diocese’s official version on this development proved futile as Bishop Rev. A. Jude Paulraj was tight-lipped.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-surrenders-foetus-of-rape-victim-exhumed/article5483795.ece

[9] தினமலர், பள்ளிமாணவிபாலியல்பாதிப்பு:பாதிரியார்சஸ்பெண்ட், பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013,19:51 IST

[10] தினமலர், மாணவிபாலியல்பலாத்காரம்பாதிரியார்சஸ்பெண்ட், பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013,02:43 IST

ஏசுவின் உடல் அல்லது சரீரம் எது சரி – திருப்பலிப் புத்தகம் தடை அல்லது தடை நீக்கம் எது சட்டப்படி சரியானது – முதலிய விவாதங்கள் நீதிமன்றங்களுக்குச் செல்வது – செக்யூலிரஸ இந்தியர்கள் கவனிக்க வேண்டியுள்ளது (1)

திசெம்பர் 22, 2013

ஏசுவின் உடல் அல்லது சரீரம் எது சரி – திருப்பலிப் புத்தகம் தடை அல்லது தடை நீக்கம் எது சட்டப்படி சரியானது – முதலிய விவாதங்கள் நீதிமன்றங்களுக்குச் செல்வது – செக்யூலிரஸ இந்தியர்கள் கவனிக்க  வேண்டியுள்ளது (1)

A brief history of Roman Missal

ஒருவேளை தமிழ் மக்களுக்கு முதன்முறையாக கிருத்துவ இறையியலில் எவ்வாறு வேறுபாடுகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று சொல்லலாம்.  “யூகாரிஸ்ட்” / திருப்பலி பற்றி எப்பொழுதுமே கிருத்துவத்தில் பிரச்சினைதான், விவாதம் தான், சண்டைதான். உடல் உயிர்பெற்று எழுந்ததா இல்லையா என்பதிலிருந்தே அந்த சண்டை ஆரம்பித்துள்ளது. அதனை “கல் நகர்ந்ததா, இல்லையா?” என்றும் விவாதிப்பர். பிறகு “யூகாரிஸ்ட்” / திருப்பலியில் உண்மையிலேயனப்பமும் / ரொட்டியும் மற்றும் சாராயம் / மது உண்மையிலேயே தினம்-தினம் ஏசுவின் சதையாகவும் ரத்தமாகவும் மாறுகிறதா இல்லையா என்ற விவாதங்களும் உண்டு. இது கத்தோலிக்க உள்-சண்டையில்லை, கிருத்துவத்திலேயே உள்ள சண்டை[1]. நடுவில் முஸ்லிம்களும் “ஏசு சிலுவையில் இறக்கவில்லை” என்றும் தமக்கேயுரிய தோரணையில் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள்.

Christian row over Missal

செக்யூலிரஸ இந்தியர்கள், நம்பிக்கையுள்ள இந்துக்கள் கவனிக்கவேண்டியது என்ன?: இது உண்மையான கிருத்துவர்களுக்கிடையே உள்ள பிரச்சினையாக இருப்பின், நம்பிக்கையுள்ள இந்துக்களும் அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இரண்டாவது வாடிகன் சங்கம், இந்தியாவில் உள்கலாச்சார மயமாக்கல், அதற்கு வாடிகன் ஒப்புதல், பிறகு சில கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு, ஆனால், பெரும்பாலான அதாவது பிஷப் மற்றும் இந்திய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் கார்டினல் இவர்கள் ஒப்புக் கொள்வது என்ற ரீதியில் 1960களிலிருந்து செயல்படும் விவகாரங்கள் இந்துக்களைப் பாதித்து வருவதால், அவர்களும் இந்த இறையியல் மோதல்களை கவனிக்க வேண்டியுள்ளது. கிருத்துவர்களுக்கிடையே பேசித் தீர்க்க முடியவில்லை என்பதினால் கோர்ட்டுகளுக்குச் சென்று விட்டதால், அவை செய்திகளாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.  எனவே ஏசுவின் உடல் அல்லது சரீரம் எது சரி – திருப்பலிப் புத்தகம் தடை அல்லது தடை நீக்கம் எது சட்டப்படி சரியானது – முதலிய விவாதங்கள் நீதிமன்றங்களுக்குச் செல்வது – முதலியவற்றை செக்யூலிரஸ இந்தியர்கள் கவனிக்க  வேண்டியுள்ளது.

A brief history of Roman Missal-G. Alex Benziger

திருப்பலி புத்தகத்திற்கு எதிராக அலெக்ஸ் பென்ஷிகர் மற்றும் டாக்டர் லியோனார்டு வசந்த் தாக்கல் செய்த மனு (1995): சென்னை 4–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் மண்ணடியை சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் பென்ஷிகர் மற்றும் டாக்டர் லியோனார்டு வசந்த், பெர்னாண்டோ [G. Alex Benziger[2], Leonard Vasanth[3] and J.V. Fernando] ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘‘ கத்தோலிக்க திருச்சபை வாடிகன் நகரில் உள்ள போப் ஆண்டவரின் கட்டுப்பாட்டிலும் அதிகாரத்தின் கீழும் செயல்படுகிறது. போப் ஆண்டவர், அந்தந்த பகுதிகளுக்கு பேராயர்களை நியமிப்பார். ஒவ்வொரு பேராயத்தின் கீழும் பங்குகள் உருவாக்கப்பட்டு, அந்தந்த பங்குகளில் உள்ள ஆலங்களில் திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன[4].  இவர்கள் முன்னர் ஒரு பைபிள் வெளியிட்டதை எதிர்த்தும் வழக்குத் தொடர்ந்தனர்[5].

Eucharist medieval or modern depiction

திருப்பலி புத்தகம் உருவான வரலாறு: மனுதாரர்கள், அப்புத்தகம் எப்படி உருவானது என்று கீழ்கண்டமுறையில் விளக்கினார்கள்:

 1. 1.       “போப் ஆண்டவர் 5ம் பத்திநாதர் 1570ல் கத்தோலிக்க ஆலயங்களில் நடைபெறும் திருப்பலியை உருவாக்கி லத்தீன் மொழியில் உலகெங்கும் ஒரே முறையில் திருப்பலி நடத்த வழிவகை செய்தார்.
 2. 2.       கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலிகள் அனைத்தும் 1917-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருச்சபை சட்டத்தின் கீழ் நடைபெறுகின்றன.
 3. 3.       பின்னர் 2ம் வாடிகன் கவுன்சில் படி,  1965-ஆம் ஆண்டு முதல் [Pope Paul VI granted local translation of the Missal] சம்பந்தப்பட்ட பிராந்திய மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்று வருகிறது[6].

கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி பூஜை லத்தீன் மொழியில் நடைபெற்று வந்தது. இந்த நடைமுறை 15–ம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1968–ம் ஆண்டு போப் ஆண்டவர் லத்தீன் மொழியில் உள்ள திருப்பலி புத்தகத்தை பல்வேறு நாடுகளில் பேசப்படும் உள்ளூர் வட்டார மொழிகளில் மொழிபெயர்த்து கொள்ள அனுமதி அளித்தார். அதன்படி 1977–ம் ஆண்டு தமிழகத்தில் திருப்பலி புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதற்கு போப் ஆண்டவரும் அங்கீகாரம் வழங்கியுள்ளார். இந்நிலையில் இப்புத்தகத்தில் சில வாசகங்கள் மற்றும் வார்த்தைகள் திருத்தி அமைக்கப்பட்டு 1993–ம் ஆண்டு புதிய புத்தகத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார்கள் வெளியிட்டுள்ளனர். உதாரணமாக  திருப்பலியில் ‘இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் சரீரம் என்ற வாக்கியம் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல் என்று மாற்றப்பட்டுள்ளது. உடலுக்கும் சரீரத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன[7]

 

இந்த திருப்பலிப் புத்தகத்திற்கு போப் அனுமதி வழங்கவில்லை: இந்த திருத்தி அமைக்கப்பட்ட புத்தகத்துக்கு போப் ஆண்டவர் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இந்த புத்தகத்தின் அடிப்படையில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி நடந்து வருகிறது. எனவே அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறாமல் திருத்தி அமைக்கப்பட்ட இந்த திருப்பலி புத்தகத்தை கத்தோலிக்க தேவாலயங்களில் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். திருத்தி அமைக்கப்பட்ட இப்புத்தகம் கத்தோலிக்க திருச்சபை சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும்’’, இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்[8]. இந்த வழக்கு கடந்த 1995–ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வந்தது.

போப் ஆண்டவரின் அனுமதி பெறாத திருப்பலி புத்தகத்தை பயன்படுத் தடை:  ‘ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், 1993ல், வெளியிடப்பட்ட திருப்பலி புத்தகத்தை [ ‘Missal’ (‘Thiruppali book’)[9]] வாடிகனிடமிருந்து அனுமதி வரும்வரை பயன்படுத்தக் கூடாது’ என, சென்னை, சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது[10]. கடந்த, 1995ல், இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சென்னை மற்றும் புதுச்சேரி பிஷப்புகள் மனுதாரர்கள் இவ்வழக்கில் எந்த தகுதியும் இல்லை என்றும், மொழிபெயர்ப்புகள் பற்றி வினா எழுப்பவும் அவர்களுக்கு தகுதியில்லை என்றும் வாதிட்டனர்[11]. திருப்பலிப் புத்தகம் ஆன்மீகம் மற்றும் மதவிசயங்களைக் கொண்டுள்ளதால், அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டிருப்பின், அவர்களுக்கு மேலான மத-அதிகாரிகளிடம் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினர்.

இவ்வழக்கை விசாரித்த, சென்னை, நான்காவது, உதவி நீதிபதி, டி.சந்திரசேகர் பிறப்பித்த உத்தரவு: “மொழிபெயர்க்கப்பட்ட, திருப்பலி புத்தகத்தைப் பார்க்கும் போது, அதிர்ச்சியளிக்கிறது. திசை திருப்பும் விதத்தில், மொழி பெயர்ப்பு உள்ளது. மொழிபெயர்ப்புக்கு, போப் ஆண்டவரின் ஒப்புதல் கிடைத்தது என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை[12]. சட்டவிரோத நடவடிக்கையில், கோர்ட் குறுக்கிடவில்லை என்றால், தங்கள் விருப்பப்படி, மொழிபெயர்த்து வெளியிடும் எண்ணம், ஒவ்வொருவருக்கும் வரும். எனவே, ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், 1993ல் வெளியிடப்பட்ட, திருப்பலி புத்தகத்தை பயன்படுத்த, பிஷப் மற்றும் பாதிரியார்களுக்கு தடை விதிக்கப்படுகிறது”, இவ்வாறு, நீதிபதி டி.சந்திரசேகர் உத்தரவிட்டுளளார்[13]. தினமலரின் படி இப்படியிருக்கும் போது, மாலை மலரில் இவ்வாறுள்ளது: இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.சந்திரசேகர் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ‘‘1993–ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட திருப்பலி தமிழ் மொழி புத்தகத்துக்கு முறையான அனுமதி பெறவில்லை. மேலும் பல வாசகங்கள், வார்த்தைகள் முறையாக மொழி பெயர்க்கப்படவில்லை. எனவே, திருத்தி அமைக்கப்பட்ட இந்த புத்தகத்தை திருப்பலி பூஜைக்கு பயன் படுத்த கூடாது. இந்த புத்தகம் கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை சட்டத்துக்கு எதிரானது. இப்புத்தகம் திருத்தியமைக்கப்பட்டது செல்லாது’’, என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே விதிக்கப் பட்ட தடைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு[14]:. இதை எதிர்த்து, சென்னை முதலாவது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், 14 பிஷப்கள் முறையிட்டனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “மத விவகாரங்களில், சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது’ என, குறிப்பிட்டிருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்[15]. கடந்த 1995–ம் ஆண்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது[16].

பாதிரிகள் வேறுபட்ட கருத்துகளைக் கூறுவது: பாதிரிகள் இப்புத்தக உபயோகம், வார்த்தைப் பிரயோகம் பற்றி மாற்றுக் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள். இது அடிப்படைவாதிகளுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும்ஐடையே நடக்கும் யுத்தமாகும் என்றும் விளக்கியுள்ளார்கள்.

 • மதுரை பாதிரி எல். ஆனந்தம்[17], “திருப்பலி புத்தகங்களில் மூன்று வகையான மொழிப்பெயர்ப்புகள் உள்ளன. போபொ பயஸின் புத்தகம் 16ம் நுற்றாண்டைச் சேர்ந்தது. 1969ல் போப் பால் அனுமதி கொடுத்தது லத்தீனில் உள்ளது. 2010-11 ஆண்டுகளில் போப் பெனிடிக்ட் சமீபத்தைய புத்தகத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். உடல் என்ற வார்த்தை பிரயோகம் தவறென்று சொல்ல முடியாது”, என்று சரித்திரத்தை விளக்கினார்.
 • பாதிரி ஜோ அருண், “மனுதாரர்கள் கிரேக்கக் காலத்திற்கும், அதற்கு முன்னரும் செல்ல விரும்புகிறார்கள். பைபிள் பல மொழிகளில் இருந்து வந்துள்ளது. காலத்திற்கு ஏற்ப மாறி வந்துள்ளது. இது அடிப்படைவாதிகளுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும்ஐடையே நடக்கும் யுத்தமாகும். காலத்த்ற்கேற்ப மக்களுடைய மொழியில் ஒப்புக்கொள்ளும் முறையில் இருக்கும் மொழிபெயர்ப்புத்தான் தேவைப்படுகிறது”, என்று தமக்கேயுரிய முறையில் விளக்கம் அளித்தார்[18].
 • பாதிரி வின்சென்ட் சின்னதுரை கூறும் போது, “சிலர்தான் இந்த மொழிபெயர்ப்பை எதிர்க்கின்றனர். முன்னர் எப்படி லத்தீனிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது என்று எதிர்த்தனரோ அதேப்போன்ற அடிப்படைவாதிகள் தாம் இப்பொழுதும் எதிர்க்கின்றனர்”, என்று விளக்கம் கொடுத்தார். இவர் கத்தோலிக் பிஷப் காம்பரன்ஸின் செயலாளர்களில் ஒருவர்[19].

வேதபிரகாஷ்

© 22-12-2013


[2] St. Francis Xavier’s Church, Broadway Parish.  http://www.blogger.com/profile/01601552370997415024

[3] Dr. S. Leonard Vasanth, Advocate, St. Fatima Church, Kodambakkam Parish, http://alexbenziger.blogspot.in/

[6] தினமணி, 1993-ஆம்ஆண்டுதிருத்தப்பட்டதிருப்பலிபுத்தகம்:  பயன்படுத்த நீதிமன்றம்தடை, By dn, சென்னை, First Published : 07 November 2013 03:34 AM IS

[9] A civil court here has banned the use of a 1993 Tamil translation of Catholic prayer book ‘Missal’ (‘Thiruppali book’) until prior approval is obtained from the Vatican. Noting that some words had been wrongly translated and some others removed in the Tamil version, the court recently declared the translation as incorrect and against the canonical law.

http://articles.timesofindia.indiatimes.com/2013-11-07/chennai/43773705_1_tamil-version-vatican-translation

[11] In their reply, the archbishops of Chennai and Puducherry said the petitioners did not have a locus standi as under the tenets of the religion, they did not have a right to question the translations. The prayers “involved spiritual and religious aspects of the church” and “the court did not have jurisdiction to go into the veracity of church’s authority.” If there was a doubt, “superiors and doctors of church” could be approached, they said.

http://articles.timesofindia.indiatimes.com/2013-11-07/chennai/43773705_1_tamil-version-vatican-translation

[13] தினமலர், போப்ஆண்டவரின்அனுமதிபெறாததிருப்பலிபுத்தகத்தைபயன்படுத்ததடை, பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2013,22:41 IST

[15] தினமலர், திருத்தப்பட்டதிருப்பலிபுத்தகம்: கீழ்கோர்ட்உத்தரவுக்குத்தடை, பதிவு செய்த நாள் : டிசம்பர் 21, 2013,23:34 IST

[17] When asked about the history of translation, Rev. Fr. L. Anandam, Rector, St Peters Seminary, Madurai, said there were three translations of the Missal in the past. After the Second Vatican Council in 1965, Pope Paul VI granted local translation of the Missal, which was in Latin and belonged to the period of Pope Pius V (16th century). Again, Pope Benedict XVI sanctioned the latest translation, which is in use since 2011-12. He said theologically there was nothing wrong with the word “udal”.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/court-restrains-bishops-from-using-liturgy-book/article5322683.ece

[18] Rev. Fr. Joe Arun, a cultural anthropologist, said the argument of the petitioners would turn the clock to the days of Hellenisation when the Bible was translated from Aramaic – the language Jesus and his disciples spoke – and Hebrew into Greek and symbolises the supremacy of the language of the conqueror and dispensing with culture specific translations. “Here, the battle is between conservatives and reformists. We need a culture specific Missal that accommodates the people’s language,” he said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/court-restrains-bishops-from-using-liturgy-book/article5322683.ece

[19] Fr. Vincent Chinnadurai, one of the secretaries of the All India Catholic Bishops Conference, said only a microscopic minority opposed the Missal 1993 and it was the same conservatives who opposed translation of Missal from Latin to Tamil.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/court-restrains-bishops-from-using-liturgy-book/article5322683.ece

இந்திய பெண்கள் கத்தோலிக்கப் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் பாலியல் வன்புணர்ச்சி, பிடோபைல் போன்ற குற்றங்களை செய்து வரும் போது, தெரியாத ஏதோ ஒரு பெண்மணியை நினைவு கூர்ந்து பாராட்டு விழா நடத்தி அதைப் பற்றி செய்திகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

திசெம்பர் 21, 2013

இந்திய பெண்கள் கத்தோலிக்கப் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் பாலியல் வன்புணர்ச்சி, பிடோபைல் போன்ற குற்றங்களை செய்து வரும் போது, தெரியாத ஏதோ ஒரு பெண்மணியை நினைவு கூர்ந்து பாராட்டு விழா நடத்தி அதைப் பற்றி செய்திகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

 Archbishop, Ireland ambassador etc.20-12-2013

இந்தியர்களின் மீது திணிக்கப்படும் தேவையில்லாத கத்தோலிக்க சமாசாரங்கள்: இந்திய பெண்கள் கத்தோலிக்கப் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் பாலியல் வன்புணர்ச்சி, பிடோபைல் போன்ற குற்றங்களை செய்து வரும் போது, தெரியாத ஏதோ ஒரு பெண்மணியை நினைவு கூர்ந்து பாராட்டு விழா நடத்தி அதைப் பற்றி செய்திகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. “தி இந்து” கத்தோலிக்க நானோ நேகிளை பற்றிய தொண்டு பாராட்டப் பட்டதடென்று செய்தி வெளியிட்டது. ஆனால், “இன்றைய இளைய தலைமுறையினர், பேஸ்புக்கே கதி என, இருக்கின்றனர்; இது தவறு. இதனால், நான் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு எதிராவன் என நினைக்க கூடாது. ஒரு நாளில், பல மணிநேரங்களை அதில் செலவழிப்பதை மட்டுமே தவறு என்கிறேன்” என சென்னை மயிலை பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி [ Archbishop of Madras-Mylapore Most Rev. George Antonysamy] கூறினார்[1], என்று “தினமலர்” வெளியிட்டது. இதனால், என்ன இந்த விசயம் என்று ஆராய்ந்த போதுதான், இது வேண்டுமென்றே இந்தியர்களின் மீது திணிக்கப்படும் தேவையில்லாத கத்தோலிக்க சமாசாரங்கள் என்று தெரிய வந்தது.

Archbishop, Ireland ambassador etc.20-12-2013 - Nano Nagle

 நானோ  நேகிளை  மரியாதைக்கும்  கண்ணியத்துக்கும்  உரியவர்  என்று வாடிகன்  வெளியிட்டதாம்: கத்தோலிக்க திருச்சபையில், பிரசன்டேசன் சிஸ்டர்ஸ் [Presentation Congregation] அமைப்பை நிறுவிய, நானோ நேகிளை [Venerable Nano Nagle], மரியாதைக்கும் கண்ணியத்துக்கும் உரியவர் என அக்டோபர் மாதம், வாடிகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது[2]. இது, புனிதர் பட்டத்துக்கான முதல் நிலையாகும்[3]. வாடிகன் வெளியிட்ட அறிவிப்பை கொண்டாடும் நிகழ்ச்சி, சென்னையிலுள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில் நடந்தது[4]. இதில் சிறப்பு விருந்தினராக, சென்னை மயிலை பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி, இந்தியாவுக்கான அயர்லாந்து சிறப்பு தூதர் ராஜீவ் மேச்சேரி [Honorary Consul of Ireland in Chennai Rajeev Mecheri ] உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[5].

20-12-2013 - Nano Nagle-mission statement etc

நானோ  நேகிள்  போல  புத்தகங்கள்  படிக்க  வேண்டும், பேஸ்  புக்  பார்க்கக்  கூடாது: இதில், பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பேசியதாவது:நானோ நேகிள், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தவர். அவருடைய காலத்தில் கல்வி அத்தியாவசிய தேவையாக இருந்தது; இன்றும் கல்வி அத்தியாவசிய தேவையாக இருந்த போதிலும், இன்னும் சில தேவைகள் இருப்பதை, சகோதரிகள் உணர வேண்டும். இறை வார்த்தையையே, வேதமாக நினைத்து செயல்படும் சகோதரிகள், அவருடைய வார்த்தைகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனில், நிகழ்காலத்தின் தேவையை உணர்ந்து, சேவை புரிய வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர், பேஸ்புக்கே கதி என, இருக்கின்றனர்; இது தவறு. இதனால், நான் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு எதிராவன் என, நினைக்க கூடாது. ஒரு நாளில், பல மணிநேரங்களை அதில் செலவழிப்பதை மட்டுமே தவறு என்கிறேன். நானோ நேகிள் காலத்தில், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இல்லை. அவருக்கு நிறைய நூல்கள் படிக்க கிடைத்தன. அதனால், தான் பயணிக்கப் போகும் பாதையை புரிந்து கொண்டு, அதில் வெற்றியும் பெற்றார். இளைய தலைமுறையினர், நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அதன் மூலம், சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்“, இவ்வாறு, அவர் பேசினார்[6].

20-12-2013 - Nano Nagle- sufferings of Indian women by the catholics

இந்தியப்  பெண்மணிகள்  கத்தோலிக்கர்களால்  கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்  போது  அந்நியப்  பெண்ணின்  பாராட்டுவிழா என்ன?: அதெல்லாம் சரிதான், அதே நேரத்தில் கத்தோலிக்கப் பாதிரிகள் தினமும் இந்தியப் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்களே, இதைப் பற்றி ஏன் ஒன்றும் கூறாமல், கண்டிக்காமல் இருக்க வேண்டும். இவர்கள் என்ன செய்தித் தாள்களைப் படிக்காமல் இருக்கிறார்களா இல்லை, அந்த பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜை இவருக்குத் தெரியாதா அல்லது அவர் ஒன்றும் விவகாரங்களை இவருக்கு அறிவிக்கவில்லயா? பிறகென்ன, ஒரு அந்நிய பெண்ணின் புகழை இங்கு பாடிக் கொண்டு, இந்தியப் பெண்களை கற்பழித்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான், அந்த அம்மணியின் புகழ் பாடும் லட்சணமா? அபார்ஷண் செய்தி ஐந்து மாதச சிசுவைக் கொன்று சர்ச்சின் வளகத்தில் உள்ள கல்லறையில் ஒரு பாதிரி புதைத்துள்ளான். அப்படியென்றால், கத்தோலிக்கக் கன்னிமார்களுக்குக் கூட இரக்கம் இல்லையா? இந்தியப் பெண்கள் என்ன அவ்வளவு கேவலமாகி விட்டனரா?

Nellai rape - The burried foetus taken out - Church suppresses facts

காலனிய  ஆதிக்கத்தை  எதிர்த்த  பெண்மணி  என்றால், எந்தகாலனிய  ஆதிக்கம்,   எங்கு  என்று  சொல்லாமல் கதை  அடிப்பது  ஏனோ?: ராஜீவ் மேச்சேரி பேசும் போது[7], உங்களுடைய குறிக்கோள் மற்றும் தூரப்பார்வை சமூகத்தின் தேவைகளுக்காக இருக்க வேண்டும். சாதாரண மனிதன் தான் எதனை நம்புகிறானோ அதற்காகப் போராட வேண்டும். நானோ நேகிள் அயர்லாந்தில் கத்தோலிக்க படிப்பிற்காக தொண்டாற்றியவர்களில் ஒருவராகக் கருதப் படுகிறார். காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து ஏழை மக்களுக்கு பள்ளிகள் அமைத்துள்ளார். பிரசன்டேசன் காங்கிகேஷன் பல பள்ளிகளை உலகம் முழுவதும் நிறுவியுள்ளது, என்று விளக்கினார். “தி ஹிந்து” இதன் விவரங்களை விழாக்கு முன்னர் மற்றும் பின்னர் நன்றாகவே வெளியிட்டுள்ளது[8]. காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த பெண்மணி என்றால், எந்த காலனிய ஆதிக்கம், எங்கு என்று சொல்லாமல் கதை அடிப்பது ஏன் என்று தெரியவில்லை.

Action against sex-cardinals, bishops, pastors etc Dec.2013

யார்  இந்த  நானோ  நேகிள்  –  இந்தியாவிற்கு  என்ன  சம்பந்தம்?: நானோ கேகிள் (1718-1784) அயர்லாந்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் போது வாழ்ந்தவர். அதாவது ஆங்கிலேயர் புருடெஸ்டென்ட் கிருத்துவர்கள், இவர்கள் கத்தோலிக்கக் கிருத்துவர்கள் என்பதினால், சுன்னி-ஷியா முகமதியர்களைப் போல அடித்துக் கொண்டிருந்தனர். இந்த அம்மையாரைப் பற்றிய விவரங்கள் அதிகாரப் பூர்வமாக ஒன்றும் தெரியவில்லை. அவர் பள்ளியில் படித்திருப்பதாக நம்பப்படுகிறது என்றெல்லாம் தான் கதை சொல்கிறார்கள். இன்னொரு கதையின் படி, பார்ட்டிகள், கிளப்புகள் என்று ஜாலியாகச் சுற்றி வந்த பெண்மணி என்றும் சொல்வதாகக் குறிப்பிடுகின்றனர்[9]. பிரெஞ்சு நாட்டில் நன்றாக செல்வ செழிப்புடன் வாழ்ந்த சீமாட்டி என்றும் கூரப்படுகிறதாம்! எது எப்படியிருந்தாலும், இந்தியர்களுக்கு, இப்பொழுது இந்த கதைகள் எல்லாம் தேவையா என்ற கேள்விதான் எழுகின்றது. தொடர்ந்து நடந்து வரும் கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், களியாட்டங்கள், கொக்கோக பாலியல் வன்முறைகள், வன்புணர்ச்சிகள், பிடோபைல் குரூரக்குற்றங்கள், சிசு வதைகள் முதலியவற்றை மறைக்கத்தான் இந்த விழா நாடங்கள் என்றே தோன்றுகிறது.

வேதபிரகாஷ்

© 21-12-2013


[2] The announcement by the Pope brings the declaration of Sainthood for Nano Nagle a step closer, as her life of heroic virtue has been officially acknowledged by the Vatican, speakers noted.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nano-nagles-contributions-hailed/article5485357.ece

[3] Nano Nagle has been declared Venerable by Pope Francis – October 31, 2013.  Vatican website announcement , Vatican City, 31 October 2013 (VIS) – Today, during a private audience with Cardinal Angelo Amato S.D.B., prefect of the Congregation for the Causes of Saints, Pope Francis authorised the Congregation to promulgate the following decrees: HEROIC VIRTUES: Servant of God Honora “Nano” Nagle (John of God), Irish foundress of the Union of the Presentation Sisters of the Blessed Virgin Mary (1718-1784) and all Presentation Sisters around the world.

[4] தினமலர், இளையதலைமுறையினர்பேஸ்புக்கேகதிஎனஇருப்பதுதவறு, பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2013,23:35 IST

[5] தினமலர், “இளையதலைமுறையினர்பேஸ்புக்கேகதிஎனஇருப்பதுதவறு“, டிசம்பர் 21,2013,08:57 IST

[7] “Your vision and mission should be according to the needs of the society,” he added. Honorary Consul of Ireland in Chennai Rajeev Mecheri said the event reiterated the fact that an ordinary person could be extraordinary if they are willing to fight for what they believe in. Nano Nagle is acknowledged as one of the greatest pioneers of Catholic education in Ireland. She defied the colonial order and was successful in setting up schools for the poor. The Presentation Congregation has set up schools in many parts of the world.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nano-nagles-contributions-hailed/article5485357.ece

[8] Time to celebrate, December 20, Sacred Heart, Church Park, 4.30 p.m – Sacred Heart conducts an event to celebrate the veneration of Nano Nagle (the founder of The Presentation Sisters) by Pope Francis. The Archbishop of Madras —Rev. Dr. George Antonyswamy will grace the occasion as the chief guest and The Honorary Consul of Ireland in Chennai, Rajeev Mecheri will be the guest of honour in the presence of The Presentation Sisters (PBVM) of the South East Region.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/from-the-diary/article5463610.ece

[9] According to one account she had a hectic social life in Paris – “balls, parties and theatre outings, all the glamour of the life of a wealthy young lady”. It was after one of these parties that she noticed a group of wretched-looking people, huddled in a church doorway and was taken aback by the contrast between her wealthy, privileged life and that of the Paris poor.

http://www.independent.ie/lifestyle/education/nano-nagle-remains-an-influential-educator-1722506.html

செயின்ட் ஆன்டனி சர்ச் நிர்வாகத்தில் இருக்கும் கல்லறையிலிருந்து சிசுவின் பிணம் தோண்டியெடுக்கப் பட்டப் பிறகும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் மௌனம் சாதிக்கிறாராம்!

திசெம்பர் 21, 2013

செயின்ட் ஆன்டனி சர்ச் நிர்வாகத்தில் இருக்கும் கல்லறையிலிருந்து சிசுவின் பிணம் தோண்டியெடுக்கப் பட்டப் பிறகும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் மௌனம் சாதிக்கிறாராம்!

Foetus exhumed tested but Diocese head kept mum

பாட்டு சொல்லிக் கொடுக்கிறேன் என்று கெடுத்த பாதிரி: நெல்லை மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கே.கைலாசபுரத்தை சேர்ந்தவர் செல்வன் (34). திருநெல்வேலி, பேட்டையில் உள்ள, புனித அந்தோணியார் பள்ளியின் பாதிரியாராகவும், தாளாளராகவும் இருந்த இவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் நெல்லை பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தையாக பணியாற்றி வருகிறார். அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவர் சர்ச்சுக்கு வந்து சென்றபோது, அவருக்கு பாட்டு சொல்லி தருவதாக கூறி, அவரை தனது பங்களாவுக்கு அழைத்து சென்று பலமுறை பாதிரியார் செல்வன் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். சர்ச் வளகத்தில் உள்ள வீட்டில் இவ்வாறு நடந்தது யாருக்கும் தெரியாமல் இருந்ததா என்பதும் வியப்பாக உள்ளது அல்லது செல்வன் அந்த அளவிற்கு திட்டமிட்டே செய்துள்ளார் என்றாகிறது.

Nellai rape - The burried foetus taken out - Church suppresses facts

அபார்ஷன், சிசு பிணம் புதைப்பு முதலியன: இதையடுத்து பாதிரியார் ஆலோசனையின் பேரில் மாணவியின் பெற்றோர் நெல்லை டவுனில் உள்ள ஒரு டாக்டரிடம் மாணவியை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர். இதற்கு ரூ. 25,000/- கொடுத்தாராம்[1]. மாணவியின் வயிற்றில் இருந்த 5 மாத சிசுவை, பேட்டை ஆதம் நகர் அருகே உள்ள மருத்துவமனையில் அறுவைஒசிகிச்சை மூலம் வெளியே எடுத்து, செயின்ட் ஆன்டனி சர்ச் நிர்வாகத்தில் இருக்கும் கல்லறையில் உறவினர்களுடன் உதவியுடன் புதைத்தனர். பாதிரியின் உறவினர் அல்லது மற்றவர் கிருத்துவர்கள் என்பதினால், இவர்கள் எல்லோருமே திட்டமிட்டுதான் வேலை செய்துள்ளனர் என்றாகிறது. கிருத்துவர்களின் சமாசாரம் என்றதால் இவ்வாறு மூடி மறைக்க, புதைக்கப் பார்த்தனர் போலும். ஆனால், இந்த விவரம் வெளியில் தெரியவரவே, மாணவியின் தந்தை நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அனைத்து மகளிர் போலீசார், பாதிரியார் மீது கற்பழிப்பு, மிரட்டல், பாலியல் தடுப்பு பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர்[2]. போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் செல்வன், கருக்கலைப்பு செய்த டாக்டர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதையறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். போலீஸ் விசாரணையில் பாதிரியார் செல்வன் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Nellai rape - The burried foetus taken out

மூன்று பெண்களிடம் செக்ஸ் தொந்தரவு செய்த பாதிரி: பாதிரியார் செல்வன் மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது பங்களாவில் வேலை செய்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன[3]மானல், ஊடகங்கள் அவற்றை வெளியிடவில்லை. இது தொடர்பாக அவரது உதவியாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என்கின்றன. ஆனால், அந்த “உதவியாளர்” எப்படி சொல்வார்? லெனின் போன்ற நக்கீரன்கள் இப்பொழுது கண்களைத் திறந்து கொண்டு வரவில்லை. இதையெல்லாம் விசாரணை செய்தால் திருச்சி பிஷப் கன்னியாஸ்திரி கற்பழிப்பு போலத்தான் விரியும் போலிருக்கிறது. ஆனால், இந்திய கிருத்துவ மேலிடங்கள், பெண்கள் உரிமை, சிறார் உரிமை முதலியவற்றைப் பற்றியெல்லாம் கூச்சலிடும் கிருத்துவக் கூட்டங்கள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.

Nellai christian pastor rapes a girl and makes her pregnant.5

சிசுவின்  உடல்  தோண்டி  எடுக்கப்பட்டு  அங்கேயே  நடந்த பரிசோதனை: பாதிக்கப்பட்ட மாணவிக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. மேலும் புதைக்கப்பட்ட சிசுவின் உடல் 20-12-2013 அன்று திருநெல்வேலி தாசில்தார் பாலசுரமணியன் மற்றும் டாக்டர் செல்வ முருகன், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதலியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பரிசோதனை நடந்தது (இப்படி தினகரன் கூறுகிறது). ஆனால், சோதனைக்கு பரிசோதனை கூடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டு ஆராயப்பட்டது என்று மற்ற நாளிதழ்கள் கூறுகின்றன[4]. ஒன்றரை அடி ஆழத்திற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் சில சதை துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. “அதை அங்கேயே சோதனை செய்த டாக்டர், டிஎன்ஏ சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது”, என்று நக்கீரன் கூறுகிறது[5]. இதில் புதைக்கப்பட்டது ஆண் சிசு என்பது தெரியவந்தது[6]. அந்த கல்லறை செயின்ட் ஆன்டனி சர்ச்சிற்கு சொந்தமானது, நிர்வாகத்தில் உள்ளது[7]. சர்ச்சுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு நடக்கும் போது, கிருத்துவ மேலிடங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்பது கவனிக்கத் தக்கது.

Nellai christian pastor rapes a girl and makes her pregnant.3

தலைமறைவான  செக்ஸ்-பாதிரி  நீதிமன்றத்தில்  சரண்: தலைமறைவாக உள்ள பாதிரியாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்[8]. இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் பாதிரியார் செல்வன் நேற்று மாலை உத்தமபாளையம் கோர்ட்டில் சரணடைந்தார்[9]. அவரை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில், தலைமறைவான பாதிரியார் ஞானப்பிரகாசம் செல்வன், நேற்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், நீதிபதி கீதா முன், சரணடைந்தார். அவரை, டிச., 26ல், திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க ஆணையிட்டார். இதையடுத்து, பாதிரியார் ஞானப்பிரகாசம் செல்வன், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[10].

Nellai christian pastor rapes a girl and makes her pregnant.2

ரைட்  ரெவரென்ட்  . ஜூட்  பால்ராஜ்: இவ்வளவு நடந்தும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் வாயை மூடிக் கொண்டு இருக்கிறாராம்[11]. அதாவது, ஜூட் விட்டுவிட்டு ஒளிந்து கொண்டுள்ளாராம். முன்னர் போலீசார் தன்னிடம் ஒன்றும் சொல்லவில்லை என்றார்[12]. கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், இதைப் பற்றி மறைக்கிறார்கள். உலகமெலாம் கிருத்துவ செக்ஸ் பற்ரிதான் பேசிக்கொண்டிருக்கின்றர்கள். போப்பே அதைப் பற்றிதான் சுற்றறிக்கை விட்டுக் கொண்டு, கேள்விகள் கேட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார். ஆனால், அவர் பட்டியிலில் இந்த இந்திய செக்ஸ் பாதிரிகளின் பெயர்கள் சென்றடையவில்லை போலும்!

வேதபிரகாஷ்

© 21-12-2013


[2] தினமலர், புதைக்கப்பட்ட சிசு தோண்டி எடுப்பு: ஓடிய பாதிரியார் கோர்ட்டில் சரண், பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2013,23:17 IST

[4] Foetus sent to lab for analysis – The five-month foetus was exhumed in the presence of Tirunelveli Tahsildar Balasubramanian and Dr. Selvamurugan of Tirunelveli Medical College. It was later sent to laboratory for analysis.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-surrenders-foetus-of-rape-victim-exhumed/article5483795.ece

[6] தினகரன், நெல்லை மாணவி பலாத்காரம் 5 மாத சிசு உடல் தோண்டி எடுத்து சோதனை, 20-12-2013.

[7] surgically removed  foetus was buried in the graveyard under the control of St. Antony’s Church administration.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-surrenders-foetus-of-rape-victim-exhumed/article5483795.ece

[11] Repeated attempts to get Palayamkottai RC Diocese’s official version on this development proved futile as Bishop Rev. A. Jude Paulraj was tight-lipped.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-surrenders-foetus-of-rape-victim-exhumed/article5483795.ece

பேட்டை திருத்தேவாலய பற்று தந்தையான ஞானபிரகாசம் அந்தோனி செல்வன், ஒரு இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்து, ஐந்துமாதசிசுப் பிண்டத்தை செயின்ட் ஆன்டனி சர்ச் வளத்தின் கல்லறையில் புதைத்து விட்டாராம்!

திசெம்பர் 20, 2013

பேட்டை திருத்தேவாலய பற்று தந்தையான ஞானபிரகாசம் அந்தோனி செல்வன், ஒரு இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்து, ஐந்துமாதசிசுப் பிண்டத்தை செயின்ட் ஆன்டனி சர்ச் வளத்தின் கல்லறையில் புதைத்து விட்டாராம்!

ஞானபிரகாசம் அந்தோனி செல்வன்

ஞானபிரகாசம் அந்தோனி செல்வன்

கிருத்துவ  தேவ  சங்கீதத்தைப்   பாட   வந்த   பெண்ணை  காமத்திற்கு  உட்படுத்திய  அருட்தந்தை: நெல்லை பேட்டையை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் மேரி (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மேரி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் / சர்ச் வளாகத்தில் உள்ள பள்ளியில்[1] 11–ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி மேரி அடிக்கடி அந்த பகுதியில் உள்ள செயின்ட் ஆன்டனி கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று வருவார். மேலும் ஆலயத்தில் உள்ள ‘கொயர்’ (கிருத்துவ தேவ சங்கீதம் – சேர்ந்து பாடும் குழு) பிரிவில் சேர்ந்து பாடல் படித்து வந்தார். கிருத்துவப் பண்டிகைகளில் குழுவாக கூட்டுப் பாடல் பாடி வருகிறார். இந்த சர்ச்சின் “பாரிஷ் பிரீஸ்ட்டாக” (தேவாலயப்பற்று ஊழியராக) பேட்டை திருத்தேவாலய பற்று தந்தையான ஞானபிரகாசம் அந்தோனி செல்வன், ஒரு இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்து, ஐந்துமாதசிசுப் பிண்டத்தை செயின்ட் ஆன்டனி சர்ச் வளத்தின் கல்லறையில் புதைத்து விட்டாராம்!

ஏப்ரல் 2007லிருந்து வேலை பார்த்து வருகிறார்[2].  இந்த கூட்டுப்பாடல் நிகழ்சிகளில் கலந்து கொள்வார்.

அருட்தந்தை  ஞானபிரகாசம்  அந்தோனி  செல்வன்  அவர்களின்  விவரங்கள்: இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் புளியம்பேட்டைக்கு அருகில் உள்ள கைலாசபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவராம்.

 Nellai rape - The burried foetus taken out Rev.Fr.Gnanapragasam Selvan F.
Date of Birth : 06-03-1977
Date of Ordination : 15-04-2007
Phone :  9442228650
Email : fselvan@gmail.com

1977ல் பிறந்த இவர், 2007ல் இங்கு மற்ற விவரங்கள் கீழ் வருமாறு[3]:

Patron of Parish
Established On
Population
Catholic
:
:
:
:
St. Anthony of padua
10.07.1961
24,500
3980
Vicairate : Palayamkottai
Church Name : St. Antony’s Church
Parish Priest : Rev. Fr. Gnanapragasam Selvan F.
Asst. Parish Priest :
Address : St. Antony’s Church, Pettai, Tirunelveli-627 004
District : Tirunelveli
Telephone : 0462-2342084

அந்த ஆலயத்தில் பாதிரியாராக [parish priest of St. Antony’s Church] வேலை பார்த்த பாதர் ஞானபிரகாசம் செல்வன் [Fr. Gnanapragasam Antony Selvan[4]] மாணவியின் மீது கண் விழுந்தது. 36 வயதான இவருக்கு, “டீன் ஏஜில்” இளம்பெண்ணிடம் கிரக்கம் ஏற்பட்டு வலைவீச ஆரம்பித்தார். அப்பெண்ணுக்கு பாடல்கள் சொல்லி கொடுப்பது போல் தனியாக அழைத்து, தொட்டு ஆசைக்காட்டி, மெல்ல மெல்ல உடலுறவு கொள்ள செய்தார். தனது காமப்பசியை தீர்த்துக்கொண்டார்[5]. இவ்வளவும் அந்த தெய்வ வளகத்திலேயே நடந்து வந்ததாம். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் புளியம்பேட்டைக்கு அருகில் உள்ள கைலாசபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவராம்.

மேரி  கர்ப்பம்  அடைந்தது, கருக்கலைப்பு  செய்தது: இப்படி தொடர்ந்து உடலுறவு கொண்டு வந்ததால், மாணவி மேரி ஜூன்-ஜூலை 2013 மாதங்களில் கர்ப்பம் அடைந்தார். அவளது வயிறு பெரிதானதால், வீட்டில் சந்தேகப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தான், மாணவி 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் விபரத்தை பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினார்கள். ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர், என்ன செய்வது என்று தெரியாமல், தங்கள் மகளை கற்பழித்த, அந்த காமூக பாதிரியார் செல்வனிடமே சென்று நியாயம் கேட்டனர். உடனடியாக பாதிரியார் செல்வன், தனது பண பலத்தின் மூலம், மாணவிக்கு கருக்கலைப்பு செய்து, பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். அது மட்டுமல்லாது, புற்றுநோயால் பாதிக்கப் பட்டு வரும் மேரியின் தாயாருக்கும் மருத்துவ உதவிக்காக பணம் கொடுக்க வாக்குக் கொடுத்ய்தார். அதன்படி மாணவி மேரியை நெல்லை டவுணில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று 5 மாதம் வளர்ந்த சிசுவை ‘கருக்கலைப்பு ஆபரேசன்’ செய்து அகற்றினார்[6]. திருநெல்வேலியைச் சேர்ந்த டாக்டர் எஸ். மீனாட்சி என்பவர் அதைச் செய்ததாகத் தெரிகிறது.

ஞானபிரகாசம்  அந்தோனி   செல்வன்  செய்த   குரூர  காரியங்களுக்கு  எதிராகத்   திரண்ட கிருத்துவ  பக்தர்கள்: இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய மாணவியின் நிலையை அறிந்த அந்த பகுதி மக்கள் ஆவேசம் அடைந்தனர். கிருத்துவப் பக்தர்களாக இருந்தாலும், ஞானபிரகாசம் அந்தோனி செல்வனின் அவர்கள் பாதிரியார் செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 18-12-2013 அன்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்[8]. விவரம் அறிந்த பாதிரியார் செல்வன், உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்[9]. பொதுமக்கள் கொடுத்த ஒத்துழைப்பால், மாணவி மேரியின் தந்தை ராஜன் நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசாரின்  விசாரணை  குரூர  காரிங்களை  வெளிப்  படுத்தியது: மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்தி பாதிரியார் செல்வன், கருக்கலைப்பு செய்த டாக்டர் மீனாட்சி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 19-12-2013 அன்று போலீசார் மாணவி மேரியை, பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாணவி மேரிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இன்று பிற்பகல் நெல்லை தாசில்தார் முன்னிலையில் பேட்டை மயானத்தில் புதைக்கப்பட்ட 5 மாத சிசுவின் கருவும் தோண்டி எடுக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான தனிப்படை போலீசார் தப்பி ஓடிய பாதிரியார் செல்வனை தீவிரமாக தேடி வருகிறார்கள். அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கைலாசபுரத்திற்கும் தனிப்படை போலீசார் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.தவிர கருக்கலைப்பு ஆபரேஷன் செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த டாக்டர் எஸ். மீனாட்சி என்பவரையும் தேடி வருகின்றனர்[10].

உண்மைகளை மறைக்கும் கத்தோலிக்கக் கிருத்துவம்: கிருத்துவ கார்டினெல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என நிறைய பேர் செக்ஸ் குற்றங்களில் மாட்டிக் கொண்டு வந்தாலும், வாடிகன் அதனை அமுக்கப் பார்க்கிறது. அதே நிலை இந்தியாவிலும் பிபற்றப்பட்டு வருகிறது. தில்லிக் கற்பழிப்பு பற்றி பெரிய ஆரபாட்டம் நடந்த்யு, விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. ஆனால், தமிழகத்தில் இப்படி, கிருத்துவ மதத்தலைவர்கள் தொடர்ந்து பாலியல்-வன்புணர்ச்சிக் குற்றங்களில் ஈடுபட்டு வந்தாலும், உண்மைகள் மறைக்கப் படுகின்றன. இவ்விசயமும் அதே மறைப்புப் பாதையில் செல்கிறது. ஏனெனில், பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜைக் கேட்டதற்கு, போலீசிடமிருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை, என்றாராம். போலீசார் ஞானபிரகாசத்தையும் விசாரித்ததாக தெரிவித்தனர். ஆனால், அதை அவர் மறுத்தார்[11].

ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ்

ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ்

 

வேதபிரகாஷ்

© 20-12-2013


 


[5] மாலைமலர், நெல்லையில் பாதிரியாரால் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு இன்று மருத்துவ பரிசோதனை, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 11:32 AM IST

[8] However, a group of devotees, who informed the police about the incident, also persuaded the parents to file a formal complaint with the All Women Police, Tirunelveli, who have registered a case.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/priest-accused-of-sexual-assault-goes-underground/article5481112.ece

[9] The Hindu, Priest accused of sexual assault goes underground, TIRUNELVELI, December 20, 2013, Updated: December 20, 2013 09:26 IST,

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-accused-of-sexual-assault-goes-underground/article5481860.ece

[10] Police are on the lookout for a Roman Catholic priest in connection with the alleged sexual assault of a teenage girl student here. They are also searching for a doctor, S. Meenakshi of Tirunelveli Town, who reportedly conducted the termination of pregnancy to remove the standard XI student’s five-month-old foetus.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/priest-accused-of-sexual-assault-goes-underground/article5481112.ece

[11] When contacted, Bishop of Palayamkottai RC Diocese Rt. Rev. A. Jude Paulraj said he did not receive any information from the police. Bishop’s House sources said a three-member team questioned Fr. Gnanapragasam on Tuesday. But he denied the charge.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/priest-accused-of-sexual-assault-goes-underground/article5481112.ece

கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது – செக்யூலரிஸ இந்தியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்!

திசெம்பர் 16, 2013

கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது – செக்யூலரிஸ இந்தியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்!

2009-2014 காலகட்டம்: கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில், திராவிடக் கட்சிகளைக் கவர, கிறிஸ்தவர்கள் விதவிதமான நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். திமுகவை எக்கச்சக்கமாக ஆதரித்து, அது தோல்வியடைந்தவுடன், நிலைமையை சரிகட்ட ஜெயலலிதாவுடன் தாஜா செய்ய ஆரம்பித்தன. 2011ல் இவ்வாறேல்லாம் நடக்கும் என்று ஊகித்து கீழ் கண்ட இடுகைகள் என்னால் இடப்பட்டன:

 1. குல்லா  போய்  தொப்பி  வந்தது  டும், டும், டும்,  கஞ்சி  போய் கேக் வந்தது  அம், அம், அம்:  திராவிட  கட்சிகளின் கிருஸ்துமஸ்  விழாவும்,  வாக்குறுதிகளும்[1], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!
 2. குல்லா…………..மிரட்டல்களும்[2] (3).
 3. குல்லா…………..மிரட்டல்களும்[3] (2).
 4. 4.       குல்லா…………..மிரட்டல்களும்[4] (1).

 

ஜெருசலேம்போகமானியம் (2011 கிருஸ்துமஸ்விழா)[5]: ஜெருசலேம் போக மானியம் என்று அறிவித்து விட்டார். பகுத்தறிவுகள் அமுங்கி விட்டன, பொத்திக் கொண்டு விட்டன. இப்படியாக அரசியல்வாதிகள் “செல்யூலரிஸம்” போர்வையில், இந்துக்களுக்கு குல்லா போட ஆரம்பித்து விட்டனர். 60 ஆண்டுகள் என்ன, 600 ஆண்டுகள் கடந்தாலும், இவர்கள் புத்தி மாறாது. 700 ஆண்டுகள் முஸ்லீம்கள் மற்றும் 300 ஆண்டுகள் கிருத்துவர்கள் (போர்ச்சுகீசிய, டச்சு, பிரென்சு, ஆங்கில மிஷனரிகள் / கம்பெனிகள்) ஆண்ட காலங்களில் இந்துக்கள் அனுபவிப்பதைவிட, மிக கடுமையான விளைவுகளையே அவர்கள் கண்டு வருகிறார்கள். இப்பொழுது, இந்துக்களே “இந்துக்கள்” போர்வையில், இந்துக்களுக்கு எதிராக வேறு செயல்பட்டு வருகிறார்கள்.

2013   கிருஸ்துமஸ்  விழா: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது[6], இப்படி செய்திகள் வந்துள்ளன.

 • விழாவுக்கு சீரோ மலபார் திருச்சபை முதன்மை பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலென்சேரி தலைமை வகித்து பேசுகிறார்.
 • சென்னை – மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி முன்னிலை வகிக்கிறார்[7].
 • தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசுகிறார்[8].
 • விழாவில் அருட் சகோதரர் பேட்ரிக், சகோதரி சாராள் நவரோஜி, குழந்தை பிரான்சிஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப் படுகிறார்கள்[9].
  • முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ்,
  • சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் மேயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா,
  • இந்தியன் மலங்கரா ஆர்த்தோடாக்ஸ்,
  • திருச்சபை பேராயர் டாக்டர் யோகனன் மார்டியோஸ் கோரோஸ்,
  • ஈ.சி.ஐ. திருச்சபை பிரதம பேராயர் எஸ்றா சற்குணம்,
  • பெந்தகொஸ்தே திருச்சபை பெருளாளர் டாக்டர் எடிசன்,
  • ஆங்கிலிக்கன் திருச்சபை துணை பிரதம பேராயர் ஜான் சத்தியகுமார்,
  • தமிழ்நாடு ஆந்திரா இரட்சண்ய சேனை மாகாண தளபதி இம்மானுவேல்,
  • சி.எஸ்.ஐ. திருச்சபை துணை பேராயர் முத்தையா தேவநேசன்,
  • அருட் சகோதரி கில்பர்ட்டா,
  • டாக்டர் பால்ரெங்கநாதன்,
  • ஆண்ட்ரூ பி.நடராஜன்,
  • டாக்டர் எலிசபெத் வர்கீஸ்

ஆகியோர் பேசுகிறார்கள்.

 • டாக்டர் நீதிநாதன்,
 • சவுந்தர்ராஜ்,
 • ஆனந்த்,
 • பால்சுந்தர்சிங்,
 • அருள்,
 • மதர் லீமாரோஸ்,
 • தயானந்தன்,
 • அருள்சந்திரன்

உள்பட கிறிஸ்தவ பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள்[10]. அன்று மாலை ஆல்பர்ட் சாலமோன், நபேல் கூத்தூர் ஆகியோரின் ஜெப வழிபாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் எஸ். இனிகோ இருதயராஜ் செய்து வருகிறார். விழாவில் அனைத்து சமய சமூக மக்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திசைஜெரி, ஜெமிம்மா ஜெயா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கிறிஸ்டோபர் நன்றி கூறுகிறார்[11].

2012  கிருஸ்துமஸ்  விழா: சென்ற 2012ல் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நாளை மாலை 5 மணி அளவில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி, மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மத்திய மந்திரி வயலார் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் பேராயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா, பேராயர் எஸ்றா சற்குணம், டாக்டர் கே.பி. எடிசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவையொட்டி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கிறிஸ்துமஸ் மரம் அலங்கரித்தல் போட்டியும், 12 மணி முதல் 4 மணி வரை கிறிஸ்துமஸ் பாடல் போட்டிகளும் நடநதது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் செய்தார்[12]. இவர்தான், முன்னர் கருணாநிதிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி, ஜெயலலிதாவின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டவர்.

பால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இனி 2013ல் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

 

வேதபிரகாஷ்

© 16-12-2013


[7] மாலைமலர், சென்னையில் 18–ந்தேதிகிறிஸ்துமஸ்விழாவில்மு..ஸ்டாலின்பங்கேற்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 9:43 AM IST

[9] தினபூமி, சென்னையில் 18ந்தேதிகிறிஸ்துமஸ்விழா, 16-12-2013.

[11] தமிள்-ஒன்-இந்தியா, 18ல்சென்னையில்நடக்கும்கிறிஸ்துமஸ்விழாவில்பங்கேற்கும்மு.. ஸ்டாலின், Posted by: Siva, Published: Sunday, December 15, 2013, 12:07 [IST]

கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றி விசாரிக்க போப் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார்!

திசெம்பர் 10, 2013

கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றி விசாரிக்க போப் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார்!

போப் செக்ஸ் கமிட்டி அமைக்க உத்தரவிட்டார் 05-12-2013

“வாடிகன் செக்ஸ் கமிட்டி” அமைக்க உத்தரவு: கிருத்துவ கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றால் நொந்து போன போப், ஒரு “வாடிகன் செக்ஸ் கமிட்டி” அமைத்துள்ளார்[1]. இவர்கள் தேர்ந்தெடுக்குக் நிலைகளில் வடிகட்டி ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளத் தக்கவரை மட்டுமே அத்தகைய பதவிகளை வகிக்க வரைமுறைகள் வழிவகுக்கப் படுகின்றன. 100% தூய்மை எந்த கார்டினல், பிஷப், பாஸ்டர் போன்றவர்களில் இல்லை என்பது தெரிந்த விசயமாகி விட்ட நிலையில், இத்தகைய நீர்த்தமுறைகளில் சட்டதிட்டங்கள் மாற்றியமைக்கப் படுகின்றன என்று தெரிகிறது. புதிய போப் பதவிக்கு வந்தவுடனே “சீர்திருத்தம்” என்றெல்லாம் ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வந்தன[2]. இந்த கமிட்டியில் கிருத்துவ கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர்தாம் இருப்பார்கள். அதாவது, குற்றஞ்சாட்டப் பட்டவர்களை, அதே பதவியில் இருக்கும் மற்றவர்கள் விசாரிப்பார்கள் என்றாகிறது[3].

Vatican sex enquiring committee Dec 2013

பலவிதமான செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டுள்ள / ஈடுபட்டிருந்த போப்புகள்[4]: போப்புகள் எத்தகைய செக்ஸுகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு, கிருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கீழ்கண்ட விவரங்களைக் கொடுத்துள்ளார்கள்:

 1. திருமணம் செய்து கொண்ட போப்புகள்.
 2. போப்பாகும்முன்பு செக்ஸில் அதிகமாக ஈடுபட்டிருந்த போப்புகள்.
 3. போப்பாகும்முன்பு செக்ஸில் அதிகமாக ஈடுபட்டிருந்தவர்கள் என்று நிலையில் இருக்கும் போப்புகள்.
 4. போப்பாக அறிவிக்கப் படும் நிலையேலேயே செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் / கொண்டிருந்த போப்புகள்.
 5. ஆண்களையே செக்ஸுக்கு உபயோகப்படுத்தி வந்த போப்புகள்.

போப்புகள் நிலையே இவ்வாறிருப்பதனால், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

Action against sex-priests etc Dec.2013

ஐக்கிய நாடுகள் சங்கம் வாடிகன் செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களைக் கேட்டது: ஐக்கிய நாடுகள் சங்கம் கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களைக் கேட்டிருந்தது[5]. இன்றைக்கு உலகம் முழுவதும் பெண்கள், சிறார், மனித உரிமைகள் முதலியவற்றிற்காகப் போராடி வரும் இயக்கங்கள், இவற்றைப் பற்றி கேள்விகளை எழுப்பி வருகின்றன. ஆனால், வாடிகன் அவற்றைக் கொடுக்க மறுத்து விட்டது. சில நாட்களில் சிறுவர்களை பாதித்துள்ள செக்ஸ் குற்றங்களை ஆய்ந்து அவர்களுக்கு உதவி செய்ய 05-12-2013 அன்று ஒரு கமிட்டியைக் கூட்டத் தீர்மானித்து அறிவித்தார்[6]. ஏனெனில், உலகம் முழுவதும் அத்தகைய செக்ஸ் குற்றங்கள் அதிகமாகி நாறிவிட்டதால், பலர் வாடிகன் மீது நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டனர்[7]. ஆனால், இந்த கமிட்டியே ஒரு கண்துடைப்பு[8], புற்று நோயாளிக்குக் கொடுக்கப் படும் உதவி போன்றது என்றெல்லாம் விமர்சனம் செய்துள்ளனர்[9].

Action against sex-cardinals, bishops, pastors etc Dec.2013

பகுதி பிரித்து, பங்குப் போட்டுக் கொண்ட செக்ஸ் சமாஜாரங்கள்: கிருத்துவத்தைப் பொறுத்த வரையிலும் செக்ஸ், பாலுறவு, சிறுமியர்-சிறுவர்-வன்புணர்ச்சி, காமக்களியாட்டங்கள், இறையியல் உணர்ச்சி கூடுதல்கள், கன்னியாஸ்திரிக்களின் கூட்டு விழாக்கள், முதலியன சகஜமாகி விட்டன. நவீன காலத்தில் அவர்களது செக்ஸ் நடத்தைகளும் நாகரிகமாகவே ஆகிவிட்டன. டையோசிஸ், பங்குத் தந்தை, வாரியம், ஊழியப் பகுதி என்றெல்லாம் இடங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு, சுழற்சி முறையில் செக்ஸ் களியாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் / வருகின்றனர். இந்தியாவிலேயே, கன்னியாஸ்திரிக்களை ஒரு இடத்திலிருந்து, மற்ற இடத்திற்கு இடமாற்றம் செய்து, பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் செக்ஸ் விளையாட்டு ஆடிகொண்டிருந்தனர். அபயா கொலைவழக்கு, எப்படி ஒரு கன்னியாஸ்த்ரியை இரு பாதிரிகள் புணைந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, இன்னொரு கன்னியாஸ்த்ரி பார்த்து விட்டதால், அவள் கொலை செய்யப் பட்டாள் என்று தெரியவந்தது. திருச்சி பிஷப்போ கன்னியாஸ்த்ரியை கற்பழித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

Indian cardinal Oswald Gracias

இந்திய மற்றும் தமிழக ஊடகங்களின் அணுகுமுறை: “கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ்” என்ற கூட்டமைப்பின் தலைமையகம் தில்லியில் உள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த, அதிகாரம் மிக்க மற்றும் அரசிலை ஆட்டி வைக்கக் கூடிய அசுடர பலம் கொண்ட நிறுவனம் ஆகும். வாடிகனின் இந்திய நீண்ட கரமாக செயல் பட்டு வருகின்றது. சோனியா மைனோ இருப்பதினால், பலமுறை கிருத்துவர்கள் தங்களுக்கு ஆதரவான ஆட்சி இந்தியாவில் உள்ளது என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். இந்திய ஊடகங்களை இது கட்டுப்படுத்தி வருகின்றது. இதனால், தமிழகத்தில் இத்தகைய கிருத்துவ கற்பழிப்புகள் காமக் களியாட்டங்கள் ஊடகங்களில் அமுக்கியே வாசிக்கப் பட்டது[10]. ஏனெனில், ஊடகங்களில் உள்ளவர்கள் பெரும்பான்யானவர்கள் கிருத்துவ சார்புடையவர்கள் மற்றும் கிருத்துவர்கள். தங்களுடைய மதத்திற்கு கெட்டப் பெயர் வரும் வகையில் எந்த செய்தி, விமர்சனம் மற்றும் தொடர்ச்சியான கருத்துருவாக்கம் போன்றவற்றிற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று அவர்கள் கவனமாகவே இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சென்ற நவம்பரில் புரோனோகிராபியில் ஈடுபட்டவர்கள் பலர் உலகமெங்கிலும் கைது செய்யப்பட்டனர்[11].

இதற்கு பதிலாக எதிர்மறையான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள் – உதாரணத்திற்கு கந்தமால் என்று செய்திகளை வெளியிடுவார்கள்[12].

பழைய போப்பிற்கு ராஜபோக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன[13].

போப் விலகியபோது கூட இத்தகைய காரணங்கள் எடுத்துக் காட்டப் பட்டன[14].

ஆகையால் தான், பல ஆண்டுகளாக கிருத்துவத்தில் ஏற்பட்டுள்ள இந்த செக்ஸ் புகார்கள், கற்பழிப்புகள் பற்றி அனைத்துலக அளவில் விவாதங்கள் நடந்து வந்தாலும், இந்தியாவில் அவை அடக்கி வாசிக்கப் படுகின்றன, கத்தோலிக் பிஷப் மாநாடுகளில் குறுக்கப்பட்டு விடுகின்றன. ஊடகங்களுக்குக் கசிவது கூட அடைக்கப் பட்டு, கிருத்துவம் புனிதமாகவே காட்டப் பட்டு வருகிறது.

வேதபிரகாஷ்

© 10-12-2013


[3] Cardinal Sean O’Malley, the archbishop of Boston, announced the creation of the commission Thursday  (05-12-2013) at the conclusion of a meeting between Francis and his eight cardinal advisers who are helping him govern the church and reform the Vatican bureaucracy. Boston was the epicenter of the 2002 clerical sexual abuse scandal in the U.S.

http://www.huffingtonpost.com/2013/12/05/pope-francis-commission-sexual-abuse_n_4390452.html

[5] UN requested Vatican for information on alleged abuse by priests, nuns or monks, but Vatican refused to provide such information claiming that it is their internal matter and they take necessary action.

http://www.bbc.co.uk/news/world-europe-25235724

[6] Established by Pope Francis based on a proposal of the Council of Cardinals – A Commission for the protection of minors. Pope Francis has decided to establish a Commission for the protection of minors for the purpose of assisting him in the Holy See’s commitment to the protection of children and to pastoral care for victims of abuse. Cardinal Sean Patrick O’Malley, Archbishop of Boston, announced this in the Holy See Press Office today, 5 December, during a briefing at the end of the Council of Cardinal’s meetings.

http://www.osservatoreromano.va/portal/dt?JSPTabContainer.setSelected=JSPTabContainer%2FDetail&last=false=&path=/news/vaticano/2013/280q13-Sar–costituita-da-Papa-Francesco-su-propos.html&title=A%20Commission%20for%20the%20protection%20of%20minors&locale=en

[7] One of the main Italian associations of clerical abuse survivors has said it has “little trust” in the Vatican.Pope Francis has said dealing with sex abuse is vital for the Church’s credibility. Earlier this week the Pope expressed his compassion for the many victims of sex abuse by priests around the world.

http://www.bbc.co.uk/news/world-europe-25235724

[9] But the Survivors Network of those Abused by Priests (SNAP), a US campaign group, said the initiative was “meaningless” and just “a toothless church panel”, arguing secular authorities should deal with clergy sex crimes.”It’s like offering a band aid to an advanced cancer patient,” SNAP director David Clohessy said.”Only decisive action helps, not more studies and committees and promises,” he added.

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5h0DA5DwlrSp5N_AyqXaKStOvWioA?docId=c9823922-4201-4f3b-bb8d-cc3909bf522c