Archive for மார்ச், 2019

ஜேகப் பாரா மெடிகல் காலேஜில் செக்ஸ் லீலைகள் எப்படி அரங்கேறின? பெண்களே, பெண்கள் சீரழிய ஏன் உடந்தையாகின்றனர்?

மார்ச் 22, 2019

ஜேகப் பாரா மெடிகல் காலேஜில் செக்ஸ் லீலைகள் எப்படி அரங்கேறின? பெண்களே, பெண்கள் சீரழிய ஏன் உடந்தையாகின்றனர்?

Jacob Ravi - father and son

கிருத்துவ நிறுவனத்தின் பாலியல் விவகாரம்: குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் தனியார் கல்லூரி – ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லூரி [Jacob Paramedical College at Irachchakulam ] – ஒன்று செயல்பட்டு வருகிறது. பிளஸ்ஸிங்ஸ் லைப் பௌண்டெஷன் டிரஸ்ட் [Blessings Life Foundation Trust] என்ற அமைப்பின் கீழ் இயங்கும் பல கல்வி நிறுவனங்களில் இது ஒன்று[1]. சி. ஜேகப் [C. Jacob] என்பவர் இவற்றைத் துவக்கினார். அவரது மகன் தான் இந்த ஜே. ரவி[2] அதாவது ஜேகப் ரவி என்ற காமக்கொடுங்கோலன். வழக்கம் போல ஊடகங்களும் செக்யூலரிஸ ரீதியில் ரவி கைத்து என்றே போட்டுள்ளனர். பெண்களுக்கு [Women Training Program, Awareness program..] பயிற்சி திட்டங்கள் என்று வைத்துக் கொண்டு அவர்களுக்கு தையல், கைத் தொழில்…போன்றவை சொல்லிக் கொடுக்கும் சாக்கில் கூட இவன் பாலியல் வேலைகளை செய்திருப்பான் போலிருக்கிறது. இங்கு ஆசிரியைகள் உள்பட 10 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். 80-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் நாகர்கோவிலை சேர்ந்த ரவி (வயது 45) என்பவர் தாளாளராக பணியாற்றி வருகிறார்[3]. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை நடப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தது[4]. இருப்பினும், இது வரை அவை மறைக்கப் பட்டு வந்துள்ளன. மேலும் இங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கும், கல்லூரி நிறுவனர் ரவி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் அதே கல்லூரியில் பேராசிரியையாக ஒரு பெண் பணியில் சேர்ந்தார். அந்த ஆசிரியையை கல்லூரி நிறுவனர் ரவி, அடிக்கடி தனது அறைக்கு அழைத்து பேசுவார். அந்த அநியாயமும் விசுவாசத்துடன் அமுக்கப் பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு இதுபோல நிறுவனர் ரவியின் அறைக்கு ஆசிரியை சென்றார். சிறிது நேரத்தில் நிறுவனர் அறையில் இருந்து ஆசிரியை அழுதபடி வெளியே ஓடி வந்தார். ஆசிரியை அழுதது பற்றி உடன் பணிபுரிவோர் கேட்டனர்[5]. அப்போது நிறுவனர் ரவி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை கூறினார்[6].

  Blesings Life Foundation

பாலியல் புகார் கொடுத்த ஆசிரியை, குடும்பம் தாக்கப்படுதல்: அந்த பேராசிரியைக்கு ரவி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பேராசிரியை தன்னுடைய வீட்டிலும், உறவினர்களிடமும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கல்லூரிக்கு சென்று பேராசிரியையிடம் அத்துமீறியது குறித்து தாளாளர் ரவியை கண்டித்தனர். உடனே தாளாளர் மற்றும் ஊழியர்கள் பேராசிரியையின் உறவினர்களை தாக்கினார்கள். இதிலிருந்து, அக்கூட்டம் எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறாது என்ற் தெரிகிறது. பிறகு, சாதாரண மக்கள் அவனிடம் சஎன்ன செய்யமுடியும்? கல்லூரிக்குள் நடந்த மோதல் குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட ஆசிரியையும் அழைத்து நடந்த சம்பவம் குறித்து கேட்டனர்.

Jacob para-medical collge - 19-03-2019

பாதிக்கப் பட்ட ஆசிரியை விளக்கம் அளித்தல்: அதை தொடர்ந்து பேராசிரியை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியை போலீசாரிடம் கூறியதாவது[7]: “கல்லூரி நிறுவனர் ரவி, அவரது அறைக்கு அடிக்கடி என்னை அழைத்து பேசுவார். அவரது பேச்சு எனக்கு பிடிக்கவில்லை. இதனால் நான், அங்கிருந்து வெளியேறி விட்டேன். எனது அறைக்கு வந்த பின்பு கல்லூரி பேராசிரியைகள் நளினி, கலா ஆகியோர் என்னை சமரசம் செய்ய வந்தனர். பின்னர் நிறுவனர் ரவி, என்னை அழைப்பதாக கூறி அவரது அறைக்கு மீண்டும் என்னை அனுப்பி வைத்தனர்[8]. அங்கு சென்றதும் நிறுவனர் ரவி, என்னை திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். நான், அவரை உதறி தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்தேன். இந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் கல்லூரிக்கு சென்று நிறுவனர் ரவியை சந்தித்து விளக்கம் கேட்டனர். அவர், எங்களை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு ஆசிரியை கூறினார்[9].

Jacob para-medical collge - 19-03-2019-2

இந்திய தண்டனைச் சட்டம் 506 (2), 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுதல்: இதையடுத்து நாகர்கோவில் ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது[10]. இதில் கல்லூரி நிறுவனர் ரவி, கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்து வந்தது உறுதியானது[11]. மேலும் முரண்டு பிடிக்கும் மாணவிகளை கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்து விடுவதாக மிரட்டி அவர்களை பணிய வைத்ததும் தெரிய வந்தது. கல்லூரி நிறுவனர் ரவிக்கு, பேராசிரியைகள் நளினி, கலா ஆகியோர் உடந்தையாக இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கல்லூரி நிறுவனர் ரவி, பேராசிரியைகள் நளினி, கலா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 506 (2), 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Jacob para-medical collge - 19-03-2019-3

பாதிக்கப் பட்ட மற்ற பெண்கள் யார்?: ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லூரியில் பயின்ற மாணவிகள் யார் யாருக்கு? இந்தக் கல்லூரியில் வேலை பார்த்துவிட்டு பாலியல் பிரச்னை காரணமாக பல ஆசிரியைகள் வேலையை விட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது[12]. ரவியின் பாலியல் தொல்லையை எதிர்க்காமல் இருந்தால் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் எந்தப் பிரச்னை ஏற்படுத்துவது இல்லை என்றும் எதிர்த்தால் அவர்களுக்கு அலுவலக ரீதியாக டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது[13]. மேலும், இந்தக் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் சின்ன கேமராக்கள் பொருத்தி அதன்மூலம் மாணவிகளை ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் ரவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சி விவகாரம் பற்றி எரிந்து வரும் இந்நிலையில் கல்லூரி நிர்வாகி ஆசிரியைகளின் உதவியுடன் மாணவிகள் மற்றும் சக ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நிறுவனர் ரவி, பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Jacob Ravi, Nela, Kala and others

22-03-2019 அன்று நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே, நளினிகலா உள்ளே: ரவியால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்தால் அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், போலீசார் தெரிவித்தனர். அருப்புக்கோட்டை அருகே கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். 11 மாதங்களுக்கு பிறகு நேற்றுதான் அவர், விடுதலை ஆனார். அவர், விடுதலை ஆன அதே நாளில் நாகர்கோவில் அருகே உள்ள பாரா மெடிக்கல் கல்லூரி பேராசிரியைகள் இருவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக கைதானது நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. மேலும் அதே கல்லூரியில் பணியாற்றும் இரண்டு பேராசிரியைகள், பாலியலுக்கு உடந்தையாக இருந்ததாக திடுக்கிடும் தகவலும் வெளியானது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாளாளர் ரவி மற்றும் இரண்டு பேராசிரியைகளை கைது செய்தனர். பின்னர் மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Jacob Ravi

பெண்களே, பெண்கள் சீரழிய ஏன் உடந்தையாகின்றனர்?: நிர்மலா தேவிக்குப் பிறகு, வருகின்ற இந்த நீலா மற்றும் கலா என்கின்ற அந்த நிறுவனத்தின் டைரக்டர்கள் மற்றும் பேராசிரியர்கள், இத்தகைய, கீழ்த் தனமான வேலையில் ஈடுப்பட்டு வந்துள்ளது திகைப்படையச் செய்கிறது. இது அபயா வழக்கையும் ஞாபகப் படுத்துகிறது. ஏனெனில், அங்கு ஒரு கன்னியாஸ்திரி பாதிரிகளுடன் உடலுறவு வைத்ததை தற்செயலாகப் பார்த்ததினால், அபயா கொலை செய்யப் பட்டாள். இப்பொழுதும், பிஷப் முலக்கல் வழக்கு அமுக்கப் படுகிறது. அந்நிலையில் ஜேக்கப் ரவி வழக்கு உருவகியுள்ளது. பிரச்சினை மதரீதியிலாக அலசப்படாமல் இருந்தாலும், ஏன் நிறைய கிருத்துவர்கள் இத்தகைய பாலியல் வன்மங்களில். செக்ஸ் கொடுரங்களில் இருக்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெற்று வந்தாலும், ஏதோ காரணங்களுக்காக, அவையெல்லாம் அமுக்கி வாசிக்கப் படுகின்றன, அமுக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன என்றே தெரிகிறது. அரசியல், பணம், அதிகாரம் போன்றவை இருக்கின்றன என்பதும் தெரிகின்றன. பொதாகுறைக்கு சினிமா, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பெண்களை ஒரு அனுபவிக்கும் பொருளாகவே விளம்பரப் படுத்தி வருகின்றன. நர்ஸ் என்பவள் கேவலமாகச் சித்தரிக்கப் படுகிறாள். பெண்ணியம் பேசும் கூட்டங்களும் மௌனம் காக்கின்றன.

© வேதபிரகாஷ்

21-03-2019

Jacob Ravi, Nela, Kala and others-5.jpg

[1]  Blessings Life Foundation Trust Blessings Life Foundation Trust – http://www.blftindia.org/aboutus.aspx

[2] Dr. J. Ravi , President of the BLESSINGS LIFE FOUNDATION TRUST has whole heartedly devoted his life for the development of the organization having a vision to do good service for the depressed, the appressed and the deprived people of the society.

[3] தினத்தந்தி, பாலியல் புகாரில் கல்லூரி தாளாளர், 2 பேராசிரியைகள் கைது செய்யப்பட்டனர், பதிவு: மார்ச் 22, 2019 01:42 AM.

[4] https://www.dailythanthi.com/News/State/2019/03/22014202/Sexual-complaint-in-college.vpf

[5] புதிய தலைமுறை, ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: கல்லூரி நிர்வாகி கைது, Web Team, Published : 20 Mar, 2019 10:26 pm

[6] http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60710-college-professor-have-sexual-harassment-college-official-arrest.html

[7]  மாலைமலர், நாகர்கோவில் அருகே கல்லூரியில் ஆசிரியைகள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லைநிர்வாகி கைது, பதிவு: மார்ச் 21, 2019 12:21பதிவு: மார்ச் 21, 2019 12:21

[8]  The investigation has proved that some of the teachers and students had been sexually harassed by Ravi with the help of Nalini and Kala – joint directors Nalini, 30, and Kala, 28.

[9] https://www.maalaimalar.com/News/District/2019/03/21122156/1233332/Nagarcoil-near-college-teachers-and-students-harassment.vpf

[10] தமிழ்.ஒன்.இந்தியா, 20 மாணவிகள், 5 ஆசிரியைகள்காமலீலைகள் செய்த நாகர்கோவில் கல்லூரி நிர்வாகி கைது.. 2 பெண்களும் கைது, By D Suyambulingam,  Updated: Thursday, March 21, 2019, 13:08 [IST].

[11] https://tamil.oneindia.com/news/nagercoil/nagercoil-para-medical-college-students-sexual-abused-by-college-administrator-344623.html

[12] விகடன், `பெண் ஊழியர்கள் உதவியுடன் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை‘ – நாகர்கோவில் கல்லூரி நிறுவனர் கைது!, வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (20/03/2019) கடைசி தொடர்பு:17:45 (20/03/2019)

சிந்து ஆர், ரா.ராம்குமார் .

[13] https://www.vikatan.com/news/tamilnadu/152886-nagercoil-college-founder-arrested-for-sexual-abuse.html

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் வாடிகனின் பங்கு மற்றும் போப் பால் VIன் அனுமதி [4]

மார்ச் 18, 2019

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் வாடிகனின் பங்கு மற்றும் போப் பால் VIன் அனுமதி [4]

Vatican changedd Bible in 1969-1

1969ல் வாடிகன் தினசரி பிரார்த்தனையில் மேரி மேக்தலீன் பற்றிய விவரங்களை மாற்றியது: இடைகாலத்தில் மேரி மேக்தலீன் கட்டுக் கதை எவ்வாறு பாரிஸில் வளர்க்கப்பட்டது என்பது விவரிக்கப் பட்டது. வாடிகனுக்கு ஆரம்த்திலிருந்தே, மேரி மேக்தலீனை உயர்த்து வைப்பதை குறைத்து வந்தது. மேரி என்ற பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை விட, ஏசுவின் விறையை பாதுகாத்து, வம்சத்தைப் பெருக்குவாள் போன்ற கதைகள் இடித்தன, பயமூட்டின. ஆனால், பிரான்சில், இதை நம்பும் பக்தர்கள், விசுவாசிகள் அதிகமாகவே இருந்தனர். மேரிக்கு இணையாக வளர்ந்து விடுவாளோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், காலத்தின் கட்டாயம், அவளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. 1969ல் வாடிகன், போப் பால் VIன் அனுமதியுடன்  தனது தினசரி லத்தீனில் செய்யப் படும் பிரார்த்தனையில் சிறிது மாற்றங்களை செய்தது.  லூக் பைபிளில் ஏழாவது அதிகரத்தில், ஒரு பெயர் குறிப்பிடாத பெண் ஏசு இருந்த வீட்டில் நுழைந்தாள் என்ற விவரம் உள்ளது.

Vatican changedd Bible in 1969-2

லூக்கா, அத்தியாயம்.7ல் உள்ளது: முதலில் மேரி மேக்தலீன் ஒரு வேசி, விபச்சாரி என்றெல்லாம் தான் அறியப் பட்டாள், சித்டரிக்கப் பட்டாள்: லூக்கா சொல்வது:

37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,

38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

………………………………………………..

47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;

48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

இந்த கதையானது ஜான் பைபிளில் உள்ள 20 அத்தியாயத்தில் வரும் கதையை வைத்து மாற்றப் பட்டது. அங்கு அப்பெண் மேரி மேக்தலீன் என்று அடையாளம் காணப்படுகிறாள். அவள் பாவப்பட்டவள் என்பதால் அல்ல உயிர்த்தெழுந்த பின்னர், தன்னை அவளிடம் அடையாளம் காட்டிக் கொண்டதால், முக்கியத்துவம் பெறுகிறாள்.

Mary Magdalelene - raised to GODHEAD

ஜான், அத்தியாயம் 20ல் உள்ள விவரங்கள்: ஜான் அவள், ஏசு உயர்த்தெழுந்ததுடன் தொடர்பு படுத்துகிறது:

11 மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

12 இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

13 அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

15 இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

16 இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

18 மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

Mary Magdalene teaching apostles

இதுவரை, மேரி மேதலீனை விபச்சாரி, வேசி என்றெல்லாம் தான் அறியப்பட்டு வந்தது. ஆனால், அவள் தான் முதன்முதலில் உயிர்த்தெழுந்த ஏசுவைக் கண்டவள். அதனால், அவள் மதத்திற்கே மையக்கருவாக இருக்கிறாள். எது எப்படியாக இருந்தாலும், அடுத்த ஆண்டே, 1970ல் “ஜீசஸ் கிரைஸ்ட் சூப்பர் ஸ்டார்” என்ற படம் வந்து ஹிட் ஆனது. அதே போல 1971 மற்றும் 1973 ஆண்டுகளில் பாடல்கள் வெளியிடப் பட்டு பிரபலம் ஆகியது. ஆக இவ்வாறு, பைபிள் மாற்றப் பட்டுக் கொண்ட்தான் வருகிறது[1]. அவள் எப்படி படிப்படியாக உயர்த்தப் பட்டு, கடவுளாகப் பட்டாள் என்பதை பல ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[2].

Jesus in India books manufactured- 1

ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை[3]: ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்றும், மனைவி மற்றும் இரு குழந்தைகள் அவருக்கு இருந்ததாகவும் கூறி எழுதப்பட்ட புத்தகம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. யார்க் பல்கலைக்கழக (கனடா) பேராசிரியர் பார்ரி வில்சன் மற்றும் ஆவண தொகுப்பாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள புத்தகம் “The Lost Gospel”. இந்த புத்தகம் உலகம் எங்கும் நாளை, புதன்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பழமையான பிரிட்டீஷ் நூலகத்தில் அராமெய்க் மொழியில் இருந்த ஒரு ஆவணத்தை மொழி பெயர்த்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதில் கிறிஸ்தவர்களால் கடவுளாக வணங்கப்படும் ஏசு கிறிஸ்துவிற்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி பெயர் மேரி மக்டாலேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது இந்த புத்தகம். ஆராமெய்க் மொழியில் தங்களிடமிருந்த அந்த புத்தகத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அது ஆய்வாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது என்று கூறி பிரிட்டீஷ் நூலகம் இந்த விவகாரத்தில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக்கொண்டுள்ளது[4].

Jesus in India books manufactured- 2

கட்டுக் கதை வளர்க்கும் விதம் – ஆதரவு-எதிர்ப்பு[5]: “வாடிகன் (கத்தோலிக்க கிறிஸ்த தலைமையிடம்) எதற்காக பயந்துகொண்டிருந்ததோ, டாவின்சி கோட் படைப்பாளி டான் பிரவுனுக்கு எந்த சந்தேகம் வந்ததோ, அது இப்போது உண்மையாகிவிட்டது” என்பதே இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள வரிகளாகும். ஏனெனில் டான் பிரவுன் தனது டாவின்சி கோட் புத்தகத்திலும், ஏசு கிறிஸ்து திருமணமானவர் என்று தெரிவித்திருந்தார். அது உண்மையாகிவிட்டதாக ‘தி லாஸ்ட் கோஸ்பல்’ புத்தகத்தை எழுதியுள்ளோரும் குறிப்பிடுகின்றனர். எழுத்தாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஏற்கனவே, ஜெருசலத்தில் ஆய்வு நடத்தி, ஏசு கிறிஸ்து மறைந்த பிறகு கட்டிய கல்லறை அங்கு உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதை வேறு பல ஆய்வாளர்கள், பைபிள் ஆய்வாளர்கள் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[6].

© வேதபிரகாஷ்

17-03-2019

Jesus in India books manufactured- 3

[1] Michael Haag, The Quest For Mary Magdalene: History & Legend, Profile Books, London, 2016.

[2] Beavis, Mary Ann. The Deification of Mary MagdaleneFeminist Theology 21.2 (2012): 145-154.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை, By Veera Kumar | Published: Tuesday, November 11, 2014, 17:21 [IST]

[4] https://tamil.oneindia.com/news/international/was-jesus-married-mary-magdalene-the-father-two-says-book-the-lost-gospel-214656.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை, By Veera Kumar | Published: Tuesday, November 11, 2014, 17:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/international/was-jesus-married-mary-magdalene-the-father-two-says-book-the-lost-gospel-214656.html

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் சுப்ரமணியன் சாமியின் பங்கு [3]

மார்ச் 18, 2019

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் சுப்ரமணியன் சாமியின் பங்கு [3]

Grail myth- books-Subramanian swami- 4

காஷ்மீரில் ஏன் ஏசு கட்டுக் கதைகளை வளர்க்கிறார்கள்?: காஷ்மீர் மக்களுக்கு அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்தால் தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால், 1980களில் ஆரம்பித்து வைத்த தீவிரவாதத்தால், அம்மாநிலமே அழிந்து வருகிறது. சரித்திர ரீதியில் பெயரில் பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருந்தாலும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் அவ்விடங்கள் அழிப்பிற்கு உட்பட்டுள்ளன. கோவில்கள் முழுக்கவே இடித்து தள்ளப்பட்டுள்ளன. ரோசா பெல் சொல்லப்படும் கூடிய ஒரு மசூதியானது பிரபலமாக இருந்து வருகிறது. ஏனெனில் இங்கு இயேசு இறந்த பின்னர் அவரது உடல் புதைக்கப் பட்டு அதன்மீது அந்த சமாதி கட்டப்பட்டதாக ஒரு கருத்து இருந்து வருகிறது. இதற்கு சரித்திர ரீதியில் எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தாலும் உள்ளூர் வாசிகள் இக்கதையை பிரபலப்படுத்த விரும்புகின்றனர்.

Mirza Ghulam Ahmad - Jesus in Kashmir

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய கட்டுக்கதைகளை நம்பிக்கொண்டு அல்லது வேண்டுமென்றே அவர்களுக்கே தெரிந்த சில திட்டங்களுடன், அதற்காக இத்தகைய ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை ஆராய்ச்சி என்ற பெயரில் வந்து, புகைப்படங்கள் பிடித்து, உள்ளூர்வாசிகள் சிலருடன் பேட்டி எடுத்து, ஏதோ புதியதாக கண்டு பிடித்ததைப் போல புத்தகங்களை வெளியிட்டு வருகின்றனர்[1]. ஒரு இஸ்லாமிய அஹ்மதியா பிரிவின் தலைவர் தான் இந்த கட்டுக்கதைக்கு காரணகர்த்தாவாக தெரிகிறது. உண்மையில் எந்த கிறிஸ்துவ விசுவாசிகள் இத்தகைய கட்டுக்கதையை நம்புவதில்லை. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மேரிமெக்டலின் உடன் தப்பி வந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு இங்கு தான் பிறந்து சமாதி ஆனார் என்பது அவர்களுடைய அடிப்படை நம்பிக்கைகளுக்கு அறவே ஒவ்வாதது, அது ஏற்றுக்கொள்ள முடியாதது. இருப்பினும் ஏன் இத்தகைய போதை பொருட்கள் மற்றும் சரித்திர ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை பரப்பப்படுகின்றன என்பது மிகவும் கவனமாக நோக்கத்தக்கது.Grail myth- books-Subramanian swami- 1

2006ல் குமுதம் பத்திரிக்கையில் வந்த கட்டுக்கதை[2]: ஏற்கெனவே ஆங்கில நாளிதழ்களில் வந்த விவரங்களை “குமுதம்” வெளியிட்டது. ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி என்றாலே அதிர்ச்சி, பரபரப்புச் செய்திகள்தான். அந்த வகையில், சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த அவர், ‘‘ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு அங்கேயே இறந்துவிடவில்லை. உயிர் தப்பி காஷ்மீருக்கு வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைத் தழுவி எண்பது வயது வரை வாழ்ந்து, அதன் பிறகே இறந்திருக்கிறார். வரலாற்றில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்காக ஒரு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி, ஓர் அறிஞர்கள் ‘குழு’வை வைத்து ஆராய உள்ளேன்’’ என்ற அதிர்ச்சிக் குண்டை வீசியிருக்கிறார். ‘தி டாவின்சி கோட்’ பட சர்ச்சை ஓய்வதற்குள் இப்படியரு விஷயத்தைச் சொல்லியிருக்கும் டாக்டர் சுவாமியைச் சந்தித்தோம். ‘‘கடந்த ஆறாம் தேதி எங்கள் கட்சிப் பொதுக் கூட்டத்திற்காக, காஷ்மீர் சென்றிருந்தேன். பேசிக்கொண்டிருந்த போது, ‘டாவின்சி கோட்’ பற்றி விவாதம் வந்தது. ‘ஏசுவுக்கு மனைவி உண்டா? இல்லையா? என்ற கலந்துரையாடலின்போது , ஒருவர் சொன்ன தகவல் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அதாவது, ‘காஷ்மீரில் ஏசு அவரது மனைவி மற்றும் மோஸஸின் கல்லறை இன்றும் இருக்கிறது. அதைச் சிலர் பராமரித்து வருகிறார்கள்’ என்றார்[3].

Grail myth- books-Subramanian swami- 2

நிக்கோலஸ் நோடோவிட்ச் கட்டுக் கதையை மறுபடி அவிழ்த்து விட்டதேன்?[4]: உடனே நான் அங்கேயிருந்த ஓர் அரசு உயரதிகாரியிடம் பேசினேன். ‘‘லடாக் பகுதியிலுள்ள ‘லே’ என்ற இடத்திற்கு முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில், ஹெமிஸ் கோம்பா  என்ற புத்த ஆசிரமம் உள்ளது. அங்கே தான் ஜீஸஸ் ஆரம்பக்காலத்தில் படித்திருக்கின்றார். யோகா, தியானம் உள்பட பலவும் கற்றுத் தேறியிருக்கின்றார். அதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன’’ என்று சொன்னார். பைபிளிலேயே, ‘ஜீஸஸ் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமில் பிறந்தார். யூத மன்னர்கள் மற்றும் மத குருமார்களுக்குப் பயந்து, பிறந்தவுடனேயே எகிப்துக்குத் தப்பி ஓடினார்கள். பிறகு பத்து வருடங்கள் கழித்துத்தான் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். பத்து வயது முதல் பதினான்கு வயதுவரை ஜீஸஸ் அங்கேயே இருந்தார்’ என்றெல்லாம் உள்ளது. பிறகு, அந்தப் பதினான்கு வயதிலிருந்து அடுத்த ஏழு ஆண்டுகள் அவர் எங்கே சென்றார் என்பது கூறப்படவில்லை. அது மர்மமாக உள்ளது. ஏழாண்டுகள் கழித்து இருபத்தொராவது வயதில்தான் மீண்டும் ஜெருசலேம் செல்கிறார். இடைப்பட்ட ஏழாண்டுகளில் அவர் எங்கே இருந்தார் என்பதுதான் கேள்வி. அந்தச் சமயத்தில்தான் ஏசு இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்கு வந்து பௌத்த மத ஆசிரமத்தில் பலவற்றையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்னொரு விஷயமும் உள்ளது. ஏசு பிறந்தவுடன் எகிப்துக்குத் தப்பிச் சென்றார்கள் இல்லையா? பத்து ஆண்டுகாலம் அங்கே இருந்த போது, எகிப்திலும் பௌத்த ஆசிரமத்தில் சேர்ந்து கற்றிருக்கிறார்.

Grail myth- books-Subramanian swami- 3

சாமி கட்டுக்கதையை பரப்புகிறாரா, மறுக்கிறாரா?[5]: ஏசு சொன்ன போதனைகளைக் கவனித்தால், அது இந்து, புத்த மதத்தோடு ஒன்றி வருவதைக் காண முடியும். இன்னொன்றையும் கூறலாம் ஏசுவுக்கு முன்பிருந்தவர்களோ அல்லது அவருக்குப் பின்பிருந்த சீடர்களோ அவரைப்போன்று ‘அதிசயங்களை’ செய்யவில்லை. குருடனுக்குப் பார்வையளித்தது, ஊனமுற்றவரை நடக்க வைத்தது, இறந்தவரை உயிர்ப்பித்ததென்று ஏசுதான் செய்தார். இந்த ‘சித்து’ வேலைகளும் இந்தியத் தன்மை கொண்டவையே. அதுமட்டுமல்ல, பைபிளில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு உள்ளது. புதிய ஏற்பாடுதான் ஏசுவின் போதனையைப் பற்றிக் கூறுகிறது. அது கூட ஏசு எழுதியது இல்லை. அவருக்குப் பின் வந்த சீடர் புனித செயிண்ட் பால் என்பவரால்தான் எழுதப்பட்டது. ஏசு சொன்னதாக பால் எழுதியது, எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும்?’’ மாறுபாடுகள் இருக்கலாம் அல்லவா?’’ என்று விளக்கங்களை முன் வைத்தார் சுவாமி[6].

Grail myth- books-1

பவிஷ்ய புராணம் ஒரு மோசடிபோலி புராணம்[7]: மேலும், ‘‘நமது பழைமையான புராணங்களில் ஒன்றானபவிஷியா மகாபுராணம்என்ற நூலில் கூட, சில சுலோகங்கள் ஏசு போன்ற ஒருவர் பற்றியும் கூறுகின்றன. அதாவது காஷ்மீர் பகுதி மன்னர் ஒருவர், அவரிடம்நீ யார்?’ என்று கேட்பதாக வருகிறது. அதற்கு அவர், ‘நான் கடவுளின் மகன். கன்னிப் பெண்ணுக்குப் பிறந்தவன். ஆழ்ந்த இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தலைவன். இடைவிடாத உண்மையைத் தேடுபவன் என்று கூறுவார்கள்என்றும், ‘என் பெயர் ஈஸா_மாஸிஎன்றும் கூறியிருப்பதாக உள்ளது.

பழங்கால காஷ்மீர் மன்னர்களான சாலிவாஹனா மற்றும் கனிஷ்கர் ஆகியோரின் அரசுப் பதிவேடுகள் கூட, ஏசு இங்கே இருந்ததைக் கூறுகின்றன. இப்படித் தெரியவரும் சில ஆதாரங்கள்படி பார்த்தால், ஏசு, காஷ்மீரில்கனியார்என்ற இடத்தில் வாழ்ந்து இறந்து, அடக்கம் செய்யப்பட்டார் எனத் தெரிய வருகிறது.

சுப்ரமணியன் சுவாமி சாமி வேண்டுமென்றே இக்கட்டுக் கதையைக் கிளப்பி பிரபலம் தேடுகிறார் என்றேதெரிந்தது. மேலும், டா வின்சி கோட் கதையைக் கட்டுப் படுத்த, அவ்வாறு கூறியிருக்கலாம், 300 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு தெரியாமலா போயிற்று?

இது ஆதாரபூர்வமானதல்ல. ஆனால், அதற்காக விட்டுவிடாமல், இதில் உள்ள உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும். விட்டுவிடக் கூடாது. ஒரு நிபுணர்கள் குழு மூலம் இவற்றை ஆராய வேண்டும்.

ஏசு கடைசிக் கட்டத்தில் சிலுவையில் அறையப்பட்டு மரணத்தைத் தழுவிய போது, அவரது உடலில் சுற்றியிருந்த ரத்தக்கறை படிந்த ஆடைகள் இன்னும் இத்தாலியில் உள்ளடூரின்சர்ச்சில் இருக்கிறது என்கின்றனர். அதுதான் உண்மை என்றால், அதை டி.என்.. சோதனைக்கு உட்படுத்த வேண்டும். காஷ்மீர்லேபகுதியில் உள்ள ஏசுவின் மனைவி சமாதி என்று சொல்லப்படுவதையும் தோண்டி எடுத்து ஆய்வு செய்து, டி.என்.. சோதனைக்கு உட்படுத்த வேண்டும்

இது ஆதாரபூர்வமானதல்ல. ஆனால், அதற்காக விட்டுவிடாமல், இதில் உள்ள உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும். விட்டுவிடக் கூடாது. ஒரு நிபுணர்கள் குழு மூலம் இவற்றை ஆராய வேண்டும்.,” என்றெல்லாம் சொல்வதிலிருந்தே, எதிர்மறை பிரச்சாரம் மூலம் கிரூத்துவர்களுக்கு உதவும் போக்கும் வெளிப்படுகிறது.

அதே போன்று சரியான வரலாற்று ஆய்வுகளையும் நடத்த வேண்டும். உண்மையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம்’’ என்று முடித்தார் சுவாமி[8].

© வேதபிரகாஷ்

17-03-2019

Grail myth- books-2

[1] Prophet, Elizabeth Clare. The Lost Years of Jesus: On the Discoveries of Notovitch, Abhedananda, Roerich, and Caspari. Summit University Press, 1984.

[2] THE ASIAN AGE. Tracing the ‘lost’ Israeli roots of Kashmiris, | YUSUF JAMEEL Published : Oct 30, 2017, 6:52 am IST Updated : Oct 30, 2017, 6:54 am IST.

[3] http://www.asianage.com/india/all-india/301017/tracing-the-lost-israeli-roots-of-kashmiris.html

[4] Nicholas Notovitch, The unknown life of Jesus Christ. Vol. 4. Health Research Books, 1996.

[5] ZeeNews, New interest in j&k ‘Jesus grave’: The Asian Age, Updated:Jun 12, 2006, 00:00 AM IST

[6] https://zeenews.india.com/home/new-interest-in-jandk-jesus-grave-the-asian-age_301657.html

[7] Sam Miller,  Tourists flock to ‘Jesus’s tomb’ in Kashmir, Srinagar, Page last updated at 12:08 GMT, Saturday, 27 March 2010.

[8] http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/8587838.stm

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் இந்துத்துவ வாதிகள் ஏன் உள்ளனர்? [2]

மார்ச் 16, 2019

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் இந்துத்துவ வாதிகள் ஏன் உள்ளனர்? [2]

Mary Magdalene myth - Da vinci code

மேரி மக்தலீன், புனித கோப்பை, தொடர்ந்து வரும் வம்சாவளி[1]: ஏசுவின் வாரிசுகளை ஆதரிக்கும் ரகசியக் குழுவில் டா வின்சியும் உறுப்பினராம். யூதாஸால் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்பு தன் சீடர்களுடன் கடைசியாக ஏசு கிறிஸ்து உணவருந்திய காட்சியை டா வின்சி ஓவியமாக தீட்டியிருக்கிறார். அதில் ஏசுவுக்கு அருகே உட்கார்ந்திருப்பது சீடர் ஜான் அல்ல. அது மேரி மக்தலீன் என்பது டான் பிரவுனின் கருத்து. கடைசி விருந்தில் ஏசு பயன்படுத்திய கோப்பை, கிறிஸ்தவர்கள் மத்தியில் புனிதமாகக் கருதப்படுகிறது. அதில் கடவுளின் ரத்தம் இருப்பதாகக் கருதப்படுகிறது. டா வின்சியின் ஓவியத்தில் கோப்பையே கிடையாது. காரணம், கோப்பை என்பது ஒரு குறியீடுதான். ஏசுவின் ரத்தத்தைத் தன் வயிற்றில் உள்ள குழந்தை வடிவத்தில் தனக்குள் வைத்திருக்கும் மேரி மக்தலீன்தான் அந்தக் கோப்பை என்பது டான் பிரவுனின் வியாக்யானம்[2].

Merovingian dynasty

உண்மையினை மறைக்க, படத்தை அமுக்கி விட்டனர்[3]: டா வின்சியின் புகழ்பெற்ற மோன லிசா ஓவியமும் படத்தில் வருகிறது. மோன லிசா பெண்ணே அல்ல. டா வின்சி தன்னைத்தானே ஓவியமாக தீட்டிக் கொண்டிருக்கிறார் என்பது டான் பிரவுனின் இன்னொரு வியாக்யானம். நாவலாகப் படிக்கும்போது சுவாரஸ்யமாக இருந்த கதை, சினிமாவாக எப்படி இருக்கும்? இந்த வாரம் நடந்த சர்வதேசப் பத்திரிகையாளர் பிரிவியூவுக்குப் பின் பல பத்திரிகையாளர்கள், ‘படம் செம போர்’ என்று சொல்லி விட்டார்கள். ‘மர்மப் படத் துக்கு சரிப்பட்டுவராத விதத்தில் வளவள என்று நிறைய பேச்சு, சாதாரண பார்வையாளர்களுக்கு விளங்காத கிறிஸ்தவ மதக் கோட் பாடுகள்- குறியீடுகள், டாம் ஹாங்க்ஸின் உணர்ச்சியற்ற நடிப்பு எல்லாம் சேர்ந்து ஒரே போர்’ என்று சொல்லப்பட்டுள்ளது. எதிர்ப்பாளர்களின் சர்ச்சையை மீறி நாவல் பெரும் வெற்றியடைந்தது போல, விமர்சகர்களின் கருத்தை மீறி படமும் வெற்றி பெறுமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும். மதம், கடவுள் தொடர்பான விஷயங்களில் ஒரு படைப்பாளிக்கு எந்த அளவுக்குக் கற்பனைச் சுதந்திரம் அனுமதிக்கப்படும் என்பது எல்லா சமூகங்களிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் விவாதமாகிறது. அதில் இன்னொரு மைல் கல்… ‘டா வின்சி கோட்’[4].

Merovingian STAR

சர்டிபிகேட்டுடன் படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டு வெளி வந்த படம்[5]: இந்தியாவைப் பொறுத்தவரை படத்தைப் பார்த்துவிட்டுத் தானே முடிவு செய்யப் போவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி அறிவித்தார். இதற்கு முன் அமீர்கானின் ‘ரங் தே பசந்தி’ படம் பற்றியும் சர்ச்சை வந்தபோது தானே ஐந்து முறை படத்தைப் பார்த்துவிட்டு அனுமதித்ததாக சொல்லியிருக்கும் தாஸ் முன்ஷி, தற்போது ‘தி டா வின்சி கோட்’ படத்தைப் பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் கடுமையாக எதிர்ப்புக் காட்டிய கிறிஸ்தவ அமைப்புகளும், ‘ஆட்சேபகரமான காட்சிகளை வெட்டிவிட்டுப் படத்தைத் திரையிடலாம்’ என்று இறங்கிவர, ‘ஏ’ சர்டிபிகேட்டுடன் படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டது[6].

Battle of Armageddon

சரித்திர ஆதாரங்கள் இலாததால் கிருத்துவத்தில் உள்ள பிரச்சினை: கிருஸ்தோலாஜி / கிருஸ்துவயியல் (Christology) என்பது கிருஸ்துவைப்பற்றி படிப்பது, ஆராய்ச்சி செய்வது, அறிவதாகும்.  ஜீஸஸ் (Jesus), கிருஸ்து (Christ) என்ற இரு சித்தாந்தங்கள் ஒன்று சேர்ந்து ஜீஸஸ் கிரைஸ்ட் (Jesus Christ) அதாவது ஏசுகிருஸ்து என்பது உருவாக்கப்பட்டது. ஆகவே ஏசுகிருஸ்து சரித்திரரீதியாக இருந்தாரா இல்லையா என்ற விவாதம் இருந்து வருகிறது. மனித கிருஸ்து (Human Christ), சரித்திரக் கிருஸ்து (Historical Christ) மற்றும் தெய்வ கிருஸ்து (Divine Christ) என்ற வாதங்களும் உண்டு.

  1. மனித கிருஸ்து (Human Christ): கிருத்துவயியலைப் போற்றுபவர்கள், பின்பற்றுபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் இத்தகைய பிரச்சினைகள முன்வைத்து தமது கொள்கைகளை நிலைநிறுத்தப் பார்ப்பார்கள். அதாவது, கிருத்துவிற்கு கல்யாணம் ஆனதா இல்லையா, மேரி மேக்தலீன் கிருத்துவை மணம் செய்து கொண்டார்களா இல்லையா, அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனவா இல்லையா, 13 வருட இடைக்காலத்தில் அவர் எங்கு இருந்தார், இந்தியாவிற்கு வந்தாரா இல்லையா, ……………..என இப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பினால், பலரும் பற்பல விவாதங்களுடன் களமிருங்குவர். பதில் சாதகமாகவோ, பாதகமாகவோ இருந்தாலும், ஏசுகிருஸ்து இருந்தார் என்று ஒப்புக்கொண்டு இந்த விவாதங்களில் ஈடுபடவேண்டியிருக்கும்.
  2. சரித்திரக் கிருஸ்து (Historical Christ): ஆனால் சரித்திர ரீதியாக ஏசுகிருஸ்து இல்லை என்று இன்றைய ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. இதுதான், இன்றைய ஐரோப்பிய, அமெரிக்க மக்களின் நிலையாகிறது. அதனால் தான் சர்ச்சுகளுக்கு போகும் நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைகின்றன, சர்ச்சுகளும் விற்கப்படுகின்றன.
  3. தெய்வ கிருஸ்து (Divine Christ):  இதெல்லாம் கிருஸ்துவை தெய்வமாகக் கருதுபவனுக்குக் கவலையில்லை. நம்பிக்கையாளனுக்கு தெய்வம் இருப்பது அவனது நம்பிக்கை. அதை எந்த உண்மையான நம்பிக்கையாளனும் விமர்சிக்கப் போவதில்லை.Jesus never crucified, died in Kashmir - Hindutwa vadis believe

நியூசிலாந்த்தில் கிருத்துவன் துலுக்கரைக் கொன்றான் என்று பதிவு போடுவது சரியில்லை: 15-03-2019 அன்று கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல்-நூர் என்னும் மசூதியில் தொழுகை நடத்துபவர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடந்தது. நியூசிலாந்து கொலைகாரன் ஒரு டெம்ளர், கத்தோலிக்க வெறியாளன் என்று சில நண்பர்கள் பதிவு செய்து மகிழ்வது போல உள்ளது, இது ஆபத்தானது. ஏனெனில் முட்டாள் இந்துக்களில் பலர், “இந்தியாவில் ஏசு” போன்ற கட்டுக் கதைகளை நம்புகின்றனர். யோகானந்த பரம ஹம்ஸர், மற்ற பலர் செக்யூலரிஸ இந்துத்துத்துவ சாமியார்கள் நம்புகிறார்கள். ஆன்மீகப் பார்வையில் புரட்டு புரட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர், ஏனெனில் அயல்நாட்டவர்களிடத்திலிருந்து பணம் வருகிறது. ஏசு மேரி மேக்தலினை கல்யாணம் செய்து கொண்டார், அவர்கள் வழி வந்தவர் நாங்கள் என்று டெம்ப்ளர்கள் சாதிக்கின்றனர், கத்தோலிக்கதைக் காக்கும் வீரர்கள் என்று பறைச் சாற்றிக் கொள்கின்றனர்.  ஆகவே, அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை வேறு, இந்துக்கள் நுழைவது வேறு.

Jesus never crucified, died in Kashmir - Hindutwa vadis, RSS believe

ஆர்.எஸ்.எஸ் இக்கட்டுக்கதைகளை ஊக்குவிப்பதேன்?: ஆர்.எஸ்.எஸ்.ல் சிலர் இக்கட்டுக் கதைகளை ஊக்குவிப்பதும் தெரிகிறது. ஸ்லீப்பர் வேலை செய்கிறார்களா முட்டாள் இந்துக்கள் என்று சந்தேகிக்க தோன்றுகிறது. ஏசு மனநிலை பாதிக்கப் பட்டவர் என்று ஒருவர் அடிக்கடி பரப்பி வருவதை கவனிக்கலாம்[7], இன்னொருவர் நானே ஏசு என்று சொல்லிக் கொள்கிறார். மறுபடியும் சிலுவை போர்கள் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனரா? அர்மகதான் [Battle of Armageddon] யுத்தம் தேவையா?

Battle of Armageddon

உண்மையில் இந்த இந்துத்துவ வாதிகளுக்கு, இதெல்லாம் தெரியுமா அல்லது தெரிந்து துணை போனால் விவகாரம் வேறு, தெரியாமல் துணை போனால் ஆபத்து. எச்சரிக்கை! டெம்ப்ளர்களை களைத்த போது, அவர்கள் பிரீமேசன்கள் ஆனார்கள் என்கிறார்கள், இவர்கள் எல்லோருமே மேஸோனிக் குழுக்களில் அடங்குவர்! பாவம், கன்னித் தாய், சிலுவையில் மரிப்பு, உயிர்த்தெழுதல், எழும்பி சுவர்கத்திற்குசென்றது, முதலியவற்றை நம்புவது கிருத்துவம்[8].

Jesus mentally ill

ஆனால், ஏசுக் கட்டுக் கதைகள், அவற்றிற்கு விரோதமானவை, ஏற்று கொள்ளப் படாதவை! குரான் ஆதரிப்பதால், இந்துக்கள் ஆதரிப்பது சரியில்லை! அடிப்படை மத உண்மைகள் அறிந்து கொண்டால், எல்லோருக்கு நல்லது. ஆனால், இப்பொழுது நடப்பதெல்லாம் நல்லதல்ல. ஏசு தமிழ் இந்து தான், கடையாக, சரவவண பவ ஹோட்டலில் இட்லி, தோசை எல்லாம் சாப்பிட்டார். தமிழச்சியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு கொரியாவில் இறந்தார், அங்குள்ள சமாதியை ஒரிசா பாலு கண்டு பிடித்தார். இப்படியெல்லாம் சொன்னால் கூட நம்மாட்கள் நம்புவார்கள் போலும்.

© வேதபிரகாஷ்

16-03-2019

Jesus had 12 wives

[1] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[2] https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

[3] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[4] https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

[5] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[6]  https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

[7] https://www.express.co.uk/news/uk/341926/Jesus-Christ-may-have-suffered-from-mental-health-problems-claims-Church-of-England

[8] Concept of sin, Immaculate Conception. Virgin birth, Crucifixion, Resurrection, Ascension, Trans-substantiation…

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் இந்துத்துவ வாதிகள் ஏன் உள்ளனர்? [1]

மார்ச் 16, 2019

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் இந்துத்துவ வாதிகள் ஏன் உள்ளனர்? [1]

Turin shroud fake- news cutting

இடைகாலத்தில் நிறுவன மதமாக மாறி மைய அதிகாரம் பெற்ற கிருத்துவம்: இடைகாலத்தில் தான். கிருத்துவம் அடிப்படை சித்தாந்தங்கள் முதலியவற்றை அடக்கி மதமாக உருவெடுக்க ஆரம்பித்தது. குறிப்பாக கத்தோலிக்கம் பலவித நம்பிக்கைகளை உட்கொண்டு, சமரசம் செய்து கொண்டு பலம் பெற முயற்சித்தது. வாடிகன், போப் என்ற நிலையில் மத்திய அதிகாரம் பெற அரசர்கள் மற்றும் துறவியர்களின் ஆதரவை பெற்றது. மத்தியஸ்தம் செய்து, அவ்வாறான நிலையை வலுப்படுத்திக் கொண்டது. 13-14ம் நூற்றாண்டுகள் முக்கியமானவையாகின, ஏனெனில், அப்பொழுது தான், மதத்திற்கு வேண்டிய ஆதாரங்களைத் திரட்டியது. உருவாக்கவும் செய்தது. அதனால் தான், டூரின் சரைவ்ட் போன்றவற்றிற்கு 13ம் நூற்றாண்டு தேதி வருகிறது. அந்நிலையில் தான், இந்த மேரி மேக்தலீன் கதைகள் உருவாக்கப் பட்டன. இருப்பினும், அததாசாரக் கத்தோலிக்கத்திற்கு எதிராக இருப்பதால், மறைக்க ஆரம்பித்தது. இருப்பினும், இரண்டாம் கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு, உலக மக்களை ஏமாற்ற, அத்தகைய கட்டுக் கதைகளை ஊக்குவித்து, மக்களை குழப்ப ஆரம்பித்துள்ளது.

Jesus with family Merovingian dynasty

மேரி மேக்தலீன் பிரான்ஸுக்கு வந்தது: தெற்கு பகுதி பிரான்ஸில் 11ம் நூற்றாண்டில் தோன்றிய நம்பிக்கை மேரி மேக்தலீன் வழிபாடு [Cult of Mary Magdalene] ஆகும்[1]. மேரி மேக்தலினும், அவளின் உதவியாளர்களும், ஜெருசலேம் நகரத்தில் தண்டனை. கொடுமைகள் முதலியவற்றிலிருந்து தப்பித்து, மத்தியத் தரைக் கடல் வழியாக படகில் ஏர்லஸ் என்ற இடத்திற்கு – தெற்கு பிரன்ஸை வந்தடைந்தார் என்பது கத்தோலிக்க பண்டிதர்கள் மற்றும் விசுவாசிகளின் நம்பிக்கையாகும்[2]. அதனால் செயின்டிஸ் மேரீஸ் டி ல மேர் [Saintes Maries de la Mer] என்றழைக்கப் படுகிறார். மேர்ஸைல் பகுதியில் உள்ள செயின்ட் பௌமே [Sainte-Baume] மலைக்குகையில் இருந்து, அப்பகுதியில் உள்ளவர்களை கிருத்துவத்திற்கு மாற்றினார். 1118லிருந்து, அப்பகுதி நைட் டெம்ப்ளர் [the Knights Templar] அதாவது வீரர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. அவர்கள் எல்லோருமே மேரி மேக்தலீனை ஒரு நாஸ்டிக் அப்போஸ்தலராகவே [Gnostic Apostle] பாவித்தனர்.  அவர்களைப் பொருத்த வரையில், மேரி என்றால், மேரி மேக்தலீன் தான்! இடைகாலத்தில், கிருத்துவ மத வெறியர்கள், பெண்களை பிசாசுகள் என்று நாற்சந்தியில் உயிரோடு எரித்தனர். அவர்களில், ஜோன் ஆப் ஆர்க் என்ற பெண்மணியை, பிறகு மேரி மேக்தலீனுடன் ஒப்பிட்டிப் போற்றினர்.

Was she wife of Jesus, Vikatan 2006

ஏசு பல மனைவியரைக் கொண்டிருந்தது: 13ம் நூற்றாண்டில் சிஸ்டெசியன் துறவி [Cistercian monk] மற்றும் வாக்ஸ் டி செர்னேவைச் சேர்ந்த பீடர் [Peter of Vaux de Cernay] மேரி மேக்தலீன், ஏசுகிருஸ்துவின் காமக்கிழத்தி [ concubine] என்று கருதினர்[3]. முந்தைய மோர்மோன் தலைவர்கள் – ஜெடெடையா எம். கிரான்ட், ஓர்ஸன் ஹைட், ஜோசப் எப். ஸ்மித், ஓர்ஸன் பிராட், ஏசு கிருஸ்துவிற்கு பல மனைவிகள் இருந்தனர் என்றனர்[4]. ஏசு அப்படி மல மனைவியரை [எலிசபெத், மேரி முதலியோர்]க் கொண்டிருந்ததால் தான், அவர் தண்டனைக்குட்படுத்தப் பட்டார் என்றும் எடுத்துக் காட்டினர்[5].

Jesus had 12 wives

மேரி மேக்தலினை ஏசு திருமணம் செய்து கொண்டு தெற்கு பிரான்ஸுக்கு சென்றடைந்தார், ஒரு மகன் பிறந்தான், என்று 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த லூயிஸ் மார்ட்டீன் / லியோன் ஆப்ரி தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டார்[6]. இவ்வாறு தான் இக்கதையை பிறகு டோனோவோன் ஜாய்ஸ், ஆன்ட்ரியஸ் பேபஸ் கைஸர், மைக்கேல் பைஜென்ட், ரிச்சர்ட் லே, ஹென்றி லிங்கன். டான் பிரௌண் என்று பரப்ப ஆரம்பித்தனர்.

Jesus had 12 wives.prof-1

பிரிகம் யங் பல்கலைக்கழகம், அகழ்வாய்வு மற்றும் மானியவியல் பேராசிரியர் அப்ரஹாம் ஜோன்ஸ், “நாங்கள் பைபிள் மட்டுமல்லாது மற்ற மோர்மோன்களின் புனிதப் புத்தகம், அபோகிரிபா போன்ற முக்கியமான கிருத்துவ மத நூல்கள் படித்தாய்ந்த பிறகு, தெரிவதாவது, ஏசு ஒரு பலதாரங்கள்கொண்டவர். 12 மனைவியர் அவருக்கு இருந்தனர் என்று தெரிகிறது,” என்கிறார்.

 

Mary Magdalene myth - Da vinci code-2

 ‘தி டா வின்சி கோட்நாவல் புத்தகம் மற்றும் சினிமா[7]: ‘தி டா வின்சி கோட்’ முன்று வருடங்களுக்கு முன்பு 2003ல் புத்தகமாக வந்தபோதே பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ‘தி டா வின்சி கோட்’ இப்போது சினிமாவாக வந்து மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்தவ திருச்சபைகளும் சுமார் 500 கிறிஸ்தவ அமைப்புகளும் எதிர்ப்பு காட்ட, படத்துக்கு தடை விழும் அளவுக்கு ஏக பரபரப்பு! படத்துக்குத் தடை என்பது உலகம் முழுக்கவே பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தாய்லாந்தில் கடைசி பத்து நிமிடங்களை மட்டும் வெட்டினால் போதும் என்று திருச்சபை சொல்லியிருக்கிறது. அதற்கு சென்சார் ஒப்புக் கொண்ட போதும், தயாரிப்பாளர்கள் சம்மதிக்கவில்லை. அதனால் அங்கே இன்னமும் படம் திரையிடப்படவில்லை. அதேசமயம், எந்த வெட்டும் இல்லாமல் அனுமதித்திருக்கிறது சீனா. படம், நாவல் இரண்டைப் பற்றிய சர்சைக்கும் அடிப்படை ஒன்றுதான். ஏசு கிறிஸ்து திருமணமானவர். அவருக்குக் குழந்தைகள் உண்டு. அவருடைய வாரிசுகள் இன்னமும் பிரான்ஸில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் அவர்களுடைய ரகசிய ஆதரவாளர்களையும் ஒழித்துக்கட்ட வாடிகன் திருச்சபை 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கதையின் சாராம்சம். ஏசுவுக்குப் பணிவிடை செய்த பாலியல் தொழிலாளியான மேரி மக்தலீன் தான் ஏசுவின் மனைவி என்கிறது கதை[8].

Merovingian dynasty-GRAIL

தி ஹோலி பிளட் அண்ட் தி ஹோலி கிரெய்ல்மற்றும் தி டா வின்சி கோட்[9]: இந்த நாவல், கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் இழிவு செய்வதாக மூன்றாண்டுகளுக்கு முன்பு புத்தகம் வந்தபோது திருச்சபைகள் சொன்னபோதும், புத்தகம் இந்தியா உட்பட எந்த பெரிய நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. இதுவரை 44 மொழிகளில் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. ஆங்கிலத்தில் மட்டும் மொத்தம் இதுவரை ஆறு கோடி பிரதிகள் விற்றிருக் கின்றன. இந்த நாவலை எழுதி யவர் டான் பிரவுன். ‘எங்களுடைய புத்தகத்தின் அடிப்படையில்தான் இந்த நாவலை டான் பிரவுன்’ எழுதினார் என்று அவர்மீது ‘கதைத் திருட்டு’ வழக்குத் தொடுத்தார்கள் இரண்டு எழுத்தாளர்கள். ‘தி ஹோலி பிளட் அண்ட் தி ஹோலி கிரெய்ல்’ என்ற அந்தப் புத்தகத்தை எழுதிய ரிச்சர்ட் லேய், மைக்கேல் பைகாண்ட் இருவரும் கிறிஸ்தவ மத சித்தாந்தத் துறையில் அறிஞர்கள். காப்பிரைட் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு, சென்ற மாதம் தரப்பட்டது. ‘இரு புத்தகங்களுக்கும் பல தகவல் அடிப்படைகள் ஒன்றானபோதும், டான் பிரவுன் திருடவில்லை’ என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்த சர்ச்சையால் மூன்று எழுத்தாளர்களுக்கும் லாபம்[10]. இரண்டு புத்தகங்களும் மறுபடியும் ஆயிரக்கணக்கில் விற்றன. இரண்டு விற்பனையிலும் லாபமடைந்த இன்னொருவர்- பதிப்பாளர். இரண்டுக்கும் ஒரே பதிப்பாளர்தான்!

Was she wife of Jesus, Vikatan 2006-Da vinci code

ஒரு மர்மப்பட தொனியில் சினிமா எடுக்கப்பட்ட படம்[11]: டான் பிரவுனின் வெற்றி நாவலை சினிமா ஆக்கும் உரிமைக்காக அவருக்கு சோனி நிறுவனம் கொடுத்திருக்கும் தொகை 60 லட்சம் டாலர்கள் (சுமார் முப்பது கோடி ரூபாய்)). ‘எ பியூட்டிபுல் மைண்ட்’ படத்தை இயக்கிய ரான் ஹோவர்ட் இயக்கியிருக்கும் ‘டா வின்சி கோட்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடித்திருக்கிறார். கதையில் அவர் குறியீட்டு இயல் நிபுணர் ராபர்ட் லாங்டன் என்ற கேரக்டரில் வருகிறார். பிரான்ஸின் புகழ்பெற்ற ‘லூவே’ ( Louvre ) என்ற அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் மர்மமாக இறந்ததையடுத்து, சில மர்மக் குறியீடுகளைத் துப்புத்துலக்க அழைக்கப்படுகிறார் ராபர்ட் லாங்டன். அங்கே அவர் சந்திக்கும் சங்கேத முடிச்சு அவிழ்ப்பு நிபுணி சோஷபி பாத்திரத்தில் ஆட் ரே டாவ்டாவ் நடித்திருக்கிறார். இருவரும் துப்புத் துலக்கும்போது ஏசு கிறிஸ்துவின் வாரிசுகள் பற்றிய மர்மங்கள் வெளிப்பட தொடங்குகின்றன. அதனால் இருவருக்கும் ஆபத்து. ஒரு மர்மப்பட தொனியில் சினிமா எடுக்கப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சியின் கலைப்படைப்புகளுக்குள் ஏசுவின் வாரிசுகள் பற்றிய ரகசிய சங்கேதக் குறிப்புகள் அடங்கியிருக்கின்றன என்பதுதான் டான் பிரவுன் கட்டியிருக்கும் கதை[12].

© வேதபிரகாஷ்

16-03-2019Jesus had 12 wives

[1] Katherine Ludwig Jansen, The Making of the Magalen: Preaching and Popular Devotion in the Later Middle Ages, Princeton University Press (2000).

[2] Thomas F. Head, Medieval Hagiography: An Anthology, Taylor & Francis Group (2001), pp.659 et seq.

[3] W.A. Sibly, M.D. Sibly, The History of the Albigensian Crusade: Peter of les Vaux-de-Cernay’s “Historia Albigensis”(Boydell, 1998). ISBN 0-85115-658-4

Quote: “Further, in their secret meetings they said that the Christ who was born in the earthly and visible Bethlehem and crucified at Jerusalem was ‘evil’, and that Mary Magdalene was his concubine – and that she was the woman taken in adultery who is referred to in the Scriptures; the ‘good’ Christ, they said, neither ate nor drank nor assumed the true flesh and was never in this world, except spiritually in the body of Paul. I have used the term ‘the earthly and visible Bethlehem’ because the heretics believed there is a different and invisible earth in which – according to some of them – the ‘good’ Christ was born and crucified.”

[4] Early Mormon leaders Jedediah M. Grant, Orson Hyde, Joseph F. Smith and Orson Pratt stated it was part of their religious belief that Jesus Christ was polygamous, quoting this in their respective sermons. John R. Farkas, David A. Reed, Mormons: How to Witness to Them (Baker Academic, 1997.

[5] Vern Grosvenor Swanson, Dynasty of The Holy Grail: Mormonism’s Sacred Bloodline, page 85 (Cedar Fort, 2006).

[6] Le Donne, Anthony (Nov 7, 2013). The Wife of Jesus: Ancient Texts and Modern Scandals. Oneworld Publications. pp. 78–79.

[7] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[8] https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

[9] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[10] https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

[11] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[12] https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

“வெளிச்சத்தை நோக்கி” என்ற கிருத்துவ தூஷண கருத்தரங்கமும், இந்துத்துவ வாதிகளின் புலம்பலும்! [2]

மார்ச் 3, 2019

வெளிச்சத்தை நோக்கிஎன்ற கிருத்துவ தூஷண கருத்தரங்கமும், இந்துத்துவ வாதிகளின் புலம்பலும்!  [2]

Christian site criticizing the seminar Feb 18-20 -2019.3

கலவரத்தை உண்டாக்கவே கருத்தரங்கம்ஆனால் ஏசுவின் வருகை காட்டுகிறது[1]: இதனை சமீபத்தில் லயோலா கல்லுாரியில் நடந்த ஓவிய கண்காட்சி, திருச்சி ஜோசப் கல்லுாரியில் தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் கருத்தரங்கம், கோவையில் நடக்க உள்ள வெளிச்சத்தை நோக்கி கருத்தரங்கம் போன்றவை மூலம் உணர முடியும். இவற்றி்ல் இவர்கள் பேசப் போவது அனைத்துமே பேத்தியை போலவே பாட்டி இருக்காங்க என்றுதான். அவர்கள் கருத்தரங்கம் குறித்து மிப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வார்கள்.

அது தொடர்பாக கருத்து மோதல் வெடிக்கும், இந்துகள், கிறிஸ்தவர்கள் மோதிக் கொள்வார்கள். தங்கள் பெயர் பிரபலமாகும். திருச்சியில் நடந்தது போலவே கோவையிலும் கடைசி நிமிடத்தில் கருத்தரங்கை நடத்தாமல் கைவிடுவார்கள். இதனால் ஏசுவின் பெயராலே இந்த சாத்தான்கள் குளிர்காய்வார்கள்.  சமீபத்தில் திரைப்படங்களில் அரசியல் பேசி ஓடாத சினிமாவை ஓட வைப்பதற்கு இணையானது தான் இது

கிருத்துவர்கள் இந்த அளவிற்குத் தெளிவாக இருக்கிறார்கள். “திருச்சியில் நடந்தது போலவே கோவையிலும் கடைசி நிமிடத்தில் கருத்தரங்கை நடத்தாமல் கைவிடுவார்கள்” என்ற அளவிற்கு சிந்தித்து வைத்து செயல்பட்டுள்ளார்கள்! ஆனால், இந்த்துவவாதிகளின் நிலை, திட்டம், குறிக்கோள்? கிருத்துவர்களுக்கு உதவுவது தான்! அப்படியென்றால், இவர்களுக்கு இடையே ஏடாவது கூட்டு இருக்கிறதா?

போன்றவையும். எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது அந்தி கிறிஸ்து வந்து விட்டார் என்பதைத்தான் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து வெளிப்படுத்தின சுவிஷேங்களில் காணப்படும் அடையாளங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து இயேசுவின் 2வது வருகை இருக்கும். இதனால் கிறிஸ்தவர்களே பரலோக ராஜியம் சமீபமாக இருக்கிறது. இந்த உலகை விட்டு செல்ல மூட்டை முடுச்சுகளை கட்டிக் கொள்ளுங்கள்[2].

Pandithurai, Johnson, Baskara, Vijayakanth, Thomas, Ramesh

இந்துத்துவ கிருத்துவஎதிர்ப்பு விற்பன்னர்களின் கூட்டம்: டிசம்பர் 2017ல் “இந்து-எதிர்ப்புத் தன்மை, போக்கு, மனப்பாங்கு” பற்றிய கலந்துரையாடலில், ம. வெங்கடேசன்[3] [பிஜேபி உறுப்பினர்], என். அனந்த பத்மநாபன்[4] [பத்திரிக்கையாளர்], ஜடாயு[5] [பொறியாளர்], ஏ.வி. கோபாலகிருஷ்ணன்[6] [பிளாக்கர்] முதலியோர் பங்கு கொள்ள, கனகராஜ் ஈஸ்வரன்[7] நடுவராக இருந்தார்[8]. இதில் குறிப்பாக ஜடாயு மற்றும் ஏ.வி. கோபாலகிருஷ்ணன் கிருத்துவ விசயங்களில் மிக்கத் தேர்ந்த பண்டிதர்கள் என்று அறிமுகப் படுத்தப் பட்டனர்[9]. அவர்களும் அந்த சுவதேசி இந்தியவியல் மாநாட்டில் வெளுத்துக் கட்டினர். யாரும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப் படவில்லை. இவ்விதமாக இந்துகளின் “சுவதேசி இந்தியவியல் மாநாடுகள்” நடக்கின்றன. இப்பண்டிதர்களில் ஒருவர் தாராளமாக சென்று கலந்து கொண்டிருக்கலாமே. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ஏழு பேர்களுக்கு பேஸ்புக்கிலகிவர்கள் நண்பர்களாக வேறூ இருக்கிறார்கள்! சரி, இப்பொழுதாவது, யாராவது சென்று கலந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. விசாரித்தால் மாநாடு நடந்ததா இல்லையா என்று கூட சரியாகத் தெரியவில்லை. கிருத்துவர்கள் தரப்பில், பொய்யான ஆராய்ச்சி என்றாலும், பி.எச்டிக்கள் மூலம் அரைத்த வாவை அரைத்து, பெருக்குகிறார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளோ, அடுத்தவர்களை அமுக்கி, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமையில்லாத இவர்களால் இந்துக்களுக்கு லாபமும் இல்லை, பயனும் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில், அவர்கள் தொடர்ந்து காரியங்களை செய்து வருகிறார்கள்.

Christian seminar -Pandithurai with Moses Michael

மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” 1989ல் தோன்றியது: கிருத்துவர்களை எதிர்க்க வேண்டுமானால், ஒற்றுமையுடன் இந்துக்கள் செயல்பட வேண்டும். நான் 1989ல் “மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” சார்பில், “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” என்ற சிறு-புத்தகத்தை வெளியிட்டேன். அது ஆராய்ச்சிப் புத்தகம் என்பதால், நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது[10]. “மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” என்பது ஒத்தக் கருத்துக் கொண்ட எட்டு நண்பர்கள் மூலம் உருவாக்கப் பட்டது. பல நண்பர்கள் மறைமுகமாக ஆதரித்தார்கள். ஒரு.ரூ ரூ, 5/- ரூ. 10 ரூ 50/- என்றெல்லாம் கொடுத்தார்கள், அதை வைத்து அப்புத்தகம் வெளியிடப்பட்டது. அதனால் தான் அப்புத்தகம் வெளியானது. அச்சிட்டவரே அதனை பாராட்டினார், ஏனெனில், அவர் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு புத்தகங்களை அசிட்டுக் கொடுத்து வந்தார்[11]. ஆனால், “செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – தொடர்கிறது” என்று சுமார் 180 பக்கங்கள் கொண்ட புத்தகம் தயாரித்து, சிடியில் கொடுத்த போது, வெளியிடுகிறோம் என்று வாக்களித்தவர் 2008ல் வெளியிடவில்லை. மாறாக அவற்றில் உள்ள ஆதாரங்களை வைத்து, மற்றவர்கள் புத்தகங்களை வெளியிட்டார்கள். இப்படித்தான், இந்துக்களின், இந்துத்துவவாதிகளின் போக்கும், நடவடிக்கைகளும் இருக்கின்றன. முன்பு பணமில்லை, மனமிருந்தது. இப்பொழுது பணம்-அதிகாரம் இருக்கிறது, ஆனா, மனமில்லை. தங்களது நிலையை, பதவியை, இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார்களே தவிர, கொள்கைக்குப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இங்குதான் கிருத்துவர்கள் மாறுபடுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

03-03-2019

Ezra, Sundar Singh etc

[1] நியூஸ்.டி.எம், தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !, பாரதி பித்தன் | Last Modified : 09 Feb, 2019 09:33 am.

[2] https://www.newstm.in/news/tamilnadu/55607-jesus-is-coming-soon.html

[3] M.Venkatesan is well known Tamil writer and publisher. He is an original thinker and dharmic activist. He has written books on Ambedkar, EV Ramasamy Naicker, the Dravidian movement and Justice Party. His books such as ஈவே ராமசாமியின் மறுபக்கம் (The Other side of EV Ramasamy), ‘புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? (Why did Ambedkar Convert to Buddhism? ), ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி(Did Justice Party Work for Schedule Caste Welfare? )’, ‘ஹிந்துத்துவ அம்பேத்கர் (Hindutva Ambedkar) ‘ have been making a significant impact on the intellectual climate of Tamil Nadu.

[4]  N.A. Padmanabhan is a Tamil journalist and writer having a very rich experience in both Tamil print and visual media. He has authored books on Indian Philosophy and Hindu spirituality. His books such as ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே (Rejection of God is also Spirituality), தத்துவ தரிசனங்கள் (Indian Philosophical Perspectives: Dharsanas) are widely popular in the state. https://www.facebook.com/padman.anandapadmanaban?fref=ts

[5] Jataayu (R N Sankara Narayanan) is an IT professional. He is a well-known Tamil Writer and Hindutvaite thinker. He has been one of the editors of website Tamil Hindu and Valam magazine. He has a deep interest in Kambaramayanam and knows Sanskrit well. He has written a number of articles in Tamil Hindu and Thinnai websites. His most recent publications include பண்பாட்டைப் பேசுதல் (Talking on Culture), சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம் (இணையாசிரியர் அரவிந்த நீலகண்டன்) – A New Perspective on Jati (with Aravindan Neelakandan), காலம்தோறும் நரசிங்கம் (பண்பாட்டு கட்டுரைகளின் தொகுதி) Narasimham Over the Ages – Compendium of Articles on Culture).

[6] A.V.Gopalakrishnan is an engineer by profession and a passionate historical researcher on Bible and theology. For over fifteen years he has been writing blogs on the historicity of Bible under his pen name Devapriya ji.

[7] Professor, Department of Social Work, Mizoram University, https://www.facebook.com/mekanagaraj

[8] வேதபிரகாஷ், சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்புஅறிக்கைஇந்துஎதிர்ப்பு மனப்பாங்குகலந்துரையாடல்கள் (5), டிசம்பர் 28, 2017.

[9] https://tamilheritage.wordpress.com/2017/12/28/swadeshi-indology-conference-discussion-on-hinduphobia-meyhodology/

[10] ஈஸ்வர் சரண் ஆங்கிலத்தில் விரிவான புத்தகத்தை வெளியியட்டார். இப்பொழுது 2019லும் அதன் விரிவான பதிப்பு வெளியாகி உள்ளது.

[11]  சமூக அறிவியல் புத்தகத்தை அச்சிட அவருக்கும் ஆர்டர் கிடைத்திருந்தது. ஆனால், அந்த விவகாரம் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆகவே, பரிகாரமாக, இதனை அச்சிட்டுத்தருகிறேன் என்ற போது, அவருக்குள்ளும் இருந்த உணர்வு தெரிந்தது.

“வெளிச்சத்தை நோக்கி” என்ற கிருத்துவ தூஷண கருத்தரங்கமும், இந்துத்துவ வாதிகளின் புலம்பலும்! [1]

மார்ச் 3, 2019

வெளிச்சத்தை நோக்கிஎன்ற கிருத்துவ தூஷண கருத்தரங்கமும், இந்துத்துவ வாதிகளின் புலம்பலும்!  [1]

Christian seminar 18-20 2019 Coimbatore

வெளிச்சத்தை நோக்கிஎன்ற கருத்தரங்கம் அறிவிப்பு: வழக்கம் போல, இந்துத்துவ வாதிகள் “வெளிச்சத்தை நோக்கி” என்ற கருத்தரங்கம் அறிவிப்புப் பற்றி புலம்பித் தள்ளினர்[1], “தேவ ஊழியர்கள் ஐக்கியம் (கோயம்புத்தூர்) நடத்தும் வெளிச்சத்தை நோக்கி மூன்று நாள் கருத்தரங்கு என்ற பெயரில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்! பிப்ரவரி மாதம் 18 19 20 திங்கள் முதல் புதன்கிழமை வரை கோவை சின்ன வேடம்பட்டி ஆதி அப்போஸ்தல சபை என்ற இடத்தில் இந்த கருத்தரங்கு நடத்த இருப்பதாக நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சம்பந்தன் இயேசுவின் அன்பை கூறும் சைவம், அவதாரமாக இயேசுவின் மீட்பை கூறும் வைணவம், திரித்துவக் கடவுள் இயேசுவை விளக்கும் திருக்குறள், சற்குருவான இயேசுவின் கட்டளை கூறும் சித்தர்கள் என.., இந்திய இலக்கியங்களில் ஒளிந்திருக்கும் சத்தியத்தின் மறை பொருளை அறிந்து கொண்டு இந்தியா இன்னும் அதே நிலையில் நற்செய்தியை அறிவிக்க வாஞ்சையும் வாரமும் கொண்ட கடவுளின் ஊழியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு என்று தகவல் சொல்லி முதலில் பதிவு செய்யும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் அனுமதி கட்டணம் ரூபாய் 300 என்றும் அழைக்கிறார்கள்”.

மேனாட்டவர்கள் சரித்திர ரீதியில் அலசி, ஏசு, கிருஸ்து, ஏசுகிறிஸ்து என்பன எல்லாம் கட்டுக் கதை என்று நிரூபித்து விட்டார்கள். கிருத்துவர்கள் 1980களிலிருந்து இவ்வாறு செய்து வரும் நிலையில், சரித்திரரீதியில். ஏசுக் கட்டுக் கதையினை எடுத்துக் காட்டி, மறுக்காமல், அவர்கள் வலையில் விழுந்து, அவர்கள் இப்படி செய்கிறார்கள் –  அப்படி செய்கிறார்கள் என்று விளம்பரம் கொடுத்து வருவது வேடிக்கையாக, திகைப்பாக இருக்கிறது. பிரச்சரத்திற்கு, எதிர்-பிரச்சாரம் செய்யாமல், அவர்களுக்கே உதவும் வகையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

Perur Adheenam opposed video

ஹிந்து அழிப்பு, தமிழ் அழிப்பு முயற்சிஎன்ற புலம்பல்[2]: தொடர்ந்த புலம்பல், “மேலும், நம் தேசத்தில் பிற சமயங்கள் மற்றும் அவர்தம் கலாச்சாரங்களின் பின்னணியை அறிந்து தெளிவான சிந்தனையுடன் கருத்துடனும் நற்செய்திப் பணியை சிறப்பாக செய்ய உதவிடும் மகத்தான கருத்தரங்கம் என்று இந்த கருத்தரங்கிற்கு தலைப்பிட்டு அழைத்து இருக்கிறார்கள். இந்தக் கருத்தரங்கு இப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறதுமதங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தக் கூடிய, உள்நோக்கம் கொண்ட சதியாக இந்தக் கருத்தரங்கு திகழ்கிறது என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

ஹிந்து தர்மத்திற்கு மேலும் ஒரு சவால்! மோசடியை முறியடிக்க வாரீர்! என்றும், சைவம், வைணவம், சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், திருக்குறள் என்று அனைத்தையும் கிறிஸ்தவம் என்று மோசடிப் பிரச்சாரம் செய்ய கருத்தரங்கு இந்த மோசடிக் குப்பைகளை வருங்காலத்தில் பாடத் திட்டத்திலும் சேர்ப்பார்கள்!

இப்படி அப்பட்டமாக புலம்புவது தாழ்வு மனப்பான்மையினைக் காட்டுகிறது. சட்டப் படி, தூஷணம் என்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவேளை இப்பொழுது, அரசியல் அதிகாரம் மூலம், இதனை அடக்கலாம். ஆனால், அதிகாரம் போனப் பிறகு, கிருத்துவர்கள் மீண்டும் செய்வார்கள், ஆனால், இந்த இந்துத்துவவாதிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவர்!

நம் நாட்டின் ஆதாரமான சமயத்தையும், சமயச் சின்னங்களையும் , பண்பாட்டையும் கிறிஸ்தவமாக்கி, அடியோடு அழிக்கும் சதியை வடிவமைக்கும் தொடர் முயற்சியின் அங்கமாக ஒரு கருத்தரங்கு பிப்ரவரி மாதம் 18 ,19 , 20 தேதிகளில் கோவையில் நடக்கவுள்ளது! இந்த ஹிந்து அழிப்பு, தமிழ் அழிப்பு முயற்சியை தடுப்பது நம் கடமை ! சமயத்தையும் தமிழையும் காப்போம் என்றெல்லாம் அறைகூவல்கள் சமூக வலைத்தளங்களில் விடுக்கப் பட்டன”.

Christian seminar -Pandithurai

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளின் வீடியோ: இந்நிலையில், கோவை, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கோயமுத்தூர் தேவ ஊழியர் ஐக்கியம் என்று சொல்லக்கூடிய அமைப்பு நடத்தக்கூடிய வெளிச்சத்தை நோக்கி என்று சொல்லப்படும் கருத்தரங்கம் நடைபெறுவது குறித்து ஒரு துண்டறிக்கையை நாம் கண்டோம். அந்த துண்டறிக்கையில் ஆதி அப்போஸ்தல சபை என்று சொல்லப்படும் சபையின் மூலமாக சின்னவேடம்பட்டியில் நடப்பதாக அறிகிறோம்! கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் இயேசுவின் கருத்தைத்தான் எழுதி இருக்கிறார் என்று சொல்லி மிகப்பெரிய அளவில் இந்து மக்களிடத்தில் தமிழ் மக்களிடத்தில் மிகப் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தனர். இப்பொழுது அதோடு சேர்த்து இன்னமும் மூன்று பேரை திருஞானசம்பந்தரும் வைணவ ஆழ்வாரும் ஏசுவின் கருத்தைதான் சொல்லியிருக்கின்றார்கள்; சித்தர்களும் ஏசுவின் கருத்தைதான் சொல்லி இருக்கின்றார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி இந்தக் கருத்தரங்கம் நடைபெறுவதாக அறிகின்றோம்.

இது சைவ மக்களின் வைணவ மக்களின் திருக்குறளை கடைபிடிக்கக் கூடிய தமிழ் பெரியோர்களின் தமிழ்ச் சான்றோர்களின் சித்தர் நெறியை கடைபிடிக்கக் கூடிய பெருமக்களின் மனதைப் புண்படுத்துவதாக அமைகின்றது. இது, மிகவும் கண்டனத்திற்குரியது. அரசும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக இதில் தலையிட்டு இந்தக் கருத்தரங்கைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

இவ்வாறு வீடியோவில் சொன்னதை புகாராக கொடுக்கப் பட்டதா அல்லது வேறு யாராவது புகார் கொடுத்தார்களா என்று தெரியவில்லை. இங்கு கூட “சைவ மக்களின் வைணவ மக்களின் திருக்குறளை கடைபிடிக்கக் கூடிய தமிழ் பெரியோர்களின் தமிழ்ச் சான்றோர்களின் சித்தர் நெறியை கடைபிடிக்கக் கூடிய பெருமக்களின் மனதைப் புண்படுத்துவதாக அமைகின்றது” என்கிறார். இந்துக்கள் என்று சொல்லவில்லை!

நம் சமயங்கள் மிகப் பழமையானது! கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த சமயமாக இருக்கக்கூடிய நம் சமூகத்தில் இருந்துதான் அனைத்து சமயங்களும் தோன்றின என்பது வரலாறு. எனவே இவர்களின் இந்த முயற்சியை நாம் கண்டிக்கின்றோம்! இதேபோல் நம் அகில பாரத துறவிகள் சங்கத்தின் சார்பாகவும் எங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்! நம்முடைய சிவனடியார்கள் வைணவ அடியார்கள் சார்பாகவும் கண்டிக்கின்றோம்! மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்!” – என்று கூறியுள்ளார்.

Christian site criticizing the seminar Feb 18-20 -2019

மாறாக கிருத்துவரின் வாதம் இவ்வாறிருந்தது[3]: திருக்குறள் வாழ்வியல் கண்ணாடி. அதில் எந்த கடவுளின் பெயரையும் திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும் போது  குறள்களுக்கு எந்த இறைவனையும் குறிப்பிட்டுக் கொள்ளலாம். இது போல தான் சைவ, வைணவ, இலக்கியங்களையும் அவர்கள் வம்புக்கு இழுத்துள்ளனர். சைவ, வைணவ பெரியவர்கள் தெளிவாக சிவன், பெருமாள் என்று தங்களின் வழிபடு தெய்வம் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் போது, இவர்கள் அதை இயேசு என்று பேசப் போவது எந்த விதமான பலனைத்தரும். உண்மையில் இவர்கள் இயேசு குறித்து விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு சுவிஷேசம் சொல்ல வேண்டும் என்றால் பைபிளை, இயேசு செய்த அற்புதங்களை மட்டும் கூறினால் போதும். ஆனால் இவர்கள் நோக்கம் இயேசுவை அறிமுகம் செய்வது அல்ல. இயேசுவை வைத்து கலவரத்தை தூண்டுவது. மக்கள் மத்தியில் குழப்பதை உருவாக்கி அந்திகிறிஸ்துக்களான தங்கள் ஆளுமையை நிலைநாட்டுவது தான் அவர்களின் நோக்கம்[4].

© வேதபிரகாஷ்

03-03-2019

Christian site criticizing the seminar Feb 18-20 -2019.2

[1] தினசரி, இந்து ஆன்மிக நூல்களை கேவலப்படுத்தும் கோவை கிறிஸ்துவ கருத்தரங்கு: பேரூர் ஆதீனம் கண்டனம்!, Tuesday, 12 Feb, 8.14 pm

[2] https://m.dailyhunt.in/news/india/tamil/dhinasari-epaper-dinasari/inthu+aanmiga+noolkalai+kevalappaduthum+kovai+kiristhuva+karutharangu+beroor+aatheenam+kandanam-newsid-108609606

[3] நியூஸ்.டி.எம், தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !, பாரதி பித்தன் | Last Modified : 09 Feb, 2019 09:33 am

[4] https://www.newstm.in/news/tamilnadu/55607-jesus-is-coming-soon.html