Archive for ஏப்ரல், 2018

வள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச் சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – ஜொனாதன் ராபின்ஸன் என்ற குற்றவாளிக்கு மூன்று வருட சிறை, தண்டம் (6)

ஏப்ரல் 14, 2018

வள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச் சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – ஜொனாதன் ராபின்ஸன் என்ற குற்றவாளிக்கு மூன்று வருட சிறை, தண்டம் (6)

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கிறிஸ்தவ போதகர் ஜோனதான் ராபின்சன். படம்-அ.ஷேக்முகைதீன்.
இங்கிலாந்து பாதிரியாரரின் காமலீலைகள்[1]: இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜோனதன் ராபின்சன் (வயது75). பாதிரியார். இவர், கடந்த 1995–ம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள சின்னம்மாள்புரத்துக்கு வந்தார். அங்கு ‘கிரேயல் டிரஸ்ட்’ என்ற அமைப்பு மூலம் ஏழை, எளிய அனாதை மாணவ, மாணவிகளுக்கான விடுதி ஒன்றை உருவாக்கினார்[2]. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 22 பள்ளிக்கூட சிறுவர், சிறுமிகள் அந்த விடுதியில் தங்கினர். இவர்கள், அந்த விடுதியில் இருந்து அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று வந்தனர். பாதிரிக்கு செக்ஸில் ஈடுபாடி இருந்ததால், சிறுவர்-சிறுமிகளை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார். முதலில் விவரம் அறியாது அவை இருந்தன. ஆனால், போக-போக அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்து பெற்றோர் விசாரித்த போது, திடுக்கிட்டும் தகவல்கள் தெரிய வந்தன. இந்த நிலையில், அந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக இங்கிலாந்து நாட்டில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து விசாரிக்க அந்த குழு, பெங்களூருவில் உள்ள ஜஸ்டிஸ் அண்டு கேர் என்ற நிறுவனத்தின் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது[3].

ஜோனாதன், சாமுவேல்

சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை: இதைத்தொடர்ந்து பெங்களூரு நிறுவனத்தினர், சின்னம்மாள்புரத்திலுள்ள அந்த காப்பகத்தை கண்காணித்து வந்தனர். அப்போது, காப்பக்கத்தில் தங்கி இருந்த பள்ளிக்கூட சிறுவர், சிறுமிகளுக்கு பாதிரியார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டில் ஓரினச்சேர்க்கையில் பாதிக்கப்பட்டதாக அந்த காப்பகத்தில் தங்கி இருந்த 16 வயது பள்ளிக்கூட சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெங்களூரு நிறுவனத்தின் பிரதிநிதி சிகுரான் வள்ளியூர் போலீசாரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் மனு கொடுத்தார்[4]. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் கடந்த 2011–ம் ஆண்டு செப்டம்பர் 7–ந் தேதி அந்த காப்பகத்தை மூட நெல்லை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது[5]. இவரது பின்னணி முதலியவற்றை 2015லேயே என்னுடைய பிளாக்குகளில் விளக்கியுள்ளேன்.

Jonathan Robinson comvicted for 3 years - 14-04-2018
தப்பி ஓட்டம்: இதற்கிடையில், தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது வள்ளியூர் போலீசார் நடவடிக்கை எடுக்க தடை கோரி ஜோனதன் ராபின்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அவர் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க சர்வதேச போலீசார் மூலம் வள்ளியூர் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி மீண்டும் ஜோனதன் ராபின்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி,‘ வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என அவருக்கு உத்தரவிட்டார்[6]. இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் கோர்ட்டில் நடந்து வந்தது[7].

Jonathan Robinson comvicted for 3 years and penalty- 14-04-2018.
மூன்று ஆண்டு சிறை: வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் 13-04-2018 அன்று தீர்ப்பு வழங்கினார். அவர் வழங்கிய தீர்ப்பில், ‘குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோனதன் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்[8]. இந்த வழக்கில் அரசு வக்கீல் வனிதா ஆஜராகி வாதிட்டார். ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக வெளிநாட்டை சேர்ந்தவருக்கு சிறை தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்[9]. அபராத தொகையை உடனடியாக செலுத்தியதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்[10]. அவர் வள்ளியூர் வட்டாரத்தில் தங்கியிருக்கும்படியும், வள்ளியூர் போலீசாருக்கு தெரிவிக்காமல் எங்கும் செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்துகொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது[11].

grail-trust-chinnammalpuram-627-101-woman-there

2011லிருந்து 2018 வரை இழுத்தடிக்கப் பட்டுள்ள வழக்கு: 2011லிருந்து இவ்வழக்கு இழுத்தடிக்கப் பட்டுள்ளது, கீழ் கண்ட நிகழ்வுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

  1. குறிப்பாக உள்ள குழந்தைகளை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியதாக வள்ளியூர் காவல் நிலையத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
  2. ஆகஸ்ட் 2011ல் இவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று விட்டார்.
  3. 05-09-2011 அன்றுகிரைல் டிரஸ்ட் காப்பகத்திற்கு சீல்வைக்கப்பட்டது.
  4. ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் சர்வதேச தேடுதல் அறிவிக்கையை இவருக்கு எதிராக காவல்துறை அக்டோபர் 2014ல் பிடி வாரண்ட் ஆணை பிறப்பிக்கப் பட்டது.
  5. நவம்பர், 2015 சிறுவர் வாழ்வு நலம் அமைப்பின் இயக்குனர் கிரிஸ்டைன் பெட்டோ என்பவர் சந்தித்து, அவரை இந்தியாவுக்குச் சென்று, அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினார், 6-11-2015 அன்று சரணடைந்தார்.
  6. வள்ளியூர் மாஜிஸ்ட்ரேட் 27-11-2015 அன்று ராபின்ஸனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் கொடுக்கப்பட்டன.

13-04-2018 அன்று வழகப்பட்ட தீர்ப்பில் மூன்று வருட சிறைத்தண்டனை, தண்டம் முதலியவை விதிக்கப் பட்டன. இப்பொழுதும், சட்டரீதியில், எல்லா சலுகைகளும் அளிக்கப் பட்டுள்ளன. அபராத தொகையை உடனடியாக செலுத்தியதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்[12]. அவர் வள்ளியூர் வட்டாரத்தில் தங்கியிருக்கும்படியும், வள்ளியூர் போலீசாருக்கு தெரிவிக்காமல் எங்கும் செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்துகொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது[13].

© வேதபிரகாஷ்

14-04-2018

Grail Trust child-house-3

[1]இதைப் பற்றி விவரமாக, கீழ்கண்ட பிளாக்குகளில் காணலாம்:   https://christianityindia.wordpress.com/2015/11/29/jonathana-robinson-and-neil-fairlamb-are-directors-of-the-grail-trust/

https://christianityindia.wordpress.com/2015/11/29/2107-british-pedophiles-prowl-in-india-attacking-children-and-boys/

https://christianityindia.wordpress.com/2015/11/29/2107-british-pedophiles-prowl-in-india-attacking-children-and-boys/

https://christianityindia.wordpress.com/2015/11/29/why-the-british-pedophiles-target-chennai-tamilnadu/

https://christianityindia.wordpress.com/2015/11/29/agitated-by-the-atrocities-of-pedophiles-judge-recommends-castration-as-punishment/

[2] தி.இந்து, சிறுவனுக்கு பாலியல் தொல்லை; இங்கிலாந்து போதகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, Published : 14 Apr 2018 08:23 IST; Updated : 14 Apr 2018 08:23 IST

[3] http://tamil.thehindu.com/tamilnadu/article23534633.ece

[4] தூத்துக்குடி.ஆன்.லைன், பாலியல் வழக்கு இங்கிலாந்து பாதிரியாருக்கு மூன்று ஆண்டுசிறை : வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பு, வெள்ளி 13, ஏப்ரல் 2018 6:37:50 PM (IST)

[5] http://www.tutyonline.net/view/32_156901/20180413183750.html

[6] தினச்சுவடி, திருநெல்வேலியில் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…! இங்கிலாந்து போதகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!, By Dinesh – April 14, 2018

[7]https://dinasuvadu.com/2018/04/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D/40674/

[8] தினத்தந்தி, பள்ளி மாணவனுடன் ஓரினச்சேர்க்கை: இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வள்ளியூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு, ஏப்ரல் 14, 2018, 02:30 AM.

[9] https://www.dailythanthi.com/News/Districts/2018/04/14000447/Homosexuality-with-schoolboyEngland-Priest-3-years.vpf

[10] தினமலர், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு : பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை,Added : ஏப்ரல். 13, 2018 23:48.

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1999690

[12] தினமலர், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு : பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை,Added : ஏப்ரல். 13, 2018 23:48.

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=1999690

Advertisements