21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

மே 18, 2023

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

கத்தோலிக்கப் பையன் ஹிந்து பெண்ணை திருமணம் செய்ததை கத்தோலிக்கச் சர்ச் ஏற்ருக் கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே  கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது.  இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த  நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].  

கத்தோலிக்க போராளிகள் பெண்னியப் போராளிகள் வாய் திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி உடலை புதைக்க மறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு  முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர். 

தொடரும் மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது.  மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

போலீசார் சமரசத்திற்குப் பிறகு உடல் புதைக்கப் பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?

கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன,  பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2023


[1] இ.டிவி.பாரத், மதம் மாறி திருமணம் செய்த மகன்தந்தையின் சடலத்தை புதைக்க காலில் விழக் கூறிய ஊர்மக்கள், May 17, 2023, 07:09 PM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/christians-refused-to-bury-father-dead-body-since-his-son-married-inter-religious-at-theni/tamil-nadu20230517193953468468449

[3] மீடியான்.நியூஸ், ஹிந்து பெண்ணுடன் காதல் திருமணம்இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்து அராஜகம்!, Karthikeyan, Mediyaan News, 18 மே 2023 11:07 AM.

[4] https://mediyaan.com/theni-christian-youth-love-marriage-hindu-girl-objection-burial-dead-body/

[5] ஜீ.நியூஸ், தேனி: மகன் மதம் மாறியதால் தந்தையின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கல்லறை பொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-christians-refused-to-bury-dead-body-since-his-son-changed-his-religion-444804

[7] தினத்தந்தி, காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்..” இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்புசர்ச் விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம், By தந்தி டிவி, 18 மே 2023 8:07 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/if-you-fall-on-our-feet-we-will-allow-to-bury-objection-to-burial-of-the-dead-186876

[9] தினமாலை, தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!, By MALA RAJ Thu, 18 May 2023

[10] https://www.dinamaalai.com/news/the-son-who-converted-and-married-monsters-who-fell-on-his/cid10956003.htm

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

மே 15, 2023

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

கென்யாவில் பட்டினி வழிபாடு நடத்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட கிறிஸ்துவ மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெக்கன்சி [Paul Mackenzie Nthenge] என்பவர் வசித்து வந்தார்[1]. அவருக்கு சொந்தமான, 800ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் ஏப்ரல்  26ம் தேதி தகவல் கிடைத்தது[2]. அப்பொழுதே போலீசார் விசாரித்து, சோதனை செய்த பொழுது, 45 உடல்கள் கிடைத்தன[3], 58 புதைக்குழிகள் கண்டெடுக்கப் பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. ‘பட்டினி கிடந்தால் இயேசுவை அடையலாம்’ என, பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது[5]. பைபிளில் வரும் இறுதி நாட்கள், இறப்பு, உயிர்த்தெழல் முதலியவற்றை விளக்கி, கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சங்கம் முதலியன சாத்தானின் ஏஜென்டுகள் என்று போதித்து வந்தார்[6].

பட்டினி கிடந்து இறந்தால் ஏசுவை சந்திக்கலாம், சொர்கத்திற்குப் போகலாம்: இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் [the Good News International Church ] பாதிரியாரான பால் தெங்கி மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்[7].  அவரது சீடர்களாகி உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி [Doomsday cult] அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது[8].  பட்டினி கிடந்தால் இறக்கும் நிலை ஏற்படும். ஆனால், இறக்காமல் கர்த்தர் நம்மை காப்பாற்றுவார். உயிர் கொடுப்பார், மீட்பார், சுவர்க்கத்திற்கு கூட்டிச் செல்வார் என்றெக்ல்லாம் போதித்து, அவர்களை மூளை சலவை செய்து வைத்தார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்[9]. அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர்[10]. இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்[11]. மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, பண்ணை முழுதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. இதில், 14-05-2023 அன்று மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது.

பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது: பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உடல் மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது. பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைளை குறி வைக்கும் இந்த குரூரக் கூட்டம்: கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி [Interior Cabinet Secretary Kithure Kindiki] சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறினார். தொடர்ச்சியான திகிலூட்டும் இதுபோன்ற வெளிவந்து கொண்டிருக்கும் விசயங்களை பற்றி பாதிரியார் டைட்டஸ் கடானா என்பவர் கூறும்போது, போலி மத சாமியார்களின் முதல் இலக்காக குழந்தைகளே இருந்து உள்ளனர். அவர்களை எளிதில் வசீகரித்து உள்ளனர். சூரியனின் முன் விரதம் இருக்கும்படி குழந்தைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி கூறப்பட்டு உள்ளது.

சீடர்களை, பக்தகளை துன்புறுத்திய விதம்: இந்த தற்கொலை திட்டத்தின் அடுத்த பகுதியாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடுத்தடுத்து இருந்தனர் என பாதிரியார் கடானா கூறியுள்ளார். இந்த கிறிஸ்தவ சமய மரபு சார்ந்த விசயங்களில் 2015-ம் ஆண்டில் கடானா இணைந்து உள்ளார். ஆனால், அது தவறான போக்கை கொண்டுள்ளது என உணர்ந்த அவர் எச்சரிக்கையுடன் விலகி இருக்கிறார். அதனால் தற்போது அவர், போலீசார் விசாரணைக்கு உதவி வருகிறார். அவர் கூறும்போது, குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்தனர். அதன்பின்னர், அவர்களை போர்வையில் சுற்றி புதைத்தனர். இதில், மூச்சு விட்டு கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார். மெக்கன்சியின் சீடர்களை, பாலித்தீன் சீட்டுகளால் தயாரான தற்காலிக வீடுகளில் தங்க வைத்த நிலையில், மெக்கன்சியோ நன்றாக மேற்கூரை போடப்பட்ட, நாற்காலி, தொலைக்காட்சி மற்றும் டைல்ஸ் பதித்த கழிவறை என ஆடம்பரத்துடன் வசித்து வந்து உள்ளார் என தி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் தொடர்பு உள்ளதா?: சில உடல்களின் கைகள் மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால், தண்டனையாக அவ்வாறு செய்திருக்கலாம். ஒரு சில உடலின் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இதனால், உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் செயலும் உள்ளது என கூறப்படுகிறது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், காடு முழுவதும் உடல்களை தேடி அதிகாரிகள் அலைந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கன்சி, அவரது மனைவி மற்றும் மெக்கன்சியின் பல்வேறு கூட்டாளிகளையும் போலீசார் 19-04-2023 அன்று செய்து கைது உள்ளனர். விசாரணை, தேடும் படலங்களும் தொடர்கின்றன.

© வேதபிரகாஷ்

15-05-2023


[1] தினமலர், கென்யாவில் பட்டினி வழிபாட்டில் பலி எண்ணிக்கை 201 ஆக உயர்வு, மாற்றம் செய்த நாள்: மே 15, 2023 05:33

[2] https://m.dinamalar.com/detail.php?id=3320972

[3] ஏபிபிலைவ், கென்யாவில் ஏசு கிறுஸ்துவை காண உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த 47 பேர்!,By: பாண்டிம்மா தேவி | Updated at : 24 Apr 2023 12:25 PM (IST);  Published at : 24 Apr 2023 12:25 PM (IST)

[4] https://tamil.abplive.com/news/world/to-meet-jesus-47-cult-members-in-kenya-allegedly-starve-to-death-5-facts-113425

[5] தினத்தந்தி, கடவுளை காணலாம்கென்யாவில் கொடூரம்; தோண்ட, தோண்ட குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு, தினத்தந்தி மே 15, 6:32 pm.

[6] Mackenzie’s apocalyptic narratives focused on the end of times, and were against the modern or western ways of life such as seeking medical services, education or music. His conspiracy theories emphasised the Catholic Church, the US and the United Nations as “agents of Satan.

https://theconversation.com/kenya-cult-deaths-a-new-era-in-the-battle-against-religious-extremism-205051

[7] https://www.dailythanthi.com/News/World/god-can-be-found-atrocity-in-kenya-201-bodies-including-children-were-dug-up-and-recovered-964949

[8] தந்தி டிவி, கடவுளை நேரில் பார்க்க ஆசைப்பட்டு – 201 பேர் பலி, By தினத்தந்தி, 15 மே 2023 2:02 PM.

[9] https://www.thanthitv.com/latest-news/desperate-to-see-god-in-person-201-people-died-186330

[10] குமுதம், கென்யா: இயேசுவை காண பட்டினி கிடந்த 90 பேர் மரணம் – 213 பேரை தேடும் பணி தீவிரம், S. Joseph Raj, மே 15, 2023.

https://www.kumudam.com/news/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-213-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

[11]

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுவது, மதம்-உயர்வு, ஜாதி-கீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! ஆனால் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது! (2)

மே 7, 2023

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுவது, மதம்உயர்வு, ஜாதிகீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! ஆனால் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது! (2)

எம்பிக்கள் பிஜேபிதிமுக என்றால், வாதவிவாதங்களும் இந்துஇந்துவிரோதமாக இருக்கலாமா?: பிறகு இடவொதிக்கீடு ஏன் என்று திமுக கேட்க வேண்டும். அம்பேத்கரை எதிர்க்க வேண்டும். ஆனால், மனுதாரர் பாஜக பின்புலம் கொண்டவர்[1]. இவ்விவகாரம் தொடர்பாக அவர் தாக்கல் செய்த 4 மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன[2] என்று குறிப்பிடுவதும் விசித்திரமானதே. ஏனெனில் இவரே திமுக எம்பி தான், இப்பொழுது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்குதல் செய்தாலும், “திராவிட மாடல்” என்றெல்லாம் குறிப்பிட்டு அரசியல் ரீதியிலான பதில் தான் பதிவு செய்துள்ளார். சூசை தீர்ப்பையும் மறக்கிறார் / மறைக்கிறார்.. பழைய கோர்ட்-கட்டுகளை பிரித்துப் பார்ப்பாரா அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பாரா? இல்லை, “திராவிட ஸ்டாக்கில்” இதெல்லாம் சகஜமப்பா என்பாரா? வக்கீல் என்ற முறையில் பாரபட்சம் இல்லாமல் பிரச்சினையை அணுக வேண்டும் என்பது கூட இல்லாமல் பதில்-மனு சமர்ப்பித்து இருப்பது தெரிகிறது.

கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை: வில்சன் தொடர்கிறார், “மதம் சார்ந்த விஷயங்களில் மாநிலங்களுக்கு அதிகாரமில்லை[3].  தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை. நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது[4]. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்டாய மதமாற்ற சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றார். இதுபோன்ற செயல்கள் மதம் சார்ந்தவர்களை புண்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறப்படுவது பொய்யான தகவல்; [பெரியாரிஸத்தில் இதெல்லாம் எப்படி வரும் என்று தெரியவில்லை. ஒருவேளை, இந்து மதம் இல்லை என்றால், அதெல்லாம் வரும் போலிருக்கிறது] கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை[5]. [ஆனால், மதம் மாறியவர்களுக்கு இடவொதிக்கீடு தேவை] அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தங்கள் மதத்தை பரப்புவதில் எந்த தவறும் இல்லை[6] [அதை, பகுத்தறிவு எப்படி ஒப்புக் கொள்கிறது, பெரியாரிஸம் ஏற்றுக் கொள்கிறது என்று தெரியவில்லை]. மதத்தை பரப்ப சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்[7] [இப்படியெல்லாம் கூட மனு தாக்கல் செய்யலாம் போலிருக்கிறது]. மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. எனவே மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்ட இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்[8]., என்றெல்லாம் வக்காலத்து வாங்குவதை கவனிக்க வேண்டும்.

இனி தீர்ப்பு எப்படி என்று பார்க்க வேண்டும்: லாவண்யாவின் தற்கொலை குறிப்பில், விடுதி காப்பாளர் வழங்கிய கூடுதல் வேலைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. என்ன சட்டம் இயற்ற வேண்டும் என்பதை சட்டமன்றத்துக்கு விட்டுவிட வேண்டும் என்றும், என்ன சட்டம் வேண்டும், எது வேண்டாம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும் எனவும், தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதெல்லாம் தெரியும், ஆனால், இது மட்டும் தெரியாது என்பதெல்லாமும் வேடிக்கை தான். தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என்றும், மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

அவர்கள் கடவுள் ஏசு எப்படி ஜாதியை ஏற்றுக் கொள்கிறார்?: ஜாதிகளை வைத்துக் கொண்டு கடவுளர்களை ஏமாற்றும் கிருத்துவம், இஸ்லாத்தையும் சேர்த்துக் கொள்கிறது! ஆமாம், தலித் என்று பேசும் பொழுது, முஸ்லிம்களும் சேர்ந்து கொள்கிறார்கள். சச்சார் கமிட்டி போர்வையில், முஸ்லிம்களும் கேட்கத்தான் செய்கிறார்கள். கருணாநிதி கொடுத்த 3.5% உள்-ஒதிக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். ஓபிசியும் கிடைக்கிறது. ஆக எஸ்சி தான் இறுதி இலக்கு போலும். இப்பொழுது, “ஆதிதிராவிடர்” எனும் பொழுது, அமைதியாக இருக்கிறார்கள் போலும். கிருத்துவர்களுக்கு கொஞ்சம் கூட கிருத்து சொன்னது பற்றி கவலை இல்லை போலும். பொய் சொல்வதில் சளைத்தவர்களும் அல்லர். பணதையும், அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு, கூட செக்யூலர் அரசியல்வாதிகளை கைக்கூலிகளாக வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைக்கப் பெரும்பாடு பட்டுக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. சுப்ரீம் கோர்ட் சொன்னது, ஜாதி என்றாலே, இந்து மதத்திற்குரியதாகிறது, ஆகவே கிருத்துவர்கள் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடுக் கேட்கமுடியாது என்று சூசை -எதிர்- இந்திய அரசாங்கம் உச்சநீதி மன்ற தீர்ப்பில் எடுத்துக் காட்டியது.

கடவுளா ஜாதியா என்றால், ஜாதி என்று எப்படி கிறிஸ்துவர் செல்ல முடியும்?: ஆனால் கிருத்துவர்களோ, தம் மதத்தில் ஜாதிகள் உள்ளன இன்று பிரகடனப் படுத்துகிறார்கள். போதாக் குறைக்கு முஸ்லீம்களையும் கூட்டுக்கு அழைக்கிறர்கள். இப்பொழுது, ஸ்டாலினே வக்காலத்து வாங்கும் நிலைக்கு வந்தாகி விட்டது. அதற்காக தலித் கிருத்துவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களுக்கு தலித் அந்தஸ்து வேண்டும் என்று கேட்கிறார்கள்! அதாவது, கிருத்துவர்களாக மாறிய பிறகும், முஸ்லீம்களாகிய மாறிய பிறகும், அவர்களது கடவுளர்களான ஏசு / ஜேஹோவா மற்றும் அல்லா முதலியோரால் அவர்களை மாற்ற முடிவவில்லை போலும். அதாவது இவர்கள் அவர்களை ஏமாற்றுகிறார்களா அல்லது அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லையா என்பது தெரிந்தாக வேண்டும். ஏனெனில், இப்படி எல்லா கடவுளர்களையும் எல்லா நேரங்களிலிலும் ஏமாற்றி வருவது கேவலமானது! ஆனால், கிறிஸ்துவர்கள் இதைப் பற்றி கவலைப் படுகிறார்களா அல்லது பயப் படுகிறார்களா?

© வேதபிரகாஷ்

02-05-2023


[1] தினகரன், தஞ்சை மாணவி மரண விவகாரம்: தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு, May 1, 2023, 6:36 pm

[2] https://www.dinakaran.com/tanjore-student-death-issue-no-forced-conversion-supreme-court-tngovt/

[3] நியூஸ்.7.தமிழ், தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் இல்லைஉச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம், by Jeni, May 1, 2023.

[4] https://news7tamil.live/no-compulsory-religious-conversion-in-tamil-nadu-tamil-nadu-govt-explanation-in-supreme-court.html

[5] நக்கீரன், “தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் என்பது பொய்யான தகவல்” – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு, செய்திப்பிரிவு, Published on 01/05/2023 (11:42) | Edited on 01/05/2023 (11:52).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/india/forcible-conversion-tamil-nadu-false-information-tamil-nadu-governments-response

[7] தினமலர், தமிழகத்தில் கட்டாய மத மாற்றம் இல்லை“: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், Updated : மே 01, 2023 12:38 | Added : மே 01, 2023 12:35 …

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3309143

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப்படுவது, மதம்-உயர்வு, ஜாதி-கீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! (1)

மே 7, 2023

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுவது, மதம்உயர்வு, ஜாதிகீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! (1)

தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல்: எப்படி கிறிஸ்தவர்களுக்கு ஒரு நிலையான கொள்கை இல்லையோ, அது போல திராவிடத்துவ வாதிகளுக்கும் இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை. அல்லது, திராவிடத்துவ வாதிகளுக்கு எப்படி ஒரு நிலையான கொள்கை இல்லையோ, அது போல கிறிஸ்தவர்களுக்கு வாதிகளுக்கும் இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை, எனலாம். கேட்டால் “திராவிட மாடல்” என்று சொல்லிக் கொள்வார்கள். கிறிஸ்தவர்களாக மாறினால், அப்படியே உயர்ந்து விடுகின்றனர், உச்சத்தைத் தொட்டு, சொர்க்கத்திற்கே சென்று விடுகின்றனர் என்பது தான் பிரச்சாரம், இறையியல் கவர்ச்சி, எல்லாம். பிறகு, இல்லை, சாதி இருக்கிறது, ஜாதி இருக்கிறது, தீட்டு இருக்கிறது, தீண்டாமை இருக்கிறது, என்றெல்லாம் புலம்புவது ஏன் என்று தெரியவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது, தமாசாக உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் அம்பேத்கரையும் மிஞ்சும் ஸ்டாலின்:  தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது[1]. அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது[2]. ஏப்ரல் 18, 2023 அன்று மத மாறிய எஸ்.சி கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து அந்த எஸ்.சி அந்தஸ்து, இடவொதிக்கீடு முதலிய சலுகைகள் அளிக்கப் பட வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது[3]. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் பட்டியிலன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி அவர்களுக்கு அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப்பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்[4]. அதாவது, அபேத்கரையும் மிஞ்சும் சட்டஞானம் பெற்று, இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் கூறியது கவனிக்கத் தக்கது.

ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை கொடுமை தொடர்கிறது. என்று வாதிக்கும் திராவிட மாடல், திராவிடத்துவம் தமாஷாக இருக்கிறது. சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்றார். அப்பொழுது, சட்டநிலை என்பதை எல்லாம் கவனிக்காமல், அரசியல் ரீதியில் அவ்வாறு செய்தது விமர்சனத்தை எதிர்கொண்டது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா உச்சநீதி மன்ற தீர்ப்பே, தமிழகத்திலிருந்து தான் உருவாகியது. அப்பொழுது, சென்னை உயர்நீதி மன்றம் மதம் மாறிய எஸ்சி கிறிஸ்தவருக்கு சலுகை கிடையாது என்று தீர்ப்பளித்தபொழுது, அதனை ஆதரித்து மனு தாக்கல் செய்தது. ஆனால், சூசை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார், ஆனால், தோல்வியடைந்தார். அதாவது, மதம் மாறிய எஸ்சி கிறிஸ்தவருக்கு சலுகை கிடையாது என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து எந்த சீராய்வு மனுவை யாரும் தாக்கல் செய்யவில்லை. அப்பொழுது, உச்சநீதி மன்றம் எடுத்துக் காட்டியது, “கிறிஸ்துவர்கள் தங்கள் மதத்தில் ஜாதி மற்றும் தீண்டாமை உண்டு,” என்று மெய்ப்பித்தால், ஒருவேளை அவ்வாறு கேட்கலாம் என்று கோடிட்டு காட்டியது.

கிறிஸ்துவாஜாதியாதீண்டாமையா?: கிறிஸ்துவர்கள் உஷாராகி, இவ்விசயத்தில் கப்சிப் என்றாகினர். இருப்பினும், அவ்வப்பொழுது, “தலித் கிறிஸ்துவர்” என்று கலாட்டா செய்து வருவர். ஆனால், இப்பொழுது 2023ல் முரண்பட்ட நிலைகளை தமிழக அரசு எடுப்பது, மாநிலத்திற்கு மட்டுமல்ல, சட்டநிலைக்கும் இழுக்காகும். சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் இவ்வாறான, நாடகங்களை, திமுக அரங்கேற்றி வருகிறது. பொதாகுறைக்கு, “ஆதிதிராவிடர்” என்ற பிரயோகத்தையும் கவனிக்க வேண்டும். கருணாநிதி 35% உள்-ஒதுக்கீடு என்றபோது, கிறிஸ்துவர் தேவையில்லை என்று ஒதுங்கினர், ஏனெனில், சில பகுதிகளில், அதை விட அதிகமாக சலுகை பெற்று வருகின்றனர். எனவே, இப்பொழுதும், பிரச்சினை இறையியல் ரீதியில் இருக்கிறது. இருப்பினும், அதனை மறைத்து, கிறிஸ்துவர் நாடகம் ஆடுகின்றனர். ஸ்டாலின் நன்றாக மாட்டி விட்டாரோ என்று கலங்கின்றனர். எனவே இரண்டு கூட்டங்களும் எவ்வாறு நாடகம் ஆடுகின்றன என்பதனை கவனிக்க வேண்டும்.

லாவண்யா தற்கொலையில் வெளிப்பட்ட மதம் மாற்றம்: பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் மனுவில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது லாவண்யாவின் தற்கொலைக்கான அடிப்படை காரணத்தை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும், பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அளித்தும், அச்சுறுத்தியும் நடைபெறும் மதமாற்றங்களை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் எனவும் மதமாற்ற தடை சட்டத்தை மத்திய மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் 01-05-2023 செய்யப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவி லாவண்யாவின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் லாவண்யாவின் தற்கொலையை தமக்கு சாதகமாக திசை திருப்ப மனுதாரர் முயல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்பி வில்சன் சமர்ப்பித்த பதில் மனு: இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தஞ்சை லாவண்யா பேசியதாக வெளியான வீடியோவை சிபிஐ விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் இல்லை என்றும், மனுதாரரின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது[6]. மேலும்,  ‘மதம் என்பது சுதந்திரமானது[7]. எந்த மதத்தை பின்பற்றுவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது[8] என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். “தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் இல்லை,” என்றால், மதமாற்றம் இல்லை என்று சொல்லவில்லை. அதேபோல, “கட்டாய மதமாற்றம்” சில ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்றும் பொருள் கொள்ளலாம். இந்து மதத்திற்கு எதிராக மட்டும் வேலை செய்யும் பெரியாரிஸம், திராவிட மாடல், இப்பொழுது, கிறிஸ்தவ ஆதரவாக வாதிட்டாலும், எதிர்ப்பது இந்துமத விரோதமாகத்தான் இருக்கிறது.

© வேதபிரகாஷ்

02-05-2023


[1] தமிழ்.நியூஸ்.18, தமிழ்நாட்டில் மதமாற்றம் நடக்கிறதா? தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்!.., NEWS18 TAMIL, First published: May 01, 2023, 13:31 IST, LAST UPDATED : MAY 01, 2023, 13:31 IST

[2] https://tamil.news18.com/national/anti-conversion-laws-and-lavanya-suicide-case-supreme-court-960615.html

[3] தினத்தந்தி, “கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் தனித்தீர்மானம், தினத்தந்தி ஏப்ரல் 19, 12:56 pm (Updated: ஏப்ரல் 19, 1:21 pm)

[4] https://www.dailythanthi.com/News/State/10-km-walktrainee-constable-fainted-955548?infinitescroll=1

[5] தினத்தந்தி/தந்திடிவி, பணம், பரிசு கொடுத்து அளித்து மதமாற்றம்..  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு, By தந்தி டிவி 1 மே 2023 10:07 PM

[6].https://www.thanthitv.com/latest-news/conversion-of-religion-by-giving-money-gifts-tamil-nadu-governments-reply-in-supreme-court-183670

[7] கலைஞர்.டிவி, தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றமே கிடையாது, பாஜக பொய்யை பரப்புகிறதுஉச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!,  , Praveen, Updated on : 1 May 2023, 02:07 PM

[8] https://www.kalaignarseithigal.com/politics/2023/05/01/there-is-no-forced-conversion-in-tamil-nadu-bjp-is-spreading-lies-tn-government-petition-in-supreme-court

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு – “உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி – செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?

பிப்ரவரி 9, 2023

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடுஉத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு

இனிகோ இருதயராஜ்…

பீட்டர்ஸ் அல்போன்ஸ்……

பால் தினகரன்…..

மற்றவர்…….

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு: த்தகைய செய்திகள் எல்லாம் முன்னால் ஊடகங்களில் வருவதில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகய கிருத்துவ கூட்டங்கள், மாநாடுகள் அடிக்கடி நடப்ப்து விசித்திரமாக இருக்கிறது. பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு, அவனியாபுரம்-மதுரை வளையங்குளத்தில் நடைபெற்றது[1]. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்[2]. இன்னொரு ஊடகம் 6000 என்கிறது. வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[3]. மற்ற பெந்தகோஸ்தே அமைப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்[4]. இனிகோ இருதயராஜின் அழைப்பின் பேரில் முதலில் கலந்து கொள்வதாக இருந்தது. ஈரோடு தேர்தல் முக்கியத்துவத்தால், ஆன்லைனில் பேசியதாக சொல்லப் படுகிறது. அப்போது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் கூறினார்.

என்னால் நேரில் வர இயலவில்லை காணொளி மூலமாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்: அப்போது பேசிய முதல்வர் கூறுகையில், “என்னால் நேரில் வர இயலவில்லை காணொளி மூலமாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் மதுரைக்கே வந்தாலும் சென்னையில் இருந்தபடி பேசினாலும் என்றும் உங்களோடு இருப்பவன் உங்களில் ஒருவன் நான் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே தூரம் அதிகமாக இருந்தாலும் அன்பு நம்மை இணைக்கிறது. நம்பிக்கை நம்மை இணைக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றை தான் சொல்ல முடியும்[5]. மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம், யாரையும் வேற்றுமையாக பார்க்காதே என்பது தான் சகோதரத்துவம், அனைவரிடம் சேர்ந்து வாழ்வதுதான் ஒற்றுமை, ஏழைகள் மீது கருணை காட்டு என்பது தான் இரக்கம், ஏழைக்கு குரல் கொடு என்பதுதான் நீதி மற்றவர்களுக்காக வாதாடு என்பதன் தியாகம், உன்னிடம் இருப்பதை இல்லாதவர்க்கு கொடு என்பதுதான் பகிர்தல் இதைத்தான் கிறிஸ்தவம் சொல்கிறது இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அது தான் சமத்துவ நாடாக அமையும்[6].

உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி: இப்படியெல்லாம் பேசுவது செக்யூலரிஸத் தனமாகுமா, கம்யூனலிஸம் ஆகுமா, சமதர்மம், சமத்துவம், திராவிடத்துவம் ஆகுமா என்று கூட ஆராய வேண்டியுள்ளது. முதலமைச்சராக பேசுவதற்கும், ஸ்டாலின் என்ற திமுக தலைவராக பேசுவது, அல்லது கிருத்துவர் உதயநிதியின் தந்தை என்றெல்லாம் கூட பேசலாம். ஆனால், நிச்சயமாக, வரம்புகள் மீறப்படுகின்றன. சித்தாந்தங்கள் தீவிரமாகின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் கல்வி, சுகாதாரம், தொழில், வளர்ச்சி, மேலாண்மை, மகளிர்,  மேம்பாடு,  குழந்தைகள்  நலன், சிறுபான்மையினர் நலன் என அனைத்திலும் கவனம் செலுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆகும் பணிகளை செய்து வருவதாகவும் கூறினார்.  குறிப்பாக கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை திமுக அரசு செய்து கொடுத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர் , தேவாயங்களை சீரமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலா ஆட்சியின் அடிப்படை நோக்கம்: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தர ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ,  அதைவிட அதிக நம்பிக்கையை இந்த 20 மாத காலத்தில் பெற்றிருக்கிறோம் என்றும்,  இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருப்பது உழைப்பு;  அந்த உழைப்புக்கு பின்னால் இருப்பது உண்மை;  மக்களுக்காக உண்மையாக உழைக்கும் எங்களுக்கு இந்த பாராட்டுக்கள்,  அதிகம் உழைக்க தூண்டுகோலாக அமையும் என்று கூறினார்[7]. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் நமது அரசு தனது நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருகிறது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலா ஆட்சியின் அடிப்படை நோக்கம் இது எனது அரசு அல்ல நமது அரசு உத்தரவிடுங்கள் நிறைவேற்றித் தருகிறோம் என்றார்[8]. ஆனால், இதில் யாரோ வரமாட்டார்கள் என்பது போலிருக்கிறது.

விசுவாசத்துடன் பேசிய அமைச்சர்: தொடர்ந்து பேசிய அமைச்சர் மூர்த்தி கூறுகையில், உங்களுடைய எண்ணங்களையும் உணர்கிறேன் புரிந்து முதல்வர் சொல்லியுள்ளார் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகளை நம் முதல்வர் எதெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதை எல்லாம் நிறைவேற்றுவார், கிறிஸ்தவ சமூகத்தின் பாதுகாவலனாக முதல்வர் என்றைக்கும் இருப்பார். மதவாதிகளினால் ஆபத்து வரும் என்று முதல்வர் சொன்னார். எக்காலத்திலும் முதல்வர் இருக்கும் வரை யாரும் உங்களை நெருங்க முடியாது. அவர் உங்களின் பாதுகாவலனாக இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த சிறுபான்மையினர் சமுதாயத்தின் பாதுகாவலனாக இருப்பார் என்றார். இவ்வாறு தொடர்ந்து பேசி வருவதும் கவனிக்கத் தக்கது. சில நாட்களுக்கு முன்னர், உதயநிதி தான் கிருத்துவர் தான் என்று கிருத்துவ கூட்டத்தில் பேசியிருப்பதை கவனிக்கலாம். அதே கூட்டத்தில், இந்து அறநிலைய அமைச்சர், அல்லேலூயா என்று மூன்று முறை கத்தி கோஷம் போட்டதும் நினைவிருக்கலாம். ஆக, இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள் ஆகி விட்டார்களா, பிரச்சாரகர்களாகி வேலையில் இறங்கி விட்டர்களா என்று தெரியவில்லை.

கிருத்துவதிராவிடத்துவ கூட்டணி செக்யூலரிஸம் ஆகுமா?: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 6000 மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பெந்தகோஸ்தே நான்காவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டனர். பீட்டர்ஸ் அல்போன்ஸ், டேவிட் பிரசாதம், ஏசு அழைக்கிறார் பால் தினகரன், இனிகோ இருதயராஜ் என்று பல பிரிவினரும் கலந்து கொண்டனர். ஆக கத்தோலிக்கர் அல்லாத கூட்டத்தினர் கூட இவ்வாறு ஒன்று சேர்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் ஊழல், பாலியல் குற்றங்கள், வழக்குகள், கைதுகள், சிறை தண்டனை என்றெல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், யாரும் வெட்கப் படுவதாக இல்லை. அரசியல்வாதிகளும் கைகோர்ந்து கொண்டு உல்லா வந்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சாராக இருக்கும் அரசியல்வாதி, “உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்”  என்று பேசுகிறார். பிறகு, சட்டம்-ஒழுங்கு பற்றி நினைப்பவர் என்ன செய்ய முடியும்? போலீஸாரே யோசிக்க வேண்டிய நிலை தான் ஏற்படும். பதிப்பு நாளிதழ்களில் விவரங்கள் வந்திருந்தாலும், இணைதளங்களில் வராமல் இருப்பதும் விசித்திரமாக இருக்கிறது. ஒரு சில வரிகளுடன் நிறுத்திக் கொண்டிருப்பதும், நோக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

09-02-2023.


[1] தினத்தந்தி, உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி, By தந்தி டிவி, 9 பிப்ரவரி 2023 7:49 AM

[2] https://www.thanthitv.com/latest-news/you-give-orders-and-we-deliver-the-assurance-given-by-chief-minister-stalin-166594

[3] தினமலர், தேசிய மாநாடு, Added : பிப் 09, 2023 00:57 …

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3237641

[5] தினகரன், சமத்துவம், சகோதரத்துவம், இரக்கம், நீதி போன்ற குணங்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும்: முதல்வர் மு..ஸ்டாலின் பேச்சு, 2023-02-08@ 21:08:19

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=837381

[7] டாப்.தமிழ்.நியூஸ், எல்லாருக்கும் எல்லான் என்பதே திராவிட மாடலின் அடிப்படை நோக்கம்..’ – முதலமைச்சர் ஸ்டாலின்.., By RAMYA K Thu, 9 Feb 20238:23:27 AM

[8] https://www.toptamilnews.com/thamizhagam/elan-for-all-is-the-basic-objective-of-the-dravidian-model/cid9936977.htm

தர்மராஜ் ரசாலம் – பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ.. தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (2)

ஜனவரி 17, 2023

தர்மராஜ் ரசாலம்பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ..தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (2)

ஓய்வு வயதை 67-ல் இருந்து 70 ஆக உயர்த்தி, சட்ட திருத்தம் கொண்டு வந்ஹது: இவருக்கு வருகிற ஜூன் மாதம் 67 வயது பூர்த்தியாகுகிறது[1]. தலைமை பேராயர் பதவி காலமும் 67 வயது வரைதான்[2]. அதன்பின்னர் அவர் ஓய்வு பெறவேண்டும். அதை தொடர்ந்து அந்த பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும்[3]. ஆனால், இவரை தொடர்ந்து இப்பதவியில் நீட்டிக்க வைப்பதற்காக, ஓய்வு வயதை 67-ல் இருந்து 70 ஆக உயர்த்தி, சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளனர்[4]. அதாவது இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆலியாக காலம் தள்ளலாம், அனுபவிக்கலாம் என்ற திட்டம் தான். ஆனால், போட்டியாளர்கள் விடவில்லை. எனவே, தலைமை பேராயர் வயது வரம்பை 70-ஆக உயர்த்தி நடைபெறும் தேர்தலுக்கும், துணை தலைமை பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டும். திருச்சபையை நிர்வகிக்கவும், அதில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர். இவரும் விடவில்லை, தனக்குரிய அதிகாரம், பலம், பணம் முதலியவற்றை உபயோகப் படுத்தி, பதில்-மனு தாக்கல் செஉதார், காரணங்களையும் அதிவு செய்தார்.

தேர்தலுக்கு தடை இல்லை – தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தலைமை பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கு 13-01-2023 அன்று (ஜன.13) நடைபெறும் தேர்தலுக்கு தடை விதிக்க விரும்பவில்லை. அதேநேரம், கீழ் கண்ட நிபந்தனைகளுடன் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். தேர்தல் நடவடிக்கை அனைத்தையும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து, அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும். சிஎஸ்ஐ விதிகளின்படி ஓட்டு சீட்டு முறைப்படி தேர்தலை நடத்தலாம். ஆனால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது. தற்போதுள்ள நிர்வாகிகளே மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பதவியில் தொடரலாம் என உத்தரவிட்டு விசாரணையை ஜன.30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர் பிஷப் மாணிக்கம் துரை வழக்கு: கடுமையான PMLA [Prevention of Money Laundering Act] பிரச்சனைகளில் சிக்கிய முதல் CSI பிஷப் கோயம்புத்தூர் பிஷப் மாணிக்கம் துரை ஆவார், 2013 இல் ED உடனான தொடங்கிய பிரச்சனைகள் இன்றுவரை தொடர்கின்றன[5]. மாநில காவல்துறை அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு ED வந்த ரசாலம் வழக்கைப் போலவே, மறைமாவட்ட நிதி மற்றும் அவரது சகோதரர் எம்.மூர்த்தி மீது தமிழ்நாடு குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, பொது அறக்கட்டளையை 7.93 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளதால், துரை ED இன் கவனத்திற்கு வந்தார்[6]. சுவாரஸ்யமாக, CSI வரலாற்றில் 2012ல் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிஷப் இவரே ஆவார். அதற்குக் காரணம், அப்போதைய நடுவர் எஸ். வசந்தகுமார், ஓய்வுபெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஃப். மூலம் உத்தரவிடப்பட்ட விசாரணையில் எழுந்த மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள்தான் காரணம்.

துரையும் அவரது மனைவியும் குற்றவாளிகள்: சல்தானா, துரை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு உண்மையான காரணம், அவர் ஆயர் நீதிமன்றத்தை அவமரியாதை செய்ததால், அதில் உள்ள பிஷப்புகள் தங்களைத் தாங்களே ஊழல் செய்து கொண்டதாகவும், அவர் இடைநீக்கத்திற்கு வழிவகுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீர்ப்பளிக்க தார்மீக அதிகாரம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். 2013 ஆம் ஆண்டில், துரை மற்றும் அவரது மனைவி சூடாமணி, ஒரு இணை குற்றவாளி, தங்களுக்கு எதிரான ED இன் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தனித்தனியான ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். ஐந்து வருட நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2018 இன் பிற்பகுதியில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, துரையும் அவரது மனைவியும் ED இன் உத்தரவுகளில் தலையிடுவதற்கு “எந்தவொரு சட்டப்பூர்வ ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தையும் நிறுவத் தவறிவிட்டனர்” மற்றும் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, ED மூலம் அவர்கள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கடைசி விசாரணையில், முன்னாள் பிஷப் ஆஜரானார், ஆனால் அவரது சகோதரர் மூர்த்தி (A2) ஆஜராகவில்லை, மேலும் அவர் செப்டம்பர் 23, 2022 அன்று அடுத்த விசாரணையில் ஆஜராக உத்தரவிட ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. .

பிஷப் கோவாடா தேவாசீர்வாதம் சிக்கியது: தற்போது ED இன் விசாரணைப்பிடியில் உள்ள மற்றொரு முன்னாள் பிஷப் முன்னாள் மாடரேட்டர் மற்றும் கிருஷ்ணா கோதாவரி மறைமாவட்ட பிஷப் கோவாடா தேவாசீர்வாதம் ஆவார். 2018 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச சிபி-சிஐடி, மறைமாவட்டத்தின் முன்னாள் செயலாளரும், மிகவும் கொள்கைப் பிடிப்பும் கொண்டவருமான போடு யோகனின் தனிப்பட்ட புகாரின் பேரில் அவரைக் கைது செய்தது. சட்டவிரோத நில விற்பனை மற்றும் மறைமாவட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் EDக்கு முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலாக அவர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை நாடினார் (இந்த பிராந்தியத்திற்கான ED அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது) மேலும் ED நடவடிக்கைக்கு இடைக்காலத் தடையைப் பெற்றார். கடந்த மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ராதா ராணி, “7-12-2021 தேதியிட்ட இடைக்கால உத்தரவுகளின்படி இந்த நீதிமன்றம் வழங்கிய விசாரணையின் தடையை நீக்குவது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது மற்றும் சட்டத்தின்படி கண்டிப்பாக விசாரணையைத் தொடர அமலாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது.” தெய்வாசீர்வாதத்திற்க்கு எதிரான சிபிசிஐடி வழக்கின் குற்றப்பத்திரிகை விஜயவாடா நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது அவரின் சட்ட சிக்கல்களை அதிகரிக்கிறது.

அதே பாணியில் இப்பொழுது தர்மராஜ் ரசாலம்:  ஊழல்வாதிகளான CSI பிஷப்புகளுக்கும் அவர்களின் மறைமாவட்ட கூட்டாளிகளுக்கும் ED இன் நீண்ட கரம் அவர்களைப் பிடிக்கும் என்பதை நினைவூட்டலாக கொள்ள வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்று பல தசாப்தங்களுக்குப் பிறகும் கூட கடுமையான சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடலாம், இதனால் அவர்கள் நிம்மதியான உறக்கத்தை இழக்க நேரிடும் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் மோசமான ஆதாயங்களைத்தான் அவர்களுக்கு விருந்தளிக்கின்றனர். இங்கும், தர்மராஜ் ரசாலம் அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதும் தெரிகிறது. சசிதரூருடன், மிக நெருக்கமான நட்பு அல்லது இணக்கம் இருப்பது தெரிகிறது. அயல்நாட்டு தொடர்புகளும் அவரை காக்கத் தயாக இருக்கின்றன. அந்நிலையில் அவர் இந்தியாவில் இருந்தாலும், வெளிநாட்டிற்கு சென்று விட்டாலும், இந்தியாவிற்கு எந்த பிரச்சினை வரும் என்று தெரியவில்லை. ஆனால், கல்வியில் முந்நிலை வகிக்கிறோம் என்ற கேரளாவில், இத்தகைய ஊழல்கள், அதிலும், மருத்துவக் கல்லூரிகளில் நடப்பது திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

16-01-2023


[1] தினகரன், தென்னிந்திய திருச்சபை தேர்தலை நடத்தலாம் முடிவுகளை வெளியிட கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, 01:08 am Jan 14, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[2] https://m.dinakaran.com/article/news-detail/830746

[3] தினமலர், சி.எஸ்.., நிர்வாகி தேர்தல் முடிவு வெளியிட ஐகோர்ட் தடை, Added : ஜன 14, 2023  17:50

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3218016

[5] Anglican, Why Dharmaraj Rasalam and other CSI bishops need to fear the Enforcement Directorate, By Binu Thomas -August 25, 2022

[6] https://anglican.ink/2022/08/25/why-dharmaraj-rasalam-and-other-csi-bishops-need-to-fear-the-enforcement-directorate/

தர்மராஜ் ரசாலம் – பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ.. தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (1)

ஜனவரி 17, 2023

தர்மராஜ் ரசாலம்பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ..தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (1)

சி.எஸ்.ஐ.யின் தொடரும் ஊழல்கள்: தென்னிந்திய திருச்சபை (Church of South India, CSI) என்றாலே, சண்டை, சச்சரவு, அடிதடி, ஊழல், பணம் கையாடல், செக்ஸ், பாலியல், என்று பற்பல விவகாரங்கள் அடிக்கடி ஊடகங்களில் வெளிவந்து கொண்டே இருக்கும். அதற்கும் / எதற்கும் அவர்களும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு பேராயர், பிஷப், பாஸ்டர் என்ற நிலைகளில் உள்ளவர்கள், யாதாவது ஒரு வழியில், பணம் வருகிறது என்பதை அறிந்து, அதனை தொடர்ந்து பெற்றுவர, அனுபவிக்க, வழிமுறைகளை உண்டாக்கி, சந்தோஷமாக காலம் தள்ளி வருகின்றனர். மாட்டிக் கொள்ளும் வரை ஜல்ஸா தான். பிறகும், எப்படியாவது வழி கண்டு பிடித்து, பழைய ரூட்டில் செல்ல திட்டம் போடுகிறார்கள். இது கிட்டத் தட்ட, தமிழக இந்து அறநிலைய அதிகாரிகளின் திட்டம் போலவே இருக்கிறது. இதில் யாரும் வெட்கப் படுவதில்லை, இறைத் தொண்டு, கடவுள் சேவை என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.  கடவுள் சொத்து, இறைவன் பணம், என்றெல்லாமும் யோசிப்பதில்லை. கிடைக்கும் வரை, கொள்ளையடித்துச் சென்று விடலாம் என்று தான், வேலை செய்து வருகின்றனர். அரசியல் வாதிகளின் தொடர்புகள் இருப்பதால் தப்பிக்கவும் செய்கின்றனர்.

கேரளாவில் பதிவாகியுள்ளது அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது” சென்னை உயர் நீதிமன்றத்தில், தென்னிந்திய திருச்சபையின் ஆயர் மன்றத்தின் (சினாட் கவுன்சிலின்) உறுப்பினர்களான கேரளாவைச் சேர்ந்த சுனில்தாஸ், ஜெயராஜ் உட்பட பலர் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திருச்சபை என்பது பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டது[1]. இப்படி எல்லா வழக்குகளிலும், தாக்கல் செய்யப் படும் ஆவணங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அதற்கேற்ற படி மோசடிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த திருச்சபையின் தலைமை பேராயராக கேரளாவைச் சேர்ந்த தர்மராஜ் ரசாலம் [Dharmaraj Rasalam [2]] பதவி வகித்து வருகிறார்[3]. தென்னிந்திய திருச்சபைக்கு பல லட்ச கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையில் உள்ளன[4]. தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நூறு சதவீதம் அரசு உதவி பெறும் சுமார் 2 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வாகம் செய்வது இந்த திருச்சபைத்தான்[5]. இவ்வாறு அரசு உதவி பெறும் நிலையில், அரசு தொடர்புகளும் இணைந்து விடுவதால், கோடிக் கணக்கான அசையா சொத்துகள் மற்றும் அவற்றின் மூலம் வரும் வருவாயை அனுபவிக்க திட்டம் தீட்டி செயல்ப்ட்டு வருகின்றனர். தலைமை பேராயர் தர்மராஜ் ரசாலத்தின் மீது முறைகேடு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளது[6]. அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது[7]. இவைப் பற்றியெல்லாம், கேரள பத்திரிக்கைகளில் தாராளமாகவே செய்திகள், விவரங்களுடன் வெளி வந்துள்ளன.

மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஊழல்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள காரக்கோணம் பகுதியில் சி.எஸ்.ஐ சபைக்குட்பட்ட டாக்டர் சோமர்வேல் நினைவு சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி உள்ளது[8]. இந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்றுவிட்டு, சேர்க்கையில் இடம் கொடுக்கவில்லை என சர்ச்சை எழுந்தது[9]. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் வெல்லறடை, மியூசியம் ஆகிய காவல்நிலையங்களில் புகார் கொடுத்தனர்[10]. இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது[11]. இவர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிஷப் தர்மராஜ் ரசாலம் பெயர் இல்லை[12]. தங்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக்கொடுத்த பிஷப்பின் பெயரே குற்றப்பத்திரிகையில் இல்லாததைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்[13]. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல் பிஷப் மற்றும் சபை நிர்வாகிகள் சிலர் சபைக்குத் தெரியாமல் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் திருச்சபையில் இருந்தே புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை அமலாக்கத்துறை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது.

குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது; முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டே போலி சாதிச் சான்றிதழ் வினியோகித்து பிஷப் தர்மராஜ் ரசாலம் முறைகேடாக 11 மாணவர்களுக்கு, மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்தச் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டது. இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் ஒழுங்குமுறைக் குழுவை கல்லூரியில் நடக்கும் மாணவர் சேர்க்கைக் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ராஜேந்திர பாபு என்பவரது தலைமையில் விசாரித்த அந்தக்குழு, பிஷப் தர்மராஜ் ரசாலம் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது. இந்தக் கல்லூரியில் அதிகக் கல்விக் கட்டணம் செலுத்தியும், பணம் கட்டியும் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களில் அதிக அளவில் தமிழ் மாணவர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை சோதனையில் இறங்கியது.

அமலாக்கத்துறை சோதனை; திருவனந்தபுரத்தில் பிஷப் இல்லத்தை உள்ளடக்கிய எல்.எம்.எஸ் வளாகம், சபையின் செயலாளராக இருக்கும் ப்ரவீன் என்பவரது இல்லம், காரக்கோணத்தில் இருக்கும் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, கல்லூரி இயக்குநர் பெனட் ஆப்ரகாம் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பெனட் ஆபிரகாம் கடந்த 2014-ம் ஆண்டு, திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் சசி தரூரை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு, மிக மோசமாகத் தோற்றவர் ஆவார். சர்ச்சிற்குள் இவருக்கும் மற்றவர்களுக்கும் சண்டை-சச்சரவு இருந்து வந்துள்ளது[14]. முன்னதாக இதுதொடர்பாக கல்லூரி மாணவர்களின் கட்டணம் தொடர்பாக புகார் கொடுக்கும் கல்விக்கட்டண நிர்ணய குழுவிலும் மாணவர்கள் புகார் கொடுத்திருந்தனர். அப்போது சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியை உள்ளடக்கிய சி.எஸ்.ஐ சபையின் பிஷப் தர்மராஜ் பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்துள்ளார்[15]. “மடியில் கனம் இல்லாதவர், வழியில் ஏன் பயப்பட வேண்டும்”என்பது போல் தவறு செய்யவில்லை என்றால் பிஷப் ஏன் எழுதிக்கொடுக்க வேண்டும் என கிடுக்குப்பிடி போட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், இவ்வழக்கில் நேரில் ஆஜராக பிஷப் தர்மராஜ் ரசாலத்திற்கு சம்மன் அனுப்பும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர்[16]. இதனிடையே மத நிகழ்ச்சி ஒன்றிற்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் பிஷப். அதற்கு முன் சம்மனை அனுப்பி கிடுக்குப்பிடி போடும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை[17]. ஜூலை 2022ல் இங்கிலாந்திற்கு ஓடிவிடலாம் என்று விமானநிலையத்திற்கு சென்றபோது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டு திரும்ப கொண்டு வரப்பட்டார்[18].

© வேதபிரகாஷ்

16-01-2023


[1] தமிழ்.இந்து, தென்னிந்திய திருச்சபை தலைமைப் பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்: முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை, ஆர்.பாலசரவணக்குமார், Published : 13 Jan 2023 07:20 PM, Last Updated : 13 Jan 2023 07:20 PM

[2] Dharmaraj Rasalam is a bishop in the Church of South India: he has been Bishop of South Kerala since 2011 and Moderator of the Church of South India since 2020. Rasalam was born in 1956 at Venganoor and educated at the University of Kerala. He was ordained in 1987. Since 2012, he has been implicated in various civil and criminal cases attributed to financial irregularities and abuse of power.

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/929008-election-for-posts-including-archdiocese-of-church-of-south-india-hc-interim-stay-on-declaring-results.html

[4] தினத்தந்தி, தென்னிந்திய திருச்சபை தேர்தல் முடிவை வெளியிட தடைஐகோர்ட்டு உத்தரவு, ஜனவரி 14, 4:52 am

[5] https://www.dailythanthi.com/news/state/prohibition-on-publication-of-south-indian-church-election-results-court-orders-878636

[6] காமதேனு, தேர்தல் நடத்தலாம், முடிவை வெளியிடக் கூடாது: தென்னிந்திய திருச்சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு, Updated on: 13 Jan, 2023, 8:10 pm

[7] https://kamadenu.hindutamil.in/national/madras-high-court-bans-declaration-of-south-indian-church-election-results

[8] காமதேனு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுதமிழக மாணவர்களிடம் வசூல் வேட்டை: கேரள பிஷப்க்கு அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி, என்.சுவாமிநாதன், Updated on : , 26 Jul, 2022, 12:25 pm

[9] https://kamadenu.hindutamil.in/national/kerala-bishop-accused-of-malpractice-in-medical-student-admissions

[10] தினத்தந்தி, மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார்: பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை, ஜூலை 27, 6:49 am .

[11] https://www.dailythanthi.com/News/India/complaint-about-collecting-donations-for-medical-studies-bishop-dharmaraj-rasalam-banned-from-traveling-abroad-755097

[12] தினமலர், மருத்துவக்கல்லுாரி நன்கொடை விவகாரம் சி.எஸ்.., பிஷப் வெளிநாடு செல்ல தடை, Added : ஜூலை 29, 2022  01:10

[13] https://www.dinamalar.com/news_detail.asp?id=3087430

[14] Kerala High Court – Rev. Bishop Dharmaraja Rasalam vs Rev. Dr. T.B Premjith Kumar, IN THE HIGH COURT OF KERALA AT ERNAKULAM,  PRESENT:  THE HONOURABLE MR. JUSTICE K.ABRAHAM MATHEW, FRIDAY ,THE 30TH DAY OF OCTOBER 2015/8TH KARTHIKA, 1937, OP(C).No. 2179 of 2015 (O),  OS 1065/2013 OF MUNSIFF COURT,THIRUVANANTHAPURAM.

https://indiankanoon.org/doc/167311449/?type=print

[15] Two years ago, the Kerala High Court cancelled the admission of 11 medical students enrolled on the basis of fake community certificates issued by the Bishop. In 2019, Kerala’s state admission fee regulatory committee also found that the college accepted exorbitant fees from some NRI students.

Hindusthan Times, Day after ED raids, Bishop Rasalam reaches airport for UK visit; turned back, India News, Published on Jul 26, 2022 03:21 PM IST.

[16] Later, some students from Tamil Nadu also filed a cheating complaint, alleging that they had to pay a huge amount to the college management for MBBS seats.

https://www.hindustantimes.com/india-news/day-after-ed-raids-bishop-rasalam-reaches-airport-for-uk-visit-turned-back-101658829073912.html

[17] The Hindu, Emigration officials at the Thiruvananthapuram airport prevent CSI bishop from leaving for UK, G ANAND, July 26, 2022 11:37 am | Updated 05:49 pm IST – Thiruvananthapuram

[18] https://www.thehindu.com/news/national/kerala/emigration-officials-at-the-thiruvananthapuram-airport-prevent-csi-bishop-from-leaving-for-uk/article65684345.ece

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்; டிஜிடல் விளம்பரம் மூலம் அறிப்விப்பு, பிறகு ஹாக் செய்யப் பட்டது என்றது!

ஜனவரி 13, 2023

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்; டிஜிடல் விளம்பரம் மூலம் அறிப்விப்பு, பிறகு ஹாக் செய்யப் பட்டது என்றது!

தமிழகத்தில் மதமாற்ற முயற்சிகள்: கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகையால் கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது[1]. நாடு முழுவதும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத மாற்றம் நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களான ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் மதமாற்றம் நடக்கிறது[2]. இதிலும், தமிழகத்தில்தான் மிகப்பெரிய அளவில் மத மாற்றம் நடந்து வருகிறது[3]. இதுவும் தி.மு.க. ஆட்சியின்போதுதான் அதிகளவில் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இது வெட்ட வெளிச்சமானது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் நெற்றியில் விபூதி அணிந்து வரக்கூடாது, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது, கையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் காப்பு, கயிறு அணியக் கூடாது என்றெல்லாம் கிறிஸ்தவ பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூறியது அம்பலமானது. மேலும், பகவத்கீதை கெட்டது, பைபிள்தான் நல்லது என்றும் கூறி மாணவ, மாணவிகளை மதமாற்றம் செய்ய முயன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

அம்பத்தூர் சிக்னல் அருகே உள்ள ஒரு கடையின் மீது டிஜிட்டல் விளம்பரம்: இவ்வாறு மதம் மாற்றுபவர்கள், ஏழை மக்களிடம் பணத்தாசை காட்டியும், படித்தவர்களிடம் மைனாரிட்டி என்பதால் எளிதில் அரசு வேலை கிடைக்கும் என்றும் கூறி மதம் மாற்றி வருகின்றனர். ஆனால், இவை எல்லாம் மறைமுகமாக நடந்து வந்த நிலையில், தற்போது பொதுவெளியிலேயே விளம்பரம் செய்து மதமாற்றம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம் என்பதுதான் வேதனை. சென்னையில்தான் இப்படியொரு அவலம் நடந்திருக்கிறது. அம்பத்தூர் சிக்னல் அருகே உள்ள ஒரு கடையின் மீது டிஜிட்டல் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது[4]. அந்த விளம்பரத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுங்கள், தி.மு.க. அரசால் சலுகைகள் கிடைக்கும். மேலும், 10 லட்சம் ரூபாய் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது[5].

உதயநிதி நான் கிறிஸ்தவன் என்றது, ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது: கடந்த வாரம் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி, தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றும், எனது மனைவி ஒரு கிறிஸ்தவர்தான் என்றும், தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் ஹிந்துக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதனிடையே, மேற்கண்ட விளம்பரப் பலகை குறித்து ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அந்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டிருக்கிறது.

உண்மை அறிவோம்- ஹாக் செய்யப் பட்டது என்பது: குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் சென்னை அம்பத்தூர் போலீசாரை (உதவி ஆணையர் அலுவலகம்) தொடர்பு கொண்டோம்[6]. அவர்கள் பேசுகையில், ‘’அம்பத்தூர், அயப்பாக்கம் பிரதான சாலை, தென்னாட்டு காந்தி அண்ணா நகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல். இவருக்குச் சொந்தமான இடத்தில் அகமது இப்ராஹிம், என்பவர் ‘ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட்’ என்ற பெயரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இப்ராஹிம், கிளினிக் முன்பாக எல்.இ.டி., விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில், ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட் அண்டு ட்ரடிஷனல் ட்ரீட்மென்ட் என்ற வாசகத்தை ஒளிர செய்திருக்கிறார். இதனை யாரோ ஒருவர் வேண்டுமென்றே ஹேக் செய்து, அனைவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள்; தி.மு.க., அரசால் சலுகைகள் கிடைக்கும் மற்றும் 10 லட்சம் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று எழுதியுள்ளார். இதுபற்றி இப்ராஹிம் கிளினிக்கில் பணிபுரியும் கரீம் என்பவர் அளித்த புகாரின் பேரில், மர்ம நபரை தேடி வருகிறோம்,’’ என்றனர். எனவே, இது ஹேக்கிங் முறையில் நிகழ்ந்த தவறு, இப்படி யாரும் விளம்பரம் செய்யவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது[7].

ஹாக், ஹாக்கிங், ஹாக்கிங் செய்தல் (Hack, hacking): மின்னணு துறையில், குறிப்பாக, மென்பொருள், உற்பத்தி, சாப்ஃட்வார் உருவாக்கத்தில் ஹாக், ஹாக்கிங், ஹாக்கிங் செய்தல் என்பது சர்வ சாதாரணமான விசயமாகி விட்டது. ஒரு புரோக்ராம், எப்பொழுது ஒரு நபருக்கு மேல் தெரிய வருகிறதோ, அப்பொழுதே அந்த மின்னணு முறையில் ஊடுருவதல், திருடுதல், மாற்றுரு செய்தல், போலி தயாரித்தல், அவை மூலம் ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளையடிப்பது என்றெல்லாம் சகஜமாகி விட்டது. இதனால், இன்னும் பலர் இவ்விசயங்களுக்கு செல்லாமல் இருக்கின்றனர் கிறிஸ்துவர்களைப் பொறுத்த வரையில், இவையெல்லாம் அவர்களும் சர்வ சாதாரண விசயம் தான், சகஜமானது தான். பணத்தைப் பற்றி அவர்களுக்குப் பிரச்சினை இல்லை, அறுவடை தான் முக்கியம். சமீபத்தில் நடந்த அகில உலக மாநாட்டில் கூட, இதைப் பற்றி அதிகமாகவே விவாதிக்கப் பட்டது. ஹாக் செய்தாலும், அது நடந்துள்ளது உண்மையாகிறது. பிறகு அந்த ஹாக்கர் பைத்தியக்காரத் தனமாகவோ, முட்டாள் தனமாகவோ அத்தகைய ஹாக்கிங்கை, அவ்வாறு சிரமப் பட்டு செய்திருக்க மாட்டான். “ஐ லவ் யூ” என்று கூட போட்டிருப்பான். ஆகவே, இது திட்டமிட்டு செய்யப் பட்ட ஹாக்கிங் எனலாம். சொல்லி வைத்தது போல, இவ்விவகாரம் அப்படியே அமுக்கப் பட்டு விட்டது. இதற்கு மேல் எந்த செய்தியும் இல்லை, விவாதமும் இல்லை. கப்சிப் என்றாகி விட்டது.

© வேதபிரகாஷ்

12-01-2022


[1]  தினமலர், 31-12-2022.

[2] மீடியான்.காம், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 லட்சம்: விளம்பர பலகையால் சர்ச்சை; உதயநிதி ஸ்டாலினுக்கு தொடர்பு?!, Karthikeyan Mediyaan News

[3] https://mediyaan.com/chennai-ambattur-advertisement-christian-conversion/

[4] தினமலர், மத மாற்ற விளம்பரம் அம்பத்துாரில் சலசலப்பு, Added : ஜன 01, 2023  00:16

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3207595

[6] பேக்ட்.செக், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறதா?, January 12, 2023 Fact Crescendo Team.

[7] https://tamil.factcrescendo.com/dmk-govt-not-paying-10-lakh-for-those-who-converting-to-christianity/

ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் கோடிகளில் ஊழல் ! – சிக்கும் இயக்குநர் –  1998லிருந்து என்ன நடக்கிறது, 2022ல் வரை தொடர்கிறதா? (2)

திசெம்பர் 12, 2022

ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் கோடிகளில் ஊழல் ! – சிக்கும் இயக்குநர் –  1998லிருந்து என்ன நடக்கிறது, 2022ல் வரை தொடர்கிறதா? (2)

2005 முதல் 2008 வரை கிருத்துவ மாநாடுகள் நடத்தியது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார். ஜனவரி 2007ல் இரண்டாவது மாநாடு நடத்தப் பட்டது. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம். இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது: எம். இஸ்ரேல்-தலைவர், ஜான் சாமுவேல்-செயலாளர், வீ. ஞானசிகாமணி–பொருளாளர் [அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி] என்று கூட்டம் கூடியது. உறுப்பினர்களுள் ஒருவராக வி.ஜி.சந்தோசம் இருந்தார். இன்னொரு உறுப்பினர் மோசஸ் மைக்கேல் பாரடே [போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு]. இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்கப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது.

The research turns from Murugan to Jesus Christ to “Doubting Thomas” to Bhodhi Dharma to Tirukkural and Tiruvalluvar…………….These titles resemble M. Deivanayagam, who conducts spurious research on ‘doubting Thomas,’ in the lines of Acharya Paul and Arulappa!

1998லிருந்து 2022 வரை ஊழல் தொடர்கிறதா?: ஜான் சாமுவேலுக்கும் ஊழலுக்கும் ஏற்கெனவே தொடர்புகள் வழக்குகள் உண்டு. இந்நிலையில் தான், இப்பொழுது, 2022ல், நக்கீரன்[1], ஜான் சாமுவேல் சிக்கிக் கொள்கிறார், என்று செய்தி வெளியிட்டுள்ளது, “ஊழல் குற்றச்சாட்டு நிரூபனம் ஆனப் பிறகு, செங்கல்பட்டு நீதிமன்றம் ஜான் சாமுவேல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. ஜான் சாமுவேல் தான் குற்றவாளி இல்லை தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்தும் ஆராய்ச்சி செய்ய, புத்தகங்கள் வெளியிட, கட்டிடங்களுக்காகவும், கோடிகளில் நிதியுதவி பெற்றதாக உள்ளது”. 2017க்குப் பிறகு நிதியுதவி நின்று விட்டது, என்கிறது நக்கீரன்! ஆனால், இதைப் பற்றியெல்லாம் யாரும் கண்டுகொண்டதாக இல்லை.

போதி தர்மன் ஆராய்ச்சியும், ஜான் சாமுவேலும்: 2013ல் சீனத்துறவியும், ஷோலின் கோயிலின் நிர்வாக இயக்குனருமான ஷி யான் லின் தலைமையில் ஒரு குழு காஞ்சி நகருக்கு வந்தார். சீனா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் நிதியுதவியின் மூலம் போதி தர்மருக்கு நினைவிடம் அமைக்க முயன்று வரும் சென்னையை சேர்ந்த பண்டைய கல்வி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான ஜான் சாமுவேலுடன் ஷி யான் லின் ஆலோசனை நடத்தினார்[2]. இரண்டு ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இத்திட்டம் முடிவடைந்தால் உலகத்தரம் வாய்ந்த புத்த மத தத்துவ மையமாக இது உருவெடுக்கும் என ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார்[3]. எட்டாம் ஆம் நூற்றாண்டில் சீனாவுக்குப் பயணம் செய்து மஹாயான பௌத்தத்தின் சான் (ஜப்பானிய ஜென்) பள்ளியைத் தொடங்கிய தென்னிந்திய பௌத்த துறவியின் நினைவாக, இந்தியத் தத்துவத்திற்கான போதிதர்ம மையத்தைத் தொடங்குவதற்கு, காஞ்சிபுரத்தில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தை சமீபத்தில் நிறுவனம் கையகப்படுத்தியது. இனி, “நக்கீரன்” சொல்வதைப் பார்ப்போம்:

ஆசியவியல் ஆய்வு நிறுவன பெயர் வைத்துவெளிநாடு வாழ் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடிகளைப் பெற்று ஊழல் செய்த ஜான் சாமுவேல்: ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் பெயரை வைத்து பல கோடி ரூபாய் அரசுப் பணத்தை ஏமாற்றியதோடு வெளிநாடு வாழ் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடிகளைப் பெற்று ஊழல் செய்த இந்நிறுவனம் மீது முதல்வரின் தனிப்பிரிவு விசாரணை அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. 1982ம் ஆண்டு தமிழக அரசு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுக்க, ஜப்பானிய நிதி உதவியோடும் தொடங்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதியரசர் கிருஷ்ண ஐயர், குழந்தைசாமி, பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் கொண்ட கமிட்டி உருவாக்கப் பட்டு அந்த கமிட்டிக்கு ஜான் சாமு வேல் இயக்குநராக செயல்பட்டு வந்துள்ளஆர். ஆய்வுக்காக நிதி உதவிய சூ ஃகிக்கோசக் காவுடன் [ Dr. Shu Hikosaka], இவர் ஊழல் செய்கிறார் என்று கண்டறிந்து அந்த கமிட்டியிடம் புகார் கொடுத்தார். புகாரி மீது எந்த நடவடிக்கையும் இல்லாதலால் தன்னுடையநாடான ஜப்பானுக்கே திரும்பிச் சென்றுள்ளார்.

கலாச்சார பண்பாட்டு மையக் கட்டிடம் கட்டுவதற்காக மத்திய அரசு கொடுத்த 10 லட்சம் பெற்றது: ஜான் சாமுவேல் 2001ம் ஆண்டு கலாச்சார பண்பாட்டு மையக் கட்டிடம் கட்டுவதற்காக மத்திய அரசு கொடுத்த 10 லட்சத்துக்கு போலியான கட்டிடப் படத்தைக் காட்டி ஏமாற்றி தன்னுடைய சொந்த செலவிற்கு எடுத்துக் கொண்டாதாக மாதவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்[4]. சி.பி.சி.ஐ.டி விசாரித்து அங்கு அப்படி ஒரு கட்டிடமே இல்லை என வழக்கு பதிவு செய்தது[5].  இதனைத் தொடர்ந்து இயக்குநராக இருந்த ஜானை நிக்கம் செய்து விட்டு, புதிதாக கொடுமுடி சண்முகத்தை இயக்குநராக நியமித்தது. இதனையறிந்த ஜான் அடியாட்களுடன் உள்ளே நுழைந்து அனைவரையும் மிரட்டி இன்னும் வழக்கு முடியவில்லை நாந்தான் இயக்குநர் என தன்னைத்தானே நியமனம் செய்து கொண்டார். தமிழ் வளர்ச்சித் துறைக்காகவும், கட்டியங்களுக்கும், ஆய்வு புத்தகங்கள் பெற்றதாகவும் கூறி 2001ல் தொடங்கி 2012 வரையிலும் 1 கோடியே 27 லட்சங்கள் பெற்றுள்ளார். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் வெளிநாடுவாழ் தமிழர்கள், வெளிநாட்டு நிறுவன நிதி என எதையும் விட்டு வைக்கவில்லை.

Nakkeeran December 10-13, 2022 issues carried the corruption going on inside the Institute of Asian Studies, Chemmemchery.

Donations are taken in the name of the Institute…..

நீதிமன்றம் ஜான் சாமுவேல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியது: இந்த சூழ்நிலையில் தான், இவரை விடக்கூடாது என வழக்கைத் தீவிரப்படுத்திய ஆசியவியல் நிறுவன கமிட்டியைச் சேர்ந்தவர்கள் வழக்கு நடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதியானதை அடுத்து, ஜான் சாமுவேல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியது. இந்த நிலையில் தான்  குற்றவாளி இல்லை எனவும் தண்டனை ரத்து செய்ய வேண்டும் எனவும் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த ஆசியவியல் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்ற சந்தேகத்தின் பெயரில் பதிவுத் துறையில் மோசஸ் கேட்டிருந்த கேள்விக்கு, இந்த நிறுவனத்தின் பதிவு 2001ல் முடிந்து விட்டது எனவே பதிவு பெறாதது என பதிலளிக்கப் பட்டுள்ளது. எனவே பதிவே பெறாத நிறுவனத்தின் பெயரில் பொய்யான கணக்குகளைக் காட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பல கோடிகள் பெற்று ஊழல் செய்துள்ளார் ஜான். அதே நேரத்தில் பதிவு எண். 40/1982, 12-02-1982 அன்று செய்யப் பட்டது என்றுள்ளது.

போதி தர்மா ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனம்மோசடி: 2017க்குப் பிறகு அரசியமிருந்து வரும் நிதிகள் நின்ற நிலையில், மற்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் மதரீதியிலான ஆராய்ச்சி பெயரிலும் வசூலைத் தொடர்ந்து வருகிறார். போதி தர்மர் பெயரிலான ஆய்வு என்ற பெயரில் ஜப்பான்காரர் ஒருவரிடமிருந்து பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டு, போதி தர்மா ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில்காஞ்சிபுரத்தில் கட்டுவதாகச் சொல்லி அடிக்கல் நாட்டினார். தொகை வாங்கியதையடுத்து பணிகள் ஏதும் நடைபெறாதலால், இவரின் நேர்மையில் சந்தேகம் கொண்ட ஜப்பானியர், அப்பணியைப் பாதியிலேயே கைவிட்டுச் சென்று விட்டார். இது குறித்து கமிட்டி மெம்பர் மோசஸ், “இந்த முறைகேடுகளை கண்டறிந்து அரசிடம் இவர் பெற்ற ஒட்டுமொத்தத் தொகையும் திரும்பப் பெறவேண்டும். இந்நிறுவனத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும். காஞ்சிபுரம் பகுதியிலும் போதிதர்மா நிறுவனத்திற்க்காக வாங்கப்பட்ட இடத்தையும் அரசு விசாரணை நடத்தி கையகப்படுத்த வேண்டும்,” என்றார். இது குறித்து ஜான் சாமுவேலிடம் கேட்டபோது, “இந்த நிறுவனம் இன்று வரையிலும் மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது. என் மீதான காழ்ப்புணர்ச்சியில் போடப் பட்ட வழக்கு இது,” என தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

10-12-2022


[1]  நக்கீரன்,  ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் ஊழல் ! – சிக்கும் இயக்குநர், அ. அர்ண்பாண்டியன், டிசம்பர் 10-13, 2022,பக்கங்கள்.38-39.

[2] “The teaching of this great saint from the Tamil soil transformed the life and culture of people in China, Japan and many other south-east Asian countries. A memorial at his birth place will be a fitting tribute to the great son of India,” Samuel said. Kancheepuram was a major centre of Buddhist learning in the first few centuries of Christian era, but lost its importance under the onslaught of Shaivism and Vaishnavism,” he added.

Times of India, Bodhidharman to get memorial in Kanchi, HUSSAIN KODINHI / TNN / Dec 25, 2013, 00:51 IST.

[3] Shi Yan Lin, a monk who is executive director of the Shaolin Temple in China, visited the place a few days ago to finalise modalities of the tie-up with IAS. “It is a very ambitious project. Once completed, it will be a world class centre for Buddhist philosophy and a meeting point of Indian and Eastern cultures,” said G John Samuel, director of IAS. The institute has purchased two acres of land for the project.

https://timesofindia.indiatimes.com/city/chennai/bodhidharman-to-get-memorial-in-kanchi/articleshow/27869229.cms

[4] நக்கீரன், ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் ஊழல் சிக்கும் இயக்குனர்!, அருண்பாண்டியன் – ஸ்டாலின், Published on 10/12/2022 (06:03) | Edited on 10/12/2022 (07:12)

[5] https://www.nakkheeran.in/nakkheeran/director-asia-studies-institute-corrupt/director-asia-studies-institute-corrupt

ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் கோடிகளில் ஊழல் ! – சிக்கும் இயக்குநர் –  1998லிருந்து என்ன நடக்கிறது, 2022ல் வரை தொடர்கிறதா? (1)

திசெம்பர் 12, 2022

ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் கோடிகளில் ஊழல் ! – சிக்கும் இயக்குநர் –  1998லிருந்து என்ன நடக்கிறது, 2022ல் வரை தொடர்கிறதா? (1)

ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில்1998லிருந்து என்ன நடக்கிறது?: ஆசியாவின் பண்டைய இலக்கிய பண்பாட்டு மரபுகளை ஆய்வு செய்யவும், அது குறித்த ஆய்வுநூல்களை வெளியிடவும், 1982-ல் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தொடங்கப்பட்டது ஆசியவியல் நிறுவனம். முதலில் திருவான்மியூரில் இருந்து, பிறகு தமிழக அரசு குத்தகைக் கொடுத்த நிலத்திற்குச் சென்றது. ஜி. ஜான் சாமு வேல், தனது ஜப்பானிய மாணவரான சூ ஃகிக்கோசக் காவுடன் [Dr. Shu Hikosaka] இணைந்து இந் நிறுவனத்தை உருவாக்கினார். சூ ஃகிக்கோசக் கா, தான் ஜப்பானுக்குத் திரும்ப செல்ல வேண்டும் என்பதால், இவரை நம்பி முழு பொறுப்பும் கொடுத்து விட்டார். ஆனால், நிதியுதவி கொடுத்து வந்தார். 1996ல் திருவான்மியூரிலிருந்து செம்மஞ்சேரிக்குச் சென்றபோது[1], புதிய கட்டிடங்கள், வளாகம் கட்டும் பணி தொடங்கியது[2]. அதற்கு, கோடிகளில் நிதி, நிதியுதவி கிடைத்தது. சில ஆண்டுகளில் பணம் கையாடல் என்று இவர் மீது புகார் எழுந்தது.  துரைப்பாக்கத்தில், நேரு நகரில் இவரது வீடும் பிரம்மாண்டமாக கட்டப் பட ஆரம்பித்து முடிந்தது. இணைதளத்தை உண்டாக்கி அதன் மூலம் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளவும் செய்தார்[3].

1998ல் பணம் கையாடல் புகார் கொடுத்த ஜப்பானிய டைரக்டர்: முதலில் அனைத்திந்திய ஆசியவியல் நிறுவனத்தில் லட்சங்களில் பணத்தை கையாடியதாக அந்நிறுவனத்தின் நிதியளிக்கும் ஜப்பானியர் [ஷு ஹிகோசகா] ஒருவர் புகார் 1998ல் கொடுத்தார். வி.ஆர். கிருஷ்ண ஐயர் தலமையில் நிறுவப்பட்ட விசாரிக்கும் கமிட்டி அவரது பணம் கையாடலை விசாரித்தது. விசாரணையில் அவர் சுமார் ஒன்பது லட்சம் கணக்குக் காட்டமுடியவில்லை. அதனால், பணம் கையாடல் உறுதி செய்யப் பட்டதால், பதவிலிருந்து விலக்கிவைக்கப் பட்டார்.  பதிலுக்கு கொடுமுடி சண்முகம் என்பவர் அமர்த்தப் பட்டார். விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப் பட்டு, பதவி நீக்கம் செய்யப் பட்டு, விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கொடுமுடி சண்முகம் என்பவர் இயக்குனராக இருந்த நிலையில், இந்த ஜான் சாமுவேல் ரவுடிகளுடன் உள்ளே நுழைந்து ஆசியவியல் வளாகத்தை மே.7, 2001 அன்று ஆக்கிரமித்துக் கொண்டதால், போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து கொண்டு போயினர். இவையெல்லாம் அப்பொழுதைய தினசரிகளில் செய்திகளாக வெளிவந்தன. ஆனால், ஜான் சாமுவேல் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்நிலையில் தான் திடீரென்று, “முருகன்” மீது “பற்று” வந்தது!

ஸ்கந்தாமுருகா கம்பெனி ஆரம்பித்தது: முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல்[4].  அனைத்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு பெயரில் ஒரு கம்பெனியை, கம்பனி சட்டம், பிரிவு 25ன் கீழ் ஆரம்பித்து, ஷேர்களை பங்குகளை / விற்க முயற்சித்தார்[5]. சென்னை, மைலாப்பூரில் ஒரு ஓட்டலில் “புரோமோஷன்” கூட்டத்தையும் நடத்தினார். மருத்துவர்கள் ராஜமாணிக்கம், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜு காளிதாஸ் போன்றோர் டைரக்டர்கள் ஆகினர்[6]. மொரிஸியஸ், மலேசியாவில் எல்லாம் ஸ்கந்தா-முருகா மாநாடுகள் நடந்தன. முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது.

2001ல் கலாச்சார பண்பாட்டு மையக் கட்டிடம் கட்டுவதற்காக ரூ.10 லட்சம் மதிய அரசியமிருந்து பெறப்பட்டது. 2001ல் கட்டிட கட்டுகிறேன் என்று ரூ 10 லட்சம் வாங்கி, தனது சொந்த செலவுக்கு உபயோகித்துக் கொண்டார் என்று மாதவன் என்பவர் புகார் கொடுத்தார்[7]. போலியான பகட்டிடப் படத்தைக் காட்டி, பணத்தை செலவழித்து போல கணக்குக் காட்டியதாக புகாரில் சொல்லப் பட்டது[8]. சி.பி.சி.ஐ.டி விசாரித்த போது, அத்தகைய கட்டிடமே இல்லை என்று வழக்குத் தொடர்ந்தது. “…………பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம். பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்”, என்று குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது, தினத்தந்தி, மாலைமுரசு, தினமணி போன்ற தமிழ் செய்திதாள்களிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் விவரங்கள் வந்துள்ளன. இப்பொழுது, கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது.

2000ல் மொரிசிய மாநாட்டில் அவமானம் பட்டது: மொரீஸியஸில் – மே 2000- நடந்த இரண்டாவது மாநாட்டில், இவர் மீதான புகார் தெரிய வந்தது[9], மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் / மாநாட்டு உறுப்பினர் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். பிறகு அவருக்கு அறை ஒதுக்கிக் கொடுக்கப் பட்டது. போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். வி.ஜி.சந்தோசம் ஒரு வேல் மற்றும் பைபிள் விநியோகம் செய்ததை பொது மக்கள் விரும்பவில்லை. எதிர்க்கவும் செய்தனர். இது மாநாட்டில் பிரச்சினையாகப் பேசப் பட்டது. முதல் மாநாட்டில் அலெக்சாந்தரையும், ஸ்கந்னையும் ஒப்பிட்டு கொடுக்கப் பட்ட ஆய்வு கட்டுரையை மறுத்து, ஆதாரங்களுடன் ஆய்வுக் கட்டுரைகள் கொடுக்கப் பட்டன. அக்கட்டுரைத் தொகுப்பு புத்தகமும் விநியோகிக்கப் பட்டது[10].

2003ல் கிருத்துவ பிரச்சாரப் பின்னணி வெளிப்பட்டது: மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை இவ்விதமாக வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். சில முருக பக்தர்கள்-ஆர்வலகர்கள் தனியாக ஒரு அமைப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட தீர்மானித்தனர். இவ்வாறு, இனி முருகனை வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்று அறிந்ததும், பழையபடி கிருத்துவ முறைக்குத் திரும்பினார். அனைத்துலக கிருத்துவ மாநாடுகள் நடத்த ஆரம்பித்தார்.

முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டது: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். இந்தியாவில் கிருத்துவத் தொன்மை மாநாடுகளில் [ஆகஸ்ட் 13-17, 2005; மற்றும் ஜனவரி 14-17, 2007], சந்தோசம் சாமுவேல், தெய்வநாயகம் முதலியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்கள் எல்லோரும் கிருத்துவர்கள் என்பதால், முன்னரும் பேசியிருக்கலாம், அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார்[11]. அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்[12].

© வேதபிரகாஷ்

10-12-2022


[1] In 1996, the Institute shifted from Tiruvanmiyur to its spacious new campus in Chemmancheri. The inauguration ceremony of the building was presided over by Justice V.R. Krishna Iyer and the new building was inaugurated by the President of the Nippon Foundation, which had extended financial support for the construction of the new campus.

[2]  திருவான்மியூரில் இருக்கும் பொழுது, மத்திய அரசு நிதி பெற்றதால் அகோடென்ட் அன்ட் ஜெனரல் ஆபிசிலிருந்து (Office of the Accountant General) “செரா ஆடிட்” (CERA Audit) என்ற தணிக்கை நடைபெற்ற போதே, இதே பிரச்சினை எழுந்தது என்று 1988ல் சொல்லப் பட்டது.

[3]  இப்பொழுது அவை முடங்கி விட்டன. ஒருவேளை இவர் பணம் கொடுக்காதலால் முடக்கப் பட்டிருக்கலாம். பாட்ரிக் ஹாரிகன் நடத்தும் முருகன் இணைதளத்தில் சில விவரங்களைக் காணலாம்.

[4]  யார் கூட்டிச் சென்றனர் போன்ற விவரங்களையும் அறிந்தால், இதன் பின்னணி வெளிப்படும்.

[5]  ரூ 25,000/- பணம் கொடுத்து டைரக்டர் ஆகலாம், ஆனால், டிவிடென்ட் எல்லாம் கிடைக்காது. வருமான வரியில் விலக்குக் கிடைக்கும்.

[6] ராஜு காளிதாஸ் (தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்), எம்.சி. ராஜமாணிக்கம் (ஆர்தோபோடிஸ்ட் மருத்துவர், ஈரோடு), மதிவாணன் (எஸ்.எஸ்.என். காலேஜ், குமரபாளையம்), ஜி.ஜே. கண்ணப்பன் (சென்னை பல் டாக்டர்) போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்தனர். ஏனடா இந்த ஆளுக்குக் கூட கூட்டு வைத்தோம், என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

[7] நக்கீரன்,ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் ஊழல் சிக்கும் இயக்குனர்!, அருண்பாண்டியன் – ஸ்டாலின், Published on 10/12/2022 (06:03) | Edited on 10/12/2022 (07:12)

[8] https://www.nakkheeran.in/nakkheeran/director-asia-studies-institute-corrupt/director-asia-studies-institute-corrupt

[9] சென்னையிலிருந்து அப்புகார் வந்தது, பொள்ளாச்சி மகாலிங்கம் [ஆசியவியல் நிறுவனத்தின் கமிட்டி உறுப்பினர்] அனுப்பினார் என்றும் சொல்லப் பட்டது.

[10] K. V. Ramakrishna Rao (ed.), The Antiquity of Worship of Skanda-Karttikeya-Subramanya, Selected papers presented at the International Conference of Skanda-Muruka held at Mauritius, 2000, Bharatiya Itihasa Sankalana Samiti, Chennai, 2001.

[11]  இவர்கள் எல்லோரும் தொடர்ந்து, “தாமஸ் கட்டுக்கதை” பரப்பி வரும் ஆராய்ச்சியாளர் ஆவர். பணம் இருப்பதால், அவர்கள் புத்தகங்கள், ஆராய்ச்சி, மாநாடுகள் என்று பலம், தாக்கம் முதலியவற்றுடன் செயல் பட்டு வருகின்றனர்.

[12]  மைக்கேல் விட்செல், ஸ்டீவ் பார்மர் முதலியோர் ஹார்வார்ட் பல்கலையை மையமாக வைத்துக் கொண்டு, சமஸ்கிருத ஆராய்ச்சி என்ற போர்வையில் வேலை செய்து வருகின்றனர். இவற்றைப் பற்றியெல்லாம் பல பிளாக்குகளில் விவரித்துள்ளேன்