Archive for the ‘இந்துக்கள் தாக்கப்படுதல்’ Category

பாஜக-இந்துத்துவவாதிகளின் கிறிஸ்துவர்களுக்கான கிறிஸ்துமஸ் கால சினேஹ யாத்திரை ஏன்? (1)

திசெம்பர் 23, 2023

பாஜகஇந்துத்துவவாதிகளின் கிறிஸ்துவர்களுக்கான கிறிஸ்துமஸ் கால சினேஹ யாத்திரை ஏன்? (1)

தமிழக இந்துத்துவவாதிகளால் இந்துகளுடனே உரையாடல் வைத்துக் கொள்ள முடிவதில்லை: தமிழகத்தில் இருக்கும் இந்துத்துவவாதிகள் இரட்டை வேடம் போடுகிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி வந்ததுண்டு. அடிக்கடி அவர்களது குழுக்கள், கோஷ்டிகள், கும்பல்கள் திடீரென்று வருடாவருடம் அல்லது காலத்திற்கு ஏற்றபடி மாறுவதும் கவனிக்கப் படுகிறது. ஏதோ கொள்கை, நியாயம், தர்மம் எண்றெல்லாம் பெரிய யோக்கியர்கள் போல பேசினாலும், சிலரின் போக்கு, நடத்தை முதலியவை நிச்சயமாக அவ்வாறில்லை. துரோகம் செய்வதிலும் வல்லவர்களாகி விட்டனர். அரசியல் ஒருவேளை அவர்களை அவ்வாறு செய்து விட்டது போலும். “குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று தமிழக அரசியலில் சொல்வதைப் போல, இப்பொழுது, இவர்களும் மாறத்தான் மாறியிருக்கிறார்கள். அரசியலில் சேர்ந்த பிறகு ஒழுக்கத்தை எல்லாம் பற்றி பேச முடியாது, பேசக் கூடாது என்றால், பிறகு அவ்வாறே அரசியல்வாதியாக இருந்து விட்டுப் போகலாம். பிறகு, ஏதோ “ரிஷி-முனி-மகான்” போன்றெல்லாம் பேசக் கூடாது. தமிழக இந்துத்துவவாதிகளால் இந்துகளுடனே உரையாடல் வைத்துக் கொள்ள முடிவதில்லை, நண்பர்களாக இருக்க முடிவதில்லை. பிறகு, கிறிஸ்தவர்களின் மீது எப்படி பாசம் கிளம்புகிறது?

கிறிஸ்தவஇந்துத்துவ உரையாடல்கள்: இந்த “கிறிஸ்துவ” உறவுகள், பாசங்கள், நேசங்கள் விவகாரங்களில் அவர்களது போக்கு விசித்திரமாக, வினோதமாக, முரண்பாடாக, திகைப்பாகத்தான் இருக்கிறது. நட்பு ரீதியில் நண்பர்களாக எல்லோருடனும் இருக்கலாம், அந்த நட்பைப் போற்றலாம், வாழலாம். ஆனால், ஒரு பக்கம் இப்படி- இன்னொரு பக்கம் அப்படி என்று இருக்கக் கூடாது- முடியாது. அப்படி இருக்க முடியும், இருக்கிறார்கள் என்றால், நிச்சயாமாக அவர்களிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று தான் முடிவாகிறது. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,” என்று சொல்லிவிட்டால், யாரும் கேட்கப் போவதில்லை. மற்ற நம்பிக்கையாளர்களுடன், மதத்தவர்களுடன் “உரையாடல்” என்று வைத்துக் கொள்வது, கிறிஸ்தவர்களின் திட்டங்களுள் ஒன்றாகும். அவர்கள் அதை மறைத்ததில்லை, தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேரளாவில் கிறிஸ்தவஇந்துத்துவ உரையாடல்கள்: கேரளாவைப் பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் கிறிஸ்துவர்கள் அல்லது சர்ச்சுகளிடையே மோதல்கள் இருந்து கொண்டிருந்தன. அதனால், அவ்வப்பொழுது, அவர்கள் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஶ்ரீசுதர்சன்ஜி இருக்கும் பொழுது, அத்தகைய உரையாடல்கள் நடந்துள்ளன. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பலமுறை உரையாடல்கள் நடந்துள்ளன. மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பொழுதும், அத்தகைய சந்திப்புகள் நடந்துள்ளன.  இஸ்ரேலுடனான உறவும் அவ்வாறே கவனிக்கப் படுகிறது. மணிப்பூர் விவகாரம் விரிசலை ஏற்படுத்தியது. அதனால், இந்துத்துவவாதிகள் கிறிஸ்துவர்களுடன் “உரையாடல்” வைத்துக் கொள்வது அரசியல் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது, ஏனெனில், அவர்களுக்கு ஒன்றும் “’இறையியல்” உரையாடல் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களுக்கு இறையியலில் எல்லாமே உண்டு. ஆக, அந்ந்நிலையில் “சிநேக யாத்திரை” கவனிக்கப் படுகிறது.

05-12-2023 அன்று நடைபெற்ற கேரளா மாநில பா.. உயர்மட்டக்குழுக் கூட்டம்: ஐந்து மாநிலத் தேர்தலில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருகிறது பா.ஜ.க. இந்த நிலையில் கேரளா மாநில பா.ஜ.க உயர்மட்டக்குழுக் கூட்டம் 05-12-2023 அன்று கோட்டயத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்த திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. மக்களவைத் தோ்தல் நெருங்கிவரும் சூழலில், கேரள மக்கள்தொகையில் கணிசமான பங்கு வகிக்கும் கிறிஸ்தவா்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில், இந்த ஆண்டு ஈஸ்டா் திருநாளையொட்டி முதன்முதலாக இந்தப் பரப்புரை தொடங்கி நடத்தப்பட்டது[1]. தற்போது ‘கிறிஸ்துமஸ்’ மற்றும் ‘ஆங்கிலப் புத்தாண்டு’ பண்டிகை காலத்தையொட்டி, ஸ்நேக யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது[2].

டிசம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஸ்நேஹ யாத்ரா: மேலும், கிறிஸ்தவ மக்களை நெருங்கிச் செல்லும்விதமாக ‘சினேக யாத்திரை’ என்ற திட்டத்தை செயல்படுத்துவது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது[3]. அதன்படி கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, வரும் டிசம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கிறிஸ்துவ மக்களின் வீடுகளுக்கு பா.ஜ.க நிர்வாகிகள் செல்ல வேண்டும் எனவும், கிறிஸ்துவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது[4]. இந்த “சகஜமான” யாத்திரை, மேலிடம் ஆசிர்வாதத்துடன் தான் நடைபெறுகிறது என்றும் உறுதியாகத் தெரிகிறது. ஏனெனில், கார்டினலிடம், “சுரேந்திரன், அவரிடம் பிரதமா் நரேந்திர மோடியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்,” என்றதிலிருந்து தெரிகிறது.

21-12-2023 கார்டினல் ஜார்ஜ் ஆலன்செரியை சுரேந்திரன் சந்தித்தது: அன்று ஸ்நேக யாத்திரையின் தொடக்கமாக காக்காநாடு பகுதியின் பிரபல சீரோ மலபார் தேவாலயத்தின் முன்னாள் தலைவா் கார்டினல் ஜார்ஜ் ஆலன்செரியை 21-12-2023 வியாழக்கிழமை நேரில் சென்று சந்தித்த பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன், அவரிடம் பிரதமா் நரேந்திர மோடியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்[5]. தேவாலயப் பிரதிநிதிகளைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களையும் சுரேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்[6]. தேவாலயப் பிரதிநிதிகளுடன் 45 நிமிஷங்களுக்கும் மேலாக நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டவை குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை[7]. இது நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே எனத் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவா் கே.எஸ்.ஸாய்ஜு மேலும் கூறுகையில், ‘பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவா்களிடம் தெரிவித்தோம்[8]. மணிப்பூா் விவகாரத்துக்குப் பிறகு தேவாலயத்துக்கும் பாஜகவுக்கும் மோதல் நிலவுவதாகப் பரவிய செய்தியில் உண்மையில்லை. எங்களுக்கிடையே எப்போதும் நல்லுறவு நீடித்து வருகிறது. டிசம்பா் 30-ஆம் தேதி வரை கிறிஸ்தவா்களின் வீடுகளுக்குச் சென்று பாஜக நிர்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள்’ என்றார்.

கிறிஸ்துவுக்குத் துரோகம்’-காங். விமா்சனம்: பாஜகவின் பரப்புரையை விமா்சித்து கேரள காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘கேரள கிறிஸ்தவ மதத்தினரைச் சந்தித்து பாஜகவினா் வாழ்த்து தெரிவிப்பது ‘ஸ்நேக யாத்திரை’ அல்ல, ‘கிறிஸ்துவுக்கு இழைக்கப்பட்ட துரோகம்’. நாடு முழுவதும் சிறுபான்மையினரை ஏமாற்றும் வரலாறு கொண்ட பாஜகவினா், கேரளத்தில் மட்டும் அவா்கள் மீது அன்பைப் பொழிகின்றனா்’ எனக் குறிப்பிட்டார். ஒருவேளை கிறிஸ்தவ மதத்திற்கு நெருக்கமாக நாங்கள் தான் இருக்கிறோம் என்பதனை காட்டுவதற்காக காங்கிரஸ்காரர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள் போலும். ஏனெனில், சோனியா மைனோ என்கின்ற சோனியா காந்தி கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்த விஷயமே. அதே போல அவர்களது குடும்பமும் சர்ச்சுடன் மிகுந்த நெருக்கத்தை கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே. ஆகையால் இப்பொழுது திடீரென்று பாஜககாரர்கள் கிறிஸ்தவர்களுடன் நெருக்கத்துடன் வரும் போக்கை பார்க்கும் பொழுது, அவர்களுக்கு ஒரு வேலை ஏற்பட்ட பொறாமையால் இவ்வாறு சொல்கிறார்களோ என்றும் கவனிக்கலாம். எப்படி இருந்தாலும் “கிறிஸ்துவுக்கு செய்த துரோகம்” என்று சொல்லும் பொழுது இது மேலும் விசித்திரமாக தான் இருக்கிறது. எனவே அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தும், இவ்வாறு நடக்கிறதே என்று திகைத்து விட்டார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

23-12-2023.


[1] காமதேனு, கேரளாவில் கிறிஸ்துவர்களின் வீடுகள், சர்ச்சுகளுக்கு சினேக யாத்திரைபாஜகவின் பலே வியூகம்!, Updated on: 22 Dec 2023, 11:45 am.

[2] https://kamadenu.hindutamil.in/politics/sneha-pilgrimage-to-christian-homes-and-churches-in-kerala-bjps-strategy

[3] விகடன், சினேக யாத்திரை: கிறிஸ்தவர்களைச் சந்திக்கச் செல்லும் பாஜகசிறுபான்மை வாக்குகளை வளைக்க திட்டம்!, சிந்து ஆர், Published:06 Dec 2023 10 AM; Updated:06 Dec 2023 10 AM.

[4] https://www.vikatan.com/government-and-politics/bjp-plans-for-sneha-yatra-to-target-christian-voters

[5] தினமணி, பாஜக: கேரளத்தில் மீண்டும் தொடங்கும்ஸ்னேக யாத்திரை, By DIN  |   Published On : 21st December 2023 03:22 PM  |   Last Updated : 21st December 2023 03:48 PM  |

[6] https://www.dinamani.com/india/2023/dec/21/bjp-relaunches-sneha-yatra-to-connect-with-christians-in-kerala-4126575.html

[7] தினமணி, கிறிஸ்தவா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் கேரள பாஜகவின் யாத்திரை மீண்டும் தொடக்கம், By DIN  |   Published On : 22nd December 2023 12:00 AM  |   Last Updated : 22nd December 2023 12:00 AM.

[8] https://www.dinamani.com/india/2023/dec/22/kerala-bjps-pilgrimage-to-greet-christians-begins-again-4126858.html

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

மே 18, 2023

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

கத்தோலிக்கப் பையன் ஹிந்து பெண்ணை திருமணம் செய்ததை கத்தோலிக்கச் சர்ச் ஏற்ருக் கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே  கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது.  இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த  நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].  

கத்தோலிக்க போராளிகள் பெண்னியப் போராளிகள் வாய் திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி உடலை புதைக்க மறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு  முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர். 

தொடரும் மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது.  மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

போலீசார் சமரசத்திற்குப் பிறகு உடல் புதைக்கப் பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?

கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன,  பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2023


[1] இ.டிவி.பாரத், மதம் மாறி திருமணம் செய்த மகன்தந்தையின் சடலத்தை புதைக்க காலில் விழக் கூறிய ஊர்மக்கள், May 17, 2023, 07:09 PM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/christians-refused-to-bury-father-dead-body-since-his-son-married-inter-religious-at-theni/tamil-nadu20230517193953468468449

[3] மீடியான்.நியூஸ், ஹிந்து பெண்ணுடன் காதல் திருமணம்இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்து அராஜகம்!, Karthikeyan, Mediyaan News, 18 மே 2023 11:07 AM.

[4] https://mediyaan.com/theni-christian-youth-love-marriage-hindu-girl-objection-burial-dead-body/

[5] ஜீ.நியூஸ், தேனி: மகன் மதம் மாறியதால் தந்தையின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கல்லறை பொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-christians-refused-to-bury-dead-body-since-his-son-changed-his-religion-444804

[7] தினத்தந்தி, காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்..” இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்புசர்ச் விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம், By தந்தி டிவி, 18 மே 2023 8:07 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/if-you-fall-on-our-feet-we-will-allow-to-bury-objection-to-burial-of-the-dead-186876

[9] தினமாலை, தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!, By MALA RAJ Thu, 18 May 2023

[10] https://www.dinamaalai.com/news/the-son-who-converted-and-married-monsters-who-fell-on-his/cid10956003.htm

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுவது, மதம்-உயர்வு, ஜாதி-கீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! ஆனால் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது! (2)

மே 7, 2023

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுவது, மதம்உயர்வு, ஜாதிகீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! ஆனால் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது! (2)

எம்பிக்கள் பிஜேபிதிமுக என்றால், வாதவிவாதங்களும் இந்துஇந்துவிரோதமாக இருக்கலாமா?: பிறகு இடவொதிக்கீடு ஏன் என்று திமுக கேட்க வேண்டும். அம்பேத்கரை எதிர்க்க வேண்டும். ஆனால், மனுதாரர் பாஜக பின்புலம் கொண்டவர்[1]. இவ்விவகாரம் தொடர்பாக அவர் தாக்கல் செய்த 4 மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன[2] என்று குறிப்பிடுவதும் விசித்திரமானதே. ஏனெனில் இவரே திமுக எம்பி தான், இப்பொழுது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்குதல் செய்தாலும், “திராவிட மாடல்” என்றெல்லாம் குறிப்பிட்டு அரசியல் ரீதியிலான பதில் தான் பதிவு செய்துள்ளார். சூசை தீர்ப்பையும் மறக்கிறார் / மறைக்கிறார்.. பழைய கோர்ட்-கட்டுகளை பிரித்துப் பார்ப்பாரா அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பாரா? இல்லை, “திராவிட ஸ்டாக்கில்” இதெல்லாம் சகஜமப்பா என்பாரா? வக்கீல் என்ற முறையில் பாரபட்சம் இல்லாமல் பிரச்சினையை அணுக வேண்டும் என்பது கூட இல்லாமல் பதில்-மனு சமர்ப்பித்து இருப்பது தெரிகிறது.

கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை: வில்சன் தொடர்கிறார், “மதம் சார்ந்த விஷயங்களில் மாநிலங்களுக்கு அதிகாரமில்லை[3].  தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை. நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது[4]. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்டாய மதமாற்ற சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றார். இதுபோன்ற செயல்கள் மதம் சார்ந்தவர்களை புண்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறப்படுவது பொய்யான தகவல்; [பெரியாரிஸத்தில் இதெல்லாம் எப்படி வரும் என்று தெரியவில்லை. ஒருவேளை, இந்து மதம் இல்லை என்றால், அதெல்லாம் வரும் போலிருக்கிறது] கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை[5]. [ஆனால், மதம் மாறியவர்களுக்கு இடவொதிக்கீடு தேவை] அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தங்கள் மதத்தை பரப்புவதில் எந்த தவறும் இல்லை[6] [அதை, பகுத்தறிவு எப்படி ஒப்புக் கொள்கிறது, பெரியாரிஸம் ஏற்றுக் கொள்கிறது என்று தெரியவில்லை]. மதத்தை பரப்ப சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்[7] [இப்படியெல்லாம் கூட மனு தாக்கல் செய்யலாம் போலிருக்கிறது]. மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. எனவே மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்ட இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்[8]., என்றெல்லாம் வக்காலத்து வாங்குவதை கவனிக்க வேண்டும்.

இனி தீர்ப்பு எப்படி என்று பார்க்க வேண்டும்: லாவண்யாவின் தற்கொலை குறிப்பில், விடுதி காப்பாளர் வழங்கிய கூடுதல் வேலைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. என்ன சட்டம் இயற்ற வேண்டும் என்பதை சட்டமன்றத்துக்கு விட்டுவிட வேண்டும் என்றும், என்ன சட்டம் வேண்டும், எது வேண்டாம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும் எனவும், தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதெல்லாம் தெரியும், ஆனால், இது மட்டும் தெரியாது என்பதெல்லாமும் வேடிக்கை தான். தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என்றும், மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

அவர்கள் கடவுள் ஏசு எப்படி ஜாதியை ஏற்றுக் கொள்கிறார்?: ஜாதிகளை வைத்துக் கொண்டு கடவுளர்களை ஏமாற்றும் கிருத்துவம், இஸ்லாத்தையும் சேர்த்துக் கொள்கிறது! ஆமாம், தலித் என்று பேசும் பொழுது, முஸ்லிம்களும் சேர்ந்து கொள்கிறார்கள். சச்சார் கமிட்டி போர்வையில், முஸ்லிம்களும் கேட்கத்தான் செய்கிறார்கள். கருணாநிதி கொடுத்த 3.5% உள்-ஒதிக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். ஓபிசியும் கிடைக்கிறது. ஆக எஸ்சி தான் இறுதி இலக்கு போலும். இப்பொழுது, “ஆதிதிராவிடர்” எனும் பொழுது, அமைதியாக இருக்கிறார்கள் போலும். கிருத்துவர்களுக்கு கொஞ்சம் கூட கிருத்து சொன்னது பற்றி கவலை இல்லை போலும். பொய் சொல்வதில் சளைத்தவர்களும் அல்லர். பணதையும், அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு, கூட செக்யூலர் அரசியல்வாதிகளை கைக்கூலிகளாக வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைக்கப் பெரும்பாடு பட்டுக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. சுப்ரீம் கோர்ட் சொன்னது, ஜாதி என்றாலே, இந்து மதத்திற்குரியதாகிறது, ஆகவே கிருத்துவர்கள் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடுக் கேட்கமுடியாது என்று சூசை -எதிர்- இந்திய அரசாங்கம் உச்சநீதி மன்ற தீர்ப்பில் எடுத்துக் காட்டியது.

கடவுளா ஜாதியா என்றால், ஜாதி என்று எப்படி கிறிஸ்துவர் செல்ல முடியும்?: ஆனால் கிருத்துவர்களோ, தம் மதத்தில் ஜாதிகள் உள்ளன இன்று பிரகடனப் படுத்துகிறார்கள். போதாக் குறைக்கு முஸ்லீம்களையும் கூட்டுக்கு அழைக்கிறர்கள். இப்பொழுது, ஸ்டாலினே வக்காலத்து வாங்கும் நிலைக்கு வந்தாகி விட்டது. அதற்காக தலித் கிருத்துவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களுக்கு தலித் அந்தஸ்து வேண்டும் என்று கேட்கிறார்கள்! அதாவது, கிருத்துவர்களாக மாறிய பிறகும், முஸ்லீம்களாகிய மாறிய பிறகும், அவர்களது கடவுளர்களான ஏசு / ஜேஹோவா மற்றும் அல்லா முதலியோரால் அவர்களை மாற்ற முடிவவில்லை போலும். அதாவது இவர்கள் அவர்களை ஏமாற்றுகிறார்களா அல்லது அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லையா என்பது தெரிந்தாக வேண்டும். ஏனெனில், இப்படி எல்லா கடவுளர்களையும் எல்லா நேரங்களிலிலும் ஏமாற்றி வருவது கேவலமானது! ஆனால், கிறிஸ்துவர்கள் இதைப் பற்றி கவலைப் படுகிறார்களா அல்லது பயப் படுகிறார்களா?

© வேதபிரகாஷ்

02-05-2023


[1] தினகரன், தஞ்சை மாணவி மரண விவகாரம்: தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு, May 1, 2023, 6:36 pm

[2] https://www.dinakaran.com/tanjore-student-death-issue-no-forced-conversion-supreme-court-tngovt/

[3] நியூஸ்.7.தமிழ், தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் இல்லைஉச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம், by Jeni, May 1, 2023.

[4] https://news7tamil.live/no-compulsory-religious-conversion-in-tamil-nadu-tamil-nadu-govt-explanation-in-supreme-court.html

[5] நக்கீரன், “தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் என்பது பொய்யான தகவல்” – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு, செய்திப்பிரிவு, Published on 01/05/2023 (11:42) | Edited on 01/05/2023 (11:52).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/india/forcible-conversion-tamil-nadu-false-information-tamil-nadu-governments-response

[7] தினமலர், தமிழகத்தில் கட்டாய மத மாற்றம் இல்லை“: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், Updated : மே 01, 2023 12:38 | Added : மே 01, 2023 12:35 …

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3309143

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப்படுவது, மதம்-உயர்வு, ஜாதி-கீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! (1)

மே 7, 2023

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுவது, மதம்உயர்வு, ஜாதிகீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! (1)

தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல்: எப்படி கிறிஸ்தவர்களுக்கு ஒரு நிலையான கொள்கை இல்லையோ, அது போல திராவிடத்துவ வாதிகளுக்கும் இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை. அல்லது, திராவிடத்துவ வாதிகளுக்கு எப்படி ஒரு நிலையான கொள்கை இல்லையோ, அது போல கிறிஸ்தவர்களுக்கு வாதிகளுக்கும் இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை, எனலாம். கேட்டால் “திராவிட மாடல்” என்று சொல்லிக் கொள்வார்கள். கிறிஸ்தவர்களாக மாறினால், அப்படியே உயர்ந்து விடுகின்றனர், உச்சத்தைத் தொட்டு, சொர்க்கத்திற்கே சென்று விடுகின்றனர் என்பது தான் பிரச்சாரம், இறையியல் கவர்ச்சி, எல்லாம். பிறகு, இல்லை, சாதி இருக்கிறது, ஜாதி இருக்கிறது, தீட்டு இருக்கிறது, தீண்டாமை இருக்கிறது, என்றெல்லாம் புலம்புவது ஏன் என்று தெரியவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது, தமாசாக உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் அம்பேத்கரையும் மிஞ்சும் ஸ்டாலின்:  தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது[1]. அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது[2]. ஏப்ரல் 18, 2023 அன்று மத மாறிய எஸ்.சி கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து அந்த எஸ்.சி அந்தஸ்து, இடவொதிக்கீடு முதலிய சலுகைகள் அளிக்கப் பட வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது[3]. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் பட்டியிலன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி அவர்களுக்கு அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப்பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்[4]. அதாவது, அபேத்கரையும் மிஞ்சும் சட்டஞானம் பெற்று, இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் கூறியது கவனிக்கத் தக்கது.

ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை கொடுமை தொடர்கிறது. என்று வாதிக்கும் திராவிட மாடல், திராவிடத்துவம் தமாஷாக இருக்கிறது. சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்றார். அப்பொழுது, சட்டநிலை என்பதை எல்லாம் கவனிக்காமல், அரசியல் ரீதியில் அவ்வாறு செய்தது விமர்சனத்தை எதிர்கொண்டது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா உச்சநீதி மன்ற தீர்ப்பே, தமிழகத்திலிருந்து தான் உருவாகியது. அப்பொழுது, சென்னை உயர்நீதி மன்றம் மதம் மாறிய எஸ்சி கிறிஸ்தவருக்கு சலுகை கிடையாது என்று தீர்ப்பளித்தபொழுது, அதனை ஆதரித்து மனு தாக்கல் செய்தது. ஆனால், சூசை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார், ஆனால், தோல்வியடைந்தார். அதாவது, மதம் மாறிய எஸ்சி கிறிஸ்தவருக்கு சலுகை கிடையாது என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து எந்த சீராய்வு மனுவை யாரும் தாக்கல் செய்யவில்லை. அப்பொழுது, உச்சநீதி மன்றம் எடுத்துக் காட்டியது, “கிறிஸ்துவர்கள் தங்கள் மதத்தில் ஜாதி மற்றும் தீண்டாமை உண்டு,” என்று மெய்ப்பித்தால், ஒருவேளை அவ்வாறு கேட்கலாம் என்று கோடிட்டு காட்டியது.

கிறிஸ்துவாஜாதியாதீண்டாமையா?: கிறிஸ்துவர்கள் உஷாராகி, இவ்விசயத்தில் கப்சிப் என்றாகினர். இருப்பினும், அவ்வப்பொழுது, “தலித் கிறிஸ்துவர்” என்று கலாட்டா செய்து வருவர். ஆனால், இப்பொழுது 2023ல் முரண்பட்ட நிலைகளை தமிழக அரசு எடுப்பது, மாநிலத்திற்கு மட்டுமல்ல, சட்டநிலைக்கும் இழுக்காகும். சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் இவ்வாறான, நாடகங்களை, திமுக அரங்கேற்றி வருகிறது. பொதாகுறைக்கு, “ஆதிதிராவிடர்” என்ற பிரயோகத்தையும் கவனிக்க வேண்டும். கருணாநிதி 35% உள்-ஒதுக்கீடு என்றபோது, கிறிஸ்துவர் தேவையில்லை என்று ஒதுங்கினர், ஏனெனில், சில பகுதிகளில், அதை விட அதிகமாக சலுகை பெற்று வருகின்றனர். எனவே, இப்பொழுதும், பிரச்சினை இறையியல் ரீதியில் இருக்கிறது. இருப்பினும், அதனை மறைத்து, கிறிஸ்துவர் நாடகம் ஆடுகின்றனர். ஸ்டாலின் நன்றாக மாட்டி விட்டாரோ என்று கலங்கின்றனர். எனவே இரண்டு கூட்டங்களும் எவ்வாறு நாடகம் ஆடுகின்றன என்பதனை கவனிக்க வேண்டும்.

லாவண்யா தற்கொலையில் வெளிப்பட்ட மதம் மாற்றம்: பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் மனுவில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது லாவண்யாவின் தற்கொலைக்கான அடிப்படை காரணத்தை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும், பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அளித்தும், அச்சுறுத்தியும் நடைபெறும் மதமாற்றங்களை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் எனவும் மதமாற்ற தடை சட்டத்தை மத்திய மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் 01-05-2023 செய்யப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவி லாவண்யாவின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் லாவண்யாவின் தற்கொலையை தமக்கு சாதகமாக திசை திருப்ப மனுதாரர் முயல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்பி வில்சன் சமர்ப்பித்த பதில் மனு: இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தஞ்சை லாவண்யா பேசியதாக வெளியான வீடியோவை சிபிஐ விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் இல்லை என்றும், மனுதாரரின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது[6]. மேலும்,  ‘மதம் என்பது சுதந்திரமானது[7]. எந்த மதத்தை பின்பற்றுவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது[8] என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். “தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் இல்லை,” என்றால், மதமாற்றம் இல்லை என்று சொல்லவில்லை. அதேபோல, “கட்டாய மதமாற்றம்” சில ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்றும் பொருள் கொள்ளலாம். இந்து மதத்திற்கு எதிராக மட்டும் வேலை செய்யும் பெரியாரிஸம், திராவிட மாடல், இப்பொழுது, கிறிஸ்தவ ஆதரவாக வாதிட்டாலும், எதிர்ப்பது இந்துமத விரோதமாகத்தான் இருக்கிறது.

© வேதபிரகாஷ்

02-05-2023


[1] தமிழ்.நியூஸ்.18, தமிழ்நாட்டில் மதமாற்றம் நடக்கிறதா? தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்!.., NEWS18 TAMIL, First published: May 01, 2023, 13:31 IST, LAST UPDATED : MAY 01, 2023, 13:31 IST

[2] https://tamil.news18.com/national/anti-conversion-laws-and-lavanya-suicide-case-supreme-court-960615.html

[3] தினத்தந்தி, “கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் தனித்தீர்மானம், தினத்தந்தி ஏப்ரல் 19, 12:56 pm (Updated: ஏப்ரல் 19, 1:21 pm)

[4] https://www.dailythanthi.com/News/State/10-km-walktrainee-constable-fainted-955548?infinitescroll=1

[5] தினத்தந்தி/தந்திடிவி, பணம், பரிசு கொடுத்து அளித்து மதமாற்றம்..  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு, By தந்தி டிவி 1 மே 2023 10:07 PM

[6].https://www.thanthitv.com/latest-news/conversion-of-religion-by-giving-money-gifts-tamil-nadu-governments-reply-in-supreme-court-183670

[7] கலைஞர்.டிவி, தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றமே கிடையாது, பாஜக பொய்யை பரப்புகிறதுஉச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!,  , Praveen, Updated on : 1 May 2023, 02:07 PM

[8] https://www.kalaignarseithigal.com/politics/2023/05/01/there-is-no-forced-conversion-in-tamil-nadu-bjp-is-spreading-lies-tn-government-petition-in-supreme-court

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்; டிஜிடல் விளம்பரம் மூலம் அறிப்விப்பு, பிறகு ஹாக் செய்யப் பட்டது என்றது!

ஜனவரி 13, 2023

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்; டிஜிடல் விளம்பரம் மூலம் அறிப்விப்பு, பிறகு ஹாக் செய்யப் பட்டது என்றது!

தமிழகத்தில் மதமாற்ற முயற்சிகள்: கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகையால் கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது[1]. நாடு முழுவதும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத மாற்றம் நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களான ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் மதமாற்றம் நடக்கிறது[2]. இதிலும், தமிழகத்தில்தான் மிகப்பெரிய அளவில் மத மாற்றம் நடந்து வருகிறது[3]. இதுவும் தி.மு.க. ஆட்சியின்போதுதான் அதிகளவில் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இது வெட்ட வெளிச்சமானது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் நெற்றியில் விபூதி அணிந்து வரக்கூடாது, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது, கையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் காப்பு, கயிறு அணியக் கூடாது என்றெல்லாம் கிறிஸ்தவ பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூறியது அம்பலமானது. மேலும், பகவத்கீதை கெட்டது, பைபிள்தான் நல்லது என்றும் கூறி மாணவ, மாணவிகளை மதமாற்றம் செய்ய முயன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

அம்பத்தூர் சிக்னல் அருகே உள்ள ஒரு கடையின் மீது டிஜிட்டல் விளம்பரம்: இவ்வாறு மதம் மாற்றுபவர்கள், ஏழை மக்களிடம் பணத்தாசை காட்டியும், படித்தவர்களிடம் மைனாரிட்டி என்பதால் எளிதில் அரசு வேலை கிடைக்கும் என்றும் கூறி மதம் மாற்றி வருகின்றனர். ஆனால், இவை எல்லாம் மறைமுகமாக நடந்து வந்த நிலையில், தற்போது பொதுவெளியிலேயே விளம்பரம் செய்து மதமாற்றம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம் என்பதுதான் வேதனை. சென்னையில்தான் இப்படியொரு அவலம் நடந்திருக்கிறது. அம்பத்தூர் சிக்னல் அருகே உள்ள ஒரு கடையின் மீது டிஜிட்டல் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது[4]. அந்த விளம்பரத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுங்கள், தி.மு.க. அரசால் சலுகைகள் கிடைக்கும். மேலும், 10 லட்சம் ரூபாய் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது[5].

உதயநிதி நான் கிறிஸ்தவன் என்றது, ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது: கடந்த வாரம் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி, தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றும், எனது மனைவி ஒரு கிறிஸ்தவர்தான் என்றும், தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் ஹிந்துக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதனிடையே, மேற்கண்ட விளம்பரப் பலகை குறித்து ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அந்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டிருக்கிறது.

உண்மை அறிவோம்- ஹாக் செய்யப் பட்டது என்பது: குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் சென்னை அம்பத்தூர் போலீசாரை (உதவி ஆணையர் அலுவலகம்) தொடர்பு கொண்டோம்[6]. அவர்கள் பேசுகையில், ‘’அம்பத்தூர், அயப்பாக்கம் பிரதான சாலை, தென்னாட்டு காந்தி அண்ணா நகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல். இவருக்குச் சொந்தமான இடத்தில் அகமது இப்ராஹிம், என்பவர் ‘ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட்’ என்ற பெயரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இப்ராஹிம், கிளினிக் முன்பாக எல்.இ.டி., விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில், ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட் அண்டு ட்ரடிஷனல் ட்ரீட்மென்ட் என்ற வாசகத்தை ஒளிர செய்திருக்கிறார். இதனை யாரோ ஒருவர் வேண்டுமென்றே ஹேக் செய்து, அனைவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள்; தி.மு.க., அரசால் சலுகைகள் கிடைக்கும் மற்றும் 10 லட்சம் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று எழுதியுள்ளார். இதுபற்றி இப்ராஹிம் கிளினிக்கில் பணிபுரியும் கரீம் என்பவர் அளித்த புகாரின் பேரில், மர்ம நபரை தேடி வருகிறோம்,’’ என்றனர். எனவே, இது ஹேக்கிங் முறையில் நிகழ்ந்த தவறு, இப்படி யாரும் விளம்பரம் செய்யவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது[7].

ஹாக், ஹாக்கிங், ஹாக்கிங் செய்தல் (Hack, hacking): மின்னணு துறையில், குறிப்பாக, மென்பொருள், உற்பத்தி, சாப்ஃட்வார் உருவாக்கத்தில் ஹாக், ஹாக்கிங், ஹாக்கிங் செய்தல் என்பது சர்வ சாதாரணமான விசயமாகி விட்டது. ஒரு புரோக்ராம், எப்பொழுது ஒரு நபருக்கு மேல் தெரிய வருகிறதோ, அப்பொழுதே அந்த மின்னணு முறையில் ஊடுருவதல், திருடுதல், மாற்றுரு செய்தல், போலி தயாரித்தல், அவை மூலம் ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளையடிப்பது என்றெல்லாம் சகஜமாகி விட்டது. இதனால், இன்னும் பலர் இவ்விசயங்களுக்கு செல்லாமல் இருக்கின்றனர் கிறிஸ்துவர்களைப் பொறுத்த வரையில், இவையெல்லாம் அவர்களும் சர்வ சாதாரண விசயம் தான், சகஜமானது தான். பணத்தைப் பற்றி அவர்களுக்குப் பிரச்சினை இல்லை, அறுவடை தான் முக்கியம். சமீபத்தில் நடந்த அகில உலக மாநாட்டில் கூட, இதைப் பற்றி அதிகமாகவே விவாதிக்கப் பட்டது. ஹாக் செய்தாலும், அது நடந்துள்ளது உண்மையாகிறது. பிறகு அந்த ஹாக்கர் பைத்தியக்காரத் தனமாகவோ, முட்டாள் தனமாகவோ அத்தகைய ஹாக்கிங்கை, அவ்வாறு சிரமப் பட்டு செய்திருக்க மாட்டான். “ஐ லவ் யூ” என்று கூட போட்டிருப்பான். ஆகவே, இது திட்டமிட்டு செய்யப் பட்ட ஹாக்கிங் எனலாம். சொல்லி வைத்தது போல, இவ்விவகாரம் அப்படியே அமுக்கப் பட்டு விட்டது. இதற்கு மேல் எந்த செய்தியும் இல்லை, விவாதமும் இல்லை. கப்சிப் என்றாகி விட்டது.

© வேதபிரகாஷ்

12-01-2022


[1]  தினமலர், 31-12-2022.

[2] மீடியான்.காம், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 லட்சம்: விளம்பர பலகையால் சர்ச்சை; உதயநிதி ஸ்டாலினுக்கு தொடர்பு?!, Karthikeyan Mediyaan News

[3] https://mediyaan.com/chennai-ambattur-advertisement-christian-conversion/

[4] தினமலர், மத மாற்ற விளம்பரம் அம்பத்துாரில் சலசலப்பு, Added : ஜன 01, 2023  00:16

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3207595

[6] பேக்ட்.செக், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறதா?, January 12, 2023 Fact Crescendo Team.

[7] https://tamil.factcrescendo.com/dmk-govt-not-paying-10-lakh-for-those-who-converting-to-christianity/

ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் கோடிகளில் ஊழல் ! – சிக்கும் இயக்குநர் –  1998லிருந்து என்ன நடக்கிறது, 2022ல் வரை தொடர்கிறதா? (2)

திசெம்பர் 12, 2022

ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் கோடிகளில் ஊழல் ! – சிக்கும் இயக்குநர் –  1998லிருந்து என்ன நடக்கிறது, 2022ல் வரை தொடர்கிறதா? (2)

2005 முதல் 2008 வரை கிருத்துவ மாநாடுகள் நடத்தியது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார். ஜனவரி 2007ல் இரண்டாவது மாநாடு நடத்தப் பட்டது. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம். இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது: எம். இஸ்ரேல்-தலைவர், ஜான் சாமுவேல்-செயலாளர், வீ. ஞானசிகாமணி–பொருளாளர் [அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி] என்று கூட்டம் கூடியது. உறுப்பினர்களுள் ஒருவராக வி.ஜி.சந்தோசம் இருந்தார். இன்னொரு உறுப்பினர் மோசஸ் மைக்கேல் பாரடே [போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு]. இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்கப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது.

The research turns from Murugan to Jesus Christ to “Doubting Thomas” to Bhodhi Dharma to Tirukkural and Tiruvalluvar…………….These titles resemble M. Deivanayagam, who conducts spurious research on ‘doubting Thomas,’ in the lines of Acharya Paul and Arulappa!

1998லிருந்து 2022 வரை ஊழல் தொடர்கிறதா?: ஜான் சாமுவேலுக்கும் ஊழலுக்கும் ஏற்கெனவே தொடர்புகள் வழக்குகள் உண்டு. இந்நிலையில் தான், இப்பொழுது, 2022ல், நக்கீரன்[1], ஜான் சாமுவேல் சிக்கிக் கொள்கிறார், என்று செய்தி வெளியிட்டுள்ளது, “ஊழல் குற்றச்சாட்டு நிரூபனம் ஆனப் பிறகு, செங்கல்பட்டு நீதிமன்றம் ஜான் சாமுவேல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. ஜான் சாமுவேல் தான் குற்றவாளி இல்லை தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்தும் ஆராய்ச்சி செய்ய, புத்தகங்கள் வெளியிட, கட்டிடங்களுக்காகவும், கோடிகளில் நிதியுதவி பெற்றதாக உள்ளது”. 2017க்குப் பிறகு நிதியுதவி நின்று விட்டது, என்கிறது நக்கீரன்! ஆனால், இதைப் பற்றியெல்லாம் யாரும் கண்டுகொண்டதாக இல்லை.

போதி தர்மன் ஆராய்ச்சியும், ஜான் சாமுவேலும்: 2013ல் சீனத்துறவியும், ஷோலின் கோயிலின் நிர்வாக இயக்குனருமான ஷி யான் லின் தலைமையில் ஒரு குழு காஞ்சி நகருக்கு வந்தார். சீனா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் நிதியுதவியின் மூலம் போதி தர்மருக்கு நினைவிடம் அமைக்க முயன்று வரும் சென்னையை சேர்ந்த பண்டைய கல்வி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான ஜான் சாமுவேலுடன் ஷி யான் லின் ஆலோசனை நடத்தினார்[2]. இரண்டு ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இத்திட்டம் முடிவடைந்தால் உலகத்தரம் வாய்ந்த புத்த மத தத்துவ மையமாக இது உருவெடுக்கும் என ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார்[3]. எட்டாம் ஆம் நூற்றாண்டில் சீனாவுக்குப் பயணம் செய்து மஹாயான பௌத்தத்தின் சான் (ஜப்பானிய ஜென்) பள்ளியைத் தொடங்கிய தென்னிந்திய பௌத்த துறவியின் நினைவாக, இந்தியத் தத்துவத்திற்கான போதிதர்ம மையத்தைத் தொடங்குவதற்கு, காஞ்சிபுரத்தில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தை சமீபத்தில் நிறுவனம் கையகப்படுத்தியது. இனி, “நக்கீரன்” சொல்வதைப் பார்ப்போம்:

ஆசியவியல் ஆய்வு நிறுவன பெயர் வைத்துவெளிநாடு வாழ் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடிகளைப் பெற்று ஊழல் செய்த ஜான் சாமுவேல்: ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் பெயரை வைத்து பல கோடி ரூபாய் அரசுப் பணத்தை ஏமாற்றியதோடு வெளிநாடு வாழ் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடிகளைப் பெற்று ஊழல் செய்த இந்நிறுவனம் மீது முதல்வரின் தனிப்பிரிவு விசாரணை அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. 1982ம் ஆண்டு தமிழக அரசு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுக்க, ஜப்பானிய நிதி உதவியோடும் தொடங்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதியரசர் கிருஷ்ண ஐயர், குழந்தைசாமி, பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் கொண்ட கமிட்டி உருவாக்கப் பட்டு அந்த கமிட்டிக்கு ஜான் சாமு வேல் இயக்குநராக செயல்பட்டு வந்துள்ளஆர். ஆய்வுக்காக நிதி உதவிய சூ ஃகிக்கோசக் காவுடன் [ Dr. Shu Hikosaka], இவர் ஊழல் செய்கிறார் என்று கண்டறிந்து அந்த கமிட்டியிடம் புகார் கொடுத்தார். புகாரி மீது எந்த நடவடிக்கையும் இல்லாதலால் தன்னுடையநாடான ஜப்பானுக்கே திரும்பிச் சென்றுள்ளார்.

கலாச்சார பண்பாட்டு மையக் கட்டிடம் கட்டுவதற்காக மத்திய அரசு கொடுத்த 10 லட்சம் பெற்றது: ஜான் சாமுவேல் 2001ம் ஆண்டு கலாச்சார பண்பாட்டு மையக் கட்டிடம் கட்டுவதற்காக மத்திய அரசு கொடுத்த 10 லட்சத்துக்கு போலியான கட்டிடப் படத்தைக் காட்டி ஏமாற்றி தன்னுடைய சொந்த செலவிற்கு எடுத்துக் கொண்டாதாக மாதவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்[4]. சி.பி.சி.ஐ.டி விசாரித்து அங்கு அப்படி ஒரு கட்டிடமே இல்லை என வழக்கு பதிவு செய்தது[5].  இதனைத் தொடர்ந்து இயக்குநராக இருந்த ஜானை நிக்கம் செய்து விட்டு, புதிதாக கொடுமுடி சண்முகத்தை இயக்குநராக நியமித்தது. இதனையறிந்த ஜான் அடியாட்களுடன் உள்ளே நுழைந்து அனைவரையும் மிரட்டி இன்னும் வழக்கு முடியவில்லை நாந்தான் இயக்குநர் என தன்னைத்தானே நியமனம் செய்து கொண்டார். தமிழ் வளர்ச்சித் துறைக்காகவும், கட்டியங்களுக்கும், ஆய்வு புத்தகங்கள் பெற்றதாகவும் கூறி 2001ல் தொடங்கி 2012 வரையிலும் 1 கோடியே 27 லட்சங்கள் பெற்றுள்ளார். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் வெளிநாடுவாழ் தமிழர்கள், வெளிநாட்டு நிறுவன நிதி என எதையும் விட்டு வைக்கவில்லை.

Nakkeeran December 10-13, 2022 issues carried the corruption going on inside the Institute of Asian Studies, Chemmemchery.

Donations are taken in the name of the Institute…..

நீதிமன்றம் ஜான் சாமுவேல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியது: இந்த சூழ்நிலையில் தான், இவரை விடக்கூடாது என வழக்கைத் தீவிரப்படுத்திய ஆசியவியல் நிறுவன கமிட்டியைச் சேர்ந்தவர்கள் வழக்கு நடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதியானதை அடுத்து, ஜான் சாமுவேல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியது. இந்த நிலையில் தான்  குற்றவாளி இல்லை எனவும் தண்டனை ரத்து செய்ய வேண்டும் எனவும் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த ஆசியவியல் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்ற சந்தேகத்தின் பெயரில் பதிவுத் துறையில் மோசஸ் கேட்டிருந்த கேள்விக்கு, இந்த நிறுவனத்தின் பதிவு 2001ல் முடிந்து விட்டது எனவே பதிவு பெறாதது என பதிலளிக்கப் பட்டுள்ளது. எனவே பதிவே பெறாத நிறுவனத்தின் பெயரில் பொய்யான கணக்குகளைக் காட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பல கோடிகள் பெற்று ஊழல் செய்துள்ளார் ஜான். அதே நேரத்தில் பதிவு எண். 40/1982, 12-02-1982 அன்று செய்யப் பட்டது என்றுள்ளது.

போதி தர்மா ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனம்மோசடி: 2017க்குப் பிறகு அரசியமிருந்து வரும் நிதிகள் நின்ற நிலையில், மற்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் மதரீதியிலான ஆராய்ச்சி பெயரிலும் வசூலைத் தொடர்ந்து வருகிறார். போதி தர்மர் பெயரிலான ஆய்வு என்ற பெயரில் ஜப்பான்காரர் ஒருவரிடமிருந்து பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டு, போதி தர்மா ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில்காஞ்சிபுரத்தில் கட்டுவதாகச் சொல்லி அடிக்கல் நாட்டினார். தொகை வாங்கியதையடுத்து பணிகள் ஏதும் நடைபெறாதலால், இவரின் நேர்மையில் சந்தேகம் கொண்ட ஜப்பானியர், அப்பணியைப் பாதியிலேயே கைவிட்டுச் சென்று விட்டார். இது குறித்து கமிட்டி மெம்பர் மோசஸ், “இந்த முறைகேடுகளை கண்டறிந்து அரசிடம் இவர் பெற்ற ஒட்டுமொத்தத் தொகையும் திரும்பப் பெறவேண்டும். இந்நிறுவனத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும். காஞ்சிபுரம் பகுதியிலும் போதிதர்மா நிறுவனத்திற்க்காக வாங்கப்பட்ட இடத்தையும் அரசு விசாரணை நடத்தி கையகப்படுத்த வேண்டும்,” என்றார். இது குறித்து ஜான் சாமுவேலிடம் கேட்டபோது, “இந்த நிறுவனம் இன்று வரையிலும் மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது. என் மீதான காழ்ப்புணர்ச்சியில் போடப் பட்ட வழக்கு இது,” என தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

10-12-2022


[1]  நக்கீரன்,  ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் ஊழல் ! – சிக்கும் இயக்குநர், அ. அர்ண்பாண்டியன், டிசம்பர் 10-13, 2022,பக்கங்கள்.38-39.

[2] “The teaching of this great saint from the Tamil soil transformed the life and culture of people in China, Japan and many other south-east Asian countries. A memorial at his birth place will be a fitting tribute to the great son of India,” Samuel said. Kancheepuram was a major centre of Buddhist learning in the first few centuries of Christian era, but lost its importance under the onslaught of Shaivism and Vaishnavism,” he added.

Times of India, Bodhidharman to get memorial in Kanchi, HUSSAIN KODINHI / TNN / Dec 25, 2013, 00:51 IST.

[3] Shi Yan Lin, a monk who is executive director of the Shaolin Temple in China, visited the place a few days ago to finalise modalities of the tie-up with IAS. “It is a very ambitious project. Once completed, it will be a world class centre for Buddhist philosophy and a meeting point of Indian and Eastern cultures,” said G John Samuel, director of IAS. The institute has purchased two acres of land for the project.

https://timesofindia.indiatimes.com/city/chennai/bodhidharman-to-get-memorial-in-kanchi/articleshow/27869229.cms

[4] நக்கீரன், ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் ஊழல் சிக்கும் இயக்குனர்!, அருண்பாண்டியன் – ஸ்டாலின், Published on 10/12/2022 (06:03) | Edited on 10/12/2022 (07:12)

[5] https://www.nakkheeran.in/nakkheeran/director-asia-studies-institute-corrupt/director-asia-studies-institute-corrupt

கலைவாணர் அரங்கத்தில் இந்து மத மாநாடு, தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்ள இருக்கிறார் – இப்படி தடாலடியாக கிருத்துவர் நடத்தும் நிகழ்ச்சி! (1)

ஒக்ரோபர் 22, 2022

கலைவாணர் அரங்கத்தில் இந்து மத மாநாடு, தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்ள இருக்கிறார்இப்படி தடாலடியாக கிருத்துவர் நடத்தும் நிகழ்ச்சி! (1)

கிருத்துவர் நடத்தும் இந்துமத மாநாடு: “இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்த அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[1]. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தெய்வநாயகம் தாக்கல் செய்துள்ள வழக்கில்[2], தனக்கு சம்பந்தமே இல்லாத விவகாரங்களைக் குறிப்பிட்டு வழக்கு போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது. இதுவரை, அவர் மற்றும் அவருக்கு ஆதரவு கொடுத்து வரும் கிருத்துவ பிஷப்புகள் கத்தோலிக்க நிறுவனங்கள் மற்ற இயக்கங்களின் செயல்பாடுகளை கவனித்தால், வேண்டுமென்றே பிரபலம் பெற வேண்டும், நீதிமன்றம் வைத்துக் கொண்டு விளம்பரம்  பெற வேண்டும், என்ற நோக்கத்தில் தொடரப் பட்ட வழக்கு என்பதனை தெரிந்து கொள்ளலாம். முன்பே இவ்வாறு பலமுறை பல இடங்களில் மாநாடு நடத்துகிறேன் என்று கலாட்டா செய்திருக்கிறார்[3].

மனுவில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது?: மனுவில் சொல்லப் பட்டுள்ளதாவது, “இந்து ராஷ்ட்ரா என்ற பெயரில் புதிய வரைவு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது குறித்து ஆர்எஸ்எஸ் திட்டமிடுவதாக செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது[4]. இந்திய விடுதலைப் போராட்டத்தில் எவ்வித பங்கையும் அளிக்காத ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்து மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கும் வகையிலும், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் வரைவு அரசியலமைப்பை உருவாக்கி இருக்கிறது[5]. மத சார்பின்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையிலும், யாரும் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடனும் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது[6]. இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில்கபாலீஸ்வரர் கோவிலின் கல்வெட்டிலிருந்து இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்என்ற தலைப்பில் மாநாடு நடத்த அரங்கம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்ள இருக்கிறார். கூட்டத்திற்கு தமிழக அரசிடம் அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. எனவே எனது மனுவை பரிசீலித்து, மாநாட்டிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தினசரி,” என்ற இணைதளம் அதை அப்படியே காப்பியடித்து செய்தியாகப் போட்டுள்ளது[7]. இந்த செய்தி ஏன், இதன் பின்னணி என்ன, போன்ற விசயங்களை ஆய்வதில்லை, படிப்பவர்களுக்குத் தெரிவிப்பது இல்லை. இணைதளத்தில் என்ன கிடைத்தாலும், காப்பியடித்து போட்டு விடவேண்டும் என்ற ஒருவிதமான வெறியுடன் செயல்பட்டு வருகிறார்கள். இதனை இந்துத்துவவாதிகளும் செய்து வருகிறார்கள்.

இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்என்ற தலைப்பில் மாநாடு: என்று அந்த தன்னை “ஆராய்ச்சியாளர்” என்று சொல்லிக் கொண்டு உலா வரும் அந்த நபர், அடிப்படைவாத கிருத்துவர், இந்துமத துவேசி மற்றும் ஓப்பீட்டு ஆராய்ச்சி போர்வைவில் அரைகுறை வேக்காட்டுகளை புத்தகங்களாக போட்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார், போன்றவை விவாதத்தில் இருந்து வருகின்றன. “கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர்” என்று பிரகடனப் படுத்திக் கொள்வதால், அவருக்கு – தெய்வநாயகம்- ஏதாவது லாபம் கிட்டுமே தவிர, அக்கல்லூரிக்கு இழுக்கு தான் ஏற்படும்[8]. ஒருவேளை அக்கல்லூரியே அத்தகைய, போலி ஆராய்ச்சிகளை ஊக்குவித்தால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், அங்கிருந்து தான் “மோசஸ் மைக்கேல் பாரடே,” என்ற பெயரில், ஒருவர் “சித்தர் ஆராய்ச்சி” என்று புரட்டி வருகிறார். “அகத்தியர் ஞானம்” மோசடி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[9]. இப்படி இத்தகைய கிருத்துவர்கள், இந்து மதத்தை தெரிந்து கொள்வோம் என்று மாநாடு நடத்துகிறேன் என்று கிளம்பியுள்ளதை கவனிக்க வேண்டும்.

இந்துவிரோதிகள்இந்துத்துவவாதிகள் ஒத்துழைப்பது ஏன்?: அரசியல் காரணங்களுக்காக, இந்துத்துவவாதிகளும், கிருத்துவர்களுடன் சேர்ந்து வேலை செய்கிறார்களோ என்று கூட சந்தேகிக்க வேண்டியுள்ளது[10]. முழு விவரங்களை புகைப்படங்களுடன் ஐந்து பாகங்களாக பதிவு செய்துள்ளேன்[11]. 2017ல் எல்லீஸர் விருது கொடுக்கும் விழா என்று, அவர்கள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்[12]. இதைப் பற்றிய முழு விவரங்களை புகைப்படங்களுடன் 17 பாகங்களாக பதிவு செய்துள்ளேன். கடந்த நவம்பர் 2021லும் இவர்களும் தெய்வநாயகத்திற்கு ஜால்றா அடித்ததும் திகைப்பாக இருக்கிறது. மதம் மாறிய கிருத்துவர் மற்றும் முஸிம் எஸ்.சி / பட்டியல் ஜாதியினருக்கும் இந்துக்களைப் போன்றே இடவொதிக்கீடு கொடுக்க கமிஷனை அரசு உண்டாக்கியுள்ளது. இந்துத்துவவாதிகள் அரசியலில் ஊறி விட்டதாலும், பலன்களை அனுபவிக்க ஆரம்பித்து விட்டதாலும், சித்தாந்தம் நீர்த்துப் போக ஆரம்பித்து விட்டது. இதை இந்துவிரோதிகள் நன்றாக அறிந்து கொண்டுள்ளார்கள். இதனால் தான் திருமாவளவன், சீமான் போன்றோரும், திக-திமுகவினரும் தொடந்து இந்துமதத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பல நேரங்களில் சேர்ந்தும் செயல்படுகிறார்கள். ஆனால், இந்து-இந்துத்துவம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தான் பிரிந்து கிடக்கிறார்கள். அதனால், மற்ற இந்துக்கள் இவர்கள் அனைவராலும் பாதிக்கப் படுகின்றனர்.

திராவிடத்துவம் நோக்கிச் செல்லும் இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது:  திராவிடம் நோக்கி செல்லும் இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. கிருத்துவர்கள் மதங்களுக்கு இடையிலான உரையாடல், உள்-கலச்சாரமயமாக்கல், போன்ற திட்டங்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், இந்துக்களில் பெரும்பாலோருக்கு இவைப் பற்றி தெரியாமலேயே இருக்கின்றனர் (இதைப் பற்றியெல்லாம் நிறைய பதிவு செய்துள்ளேன்). இப்பொழுது பணம், பதவி, விருது போன்றவற்றிற்கு ஆசைப் பட்டு வேலை செய்யும் இந்துத்துவவாதிகளை “அரசியல் இந்துத்துவவாதிகள்” என்று அடையாளம் காண வேண்டியுள்ளது. நிச்சயமாக இவர்கள் அரசியல் ரீதியில் பல விசயங்களில் கொள்கைகளை விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்கிறார்கள்(compromise, negotiate and / or  surrender), உடன்படிக்கை ஏற்பட்டால் சரண்டரும் ஆகி விடுகின்றனர். சில குறிப்பிட்ட மனிதர்களை ஊக்குவிக்கும் பொழுது, மற்றவர்கள் அவர்களுக்கு துணையாக விவரங்களை சேகரித்துக் கொடுக்க வேண்டும். அப்பொழுது, ஏஜென்டுகளாகவும் செயல்படுகின்றனர். இங்கும் இந்துத்துவா நீர்த்து விடுகிறது. போதாகுறைக்கு, சில இந்துக்கள் தெரிந்தும்-தெரியாமலும் இத்தகைய திட்டங்களுக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ உதவி வருகின்றனர். தெரிந்த சில இந்துக்களும் ஒன்றாக செயல்படாமல், தனித்தனியாக வேலை செய்கின்றனர். ஒருவேளை கிருத்துவர்களே அத்தகைய நிலை உருவாக, வேலைசெய்து, பிரிக்கிறார்கள் எனலாம். ஏனெனில், அவர்கள் பைபிளை குறைகூறுகிறேன், என்று விமர்சித்து, அடங்கி விடுகின்றனர். இதனால் தான் திராவிடத்துவம் நோக்கிச் செல்லும், இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. மறுபடியும் இன்னொரு அரசியல் நாடகம் அரங்கேறப் போகிறது. பாதிக்கப் படப் போவது அப்பாவி ஆனால் உண்மையான இந்துக்கள் தான்!

© வேதபிரகாஷ்

21-10-2022.


[1] தமிழ்.இந்து, இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்மாநாடு நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு, ஆர்.பாலசரவணக்குமார், Published : 20 Oct 2022 06:26 PM; Last Updated : 20 Oct 2022 06:26 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/885445-petition-filed-in-high-court-seeking-permission-to-knowing-hinduism-conference.html

[3]  இதுபோல, சில ஆண்டுகளுக்கு முன்னர், மயிலை மாங்கொல்லை என்ற இடத்தில் கூட்டம் போடுகிறேன் என்று கலாட்டா செய்தபோது, போலீஸ் இவருக்கு அனுமதி மறுத்து, சிவகாமிக்கு இடம் கொடுத்தனர்.

[4] தினசரி, இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்மாநாடு ந்டத்த உயர்நீதி மன்றத்தில் மனு, சக்தி பரமசிவம், 21-10-2022, 9.00 PM IST.

[5] https://dhinasari.com/latest-news/268333-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A.html

[6] இ.டிவி.பாரத், இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்மாநாட்டுக்கு அனுமதி வழங்க மனு..!, 21-10-2022, 6.00 PM IST.

[7]https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/petition-to-high-court-to-grant-permission-to-lets-know-hinduism-conference/tamil-nadu20221020223339612612234

[8]  இவர் லயோலா கல்லூரியில் வேலை செய்ததாகவும் உள்ளது, பிறகு அங்கு எப்படி, எந்த பதவியில் இருந்தார் என்று தெரிவிக்கப் படவில்லை.

[9] ஆச்சார்யா பாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட அதே நேரத்தில், அருளப்பாவின், “”புனித தோமையார்” என்ற புத்தகம் “குட் பாஸ்டர் பிரஸ்”, சென்னை – 600 001 என்ற அச்சகத்தினரால் வெளியிடப்படுகிறது[8]. உலகக் கிறிஸ்தவத் தமிழ் பேரவை, “முதல் உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாடு” என்று திருச்சியில் டிசம்பர் 28 முதல் 30 வரை 1981ல் நடத்தியது.  ஞானசிகாமணி “அகத்தியர் ஞானம் [விளக்கவுரை]” என்ற புத்தகத்தை அங்கு வெளியிடுகிறார். அதற்கு “பாராட்டுரை” எழுதியது, பொன்னு ஆ. சத்திய சாட்சி! ஞானசிகாமணி வேதாகம மாணவர் பதிப்பகம் என்று வைத்துக் கொண்டு பிரச்சாரத்தை முடிக்கி விட்டார். திடீரென்று பிராமண எதிர்ப்பும் வெளிப்படுகிறது. எஸ். இம்மானுவேல் நரசுராமன் எழுதியதாக, “ஒரு பிராமணன் கண்ட பரப்பிரம்மம்” என்ற பிரச்சாரப் பிரசுரம் (ஏப்ரல் 1983) இவரது அறிமுகத்துடன் வெளியிடப்படுகின்றது. தெய்நாயகமும் தீவிரமாக செயல்பட்டார். 1984ல் சென்னை பல்கலைக்கழகத்தில் “கிறிஸ்தவ படிப்பிற்காக” ஒரு தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆரவாரமாக, தெரஸா அம்மையாரை வைத்தே திறந்து வைக்கப்பட்டது[10]. இதற்கும் அருளப்பா தான் நிதியுதவி அளித்தார். பிப்ரவரி 5, 1986ல் போப் ஜான் பால் II சென்னைக்கு விஜயம் செய்கிறார். இந்த சந்தர்ப்பத்தை அருளப்பா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

[10]  வேதபிரகாஷ், கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1), பிப்ரவரி 19, 2009.

[11] https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/

[12]  வேதபிரகாஷ், திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1),

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)

ஒக்ரோபர் 17, 2022

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாதாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)[1] ] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடியுள்ளார்கள். தாய்லாந்து கலாச்சார அமைச்சர் இத்திபோல் குன்ப்லோம் [Itthiphol Kunplome] வரவேற்று, பாங்காக்கின் ஆர்ச் பிஷப் பிரான்சிஸ் சேவியர் கிரியாங்சக் [Cardinal Francis Xavier Kriengsak Kovitvanich, archbishop of Bangkok] மற்றும் ஜோசப் சுசாக் சிரிசுத், தாய்லாந்தின் பிஷப் கான்பரன்ஸ் தலைவர் [Joseph Chusak Sirisuth, president of the Catholic Bishops’ Conference of Thailand] பங்கு கொள்கின்றனர்[2]. ஆசியாவிலுள்ள சர்ச்சுகளின் நிலைப்பாடு, மதமாற்றம், அதை எப்படி செயல் படுத்துவது போன்ற விவகாரங்களை வெளிப்படையாகவே பேசி விவாதிக்கப் பட்டது. அக்டோபர் 14 இவ்வெள்ளியன்று பாங்காக்கில் உள்ள புனித மைக்கேல் அரங்கத்தில், பான் பூ வான் இறையியல் மையத்தில் [Baan Phu Waan Pastoral Center] மாநாடு தொடர்ந்து நடந்து வருகிறது[3]. இது நகோன் பதோம் மாகாணத்தில், சாம் பரன் என்ற இடத்தில், பாங்காக்கிற்கு அருகில் [Sam Phran district of Nakhon Pathom, which is adjacent to Bangkok] உள்ளது. தமிழில் இச்செய்தி இன்னும் வெளிவரவில்லை, வாடிகன் செய்தி சுருக்கமாக வெளியிட்டுள்ளது[4].

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகள்: கார்டினல் சார்லஸ் முவாங் போ (Chales Muang Bo) என்பவர் இதன் தலைவர் ஆவார்[5]. இது அக்டோபர் 12 முதல் 30 வரை நடைபெறுகிறது[6]. போப் பால்VI [Pope St. Paul VI] 2020ம் ஆண்டில் நடைபெறவிருந்த இம்மாநாடு COVID-19 பிரச்சினையால் தள்ளி வைக்கப் பட்டு, இப்பொழுது நடைபெறுகிறது[7]. இதில் 29 ஆசிய நாடுகளின் 17 கார்டினல்கள், 150 ஆசிய பிஷப்புகள், 270 பிரதிநிதிகள் மற்றும் 50 அழைக்கப் பட்டுள்ள விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்[8]. குறிப்பாக வாடிகனிலிருந்த வந்துள்ள முக்கியஸ்தர்களும் இதில் அடங்குவர். FABC உறுப்பினர் நாடுகள் – ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், புரூனெய், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கஜகஸ்தான், கொரியா, கிரிகிஸ்தான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தைவான், சிங்கப்பூர், ஶ்ரீலங்கா, தைமூர்-லெஸ்தே, தாய்லாந்து, சீனா மற்று சிறப்பு அந்தஸ்தில் இருக்கும் மக்கவோ மற்றும் ஹாங்காங் முதலியவை[9].

கொரோனா காலத்தில் கிருத்துவம் படுத்தது: கொரோனா காலத்தில் நிறைய கிருத்துவர்கள் சர்ச்சை முழுவதுமாக மறந்து விட்ட நிலை, வாடிகனுக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனனில் அக்கால கட்டத்தில் சர்ச் உதவியது போன்ற செய்திகள் வெளிவரவில்லை. மாறாக, கிருத்துவப் பிரசிங்கிகள் “ஏசு காப்பாற்றுவார்” என்று கூவிக் கொண்டிருந்தனர். கேரளாவில் நடந்த கிருத்துவ மாநாடுகளில் கலந்து கொண்ட ஆயர்கள் தொற்றினால் இறந்தனர். அதாவது, அவர்களையே ஏசு காப்பாற்றவில்லை. 2020-2022 காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளே பெருமளவில் பாதிக்கப் பட்டது. சீனா அந்த தொற்றுக்கு காரணம் என்று எடுத்துக் காட்டப் பட்டது. அதே நேரத்தில் 130 கோடி மக்கள் தொகை கொன்ட இந்தியா, அத்தொற்றிலிருந்து மீண்டது. அதுமட்டுமல்லாது, மற்ற நாடுகளுக்கு தொற்று-தடுப்பு மருந்து கொடுத்து, பெருந்தொண்டாற்றியது.

இந்தியாவை குறி வைக்கிறதா, ஆயர் மாநாடு?: இதனை -FABCஐ 1970ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஆரம்பித்தார். “பெரிய சக்திகளின் கைகளில் அகப் பட்டுச் சிக்கி தவிக்கிறது ஆசியா. குடியரசு தீய சக்திகளின் கைகளில் உள்ளது. நோய், பஞ்சம், பட்டினி என்று மனித சமுதாயம் அழுது வருகின்றது. மனிதர்களால் உண்டாக்கப் பட்டு வரும் அழிவுகளிலிருந்து விடுபட வேண்டும். சர்ச் இதற்காக எழும்புமா?,” என்று போ வினா எழுப்பியுள்ளார்[10]. நிச்சயமாக, இந்தியாவின் எழுச்சி, உலக நாடுகளை பாதிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, வாடிகன் எச்சரிக்கையுடன் அணுக முடிவு செய்துள்ளது. அதனால், வழக்கம் போல, உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] என்ற பழைய பல்லவிகளை மீட்டியுள்ளது.

மாநாட்டின் குறிக்கோள், திட்டம்: ஆசியாவில் இப்பொழுது 383 million கிருத்துவர்கள் இருப்பதாகவும், அது மொத்த ஆசிய ஜனத்தொகையான 4.56 billion  வெறும்  8 percent  ஆகும் என்று உலக கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் [Center for Global Christianity at Gordon Conwell Theological Seminary] எடுத்துக் காட்டுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தைமூர் நாடுகள் மட்டும் தான் பெருமளவில் கத்தோலிக்க நாடுகளாக இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும், சர்ச்சுகள் தங்களுடைய மிஷினரி செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும் என்று போ தொடர்ந்து பேசினார்.

1970ல் போப் பால்VI ஆரம்பித்தபோது, கூறிய மூன்று அறிவுரைகள்[11]:

  1. நற்செய்தியை அறிவிப்பது [ proclaiming the Good news], 
  2. ஞான ஸ்தானம் பெற்ற விசுவாசிகளின் நம்பிக்கைகளுக்கு ஏற்ற முறையில் நற்செய்தியை அறிவிப்பது [ad gentes; deepening the faith of the baptized];  மற்றும்
  3. மதம் ஆறுபவர்களை மதம் மாற்றுபவர்களாக மாற்ற சக்தியூட்டுவது [energizing the evangelized to become evangelizers]

அதாவது உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] போன்ற முறைகளால், தீவிரமாக உழைத்து மதம் மாற்ற வேண்டும் என்று கூறுவது கவனிக்கத் தக்கது. ஆசிய அத்தோலிக்க சர்ச்சுகள் மற்றும் நிறுவனங்களின் பொதுவான தன்மை, நாடுகளுக்கு இடையேயுள்ள வேற்றுமகளைக் கணடறிதல், ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுதல் போன்றவற்றின் அடிப்படையில்  ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தாய்லாந்தில் இடம்பெற்றன. அதன் படி, ஆசிய சர்ச்சுககளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப் பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களை இரண்டாம் நாள் பகிர்ந்து கொண்டனர். ஒன்றுகூடி இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர்..

செய்ய வேண்டிய திட்டப் பணிகள்: ஆசிய சந்திப்பு என்னும் கருத்தில் ஆசிய அவைகளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப்பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து CCEE என்னும் ஐரோப்பிய ஆயர் பேரவையின் பேராயர் Gintaras Linas Grusas அவர்கள், ஐரோப்பிய சர்ச்சுகள் குறித்த ஒப்புமை, அதன் நம்பிக்கைகள், முன்னோக்கிய பயணத்திற்காக மேற்கொள்ளும் பணிகள், தூண்டுதல் தரும் ஆசிய ஆயர் பேரவையில் கலந்துரையாடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார். இந்தியாவின் Daughters of St. Paul   என்னும் புனித பவுலின் புதல்வியர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை வழிபாடு, கர்தினால் Cleemis அவர்களின் தலைமையில் திருப்பலி, என தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் கூட்டமானது, கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் [Oswald Gracias, Convener of FABC 50] அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.

© வேதபிரகாஷ்

17-10-2022.


[1]  ஆசிய பிஷப் கான்பரன்ஸ்களின் கூட்டமைப்பின் இணை தளம் –https://fabc.org/

[2] https://businessmirror.com.ph/2022/10/16/asias-catholic-bishops-open2-week-conference-in-bangkok/

[3] வாடிகன்.செய்தி, ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள், மெரினா ராஜ் – வத்திக்கான், 15 October 2022, 14:16.

[4] https://www.vaticannews.va/ta/church/news/2022-10/fabc-info-and-material-relating-to-the-general-conference-of-t.html

[5] Bangkok Post, Asia’s bishops gather, Published; 12 October 2022, at 04:00.

[6] https://www.bangkokpost.com/thailand/general/2412288/asias-bishops-gather

[7] Agentia.fides, ASIA – The jubilee assembly of the Federation of Asian Bishops’ Conferences: “And they took another path”, Tuesday, 11 October 2022.

[8] http://www.fides.org/en/news/72916-ASIA_The_jubilee_assembly_of_the_Federation_of_Asian_Bishops_Conferences_And_they_took_another_path

[9] Business Mirror, Asia’s Catholic bishops open 2-week conference in Bangkok, BY JOSE TORRES JR . / LICAS.NEWS VIA CBCP NEWS, OCTOBER 16, 2022

[10]  Crux.now, Asian Church ‘exists to evangelize,’ cardinal tells bishops, By Nirmala Carvalho, Contributor, Oct 14, 2022“.

The Asian church stands in front of the burning bush of existential problems of Asia: Exploitation, nuclear winter, big power rivalry, despotic evil displacing democracy, the commodification of human tears, ecological holocaust, pandemic, millions in distress, migration, wars and displacement, natural and man-made disasters. Will the Asian church rise to the occasion?” Bo asked during his homily.

https://cruxnow.com/church-in-asia/2022/10/asian-church-exists-to-evangelize-cardinal-tells-bishops

[11] “The FABC started with the visit of Pope Paul VI who insisted: The church exists to evangelize. That is her core mission and identity. Pope Benedict articulated the New Evangelization with three objectives: proclaiming the Good news, ad gentes; deepening the faith of the baptized; and energizing the evangelized to become evangelizers,” the cardinal said

Crux.now, Cardinal says Asian church must remain prophetic, relevant, responsive, By Catholic News Service, Oct 14, 2022, Contributor

https://cruxnow.com/church-in-asia/2022/10/cardinal-says-asian-church-must-remain-prophetic-relevant-responsive

லாவண்யா அப்பா-அம்மா-தாத்தா-பாட்டி-மாமா விசாரணை, சரி, பிறகு ஏன் பள்ளி, விடுதி, பிரான்சிஸ்கன் சிஸ்டர்ஸ் என்றெல்லாம் விசாரிக்கவில்லை? செக்யூலரிஸம் வேலை செய்யவில்லையா? (4)

ஜனவரி 31, 2022

லாவண்யா அப்பா-அம்மா-தாத்தா-பாட்டி-மாமா விசாரணை, சரி, பிறகு ஏன் பள்ளி, விடுதி, பிரான்சிஸ்கன் சிஸ்டர்ஸ் என்றெல்லாம் விசாரிக்கவில்லை? செக்யூலரிஸம் வேலை செய்யவில்லையா? (4)

யூடியூப் சேனலுக்கு பேட்டி பாட்டி பேட்டி: இந்தநிலையில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த மாணவியின் பாட்டி நித்யானந்த சரஸ்வதி என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.அந்த பேட்டியில் அவர், “லாவண்யாவின் தாய் 8 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அதன்பிறகு தஞ்சையில் உள்ள பள்ளி விடுதியில் தங்க வைக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவரது சித்தி லாவண்யாவின் கன்னத்தில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாக மாணவியின் தோழிகள் தனக்கு தெரிவித்தார்கள். எனவே நான் சம்பவம் குறித்து சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் தெரிவித்தேன். சைல்டுலைன் ஊழியர்கள் சிறுமியை சந்தித்தபோது சித்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்,” என தெரிவித்து இருந்தார். இவ்வாறு, இப்பொழுது, இந்த யு-டியூப் கலாச்சாரமும் பெருகிவிட்டது. பேட்டி கொடுக்கவும் மக்கள் தயாராகி விடுகின்றானர். நாங்கள் இப்படி கேள்வி கேட்போம், நீங்கள் இப்படி பதில் சொல்லுங்கள் என்ற தொரணையில் தான் வீடியோ-பேட்டி நடக்கின்றன.

29-01-2022 – லாவண்யா தாத்தாபேட்டியிடம் போலீஸார் விசாரணை: இந்த பேட்டியை தொடர்ந்து தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் சரவணம்பட்டி எழில் நகருக்குச் சென்று நித்யானந்த சரஸ்வதியையும், அவரது கணவரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். 30 நிமிடங்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவின் உறவினர் திருப்பூர் பனியன் கபெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும், அவர் மாணவி இறப்பதற்கு முன்பு அவரை சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். பின்னர் அவர் யூடியூப் சேனலில் கூறியதை போலீசார் வாக்குமூலமாக வீடியோ எடுத்தனர்[1]. அப்போது நித்யானந்த சரஸ்வதி தனக்கு தலைசுற்றுவதாக அதிகாரிகளிடம் கூறினார். உடனடியாக, அவரது மகன் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து போலீசார் தேவை பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என அவரிடம் தெரிவித்தனர்[2].

சிறுமியின் தாய்மாமா பிரபாகரனிடம் விசாரணை: சிறுமி விஷம் குடித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ​​திருப்பூரில் வசிக்கும் சிறுமியின் தாய்மாமா பிரபாகரன் தங்களை அழைத்து பேசியதையும் போலீஸ் விசாரணையில் தாத்தா பாட்டி தெரிவித்தனர்[3]. இதனையடுத்து திருப்பூரில் உள்ள மாணவியின் தாய்மாமா பிரபாகரனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 30-1-2022 அன்று காலை பிரபாகரனிடம், டிஎஸ்பி பிருந்தா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்[4].

 செக்யூலரிஸம் இப்படித் தான் வேலை செய்யும் போலிருக்கிறது: லாவண்யா அப்பா-அம்மா பிறகு, இப்படி லாவண்யா தாத்தா-பாட்டி-மாமா என்று அனைவரையும் விசாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். 20-01-2022 அன்று கன்னியாஸ்திரி சஹாய மேரி சிறார் கொடுமை சட்டத்தின் கீழ் கைதானது பற்றி கத்தோலிக்கக் குழுக்கள் விவாதிக்கின்றனர்[5]. கத்டோலிக்க ஆயர் குழு அறிக்கைப் பற்றி முன்னமே குறிப்பிடப் பட்டது. மோடி போப்பை சந்தித்து, உரையாடல் ஆரம்பித்துள்ள போது, கேரளாவில் கிருத்துவர்கள்-ஆர்.எஸ்.எஸ் உறவுகள் சுமுகமாக இருக்கும் பொழுது, தமிழக கத்தோலிக்கர் ஏன் இப்படி, திராவிடத்துவ நாத்திகர்-இந்துவிரோதிகளுடன் சேர்ந்து கொண்டு பணியாற்றுகின்றனர் என்பது புதிராக இருக்கிறது. இதைப் பற்றி கிருத்துவர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளார்கள்[6]. பிறகு, பள்ளி, விடுதி, பிரான்சிஸ்கன் சிஸ்டர்ஸ் . [the Franciscan Sisters of the Immaculate Heart of Mary (FIHM])[7], என்று எல்லோரையும் விசாரிக்கவில்லை. சட்டத்திற்கு முன்பாக எல்லோரும் சமம் என்றால், அவ்வாறு செய்யலாமே?

27-01-2022 லாவண்யா இறப்பு பற்றி விசாரிக்க பிஜேபி குழு அமைக்கப் பட்டது: இந்நிலையில், தஞ்சை மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த பாஜக சார்பாக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது[8]. இதுகுறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூரில் பள்ளி நிர்வாகத்தால் கட்டாய மத மாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்த கொண்டது கவலையும் வருத்தமும் அளிக்கிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட  குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார்[9].

குழு உறுப்பினர்கள் விவரங்கள்[10]:

  1. சந்தியா ரே, எம்.பி – மத்திய பிரதேசம்
  2. விஜயசாந்தி – தெலங்கானா
  3. சித்ரா தாய் வாக் – மகாராஷ்டிரா
  4. கீதா விவேகானந்தா – கர்நாடகா

இக்குழு 31-01-2022 அன்று தமிழகம் வருகிறது[11].

தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லைநேரடியாக தமிழகம் விரையும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்![12]: தஞ்சாவூர் மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தஞ்சாவூருக்கு குழுவை அனுப்பி உள்ளது. இதுகுறித்து என்சிபிசிஆர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு[13]: “தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டில் உள்ள சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளியின் மைனர் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்த புகாரை, குழந்தைகள் உரிமை ஆணையம் பெற்றுக்கொண்டது. இது குறித்து விசாரிக்க தலைவர் பிரியங்க் கனோங்கோ தலைமையிலான குழு தமிழகத்துக்கு வருகை தரவுள்ளது”.

என்சிபிசிஆர் வரவு, விசாரணை அரசியல் தாக்கம்: எனவே, வழக்கின் உண்மைகளை அறிய என்சிபிசிஆர் ஜனவரி 30 மற்றும் 31 க்கு இடையில் சம்பவ இடத்திற்கு வருகை தருகிறது. மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே விசாரணைக்கு ஆணையமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்றும் என்சிபிசிஆர் தெரிவித்துள்ளது. அதற்காக சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புலனாய்வு அதிகாரி அவர்களின் இருப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெற்றோரைச் சந்திப்பது, இறந்தவரின் வகுப்புத் தோழர்களுடன் உரையாடல், இறப்பதற்கு முன் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் இறந்தவரின் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் விசாரணை, பள்ளி அதிகாரிகளைச் சந்தித்தல் மற்றும் உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை, என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையம் தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை / மதரீதியிலான பிரச்சாரம் எதுவும் இல்லை: அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை என்றும்[14] மதரீதியிலான பிரச்சாரம் தலைமையாசிரியராலோ அல்லது ஆசிரியராலோ பள்ளியில் செய்யப்படவில்லை என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சரும் அதற்கான விளக்கத்தை வெளியிட்டார்[15]. ஆக, இந்நிலையில், இப்பிரசினை அரசியலாக்கப் பட்டு விட்டது. இனி, இந்திய ரீதியில், இப்பிரச்சினை அலசப்படும். மாணவி தற்கொலை, மதமாற்றம் விசயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நல்லது, ஆனால், அதே நேரத்தில் அரசியல் செய்வது கண்டிக்கத் தக்கது. செக்யூலரிஸம், சிறுபான்மையினர், கிருத்துவர் என்ற ரீதியில் தான், திமுக இவ்வாறான மோசமான அரசியில் செய்து வருகின்றது.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] மாலைமலர், தஞ்சையில் தற்கொலை செய்த மாணவி லாவண்யாவின் தாத்தாபாட்டியிடம் கோவையில் விசாரணை, பதிவு: ஜனவரி 30, 2022 17:31 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2022/01/30173109/3436229/Tamil-news-Lavanyas-grandparents-interrogated-in-Coimbatore.vpf

[3] நியூஸ்.18.தமிழ், மாணவி தற்கொலை வழக்கு: கோவையில் உள்ள தாத்தா பாட்டியிடம் விசாரணை, NEWS18 TAMIL, LAST UPDATED : JANUARY 30, 2022, 05:24 IST.

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-police-investigated-the-grand-parents-of-ariyalur-girl-mur-678465.html

[5] Sister Sahaya Mary, the 62-year-old hostel warden, was arrested under the Juvenile Act apart from charges of abetting suicide. The place is near Poondi Madha shrine that comes under the diocese of Kumbakonam. Jesuit Father Arockiasamy Santhanam, spokesperson for the National Lawyers Forum of Religious and Priests, says the First Information Report does not mention conversion. “It is the cook up story by the Hindutva elements,” he told Matters India January 21.

Matters India, Nun arrested after hostel girl dies by suicide in Tamil Nadu, By Matters India Reporter,  ON: JANUARY 22, 2022

[6] Father Kudanthai Gnani, editor of Namvazhvu, a Church weekly, says the girl, who died January 19, was a twelfth grader in Sacred Heart of Jesus Higher Secondary School in Kumbakonam diocese. The century-old school is situated in Michaelpatti near Thirukattuppalli in Thanjavur district. The girl had been staying in St. Michael’s Hostel from the eighth grade. The hostel is attached to the school and managed by the Congregation of the Franciscan Sisters of the Immaculate Heart of Mary, or the Pondicherry Blues, for the poor and the abandoned girls.

[7] The Congregation of the Franciscan Sisters of the Immaculate Heart of Mary (FIHM), was founded in Pondicherry, India, on 16th October 1844 by Rev. Fr. Louis Savinien Dupuis, Missions Etrangeres de Paris (Paris Foreign Mission Society, MEP). http://www.fihm.org/aboutus.html

[8] தினமணி, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மேலிடம், By DIN  |   Published on : 27th January 2022 05:14 PM.

[9] https://www.dinamani.com/india/2022/jan/27/bjp-forms-committee-to-assess-ariyalur-suicide-3781253.html

[10] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், தஞ்சை மாணவி மரணம்: நேரில் விசாரித்து அறிக்கை தர பா.. மேலிட குழு நியமனம், Written by WebDesk, January 27, 2022 3:37:30 pm.

[11] https://tamil.indianexpress.com/india/jp-nadda-formed-4-member-committee-to-investigate-thanjavur-girl-suicide-case-402959/

[12] கதிர்.செய்திகள் தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லைநேரடியாக தமிழகம் விரையும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்!, By : Anand T Prasad  |  30 Jan 2022 11:16 AM

[13] https://kathir.news/tamil-nadu/ncpcr-says-tamil-nadu-govt-not-cooperating-in-probe-of-m-lavanya-suicide-case-chairperson-led-team-to-visit-the-state-for-inquiry-1351506

[14] தமிழ்.ஆசியாநெட்.நியூஸ், Girl suicide: பள்ளியில் மத பிரச்சாரம் செய்யப்படவில்லை..அப்படி எந்த புகாரும் இதுவரை வரவில்லைபள்ளிகல்வித்துறை, Thanalakshmi V, Tamilnádu, First Published Jan 27, 2022, 7:26 PM IST, Last Updated Jan 27, 2022, 7:26 PM IST.

[15] https://tamil.asianetnews.com/politics/school-education-statement-about-girl-suicide-r6dg1o

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன்: மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506 (1) மற்றும் தொற்று நோய்பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ்வழக்கு பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன[1]. மத நம்பிக்கையைச் சீர்குலைத்தல், இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தது செல்லும்[2]. இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது. சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவர் டெஸ்மண்ட் டூட்டுவை இழந்து வாடியது[3]. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்[4].

அரசியல், அரசியலாக்கப் பட்ட  நீதித்துறை, திராவிடத்துவ குழப்பங்கள்சமரசங்கள் முதலியவ்ற்றின் தக்கம் காணப்படுகிறது: இவ்வழக்கில் வாதி-பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் தோன்றிய வழக்கறிஞர்கள் -லஜ்பத் ராய், அந்தோனி சஹாய பிரபாகர், Additional Public Prosecutor; விக்டோரியா கௌரி, ரம்யா, ஶ்ரீசரண் ரங்கராஜன், முதலியவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[5]. நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியின் சார்பிலும் நீதிபதிகள், சட்ட ஆலோசகர்கள், ACGSC, Solicitor General, போன்ற பதவிகளுக்குப் பிரித்து அளிக்கப் படுகிறது என்பது தெரிந்த விசயமே.  ஆட்சி-அதிகாரங்கள் இருக்கும்போது வாரியம், நிறுவனம் என்று எல்லாதுறைகளிலும் அத்தகைய பங்கு-விநியோகம் உள்ளது. “ஜெய்-பீம்” கூட குறிப்பிட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் பிம்பம் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதி என்பது தெரிந்த விசயமே. இப்பொழுது, பிஜேபி தமிழகத்தில் அழுத்தமாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், “செக்யூல்ரிஸ” நிலை நோக்கி நகரும் தன்மையும் புரிகிறது. கிருத்துவ-உரையாடல்களைப் பொறுத்த வரையில், இதெல்லாம் புதியதல்ல[6]. கேரளாவில் சர்ச் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உரையாடல்கள், நெருக்கம் முதலியன இப்பொழுது வெளிப்படையாகவே உள்ளன.

நீதிபதிகள் விமர்சனத்திற்கு உள்ளானது: சமீபத்தில் மாரிதாஸ் வழக்குகில் இதே நீதிபதி விமர்சனத்திற்குள்ளாக்கப் பட்டார். மூத்த பத்திரிகையாளரும், ‘அறம்’ இணைய இதழின் ஆசிரியருமான சாவித்ரி கண்ணன் விமர்சனத்தில் காரம் தூக்கலாகவே இருந்தது[7].“கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாகத் தொடரப்பட்ட வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். நேர்மையான விமர்சனங்களுக்கோ மாற்றுக் கருத்துகளுக்கோ இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மதத் துவேஷக் கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் எனப் பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மாரிதாஸுக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ் எப்படி போகிறது? மாரிதாஸுக்காக வழக்காடும் வழக்கறிஞரின் பின்னணி என்ன? வழக்கை நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டிய நீதிபதி மாரிதாஸின் கட்சிக்காராக வெளிப்படும் அவலத்தை என்னென்பது?’’ எனக் கடுமையாகச் சாடினார். தீர்ப்பு வழங்கிய நீதிபதி தொடர்பான பல சர்ச்சைக்குரிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின[8].

தீர்ப்பைப் பற்றிய என்னுடைய கமென்ட்ஸ்: தீர்ப்பை வழக்கம் போல பலதடவை படித்தேன். வெறுத்துப் போனதால், 09-01-2022 அன்று கீழ்கண்டவாறு பேஸ்புக்கில் பதிவு செய்தேன்:

1. பால் ஜான்ஸனின் புத்தகத்தைப் படித்தேன், தேவன் ஏசுவிகிறிஸ்துவிடம் காதல் கொண்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!

2. கிறிஸ்தவமற்ற காரியத்தை செய்தால் இறுதிநாள் தீர்ப்பன்று கர்த்தர் வாதியைக் கண்டிப்பார் என்று நான் உறுதியாக இருக்கிறேன்!

3. குற்றப் பத்திரிக்கை அவ்வாறே மூடப் படுகிறது, சம்பந்தப் பட்ட மனுக்களும் நிராகரிக்கப் படுகின்றன! வழக்கும் முடிக்கப் படுகிறது!

4. பாரத் மாதா கி ஜே, ஜெய் ஹிந்த், புண்ணிய பூமி, பூமா தேவி, போன்றவற்றிற்கு எல்லாம் வித்தியாசங்கள் இருக்கின்றன!

5. அட வெங்காயம், ஹுஸைனின் பாரத் மாதா சித்திரம் எல்லாம் ஜோராக்கத்தான் இருக்கிறது. அறிவிஜீவுகளே சொல்லிவிட்டன!

6. சிவன் பார்வதியுடன் விலையாடுவார், பார்வதி விநாயகருடன் விளையாடுவார், இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமடா………..

7. வெங்காயம், 20.07.2021 அன்றே வருத்தம் தெரிவித்து வீடியோ போட்டாச்சே, தெரியாதா? ஈவேராவை விட ஒன்றும் தூஷணம் செய்யவில்லையே!

8. அட இதெல்லாம் சட்டவிரோதமாகக் கூடிய கூடமே இல்லை. அவர்களுக்கு சொந்தமான சர்ச்சில் பேசியது. அவர்களுக்கு தொற்றுவியாதி எல்லாம் இல்லை!

9. கிருப்டோ கிறிஸ்டியன், ருத்ரதாண்டவம், ….மதமாற்றங்கள் எல்லாம் குழு-திட்டமே கிடையாது… அம்பேத்கர் கூட தூஷித்தார்…….ஆகவே….

10. சார்லஸ் டார்வின், கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸ், ரிச்சர்ட் டாவ்கின்ஸ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவூர்….எல்லாம் படிங்க வேங்காயங்களே.

மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா?: இது நிச்சயமாக ஒரு சட்ட/நீதி முன்மாதிரியை (Legal precedance) உண்டாக்கும், ஏனெனில், நாளைக்கு இதே வழிமுறையை வைத்து, சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன், உணர்ச்சிப் பீரிட்டு பேசினேன், பிறகு வீடியோ போட்டு மனம் வருந்திகிறேன் என்று சொல்லி விட்டேன் என்று குற்றஞ்சாட்டப் பட்ட வாதிகள் வாதிடுவார்கள். அவ்வர்களுக்கு சார்பாக தோன்றும் வழக்கறிஞர்கள் “Case Title: Fr.P.George Ponnaiah v. The Inspector of Police, Arumanai Police Station, Kanyakumari District, Kanyakumari and Ors,” என்று குறிப்பிடுவார்கள். இன்னொரு நீதிபதி, இது போன்று இன்னொரு தீர்ப்புக் கொடுப்பார். இப்படியே செல்லும். பிறகு, இந்த பிரிவுகள் எல்லாம் தேவையா, கருத்து சுதந்திரம் தானே முக்கிய என்றும் வாதிடுவார்கள். கருத்து சுதந்திரம் இங்கு எப்படி வரும், வந்தது? “சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன்,” எனும்போது, மோடி, அமித் ஷா, காந்தி, சேகர் பாபு என்று யாரும் கேட்க முடியாதே? கர்த்தர் தான் இறுதிநாள் தீர்ப்பில் கவனிப்பார், அவ்வளவே தான்! ஆமென்!

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] ஏபிபிலைவ், கிறிஸ்தவத்திற்கு எதிரான செயல்களை செய்ததற்காக ஜார்ஜ் பொன்னையாவை கடவுள் தண்டிப்பார்நீதிபதி, By: மனோஜ் குமார் | Updated : 08 Jan 2022 02:19 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/god-will-punish-george-ponniah-for-committing-acts-against-christianity-madurai-high-court-judge-gr-swaminathan-34339

[3] சமயம்.தமிழ், பிரதமர் குறித்து அவதூறு பேச்சுஜார்ஜ் பொன்னையாவிற்கு ஜாமீன் கிடைக்குமா?, Josephraj V | Samayam Tamil, Updated: 6 Jan 2022, 5:22 pm.

[4] https://tamil.samayam.com/latest-news/madurai/high-court-madurai-bench-adjourns-judgment-on-george-ponnaya-petition-till-7th/articleshow/88735042.cms

[5] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT-DATED: 07.01.2022; CORAM – THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN; Crl OP(MD)No.11021 of 2021 and Crl MP(MD)No.5632 of 2021.

[6]  ஶ்ரீசுதர்ஸன் அவர்களின் புத்தகமே சான்றாக உள்ளது. மோடி போப்பை சந்தித்தது, குறிப்பிட்ட சர்ச்சை ஆதரிப்பது, முதலியவற்றைப் பற்றி திரும்ப-திரும்ப எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

[7] சமயம்.தமிழ், மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து; மாறுபட்ட பார்வைகள், Written by எ. மணிமாறன் | Samayam Tamil | Updated: 15 Dec 2021, 4:11 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/the-case-against-maridhas-and-the-verdict-have-triggered-a-lot-of-controversies/articleshow/88298429.cms