Posts Tagged ‘பாஜக’

பாஜக-இந்துத்துவவாதிகளின் கிறிஸ்துவர்களுக்கான கிறிஸ்துமஸ் கால சினேஹ யாத்திரை ஏன் – அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள சமரசம் என்ன? (2)

திசெம்பர் 23, 2023

பாஜகஇந்துத்துவவாதிகளின் கிறிஸ்துவர்களுக்கான கிறிஸ்துமஸ் கால சினேஹ யாத்திரை ஏன்அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள சமரசம் என்ன? (2)

பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைக் கொண்டு நாங்கள் அனைத்து வீடுகளுக்கும் செல்கிறோம்: கேரள மாநில பா.ஜ.க சார்பில் `சினேக யாத்திரை’ என்ற பெயரில் கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் சர்ச்சுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து செல்லும் நிகழ்ச்சி 21-12-2023அன்று தொடங்கியது[1]. சீரோ மலபார் சபையின் செயின்ட் தாமஸ் மவுன்ட்டிலிருந்து இந்த யாத்திரையை பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தொடங்கினார்[2]. இது போன்று அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கிறிஸ்தவ மத தலைவர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்க உள்ளனர். இது குறித்து கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும் தேவாலயங்களுக்கும் சென்று சந்திக்கும் சினேக யாத்திரை என்ற மிகப்பெரிய கேம்பைன் தொடங்கிவிட்டது. பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைக் கொண்டு நாங்கள் அனைத்து வீடுகளுக்கும் செல்கிறோம். இதில் எந்த அரசியலும் இல்லை. கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனைத்து வீடுகளுக்கும் சொல்வது மட்டும்தான், இந்த சினேக யாத்திரையின் லட்சியம்.

2022ல் ஆரம்பித்த யாத்திரை 2023லும் தொடர்வது: சமுதாய சமத்துவம், சமுதாய ஒற்றுமை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இந்த யாத்திரை மேற்கொள்கிறோம். கடந்த ஆண்டும் சினேக யாத்திரை நடத்தினோம். ஆனால் எல்லா வீடுகளுக்கும் சென்று வாழ்த்து சொல்ல முடியவில்லை. இந்த முறை அனைத்து வீடுகளுக்கும் சென்று வாழ்த்து சொல்லவிருக்கிறோம். 21-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை 10 நாள்கள் தொடர்ச்சியாக கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துகள் சொல்ல உள்ளோம். காங்கிரஸ், சி.பி.எம் கட்சியினர் சொல்வதுபோல நாங்கள் இதில் எந்த அரசியலும் பார்க்கவில்லை. தேர்தலுக்காக இந்த யாத்திரையை நடத்தவில்லை. அரசியல் லாபம், நஷ்டம் குறித்த கணக்குகளை நாங்கள் பார்க்கவில்லை. எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல தான் இப்பேச்சு இருக்கிறது. ஏனெனில் கேரளாவில் சிபிஎம், காங்கிரஸ் முதல் கட்சிகள் எல்லாம் ஏமாந்த சோனகிரிகள் இல்லை. அவர்கள் நிச்சயமாக பிஜேபிக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். மேலும் சிபிஎம், காங்கிரஸ் எல்லாம் ஆட்சியில் இருந்து அதிகாரத்துடன் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அங்கு பிஜேபி இப்பொழுது தான் வளர்ந்து வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆட்சியை பிடிக்க முடியாது என்றாலும் அவர்கள் இத்தகைய முறைகளை எல்லாம் கையாண்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விஷயமே. ஆகையால் இது நிச்சயமாக அரசியல் தான், சர்ச்சுக்கும் பாஜக பரஸ்பர உறவுகள் என்பது மாநிலத்தில் அந்த அளவுக்கு இல்லாமல் இருந்தாலும், தேசிய அளவில் மற்றும் உலக ரீதியில் நிறைய சந்தர்ப்பங்கள், உரையாடல்கள் முதலியவை நடந்து வருகின்றன என்பதை மற்றவற்றிலிருந்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் கிறிஸ்துவர்கள் பிஜேபிக்கு சாதகமாக இருப்பார்களா?: மணிப்பூர் பிரச்சனையை மிசோரம் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய பிரசாரமாக முன்னெடுத்து சென்றது. ஆனால், காங்கிரஸுக்கு கடந்த முறை இருந்த சீட்டுகளும் பறிபோனது. கிறிஸ்தவ சமூகத்தை, பொய் பிரச்சாரம் மூலம் திசை திருப்ப முடியாது. 99 சதவிகித கிறிஸ்தவ மக்கள் உள்ள மிசோராமில் எங்களுக்கு இரண்டு மடங்கு சீட்டுகள் கிடைத்தன. ஓட்டும்  இரட்டிப்பாகி உள்ளது. காங்கிரஸும், சி.பி.எம் கட்சியும் தவறான பிரசாரம் செய்து வருகின்றன. அவர்களின் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த சினேக யாத்திரை பயனுள்ளதாக இருக்கும். காங்கிரஸைவிட சிறுபான்மையினருக்கு, அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சதீசனை யாராவது நம்புவார்களா. சதீசன் அகங்காரமாக செயல்படுகிறார். இது அனைவரும் சேர்ந்த ஒரு நாடு. காங்கிரஸை விட நம்பிக்கையும் ஆதரவும் பா.ஜ.க-வுக்கு சிறுபான்மை சமூகம் மத்தியில் உள்ளது” என்றார்.

உலக அளவில் மோடி மற்றும் இந்தியாவின் முக்கியத்துவம் அமரச்த்துடன் தான் நடந்து வருகிறது: மோடி உலக அளவில் பிரபலம் பெற்று வருகிறார் மற்றும் ஒரு சக்தி வாய்ந்த தலைவராகவும் உருவாகி அறியப்பட்டு வருகிறார். அதே முறையில் இந்தியாவும் உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது என்பதை எல்லாம் கவனிக்கும் பொழுது, நிச்சயமாக உலக அளவில் கிறிஸ்தவர்களின் ஆதரவு இல்லாமல் அவ்வாறு நடக்க முடியாது, என்பதையும் உலக அளவில் அறிந்து கொள்ளலாம். இதனால் தான் வடகிழக்கில் பொதுவாக கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் இடையில் பர்மா பிரச்சனை, மற்றும் வங்காள முஸ்லிம்களின் ஊடுருவல் பிரச்சினை இவையெல்லாம் சேர்ந்து வரும் நிலையில், அது இந்தியர்களுக்கு மட்டுமல்ல இது அதாவது இந்து மதத்தினருக்கு மட்டும் இல்லை, அது அங்கிருக்கும் பெரும்பான்மையான கிறிஸ்துவர்களையும் பாதிக்கப்பட்ட வருகிறது என்பது முக்கியமான விஷயமாகிறது.

மணிப்பூர் பிரச்சினையின் தீவிரம் மற்றும் தாக்கம் உலக அளவில் இருப்பதால், எதிர்கட்சிகளின் விமர்சனம் குறைந்து விட்டது: மணிப்பூர் பிரச்சினை மிகவும் தீவிரமான மற்றும் அதே நேரத்தில் எவரையும் பாதிக்க கூடிய மிகவும் மென்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சனையாகவும் உள்ளது. அங்கு மத பிரச்சனை என்பதைவிட பல இடங்களில் எல்லைகளை மீறிய தீவிரவாத செயல்கள், தீவிரவாதிகளின் போக்குவரத்து, போதை மருந்து விநியோகம், வியாபாரம் முதலியவை நடந்து வருவதால், அச்செயல்களில் ஈடுபட்டு இருக்கின்ற எல்லா குழும்பங்களுமே மிகவும் ஜாக்கிரதையாக, உக்கிரமாக என்ன நிகழும் அல்லது என்ன நிகழக் கூடாது என்று கணக்குப் போட்டுக் கொண்டு செயல்பாடுகளை நடத்தி வருகின்றன. அதனால் தான், முரண்பட்ட செய்திகள் வருகின்றன, சம்பந்தப் பட்ட எல்லோருமே அடக்கி வாசிக்கின்றன. ஆகையால், அரசியல் கட்சிகளும், முன்பு ஏதோ பெரிய அளவில் கேள்விகள் கேட்டு கலாட்டா-ஆர்பாட்டம் செய்தாலும், விலைவுகளை அறிந்து மௌனமாகி விட்டன.

இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவது அரசியலா, அல்லது வேறு உள்நோக்கம் உள்ளதா?: ஒரு பக்கம் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதார இணைப்புகள், உறவுகள், பரஸ்பர ஏற்றுமதி இறக்குமதிகள் முதலிய எல்லாம் பேசப்படுகின்றன. பொருளாதார ரீதியில் உலக வங்கியின் கடன், அமெரிக்கா ஐரோப்பிய நாட்டு தொழிலதிபர்களின் இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள், எல்லாமே மற்ற அயல்நாடுகளில் திடீரென்று இந்திய நாட்டு வம்சாவளியினரின் ஆதிக்கம் அரசியல் ரீதியிலும் வெளிப்படுவது கவனிக்கத்தக்கது. ஏனெனில் பொதுவாக முன்னரெல்லாம் இந்தியர்களுக்கு அத்தகைய உயர்ந்த பதவிகள் எல்லாம் கொடுக்கப்பட்டது இல்லை. இப்பொழுதும் இதில் குறிப்பாக அமெரிக்க பிரதி இங்கிலாந்து பிரஜை என்ற முறையில் தான் இவர்கள் அந்த பதவிகளை ஜனநாயக ரீதியில் பெற்றடைந்து உள்ளார்கள். முன்னால் எப்படி எவ்வாறு திடீரென்று இந்தியர்களுக்கு உலக அழகி பட்டங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு, ஊக்கிவிக்கப் பட்டார்களோ அதே போல இப்பொழுது இந்த விதமான அரசியல் மாற்றத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

அமெரிக்க-ஐயோப்பிய உறவுகளுக்கு காரணம் பொருளாதாரமா, மதமா?: இல்லை இத்தகைய மாற்றங்களை மதரீதியில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால், இதே அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் இந்திய இந்தியாவுடன் நெருக்கமான உறவுகள் ஏற்படும் நிலை, இந்திய வம்சாவளியினருக்கு உயர்ப்பகுதியில் அழிக்கப்படும் போக்கு மற்றும் இஸ்ரேலுடன் நெருக்கமான ஏற்படும் உறவுகள், இவற்றையெல்லாம் கவனிக்கும் பொழுது நிச்சயமாக கிறிஸ்துவ-இந்து உரையாடல்கள் பல நிலைகளில் ஏற்பட ஊக்குவிக்கப்படுகிறது என்பதனை புரிந்து கொள்ளலாம். எப்படி இருந்தாலும், ஒரு பக்கம் உலக அளவில் இஸ்லாமிய தீவிரவாதம், அதன் மூலமாக ஏற்படுகின்ற பொருளாதாரத் தாக்கம், குறிப்பாக எண்ணை வர்த்தகம் பாதிப்பு மூலம் எவ்வாறு உலகம் கஷ்டப்பட போகிறது என்ற கோணத்திலும் இப்பிரச்சனை அணுக வேண்டியுள்ளது. ஒருவேளை இந்தியா ஒரு முக்கியமான இடத்தில் இருப்பதாலும், அதனை சுற்றி உள்ள நாடுகளில் இஸ்லாம் மதம் தாக்கம் கொண்ட நாடுகள் சூழ்ந்திருப்பதினாலும், நிச்சயமாக மற்ற நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஆனால் ஒருவேளை பொருளாதார ரீதியில் அரசியல் ரீதியில் உலக சமரசங்களுடன் இத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்றும் சொல்லலாம்.

© வேதபிரகாஷ்

23-12-2023.


[1] விகடன், கேரளா `கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸைவிட பாஜக மீதுதான் அதிக நம்பிக்கை‘- சினேக யாத்திரை சென்ற பாஜகவினர், சிந்து ஆர், Published: 22-12-2023 at 7 AM; Updated: @2-12-2023 at 7 AM.

[2] https://www.vikatan.com/government-and-politics/bjp-relaunches-sneha-yatra-to-connect-with-christians-in-kerala

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர ஊடகங்களின் தாக்கு ஏன்? [1]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர ஊடகங்களின் தாக்கு ஏன்? [1]

Nakkeeran against Sarangi

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: பிரதாப் சந்திர சாரங்கி மே 30, 2019 அன்று பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற போது, பிரதாப் சந்திர சாரங்கி என்பவர் சிறுகுறு தொழில்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு துறை இணை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். கரகோஷத்துடன் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது, யார் இவர் என்ற கேள்வி எழுந்தது. அடுத்த நாளே அவரைப் பற்றிய செய்திகள் வெளியாகின. ஆனால், உடனே, அவருக்கு எதிராக செய்திகள் வர ஆரம்பித்தன. அவரது தேர்தல் விண்ணப்பத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றதை நேஷனல் ஹெரால்ட் என்ற காங்கிரஸ் நாளிதழ்  வெளியிட அதை வைத்து, மற்ற ஆங்கில நாளிதழ்கள், ஊதி பெரிதாக்கி செய்திகள் வெளியிட்டன. பிறகு, தமிழ் ஊடகங்களும் பிடித்துக் கொண்டன. உதாரணத்திற்கு “நக்கீரன்”…. “அப்போது அதிகமாக பேசப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி. மிகவும் எளிமையானவர், சைக்கிளில்தான் செல்வார், ஒடிஷாவின் நரேந்திரமோடி என்றெல்லாம் புகழ்ந்தனர். ஆனால் அந்த எளிமை, எளிமை என்ற புகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கொடூரம் அநேகருக்கு தெரியாது, என்று “நக்கீரன்” பீடிகையுடன் ஆரம்பித்தது[1]. மற்றதை கீழே படிக்கலாம்.

Nakkeeran against Sarangi-2

அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன: நக்கீரன் தொடர்கிறது, “64 வயதான அவர் சைக்கிளில் செல்கிறார், மண்வீட்டில்தான் வசிக்கிறார், பிரச்சாரத்தைகூட ஆட்டோவில் சென்றுதான் செய்தார். என்றெல்லாம் அவரின் எளிமையான பிம்பம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குபின் இருக்கும் கொடூரம் அந்த எளிமையான பிம்பத்திற்கு பின்னால் மறைந்துவிட்டது. அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்அவரின் மொத்தசொத்து 16.5 இலட்சம். கையிருப்பு தொகை 15,000. அதேபோல் அவர்மீது அச்சுறுத்தல், கலகம் செய்தல், மதம், இனம் முதலியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, ஒதுக்கிவைத்தது உட்பட பல பிரிவுகளின்கீழ் குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மார்ச் 2002, அந்த காலகட்டத்தில் அவர், பஜ்ரங் தள் என்ற அமைப்பின் மாநில தலைவராக இருந்தார். இந்த பஜ்ரங் தள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு கிளை அமைப்பாகும். அப்போது அவர் கலவரம் செய்தது, கொலை முயற்சி, அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்,” என்று வர்ணித்தது[2]..

Samayam against Sarangi

1999 கிராம் ஸ்டைன்ஸ் கொலையுடன் முடிச்சு போடுதல்: கமல்குமார் என்ற பெயரில், நக்கீரன் தொடர்கிறது[3], “இந்த கலவரம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் இடத்தை ஒப்படைக்கவேண்டும் என்றுகூறி நடந்தது. சட்டமன்றத்தை தாக்க முயற்சித்த 500 பேர் விஷ்வ ஹிந்து பரிசத், துர்க வாஷினி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள். இதனால்தான் ஒடிஷா காவல்துறை அதிகாரிகள் இவரை கைது செய்தனர். இவற்றிற்கெல்லாம் மேலாக 1999 ஜனவரியில் நடந்த சம்பவம்தான் கொடூரமானது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது இரு மகன்களையும் (ஒருவருக்கு வயது 11, இன்னொருவருக்கு 7) எரித்து கொலை செய்தனர். இதற்கு மூளையாக, முக்கிய ஆளாக இருந்தது இந்த எளிய மனிதர்தான். அவர்கள் கிறித்துவ மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக அவர் கூறினார். இந்த வழக்கை விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுமேலும் கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சாரங்கி தலைமையிலிருந்த பஜ்ரங் தள் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக நடந்துள்ள பல வன்முறைகளை மறைப்பதற்காகத்தான் அவர் எளிமையானவர், சைக்கிளில் செல்பவர், நடந்து செல்பவர் என்பது போன்ற பிம்பங்கள் உண்டாக்கப்பட்டன,” என்று முடிக்கிறது[4]

LankaSri- false propaganda against Sarangi.

சமயம் [Times of India, Tamil] இவ்வாறு வர்ணிக்கிறது[5], “ஆனால் சாரங்கியின் மறுபக்கம் மிகவும் அச்சுறுத்தும் விதமாக உள்ளது. ஒடிசாவில் நடந்த பல்வேறு மத மோதல், வன்முறை சம்பவங்களில் இவருக்கு பங்கு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. …..இந்த கொலை வழக்கில் போலீசாரின் சந்தேகம் முழுக்க பிரதாப் சாரங்கியின் மீது தான் இருந்தது. இது தொடர்பாக அவரிடம் பலமுறை விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனால் எப்படியோ அந்த வழக்கிலிருந்து அவர் வெளியே வந்துவிட்டார். …..2002ம் ஆண்டு ராமர் கோயில் பிரச்னை எழுந்த போது, சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி ஒடிசாவில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது ஏற்பட்ட வன்முறையில், ஒடிசா சட்டசபை கட்டிடத்தை அடித்து சேதப்படுத்தியதாக சாரங்கி கைது செய்யப்பட்டுள்ளார் மேலும், ஒடிசாவின் மோடி என்று செல்லமாக அழைக்கப்படும் பிரதாப் சாரங்கி மீது வன்முறை, சூறையாடல், தீ வைப்பு, மத மோதல் என மொத்தம் 7 கிரிமினல் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. அதன் மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது…..,” மேலும், “ஆனால் பிரதாப் சாரங்கி அமைச்சரான உடன் அவர் தொடர்புடைய குற்ற வழக்குகள் ஓரம்கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் இதெல்லாம் நீர்த்து போகச் செய்யப்படும் என ஒடிசாவின் முக்கிய அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர் ,” என்று முடிக்கிறது[6]. ஆனால், பின்னணி, முதலியவை எதுவும் சொல்லப் படவில்லை.

Satyam TV - on Sarangi-disappeared-full

பசுத்தோல் போர்த்திய புலியின் கதை: “பசுத்தோல் போர்த்திய புலியின் கதை,” என்று தலைப்பிட்டு, சத்திய டிவி செய்தி வெளியிட்டுள்ளது. “கிளிக்” செய்தால் காணவில்லை. 9962311611 / 9500 60660 எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசினாலும், சொல்லத் தயங்குகின்றனர். பிறகு எடுக்காமலேயே தவிர்த்தனர். லங்கஶ்ரீ என்ற இணைதளமும், “கிறிஸ்தவமத போதகரை குடும்பத்துடன் எரித்துக் கொன்றவர்……………….மோடி அரசில் அமைச்சர் பொறுப்பு….” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதெல்லாமே, அந்த ஜாபுவா, கந்தமால் கற்பழிப்பு செய்திகள் போலவே இருக்கின்றன. அதாவது, அந்த கற்பழிப்புகளில் ஈடுபட்டவர்கள் கிருத்துவர்கள் தான் என்றதும் மூடிக்கொண்டு அமைதியானார்கள். அதேபோல, கந்தமால் கன்னியாஸ்திரீயின் முரண்பட்ட செய்திகள், வாக்குமூலம், சோதனைக்கூட அறிக்கை எல்லாம் வந்தவுடன், மறுபடியும் மௌனியானார்கள். ஏனெனில், அவள் ஏற்கெனவே உடலுறவு கொண்டாள் என்று தெரிந்தது. மேலும், முதலில் தன்னை யாரும் கற்பழிக்கவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தாள். ஆனால், இன்றைய தேதியில், இவையெல்லாமே இணைதளங்களிலிருந்து மறைந்து விட்டன. ஆனால், உலகம் முழுவதும், இந்துக்கள் கன்னியாஸ்திரீக்கள் தினம் தினம் கற்பழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது போல செய்திகளை வெளியிட்டனர்!

Sathyam TV news on Sarangi suppressed

தமிழ்.இந்து வக்காலத்து வாங்குவது: தி.இந்து.தமிழ் குறிப்பிடுவதாவது, “இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது[7], “என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்னானவை. போலீஸ் வேண்டும் என்றே செய்துள்ளது ஏனென்றால் நான் லஞ்சத்தை எதிர்த்து போராடினேன். சமூகத்தில் நடந்த அநீதிகளுக்கு எதிராக போராடினேன். அதனால் ஊழல் நிறைந்த அரசு அதிகாரிகள் நான் எதிரியாகி உள்ளேன். அதனால் எனக்கு எதிரானவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்தனர். என் மீதான பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தவறானவை என நிரூபிக்கப்பட்டன. மீதமுள்ளவையும் தள்ளுபடி செய்யப்பட்டன” என்றார். சாரங்கி ஒரு காலத்தில் ஒடிசா பஜ்ரங் தல் தலைவராகவும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா சட்டப்பேரவைக்கு இரண்டு முறை தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது[8]. தி.இந்து மற்றும் பிரென்ட் லைன் விசுவாசத்துடன் மற்ற விவரங்களை வெளியிடும் போது, இந்துக்கள் விசயத்தில் மட்டும், எதிரான விசயங்களை மட்டும், முக்கியத்துவம் கொடுத்து போடுவதேன் என்ற கேள்வியை, இந்துக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். இப்பொழுதும், முழு விவரங்களை வெளியிடாமல், சாரங்கி சொன்னார் என்று தான் செய்தி வெளியிட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

05-06-2019

Sarangi playing cricket on the road

[1] நக்கீரன், என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும், Published on 01/06/2019 (13:04) | Edited on 01/06/2019 (14:11), கமல்குமார்

[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/back-story-pratap-chandra-sarangi-odisha-modi

[3] கமல்குமார், என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும், Published on 01/06/2019 (13:04) | Edited on 01/06/2019 (14:11), நக்கீரன்.

[4]  https://www.nakkheeran.in/special-articles/special-article/back-story-pratap-chandra-sarangi-odisha-modi

[5] சமயம், ஏழை பங்காளன் பிரதாப் சாரங்கி மீது ஏழு கிரிமினல் வழக்குகள்அதிர்ச்சியூட்டும் பின்னணி..!, Samayam Tamil | Updated:Jun 1, 2019, 02:53PM IST

[6] https://tamil.samayam.com/latest-news/india-news/union-minister-odissa-s-pratap-singh-has-another-face-which-has-7-criminal-records-all-been-on-investigation/articleshow/69609653.cms

[7] தி.இந்து.தமிழ், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை; லஞ்சத்தை எதிர்த்து போராடினேன்பிரதாப் சந்திர சாரங்கி, Published : 31 May 2019 18:29 IST; Updated : 01 Jun 2019 10:59 IST.

[8] https://tamil.thehindu.com/india/article27378851.ece