Posts Tagged ‘வெளிநாடுகள் நன்கொடை ஒழுங்குமுறை சட்டம்’

நான்கு கிறிஸ்தவ சர்ச்சுகளின் வெளிநாட்டு நிதியுதவி தடுக்கப் பட்டது ஏன்? வெளிநாடுகள் நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றவில்லை!

செப்ரெம்பர் 8, 2020

நான்கு கிறிஸ்தவ சர்ச்சுகளின் வெளிநாட்டு நிதியுதவி தடுக்கப் பட்டது ஏன்? வெளிநாடுகள் நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றவில்லை!

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் churches-receiving-foreign-funds-4-cancelled-2-monitored-tamil-hindu-08-09-2020.jpg

ஊடகங்கள் கிருத்துவ நிறுவனங்களை ஆதரிப்பது ஏன்?: கிறிஸ்தவ சுவிசேஷ அமைப்புகள் மீதான புதிய ஒடுக்குமுறையில், உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) இந்த ஆண்டு நான்கு கிறிஸ்தவ சங்கங்களின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (எஃப்.சி.ஆர்.ஏ) உரிமங்களை நிறுத்தியுள்ளது, என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன[1]. எந்தவொரு நிறுவனத்திற்கும் வெளிநாட்டு நிதியைப் பெற உள்துறை அமைச்சகத்திலிருந்து எஃப்.சி.ஆர்.ஏ அனுமதி பெறுவது கட்டாயமாகும்[2]. ஆங்கில ஊடகங்கள் ஏன் அவ்வாறு நிதிகள் தடுக்கப் படவேண்டும் என்று சொல்லவில்லை. தி இந்து கூட இதனால், குஷ்டநோய் ஆஸ்பத்திரிகள் முடக்கப் படும் என்றெல்லாம், முதல் பக்கத்திலேயே செய்தியை வெளியிட்டு பெரிய ஆர்பாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது[3]. பிறகு, விதிமுறைகள் மீறியதை விளக்குகிறது[4]. சட்டகளை மதிக்காமல், சர்ச்சுகள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், சேவை என்ற முகமூடிக்குப் பின்னால், மறைந்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆவளவு சரிசனம், அக்கறை அவர்கள் மீது இருக்கின்றன என்றால், இதே ஊடகங்கள், சட்டங்களை, விதிமுறைகளை மீறாதீர்கள் என்று அவரளுக்குச் சொல்லலாம்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் churches-receiving-foreign-funds-4-cancelled-2-monitored-the-hindu-07-09-2020.1.jpg


சட்டமீறல்கள், விதிமுறைகள் பின்பற்றாமல் இருப்பது ஏன்?: இந்தியாவில் செயல்படும் பல அரசு சாரா சமூக அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெற்று வருகின்றன[5]. இதன்படி 22 ஆயிரத்து 457 சமூக அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற்று வந்தன[6]. இந்த ஆண்டு 6 என்.ஜி.ஓ.க்கள் அமைப்பின் வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டதில் 4 கிறித்துவ அமைப்புகளும் அடங்கும். அயல்நாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கு எஃப்.சி.ஆர்.ஏ. எனப்படும் வெளிநாட்டு நிதிபங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் பெறுவது அவசியமாகும்[7]. 6702 தொண்டு நிறுவனங்களின் லைசென்ஸ் காலாவதியாகிவிட்டது. மும்பையில் கடந்த ஏப்ரலிலும், கடந்த ஆண்டு செப்டம்பரிலும் நியூலைஃப் பெலோஷிப் அசோசியேஷனில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தை பஜ்ரங் தள் அமைப்பு இடையூறு செய்து தடுத்தது. மதமாற்றம் செய்கின்றனர் என்பது பஜ்ரங் தள் வாதமாகும். நியூ லைஃப் அமைப்பின் அயல்நாட்டு நிதிபெறும் உரிமம் பிப்ரவரி 10ம் தேதி ரத்து செய்யப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலாகும். 1964களிலிருந்து இது செயல்பட்டு வருகிறது[8]. பஜ்ரங் தள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆங்கில ஊடகங்களுக்கு அத்தகைய கரிசனம் இருப்பதால், அவர்கள் நேரிலே சென்று, பாரபட்சம் இல்லாமல், ஆராய்ந்து செய்திகளை வெளியிடலாம்.

 

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் churches-receiving-foreign-funds-4-cancelled-2-monitored-the-hindu-07-09-2020.2.jpg

சர்ச்சுகள் உருவான புராணத்தைப் பாடும் ஊடகங்கள்[9]: நியூசிலாந்தில் உள்ள நியூ லைஃப் தேவாலயங்களில் இருந்து மிஷனரிகள் வந்ததைத் தொடர்ந்து, 1964 ஆம் ஆண்டில் இந்தியாவில் அவர்களது சர்ச்சுகள் உருவாயின. புதிய வாழ்க்கை பெல்லோஷிப் சங்கம் நடைமுறைக்கு வந்தது. 2020 பிப்ரவரி 10 அன்று அரசாங்கம் அதன் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தியது. முன்னதாக, பஜ்ரங் தளம் 2019 ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சங்கத்தால் நடத்தப்பட்ட ‘பிரார்த்தனைக் கூட்டங்களை’ சீர்குலைத்து, மக்களை மாற்றுவதற்கான தளத்தை பயன்படுத்தியதாக போலீசில் புகார் அளித்தது. இதேபோல், எவாஞ்சலிகல் சர்ச்ஸ் அசோசியேஷனின் தோற்றம் 1910 இல் இந்தியாவுக்கு வந்த ஒரு வெல்ஷ் பிரஸ்பைடிரியன் மிஷனரிலிருந்து ஆரம்பிக்கிறது. இது 1952 ஆம் ஆண்டில் ஒரு முழுமையான சங்கமாக மாறி மணிப்பூரிலிருந்து இயக்கப்பட்டது. அண்மையில் எஃப்.சி.ஆர்.ஏ உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ரியோசோகுலிஸ் வடமேற்கு கோஸ்னர் எவாஞ்சலிகல், ஜார்கண்டின் சோட்டானக்பூரில் ஜெர்மனியின் கோஸ்னர் பணியைக் காணலாம் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. வடக்கு எவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச், 1987 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிறுவப்பட்டது, மேலும் 99 நாடுகளில் 7.7 கோடி கிறிஸ்தவர்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளனர்[10].

 

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் churches-receiving-foreign-funds-4-cancelled-2-monitored-the-hindu-07-09-2020.3.jpg

பெந்தகோஸ்தே சர்ச்சுகளுக்கு பரிதாபப் படும் ஊடகங்கள்: “கடந்த ஆண்டு, தென்னிந்தியாவில் பல பெந்தேகோஸ்தேக்கள் நிதி உதவி காரணமாக தங்கள் மத பிரச்சாரங்களை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. போதகர்கள் தங்கள் நற்செய்தி வேலைக்காக இனி சம்பளத்தைப் பெறவில்லை. அவர்களால் இப்போது தங்கள் வீடுகளுக்காக எடுக்கப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்த முடியவில்லை மற்றும் வாகனங்கள் வாங்க முடியவில்லை. கேரளாவில் மட்டும், 100 க்கும் மேற்பட்ட பெந்தேகோஸ்தே தூதரகங்கள் பொது இடங்களில் மற்றும் சாலையோரங்களில் பிரசங்கிக்கின்றன. பெந்தேகோஸ்தே பணிகள் முக்கியமாக வெளிநாட்டு நிதியைப் பொறுத்ததுள்ளது. மோடி அரசாங்கத்தின் கடுமையான பொருளாதார பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட விதிமுறைகள் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் இந்த வெளிநாட்டு நிதிகளில் பாரிய குறைப்பைக் கொண்டு வந்தன. 2014 வரை கேரளாவிற்கு ஆண்டுக்கு ரூ .100 கோடிக்கு மேல் நிதி வந்துள்ளது, இது மத்திய அரசு விவரங்களையும் நிதி ஆதாரங்களையும் கோரியதைத் தொடர்ந்து திடீரென நிறுத்தப்பட்டது. அமைப்பாளரால் அறிவிக்கப்பட்டபடி, எஃப்.சி.ஆர்.ஏ ஒடுக்குமுறை விளைவாக 40% வெளிநாட்டு நிதிகளின் உள்ளே வருவது நின்று விட்டது,” என்று புலம்புவது திகைப்பாக இருக்கிறது. மோடி அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டுகளில், எஃப்.சி.ஆர்.ஏ விதிகளை மீறியதாக 14,800 க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்படவில்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் ecreosoculis-north-western-gossner-evangelical.jpg


நான்கு நிறுவனங்களுக்கு நிதியுதவி பெற தடை: இவ்வாறு செயல்படும் சமூக அமைப்புகள் எந்த வித லாப நோக்கத்துடனும் செயல்பட கூடாது. சமூக உதவிகளை செய்ய வேண்டும் என்ற விதிகள் உள்ளன. அதை மீறி செயல்பட்ட 20 ஆயிரத்து 674 சமூக அமைப்புகள் வெளி நாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டில் இருந்து நிதி பெற வேண்டும் என்றால் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு சட்டப்படி அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிதான் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில் இப்போது மேலும் 6 அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 4 அமைப்புகள் கிறிஸ்தவ மதம் சார்ந்தவை ஆகும். இதன்படி –

  1. ஜார்கண்டில் செயல்பட்ட காஸ்னர் இவாஞ்சலிக்கல்,
  2. மணிப்பூர் இவாஞ்சலிக்கல்,
  3. ஜார்கண்ட் வடக்கு இவாஞ்சலிக்கல் லுத்தரன் சர்ச்,
  4. மும்பை நியூ லைப் பெல்லோஷிப்

ஆகிய கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் வேறு சில கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செவன்டே அட்வென் டிஸ்ட், பாப்டிஸ் சர்ச் போன்றவை குறித்தும் புகார்கள் வந்துள்ளன. அதுபற்றியும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் ecreosoculis-north-western-gossner-evangelical-church.png

வெளிநாடுகள் நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றவில்லை: இது தொடர்பாக முன்னாள் உள்துறை செயலாளர் ராஜிவ் மெர்ஸி கூறும்போது, அமெரிக்காவை சேர்ந்த கம்பேஸன் அமைப்பு வெளிநாடுகள் நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றவில்லை[11]. அதனால்தான் அந்த நிறுவனம் இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க தடை விதிக்கப்பட்டது[12]. இதேபோல், அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரான மைக்கேல் புளும்பர்க் நடத்திவரும் புளும்பர்க் பிலந்தெரபிஸ் தொண்டு நிறுவனத்திற்கும் நன்கொடைகளை வழங்க உள்துறை தடை விதித்தது. கடந்த 2015ல் பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா சென்றபோது நியூயார்க் மேயருடன் இணைந்து இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டிகளை அமைப்பதற்கு புளும்பர்க் நிறுவனத்தின் நிதி உதவி தொடர்பான ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் northern-evangelical-lutheran-church-symbol.jpg

சேவை எனும்போது, தன்னலம் இல்லாமல், சுத்தமாக சேவை செய்ய வேண்டும்: கிருத்துவ அமைப்புகள், நிறுவனங்கள் பற்றி, பொதுவாக யாரும் கவலைப் படுவது கிடையாது, அவையே, சட்டங்களை மீறி காரியங்களை செய்யும் போது, வெளியே தெரியும் போது மாட்டிக் கொள்கிறார்கள். சில எடுத்துக் காட்டப் படுகின்றன.

 

  1. அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் பெற்ற பணத்தை அதற்குரிய செயலுக்குப் பயன்படுத்தாது.
  2. நிதியை குறிப்பிட்ட சேவைக்கு அல்லாது, வேறு காரியகளுக்குப்ப் பயன்படுத்தியது.
  3. படிவங்களை தாக்கல் செய்யாமல் இருத்தல், முழுமையான விவரங்களைக் கொடுக்காமல் இருத்தல், குறிப்பாக பணம் வரவு-செலவு பற்றிய விவரங்களை தாக்கல் செய்யாமல் இருத்தல்.
  4. நடக்காத சேவைகளுக்கு பணம் செலவானது போலக் காட்டுதல், போலி ரசீதுகள், கணக்குகள் காட்டுவது முதலியன.
  5. மதம் மாற்ற நிகழ்ச்சிகளுக்கு உபயோகப் படுத்தியது. எவாஞ்சலிஸம் என்பதை தவறாகப் பயன்படுத்துவது.
  6. தனிநபர்கள் நிதியை கையாடல் செய்வது, உறுப்பினர்கள் பரஸ்பர குற்றாச்சாட்டுகள் வைப்பது, நீதிமன்றகளுக்குச் செல்வது முதலியன.

ஆகவே, அவர்களுடைய உள்-பிரச்சினைகள், சட்டமீறல்கள், மோசடிகள் முதலியவற்றிற்கு, அரசு மீது, சேவை போர்வையில் பழி போட முடியாது. சேவை எனும்போது, தன்னலம் இல்லாமல், சுத்தமாக சேவை செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்நாட்டின் சட்டங்களை மீறியதற்கான தண்டனையைப் பெற்றாக வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

08-09-2020

[1] Op.India, Centre cracks down on foreign funding of Christian evangelical organisations, suspends FCRA licences of four, 7 September, 2020.

[2] https://www.opindia.com/2020/09/home-ministry-fcra-license-four-christian-evangelical-organisations-foreign-funding-church/

[3]  The Hindu, Government suspends FCRA clearance of 4 Christian groups, Vijaita SinghNEW DELHI , SEPTEMBER 06, 2020 17:58 IST, UPDATED: SEPTEMBER 07, 2020 09:09 IST.

[4] https://www.thehindu.com/news/national/government-suspends-fcra-clearance-of-4-christian-groups/article32535766.ece

http://eca.org.in/

[5] மாலைமலர், 4 கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற தடை – மத்திய அரசு நடவடிக்கை, பதிவு: செப்டம்பர் 07, 2020 18:12 IST

[6] https://www.maalaimalar.com/news/national/2020/09/07181227/1855609/4-Christian-organizations-banned-from-receiving-foreign.vpf

[7] தமிழ்.இந்து, நான்கு கிறித்துவ என்.ஜி.ஓ. அமைப்புகளின் உரிமம் ரத்து: வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை, விஜய்தா சிங், Published : 07 Sep 2020 08:45 AM, Last Updated : 07 Sep 2020 08:45 AM.

[8] https://www.hindutamil.in/news/india/575466-government-suspends-fcra-clearance-of-4-christian-groups.html

[9] Op.India, Centre cracks down on foreign funding of Christian evangelical organisations, suspends FCRA licences of four, 7 September, 2020.

[10] https://www.opindia.com/2020/09/home-ministry-fcra-license-four-christian-evangelical-organisations-foreign-funding-church/

[11] தினகரன், வெளிநாட்டு நன்கொடை பெற 4 கிறிஸ்தவ அமைப்புகளுக்கு தடை: மத்திய உள்துறை அதிரடி நடவடிக்கை, 2020-09-08@ 01:14:03

[12] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=615549