Archive for ஓகஸ்ட், 2015

நிகழ்ச்சி சர்ச்சையும், பாஸ்டரையும் பாதித்தது – பிறகு கொடைக்கானல் பெண் கொலை, மது-எதிர்ப்பு பிரச்சாரமமாகியது ஏன் (2)?

ஓகஸ்ட் 6, 2015

நிகழ்ச்சி சர்ச்சையும், பாஸ்டரையும் பாதித்தது பிறகு கொடைக்கானல் பெண் கொலை, மதுஎதிர்ப்பு பிரச்சாரமமாகியது ஏன் (2)?

கொடைக்கானல் கொலை கைது சர்ச்.2

கொடைக்கானல் கொலை கைது சர்ச்.2

சர்ச்சுகள் தாக்கப்பட்டன என்று முன்னர் அனைத்துலக செய்திகளாக்கப்பட்ட நிலை (2014-15): சர்ச்சுகள் தாக்கப்பட்டன, கிருத்துவர்கள் பாதுகாப்பு இல்லை / ஜாக்கிரதையான நிலையில் இல்லை, அவர்கள் மத-தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் அலறிக்கொண்டிருந்தன. சந்தேகிக்கப்படும் இந்து தேசியவாதிகள் / தீவிரவாதிகள் [suspected Hindu nationalists / The militants] சர்ச்சுகளை தாக்கியதால், கிருத்துவர்கள் அச்சத்தில் உள்ளார்கள்[1]. வாடிகன் ரேடியோவே இதைபொ பற்றி செய்தியில் கூறுகிறது[2]. உனைடெட் கிறிஸ்டியன் நியூஸ்.காம் [UCANEWS.COM] என்ற இணைதளம் இத்தகைய செய்திகளை அப்படியே போட்டுவருகிறது[3]. குறிப்பாக தில்லியில், அது ஒரு பெரிய பிரச்சினையாக்கப் பட்டு, பிறகு அனைத்துலக விசயமாக்கப்பட்டது. தில்லியில் இருக்கும், கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் ஆப் இந்தியா போன்ற கிருத்துவ நிறுவனங்கள் ஆர்பாட்டங்கள் நடத்தின. வழக்கமாக ஜான் தயால்[4] போன்ற அடிப்படைவாதிகள் இதை பெரிதாக்கி கலாட்டா செய்தனர். என்.டி.ஏ தலைமையில் இந்துத்வா கட்சியான வலதுசாரி பி.ஜே.பி கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால், அத்தகைய இந்துத்வ சக்திகள், இவ்வாறு சிறுபான்மையினரைத் தாக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று கூட திக்விஜய் சிங்[5], ஜான் தயால்[6] போன்றோர் டிவி-பேட்டிகளில் கருத்துகளை வெளியிட்டனர். பிஷப்புகள் எல்லோரும் பிரதமர் மோடியை சந்திந்து மனு கொடுத்தனர். நூற்றுக்கணக்கான கிருத்துவ, கிருத்துவ-சார்புடைய, இந்திய-விரோத, இந்து-விரோதச் இணைதளங்கள் இவற்றை திரும்ப-திரும்ப போட்டு கலாட்டா செய்து வந்தனர்.

John Dayal carrying propaganda againat Modi

John Dayal carrying propaganda againat Modi

போலீஸார் விசாரணையில் தெரிய வந்த உண்மைகள்விவரங்கள்: இதனால், போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்பொழுது தெரிய வந்த விவரங்கள் கீழ்வருமாறு:

  1. தில்லியில் வழிபாட்டு ஸ்தலங்கள் நூற்றுக்கணக்கில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இது வழக்கமான நிகழ்வுதான்[7].
  1. பொதுவாக உண்டி உடைத்து பணம் திருடுதல், காணிக்கைப் பொருட்களைத் திருடுதல், குறிப்பிட்டப் பொருட்களை விற்றால் பணம் கிடைக்கும் என்பதால் அவற்றைத் திருடி விற்றல் போன்ற காரணங்களுக்காக வழிபாட்டு ஸ்தலங்களில் திருட்டு போயிருக்கிறது.
  1. இத்தகைய திருட்டுக் குற்றங்கள் அவ்வாறே பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுள்ளன. திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  1. இவற்றில் மதரீதியிலான விசயமோ, பிரச்சினையோ இல்லை, ஏனெனில், திருடர்கள் சாதாரண, அதாவது ஏழைகள், நடைபாதையில் வாழ்பவர்கள், அன்னாடம் காய்ச்சிகள் போன்ற நிலையில் இருந்து திருடியுள்ளார்கள்.
  1. இவற்றில் அதிகமாக இந்து கோவில்களில் தான் திருடு போயிருக்கின்றன. மற்ற கிருத்துவ, சீக்கிய வழிபாட்டு ஸ்தலங்களில் நடந்த விவரங்களையும் தில்லி போலீஸார் கொடுத்தனர் [According to the data, 206 temples, 30 gurdwaras, 14 mosques and three churches were burgled in 2014][8].
  1. ஆனால், இந்து கோவில்கள் தாக்கப்பட்டன, இந்து வழிபாட்டு ஸ்தலம் என்பதால் உண்டிகள் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டது என்றெல்லாம் யாரும் நினைத்துப் பார்க்கவும் இல்லை, அதனை மதரீதியிலான பிரச்சினியாகவும் பாவிக்கவில்லை. ஊடகங்களும் அவ்வாறு செய்திகளை வெளியிடவில்லை.
  1. குறிப்பாக கிருத்துவ வழிபாட்டு ஸ்தலங்கள், சர்ச்சுகள் முதலியவற்றைத் தாக்கியது, திருடியது கிருத்துவர்களாகவே இருக்கின்றனர்[9].
  1. மேலும், அவர்களில் சிலருக்கும், சர்ச்சில் உள்ளவர்களுக்கும் மற்ற விசயங்களில் சண்டை-சச்சரவு இருந்துள்ளது. இதனால், பழி வாங்கும் போக்கில் திருடு நடந்துள்ளது.
  1. சர்ச்-திருட்டு-தாக்குதல் பொருத்த வரையில், அவர்களில் சிலர் சர்ச்சுகளில் வேலை செய்து வருகின்றனர். வேலை செய்து வந்து, ஏதோ காரணங்களுக்காக, வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
  1. பிறகு மேலும் விசாரித்தபோது, சில பிரிவுகள் கலட்டா செய்தபோது, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட போது, கற்களை எரிந்திருக்கிறார்கள். கிருத்துவர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, வேறெந்த பிரிவினருக்கும் தொடர்பில்லை என்று தில்லி போலீசார் தெரிவித்தனர்[10].
  1. தில்லி போலீஸார், இவ்வாறு உண்மைகளை ஆதாரங்களுடன், எடுத்துக் காட்டியதும், கிருத்துவர்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் அமைதியாகி விட்டன.
  1. ஆனால், அவர்களால் செய்யப்பட்ட துர்பிரச்சாரம், வெறுப்பையுண்டாக்கும் ஆர்பாட்டங்கள், மதரீதியில் திரிபு விளக்கம் கொடுத்து ஊர்வலங்கள் நடத்தியது முதலியன இணைதளங்களில் அப்படியே இருக்கின்றன.
  1. அதனால் ஏற்பட்ட தாக்கம், பாதிப்பு, எதிர்மறை விளைவுகள் இன்றும் இருந்து கொண்டே இருக்கின்றன[11].
The Nun, reportedly raped in Kandhamal

The Nun, reportedly raped in Kandhamal

கொடைக்கானலில் சர்ச், பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது (ஜூலை.2015): இந்நிலையில், கொடைக்கானலில் ஒரு சர்ச் தாக்கப்பட்டது, ஜன்னல் கண்ணாடிகள்-விளக்குகள் உடைக்கப்பட்டது, பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது, பொருட்கள் சேதமடைந்தது முதலியவை அப்படியே அமுக்கப்பட்டன எனலாம். “தி இந்து” (ஆங்கிலம்) இச்செய்தியை, “கொலைக்காக இருவர் கைது” என்று சுருக்கமாக அமுக்கிவிட்டது. சர்ச், பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது, பாஸ்டரின் மகன் தான் கொலையாளி போன்ற விவரங்களும் செய்தியில் மறைக்கப்பட்டன. மற்ற ஊடகங்கள், இதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. அப்படியென்றால், ஊடகங்களின், சர்ச்சுகளின் நிலைப்பாடு என்ன? எவ்விதத்தில், இத்தாக்குதல் மாறுபட்டிருக்கிறது அல்லது அதே மாதிரி செய்திகளை வெளியிடக் கூடாது, ஆர்பாட்டங்கள் செய்யக் கூடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது பற்றி புதிராக, மர்மமாகத்தானே உள்ளது?

Delhi places of worship attack, police report

Delhi places of worship attack, police report

சர்ச்சுகள்டையோசிஸ்கள் முதல் அரசியல்வாதிகள்ஊடகங்கள் வரை அமைதியாக இருத்தல்: சர்ச், பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது குறித்து டையோசிஸ்கள், பிஷப்புகள், பாதிரிகள் மற்ற கிருத்துவ இயக்கங்கள், நிறுவனங்கள் அமைதியாக இருந்து விட்டன.

  • மெழுகு வர்த்திகள் ஏற்றுவது,
  • கன்னியாஸ்திரிக்களை முன்வைத்து,
  • பள்ளி-கல்லூரி மாணவி-மாணவியர்களைக் கூட்டி வைத்து,
  • ஊர்வலங்கள் நடத்துவது,
  • ஆர்பாட்டங்கள் செய்வது முதலியவை நடக்கவில்லை.
  • கவர்னர்-முதலமைச்சர் முதலியோரை சந்தித்து மனு கொடுக்கவில்லை.
  • எதிர்கட்சிகள் அறிக்கைகள் கொடுக்கவில்லை, ஆர்பாட்டங்கள் நடத்தவில்லை.

அப்படியென்றால், இவர்களின், சர்ச்சுகளின் நிலைப்பாடு என்ன? ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? அனைத்துலக கிருத்துவ இணைதளங்கள் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை?

ஊடகங்கள் ஏன் செக்யூலரிஸக் கொள்கையினை, தத்துவத்தைப் பின்பற்றுவதில்லை?: பொதுவாக, தமிழகத்தில் கிருத்துவர்களுக்கு எதிராக ஏதாவது நடந்தால், அவை அவர்களது நிலைமைகளை பாதித்தால், கெட்ட பெயர் வரும் என்ற நிலையிருந்தால், அத்தகைய விவரங்களை அமுக்கி வாசித்து மறைத்து விடுகின்றன. முஸ்லிம்கள் விசயங்கள் என்றால் வெளியிடுவதே இல்லை எனலாம். செய்திகளை வெளியிடுதல் என்ற தார்மீக முறையிலிருந்து பிறழ்ந்து விடுகின்றனர். இதே, இந்து சாமியார்கள் என்றால், எல்லாம் ஒன்றாக திரண்டு, ஒரு வாரம், ஒரு மாதம், ஏன் நிரந்தரமாக செய்திகள், கிண்டல்-கட்டுரைகள், நக்கல்-ஜோக்குகள், ஆபாச-விபர்சனங்கள், தூஷணங்கள் என்று வாரிக்கொட்டிக் கொண்டிருப்பர். இதனால், அவர்களது பாரபட்ச போக்கு வெளியாகிறது. ஏன் அவர்கள் இவ்வாறு, ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றனர். “செக்யூலரிஸம்” என்றாலும், குற்றங்கள் அவ்வாறு தானே கருதப்பட வேண்டும், குற்றவாளிகள் நடத்தப் படவேண்டும், சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், அதன்படி செய்திகள் வெளியிட வேண்டும்.

சர்ச் தாக்கப்படுதல்ஏன் தமிழகத்தில் வித்தியாசமாகக் கருதப்படுகிறது?: பாஸ்டர் மகன் கொலை செய்துள்ளான் என்றதால் சர்ச், பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கத்தான் இத்தனை போலித்தனமான, ஊடக-நாகரிகமில்லாத, பத்திரிகா-தார்மீகத்தையும் மீறி ஊடகங்கள் செயல்படுகின்றனவா? அப்படியென்றால், அவை ஏன் கிருத்துவ-சார்புடையதாக எப்பொழுதும் செயல்படவேண்டும். எவ்வாறு ஊடகங்களை, ஊடகத்துறையை, நிருபர்கள், பேட்டியாளர்கள் முதலியோர்களை கிருத்துவர்கள் அடக்கியாள வேண்டும்? சர்ச் தாக்கப்படுதல் மாபெரும் குற்றம், அனைத்துல ரீதியில் அறியப்படுத்தப்பட வேண்டிய செய்தி என்றிருக்கும் போது, இதையும் தெரியப்படுத்தியிருக்க வேண்டுமே?

© வேதபிரகாஷ்

06-08-2015

 

[1] http://www.christiantoday.com/article/india.five.attacks.on.christians.in.the.last.week/54168.htm

[2] http://en.radiovaticana.va/news/2015/04/16/india_vandals_attack_church_in_agra/1137323

[3] http://www.ucanews.com/news/indian-christians-express-shock-over-agra-church-attack/73414

[4] கந்தமால் “கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் புகழ்” ஜான் தயால், பரபரப்புடன் பேட்டியளித்து ஆர்பாட்டம் செய்தார். ஆனால், அந்த கன்னியாஸ்திரி ஏற்கெனவே கன்னித்தன்மையினை இழந்துள்ளதாக ம்மருத்துவ அறிக்கை வெளிவந்தவுடன், அப்படியே அமைதியாகி விட்டனர் என்று குறிப்பிடப்படுகிறது.

[5] http://timesofindia.indiatimes.com/india/Digvijaya-Singh-lambastes-central-government-for-attack-on-Delhi-church/articleshow/46098309.cms

[6] The United Christian Forum has recorded 168 cases of violence of various sorts against the community in the first 300 days of Mr. Modi forming the government in New Delhi. These include two murders. Six of the cases have been in the national capital, New Delhi. Statues of Mary and Christ seem a particular target in many places for vandals. http://johndayal.com/

[7] http://www.firstpost.com/india/police-call-delhi-church-attack-stray-case-community-slams-pm-modis-sabka-saath-sabka-vikas-2081479.html

[8] http://indianexpress.com/article/india/india-others/in-report-on-church-attacks-bassi-told-centre-theft-in-206-temples-last-year/

2 இவ்விசயம் தெரிந்தவுடன் ஊடகங்கள் முதல் கிருத்துவ தலைவர்கள் வரை அப்படியே 1800 திரும்பி ஜகா வாங்கி விட்டனர்.

[10] Delhi Police has told the Union Home Ministry that no church in the city was attacked by any group and the recent incidents were of either theft, short circuit or stone-pelting after petty clashes that had nothing to do with the Christian community.http://www.dnaindia.com/india/report-no-church-attacked-in-city-delhi-police-tell-home-ministry-2082174

[11]  அதாவது, அதே இணதளங்கள் அர்த்தகைய பொய்யான செய்திகள், அறிக்கைகள், ஆர்பாட்ட நிகழ்சிகள் முதலியவற்றை நீக்கவும் இல்லை. தாக்குதலுக்கு காரணம் கிருத்துவ விரோதிகள் இல்லை என்று உண்மையினை வெளியிடவும் இல்லை.

நிகழ்ச்சி சர்ச்சையும், பாஸ்டரையும் பாதித்தது – பிறகு கொடைக்கானல் பெண் கொலை, மது-எதிர்ப்பு பிரச்சாரமமாகியது ஏன் (1)?

ஓகஸ்ட் 6, 2015

நிகழ்ச்சி சர்ச்சையும், பாஸ்டரையும் பாதித்தது பிறகு கொடைக்கானல் பெண் கொலை, மதுஎதிர்ப்பு பிரச்சாரமமாகியது ஏன் (1)?

கொடைக்கானல் கொலை Balakrishnan- Viralakshmi

கொடைக்கானல் கொலை Balakrishnan- Viralakshmi

கொடைக்கானல் பெண் கொலை – 17-07-2015 அன்று நடந்தது: கொடைக்கானல் அருகே மலைக்கிராமத்தில் பூட்டிய வீட்டில் வீரலட்சுமி என்ற பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போதகர் மகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்[1]. இதையடுத்து போதகரின் சர்ச்சை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்[2]. இப்படி தமிழ் ஊடகங்களில் வந்துள்ள செய்தி ஒரு வேளை எல்லோரும் படித்திருக்க மாட்டார்கள் அல்லது கவனித்திருக்க மாட்டார்கள். இப்பொழுது கூட இதை ஒரு சாதாரணமான கொலைக்குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொலையாளிகள் மது அருந்தியிருந்ததால், அதனால் தான் கொலைக்குற்றத்தை செய்தனர் என்று சொல்வதோடு, கிராமத்தில் அனுமதியின்றி மறைமுகமாக விற்கப்படும் மதுபானங்களை தடுக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானல் கொலை Viralakshmi murdered

கொடைக்கானல் கொலை Viralakshmi murdered

பெண் எரித்துக்கொலை: கொடைக்கானல் அருகே உள்ள கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி வீரலட்சுமி (வயது 41). இவர்கள் தங்கள் வீட்டிலேயே கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரை சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்னைக்கு மகனுடன் சென்றிருந்தார். அப்போழுது கடந்த 17–ந்தேதி வீரலட்சுமி வீட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் கொடைக்கானல் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணையில் வீரலட்சுமி எரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பிறகு, வீட்டில் தனியாக இருந்த வீரலட்சுயை எரித்து கொன்று மர்ம நபர்கள் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர் என்றும் தெரிய வந்தது[3]. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். டி.எஸ்.பி. சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்–இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், பெரியசாமி ஆகியோர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.  இதையொட்டி அதே ஊரைச் சேர்ந்த கவுஞ்சி பகுதியில் விவசாய கூலி வேலைபார்த்து வரும் தங்கராஜ் என்பவருடைய மகன் ஜெயபிரகாஷ் (31), செல்வம் என்பவருடைய மகன் ஜெயக்குமார் (35) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடைக்கானல் கொலை - Jewels and money; the house of Pastor

கொடைக்கானல் கொலை – Jewels and money; the house of Pastor

கொலையாளிகள் கொடுத்த வாக்குமூலம்: போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில்,  “சம்பவத்தன்று வீரலட்சுமி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து கொண்டோம். நாங்கள் கூலி வேலை பார்த்து வந்ததால் கஷ்டமான சூழ்நிலையில் பணம் தேவைப்பட்டது. எனவே வீரலட்சுமி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டோம். அன்று இரவு 11 மணிக்கு அவரது வீட்டிற்கு சென்ற நாங்கள் வழியில் ஒருவர் மயக்கம் அடைந்து உள்ளார். தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டோம். வீரலட்சுமியும் தண்ணீர் கொண்டு வந்து தரவே மீண்டும் அந்த பாத்திரத்தை கொடுப்பதுபோல் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அவரது கழுத்தை நெரித்து பின்னர் தலையணையால் அமுக்கி கொலை செய்தோம். போலீசுக்கு தெரிந்து விடுமோ என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நம்ப வைக்க அவர்மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தோம். பின்னர் வீட்டில் இருந்த 18 பவுன் தங்க நகை, ரூ.8 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டோம். எங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நாங்கள் எப்போதும்போல வேலைக்கு சென்றோம். இருப்பினும் போலீசார் எங்களை பிடித்து விட்டனர் என்று தெரிவித்தனர்”. இதனையடுத்து போலீசார் அவர்களை கைதுசெய்து கொள்ளையடித்த நகை, பணத்தையும் பறிமுதல் செய்தனர்[4].

கொடைக்கானல் கொலை கைது சர்ச்.சியோன் ஜபவீடு

கொடைக்கானல் கொலை கைது சர்ச்.சியோன் ஜபவீடு

சியோன் தேவாலயம் மீது தாக்குதல்[5]: ஜெயபிரகாசின் தந்தை தங்கராஜ் அந்த பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் போதகராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. அவருடைய வீடும் அந்த பகுதியில் உள்ளது. கொலை வழக்கில் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அந்த கிராம மக்கள் அவருடைய வீட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்தினார்கள்[6]. பூட்டிய சர்ச் தாக்கப்பட்டது – ஜன்னல் கண்ணாடிகள், பல்புகள் உடைக்கப்பட்டது முதலியவை, யு-டியூப்பில் விவரமாகக் காட்டப்படுகிறது[7]. மேலும் தேவாலயத்தின் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். கவுஞ்சி பொதுமக்கள், “கொலைக்கான காரணம் குடிபோதையே’ என்று தெரிவித்துள்ளனர். கிராமத்தில் அனுமதியின்றி மறைமுகமாக விற்கப்படும் மதுபானங்களை தடுக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்[8].  இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

The incident affected the church and pastors house

The incident affected the church and pastors house

சவுத் இன்டியன் கிரைம் பாயின்ட் வெப் டிவியின் யுடியூப் ஒடுக்கும் விவரங்கள்: இந்த நிகழ்ச்சி சர்ச்சையும், பாஸ்டரையும் பாதித்தது [The incident affected the church and pastor’s house] என்று தலைப்பிட்டு, சவுத் இன்டியன் கிரைம் பாயின்ட் வெப் டிவி என்றதன் யு-டியூப் வெளியுட்டது வியப்பாக உள்ளது[9]. முதலில் குற்றவாளிகளைப் பிடித்தது, முதலிய விவரங்களை காண்பித்து விட்டு, பிறகு, இரண்டு பெண்களை பேட்டிக் கண்டு விசயத்தை முழுக்க-முழுக்க மது-எதிர்ப்பு, மது-ஒழிப்பு பிரச்சாரம் போன்று திருப்பிவிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. முதலில், ராஜேஸ்வரி என்கின்ற வீரலட்சுமியின் அக்காள், தன்னுடைய தங்கை எப்படி அத்தகைய கதியை அடைந்தாளோ, அதேபோல, கொலையாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அழௌதவாறு கூறுகிறாள். மேலும், அப்பகுதியில் மது விநியோகத்திற்கு உள்ளூர் அதிமுக தலைவர் தான் காரணம், அதனால் தான், போலீஸார் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்று இரண்டாவது பெண்மணி பெரியதான விளக்கத்தில், அப்பெண் கொலைசெய்யப்பட்ட விவகாரமே மறந்து விட்டது போலிருக்கிறது. விவரங்களைக் ஒடுத்ததற்காக சவுத் இன்டியன் கிரைம் பாயின்ட் வெப் டிவியை பாராட்ட வேண்டும். அவர்களின் புகைப்படங்கள் இக்கட்டுரையில் நன்றியுடன் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

கொடைக்கானல் கொலை -murders arrested by the police

கொடைக்கானல் கொலை -murders arrested by the police

நிகழ்ச்சி சர்ச்சையும், பாஸ்டரையும் பாதித்தது [The incident affected the church and pastor’s house]: இந்நிகழ்ச்சி சர்ச்சையும், பாஸ்டரையும் பாதித்தது என்றால், சர்ச்சும், பாஸ்டரும், தடுக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டுமே? அப்பகுதியில், அத்தகைய சர்ச்சை எப்படி கட்டினார், வீட்டைக் கட்டிக் கொண்டார் என்பது பற்றிய விவரங்களைக் கொடுக்கவில்லை. சர்ச் கட்டப்பட்டது, பாஸ்டர் இருப்பது நிச்சயமாக மதமாற்றத்திற்குத் தான் என்பது தெரிந்த விசயம் தான். பிறகு, பாஸ்டர் தனது மகனை விசுவாசியாக வளர்த்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், தனியாக இருந்த பெண்ணை கொலை செய்தது, நகை-பணம் கொள்ளையடித்தது, தெரிந்து கொண்டே செய்ததால், அவர்களது குற்ற-எண்ணத்தை, கொலை திட்டத்தை நன்றாகவே எடுத்துக் காட்டியுள்ளது. சவுத் இன்டியன் கிரைம் பாயின்ட் வெப் டிவி இவ்விசயத்தையும் விசாரித்து விவரங்களை வெளியிட்டிருக்க வேண்டும். பாஸ்டர் தங்கராஜையும் பேட்டிக் கண்டு விவரங்களை வெளிப்படுத்தியிருக்கலாம். கொடைக்கானலில், ஏற்கெனவே, கிருத்துவர்களின் குற்றங்கள் அதிகமாகவே இருந்து வருகின்றன. எனவே, இப்பிரச்சினையை திசைத் திருப்புகின்றனரா அல்லது ஆளும் கட்சிக்கு எதிராக மது-எதிர்ப்பு பிரச்சாரமாக மாற்றியுள்ளனரா என்பதை அராய வேண்டியுள்ளது. தி இந்து (ஆங்கிலம்), கொலைக்காக இரண்டு பேர் கைது [Two held for murder] என்று சுருக்கமாக செய்தி வெளியிட்டது[10]. ஓரு கொலையாளி ஆஸ்டரின் மகன், சர்ச் தாக்கப்பட்டது முதலியவற்றைப் பற்றி மூச்சுவிடவில்லை[11].

© வேதபிரகாஷ்

06-08-2015

[1] http://tamil.oneindia.com/news/tamilnadu/villagers-ransack-church-kodaikanal-231561.html

[2] தினமலர், கொடைக்கானலில் வீடு, தேவாலயம் மீது தாக்குதல், ஜூலை.25, 2015

[3] http://www.maalaimalar.com/2015/07/20143645/2-arrested-for-the-murder-of-t.html

[4]  மாலைமலர், கொடைக்கானலில் பெண்ணை எரித்து கொன்ற 2 பேர் கைது, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 20, 2:36 PM IST.

[5] http://www.dailythanthi.com/News/Districts/2015/07/23005930/The-pastors-son-arrested-for-murder-of-woman-burned.vpf

[6] தினத்தந்தி, பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் போதகர் மகன் கைது: தேவாலயம், வீடு மீது கிராம மக்கள் தாக்குதல் போலீசார் விசாரணை, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூலை 23,2015, 5:00 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூலை 23,2015, 12:59 AM IST.

[7] https://youtu.be/Kx9IJ1g6nr4

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1301567

[9] https://youtu.be/Kx9IJ1g6nr4

[10] http://www.thehindu.com/news/national/tamil-nadu/two-held-for-murder/article7445699.ece

[11] Two persons were arrested in connection with the murder of a woman at Kavunji on upper Kodaikanal hills on Monday. A sum of Rs.8,000 and 22 sovereigns of gold jewels were seized from them. The arrested were farm labourers Prakash (31) and Jeyakumar (35) of Kavunji. Police said B. Veeralakshmi (41) of Kavunji was found dead in her house few days ago when her husband was away in Chennai to assist his son with the admission to an engineering college. The police recovered the half-burnt body and sent it for post mortem. After preliminary investigation, the police said that the two had strangulated her in the late night hours, poured kerosene on the body and burnt it to make the police believe that it was a suicide. From the next day, they went for work as usual.

“கற்பழிப்புப் புகார்” – செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் – வல்சன் தம்பு, ஏன் எல்லோரிடத்திலும் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்?

ஓகஸ்ட் 1, 2015

“கற்பழிப்புப் புகார்”செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர்வல்சன் தம்பு, ஏன் எல்லோரிடத்திலும் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்?

Valsan Thampu with Mother Theresa in 1994

Valsan Thampu with Mother Theresa in 1994

கத்தோலிக்கப் பாதிரி, கல்லூரி முதல்வர், சிறுபான்மை கமிஷன் உறுப்பினர் என்று பல அவதாரங்களில் இருப்பவர்: வல்சன் தம்பு, ஒரு கத்தோலிக்க பாதிரி, இறையியல் வல்லுனர் மற்றும் இப்பொழுதைய செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர். இக்கல்லூரி தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. 2008ல் முதல்வராவதற்கு முன்னர், இக்கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு கத்தோலிக்கக் கிருத்துவம் பற்றிய பல மொழிபெயர்ப்புகளை செய்து வந்தார். வடவிந்திய சர்ச்சில் ஒரு பாதிரி அந்தஸ்தில் உள்ளார் மற்றும் தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் ஒரு உறுப்பினராகவும் இருக்கிறார். பிஎச்.டி மாணவி சதீஷ்குமார் என்ற பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்து, வழக்கு நடந்து கொண்டிருக்கும் வேலையில், அக்கல்லூரியின் இன்னொரு பெண்-பேராசிரியருடன் ஏன் தகராறில், வல்சன் தம்பு ஈடுபட்டுள்ளார் என்பது வியப்பாக இருக்கிறது.

Prof Nandita Narain taught 23 years st St. Stephen

Prof Nandita Narain taught 23 years st St. Stephen

ஜூலை.31, 2015: நந்திதா நாராயண் என்கின்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரி கணித பேராசிரியர் மற்றும் தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர், வல்சன் தம்பு தன்னை பழிவாங்க நினைக்கிறார் என்று எடுத்துக் காட்டியுள்ளார். வழக்கம் போல தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட விடுமுறை கேட்டபோது, அதனை மறுக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்[1].

ஜூலை.30, 2015: வல்சன் தம்பு, தங்களை ஆதரிப்பதற்காக பல்கலை மானிய குழுக்கு பேஸ்புக் மூலம் நன்றி தெரிவித்தார்[2]. பெரிய அற்புதம் நிகழ்ந்தது, ஆண்டவர் தம்மை காப்பாற்றினார் என்றேல்லாம் எழுதியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[3].

Valsan Thampu row with Prof Nandita Narain

Valsan Thampu row with Prof Nandita Narain

ஜூலை.30, 2015: பாதிக்கப்பட்ட மாணவி, அக்டோபர்.14 2014 முதல் ஜூன்.30 2015 வரை தனக்கு சேர வேண்டிய ரூ. 20,800/- மற்றும் ரூ.1,21,420/- போக்குவரத்து படியையும் சேர்த்துகொடுக்குமாறும், தான் ஆராய்ச்சி செய்து தயாரித்து வைத்துள்ள NY-6, 2NY-91, 2NY-92, 2NY-132 கூட்டுப்பொருட்களை, தன்னுடைய ஆரய்ச்சிக் குறிப்புகளுடன் திரும்பக் கொடுக்குமாறும் கடிதம் மூலம் வல்சன் தம்புவைக் கேட்டுக் கொண்டுள்ளார்[4].

Valsan Thampu envious of Nandita Narain

Valsan Thampu envious of Nandita Narain

ஜூலை.23, 2015: ஸ்மிருதி ராணி, பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து பேசினார். உடன் சிபிஎம்மின் போலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் இருந்தார். அம்மாணவிக்குரிய உதவித் தொகை, சோதனைக்கூடத்திற்கு செல்லும் அனுமதி முதலியவற்றை தொடர்ந்து கொடுக்குமாறு, தில்லி பல்கலஒக்கழகத்திற்கு உத்தரவிட்டார்[5].

ஜூலை.5, 2015: பல்கலை மானிய குழு, ஒரு பிரதிநிதியை செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு அனுப்பி வைத்தது[6].

ஜூலை.7, 2015: டெல்லி பல்கலைக்கழக பதிவாளருக்கும், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன[7]. ஸ்டீபன் கல்லூரியில், ஆராய்ச்சி படிப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இவ்விகாரத்தை மூடி மறைக்க முயலும் முதல்வரை பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் டெல்லி பல்கலை. மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்[8].

St Stephen victim interview with NDTV

St Stephen victim interview with NDTV

ஜூன்.24 2015: பேராசிரியர் சதீஷ் குமார் மீது போலீசில் பாலியல் புகார் அளித்ததால், பாலியல் புகாரில் டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலையில், இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது[9]. கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சதீஷ் தன்னை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது எதிர்காலம் பாதிக்கும் என்று அஞ்சி தான் இத்தனை ஆண்டுகளாக சதீஷ் குமார் மீது புகார் அளிக்கவில்லை என்று அந்த மாணவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சதீஷ் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது[10]. இதற்கிடையே சதீஷ் கல்லூரியின் நிதி நிர்வாக அதிகாரி பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கல்லூரி முதல்வர் வல்சன் தம்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்திருந்தால் அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஆனால் அது குறித்து நான் முடிவு செய்ய முடியாது. மகாத்மா காந்தி, யேசு நாதர், நபிகள் நாயகம் மீது கூடத் தான் புகார் எழுந்தது. அனைத்து சீர்திருத்தவாதிகள் மீதும் புகார் உள்ளது என்றார்[11].

Valsan Thampu fights through Facebook

Valsan Thampu fights through Facebook

2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி: டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராக பணிபுரிபவர் சதீஷ்குமார். இதே துறையில் பி.எச்டி படித்து வரும் மாணவிக்கு, சதீஷ்குமார் வழிகாட்டியாகவும் இருக்கிறார். இந்நிலையில், சதீஷ்குமார் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக சம்பந்தப்பட்ட மாணவி ஒழுங்கு நடவடிக்கை குழுவிடமும் (ஐசிசி), முதல்வரிடமும் புகார் தெரிவித்தார்[12].  இந்நிலையில், சத்தீஷ் தனது ஆசைக்கு இணங்கினால் மட்டுமே முனைவர் ஆய்வை முடித்துக் கொடுப்பதாக கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி வந்ததாக புகார் கூறியுள்ளார் அந்த மாணவி. இதுகுறித்து அம்மாணவி அளித்த புகாரில், இதற்கான முயற்சியில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி சத்தீஷ் தன்னிடம் முறை தவறி நடந்துகொண்டதாக கூறியுள்ளார். தனக்கு எதிராக புகார் செய்தால் முனைவர் பட்டம் பெறமுடியாது என்று சத்தீஷ் மிரட்டியதால் ஆய்வை முடிப்பதற்காக பொறுமை காத்ததாக அம்மாணவி கூறியிருக்கிறார்[13].

Valsan Thampu responds

Valsan Thampu responds

செக்ஸ் புகாரில் சர்ச்சைக்குள்ளான வல்சன் தம்பு: ஆனால், ஒழுங்கு நடவடிக்கை குழு, இந்த விவகாரத்தில் பாரபட்சம் பார்ப்பதாகவும், சதீஷ்குமாரை காப்பாற்ற முதல்வர் வல்சன் தாம்பு முயல்வதாகவும் கூறி மாணவி, ஐசிசியில் அளித்த புகாரை வாபஸ் பெற்றார். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக சதீஷ்குமார் மற்றும் முதல்வருக்கு எதிராக மாணவி போலீசில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பேராசிரியர் சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், டெல்லி பல்கலையின் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கல்லூரியின் வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜினாமா செய்ய தயார். செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் வல்சன் தாம்பு கூறுகையில், ‘இது தொடர்பாக கல்லூரிக்குள்ளேயே விசாரணை நடந்து வருகிறது.  என் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கல்லூரியின் நலன் கருதி அடுத்த நிமிடமே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’ என்றார்.

Valsan Thampu and St.Stephen involved in controversies

Valsan Thampu and St.Stephen involved in controversies

பலவித சர்ச்சைகளில் சிக்கியுள்ள வல்சன் தம்பு: வசன் தம்பு, பொதுவாகவே பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பது தெரிகிறது. இதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

  1. 2008ல் அலஹாபாத் விவசாய நிறுவனத்திலிருந்து பெற்ற (தனிநிகர் பல்கலைக்கழகம்) தனது இறையியல் பிஎச்.டி செல்லாது என்பதால் ராஜினாமா செய்ய நேரிட்டது. ஆனால், அடே ஆண்டில் மறுபடியும் முதல்வராக நியமிக்கப்பட்டார். விவசாய நிறுவனத்திலிருந்து இறையியல் பிஎச்.டி பெற்றதே வினோதமாக இருக்கிறது.
  1. 2008ல் ஒரு சமஸ்கிருத ஆசிரியர், ஒரு அமெரிக்க மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அவ்வழக்கு, தில்லி உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கிலும், அம்மாணவி வல்சன் தம்புவிடம் புகார் கொடுக்கச் சென்றபோது, அவர், அந்த சமஸ்கிருத ஆசிரியரோடு சேர்ந்து கொண்டு, தன்னை கல்லூரியிலிருந்து விலக்க முயற்சித்தார் என்று கூறியிருக்கிறார்[14].
  1. 2012ல் 19-வயதுக்கு கீழே போட்டியிடும் கிரிக்கெட் கேப்டனாக இருக்கும், உன்முக்த் சந்த், என்ற அக்கல்லூரி மாணவர் குறைந்த கல்லூரி வருகைப்பதிவு உள்ளது என்று பரீட்சை எழுதவிடாமல் வல்சன் தம்பு தடுத்தார். பிறகு ஒப்புக் கொண்டார்.

© வேதபிரகாஷ்

01-08-2015

[1] http://www.business-standard.com/article/pti-stories/stephen-s-maths-prof-accuses-principal-of-pursuing-personal-115073101312_1.html

[2] http://timesofindia.indiatimes.com/city/delhi/UGC-is-backing-him-claims-Thampu-on-FB/articleshow/48303658.cms

[3] “Shouldn’t we, my friends, as a community of ordinary people, rejoice at the extraordinary things that happen in our midst? [Eight] years ago, no one gave me a ghost of a chance to survive the ferocious, orchestrated attacks that a large number of highly feared agents had unleashed -de facto declaring a war-on the college. There were those who believed that the College would go six feet underground. By the mercy of the Almighty, it today stands towering several feet above all other institutions in excellence. If this is not a miracle, what is?”

[4] http://www.dnaindia.com/india/report-st-stephen-s-molestation-victim-sends-caution-note-to-valson-thampu-and-professor-2109631

[5] http://www.ndtv.com/delhi-news/had-a-great-time-valson-thampu-after-meeting-university-grants-commission-officials-1202280

[6] http://www.siasat.com/news/st-stephens-molestation-row-valson-thampu-meets-ugc-officials-says-had-great-time-803386/

[7]  தி-இந்து, டெல்லி கல்லூரி ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு: அறிக்கை கோரியது மனிதவள அமைச்சகம், Published: June 24, 2015 13:11 ISTUpdated: June 24, 2015 18:20 IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1288189

[9] http://tamil.thehindu.com/india/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7350004.ece

[10] Read more at: http://tamil.oneindia.com/news/india/jesus-prophet-muhammad-mahatma-gandhi-have-faced-allegatio-229618.html

[11] http://tamil.oneindia.com/news/india/jesus-prophet-muhammad-mahatma-gandhi-have-faced-allegatio-229618.html

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=154571

[13] தினகரன், செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: முதல்வர் ராஜினாமா செய்யக்கோரி மாணவர்கள், பேராசிரியர்கள் போராட்டம், மாற்றம் செய்த நேரம்:7/7/2015 6:28:09 AM.

[14] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2617183/Case-against-St-Stephens-college-professor-Nandita-Narain-hold-principal-seeks-court-settlement.html