சர்ச்சுகளிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் விருதுகள் வாங்குவது!
விஜயகாந்துக்கு டாக்டர் பட்டம்: சமூக சேவை செய்ததற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்.) என்ற இறையியல் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது[1]. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பிளைமெளத் நகரிலிருந்து இந்த பல்கலைக்கழகம் இயங்குகிறது. சென்னை சேத்துப்பட்டில் தனியார் பள்ளி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ம் தேதி விஜய்காந்துக்கு இந்த பட்டம் வழங்கப்படும். இதற்கான அழைப்பிதழ் அச்சடிப்பு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தே.மு.தி.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்.): தனது இணைதளத்தில், இது குறிப்பிடுவதாவது, “Distinguished and Experienced Candidates in Ministry or Public Service by IICM, based on the recommendation, bio-data of proved record”. கிருத்துவப்பணி அல்லது பொதுப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு பரிந்துரையின் பேரில் சிறந்த மற்றும் பிரபலமானவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்படுகிறது, என்கிறது[2]. முன்னர் இந்தியாவில் இத்தகைய டாக்டர் பட்டம் பெற்றவர்களின் படங்களை இங்கே பார்க்கலாம்[3].
உங்களுக்கு டாக்டர் பட்டம் வேண்டுமா? உங்களுக்கு டாக்டர் பட்டம் வேண்டுமானால், உங்கள் பெயரை நீங்களே பரிந்துரைத்துக் கொள்ளாலாம்[4]. இதோ விவரங்கள்[5]:
CONFERRING HONORARY DOCTORATES BY IICM We will be happy to receive One of the following Honorary Degrees A bio-data and a photo should be sent to iicm@aol.com, intl@iicm.us for processing |
ஜெயலலிதாவுக்கு முன்பு தங்கத்தாரகை பட்டம் அளிக்கப்பட்டது: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச நட்புறவுக் கழகம் என்ற அமைப்பு, சிறந்த ஸ்டேட்ஸ்மென் விருதினை வழங்க உள்ளது[6]. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்பு குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருதினை வழங்கியுள்ள நிலையில் அமெரிக்க நட்புறவுக் கழகத்தின் விருதும் அவருக்குவழங்கப்படவுள்ளது. இதுகுறித்து தங்கத் தாரகை விருது வழங்கும் நிகழ்ச்சியில் உலக தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பின் தலைவர் 23-10-2004 அன்று டாக்டர் விஜய் பிரபாகரன் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய உழைப்புக்காகவும், சிறந்த ராஜதந்திரத்திற்காகவும் இந்த விருது அவருக்குவழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் – 2005 அமெரிக்காவில் நடக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும். இதனைமுதல்வர் ஜெயலலிதா நேரில் அமெரிக்காவுக்கு வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்[7].
இந்தியாவில் கொலைக்காரன், கொள்ளைக்காரன், சாராய வியாபாரி, லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தவன், விபச்சர புரோக்கர்…………….என அனைவர்க்கும் டாட்டர் பட்டம் கொடுத்தாகி விட்டது[8]: டாக்டர் பட்டம் என்பது, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அந்த அளவிற்கு கேவலமாகி விட்டது. இந்த தடவை காஷ்மீர் தீவிரவாதி, சால்வை விற்ப்பவன், முதலியோருக்கு எல்லாம், பத்மஸ்ரீ பட்டங்கள் கொடுத்து இருக்கிறர்கள் ஆகையால், இனி டாக்டர் பட்டங்கள் பற்றி கவலையில்லை. இதனால், கஷ்டப்பட்டு, படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள், தாங்கள் டாக்டர் என்று போட்டுக் கொள்ளவே கூச்சப்படும் அளவிற்கு வந்து விட்டது. ஏனெனில், பல விழாக்களில் அத்தகைய டாக்டர்களுடன், இவர்களும் சேர்ந்து உட்கார வேண்டியிருக்கிறது, அதுமட்டுமல்லாது, அவர்களை விளிக்கும் பொது, “டாக்டர்” சொல்ல வேண்டியிருக்கிறது! இல்லையென்றல் படித்த டாக்டர்களின் கதி அதோகதிதான்! படிக்காத பொறுக்கிகளுக்கே “டாக்டர்” பட்டம் வாங்கியவுடன், ஒரு திமிர் வரும் போது, உண்மையாக கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்கியவனுக்கு எப்படி இருக்கும்? இதனால், படித்தவர்கள், மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும் காசு கொடுத்து “டாக்டர்” பட்டம் வாங்கிக் கொள்ளலாம், என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆக, அரசியல்-பணபலம் இல்லாமல், படித்து வாங்கினால், மரியதை இல்லை என்றால், படிப்புக்குக் கொடுக்கப்படும் மரியாதை என்ன?
தமிழ்நாட்டில் “டாக்டர்களுக்கு”ப் பஞ்சமில்லை[9]: சினிமாக்காரர்கள், நடிகர்கள்…………..எல்லோரும் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இதனால், கொடுத்தப் பல்கலைகழகங்களுக்குப் பெருமையா, இல்லை வாங்கியவர்களுக்குப் பெருமையா என்று காலம்தான் பதில் சொல்லும். இவர்கள் பெயர்களையெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், அவ்வப்போது, அவர்களே பாராட்டு விழாக்கள் நடத்தி, சுவரொட்டிகள் ஒட்டி, நாளிதழ்களில் பாராட்டுத் தெரிவித்து அமர்க்களப்படுத்தியுள்ளார்கள்!
கிருத்துவர்கள் விஜய்காந்திடம் எதிர்பார்ப்பது என்ன? கிருத்துவர்களைப் பொறுத்தவரைக்கும் “டாக்டர்” பட்டங்களை காசு கொடுத்தே / நிதியுதவி செய்தே / பணத்தை தானம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம். “டாக்டர் ஆஃப் டிவினிடி” என்று பட்டம் பெற்று “டாக்டர்” பட்டத்துடன் உலாவருவர். ஆக, அவர்கள் விருது போல கொடுக்கிறார் என்றால், ஏதோ எதிர்பார்த்து செய்கின்ரனர் என்று தெரிகிறது. முன்பு ஜெயலலிதாவிற்கு படம் / விருது கொடுத்ததும் “மதமாற்ற”ச் சட்டத்தை திரும்பப்பெற்றுவிட்டார். இனி விஜய்காந்த என்ன செய்வார் என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
வேதபிரகாஷ்
© 25-11-2010
[1] http://timesofindia.hotklix.com/link/Entertainment/Regional-Movies/Doctorate-for-Vijayakanth-KOLLY-TALK
[6] http://asiantribune.com/news/2004/10/09/jayajalalithaa-gets-international-award-her-work-remove-gender-bias
[8] வேதபிரகாஷ், டாக்டர் பட்டம்: சோனியாவும், ஆனந்தும் – “செக்மேட்” செய்யப்பார்த்த கேடுகெட்ட அரசியல்வாதிகள்!,
http://atrocitiesonindians.wordpress.com/2010/08/25/doctorate-for-all-but-not-for-deserved/
[9] வேதபிரகாஷ், கருணாநிதி ஆட்சியில் போலி டாக்டர்கள் இருப்பது ஆச்சரியமே!, http://dravidianatheism.wordpress.com/2010/04/04/doctors-in-karunanidhi-rule/