Archive for the ‘அடிப்படைவாதம்’ Category

அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்தி யபெண்- உடனடியாகக் கொல்லப் பட்டது, பின்னணி என்ன?

பிப்ரவரி 14, 2024

அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய பெண்உடனடியாகக் கொல்லப் பட்டது, பின்னணி என்ன?

பாஸ்டர் ஜோயல் ஓஸ்டீன் லேக்வுட் சர்ச்: அமெரிக்காவில் தனிமனிதர்கள் சர்ச்சுகளை ஆரம்பித்து நடத்துவதும், அவற்றில் அவ்வூர் மக்கள் உறுப்பினர்களாகி, செயல்பட்டு வருவதும் தெரிந்த விசயமே. அமெரிக்காவில் இது ஒரு பெரிய வியாபாரம் எனலாம். பொதுவாக அவர்கள் கத்தோலிக்கப் பிரிவு இல்லாதவர்களாக இருப்பார்கள். இவ்வாறு உருவாக்கப் பட்ட, அமெரிக்காவின் ஹூஸ்டன் [Osteen] நகரில் 3700 சவுத்வெஸ்ட் பிரீவே என்ற பகுதியில் ஜோயல் ஆஸ்டீன் லேக்வுட் [pastor Joel Osteen’s Lakewood church[1]] என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் (சர்ச்) ஒன்று உள்ளது[2]. 1950ல் ஓஸ்டீனின் தந்தையால் ஆரம்பிக்கப் பட்ட சர்ச் ஆகும்[3]. இந்த ஆலயம் நகரில், மக்கள் பரவலாக கூடும் மற்றும் அதிக பரபரப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது[4]. நகரில் 6 மைல்கள் பரப்பளவில் அமைந்த மிக பெரிய ஆலயமும் ஆகும்[5]. இதற்கு தனி கட்டிடம், தொலைகாட்சி, என்று எல்லா வசதிகளும் இருக்கின்றன. கோடானு கோடிகளில் நிதியும் பெற்று வருகின்றது. பல சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருவதாக, சர்ச்சின் இணைதளம் கூருகிறது.

பலதரப்பட்ட அமெரிக்க மக்களின் பிரச்சினைகள்: யு.எஸ் & மெக்ஸிகோ எல்லையில் குடும்பங்களுக்கு சேவை செய்யும் புலம்பெயர்ந்த தலைவர்களுடன் பணிபுரிதல். எல்லையோர சமூகத்தினருக்கான வாழ்க்கையின் தனித்துவமான அம்சங்களுக்கு குழு அறிமுகப்படுத்தப்படும் மற்றும் கலாச்சார தடைகள் மூலம் வழிகாட்டுதல் போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தெற்கில், தொடர்ந்து அமெரிக்காவில் மற்றநாட்டவர் உள்ளே நுழைவது சாதாரணமாக இருக்கிறது. இது அமெரிக்காவுக்கு ஒரு பிரச்சினையாகவும் உள்ளது. ஏற்கெனவே, அமெரிக்க பூர்வீக மக்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏனெனில், அமெரிக்க பூர்வீகக் குடிகளான, செவ்விந்தியர்களுக்கு அரசாங்க வேலை, ஆட்சி அதிகாரம் போன்றவற்றில் பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை. ஆப்பிரிக்க மக்கள் இருக்கும் நிலையில் கூட செவ்விந்தியர்கள் இல்லை. அந்நிலையில், மத்திய-தெ அமெரிக்க நாடுகளிலிருந்து, அமெரிக்காவுக்கு வரும் அகதிகளால், அத்தகைய வேறுபாடு அதிகமாக்கும் நிலையும் உள்ளது.

11-02-2024 அன்று சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொலை: அத்தோலிக்கர் அல்லாத சர்ச்சுகள், ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகமாக ஆர்பாட்டத்துடன் நிகழ்சிகளை நடத்துவது சாதாரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் அது, விடுமுறை கொண்டாட்டம் போன்றது. அதனால், குடும்ப்த்துடன் கலந்து கொள்வார்கள். அதிகாளவில் கூட்டமும் இருக்கும். ஆக, இங்கும் அத்தகைய நிலை தான் இருந்தது. இந்நிலையில், 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆலயத்திற்கு 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் ஆண் குழந்தை ஒன்றுடனும், மற்றொரு கையில் துப்பாக்கியுடனும் நுழைந்துள்ளார்[6]. அவர், ஆலயத்தில் நுழைந்ததும் துப்பாக்கியால் சுட தொடங்கினார்[7]. அதாவது, அப்பெண் ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாறான பீதியை உண்டாக்க வேண்டும் என்ற ரீதியில் தான் திட்டத்துடன் வந்து காரியத்தைச் செய்திருக்கிறாள். இதனால் பிரார்த்தனைக்காக கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்[8].

பாதுகாப்பு போலீசார் உடனடியாக அப்பெண்ணைச் சுட்டது: இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார், அதனை கவனித்து, உடனடியாக அவரை நோக்கி சுட்டனர்[9]. உழந்தையுடன் இருந்ததால், ஜாக்கிரதையாகத்தான் செயல்பட்டிருக்கின்றனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார்[10]. அவருடைய கையில் இருந்த 5 வயது கொண்ட குழந்தைக்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் ஏற்பட்டது[11]. உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்[12]. இதேபோன்று 57 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்[13]. பாதுகாவலர் உடனடியாக, அப்பெண்ணைச் சுட்டுக் கொன்றதால், பலர் உயிர்களுக்கும் அபாயம் மற்றும் கூட்ட நெரிசலால் ஏற்படவிருக்கும் அசம்பாவிதம் முதலியன தடுக்கப் பட்டன எனலாம். அந்த பெண் யார், அவளுக்கு, இந்த சர்ச்சுக்கும் என்ன பிரச்சினை, எதற்காக சுடுவதற்கும் ஹயாராக துபாக்கியுடன் நுழைந்தாள் போன்ற விவரங்கள் தெரியவில்லை.போலீசாரும் இசாரிப்பதாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்.

பாலஸ்தீன ஸ்டிக்கர் ஒட்டப் பட்ட துப்பாக்கி: இதுபற்றி ஹூஸ்டன் நகர போலீஸ் அதிகாரியான பின்னர் என்பவர் கூறும்போது[14], சம்பவ பகுதியிலேயே அந்த பெண் மரணமடைந்து உள்ளார். குழந்தையை சுட்டது யார் என தெரியவில்லை. ஆண் நபரையும் துப்பாக்கியால் சுட்டது யாரென்ற விவரம் வெளிவரவில்லை. இந்த துப்பாக்கி சூட்டிற்கான பின்னணி பற்றிய விவரம் எதுவும் தெரிய வரவில்லை. குழந்தைக்கும், அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட AR-15 ஐப் பயன்படுத்தி அதில் “பாலஸ்தீனம்” ஸ்டிக்கரைப் பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். ஒரு கூட்டாட்சி சட்ட அமலாக்க ஆதாரம் முன்பு CNN இடம் துப்பாக்கியில் “ஃப்ரீ பாலஸ்தீனம்” என்று எழுதப்பட்டிருந்தது. அவளது பையில் .22 காலிபர் ஆயுதமும் இருந்தது, அது தாக்குதலில் பயன்படுத்தப்படவில்லை என்று மத்திய சட்ட அமலாக்க வட்டாரம் தெரிவித்துள்ளது. புலனாய்வாளர்கள் அவர் அரசியல் உள்நோக்கம் கொண்டவரா அல்லது மன உளைச்சலுக்கு ஆளான நபரா என்பதை கண்டறிய முயன்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கிரிமினல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனநலப் பிரச்சினைகளின் வரலாற்றைக் கொண்டிருந்தார்[15]: மோரேனோவின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் தகவல்கள், மனநல சவால்களின் வரலாற்றைக் கொண்ட ஒரு தாயின் உருவப்படத்தை எடுத்துக் காட்டுகின்றன[16]. ஒரு திங்கட்கிழமை செய்தி மாநாட்டின் போது, ஹூஸ்டன் படுகொலைத் தளபதி கிறிஸ்டோபர் ஹாசிக், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆண் மற்றும் பெண் பெயர்கள் உட்பட பல மாற்றுப்பெயர்களைப் பயன்படுத்தியதாகக் கூறினார். மோரேனோ 2016 இல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், காவலில் வைக்கப்பட்டார், மேலும் ஹூஸ்டன் காவல்துறையால் ஆவணப்படுத்தப்பட்ட மனநல வரலாறு அவருக்கு உள்ளது என்று ஹாசிக் கூறினார். டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பதிவுகள், கடந்த இரண்டு தசாப்தங்களாக மரிஜுவானா, தாக்குதல், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தல், கைது மற்றும் போலிக் குற்றச்சாட்டு உள்ளிட்ட சிறு குற்றங்களுக்காக மொரேனோ கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தனது 30 வயதில், ரியல் எஸ்டேட் மற்றும் நிதிச் சேவை நிறுவனத்தை நிறுவியவர் என்று சமூக ஊடகங்களில் தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார். சமூக ஊடக பக்கங்களில் தனது சொந்த கணக்கின் மூலம், அவர் புதிய குடியிருப்புகள் முதல் வணிக வளாகங்கள் வரை அனைத்தின் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். மார்ச் 2020 இல் ஒரு சமூக ஊடக இடுகை, மொரேனோவின் நன்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் லேக்வுட் தேவாலயத்தின் படிவக் கடிதத்தின் ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டுகிறது. தவிர, தனது கணவனையும் துன்புருத்தி வருவதாகத் தெரிகிறது ஏனெனில், அவளது கணவர் அத்தகையப் புகாரைக் கொடுத்துள்ளார்..

© வேதபிரகாஷ்

14-02-2024


[1] https://www.lakewoodchurch.com/

[2] தினத்தந்தி, அமெரிக்கா: சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை, தினத்தந்தி பிப்ரவரி 12, 7:25 am (Updated: பிப்ரவரி 12, 2:11 pm).

[3] Its origins were humble. In fact, the first meeting of Lakewood Church was held in a converted feed store on the outskirts of Houston on Mother’s Day, 1959. A caring atmosphere, quality leadership, and community outreach attracted people from all ages, religious backgrounds, races, and walks of life. https://www.lakewoodchurch.com/about/history

[4] https://www.dailythanthi.com/News/World/prime-minister-modi-launched-upi-in-abu-dhabi-1093720?infinitescroll=1

[5] மக்கள் குரல், அமெரிக்கா சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை, Posted on February 12, 2024

[6]https://makkalkural.net/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/

[7] தமிழ்.ஒன்.இந்தியா,

[8] https://www.oneindia.com/international/houston-megachurch-shooting-woman-killed-child-injured-gen-3748655.html

[9] செய்திசோலை, குழந்தையுடன் வந்த பெண்…. திடீரென செய்த கொடூரம்…. சுட்டு தள்ளிய போலீஸ்….!!,  February 12, 2024

[10]https://www.seithisolai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4/

[11] Indian TV News, Texas: Woman accompanied by five-year-old boy opens fire at church killed, two injured, Edited By: Raju Kumar , @rajudelhi123, Houston, Updated on: February 12, 2024 8:18 IST

[12] https://www.indiatvnews.com/news/world/texas-shooting-woman-accompanied-by-five-year-old-boy-opens-fires-at-church-killed-two-injured-2024-02-12-916385

[13] ANI News, US: Woman gunned down after shooting at Lakewood church in Houston, ANI | Updated: Feb 12, 2024 05:00 IST

[14] https://www.aninews.in/news/world/us/us-woman-gunned-down-after-shooting-at-lakewood-church-in-houston20240212050048/

[15] CNN, Shooter at Houston megachurch had lengthy criminal history including weapons charges, police say, By Christina Maxouris, Lauren Mascarenhas and John Miller,  Updated 12:46 AM EST, Tue February 13, 2024

[16] https://edition.cnn.com/2024/02/12/us/joel-osteen-lakewood-church-shooting-monday/index.html

பாஜக-இந்துத்துவவாதிகளின் கிறிஸ்துவர்களுக்கான கிறிஸ்துமஸ் கால சினேஹ யாத்திரை ஏன்? (1)

திசெம்பர் 23, 2023

பாஜகஇந்துத்துவவாதிகளின் கிறிஸ்துவர்களுக்கான கிறிஸ்துமஸ் கால சினேஹ யாத்திரை ஏன்? (1)

தமிழக இந்துத்துவவாதிகளால் இந்துகளுடனே உரையாடல் வைத்துக் கொள்ள முடிவதில்லை: தமிழகத்தில் இருக்கும் இந்துத்துவவாதிகள் இரட்டை வேடம் போடுகிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி வந்ததுண்டு. அடிக்கடி அவர்களது குழுக்கள், கோஷ்டிகள், கும்பல்கள் திடீரென்று வருடாவருடம் அல்லது காலத்திற்கு ஏற்றபடி மாறுவதும் கவனிக்கப் படுகிறது. ஏதோ கொள்கை, நியாயம், தர்மம் எண்றெல்லாம் பெரிய யோக்கியர்கள் போல பேசினாலும், சிலரின் போக்கு, நடத்தை முதலியவை நிச்சயமாக அவ்வாறில்லை. துரோகம் செய்வதிலும் வல்லவர்களாகி விட்டனர். அரசியல் ஒருவேளை அவர்களை அவ்வாறு செய்து விட்டது போலும். “குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று தமிழக அரசியலில் சொல்வதைப் போல, இப்பொழுது, இவர்களும் மாறத்தான் மாறியிருக்கிறார்கள். அரசியலில் சேர்ந்த பிறகு ஒழுக்கத்தை எல்லாம் பற்றி பேச முடியாது, பேசக் கூடாது என்றால், பிறகு அவ்வாறே அரசியல்வாதியாக இருந்து விட்டுப் போகலாம். பிறகு, ஏதோ “ரிஷி-முனி-மகான்” போன்றெல்லாம் பேசக் கூடாது. தமிழக இந்துத்துவவாதிகளால் இந்துகளுடனே உரையாடல் வைத்துக் கொள்ள முடிவதில்லை, நண்பர்களாக இருக்க முடிவதில்லை. பிறகு, கிறிஸ்தவர்களின் மீது எப்படி பாசம் கிளம்புகிறது?

கிறிஸ்தவஇந்துத்துவ உரையாடல்கள்: இந்த “கிறிஸ்துவ” உறவுகள், பாசங்கள், நேசங்கள் விவகாரங்களில் அவர்களது போக்கு விசித்திரமாக, வினோதமாக, முரண்பாடாக, திகைப்பாகத்தான் இருக்கிறது. நட்பு ரீதியில் நண்பர்களாக எல்லோருடனும் இருக்கலாம், அந்த நட்பைப் போற்றலாம், வாழலாம். ஆனால், ஒரு பக்கம் இப்படி- இன்னொரு பக்கம் அப்படி என்று இருக்கக் கூடாது- முடியாது. அப்படி இருக்க முடியும், இருக்கிறார்கள் என்றால், நிச்சயாமாக அவர்களிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று தான் முடிவாகிறது. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,” என்று சொல்லிவிட்டால், யாரும் கேட்கப் போவதில்லை. மற்ற நம்பிக்கையாளர்களுடன், மதத்தவர்களுடன் “உரையாடல்” என்று வைத்துக் கொள்வது, கிறிஸ்தவர்களின் திட்டங்களுள் ஒன்றாகும். அவர்கள் அதை மறைத்ததில்லை, தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேரளாவில் கிறிஸ்தவஇந்துத்துவ உரையாடல்கள்: கேரளாவைப் பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் கிறிஸ்துவர்கள் அல்லது சர்ச்சுகளிடையே மோதல்கள் இருந்து கொண்டிருந்தன. அதனால், அவ்வப்பொழுது, அவர்கள் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஶ்ரீசுதர்சன்ஜி இருக்கும் பொழுது, அத்தகைய உரையாடல்கள் நடந்துள்ளன. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பலமுறை உரையாடல்கள் நடந்துள்ளன. மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பொழுதும், அத்தகைய சந்திப்புகள் நடந்துள்ளன.  இஸ்ரேலுடனான உறவும் அவ்வாறே கவனிக்கப் படுகிறது. மணிப்பூர் விவகாரம் விரிசலை ஏற்படுத்தியது. அதனால், இந்துத்துவவாதிகள் கிறிஸ்துவர்களுடன் “உரையாடல்” வைத்துக் கொள்வது அரசியல் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது, ஏனெனில், அவர்களுக்கு ஒன்றும் “’இறையியல்” உரையாடல் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களுக்கு இறையியலில் எல்லாமே உண்டு. ஆக, அந்ந்நிலையில் “சிநேக யாத்திரை” கவனிக்கப் படுகிறது.

05-12-2023 அன்று நடைபெற்ற கேரளா மாநில பா.. உயர்மட்டக்குழுக் கூட்டம்: ஐந்து மாநிலத் தேர்தலில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருகிறது பா.ஜ.க. இந்த நிலையில் கேரளா மாநில பா.ஜ.க உயர்மட்டக்குழுக் கூட்டம் 05-12-2023 அன்று கோட்டயத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்த திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. மக்களவைத் தோ்தல் நெருங்கிவரும் சூழலில், கேரள மக்கள்தொகையில் கணிசமான பங்கு வகிக்கும் கிறிஸ்தவா்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில், இந்த ஆண்டு ஈஸ்டா் திருநாளையொட்டி முதன்முதலாக இந்தப் பரப்புரை தொடங்கி நடத்தப்பட்டது[1]. தற்போது ‘கிறிஸ்துமஸ்’ மற்றும் ‘ஆங்கிலப் புத்தாண்டு’ பண்டிகை காலத்தையொட்டி, ஸ்நேக யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது[2].

டிசம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஸ்நேஹ யாத்ரா: மேலும், கிறிஸ்தவ மக்களை நெருங்கிச் செல்லும்விதமாக ‘சினேக யாத்திரை’ என்ற திட்டத்தை செயல்படுத்துவது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது[3]. அதன்படி கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, வரும் டிசம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கிறிஸ்துவ மக்களின் வீடுகளுக்கு பா.ஜ.க நிர்வாகிகள் செல்ல வேண்டும் எனவும், கிறிஸ்துவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது[4]. இந்த “சகஜமான” யாத்திரை, மேலிடம் ஆசிர்வாதத்துடன் தான் நடைபெறுகிறது என்றும் உறுதியாகத் தெரிகிறது. ஏனெனில், கார்டினலிடம், “சுரேந்திரன், அவரிடம் பிரதமா் நரேந்திர மோடியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்,” என்றதிலிருந்து தெரிகிறது.

21-12-2023 கார்டினல் ஜார்ஜ் ஆலன்செரியை சுரேந்திரன் சந்தித்தது: அன்று ஸ்நேக யாத்திரையின் தொடக்கமாக காக்காநாடு பகுதியின் பிரபல சீரோ மலபார் தேவாலயத்தின் முன்னாள் தலைவா் கார்டினல் ஜார்ஜ் ஆலன்செரியை 21-12-2023 வியாழக்கிழமை நேரில் சென்று சந்தித்த பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன், அவரிடம் பிரதமா் நரேந்திர மோடியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்[5]. தேவாலயப் பிரதிநிதிகளைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களையும் சுரேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்[6]. தேவாலயப் பிரதிநிதிகளுடன் 45 நிமிஷங்களுக்கும் மேலாக நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டவை குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை[7]. இது நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே எனத் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவா் கே.எஸ்.ஸாய்ஜு மேலும் கூறுகையில், ‘பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவா்களிடம் தெரிவித்தோம்[8]. மணிப்பூா் விவகாரத்துக்குப் பிறகு தேவாலயத்துக்கும் பாஜகவுக்கும் மோதல் நிலவுவதாகப் பரவிய செய்தியில் உண்மையில்லை. எங்களுக்கிடையே எப்போதும் நல்லுறவு நீடித்து வருகிறது. டிசம்பா் 30-ஆம் தேதி வரை கிறிஸ்தவா்களின் வீடுகளுக்குச் சென்று பாஜக நிர்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள்’ என்றார்.

கிறிஸ்துவுக்குத் துரோகம்’-காங். விமா்சனம்: பாஜகவின் பரப்புரையை விமா்சித்து கேரள காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘கேரள கிறிஸ்தவ மதத்தினரைச் சந்தித்து பாஜகவினா் வாழ்த்து தெரிவிப்பது ‘ஸ்நேக யாத்திரை’ அல்ல, ‘கிறிஸ்துவுக்கு இழைக்கப்பட்ட துரோகம்’. நாடு முழுவதும் சிறுபான்மையினரை ஏமாற்றும் வரலாறு கொண்ட பாஜகவினா், கேரளத்தில் மட்டும் அவா்கள் மீது அன்பைப் பொழிகின்றனா்’ எனக் குறிப்பிட்டார். ஒருவேளை கிறிஸ்தவ மதத்திற்கு நெருக்கமாக நாங்கள் தான் இருக்கிறோம் என்பதனை காட்டுவதற்காக காங்கிரஸ்காரர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள் போலும். ஏனெனில், சோனியா மைனோ என்கின்ற சோனியா காந்தி கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்த விஷயமே. அதே போல அவர்களது குடும்பமும் சர்ச்சுடன் மிகுந்த நெருக்கத்தை கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே. ஆகையால் இப்பொழுது திடீரென்று பாஜககாரர்கள் கிறிஸ்தவர்களுடன் நெருக்கத்துடன் வரும் போக்கை பார்க்கும் பொழுது, அவர்களுக்கு ஒரு வேலை ஏற்பட்ட பொறாமையால் இவ்வாறு சொல்கிறார்களோ என்றும் கவனிக்கலாம். எப்படி இருந்தாலும் “கிறிஸ்துவுக்கு செய்த துரோகம்” என்று சொல்லும் பொழுது இது மேலும் விசித்திரமாக தான் இருக்கிறது. எனவே அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தும், இவ்வாறு நடக்கிறதே என்று திகைத்து விட்டார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

23-12-2023.


[1] காமதேனு, கேரளாவில் கிறிஸ்துவர்களின் வீடுகள், சர்ச்சுகளுக்கு சினேக யாத்திரைபாஜகவின் பலே வியூகம்!, Updated on: 22 Dec 2023, 11:45 am.

[2] https://kamadenu.hindutamil.in/politics/sneha-pilgrimage-to-christian-homes-and-churches-in-kerala-bjps-strategy

[3] விகடன், சினேக யாத்திரை: கிறிஸ்தவர்களைச் சந்திக்கச் செல்லும் பாஜகசிறுபான்மை வாக்குகளை வளைக்க திட்டம்!, சிந்து ஆர், Published:06 Dec 2023 10 AM; Updated:06 Dec 2023 10 AM.

[4] https://www.vikatan.com/government-and-politics/bjp-plans-for-sneha-yatra-to-target-christian-voters

[5] தினமணி, பாஜக: கேரளத்தில் மீண்டும் தொடங்கும்ஸ்னேக யாத்திரை, By DIN  |   Published On : 21st December 2023 03:22 PM  |   Last Updated : 21st December 2023 03:48 PM  |

[6] https://www.dinamani.com/india/2023/dec/21/bjp-relaunches-sneha-yatra-to-connect-with-christians-in-kerala-4126575.html

[7] தினமணி, கிறிஸ்தவா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் கேரள பாஜகவின் யாத்திரை மீண்டும் தொடக்கம், By DIN  |   Published On : 22nd December 2023 12:00 AM  |   Last Updated : 22nd December 2023 12:00 AM.

[8] https://www.dinamani.com/india/2023/dec/22/kerala-bjps-pilgrimage-to-greet-christians-begins-again-4126858.html

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

மே 18, 2023

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

கத்தோலிக்கப் பையன் ஹிந்து பெண்ணை திருமணம் செய்ததை கத்தோலிக்கச் சர்ச் ஏற்ருக் கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே  கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது.  இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த  நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].  

கத்தோலிக்க போராளிகள் பெண்னியப் போராளிகள் வாய் திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி உடலை புதைக்க மறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு  முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர். 

தொடரும் மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது.  மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

போலீசார் சமரசத்திற்குப் பிறகு உடல் புதைக்கப் பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?

கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன,  பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2023


[1] இ.டிவி.பாரத், மதம் மாறி திருமணம் செய்த மகன்தந்தையின் சடலத்தை புதைக்க காலில் விழக் கூறிய ஊர்மக்கள், May 17, 2023, 07:09 PM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/christians-refused-to-bury-father-dead-body-since-his-son-married-inter-religious-at-theni/tamil-nadu20230517193953468468449

[3] மீடியான்.நியூஸ், ஹிந்து பெண்ணுடன் காதல் திருமணம்இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்து அராஜகம்!, Karthikeyan, Mediyaan News, 18 மே 2023 11:07 AM.

[4] https://mediyaan.com/theni-christian-youth-love-marriage-hindu-girl-objection-burial-dead-body/

[5] ஜீ.நியூஸ், தேனி: மகன் மதம் மாறியதால் தந்தையின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கல்லறை பொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-christians-refused-to-bury-dead-body-since-his-son-changed-his-religion-444804

[7] தினத்தந்தி, காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்..” இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்புசர்ச் விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம், By தந்தி டிவி, 18 மே 2023 8:07 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/if-you-fall-on-our-feet-we-will-allow-to-bury-objection-to-burial-of-the-dead-186876

[9] தினமாலை, தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!, By MALA RAJ Thu, 18 May 2023

[10] https://www.dinamaalai.com/news/the-son-who-converted-and-married-monsters-who-fell-on-his/cid10956003.htm

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

மே 15, 2023

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

கென்யாவில் பட்டினி வழிபாடு நடத்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட கிறிஸ்துவ மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெக்கன்சி [Paul Mackenzie Nthenge] என்பவர் வசித்து வந்தார்[1]. அவருக்கு சொந்தமான, 800ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் ஏப்ரல்  26ம் தேதி தகவல் கிடைத்தது[2]. அப்பொழுதே போலீசார் விசாரித்து, சோதனை செய்த பொழுது, 45 உடல்கள் கிடைத்தன[3], 58 புதைக்குழிகள் கண்டெடுக்கப் பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. ‘பட்டினி கிடந்தால் இயேசுவை அடையலாம்’ என, பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது[5]. பைபிளில் வரும் இறுதி நாட்கள், இறப்பு, உயிர்த்தெழல் முதலியவற்றை விளக்கி, கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சங்கம் முதலியன சாத்தானின் ஏஜென்டுகள் என்று போதித்து வந்தார்[6].

பட்டினி கிடந்து இறந்தால் ஏசுவை சந்திக்கலாம், சொர்கத்திற்குப் போகலாம்: இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் [the Good News International Church ] பாதிரியாரான பால் தெங்கி மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்[7].  அவரது சீடர்களாகி உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி [Doomsday cult] அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது[8].  பட்டினி கிடந்தால் இறக்கும் நிலை ஏற்படும். ஆனால், இறக்காமல் கர்த்தர் நம்மை காப்பாற்றுவார். உயிர் கொடுப்பார், மீட்பார், சுவர்க்கத்திற்கு கூட்டிச் செல்வார் என்றெக்ல்லாம் போதித்து, அவர்களை மூளை சலவை செய்து வைத்தார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்[9]. அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர்[10]. இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்[11]. மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, பண்ணை முழுதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. இதில், 14-05-2023 அன்று மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது.

பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது: பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உடல் மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது. பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைளை குறி வைக்கும் இந்த குரூரக் கூட்டம்: கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி [Interior Cabinet Secretary Kithure Kindiki] சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறினார். தொடர்ச்சியான திகிலூட்டும் இதுபோன்ற வெளிவந்து கொண்டிருக்கும் விசயங்களை பற்றி பாதிரியார் டைட்டஸ் கடானா என்பவர் கூறும்போது, போலி மத சாமியார்களின் முதல் இலக்காக குழந்தைகளே இருந்து உள்ளனர். அவர்களை எளிதில் வசீகரித்து உள்ளனர். சூரியனின் முன் விரதம் இருக்கும்படி குழந்தைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி கூறப்பட்டு உள்ளது.

சீடர்களை, பக்தகளை துன்புறுத்திய விதம்: இந்த தற்கொலை திட்டத்தின் அடுத்த பகுதியாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடுத்தடுத்து இருந்தனர் என பாதிரியார் கடானா கூறியுள்ளார். இந்த கிறிஸ்தவ சமய மரபு சார்ந்த விசயங்களில் 2015-ம் ஆண்டில் கடானா இணைந்து உள்ளார். ஆனால், அது தவறான போக்கை கொண்டுள்ளது என உணர்ந்த அவர் எச்சரிக்கையுடன் விலகி இருக்கிறார். அதனால் தற்போது அவர், போலீசார் விசாரணைக்கு உதவி வருகிறார். அவர் கூறும்போது, குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்தனர். அதன்பின்னர், அவர்களை போர்வையில் சுற்றி புதைத்தனர். இதில், மூச்சு விட்டு கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார். மெக்கன்சியின் சீடர்களை, பாலித்தீன் சீட்டுகளால் தயாரான தற்காலிக வீடுகளில் தங்க வைத்த நிலையில், மெக்கன்சியோ நன்றாக மேற்கூரை போடப்பட்ட, நாற்காலி, தொலைக்காட்சி மற்றும் டைல்ஸ் பதித்த கழிவறை என ஆடம்பரத்துடன் வசித்து வந்து உள்ளார் என தி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் தொடர்பு உள்ளதா?: சில உடல்களின் கைகள் மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால், தண்டனையாக அவ்வாறு செய்திருக்கலாம். ஒரு சில உடலின் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இதனால், உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் செயலும் உள்ளது என கூறப்படுகிறது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், காடு முழுவதும் உடல்களை தேடி அதிகாரிகள் அலைந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கன்சி, அவரது மனைவி மற்றும் மெக்கன்சியின் பல்வேறு கூட்டாளிகளையும் போலீசார் 19-04-2023 அன்று செய்து கைது உள்ளனர். விசாரணை, தேடும் படலங்களும் தொடர்கின்றன.

© வேதபிரகாஷ்

15-05-2023


[1] தினமலர், கென்யாவில் பட்டினி வழிபாட்டில் பலி எண்ணிக்கை 201 ஆக உயர்வு, மாற்றம் செய்த நாள்: மே 15, 2023 05:33

[2] https://m.dinamalar.com/detail.php?id=3320972

[3] ஏபிபிலைவ், கென்யாவில் ஏசு கிறுஸ்துவை காண உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த 47 பேர்!,By: பாண்டிம்மா தேவி | Updated at : 24 Apr 2023 12:25 PM (IST);  Published at : 24 Apr 2023 12:25 PM (IST)

[4] https://tamil.abplive.com/news/world/to-meet-jesus-47-cult-members-in-kenya-allegedly-starve-to-death-5-facts-113425

[5] தினத்தந்தி, கடவுளை காணலாம்கென்யாவில் கொடூரம்; தோண்ட, தோண்ட குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு, தினத்தந்தி மே 15, 6:32 pm.

[6] Mackenzie’s apocalyptic narratives focused on the end of times, and were against the modern or western ways of life such as seeking medical services, education or music. His conspiracy theories emphasised the Catholic Church, the US and the United Nations as “agents of Satan.

https://theconversation.com/kenya-cult-deaths-a-new-era-in-the-battle-against-religious-extremism-205051

[7] https://www.dailythanthi.com/News/World/god-can-be-found-atrocity-in-kenya-201-bodies-including-children-were-dug-up-and-recovered-964949

[8] தந்தி டிவி, கடவுளை நேரில் பார்க்க ஆசைப்பட்டு – 201 பேர் பலி, By தினத்தந்தி, 15 மே 2023 2:02 PM.

[9] https://www.thanthitv.com/latest-news/desperate-to-see-god-in-person-201-people-died-186330

[10] குமுதம், கென்யா: இயேசுவை காண பட்டினி கிடந்த 90 பேர் மரணம் – 213 பேரை தேடும் பணி தீவிரம், S. Joseph Raj, மே 15, 2023.

https://www.kumudam.com/news/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-213-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

[11]

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு – “உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி – செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?

பிப்ரவரி 9, 2023

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடுஉத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு

இனிகோ இருதயராஜ்…

பீட்டர்ஸ் அல்போன்ஸ்……

பால் தினகரன்…..

மற்றவர்…….

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு: த்தகைய செய்திகள் எல்லாம் முன்னால் ஊடகங்களில் வருவதில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகய கிருத்துவ கூட்டங்கள், மாநாடுகள் அடிக்கடி நடப்ப்து விசித்திரமாக இருக்கிறது. பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு, அவனியாபுரம்-மதுரை வளையங்குளத்தில் நடைபெற்றது[1]. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்[2]. இன்னொரு ஊடகம் 6000 என்கிறது. வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[3]. மற்ற பெந்தகோஸ்தே அமைப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்[4]. இனிகோ இருதயராஜின் அழைப்பின் பேரில் முதலில் கலந்து கொள்வதாக இருந்தது. ஈரோடு தேர்தல் முக்கியத்துவத்தால், ஆன்லைனில் பேசியதாக சொல்லப் படுகிறது. அப்போது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் கூறினார்.

என்னால் நேரில் வர இயலவில்லை காணொளி மூலமாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்: அப்போது பேசிய முதல்வர் கூறுகையில், “என்னால் நேரில் வர இயலவில்லை காணொளி மூலமாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் மதுரைக்கே வந்தாலும் சென்னையில் இருந்தபடி பேசினாலும் என்றும் உங்களோடு இருப்பவன் உங்களில் ஒருவன் நான் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே தூரம் அதிகமாக இருந்தாலும் அன்பு நம்மை இணைக்கிறது. நம்பிக்கை நம்மை இணைக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றை தான் சொல்ல முடியும்[5]. மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம், யாரையும் வேற்றுமையாக பார்க்காதே என்பது தான் சகோதரத்துவம், அனைவரிடம் சேர்ந்து வாழ்வதுதான் ஒற்றுமை, ஏழைகள் மீது கருணை காட்டு என்பது தான் இரக்கம், ஏழைக்கு குரல் கொடு என்பதுதான் நீதி மற்றவர்களுக்காக வாதாடு என்பதன் தியாகம், உன்னிடம் இருப்பதை இல்லாதவர்க்கு கொடு என்பதுதான் பகிர்தல் இதைத்தான் கிறிஸ்தவம் சொல்கிறது இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அது தான் சமத்துவ நாடாக அமையும்[6].

உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி: இப்படியெல்லாம் பேசுவது செக்யூலரிஸத் தனமாகுமா, கம்யூனலிஸம் ஆகுமா, சமதர்மம், சமத்துவம், திராவிடத்துவம் ஆகுமா என்று கூட ஆராய வேண்டியுள்ளது. முதலமைச்சராக பேசுவதற்கும், ஸ்டாலின் என்ற திமுக தலைவராக பேசுவது, அல்லது கிருத்துவர் உதயநிதியின் தந்தை என்றெல்லாம் கூட பேசலாம். ஆனால், நிச்சயமாக, வரம்புகள் மீறப்படுகின்றன. சித்தாந்தங்கள் தீவிரமாகின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் கல்வி, சுகாதாரம், தொழில், வளர்ச்சி, மேலாண்மை, மகளிர்,  மேம்பாடு,  குழந்தைகள்  நலன், சிறுபான்மையினர் நலன் என அனைத்திலும் கவனம் செலுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆகும் பணிகளை செய்து வருவதாகவும் கூறினார்.  குறிப்பாக கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை திமுக அரசு செய்து கொடுத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர் , தேவாயங்களை சீரமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலா ஆட்சியின் அடிப்படை நோக்கம்: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தர ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ,  அதைவிட அதிக நம்பிக்கையை இந்த 20 மாத காலத்தில் பெற்றிருக்கிறோம் என்றும்,  இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருப்பது உழைப்பு;  அந்த உழைப்புக்கு பின்னால் இருப்பது உண்மை;  மக்களுக்காக உண்மையாக உழைக்கும் எங்களுக்கு இந்த பாராட்டுக்கள்,  அதிகம் உழைக்க தூண்டுகோலாக அமையும் என்று கூறினார்[7]. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் நமது அரசு தனது நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருகிறது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலா ஆட்சியின் அடிப்படை நோக்கம் இது எனது அரசு அல்ல நமது அரசு உத்தரவிடுங்கள் நிறைவேற்றித் தருகிறோம் என்றார்[8]. ஆனால், இதில் யாரோ வரமாட்டார்கள் என்பது போலிருக்கிறது.

விசுவாசத்துடன் பேசிய அமைச்சர்: தொடர்ந்து பேசிய அமைச்சர் மூர்த்தி கூறுகையில், உங்களுடைய எண்ணங்களையும் உணர்கிறேன் புரிந்து முதல்வர் சொல்லியுள்ளார் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகளை நம் முதல்வர் எதெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதை எல்லாம் நிறைவேற்றுவார், கிறிஸ்தவ சமூகத்தின் பாதுகாவலனாக முதல்வர் என்றைக்கும் இருப்பார். மதவாதிகளினால் ஆபத்து வரும் என்று முதல்வர் சொன்னார். எக்காலத்திலும் முதல்வர் இருக்கும் வரை யாரும் உங்களை நெருங்க முடியாது. அவர் உங்களின் பாதுகாவலனாக இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த சிறுபான்மையினர் சமுதாயத்தின் பாதுகாவலனாக இருப்பார் என்றார். இவ்வாறு தொடர்ந்து பேசி வருவதும் கவனிக்கத் தக்கது. சில நாட்களுக்கு முன்னர், உதயநிதி தான் கிருத்துவர் தான் என்று கிருத்துவ கூட்டத்தில் பேசியிருப்பதை கவனிக்கலாம். அதே கூட்டத்தில், இந்து அறநிலைய அமைச்சர், அல்லேலூயா என்று மூன்று முறை கத்தி கோஷம் போட்டதும் நினைவிருக்கலாம். ஆக, இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள் ஆகி விட்டார்களா, பிரச்சாரகர்களாகி வேலையில் இறங்கி விட்டர்களா என்று தெரியவில்லை.

கிருத்துவதிராவிடத்துவ கூட்டணி செக்யூலரிஸம் ஆகுமா?: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 6000 மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பெந்தகோஸ்தே நான்காவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டனர். பீட்டர்ஸ் அல்போன்ஸ், டேவிட் பிரசாதம், ஏசு அழைக்கிறார் பால் தினகரன், இனிகோ இருதயராஜ் என்று பல பிரிவினரும் கலந்து கொண்டனர். ஆக கத்தோலிக்கர் அல்லாத கூட்டத்தினர் கூட இவ்வாறு ஒன்று சேர்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் ஊழல், பாலியல் குற்றங்கள், வழக்குகள், கைதுகள், சிறை தண்டனை என்றெல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், யாரும் வெட்கப் படுவதாக இல்லை. அரசியல்வாதிகளும் கைகோர்ந்து கொண்டு உல்லா வந்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சாராக இருக்கும் அரசியல்வாதி, “உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்”  என்று பேசுகிறார். பிறகு, சட்டம்-ஒழுங்கு பற்றி நினைப்பவர் என்ன செய்ய முடியும்? போலீஸாரே யோசிக்க வேண்டிய நிலை தான் ஏற்படும். பதிப்பு நாளிதழ்களில் விவரங்கள் வந்திருந்தாலும், இணைதளங்களில் வராமல் இருப்பதும் விசித்திரமாக இருக்கிறது. ஒரு சில வரிகளுடன் நிறுத்திக் கொண்டிருப்பதும், நோக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

09-02-2023.


[1] தினத்தந்தி, உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி, By தந்தி டிவி, 9 பிப்ரவரி 2023 7:49 AM

[2] https://www.thanthitv.com/latest-news/you-give-orders-and-we-deliver-the-assurance-given-by-chief-minister-stalin-166594

[3] தினமலர், தேசிய மாநாடு, Added : பிப் 09, 2023 00:57 …

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3237641

[5] தினகரன், சமத்துவம், சகோதரத்துவம், இரக்கம், நீதி போன்ற குணங்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும்: முதல்வர் மு..ஸ்டாலின் பேச்சு, 2023-02-08@ 21:08:19

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=837381

[7] டாப்.தமிழ்.நியூஸ், எல்லாருக்கும் எல்லான் என்பதே திராவிட மாடலின் அடிப்படை நோக்கம்..’ – முதலமைச்சர் ஸ்டாலின்.., By RAMYA K Thu, 9 Feb 20238:23:27 AM

[8] https://www.toptamilnews.com/thamizhagam/elan-for-all-is-the-basic-objective-of-the-dravidian-model/cid9936977.htm

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்; டிஜிடல் விளம்பரம் மூலம் அறிப்விப்பு, பிறகு ஹாக் செய்யப் பட்டது என்றது!

ஜனவரி 13, 2023

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்; டிஜிடல் விளம்பரம் மூலம் அறிப்விப்பு, பிறகு ஹாக் செய்யப் பட்டது என்றது!

தமிழகத்தில் மதமாற்ற முயற்சிகள்: கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகையால் கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது[1]. நாடு முழுவதும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத மாற்றம் நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களான ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் மதமாற்றம் நடக்கிறது[2]. இதிலும், தமிழகத்தில்தான் மிகப்பெரிய அளவில் மத மாற்றம் நடந்து வருகிறது[3]. இதுவும் தி.மு.க. ஆட்சியின்போதுதான் அதிகளவில் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இது வெட்ட வெளிச்சமானது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் நெற்றியில் விபூதி அணிந்து வரக்கூடாது, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது, கையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் காப்பு, கயிறு அணியக் கூடாது என்றெல்லாம் கிறிஸ்தவ பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூறியது அம்பலமானது. மேலும், பகவத்கீதை கெட்டது, பைபிள்தான் நல்லது என்றும் கூறி மாணவ, மாணவிகளை மதமாற்றம் செய்ய முயன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

அம்பத்தூர் சிக்னல் அருகே உள்ள ஒரு கடையின் மீது டிஜிட்டல் விளம்பரம்: இவ்வாறு மதம் மாற்றுபவர்கள், ஏழை மக்களிடம் பணத்தாசை காட்டியும், படித்தவர்களிடம் மைனாரிட்டி என்பதால் எளிதில் அரசு வேலை கிடைக்கும் என்றும் கூறி மதம் மாற்றி வருகின்றனர். ஆனால், இவை எல்லாம் மறைமுகமாக நடந்து வந்த நிலையில், தற்போது பொதுவெளியிலேயே விளம்பரம் செய்து மதமாற்றம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம் என்பதுதான் வேதனை. சென்னையில்தான் இப்படியொரு அவலம் நடந்திருக்கிறது. அம்பத்தூர் சிக்னல் அருகே உள்ள ஒரு கடையின் மீது டிஜிட்டல் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது[4]. அந்த விளம்பரத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுங்கள், தி.மு.க. அரசால் சலுகைகள் கிடைக்கும். மேலும், 10 லட்சம் ரூபாய் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது[5].

உதயநிதி நான் கிறிஸ்தவன் என்றது, ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது: கடந்த வாரம் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி, தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றும், எனது மனைவி ஒரு கிறிஸ்தவர்தான் என்றும், தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் ஹிந்துக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதனிடையே, மேற்கண்ட விளம்பரப் பலகை குறித்து ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அந்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டிருக்கிறது.

உண்மை அறிவோம்- ஹாக் செய்யப் பட்டது என்பது: குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் சென்னை அம்பத்தூர் போலீசாரை (உதவி ஆணையர் அலுவலகம்) தொடர்பு கொண்டோம்[6]. அவர்கள் பேசுகையில், ‘’அம்பத்தூர், அயப்பாக்கம் பிரதான சாலை, தென்னாட்டு காந்தி அண்ணா நகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல். இவருக்குச் சொந்தமான இடத்தில் அகமது இப்ராஹிம், என்பவர் ‘ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட்’ என்ற பெயரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இப்ராஹிம், கிளினிக் முன்பாக எல்.இ.டி., விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில், ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட் அண்டு ட்ரடிஷனல் ட்ரீட்மென்ட் என்ற வாசகத்தை ஒளிர செய்திருக்கிறார். இதனை யாரோ ஒருவர் வேண்டுமென்றே ஹேக் செய்து, அனைவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள்; தி.மு.க., அரசால் சலுகைகள் கிடைக்கும் மற்றும் 10 லட்சம் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று எழுதியுள்ளார். இதுபற்றி இப்ராஹிம் கிளினிக்கில் பணிபுரியும் கரீம் என்பவர் அளித்த புகாரின் பேரில், மர்ம நபரை தேடி வருகிறோம்,’’ என்றனர். எனவே, இது ஹேக்கிங் முறையில் நிகழ்ந்த தவறு, இப்படி யாரும் விளம்பரம் செய்யவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது[7].

ஹாக், ஹாக்கிங், ஹாக்கிங் செய்தல் (Hack, hacking): மின்னணு துறையில், குறிப்பாக, மென்பொருள், உற்பத்தி, சாப்ஃட்வார் உருவாக்கத்தில் ஹாக், ஹாக்கிங், ஹாக்கிங் செய்தல் என்பது சர்வ சாதாரணமான விசயமாகி விட்டது. ஒரு புரோக்ராம், எப்பொழுது ஒரு நபருக்கு மேல் தெரிய வருகிறதோ, அப்பொழுதே அந்த மின்னணு முறையில் ஊடுருவதல், திருடுதல், மாற்றுரு செய்தல், போலி தயாரித்தல், அவை மூலம் ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளையடிப்பது என்றெல்லாம் சகஜமாகி விட்டது. இதனால், இன்னும் பலர் இவ்விசயங்களுக்கு செல்லாமல் இருக்கின்றனர் கிறிஸ்துவர்களைப் பொறுத்த வரையில், இவையெல்லாம் அவர்களும் சர்வ சாதாரண விசயம் தான், சகஜமானது தான். பணத்தைப் பற்றி அவர்களுக்குப் பிரச்சினை இல்லை, அறுவடை தான் முக்கியம். சமீபத்தில் நடந்த அகில உலக மாநாட்டில் கூட, இதைப் பற்றி அதிகமாகவே விவாதிக்கப் பட்டது. ஹாக் செய்தாலும், அது நடந்துள்ளது உண்மையாகிறது. பிறகு அந்த ஹாக்கர் பைத்தியக்காரத் தனமாகவோ, முட்டாள் தனமாகவோ அத்தகைய ஹாக்கிங்கை, அவ்வாறு சிரமப் பட்டு செய்திருக்க மாட்டான். “ஐ லவ் யூ” என்று கூட போட்டிருப்பான். ஆகவே, இது திட்டமிட்டு செய்யப் பட்ட ஹாக்கிங் எனலாம். சொல்லி வைத்தது போல, இவ்விவகாரம் அப்படியே அமுக்கப் பட்டு விட்டது. இதற்கு மேல் எந்த செய்தியும் இல்லை, விவாதமும் இல்லை. கப்சிப் என்றாகி விட்டது.

© வேதபிரகாஷ்

12-01-2022


[1]  தினமலர், 31-12-2022.

[2] மீடியான்.காம், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 லட்சம்: விளம்பர பலகையால் சர்ச்சை; உதயநிதி ஸ்டாலினுக்கு தொடர்பு?!, Karthikeyan Mediyaan News

[3] https://mediyaan.com/chennai-ambattur-advertisement-christian-conversion/

[4] தினமலர், மத மாற்ற விளம்பரம் அம்பத்துாரில் சலசலப்பு, Added : ஜன 01, 2023  00:16

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3207595

[6] பேக்ட்.செக், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறதா?, January 12, 2023 Fact Crescendo Team.

[7] https://tamil.factcrescendo.com/dmk-govt-not-paying-10-lakh-for-those-who-converting-to-christianity/

விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள் – திட்டமிட்டவை என்று சொல்கிறது அரசு! (4)

திசெம்பர் 1, 2022

விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள்திட்டமிட்டவை என்று சொல்கிறது அரசு! (4)

29-11-2022: உலகம் கண்டிராத மிகப்பெரிய தேசவிரோதி அப்துரஹிமான்: சமீபத்தில் விழிஞ்சம் சம்பவம் தொடர்பாக அமைச்சர் வி அப்துரஹிமானுக்கு எதிராக வகுப்புவாதக் கருத்தைத் தெரிவித்த லத்தீன் திருச்சபையைச் சேர்ந்த அருட்தந்தை தியோடோசியஸ் டி குரூஸ், 29-11-2022 செவ்வாய்கிழமை மன்னிப்புக் கேட்டார். (29-11-2022) நவம்பர் 29 அன்று மீன்வளத்துறை அமைச்சர் வி அப்துரஹிமானை “உலகம் கண்டிராத மிகப்பெரிய தேச விரோதி” என்று கூறிய பாதிரி தியோடோசியஸ் டி-கர்ஸ் (Fr Thedocious D’Cruz) தனது வார்த்தைகளை வாபஸ் பெற்றுள்ளார். தியோடோசியஸ், அப்துரஹிமான் அவர்கள் அனைவரையும் விட மிகப் பெரிய தேசவிரோதி என்று பதிலடி கொடுக்கும் போது கூட, தேசவிரோதத்திற்கு தனது சொந்த வரையறையை அளித்திருந்தார். தேசியக் கொடியை சரியாக ஏற்றத் தெரியாதவர்தான் தேசவிரோதி என்று அவர் கூறினார்.  இது சர்ச்சைக்கு உண்டாகியது.

டிகர்ஸ் அப்துரஹிமான் வார்த்தை மோதல்: ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியும் தேச விரோதச் செயல் என்று மீன்வளத்துறை அமைச்சரின் கருத்துக்கு எதிர்வினையாக நவம்பர் 29 அன்று லத்தீன் கத்தோலிக்க பாதிரியார் கருத்து-பேச்சு வெடித்தது. விழிஞ்சம் போராட்டம் தேசவிரோதிகளால் நடத்தப்படுகிறது என்ற அப்துரஹிமானின் கருத்துக்கு, அமைச்சரின் பெயரே பிரச்சனைக்குரியது என்று பாதிரியார் கூறியிருந்தார். அதாவது, அவர் “முஸ்லிம்,” என்று தொணிக்கக் குறிப்பிட்டார். அப்துரஹிமான் லத்தீன் திருச்சபை நடத்தும் போராட்டத்தின் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது, சர்ச்சுக்கு, இத்தகைய விசயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறது என்று கேட்டார். நவம்பர் 29-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழிஞ்சம் சர்வதேச துறைமுக நிபுணர்கள் மாநாட்டின் போது, ​​“ஒரு வாரம் மட்டுமே கட்டுமானத்தை நிறுத்தி ஆய்வு நடத்த அரசிடம் கேட்பது போராட்டம் அல்ல. அது வேறு விஷயம்,” என்று அமைச்சர் கூறினார்.

பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவ்விசயத்தில் அமைதி காப்பது: துறைமுகத்தின் கட்டுமானத்துக்கு ஆதரவு தரும் இந்த விஷயத்தில் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது இதில் வெளிப்பட்ட விசித்திரமான அம்சமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட இப்போது வரை இந்த விஷயத்தில் மெளனம் காத்து வருகிறது. இது குறித்து அது வெளியிட்ட ஓர் அறிக்கையில், “வளர்ச்சி திட்டங்களை தடம் புரளச் செய்து மாநிலத்தை சீர்குலைக்க செய்யும் வகையில் மக்களின் மனங்களில் பீதியை உருவாக்கி குறிப்பிட்ட சிலரால் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது,” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில், மாநிலத்திற்கு மற்றும் நாட்டிற்கு நல்லது என்பதால், இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டன. அரசியல் ரீதியில், எந்த உடன்பாடும் கிடையாது.

என்ஐஏ 30-11-2022 புதன்கிழமை அன்று சோதனைபாதிரி தியோடோசியஸ் டிகர்ஸ் மீதான வழக்கு: தியோடோசியஸ் டி-கர்ஸ், வாய் தவறி அவ்வாறு அமைச்சரை விமர்சித்து விட்டதாகக் கூறினார். லத்தீன் திருச்சபையும் அந்த அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளது. ஆனால், ஐஎன்எல் மாநிலக் குழு அவர் மீது விழிஞ்சம் போலீசில் வழக்குப் பதிவு செய்தது. இதற்குள், தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று விழிஞ்சம் வந்து, வார இறுதியில் இங்கு வன்முறைக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்தனர். அவர்கள் விழிஞ்சம் காவல் நிலையத்தின் நுழைவாயிலில் நவம்பர் 26 அன்று வன்முறையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட ஐந்து பேரை விடுவிக்கக் கோரி, விழிஞ்சம் காவல் நிலையத்தை நாசப்படுத்திய ஆத்திரமூட்டும் கும்பல் போராட்டங்களில் வெளிச் சக்திகள் ஈடுபட்டுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக அவர்கள் பார்வையிட்டனர். துறைமுக தளம். இந்த சம்பவம் தொடர்பாக 163 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

விழிஞ்ஞம் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தீவிரவாதிகளின் தொடர்பு: விழிஞ்ஞம் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தீவிரவாதிகளின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு  (என்ஐஏ) விசாரணையை தொடங்கியுள்ளது[1]. இதற்கிடையே துறைமுகத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பண  உதவி கிடைத்து வருவதாக கேரள அமைச்சர் சிவன்குட்டி கூறியது சர்ச்சையை  ஏற்படுத்தியது[2]. வன்முறை சம்பவங்களில் சில தீவிரவாத அமைப்புகள் தலையீடு இருப்பதாகவும் தகவல் வெளியானது. மத்திய உளவுத்துறைக்கு இது தொடர்பாக  முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய  புலனாய்வுத்துறை (என்ஐஏ) விசாரணையை தொடங்கியுள்ளது. நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் விழிஞ்ஞம் போலீஸ் நிலையம் சென்று விவரங்களை சேகரித்தனர். மேலும் உளவுத்துறை போலீசிடம் இருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையே சமீபத்தில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன் விழிஞ்ஞத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் வைத்து ரகசிய கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தான் வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதுதொடர்பாகவும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

விழிஞ்ஞம் துறைமுக திட்டம் தொடரும், முடிவடையும்: கேரளா தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கிறது விழிஞ்சம். கடற்கரைப் பகுதியான இங்கு ரூ.7,500 கோடி முதலீட்டில் அரசு – தனியார் கூட்டமைப்பில் துறைமுகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பெரும் பங்கு முதலீட்டை அதானி குழுமம் மேற்கொள்கிறது. இந்தத் துறைமுகத்தால் கடல் அரிப்பு ஏற்படும் என்றும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றும் இப்பகுதி மீனவர்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநில மீன்வளத் துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் பேசுகையில்[3], “இந்தத் துறைமுகத் திட்டம் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகும். இத்தகைய திட்டம் முடங்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இந்தத் திட்டத்தை முடக்க நினைப்பது தேச விரோதம். கெயில் எண்ணெய் குழாய் திட்டத்தையும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அரசு அத்திட்டங்களில் உறுதியாக இருந்ததால் போராட்டங்கள் வலுவிழந்தன. அதேபோல்தான், விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை நிறுத்த அரசு அனுமதிக்காது,” என்றார்[4].

திட்டமிட்டு நடத்தப் பட்ட வன்முறை – பாதிரிகள் மீது மேலும் வழக்குகள் போடப்பட்டன: விழிஞ்ஞம் காவல் நிலையச் சேதம் மற்றும் வாரயிறுதியில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் பாதிரியார்களும் ஈடுபட்டதாக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. உயர்நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளை மீறி, பாதிரியார்கள் தலைமையில் போராட்டக்காரர்கள் துறைமுகத்திற்கு வந்த வாகனங்களை மறித்து, தேவாலய மணிகளை அடித்து பெண்கள், குழந்தைகள் உட்பட மக்களைத் திரட்டினர்[6]. வன்முறையைத் தொடர்ந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டு எட்டு வழக்குகள் பதியப்பட்டபோது, யூஜின் பெரேரா தலைமையிலான பாதிரியார்கள் உள்ளிட்ட குழு காவல் நிலையத்தைத் தாக்கியது. லத்தீன் கத்தோலிக்க பேராயர் தாமஸ் நெட்டோ மீது வன்முறை தொடர்பாக ஏற்கனவே உள்ள மூன்று வழக்குகளுக்கு மேலதிகமாக மேலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விழிஞ்சம் காவல் நிலைய தாக்குதல் குறித்த விசாரணை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாநில காவல்துறை தலைவர் அனில் காந்த் தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

30-11-2022


[1] தினகரன், அதானி துறைமுகத்திற்கு எதிராக போராட்டம் தீவிரவாதிகளுக்கு தொடர்பு?: என்ஐஏ விசாரணை, 2022-12-01@ 01:16:09

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=818741

[3] தமிழ்.இந்து, விழிஞ்சம் துறைமுகத் திட்டம் நிறைவேறும்: கேரள மீன் வளத்துறை அமைச்சர் கருத்து, செய்திப்பிரிவு, Published : 01 Dec 2022 09:11 AM; Last Updated : 01 Dec 2022 09:11 AM.

[4] https://www.hindutamil.in/news/india/908536-vizhincham-port-project-will-be-completed-kerala-fisheries-minister-comments.html

[5] Manorama.online, Police affidavit in HC says priests involved in Vizhinjam violence, Onmanorama staff, Published: December 01, 2022 08:15 PM IST Updated: December 01, 2022 08:43 PM IST.

[6] https://www.onmanorama.com/news/kerala/2022/12/01/vizhinjam-priests-attack-police-high-court.html

விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள் – பின்னணி என்ன? (3)

திசெம்பர் 1, 2022

விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள் – பின்னணி என்ன? (3)

30க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்: இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். காயமடைந்த போலீஸார், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக கத்தோலி்க்க பெரநகர ஆர்ச்பிஷப் தாமஸ் ஜே நெட்டோ மற்றும் பெரேரா உள்பட 15 பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதற்கிடையே சமரசப் பேச்சு மற்றும் அமைதியை நிலைநாட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நகர் காவல் ஆணையர், மாவட்ட போலீஸார் அதிகாரிகள், தேவாலய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் 28-11-2022  அன்றும் நடந்தது. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி எம் ஆர் அஜித்குமார் கூறுகையில் “விழிஞ்சம் காவல்நிலையம் மீது கும்பல் நடத்திய தாக்குதலில் 36 போலீஸார் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை, சிலரை விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர், அது வாக்குவாதமாக மாறி வன்முறையில் முடிந்தது. காவல்நிலைய துணை ஆய்வாளருக்கு அறுவை சிகிச்சை செய்யும்அளவு காயம் ஏற்பட்டது, அந்தக் கும்பல் கற்கள், கம்பு, இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். காவலர்கள் தரப்பில் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் ஏதும் பேசவில்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவே நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியில்கூட்டத்தைக் கலைக்க குறைந்தஅளவு தடியடி நடத்தப்பட்டது. இந்ததாக்குதல் தொடர்பாக அடையாளம் தெரியாதவர்கள் என்ற அடிப்படையில் 3ஆயிரம் பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர், ”எனத் தெரிவித்தார்.

கும்பல் கற்கள், கம்பு, இரும்பு கம்பிகள்” எல்லாம் எப்படி, எங்கிருந்து வந்தன?: “கும்பல் கற்கள், கம்பு, இரும்பு கம்பிகள்” எல்லாம் எப்படி, எங்கிருந்து வந்தன, யார்-எப்படி கொண்டு வந்தனர் போன்ற கேள்விகளும் எழத்தான் செய்யும். போலீஸார் விசாரிக்கும் போது, புலன் விசாரணை மேற்கொள்ளும் போது தெரியத்தான் போகிறது. இதனால் தான், வன்முறை எப்படி ஏற்பட்டது என்று ஆராய வேண்டியுள்ளது. சாதாரண மீனவர்களால் அத்தகைய தாக்குதல்களை நடத்த முடியும் என்றால், அவர்களுக்கு, யார் அவ்வாறு செய்ய சொன்னது? பிஷப், பாஸ்டர்கள் முதலியோர் தூண்டுதல்கள் மூலம் நடந்தது, என்றால், நிச்சயமாக அவர்கள் பொறுப்பாளர்கள் ஆகிறார்கள். இப்பொழுது, எப்.ஐ.ஆர்களும் அவ்வாறே பதிவு செய்யப் பட்டுள்ளன.

பாதிரிகள் வன்முறை போராட்டத்தை ஆதரித்துப் பேசுவது: பாதிரியார் எஜூனே பெரேரா கூறுகையில், “போலீசார் பிஷப்புகளையும் பாதிரியார்களையும் கிரிமினல் வழக்கில் கைது செய்துள்ளனர், மேலும் அவர்கள் போராட்டத்தில் பங்கு கொள்ளாவிட்டாலும் அவர்கள் மீது சதி குற்றம் சாட்டியுள்ளனர். சனிக்கிழமை வன்முறை அதானி (குழு) ஆட்களால் காவல்துறை மற்றும் பா...,வின் துணையுடன் கட்டவிழ்த்து விடப்பட்டது. இப்பிரச்னைக்கு அமைதியான தீர்வை நாங்கள் விரும்புகிறோம்………………மக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றிதான் போராட்டம் நடந்தது. இருப்பினும் எங்கள் பகுதி மக்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்றும் அமைதிப்பேச்சு நடக்கிறது, அதிகாரிகளுடன் பேசி சமரசத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவோம்,” எனத் தெரிவித்தார்.இந்த சம்பவத்தால் விழிஞ்சம் பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், வன்முறை ஏற்படாமல்தடுக்கவும் கூடுதலாக 300 போலீஸார் அழைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிஷப்பாஸ்டர்களின் பங்கு, போராட்டம், வன்முறை, வழக்குப் பதிவு: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை எதிர்ப்பவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்த ஒரு நாளுக்குப் பிறகு, கத்தோலிக்க திருச்சபையின் திருவனந்தபுரம் பேராயத்தின் (லத்தீன் சடங்குகள்) பாதிரியார்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் ஞாயிற்றுக்கிழமை 27-11-2022 அன்று வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சபை உறுப்பினர்கள். வன்முறை தொடர்பாக பேராயர் தாமஸ் ஜே.நெட்டோ, துணை ஆயர் கிறிஸ்துதாஸ் மற்றும் விகார் ஜெனரல் யூஜின் பெரேரா ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கத்தோலிக்க சர்ச் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது

 விழிஞ்சம் சர்வதேச பல்நோக்கு துறைமுகமானது ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது: விழிஞ்சம் சர்வதேச பல்நோக்கு துறைமுகமானது ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட், டிசம்பர் 5, 2015 அன்று அதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. தற்போது 70% பணிகள் முடிவடைந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெளிவுபடுத்தினர், ஆனால் கடந்த சில மாதங்களாக மீனவர்களின் போராட்டங்களால் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 2,960 மீட்டர் நீளமுள்ள பிரேக்வாட்டரில், சுமார் 1,400 மீட்டர்கள் நீளத்திற்கு 30 லட்சம் டன் கிரானைட் பாறைகளைப் பயன்படுத்தி கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. “பிரேக் வாட்டர் கட்டுமானத்தை முடிக்க மொத்தம் 70 லட்சம் டன் கிரானைட் பாறைகள் தேவை. முன்பு ஒரு நாளைக்கு சுமார் 15,000 டன் கற்பாறைகளை கொட்டினோம், ஆனால் இப்போது அதை ஒரு நாளைக்கு 30,000 டன்கள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று துறைமுகத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மீனவர்களுக்கு இழப்பீடு கேட்பது: இந்த கட்டுமானப் பணிகள் காரணமாக, கடலோர சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. எனவே துறைமுகம் அமைக்கும் பணியை முழுமையாக நிறுத்த வேண்டும் என போராடும் மீனவ மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கடல் அரிப்பால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மறுவாழ்வு, கடலோர அரிப்பைத் தணிக்க நடவடிக்கை, வானிலை எச்சரிக்கை விடுக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முறையான ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மீன்பிடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும், திருவனந்தபுரம் மாவட்டம் அஞ்சுதெங்கு முதலைப்பொழி மீன்பிடி துறைமுகத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராடும் மக்கள் வலியுறுத்தினர்.

வகுப்புவாத அரசியலாக்கப் படும் முறை: எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், இந்த விவகாரத்தை அரசு வகுப்புவாதமாக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, மதகுருமார்கள் மீதான காவல்துறை நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார்[1]. மேலும், “விழிஞ்சத்தில் ஏற்பட்ட பதற்றம் மாநில அரசின் சதி. பேராயர் மற்றும் பிற பாதிரியார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[2]. அப்படியானால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடும்போது, ​​முதல்வர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யுமா? இது முன்னெப்போதும் இல்லாதது. அதானியின் நலனைக் காக்க இந்த திட்டத்தில் சி.பி.ஐ(எம்)-பா.ஜ.க இணைப்பு உள்ளது,” என்றும் அவர் கூறினார். எதிர்-எதிராக இருக்கும் சி.பி.ஐ(எம்)-பா.ஜ.க  எவ்வாறு அதானியின் நலனைக் காக்க இந்த திட்டத்தில் இணைகிறது என்று தெரியவில்லை. அரசியல் ரீதியாக, இத்தகைய குழப்பவாதங்களை முன் வைப்பது சுலபம். ஆனால், நடப்பது மற்றும் இறுதியாக, மக்களுக்குக் கிடைக்கும் பலன் இவற்றிலிருந்து உண்மையினை அறிந்து கொள்லலாம்.

கத்தோலிக்க சர்ச்சின் எதிர்ப்பு மட்டும் மர்மமாக இருக்கிறது: கேரளா காங்கிரஸ் [மணி] என்ற கட்சி, முழுக்க கிருத்துவர் சார்பான, அடிப்படைவாத அரசியல் கட்சியாகும். ஆனால், இப்பொழுது ஆளும் எல்.டி.எப் கூட்டுடன் இருக்கிறது. பிறகு, அக்கட்சி எப்படி-எவ்வாறு கத்தோலிக்க வன்முறை போராட்டத்தை ஆதரிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. சி.பி.ஐ(எம்)-பா.ஜ.க இணைப்பு என்பது அர்த்தமற்றது. துறைமுகம் வரவேண்டும் என்பது, ஆளும் மற்றும் மற்ற அரசியல் கட்சிகளின் விருப்பமும் ஆகும். எனவே, அதை எதிர்ப்பதாக யாரும் இல்லை. எனவே,, கத்தொலிக்க சர்ச் மட்டும் ஏன் எதிர்க்கிறது என்று கவனிக்க வேண்டியுள்ளது. பாதிக்கப் படும் மீனவர்கள் எப்படியும் இழப்பீடு பெரப் போகிறார்கள், மாற்று இடங்கள் கொடுக்கப் படப் போகிறது. பிறகு, இதில் சர்ச்சுக்ளுக்கு என்ன வருத்தம், பொறாமை என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

30-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிர்ஸ், கேரளா அதானி துறைமுகம்; பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவுகாவல் தாக்குதல், Written by WebDesk, November 28, 2022 10:56:07 am

[2] https://tamil.indianexpress.com/india/adani-kerala-seaport-cops-book-priests-police-station-attacked-549218/

அதானியின் விழிஞ்ஞம் துறைமுகம், கம்யூனிஸ அரசு ஒப்புதல், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள்! (2)

திசெம்பர் 1, 2022

அதானியின் விழிஞ்ஞம் துறைமுகம், கம்யூனிஸ அரசு ஒப்புதல், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள்! (2)

கத்தோலிக்க பிஷப்புகள், பாதிரியார்கள் மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு: 26-11-2022 ஆம் தேதி சனிக்கிழமை துறைமுகத்தில் உள்ள அதானி குழுமம் கட்டுமானம் கட்டுவதற்கு உள்ளூர் மக்கள் எதிரப்புத் தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்ட பேராயர், ஆயர்கள், மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது[1]. இது தொடா்பாக திருவனந்தபுரம் பேராயா் தாமஸ் ஜெ.நெட்டோ, துணை ஆயர் ஆர் கிறிஸ்துதாஸ் உள்பட 15 லத்தீன் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்[2]. முதல் தகவல் அறிக்கையில் பேராயர் தாமஸ் நெட்டோ முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 50 பாதிரியார்கள் மீது சதித் திட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[3]. மதகுருமார்கள் மீது குற்றவியல் சதி (பிரிவு 120-பி), கலவரம் (பிரிவு 147), குற்றவியல் அத்துமீறல் (பிரிவு 447), மற்றும் அதிகாரப்பூர்வ கடமையைச் செய்வதிலிருந்து அவர்களைத் தடுக்க பொது ஊழியர்களைத் தாக்குதல் (பிரிவு 353) உள்ளிட்ட ஐ.பி.சி.,யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது, இவர்களின் பங்கு, குறிப்பாக சட்டமீறல்களில் இருப்பதால், இவ்வாறு வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம். இருப்பினும், வழக்கு எவ்வாறு நடக்கும், நடத்தப் படும் என்றெல்லாம் தெரியவில்லை.

அமைதி போராட்டம் வன்முறையில் முடிந்தது:  5 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்[4]. இதையடுத்து கைதான மீனவர்களை விடுவிக்கக்கோரியும், அதானி துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 27-11-2022 அன்று இரவு விழிஞ்சம் பகுதியில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்[5]. அப்போது போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆத்திரமடைந்த மீனவர்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது[6].  காவல் நிலையத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்[7]. திடீரென  அனைவரும் காவல் நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட பொருட்களை  அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்[8]. அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், காவல் நிலையம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஜீப்புகள் மற்றும் 2 வேன்களை அடித்து நொறுக்கினர். இரும்புக் கம்பி மற்றும் படகு துடுப்புகளால் போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பூ தொட்டிகளையும் தூக்கி போலீசார் மீது வீசினர். இவ்வாறெல்லாம் நடக்குமா, நடத்த முடியுமா, மீனவர்களுக்கு அத்தனை தைரியம் கத்தோலிக்க பிஷப்புகளால் கொடுக்கப் பட்டதா என்று புரியவில்லை.

அடிப்படையில் 3,000 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[9]: இதில் சங்குமுகம் உதவி கமிஷனர் ஷாஜி, விழிஞ்ஞம் இன்ஸ்பெக்டர் பிரஜீஷ் சசி உள்பட 36 போலீசார் காயமடைந்தனர்[10]. நிலைமை கை மீறி போனதால், கூடுதல் போலீஸ் வரவழைக்கப்பட்டு, ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் யூஜின் பெரராவுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று போராட்ட குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவர்களை விடுவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். போலீசார் தாக்கப் பட்டது, போலீஸ் ஷ்டேசன் நாசமடைந்தது, முதலியவை சாதாரணமான விசயங்கள் அல்ல. நடத்திய போராட்டத்தில் காவல்நிலையம் 27-11-2022 அன்று தாக்கப்பட்டது[11]. இந்தக் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்தனர். இதுவரை 5 பேர் போலீஸார் கைது செய்துள்ளனர்[12].

போலீஸார் நிதானமாக ஒறுப்புடன் செயல்பட்டது: இந்த வன்முறையில் 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு பதற்றம் நீடிப்பதாலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்[13]. அடையாளம் தெரியாத நபர்கள் என்ற அடிப்படையில் 3,000 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[14]. ஆனால், போலீசார் நிச்சயமாக கட்டுப் பாட்டுடன் வன்முறையில் ஈடுபட்ட பலரை பிடிக்காமல்-கைது செய்யாமல் இருந்தனர் என்பது நிதர்சனம். சிசிடிவிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் முகங்கள்-அடையாளங்கள் பதிவாகி இருக்கும். எனவே, வன்முறை பெரிதாக வேண்டாம் என்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருப்பது கவனிக்கத் தக்கது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தால் தங்களுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே அதானி குழுமம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கோடிகளில் நஷ்டம் அடைவதால் யாருக்கு லாபம் அல்லது யாருக்கு நஷ்டம் என்று நோக்கத் தக்கது.

உயர் நீதிமன்றத்துக்குச் சென்ற அதானி குழுமம், நீதிமன்ற அனுமதியுடன் பணி துவங்கியது: அதானி குழுமம் விழிஞ்சம் துறைமுகத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகளை கட்ட உள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து,கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, உயர் நீதிமன்றத்துக்குச் சென்ற அதானி குழுமம், நீதிமன்ற அனுமதியுடன் சனிக்கிழமை 26-11-2022 முதல் கட்டுமானப்பணிகளை தொடர முடிவு செய்தது. இதற்காக லாரிகளில் மணல், பாறைக் கற்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை விழிஞ்சம் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். அதானி குழுமத்தின் கட்டுமானத்தை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தினர். கடலோரத்தில் கட்டுமானம் எழுப்புவதால் கடல் அரிப்பு அதிகமாகிறது வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று மக்கள் தெரிவித்தனர்.  இதனால், போலீஸாருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லாரிகளை திருப்பி அனுப்பியபின்புதான் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். இந்நிலையில் அதானி குழுமத்தின் கட்டுமானம் தொடர்ந்து நடக்க ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த விழிஞ்சம் லத்தின் கத்தோலிக்க தேவாலய மக்கள் நேற்று காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியதில் மக்கள் காவல்நிலையத்தை சூறையிட்டனர்.அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

© வேதபிரகாஷ்

30-11-2022


[1] தினகரன், அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம்; கேரளாவில் காவல் நிலையத்தை சூறையாடிய 3000 பேர் மீது வழக்கு: உதவி கமிஷனர் உட்பட 36 போலீசார் காயம், 2022-11-29@ 00:06:13.

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=818085

[3] தினகரன், அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம்; பிஷப், 50 பாதிரியார் மீது கொலை முயற்சி வழக்கு, 2022-11-28@ 00:29:59

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=817867

[5]  மாலை மலர், விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு எதிராக போராட்டம்கைதானவர்களை விடுவிக்க கோரி போலீஸ் நிலையம் சூறை, By Maalaimalar28 நவம்பர் 2022 11:37 AM

[6] https://www.maalaimalar.com/news/national/vizhinjam-port-against-protest-542140

[7] தமிழ்.இந்து,அதானி துறைமுக எதிர்ப்பு போராட்டம்: கேரள காவல் துறையினர் 40 பேர் காயம், செய்திப்பிரிவு, Published : 29 Nov 2022 07:20 AM; Last Updated : 29 Nov 2022 07:20 AM.

[8] https://www.hindutamil.in/news/india/907341-anti-adani-port-protest-40-kerala-police-injured-india.html

[9] தினத்தந்தி, கேரளாவில் அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3 ஆயிரம் பேர் மீது வழக்கு, நவம்பர் 28, 4:30 pm (Updated: நவம்பர் 28, 4:31 pm)

[10] https://www.dailythanthi.com/News/India/case-against-3000-for-attack-on-cops-amid-adani-port-protest-in-kerala-846550

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Vizhinjam Port:அதானி திட்டத்துக்கு எதிர்ப்பு!விழிஞ்சம் காவல் நிலையம் சூறை: 3,000 பேர் மீது வழக்கு: பதற்றம்!, Pothy Raj, First Published Nov 28, 2022, 11:14 AM IST; Last Updated Nov 28, 2022, 11:24 AM IST.

[12] https://tamil.asianetnews.com/india/protest-against-adani-port-attack-on-the-vizhinjam-police-station-following-consensual-talks-tension-has-subsided-rm1mll

[13] ETV.Bharat, விழிஞ்சம் அதானி துறைமுக எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை.. காவல் நிலையம் சூறையாடல்!, Published on: November 28, 2022, 6:40 PM IST.

[14] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/vizhinjam-police-station-attack-cases-against-3000-persons/tamil-nadu20221128184026579579741

விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள்! (1)

திசெம்பர் 1, 2022

விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள்! (1)

15-08-2022 முதல் 23-08-2022 வரை: 15-08-2022 அன்று மீனவர்கள் தங்களது விழிஞ்ஞம் துறைமுகம்-எதிர்ப்புப் போராட்டத்தைத் துவங்கியதாகத் தெரிகிறது. கேரள கத்தோலிக்க சர்ச், இதற்கு கொடுக்கும் அதரவு பிரமிப்பதாக உள்ளது. ஆகஸ்ட் 23 அன்று, கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அதானி குழுமத்தின் வரவிருக்கும் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக மீனவர்கள் முள்ளூர் கிராமத்தில் உள்ள துறைமுக நுழைவாயிலில் இரவு பகலாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் எட்டாவது நாளாகப் போராட்டம் நடத்தினர். . மக்கள் வாயில்களில் இருந்த தடுப்புகளைத் தாண்டி, அணிவகுத்துச் சென்று கௌதம் அதானியின் உருவ பொம்மையை எரித்தனர்; இதற்கிடையில், மற்ற மீனவர்கள் தங்கள் சிறிய மீன்பிடி படகுகளில் தங்கள் எதிர்ப்பை கடலுக்கு எடுத்துச் சென்றனர்.

சுதந்திர தினத்தன்று போராட்டத்தை ஆரம்பித்த கத்தோலிக்க சர்ச், வன்முறையில் ஈடுபடுவது ஏன்?: கேரள கத்தோலிக்க சர்ச், விழிஞ்ஞம் துறைமுகம் விசயத்தில், இந்த அளவுக்குத் தீவிரமாக ஏன் செயல்பட்டு, மீனவர்களைத் தூண்டி விட்டி, வன்முறையிலும் இறங்கி போராடி வருகின்றது என்பது திகைப்பாக இருக்கிறது. முன்பு, “விடுதலை இறையியல்,” என்ற சித்தாந்தத்தை பின்பற்றுகிறேன் என ஆரம்பித்து, கொலை, கொள்ளை என்று மிகுந்த வன்முறை, குற்றங்கள் என்றாகி, அதில் கத்தோலிக்க பிஷப்புகள், பாஸ்டர்கள் கைதாகி, சிறைக்குச் சென்ற நிலையில், வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டது. ஆனால், இப்பொழுது நடக்கும் வன்முறைகளைக் கவனிக்கும் பொழுது, ஒரு வேளை, மறுபடியும் அந்த “விடுதலை இறையியல்,” சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்த ஆரம்பித்து விட்டனரா அல்லது சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்னொரு “அத்தகைய சித்தாந்தத்தை” உருவாக்கி செயல்படுத்துகின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது. சௌரி-சௌரா வன்முறைக்குப் பிறகு, ஒரு போலீஸ் ஷ்டேசன் தாக்கப் பட்ட பிறகு, மஹாத்மா காந்தியே, தனது “ஒத்துழையாமை” இயக்கத்தை நிறுத்தி வைத்தார். ஏனெனில், அது அஹிம்சையை மீறி, வன்முறையில் முடிந்தது. ஆனால், இங்கோ சுதந்திர தினத்தன்று போராட்டத்தை ஆரம்பித்தாலும், ஆர்ச்-பிஷப் முதல் மற்ற பிஷப்புகள் அகம்பாவத்துடன், ஆணவத்துடன் மற்றும் உறுதியாக  போராட்டத்தைத் தொடருவோம் என்று தான் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகள், பெண்கள், கன்னியாஸ்திரிக்களை முன்னிலை வைத்து, நடத்தப் படும் போராட்டம்: ஆரம்பம் முதல் உன்னிப்பாக கவனித்தாலோ, செய்திகளை படித்து வந்தாலோ, சர்ச்சின் பின்னணியை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம். கேரளவாவில், பல சர்ச்சுகள் [கத்தோலிக்கர் அல்லாத] இருந்தாலும், கத்தோலிக்கர் தமது ஆதிக்கத்தை செல்லுத்த விரும்புகின்றனர். இதற்கு, அவ்வப்பொழுது, ஏதாவது விவகாரம் கிடைத்தால், அதனை அரசியல் ஆக்கி, லாபம் பெற முயல்கின்றனர். வெற்றி பெறுகின்றனர், ஒதுங்கி விடுகின்றனர். இப்பொழுது பிஷப்புகள் முதல், பாஸ்டர்கள் வரை தீவிரமாக இருப்பது இதனை உறுதியாக்குகிறது. சர்ச்சிற்குள் இருந்து, பலி, போதனை என்றில்லாமல், தெருக்களில் இறங்கி, வன்முறைகளில் ஈடுபடுவது அதிர்ச்சியாக இருக்கிறது. அது மட்டுமல்லாது, குழந்தைகள், பெண்கள், கன்னியாஸ்திரிக்களை முன்னிலை வைத்து, ஊர்வலம் செல்வது, போராட்டம் நடத்துவது, மற்ற தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைக்களை ஞாபகப் படுத்துகிறது, ஒத்துப் போகிறது.

அதானி குழுமத்தின் கேரள அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் துறைமுகத்தை எதிர்த்து போராட்டம்:  திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான விழிஞ்ஞத்தில் அரசு-தனியார் பங்களிப்புடன் கேரள அரசு சார்பில் துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. அதானி குழுமம் இதற்கான கட்டுமானப் பணிகளைக் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. துறைமுக பணிகளில் இதுவரை 70 சதவீதம் பணிகள் முடிவடிவடைந்துள்ளன. கேரளாவின் கடற்கரையில் அதானி குழுமத்தால் கட்டப்பட்டுவரும் விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக மீனவர்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறினாலும், இந்த அதானியின் துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் ஆகியவை பாதிக்கப்படும் என போராடும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்[1]. கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவ்வித தடையையும் ஏற்படுத்த மாட்டோம் என கடந்த நவம்பா் 22-ஆம் தேதி கேரள உயா்நீதிமன்றத்தில் போராட்டக்காரா்கள் உறுதியளித்திருந்த நிலையில்[2], சனிக்கிழமை கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை அவா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது, போராட்டக்காரா்களுக்கும் துறைமுக திட்ட ஆதரவாளா்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

கடந்த ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கம்:

  1. கத்தோலிக்க சர்ச் விழிஞம் துறைமுக திட்டத்தை எதிர்த்து நேரிடையாக வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது…
  2. குழந்தைகள், பெண்கள் உட்பட…………………….மீனவர்களை முன்னிருத்தி நடத்துகிறது.
  3. கன்னியாஸ்திரிக்கள், பாஸ்டர்கள் …………………………………………..பிஷப் உடன் போராட்டம் நடத்தப் படுகிறது………………………..
  4. நீதிமன்ற உத்தரவையும் மீறி நடக்கிறது……………….
  5. நீதிமன்ற சட்டம்-ஒழுங்குமுறை ஏன் இல்லை…….என்றெல்லாம் கேட்கிறது…………………….
  6. அஹமது தேவர்கோவில், துறைமுக அமைச்சர், இவ்விசயம் மதரீதியில் எடுத்துச் செல்லக் கூடாது என்று உறுதியாகக் கூறுகிறார்………………………………….
  7. கத்தோலிக்கச் சர்ச் இப்போராட்டம் தொடரும் என்கிறது…………………

26-11-2022 மற்றும் 27-11-2022 அன்று நடந்தேறிய வன்முறை சம்பவங்கள்: திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் பகுதியில் அதானி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அங்குள்ள மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் துறைமுகம் கட்ட ஆதரவு தெரிவித்ததாக தெரிகிறது. அதானி துறைமுகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். விழிஞ்சம் துறைமுகத்தில் நடைபெறும் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்து நடத்த, 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆயர் கடிதம் அனுப்பப்பட்டு, லத்தீன் பேராயர் வலுப்படுத்த வலியுறுத்தி முடிவு செய்துள்ளது. போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த சமர சமிதி முடிவு செய்துள்ளது[3]. லத்தீன் மறைமாவட்ட முன்னாள் பேராயர் எம்.சூசபாக்கியம் எதிர்வரும் திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் பல்வேறு ஆயர்களும், மதத் தலைவர்களும் இணைந்து கொள்வார்கள். அதானி குழுமத்துடன் கைகோர்த்து போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக சமர சமிதியின் பொது அழைப்பாளர் யூஜின் எச் பெரேரா தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

30-11-2022


[1] தினமணி, விழிஞ்ஞம் துறைமுக எதிர்ப்பு போராட்ட வன்முறை:15 பாதிரியார்கள் மீது வழக்கு, By DIN  |  Published On : 28th November 2022 05:49 AM  |   Last Updated : 28th November 2022 05:49 AM.

[2]https://www.dinamani.com/india/2022/nov/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8815-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3957371.html

[3] The Samara Samithi has also decided to hold an indefinite hunger strike from Monday as part of intensifying the protest measures. Former archbishop of Latin archdiocese M Soosapakyam will undergo a hunger strike on Monday 28-11-2022 and various bishops and religious leaders will join in the coming days.
The general convener of Samara Samithi, Eugine H Pereira said that some people have made attempts to sabotage the stir by joining hands with the Adani Group