பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு – “உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி – செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு

இனிகோ இருதயராஜ்…

பீட்டர்ஸ் அல்போன்ஸ்……

பால் தினகரன்…..

மற்றவர்…….

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு: த்தகைய செய்திகள் எல்லாம் முன்னால் ஊடகங்களில் வருவதில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகய கிருத்துவ கூட்டங்கள், மாநாடுகள் அடிக்கடி நடப்ப்து விசித்திரமாக இருக்கிறது. பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காவது தேசிய மாநாடு, அவனியாபுரம்-மதுரை வளையங்குளத்தில் நடைபெற்றது[1]. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்[2]. இன்னொரு ஊடகம் 6000 என்கிறது. வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[3]. மற்ற பெந்தகோஸ்தே அமைப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்[4]. இனிகோ இருதயராஜின் அழைப்பின் பேரில் முதலில் கலந்து கொள்வதாக இருந்தது. ஈரோடு தேர்தல் முக்கியத்துவத்தால், ஆன்லைனில் பேசியதாக சொல்லப் படுகிறது. அப்போது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் கூறினார்.

என்னால் நேரில் வர இயலவில்லை காணொளி மூலமாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்: அப்போது பேசிய முதல்வர் கூறுகையில், “என்னால் நேரில் வர இயலவில்லை காணொளி மூலமாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் மதுரைக்கே வந்தாலும் சென்னையில் இருந்தபடி பேசினாலும் என்றும் உங்களோடு இருப்பவன் உங்களில் ஒருவன் நான் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே தூரம் அதிகமாக இருந்தாலும் அன்பு நம்மை இணைக்கிறது. நம்பிக்கை நம்மை இணைக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றை தான் சொல்ல முடியும்[5]. மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம், யாரையும் வேற்றுமையாக பார்க்காதே என்பது தான் சகோதரத்துவம், அனைவரிடம் சேர்ந்து வாழ்வதுதான் ஒற்றுமை, ஏழைகள் மீது கருணை காட்டு என்பது தான் இரக்கம், ஏழைக்கு குரல் கொடு என்பதுதான் நீதி மற்றவர்களுக்காக வாதாடு என்பதன் தியாகம், உன்னிடம் இருப்பதை இல்லாதவர்க்கு கொடு என்பதுதான் பகிர்தல் இதைத்தான் கிறிஸ்தவம் சொல்கிறது இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அது தான் சமத்துவ நாடாக அமையும்[6].

உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம் – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி: இப்படியெல்லாம் பேசுவது செக்யூலரிஸத் தனமாகுமா, கம்யூனலிஸம் ஆகுமா, சமதர்மம், சமத்துவம், திராவிடத்துவம் ஆகுமா என்று கூட ஆராய வேண்டியுள்ளது. முதலமைச்சராக பேசுவதற்கும், ஸ்டாலின் என்ற திமுக தலைவராக பேசுவது, அல்லது கிருத்துவர் உதயநிதியின் தந்தை என்றெல்லாம் கூட பேசலாம். ஆனால், நிச்சயமாக, வரம்புகள் மீறப்படுகின்றன. சித்தாந்தங்கள் தீவிரமாகின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் கல்வி, சுகாதாரம், தொழில், வளர்ச்சி, மேலாண்மை, மகளிர், மேம்பாடு, குழந்தைகள் நலன், சிறுபான்மையினர் நலன் என அனைத்திலும் கவனம் செலுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆகும் பணிகளை செய்து வருவதாகவும் கூறினார். குறிப்பாக கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை திமுக அரசு செய்து கொடுத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர் , தேவாயங்களை சீரமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலா ஆட்சியின் அடிப்படை நோக்கம்: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தர ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ, அதைவிட அதிக நம்பிக்கையை இந்த 20 மாத காலத்தில் பெற்றிருக்கிறோம் என்றும், இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருப்பது உழைப்பு; அந்த உழைப்புக்கு பின்னால் இருப்பது உண்மை; மக்களுக்காக உண்மையாக உழைக்கும் எங்களுக்கு இந்த பாராட்டுக்கள், அதிகம் உழைக்க தூண்டுகோலாக அமையும் என்று கூறினார்[7]. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் நமது அரசு தனது நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருகிறது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலா ஆட்சியின் அடிப்படை நோக்கம் இது எனது அரசு அல்ல நமது அரசு உத்தரவிடுங்கள் நிறைவேற்றித் தருகிறோம் என்றார்[8]. ஆனால், இதில் யாரோ வரமாட்டார்கள் என்பது போலிருக்கிறது.

விசுவாசத்துடன் பேசிய அமைச்சர்: தொடர்ந்து பேசிய அமைச்சர் மூர்த்தி கூறுகையில், உங்களுடைய எண்ணங்களையும் உணர்கிறேன் புரிந்து முதல்வர் சொல்லியுள்ளார் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகளை நம் முதல்வர் எதெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதை எல்லாம் நிறைவேற்றுவார், கிறிஸ்தவ சமூகத்தின் பாதுகாவலனாக முதல்வர் என்றைக்கும் இருப்பார். மதவாதிகளினால் ஆபத்து வரும் என்று முதல்வர் சொன்னார். எக்காலத்திலும் முதல்வர் இருக்கும் வரை யாரும் உங்களை நெருங்க முடியாது. அவர் உங்களின் பாதுகாவலனாக இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த சிறுபான்மையினர் சமுதாயத்தின் பாதுகாவலனாக இருப்பார் என்றார். இவ்வாறு தொடர்ந்து பேசி வருவதும் கவனிக்கத் தக்கது. சில நாட்களுக்கு முன்னர், உதயநிதி தான் கிருத்துவர் தான் என்று கிருத்துவ கூட்டத்தில் பேசியிருப்பதை கவனிக்கலாம். அதே கூட்டத்தில், இந்து அறநிலைய அமைச்சர், அல்லேலூயா என்று மூன்று முறை கத்தி கோஷம் போட்டதும் நினைவிருக்கலாம். ஆக, இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள் ஆகி விட்டார்களா, பிரச்சாரகர்களாகி வேலையில் இறங்கி விட்டர்களா என்று தெரியவில்லை.

கிருத்துவ–திராவிடத்துவ கூட்டணி செக்யூலரிஸம் ஆகுமா?: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 6000 மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பெந்தகோஸ்தே நான்காவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டனர். பீட்டர்ஸ் அல்போன்ஸ், டேவிட் பிரசாதம், ஏசு அழைக்கிறார் பால் தினகரன், இனிகோ இருதயராஜ் என்று பல பிரிவினரும் கலந்து கொண்டனர். ஆக கத்தோலிக்கர் அல்லாத கூட்டத்தினர் கூட இவ்வாறு ஒன்று சேர்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் ஊழல், பாலியல் குற்றங்கள், வழக்குகள், கைதுகள், சிறை தண்டனை என்றெல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், யாரும் வெட்கப் படுவதாக இல்லை. அரசியல்வாதிகளும் கைகோர்ந்து கொண்டு உல்லா வந்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சாராக இருக்கும் அரசியல்வாதி, “உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” என்று பேசுகிறார். பிறகு, சட்டம்-ஒழுங்கு பற்றி நினைப்பவர் என்ன செய்ய முடியும்? போலீஸாரே யோசிக்க வேண்டிய நிலை தான் ஏற்படும். பதிப்பு நாளிதழ்களில் விவரங்கள் வந்திருந்தாலும், இணைதளங்களில் வராமல் இருப்பதும் விசித்திரமாக இருக்கிறது. ஒரு சில வரிகளுடன் நிறுத்திக் கொண்டிருப்பதும், நோக்கத் தக்கது.
© வேதபிரகாஷ்
09-02-2023.

[1] தினத்தந்தி, “உத்தரவிடுங்கள் நிறைவேற்றி தருகிறோம்” – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி, By தந்தி டிவி, 9 பிப்ரவரி 2023 7:49 AM
[2] https://www.thanthitv.com/latest-news/you-give-orders-and-we-deliver-the-assurance-given-by-chief-minister-stalin-166594
[3] தினமலர், தேசிய மாநாடு, Added : பிப் 09, 2023 00:57 …
[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3237641
[5] தினகரன், சமத்துவம், சகோதரத்துவம், இரக்கம், நீதி போன்ற குணங்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு, 2023-02-08@ 21:08:19
[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=837381
[7] டாப்.தமிழ்.நியூஸ், ‘எல்லாருக்கும் எல்லான் என்பதே திராவிட மாடலின் அடிப்படை நோக்கம்..’ – முதலமைச்சர் ஸ்டாலின்.., By RAMYA K Thu, 9 Feb 20238:23:27 AM
[8] https://www.toptamilnews.com/thamizhagam/elan-for-all-is-the-basic-objective-of-the-dravidian-model/cid9936977.htm

குறிச்சொற்கள்: இனிகோ, இனிகோ இருதயராஜ், பால் தினகரன், பீட்டர் அல்போன்ஸ், பெந்தகொஸ்தே, பெந்தகோஸ்து, பெந்தகோஸ்தே, பெந்தேகொஸ்தே, பெந்தேகோஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பெந்தேகோஸ்தே சபை, பெந்தேகோஸ்தே செக்ஸ், பெந்தேகோஸ்தே பாலியல், ஸ்டாலின்
மறுமொழியொன்றை இடுங்கள்