கற்பழிப்பு-செக்ஸ் தொல்லைத் தாங்காமல் போப் ஆடிவிட்டாராம்!
போப் கத்தோலிக்க செக்ஸ் என்ற மர்ஃபி அறிக்கையைப் பற்றி விவாதிக்கிறாராம்! போப் பெனிடிக் செயின்ட் பேட்ரிக் நாளை காரணமாக வைத்துக் கொண்டு ஐரிஸ் மக்களை ஆசுவாசப் படுத்த ஒரு மன்னிப்புக் கடிதத்தை எழுதி அதனைப் படித்துப் பார்க்குமாறு வேண்டினார். தான் “ஃபிடோஃபைல்” கத்தோலிக்க கற்பழிப்புப் பாதிரியார்கள், குருக்கள் முதலியோரைக் கண்டு ஆடிப்போய்விட்டதாகவும், கவலைப்படுவதாகவும் கூறுகிறார்!
மர்ஃபி அறிக்கை என்றால் என்ன? அயர்லாந்திலிலுள்ள டப்ளின் நகரத்தில் ஆர்ச்-பிஷப் வளாகத்தில் மற்றும் அதன் அதிகாரத்தில் வரும் பள்ளிகளில் 1975ம் ஆண்டு முதல் 2004 வரை, 42 பாதிரிகளால் 320ற்கும் மேலான சிறுவர்-சிறுமியர் கற்பழிப்பு, பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அத்தகைய குற்றங்களை சர்ச் மறைத்துவிட்டதாகவும் அறிக்கைக் கூறுகிறது. 700 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெளியிடப் பட்டாலும் பாதிக்கப் பட்டவர்களின் பாதுகாப்பைப் பற்றி ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. அப்படியென்றால் அந்த “சிறுவர்-சிறுமியர்” கதியென்ன என்பதனைப் பார்த்துக் கொள்ளலாம். அதாவது 30 ஆண்டுகள் கழித்து வெளியிடப்படும் அவ்வறிக்கையில், பாதிக்கப்படவர்கள் இன்று 40 முதல் 50 வரை இருப்பர் என்றாகிறது! அவர்கள் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது! [வில் ஹியூம் மற்ற கிருத்துவர்கள் இந்தியாவில் செய்த காமக்களரிகளை நினைவு கூரவும்]

Benedict XVI met the head of the Irish Catholic church, Cardinal Sean Brady, at the Vatican to discuss a response to the Murphy report on clerical sex abuse. Photograph: Alessandra Tarantino/AP
ஸ்மித் என்பவனின் செக்ஸ் தொல்லை தாங்கமுடியவில்லையாம். அவனுடைய அட்டூழியங்கள் 1994ல் வெளிவந்த போதுதான், அவன் 12 வருடங்களாக 74 செக்ஸ் தாக்குதல்களை “டீன் ஏஜ்” சிறுவர்கள் மீது நடத்தியிருக்கிறான் என்ற உண்மை தெரிந்தது. [இதே மாதிரிதான் 30 ஆண்டுகளாக வில் ஹியூம் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான், ஆனால் அவனுக்குத் தண்டனைக் கொடுப்பதாகத் தெரியவில்லை. சென்னையில் ஜாலியாக சுகவாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான்!]
German Chancellor Angela Merkel makes a point during her speech at the German lower house of parliament Bundestag in Berlin, March 17, 2010. Credit: Reuters/Tobias Schwarz
பலான பாதிரிகளின் செக்ஸ் கொடுமைகள் ஜெர்மனியிலும் தாங்கவில்லை: ஜெர்மனியிலும் இதே மாதிரியான கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் தொல்லைத் தாங்காமையால், சேன்ஸலர் ஏன்ஜிலா மெரெல் இதைப் பற்றியும் உண்மையும், தெளிவான விளக்கங்களும் தேவை என்று பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். ஜெர்மானியக் கத்தோலிக்க தலைமை ஆர்ச் பிஷப் ராபர்ட் ஜோலிட்ஸ்ச் என்பார் பாதிரிகள் சிறுவர்-சிறுமிகளை செக்ஸுக்குட்படுத்தியதற்கு கடந்த வாரம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் இப்படி கேவலமாக வயது வந்த சிறுமியர்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்வது, சிறுவர்களைப் பாலியல் ரீதியில் கொடுமைப் படுத்துவது போன்ற மிருகத் தனமான வேலைகளை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால், அந்த அசிங்கமான, ஆபாசமான, கொடூரமான செயல்கள் சரியாகி விடுமா? உடல்-மனம் ரீதியில் பாதிக்கப் பட்டவர்களுக்கு என்ன செய்ய முடியும்? அவர்களுடையக் கன்னித்தன்மைய மீட்டுத் தர முடியுமா?
ஜெர்மனியில் பிறந்த பெனிடிக் என்ன சொல்லப் போகிறார்? இந்த போப் பெனிடிக் ஜெர்மனியில் பிறந்ததாலும், ஜெர்மனியில் கத்தோலிக்கப் பாதிரிகள்-குருமார்கள் முதலியோரின் செக்ஸ் தொல்லைகள், மீறல்கள் அதிகரித்துள்ளதாலும், இந்த செல்ஸ் விஷயம் பெரிதாகிவிட்டது. ஏனெனில் ஆங்கிலத்தில் தர்மமேயாகிலும் வீட்டிலிருந்து வரவேண்டும் என்பார்கள். அதாவது ஒழுக்கம் வீட்ட்லிருந்துதான் ஓம்பப்பட்டு வழிவழியாக வரும்! ஒழுக்கமற்ற அவர்களின் நடத்தைக் கேலிக்கூத்தாகி விட்டதுடன், கிருத்துவ நம்பிக்கையே கேள்விக்குள்ளாகி விட்டது.
உலகமே கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ்-உலகமயமாகிவிட்டது: கடந்த 20 வருடங்களில் ஜெர்மனியில் கத்தோலிக்கர் நடத்தும் பள்ளிகளில் 250க்கும் மேற்பட்டவர்கள் அத்தகைய செக்ஸ் கொடூரங்களுக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்கள், என்று ஜெர்மானிய செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. உலகமுழுவதிலும் இத்தகைய செக்ஸ்-பாலியல் கொடுமைகள் கிருத்துவர்களால் நடத்தப் பட்டு வந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் அதிகமான மீறல்கள் பதிவாகியுள்ளன. நெதர்லாந்திலும் 200ற்க்கும் மேற்பட்ட அத்தகைய கத்தோலிக்க செக்ஸ்-பாதிரிகள் பற்றிய விவரங்களைக் கொடுக்க முன்வந்துள்ளார்கள்.
கிருதுவர்களினால் ஏன் பிரம்மச்சரியம் காக்கமுடியவில்லை? இப்படி பாதிரிகள் ஒரு பக்கமும், மறுபுறம் கன்னியாஸ்திரீகள் அடுத்தப் பக்கமும் செக்ஸில் ஈடுபடுவது கிருத்துவர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது:
- ஏன் அவர்களால் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கமுடிவதில்லை?
- கிருத்துவத்தில் நம்பிக்கையற்றத் தன்மையின் மீது ஆதாரமாக தீட்சை அளிக்கப் படுகிறதா?
- நம்பிக்கையில்லாமல், ஏன் அவர்கள் இத்தகைய காமத்தில் ஈடுபட்டு உழல்கிறர்கள்?
- கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளே கேள்விக்குள்ளாகிறதா?
- கன்னித்தன்மை ஏன் கேவலப்படுத்தப் படுகிறது?
- கிருத்துவப் பெண்கள் ஏன் சீரழிகிறார்கள்?
- கிருத்துவ ஆண்கள் காரணமா?
- எங்கு தவறு நடக்கிறது?
12ம் நூற்றாண்டு திருமணத்தடை நீக்க வேண்டும்: இதனால், அந்த பழைய விவாதங்கள் மறுபடியும் ஆரம்பித்து விட்டது. ஸ்விஸ்நாட்டு இறையியல் வல்லுனர் கத்தோலிக்கர்கள் – அதாவது கடவுள் சேவையில் தீட்சைப் பெற்று வந்தள்ள கார்டினல், பிஷப், கன்னியாஸ்திரீ, கான்வென்ட், போர்டிங் ஸ்கூல் நிர்வாகி, முதலியோர் உட்பட- திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற 12ம் நூற்றாண்டு தடை இன்றும் அமூலில் உள்ளதால் தான் இத்தகைய செக்ஸ்-ஊழல்கள் ஆபாசங்கள் ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, நெதர்லாந்து, அயர்லாந்து முதலிய நாடுகளில் பெருகியுள்ளன என்று எடுத்துக் காட்டியுள்ளார். அத்தகைய பிரமச்சரியம் கடைபிடிக்க இயலாத நிலை மற்றும் இத்தகைய செக்ஸ்-விவகரங்கள் அதிகரிப்பு முதலியவற்றிற்குள்ள சம்பந்தத்தையும் எடுத்துக் காட்டினார். ஆகையால், அத்தடை நீக்கப் படவெண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
பிரம்மச்சரியம்தான் இத்தகைய செக்ஸ்-குற்றங்களுக்குக் காரணம்: ஜாஸ்கெ என்பவர், “பிரம்மச்சரியம் இந்த செக்ஸ் விவகாரங்களுக்கு காரணம் இல்லை, இருப்பினும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத வாழ்க்கைநிலை கொண்டவர்கள் இத்தகைய நிலையில் சரியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மனத்தில் ஆசை / காமத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் துறந்தவர் போல நடிக்க முடியாது. இங்குதான் ஆபத்து வருகின்றது”, என்று விளக்கம் அளிக்கிறார். பேராசிரியர் கிளாஸ் பேயர், பாலியல் மற்றும் பாலியல் மருத்துவம் பிரிவின் தலைமை, சார்டி மருத்தவமனை, பெர்லின் கூருவதாவது, “இத்தகைய செக்ஸ் எண்ணங்கள் வயதுக்கு வரும்போது வருகின்றன. வளர்கின்றன. ஆகவே இதற்கும் பிரம்மச்சரியத்திர்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், அத்தகைய பிரம்மச்சரியம்தான் ஃபெடோஃபல்களைக் கத்தோலிக்கச் சர்ச்சுகள் இழுகின்றன”, என்கிறார்! அதாவது, அங்கு டீன்-ஏஜ் சிறுவர்-சிறுமியர்கள் இருப்பதால், தம்முடைய இச்சைகளை அங்கு சுலபமாகப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற குரூரக் காமம் மனத்தில் ஒளிந்து கொண்டிருப்பதால், அவர்கள் அந்த கத்தோலிக்கச் சர்ச்சுகள் பக்கம் இழுக்கப் படுகிறார்கள்! ஆகையால் ஜாஸ்கி சொல்வதவது, “ஒன்று மெய்ப்பிக்கப் பட்டவர்கள் துறவிகள் ஆக வேண்டும், இல்லை அவர்கள் மனந்து கொண்டு அந்த வேலைக்கு வரவேண்டும்”. கிழக்கத்தைய சடங்கு முறையினர் (The Eastern Rites of the Catholic Church) மற்றும் ஆசாரமுறை சர்ச்சுகள் ( the Orthodox churches) கல்யாணம் செய்து கொண்டு துறவிகளாக இருக்கலாம், ஆனால் பிஷப் ஆக முடியாது. ஆங்கிலிகன் மற்றும் ப்ரொடஸ்ட ன் ட் கிருத்துவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள், ஆனால் பிஷப் ஆக முடியாது. சில பெண்கள் மட்டும் துறவியாக தீட்சைக் கொடுக்கப் படுகிறது.
போப் முடியாது என்கிறார்: ஆனால் போப்போ 12ம் நூற்றாண்டு அம்முறையை மாற்றமுடியாது என்கிறார். அது மட்டுமல்ல, அம்முறை மாற்றினால் கிருத்துவமே அழிந்துவிடும் என்று மற்ற ஆசாரமிக்க துறவிகள் கூருகின்றனராம். ஆகவே, இனியும் அதே மாதிரி பாதிரிகள் கற்பழித்துக் கொண்டே இருப்பார்கள் போலும்! கன்னியாஸ்தீரிகளும் அதுபோலவே கலவியில் ஈடுபட்டு ஜாலியாக இருப்பார்கள் போலும்! பிறகு என்ன நடக்கும் என்று பயமாக இருக்கிறது. ஏற்கெனவே மேனாட்டுக் கலாச்சாரம் செக்ஸை வெலிப்படையாக்கி அதற்கு விடுதலையும் கொடுத்துள்ளார்கள். அந்நிலையில் இப்ப்டி கிருத்துவமும் அதர்கு துணைபோனால் என்னாவது? ஆகவே, இந்தியாதான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏனெனில், இந்தியாவிலிருந்துதான் பெரும்பாலான கன்னியாஸ்தீரிகளும், பாதிரிகளும் ஏற்றுமதி செய்யப் படுகின்றனராம்!
இந்தியாவிற்கு எச்சரிக்கை: இந்தியா இத்தகைய செக்ஸ்-பாதிரிகளால் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளார்கள். ஆனால், முடிந்த வரையில் சர்ச்-மேலிடங்கள் விஷயங்களை அமுக்கி விடுகிறார்கள். இந்தியாவில் “மர்ஃபி அறிக்கை” போன்று விசாரித்தால் 1947 லிருந்து 2010 வரை, ஒருவேளை ஆயிரக்கணக்கான கிருத்துவ பாதிரிகள்-பாஸ்டர்கள் சிக்குவார்கள் மற்றும் பாதிக்கப் பட்டுள்ள சிறுவர்-சிறுமியர்கள் மற்றும் இன்று வளர்ந்து விட்ட மற்றவர்களும் லட்சக்கணக்கா இருப்பர்! ஏற்கெனவே வில் ஹியூம், ஜோ, ஷாஜி, பால், பினு, முதலியோர் இதில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அல்லது வழக்கில் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்ற நிலையில் பார்க்கும்போது, இந்தியா ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது!