அன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல் – அதாவது குழந்தை கற்பழிப்பாளி!
அன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள வளவன்புரத்தில் அன்னை தெரசா கருணை இல்லம் [Annai Teresa Home and Orphanag] என்கின்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த இல்ல நிர்வாகியை போலீஸார் 20-07-2016 அன்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்[1]. அதாவது ராஜா டேவின் ஒரு பிடோபைல், குழந்தை கற்பழிப்பாளி, சிறுவர்-சிறுமியரை புணரும் ஒரு மிருகம். இப்படி செய்தியைப் படிப்பதே துக்கமாக இருக்கிறது. அன்னை தெரசா பெயரில், இப்படியொரு இல்லத்தில், பாஸ்டர் பாலியல் வேலையில் இறங்கி விட்டர் போலும். போதாகுறைக்கு, தெரசாவைப் பற்றி கூடா ஏடாகூடமான செய்திகள் வந்துள்ளன. மெக்குரே, மிஷனரீஸ் ஆப் சாரிடீஸ் நிறுவனத்தின் ஆன்மீக இயக்குனர் [Pedophile Fr. McGuire: spiritual director of Mother Teresa and her Missionaries of Charity], ஆனால், 1960களிலேயே பிடோபைல் வல்லுனர். அதாவது சிறுவர்-சிறுமிகளை விட்டு வைக்கமாட்டார்[2]. பிறகு 2009ல் 25 வருடம் சிறைதண்டனை பெற்றார்[3]. ஆனால், தெரசா அம்மையார், இந்த ஆளை ஆதரித்துதான் திகைப்பான விசயம்.
தெரசா பிடோபைல் பாதிரிக்கு ஆதரவு கொடுத்தது: சிறுவர்-சிறுமிகள் பாலியல் வன்குற்றங்களில் ஈடுப்பட்ட ஒரு பாதிரியை (pedophile) – டொனால்டு மேக்குரே, ஆதரித்ததும் தெரியவந்தது. பலமுறை, எழுத்தாளர்கள், மற்றவர்கள் இவரையும், காளியையும் வேறுபடுத்து-ஒப்புமைப் படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள பஜனை பாடல்கள் பாடினாலும், அவையெல்லாம், ஏசுகிருத்து, மேரி, தெரசா இவர்களைப் போற்றித்தான் இருந்தன. இதெல்லாம், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முதலியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார் என்று தெரிகிறது. மேலும் இவ்விவரங்கள், இந்திய ஊடகங்களில் வெளிவருவது கிடையாது. வெளிநாட்டவர்கள் நாளிதழ்களில், சஞ்சிகைகளில், புத்தகங்களில் எடுத்துக் காட்டும் போது, அவற்றில் சிலவற்றில் இந்திய ஊடகங்களுக்கு தெரிய வரும்போது, சிலர் தான் அவற்றை செய்திகளாக போடுகிறார்கள். மேலும், உள்ளூர் மாநில மொழிகளில் வருவது கிடையாது. தமது திட்டங்களை செய்ல்படுத்தும் போது, அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளில் உரையாடல் என்று புத்தகங்களை வெளியிடுகின்றனர். ஆனால், தெரியக்கூடாது என்ற போது, அப்படியே அமுக்கப்படுகின்றன. சமூக சேவை செய்தார் என்று இவருக்கு ஏராளமான பரிசுகள், பாராட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதே போல காலம் காலமாக, இந்தியாவில் பலர் அத்தகைய சேவைகளை செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தஹால் மாட்டிக் கொண்ட ராஜா டேவிட்: பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூர் பகுதி சிவக்கொல்லையைச் சேர்ந்தவர் செ. ராஜா டேவிட் (47) என்ற மத போதகர்[4]. இவர் பட்டுக்கோட்டையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார். இந்த இல்லத்தில் 13 ஆதரவற்ற சிறுமிகள் தங்கியுள்ளனர் / 25 பேர் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகின்றனர் என்கிறது தினத்தந்தி[5].. எத்தனை பேர் இருந்தால், என்ன, ராஜா டேவிட்டுக்கு சந்தோஷம் தான் போலிருக்கிறது. இவர்களில் 4 பேருக்கு கடந்த ஜூலை 15-ம் இரவு ராஜா டேவிட் பாலியல் தொல்லை கொடுத்ததாக தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தது[6]. இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மீட்டனர்[7]. மத போதகர், பாதிரி, பாஸ்டர் என்றெல்லாம் சொல்லி விவரித்தாலும், செ. ராஜா டேவிட் என்ன லகவலைப்படப் போகிறாரா.
பாதிக்கப்பட்ட மாணவி புகார் மற்றும் விவரங்கள் கொடுத்தது: 20-07-2016 அன்று புதன்கிழமை 6 வகுப்பு படிக்கும் ஒரு மாணவி பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் எங்கள் இல்லத்தில் காப்பாளராக உள்ள பாஸ்டர் ராஜா டேவிட் என்பவர் எனக்கு மற்றும் என்னைவிட வயது குறைவான 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார்[8]. உடனே போலீசார் சென்று அங்கு விசாரித்தனர், புகாரையடுத்து மாணவிகளை மருத்துவ பரிசோதனை செய்தனர் அரசு மருத்துவனை மருத்துவர்கள்[9]. சோதனைக்குப் பிறகு, அவர்கள் பாலியல் ரீதியில் சொந்தரசவு செய்தது தெரிய வந்தது. மாணவிகள் இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, ராஜா டேவிட்டை புதன்கிழமை இரவு கைது செய்தனர்[10].
மற்ற ஆதிக்கப்பட்ட மாணவியர்களின் கதி என்ன?: இதுபோன்று விடுதியில் உள்ள மற்ற சிறுமிகளும் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்[11]. பாதிக்கப்பட்ட சிறுமிகள் தஞ்சாவூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[12]. அப்படி என்றால் அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது. ஆனால், எந்த விதத்தில், ஏன், எப்படி பரபரப்பு ஏற்பட்டது என்று ஊடகங்கங்கள் விளக்கவில்லை. சுமார் ஐந்தாறு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், விசயத்தை இவ்வளவுதான் வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் இத்தகைய பாலியல் வன்மங்கள் நடந்தாலும், எங்கோ, சிறியதாக செய்தியை போட்டு விட்டு, அமைதியாகி விடுவர் போலும்.
© வேதபிரகாஷ்
21-07-2016
[1] தினமலர், சிறுமி பலாத்காரம் : பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016
[2] http://www.traditioninaction.org/HotTopics/a01r_McGuire_Galitzin.html
[3] Catching up with the case of Mother Teresa’s pedophile spiritual director, here is the latest news. On February 12, 2009, former Jesuit celebrity Fr. Donald McGuire received 25 years in prison on abuse charges. In this trial McGuire was punished for abusing just one boy repeatedly on religious retreats http://www.traditioninaction.org/HotTopics/a01u_McGuireSentenced_Galitzin.html
[4] http://www.dailythanthi.com/News/State/2016/07/21111005/In-pattukottai-students-Sexual-harassment-Priest-arrested.vpf
[5] தினததந்தி, பட்டுகோட்டையில் கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST
[6] தினமணி, ஆதரவற்றோர் இல்ல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: நிர்வாகி கைது, By பட்டுக்கோட்டை, First Published : 21 July 2016 06:53 AM IST
[7]http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2016/07/21/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/article3539972.ece
[8] நக்கீரன், கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஸ்டர் கைது, பதிவு செய்த நாள் : 20, ஜூலை 2016 (23:40 IST) ; மாற்றம் செய்த நாள் :20, ஜூலை 2016 (23:40 IST) – இரா.பகத்சிங்
[9] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=169509
[10] தமிழ்.வெப்துனியா, சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார், வியாழன், 21 ஜூலை 2016 (10:41 IST)
[11] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/priest-raped-school-girl-116072100022_1.html
[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1568085&Print=1; http://www.dinamalar.com/news_detail.asp?id=1568667