Archive for மே, 2018

மடாலய பாஸ்டர்கள் பங்கு கொண்டது, சர்ச்சில் கருப்புக் கொடி ஏற்றியது, சர்ச் வளாகத்தில் போராட்டம் செய்தது – கத்தோலிக்க ஊடகங்களுக்கு கத்தோலிக்கர் இறந்தது தான் தெரிகிறது (2)

மே 27, 2018

மடாலய பாஸ்டர்கள் பங்கு கொண்டது, சர்ச்சில் கருப்புக் கொடி ஏற்றியது, சர்ச் வளாகத்தில் போராட்டம் செய்தது கத்தோலிக்க ஊடகங்களுக்கு கத்தோலிக்கர் இறந்தது தான் தெரிகிறது (2)

Tuticorin - UCA news Catholic killed changed to massacre - 23-05-2018

படுகாயம் அடைந்துள்ளதால், இறந்தவர் எண்ணிக்கை உயரக் கூடும்,” என்று நோர்பெர்ட் தாமஸ் சொன்னது: “படுகாயம் அடைந்துள்ளதால், இறந்தவர் எண்ணிக்கை உயரக் கூடும்,” என்று நோர்பெர்ட் தாமஸ் [Father Norbert Thomas, chancellor of Tuticorin Diocese] “ஐக்கிய கத்தோலிக்க நியூஸ் ஏஜென்சிக்கு” தெரிவித்தார்[1]. மற்ற ஊரகங்களுக்கி சொல்லவில்லை போலும். யுவான் ஆம்ப்ரோஸ், தூத்துக்குடி பிஷப், “….போலீஸ் துப்பாக்கி சூடு முறையற்றது…..இப்போராட்டம் சர்ச்சினால் தூண்டிவிடப்பட்டது என்ற பிரச்சாரம் எழுந்துள்ளது, ஆனால், இது பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம்,” என்று “ஐக்கிய கத்தோலிக்க நியூஸ் ஏஜென்சிக்கு” தெரிவித்தார். “மஹாத்மா காந்தியின் சத்யாகிரக பாணியில் ஐந்து கிமீ போராட்டக் காரர்கள் நடந்து சென்றனர். பிறகு தான் யாரோ போலீஸார் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்…  லியோ ஜெயசீலன் என்ற ஒரு கத்தோலிக்க சாமியாரும் குண்டடிப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார், இப்பொழுது தேறி வருகிறார்.” இந்த ஆலை, கத்தோலிக்க பாரிஷ் அதிகாரத்தில் வருகிறது, இங்கு ஒரு லட்ச கத்தோலிக்கருக்கு ஆதரவாக செயல் படுகிறது. சமூகப் பிரச்சினை என்று வந்தால், அவர்கள், சர்ச்சுக்கு வந்து ஆலோசனை கேட்பர் என்பது பாரம்பரியமான விசயம் ஆகும்…இருப்பினும், இந்த போராட்டத்திற்கும் எங்களுக்கு சம்பஎதம் இல்லை, இது மக்களின் போராட்டம் ஆகும்,” என்று நோர்பெர்ட் தாமஸ் விளக்கம் கொடுத்தார்[2].

Tuticorin - Independent Catholic news- 25-05-2018

இறந்த 12 பேரில் நால்வர் கத்தோலிக்கர் என்று, இன்னொரு கத்தோலிக்க செய்தி ஏஜென்சி செய்தி (24-05-2018)[3]: லிடியா ஜேம்ஸ் என்ற லண்டன் மார்க்கடிங் மைனிங் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர் கூறியது, “லண்டனில் இக்கம்பெனி பதிவாகியுள்ளது. 1994லிலிருந்து, அக்கம்பெனியின் மீது மாசுபற்றிய புகார்கள் உள்ளன,” என்று சேர்த்து, மேலே குறிப்பிட்ட அதே செய்தியை வெளிட்டுள்ளது[4]. யுவான் ஆம்புரோஸ், “மஹாத்மா காந்தியின் சத்யாகிரக பாணியில் ஐந்து கிமீ போராட்டக் காரர்கள் நடந்து சென்றனர். பிறகு தான் யாரோ போலீஸார் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்….. ” என்றால், வீடியோக்களும், செய்திகளும் வன்முறையைத்தானே காட்டுகின்றன. போலீஸ்கரர்கள் மீது கல்லெறிதல், பெட்ரோல் குண்டு போடுதல், போலீஸாரே ஓடுவது, …. போன்ற காட்சிகள் தானே காணப்படுகின்றன. பிறகு, காந்தியாவது, சத்தியாகிரகமாவது? கிருத்துவர்களின் போலித்தனத்தை, பொய் பிரச்சாரத்தைத் தான் இது காட்டுகிறது. “வன்முறை” என்றதும், சௌரி சௌரா கலவரத்திற்குப் பிறகு, தனது “ஒத்துழையாமை” இயக்கத்தைக் கைவிட்டார். ஆனால், கிருத்துவர்கள் தொடர்கிறார்கள். 22-05-2018 அன்று கூட 144 தடை உத்தரவையும் மீறி, பனிமாதா சர்ச்சிலிருந்து ஊர்வலமாக சென்றனர்ரிதிலும் “சர்ச்சிற்குள், சர்ச் வளாக்த்தில், வெளியே” போன்ற விவரங்கள் மாறுபடுகின்றன. அப்பொழுது தான் வன்முறை ஆரம்பித்து கலவரத்தில் முடிந்தது.

Tuticorin - Bishop condemns - Vatican Radio - 24-05-2018

தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் இரங்கல் என்று வாடிகன் ரேடியா செய்தி (24-05-2018)[5]: இவ்விகாரத்தைப் பற்றி தூத்துக்குடி பிஷப்பின் பேட்டி / அறிக்கை தமிழ் ஊடகங்களில் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், வாடிகன் ரேடியோவில் வந்தது, என்று “வத்திக்கான் வானொலி” செய்தி வெளியிட்டிருப்பதும் நோக்கத் தக்கது. அது சொல்வதாவது, “மே,24,2018. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான மக்கள் எழுச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் எழுச்சி பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர் இவான் அம்புரோஸ் அவர்கள், “தங்களுடைய வாழ்வுரிமைக்காகப் போராடிய மக்கள் மீது, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், துப்பாக்கிச்சூடு நடத்தி, பல உயிர்கள் இழப்புக்குக் காரணமாயிருந்தவர்களை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்”, என்றும், அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கிறோம் என்றும் கூறியுள்ளார். “ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த நூறு நாள்களாக, தூத்துக்குடி நகரையும், புறநகரையும் சார்ந்த பல ஆயிரம் மக்கள், எந்தவிதமான வன்முறைச் சம்பவமும் இல்லாமல் அமைதியாக அறவழியில் போராடி வந்துள்ளனர், மே 22ம் தேதியான இச்செவ்வாயன்றும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் எண்ணத்தோடு இலட்சக்கணக்கான மக்கள் சென்றபோதும்கூட, மக்கள் எந்த வன்முறைக்கும் இடமளித்தது கிடையாது, அப்படியானால் மக்களுக்கு எதிராக இந்த வன்முறையைத் தூண்டியது யார் என்ற கேள்வி எழுகின்றது”, என்றும், ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களின் அறிக்கை கூறுகின்றது[6]. தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

15-04-2018 - Panimayamata church, hub of anti-sterlite-1

சர்ச்சிலிருந்து தடையை மீறிப் புறப்பட்ட போராளிகளும் கல்லெறி கலட்டா கலவரத்தில் முடிந்ததும்: ஆங்கில ஊடகங்கள், 5000 போராட்டக் காரர்கள் தடையை மீறி உள்ளூர் சர்ச்சுக்கு அருகில் கூடினர்[7]. 144-தடையை மீறி கலெக்டர் அலுவலம் நோக்கிச் செல்ல அவர்கள் முயன்றனர். பிறகு அங்கிருந்து, ஸ்டெர்லைட் ஆலைக்குச் செல்லவும் திட்டமிட்டிருந்தனர் என்று போலீஸார் சொன்னதாக “பர்ஸ்ட் போஸ்ட்” கூறுகிறது[8]. அனுமதி மறுத்தாலும், அவர்கள் செல்ல பிடிவாதமாக இருந்தனர். ஆனால் “டைம்ஸ் ஆப் இந்தியா” அதனை “மனிமாதா சர்ச் ”[the Church of the Lady of Snow in Tuticorin] என்று தெளிவாகக் குறிப்பிட்டது[9]. கருப்புக் கொடி போராட்டத்தவரின் ஒரு குழுவினர் அங்குதான் கூடினர். இன்னொன்று, மடத்தூர் கிராமத்திலிருந்து புறப்பட்டது[10]. ஆனால், சர்ச் அருகில் கூடினர், அங்கிருந்து புறப்பட்டன, தடையை மீறினர், போலீஸார் மீது கல்லெறிந்தனர்[11], கலெக்டர் வளாகத்திலும் புகுந்து, வாகனங்களை எரித்தனர் என்று வீடியோக்கள், செய்திகள் தெளிவாகக் காட்டுகின்றன[12]. மஹாத்மா காந்தி முறையை பின்பற்றிய போராட்டக் காரர்கள் ஏன், வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும்.

Tuticorin - procession against police action christians - 26-05-2018

“எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரீதியில் மனு கொடுத்தது: 26-05-2018 அன்று குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், குமரி மாவட்ட திருவருட்பேரவை பொதுச்செயலாளர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் உள்பட பலர் தூத்துக்குடி பிரச்சினை தொடர்பாக, குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர்[13]. அப்போது கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ், குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ராஜ், குமரி மாவட்ட திருவருட்பேரவை ஒருங்கிணைப்பாளர் மரியவின்சென்ட், மரியவிக்டர், பங்கிராஸ், ஸ்டீபன், அகமது உசேன் ஆகியோர் உடன் சென்றனர்[14]. சர்ச்சுக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற பிறகு, கத்தோலிக்கர் இறந்தனர் என்பது, பிஷப்பே அறிக்கை விடுவது, அது வாடிகன் ரேடியோ மூலம் அறிவிப்பது, கடைசியாக மனு கொடுப்பது முதலியன கிருத்துவர்களின் பங்கை மெய்ப்பித்து விட்டது. கோடானு கோடிகள் செலவழித்து கம்பெனி வைத்டுள்ள போது, அரசியல்வாதிகள், உள்ளூர் பிரபலங்கள், ஆதிக்கநிலையில் உள்ள சர்ச் என்று எல்லோருமே ஸ்டெர்லைட் இடமில்ருந்து பலனை பெற்றிருக்கின்றனர். எதிர்ப்பது என்பது, இருந்தாலும், தார்மீக நிலையில், எந்த தொடர்பினையும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், இக்கிலாந்து சர்ச்சே, இக்கம்பெனியில் கனிசமான பங்குகளை 2010 வரை வைத்திருந்தது. அதனால், சர்ச்சுக்கு, முதலீடு செய்வது, லாபம் பார்ப்பது ஏன் என்ற கேள்வியுன் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

27-05-2018

15-04-2018 - Panimayamata church, hub of anti-sterlite-using children5

[1] https://www.ucanews.com/news/catholics-among-11-dead-as-police-fire-on-india-protest/82392

[2] Among the injured is Father Leo Jayaseelan. A bullet went through his stomach but he was operated on and is stable now, the chancellor priest said. He said the polluting plant operates within the city limits and people have been adversely affected by toxic fumes. In recent years, the area has reported increased cases of cancer. The plant comes under the area of a parish and affects 19 parishes in the city, which together caters to about 100,000 Catholics. “It is natural for the very traditional Catholics here to come to the church and consult in the parish when they face social issues,” Father Thomas said. “However, the protest has nothing to do with religion. It is a people’s protest.”

https://www.ucanews.com/news/catholics-among-11-dead-as-police-fire-on-india-protest/82392

[3] Independent Catholic news, India: Catholics killed by police during protest over toxic copper processing plant, May 25th, 2018

[4] https://www.indcatholicnews.com/news/34964

[5] வத்திக்கான் வானொலி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வன்முறைக்கு கண்டனம், 24/05/2018 16:38.

[6]http://ta.radiovaticana.va/news/2018/05/24/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/1375074

[7] The First Post, Nine dead after Tamil Nadu Police opens fire on anti-Sterlite protesters in Tuticorin demanding ban on industries, India FP Staff May 23, 2018 07:37:01 IST

[8] Police said nearly 5,000 protesters gathered near a local church and insisted on taking a out a rally to the district collectorate after they were denied permission to march to the copper smelter plant.

https://www.firstpost.com/india/nine-dead-after-tamil-nadu-police-opens-fire-on-anti-sterlite-protesters-in-tuticorin-demanding-ban-on-industries-4478343.html

[9] Times of India, Anti-Sterlite protest turns violent in Tamil Nadu’s Tuticorin, nine killed, Padmini Sivarajah | TNN | Updated: May 22, 2018, 17:30 IST .

The protesting public gathered for a black flag protest near the Church of the Lady of Snow in Tuticorin, while another group started to march from Madathur village.

[10] https://timesofindia.indiatimes.com/city/chennai/anti-sterlite-protest-in-tamil-nadu-turns-violent-20-injured/articleshow/64270597.cms

[11] Financial Express, Anti-Sterlite Protests in Tuticorin of Tamil Nadu: What really happened? How it all began? Top details and developments, By: FE Online | Updated: May 22, 2018 6:28 PM

[12] https://www.financialexpress.com/india-news/anti-sterlite-protest-movement-tuticorin-thoothukudi-tamil-nadu-violence-vedanta-violence-reason/1176956/

[13] மாலைமலர், தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்திய போலீசாருக்கு தண்டனை வழங்க வேண்டும்கலெக்டரிடம் மனு, பதிவு: மே 26, 2018 13:38

[14] https://www.maalaimalar.com/News/District/2018/05/26133837/1165811/police-should-be-punished-for-thoothukudi-gunfire.vpf

 

Advertisements

மடாலய பாஸ்டர்கள் பங்கு கொண்டது, சர்ச்சில் கருப்புக் கொடி ஏற்றியது, சர்ச் வளாகத்தில் போராட்டம் செய்தது – முதலியன கிறிஸ்தவ ஆதரவு தான் (1)

மே 27, 2018

மடாலய பாஸ்டர்கள் பங்கு கொண்டது, சர்ச்சில் கருப்புக் கொடி ஏற்றியது, சர்ச் வளாகத்தில் போராட்டம் செய்ததுமுதலியன கிறிஸ்தவ ஆதரவு தான் (1)

Samarendra Das with Fatima Babu at the anti-Sterlite consultative meeting held recently at Hotel DSF in Thoothukudi. Photo- DC

சர்ச்சுக்கும், போராட்டக் காரர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா, இல்லையா?: சில இணைதள கட்டுரையாளர்கள் ஆதாரங்களைக் குறிப்பிடாமல், கொடுக்காமல், உணர்ச்சிப் பூர்வமாக கட்டுரைகளை எழுதியுள்ளனர்[1]. “ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு சர்ச் தான் காரணம்,” “தேசத்தை துண்டாட முயற்சி” என்ற ரீதியில் அவை உள்ளன[2]. இணைதளங்களும் “பொறுப்புத் துறப்பு” எச்சரிக்கையுடன் வெளியிட்டுள்ளன. கிருத்துவர்கள் பரப்பும் பொய் செய்திகளுக்கு எதிராக இருக்கும் பிரச்சாரரீதியில் இதெல்லாம் உள்ளன. கூடங்குள போராட்டத்தில், நேரிடையாக, அவர்களது தொடர்புகள் வெளிப்பட்டதால், இதில் அவர்கள் ஜாக்கிரதையாக செயல் படுகிறார்கள் என்று தெரிகிறது. இதனால், ஆரம்பத்திலிருந்து, சர்ச்சிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்ற பாட்டைப் பாடி வருகிறது. இருப்பினும், இவ்விசயத்தில் கிருத்துவர்களின் பங்கு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது[3]. இணைதள விவரங்கள், ஏற்கெனவே வெளிவந்த கட்டுரைகள், செய்திகள் முதலியவற்றின் ஆதாரமாக, இக்கட்டுரை எழுதப் படுகிறது. ஆதாரங்களுக்கு, அங்கங்கு அடிக்குறிப்புகளில், மூலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, சரிபார்த்து கொள்ளலாம்.

Tuticorin - foreign hand behind- DC- 20-03-2018

ஸ்டெர்லைட் எதிர்ப்பில் அந்நிய சக்திகள்(மார்ச் 2018): அந்நிய கையின் தொடர்பு, லண்டனைச் சேர்ந்த “வேதாந்த குழுமம் எதிர்ப்பு” சமரேந்திர தாஸ் [Samarendra Dhas representing ‘Foil Vedanta Group’ of London[4]] தான், என்று அர்ஜுன் சம்பத் சொன்னதாக, “டெக்கான் ஹெரால்ட்” செய்தி வெளியிட்டது[5]. அவர் இன்னொரு எதிர்ப்பு-போராளியான பாத்திமா பாபு என்பவருடன், தூத்துக்குடி, டிஎஸெப் ஹோட்டல் கூட்டத்தில் இருந்ததாக [Samarendra Das with Fatima Babu at the anti-Sterlite consultative meeting held recently at Hotel DSF in Thoothukudi. (Photo: DC)] ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டது[6]. இன்னொரு எதிர்ப்பாளி, ஒரிஸாவிலிருந்து, ஒருவர் வந்ததாகவும், அவர் பெயர் மறந்து விட்டேன் என்கிறார். இதெல்லாம், “வேதாந்த குழுமத்தை” ஒரிஸாவில் எதிர்த்தவர்களுடன் தொடர்புகளைக் காட்டுகிறது. பொலீஸார் இவரைப் பற்றி சந்தேகிப்பதும் உள்ளது. சமரேந்திர தாஸ் தூத்துக்குடிக்கு இரண்டுமுறை வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர் ஒரிஸாவில், சர்ச்சைக்கு உட்பட்ட கந்தமாலில், அதிக நாள் இருந்தவர் என்று தெரிகிறது. கந்தமாலில், சர்ச்சின் அடவடித் தனத்தை, வன்முறையை, ஸ்வாமி லக்ஷமணானந்த படுகொலை மூலம் அறிந்து கொள்ளலாம். அதில், கிருத்துவ-மாவோயிஸ்ட் தொடர்புகளும் வெளிப்பட்டன. அதேபோல, இவர் விசயத்தில் இருப்பது ஆராயப் பட வேண்டும்.

Tuticorin - church connection - The Hindu- 15-04-2018

15-04-2018 அன்று சர்ச்சில் நடந்த கூட்டம், கருப்புக் கொடி ஆர்பாட்டம், தர்ணா முதலியன: சென்ற மாதம் ஏப்ரல் 15, 2018, ஞாயிற்றுக் கிழமை, மனிமாதா சர்ச்சில் [Our Lady of Snows Basilica campus ] வழிபாடு முடிந்ததும், மடலாயத்தைச் சேர்ந்த கத்தோலிக்க / சாமியார்கள் பாஸ்டர்கள் கருப்புக் கொடிகளை கொம்புகளில் கட்டி வெளியே வந்தனர்[7]. “சாலை மறியல் போராட்டம் செய்வோம்,” என்று முயன்றபோது, போலீஸார் அனுமதி இல்லாததால், செய்வோம் என்று எச்சரித்தனர். அதனால் பயந்து அவர்கள் சர்ச்சுக்குள் நுழைந்து தர்ணாவில் உட்கார்ந்தனர். இவ்வளவு நடந்தபோது, சர்ச் அதிகாரிகள், சர்ச்சிற்கும், பொராட்டக்காரர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தது[8]. அப்படியென்றால், மடலாயத்தைச் சேர்ந்த கத்தோலிக்க / சாமியார்கள் பாஸ்டர்கள் கருப்புக் கொடிகளை கொம்புகளில் கட்டியபடி எப்படி வெளியே வந்தனர், யார் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது, சர்ச்சிற்குள் தர்ணா நடந்த ஒப்புக்க் கொண்டது எப்படி, அதிலும் பாஸ்டர்கள் ஏன் எப்படி கலந்து கொண்டார்கள் போன்ற எழும் கேள்விகளுக்கு, அவர்கள் பதில் சொல்லவில்லை.

Tuticorin - church connection - Daily Thanthi- 15-04-2018

பனிமயமாதா ஆலய வளாகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு: இதையே, தினத்தந்தி, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். .குமரெட்டியபுரம், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், சங்கரப்பேரி, மீளவிட்டான், மடத்தூர், முருகேசன்நகர், 3-வது மைல், சில்வர்புரம், தபால் தந்தி காலனி, மாதவன் நகர், சிலோன் காலனி, பாத்திமாநகர், தேவர்நகர் ஆகிய 14 இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகே நேற்று காலை மக்கள் திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலய வளாகத்தில் கருப்பு கொடியை ஏற்றினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தை தொடங்கினர்பனிமயமாதா ஆலய வளாகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,” என்று செய்தி வெளியிட்டது[9]. இருப்பினும், ஏன் பரபரப்பு என்று தெரியப்படுத்தவில்லை. ஆங்கிலத்தில், “சர்ச் இந்த போராட்டத்திற்கு, அதிகாரத்துடன், முறைப்படி அனுமதி அளிக்கவும் இல்லை, கருப்புக் கொடி ஏற்றியது, கருப்பு பலூன்களை கட்டியது முதலியவற்றை எதிர்க்கவும் இல்லை,” என்று “டிடிநெக்ஸ்ட்” செய்தியாக வெளியிட்டது[10]. அதாவது, தெரிந்தும், அமைதியாக இருந்தது, சம்மதத்தைதான் குறிக்கிறது[11]. ஆனால், இந்த போராட்டத்திற்கு பெருமளவில் ஆதரவு கொடுப்பது வெட்டவெளிச்சமாகி வருகிறது. சர்ச்சைப் பொறுத்த வரையில், எந்த திட்டம், போராட்டம், சதி, மோசடி போன்றவை எல்லாமே, மேலதிகாரங்களுக்கு தெரியாமல் நடத்த முடியாது. இனி கிருத்துவ இணைதளங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

Tuticorin - UCA news Catholic killed - 23-05-2018

23-05-2018 – போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்த 11 பேரில் நால்வர் கத்தோலிக்கர்: கத்தோலிக்க மையமான தூத்துக்குடியில், மே 22ம் தேதி நடத்தப் பட்ட போராட்டத்தைக் கட்டுப் படுத்த, நடத்தப் பட்ட “துப்பாக்கி சூட்டில் இறந்த 11 பேரில் நால்வர் கத்தோலிக்கர்” என்று கிருத்துவ ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்தன[12]. எந்த ஊடகமும், “இந்துக்கள்” கொல்லப்பட்டனர் என்று செய்தியை வெளியிடவில்லை. பிறகு “கத்தோலிக்கர்” என்று குறிப்பிட்டு செய்து வெள்ளியிடுவது ஏன் என்று கவனிக்க வேண்டும். கத்தோலிக்க செய்தி தொடர்கிறது, “20,000 மக்கள் கூடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்திய போராட்டத்தில், 20ற்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் லியோ ஜெயசீலன் என்ற ஒரு கத்தோலிக்க சாமியாரும் உள்ளார்……….”. தமிழக / இந்திய ஊடகங்கள் 4000 / 5000 எனும்போது, 20,000 என்று குறிப்பிடுவது எவ்வாறு என்று தெரியவில்லை. அப்படியென்றால், போலீஸார் நிலை அதோகதியாகத்தான் இருந்திருக்க வேண்டும். பிறகு தலைப்பை “பெரிய அளவில் படுகொலை” என்று தலைப்பை மாற்றி, இதே இணைதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, “கிருத்துவ அடக்குமுறை, தண்டனை” போன்ற ரீதியில், செய்திகளைத் திரிப்பது, இவற்றின் வேலையா இருக்கிறது.

© வேதபிரகாஷ்

27-05-2018

Tuticorin - procession against Sterlite- 26-05-2018

[1] நியூஸ்.டிஎம்.தமிழ், தேசத்தை துண்டாட முயற்சிதூத்துக்குடி கிளப்பும் சந்தேகங்கள்மாரிதாஸ், Author: Maridhas M | Posted Date : 12:10 (24/05/2018)

[2] http://www.newstm.in/Tamilnadu/1527143845135?What-are-the-doubts-behind-Thoothukudi-Violence?-Is-this-Split-the-Nation

[3] Giving a boost to the agitation is a London-based anti-Sterlite organisation ‘Foil Vedanta’ led by Samarendra Das. Das works in conjunction with the Thoothukudi-based agitator Fathima Babu. Das, who hails from Odisha in Eastern India, had visited Thoothukudi twice to liaise with Fathima Babu. While Fathima Babu’s organisation had acknowledged his first visit, the second had been kept a secret raising questions about the purpose of the visit. Newspaper reports do say that the Police suspect a ‘foreign hand’ in the agitation.

http://www.4-traders.com/news/Separatist-threat-arising-from-indifference-to-environmental-concerns–26664508/

[4] http://www.foilvedanta.org/tag/samarendra-das/

[5] DECCAN CHRONICLE. Thoothukudi: ‘Foreign hand’ behind anti-Sterlite stir, Published Mar 20, 2018, 6:11 am ISTUpdated Mar 20, 2018, 6:11 am IST.

[6] https://www.deccanchronicle.com/nation/current-affairs/200318/thoothukudi-foreign-hand-behind-anti-sterlite-stir.html

[7] The Hindu, Anti-Sterlite stir enters basilica campus, SPECIAL CORRESPONDENT, APRIL 15, 2018 21:38 IST; UPDATED: APRIL 15, 2018 21:38 IST

[8] The ongoing anti-Sterlite protests in a few villages situated close to Sterlite Copper unit overflowed into Our Lady of Snows Basilica campus on Sunday as a section of parishioners tied a pole with black flag with the compound wall of the church. After the end of the Sunday Holy Mass at the shrine, the parishioners, on coming out of the church, tied the pole with black flag and black balloons at the southern entrance of the church campus in protest against Sterlite Copper. When they decided to organise a road roko on the busy road in front of the church to highlight their demand of permanent closure of the copper manufacturing unit, police warned them that those who dared to block the traffic would be arrested and remanded in judicial custody as the district administration had clamped prohibitory orders

Fearing arrest, the protesters returned to the church campus where they sat under the shade of a tree on the southern side to stage a dharna against the copper smelting unit. Church authorities made it clear that the shrine was no way connected to the protest organised by a group of people.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/anti-sterlite-stir-enters-basilica-campus-thoothukudi/article23549854.ece

[9] தினத்தந்தி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மேலும் 2 இடங்களில் போராட்டம் பனிமயமாதா ஆலய வளாகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு, ஏப்ரல் 16, 2018, 03:15 AM.

https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/04/16031100/Thoothukudi-Sterlite-plant-closureAlso-in-2-places.vpf

[10] DTnext, Anti-Sterlite protesters enter church in Kudankulam redux, Published: Apr 16,201802:58 AM

[11] https://www.dtnext.in/News/TopNews/2018/04/16025816/1069089/AntiSterlite-protesters-enter-church-in-Kudankulam-.vpf

[12] Four Catholics were among 11 people who died when police opened fire on thousands protesting a multimillion-dollar copper-processing plant which they claim pollutes their environment and drinking water. At least 20 people including a Catholic priest are in hospital with bullet injuries after Tamil Nadu state police fired at about 20,000 people gathered at the plant owned by London-based Vedanta in the coastal district of Tuticorin, a Christian center in southern India, on May 22. “The death toll may go up as several are critically injured,” Father Norbert Thomas, chancellor of Tuticorin Diocese, told ucanews.com.

UCA news, Catholics among 11 dead as police fire on India protest, Tejaswi Ravinder, Hyderabad, India May 23, 2018