விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள் – பின்னணி என்ன? (3)

விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள் – பின்னணி என்ன? (3)

30க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்: இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். காயமடைந்த போலீஸார், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக கத்தோலி்க்க பெரநகர ஆர்ச்பிஷப் தாமஸ் ஜே நெட்டோ மற்றும் பெரேரா உள்பட 15 பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதற்கிடையே சமரசப் பேச்சு மற்றும் அமைதியை நிலைநாட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நகர் காவல் ஆணையர், மாவட்ட போலீஸார் அதிகாரிகள், தேவாலய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் 28-11-2022  அன்றும் நடந்தது. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி எம் ஆர் அஜித்குமார் கூறுகையில் “விழிஞ்சம் காவல்நிலையம் மீது கும்பல் நடத்திய தாக்குதலில் 36 போலீஸார் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை, சிலரை விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர், அது வாக்குவாதமாக மாறி வன்முறையில் முடிந்தது. காவல்நிலைய துணை ஆய்வாளருக்கு அறுவை சிகிச்சை செய்யும்அளவு காயம் ஏற்பட்டது, அந்தக் கும்பல் கற்கள், கம்பு, இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். காவலர்கள் தரப்பில் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் ஏதும் பேசவில்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவே நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியில்கூட்டத்தைக் கலைக்க குறைந்தஅளவு தடியடி நடத்தப்பட்டது. இந்ததாக்குதல் தொடர்பாக அடையாளம் தெரியாதவர்கள் என்ற அடிப்படையில் 3ஆயிரம் பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர், ”எனத் தெரிவித்தார்.

கும்பல் கற்கள், கம்பு, இரும்பு கம்பிகள்” எல்லாம் எப்படி, எங்கிருந்து வந்தன?: “கும்பல் கற்கள், கம்பு, இரும்பு கம்பிகள்” எல்லாம் எப்படி, எங்கிருந்து வந்தன, யார்-எப்படி கொண்டு வந்தனர் போன்ற கேள்விகளும் எழத்தான் செய்யும். போலீஸார் விசாரிக்கும் போது, புலன் விசாரணை மேற்கொள்ளும் போது தெரியத்தான் போகிறது. இதனால் தான், வன்முறை எப்படி ஏற்பட்டது என்று ஆராய வேண்டியுள்ளது. சாதாரண மீனவர்களால் அத்தகைய தாக்குதல்களை நடத்த முடியும் என்றால், அவர்களுக்கு, யார் அவ்வாறு செய்ய சொன்னது? பிஷப், பாஸ்டர்கள் முதலியோர் தூண்டுதல்கள் மூலம் நடந்தது, என்றால், நிச்சயமாக அவர்கள் பொறுப்பாளர்கள் ஆகிறார்கள். இப்பொழுது, எப்.ஐ.ஆர்களும் அவ்வாறே பதிவு செய்யப் பட்டுள்ளன.

பாதிரிகள் வன்முறை போராட்டத்தை ஆதரித்துப் பேசுவது: பாதிரியார் எஜூனே பெரேரா கூறுகையில், “போலீசார் பிஷப்புகளையும் பாதிரியார்களையும் கிரிமினல் வழக்கில் கைது செய்துள்ளனர், மேலும் அவர்கள் போராட்டத்தில் பங்கு கொள்ளாவிட்டாலும் அவர்கள் மீது சதி குற்றம் சாட்டியுள்ளனர். சனிக்கிழமை வன்முறை அதானி (குழு) ஆட்களால் காவல்துறை மற்றும் பா...,வின் துணையுடன் கட்டவிழ்த்து விடப்பட்டது. இப்பிரச்னைக்கு அமைதியான தீர்வை நாங்கள் விரும்புகிறோம்………………மக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றிதான் போராட்டம் நடந்தது. இருப்பினும் எங்கள் பகுதி மக்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்றும் அமைதிப்பேச்சு நடக்கிறது, அதிகாரிகளுடன் பேசி சமரசத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவோம்,” எனத் தெரிவித்தார்.இந்த சம்பவத்தால் விழிஞ்சம் பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், வன்முறை ஏற்படாமல்தடுக்கவும் கூடுதலாக 300 போலீஸார் அழைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிஷப்பாஸ்டர்களின் பங்கு, போராட்டம், வன்முறை, வழக்குப் பதிவு: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை எதிர்ப்பவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்த ஒரு நாளுக்குப் பிறகு, கத்தோலிக்க திருச்சபையின் திருவனந்தபுரம் பேராயத்தின் (லத்தீன் சடங்குகள்) பாதிரியார்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் ஞாயிற்றுக்கிழமை 27-11-2022 அன்று வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சபை உறுப்பினர்கள். வன்முறை தொடர்பாக பேராயர் தாமஸ் ஜே.நெட்டோ, துணை ஆயர் கிறிஸ்துதாஸ் மற்றும் விகார் ஜெனரல் யூஜின் பெரேரா ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கத்தோலிக்க சர்ச் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது

 விழிஞ்சம் சர்வதேச பல்நோக்கு துறைமுகமானது ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது: விழிஞ்சம் சர்வதேச பல்நோக்கு துறைமுகமானது ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட், டிசம்பர் 5, 2015 அன்று அதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. தற்போது 70% பணிகள் முடிவடைந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெளிவுபடுத்தினர், ஆனால் கடந்த சில மாதங்களாக மீனவர்களின் போராட்டங்களால் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 2,960 மீட்டர் நீளமுள்ள பிரேக்வாட்டரில், சுமார் 1,400 மீட்டர்கள் நீளத்திற்கு 30 லட்சம் டன் கிரானைட் பாறைகளைப் பயன்படுத்தி கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. “பிரேக் வாட்டர் கட்டுமானத்தை முடிக்க மொத்தம் 70 லட்சம் டன் கிரானைட் பாறைகள் தேவை. முன்பு ஒரு நாளைக்கு சுமார் 15,000 டன் கற்பாறைகளை கொட்டினோம், ஆனால் இப்போது அதை ஒரு நாளைக்கு 30,000 டன்கள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று துறைமுகத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மீனவர்களுக்கு இழப்பீடு கேட்பது: இந்த கட்டுமானப் பணிகள் காரணமாக, கடலோர சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. எனவே துறைமுகம் அமைக்கும் பணியை முழுமையாக நிறுத்த வேண்டும் என போராடும் மீனவ மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கடல் அரிப்பால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மறுவாழ்வு, கடலோர அரிப்பைத் தணிக்க நடவடிக்கை, வானிலை எச்சரிக்கை விடுக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முறையான ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மீன்பிடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும், திருவனந்தபுரம் மாவட்டம் அஞ்சுதெங்கு முதலைப்பொழி மீன்பிடி துறைமுகத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராடும் மக்கள் வலியுறுத்தினர்.

வகுப்புவாத அரசியலாக்கப் படும் முறை: எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், இந்த விவகாரத்தை அரசு வகுப்புவாதமாக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, மதகுருமார்கள் மீதான காவல்துறை நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார்[1]. மேலும், “விழிஞ்சத்தில் ஏற்பட்ட பதற்றம் மாநில அரசின் சதி. பேராயர் மற்றும் பிற பாதிரியார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[2]. அப்படியானால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடும்போது, ​​முதல்வர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யுமா? இது முன்னெப்போதும் இல்லாதது. அதானியின் நலனைக் காக்க இந்த திட்டத்தில் சி.பி.ஐ(எம்)-பா.ஜ.க இணைப்பு உள்ளது,” என்றும் அவர் கூறினார். எதிர்-எதிராக இருக்கும் சி.பி.ஐ(எம்)-பா.ஜ.க  எவ்வாறு அதானியின் நலனைக் காக்க இந்த திட்டத்தில் இணைகிறது என்று தெரியவில்லை. அரசியல் ரீதியாக, இத்தகைய குழப்பவாதங்களை முன் வைப்பது சுலபம். ஆனால், நடப்பது மற்றும் இறுதியாக, மக்களுக்குக் கிடைக்கும் பலன் இவற்றிலிருந்து உண்மையினை அறிந்து கொள்லலாம்.

கத்தோலிக்க சர்ச்சின் எதிர்ப்பு மட்டும் மர்மமாக இருக்கிறது: கேரளா காங்கிரஸ் [மணி] என்ற கட்சி, முழுக்க கிருத்துவர் சார்பான, அடிப்படைவாத அரசியல் கட்சியாகும். ஆனால், இப்பொழுது ஆளும் எல்.டி.எப் கூட்டுடன் இருக்கிறது. பிறகு, அக்கட்சி எப்படி-எவ்வாறு கத்தோலிக்க வன்முறை போராட்டத்தை ஆதரிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. சி.பி.ஐ(எம்)-பா.ஜ.க இணைப்பு என்பது அர்த்தமற்றது. துறைமுகம் வரவேண்டும் என்பது, ஆளும் மற்றும் மற்ற அரசியல் கட்சிகளின் விருப்பமும் ஆகும். எனவே, அதை எதிர்ப்பதாக யாரும் இல்லை. எனவே,, கத்தொலிக்க சர்ச் மட்டும் ஏன் எதிர்க்கிறது என்று கவனிக்க வேண்டியுள்ளது. பாதிக்கப் படும் மீனவர்கள் எப்படியும் இழப்பீடு பெரப் போகிறார்கள், மாற்று இடங்கள் கொடுக்கப் படப் போகிறது. பிறகு, இதில் சர்ச்சுக்ளுக்கு என்ன வருத்தம், பொறாமை என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

30-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிர்ஸ், கேரளா அதானி துறைமுகம்; பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவுகாவல் தாக்குதல், Written by WebDesk, November 28, 2022 10:56:07 am

[2] https://tamil.indianexpress.com/india/adani-kerala-seaport-cops-book-priests-police-station-attacked-549218/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.