Archive for the ‘பாவ காரியம்’ Category

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

மே 18, 2023

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

கத்தோலிக்கப் பையன் ஹிந்து பெண்ணை திருமணம் செய்ததை கத்தோலிக்கச் சர்ச் ஏற்ருக் கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே  கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது.  இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த  நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].  

கத்தோலிக்க போராளிகள் பெண்னியப் போராளிகள் வாய் திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி உடலை புதைக்க மறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு  முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர். 

தொடரும் மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது.  மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

போலீசார் சமரசத்திற்குப் பிறகு உடல் புதைக்கப் பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?

கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன,  பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2023


[1] இ.டிவி.பாரத், மதம் மாறி திருமணம் செய்த மகன்தந்தையின் சடலத்தை புதைக்க காலில் விழக் கூறிய ஊர்மக்கள், May 17, 2023, 07:09 PM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/christians-refused-to-bury-father-dead-body-since-his-son-married-inter-religious-at-theni/tamil-nadu20230517193953468468449

[3] மீடியான்.நியூஸ், ஹிந்து பெண்ணுடன் காதல் திருமணம்இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்து அராஜகம்!, Karthikeyan, Mediyaan News, 18 மே 2023 11:07 AM.

[4] https://mediyaan.com/theni-christian-youth-love-marriage-hindu-girl-objection-burial-dead-body/

[5] ஜீ.நியூஸ், தேனி: மகன் மதம் மாறியதால் தந்தையின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கல்லறை பொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-christians-refused-to-bury-dead-body-since-his-son-changed-his-religion-444804

[7] தினத்தந்தி, காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்..” இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்புசர்ச் விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம், By தந்தி டிவி, 18 மே 2023 8:07 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/if-you-fall-on-our-feet-we-will-allow-to-bury-objection-to-burial-of-the-dead-186876

[9] தினமாலை, தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!, By MALA RAJ Thu, 18 May 2023

[10] https://www.dinamaalai.com/news/the-son-who-converted-and-married-monsters-who-fell-on-his/cid10956003.htm

தர்மராஜ் ரசாலம் – பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ.. தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (1)

ஜனவரி 17, 2023

தர்மராஜ் ரசாலம்பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ..தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (1)

சி.எஸ்.ஐ.யின் தொடரும் ஊழல்கள்: தென்னிந்திய திருச்சபை (Church of South India, CSI) என்றாலே, சண்டை, சச்சரவு, அடிதடி, ஊழல், பணம் கையாடல், செக்ஸ், பாலியல், என்று பற்பல விவகாரங்கள் அடிக்கடி ஊடகங்களில் வெளிவந்து கொண்டே இருக்கும். அதற்கும் / எதற்கும் அவர்களும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு பேராயர், பிஷப், பாஸ்டர் என்ற நிலைகளில் உள்ளவர்கள், யாதாவது ஒரு வழியில், பணம் வருகிறது என்பதை அறிந்து, அதனை தொடர்ந்து பெற்றுவர, அனுபவிக்க, வழிமுறைகளை உண்டாக்கி, சந்தோஷமாக காலம் தள்ளி வருகின்றனர். மாட்டிக் கொள்ளும் வரை ஜல்ஸா தான். பிறகும், எப்படியாவது வழி கண்டு பிடித்து, பழைய ரூட்டில் செல்ல திட்டம் போடுகிறார்கள். இது கிட்டத் தட்ட, தமிழக இந்து அறநிலைய அதிகாரிகளின் திட்டம் போலவே இருக்கிறது. இதில் யாரும் வெட்கப் படுவதில்லை, இறைத் தொண்டு, கடவுள் சேவை என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.  கடவுள் சொத்து, இறைவன் பணம், என்றெல்லாமும் யோசிப்பதில்லை. கிடைக்கும் வரை, கொள்ளையடித்துச் சென்று விடலாம் என்று தான், வேலை செய்து வருகின்றனர். அரசியல் வாதிகளின் தொடர்புகள் இருப்பதால் தப்பிக்கவும் செய்கின்றனர்.

கேரளாவில் பதிவாகியுள்ளது அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது” சென்னை உயர் நீதிமன்றத்தில், தென்னிந்திய திருச்சபையின் ஆயர் மன்றத்தின் (சினாட் கவுன்சிலின்) உறுப்பினர்களான கேரளாவைச் சேர்ந்த சுனில்தாஸ், ஜெயராஜ் உட்பட பலர் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திருச்சபை என்பது பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டது[1]. இப்படி எல்லா வழக்குகளிலும், தாக்கல் செய்யப் படும் ஆவணங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அதற்கேற்ற படி மோசடிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த திருச்சபையின் தலைமை பேராயராக கேரளாவைச் சேர்ந்த தர்மராஜ் ரசாலம் [Dharmaraj Rasalam [2]] பதவி வகித்து வருகிறார்[3]. தென்னிந்திய திருச்சபைக்கு பல லட்ச கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையில் உள்ளன[4]. தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நூறு சதவீதம் அரசு உதவி பெறும் சுமார் 2 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வாகம் செய்வது இந்த திருச்சபைத்தான்[5]. இவ்வாறு அரசு உதவி பெறும் நிலையில், அரசு தொடர்புகளும் இணைந்து விடுவதால், கோடிக் கணக்கான அசையா சொத்துகள் மற்றும் அவற்றின் மூலம் வரும் வருவாயை அனுபவிக்க திட்டம் தீட்டி செயல்ப்ட்டு வருகின்றனர். தலைமை பேராயர் தர்மராஜ் ரசாலத்தின் மீது முறைகேடு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளது[6]. அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது[7]. இவைப் பற்றியெல்லாம், கேரள பத்திரிக்கைகளில் தாராளமாகவே செய்திகள், விவரங்களுடன் வெளி வந்துள்ளன.

மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஊழல்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள காரக்கோணம் பகுதியில் சி.எஸ்.ஐ சபைக்குட்பட்ட டாக்டர் சோமர்வேல் நினைவு சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி உள்ளது[8]. இந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்றுவிட்டு, சேர்க்கையில் இடம் கொடுக்கவில்லை என சர்ச்சை எழுந்தது[9]. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் வெல்லறடை, மியூசியம் ஆகிய காவல்நிலையங்களில் புகார் கொடுத்தனர்[10]. இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது[11]. இவர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிஷப் தர்மராஜ் ரசாலம் பெயர் இல்லை[12]. தங்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக்கொடுத்த பிஷப்பின் பெயரே குற்றப்பத்திரிகையில் இல்லாததைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்[13]. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல் பிஷப் மற்றும் சபை நிர்வாகிகள் சிலர் சபைக்குத் தெரியாமல் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் திருச்சபையில் இருந்தே புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை அமலாக்கத்துறை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது.

குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது; முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டே போலி சாதிச் சான்றிதழ் வினியோகித்து பிஷப் தர்மராஜ் ரசாலம் முறைகேடாக 11 மாணவர்களுக்கு, மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்தச் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டது. இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் ஒழுங்குமுறைக் குழுவை கல்லூரியில் நடக்கும் மாணவர் சேர்க்கைக் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ராஜேந்திர பாபு என்பவரது தலைமையில் விசாரித்த அந்தக்குழு, பிஷப் தர்மராஜ் ரசாலம் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது. இந்தக் கல்லூரியில் அதிகக் கல்விக் கட்டணம் செலுத்தியும், பணம் கட்டியும் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களில் அதிக அளவில் தமிழ் மாணவர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை சோதனையில் இறங்கியது.

அமலாக்கத்துறை சோதனை; திருவனந்தபுரத்தில் பிஷப் இல்லத்தை உள்ளடக்கிய எல்.எம்.எஸ் வளாகம், சபையின் செயலாளராக இருக்கும் ப்ரவீன் என்பவரது இல்லம், காரக்கோணத்தில் இருக்கும் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, கல்லூரி இயக்குநர் பெனட் ஆப்ரகாம் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பெனட் ஆபிரகாம் கடந்த 2014-ம் ஆண்டு, திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் சசி தரூரை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு, மிக மோசமாகத் தோற்றவர் ஆவார். சர்ச்சிற்குள் இவருக்கும் மற்றவர்களுக்கும் சண்டை-சச்சரவு இருந்து வந்துள்ளது[14]. முன்னதாக இதுதொடர்பாக கல்லூரி மாணவர்களின் கட்டணம் தொடர்பாக புகார் கொடுக்கும் கல்விக்கட்டண நிர்ணய குழுவிலும் மாணவர்கள் புகார் கொடுத்திருந்தனர். அப்போது சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியை உள்ளடக்கிய சி.எஸ்.ஐ சபையின் பிஷப் தர்மராஜ் பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்துள்ளார்[15]. “மடியில் கனம் இல்லாதவர், வழியில் ஏன் பயப்பட வேண்டும்”என்பது போல் தவறு செய்யவில்லை என்றால் பிஷப் ஏன் எழுதிக்கொடுக்க வேண்டும் என கிடுக்குப்பிடி போட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், இவ்வழக்கில் நேரில் ஆஜராக பிஷப் தர்மராஜ் ரசாலத்திற்கு சம்மன் அனுப்பும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர்[16]. இதனிடையே மத நிகழ்ச்சி ஒன்றிற்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் பிஷப். அதற்கு முன் சம்மனை அனுப்பி கிடுக்குப்பிடி போடும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை[17]. ஜூலை 2022ல் இங்கிலாந்திற்கு ஓடிவிடலாம் என்று விமானநிலையத்திற்கு சென்றபோது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டு திரும்ப கொண்டு வரப்பட்டார்[18].

© வேதபிரகாஷ்

16-01-2023


[1] தமிழ்.இந்து, தென்னிந்திய திருச்சபை தலைமைப் பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்: முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை, ஆர்.பாலசரவணக்குமார், Published : 13 Jan 2023 07:20 PM, Last Updated : 13 Jan 2023 07:20 PM

[2] Dharmaraj Rasalam is a bishop in the Church of South India: he has been Bishop of South Kerala since 2011 and Moderator of the Church of South India since 2020. Rasalam was born in 1956 at Venganoor and educated at the University of Kerala. He was ordained in 1987. Since 2012, he has been implicated in various civil and criminal cases attributed to financial irregularities and abuse of power.

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/929008-election-for-posts-including-archdiocese-of-church-of-south-india-hc-interim-stay-on-declaring-results.html

[4] தினத்தந்தி, தென்னிந்திய திருச்சபை தேர்தல் முடிவை வெளியிட தடைஐகோர்ட்டு உத்தரவு, ஜனவரி 14, 4:52 am

[5] https://www.dailythanthi.com/news/state/prohibition-on-publication-of-south-indian-church-election-results-court-orders-878636

[6] காமதேனு, தேர்தல் நடத்தலாம், முடிவை வெளியிடக் கூடாது: தென்னிந்திய திருச்சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு, Updated on: 13 Jan, 2023, 8:10 pm

[7] https://kamadenu.hindutamil.in/national/madras-high-court-bans-declaration-of-south-indian-church-election-results

[8] காமதேனு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுதமிழக மாணவர்களிடம் வசூல் வேட்டை: கேரள பிஷப்க்கு அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி, என்.சுவாமிநாதன், Updated on : , 26 Jul, 2022, 12:25 pm

[9] https://kamadenu.hindutamil.in/national/kerala-bishop-accused-of-malpractice-in-medical-student-admissions

[10] தினத்தந்தி, மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார்: பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை, ஜூலை 27, 6:49 am .

[11] https://www.dailythanthi.com/News/India/complaint-about-collecting-donations-for-medical-studies-bishop-dharmaraj-rasalam-banned-from-traveling-abroad-755097

[12] தினமலர், மருத்துவக்கல்லுாரி நன்கொடை விவகாரம் சி.எஸ்.., பிஷப் வெளிநாடு செல்ல தடை, Added : ஜூலை 29, 2022  01:10

[13] https://www.dinamalar.com/news_detail.asp?id=3087430

[14] Kerala High Court – Rev. Bishop Dharmaraja Rasalam vs Rev. Dr. T.B Premjith Kumar, IN THE HIGH COURT OF KERALA AT ERNAKULAM,  PRESENT:  THE HONOURABLE MR. JUSTICE K.ABRAHAM MATHEW, FRIDAY ,THE 30TH DAY OF OCTOBER 2015/8TH KARTHIKA, 1937, OP(C).No. 2179 of 2015 (O),  OS 1065/2013 OF MUNSIFF COURT,THIRUVANANTHAPURAM.

https://indiankanoon.org/doc/167311449/?type=print

[15] Two years ago, the Kerala High Court cancelled the admission of 11 medical students enrolled on the basis of fake community certificates issued by the Bishop. In 2019, Kerala’s state admission fee regulatory committee also found that the college accepted exorbitant fees from some NRI students.

Hindusthan Times, Day after ED raids, Bishop Rasalam reaches airport for UK visit; turned back, India News, Published on Jul 26, 2022 03:21 PM IST.

[16] Later, some students from Tamil Nadu also filed a cheating complaint, alleging that they had to pay a huge amount to the college management for MBBS seats.

https://www.hindustantimes.com/india-news/day-after-ed-raids-bishop-rasalam-reaches-airport-for-uk-visit-turned-back-101658829073912.html

[17] The Hindu, Emigration officials at the Thiruvananthapuram airport prevent CSI bishop from leaving for UK, G ANAND, July 26, 2022 11:37 am | Updated 05:49 pm IST – Thiruvananthapuram

[18] https://www.thehindu.com/news/national/kerala/emigration-officials-at-the-thiruvananthapuram-airport-prevent-csi-bishop-from-leaving-for-uk/article65684345.ece

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை:  பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் நீர் நிலைகளை சரி செய்ய ரூ.3000 கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் தற்போது விரைவாக மீட்புப் பணிகள் நடைபெறுகிறது என்றால் கடந்த ஐந்து மாதத்தில் திமுக அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் தேர்தலுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட 3000 கோடி ரூபாய் சென்னையில் எங்கு செலவழிக்கப்பட்டது. பீட்டர் அல்போன்ஸ் பேட்டிசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருப்பதால், ஆணையம் விசாரணையை தொடரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை. பொதுவாக எந்த மதங்களிலும் புறம்போக்கு இடங்களில் தேவாலயங்களையும், வழிபாட்டுக் கூடங்களையும் அமைக்காதீர்கள். புறம்போக்கு இடத்தில் கட்டி விட்டு அனுமதி கேட்கும்போது, அரசால் அனுமதி கொடுக்க முடியாது. பட்டா இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதாக இருந்தால், அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து அளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். இனி, எஸ்ரா சற்குணம் பற்றி கவனிப்போம்.

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை சொல்வது எஸ்ரா சற்குணம்!: சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை,” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்! கருணாநிதி நூறான்டுகள் வாழ்வார் என்று நற்செய்தியாக, தீர்க்கதரிசனம் சொன்னவர்.

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்!: திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்[4]. திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது! ஆக, எஸ்ரா சற்குணம் 1974ல் சொல்லிய திட்டத்தை வைத்துக் கொண்டு தான் 50 ஆண்டுகளாக கிருத்துவர்கள் இத்தகைய நில ஆக்கிரமிப்பு, புறம்போக்கு நிலத்தை அபகரித்தல், சர்ச் கட்டுதல், பிறகு பட்டா வாங்குதல், முதலியன நடந்து வருகின்றன. பீட்டர் அல்போன்ஸும், நாஜுக்காக, “திராவிடியன் மாடல்,” எறு சொல்லியிருக்கிறார், ஆகவே, அட்த்தகைய சட்டமீறல்கள் எல்லாமே ஒழுங்குப் படுத்தப் படும். இடிக்கப் பட்ட கோவில்கள் அம்பேல், இந்து நம்பிக்கையாளர்கள் முட்டாள்கள்!

இந்துவிரோதி எஸ்டா சற்குணத்தின் பேச்சு ஜூன் 2029: ஜூன் 2019ல் மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்[5], கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 16-ந் தேதி 2019 அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். பிறகு என்னவாயிற்று என்று யாரும் கவலைப்படுவதில்லை, மன்னிப்பு கேட்டார், என்று வழக்கு முடிக்கப் பட்டிருக்கும். ஆனால், தூஷணங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.

கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது பொன்றிருந்த கூட்டம்: தமிழகத்தில் சிறுபான்மையினர் / மைனாரிடி என்றால் துலுக்கர் மற்றும் கிருத்துவர் என்றுதான் உள்ளனர் போலும். ஜெயின், பௌத்தர், பார்சி என்றெல்லாம் இருந்தாலும், அவர்கள் உறுப்பினர்கள் இருந்தாலும், கூட்டத்தில் பங்கு கொண்டாலும், அவர்கள் பிரச்சினை, அவர்கள் நலன், அவர்கள் பேசியது பற்றி செய்திகளில் ஒன்றையும் காணோம். ஏதோ, சர்ச்சுகளை எப்படி கட்டுவது, நிலத்தை எப்படி வாங்குவது, சட்டப்படி ஸ்வீகாரம் செய்து கொள்வது, பட்டா பெறுவது, கட்டிய சர்ச்சை சட்டப் படி முறைப் படுத்துவது, அதற்கு முதலமைச்சர் ஆணை பிறப்பிப்பார் என்பது…… என்று தான் “அறிவுரை” ஆலோசனையாக இருந்ததே தவிர, கண்டிப்பாக, சட்டப் படி நடவடிக்கை எடுப்பதாக இல்லை. ஆகவே, இது ஏதோ கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது போன்றிருந்தது. 1974ல் எஸ்றா சற்குணம் குறிப்பிட்டதற்கும், இப்பொழுது 2022ல் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட மாடல், பெரியாரிஸ போதையில், இந்துவிரோதத்துடன் ஊறி நன்றாகவே வேலை செய்கிறது போலும்!

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1]  M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

[4] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்து மதம் குறித்து அவதூறு பேச்சு ! மத போதகர் எஸ்றா சற்குணம் மீது வழக்குப் பதிவு !!, Last Updated Jun 21, 2019, 9:40 PM IST

https://tamil.asianetnews.com/politics/esra-srgunam-case-file-ptgi8u

ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?

மார்ச் 22, 2022

ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?

நசரேத் சிஎஸ்ஐ சர்ச் பிரச்சினைகளுக்கும், வழக்குகளுக்கும் சளைத்தது அல்ல: நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் பிரச்சினை நடந்து முடிந்து விட்ட நிலையில், இப்பொழுது “குமுதம் ரிப்போர்ட்டர்” செய்தி-கட்டுரை வெளியிட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[1]. குளோபல் மிஷனரி சொசைடி நடத்தி வருவதாகவும், அதில் பிரச்சினையுள்ளதாகவும் எஸ்.அண்ணாதுரை நிருபர் விளக்குகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கீதா ஜீவன் மூலம், கனிமொழி உதவியுடன் பிரச்சினையை சுமுகமாக்கி விட்டது போலிருக்கிறது. பிஷப்பும் ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிதி கொடுப்பது போல சந்தித்தாகி விட்டது. ஆக தேவசஹாயமும், சஹாயமாகி விட்டார், சமரசமாகி விட்டார் போலும். பல கோடிகள் சொத்துக்கள் உள்ள சிஎஸ்ஐ மற்றும் அதன் பிஷப்புகள், பாதிரிகள், அதிகாரிகள் கோர்ட்டுகளிலும், வெளியிலும் அடித்துக் கொள்வது புதியதல்ல. நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றில் பற்பல பிரச்சினைகள் வெளி வந்துள்ளன. நசரேத் சிஎஸ்ஐ சர்ச் எதற்கும் கவலைப்படுவதாக இல்லை.

குடும்பப் பிரச்சினை சர்ச் பிரச்சினை ஆகலாம்: நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், திருமண்டல பேராயரின் துணைவியார் சாந்தினிதேவசகாயம், திருமண்டல உபதலைவர் தேவராஜ் ஞானசிங், குருத்துவ காரியதரிசி மோசஸ் ஜெபராஜ், திருமண்டல ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், திருமண்டல சமூக நலத்துறை இயக்குநர் மைக்கேல்ராஜ், பாலியர் நண்பன் இயக்குநர் கிளாட்சன், வாலிபர் ஐக்கிய சங்க இயக்குநர் ஜான்சன், ஜிஎம்எஸ் செயலாளர் டேனியல், குருமார்கள் கோல்டுவின், தாமஸ், லூர்துராஜ்,  ஆல்வின், ரவி, நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ்,  ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முன்னாள் தாளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மாமல்லன், ஆண்ட்ரூஸ், பில்லிகிராம்,  மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லயன் புஷ்பராஜ் மற்றும் திருமண்டல குருமார்கள், பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள்.

நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் மிகவும் பரபரப்புடன் நடந்தது: தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு 2021-ல் நடைபெறும் தேர்தல் குறித்து மகாகனம் பேராயர் தேவசகாயம் அவர்களால் தேர்தல் கால ஒழுங்கு முறைகள் வெளியிடப்பட்டு கடந்த ஜுன் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 20ம் தேதி 2021 அன்று நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நிர்வாகஸ்தர் தேர்தலோடு நிறைவு பெற்றது[2]. இந்த தேர்தலில் டி.எஸ்.எப். அணி மற்றும் எஸ்டிகே ராஜன் அணி என இரண்டு அணிகளாக போட்டியிட்டனர்[3]. தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் இருந்து முதல் கட்டம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பொழுது பல்வேறு குளறுபடிகள் குழப்பங்கள் என புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் சேகரத்தின் முக்கிய ஆவணமான ‘சபை டாப்’ திருத்தப்பட்டதாக வந்தப் புகார்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் போன்ற பிரச்சினைகளால் கொதித்தெழுந்த சபையார் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது[4].

வெற்றி பெற்றப் பிறகும் தொடர்ந்த பிரச்சினைகள்: டிஎஸ்எப் அணியில் போட்டியிட்ட லே செயலாளர் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உபதலைவர் அருட்திரு தமிழ்செல்வன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்டக் ஆகிய அனைவரும் வெற்றிபெற்றதாக பேராயரே அறிவித்து, அவர்களுக்கு ஜெபித்து ஆசியும் வழங்கியதாக, வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்ட பலர் தெரிவித்தனர்[5]. 21.10.2021 அன்று செயற்குழுவை கூட்டி பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கூறிச் சென்ற பேராயர் தேவசகாயம் திடீரென தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி அன்றைய தினமே (21.10.2021) நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்[6]. பேராயர் தேவசகாயம் தனது அலுவலகத்திற்கோ, இல்லத்திற்கோ வராமல் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தில் வைத்து கடந்த 23.10.2021 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து, வருகிற 1.11.2021 அன்று மறுதேர்தல் நடக்க இருப்பதாக தெரிவித்து, பத்திரிகையில் விளம்பரமாக பொதுஅறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்[7].

போலீஸார் வந்து சமரசம் செய்து வைத்தது: வெற்றிபெற்றவர்கள் பதவியேற்பதற்காக தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. பேராயர் தேவசகாயமும் அங்குஇல்லாததால் ஏமாற்றமடைந்த நிர்வாகிகள், அலுவலக வாசலில்அமர்ந்திருந்த பிரதம பேராயரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம் அலுவலகத்தை திறக்குமாறுகூறினர். அதற்கு அவர், பேராயர் வந்தால் தான் திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எதிரணியினரும் அங்கு வந்தனர். இரு அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்[8]. பின்னர், நாசரேத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டியை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து போலீஸார் சீல் வைத்தனர்[9].

போலீஸாரையே மதிக்காத சர்ச் விசுவாசிகள்: பின்னர், அனைவரையும் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் தாங்கள் பதவியேற்க வேண்டும் என்று கூறி வெளியில் செல்ல மறுத்தனர். அவர்கள் தவிர மற்றவர்களை போலீஸார் வெளியேற்றினர். புதிய நிர்வாகிகள் அங்கிருந்த அறையில் மாலைவரை அமர்ந்திருந்தனர். லே செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் நிருபர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் எங்கள் அணி முழுமையாக வெற்றிபெற்றது. இதனால், தேவையில்லாத குற்றசாட்டுகளை கூறுகின்றனர். பேராயரை கூட மாலை வரை வரவிடாமல் செய்து விட்டனர். அவர் வராததால் விதிப்படி உபதலைவர் முன்னிலையில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தினோம்” என்று கூறினார்.

©  வேதபிரகாஷ்

22-03-2022


[1]  குமுதம் ரிப்போர்ட்டர், ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்?, மார்ச்.11-03-2022, பக்கங்கள்.28-29.

[2] Policeseithitv, பிரதம பேராயரின் உத்தரவை மதித்த தூத்துக்குடிநாசரேத் திருமண்டல குருமார்கள், by policeseithitv  October 30, 2021

policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!, by policeseithitv  October 31, 2021

Onetamil News, தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு, லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மகிழ்ச்சி ,  Oct 31, 2021

http://www.onetamilnews.com/News/thoothukudi-nazareth-csi-bishop-devasakayam-new-executi

[3] https://policeseithi.com/?p=8324

[4] policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!, by policeseithitv  October 31, 2021

[5] https://policeseithi.com/?p=8327

[6] Onetamil News, தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு, லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மகிழ்ச்சி ,  Oct 31, 2021

[7] http://www.onetamilnews.com/News/thoothukudi-nazareth-csi-bishop-devasakayam-new-executi

[8] தமிழ்.இந்து, தூத்துக்குடிநாசரேத் திருமண்டல தேர்தல்புதிய நிர்வாகிகள் பதவியேற்க சென்றபோது அலுவலகம் பூட்டு : இரு தரப்பினர் இடையே வாக்குவாதம், செய்திப்பிரிவு, Published : 22 Oct 2021 03:07 AM; Last Updated : 22 Oct 2021 03:07 AM.

[9] https://www.hindutamil.in/news/todays-paper/regional02/728923–1.html

லாவண்யா தற்கொலை வழக்கு – ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

பிப்ரவரி 10, 2022

லாவண்யா தற்கொலை வழக்கு ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள்: ஊடகங்களின் பாரபட்சம், இரட்டை வேடங்கள், ஜார்னலிஸ்டி எதிக்ஸ் (Journalistic ethics) இல்லாமை, பத்திரிகா தர்மத்தை குழித் தோண்டி புதைத்த தன்மை, எழுத்து ஒழுக்கம் இல்லாமை,  நிருபர்-தனத்தில்-தோய்வு-அடிமைத்தனம் இப்படி பலவற்றை இப்பொழுது காண முடிகிறது.  நீதிமன்ற தீர்ப்புகளை குழப்பும் வகையில், செய்திகளை ஒருதலைப் பட்சமாக வெளியிட்டு, அழுத்தம் கொடுக்கவும் செயல் பட்டு வருகின்றன. கைது என்றால் உடனடியாக ஜாமீன் என்று கைது செய்யப் பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வந்து விடுகிறார்கள். முன்னர், கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகள், சிக்க வைக்கப் பட்டனர் என்பது போல செய்திகளும் வரச்செய்கிறார்கள். இல்லை, அது சாதகமாக இருக்காது என்றால் அமைதியாக, முன் ஜாமீன் மனு போட்டு, வெளியே கொணர்ந்து, புகார் கொடுத்தவர்களுடன் பேரம் பேசி, வழக்கை வாபஸ் வாங்குதல், தொட்ந்து நடத்தாமல் விட்டு விடுதல், கிடப்பில் கிடக்குமாறு அழுத்தம் கொண்டு வருதல் போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

லாவண்யா, லாவண்யா குடும்பத்தினரின் முகங்களை பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது: மாணவியின் மரணம் தொடர்பாக 62 வயதான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். லாவண்யா வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி  மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்[1]. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[2]. ஆனால், ஊடகங்கள், இது வரை அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை. மற்ற வழக்குகளில், கூட்டமாக முன்னரே வளாகத்தில், தெருக்களில் கேமரா, வீடியோ, சகிதம் நின்று காத்துக் கிடப்பார்கள். துரத்திச் சென்று கேள்வி கேட்பாகள், புகைப் படம் எடுப்பார்கள். ஆனால், இவ்வழக்கில், ஒருதலை பட்சமாகவே செயல்பட்டு வருகிறார்கள். லாவண்யா, லாவண்யா அப்பா-அம்மா, சித்தி, தாத்தா-பாட்டி, மாமா என்று எல்லோருடைய முகங்களையும் பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது.

ஜெனின் சகாய மேரி, ஹாஸ்டல் வார்டன் 07-02-2022 அன்று பிணையில் வெளியே வந்தார்: இவர் ஜனவரி 21ம் தேதி கைது செய்யப் பட்டார். சிறையில் உள்ள விடுதிக் காப்பாளர் சார்பில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, தஞ்சையில் உள்ள நீதிமன்றத்தில் விண்ணப் பித்து தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்திருந்தார்[3].  இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார்[4]. வழக்கம் போல, இவர் வயதானவர், வீடியோ ஆதாரத்தின் மீது கைது செய்யப் பட்டுள்ளார், அதன் உண்மைத் தன்மை அறியப் படவேண்டியுள்ளது, இவரை ஜாமீனில் வெளியே விட்டால், இவர் சாட்சியங்களை ஒன்று செய்ய மாட்டார், அதற்கான பிணையும் கொடுக்கப் பட்டுள்ளது, என்றெல்லாம் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதன் மீது திங்கள்கிழமை 07-02-2022 அன்று நடைபெற்ற விசா ரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூதனன் ஜாமீன் வழங்கினார்[5]. வக்கீல் ஜெயச்சந்திரன் மூலம் மனு தாக்கல் செய்யப் பட்டது[6]. ஜெனின் சகாய மேரி என்று குறிப்பிடுவது திமுக ஊடகங்கள், அந்த அளவுக்கு விவரங்கள் தெரியும் போலிருக்கிறது.

பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி: இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் என பெற்றோர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[7]ராக, இதெல்லாம் அவர்களுக்கு அத்துப் படி என்று தெரிகிறது. இதே நேர்த்தில், அந்த கேரளா பிஷப்பும் ஜாமீனுக்கு மனு போட்டுள்ளார். அந்த அளவுக்கு வேகமாக வேலை செய்கின்றன. நீதிமன்றங்களும், இருக்கின்ற எல்லா முக்கிய வழக்குகளையும் விட்டுவிட்டு, இவற்றை எடுத்து உடனடியாக விசாரிக்கின்றன. இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ராக்கேல்மேரிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது[8].

ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)[9]: பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும்[10]. குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.

பச்ச முத்து பாரி வேந்தர் ஆனது போல, அவரது ஊடகங்களும் மாறியுள்ளன: ஒரு பக்கம் அரசியலாக்கப் படுகிறது என்று திமுக ஊடகங்கள் பிஜேபியைக் குற்றஞ்சாட்டுகின்றன[11]. கலைஞர் டிவி, முரசொலி என்று வெளுத்து வாங்குகின்றன. இன்னொரு புறம், இதுவரை தெரியாத ஊடகங்கள் கிளம்பியுள்ளன[12]. லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், மாணவியின் பூப்படைதல் சடங்கு இந்து முறைப்படி நடந்ததாக சாட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[13]. மேலும், மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக ஒரு தரப்பினரால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட விடுதி வார்டன் சகாய மேரியே அந்த சடங்கை ஊர் மக்கள் சிலரது உதவியுடன் நடத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் பிரபல செய்தி நிறுவனமான ‘த ஃபெடெரல்’ இடம் தெரிவித்துள்ளனர்[14].  அந்த வகையில் சிறுமி லாவண்யாவுக்கு வார்டன் சகாய மேரி சடங்கு ஏற்பாடு செய்தது இருவருக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது” என பவுலின் கூறினார்[15]. மேலும், லாவண்யாவுக்காக சகோதரி சகாய மேரி நடத்திய பூப்படைதல் சடங்குக்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளதாக ‘த ஃபெடெரல்’ வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது[16]. இதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. உள்கலாச்சாரமயமாக்கல் என்ற திட்டத்துடன் செயல்படும் வாடிகன், வாடிகன் அடிவருடி சர்ச்சுகள், இந்தியாவில்-தமிழகத்தில் வேடம் போடும் கூட்டங்கள் பல காரியங்களை, இந்துமுறைப்படித் தான் செய்து வருகின்றன.

© வேதபிரகாஷ்

09-02-2022


[1] தினத்தந்தி, கைதான விடுதி பெண் வார்டனுக்கு தஞ்சை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது, பதிவு: பிப்ரவரி 08,  2022 03:13 AM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/02/08031304/bail-for-hostel-warden.vpf

[3] தீக்கதிர், மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் காப்பாளருக்கு ஜாமீன், நமது நிருபர் பிப்ரவரி 8, 2022.

[4]https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/in-the-case-of-student-suicide-bail-for-the-caretaker-of-the-inn

[5]விகடன், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: விடுதி வார்டனுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு, கே.குணசீலன், Published: 09-02-2022, at 7 AM; Updated: 09-02-2022 at 7 AM.

[6] https://www.vikatan.com/news/crime/in-student-suicide-case-court-granted-bail-to-the-hostel-warden

[7] தமிழ்.ஏபிபி.நியூஸ், தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் வார்டன் சகாயமேரிக்கு ஜாமீன், By: சிஎஸ் ஆறுமுகம், தஞ்சாவூர் | Updated : 08 Feb 2022 12:15 PM (IST).

[8]  https://tamil.abplive.com/news/thanjavur/hostel-warden-sakayamari-granted-bail-in-thanjavur-student-suicide-case-39078

[9] விகாஷ்பீடியா, ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)

[10] https://ta.vikaspedia.in/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/b95bc1b9fbbfbaeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b9abc7bb5bc8b95bb3bcd/b9cbbebaebc0ba9bcd-bail-baebc1ba9bcd-b9cbbebaebc0ba9bcd-anticipatory-bail

[11] கலைஞர் செய்தி, அண்ணாமலையின் அசிங்க அரசியல்.. பா... அரசியல் செய்ய மாணவி மரணம்தான் கிடைத்ததா?” : முரசொலி கடும் தாக்கு!, Lenin, Updated on : 28 January 2022, 08:56 AM

[12] https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2022/01/28/murasoli-editorial-questions-bjp-for-politicizing-student-death

[13] சமயம், தஞ்சை மாணவி: விடுதியில் இந்து முறைப்படி நடந்த பூப்படைதல் சடங்கு! எங்கே பிழை..?, Divakar M | Samayam TamilUpdated: 8 Feb 2022, 1:22 pm

[14] https://tamil.samayam.com/latest-news/crime/more-important-information-has-come-out-in-the-lavanya-suicide-case/articleshow/89425114.cms

[15] The Federal, Warden performed puberty rituals of TN teen as per Hindu customs: witnesses, Prabhakar Tamilarasu, 4:34 PM, 7 February, 2022Updated 5:37 PM, 7 February, 2022

[16] The Federal is a digital platform disseminating news, analysis and commentary. It seeks to look at India from the perspective of the states. We are a division of New Generation Media Private Limited. https://thefederal.com/states/south/tamil-nadu/warden-performed-puberty-rituals-of-tn-teen-as-per-hindu-customs-witnesses/

கடவுளின் தேசமான கேரளா, தமிழக ஆற்று மணலைத் திருடுவது ஏன்? மெத்தப் படித்தவர்கள் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவதேன்? (2)

பிப்ரவரி 9, 2022

கடவுளின் தேசமான கேரளா, தமிழக ஆற்று மணலைத் திருடுவது ஏன்? மெத்தப் படித்தவர்கள் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவதேன்? (2)

ஜூலை 2021ல் மனு தாக்கல் செய்யப் பட்டது: சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க மணல் குவாரிகள், மணல் சேகரிப்பு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான வாய்ப்புகளை அதிகாரிகள் ஆராய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. நெல்லை அம்பை அருகே பொட்டலைச் சேர்ந்த வி.கிறிஸ்டி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு[2]: ”பொட்டல் கிராமத்தில் எம் சாண்ட் என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளப்பட்டு கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் ஆற்று மணல் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீஸார் உதவியுடன் இந்த சட்டவிரோதச் செயலில் பூமி எம் சாண்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் 14.3.2020-ல் புகார் அளித்தோம். இருப்பினும் பூமி எம் சாண்ட் நிறுவனம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். கிராம மக்கள் அளித்த புகார் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி போலீஸார் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர், பால்ராஜ், சங்கரநாராயணன் லெட்சுமணன் ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களுக்கும் மணல் கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பூமி எம் சாண்ட் நிறுவன உரிமையாளரைத் தப்பிக்க வைக்க இவர்களைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி உத்தரவு: இதேபோல் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கர், ”வண்டால ஓடை அணை அருகே கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவருக்கு எம் சாண்ட் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஓடை அணைப் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளி வருகிறார். தினமும் சுமார் 300 லாரி வரை மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. அணை பலம் இழந்து வருகிறது. எனவே சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளுவதைத் தடுக்கவும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுத்தாக்கல் செய்தார். இவ்விரு மனுக்களையும் விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: ”மணல் சேகரிப்பு மையம் நடத்த மனுவேல் ஜார்ஜுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துள்ளார். இது தொடர்பாக மனுவேல் உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 243 அரசு ஹாலோ கிராம், அதிகாரிகள் கையெழுத்து இல்லாத போக்குவரத்து அனுமதிச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றவாளிகளிடம் இருந்து சட்டவிரோத மணல் கடத்தலுக்காக அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய பதிவேடு கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து விசாரிக்கவில்லை. கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் சரியாக விசாரணை நடத்தியுள்ளார். இருப்பினும் இந்த வழக்கில் வருவாய், வேளாண், கனிமவளத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளது. இதனால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது”.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு காரணமாக அபரிமிதமாக மணல் விலை உயர்ந்துள்ளது: தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்[3]. விருதுநகரில் வெம்பக்கோட்டை அணையிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு பகுதியில் அயல்ராஜாபட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிளில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது திருட்டு மணலுக்கு அரசு கெடுபிடி செய்வதால் அரசு குவாரிகளில் மணல் விற்பனை அதிகரித்து வருகிறது[4]. அரசு குவாரிகளில் இரண்டு யூனிட் மணல் ரூ.660 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் இரண்டு யூனிட் மணல் 14ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தூரங்களுக்கு தகுந்தாற் போல் டீசல் செலவு சேர்த்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு பலர் பணிகளை நிறுத்தியுள்ளனர். அரசு குவாரிகளில் மணல் வாங்குவதற்கு உள்ளூர்காரர்களுக்கும், வெளியூர்காரர்களுக்கும் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள மண் வளத்தை கேரள மாநிலம் கொள்ளையடித்து கொண்டிருக்கிறது: பல அரசு குவாரிகளில் உள்ளூர் லாரிகளுக்கு காலை 6 முதல் 11 மணி வரையிலும், மற்ற நேரங்களில் வெளியூர் லாரிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. தேவை அதிகம் உள்ள நிலையில் வெளி மாநிலமான கேரளாவுக்கு அதிகம் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மண் வளத்தை கேரள மாநிலம் கொள்ளையடித்து கொண்டிருக்கிறது. வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதிக்க வேண்டும். கணபதிராமன், தூத்துக்குடி மாவட்ட விவசாய சங்க தலைவர்: உள்ளூரில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. அரசு குவாரிகளில் மணல் விதி முறைகளுக்கு மீறி எடுத்து வருகின்றனர். வைப்பாறு பகுதியில் மூன்று இடங்களில் அரசு குவாரி அனுமதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திற்கு மணல் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்: இதில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. கேரள மாநிலத்திற்கு மணல் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். அரசு குவாரிகளை குறைத்து விதிகளுக்குட்பட்டு மணல் எடுப்பதை குழு நியமித்து கண்காணிக்க வேண்டும். பாறைகளை உடைத்து மணலாக்கி கட்டுமான பணிகள் செய்யும் புதிய தொழில் நுட்பத்தை அரசு கடைபிடிக்க வேண்டும். திருவேங்கட ராமானுஜம், சிவகாசி பாசன சங்க தலைவர்: வெம்பக்கோட்டை அரசு குவாரியில் உள்ளூர், வெளியூர் லாரிகளுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்து மணல் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதிக்க வேண்டும்.

தமிழக எல்லைகள் மூலம் கேரளாவுக்கு மணல் தொடர்ச்சியாகக் கடத்தப் படுகிறது: கேரளாவுக்கு கன்னியாகுமரி மற்றும் கரூர் எல்லைகள் மூலம், தொடர்ச்சியாக ஆற்று மணல், கேரளாவுக்குக் கடத்தப் பட்டு வருகின்றது. இது பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. இப்பொழுது, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பொது மக்களும், இந்த மணல் திருட்டைத் தடுத்து வருகிற்ர்கள். இருப்பினும், அரசு அதிகாரிகள். அவர்களது அரசியல் பலம், கோடிகளில் பணப்புழக்கம் என்றெல்லாம் வரும் போது, கண்ணை மூடிக் கொள்கின்றனர். நூற்றுக்கணக்கான லாரிகள் ஆற்று மணலுடன் எல்லைகளைக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றன. நியாயம், தர்மம், நீதி, சட்டம், ஒழ்க்கம் எல்லாம் இதில் யாரும் பார்ப்படில்லை. அதனால் தான், பிஷப்பே கைதாகியுள்ளார். ஆனால், கேரளாவில் அதுவும் சகஜமாகி விட்டது. அபயா கொலை, மூலக்கல் கற்பழிப்பு என்ற பல வழக்குகளில் பிஷப்புகள் சிக்கியுள்ளனர். நிதி மோசடி விவகாரங்களில், ஒரு கார்டினலே சிக்கியுள்ளார்.

© வேதபிரகாஷ்

09-02-2022


[1] தமிழ்.இந்து, சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க குவாரிகளில் சிசிடிவி கேமரா: உயர் நீதிமன்றம் உத்தரவு, கி.மகாராஜன், Published : 21 Jul 2021 16:52 pm; Updated : 21 Jul 2021 16:52 pm.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/695652-cctv-camera-in-quarries-to-prevent-illegal-sand-smuggling-high-court-order.html

[3] தினமலர், கேரளாவுக்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதிக்க வேண்டும், Added : ஜூன் 19, 2011  23:22

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=260534&Print=1

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜார்ஜ் பொன்னையா கடுமையாக, கொடூர, குரூர வார்த்தைகளினால் திட்டி சாடியது: கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: “அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை. மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை[1]; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை[2]. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை. பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டு மிதிக்கிறோம்,” இவ்வாறு பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய மோசமான-குரூர கருத்துகளை தெரிவித்தார். ஆனால், இப்பொழுது, அவற்றிற்கு பாவ மன்னிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

 பிஷப் போல பாஸ்டருக்கே பாவ மன்னிப்புக் கொடுக்கப் பட்ட நிலை: ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த வழக்கில், ‘கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என உறுதியாக நம்புகிறேன்’ என்ற கருத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது[3]. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது[4]. பின்னர், பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், முறையாக போலீஸ் அனுமதி பெற்று கூட்டம்நடந்தது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகள் தவறான புரிதலைஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாதுஇந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களைப் போல் இல்லை. மத பதற்றமான பகுதியாகும். அங்குநிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.மத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசக் கூடாது. அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அதாவது அம்பேத்கர் இந்து மதத்தைக் கொடுமையாக, கடுமையாக விமர்சித்துள்ளார்.

பூமிமாதா, பூமாதேவி, பாரத்மாதா எல்லாம் வேறுவேறு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: இந்த தேசத்தில் பூமி, ‘பூமா தேவி’ என வணங்கப்படுகிறது. அவள் தெய்வீகத்தின் துணையாக பார்க்கப்படுகிறாள். தேசம், அன்னை தெய்வத்திற்கு சமமானது. அவள் காவி உடை அணிந்து, புத்தகம், நெற்கதிர்கள், வெள்ளைத் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை நான்கு கைகளில் ஏந்தியிருக்கிறாள். தேசத்தந்தை மகாத்மா காந்தி, 1936ல் வாரணாசியில் பாரத மாதா கோவிலை திறந்து வைத்தார். நாடு முழுதும் பல ஹிந்து கோவில்களின் வளாகத்தில் பாரதமாதா ஒரு தெய்வமாக நிறுவப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எசக்கியம்மன் தேவி கோவில் வளாகத்திலும் காணப்படுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பப்பாரபட்டியில் அத்தகைய ஒரு கோவிலை எழுப்ப விரும்பினார். அந்நுாற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்றுஆனால், பொன்னையா தொற்றை எல்லாம் பரப்பவில்லை: பூமி அன்னைக்கு மரியாதை செலுத்தி, வெறுங்கால்களுடன் நடப்பவர்களை மனுதாரர் கேலி செய்துள்ளார். பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்று மற்றும் அழுக்கு படிந்திருப்பதாக சித்தரித்துள்ளார். மனுதாரர், ஹிந்து சமூகத்தை ஒரு இலக்காகக் கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார். பழைய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள பல கோவில்களில், ஆண் பக்தர்கள் மேலாடை அணியாமல் நுழைய வேண்டும். பாரம்பரியமான வேஷ்டியை அணிந்து, ஒரு துண்டால் உடலை சுற்றிக் கொள்கின்றனர். இப்பாரம்பரிய நடைமுறையை மனுதாரர் கேலி செய்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. அரசியலமைப்பின் புனிதத்தை நிலைநிறுத்த மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், மத அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது–  தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளதுஅதனால், வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன்: ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில், மனுதாரர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாகவும், தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும் கூற முடியாது. யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிந்தது பொருந்தும் வகையில் இல்லை. அப்பிரிவுகளில் வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் கோரிக்கை பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார்[5]: பால் ஜான்சனின் ‘ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும்[6]. அவர், ‘பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்[7]. நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்[8].

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] தினகரன், கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து: ஐகோர்ட் கிளை ஆணை, 2022-01-07@ 17:19:34. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[3] தமிழ்.இந்து, குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு: 4 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு, கி.மகாராஜன், Published : 09 Jan 2022 08:56 AM, Last Updated : 09 Jan 2022 08:56 AM. https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[5] தினமலர், கிறிஸ்துவத்திற்கு மாறான செயலுக்காக பாதிரியாரை கடவுள் கண்டிப்பார்: ஐகோர்ட்,  Updated : ஜன 08, 2022  06:48 |  Added : ஜன 08, 2022  06:37.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2932776

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாதிரியாரை இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் கண்டிப்பார்ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நீதிபதி கருத்து, By Jeyalakshmi C, Updated: Saturday, January 8, 2022, 15:27 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/pastor-george-ponniah-case-god-will-reprimand-the-petitioner-during-judgment-day-says-hc-444741.html

மதபோதகர் பெயரில் கொடிகட்டி பறந்த விபச்சாரம், வெளியே மதபோதகர் போர்டு உள்ளே விபச்சாரம், தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழில்?

ஜூலை 14, 2021

மதபோதகர் பெயரில் கொடிகட்டி பறந்த விபச்சாரம், வெளியே மதபோதகர் போர்டு உள்ளே விபச்சாரம், தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழில்?

நித்திரவிளை இருப்பிடம் – நன்றி – கூகுள்

தென்னந்தோப்பில் அமைந்துள்ள ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா: நித்திரவிளை[1] தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு நாகரிகமான நகரமாகும். “ஏசுதேசம்” பகுதியில் உள்ளது என்றும் தெரிகிறது. இது ஒரு வியாபார நகரம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் கேரளா அமைந்துள்ளது. இது மார்த்தாண்டத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவிலும் களியக்காவிளையிலிருந்து 9 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு சாதி மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள். லால் என்.எஸ்.ஷைன் சிங்[2] மற்றும் லால் என்.எஸ். சுந்தர் சிங் என்ற இருவரும், “ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா” (Federal Churh of India[3]) என்பதை நடத்தி வருகின்றனர். முந்தையவர் இந்த சர்ச்சை தோற்றுவித்தவரும், தலைவரும் ஆவர். பிந்தையவர் காரியதரிசி மற்று காசாளர் ஆவர். இது இந்திய ஆங்கிலிகன் சர்ச்சுடன் (Diocese of Christ Anglican Church of India) இணைந்துள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. நித்தியவிளை கேரள மாநில எல்லையில், இர்ய் வர்த்தக ஊராக உள்ளது. பெரும்பாலான பகுதி தென்னந்தோப்புகளாக இருக்கின்றன. மண்காடு போஸ்ட், என்ற இடத்தில் உள்ள ஜோதி காட்டேஜ் என்ற அந்த சர்ச்சின் இருப்பிடமும், ஒரு தென்னந்தோப்பில் அமைந்துள்ளது. மண்காடு என்பது மாங்காடு என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தோட்டத்திற்குள் பிரார்த்தனை கூடம், காட்டேஜ், வீடு முதலியவை அமைந்துள்ளன.

அந்த சர்ச்சைப் பற்றி புகார்கள் எழுந்தது: தனியாக, தென்னந்தோட்டத்தில் குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதி எஸ்டி மாங்காடு பகுதியில் பிரார்த்தனை கூடம், காட்டேஜ், வீடு முதலியவை அமைந்துள்ளன. அங்கு நடக்கும் விசயங்கள் எல்லாம், பொது மக்களுக்கு வினோதமாகத் தான் இருந்திருக்கின்றன. யாரோ யாரோ கார்களில் வந்து போவது தெரிந்தது. ஆனால், ஏன் வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்நிலையில் தான், இந்த வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது[4]. இதனையடுத்து நித்திரவிளை போலீசார் அந்த பகுதியில் சென்று சோதனை மேற்கொண்டனர்[5]. அப்போது, மதப் போதகர் என்ற பெயர் பலகை  வைத்திருந்த வீட்டில் 4 பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் இருந்தனர்[6].  இந்தப் பிரார்த்தனைக் கூடத்துக்கு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் இருந்து சொகுசு கார்களில் இளம் பெண்களும், ஆண்களும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி வந்து சென்றனர்[7]. அங்கு, தவறான செயல்கள் நடப்பதாக நித்திரைவிளை போலீஸாருக்கு தகவல்களும் ஏற்கெனவே கிடைத்தன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்தப் பிரார்த்தனைக்கூடத்தை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர்[8]. பிறகு தான் நடவடிக்கையில் இறங்கினர். வீட்டை சோதனை செய்தபோது 19 வயது இளம் பெண், கேரளாவை சேர்ந்த இளம் பெண், நடுத்தர வயது பெண், சிறுவயது பெண் என அறைகுறை ஆடைகளுடன் படுக்கை அறைகளில் ஆண்களுடன் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்[9]. விசாரித்த போது, விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது.




இந்த “ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா” (Federal Churh of India), இந்திய ஆங்கிலிகன் சர்ச்சுடன் (Diocese of Christ Anglican Church of India) இணைந்துள்ளது

போலீஸ் ஷ்டேசனுக்குக் கூட்டிச் சென்று விசாரணை: உடனே அவர்களையும், போதகரான லால் ஷைன் சிங்கையும் நித்திரவிளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்[10]. அப்போது அவர்கள், களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியை சேர்ந்த ஷைன் 34, மேக்காடு பகுதியை சேர்ந்த ஷிபின் 34, ஞாறான்விளை பகுதியை சேர்ந்த ராணி 55, சுகந்தி 40 என்று தெரிய வந்தது[11]. இந்த வீட்டில் போதகத்திற்கு வருவதுபோல் அடிக்கடி வந்து இளம்பெண்கள், ஆண்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டு செல்வதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். சர்ச் வளாகதில், இவ்வாறு விபச்சாரம் நடத்தப் பட்டது, திட்டமிட்டு செய்யப் பட்ட செயலாகவே தெருகிறது. கேரளாவுக்கு அருகில் இருப்பதால், அங்கிருப்பவர், இங்கு ஜாலியாக இருக்க வந்துள்ளதும் தெரிகிறது.  வியாபார நிமித்தம் வந்து செல்பவர்களும் அங்கு தங்கிச் செல்வதும் புலப்படுகிறது.

கையுங்களவுமாக பிடிபட்டு, விசாரணையில் உறுதியானதால் சம்பந்தப் பட்டவர்கள் கைது செய்யப் பட்டனர்: தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் லால் ஷைன்சிங் (43) என்பவர் பெண்களை வைத்து விபச்சாரம் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. பின்னர் விபச்சாரத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்து மேலே குறிப்பிட்டபடி, போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். மேலும் விபச்சாரத்திற்கு பயன்படுத்திய சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அக்கார் கேரள பதிவுடன் காணப் பட்டது. சாதரணமாக, கேரள வண்டிகள் வந்து செல்வது சகஜமாக இருந்தாலும், இது விபச்சாரத்திற்கு வந்ததாக இருப்பதனால், போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் நேரடி விசாரணை மேற்கொண்டார். கைது செய்யப்பட்ட 7பேரில் இரண்டு பெண்கள் தாயும் மகளும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 19 வயதுபெண்கள் இருவரும் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி என்.எஸ். சைன் சிங் இருந்தது: பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது[12]. தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடந்தது. நிறுவனர் பழவார் தங்கப்பன், மாநிலத்தலைவர் டிக்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி தலைவி கிளமன்சியா மேரி, லால் ஷைன்சிங், சுரேஷ், பால்ராஜ், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்[13]. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் நிறுவனர் பழவார் தங்கப்பன் போட்டியிட வேண்டும். குமரி மாவட்டம் முழுவதும் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  அரசியல் சார்பு, தாக்கம், முதலியவையும் தேவை என்ற போக்கில் இருந்து, செயல் பட்டது தெரிகிறது.

தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழில், மதபோதனைபெயரில் பாலியல் தொழில், வீட்டில் சர்ச் நடத்தி விபச்சாரம்என்றெல்லாம் தலைப்பிட்டு செய்திகள் வெளியிடப் பட்டன[14]: இப்படியெல்லாம் தலைப்பிட்டு, செய்திகள் வெளிவந்தாலும், சிறிய அளவில் செய்தி வெளியிடப்பட்டு, பி.டி.ஐ பாணியில், அதே செய்தி தினமலர், தினத்தந்தி, என்று எல்லாம் வெளியிட்டுள்ளன[15]. புதிய தலைமுறை, தினத்தந்தி, வீடியோ வெளியிட்டுள்ளன[16]. ஆனால், விசயம் ஒன்றேதான்[17]. எவ்வாறு சர்ச் வைத்துக் கொண்டு அவ்வாறு நடத்த முடியும், மதபோதனை பெயரில் / தேவாலத்தின் போர்வையில் பாலியல் தொழில் செய்ய முடியும் என்று விளக்கவில்லை[18].  வீட்டில் சர்ச் நடத்தி விபச்சாரம் என்றாலும், திகைப்பாக இருக்கிறது[19].  இப்பகுதிகளில், கிருத்துவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது, மற்றும் பலவித டினாமினேஷன் / இறையியல்-சடங்கு-ஜாதி முறையில் சர்ச் பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த “ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா” (Federal Churh of India), இந்திய ஆங்கிலிகன் சர்ச்சுடன் (Diocese of Christ Anglican Church of India) இணைந்துள்ளது என்று முன்பே குறிப்பிடப் பட்டது. ஆகவே, இது அவர்களுக்குள் உள்ள பிரச்சினையா, வேறுவிதமான விவகாரமா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

14-07-2021


[1] Nithiravilai is a small metro city in Kanyakumari district, in Ezhudesam panchayat Tamil Nadu, India. It is a business city which caters its day to day needs and borders the state of Kerala. The Kerala border from the village is approximately 3 km. It is about 14 km from Marthandam and 9 km south to Kaliyakkavilai. The Laccadive sea coast of Arabian Sea is bordering through the coastal fishing towns of Chinnathurai and Thoothur. It is well connected to other nearby towns through roadways.

[2] The founder and the Parish Priest of Federal Church of India in 2009 and it is Registered in 14th September 2015.It is locted in Jyothi Nagar, S T Mangad, Kanyakumari Dist, TamilNadu.

[3] The Federal Church of India which became a Prayer Hall in 2009 had a history of over 6 years before it was upgraded to what it is now – one of the largest Churches in the Kanyakumari, Tamilnadu. To propogate the knowledge of the Bible and Gospel of Jesus Christ among people especially in the Gospel through Literature, Radio, Television, Internet personal Evangelism and such other means which are conductive to attain the objects.

http://www.federalchurchofindia.online/

[4] 360.செய்தி, மதபோதகர் பெயரில் கொடிகட்டி பறந்த விபச்சாரம் : தாய்மகள் உள்பட 7 பேர் கைது, 13 July 2021, 11:01 am.

[5] https://www.updatenews360.com/tamilnadu/kanniyakumari-mother-and-daughter-arrest-for-illegal-sex-work-130721/

[6] சமயம்.காம், ச்சீமதபோதகர் வீட்டில் இப்படியா? –சர்ச் என்ற பேரில் தவறான செயலில் ஈடுபட்டவர்கள் கைது!, Giridharan N | Samayam TamilUpdated: 13 Jul 2021, 05:49:00 PM.

[7] தமிழ்.இந்து, குமரியில் பிரார்த்தனைக் கூடத்தில் பாலியல் குற்றம்: மத போதகர், 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 14 Jul 2021 03:13 AM; Last Updated : 14 Jul 2021 06:24 AM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/692994-pastor-arrested.html

[9] https://tamil.samayam.com/latest-news/kanyakumari/brothel-in-preacher-house-in-the-name-of-church-in-kanyakumari-district/articleshow/84376759.cms

[10] டாப்.தமிழ்.நியூஸ், வெளியே மதபோதகர் போர்டு உள்ளே விபச்சாரம்: ஆண்களுடன் இருந்த தாயும், மகளும் சிக்கினர், By Kathiravan, 13/07/2021 12:22:58 PM.

[11] https://www.toptamilnews.com/282099outside-pastor-board-inside-brothel-mother-and-daughter-caught-up-with-men/

[12] தினமலர், பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட மகாத்மா காந்தி மக்கள் கட்சி முடிவு, பதிவு செய்த நாள் : 26 அக்டோபர் 2020 18:18

[13] http://www.dinamalarnellai.com/web/districtnews/45323

[14] தந்தி.டிவி, தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழில் – 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது, பதிவு : ஜூலை 13, 2021, 10:58 AM.

[15] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/07/13105806/2558393/Kanyakumari-7-arrest.vpf

[16] புதிய.தலைமுறை,மதபோதனைபெயரில் பாலியல் தொழில்: குமரியில் மதபோதகர் உட்பட 7 பேர் கைது,   Web Team Published :13,Jul 2021 12:47 PM.

[17] https://www.puthiyathalaimurai.com/newsview/109398/Including-a-pastor-7-arrested-in-the-skin-trade-at-Kanniyakumari

[18] தினந்தந்தி, வீட்டில் சர்ச் நடத்தி விபச்சாரம்; போதகர் உட்பட 5 பேர் கைது, Added : ஜூலை 14, 2021  08:25.

[19] https://www.dinamalar.com/news_detail.asp?id=2802268

பால் சந்திரமோகன் – பிஷப் ஹீபர் கல்லூரி பாலியல் மன்னன் – இருமுறை பாலியல் விவகாரங்களில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மூன்றாம் முறை சஸ்பென்டாம்! – 1997 முதல் 2021 வரை பணியில் தொடர்ந்த மர்மம்!

ஜூலை 1, 2021

பால் சந்திரமோகன் – பிஷப் ஹீபர் கல்லூரி பாலியல் மன்னன் இருமுறை பாலியல் விவகாரங்களில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மூன்றாம் முறை சஸ்பென்டாம்! 1997 முதல் 2021 வரை பணியில் தொடர்ந்த மர்மம்!

ஐந்து மாணவியர் 2021ல் மார்ச்சில் புகார் கொடுத்துள்ளனர்: திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் பால் சந்திரமோகன். அவரிடம் படிக்கும் முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவிகள் ஐந்து பேர் மார்ச் 2021ல் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்[1]. மேலும் அவர் நடந்து கொள்ளும் முறையை ஐந்து பக்கத்திற்குக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்[2]. அந்தக் கடிதத்தில். “பால் சந்திரமோகன் சார் ரொம்ப மோசமான முறையில் நடந்துகொள்வார். நாங்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தால் எங்களை உரசிக்கொண்டே நடந்து போவார். எங்கள் அருகே மிக நெருக்கமாக வந்து அமர்ந்து கொள்வார். இரட்டை அர்த்தத்தில் பேசும் படி சொல்வார்,” என பல குற்றச்சாட்டுகளை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது[3]. மேலும் அந்தக் கடிதத்தில், “அதே தமிழ்த் துறையில் பணிபுரியும் பெண் உதவிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து, “பால் சாரை பார்க்கப் போகையில் முகம் கழுவி மேக்கப் போட்டுக்கொண்டு தான் போகவேண்டும்என்று வற்புறுத்துவார்,” எனக் குறிப்பிட்டிருந்தனர்[4].  இக்கடிதத்தின் நகல் 30-06-2021 அன்று ஊடகக் காரர்களுக்குக் கிடைத்ததால், 01-07-2021 அன்று அது வெளியிடப்பட்டுள்ளது[5]. இந்த நளினி மீது பக்கம் பக்கமாக கவிதை எழுதி மாட்டிக் கொண்டார் என்றும் உள்ளது. பிறகு, அந்த பெண்மணியே எப்படி-ஏன் – எதற்கு இவ்வாறு உதவுகிறார் என்பது திகைப்பாக உள்ளது[6].

30-06-2021 அன்று பால் சந்திரமோகன் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்: இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக் குழு உறுப்பினர்களான வக்கீல் ஜெயந்தி ராணி, தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர்[7]. இதைத்தொடர்ந்து பால் சந்திரசேகரைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது[8]. மேலும், இதுபோல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க ஒரு குழுவையும் நியமிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது கல்லூரி நிர்வாகம். இதுகுறித்து போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். “இவ்விவகாரம் சம்பந்தமாக ஏடிசி (அடிஷ்னல் டெபுடி கமிஷனர்) வனிதா தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். விசாரணையின் முடிவில் வழக்கு பதிவு குறித்து முடிவு செய்யப்படும்,” என்றனர். கல்லூரி நிர்வாகம் தற்போது பேராசிரியர் பால் சந்திரமோகனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது[9]. மேலும், இவருக்கு உதவியதாக புகாரில் குறிப்பிட்ட பெண் உதவிப் பேராசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது[10]. திருச்சி சுற்றுவட்டாரத்தில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் பிஷப் ஹீபர் கல்லூரி மீது தற்போது ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த புகார் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது[11]. இந்தநிலையில் ஏடிசி வனிதா தலைமையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இன்று இரவுக்குள் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது[12]. போலீசில் புகார் மேலும், மாணவியரின் புகார் குறித்து[13], ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, திருச்சி மாநகர கூடுதல் துணை கமிஷனர் லலிதா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது[14]. இவ்விசயத்தில் தாமதம் ஏற்படுவதும் தெரிகிறது.

சர்ச் ஆப் சவுத் இன்டியா தொடர்ந்து பற்பல சட்டமீறல்களில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டது: சர்ச் ஆப் சவுத் இன்டியா என்பது ஒரு கம்பனி என்று நீதிமன்றங்கள் உறுதி செய்யப் பட்டுள்ளது. சர்ச் ஆப் சவுத் இன்டியா [The Church of South India (CSI)] ஏற்கெனவே பற்பல சட்டமீறல்கள், வழக்குகள், கைதுகள், செக்ஸ்-குற்றங்கள், பாலியல் விவகாரங்கள் என்றெல்லாம் இருந்து, அவற்றில் சிக்கி-உழன்று வரும் நிலையுள்ளது. ஆகவே, அத்தகைய சட்டமீறல், குற்றங்கள் முதலியவற்றிலிருந்து மீள்வதற்கு வழி தேடாமல், மேன்மேலும் விவகாரங்களில் உழல்வது, அரசியல் ஆதரவு, அதிரடி விளம்பர பிரச்சாரம், கருத்துருவாக்கும் ஆதிக்க சக்திகளின் உதவி என்று ஒரு நிரந்தரமற்ற நிலைக்கு சாதகமாக இருக்கலாம், ஆனால், நடப்பது என்ன என்பதனை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது! இப்பொழுது உள்ள பிஷப் அரசியல் ரீதியில் இப்பிரச்சினையை அமுக்கப் பார்க்கிறாரோ என்ற கேல்வியும் எழுகிறது. ஏனெனில், குமுதம் ரிப்போர்ட்டர் நிருபரிடம், தான் முதலமைச்சரைப் பார்க்கத் தான் சென்னைக்கு வந்ததாகக் கூறி, திருச்சிக்குச் சென்றதும், உரிய நடவடிக்கை எட்ப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஆக, இன்னொரு முறை, பால் சந்திரமோகன் சஸ்பென்ட் செய்யப் பட்டிருக்கிறார்.

1997-2011 மூன்று அல்லது நான்கு முறை சஸ்பெட் ஆனது, பதிவுக்கு மறுபடி வந்தது, திரும்ப செக்ஸ் குற்ற செய்தது:

  1. குமுதம் ரிப்போர்டர், “1997ல் ஹாஸ்டல் மாணவிகளுக்கு இப்படி சில தொல்லைகளைக் கொடுத்ததாக புகார் ஆகி, சஸ்பெண்ட் செய்யப் பட்டவர் தான் சந்திரமோகன். அதன் பின்னர் அவர் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதாக கல்லூரி நிர்வாகத்திடம் கெஞ்சியதால் அப்போதைய முதல்வர் சுவாமிராஜ் மன்னித்து மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார்.
  2. பால் சந்திரமோகன், அதற்குப் பிறகும் தனது சேட்டையை நிறுத்தவில்லை. உதவி பேராசிரியை நளினியைப் பற்றி பக்கம் பக்கமாக வர்ணித்து கவிதை எழுதி பிரசினையாகி, அப்போதும் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்,” என்று வெளியிட்டுள்ளது.
  3. குமுதம் ரிப்போர்டர், “2015ல் துறைத் தலைவராக வந்திருக்க வேண்டியவர், அதற்கு சில நாட்களுக்கு முன்னர் பால் சந்திரமோகன், ஒரு அறையில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப் பட்டு அப்போதைய பிஷப் கவனத்திற்கு கொண்டு போகப் பட்டதால், அந்த வாய்ப்பை இழந்தார்,” என்று குறிப்பிடுகிறது.
  4. இப்பொழுது 2021ல் மறுபடியும் சஸ்பென்ட் செய்யப் பட்டிருப்பது, விசித்திரமாக உள்ளது.

© வேதபிரகாஷ்

01-07-2021


[1] விகடன், திருச்சி: `பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீது 5 மாணவிகள் பாலியல் புகார்! பேராசிரியர் சஸ்பெண்ட்!’, எம்.திலீபன், தே.தீட்ஷித், Published: Yesterday at 7 PM, Updated:Yesterday at 7 PM.

[2] https://www.vikatan.com/news/crime/five-girl-students-in-bishop-heber-college-raised-a-complaint-against-thier-professor-to-college-principal

[3] தினத்தந்தி, திருச்சியில் மாணவிகள் பாலியல் புகாரில்தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பணியிடை நீக்கம், பதிவு: ஜூலை 01,  2021 01:05 AM.

[4] https://www.dailythanthi.com/News/Districts/2021/07/01010502/TAMIL-HOD-of-a-private-college-Suspension-in-Trichy.vpf

[5] புதியதலைமுறை, திருச்சி ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் புகார், Published, ஜூலை 01, 2021  12.36

[6] http://www.puthiyathalaimurai.com/newsview/108087/Trichy-Students-sexually-harass-a-Bishop-Heber-College-professor

[7] நக்கீரன், கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் நீக்கம், 2021-06-30@ 14:27:22.

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=686841

[9] இந்து.தமிழ், பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் சஸ்பென்ட், செய்திப்பிரிவு, Published : 01 Jul 2021 03:14 AM; Last Updated : 01 Jul 2021 06:45 AM

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/688110-college-professor-suspended.html?frm=rss_more_article

[11] நக்கீரன், பிரபல கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் மீது மாணவிகள் பாலியல் புகார்..! பணிநீக்கம் செய்த நிர்வாகம்…, Published on 30/06/2021 (17:19) | Edited on 30/06/2021 (18:05)

[12] https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/complaint-against-tamil-department-hod-trichy-college

[13] தினமலர், மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்: கல்லூரி துறை தலைவர்சஸ்பெண்ட், Added : ஜூலை 01, 2021  09:57.

[14] https://www.dinamalar.com/news_detail.asp?id=2794546

பெண் என்றுமே மதகுரு, பாதிரி, பாஸ்டர் அல்லது பிஷப் ஆக முடியாது, ஏனெனில், ஏவாள் பாவம் சுமந்தவள், மேரி கடவுள் கிடையாது!

ஜனவரி 12, 2021

பெண் என்றுமே மதகுரு, பாதிரி, பாஸ்டர் அல்லது பிஷப் ஆக முடியாது, ஏனெனில், ஏவாள் பாவம் சுமந்தவள், மேரி கடவுள் கிடையாது!

ஜேஹோவா, ஆதாமின் விலா எலும்புலிருந்து ஏவாளைபெண்ணைப் படைத்ததால், பெண் தாழ்ந்தவள் ஆவாள்: கத்தோலிக்க கிருத்துவ மதப் பிரிவில், என்றுமே பெண்களுக்கு உரிய நிலையைக் கொடுக்கவில்லை. ஜேஹோவா என்ற கடவுள் முதலில் ஆதாம் என்ற ஆணைப் படைத்தான், பிறகு விலா எலும்புலிருந்து ஏவாளைப் படைத்தான், அதிலிருந்து பெண் ஆணுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்ற இறையில் நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. பைபிள், இதை இவ்வாறு விவரிக்கிறது, “ஆதாமுக்கு ஒரு துணை படைக்க ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப் பண்ணினார். அவன் விலா எலும்புகளில் ஒன்றையெடுத்து அந்த இடத்தை சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். அப்போது ஆதாம்இவள் என் எலும்பில் எலும்பும் என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி எனப்படுவாள்என்றான்”. இவ்வாறு ஆணிலிருந்து பெண் உற்பத்தியானாள் என்ற இறையியல் மற்றும் அடிப்படைவாதங்களினால் தான், பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப் பட்டன.  பெண் தெய்வமாக முடியாது. கடவுளின் தாயாக இருந்தாலு, கடவுள் ஆகமுடியாது.

12 அப்போஸ்தலர்களும் ஆண்கள் தான், ஆகையா, பெண்களுக்கு சபையில் இடம் கிடையாது: இன்னொரு கத்தோலிக்க நம்பிக்கையின் படி, ஏசு கிறிஸ்து, முதன் முதலாக 12 சீடர்களைத் தேர்ந்தெடுத்த போது, எல்லோருமே ஆண்களாக இருந்தனர். ஆரம்பகால சர்ச் தந்தையரும் அவ்வாறே இருந்தனர். அதனால், ஆண்கள் தான், மதகுருவாக, பாதிரியாக இருக்க யோக்கியமானவன். பெண் என்பவள் ஏவாள் முதற்கொண்டு, கடவுளின் ஆணையை மீறியதால், பாவம் பெண்கள் மூலம் தான் தொடர்கிறது. இதனால், முதலாம் ஆதமின் பாவமும், இரண்டாம் ஆதமான, ஏசுகிறிஸ்துவின் ரத்தத்தினால் போக்க வேண்டிய அவசியம் உண்டாகியது. ஏசு மறுபடியும் வரும் வரை, அப்பாவம் பெண்ணின் மூலம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால், பெண்களுக்கு சபையில் முக்கியமான பங்கு, பொறுப்பு மற்றும் இடம் கொடுக்கக் கூடாது.  முன்பு, சாத்தான் எப்படி ஆதாம்-ஏவாள் தம்பதியை ஏமாற்றி, கனியை உண்ண நேரிட்டதோ, அதே போல, நேரிடும். ஏனெனில், சாத்தான் என்று தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறான். பெண்களைத் தான் அவன் குறிவைக்கிறான். ஏவாளை மயக்கியது போல, மயக்கலாம். அப்பொழுது, ஆபத்து ஏற்படும்.

மேரி உயர்ந்த தெய்வீக பெண்ணாகக் கருதப் படுகிறாள், ஆனால் கடவுள் கிடையாது: மேரியை பெண் தெய்வீக பெண்ணாக, உயர்வாகப் போற்றி வணங்கி வந்தாலும், கடவுளாக முடியாது. திரியேகத்துவத்திலும், “பரிசுத்த ஆவி, பிதா, சுதன்,” என்று தான் உள்ளனர். மற்ற பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை. எப்பொழுதெல்லாம், பெண்கள் உயர்ந்து வந்த நிலை அடைகிறார்களோ, அப்பொழுதெல்லாம் பெண்கள் அடக்கப் பட்டார்கள், ஒடுக்கி வைக்கப் பட்டார்கள், ஏன் கொல்லப் படவும் செய்தார்கள். “ஜோன் ஆப் ஆர்க்” என்று சிறப்பாகப் பேசப் படுகின்ற இளம்பெண், தான் சில சக்திகளைப் பெற்றேன், கடவுளிடன் பேசினேன் என்றெல்லாம் கூறிக் கொண்டதால், அவள், உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டாள். இது போல பல்லாயிரக் கணக்கான பெண்கள் மந்திரக்காரி, சூன்யகாரி, (witches) என்றெல்லாம் அறிவிக்கப் பட்டு, உயிரோடு எரித்துக் கொல்லப் பட்டனர். இடைக்காலத்தில் தொடர்ந்த அத்தகைய தெவீக எரிக்கும்-கொலைகள் 19ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. பைபிளை பெண்கள் படிக்கக் கூடாது, சர்ச்சுக்கு வரக்கூடாது என்றெல்லாம் சட்டங்கள் இருந்தன.  மேற்கத்தைய நாடுகளில், பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையே 19-20 நூற்றாண்டுகள் என்று நீட்டித்து அளிக்கப் பட்டன.

பெண்ணிற்கு பாதிரி அந்தற்து கொடுப்பது, மிகப்பெரிய குற்றமாகும்: 2000களில் பெண்களுக்கு மதத்திலும் உரிமைகள் கொடுக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. கத்தோலிக்கம்-அல்லாத கிருத்துவ மதப்பிரிவுகளில் சில பெண்கள் பாதிரிகள் ஆனதால், கத்தோலிக்கத்திலும் அத்தகைய உணர்ச்சி, எழுச்சி மற்றும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால்,வாடிகன் அவற்றைக் கடுமையாக அடக்கி வந்தது. 2008ல் எந்த பெண்ணாவது, பாதிரியாக வேண்டும் என்று கோரினால், அவள் மதத்திலிருந்து விலக்கப் படுவாள் என்றே போப் அறிவித்தார்[1]. வாடிகன் 2010ல் அத்தகைய கோரிக்கை சர்ச்சிற்கு எதிரான குற்றம் (delicta graviora) என்றே அறிவித்தது[2]. எப்படி ஆண் பாதிரிகள் செக்ஸ் குற்றங்களில் ஈடுபடுகின்றனரோ, அதுபோன்ற குற்றமாகக் கருதப் படும் என்ரு அறிவித்தது[3]. 2016ல் பெண்கள் பாதிரியாக முடியாது என்று உறுதியாக அறிவித்து விட்டார்[4]. ஆக, இந்த நவீன காலத்திலும், வாடிகன், போப், கத்தோலிக்க சர்ச் பெண்களைப் பற்றி எவ்வாறு பாவிக்கிறது, சமத்துவத்தை போதிக்கிறது மற்றும் கடைபிடிக்கிறது என்பதை கவனிக்கலாம்.

2021ல் பெண்கள் பலிபீடம் அருகில் வந்து பைபிள் ஓதலாம்: இப்பொழுது, மதக் கூடுதல் நடக்கும் போது, பெண்கள் வேண்டுமானால், பைபிளைப் படிக்கலாம் என்று போப் அறிவித்துள்ளார்[5].   சர்ச்சிற்குள் இருக்கும் கருவறைக்குள் வரக்கூடாது, ஆனால், பலி பீடம் வரை வரலாம் போன்ற சலுகையைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது[6].  இவ்வகையில் நற்கருணை அமைச்சர் போல (Eucharistic minister) பணி ஆற்றலாம் என்றும் விவரிக்கப் படுகிறது[7]. ஆனால், உண்மையில் பலியில் பங்கு கொள்ள முடியுமா, பாதிரி போன்று, பலிசடங்கு நடத்தி, ரொட்டியையும், சாராயத்தையும் அனைவருக்கும் பகிரமுடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை ஆண் பாதிரி அவற்றையெல்லாம் செய்யும் போது,பெண்கள் அருகில் நின்று பைபிள் படித்துக் கொண்டிருப்பார்கள் போலும்[8]. பெண்கள் deacon ஆகலாம் அதாவது, “மாதா கோயில் மணியக்காரர்” ஆகலாம் என்று தெரிகிறது[9]. இதுவும் எந்த அளவுக்கு அமூலில் வரும் என்று தெரியவில்லை. பெண்களும் தைரியமாக, அவ்வாறு கடமையாற்ற வருவார்களா என்று பார்க்க வேண்டும்.

2016ல் போப் பெண்கள் என்றுமே பாதிரியாக முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்: டிசம்பர் 1, 2020 அன்று வெளியிடப் பட்ட, சிறந்த எதிர்காலத்திற்காக கனவு காண்போமாக [Let Us Dream: The Path to a Better Future] என்ற புத்தகத்தில், போப் பிரான்சிஸ், பெண்கள் பாதிரியாக, மதகுருவாக, பாஸ்டராக, பிஷப்பாக முடியாது என்று குறிப்பிட்டார்[10]. 2016ல் பொறுப்பேற்றுக் கொண்ட போப், வாடிகனில், பல வேலைகளுக்கு பெண்களை நியமித்தாலும், “பெண்கள் மதகுரு/பாதிரியாகத் தேவையில்லை,” என்றதால், இவ்விசயத்தில் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை என்று தெரிகிறது[11]. செய்திகள், ஆங்கிலத்தில் பலவாறு வெளியிட்டாலும், பெண்கள் பாஸ்டர், பிஷப் ஆக முடியாது, போப் உறுதியாகச் சொல்லி விட்டார்[12], பலிபீடத்திற்கு அருகில் வேண்டுமானால் போகலாம் என்று கொஞ்சம் அனுமதி கொடுத்துள்ளார்[13]. பெண்கள் நவநாகரிகமாக இருந்தாலும், அவ்வளவே தான், என்று தெரிகிறது. 2016லிருந்தே, இதை சொல்லி வந்துள்ளார். பெண்களுக்கு சமவுரிமைகள் கொடுக்கப் படும், கொடுக்கப் படுகின்ற என்றெல்லாம் கூறிக் கொண்டாலும், பிரகடனப் படுத்திக் கொண்டாலும், உண்மை நிலை இந்த அளவுக்குத் தான் உள்ளது.

© வேதபிரகாஷ்

12-01-2021


[1] SheThePeople, Pope: Women Barred From Priesthood Forever, BY RIA DAS NOVEMBER 22016.

[2]  https://www.shethepeople.tv/news/pope-women-barred-from-priesthood-forever/

[3] Reuters, Pope says he believes ban on female priests is forever, By Philip Pullella, NOVEMBER 1, 201610:02 PM. https://www.reuters.com/article/us-pope-women-idUSKBN12W4L7

[4] https://www.reuters.com/article/us-pope-women-idUSKBN12W4L7

[5] Independent, Pope Francis says women can read at Mass but stops short of letting them be priests, Jon Sharman, January.11, 2021.

[6] https://www.independent.co.uk/news/world/europe/pope-women-mass-priests-vatican-b1785366.html

[7] SheThePeople, Pope Francis Pope Francis Reformed Church Laws; Women Can Read Gospel But Cannot Become Priests, JANUARY 11, 2021, BY RUDRANI GUPTA.

[8] https://www.shethepeople.tv/news/pope-francis-reformed-church-laws-women-can-read-gospel-but-cannot-become-priests/

[9] This change in the law code follows the pressure on Pope Francis to allow women to be appointed as deacons in the church. Deacons are ordained ministers of the church who perform the same functions as the priest and this ministry is also lawfully reserved for men.

[10] National Catholic Reporter, Women need not be priests to lead church, Francis says in new book,  byJoshua J. McElwee, Nov 23, 2020.

[11] https://www.ncronline.org/news/vatican/women-need-not-be-priests-lead-church-francis-says-new-book

[12] BBC.News, Pope Francis backs women’s roles in Catholic services, January 12, 2021.

[13] https://www.bbc.com/news/world-europe-55617851