லாவண்யா தற்கொலை வழக்கு – ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

லாவண்யா தற்கொலை வழக்கு ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள்: ஊடகங்களின் பாரபட்சம், இரட்டை வேடங்கள், ஜார்னலிஸ்டி எதிக்ஸ் (Journalistic ethics) இல்லாமை, பத்திரிகா தர்மத்தை குழித் தோண்டி புதைத்த தன்மை, எழுத்து ஒழுக்கம் இல்லாமை,  நிருபர்-தனத்தில்-தோய்வு-அடிமைத்தனம் இப்படி பலவற்றை இப்பொழுது காண முடிகிறது.  நீதிமன்ற தீர்ப்புகளை குழப்பும் வகையில், செய்திகளை ஒருதலைப் பட்சமாக வெளியிட்டு, அழுத்தம் கொடுக்கவும் செயல் பட்டு வருகின்றன. கைது என்றால் உடனடியாக ஜாமீன் என்று கைது செய்யப் பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வந்து விடுகிறார்கள். முன்னர், கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகள், சிக்க வைக்கப் பட்டனர் என்பது போல செய்திகளும் வரச்செய்கிறார்கள். இல்லை, அது சாதகமாக இருக்காது என்றால் அமைதியாக, முன் ஜாமீன் மனு போட்டு, வெளியே கொணர்ந்து, புகார் கொடுத்தவர்களுடன் பேரம் பேசி, வழக்கை வாபஸ் வாங்குதல், தொட்ந்து நடத்தாமல் விட்டு விடுதல், கிடப்பில் கிடக்குமாறு அழுத்தம் கொண்டு வருதல் போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

லாவண்யா, லாவண்யா குடும்பத்தினரின் முகங்களை பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது: மாணவியின் மரணம் தொடர்பாக 62 வயதான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். லாவண்யா வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி  மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்[1]. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[2]. ஆனால், ஊடகங்கள், இது வரை அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை. மற்ற வழக்குகளில், கூட்டமாக முன்னரே வளாகத்தில், தெருக்களில் கேமரா, வீடியோ, சகிதம் நின்று காத்துக் கிடப்பார்கள். துரத்திச் சென்று கேள்வி கேட்பாகள், புகைப் படம் எடுப்பார்கள். ஆனால், இவ்வழக்கில், ஒருதலை பட்சமாகவே செயல்பட்டு வருகிறார்கள். லாவண்யா, லாவண்யா அப்பா-அம்மா, சித்தி, தாத்தா-பாட்டி, மாமா என்று எல்லோருடைய முகங்களையும் பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது.

ஜெனின் சகாய மேரி, ஹாஸ்டல் வார்டன் 07-02-2022 அன்று பிணையில் வெளியே வந்தார்: இவர் ஜனவரி 21ம் தேதி கைது செய்யப் பட்டார். சிறையில் உள்ள விடுதிக் காப்பாளர் சார்பில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, தஞ்சையில் உள்ள நீதிமன்றத்தில் விண்ணப் பித்து தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்திருந்தார்[3].  இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார்[4]. வழக்கம் போல, இவர் வயதானவர், வீடியோ ஆதாரத்தின் மீது கைது செய்யப் பட்டுள்ளார், அதன் உண்மைத் தன்மை அறியப் படவேண்டியுள்ளது, இவரை ஜாமீனில் வெளியே விட்டால், இவர் சாட்சியங்களை ஒன்று செய்ய மாட்டார், அதற்கான பிணையும் கொடுக்கப் பட்டுள்ளது, என்றெல்லாம் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதன் மீது திங்கள்கிழமை 07-02-2022 அன்று நடைபெற்ற விசா ரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூதனன் ஜாமீன் வழங்கினார்[5]. வக்கீல் ஜெயச்சந்திரன் மூலம் மனு தாக்கல் செய்யப் பட்டது[6]. ஜெனின் சகாய மேரி என்று குறிப்பிடுவது திமுக ஊடகங்கள், அந்த அளவுக்கு விவரங்கள் தெரியும் போலிருக்கிறது.

பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி: இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் என பெற்றோர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[7]ராக, இதெல்லாம் அவர்களுக்கு அத்துப் படி என்று தெரிகிறது. இதே நேர்த்தில், அந்த கேரளா பிஷப்பும் ஜாமீனுக்கு மனு போட்டுள்ளார். அந்த அளவுக்கு வேகமாக வேலை செய்கின்றன. நீதிமன்றங்களும், இருக்கின்ற எல்லா முக்கிய வழக்குகளையும் விட்டுவிட்டு, இவற்றை எடுத்து உடனடியாக விசாரிக்கின்றன. இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ராக்கேல்மேரிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது[8].

ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)[9]: பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும்[10]. குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.

பச்ச முத்து பாரி வேந்தர் ஆனது போல, அவரது ஊடகங்களும் மாறியுள்ளன: ஒரு பக்கம் அரசியலாக்கப் படுகிறது என்று திமுக ஊடகங்கள் பிஜேபியைக் குற்றஞ்சாட்டுகின்றன[11]. கலைஞர் டிவி, முரசொலி என்று வெளுத்து வாங்குகின்றன. இன்னொரு புறம், இதுவரை தெரியாத ஊடகங்கள் கிளம்பியுள்ளன[12]. லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், மாணவியின் பூப்படைதல் சடங்கு இந்து முறைப்படி நடந்ததாக சாட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[13]. மேலும், மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக ஒரு தரப்பினரால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட விடுதி வார்டன் சகாய மேரியே அந்த சடங்கை ஊர் மக்கள் சிலரது உதவியுடன் நடத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் பிரபல செய்தி நிறுவனமான ‘த ஃபெடெரல்’ இடம் தெரிவித்துள்ளனர்[14].  அந்த வகையில் சிறுமி லாவண்யாவுக்கு வார்டன் சகாய மேரி சடங்கு ஏற்பாடு செய்தது இருவருக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது” என பவுலின் கூறினார்[15]. மேலும், லாவண்யாவுக்காக சகோதரி சகாய மேரி நடத்திய பூப்படைதல் சடங்குக்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளதாக ‘த ஃபெடெரல்’ வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது[16]. இதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. உள்கலாச்சாரமயமாக்கல் என்ற திட்டத்துடன் செயல்படும் வாடிகன், வாடிகன் அடிவருடி சர்ச்சுகள், இந்தியாவில்-தமிழகத்தில் வேடம் போடும் கூட்டங்கள் பல காரியங்களை, இந்துமுறைப்படித் தான் செய்து வருகின்றன.

© வேதபிரகாஷ்

09-02-2022


[1] தினத்தந்தி, கைதான விடுதி பெண் வார்டனுக்கு தஞ்சை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது, பதிவு: பிப்ரவரி 08,  2022 03:13 AM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/02/08031304/bail-for-hostel-warden.vpf

[3] தீக்கதிர், மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் காப்பாளருக்கு ஜாமீன், நமது நிருபர் பிப்ரவரி 8, 2022.

[4]https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/in-the-case-of-student-suicide-bail-for-the-caretaker-of-the-inn

[5]விகடன், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: விடுதி வார்டனுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு, கே.குணசீலன், Published: 09-02-2022, at 7 AM; Updated: 09-02-2022 at 7 AM.

[6] https://www.vikatan.com/news/crime/in-student-suicide-case-court-granted-bail-to-the-hostel-warden

[7] தமிழ்.ஏபிபி.நியூஸ், தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் வார்டன் சகாயமேரிக்கு ஜாமீன், By: சிஎஸ் ஆறுமுகம், தஞ்சாவூர் | Updated : 08 Feb 2022 12:15 PM (IST).

[8]  https://tamil.abplive.com/news/thanjavur/hostel-warden-sakayamari-granted-bail-in-thanjavur-student-suicide-case-39078

[9] விகாஷ்பீடியா, ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)

[10] https://ta.vikaspedia.in/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/b95bc1b9fbbfbaeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b9abc7bb5bc8b95bb3bcd/b9cbbebaebc0ba9bcd-bail-baebc1ba9bcd-b9cbbebaebc0ba9bcd-anticipatory-bail

[11] கலைஞர் செய்தி, அண்ணாமலையின் அசிங்க அரசியல்.. பா... அரசியல் செய்ய மாணவி மரணம்தான் கிடைத்ததா?” : முரசொலி கடும் தாக்கு!, Lenin, Updated on : 28 January 2022, 08:56 AM

[12] https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2022/01/28/murasoli-editorial-questions-bjp-for-politicizing-student-death

[13] சமயம், தஞ்சை மாணவி: விடுதியில் இந்து முறைப்படி நடந்த பூப்படைதல் சடங்கு! எங்கே பிழை..?, Divakar M | Samayam TamilUpdated: 8 Feb 2022, 1:22 pm

[14] https://tamil.samayam.com/latest-news/crime/more-important-information-has-come-out-in-the-lavanya-suicide-case/articleshow/89425114.cms

[15] The Federal, Warden performed puberty rituals of TN teen as per Hindu customs: witnesses, Prabhakar Tamilarasu, 4:34 PM, 7 February, 2022Updated 5:37 PM, 7 February, 2022

[16] The Federal is a digital platform disseminating news, analysis and commentary. It seeks to look at India from the perspective of the states. We are a division of New Generation Media Private Limited. https://thefederal.com/states/south/tamil-nadu/warden-performed-puberty-rituals-of-tn-teen-as-per-hindu-customs-witnesses/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.