Archive for the ‘வழக்கு’ Category

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுகஎம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? பிரிப்பது பணமா, அந்தஸ்தா, இறையியலா எது? (2)

ஜூன் 28, 2023

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? பிரிப்பது பணமா, அந்தஸ்தா, இறையியலா எது? (2)

துரைமுருகன் நோட்டீஸ் கண்டுகொள்ளாத எம்.பி: சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடக்கும் விவகாரங்கள் குறித்த தகவல் தி.மு.க தலைமைக்குச் சென்றது[1]. அதனால் கட்சித் தலைமை ஞானதிரவியம் எம்.பி மீது அதிருப்தியடைந்துள்ளது[2]. அதனால் அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்[3]. அதில், கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஏழு தினங்களுக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது[4], இதனிடையே, சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர் ஜான் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்[5]. அத்துடன், ஞானதிரவியம் எம்.பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட சிலர் பேர் மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[6]. காட்ப்ரே நோபுள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த பாளையங்கோட்டை காவல்துறையினர், ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர்மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்[7]. அவர்கள்மீது 147 (கலகம் செய்தல்), 294 (பி) (ஆபாசமாக பேசுதல்), 323 (காயப்படுத்துதல்), 109 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 506 (2) (கிரிமினல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது[8]. விகடன் கேட்டபோது[9], “சி.எஸ்.ஐ அலுவலகத்தில் மோதல் நடந்தபோது நான் சம்பவ இடத்திலேயே கிடையாது. ஆனாலும் என்னையும் திட்டமிட்டு அந்த வழக்கில் சேர்த்திருக்கின்றனர். விசாரணையின்போது உண்மை தெரியவரும். என்னிடம் விளக்கம் கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் அனுப்பியிருக்கும் நோட்டீஸுக்கு உரிய விளக்கம் கொடுப்பேன்” என்று ஞானதிரவியம் முடித்துக் கொண்டார்[10].

ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமான லாரிகளில் கனிமங்கள் கடத்தல்: சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக நெல்லை திருமண்டலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் சி.எஸ்.ஐ உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, ஞானதிரவியம் எம்.பி செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக தி.மு.க தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றவண்ணம் இருப்பதால் கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. 21-06-2023 கடிதத்தின் படி அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார் என்று தெரிகிறது. நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு அப்பாவி உயிர்கள் பலியானது. அதைத் தொடர்ந்து கல்குவாரிகளில் விதிமுறை மீறல்கள் இருப்பது தெரியவந்ததால் குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பல குவாரிகளிலும் விதிமுறைகளை மீறி கனிம கடத்தல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த டாரஸ் லாரிகள் இரண்டும் நெல்லை தொகுதியின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது[11]. அதனால் போலீஸார் அவரையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால், தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த தினகரன், தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே, பிடிபட்டது 9 லாரிகள் என்றும் அவற்றை விடுவிக்குமாறு தி.மு.க-வின் மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்ததால் ஏழு லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பழவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்[12]. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, அந்தத் தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்>

பின்னணியில் அ.தி.மு.க.,திமுக எம்.பி குற்றச்சாட்டு: இவ்வழக்கு குறித்து எம்.பி., ஞான திரவியம் கூறியதாவது[13]: “காட்ப்ரே நோபுள், அடியாட்களுடன், டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கும், சி.எஸ்.ஐ., சபையினருக்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ கிடையாது. திருமண்டலத்தைச் சேர்ந்த ஜானிடம் தகராறு செய்யும் நோக்கத்தோடு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெனி தலைமையில், 30 பேருடன் டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கேள்விப்பட்டேன். சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் நான், சம்பவ இடத்தில் இல்லை. அப்படி இருந்தும், காட்ப்ரே நோபுள் புகார் அடிப்படையில் காவல் துறையினர்.

எந்தவித விசாரணையும் இன்றி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, அதில் என்னையும் சேர்த்துள்ளனர். இது, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காட்ப்ரே நோபுள், அ.தி.மு.க.,வுக்கு மிகவும் சாதகமானவர். அவர் ஏற்கனவே, ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் மற்றும் 2021 சட்டசபை பொது தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு பணியாற்றிஉள்ளார். அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவரை, தற்போதைய பிஷப்பும், அ.தி.மு.க, ஒன்றிய செயலருமான, கே.பி.கே.செல்வராஜ், அ.தி.மு.க., பகுதி செயலர் ஜெனி ஆகியோர், பின்னால் இருந்து இயக்கி வருகின்றனர். பிஷப்பும், இவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்பது தான் உண்மை,”இவ்வாறு தெரிவித்து உள்ளார்[14]..

2022லிருந்து தொடரும் கனிமவள கொள்ளை புகார்: அனுமதியின்றி கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிமவளம் கடத்திய தி.மு.க., – எம்.பி., ஞானதிரவியம் மகன் தினகரன் கைதாவாரா என, கேள்வி எழுந்துள்ளது[15]. ஏற்கனவே, பொதுமேடையில் கலெக்டருடன் மோதல் ஏற்படுத்திய தி.மு.க., – எம்.பி., மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். லாரிகளின் உரிமையாளர் திருநெல்வேலி தி.மு.க., – எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் தினகரன் என்பதால், போலீசார் ஆவணங்களை காண்பித்துவிட்டு எடுத்துச் செல்லும்படி கூறினர்[16]. லாரி உரிமையாளர் தினகரன் உடனடியாக வரவில்லை. அவர் மீது, 379 பிரிவில் மணல் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். தற்போது டிரைவர்கள் இருவரும் கைதாகி சிறையில் உள்ளனர். தி.மு.க., – எம்.பி., மகன் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மாவட்ட நிர்வாகம் மீது கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சமீபத்தில் திருநெல்வேலி வந்த முதல்வர் ஸ்டாலினிடம் புகார் அளித்தும், பிரச்னை அவருக்கு எதிராகவே திரும்பியது.அவரது மற்றொரு மகன் ராஜா மீதும் லாரி மணல் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், தற்போது தினகரன் மீதும் மணல் திருட்டு வழக்கு, போலீஸ் தேடல் என, சர்ச்சை தொடர்கிறது.

© வேதபிரகாஷ்

28-06-2023


[1] தமிழ்.நியூஸ்.18, பாதிரியார் மீது தாக்குதல்திமுக எம்பி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, Published By :Arunkumar A, TIRUNELVELI, First published: June 27, 2023, 10:30 IST, LAST UPDATED : JUNE 27, 2023, 10:30 IST.

[2]  https://tamil.news18.com/tirunelveli/5-case-filed-against-dmk-mp-gnana-thiraviyam-reason-for-attack-nellai-father-1038153.html

[3] தமிழ்.இந்து, சிஎஸ்ஐ திருமண்டல மோதல் விவகாரம் | திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு, செய்திப்பிரிவு, Published : 27 Jun 2023 11:52 AM, Last Updated : 27 Jun 2023 11:52 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1027770-case-registered-against-33-people-including-dmk-mp-gnana-dhiraviyam.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சிஎஸ்ஐ மதபோதகர் மீது தாக்குதல்.. நெல்லை எம்.பி ஞானதிரவியம் மீது திமுக நடவடிக்கை.. பாய்ந்த வழக்கு, By Jeyalakshmi C Updated: Tuesday, June 27, 2023, 12:01 [IST]

[6] https://tamil.oneindia.com/news/thirunelveli/attack-on-csi-preacher-dmk-action-against-mp-gnana-thiraviyam-of-tirunelvely-police-booked-518539.html

[7] தினமணி,  மத போதகா் மீது தாக்குதல்: எம்.பி.க்கு திமுக நோட்டீஸ், By DIN  |   Published On : 28th June 2023 01:56 AM  |   Last Updated : 28th June 2023 01:56 AM

[8] https://www.dinamani.com/tamilnadu/2023/jun/28/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-4028548.html

[9] விகடன், என் மீது எந்தத் தவறும் கிடையாது!” – சி.எஸ். விவகாரம் தொடர்பாக ஞானதிரவியம் எம்.பி விளக்கம், பி.ஆண்டனிராஜ், Vikatan, Published:27-06-2023 at 4 PM’ Updated: 27-06-2-23 at 4 PM

[10] https://www.vikatan.com/crime/dmk-mp-gnanadiraviyam-clarification-on-the-tirunelveli-csi-issue

[11] விகடன், கனிம கடத்தல் வழக்கு! – நெல்லை எம்.பி மகன் தலைமறைவு, பி.ஆண்டனிராஜ் Published:15 Sep 2022 8 PMUpdated:15 Sep 2022 8 PM

[12] https://www.vikatan.com/government-and-politics/nellai-mp-son-booked-for-the-mineral-smuggling-case-and-he-is-absconded

[13] தினமலர், திமுக  எம்.பி மீது 5 பிரிவுகளில் வழக்கு, Updated: juun 28, 2023; 00:01; juun 27, 2023 23:55.

[14] https://www.dinamalar.com/news_detail.asp?id=3359892

[15] தினமலர், மணல் கடத்தல், குவாரிகளால் சர்ச்சைகளில் சிக்கும் தி.மு.., – எம்.பி., ஞான திரவியம், மாற்றம் செய்த நாள்: செப் 17,2022 06:48.; https://m.dinamalar.com/detail.php?id=3125004

[16] https://m.dinamalar.com/detail.php?id=3125004

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுவது, மதம்-உயர்வு, ஜாதி-கீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! ஆனால் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது! (2)

மே 7, 2023

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுவது, மதம்உயர்வு, ஜாதிகீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! ஆனால் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது! (2)

எம்பிக்கள் பிஜேபிதிமுக என்றால், வாதவிவாதங்களும் இந்துஇந்துவிரோதமாக இருக்கலாமா?: பிறகு இடவொதிக்கீடு ஏன் என்று திமுக கேட்க வேண்டும். அம்பேத்கரை எதிர்க்க வேண்டும். ஆனால், மனுதாரர் பாஜக பின்புலம் கொண்டவர்[1]. இவ்விவகாரம் தொடர்பாக அவர் தாக்கல் செய்த 4 மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன[2] என்று குறிப்பிடுவதும் விசித்திரமானதே. ஏனெனில் இவரே திமுக எம்பி தான், இப்பொழுது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்குதல் செய்தாலும், “திராவிட மாடல்” என்றெல்லாம் குறிப்பிட்டு அரசியல் ரீதியிலான பதில் தான் பதிவு செய்துள்ளார். சூசை தீர்ப்பையும் மறக்கிறார் / மறைக்கிறார்.. பழைய கோர்ட்-கட்டுகளை பிரித்துப் பார்ப்பாரா அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பாரா? இல்லை, “திராவிட ஸ்டாக்கில்” இதெல்லாம் சகஜமப்பா என்பாரா? வக்கீல் என்ற முறையில் பாரபட்சம் இல்லாமல் பிரச்சினையை அணுக வேண்டும் என்பது கூட இல்லாமல் பதில்-மனு சமர்ப்பித்து இருப்பது தெரிகிறது.

கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை: வில்சன் தொடர்கிறார், “மதம் சார்ந்த விஷயங்களில் மாநிலங்களுக்கு அதிகாரமில்லை[3].  தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை. நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது[4]. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்டாய மதமாற்ற சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றார். இதுபோன்ற செயல்கள் மதம் சார்ந்தவர்களை புண்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறப்படுவது பொய்யான தகவல்; [பெரியாரிஸத்தில் இதெல்லாம் எப்படி வரும் என்று தெரியவில்லை. ஒருவேளை, இந்து மதம் இல்லை என்றால், அதெல்லாம் வரும் போலிருக்கிறது] கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை[5]. [ஆனால், மதம் மாறியவர்களுக்கு இடவொதிக்கீடு தேவை] அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தங்கள் மதத்தை பரப்புவதில் எந்த தவறும் இல்லை[6] [அதை, பகுத்தறிவு எப்படி ஒப்புக் கொள்கிறது, பெரியாரிஸம் ஏற்றுக் கொள்கிறது என்று தெரியவில்லை]. மதத்தை பரப்ப சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்[7] [இப்படியெல்லாம் கூட மனு தாக்கல் செய்யலாம் போலிருக்கிறது]. மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. எனவே மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்ட இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்[8]., என்றெல்லாம் வக்காலத்து வாங்குவதை கவனிக்க வேண்டும்.

இனி தீர்ப்பு எப்படி என்று பார்க்க வேண்டும்: லாவண்யாவின் தற்கொலை குறிப்பில், விடுதி காப்பாளர் வழங்கிய கூடுதல் வேலைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. என்ன சட்டம் இயற்ற வேண்டும் என்பதை சட்டமன்றத்துக்கு விட்டுவிட வேண்டும் என்றும், என்ன சட்டம் வேண்டும், எது வேண்டாம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும் எனவும், தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதெல்லாம் தெரியும், ஆனால், இது மட்டும் தெரியாது என்பதெல்லாமும் வேடிக்கை தான். தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என்றும், மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

அவர்கள் கடவுள் ஏசு எப்படி ஜாதியை ஏற்றுக் கொள்கிறார்?: ஜாதிகளை வைத்துக் கொண்டு கடவுளர்களை ஏமாற்றும் கிருத்துவம், இஸ்லாத்தையும் சேர்த்துக் கொள்கிறது! ஆமாம், தலித் என்று பேசும் பொழுது, முஸ்லிம்களும் சேர்ந்து கொள்கிறார்கள். சச்சார் கமிட்டி போர்வையில், முஸ்லிம்களும் கேட்கத்தான் செய்கிறார்கள். கருணாநிதி கொடுத்த 3.5% உள்-ஒதிக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். ஓபிசியும் கிடைக்கிறது. ஆக எஸ்சி தான் இறுதி இலக்கு போலும். இப்பொழுது, “ஆதிதிராவிடர்” எனும் பொழுது, அமைதியாக இருக்கிறார்கள் போலும். கிருத்துவர்களுக்கு கொஞ்சம் கூட கிருத்து சொன்னது பற்றி கவலை இல்லை போலும். பொய் சொல்வதில் சளைத்தவர்களும் அல்லர். பணதையும், அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு, கூட செக்யூலர் அரசியல்வாதிகளை கைக்கூலிகளாக வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைக்கப் பெரும்பாடு பட்டுக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. சுப்ரீம் கோர்ட் சொன்னது, ஜாதி என்றாலே, இந்து மதத்திற்குரியதாகிறது, ஆகவே கிருத்துவர்கள் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடுக் கேட்கமுடியாது என்று சூசை -எதிர்- இந்திய அரசாங்கம் உச்சநீதி மன்ற தீர்ப்பில் எடுத்துக் காட்டியது.

கடவுளா ஜாதியா என்றால், ஜாதி என்று எப்படி கிறிஸ்துவர் செல்ல முடியும்?: ஆனால் கிருத்துவர்களோ, தம் மதத்தில் ஜாதிகள் உள்ளன இன்று பிரகடனப் படுத்துகிறார்கள். போதாக் குறைக்கு முஸ்லீம்களையும் கூட்டுக்கு அழைக்கிறர்கள். இப்பொழுது, ஸ்டாலினே வக்காலத்து வாங்கும் நிலைக்கு வந்தாகி விட்டது. அதற்காக தலித் கிருத்துவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களுக்கு தலித் அந்தஸ்து வேண்டும் என்று கேட்கிறார்கள்! அதாவது, கிருத்துவர்களாக மாறிய பிறகும், முஸ்லீம்களாகிய மாறிய பிறகும், அவர்களது கடவுளர்களான ஏசு / ஜேஹோவா மற்றும் அல்லா முதலியோரால் அவர்களை மாற்ற முடிவவில்லை போலும். அதாவது இவர்கள் அவர்களை ஏமாற்றுகிறார்களா அல்லது அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லையா என்பது தெரிந்தாக வேண்டும். ஏனெனில், இப்படி எல்லா கடவுளர்களையும் எல்லா நேரங்களிலிலும் ஏமாற்றி வருவது கேவலமானது! ஆனால், கிறிஸ்துவர்கள் இதைப் பற்றி கவலைப் படுகிறார்களா அல்லது பயப் படுகிறார்களா?

© வேதபிரகாஷ்

02-05-2023


[1] தினகரன், தஞ்சை மாணவி மரண விவகாரம்: தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு, May 1, 2023, 6:36 pm

[2] https://www.dinakaran.com/tanjore-student-death-issue-no-forced-conversion-supreme-court-tngovt/

[3] நியூஸ்.7.தமிழ், தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் இல்லைஉச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம், by Jeni, May 1, 2023.

[4] https://news7tamil.live/no-compulsory-religious-conversion-in-tamil-nadu-tamil-nadu-govt-explanation-in-supreme-court.html

[5] நக்கீரன், “தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் என்பது பொய்யான தகவல்” – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு, செய்திப்பிரிவு, Published on 01/05/2023 (11:42) | Edited on 01/05/2023 (11:52).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/india/forcible-conversion-tamil-nadu-false-information-tamil-nadu-governments-response

[7] தினமலர், தமிழகத்தில் கட்டாய மத மாற்றம் இல்லை“: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், Updated : மே 01, 2023 12:38 | Added : மே 01, 2023 12:35 …

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3309143

தர்மராஜ் ரசாலம் – பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ.. தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (1)

ஜனவரி 17, 2023

தர்மராஜ் ரசாலம்பிஷப்பின் ஊழல், சி.எஸ்.ஐ..தேர்தல், நீதிமன்ற வழக்கு மற்றும் தடை முதலிய இத்தியாதிகள்! (1)

சி.எஸ்.ஐ.யின் தொடரும் ஊழல்கள்: தென்னிந்திய திருச்சபை (Church of South India, CSI) என்றாலே, சண்டை, சச்சரவு, அடிதடி, ஊழல், பணம் கையாடல், செக்ஸ், பாலியல், என்று பற்பல விவகாரங்கள் அடிக்கடி ஊடகங்களில் வெளிவந்து கொண்டே இருக்கும். அதற்கும் / எதற்கும் அவர்களும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு பேராயர், பிஷப், பாஸ்டர் என்ற நிலைகளில் உள்ளவர்கள், யாதாவது ஒரு வழியில், பணம் வருகிறது என்பதை அறிந்து, அதனை தொடர்ந்து பெற்றுவர, அனுபவிக்க, வழிமுறைகளை உண்டாக்கி, சந்தோஷமாக காலம் தள்ளி வருகின்றனர். மாட்டிக் கொள்ளும் வரை ஜல்ஸா தான். பிறகும், எப்படியாவது வழி கண்டு பிடித்து, பழைய ரூட்டில் செல்ல திட்டம் போடுகிறார்கள். இது கிட்டத் தட்ட, தமிழக இந்து அறநிலைய அதிகாரிகளின் திட்டம் போலவே இருக்கிறது. இதில் யாரும் வெட்கப் படுவதில்லை, இறைத் தொண்டு, கடவுள் சேவை என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.  கடவுள் சொத்து, இறைவன் பணம், என்றெல்லாமும் யோசிப்பதில்லை. கிடைக்கும் வரை, கொள்ளையடித்துச் சென்று விடலாம் என்று தான், வேலை செய்து வருகின்றனர். அரசியல் வாதிகளின் தொடர்புகள் இருப்பதால் தப்பிக்கவும் செய்கின்றனர்.

கேரளாவில் பதிவாகியுள்ளது அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது” சென்னை உயர் நீதிமன்றத்தில், தென்னிந்திய திருச்சபையின் ஆயர் மன்றத்தின் (சினாட் கவுன்சிலின்) உறுப்பினர்களான கேரளாவைச் சேர்ந்த சுனில்தாஸ், ஜெயராஜ் உட்பட பலர் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திருச்சபை என்பது பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டது[1]. இப்படி எல்லா வழக்குகளிலும், தாக்கல் செய்யப் படும் ஆவணங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அதற்கேற்ற படி மோசடிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த திருச்சபையின் தலைமை பேராயராக கேரளாவைச் சேர்ந்த தர்மராஜ் ரசாலம் [Dharmaraj Rasalam [2]] பதவி வகித்து வருகிறார்[3]. தென்னிந்திய திருச்சபைக்கு பல லட்ச கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையில் உள்ளன[4]. தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நூறு சதவீதம் அரசு உதவி பெறும் சுமார் 2 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வாகம் செய்வது இந்த திருச்சபைத்தான்[5]. இவ்வாறு அரசு உதவி பெறும் நிலையில், அரசு தொடர்புகளும் இணைந்து விடுவதால், கோடிக் கணக்கான அசையா சொத்துகள் மற்றும் அவற்றின் மூலம் வரும் வருவாயை அனுபவிக்க திட்டம் தீட்டி செயல்ப்ட்டு வருகின்றனர். தலைமை பேராயர் தர்மராஜ் ரசாலத்தின் மீது முறைகேடு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளது[6]. அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது[7]. இவைப் பற்றியெல்லாம், கேரள பத்திரிக்கைகளில் தாராளமாகவே செய்திகள், விவரங்களுடன் வெளி வந்துள்ளன.

மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஊழல்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள காரக்கோணம் பகுதியில் சி.எஸ்.ஐ சபைக்குட்பட்ட டாக்டர் சோமர்வேல் நினைவு சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி உள்ளது[8]. இந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்றுவிட்டு, சேர்க்கையில் இடம் கொடுக்கவில்லை என சர்ச்சை எழுந்தது[9]. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் வெல்லறடை, மியூசியம் ஆகிய காவல்நிலையங்களில் புகார் கொடுத்தனர்[10]. இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது[11]. இவர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிஷப் தர்மராஜ் ரசாலம் பெயர் இல்லை[12]. தங்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக்கொடுத்த பிஷப்பின் பெயரே குற்றப்பத்திரிகையில் இல்லாததைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்[13]. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல் பிஷப் மற்றும் சபை நிர்வாகிகள் சிலர் சபைக்குத் தெரியாமல் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் திருச்சபையில் இருந்தே புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை அமலாக்கத்துறை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது.

குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது; முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டே போலி சாதிச் சான்றிதழ் வினியோகித்து பிஷப் தர்மராஜ் ரசாலம் முறைகேடாக 11 மாணவர்களுக்கு, மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்தச் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டது. இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் ஒழுங்குமுறைக் குழுவை கல்லூரியில் நடக்கும் மாணவர் சேர்க்கைக் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ராஜேந்திர பாபு என்பவரது தலைமையில் விசாரித்த அந்தக்குழு, பிஷப் தர்மராஜ் ரசாலம் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது. இந்தக் கல்லூரியில் அதிகக் கல்விக் கட்டணம் செலுத்தியும், பணம் கட்டியும் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களில் அதிக அளவில் தமிழ் மாணவர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை சோதனையில் இறங்கியது.

அமலாக்கத்துறை சோதனை; திருவனந்தபுரத்தில் பிஷப் இல்லத்தை உள்ளடக்கிய எல்.எம்.எஸ் வளாகம், சபையின் செயலாளராக இருக்கும் ப்ரவீன் என்பவரது இல்லம், காரக்கோணத்தில் இருக்கும் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, கல்லூரி இயக்குநர் பெனட் ஆப்ரகாம் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பெனட் ஆபிரகாம் கடந்த 2014-ம் ஆண்டு, திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் சசி தரூரை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு, மிக மோசமாகத் தோற்றவர் ஆவார். சர்ச்சிற்குள் இவருக்கும் மற்றவர்களுக்கும் சண்டை-சச்சரவு இருந்து வந்துள்ளது[14]. முன்னதாக இதுதொடர்பாக கல்லூரி மாணவர்களின் கட்டணம் தொடர்பாக புகார் கொடுக்கும் கல்விக்கட்டண நிர்ணய குழுவிலும் மாணவர்கள் புகார் கொடுத்திருந்தனர். அப்போது சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியை உள்ளடக்கிய சி.எஸ்.ஐ சபையின் பிஷப் தர்மராஜ் பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்துள்ளார்[15]. “மடியில் கனம் இல்லாதவர், வழியில் ஏன் பயப்பட வேண்டும்”என்பது போல் தவறு செய்யவில்லை என்றால் பிஷப் ஏன் எழுதிக்கொடுக்க வேண்டும் என கிடுக்குப்பிடி போட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், இவ்வழக்கில் நேரில் ஆஜராக பிஷப் தர்மராஜ் ரசாலத்திற்கு சம்மன் அனுப்பும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர்[16]. இதனிடையே மத நிகழ்ச்சி ஒன்றிற்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் பிஷப். அதற்கு முன் சம்மனை அனுப்பி கிடுக்குப்பிடி போடும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை[17]. ஜூலை 2022ல் இங்கிலாந்திற்கு ஓடிவிடலாம் என்று விமானநிலையத்திற்கு சென்றபோது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டு திரும்ப கொண்டு வரப்பட்டார்[18].

© வேதபிரகாஷ்

16-01-2023


[1] தமிழ்.இந்து, தென்னிந்திய திருச்சபை தலைமைப் பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்: முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை, ஆர்.பாலசரவணக்குமார், Published : 13 Jan 2023 07:20 PM, Last Updated : 13 Jan 2023 07:20 PM

[2] Dharmaraj Rasalam is a bishop in the Church of South India: he has been Bishop of South Kerala since 2011 and Moderator of the Church of South India since 2020. Rasalam was born in 1956 at Venganoor and educated at the University of Kerala. He was ordained in 1987. Since 2012, he has been implicated in various civil and criminal cases attributed to financial irregularities and abuse of power.

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/929008-election-for-posts-including-archdiocese-of-church-of-south-india-hc-interim-stay-on-declaring-results.html

[4] தினத்தந்தி, தென்னிந்திய திருச்சபை தேர்தல் முடிவை வெளியிட தடைஐகோர்ட்டு உத்தரவு, ஜனவரி 14, 4:52 am

[5] https://www.dailythanthi.com/news/state/prohibition-on-publication-of-south-indian-church-election-results-court-orders-878636

[6] காமதேனு, தேர்தல் நடத்தலாம், முடிவை வெளியிடக் கூடாது: தென்னிந்திய திருச்சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு, Updated on: 13 Jan, 2023, 8:10 pm

[7] https://kamadenu.hindutamil.in/national/madras-high-court-bans-declaration-of-south-indian-church-election-results

[8] காமதேனு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுதமிழக மாணவர்களிடம் வசூல் வேட்டை: கேரள பிஷப்க்கு அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி, என்.சுவாமிநாதன், Updated on : , 26 Jul, 2022, 12:25 pm

[9] https://kamadenu.hindutamil.in/national/kerala-bishop-accused-of-malpractice-in-medical-student-admissions

[10] தினத்தந்தி, மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார்: பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை, ஜூலை 27, 6:49 am .

[11] https://www.dailythanthi.com/News/India/complaint-about-collecting-donations-for-medical-studies-bishop-dharmaraj-rasalam-banned-from-traveling-abroad-755097

[12] தினமலர், மருத்துவக்கல்லுாரி நன்கொடை விவகாரம் சி.எஸ்.., பிஷப் வெளிநாடு செல்ல தடை, Added : ஜூலை 29, 2022  01:10

[13] https://www.dinamalar.com/news_detail.asp?id=3087430

[14] Kerala High Court – Rev. Bishop Dharmaraja Rasalam vs Rev. Dr. T.B Premjith Kumar, IN THE HIGH COURT OF KERALA AT ERNAKULAM,  PRESENT:  THE HONOURABLE MR. JUSTICE K.ABRAHAM MATHEW, FRIDAY ,THE 30TH DAY OF OCTOBER 2015/8TH KARTHIKA, 1937, OP(C).No. 2179 of 2015 (O),  OS 1065/2013 OF MUNSIFF COURT,THIRUVANANTHAPURAM.

https://indiankanoon.org/doc/167311449/?type=print

[15] Two years ago, the Kerala High Court cancelled the admission of 11 medical students enrolled on the basis of fake community certificates issued by the Bishop. In 2019, Kerala’s state admission fee regulatory committee also found that the college accepted exorbitant fees from some NRI students.

Hindusthan Times, Day after ED raids, Bishop Rasalam reaches airport for UK visit; turned back, India News, Published on Jul 26, 2022 03:21 PM IST.

[16] Later, some students from Tamil Nadu also filed a cheating complaint, alleging that they had to pay a huge amount to the college management for MBBS seats.

https://www.hindustantimes.com/india-news/day-after-ed-raids-bishop-rasalam-reaches-airport-for-uk-visit-turned-back-101658829073912.html

[17] The Hindu, Emigration officials at the Thiruvananthapuram airport prevent CSI bishop from leaving for UK, G ANAND, July 26, 2022 11:37 am | Updated 05:49 pm IST – Thiruvananthapuram

[18] https://www.thehindu.com/news/national/kerala/emigration-officials-at-the-thiruvananthapuram-airport-prevent-csi-bishop-from-leaving-for-uk/article65684345.ece

சி.எஸ்.ஐ / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆனதும், ஜாதியப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதும்! –மதமா, ஜாதியமா, இறையியலா, எது?

ஓகஸ்ட் 19, 2022

சி.எஸ்.ஐ / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆனதும் ஜாதியப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதும்! – மதமா, ஜாதியமா, இறையியலா, எது?

இறையியல் ரீதியாக கிருத்துவ மதமாற்றம் தோற்றது: கிருத்துவ மிஷினரிகள் இந்தியர்களை / இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற போக்கு, கொள்கை மற்றும் சமூக அடக்குமுறை போர்ச்சுகீசியர் காலத்திலேயே கொடியமுறையில் பின்பற்றப் பட்டு வந்தது. சுதந்திரம் பெற்றப் பிறகு, கோடிக் கணக்கில் இருக்கும் சொத்துக்களை அனுபவிக்க, கத்தோலிக்கம் மற்றும் கத்தோலிக்கர் அல்லாத என்ற பிரிவுகளாகப் பிரிந்து, ஆளுமையை, அதிகாரத்தை, கட்டுப்பாடுகளை தங்களுக்குள் தக்க வைத்துக் கொண்டனர். பெரும்பாலும், வெள்ளைக்காரர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள், உயர்ஜாதி-கிருத்துவர்கள் என்று தான் பெரிய பதவிகளில் தங்களை நிலைநிறுத்துக் கொண்டு, அனுபவித்து வந்தனர். எஸ்.சி, எஸ்.டி போன்றோரை ஏமாற்றி மதம் மாற்றினாலும், மறுபடியும், சர்ச்சிற்குள் இருக்கும் இறையியல் சித்தாந்த ரீதியில், இருக்க வேண்டிய கட்டுப் பாட்டை அறிந்து-புரிந்து கொண்டனர். “விடுதலை இறையியல்” எல்லாம் பொய்த்துப் போய், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் முடிந்தன. இதனால், சர்ச்சில் இருக்கும் அத்தகைய இறையியல்-ஜாதியினரை எதிர்க்க ஆரம்பித்தனர்.  கத்தோலிக்கக் கிருத்துவ ஆதிக்கத்தினர் மட்டும் ஆதிக்கம், பணம், அதிகாரம் முதலியவற்றை ஐத்துக் கொண்டு, இந்திய ஜாதியம், வர்ணாஷ்ரமம் என்றெல்லாம் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தது. ஆனால், உண்மை வெளிவந்தது. சூசை தீர்ப்புக் கூட அவர்களது முகமூடியைக் கிழித்தது. இருப்பினும், அம்பேத்கரின் ஆணையினையே எதிர்க்க முற்பட்டனர்.

பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் திருத்தம் கொண்டு வர முயற்சி: பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் உள்ள பிரிவை மாற்ற வேண்டும் என்று போலித் தனமாக போராட்டங்களை நடத்தி, திசைத் திருப்பப் பார்த்தது. ஆனால், அது இந்துக்களுக்கு என்பது சட்டரீதியாக எல்லோருக்கும் தெரியும். இதனால், எஸ்.சி மற்றும் மதம் மாறிய எஸ்.சி-கிருத்துவர்களிடையே துவேசம், எதிர்ப்பு, மோதல்கள் கூட ஏற்பட்டன.  இருப்பினும், ஆகஸ்ட் 10 அன்றை கருப்புநாள் என்று கொண்டாடுவோம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். இதனை, பொதுவாக யாரும் கண்டுகொள்வதில்லை என்றாலும், தங்களது அரசியல், பலம், பணம், அனைத்துலக சக்தி முதலியவற்றின் மூலம், இந்திய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன.. பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் திருத்தம் கொண்டு 2/3 எம்.பிக்களின் ஆதரவு தேவை. ஒரு முறை, பிஜேபி எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்து, கையெழுத்துப் போட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.  எஸ்ரா சற்குணத்திற்குப் பிறகு, இன்னொரு எஸ்.சி கிருத்துவர் பிஷப் ஆவது, அடக்கித் தான் வாசிக்கப் பட்டுள்ளது.

சி.எஸ். / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆகியுள்ளார்: தென்னிந்திய திருச்சபையின் அங்கமாக மதுரை- இராமநாதபுரம் மண்டல 7வது பேராயராக பாதிரியார் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் 17-07-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டார்[1]. மதுரை-ராமநாதபுரம் திருமண்டல பேராயா் ஜோசப்பின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவா் அண்மையில் ஓய்வு பெற்றார்[2]. இதைத்தொடா்ந்து புதிய பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் []Jeyasingh Prince Prabhakaran தோ்ந்தெடுக்கப்பட்டார்.  இவ்விழாவில், சிறப்புத் திருப்பலி ஆராதனையைத் தொடா்ந்து மதுரை-ராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருநிலைப்படுத்தப்பட்டார்[3]. தென்னிந்திய திருச்சபையின் தலைமைப் பேராயா் ஏ.தா்மராஜ் ரசலம் புதிய பேராயருக்கு அருட்பொழிவு செய்து திருநிலைப்படுத்தினார்[4]. முன்னதாக மதுரை நரிமேடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து தென்னிந்திய திருச்சபையின் மதுரை இராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் முறைப்படி ஆராதனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து திருச்சபையின் பேராயர்கள் அவருக்கு வெள்ளி செங்கோல் மற்றும் மோதிரத்தை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பிற மாநிலங்களை சேர்ந்த 11 பேராயர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்சி / தலித் பிரச்சினை கிருத்துவமத உள்விவகாரம் ஆகிவிட்டது: வின்சென்ட் மனோஹரன் ஒரு தலித் பிஷப்பாக பதவி ஏற்பதை பாராட்டி, அதே நேரத்தில், சர்ச்சிற்குள் இருக்கும் ஜாதீயத்தை ஒழிக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[5]. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இவ்விசயத்தில் போராட வேண்டும் என்று வற்புருத்தி பேசினார்[6]. ஏற்கெனவே மற்ற சர்ச்சுகளிலும் இப்பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது. மதம் மாறி எஸ்சி அந்தஸ்து இழப்பதால், பல கிருத்துவர்கள் அதம் மாறியும், சலுகைக்காக, இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அடிக்கடி அவர்களுக்குள் பிரச்சினை ஏர்ப்ட்டு மோதல்களில் முடிகின்றன. கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், ஏற்கெனவே எண்ணிக்கை ரீதியில் சலுகைப் பெற்று வருவதால், “உள்-ஒதுக்கீடு” கூட தேவையில்லை என்று அறிவித்துள்ளதை ஞாபகத்தில் கொள்ளலாம். எனவே, இந்துக்களாக இருந்தே எஸ்சி சலுகைகளை அனுபவிக்கலாம், சமூகப் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம் என்ற கருத்து கூட வலுப்பட்டு வருகிறது.

சர்ச்சிற்குள் இருக்கும் ஜாதியப் பிரச்சினைமே 2022: தலித் கிறிஸ்தவர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் மருத்துவர் மேரிஜான் தலைமையில் மே 15, 2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 18 மறை மாவட்டத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இயக்கத்தைச் சார்ந்த பல்வேறு வளர்ச்சி நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநில தலைவர் டாக்டர் மேரிஜான் கூறியதாவது[7]:- “தலித் கிறிஸ்தவர்கள் பிரச்சனை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக திருச்சபையில் இந்த இயக்கம் சமத்துவம் சம உரிமை பெற போராடிக் கொண்டிருக்கிறது. திருச்சபை அதிகாரிகள் இதுவரை தீர்வு காணவில்லை. இந்திய ஆயர் பேரவை, இந்திய கத்தோலிக்க பேரவையும் அறிவித்த கொள்கைப்படி தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், உயர்பதவிகளில், ஆயர் பதவிகளில் 64% வழங்காமல் இன்றும் ஏமாற்றி வருகின்றனர். சமீபத்தில் தலித் கிறிஸ்தவர்கள் இதுவரை யாரையும் நியமிக்கவில்லை அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். தற்போது கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மன்ற மாவட்டத்தில் காலியாக உள்ள ஆயர் பதவிக்கு தலித் ஆயிரை நியமனம் செய்யவேண்டும், தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் அரசியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது,” இவ்வாறு கூறினார்[8].

மதமா, ஜாதியமா, இறையியலா, எது?: இந்நிலையில் தான், ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருமவளவனை ஆதரித்துப் பேசியதை வைத்து, “குமுதம் ரிப்போர்ட்டர்”  இக்கதையினை உருட்டியுள்ளது[9]. கிருத்துவ மதத்தில் மாறியும் சமத்துவம் ஏற்படவில்லை என்றால், அது அம்மதத்தின் பிரச்சினை ஆகிறது. ஏனெனில், பைபிளின் படி சமத்துவம் கிடையாது, எல்லோரும் ஒரே மாதிரி கிடையாது. மரம் வெட்டுகிறவன், மாம் வெட்ட வேண்டும்; தண்ணீர் இழுத்த்க் கொட்டுகிறவன், அந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன………. ஆரம்பத்திலிருந்தே, கிருத்துவத்தில் வேறுபாடுகள், சமூகக் கட்டமைப்புகள், இந்திய-ஜாதியத்தை விட இறுக்கமாக கட்டமைக்கப் பட்டுள்ளன. இதனை உலகெங்கும், எல்லா கண்டங்களிலும் பார்க்கலாம். வெள்ளையர் மற்றவர்களை அல வழிகளில் அடக்கி ஆண்டுதான், வருகிறார்கள். கருப்பினத்தவர்கள் தங்களது உழைப்பினை கடினமான காரியங்களில் காட்டித்தான் முன்னேறியுள்ளனர், பிரபலமாகியுள்ளனர். தங்களது, சமூக நிலை அல்லது சலுகை வைத்து முன்னேறி விடவில்லை. இன்று ஐ.டி-தொழிற்நுட்பம் என்றெல்லாம் பார்த்தாலும், வெள்ளையர் அல்லாதவர்கள் முதலாளிகளாக இருப்பவர் சிலரே. எனவே, இந்திய, அதிலும், தமிழகத்து நிலையில், இப்பிரச்சினையை திசைத் திருப்ப வேண்டிய அவசியம் இல்லை. சமூக முன்னேற்றத்திற்கு எது தேவை என்பதை அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஜாதிதான், எஸ்சி-அந்தஸ்து தான், இல்லை மதம் தான் என்றால், அவ்வாறே நேர்மையாக நம்பிக் கொண்டு இருக்கலாம். கடவுளை, முன்னோர்களை, பெற்றோர்களை, சொந்தக்காரர்களை, சமூகத்தினரை ஏமாற்ற வேண்டாம்.

© வேதபிரகாஷ்

19-08-2022


[1] டாப்.நியூஸ்.தமிழ், மதுரை ராமநாதபுரம் தென்னிந்திய திருச்சபையின் ஏழாவது பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார், By admin, July 18, 2022

[2] https://www.topnewsthamizh.com/jayasinghe-prince-prabhakaran-assumed-office-today-as-the-seventh-archbishop-of-madurai-ramanathapuram-church-of-south-india/

[3] தினமணி, தென்னிந்திய திருச்சபையின் மதுரைராமநாதபுரம் திருமண்டல பேராயா் பதவியேற்பு, By DIN  |   Published On : 17th July 2022 11:08 PM  |   Last Updated : 17th July 2022 11:08 PM. 

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/jul/17/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3881887.html

[5] First Dalit Bishop is appointed for Madurai – Ramnad, CSI Diocese, Tamilnadu< By Dalit Christian Digest -July 18, 2022.

[6] The National Dalit Christian Watch (NDCW), a National Platform which is committed to cleanse the Church and Society by annihilating caste and its inhuman oppressive dynamics mainly to ensure equality, justice and rightful space for Dalit Christians within Church and its Institutions, looks forward to the serious interventions by the newly appointed Bishop, who held several positions in this Diocese already, not only to perform his pastoral services but also through his prophetic voice and deeds to uphold justice and peace both within Church and Society, especially for the dignified life and rightful space of the Dalit Christians.

[7] சமயம்.தமிழ், ஆயர் நியமனத்தில் ஏமாற்றப்படும் தலித் கிறிஸ்துவர்கள்பகீர் தகவல்!, Govindaraji Rj | Samayam Tami, Updated: 16 May 2022, 5:21 pm

[8] https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/dalit-christian-liberation-movement-slams-for-the-bishop-appointment-in-trichy/articleshow/91572892.cms

[9]  டி. பாலமுருகன், சர்ச்சையில் மதுரை பேராயர்மதம் கசக்குது, சலுகை இனிக்கிதா?, குமுதம் ரிப்போர்ட்டர், 19-08-2022, பக்கங்கள்.14-15.

பேயோட்டிய கோவா கிருத்துவத் தம்பதியர், கைதானாலும், பெயிலில் வெளிவந்து விட்டனராம்! அல்லேலுயா!

மே 29, 2022

பேயோட்டிய கோவா கிருத்துவத் தம்பதியர், கைதானாலும், பெயிலில் வெளிவந்து விட்டனராம்! அல்லேலுயா!

கோவா கடற்கரை மாநிலம் எல்லாமே உண்டு போலும்: நாடு முழுவதும் பரவலாக மதமாற்றம் நடந்து வருகிறது என்பது தெரிந்த விசயமே. குறிப்பாக, கடற்கரை ஏரியாக்களில் வசிக்கும் கிராம மக்களை குறிவைத்து கிறிஸ்தவ மிஷனரிகள் தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவது கோவா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தொடர்கிறது. இதேபோல, இஸ்லாமிய அடிப்படைவாத சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், ஆனால், அவர்களது வழிமுறை அதிரடியாக, வேறு முறைகளிலும் இருக்கும். இதன் காரணமாக, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது, ஆனால் மத்திய-மாநில அரசுகள் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆகவே, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது, சில மாநிலங்களில் சட்டமும் அமூலில் உள்ளது. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடை தொடர்பாக, சட்டமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

கத்தோலிக்கப் பாதிரியின் பிரச்சாரங்கள்: கோவா மாநிலம் கத்தோலிக்கக் கிருத்துவத்திற்குப் பெயர் போனது. இடைக்காலத்தில், போர்ச்சுகீசியர் கைப் பற்றிக் கொண்டு, இந்துக்களை மதம் மாற்றினர். அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளில் அவர்கள் உள்ளனர். அரசியல், அதிகாரம் முதலியவற்றிலும் ஆதிக்கம் கொண்டுள்ளனர். பனாஜியைச் சேர்ந்தவர் டோமினிக் டிசோசா (Dominic D’Souza ). கிறிஸ்தவ பாதிரியாரான இவரது மனைவி ஜோன் மார்கெரினாஸ் (Joan Mascarenhas). இருவரும் வடக்கு கோவாவிலுள்ள சியோலிம் கிராமத்தில் கிருத்துவ பிரச்சாரம் செய்து வருகிறார். எப்பொழுதும் பாடல்கள், கொண்டாங்கள் என்று அதிரடி ஆர்பாட்டங்களுடன் பிரச்சார செய்வது வழக்கம்[1]. ஒலிபெருக்கிகளை வைத்து செய்யும் அட்டகாசங்களினால், அங்கிருக்கும் கிருத்துவர்களாலேயே பொறுக்க முடியாமல், புகார் கொடுத்துள்ளனர்[2]. அதற்காக முறையாக அனுமதியும்பெறுவதில்லை. முந்தைய முதலமைச்சருடன் தொடர்பு இருப்பதைப்  போலக் காட்டிக் கொண்டார்.

பேயோட்டிய தம்பதியர்: ரோமன் கத்தோலிக்க சமய மரபில் பேயோட்டுதல் ஒரு சடங்காகும் ஆனால் ஆனால் பாப்டிசம் அல்லது கன்ஃபெஷன் போலின்றி புனிதமானது கிடையாது ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவது கிடையாது. இப்பொழுது இது வியாபாரம் ஆகிவிட்டது. நம்புகிறவர்கள் வரத்தான் செய்கிறார்கள். புனிதச் சடங்கைப் போலின்றி பேயோட்டுதலின் “ஒருங்கிணைப்பும் விளைவுத் திறனும் மாறாத சூத்திரம் அல்லது அறிவுறுத்தப்படும் வரிசை முறையான செயல்களைப் பயன்படுத்துவதைப் பின்பற்றுல்லை. தகுதியுடைய, சட்டரீதியான தேவாலய அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் பெறுவது மற்றும் பேயோட்டுபவரின் நம்பிக்கை”ஆகியவையாகும். இப்போதும் கூட தற்போதைய அனைத்து பேயோட்டல் சடங்குகளிலும் கத்தோலிக்க பேயோட்டல் மிகக் கடுமையான, ஒழுங்கமைந்துள்ள ஒன்று என்றாலும், பாதிரிகள் செய்து வருவதை கவனிக்கலாம். தேவாலயத்தின் கெனான் சட்டப்படி, அதிகாரப்பூர்வமான பேயோட்டல் செயல்களை அதற்கென நியமிக்கப்பட்ட பாதிரியார் (அல்லது உயர் மதகுரு) மட்டுமே செய்ய முடியும் என்றாலும், பாதிரிகள் செய்து வருவதை கவனிக்கலாம், வீடியோக்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவரும் வெளுத்து வாங்குகிறார்.

சாமதானபேததண்ட முறைகள் கையாண்டது: பாதிரி மற்றும் மனைவி, ஜோடியாக அட்டகாசமாக, பாடல்களைப் பாடிக் கொண்டு கிராம சர்ச்சில் ஊழியம் செய்வார். கூட்டம் கூட்டுவார். இலவசமாகப் பொருட்களை கொடுப்பார். பேஸ்புக் போன்றவற்றிலும் அத்தகையப் புகைப்படங்களைப் போட்டுக் கொண்டு, விளம்பரம் செய்து கொள்வார். பலவித உடைகளை அணீந்து வலம் வருவார். சாமியார் போன்றூ தலைமுடி வளர்த்து, தொங்க விடுவார். சலிகோவா கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாகவும் கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். பணம் கொடுத்து மத மாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் மற்றும் அவரது மனைவியை கோவா போலீசார் கைது செய்தனர்[3]. டோமினிக் டி சூசா என்ற பாதிரியார் மற்றும் அவரது மனைவி ஜோன் ஆகியோர், பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாக கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக இரண்டு பேர் மபுசா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்[4].  குறிப்பாக பிரகாஷ் கோப்ரேகர் (Prakash Khobrekar) என்பவர், ஜோன் மார்கெரினாஸ், பலவிதமாக பேசி, ஆசை வார்த்தைகள் பேசி, சைகைகள் காட்டி ஏமாற்றி மதம் மாற்றினார் என்று விளக்கினார்[5]. அந்த நபரின் பெயர் வெளிப்படுத்தப் படவில்லை. மேலும் இந்துமதம் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளார். புகார் கொடுத்தால் ……..தகாத வார்த்தைகள் சொல்லி என்று மிரட்டியும் உள்ளனர் என்று குறிப்பிட்டார்[6]. இப்பொழுதெல்லாம், புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை என்று போலீஸார் கொள்கை பின்பற்றுவது தெரிகிறது. குற்றமே செய்தாலும், யாரும் புகார் செய்யவில்லை என்றால் அமைதியாக இருப்பார்கள் போலும்.

புகாரின் பேரில் கைது செய்யப் பட்டது: இதனையடுத்து அவர்கள் மீது முறையற்ற மருந்துகள் பிரயோகம் மற்றும் விளம்பரசட்டப் பிரிவுகளின் கீழ் [the Drugs and Magic Remedies (Objectionable Advertisement) Act.] இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன[7]. இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டது மற்றும் மத உணர்வுகளை சீண்டும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது[8]. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பனாஜி அருகேயுள்ள சலிகோவா கிராமத்தில் தங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர்[9]. பிறகு முறையாக நீதிபதியின் முன்பாக ஆஜர் படுத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[10].  ஆனால் 27-05-2022 அன்று பெயிலில் வெளியே வந்து விட்டதாகத் தெரிகிறது. முதலமைச்சரும் எச்சரிக்கை விட்டுள்ளார். ஆக அரசியல் நெருக்கடியும் வெளிப்படுகிறது. பிறகு என்ன, அல்லேலுய்யா என்று கத்திக் கொண்டு, வேலையை ஆரம்பித்து விடுவார்.

வேதபிரகாஷ்

28-05-2022


[1] Times of India, Siolim couple arrested for ‘conversions’, TNN / Updated: May 27, 2022, 07:46 IST.

[2] Domnic is not new to controversy and locals at Sodiem have been objecting to his activities frequently at the 5 Pillars Christian Church. The villagers had earlier alleged that Domnic was using loudspeakers without permission and was disturbing peace in the village. He would disturb prayer services at the local Catholic church, villagers had said. Loudspeakers and other sound system equipment had subsequently been seized by police from Domnic’s prayer house. He had, however, maintained that he had been running prayer activities for nearly two decades at his church.

https://timesofindia.indiatimes.com/city/goa/siolim-couple-arrested-for-conversions/articleshow/91821359.cms

[3] தினமலர், பணம் கொடுத்து மதம் மாற்ற முயற்சி: மனைவியுடன் பாதிரியார் கைது, Updated : மே 28, 2022  04:08 |  Added : மே 27, 2022.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3039512

[5] The Hindutan Times, Preacher couple arrested for alleged religious conversion in Goa, Published on May 26, 2022 11:22 PM IST.

[6] According to the complaint filed by one Prakash Khobrekar, D’Souza and Mascarenhas had induced an unnamed person to give up his religious belief and convert to the religion professed and propagated by them. “All the accused persons deliberately made gestures by uttering words, acts, threatened the complainant with the intention to hurt his religious sentiments and lured the complainant to accept the religion professed and propagated by them,” Khobrekar said in his complaint.

https://www.hindustantimes.com/cities/others/preacher-couple-arrested-for-alleged-religious-conversion-in-goa-101653587562506.html

[7] மீடியன் நியூஸ்,மதமாற்றம்: மனைவியுடன் பாதிரியார் கைது!, Karthikeyan Mediyaan News 29—05-2022.

[8] https://mediyaan.com/goa-poster-conversion-village-people-arrest/

[9] The Tmes Now, Goa: Police nab pastor, his wife for luring people into converting to Christianity,

Updated May 27, 2022 | 12:19 PM IST.

[10] https://www.timesnownews.com/india/goa-police-nab-pastor-his-wife-for-luring-people-into-converting-to-christianity-article-91828978

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

29-03-2022 அன்று நடந்த சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது[1]. இந்த கூட்டத்திற்கு தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்[2]. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன், ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரவீன்குமார் டாட்டியா, ப்யாரேலால் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது: கூட்டம் முடிந்த பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடப்பாண்டில், சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் மத மோதல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்”. அவர்களின் ஜனத்தொகைக்கு மேலாக, விகிதாச்சாரமே இல்லாத அளவுக்கு சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் படவேண்டும் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி கட்டி விட்டு, பிறகு, இந்துக்களில் விழாக்கள் அங்கு நட்த்தப் படக் கூடாது, ஊர்வலங்கள் செல்லக் கூடாது என்று பிரச்சினை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அத்தகைய கலவரங்கள் உண்டாக்கும் சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் பட வேண்டும்?

தனிப்பட்ட பிரார்த்தனை, வழிபாடுகளுக்கு பிரச்சினை இல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “மேலும், மக்கள் அவர்களின் இல்லங்களிலிருந்தோ, சில தனி இடத்தில் இருந்தோ வேண்டுதல்கள் செய்வதற்கு எவ்வித இடையூறுகளும் இருக்காது என்ற உறுதியை மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் அளித்துள்ளனர். அதே சமயம், சிறுபான்மையின மக்கள் ஆராதனை, வேண்டுதல் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். சமூக அமைதிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்ற ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் எந்த அளவுக்கு சமூக அமைதி நிலவுகிறதோ, அந்த அளவுக்கு இம்மாவட்டத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். சமூக அமைதியை சீர்குலைக்கவும், மக்களை மத ரீதியாக பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்யவும் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி”. எல்லாம் சரிதான், ஆனால், மைக்குகள் வைத்து தான் கலாட்டா செய்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்கள் செய்யும் கலாட்டாக்களை நகர்புறப் பகுதிகள், கிராமங்களில் கவனிக்கலாம். பது பேர் வந்து சப்தம் போட்டுக் கொண்டு, கத்திக் கொண்டு ஆர்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள். ஆளே இல்லாமல் இருந்தாலும், ஒலிப்பெருக்கியில் கத்தல்கள் வந்து கொண்டே இருக்கும்.

29-03-2022 அன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள், பள்ளிக்கூடம், வங்கி கிளை வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து கூறியது, “மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். சிறுபான்மை இன மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்களில் சிறுபான்மையின மக்கள் வசிக்கக்கூடிய சில பகுதிகள் விடுபட்டு உள்ளது. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மயானம் மற்றும் எரியூட்டும் மேடை ஆகியவை அனைவருக்கும் பொதுவானது. இங்கு செல்கின்றவர்கள் மத அடையாளங்களை துறந்துவிட்டு தான் செல்ல வேண்டும். முதல்வரின் எண்ணமும் அதுதான். மதத்தின் அடிப்படையில் சடங்குகளை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அவர்கள் சொந்த செலவில் கல்லறைகளை வைத்துக் கொள்ளலாம்,” இவ்வாறு அவர் கூறினார். கிருத்துவர் மற்றும் துலுக்கர்களுக்குத் தனியகத் தான் புதைக்க மயானங்கள் உள்ளன. ஆகவே, இதில் சமத்துவம், வெங்காயம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே குழப்பத்தை உண்டாக்க, இல்லை அவ்வாறு இடங்களை ஆக்கிரமிக்க வித்திடுவது போலிருக்கிறது.

 “அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது,”: என, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிவுரை வழங்கினார்[3]. அறிவுரை 2002ல் கூறினால் ஏற்றுக் கொள்வார்களா என்ன? 221லும் சொல்லியாகி விட்டது. ஆனால், அதே பிரச்சினைகள் தான் 2022லும் பேசப் படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது[4]. கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: “சிறுபான்மையின மக்களுக்கு உரிமை இருப்பது போல், கடமைகளும் உள்ளன. மாற்று சமூகத்தினருடன் இணைந்து அவர்களை வாழ வைக்க வேண்டும்; நாமும் அவர்களால் வாழ வேண்டும். பிற சமூக மக்களுக்கும் உதவிகளை செய்து, மனிதநேயம் மிகுந்த சமுதாயமாக மாற்ற வேண்டும். ஜாதி, மதத்தை மறந்து, எல்லாரும் தமிழர்களாக ஒன்றிணைந்து, எழுந்து நிற்க வேண்டும்.அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி, அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது. கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்ற பின் கட்ட வேண்டும். மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, மத பிரசாரம் செய்வது போன்ற பணிகளை தவிர்க்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் கோரிக்கையின் மீது, மாவட்ட நிர்வாகம், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் பேசினார்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலாக இருந்த இடத்தில் தற்போது கட்டிட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று கேட்டு புகார் எழுந்தால் மாவட்ட நிர்வாகம் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். புறம்போக்கு நிலத்தில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் கட்டி விட்டு அதற்கு அனுமதி தாருங்கள் என்று அரசிடம் கேட்டால் இப்போது அனுமதி கொடுக்க அரசு சட்டத்தில் இடமில்லை. புறம்போக்கு இடம், அரசுக்கு சொந்தமான நீர்வழிப்பாதை, நீர்ப்பிடிப்பு பகுதி, மேய்ச்சல் புறம்போக்கு போன்ற நிலங்களில் தனியாருக்கோ, வழிபாட்டுக்கோ கொடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நினைத்தால் கூட விதியை தளர்த்த இடமில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்பதே விவகாரமாக உள்ளது. அப்படியென்றால் அதில் பிரச்சினை உள்ளது. “யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி” என்பதே கேலிக் கூத்தானது, அதாவது, அவர்களது சர்ச்-மசூதிகளும் சட்ட் விரோதமானது, போதாக்குறைக்கு அவற்றினுள் வழிபாடு செய்யாமல், பொது இடங்களில், தெருக்களில் செய்வார்கள் போலும், அதற்கும் அனுமதி கேட்பார்கள் போலும், இதெல்லாமா சமத்துவம், சமதமம், செக்யூலரிஸம். பீட்டர் அல்போன்ஸுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1] தமிழ்.இந்து,  மத ரீதியாக மக்களிடம் பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர்பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு, டி.ஜி.ரகுபதி, Published : 29 Mar 2022 22:04 pm; Updated : 29 Mar 2022 22:04 pm.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/782764-some-are-trying-to-divide-the-people-religiously-and-do-politics-accuses-peter-alphonse.html

[3] தினமலர், அரசு நிலத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாதுசிறுபான்மையினர் ஆணைய தலைவர் அறிவுரை,  Added : மார் 31, 2022  00:52.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2995988

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? – கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

மார்ச் 30, 2022

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

பிரான்சிஸ் கலிஸ்ட் உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டது எஸ்சி கிருத்துவ எதிர்ப்பு: பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) என்ற உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்-புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டிருப்பதால், எஸ்.சி கிருத்துவ அமைப்பினர் அதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய அறிவித்தனர்[1]. தலித் கிருத்துவ விடுதலை இயக்கம் (Dalit Christian Liberation Movement, DCLM) ஏப்ரல் 11 மற்றும் 29 தேதிகளில் புதுச்சேரியில் ஆர்பாட்டம் செய்யப் போவதாக கூறினர்[2]. ஜார்ஜ் அந்தோனிசாமி அந்தோனி பாப்புசாமி போன்ற பிஷப்புகள் எஸ்சியினர் பிஷப்பாக வரக்கூடாது என்று வேலை செய்து வருகின்றனர்.  வெள்ளாலர், உடையார், வன்னியர், நாடார், மீனவர் என்று மாறி-மாறி  பிஷப் பதவிக்கு வருவதாக இருந்தது. ஆனால், இப்பொழுது, தொடர்ந்து உயர் ஜாதியினரே பிஷப்பாக வந்து கொண்டிருக்கின்றனர். 1980களிலிருந்து போராடி வந்தாலும் கண்டுகொள்ளாமல் அடக்கியாண்டு வருகின்றனர்[3]. ஆனால், அவர்கள் மேடைகளில் பேசும் பொழுது, ஏதோ சமத்துவத்தி உண்டாக்கி விட்டது போல பேசுவார்கள்.  இவரை எதிர்த்து சர்ச்சுகளில் கருப்புக் கொடி ஏற்றினர்[4]. கருப்புக் கொடி காட்டியும் எதிர்ப்புத் தெரிவித்தனர்[5]. ஆனால், கத்தோலிக்க சர்ச் கண்டுகொள்ளவில்லை.

வாடிகன் செய்தி கூறுவது 19-03-2022[6]: ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 2008ம் ஆண்டில் மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்[7]. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, இந்நாள்வரை மீரட் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்[8]. 1957ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, தமிழகத்தின், கோட்டாறு மறைமாவட்டம் ரீத்தாபுரம் என்ற ஊரில் பிறந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 1982ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப் படுத்தப்பட்டார்[9]. 2008ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட்.  1776ம் ஆண்டில் பாண்டிச்சேரி மறைத்தளம் உருவானது. பின்னர், அது 1836ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று, கிழக்கு கடற்கரை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவானது. 1886ம் ஆண்டில், பாண்டிச்சேரி மறைவட்டம், உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, இது, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது. 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,151,891ஆக இருந்தது. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக, 17 ஆண்டுகள் பணியாற்றி 2021ம் ஆண்டு சனவரி மாதத்தில் ஓய்வுபெற்ற பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்கள், 2021ம் ஆண்டு மே 4ம் தேதி, கோவிட்-19 பெருந்தொற்றினால் இறையடி சேர்ந்தார்.

2020ல் எஸ்.சி கிருத்துவ கூட்டங்கள் கோரிக்கைகள்: மறை மாவட்டங்களில் காலியாகவுள்ள பேராயா் உள்ளிட்ட உயா்நிலைப் பதவியிடங்களுக்கு, தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வேண்டுமென தேசிய தலித் கிறிஸ்தவக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது[10]. இத்தகைய கூட்டங்கள் 1980களிலிருந்து நடந்து வருகின்றன. இவற்றைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸில் அதிகமாகவே செய்திகள், வஆகர் கடிதங்கள் என்று காரசாரமாக வாத-விவாதங்கள் நடந்தன. அவற்றில் கத்தொலிக்கச் சர்ச்சின் இரட்டை வேடங்கள், பிஷப்புகளின் ஜாதிய நாடகங்கள், “தலித்” போர்வையில் நடந்த பேரங்கள் என்றேல்லாம் வெளி வந்தன. தீவிரமாக போராடிய, அப்படி காட்டிக் கொண்டவர்கள் எல்லோரும் இப்பொழுது அமைதியாகி, சந்தோசமாக உள்ளனர்[11]. திருச்சியில் 2020ல் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில்[12], தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் தேசியச் செயலா் ஈ.டி.சார்லஸ் கூறியது: “தமிழகத்தில் தலித் கிறிஸ்வ மக்கள் சுமார் 80 சதவிகிதம் போ் கிறிஸ்தவ அமைப்பில் அங்கம் வகிக்கின்றனா். தேசிய அளவில் கத்தோலிக்க திருச்சபையை நிர்வாகம் செய்யும் 188 (பிஷப்) பேராயா்களில், 11 போ் மட்டுமே தலித் கிறிஸ்தவ இனத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். அதேபோல தமிழகத்திலுள்ள பேராயா்களில் (பிஷப்) களில் ஒரேயொரு தலித் கிறிஸ்தவா் மட்டுமே பதவி வகித்து வருகிறாா். கடந்த 14 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டவா்களில், ஒரு தலித் கிறிஸ்தவா்கூட பேராயராக நியமிக்கப்படவில்லை. வெற்றிடமான பேராயா் பதவிகளுக்காக வாடிக்கனிலுள்ள போப்புக்கு பெயா் பரிந்துரைக்கும் போது, தீண்டாமை அடிப்படையில் தலித் குழுக்கள் பெயா்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை என பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் கூறிவருகின்றன. மேலும் வர இருக்கின்ற கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களின் பெயா்களைப் பரிந்துரை செய்யவும், புதுச்சேரி மற்றும் கடலூா் மறை மாவட்டங்களில் உயா் பதவிக்கு தலித் சமூகத்தினரை நியமனம் செய்ய பரிந்துரைக்க வேண்டும். சாதி, தீண்டாமை அடிப்படையில் பேராயா் பணிக்குழுக்களுக்கு பெயா்களைப் பரிந்துரை செய்வதைக் கண்டித்தும், தற்போது வெற்றிடமாக உள்ள ஆறு இடங்களில் 2 இடங்களில் தலித்துகளை பேராயராக நியமனம் செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா் 27-ஆம் தேதி 2020 திருச்சியில் அனுமதி கிடைக்கும் இடத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார். பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனா்- தலைவா் குடந்தை அரசன், மாவட்டத் தலைவா் அக்பா் அலி, தமிழ்நாடு தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. ஜான்சன், மாநிலத் தலைவா் சி. ஆரோக்கியதாஸ், கிறிஸ்தவ மக்கள் களத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பெ.பெலிக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

1980-2022 காலாட்டங்களில் கிருத்துவ ஜாதியம் மாறவில்லை: “தலித்” என்று சொல்லிக் கொண்டு கிருத்துவர்கள் அதிகமாகவே ஏமாற்றி வருகின்றனர். இப்பொழுதும், ஊடகங்கள் அவ்வார்த்தை பிரயோகம் கூடாது என்றாலும், வேண்டுமென்றே உபயோகித்து வருகின்றது. பிஜேபியும் சில நேரங்களில் இதற்கு ஆதரவு காட்டுவதால், குளிர் விட்டுப் போய், அப்பிரயோகம் மறுபடியும் அதிகமாகி விட்டது. எஸ்.சிக்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே சமூக, பொருளாதார, சமய நிலைகளில் இல்லை. அவர்களிலும் உயர்வு-தாழ்வு போன்ற உரையாடல்கள், பகிர்வுகள் மற்றும் நிலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மற்றும் சட்டவிதி 341 (1) மற்றும் (2)ல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு பட்டியல் இடப்பட்ட பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்களை வகைப்படுத்த / நுண் பகுப்புச் செய்யப்பட, அந்தந்த மாநில கவர்னருடன் கலந்தாலோசித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு ஆணை மூலம் அனுமதி வழங்கலாம்.

அரசியலாக்கப் படும்தலித்பிரச்சினை: தலித் போர்வையில் மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர் குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரம் உண்டாக்கி வருகின்றனர். “தலித் கிருத்துவர்,” மற்றும் “தலித் முஸ்லிம்” என்று கூறிக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர். உண்மையிலேயே கிருத்துவம் மற்றும் இஸ்லாம்/ முகதியம் அவர்களுக்கு சமத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றால், அந்த ஜேஹோவா, ஏசு, மேரி, அல்லா, முகமது கடவுளர்கள் அவர்களை ஏமாற்றி விட்டன என்றாகிறது. அதேபோல, “ஏல்லோரும் ஒன்று, எந்தவித வேறுபாடும் இல்லை” என்பதெல்லாம் பொய் என்றாகிறது. 2008லேயே எஸ்-எஸ்டி ஆணையம், தலித் என்ற பிரயோகம் சட்டப்படியும், இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படியும் செல்லாது என்று அறிவித்தது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயமாகி விட்டது. செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது,  மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்கவில்லை என்று விளக்கியது. இதனால், உண்மையினை மறைத்து, கிருத்துவ இயக்கங்கள் இந்துமதத்தினைத் தாக்கி வர்கின்றன.

©  வேதபிரகாஷ்

30-03-2022


[1]  The Hindu, Dalit Christians to protest appointment of non-Dalit Bishop as Archbishop of Archdiocese of Tamil Nadu and Pondicherry, Udhav Naig, CHENNAI, MARCH 29, 2022 20:52 IST; UPDATED: MARCH 29, 2022 20:52 IS.

[2] https://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-christians-to-protest-appointment-of-non-dalit-bishop-as-archbishop-of-archdiocese-of-tamil-nadu-and-pondicherry/article65271233.ece

[3] Members of the Dalit Christian Liberation Movement on Tuesday said they would launch a protest against the appointment of non-Dalit Bishop Francis Kalist as the Archbishop of Archdiocese of Cuddalore-Pondicherry in Puducherry on April 11 and April 29, when he would be consecrated as the Archbishop, citing the ‘discriminatory attitude’ against the Dalits by the Catholic Church in India in appointments of Bishops and Archbishops. DCLM claimed that the Tamil Nadu Bishop Council president Archbishop George Antonysamy and former president Archbishop Antony Pappusamy acted in a discriminatory manner against Dalits and demanded they resign from their posts taking responsibility. DCLM State president Mary John alleged the Dioceses in Tamil Nadu are dominated by Vellalar, Udayar, Vanniyar, Nadar and fisherman communities. “Most of the Bishops and Arch Bishops in Tamil Nadu-Pondicherry Dioceses routinely come from Vellalar, Udayar, Vanniyar, Nadar and Fisherman community. This is an injustice despite 75% of the Catholics in Tamil Nadu being Dalits,” he said. He claimed that only 11 out of 180 Bishops are Dalits and only 2 out of 31 Archbishops in India are Dalits. “There are 17 Bishops in Tamil Nadu and Pondicherry but only one is a Dalit. This marginalisation and exclusion is widespread in appointments, education, employment opportunities, financial assistance in the Catholic Church despite Dalits being 64% of Indian catholic population and 75% of Tamil Nadu-Pondicherry Archdiocese. This can be corrected only when Dalits are appointed as Arch Bishops and Bishops,” he said.

[4] தினமலர், பேராயரை எதிர்த்து கறுப்பு கொடி, மார்ச் 21,2022 | 12:07 IST.

[5] https://www.dinamalar.com/video_main.asp?news_id=211048&cat=1585

[6] வத்திகன் செய்தி, பாண்டிச்சேரிகடலூர் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர், 19 March 2022, 15:41.

[7] https://www.vaticannews.va/ta/pope/news/2022-03/bishop-francis-kalist-appointed-new-archbishop-pondicherry.html

[8] தினத்தந்தி, புதுவை கடலூர் மறைமாவட்ட பேராயராக பிரான்சிஸ் கலிஸ்ட் நியமனம், பதிவு: மார்ச் 19,  2022 20:46 PM.

[9] https://www.dailythanthi.com/News/State/2022/03/19204631/Francis-Callist-appointed-Archbishop-of-puducherryCuddalore.vpf

[10] தினமணி, பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வலியுறுத்தல், By DIN  |   Published on : 13th October 2020 02:41 AM  |  Last Updated : 13th October 2020 02:41 AM.

[11] 40 ஆண்டுகள் மேலாகி விட்டாலும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த பெயர்களை வைத்து, அவர்களை இன்றைக்கும் அடையாளம் காணலாம். சிலர் காலமாகி விட்டனர். இருப்பினும் உண்மையை மறைக்க முடியாது.

[12] https://www.dinamani.com/all-editions/edition-trichy/2020/oct/13/insisting-on-nominating-dalit-christians-for-peraya-posts-3484004.html

ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?

மார்ச் 22, 2022

ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?

நசரேத் சிஎஸ்ஐ சர்ச் பிரச்சினைகளுக்கும், வழக்குகளுக்கும் சளைத்தது அல்ல: நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் பிரச்சினை நடந்து முடிந்து விட்ட நிலையில், இப்பொழுது “குமுதம் ரிப்போர்ட்டர்” செய்தி-கட்டுரை வெளியிட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[1]. குளோபல் மிஷனரி சொசைடி நடத்தி வருவதாகவும், அதில் பிரச்சினையுள்ளதாகவும் எஸ்.அண்ணாதுரை நிருபர் விளக்குகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கீதா ஜீவன் மூலம், கனிமொழி உதவியுடன் பிரச்சினையை சுமுகமாக்கி விட்டது போலிருக்கிறது. பிஷப்பும் ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிதி கொடுப்பது போல சந்தித்தாகி விட்டது. ஆக தேவசஹாயமும், சஹாயமாகி விட்டார், சமரசமாகி விட்டார் போலும். பல கோடிகள் சொத்துக்கள் உள்ள சிஎஸ்ஐ மற்றும் அதன் பிஷப்புகள், பாதிரிகள், அதிகாரிகள் கோர்ட்டுகளிலும், வெளியிலும் அடித்துக் கொள்வது புதியதல்ல. நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றில் பற்பல பிரச்சினைகள் வெளி வந்துள்ளன. நசரேத் சிஎஸ்ஐ சர்ச் எதற்கும் கவலைப்படுவதாக இல்லை.

குடும்பப் பிரச்சினை சர்ச் பிரச்சினை ஆகலாம்: நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், திருமண்டல பேராயரின் துணைவியார் சாந்தினிதேவசகாயம், திருமண்டல உபதலைவர் தேவராஜ் ஞானசிங், குருத்துவ காரியதரிசி மோசஸ் ஜெபராஜ், திருமண்டல ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், திருமண்டல சமூக நலத்துறை இயக்குநர் மைக்கேல்ராஜ், பாலியர் நண்பன் இயக்குநர் கிளாட்சன், வாலிபர் ஐக்கிய சங்க இயக்குநர் ஜான்சன், ஜிஎம்எஸ் செயலாளர் டேனியல், குருமார்கள் கோல்டுவின், தாமஸ், லூர்துராஜ்,  ஆல்வின், ரவி, நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ்,  ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முன்னாள் தாளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மாமல்லன், ஆண்ட்ரூஸ், பில்லிகிராம்,  மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லயன் புஷ்பராஜ் மற்றும் திருமண்டல குருமார்கள், பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள்.

நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் மிகவும் பரபரப்புடன் நடந்தது: தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு 2021-ல் நடைபெறும் தேர்தல் குறித்து மகாகனம் பேராயர் தேவசகாயம் அவர்களால் தேர்தல் கால ஒழுங்கு முறைகள் வெளியிடப்பட்டு கடந்த ஜுன் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 20ம் தேதி 2021 அன்று நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நிர்வாகஸ்தர் தேர்தலோடு நிறைவு பெற்றது[2]. இந்த தேர்தலில் டி.எஸ்.எப். அணி மற்றும் எஸ்டிகே ராஜன் அணி என இரண்டு அணிகளாக போட்டியிட்டனர்[3]. தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் இருந்து முதல் கட்டம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பொழுது பல்வேறு குளறுபடிகள் குழப்பங்கள் என புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் சேகரத்தின் முக்கிய ஆவணமான ‘சபை டாப்’ திருத்தப்பட்டதாக வந்தப் புகார்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் போன்ற பிரச்சினைகளால் கொதித்தெழுந்த சபையார் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது[4].

வெற்றி பெற்றப் பிறகும் தொடர்ந்த பிரச்சினைகள்: டிஎஸ்எப் அணியில் போட்டியிட்ட லே செயலாளர் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உபதலைவர் அருட்திரு தமிழ்செல்வன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்டக் ஆகிய அனைவரும் வெற்றிபெற்றதாக பேராயரே அறிவித்து, அவர்களுக்கு ஜெபித்து ஆசியும் வழங்கியதாக, வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்ட பலர் தெரிவித்தனர்[5]. 21.10.2021 அன்று செயற்குழுவை கூட்டி பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கூறிச் சென்ற பேராயர் தேவசகாயம் திடீரென தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி அன்றைய தினமே (21.10.2021) நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்[6]. பேராயர் தேவசகாயம் தனது அலுவலகத்திற்கோ, இல்லத்திற்கோ வராமல் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தில் வைத்து கடந்த 23.10.2021 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து, வருகிற 1.11.2021 அன்று மறுதேர்தல் நடக்க இருப்பதாக தெரிவித்து, பத்திரிகையில் விளம்பரமாக பொதுஅறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்[7].

போலீஸார் வந்து சமரசம் செய்து வைத்தது: வெற்றிபெற்றவர்கள் பதவியேற்பதற்காக தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. பேராயர் தேவசகாயமும் அங்குஇல்லாததால் ஏமாற்றமடைந்த நிர்வாகிகள், அலுவலக வாசலில்அமர்ந்திருந்த பிரதம பேராயரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம் அலுவலகத்தை திறக்குமாறுகூறினர். அதற்கு அவர், பேராயர் வந்தால் தான் திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எதிரணியினரும் அங்கு வந்தனர். இரு அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்[8]. பின்னர், நாசரேத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டியை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து போலீஸார் சீல் வைத்தனர்[9].

போலீஸாரையே மதிக்காத சர்ச் விசுவாசிகள்: பின்னர், அனைவரையும் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் தாங்கள் பதவியேற்க வேண்டும் என்று கூறி வெளியில் செல்ல மறுத்தனர். அவர்கள் தவிர மற்றவர்களை போலீஸார் வெளியேற்றினர். புதிய நிர்வாகிகள் அங்கிருந்த அறையில் மாலைவரை அமர்ந்திருந்தனர். லே செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் நிருபர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் எங்கள் அணி முழுமையாக வெற்றிபெற்றது. இதனால், தேவையில்லாத குற்றசாட்டுகளை கூறுகின்றனர். பேராயரை கூட மாலை வரை வரவிடாமல் செய்து விட்டனர். அவர் வராததால் விதிப்படி உபதலைவர் முன்னிலையில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தினோம்” என்று கூறினார்.

©  வேதபிரகாஷ்

22-03-2022


[1]  குமுதம் ரிப்போர்ட்டர், ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்?, மார்ச்.11-03-2022, பக்கங்கள்.28-29.

[2] Policeseithitv, பிரதம பேராயரின் உத்தரவை மதித்த தூத்துக்குடிநாசரேத் திருமண்டல குருமார்கள், by policeseithitv  October 30, 2021

policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!, by policeseithitv  October 31, 2021

Onetamil News, தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு, லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மகிழ்ச்சி ,  Oct 31, 2021

http://www.onetamilnews.com/News/thoothukudi-nazareth-csi-bishop-devasakayam-new-executi

[3] https://policeseithi.com/?p=8324

[4] policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!, by policeseithitv  October 31, 2021

[5] https://policeseithi.com/?p=8327

[6] Onetamil News, தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு, லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மகிழ்ச்சி ,  Oct 31, 2021

[7] http://www.onetamilnews.com/News/thoothukudi-nazareth-csi-bishop-devasakayam-new-executi

[8] தமிழ்.இந்து, தூத்துக்குடிநாசரேத் திருமண்டல தேர்தல்புதிய நிர்வாகிகள் பதவியேற்க சென்றபோது அலுவலகம் பூட்டு : இரு தரப்பினர் இடையே வாக்குவாதம், செய்திப்பிரிவு, Published : 22 Oct 2021 03:07 AM; Last Updated : 22 Oct 2021 03:07 AM.

[9] https://www.hindutamil.in/news/todays-paper/regional02/728923–1.html

லாவண்யா தற்கொலை வழக்கு – ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

பிப்ரவரி 10, 2022

லாவண்யா தற்கொலை வழக்கு ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள்: ஊடகங்களின் பாரபட்சம், இரட்டை வேடங்கள், ஜார்னலிஸ்டி எதிக்ஸ் (Journalistic ethics) இல்லாமை, பத்திரிகா தர்மத்தை குழித் தோண்டி புதைத்த தன்மை, எழுத்து ஒழுக்கம் இல்லாமை,  நிருபர்-தனத்தில்-தோய்வு-அடிமைத்தனம் இப்படி பலவற்றை இப்பொழுது காண முடிகிறது.  நீதிமன்ற தீர்ப்புகளை குழப்பும் வகையில், செய்திகளை ஒருதலைப் பட்சமாக வெளியிட்டு, அழுத்தம் கொடுக்கவும் செயல் பட்டு வருகின்றன. கைது என்றால் உடனடியாக ஜாமீன் என்று கைது செய்யப் பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வந்து விடுகிறார்கள். முன்னர், கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகள், சிக்க வைக்கப் பட்டனர் என்பது போல செய்திகளும் வரச்செய்கிறார்கள். இல்லை, அது சாதகமாக இருக்காது என்றால் அமைதியாக, முன் ஜாமீன் மனு போட்டு, வெளியே கொணர்ந்து, புகார் கொடுத்தவர்களுடன் பேரம் பேசி, வழக்கை வாபஸ் வாங்குதல், தொட்ந்து நடத்தாமல் விட்டு விடுதல், கிடப்பில் கிடக்குமாறு அழுத்தம் கொண்டு வருதல் போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

லாவண்யா, லாவண்யா குடும்பத்தினரின் முகங்களை பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது: மாணவியின் மரணம் தொடர்பாக 62 வயதான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். லாவண்யா வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி  மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்[1]. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[2]. ஆனால், ஊடகங்கள், இது வரை அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை. மற்ற வழக்குகளில், கூட்டமாக முன்னரே வளாகத்தில், தெருக்களில் கேமரா, வீடியோ, சகிதம் நின்று காத்துக் கிடப்பார்கள். துரத்திச் சென்று கேள்வி கேட்பாகள், புகைப் படம் எடுப்பார்கள். ஆனால், இவ்வழக்கில், ஒருதலை பட்சமாகவே செயல்பட்டு வருகிறார்கள். லாவண்யா, லாவண்யா அப்பா-அம்மா, சித்தி, தாத்தா-பாட்டி, மாமா என்று எல்லோருடைய முகங்களையும் பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது.

ஜெனின் சகாய மேரி, ஹாஸ்டல் வார்டன் 07-02-2022 அன்று பிணையில் வெளியே வந்தார்: இவர் ஜனவரி 21ம் தேதி கைது செய்யப் பட்டார். சிறையில் உள்ள விடுதிக் காப்பாளர் சார்பில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, தஞ்சையில் உள்ள நீதிமன்றத்தில் விண்ணப் பித்து தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்திருந்தார்[3].  இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார்[4]. வழக்கம் போல, இவர் வயதானவர், வீடியோ ஆதாரத்தின் மீது கைது செய்யப் பட்டுள்ளார், அதன் உண்மைத் தன்மை அறியப் படவேண்டியுள்ளது, இவரை ஜாமீனில் வெளியே விட்டால், இவர் சாட்சியங்களை ஒன்று செய்ய மாட்டார், அதற்கான பிணையும் கொடுக்கப் பட்டுள்ளது, என்றெல்லாம் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதன் மீது திங்கள்கிழமை 07-02-2022 அன்று நடைபெற்ற விசா ரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூதனன் ஜாமீன் வழங்கினார்[5]. வக்கீல் ஜெயச்சந்திரன் மூலம் மனு தாக்கல் செய்யப் பட்டது[6]. ஜெனின் சகாய மேரி என்று குறிப்பிடுவது திமுக ஊடகங்கள், அந்த அளவுக்கு விவரங்கள் தெரியும் போலிருக்கிறது.

பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி: இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் என பெற்றோர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[7]ராக, இதெல்லாம் அவர்களுக்கு அத்துப் படி என்று தெரிகிறது. இதே நேர்த்தில், அந்த கேரளா பிஷப்பும் ஜாமீனுக்கு மனு போட்டுள்ளார். அந்த அளவுக்கு வேகமாக வேலை செய்கின்றன. நீதிமன்றங்களும், இருக்கின்ற எல்லா முக்கிய வழக்குகளையும் விட்டுவிட்டு, இவற்றை எடுத்து உடனடியாக விசாரிக்கின்றன. இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ராக்கேல்மேரிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது[8].

ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)[9]: பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும்[10]. குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.

பச்ச முத்து பாரி வேந்தர் ஆனது போல, அவரது ஊடகங்களும் மாறியுள்ளன: ஒரு பக்கம் அரசியலாக்கப் படுகிறது என்று திமுக ஊடகங்கள் பிஜேபியைக் குற்றஞ்சாட்டுகின்றன[11]. கலைஞர் டிவி, முரசொலி என்று வெளுத்து வாங்குகின்றன. இன்னொரு புறம், இதுவரை தெரியாத ஊடகங்கள் கிளம்பியுள்ளன[12]. லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், மாணவியின் பூப்படைதல் சடங்கு இந்து முறைப்படி நடந்ததாக சாட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[13]. மேலும், மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக ஒரு தரப்பினரால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட விடுதி வார்டன் சகாய மேரியே அந்த சடங்கை ஊர் மக்கள் சிலரது உதவியுடன் நடத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் பிரபல செய்தி நிறுவனமான ‘த ஃபெடெரல்’ இடம் தெரிவித்துள்ளனர்[14].  அந்த வகையில் சிறுமி லாவண்யாவுக்கு வார்டன் சகாய மேரி சடங்கு ஏற்பாடு செய்தது இருவருக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது” என பவுலின் கூறினார்[15]. மேலும், லாவண்யாவுக்காக சகோதரி சகாய மேரி நடத்திய பூப்படைதல் சடங்குக்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளதாக ‘த ஃபெடெரல்’ வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது[16]. இதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. உள்கலாச்சாரமயமாக்கல் என்ற திட்டத்துடன் செயல்படும் வாடிகன், வாடிகன் அடிவருடி சர்ச்சுகள், இந்தியாவில்-தமிழகத்தில் வேடம் போடும் கூட்டங்கள் பல காரியங்களை, இந்துமுறைப்படித் தான் செய்து வருகின்றன.

© வேதபிரகாஷ்

09-02-2022


[1] தினத்தந்தி, கைதான விடுதி பெண் வார்டனுக்கு தஞ்சை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது, பதிவு: பிப்ரவரி 08,  2022 03:13 AM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/02/08031304/bail-for-hostel-warden.vpf

[3] தீக்கதிர், மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் காப்பாளருக்கு ஜாமீன், நமது நிருபர் பிப்ரவரி 8, 2022.

[4]https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/in-the-case-of-student-suicide-bail-for-the-caretaker-of-the-inn

[5]விகடன், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: விடுதி வார்டனுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு, கே.குணசீலன், Published: 09-02-2022, at 7 AM; Updated: 09-02-2022 at 7 AM.

[6] https://www.vikatan.com/news/crime/in-student-suicide-case-court-granted-bail-to-the-hostel-warden

[7] தமிழ்.ஏபிபி.நியூஸ், தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் வார்டன் சகாயமேரிக்கு ஜாமீன், By: சிஎஸ் ஆறுமுகம், தஞ்சாவூர் | Updated : 08 Feb 2022 12:15 PM (IST).

[8]  https://tamil.abplive.com/news/thanjavur/hostel-warden-sakayamari-granted-bail-in-thanjavur-student-suicide-case-39078

[9] விகாஷ்பீடியா, ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)

[10] https://ta.vikaspedia.in/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/b95bc1b9fbbfbaeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b9abc7bb5bc8b95bb3bcd/b9cbbebaebc0ba9bcd-bail-baebc1ba9bcd-b9cbbebaebc0ba9bcd-anticipatory-bail

[11] கலைஞர் செய்தி, அண்ணாமலையின் அசிங்க அரசியல்.. பா... அரசியல் செய்ய மாணவி மரணம்தான் கிடைத்ததா?” : முரசொலி கடும் தாக்கு!, Lenin, Updated on : 28 January 2022, 08:56 AM

[12] https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2022/01/28/murasoli-editorial-questions-bjp-for-politicizing-student-death

[13] சமயம், தஞ்சை மாணவி: விடுதியில் இந்து முறைப்படி நடந்த பூப்படைதல் சடங்கு! எங்கே பிழை..?, Divakar M | Samayam TamilUpdated: 8 Feb 2022, 1:22 pm

[14] https://tamil.samayam.com/latest-news/crime/more-important-information-has-come-out-in-the-lavanya-suicide-case/articleshow/89425114.cms

[15] The Federal, Warden performed puberty rituals of TN teen as per Hindu customs: witnesses, Prabhakar Tamilarasu, 4:34 PM, 7 February, 2022Updated 5:37 PM, 7 February, 2022

[16] The Federal is a digital platform disseminating news, analysis and commentary. It seeks to look at India from the perspective of the states. We are a division of New Generation Media Private Limited. https://thefederal.com/states/south/tamil-nadu/warden-performed-puberty-rituals-of-tn-teen-as-per-hindu-customs-witnesses/

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜார்ஜ் பொன்னையா கடுமையாக, கொடூர, குரூர வார்த்தைகளினால் திட்டி சாடியது: கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: “அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை. மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை[1]; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை[2]. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை. பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டு மிதிக்கிறோம்,” இவ்வாறு பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய மோசமான-குரூர கருத்துகளை தெரிவித்தார். ஆனால், இப்பொழுது, அவற்றிற்கு பாவ மன்னிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

 பிஷப் போல பாஸ்டருக்கே பாவ மன்னிப்புக் கொடுக்கப் பட்ட நிலை: ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த வழக்கில், ‘கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என உறுதியாக நம்புகிறேன்’ என்ற கருத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது[3]. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது[4]. பின்னர், பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், முறையாக போலீஸ் அனுமதி பெற்று கூட்டம்நடந்தது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகள் தவறான புரிதலைஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாதுஇந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களைப் போல் இல்லை. மத பதற்றமான பகுதியாகும். அங்குநிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.மத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசக் கூடாது. அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அதாவது அம்பேத்கர் இந்து மதத்தைக் கொடுமையாக, கடுமையாக விமர்சித்துள்ளார்.

பூமிமாதா, பூமாதேவி, பாரத்மாதா எல்லாம் வேறுவேறு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: இந்த தேசத்தில் பூமி, ‘பூமா தேவி’ என வணங்கப்படுகிறது. அவள் தெய்வீகத்தின் துணையாக பார்க்கப்படுகிறாள். தேசம், அன்னை தெய்வத்திற்கு சமமானது. அவள் காவி உடை அணிந்து, புத்தகம், நெற்கதிர்கள், வெள்ளைத் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை நான்கு கைகளில் ஏந்தியிருக்கிறாள். தேசத்தந்தை மகாத்மா காந்தி, 1936ல் வாரணாசியில் பாரத மாதா கோவிலை திறந்து வைத்தார். நாடு முழுதும் பல ஹிந்து கோவில்களின் வளாகத்தில் பாரதமாதா ஒரு தெய்வமாக நிறுவப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எசக்கியம்மன் தேவி கோவில் வளாகத்திலும் காணப்படுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பப்பாரபட்டியில் அத்தகைய ஒரு கோவிலை எழுப்ப விரும்பினார். அந்நுாற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்றுஆனால், பொன்னையா தொற்றை எல்லாம் பரப்பவில்லை: பூமி அன்னைக்கு மரியாதை செலுத்தி, வெறுங்கால்களுடன் நடப்பவர்களை மனுதாரர் கேலி செய்துள்ளார். பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்று மற்றும் அழுக்கு படிந்திருப்பதாக சித்தரித்துள்ளார். மனுதாரர், ஹிந்து சமூகத்தை ஒரு இலக்காகக் கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார். பழைய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள பல கோவில்களில், ஆண் பக்தர்கள் மேலாடை அணியாமல் நுழைய வேண்டும். பாரம்பரியமான வேஷ்டியை அணிந்து, ஒரு துண்டால் உடலை சுற்றிக் கொள்கின்றனர். இப்பாரம்பரிய நடைமுறையை மனுதாரர் கேலி செய்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. அரசியலமைப்பின் புனிதத்தை நிலைநிறுத்த மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், மத அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது–  தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளதுஅதனால், வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன்: ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில், மனுதாரர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாகவும், தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும் கூற முடியாது. யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிந்தது பொருந்தும் வகையில் இல்லை. அப்பிரிவுகளில் வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் கோரிக்கை பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார்[5]: பால் ஜான்சனின் ‘ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும்[6]. அவர், ‘பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்[7]. நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்[8].

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] தினகரன், கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து: ஐகோர்ட் கிளை ஆணை, 2022-01-07@ 17:19:34. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[3] தமிழ்.இந்து, குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு: 4 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு, கி.மகாராஜன், Published : 09 Jan 2022 08:56 AM, Last Updated : 09 Jan 2022 08:56 AM. https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[5] தினமலர், கிறிஸ்துவத்திற்கு மாறான செயலுக்காக பாதிரியாரை கடவுள் கண்டிப்பார்: ஐகோர்ட்,  Updated : ஜன 08, 2022  06:48 |  Added : ஜன 08, 2022  06:37.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2932776

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாதிரியாரை இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் கண்டிப்பார்ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நீதிபதி கருத்து, By Jeyalakshmi C, Updated: Saturday, January 8, 2022, 15:27 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/pastor-george-ponniah-case-god-will-reprimand-the-petitioner-during-judgment-day-says-hc-444741.html