ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?

ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?

நசரேத் சிஎஸ்ஐ சர்ச் பிரச்சினைகளுக்கும், வழக்குகளுக்கும் சளைத்தது அல்ல: நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் பிரச்சினை நடந்து முடிந்து விட்ட நிலையில், இப்பொழுது “குமுதம் ரிப்போர்ட்டர்” செய்தி-கட்டுரை வெளியிட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[1]. குளோபல் மிஷனரி சொசைடி நடத்தி வருவதாகவும், அதில் பிரச்சினையுள்ளதாகவும் எஸ்.அண்ணாதுரை நிருபர் விளக்குகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கீதா ஜீவன் மூலம், கனிமொழி உதவியுடன் பிரச்சினையை சுமுகமாக்கி விட்டது போலிருக்கிறது. பிஷப்பும் ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிதி கொடுப்பது போல சந்தித்தாகி விட்டது. ஆக தேவசஹாயமும், சஹாயமாகி விட்டார், சமரசமாகி விட்டார் போலும். பல கோடிகள் சொத்துக்கள் உள்ள சிஎஸ்ஐ மற்றும் அதன் பிஷப்புகள், பாதிரிகள், அதிகாரிகள் கோர்ட்டுகளிலும், வெளியிலும் அடித்துக் கொள்வது புதியதல்ல. நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றில் பற்பல பிரச்சினைகள் வெளி வந்துள்ளன. நசரேத் சிஎஸ்ஐ சர்ச் எதற்கும் கவலைப்படுவதாக இல்லை.

குடும்பப் பிரச்சினை சர்ச் பிரச்சினை ஆகலாம்: நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், திருமண்டல பேராயரின் துணைவியார் சாந்தினிதேவசகாயம், திருமண்டல உபதலைவர் தேவராஜ் ஞானசிங், குருத்துவ காரியதரிசி மோசஸ் ஜெபராஜ், திருமண்டல ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், திருமண்டல சமூக நலத்துறை இயக்குநர் மைக்கேல்ராஜ், பாலியர் நண்பன் இயக்குநர் கிளாட்சன், வாலிபர் ஐக்கிய சங்க இயக்குநர் ஜான்சன், ஜிஎம்எஸ் செயலாளர் டேனியல், குருமார்கள் கோல்டுவின், தாமஸ், லூர்துராஜ்,  ஆல்வின், ரவி, நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ்,  ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முன்னாள் தாளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மாமல்லன், ஆண்ட்ரூஸ், பில்லிகிராம்,  மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லயன் புஷ்பராஜ் மற்றும் திருமண்டல குருமார்கள், பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள்.

நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் மிகவும் பரபரப்புடன் நடந்தது: தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு 2021-ல் நடைபெறும் தேர்தல் குறித்து மகாகனம் பேராயர் தேவசகாயம் அவர்களால் தேர்தல் கால ஒழுங்கு முறைகள் வெளியிடப்பட்டு கடந்த ஜுன் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 20ம் தேதி 2021 அன்று நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நிர்வாகஸ்தர் தேர்தலோடு நிறைவு பெற்றது[2]. இந்த தேர்தலில் டி.எஸ்.எப். அணி மற்றும் எஸ்டிகே ராஜன் அணி என இரண்டு அணிகளாக போட்டியிட்டனர்[3]. தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் இருந்து முதல் கட்டம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பொழுது பல்வேறு குளறுபடிகள் குழப்பங்கள் என புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் சேகரத்தின் முக்கிய ஆவணமான ‘சபை டாப்’ திருத்தப்பட்டதாக வந்தப் புகார்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் போன்ற பிரச்சினைகளால் கொதித்தெழுந்த சபையார் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது[4].

வெற்றி பெற்றப் பிறகும் தொடர்ந்த பிரச்சினைகள்: டிஎஸ்எப் அணியில் போட்டியிட்ட லே செயலாளர் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உபதலைவர் அருட்திரு தமிழ்செல்வன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்டக் ஆகிய அனைவரும் வெற்றிபெற்றதாக பேராயரே அறிவித்து, அவர்களுக்கு ஜெபித்து ஆசியும் வழங்கியதாக, வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்ட பலர் தெரிவித்தனர்[5]. 21.10.2021 அன்று செயற்குழுவை கூட்டி பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கூறிச் சென்ற பேராயர் தேவசகாயம் திடீரென தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி அன்றைய தினமே (21.10.2021) நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்[6]. பேராயர் தேவசகாயம் தனது அலுவலகத்திற்கோ, இல்லத்திற்கோ வராமல் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தில் வைத்து கடந்த 23.10.2021 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து, வருகிற 1.11.2021 அன்று மறுதேர்தல் நடக்க இருப்பதாக தெரிவித்து, பத்திரிகையில் விளம்பரமாக பொதுஅறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்[7].

போலீஸார் வந்து சமரசம் செய்து வைத்தது: வெற்றிபெற்றவர்கள் பதவியேற்பதற்காக தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. பேராயர் தேவசகாயமும் அங்குஇல்லாததால் ஏமாற்றமடைந்த நிர்வாகிகள், அலுவலக வாசலில்அமர்ந்திருந்த பிரதம பேராயரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம் அலுவலகத்தை திறக்குமாறுகூறினர். அதற்கு அவர், பேராயர் வந்தால் தான் திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எதிரணியினரும் அங்கு வந்தனர். இரு அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்[8]. பின்னர், நாசரேத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டியை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து போலீஸார் சீல் வைத்தனர்[9].

போலீஸாரையே மதிக்காத சர்ச் விசுவாசிகள்: பின்னர், அனைவரையும் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் தாங்கள் பதவியேற்க வேண்டும் என்று கூறி வெளியில் செல்ல மறுத்தனர். அவர்கள் தவிர மற்றவர்களை போலீஸார் வெளியேற்றினர். புதிய நிர்வாகிகள் அங்கிருந்த அறையில் மாலைவரை அமர்ந்திருந்தனர். லே செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் நிருபர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் எங்கள் அணி முழுமையாக வெற்றிபெற்றது. இதனால், தேவையில்லாத குற்றசாட்டுகளை கூறுகின்றனர். பேராயரை கூட மாலை வரை வரவிடாமல் செய்து விட்டனர். அவர் வராததால் விதிப்படி உபதலைவர் முன்னிலையில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தினோம்” என்று கூறினார்.

©  வேதபிரகாஷ்

22-03-2022


[1]  குமுதம் ரிப்போர்ட்டர், ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்?, மார்ச்.11-03-2022, பக்கங்கள்.28-29.

[2] Policeseithitv, பிரதம பேராயரின் உத்தரவை மதித்த தூத்துக்குடிநாசரேத் திருமண்டல குருமார்கள், by policeseithitv  October 30, 2021

policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!, by policeseithitv  October 31, 2021

Onetamil News, தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு, லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மகிழ்ச்சி ,  Oct 31, 2021

http://www.onetamilnews.com/News/thoothukudi-nazareth-csi-bishop-devasakayam-new-executi

[3] https://policeseithi.com/?p=8324

[4] policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!, by policeseithitv  October 31, 2021

[5] https://policeseithi.com/?p=8327

[6] Onetamil News, தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு, லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மகிழ்ச்சி ,  Oct 31, 2021

[7] http://www.onetamilnews.com/News/thoothukudi-nazareth-csi-bishop-devasakayam-new-executi

[8] தமிழ்.இந்து, தூத்துக்குடிநாசரேத் திருமண்டல தேர்தல்புதிய நிர்வாகிகள் பதவியேற்க சென்றபோது அலுவலகம் பூட்டு : இரு தரப்பினர் இடையே வாக்குவாதம், செய்திப்பிரிவு, Published : 22 Oct 2021 03:07 AM; Last Updated : 22 Oct 2021 03:07 AM.

[9] https://www.hindutamil.in/news/todays-paper/regional02/728923–1.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.