Posts Tagged ‘இறுதி நாள்’

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன்: மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506 (1) மற்றும் தொற்று நோய்பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ்வழக்கு பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன[1]. மத நம்பிக்கையைச் சீர்குலைத்தல், இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தது செல்லும்[2]. இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது. சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவர் டெஸ்மண்ட் டூட்டுவை இழந்து வாடியது[3]. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்[4].

அரசியல், அரசியலாக்கப் பட்ட  நீதித்துறை, திராவிடத்துவ குழப்பங்கள்சமரசங்கள் முதலியவ்ற்றின் தக்கம் காணப்படுகிறது: இவ்வழக்கில் வாதி-பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் தோன்றிய வழக்கறிஞர்கள் -லஜ்பத் ராய், அந்தோனி சஹாய பிரபாகர், Additional Public Prosecutor; விக்டோரியா கௌரி, ரம்யா, ஶ்ரீசரண் ரங்கராஜன், முதலியவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[5]. நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியின் சார்பிலும் நீதிபதிகள், சட்ட ஆலோசகர்கள், ACGSC, Solicitor General, போன்ற பதவிகளுக்குப் பிரித்து அளிக்கப் படுகிறது என்பது தெரிந்த விசயமே.  ஆட்சி-அதிகாரங்கள் இருக்கும்போது வாரியம், நிறுவனம் என்று எல்லாதுறைகளிலும் அத்தகைய பங்கு-விநியோகம் உள்ளது. “ஜெய்-பீம்” கூட குறிப்பிட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் பிம்பம் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதி என்பது தெரிந்த விசயமே. இப்பொழுது, பிஜேபி தமிழகத்தில் அழுத்தமாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், “செக்யூல்ரிஸ” நிலை நோக்கி நகரும் தன்மையும் புரிகிறது. கிருத்துவ-உரையாடல்களைப் பொறுத்த வரையில், இதெல்லாம் புதியதல்ல[6]. கேரளாவில் சர்ச் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உரையாடல்கள், நெருக்கம் முதலியன இப்பொழுது வெளிப்படையாகவே உள்ளன.

நீதிபதிகள் விமர்சனத்திற்கு உள்ளானது: சமீபத்தில் மாரிதாஸ் வழக்குகில் இதே நீதிபதி விமர்சனத்திற்குள்ளாக்கப் பட்டார். மூத்த பத்திரிகையாளரும், ‘அறம்’ இணைய இதழின் ஆசிரியருமான சாவித்ரி கண்ணன் விமர்சனத்தில் காரம் தூக்கலாகவே இருந்தது[7].“கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாகத் தொடரப்பட்ட வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். நேர்மையான விமர்சனங்களுக்கோ மாற்றுக் கருத்துகளுக்கோ இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மதத் துவேஷக் கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் எனப் பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மாரிதாஸுக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ் எப்படி போகிறது? மாரிதாஸுக்காக வழக்காடும் வழக்கறிஞரின் பின்னணி என்ன? வழக்கை நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டிய நீதிபதி மாரிதாஸின் கட்சிக்காராக வெளிப்படும் அவலத்தை என்னென்பது?’’ எனக் கடுமையாகச் சாடினார். தீர்ப்பு வழங்கிய நீதிபதி தொடர்பான பல சர்ச்சைக்குரிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின[8].

தீர்ப்பைப் பற்றிய என்னுடைய கமென்ட்ஸ்: தீர்ப்பை வழக்கம் போல பலதடவை படித்தேன். வெறுத்துப் போனதால், 09-01-2022 அன்று கீழ்கண்டவாறு பேஸ்புக்கில் பதிவு செய்தேன்:

1. பால் ஜான்ஸனின் புத்தகத்தைப் படித்தேன், தேவன் ஏசுவிகிறிஸ்துவிடம் காதல் கொண்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!

2. கிறிஸ்தவமற்ற காரியத்தை செய்தால் இறுதிநாள் தீர்ப்பன்று கர்த்தர் வாதியைக் கண்டிப்பார் என்று நான் உறுதியாக இருக்கிறேன்!

3. குற்றப் பத்திரிக்கை அவ்வாறே மூடப் படுகிறது, சம்பந்தப் பட்ட மனுக்களும் நிராகரிக்கப் படுகின்றன! வழக்கும் முடிக்கப் படுகிறது!

4. பாரத் மாதா கி ஜே, ஜெய் ஹிந்த், புண்ணிய பூமி, பூமா தேவி, போன்றவற்றிற்கு எல்லாம் வித்தியாசங்கள் இருக்கின்றன!

5. அட வெங்காயம், ஹுஸைனின் பாரத் மாதா சித்திரம் எல்லாம் ஜோராக்கத்தான் இருக்கிறது. அறிவிஜீவுகளே சொல்லிவிட்டன!

6. சிவன் பார்வதியுடன் விலையாடுவார், பார்வதி விநாயகருடன் விளையாடுவார், இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமடா………..

7. வெங்காயம், 20.07.2021 அன்றே வருத்தம் தெரிவித்து வீடியோ போட்டாச்சே, தெரியாதா? ஈவேராவை விட ஒன்றும் தூஷணம் செய்யவில்லையே!

8. அட இதெல்லாம் சட்டவிரோதமாகக் கூடிய கூடமே இல்லை. அவர்களுக்கு சொந்தமான சர்ச்சில் பேசியது. அவர்களுக்கு தொற்றுவியாதி எல்லாம் இல்லை!

9. கிருப்டோ கிறிஸ்டியன், ருத்ரதாண்டவம், ….மதமாற்றங்கள் எல்லாம் குழு-திட்டமே கிடையாது… அம்பேத்கர் கூட தூஷித்தார்…….ஆகவே….

10. சார்லஸ் டார்வின், கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸ், ரிச்சர்ட் டாவ்கின்ஸ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவூர்….எல்லாம் படிங்க வேங்காயங்களே.

மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா?: இது நிச்சயமாக ஒரு சட்ட/நீதி முன்மாதிரியை (Legal precedance) உண்டாக்கும், ஏனெனில், நாளைக்கு இதே வழிமுறையை வைத்து, சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன், உணர்ச்சிப் பீரிட்டு பேசினேன், பிறகு வீடியோ போட்டு மனம் வருந்திகிறேன் என்று சொல்லி விட்டேன் என்று குற்றஞ்சாட்டப் பட்ட வாதிகள் வாதிடுவார்கள். அவ்வர்களுக்கு சார்பாக தோன்றும் வழக்கறிஞர்கள் “Case Title: Fr.P.George Ponnaiah v. The Inspector of Police, Arumanai Police Station, Kanyakumari District, Kanyakumari and Ors,” என்று குறிப்பிடுவார்கள். இன்னொரு நீதிபதி, இது போன்று இன்னொரு தீர்ப்புக் கொடுப்பார். இப்படியே செல்லும். பிறகு, இந்த பிரிவுகள் எல்லாம் தேவையா, கருத்து சுதந்திரம் தானே முக்கிய என்றும் வாதிடுவார்கள். கருத்து சுதந்திரம் இங்கு எப்படி வரும், வந்தது? “சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன்,” எனும்போது, மோடி, அமித் ஷா, காந்தி, சேகர் பாபு என்று யாரும் கேட்க முடியாதே? கர்த்தர் தான் இறுதிநாள் தீர்ப்பில் கவனிப்பார், அவ்வளவே தான்! ஆமென்!

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] ஏபிபிலைவ், கிறிஸ்தவத்திற்கு எதிரான செயல்களை செய்ததற்காக ஜார்ஜ் பொன்னையாவை கடவுள் தண்டிப்பார்நீதிபதி, By: மனோஜ் குமார் | Updated : 08 Jan 2022 02:19 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/god-will-punish-george-ponniah-for-committing-acts-against-christianity-madurai-high-court-judge-gr-swaminathan-34339

[3] சமயம்.தமிழ், பிரதமர் குறித்து அவதூறு பேச்சுஜார்ஜ் பொன்னையாவிற்கு ஜாமீன் கிடைக்குமா?, Josephraj V | Samayam Tamil, Updated: 6 Jan 2022, 5:22 pm.

[4] https://tamil.samayam.com/latest-news/madurai/high-court-madurai-bench-adjourns-judgment-on-george-ponnaya-petition-till-7th/articleshow/88735042.cms

[5] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT-DATED: 07.01.2022; CORAM – THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN; Crl OP(MD)No.11021 of 2021 and Crl MP(MD)No.5632 of 2021.

[6]  ஶ்ரீசுதர்ஸன் அவர்களின் புத்தகமே சான்றாக உள்ளது. மோடி போப்பை சந்தித்தது, குறிப்பிட்ட சர்ச்சை ஆதரிப்பது, முதலியவற்றைப் பற்றி திரும்ப-திரும்ப எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

[7] சமயம்.தமிழ், மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து; மாறுபட்ட பார்வைகள், Written by எ. மணிமாறன் | Samayam Tamil | Updated: 15 Dec 2021, 4:11 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/the-case-against-maridhas-and-the-verdict-have-triggered-a-lot-of-controversies/articleshow/88298429.cms

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜார்ஜ் பொன்னையா கடுமையாக, கொடூர, குரூர வார்த்தைகளினால் திட்டி சாடியது: கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: “அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை. மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை[1]; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை[2]. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை. பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டு மிதிக்கிறோம்,” இவ்வாறு பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய மோசமான-குரூர கருத்துகளை தெரிவித்தார். ஆனால், இப்பொழுது, அவற்றிற்கு பாவ மன்னிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

 பிஷப் போல பாஸ்டருக்கே பாவ மன்னிப்புக் கொடுக்கப் பட்ட நிலை: ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த வழக்கில், ‘கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என உறுதியாக நம்புகிறேன்’ என்ற கருத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது[3]. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது[4]. பின்னர், பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், முறையாக போலீஸ் அனுமதி பெற்று கூட்டம்நடந்தது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகள் தவறான புரிதலைஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாதுஇந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களைப் போல் இல்லை. மத பதற்றமான பகுதியாகும். அங்குநிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.மத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசக் கூடாது. அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அதாவது அம்பேத்கர் இந்து மதத்தைக் கொடுமையாக, கடுமையாக விமர்சித்துள்ளார்.

பூமிமாதா, பூமாதேவி, பாரத்மாதா எல்லாம் வேறுவேறு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: இந்த தேசத்தில் பூமி, ‘பூமா தேவி’ என வணங்கப்படுகிறது. அவள் தெய்வீகத்தின் துணையாக பார்க்கப்படுகிறாள். தேசம், அன்னை தெய்வத்திற்கு சமமானது. அவள் காவி உடை அணிந்து, புத்தகம், நெற்கதிர்கள், வெள்ளைத் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை நான்கு கைகளில் ஏந்தியிருக்கிறாள். தேசத்தந்தை மகாத்மா காந்தி, 1936ல் வாரணாசியில் பாரத மாதா கோவிலை திறந்து வைத்தார். நாடு முழுதும் பல ஹிந்து கோவில்களின் வளாகத்தில் பாரதமாதா ஒரு தெய்வமாக நிறுவப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எசக்கியம்மன் தேவி கோவில் வளாகத்திலும் காணப்படுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பப்பாரபட்டியில் அத்தகைய ஒரு கோவிலை எழுப்ப விரும்பினார். அந்நுாற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்றுஆனால், பொன்னையா தொற்றை எல்லாம் பரப்பவில்லை: பூமி அன்னைக்கு மரியாதை செலுத்தி, வெறுங்கால்களுடன் நடப்பவர்களை மனுதாரர் கேலி செய்துள்ளார். பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்று மற்றும் அழுக்கு படிந்திருப்பதாக சித்தரித்துள்ளார். மனுதாரர், ஹிந்து சமூகத்தை ஒரு இலக்காகக் கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார். பழைய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள பல கோவில்களில், ஆண் பக்தர்கள் மேலாடை அணியாமல் நுழைய வேண்டும். பாரம்பரியமான வேஷ்டியை அணிந்து, ஒரு துண்டால் உடலை சுற்றிக் கொள்கின்றனர். இப்பாரம்பரிய நடைமுறையை மனுதாரர் கேலி செய்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. அரசியலமைப்பின் புனிதத்தை நிலைநிறுத்த மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், மத அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது–  தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளதுஅதனால், வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன்: ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில், மனுதாரர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாகவும், தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும் கூற முடியாது. யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிந்தது பொருந்தும் வகையில் இல்லை. அப்பிரிவுகளில் வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் கோரிக்கை பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார்[5]: பால் ஜான்சனின் ‘ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும்[6]. அவர், ‘பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்[7]. நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்[8].

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] தினகரன், கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து: ஐகோர்ட் கிளை ஆணை, 2022-01-07@ 17:19:34. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[3] தமிழ்.இந்து, குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு: 4 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு, கி.மகாராஜன், Published : 09 Jan 2022 08:56 AM, Last Updated : 09 Jan 2022 08:56 AM. https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[5] தினமலர், கிறிஸ்துவத்திற்கு மாறான செயலுக்காக பாதிரியாரை கடவுள் கண்டிப்பார்: ஐகோர்ட்,  Updated : ஜன 08, 2022  06:48 |  Added : ஜன 08, 2022  06:37.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2932776

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாதிரியாரை இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் கண்டிப்பார்ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நீதிபதி கருத்து, By Jeyalakshmi C, Updated: Saturday, January 8, 2022, 15:27 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/pastor-george-ponniah-case-god-will-reprimand-the-petitioner-during-judgment-day-says-hc-444741.html