Archive for the ‘ஸ்டேன் ஸ்வாமி’ Category

லாவண்யா தற்கொலை வழக்கு – ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

பிப்ரவரி 10, 2022

லாவண்யா தற்கொலை வழக்கு ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள்: ஊடகங்களின் பாரபட்சம், இரட்டை வேடங்கள், ஜார்னலிஸ்டி எதிக்ஸ் (Journalistic ethics) இல்லாமை, பத்திரிகா தர்மத்தை குழித் தோண்டி புதைத்த தன்மை, எழுத்து ஒழுக்கம் இல்லாமை,  நிருபர்-தனத்தில்-தோய்வு-அடிமைத்தனம் இப்படி பலவற்றை இப்பொழுது காண முடிகிறது.  நீதிமன்ற தீர்ப்புகளை குழப்பும் வகையில், செய்திகளை ஒருதலைப் பட்சமாக வெளியிட்டு, அழுத்தம் கொடுக்கவும் செயல் பட்டு வருகின்றன. கைது என்றால் உடனடியாக ஜாமீன் என்று கைது செய்யப் பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வந்து விடுகிறார்கள். முன்னர், கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகள், சிக்க வைக்கப் பட்டனர் என்பது போல செய்திகளும் வரச்செய்கிறார்கள். இல்லை, அது சாதகமாக இருக்காது என்றால் அமைதியாக, முன் ஜாமீன் மனு போட்டு, வெளியே கொணர்ந்து, புகார் கொடுத்தவர்களுடன் பேரம் பேசி, வழக்கை வாபஸ் வாங்குதல், தொட்ந்து நடத்தாமல் விட்டு விடுதல், கிடப்பில் கிடக்குமாறு அழுத்தம் கொண்டு வருதல் போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

லாவண்யா, லாவண்யா குடும்பத்தினரின் முகங்களை பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது: மாணவியின் மரணம் தொடர்பாக 62 வயதான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். லாவண்யா வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி  மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்[1]. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[2]. ஆனால், ஊடகங்கள், இது வரை அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை. மற்ற வழக்குகளில், கூட்டமாக முன்னரே வளாகத்தில், தெருக்களில் கேமரா, வீடியோ, சகிதம் நின்று காத்துக் கிடப்பார்கள். துரத்திச் சென்று கேள்வி கேட்பாகள், புகைப் படம் எடுப்பார்கள். ஆனால், இவ்வழக்கில், ஒருதலை பட்சமாகவே செயல்பட்டு வருகிறார்கள். லாவண்யா, லாவண்யா அப்பா-அம்மா, சித்தி, தாத்தா-பாட்டி, மாமா என்று எல்லோருடைய முகங்களையும் பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது.

ஜெனின் சகாய மேரி, ஹாஸ்டல் வார்டன் 07-02-2022 அன்று பிணையில் வெளியே வந்தார்: இவர் ஜனவரி 21ம் தேதி கைது செய்யப் பட்டார். சிறையில் உள்ள விடுதிக் காப்பாளர் சார்பில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, தஞ்சையில் உள்ள நீதிமன்றத்தில் விண்ணப் பித்து தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்திருந்தார்[3].  இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார்[4]. வழக்கம் போல, இவர் வயதானவர், வீடியோ ஆதாரத்தின் மீது கைது செய்யப் பட்டுள்ளார், அதன் உண்மைத் தன்மை அறியப் படவேண்டியுள்ளது, இவரை ஜாமீனில் வெளியே விட்டால், இவர் சாட்சியங்களை ஒன்று செய்ய மாட்டார், அதற்கான பிணையும் கொடுக்கப் பட்டுள்ளது, என்றெல்லாம் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதன் மீது திங்கள்கிழமை 07-02-2022 அன்று நடைபெற்ற விசா ரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூதனன் ஜாமீன் வழங்கினார்[5]. வக்கீல் ஜெயச்சந்திரன் மூலம் மனு தாக்கல் செய்யப் பட்டது[6]. ஜெனின் சகாய மேரி என்று குறிப்பிடுவது திமுக ஊடகங்கள், அந்த அளவுக்கு விவரங்கள் தெரியும் போலிருக்கிறது.

பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி: இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் என பெற்றோர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[7]ராக, இதெல்லாம் அவர்களுக்கு அத்துப் படி என்று தெரிகிறது. இதே நேர்த்தில், அந்த கேரளா பிஷப்பும் ஜாமீனுக்கு மனு போட்டுள்ளார். அந்த அளவுக்கு வேகமாக வேலை செய்கின்றன. நீதிமன்றங்களும், இருக்கின்ற எல்லா முக்கிய வழக்குகளையும் விட்டுவிட்டு, இவற்றை எடுத்து உடனடியாக விசாரிக்கின்றன. இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ராக்கேல்மேரிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது[8].

ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)[9]: பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும்[10]. குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.

பச்ச முத்து பாரி வேந்தர் ஆனது போல, அவரது ஊடகங்களும் மாறியுள்ளன: ஒரு பக்கம் அரசியலாக்கப் படுகிறது என்று திமுக ஊடகங்கள் பிஜேபியைக் குற்றஞ்சாட்டுகின்றன[11]. கலைஞர் டிவி, முரசொலி என்று வெளுத்து வாங்குகின்றன. இன்னொரு புறம், இதுவரை தெரியாத ஊடகங்கள் கிளம்பியுள்ளன[12]. லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், மாணவியின் பூப்படைதல் சடங்கு இந்து முறைப்படி நடந்ததாக சாட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[13]. மேலும், மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக ஒரு தரப்பினரால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட விடுதி வார்டன் சகாய மேரியே அந்த சடங்கை ஊர் மக்கள் சிலரது உதவியுடன் நடத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் பிரபல செய்தி நிறுவனமான ‘த ஃபெடெரல்’ இடம் தெரிவித்துள்ளனர்[14].  அந்த வகையில் சிறுமி லாவண்யாவுக்கு வார்டன் சகாய மேரி சடங்கு ஏற்பாடு செய்தது இருவருக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது” என பவுலின் கூறினார்[15]. மேலும், லாவண்யாவுக்காக சகோதரி சகாய மேரி நடத்திய பூப்படைதல் சடங்குக்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளதாக ‘த ஃபெடெரல்’ வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது[16]. இதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. உள்கலாச்சாரமயமாக்கல் என்ற திட்டத்துடன் செயல்படும் வாடிகன், வாடிகன் அடிவருடி சர்ச்சுகள், இந்தியாவில்-தமிழகத்தில் வேடம் போடும் கூட்டங்கள் பல காரியங்களை, இந்துமுறைப்படித் தான் செய்து வருகின்றன.

© வேதபிரகாஷ்

09-02-2022


[1] தினத்தந்தி, கைதான விடுதி பெண் வார்டனுக்கு தஞ்சை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது, பதிவு: பிப்ரவரி 08,  2022 03:13 AM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/02/08031304/bail-for-hostel-warden.vpf

[3] தீக்கதிர், மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் காப்பாளருக்கு ஜாமீன், நமது நிருபர் பிப்ரவரி 8, 2022.

[4]https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/in-the-case-of-student-suicide-bail-for-the-caretaker-of-the-inn

[5]விகடன், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: விடுதி வார்டனுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு, கே.குணசீலன், Published: 09-02-2022, at 7 AM; Updated: 09-02-2022 at 7 AM.

[6] https://www.vikatan.com/news/crime/in-student-suicide-case-court-granted-bail-to-the-hostel-warden

[7] தமிழ்.ஏபிபி.நியூஸ், தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் வார்டன் சகாயமேரிக்கு ஜாமீன், By: சிஎஸ் ஆறுமுகம், தஞ்சாவூர் | Updated : 08 Feb 2022 12:15 PM (IST).

[8]  https://tamil.abplive.com/news/thanjavur/hostel-warden-sakayamari-granted-bail-in-thanjavur-student-suicide-case-39078

[9] விகாஷ்பீடியா, ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)

[10] https://ta.vikaspedia.in/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/b95bc1b9fbbfbaeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b9abc7bb5bc8b95bb3bcd/b9cbbebaebc0ba9bcd-bail-baebc1ba9bcd-b9cbbebaebc0ba9bcd-anticipatory-bail

[11] கலைஞர் செய்தி, அண்ணாமலையின் அசிங்க அரசியல்.. பா... அரசியல் செய்ய மாணவி மரணம்தான் கிடைத்ததா?” : முரசொலி கடும் தாக்கு!, Lenin, Updated on : 28 January 2022, 08:56 AM

[12] https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2022/01/28/murasoli-editorial-questions-bjp-for-politicizing-student-death

[13] சமயம், தஞ்சை மாணவி: விடுதியில் இந்து முறைப்படி நடந்த பூப்படைதல் சடங்கு! எங்கே பிழை..?, Divakar M | Samayam TamilUpdated: 8 Feb 2022, 1:22 pm

[14] https://tamil.samayam.com/latest-news/crime/more-important-information-has-come-out-in-the-lavanya-suicide-case/articleshow/89425114.cms

[15] The Federal, Warden performed puberty rituals of TN teen as per Hindu customs: witnesses, Prabhakar Tamilarasu, 4:34 PM, 7 February, 2022Updated 5:37 PM, 7 February, 2022

[16] The Federal is a digital platform disseminating news, analysis and commentary. It seeks to look at India from the perspective of the states. We are a division of New Generation Media Private Limited. https://thefederal.com/states/south/tamil-nadu/warden-performed-puberty-rituals-of-tn-teen-as-per-hindu-customs-witnesses/

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜார்ஜ் பொன்னையா கடுமையாக, கொடூர, குரூர வார்த்தைகளினால் திட்டி சாடியது: கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: “அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை. மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை[1]; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை[2]. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை. பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டு மிதிக்கிறோம்,” இவ்வாறு பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய மோசமான-குரூர கருத்துகளை தெரிவித்தார். ஆனால், இப்பொழுது, அவற்றிற்கு பாவ மன்னிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

 பிஷப் போல பாஸ்டருக்கே பாவ மன்னிப்புக் கொடுக்கப் பட்ட நிலை: ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த வழக்கில், ‘கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என உறுதியாக நம்புகிறேன்’ என்ற கருத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது[3]. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது[4]. பின்னர், பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், முறையாக போலீஸ் அனுமதி பெற்று கூட்டம்நடந்தது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகள் தவறான புரிதலைஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாதுஇந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களைப் போல் இல்லை. மத பதற்றமான பகுதியாகும். அங்குநிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.மத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசக் கூடாது. அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அதாவது அம்பேத்கர் இந்து மதத்தைக் கொடுமையாக, கடுமையாக விமர்சித்துள்ளார்.

பூமிமாதா, பூமாதேவி, பாரத்மாதா எல்லாம் வேறுவேறு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: இந்த தேசத்தில் பூமி, ‘பூமா தேவி’ என வணங்கப்படுகிறது. அவள் தெய்வீகத்தின் துணையாக பார்க்கப்படுகிறாள். தேசம், அன்னை தெய்வத்திற்கு சமமானது. அவள் காவி உடை அணிந்து, புத்தகம், நெற்கதிர்கள், வெள்ளைத் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை நான்கு கைகளில் ஏந்தியிருக்கிறாள். தேசத்தந்தை மகாத்மா காந்தி, 1936ல் வாரணாசியில் பாரத மாதா கோவிலை திறந்து வைத்தார். நாடு முழுதும் பல ஹிந்து கோவில்களின் வளாகத்தில் பாரதமாதா ஒரு தெய்வமாக நிறுவப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எசக்கியம்மன் தேவி கோவில் வளாகத்திலும் காணப்படுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பப்பாரபட்டியில் அத்தகைய ஒரு கோவிலை எழுப்ப விரும்பினார். அந்நுாற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்றுஆனால், பொன்னையா தொற்றை எல்லாம் பரப்பவில்லை: பூமி அன்னைக்கு மரியாதை செலுத்தி, வெறுங்கால்களுடன் நடப்பவர்களை மனுதாரர் கேலி செய்துள்ளார். பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்று மற்றும் அழுக்கு படிந்திருப்பதாக சித்தரித்துள்ளார். மனுதாரர், ஹிந்து சமூகத்தை ஒரு இலக்காகக் கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார். பழைய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள பல கோவில்களில், ஆண் பக்தர்கள் மேலாடை அணியாமல் நுழைய வேண்டும். பாரம்பரியமான வேஷ்டியை அணிந்து, ஒரு துண்டால் உடலை சுற்றிக் கொள்கின்றனர். இப்பாரம்பரிய நடைமுறையை மனுதாரர் கேலி செய்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. அரசியலமைப்பின் புனிதத்தை நிலைநிறுத்த மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், மத அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது–  தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளதுஅதனால், வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன்: ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில், மனுதாரர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாகவும், தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும் கூற முடியாது. யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிந்தது பொருந்தும் வகையில் இல்லை. அப்பிரிவுகளில் வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் கோரிக்கை பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார்[5]: பால் ஜான்சனின் ‘ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும்[6]. அவர், ‘பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்[7]. நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்[8].

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] தினகரன், கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து: ஐகோர்ட் கிளை ஆணை, 2022-01-07@ 17:19:34. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[3] தமிழ்.இந்து, குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு: 4 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு, கி.மகாராஜன், Published : 09 Jan 2022 08:56 AM, Last Updated : 09 Jan 2022 08:56 AM. https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[5] தினமலர், கிறிஸ்துவத்திற்கு மாறான செயலுக்காக பாதிரியாரை கடவுள் கண்டிப்பார்: ஐகோர்ட்,  Updated : ஜன 08, 2022  06:48 |  Added : ஜன 08, 2022  06:37.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2932776

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாதிரியாரை இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் கண்டிப்பார்ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நீதிபதி கருத்து, By Jeyalakshmi C, Updated: Saturday, January 8, 2022, 15:27 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/pastor-george-ponniah-case-god-will-reprimand-the-petitioner-during-judgment-day-says-hc-444741.html

கிறிஸ்தவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சைதான் தி.மு.க., வெற்றி, பூமா தேவியால் நமக்கு சொறி, சிரங்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவமாக செருப்பு கொடுத்தது, அமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும்…! கிருத்துவப் பாதிரியின் குரூரப் பேச்சு !!(2)

ஜூலை 23, 2021

கிறிஸ்தவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சைதான் தி.மு.., வெற்றி, பூமா தேவியால் நமக்கு சொறி, சிரங்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவமாக செருப்பு கொடுத்தது, அமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும்…! கிருத்துவப் பாதிரியின் குரூரப் பேச்சு !!(2)

பகுத்தறிவு தூங்கும் நேரம்: இதே மாதிரியான பேச்சை ஒரு பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து அமைப்பினர் பேசியிருந்தால், என்னவாகியிருக்கும்? ஆனால், திக வீரமணி, சுப.வீரப்பாண்டியன், விடுதலை ராஜேந்திரன், வைகோ, போன்ற பகுத்தறிவு ரத்தினங்கள், பெரியார் அடிப்பொடிகள், ஈவேர கைத்தடிகள், உடன் பிறப்புகள், கழகக் கண்மணிகள் என்று எல்லோருமே அமைதியாக இருப்பது ஆச்சரியமே. கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோக்கள், தளபதியை, திமுக தலைமையினை பிச்சைக்காரர் என்று ஒப்பிட்டதையும் கண்டுகொள்ளவில்லை போலும். பிச்சையை ஒப்புக் கொண்டு சந்தோசமாக இருக்கின்றனர் போலும். மைனாரிடி என்றதால், கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். இரண்டு நாட்களில் சரியாகி விடும் என்று உத்தரவு இட்டது போல அமைதி காக்கின்றனர்; பகுத்தறிவு மழுங்கி விட்டது, சுயமரியாதை தூங்க ஆரம்பித்து விட்டது. எழுப்புவதற்கும் யாரும் தயாக இல்லை. இதைப் பற்றி செய்திகளும் வரவில்லை, எந்த டிவி-விவாதமும் நடக்கவில்லை. இணைதளங்களில் அந்த வீடியோ உலா வருவதோடு சரி. எல்லா வீடியோக்களையும் பார்த்து ரசித்து, மறந்து விடுவது போன்று, இதுவும் சில நாட்களில் மறக்கப் படும்.

பாதிரியார் மீது குவியும் புகார்கள்: அமைதியையும், அன்பையும் போதிக்கும் நிறைய பாதிரியார்கள் மத்தியில், இவர் போல இப்படி மததுவேஷம் பேசுபவர்களால் தான், நாட்டில் மத சண்டைகள் வந்து இப்படி கஷ்டப்படுகிறது. மதவெறியை தூண்டும் வகையில் அவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சர்ச்சை பேச்சால் தி.மு.க.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டாலும், வெளிப்படையாக யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, புகார் அளிக்கவில்லை. ஆனால், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணியினர் கொதித்துப் போய் உள்ளனர். மாவட்டத்தின் பல போலீஸ் ஸ்டேஷன்களிலும் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்கப்பட்டு வருகிறது, என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும்விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பா.ஜ.க மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30 புகார்களை அளித்துள்ளனர்.

விகடன் நிருபர் விசாரித்தது, வருத்தத்தைத் தெரிவித்தது: இது குறித்து பனவிளை சர்ச் பங்குதந்தையும், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகருமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிடம் பேசினோம்[1]. “அந்த வீடியோ எடிட் செய்து போடப்பட்டிருக்கிறது. யாருடைய மத உணர்வும் புண்படும்படி பேசவில்லை. அப்படிப் புண்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறோம். இனி எதிர்காலத்தில் இப்படி இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்[2]. பாதிரியே அப்படி பேசிவிட்டு, “இனி எதிர்காலத்தில் இப்படி இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்,” என்பது வேடிக்கையாக இருக்கிறது. கனடா நாட்டு பள்ளிக் குழந்தைகள் கொலை விசயத்தில் / நூற்றுக் கணக்கான பிணங்கள் புதைந்து கிடந்த விவகாரத்தில் போப் சொன்னதைவிட கேவலமாக இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தை மற்றும் பேசிய விதம், அகம்பாவம், ஆணவம், காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் என்று எல்லாவற்றையும் மீறிய விஷத்தைக் கக்கியுள்ள நிலை வெளிப்பட்டுள்ளது. திமுக அமைதியாக இருப்பதும், திகைப்பாக இருக்கிறது. “மைனாரிட்டி,” மற்றும் அதையும் மீறியுள்ள நிலைகள் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. ஆக, பிஜேபி, இது அமைப்பினர் புகார் கொடுத்தனர் என்றால், அது வழக்கம் போன்ற நிலையாகி, மறக்கப் பட்டு விடும்.

பாதிரியார் மீது மதுரையில் புகார்: ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும், ஹிந்து கிறிஸ்தவ, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும், மதகலவரத்தை துாண்டும் விதமாகவும் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு ஹிந்து மக்கள் கட்சி மதுரை தலைவர் சோலைகண்ணன், மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹாவிடம் புகார் அளித்துள்ளார். இங்கும், திமுகவினர், திராவிடத்துவ வாதிகள் யாருக்கும் ரோஷம் வரவில்லை போலும். யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்படியென்றால், வேண்டுமென்றே, திமுக-கிருத்துவர்கள் சேர்ந்து நாடகமாடும் திட்டமா? இப்படி நன்றாக திட்டிவிட்டு, ஒரு ஒத்திகைப் பார்த்து, வழக்கும் பதிவு செய்யப் பட்டு, வருத்தம் தெரரிவித்ததும், மூடிவிட்டால், மறுபடியும் இதே போல திட்டலாம், வீடியோக்களை சுற்றில் விடலாம் போன்ற முன்னுதாரணத்தை ஏற்படுத்த போட்ட ஒத்திகை போலும் ஆகிறது போலும். காலை கைது-மாலை விடுதலை போன்ற போலீஸ் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றாகி விடப் போகின்றது. அவ்வளவே தான் போலும்.

பீட்டர் அல்போன்ஸும், ஜார்ஜ் பொன்னையாவும்: “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் பேசிய பேச்சு, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்,” என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியிருப்பதும் நோக்கத் தக்கது. இவர் ஸ்டாலினால், இப்பொழுது, மைனாரிடி கமிஷனுக்கு தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார். இவருக்கு, ஜார்ஜ் பொன்னையாவை தெரிந்திருக்கலாம். இனிகோ இருதயராஜின் நண்பராகவும் இருக்கலாம். நிலைமையை சமாளிக்க, சப்பைக் கட்டுவது போல, இவ்வாறு பேசியிருக்கிறாரா, இல்லை, வழக்குப் பதிவு செய்யப் பட்டு விட்டதால், மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பார்ப்போம்.

7 பிரிவுகளில் வழக்கு: ஜார்ஜ் பொன்னையா மீது கீழ் காணும் 7 பிரிவுகளில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[3].

  1. இ.பி.கோ. 143 (சட்ட விரோத கும்பலில் உறுப்பினராக இருத்தல்),
  2. இ.பி.கோ. 153 எ (மத, இன, ஜாதி விரோத உணர்வுகளை துாண்டுதல்),
  3. இ.பி.கோ. 295 எ (இரண்டு சமூகங்களுக்கிடையே ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து அதன் மூலம் மோதல் ஏற்படுத்தி கலவரம் உருவாக்குதல்),
  4. இ.பி.கோ. 505(2) (மதமோதல்களை உருவாக்குதல்),
  5. இ.பி.கோ. 506 (1) (கொலை மிரட்டல்),
  6. இ.பி.கோ. 269 (உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை பரப்பும் கவனமற்ற செயல்)
  7. தொற்றுநோய் சட்டம் 1897-3 (உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரவல் சட்டம்)[4].

இத்தனைப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தாகி விட்டது. ஆனால், மேலே என்ன நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியே அமைதியாக இருந்து விட்டு விடுவார்கள் போலும்.

© வேதபிரகாஷ்

23-07-2021


[1] விகடன், பாரத மாதா குறித்த சர்ச்சைப் பேச்சு‘ ; இந்து இயக்கங்கள் எதிர்ப்பு; வருத்தம் தெரிவித்த பாதிரியார்!, சிந்து ஆர், Published:Yesterday at 5 PMUpdated:Yesterday at 5 PM.

[2] https://www.vikatan.com/news/tamilnadu/in-kanyakumari-christian-priest-speech-makes-controversy

[3] பாலிமர் செய்தி, ஜாதி, மதம், மத்திய அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிறிஸ்தவ பங்குத் தந்தை மீது இந்து அமைப்புகள் புகார், July 22, 2021 05:17:31 PM.

[4] https://www.polimernews.com/dnews/151063/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

கத்தோலிக்க ஸ்டேன் ஸ்வாமி S.J.யும், வக்காலத்து வாங்கும் ஜவாஹிருல்லாவும்! அமாவாசைக்கும்-அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு? (3)

ஒக்ரோபர் 15, 2020

கத்தோலிக்க ஸ்டேன் ஸ்வாமி S.J.யும், வக்காலத்து வாங்கும் ஜவாஹிருல்லாவும்! அமாவாசைக்கும்-அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு? (3)

எம்.எச்.ஜவாஹிருல்லாவின் அறிக்கை:  எம்.எச்.ஜவாஹிருல்லா[1] கைதை எதிர்த்து அறிக்கை விட்டிருப்பது, வியப்பாக இருக்கிறது[2], “ஆதிவாசி மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமை போராளி 83 வயதுடைய பாதிரியார் ஸ்டேன் சாமி அவர்களை பீமா கோரகான் வழக்குடன் தொடர்புப்படுத்தி தேசீய புலனாய்வு முகமை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பீமா கோராகானில் கடந்த 2018 ஜனவரி 1ம் தேதி நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் எனப் பொய் குற்றம் சுமத்தி என்ஐஏவினால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடை சட்டம் (யுஏபிஏ)வில் கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் வயது முதிர்ந்தவர் பாதிரியார் ஸ்டேன் சாமி ஆவார்.

தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் சாமி அவர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் மனித உரிமை பாதுகாப்புப் பணிகளில் குறிப்பாக ஆதிவாசி மக்களிடையே தன்னலமற்ற பணிகளை ஆற்றி வந்தார். இவருக்கும் பீமா கோரோகன் நிகழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையிலும் பாதிரியார் சாமி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்திலிருந்து கடத்தப்பட்டு பிறகு கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 மணி நேரம் விசாரிக்கப்பட்ட நிலையில் 83 வயதான பாதிரியார் சாமியைக் கைது செய்ததுடன் மும்பைக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என என்ஐஏ திட்டமிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் விதித்துள்ள முறைமைகளுக்கு முரணாக ஸ்டேன் சாமியை கைது செய்துள்ள நிலையில் நடுக்குவாதம் என்னும் பார்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவரை மும்பைக்கு அழைத்துச் செல்ல முயல்வது அராஜகத்தின் உச்சமாக அமைந்துள்ளது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பவர்களைப் பழிவாங்கும் மத்திய பாஜகவின் வன்ம மனப்பான்மைக்கு இது ஒரு எடுத்துக் காட்டாகவும் அமைந்துள்ளது.

ஆதிவாசி மக்களின் நிலங்களைப் பிடுங்கி அவர்களை நிலமற்றவர்களாக மாற்றும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் நாதியற்ற அம்மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்”.

இப்படிக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர்[3].

2008ன் தொடர்ச்சி இந்த 2020 கைது: 28.08.2018 அன்று காலை 6 மணிக்கு டெல்லி, ஐதராபாத், ஃபரிதாபாத், மும்பை, தானே, கோவா, ராஞ்சி போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் கைது மற்றும் சோதனை நடவடிக்கைகளை நடத்தியது மகாராட்டிரா போலீசு.சிவில் உரிமை செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் தோழர் வரவர ராவ் மற்றும் வழக்கறிஞர் வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா ஆகிய  ஐந்து பேர் ஊஃபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கோவா ஐ.ஐ.எம் -இல் பணியாற்றும் தோழர் ஆனந்த் தெல்தும்டெ,  ராஞ்சியில் பாதிரியார் ஸ்தான் சாமி / ஸ்டேன் ஸ்வாமி, வெர்னான் கன்சால்வேசின் மனைவி சூசன் ஆப்ரகாம், ஐதராபாத்தில் பத்திரிகையாளர் கிராந்தி தெகுலா, வரவரராவின் மகள்கள் ஆகியோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப் படக்கூடிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. மோடியைக் கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருப்பதாகவும், அது தொடர்பான “கடிதம்” தங்களிடம் சிக்கிவிட்டதாகவும் கூறி, 2008 ஜுன் 7 ஆம் தேதியன்று வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்தது மகாராட்டிர போலீஸ்.

CBCI வக்காலத்து வாங்கியது திகைப்பாக இருந்தது: ஸ்டேன் ஸ்வாமியின் முக்கியத்துவம், அவரை ஆதரிக்கும் பெரிய அமைப்புகளின் எதிர்-அறிக்கைகள், அரசுக்குக் கொடுக்கும் அழுத்தம், ஸ்வாமி ஏற்கெனவே கோர்ட்டுக்குச் சென்றது, முதலியவற்றிலிருந்து அறியலாம். கத்தோலிக்க பிஷப் மாநாடு என்ற மிகப் பெரிய அமைப்பு [The Catholic Bishops’ Conference of India (CBCI)] 10-10-2020,  சனிக்கிழமை அன்று வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தது, ஸ்டேன் ஸ்வாமியின் பின்னணி, ஆதிக்கம், முதலியவை வெளிப் படுத்தப் பட்டன[4]. CBCI உடனே ஏன் ஸ்வாமியைப் போற்றி, புகழ்ந்து, வர்ணித்து, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐக்கை விட்டது[5]. ராஞ்சி சர்ச்சும் சும்மா இருக்கவில்லை, முந்தைய நாளே 09-10-2020, வெள்ளிக்கிழமை அன்று, 83-வயதான ஸ்வாமியின் கைதைக் குறித்து, மிக்க கவலை மற்றும் மன-அழுத்தத்துடன் உள்ளதாகவும்[6], அவர் வேண்டுமென்றே, ஆதரமில்லாத விசயங்களுக்கு கைது செல்லப் பட்டதால், விடுவிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டது[7]. 1980களில், சர்ச் விடுதலை இறையியலை அறிமுகப் படுத்திய போது, பல கொள்ளைகள், கொலைகள் நடந்ததால், அமைதியாக அடங்கி விட்டது. ஆனால், அதன் மீது பயிற்சி எடுத்தவர்கள், பிரிவினைவாதம், முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரியில் ஆர்பாட்டம்: இவற்றையெல்லாம் ஊடகங்களும் சொல்லாமல், தமிழக சர்ச்சுகளும் அறிவிக்காமல், போராட்டம் என்று நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. ஜார்க்கண்டில் பாதிரியார் ஸ்டேன்சாமி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரியில் 12-10-2020 அன்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது[8]. கல்லுாரி அதிபர் ஜான் பிரகாசம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறன் தலைமை வகித்தார். தி.மு.க., சார்பில் மதுரை மாவட்ட கவுன்சில் குழு துணைத் தலைவர் முத்துராமன், கோவிலாங்குளம் ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம், கருமாத்துார் ஊராட்சி தலைவர் இளங்கோவன் மற்றும் சேசு சபை பாதிரியார்கள், சகோதரிகள் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை புனித மரியன்னை பள்ளி முன் ராஜன் தலைமையில் இயேசு சபையினர் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது[9]. சரி, இவர்களுக்கு ஸ்டேன் ஸ்வாமி செய்து வந்த எல்லா வேலைகளும் தெரியுமா, அல்லது அவற்றை ஆதரிக்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மையிலேயே, அந்த ஸ்வாமியை ஆதரிப்பதாக்க இருந்தால், 201லேயே குற்றவாளியாக அறிவித்த போது செய்திருக்க வேண்டும், ஆனால், செய்யவில்லை. பிறகு இப்பொழுது, செய்ய வேண்டிய அவசியத்தை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

தூத்துக்குடியில் ஏசு சபை சார்பில் ஆர்பாட்டம்: தூத்துக்குடியில் ஏசு சபை சார்பில் சவேரியானா இல்லத்தில் 13-10-2020 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது[10]. ஆர்ப்பாட்டத்துக்கு சவேரியானா அதிபர் இஞ்ஞாசி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சைமன்ராஜ், தூய மரியன்னை கல்லூரி முதல்வர் கென்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் யூஜின் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்களின் உரிமைக்காக உழைத்த ஏசு சபை பாதிரியார் ஸ்டேன் சுவாமியை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து உள்ளனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அருட்பணியாளர்கள் சுந்தரி மைந்தன், பிரான்சிஸ் சேல்ஸ் மற்றும் ஹெர்மென் கில்டு, ஆசிரியர் ஜோ ஆண்டனி, நெய்தல் அண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்[11]. இங்கும் அதே கதை தான்.

© வேதபிரகாஷ்

15-10-2020


[1] ஜவாஹிருல்லா, அந்நிய செலாவனி வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளி வந்து, வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அரசியல் மற்ற காரணங்களுக்காக, அவ்வழக்கு கிடப்பில் கிடக்கிறது போலும். அத்தகையவர், இதில் நுழைந்து, தகையிட்டு அறிக்கை விடுகிறார் என்பதை கவனிக்க வேண்டும்.

[2] தமமுக, ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி கைது அராஜகத்தின் உச்சம்பேரா.ஜவாஹிருல்லா, Tmmk HQ October 10, 2020.

[3] https://www.tmmk.in/2020/10/10/father-stan-samy-arrest/

[4] Indian Express, CBCI seeks release of Stan Swamy, By: Express News Service | Pune | Updated: October 11, 2020 4:48:43 am.

[5] https://indianexpress.com/article/cities/pune/cbci-seeks-release-of-stan-swamy-6720248/

[6] Indian Express, ‘Distressed, troubled’: Ranchi Catholic Church issues statement on Stan Swamy’s arrest, demands his release, By: Express Web Desk | New Delhi | October 9, 2020 10:52:27 pm.

[7] https://indianexpress.com/article/india/stan-swamy-arrest-father-nia-6718311/

[8] தினமலர், பாதிரியார் ஸ்டேன்சாமி கைதை கண்டித்துதர்ணா, Added : அக் 13, 2020 11:48.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2632194

[10] தினத்தந்தி, தூத்துக்குடியில் ஏசு சபையினர் ஆர்ப்பாட்டம், பதிவு: அக்டோபர் 14,  2020 22:12 PM.

[11] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/14221232/Church-of-Jesus-Demonstration-in-Thoothukudi.vpf

கத்தோலிக்க ஸ்டேன் ஸ்வாமி S.J.யும், விடுதலை இறையியல், மாவோயிஸம் முதலியவையும்! திருச்சி முதல் பிலிப்பைன்ஸ், பிரேசில், இறுதியில் ஜார்கெண்ட் (2)

ஒக்ரோபர் 15, 2020

கத்தோலிக்க ஸ்டேன் ஸ்வாமி S.J.யும், விடுதலை இறையியல், மாவோயிஸம் முதலியவையும்! திருச்சி முதல் பிலிப்பைன்ஸ், பிரேசில், இறுதியில் ஜார்கெண்ட் (2)

ஸ்வாமிக்கு எதிரான குற்றச்சாட்டு என்ன?: கடந்த இரண்டு மாதங்களில் பாகைச்சாவில் உள்ள பாதிரியார் இல்லத்தில் ஸ்வாமி என்பவரை என்.ஐ.ஏ பல முறை விசாரித்தது. மாவோயிஸ்ட் சக்திகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி என்.ஐ.ஏ-வால் அவரது இல்லத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. மாவோயிஸ்டுகளுடனான தொடர்பைக் குறிக்கும் வகையில் தனது கணினியிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி என்.ஐ.ஏ பல சாறுகளை தனக்கு முன் வைத்ததாக ஸ்வாமி கூறியுள்ளார். “இவை அனைத்தும் என் கணினியில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட பொய்யான சான்றுகள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். நான் அவர்களின் குற்றச்சாட்டை மறுத்துவிட்டேன்” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மாவோயிஸ்ட் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும், அவர் ஒருபோதும் தான் பீமா கோரேகானுக்கு சென்றதில்லை என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார். “எனக்கு நடப்பது தனிப்பட்டது அல்ல என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். பல செயல்பாட்டாளர்கள், வக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர் தலைவர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள், ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக நின்று நாட்டின் ஆளும் சக்திகளுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நபர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்,” என்று ஸ்வாமி கூறினார்.

NIA 09.10.2020 அன்று கூடுதல் குற்றப் பத்திரிக்கை பதிவு செய்தது: சட்டப் படி நடவடிக்கை எடுக்க, உள்ள கஷ்டங்கள், அரசியல் தலையீடுகள் முதலியன, சட்ட-திட்டங்களை அமூல் படுத்தும் அதிகாரிகளுக்குத் தான் தெரியும். விசயம் தெரிந்த குற்றவாளிகள், தெரிது கொண்டுதான், குற்றங்களை, சட்டமீறல்களைச் செய்கின்றனர். சட்ட-திட்டங்க்களில் உள்ள ஓட்டைகளைப் பயன் படுத்தி, தாராளமாக வெளியே வந்து விடலாம் என்ற்ய் தான் அவர்கள் செய்கின்றனர். அதற்கு, அவர்களுக்கு ஏராளமான வக்கீல்கள் வாதாட டயாரக் இருக்கிறார்கள். ஆனால், சட்டத்தை முறையாக செயல்படுத்த கஷ்டப் பட வேண்டியிருக்கிறது. அந்த அதிகாரிகளுக்குத் துணை யாரும் இல்லை. அவர்களே தான், எல்லாவற்றையும் தயாரிக்க வேண்டும், நீதிமன்றங்களில் உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். NIA 09.10.2020 அன்று கூடுதல் குற்றப் பத்திரிக்கை பதிவு செய்தது[1]. கொரேகாவ் எல்கார் பரிஸத் வழக்கில் NIA ஏற்கெனவே எட்டு நபர்கள் மீது வழக்கு 120B, 115, 121, 121A, 124A, 153A, 201, 505(1)(b) மற்றும் 34 of IPC and sections 13, 16, 17, 18, 18A, 18B, 20, 38, 39 & 40 of Unlawful Activities (Prevention) Act, 1967 பிரிவுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதில் இவரது பெயரும் உள்ளது.  ஸ்டேன் ஸ்வாமி ஒரு மாவோயிஸ்ட், அவர் அதன் பல வேலைகளில் ஈடுப்ட்டுள்ளார், மற்ற மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார்[2]. குறிப்பாக மஹாராஷ்ட்ர மாநில நிகழ்வுகளுக்கும் காரணமாக இருந்தார். மாவோயிஸ்ட் குழுக்களிடமிருந்து, பணமும் பெற்று வந்தார். மாவோயிஸ்ட்டுகளுக்கு முகப்பாக இருக்கும் PPSC என்ற அமைப்பை உருவாக்கக் காரணமாக இருந்தார். அவரிடத்திலிருந்து, மாவோயிஸ்ட் தொடர்புகள், சித்தாந்தப் பரப்பு, பிரச்சார புத்தகங்கள் முதலிய குற்றஞ்சாட்டும் ஆவணங்கள் பரிமுதல்செய்யப் பட்டன.

பிலிப்பைன்ஸ், பிரேசில் என்று சென்று விடுதலை இறையியல் பரப்பும் ஸ்டேன் ஸ்வாமி: ஸ்டேன் ஸ்வாமி திருச்சியில் பிறந்தாலும், பில்லிப்பைன்ஸில் குறிப்பிட்ட வேலைக்காக, அங்கு படிக்க வைக்கப் பட்டார். பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க அடிப்படைவாதத்தில் ஊறிய நாடு என்று குறிப்பிடத் தக்கது. 1970களில் ஆர்பாட்டம், போராட்டம் முதலியவற்றைச் செய்ய பயிற்சி கொடுக்கப் பட்டது. பிறகு, ஹெல்டர் காமரா (1909-1999) என்ற பிரேசிலியன் கத்தோலிக்கத் தலைவருடன் சேர்ந்ததால், அவரைப் போன்றே விடுதலை இறையியல் மற்றும் வன்முறை வழிகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். பிரேசில் கத்தோலிக்கர், விடுதலை இறையியல் மூலம், வன்முறையினை பின்பற்றினர் என்பது தெரிந்த விசயம். ஹெல்டர் காமரா தன்னுடைய வன்முறைக் கருத்துகள் மற்றும் தொடர்புகளால், தீவிரவாத கம்யூனிஸ்ட் என்றே அழைக்கப் பட்டார். இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு, ஐ.எஸ்.ஐயின் ISI (Indian Social Institute) இயக்குனரானார். ஜார்கெண்டிற்குச் சென்ற பிறகு, ஜார்கெண்ட் மனித உரிமைகள் நிறுவனம் என்பதனை ஆரம்பித்தார்.  விடுதலை இறையியல் என்றால், வன்முறையை உபயோகப்படுத்தும் கிருத்துவம் என்பதாகும். தமிழகத்தில், ஏற்கெனவே மீன்சுருட்டி போன்ற இடங்களில் இந்தியன் வங்கி கொள்ளையில் கொலை எல்லாம் நடந்தது. ஜேர்கெண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில், ஏற்கெனவே மாவோயிஸ்டுகளில் வன்முறைகள் நடந்தேறி வருகின்றன. ஆகவே, இவரது வேலைகள் வன்முறையைத் தூண்டும் வகையில், சித்தாந்த ரீதியில் உள்ளன என்று தெரிகிறது.

 12-10-2020 அன்று மதுரையில் ஆர்பாட்டம்: சமூக சேவகர் ஸ்டேன் சாமியின் கைதை கண்டித்து, இயேசு சபையினர் மற்றும் தோழமை அமைப்புகள் 12-10-2020 அன்று ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்[3]. இது தொடர்பாக அந்த அமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது[4]: “தமிழகத்தைச் சேர்ந்த 83 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டேன் சாமி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு சேவை செய்துவந்தார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த அக்டோபர் 8ம் தேதி அதிரடியாக கைது செய்தது. இது இந்தியா முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் சமூக சேவகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2018இல் பீமா கோரேகான் வழக்கிலும் மாவோயிஸ்டுகளுடனும் இவருக்குத் தொடர்பு உள்ளது என்ற பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரது கைதினைக் கண்டித்து நேற்று (12ஆம் தேதி) நாடுமுழுவதும் கண்டன கூட்டங்கள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக மதுரையில் உள்ள இயேசு சபையினர் மற்றும் தோழமை அமைப்புகள் செயின்ட் மேரிஸ் முன்பாக மாலை 4 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்பாட்டத்திற்கு அய்டியாஸ் (IDEAS) இயக்குநர் பால்மைக் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சி.சே.இராஜன், அ.சந்தனம், வர்கீஸ் ஆண்டனி முன்னிலை வகித்தனர்.

பிரிவினைவாத குழுக்கள் ஆதரிப்பது வியப்பாக உள்ளது: கிறிஸ்தவ அமைப்புகளின் அறிக்கை கூறுவது, “83 வயது ஸ்டேன் சாமி மிகச்சிறந்த சமூகசேவகர். ஆதிவாசி, தலித் உரிமைகளுக்காக கடந்த 50 ஆண்டுகளாக பணி செய்தவர். அவரது பணியை பாராட்ட வேண்டிய அரசு அவரை கைது செய்து அவமதித்துள்ளது என்று தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

  1. தியான்சந் கார், தமிழ்நாடு இறையியல் கல்லூரி முன்னாள் முதல்வர்
  2. கணேசன், மக்கள் கண்காணிப்பகம்
  3. மகபூப் பாட்சா, சோக்கோ அறக்கட்டளை
  4. சண்முகவேலு, சமம் குடிமக்கள் இயக்கம்
  5. மீ.த.பாண்டியன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி
  6. மகபூப் ஜான், ம.தி.மு.க. தொழிற்சங்க தலைவர்
  7. ஜூபைதா பானு, நாட்டை காப்போம் அமைப்பு
  8. பாத்திமா ஆண்டணி, மதுரை துறவியர் பேரவை பாத்திமா கல்லூரி முன்னாள் முதல்வர்

இந்த குழுக்களுக்கு என்ன ஒற்றுமையாக இருக்கிறது, எப்படி ஒன்றாக வந்துள்ளன என்று நோக்கத் தக்கன. உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஸ்டேன் சாமியை விடுதலை செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பினர்.அருட் தந்தை. ஸ்டான் சுவாமி மற்றும் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 15 மனித உரிமை ஆர்வலர்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என இதில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக தமிழக ஆயர் பேரவை பேராயர். ஆன்றனி பாப்பு சாமி அறிக்கையும் வாசிக்கப்பட்டது. தூயமரியன்னை பள்ளி தாளாளர் அருட்பணி ஸ்டீபன் நன்றி கூறினார்,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

15-10-2020


[1] Today (09.10.2020), NIA filed supplementary charge-sheet in Bhima Koregaon Elgar Parishad Case in NIA Special Court at Mumbai against eight accused persons for the offences under sections 120B, 115, 121, 121A, 124A, 153A, 201, 505(1)(b) and 34 of IPC and sections 13, 16, 17, 18, 18A, 18B, 20, 38, 39 & 40 of Unlawful Activities (Prevention) Act, 1967.

[2] 13. Stan Swamy is CPI (Maoist) cadre and was actively involved in its activities. Stan Swamy was in communication with other CPI (Maoist) cadres. He propagated among cadres that the arrest of urban CPI (Maoist) cadres from different parts of country, particularly in Maharashtra has caused a huge irrevocable damage to CPI (Maoist). He received funds from other Maoist cadres for the furtherance of the activities of CPI (Maoist). He is convenor of PPSC, a frontal organization of CPI (Maoist). The incriminating documents related to communications for furthering the activities of CPI (Maoist) and propaganda material of the CPI (Maoist) as well as literature were seized from his possession.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சமூக சேவகர் ஸ்டேன் சாமியை கைது செய்த என்.... மதுரையில் கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம், By Veerakumar| Updated: Tuesday, October 13, 2020, 23:22 [IST].

[4] https://tamil.oneindia.com/news/chennai/yesu-sabai-stages-protest-against-arrest-of-father-stan-swamy-400329.html