Archive for ஜனவரி, 2018

பாதிரி தற்கொலை விவகாரத்தை அந்நிய கிருத்துவ இணைதளங்கள் பிரச்சினையாக்கும் போக்கு.

ஜனவரி 22, 2018

பாதிரி தற்கொலை விவகாரத்தை அந்நிய கிருத்துவ இணைதளங்கள் பிரச்சினையாக்கும் போக்கு.

Pastor Gideon Periyaswamy suicide or murder 20-01-2018

பாதிரிரைப் பற்றிய விவரங்கள் வேறுபடுகின்றன: அடையாளச்சேரியில், கிறிஸ்துவ பாதிரியார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், என்ற செய்தி தினமலரில் மட்டும் தான் வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதனை, அந்நிய கிருத்துவ இணைதளங்கள் ஊதி பெரிதாக்க முயல்வதாகத் தெரிகிறது. சென்னை அடுத்த, ராஜாகீழ்பாக்கத்தைச் சேர்ந்த, வேலு மகன் ராமமூர்த்தி என்கிற கிதியோன், 44, என்று தினமலர் கூறுகிறது[1]. ஆனால், இறந்தவரின் நெருங்கிய நண்பர் கூறுவது[2], “பெயர்: கிடியோன் பெரியசாமி வயது: 43; கிராமம்/சர்ச்/வசிக்கும் இடம்: அடையாளச்சேரி, கூவத்தூர் அருகில் (2 கி.மீ தொலைவில்), காலப்பாக்கம்; சர்ச்: மகநீயம்.” அவரது அக்கா பெயர் மல்லிகா என்றுள்ளது. ஆகவே, இந்துவாக இருந்து மதம் மாறியிருக்கலாம். சர்ச்சின் பெயர், “மகநீயம்” என்பதும் இது வரைக் கேள்விப் படாத, விசித்திரமாக இருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்னர், இந்துவாக இருந்தவர், கிருத்துவனாக மாறினாராம்[3].

The-body-of-Pastor-Gideon-Periyaswamy-of-Maknayeem-Church-in-Tamil-Nadu-India.-Morning-Star-News

கொலையா, தற்கொலையா?: தற்போது, கூவத்துார் அடுத்த, அடையாளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை அருகில், சில ஆண்டுகளுக்கு முன், குடிசையில், தேவாலயம் ஏற்படுத்தி, மதபோதகராக இருந்து வந்தார்[4]. இந்நிலையில், 20-01-2018 அன்று, காலை 9:00 மணிக்கு, அங்கு பணிபுரியும் சிறுமி, தேவாலயத்தை துப்புரவு பணி செய்ய, சென்றபோது, பாதிரியார் துாக்கில் தொங்கி, இறந்து கிடந்ததை கண்டார். ஆனால் பாஸ்டரின் நெருங்கிய கூட்டாளி என்று ஒருவர், “சனிக்கிழமை உபவாச நாள் ஆகும். அதனால், ஜபத்திற்கு வர ஆரம்பித்தனர். ஆனால், கதவு வெளிப் பக்கம் பூட்டப் பட்டிருந்தது. இது அசாதாரணமாக இருந்தது. ஆகவே, நிலைமை வித்தியாசமாக இருந்ததால், குழுவினர், கதவைத் திறந்து உள்ளே சென்றனர். அங்கு, அப்பாதிரி தூக்கில் தொங்குவதைக் கண்டனர். கயிறை அகற்றிப் பார்த்த போது, நாக்கிலும், கழுத்தைச் சுற்றி ரத்தம் கட்டியிருந்தது தெரிந்தது. உடலில் வேறெந்த ரத்தக் கறையும் காணப்படவில்லை. கைவிரலில் அணிந்திருந்த மோதிரம் காணவில்லை. மற்றபடி, செல்போன் உட்பட எல்லா பொருட்களும் அப்படியே இருந்தன. இரண்டு அல்லது மூன்று பேர் கழுத்தை கயிற்றால் நெறித்து இரவில் கொலைசெய்யப் பட்டிருக்க வேண்டும்,” என்று தெரிவித்ததாக, இரு கிருத்துவ இணைதளம் வெளியிட்டுள்ளது[5].

Pastor Didiyon committed suicide 21-01-2-18

முதலில், “புதிய தலைமுறையில், இச்செய்தி வெளிவந்ததாகவும், பிறகு, அது காணப்படவில்லை, ஏன்?; தினமலர் கூறுவதாவது, அச்சிறுமி, அப்பகுதியினரிடம், இதுகுறித்து, தெரிவித்தார். இது குறித்து, அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருமுன், அப்பகுதியினர் உடலை துாக்கிலிருந்து அப்புறப்படுத்தி, கீழே கிடத்தி வைத்தனர். போலீசார் வர தாமதமானதால், பகல், 12:30 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த, மாமல்லபரம் போலீஸ் டி.எஸ்.பி., சுப்பாராஜூ, மதுராந்தகம் டி.எஸ்.பி., மற்றும் போலீசார் விரைந்தனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டது. முதலில், “புதிய தலைமுறை”யில், இச்செய்தி வெளிவந்ததாகவும், பிறகு, அது காணப்படவில்லை என்று, மேற்குறிப்பிட்ட பாதிரியின் நண்பர் குறிப்பிடுகின்றார்[6].

Pastor-Gideon-Periyaswamy-in-white-at-church-celebration.-Morning-Star-News

இது அங்கிருக்கும், நூற்றுக் கணக்கான சர்ச்சுகளுக்குள் இருக்கும் பிரச்சினையா, தனிமனித பிரச்சினையா என்று தெரியவில்லை: பாதிரியின் நண்பர் கூறுவதாவது, “இப்பாதிரிக்கு முன்னரே அடிக்கடி மிரட்டல்கள் வந்துள்ளன. கொலை மிரட்டல்களும் இருந்துள்ளன. முன்னர் மத அடிப்படைவாதிகள் சர்ச்சின் கூரையை சேதப்ப்டுத்தினர். இன்னொரு முறை, கிராமப் பஞ்சாயத்திலுரும் வரும் தண்ணீர் சப்ளையையும் துண்டித்தனர். ஆழ்துளை கிணறையும் அப்புறப்படுத்தினர். பலமுறை அவரை அடித்துள்ளனர். மேலும் மதமாற்றம் விசயமாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது,” என்றெல்லாம் அடுக்குகிறார்[7]. ஆனால், இதெல்லாம் அந்த, “கிருத்துவர்கள் ம்த தண்டனைக்குள்ளாகிறார்கள்” என்ற இணைதளத்தில் உள்ளதே தவிர மற்றபடி வெறெங்கும் எந்த செய்தியும் காணப்படவில்லை. மேலும், அத்தகைய நிகழ்ச்சிகள் நடந்திருப்பின், சட்டப் படி நடவடிக்கை எடுத்திருக்கலாம், புகார் கொடுக்கலாம். ஆனால், எதுவுக் காணப்படவில்லை. ஆகவே, இது அங்கிருக்கும், நூற்றுக் கணக்கான சர்ச்சுகளுக்குள் இருக்கும் பிரச்சினையா, தனிமனித பிரச்சினையா என்று தெரியவில்லை.

Pastors commit suicide, Morning star, Hyderabad

பாதிரியாரைப் பற்றிய முன்னுக்கு முரணான விவரங்கள்: பாதிரியாரை ஒரு தரப்பினர் எதிர்த்து வந்ததாகவும், அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை, என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அப்பகுதியினர் வாக்குவாதம் செய்தனர். “கைவிரலில் அணிந்திருந்த மோதிரம் காணவில்லை. மற்றபடி, செல்போன் உட்பட எல்லா பொருட்களும் அப்படியே இருந்த,.” என்று அவர் நண்பர் குறிப்பிட்டதை கவனிக்கவும். ஆனால், யார் அந்த “ஒரு தரப்பினர்” என்று குறிப்பிடப் படவில்லை. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதே கோரிக்கையை, வலியுறுத்தி, செங்கல்பட்டிலும் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து, அவரது அக்கா மல்லிகா அளித்த புகாரை அடுத்து, அணைக்கட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Pastors commit suicide, British Pakistan Christians, 21-01-2018

அந்நிய கிருத்துவ இணைதளங்களின் விசமத்தனம்: இந்திய ஊடகங்களில், இவ்விசயம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இருப்பினும், அயல்நாட்டு கிருத்து இணைதளங்கள், இதனை, வகுப்புவாத-மதவாத ரீதியில் திரிபு விளக்கம் கொடுத்து வருகின்றன[8]. வில்சன் சௌத்ரி, ஆங்கில-இந்திய கிருத்துவ சங்கத்தின் தலைவர் [Wilson Chowdhry, Chairman of the British Asian Christian Association] தனை இந்து-கிருத்துவ விவகாரம் போன்று சித்தரித்திருப்பதும் திகைப்பாக உள்ளது[9]. இன்னொரு இணைதளம் ஏதோ மர்மக் கதை போன்று, இவர் சொன்னார்-அவர் சொன்னார் என்ற ரீதியில் கதை விட்டுள்ளது[10]. உள்ளூர்-இந்திய கிருத்துவர்கள் இவ்வாறு அயல்நாட்டு, கிருத்துவ இணைதளங்களுக்கு, விசயங்கள் கூறுகிறார்கள்[11] என்றால், பிரச்சார ரீதியில் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் என்ன போன்ற கேள்விகளும் எழுகின்றன. “உள்ளூர் இந்துக்கள் அவர் மதமாற்றம் காரியங்களில் ஈடுப்பட்டிருப்பதை விரும்பவில்லை,” என்று நண்பர் குறிப்பிட்டதாக, ஒரு இணைதளம் கூறுகிறது[12]. அப்படியென்றால் என்ன காரணம் என்பதனை கண்டறிய வேண்டும். மக்கள் விரும்பாத அளவிற்கு, கிருத்துவர்கள் அடாவடி காரியங்கள், மற்றவர்களை பாதிக்கும் காரியங்கள் முதலியவை என்ன செய்து வருகிறார்கள் என்று அவர்கள் தாம் பரிசீலினை செய்து கொள்ள வேண்டும். அயல்நாட்டில் இருந்து கொண்டு, விவகாரங்களைத் தெரிந்து கொள்ளாமல், விசமத்தனமான பொய்களை அவிழ்த்து விடக் கூடாது. மேலும் சர்ச்சுகளில் இருக்கும் பிரச்சினைகள், போட்டி-பொறாமைகள், முதலியவை தற்கொலை எண்ணங்களை வளர்க்கிறது[13]. இறையியல் ரீதியான அடிப்படைவாத எண்ணங்களும் தற்கொலைக்கு காரணமாகின்றன, என்று கிருத்துவர்களே ஒப்புக் கொள்கின்றனர்[14].

© வேதபிரகாஷ்

22-01-2018

Pastors commit suicide, why

[1] தினமலர், அடையாளச்சேரியில், பாதிரியார் தற்கொலை, பதிவு செய்தநாள்:  ஜன 21, 2018  04:04.

[2] Name: Gideon Periyaswamy, Age: 43, Village/Ministry/Residing at: Adaiyalacherry, near Koovathur (2km distance), Kalpakkam, Church Name: Maknayeem.

[3] A convert from Hinduism 25 years ago, Pastor Periyaswamy was single and served as pastor in Adayachery for more than 12 years, his close friend, pastor Azariah Reuben, told Morning Star News.

https://morningstarnews.org/2018/01/pastor-found-dead-tamil-nadu-india/

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1942900

[5] Saturday was a day of ‘prayer and fasting’. As the congregation made their way to the Church, they found Pastor’s house locked from the outside, which was very unusual. As the situation seemed very odd, the members opened the house to find Pastor dead and hanging by a rope around his neck. They removed the rope to find a blood clot around the throat and neck area, where the rope had fatally strangled him. There were no other traces of blood on his body. A gold ring that was on his finger was missing. All other belongings remained untouched, including his mobile telephone. It appears that he might have been first strangled with a rope, by two or more people causing his death in the night. http://persecutionrelief.org/pastor-murdered/

[6] This event was covered by “Puthiya Thalaimurai TV” and telecasted briefly. However, the news has now been pulled off the air. http://persecutionrelief.org/pastor-murdered/

[7] Pastor had been receiving frequent death threats. Earlier, religious fundamentalists had vandalized the roof of the Church. Another time, they had cut the water supply that was provided from the Village Panchayat, removed the bore well, beat and threatened him on many occasions, accusing him of converting people to Christianity. http://persecutionrelief.org/pastor-murdered/

[8] Britishpakistanichristians.org, Indian pastor tortured, beaten and then hung to death from rafters of his church, 21-Jan-2018

[9] https://www.britishpakistanichristians.org/blog/indian-pastor-tortured-beaten-and-then-hung-to-death-from-rafters-of-his-church

[10] Morning Star News, Pastor Found Dead in Tamil Nadu, India, By Our Southern India Correspondent , January 21, 2018

[11] https://morningstarnews.org/2018/01/pastor-found-dead-tamil-nadu-india/

[12] “The local Hindus were not happy with growing Christianity,” Pastor Reuben said. “They had several times tried to stop the ministry.”

https://morningstarnews.org/2018/01/pastor-found-dead-tamil-nadu-india/

 

[13] Sarah Eekhoff Zylstra, Why Pastors Are Committing Suicide, NOVEMBER 23, 2016

[14] ndeed, a 2013 LifeWay survey found that 48 percent of self-identified evangelical, fundamentalist, or born-again Christians believe prayer and Bible study alone can overcome mental illness.

https://www.thegospelcoalition.org/article/why-pastors-are-committing-suicide/

சி.எஸ்.ஐ ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட், துாத்துக்குடியில் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு: மேய்ந்த ஆட்டை, மறுபடி மேய விட்டதற்கு, மேய்ப்பவனின் பங்கும் உள்ளது!

ஜனவரி 1, 2018

சி.எஸ்.ஐ ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட், துாத்துக்குடியில் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு: மேய்ந்த ஆட்டை, மறுபடி மேய விட்டதற்கு, மேய்ப்பவனின் பங்கும் உள்ளது!

Selvin Durai, pastor suspended for sending obscene messages-31-12-2017

மேய்ந்த ஆட்டை, மறுபடி மேய விட்டதற்கு, மேய்ப்பவனின் பங்கும் உள்ளது: மற்படியும், அதே பாஸ்டர், பாதிரி, கிறிஸ்தவ சாமி செக்ஸ் புகாரில் சிக்கிக் கொண்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. மேய்ந்து கொண்டிருக்கும் கருப்பு ஆடுகளை மேய விட்டுக் கொண்டிருந்தால், அவை மேயத்தானே செய்யும்? மேய்ப்பவனே இங்கு ஒழுங்கில்லாத நிலையுள்ள்ளது. இச்சர்ச் கத்தோலிக்க சர்ச் இல்லை என்று தப்பிக்கவும் முடியாது, ஏனெனில், சர்ச்சுகளில் செக்ஸ்-பாலியல் சில்மிஷங்கள், கொலைகள் எல்லாம் சாதாரணமாகி விட்டன. சர்ச்சுகளில் இவ்வாறு செக்ஸ்-பாலியல் வன்ம போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்நாட்டு சட்டதிட்டங்களில் படி தண்டனை கொடுக்காமல், புகார் கொடுக்காமல், ஏதோ கட்டப் பஞ்சாயத்து போன்று அவர்களுக்குள்ளேயே, பேசி தீர்த்து, விவாகரங்களை முடித்துக் கொள்வது, சட்டங்களை ஏய்ப்பது மட்டுமல்லாது, குற்றவாளிகளை மறைப்பதும் ஆகும். அந்நிலையில் சர்ச்சில் உள்ள எல்லோருமே குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

Selvin Durai, pastor suspended for sending obscene messages-31-12-2017.Tuty online

இடம் மாறிய ஆடு, புதிய பச்சைபசேலென்ற புல்வெளியைக் கண்டதும் மேய ஆரமொஇத்து விட்டது: துாத்துக்குடி நாசேரத் திருமண்டலத்திற்குட்பட்ட சண்முகபுரம் துாய பேதுரு ஆலயத்தில் சேகரகுருவாக இருப்பவர் செல்வின்துரை[1]. இவருக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருப்பதினால், சர்ச்சிற்கு வரும் பெண்கள் மீது தன் கண்களால் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார். பல பெண்களிடம் ஆபாசமாக அழைத்துள்ளார்[2]. அவ்வாறு, திடீரென்று ஒரு பெண் இவர் கண்களில் பட அவரிரன் நைஸாக பேச்சுக் கொடுத்தார். அப்பெண்ணிடம் வாட்ஸ்நம்பர் வாங்கிக் கொண்டு, முதலில் சாதாரணமாக பேச ஆரம்பித்தார். பேசி பழக்கமானதுடன், அவரிடம் ஆபாசமாக பேசி, பிறகு அழைப்பு விடுத்துள்ளார்[3]. அப்பொழுது அப்பெண் உசாராகி விட்டார். ஓஹோ, இந்த பாதிரி அபாயகரமான ஆள் என்று புரிந்து கொண்டார். உடனே, இது குறித்து அப்பெண் சபை நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தார்[4]. ஆனால், சி.எஸ்.ஐ சர்ச் அதனை அமுக்கப் பார்த்தது. ஏற்கெனவே பல வழக்குகளில் பிஷப் முதல் சாதாரண பாஸ்டர் வரை மாட்டிக் கொண்டு, அசிங்கப் பட்டு வருவதால், விசயத்தை அப்படியே அமுக்கலாம் என்று தீர்மானித்தனர் போலும்.

Selvin Durai, pastor suspended for sending obscene messages-31-12-2017.TamilNews

சி.எஸ். ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட், துாத்துக்குடியில் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு: ஐயர் செல்வின் துரை பெண்களிடம் வாட்ஸ்நம்பர் வாங்கி சாட்டிங் செய்வது வழக்கமாகும்[5]. ஆனால் அவரிடம் மாட்டும் பெண்கள் அப்பாவிகள் அதிகம், அவர்கள் வெளியில்சொல்வது கிடையாது என்பதால் வலையை பல பேருக்கு வீசி உள்ளார். அதில் மீன் மாட்டாமல் துள்ளி என்று அங்குள்ள முக்கியஸ்தர் நம்மிடம் தெரிவித்தார், என்று ஒன்.தமிழ்.நியூஸ் கூறுகிறது[6]. சரி சர்சிற்குள் உள்ள பாலியல் சமரங்களை, வழக்கம் போல ஒப்புக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம், ஆனால், தீர்வு என்னவென்று கண்டு பிடிக்கும் முறை தெரியவில்லை. பெண்களின் கற்பு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்ப்பு போன்றவை கிருத்துவத்திற்குத் தேவையில்லையா?

Selvin Durai, pastor suspended for sending obscene messages-31-12-2017.TamilMovieNews

ஐயர் பிரயோகம் ஏன்?: இதெல்லாம் ஓரு பக்கம் இருக்க, “ஐயர்” இங்கு எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை! ஏன் “ஐயங்கார்” வரக்கூடாதா? இல்லை, காஜி, மௌலானா என்று கூட வரலாமே? ஏன் “ஐயரை” மட்டும் பிடித்துக் கிருத்துவகள் கொண்டிருக்கிறார்கள்? இதில் தான் ஊடகங்களின் குசும்புத் தனமும் வெளிப்படுகிறது. “தலித்” விசயத்தில் இரட்டை வேடம் போடும், இவர்கள், இங்கு “ஐயர்” பிரயோகத்தை விட “சூத்திரர்” என்றே குறுப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால், அவ்வாறு செய்யாமலிருப்பதால், குற்றம் புரிந்து, கேவலமான நிலையில் இருக்கும் போது கூட, இந்துக்களைத் தாக்க வேண்டும் என்ற வக்கிரம் அவர்களிடம் இருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறார்கள். இந்து-சந்நியாசியைப் போல திரியும் இவர்கள் நிச்சயமாக, மரியாதை கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் தான், இவ்வார்த்தையை உபயோகிக்கின்றனர். “பார்ப்பன விரோதத்தையும்” இவ்வாறு வளர்க்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், திகவினர், திருமா போன்றோரும், இதனை எதிர்ப்பதில்லை.

Bishop colluding with Selvin Durai, pastor

மேய்ப்பவன், மேய்ந்தவன் கூ ட்டம் போட்டு பேசினால் உண்டாகும் விளைவு: அதன் பேரில் திருமண்டல செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ரவிசந்தர், துாத்துக்குடி சண்முகபுரம் பாஸ்ட்ரேட உறுப்பினர் புல்கான், நிர்வாக உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் திருமண்டல பேராயர் எஸ்.இ.சி. தேவசகாயத்திடம் [Rt. Rev. S.E.C. Devasahayam (2017-till date)] புகார் குறித்து தெரிவித்தனர்[7]. அதன் பேரில் நேற்றிரவு [27-12-2017] சம்பந்தப்பட்ட சேகரகுருவிடம் திருமண்டல பேராயர் விசாரித்ததில் செல்வின்துரை பெண்ணிடம் ஆபாசமாக பேசியதை ஒப்புக்கொண்டார். பின்னர், இன்று (28-12-2017) திருமண்டல சபை நிர்வாகிகள் கூட்டம் லே செயலாளர் ராஜன், திருமண்டல துணை செயலாளர் லுார்துராஜ் ஐயர், குருத்துவ செயலாளர் தேவராஜ்  ஞானசிங், பொருளாளர் மோகன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டமுடிவில் பேராயர், சேகரகுரு செல்வின்துரையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் சபையிலுள்ள வீட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.

tutocorin-diocese-2003-selvindurai

கருப்பு ஆடுகளை எதிர்க்கும் மற்ற ஆடுகள்: சபையில் இருந்து சஸ்பெண்ட் என்பது வெறும் கண்துடைப்பு, அவர் மீது போலீசில் புகார் அளித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்தால்தான், இனி இத்தகைய நடவடிக்கை தொடராது என சபை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்[8]. ஏனெனில், அவர்களுக்கு சர்ச் விவகாரங்கள் எல்லாம் நாறி வருகின்றன, ஒழுக்கம் சீரழிந்து வருகின்றது என்றெல்லாம் நன்றாக அறிந்து கொண்டு தான் உள்ளனர். மேலும், இந்த செல்வின்துரை ஏற்கனவே வடக்கூர் பேட்ரிக் சர்ச், டூவிபுரம் சர்ச்சில் சபை மக்களால் புகார் அளிக்கப்பட்டு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[9]. எனவே, சர்ச் குற்றவாளிகளை மூடி மறைக்கவே பார்க்கிறது என்று விசுவாசிகளுக்கும் புரிந்து விட்டது. 2014ல் நான் பதிவு செய்துள்ள ஒரு கட்டுரையில், இவரது புகைப்படம் உள்ளது[10]. அதிலிருந்து, இவர் பிஷப்பிற்கு நெருக்கமானவர் என்று தெரிகிறது[11]. தமிழ் பிஷப் தேவசகாயமே, பல வழக்குகளில் சிக்கியுள்ளார். சுங்கவரி மோசடி போன்ற விவக்காரங்கள் ஊடகங்களில் வந்துள்ளன[12]. இதற்காக இவர் 2014ல் கைது செய்யப் பட்டிருக்கிறார்[13]. நகரியில் உள்ள மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க, அமெரிக்காவிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருக்கிறார். அதில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது[14]. போதாக்குறைக்கு பதவி சண்டைகள் வேறிருக்கின்றன[15].

© வேதபிரகாஷ்

01-01-2018

Selvin Durai, pastor-Vadakkur Patrick Church

[1] ஒன்.தமிழ்.நியூஸ், துாத்துக்குடியில் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு, சி.எஸ். ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட், வெள்ளி 29, டிசம்பர் 2017.

[2] http://www.onetamilnews.com/News/-ZALDLS

[3] http://www.onetamilnews.com/News/-ZALDLS

[4] தூதி.ஆன்லைன், வாட்ஸ்ஆப்பில் பெண்ணை அழைத்தசேகரகுரு சஸ்பெண்ட் : துாத்துக்குடியில் பரபரப்பு!, வெள்ளி 29, டிசம்பர் 2017 7:52:19 PM (IST).

[5] ஒன்.தமிழ்.நியூஸ், துாத்துக்குடியில் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு, சி.எஸ். ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட், வெள்ளி 29, டிசம்பர் 2017.

[6] http://www.onetamilnews.com/News/-ZALDLS

[7] http://www.tutyonline.net/view/31_151264/20171229195219.html

[8] தினமலர், பெண்ணுக்குவாட்ஸ்ஆப்பில் ஆபாச தகவல்கள்: பாதிரியார் சஸ்பெண்ட், பதிவு செய்த நாள். டிசம்பர் 30, 2017. 23:58 IST.

[9] http://www.dinamalar.com/district_detail.asp?id=1929608&dtnew=12/31/2017&Print=1

[10] https://christianityindia.files.wordpress.com/2014/03/tutocorin-diocese-2003-5.jpg

[11] https://christianityindia.wordpress.com/2014/03/26/case-filed-against-jebachandran-ex-bishop-for-fraud-etc/

[12] Anglican link, Indian bishop arrested on fraud charges, 20 Oct 2014

[13] The former Bishop in Madras of the Church of South India, the Rt. Rev. Vedanayagam Devasahayam has been arrested by police in Madras and charged with stealing funds donated to his diocese by the Episcopal Church of the USA to aid victims of the 2004 Indian Ocean Tsunami.

http://www.anglican.ink/article/indian-bishop-arrested-fraud-charges

[14] CSI Madras Diocese, Bishop Devasahayam Scandal, https://www.youtube.com/watch?v=rVopdB0ADu8

[15] Rt.Rev.Dr.V.Devasahayam Vs. St.George Cathedral Trust – Court Judgment, https://www.legalcrystal.com/case/1168089/rt-rev-dr-v-devasahayam-vs-george-cathedral