Archive for ஒக்ரோபர், 2015

சி.எஸ்.ஐ. மதபோதகர்கள், வணிகர்கள் கைகலப்பில் இறங்கியது ஏன்? இது வியாபாரச் சண்டையா, வர்த்தக யுக்தியா, அல்லது நிதிமுறை சர்ச்சையா?

ஒக்ரோபர் 25, 2015

சி.எஸ்.. மதபோதகர்கள், வணிகர்கள் கைகலப்பில் இறங்கியது ஏன்? இது வியாபாரச் சண்டையா, வர்த்தக யுக்தியா, அல்லது நிதிமுறை சர்ச்சையா?

மார்த்தாண்டம் பிரச்சினை - நியூஸ்.7. போட்டோ

மார்த்தாண்டம் பிரச்சினை – நியூஸ்.7. போட்டோ

கிறிஸ்தவ மதபோதகர்கள் திராவிட சித்தாந்தம் மற்றும் இந்துவிரோத பகுத்தறிவு கொள்கைகளினால் ஊக்குவிக்கபடுகிறார்களா?: தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட சித்தாந்த ஆட்சியாளர்களின் கீழ் மதநம்பிக்கையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளாளர்கள். குறிப்பாக, அவர்கள் நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டால் கூட, இந்து-விரோத சித்தாந்திகளாகத்தான் இருந்து வருகிறார்கள். கோவில்கள், அவற்றின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆட்டிப்படைத்து வருகிறார்கள். கோடி-கோடிக்கணக்கில் உள்ள அச்சொத்துகளை மாறி-மாறி குத்தகை, ஆக்கிரமிப்பு, பட்டா-மாற்றம் போன்ற வழிகளில் கொள்ளையடித்து வருகிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் வழிபாட்டு இடங்கள் அவற்றின் சொத்துகளை அம்மாதிரியே செய்யும் போது கூட அரசு தலையிட முடியாத நிலையுள்ளது. அந்நிலையில் அவர்களே அத்தகைய கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்குள்ளேயே சண்டைகள் வந்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளார்கள், அவற்றில் மதத்தலைவர்கள் முதல், கீழுள்ள நிர்வாகிகள், டிரஸ்ட் உறுப்பினர்கள் என்று எல்லோருமே அடக்கம். சி.எஸ்.ஐ பற்றி சொல்லவே வேண்டாம். நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றின் மூலம் அவர்களது விவகாரங்கள் பல வெளிவந்துள்ளன. இந்நிலையில், மார்த்தாண்டத்தில் வணிக வளாக வாடகை பிரச்சினை தொடர்பாக போதகர்கள்–வியாபாரிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று வரும் செய்தி வியப்பாக உள்ளது.

பாஸ்டர்கள் வாடகை விசயத்தில் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015.

பாஸ்டர்கள் வாடகை விசயத்தில் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015.

சி.எஸ்.. பேராயத்திற்கு வணிக வளாகம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் சி.எஸ்.ஐ. ஆலயம், ஆலய வளாகம் முதலியவை உள்ளது பேராயத்திற்கு சொந்தமான நான்கடுக்கு வணிக வளாகம் தான் இப்பொழுதைய பிரச்சினையில் வந்துள்ளது[1]. இங்கு 200–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அக்கடைகள் பல வணிகர்களுக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்த வணிக வளாகம் இருப்பதால் எப்போதும், இங்கு வியாபாரம் மும்முரமாக நடைபெறுவது வழக்கம். இதன் மூலம் கணிசமான பணம் சி.எஸ்.ஐக்குக் கிடைத்து வருகிறது. இந்த கடைகளின் வாடகை மற்றும் வைப்புத்தொகையை அதிகரித்து தர வேண்டும் என பேராய நிர்வாகிகள் அங்கு கடைகளை நடத்தி வருபவர்களிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், ஒருசில கடை உரிமையாளர்கள் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது.

பாஸ்டர்கள் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015

பாஸ்டர்கள் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015

போதகர்கள் மற்றும் வணிகர்களுக்குன் இடையில் கைகலப்பு[2]: இந்தநிலையில், 20-10-2015 அன்று காலை திடீரென பேராய போதகர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வணிக வளாகத்திற்கு வந்தனர். எல்லோரும் அவரது மத-உடைகளோடு படைப்போல அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஒரு ஓட்டலில் நுழைந்து அதன் உரிமையாளரிடம் பேராயம் நிர்ணயித்த தொகையை தர வேண்டும் எனவும், வாடகை பாக்கியை முழுமையாக கட்ட வேண்டும் எனவும் கூறினர். இதனால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பிரச்சினை முற்றி கைகலப்பு மூண்டது[3]. கிறிஸ்தவ போதகர்கள் அங்கிகளுடன் வணிகர்ளுடன் இவ்வாறு தள்ளுமுள்ளு மற்றும் கைக்கலப்புகளில் ஈடுபட்டது, ஏதோ சினிமா பார்ப்பது போன்றிருந்தது[4]. போதகர்களுக்கு ஆதரவாகவும், கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும் அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர். அதற்கு யாரும் உடன்படாததால் பதற்றம் அதிகரித்தது. இதனை வேடிக்கை பார்க்க நெடுஞ்சாலையில் ஏராளமானோர் திரண்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரும் பொதுவான இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினர். அதன்பின்பு, போதகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சண்டையில் ஈடுபட்ட போதகர்கள்

சண்டையில் ஈடுபட்ட போதகர்கள்

இருதரப்புகளிடையே நடந்த பேச்சுவார்த்தை[5]: இதைத்தொடர்ந்து, 20-10-2025 அன்று மாலை சி.எஸ்.ஐ. ஆலய வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பேராயம் சார்பில் ராபர்ட் புரூஸ், மற்றும் ஜெங்கின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வணிகர்கள் சார்பில் ஓரிரு கடைக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் வாடகை தொடர்பாக இருதரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மற்றவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா, ஒப்புக்கொள்வார்களா என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், வர்த்தகர்களில் சிலர் இவ்விசயமாக போராட்டம் நடத்தவும், கோர்ட்டுக்குச் செல்லவும் தயாக இருப்பதாகக் கூறியுள்ளனர்[6]. அவ்வணிகர்களில் கணிசமாக முஸ்லிம்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

சி.எஸ்.. பேராயத்திற்கும் வியாபாரத்திற்கும் தொடர்பு உள்ளதா?: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் சி.எஸ்.ஐ. பேராயத்திற்கு சொந்தமான நான்கடுக்கு வணிக வளாகத்தில் 200–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன என்று பார்த்தோம். 20-10-2015 அன்று காலை திடீரென பேராய போதகர்கள் மத-உடைகளோடு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வணிக வளாகத்திற்கு வந்தனர்.  இப்படி 200 கடைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட  மதபோதகர்கள் என்பது கவனத்தில் ஈர்ப்பதாக உள்ளது. 200 கடைகளுக்கும் இவ்வாறு 200 மதபோதர்களை பொறுப்பில் போட்டுள்ளார்களா, அவர்களை வாடகை வசூல், வாடகை ஏற்றுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்களா போன்ற கேள்விகளும் எழுகின்றன. ஏனெனில், அவர்களை அவ்வேலையை செய்தது மட்டுமல்லாது, வணிகர்களுடன் சண்டையும் போட்டுள்ளார்கள். மதவுடைகள் அணிந்து கொண்டு, அத்தகைய மதம் சம்பந்தமில்லாத காரியங்களில் அவர்கள் எவ்வாறு ஈடுபட்டனர் என்று நோக்கத்தக்கது. அப்படியென்றால், மதவிவகாரங்களைத் தவிர, இவர்களுக்கு இத்தகைய மதம்-சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய அனுமதி உள்ளதா அல்லது இரட்டை வேடம் போட்டு வருகிறார்களா, அல்லது அவ்வுடைகளைப் போட்டு மதச்சாயம் பூசி மிரட்ட வந்தார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது[7]. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் அவ்வாறு மதவுடைகளுடன் 200 பேருக்கும் மேலாக போதகர்கள் வந்தார்கள் என்றால், அது தீர ஆலோசித்து, திட்டமிட்டு, முடிவெடுத்த காரியம் என்றாகிறது. திடீரென்று சாதாரணமாக அவ்வாறு வந்துவிட முடியாது. அப்படியென்றால், இவர்களுடைய தலைவர் யார், இவர்களை இவ்வாறு தயார் படுத்தி அனுப்பியது யார், வியாபார விவகாரங்களில் கிறிஸ்த அமைப்புகள் ஏன் ஈடுபடுகின்றன, போன்ற கேள்விகளும் எழுகின்றன.

CSR Marthandam

CSR Marthandam

தாக்கிய பாஸ்டர்மீது வழக்கு[8]: மார்த்தாண்டம் வணிக மையம் [Marthandam Chamber of Commerce] இந்த கடைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 100 சதவீதத்திற்கு மேலாக வாடகை உயர்த்தப்பட்டது, குறித்து எதிர்ப்பு தெரிவித்தது. மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் இதைப்பற்றி வர்த்தகர்கள் புகாரும் அளித்துள்ளனர்[9].  20-10-2015 அன்று நடந்த வணிகர்கள்-போதகர்கள் கைகலப்பு படம்பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில், மத போதகர் சுரேஷ் செல்வகுமார் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. “புதிய தலைமுறை” நிருபர் கே. மது, போதகர்களினால் தாக்கப்பட்டார். குறிப்பாக சுரேஷ் செல்லக்குமார் என்ற பாஸ்டர் தாக்கியதால் அவர்மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 341, 294 (b), 323 மற்றும் 506 (i) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[11].

CSI Shopping complex,  Marthandam

CSI Shopping complex, Marthandam

திட்டமிட்ட விலைக்கட்டுப்பாடுகள், விலையேற்றங்கள், பொருட்களை  பதுக்கி வைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவது யார்?: வியாபார விவகாரங்களில் கிறிஸ்தவர்கள் இவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால், வியாபாரமும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது என்றாகிறது. தீவிரவாதிகள் (ஜிஹாதிகள் முதலியோர்) இந்திய ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்து, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறார்கள் என்று முன்னரே செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதைய நிதியமைச்சர் சிதம்பரமே அதைப் பற்றி பேசியுள்ளார். இப்பொழுது ஆன்-லைன் வர்த்தகம் அதிகமாகி விட்டது. அதில் யார் பணத்தை வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள் என்று தெரியாது.  ஷேர்களை, பொருட்களை வாங்கினால் மட்டும் போறாது, அவற்றை நிர்வகிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியென்றால், அந்த அளவுக்கு இவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது என்பதும், தெளிவாகிறது. இந்நிலையில் சாதாரண மக்கள் இத்தகைய திட்டமிட்ட விலைக்கட்டுப்பாடுகள், விலையேற்றங்கள், பொருட்களை  பதுக்கி வைத்தல் போன்ற காரியங்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிகிறது. பொதுவாக, பண்டிகைக் காலங்களில் தான் இத்தகைய காரியங்கள் நடந்து வருகின்றன. அப்படியென்றால், அப்பண்டிகைகளைக் கொண்டாடும் மக்களைக் குறிவைத்து, இத்தகைய நாணயமற்ற மற்றும் பொருளாதாரத்த்யை சீர்குலைக்கும், சாதாரண மக்களை சுரண்டும் வேலைகள் நடந்து வருகின்றனவா என்று கவனிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

21-10-2015

[1]  தினத்தந்தி, வணிக வளாக வாடகை பிரச்சினை: போதகர்கள்வியாபாரிகள் கைகலப்பு மார்த்தாண்டத்தில் பரபரப்பு, மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 21,2015, 5:30 AM IST; பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 21,2015, 1:47 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[3] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[4] அதாவது பலத்தை, சக்தியை எம்முறையிலும் உபயோகப்படுத்தத் தயாராக உள்ளனர், அவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் என்றாகிறது.

[5] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[6]  கோவில் சொத்துகள் என்றால், வேறுவிதமாக இருக்கும், இங்கு உண்மையிலேயே அவ்வாறு செல்வார்களா அல்லது சரசமாகி விடுவார்களா என்று பார்க்க வேண்டும்.

[7]  செக்யூலரிஸத்தில், மதத்தையும் மற்ற மதம் சம்பந்தமில்லாத காரியங்களையும் சேர்க்கக் கூடாது என்றுள்ளது. “சர்ச் மற்றும் ஸ்டேட்” தனித்தனி என்று கூறிக்கொள்கிறார்கள்.

[8]  The Hindu, Case registered against pastor, Nagerkoil, October.24, 2015; Updated: October 24, 2015 05:45 IST

[9] நியூஸ்.7, மார்த்தாண்டத்தில் தாக்குதல் தொடர்பாக மதபோதகர் மீது வழக்கு, Updated on October 23, 2015.

[10] http://ns7.tv/ta/case-filed-against-piest-marthandam-attacking.html

[11] In connection with an attack on a reporter of a private television channel, a case has been registered against Suresh Chellakumar, Pastor, CSI church, Thalakkanvilai, by Marthandam police on Thursday. According to the police, K. Mathu (44), working for Puthiya Thalaimurai Television, along with a few other reporters, rushed to the CSI shopping complex in Marthandam on Wednesday for recording the scuffle between members of the Marthandam Chamber of Commerce and CSI pastors. Angered by recording of the scuffle, a few CSI pastors are alleged to have abused Mr. Mathu. The reporter was also allegedly attacked and threatened with dire consequences. Accompanying reporters A. Arul Kumar and Shagayakumar tried to safeguard Mathu from the attack but in vain. Mathu refused to get admitted to a hospital for treatment. Marthandam police have registered a case under Sections 341, 294 (b), 323 and 506 (i) of Indian Penal Code against Suresh alias Suresh Kumar, Pastor, CSI church, Thalakkanvilai, based on complaint lodged by Arul Kumar. Further investigation is on.

Advertisements

கிறிஸ்தவ மதபோதகர் ஸ்டீபன்குமார் என்கின்ற விஜயகுமார் என்கின்ற தீபக்குமார் மாணவியுடன் பலமுறை “உல்லாசமாக” இருந்தானா அல்லது கற்பழித்தானா – ஊடகங்கள் ஏன் உண்மைகளை மறைக்கின்றன?

ஒக்ரோபர் 19, 2015

கிறிஸ்தவ மதபோதகர் ஸ்டீபன்குமார் என்கின்ற விஜயகுமார் என்கின்ற தீபக்குமார் மாணவியுடன் பலமுறைஉல்லாசமாகஇருந்தானா அல்லது கற்பழித்தானாஊடகங்கள் ஏன் உண்மைகளை மறைக்கின்றன?

மாணவியுடம் உல்லாசம் - பாதிரி கைது

மாணவியுடம் உல்லாசம் – பாதிரி கைது

கிருத்துவமத போதகர்கள் ஏன் எப்பொழுதும் மாணவிகளுக்கு, இளம் பெண்களுக்கு காமவலையை விரிக்கிறார்கள்?: மாணவியுடன், ‘உல்லாசமாக’ இருந்து விட்டு, திருமணத்துக்கு மறுத்த கிறிஸ்தவ மதபோதகர் கைதானார். வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த ஜலகாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது பெண், அருகில் உள்ள அரசு பெண்கள் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, அப்துல்லாபுரத்தைச் சேர்ந்த தீபக்குமார், 47, ஜலகாம்பாறை அருகே உள்ள, மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில், மதபோதகராக இருந்து வருகிறார். தேவாலயத்துக்கு, அடிக்கடி மாணவி சென்றபோது, மதபோதகருடன் பழகி உள்ளார்[1]. கிருத்துமதபோதகருக்கு இவற்றைத்தான் செமினரிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள் போலும். விடுதலை “கடவுள் சக்தி சிரிக்கிறது” என்ற தலைப்பில், குமரி மாவட்ட கோவில்களில் தொடர் திருட்டு, ஒரே கோவிலில் ஆறாவது கொள்ளை என்று அவற்றுடன் சேர்த்து மதபோதகர் கைது என்று இச்செய்தியை நுழைத்துள்ளது[2]. அதாவது “செக்யூலரிஸ நாத்திகத்தைப்” பின்பற்றியுள்ளது. இதே இந்து சாமியார் என்றால், வேறுவிதமாக இருந்திருக்கும். மற்ற ஊடகங்களும் முதல் பக்கங்களில் தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டிருக்கும். கிருத்துவ மதபோதகர் என்றதும் அமுக்கி வாசித்துள்ளன ஊடகங்கள் என்று நன்றாகவே தெரிகிறது.

 

Sexy christianity - pastor sex India

Sexy christianity – pastor sex India

பாதகம் செய்த கிருத்துவ மதபோதகர் யார்?: தீபக்குமார் என்கிறது தினமலர்[3]; ஸ்டீபன்குமார் என்கிறது மாலைமலர்[4]; விஜயகுமார் என்கிறது தமிழ்முரசு[5]; விஜயகுமார் என்கின்ற தீபக்குமார் என்கிறது தினகரன்[6]; விடுதலையும் தீபக்குமார் என்றே குறிப்பிட்டுள்ளது[7]. அந்த கிருத்துவ போதகரின் பெயரை மறைக்க ஊடகங்கள் இந்த அளவுக்கு பாடுபட வேண்டுமா என்று தெரியவில்லை. பாலியல் குற்றங்களில், வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளம் முதலியவை தாம் வெளிப்படையாக சொல்லக்கூடாது, வெளியிடக்கூடாது என்றுள்ளது. ஆனால், பாலியல் குற்றம் புரிந்த, ஏமாற்றி கற்பழித்த போதகனின் பெயரைக் குறிப்பிடக் கூடாது, அடையாளத்தை மறைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. இருப்பினும் இவ்விசயத்தில் அவ்வாறு ஊடகங்கள் ஏன் செய்துள்ளன என்று தெரியவில்லை. செக்யூலரிஸ வைரஸ், நச்சுத்தன்மை, கேன்சர் அந்த அளவுக்கு புரையோடி இருப்பதால், இவர்களை அவ்வாறு பாரப்பட்சத் தன்மையுடன் “பத்திரிகா தர்மம்” முதலியவற்றை மறந்து வேலை செய்ய செய்திருக்கின்றது போலும்!

Sexy christianity - pastor sex India.2தாயுக்கு உடல்நிலை சரியில்லை என்றாதால் ஜெபிக்கக் கூப்பிட்ட காதலி: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தனது படிப்பை நிறுத்தி விட்டு தாயை கவனிக்க ஊருக்கு சென்று விட்டாராம். மேலும் தனது தாய்க்கு ஜெபம் செய்ய வரும்படி மதபோதகர் விஜயகுமாரை அப்பெண் அழைத்துள்ளார்[8]. அதன்படி விஜயகுமார் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று ஜெபம் செய்து வந்தாராம்[9]. அடிக்கடி அந்த மாணவி வீட்டிற்கு சென்று வரவே, இரண்டு பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. உடல்நிலை சரியில்லாத அம்மா வீட்டில் கிடக்க, இவ்விருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டனர் என்றால், கர்த்தர் பார்த்துக் கொண்டே இருந்தார் போலும்! அப்போது, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என விஜயகுமார் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதெல்லாம் வழக்கமான பாணியில் தான் உள்ளது. இதனையடுத்து ஸ்டீபன்குமார் அந்த மாணவியை யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றுவிட்டார். அப்படியென்றால், உடம்பு சரியாக இல்லாமல் இருக்கும் அம்மாவைக் கூட ஏமாற்றி விட்டார்களா? மேலும் மாணவியை சென்னை, பெங்களூரு என பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்[10]. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மைனர்பெண்ணை சென்னைக்கு அழைத்துச்சென்ற விஜயகுமார், அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது[11].

முன்னர் பெங்களூரு கிருத்துவ மதபோதகரும் இதே மாதிரி செய்து வந்தான்

முன்னர் பெங்களூரு கிருத்துவ மதபோதகரும் இதே மாதிரி செய்து வந்தான்

ஏமாற்றி கற்பழித்ததைஉல்லாசமாகஇருந்தார் என்று ஊடகங்களின் கொகோகத் தன்மையினை வெளிப்படுத்தும் விதம்: இதையடுத்து, அவர், பல இடங்களுக்கு, மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம், மாணவியை, சென்னைக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, அவருடன் மதபோதகர், ‘உல்லாசமாக’ இருந்ததாக தெரிகிறது. கற்பழித்தான் என்று குறிப்பிட அஞ்சுவது ஏனோ? தில்லியில் நடந்தால், கற்பழிப்பு, தமிழகத்தில் நடந்தால் “உல்லாசமா”? அப்படியென்றால், பல இடங்களுக்கு கூட்டிச் சென்றபோது, பலமுறை கற்பழித்தான் என்றாகிறது. சரி, ஸ்டீபன் குமார் ஏன் சர்ச்சுக்கு வரவில்லை என்று அவனை யாரும் கேட்கவில்லையா அல்லது அவ்வாறு உல்லாசமாக, சல்லாபங்களில் ஈடுபட சர்ச் விடுமுறை அளிக்கின்றதா? இதன்பின், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, அவரை, மாணவி வலியுறுத்தியதற்கு, மறுப்பு தெரிவித்து உள்ளார். அத்துடன், ‘சம்பவத்தை வெளியே தெரிவித்தால், கொலை செய்துவிடுவேன்’ எனவும், மதபோதகர் மிரட்டி உள்ளார். இதெல்லாமும் வழக்கமாக மற்ற கிறிஸ்தவ மதபோதகர்கள், பாஸ்டர்கள், சாமியார்கள், பிஷப்புகள் பின்பற்றும் யுக்திதான். இதுகுறித்து, திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசில், மாணவி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, மதபோதகர் தீபக்குமாரை கைது செய்தனர்[12]. பிறகு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ப்ளோரன்ஸ் மேரி-கலைக் காவேரி

ப்ளோரன்ஸ் மேரி-கலைக் காவேரி – மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போலத்தான் கிருத்துவத்தில் பெண்கள் இடிபடுகிறார்கள்1

வழக்கமாக மற்ற கிறிஸ்தவ மதபோதகர்கள், பாஸ்டர்கள், சாமியார்கள், பிஷப்புகள் பின்பற்றும் யுக்தி:

  1. சர்ச்சுகளுக்கு வரும் மாணவிகளுக்கு / இளம் பெண்களுக்கு வலை வீசுதல்.
  1. அவர்களிடம் பேச்சு கொடுத்து, குறைகள் தீர்க்க பிரார்த்தனை செய்கிறேன், ஆசிர்வதிக்கிறேன் என்று இரக்கத்தை, அக்கறைய ஏற்படுத்துதல்.
  1. தனியாக வந்தால் விசேசமாக பிராத்திக்கிறேன் என்று அடிபோடுவது.
  1. அவ்வாறு வந்தால், நைசாக தலையைத் தடவுவது, கைகளைப் பிடிப்பது, முதுகில் தட்டுவது என்று ஆரம்பித்து, அணைத்துக் கொள்வது.
  1. மார்புடன் அணைத்துக் கொண்டு கிளிகிளுப்பை ஏற்படுத்தி, உணர்ச்சிகளைத் தூண்டி விடுதல்.
  1. அடிக்கடி வா என்று கூறுவது, வெறெங்காவது போகலாமே என்பது, அவ்வாறே சென்று வருவது.
  1. பிறகு தனி அறையில் உடலுறவில் ஈடுபடுவது, தொடர்ந்து கற்பழிப்பது.
  1. உண்மையினை உணர்ந்து, பயந்து கல்யாணம் செய்து கொள் என்றால், நான் சாமியார் அவ்வாறெல்லாம் செய்ய முடியாது. உனக்கு வேண்டியதை செய்து தருகிறேன். ஜாலியாக இருக்கலாம் என்பது.
  1. அடுத்த கட்டமாக, நானே ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன் என்பது.
  1. அதற்கும் ஒத்துவரவில்லை என்றால், ‘சம்பவத்தை வெளியே தெரிவித்தால், கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டுவது.

© வேதபிரகாஷ்

19-10-2015

[1] தினமலர், மாணவியுடன்உல்லாசம்மதபோதகர் கைது ,அக்டோபர்.16, 2015: 03.15.

[2] http://www.viduthalai.in/e-paper/110322.html

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1365358

[4] http://cinema.maalaimalar.com/2015/10/15165619/Priest-arrested-for-girlfriend.html

[5] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=82898

[6] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=500024&cat=504

[7] http://www.viduthalai.in/e-paper/110322.html

[8] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=82898

[9] தினகரன், மதபோதகர் கைது திருப்பத்தூர் அருகே பரபரப்பு, பதிவு செய்த நேரம்:2015-10-16 11:51:06.

[10] மாலைமலர், திருப்பத்தூர் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த மதபோதகர் கைது, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, அக்டோபர் 15, 4:56 PM IST.

[11]  தமிழ்முரசு, மைனர் பெண்ணிடம் உல்லாசம் திருமணத்துக்கு மறுத்த மதபோதகர் கைது, 10/15/2015 2:34:41 PM.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1365358

போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோனின் காமலீலை: கையும் களவுமாக லாட்ஜில் பெண்களுடன் பொலீஸாரிடம் பிடிபட்டது!

ஒக்ரோபர் 18, 2015

போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோனின் காமலீலை: கையும் களவுமாக லாட்ஜில் பெண்களுடன் பொலீஸாரிடம் பிடிபட்டது!

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - பாதிரி மற்றும் பெண்கள் பிடிபட்டனர்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள் பிடிபட்டனர்

கன்னியாகுமரியில் சமீபகாலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன. குறிப்பாக கிருத்துவ மிஷனரிகள் அவற்றில் அதிகமாக ஈடுபட்டுள்ளதும் செய்திகள் மூலம் வெளியாகியுள்ளன. பெண்கள், வயது வந்த சிறுமிகள்-சிறுவர்கள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். “பிடோபைல்” – சிறார் கற்பழிப்பு, பாலியன் வன்புணர்ச்சி என்று விசயங்கள் வந்தாலும், அவற்றில் கிருத்துவர்களின் பங்கு இருப்பதனால் விசயங்கள் மறைக்கப்படுகின்றன. கேரளாவுக்கு அறுகில் இருப்பதனால், அங்கு குற்றம் செய்தவர்கள் இங்கு வந்து தங்குவதும், இங்குள்ளவர்கள் அங்கு சென்று மறைவாக வாழ்வதும் நடந்து வருகின்றது. போலீஸ் விசாரணைகளில் அத்தகைய நிலை வெளிவருகிறது. ஆனால், இவற்றினால் பாதிக்கப்படுவது பெண்கள் தாம். பெண்களின் மீதான வன்முறை தடுக்கப்பட வேண்டும் என்று சில நிறிவனங்கள் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தினாலும்[1], பிரச்சினையைத் தீர்ப்பதாக இல்லை. டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும், சிறுபான்மையினரின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்றெல்லாம் பேசினாலும்[2], இத்தகைய குற்றங்களைப் பற்றி மூச்சு விடுவதில்லை. விபச்சாரம் நடப்பதும், கைது நடவடிக்கையும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன[3].

லீபுரம் சர்ச், கன்னியாகுமரி

லீபுரம் சர்ச், கன்னியாகுமரி

லீபுரம் சர்ச், கன்னியாகுமரி

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது

செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி

செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி

கன்னியாகுமரி விபச்சாரத்தில் உள்ளூர்வாசிகளின் பங்கு: சுற்றுலா ஸ்தலம் என்றதால் விபச்சாரம் நடக்கிறது என்றாலும், உள்ளூர்வாசிகளின் பங்கும் வெளிப்படத்தான் செய்கிறது[4]. முறைகள் மாறினாலும்[5], விசயம் மாறாமல் தான் இருந்து வந்துள்ளன[6]. இங்கு சிறுபான்மையினர்-பெரும்பான்மையினர் என்று பிரித்துப் பார்க்கவும் முடியாது. ஏனெனில், இங்கு கிருத்துவர்கள் தாம் அதிகமாக உள்ளனர். இதில் படித்தர்கள்-படிக்காதவர்கள்[7] என்ற வேறுபாடும் இல்லாமல் கலாச்சாரச் சீரழிவு நடந்து வருகின்றது[8]. இங்கு கிருத்துவர்களையோ, கிருத்துவமதத்தையோ குறைகூறுவதாக எண்ன வேண்டாம், ஆனால், அவர்களை சேர்ந்தவர்கள் ஈடுபடுவதாலும், அவர்கள் மதரீதியில் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்று பறைச் சாற்றிக் கொள்வதினாலும், அவர்களில் பலர் ஏன் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பது தான் கேள்வி. இந்நிலையில் தான் லீபுரம் போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் காமலீலை வருகிறது.

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - ஒரு பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – ஒரு பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – ஒரு பெண்

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - இன்னொரு பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – இன்னொரு பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – இன்னொரு பெண்

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - பெண்கள் வெளியே வருதல்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – பெண்கள் வெளியே வருதல்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – பெண்கள் வெளியே வருதல்.

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - பாதிரி மற்றும் பெண்கள்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள்.

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.

செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி லாட்ஜில் உல்லாசம்

செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி லாட்ஜில் உல்லாசம்

ஒழுக்கம் இல்லாத மதபோதகரும், அவரது கூடா ஒழுக்கமும், கணவன்வி உறவு பாதிப்பும்: கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதகரிடம் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மனு கொடுத்தார்[9]. கன்னியாகுமரியில் விபசார வழக்கில் சிக்கியதால் போதகரின் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் தற்காலிக போதகர் லீபுரம் சபைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். தற்காலிகமாக எனும்போதே, சர்ச் இப்பிரச்சினையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தேரிகிறது. சிறிது காலத்தில், இவ்விசயம் மறக்கப்பட்டுவிடும், மறுபடியும் அதே ஆள் தனது வேலைக்கு வந்துவிடுவார் அல்லது வேறொரு இடத்தில் அதை செய்ய ஆரம்பிப்பார். போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன், என்ற இவருக்கும், ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த அந்த பெண்ணின் கணவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்[10]. இதுவே வேடிக்கையாக இருக்கிறது. மனைவிக்கும் மதபோதகருக்கும் தொடர்பு என்றால், அம்மதபோதகரின் ஒழுக்கம் சரியில்லை, அம்மதத்திலும் ஒழுக்கம் (இந்த கள்ள உறவைப் பொறுத்தவரையில்) இல்லை என்றாகிறது. கிருத்துவமதத்தில், அடுத்தவன் மனைவியை பார், அவளுடன் கள்ள உறவு வைத்துக் கொள் என்று போதிப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவையெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் தான் சந்தேகங்கள் எழுகின்றன. இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போதகர் செலினையும், அந்த பெண்ணையும் எச்சரித்து அனுப்பினர். இருவரும் ஒன்றாக சந்திக்க கூடாது என எழுதியும் வாங்கினர்[11]. அதன் பின்னரும் போதகர் தொடர்ந்து தனது கள்ளக்காதலியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது[12].

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - மூன்றாவது பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – மூன்றாவது பெண்

போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் தனியாக மூன்று பெண்களுடன் என்ன செய்து கொண்டிருந்தார்?: கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகக்கூறி போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன், லாட்ஜ் உரிமையாளர் ஜேம்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். தொடர்ந்து குற்றம் செய்தாலும், ஜாமீனில் விடப்பாட்டார் என்றால், அதற்காக முறைப்படி, வக்கில் வந்துள்ளார், ஆவன செய்துள்ளாற் என்று தெரிகிறது. அப்படியென்றால், ஆரோன் எல்லாவற்றிற்கும் தயாகத்தான் இருக்கிறான் என்று தெரிகிறது. வெளியாகியுள்ள வீடியோவைப் பார்க்கும் போது, மேலும் விசயங்கள் வெளிப்படுகின்றன. ஆரோன் போலிஸாருக்கு பயந்ததாகத் தெரியவில்லை. உள்ளேயிருந்து மூன்று பெண்கள் வெளிவருகின்றனர். அவர்களில் ஒரு பெண் தான், கண்ணீர் விட்டு அழுகிறார். மற்ற இருவர்களும் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். போலீஸாரின் கேள்விகளுக்கும் தைரியமாக பதில் சொல்கின்றனர். ஒருவருடன் மூன்று பெண்கள் ஏன் ஒரே அறையில் இருக்க வேண்டும், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்விகள் எழலாம். ஆனால், கையும்-களவுவுனமாக மாட்டிக் கொண்டதால், உண்மை வெளிவந்தே ஆகவேண்டும்.

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.-படம்

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.-படம்

பெண்களில் ஒருவரின் கணவர் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த மனு[13]: அவர்களுடன் இருந்த 2 பெண்களும் மீட்கப்பட்டனர். அந்த பெண்களில் ஒருவரின் கணவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான் சலவைத் தொழில் செய்து வருகிறேன். எங்கள் ஊரில் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் என்பவர் மதபோதகராக ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியில் பணியாற்றினார். அவர் எனது மனைவியிடம் ஆசை வார்த்தைகளைச் சொல்லி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் எனது மனைவி மற்றும் போதகர் மீது புகார் கொடுத்தேன். அதனை கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரித்தனர். அப்போது இருவருக்கும் கள்ளத்தனமான தொடர்பு கிடையாது என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் முன்னிலையில் கன்னியாகுமரி பகுதியில் ஜேம்ஸ் என்பவரின் லாட்ஜில் அரைகுறை ஆடையுடன் இருந்த போதகரை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த எனது மனைவியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டுக்கு கொண்டு செல்லாமல் நேற்று அதிகாலை ஜாமீனில் விட்டுவிட்டனர்[14]. எனவே அவர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீது மேல் விசாரணை செய்ய கன்னியாகுமரி போலீசாருக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்[15]. கர்த்தர் இவர்களுக்கு சாந்தத்தையும், அமைதியையும் கொடுப்பாராக!

© வேதபிரகாஷ்

18-10-2015


 

[1] http://www.thehindu.com/news/national/tamil-nadu/prevent-violence-against-women-in-kanyakumari/article7468514.ece

[2]  Malar, a women’s movement for creating awareness of educating women and their rights, has urged the government to prevent violence against women in Kanyakumari district. At its 20-th district conference held here on Sunday, the movement passed a resolution to this effect. Other resolutions passed at the conference demanded permanent closure of Tasmac liquor outlets, replacement of old and damaged State Transport Corporation buses, permission for linguistic minorities to pursue education in their mother tongue and protection of rights of linguistic minorities as per the 1965 gazette notification. Effective steps to protect natural resources and desilting of all the ponds and waterbodies in the district were also demanded through resolutions. The conference was presided over by its district secretary Shelin Mary, and inaugurated by Indian Overseas Bank’s Senior Regional Manager C. Murugan. SBIOA general secretary T. Thomas Franco gave a special address. Tamil Nadu Science Forum’s State Executive Committee member Dinakaran spoke on ‘Life is a science’. NABARD District Development Manager Martin Prakasam, Lead District Manager Viswanathan among others participated.

The Hindu, Prevent violence against women in Kanyakumari, Nagarkoil, July.27, 2015; Updated: July 27, 2015 05:47 IST.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, விபச்சாரம்குமரி லாட்ஜில் 4 பேர் கைது, Published: Tuesday, September 29, 2009, 11:16 [IST].

[4] http://tamil.oneindia.com/news/2009/09/29/tn-kanyakumari-police-arrest-4-in-prostitution.html

[5]  குமரி.ஆன்லை.காம், விபச்சாரம்: பெண், அரசு பஸ் ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது, ஞாயிறு 21, ஜூலை 2013 9:33:19 AM (IST)

[6] http://kumarionline.com/view/31_52126/20130721093319.html

[7] மாலைமலர், நாகர்கோவில் அருகே முந்திரி தோட்டத்தில் நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்: பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 24, 4:29 PM IST.

[8]  பொதுமக்கள் ஏராளமானோர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் அரைகுறை ஆடையுடன் நின்றனர். மக்களை பார்த்த வாலிபர்களும், இளம்பெண்களும் ஓட்டம் பிடித்தனர். எனினும் பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இளம்பெண்கள் இருவரும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும், வாலிபர்கள் இருவரும் அதே கல்லூரியில் படித்து வருவரும் தெரியவந்தது. இவர்கள் இதுபோல பலமுறை இங்கு வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர்.

 http://www.maalaimalar.com/2012/03/24162946/nagercoil-young-college-couple.html

[9] தினத்தந்தி, கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்: மதபோதகர் உள்பட 2 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, அக்டோபர் 16,2015, 4:15 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, அக்டோபர் 16,2015, 2:48 AM IST.

[10] http://www.dailythanthi.com/News/Districts/2015/10/16024806/In-Lodge-in-Kanyakumari-Recreation-2-arrested-including.vpf

[11] http://www.tamilcnnlk.com/archives/434024.html

[12] தமிழ்.சி.என்.என், லொட்ஜில் கள்ளக் காதலியுடன் மதபோதகரை அதிரடியாகக் கைது செய்த பொலிஸ், October 17th, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது.

[13] தினத்தந்தி, கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்: ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதகரிடம் மேல் விசாரணை நடத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மனு, மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 2:43 AM IST; பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 2:43 AM IST.

[14] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/17024356/In-Lodge-in-Kanyakumari-Recreation-Teacher-released.vpf

[15] http://angusam.com/2015/10/17/kanyakumari-recreation-christian-pastor-arrested/

கிறிஸ்தவ பெண் பிரசங்கி உட்பட நான்கு பேர் பண-இரட்டிப்பு மோசடியில் சென்னையில் கைது!

ஒக்ரோபர் 11, 2015

கிறிஸ்தவ பெண் பிரசங்கி உட்பட நான்கு பேர் பண-இரட்டிப்பு மோசடியில் சென்னையில் கைது!

கிறிஸ்தவப் பிரசங்கி கரூர் மல்லிகா

கிறிஸ்தவப் பிரசங்கி கரூர் மல்லிகா

2 பைகளுடன் 4 பேர் நின்று கொண்டிருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டனர்[1]: 10-10-2015 அன்று பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் 2 பைகளுடன் 4 பேர் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட செம்பியம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து விசாரித்த போது அந்த கும்பல் பணம் இரட்டிப்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு பையில் 5 கருப்பு நோட்டு கட்டுகள் இருந்தன. மற்றொரு பையில் நூறு ரூபாய் அளவிற்கு வெற்று காகித கட்டுகள் இருந்தன. மேலும் நூறு ரூபாய் ஒரிஜினல் பணமும் 5 வைத்திருந்தனர்[2]. அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் 4 பேரும் பணம் இரட்டிப்பு செய்வதற்காக ரசாயன பவுடரை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது[3]. மேலும் நூறு ரூபாய் ஒரிஜினல் பணமும் 5 வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் 4 பேரும் பணம் இரட்டிப்பு செய்வதற்காக ரசாயன பவுடரை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது[4]. இந்த மோசடியில் ஈடுபட்ட –

  1. கரூர் காந்திபுரம் நீலிமேடு பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த மா. மல்லிகா (52/56),
  2. தூத்துக்குடியைச் சேர்ந்த / கூடுவாஞ்சேரி நேதாஜிநகரைச் சேர்ந்த ராஜன் (39) என்ற ஜெயசிங் பாக்கியராஜ்,
  3. தூத்துக்குடி மட்டக்கடை தட்டார் தெருவைச் சேர்ந்த யா.தாம்சன் (24), மற்றும்
  4. மதுரை திடீர்நகர் அலாவுதீன் கார்டன் பகுதியைச் சேர்ந்த மு.சேர்ந்த முகமது யூசுப் (22)

ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

பணம் இரட்டிப்பு மல்லிகா, தாம்சன் கைது 2015

பணம் இரட்டிப்பு மல்லிகா, தாம்சன் கைது 2015

யாரிந்த கரூர் மல்லிகா – பெண்-பாஸ்டர் மல்லிகா?: 2013ல் கடத்தல் மற்றும் பணம் இரட்டிப்பு விவகாரங்களில் மல்லிகா என்ற பெண்மணி கைது செய்யப்பட்டார். முருகேசன் என்பவர், இது விசயமாக போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தார். புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன் மணிராஜ், அவரது மனைவி மல்லிகா (46), மகன் ராஜகாளீஸ்வரன், கருப்புச்சாமி ஆகியோர் எங்களிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் ரூ. 1 லட்சம் தருவதாக கூறினர். பணம் இரட்டிப்பு மோசடி செய்ததாக மணிராஜ், அவரது மனைவி மல்லிகா, மகன் ராஜாகாளீஸ்வரன், கருப்புச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்[5]. இப்பொழுது மோசடியில் ஈடுபட்ட மல்லிகாவும் (52) கரூரைச் சேர்ந்தவர் / காந்திபுரம் நீலிமேடு பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த மா.மல்லிகா (55)[6], என்றுள்ளது, ஆனால், வயது வித்தியாசம் இருக்கிறது.  தேவாலயம் ஒன்றில் பிரசங்கம் செய்து வந்தாள்[7], கிறிஸ்தவ பெண் பிரசங்கர் போலும்! மல்லிகா, வேப்பேரியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்துள்ளார். ஆக, இந்த பெண் பாஸ்டர் வேறு மல்லிகா போலும்!

ஏ.பி.எம். சர்ச் பண இரட்டிப்பு மோசடி 2011

ஏ.பி.எம். சர்ச் பண இரட்டிப்பு மோசடி 2011

 பாஸ்டர்கள் ஈடுபட்ட பணம் இரட்டிப்பு மோசடி: செம்பியத்தில், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, பலகோடி ரூபாய் மோசடி செய்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், காந்தி கிராமம் நீலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா, 53. தேவாலயம் ஒன்றில் பிரசங்கம் செய்து வந்தாள்[8]. அங்கு, பொருளாதார பிரச்னைக்காக பிரார்த்தனை செய்ய வருவோரிடம், ‘பணத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கான வழிமுறைகள் தெரிந்த நபர்களை எனக்கு தெரியும்’ என கூறி, அவர்களை, துாத்துக்குடி மட்டக்கடை, தட்டார் தெருவைச் சேர்ந்த தாம்சன் என்ற ஜோயல், 24, என்பவனிடம் அறிமுகம் செய்து வைத்தாள். தாம்சன், அந்த நபர்களிடம், பத்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தான். இவ்வாறு, ௧௫க்கும் மேற்பட்டோர், அவனிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெரம்பூர், எம்.பி.எம். தெருவைச் சேர்ந்த வடிவேல், 30, என்பவரிடம், மல்லிகாவும், தாம்சனும், இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் கேட்டனர். சந்தேகம் அடைந்த வடிவேல், செம்பியம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, போலீசார், மல்லிகா, தாம்சன், மதுரையை சேர்ந்த முகமது யூசுப், 22, துாத்துக்குடியை சேர்ந்த செபஸ்டின், 39, ஆகியோரை கைது செய்தனர்.

HIM JOhn Prabhakars wife Sukanya arrested June 2013

HIM JOhn Prabhakars wife Sukanya arrested June 2013

தூத்துக்குடி பிரதீப் தான் சொல்லி கொடுத்துள்ளான்கைதான நபர்கள் விசாரணையில் கூறியதாவது: எங்களுக்கு, இதுபோல் பணத்தை இரட்டிப்பாக்கி ஏமாற்றும் வித்தையை சொல்லி தந்தது துாத்துக்குடி, பேருந்து நிலையம் அருகே உள்ள பிரதீப், 40, என்பவன் தான். நிறைய பேருக்கு அவன் சொல்லி கொடுத்துள்ளான். அவர்களும் எங்களைப் போல், பல இடங்களில் மோசடி செய்து வருகின்றனர். நாங்கள் போலீசிடம் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். போலீசார் கூறுகையில், ‘இந்த நபர்களால் பாதிக்கப்பட்டோர் எங்களிடம் புகார் அளிக்கலாம். பிரதீப்பை பிடிக்க தனிப்படை துாத்துக்குடிக்கு விரைந்துள்ளது’ என்றனர். இச்செய்தியைப் படித்த பிறகும் பிரதீப் அங்கு இருப்பானா என்ன?

கிருத்துவ பண இரட்டிப்பு மோசடி

கிருத்துவ பண இரட்டிப்பு மோசடி

ஆட்டையை போட்டது எப்படி?[9]: கைது செய்யப்பட்டோர் அளித்த வாக்குமூலம்: தொழில் அதிபர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களை முதலில் குறிவைப்போம். பின், அவர்களை அணுகி, கறுப்பு காகிதத்தை பணமாக மாற்றும் வித்தையை கற்று தருவதாக தெரிவிப்போம். அவர்களை பேச்சில் மயக்கி சம்மதம் பெறுவோம். எங்களிடம் மசியும் நபர்களை, ரகசிய இடத்திற்கு அழைத்து செல்வோம். அங்கு, ஒரு பாத்திரத்தில், காயத்திற்கு போடும் ‘டிஞ்ஜரை’ அளவுக்கு அதிகமாக ஊற்றுவோம். அதன் உள்ளே, அவர்களுக்கு தெரியாமல் ஏற்கனவே பணத்தை போட்டு வைத்து இருப்போம். பின், ‘டிஞ்ஜர்’ ஊற்றப்பட்ட பாத்திரத்தில், ரூபாய் நோட்டு அளவு கொண்ட கறுப்பு காகிதத்தை போடுவோம். அந்த காகிதம் டிஞ்ஜரில் கரைந்துவிடும் அதன் பின், பாத்திரத்தில் உள்ள டிஞ்ஜரை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, பாருங்கள், கறுப்பு நிற காகிதம் ரூபாய் நோட்டாக மாறிவிட்டது என, தெரிவிப்போம். இதை நம்பி, பலர் ஒரு கோடி ரூபாய் வரை தந்தனர். அதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு நிற காகிதத்தை கொடுத்து மோசடி செய்தோம். டிஞ்ஜரில் மூழ்கடிக்கப்பட்ட காகிதம், நிறம் மாறி இருக்கும் என்பதால் பலர் சந்தேகம் அடைவர். அதற்காக, ‘புகைப்பட பிலிம் கழுவும் திரவத்தில் போட்டு எடுத்து, பளபளக்கும் ரூபாய் நோட்டுகளாக மாறிவிட்டது பாருங்கள்’ என்போம். இதை நம்பி, பலர் ஒரு கோடி ரூபாய் வரை தந்தனர். அதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு நிற காகிதத்தை கொடுத்து மோசடி செய்தோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.3

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.3

பண இரட்டிப்பு மோசடி: கரூரைச் சேர்ந்தவர் கைது (செப்டம்பர் 2015)[10]: சென்ற மாதத்தில் கரூரில் இத்தகைய மோசடி நடந்துள்ளதால், அதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. சேலத்தில் பண இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட முயன்ற கரூரைச் சேர்ந்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை 25-09-2015 அன்று இரவு கைது செய்தனர். சேலம் சீலநாய்க்கன்பட்டி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40). பானிப் பூரி கடை வைத்துள்ளார். இவரிடம் கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருகே உள்ள காதப்பாறைப் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (38) என்பவர் பணத்தை  இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறினாராம்.  இதை நம்பிய மகேந்திரன், பாஸ்கரைத் தொடர்பு கொண்டதில், அவர் சீலநாயக்கன்பட்டி வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற மகேந்திரனிடம், பாஸ்கர் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பாஸ்கரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேந்திரன் தற்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், மகேந்திரன் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து மகேந்திரன் அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று பாஸ்கரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல இடங்களில் அவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை இரவு பாஸ்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்[11].

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.1

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.1

கிறிஸ்தவ பாஸ்டர்களும், பண இரட்டிப்பு மோசடிகளும்: கிறிஸ்தவ பாஸ்டர்கள் கடந்த ஆண்டுகளில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பண-இரட்டிப்பு மோசடிகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ.பி.எம். சர்ச் அரக்கோணம், ஹெவன்லி இன்டர்நேஷனல் மிஷன் [Heavenly International Mission (HIM)] போன்ற மோசடிகளில் அவை வெளிப்பட்டன. டஜன் கணக்கில் கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டு, நிர்வாகத்துடன் அவை நடந்தேறின[12]. அவர்களுக்குள் தொடர்பு இருந்திருந்தாலும், ஏதோ அழுத்தங்களினால் விசயங்கள் அமுக்கப்பட்டன, அமுங்கி விட்டன. சில இடங்களில் கிறிஸ்தவர்களுக்குள் நடந்த விவகாரமாக இருந்ததால், பணத்தைத் திருப்பக் கொடுத்த, புகார்களை வாபஸ் வாங்கிக் கொண்டு, வழக்குகளை சுமுகமாக முடித்துக் கொண்ண்டனர். அவ்வகையில் இப்பெண் கிறிஸ்தவ பிரசங்கியும், சர்ச்சில் தனது யுக்தியை ஆரம்பித்தாலும், பிறகு மற்றவர்களிடம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதில் செக்யூலரிஸ ரீதியில் மற்ற மதத்தினரும் கலந்து கொண்டுள்ளனர். ஆக, இனி செக்யூலரிஸ ரீதியில் அணுகப்பட்டு, முடிக்கப்பட்டுவிடுமா அல்லது மேலும் விசயங்கள் வெளிவருமா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

11-10-2015

[1] மாலைமலர், சென்னையில் பணம் இரட்டிப்பு கும்பல் கைது: கட்டு கட்டாக நோட்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 10, 2:12 PM IST

[2] The Hindu, Four arrested for ‘money doubling’ scam, October 11, 2015.

Four persons, including a student, were arrested in Perambur on Friday – 10-10-2015 for allegedly being involved in a money doubling scam.  According to the police, money doubling gangs carry black sheets and a solution with them.  “The gang will apply the solution on two genuine notes, smeared with black paste, hidden in the bundle of black sheets. The targets are deceived when the colour fades and the real rupee is seen,” said a senior police officer. They only partially dip the notes in the liquid, claiming that it is very rare. They say that with the solution, they can convert black paper into real money and charge a huge amount for the solution and the black paper. “They collect the money and flee under the pretext of getting more liquid,” said an officer. In this case, the police employed a decoy to contact the suspect. They were called to Perambur. “The suspects said they would give him black paper and the solution for nearly Rs. 5 lakh,” said the officer.  Once the gang arrived, they were arrested. The suspects were identified as Thomson, Mallika, T Rajan and Mohammad Yusuff.

[3] http://www.thehindu.com/news/cities/chennai/four-arrested-for-money-doubling-scam/article7748596.ece

[4] http://www.maalaimalar.com/2015/10/10141214/money-cheating-gang-arrested-n.html

[5] http://www.maalaimalar.com/2013/11/29181445/Money-Doubling-Scam-of-same-fa.html

[6] தினமணி, ரூபாய் நோட்டு இரட்டிப்பு மோசடி:பெண் உள்பட 4 பேர் கைது, By சென்னை, First Published : 11 October 2015 03:33 AM IST

[7] தினமலர், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி, அக்டோபர்.11.2015, 01.48.

[8] தினமலர், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி, அக்டோபர்.11.2015, 01.48.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1361611

[10] தினமணி, பண இரட்டிப்பு மோசடி: கரூரைச் சேர்ந்தவர் கைது, By சேலம், First Published : 27 September 2015 05:55 AM IST

[11] http://www.dinamani.com/edition_dharmapuri/salem/2015/09/27/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-/article3050047.ece

[12] The Crime Investigation Department (CID) police who are investigating the money circulation fraud are planning to make an appeal the court to extend police custody for John Prabhakar. About 12 companies, mostly belonging to Tamil Nadu, and registered in the name of Christian missionary organisations and charitable trusts, collected some hundreds of crores of money from people assuring them to pay ten times more than the amount paid.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/cid-seeks-extension-of-john-prabhakars-custody/article2572141.ece