Archive for the ‘பள்ளி மாணவி’ Category

லாவண்யா தற்கொலை வழக்கு – ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

பிப்ரவரி 10, 2022

லாவண்யா தற்கொலை வழக்கு ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள்: ஊடகங்களின் பாரபட்சம், இரட்டை வேடங்கள், ஜார்னலிஸ்டி எதிக்ஸ் (Journalistic ethics) இல்லாமை, பத்திரிகா தர்மத்தை குழித் தோண்டி புதைத்த தன்மை, எழுத்து ஒழுக்கம் இல்லாமை,  நிருபர்-தனத்தில்-தோய்வு-அடிமைத்தனம் இப்படி பலவற்றை இப்பொழுது காண முடிகிறது.  நீதிமன்ற தீர்ப்புகளை குழப்பும் வகையில், செய்திகளை ஒருதலைப் பட்சமாக வெளியிட்டு, அழுத்தம் கொடுக்கவும் செயல் பட்டு வருகின்றன. கைது என்றால் உடனடியாக ஜாமீன் என்று கைது செய்யப் பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வந்து விடுகிறார்கள். முன்னர், கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகள், சிக்க வைக்கப் பட்டனர் என்பது போல செய்திகளும் வரச்செய்கிறார்கள். இல்லை, அது சாதகமாக இருக்காது என்றால் அமைதியாக, முன் ஜாமீன் மனு போட்டு, வெளியே கொணர்ந்து, புகார் கொடுத்தவர்களுடன் பேரம் பேசி, வழக்கை வாபஸ் வாங்குதல், தொட்ந்து நடத்தாமல் விட்டு விடுதல், கிடப்பில் கிடக்குமாறு அழுத்தம் கொண்டு வருதல் போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

லாவண்யா, லாவண்யா குடும்பத்தினரின் முகங்களை பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது: மாணவியின் மரணம் தொடர்பாக 62 வயதான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். லாவண்யா வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி  மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்[1]. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[2]. ஆனால், ஊடகங்கள், இது வரை அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை. மற்ற வழக்குகளில், கூட்டமாக முன்னரே வளாகத்தில், தெருக்களில் கேமரா, வீடியோ, சகிதம் நின்று காத்துக் கிடப்பார்கள். துரத்திச் சென்று கேள்வி கேட்பாகள், புகைப் படம் எடுப்பார்கள். ஆனால், இவ்வழக்கில், ஒருதலை பட்சமாகவே செயல்பட்டு வருகிறார்கள். லாவண்யா, லாவண்யா அப்பா-அம்மா, சித்தி, தாத்தா-பாட்டி, மாமா என்று எல்லோருடைய முகங்களையும் பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது.

ஜெனின் சகாய மேரி, ஹாஸ்டல் வார்டன் 07-02-2022 அன்று பிணையில் வெளியே வந்தார்: இவர் ஜனவரி 21ம் தேதி கைது செய்யப் பட்டார். சிறையில் உள்ள விடுதிக் காப்பாளர் சார்பில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, தஞ்சையில் உள்ள நீதிமன்றத்தில் விண்ணப் பித்து தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்திருந்தார்[3].  இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார்[4]. வழக்கம் போல, இவர் வயதானவர், வீடியோ ஆதாரத்தின் மீது கைது செய்யப் பட்டுள்ளார், அதன் உண்மைத் தன்மை அறியப் படவேண்டியுள்ளது, இவரை ஜாமீனில் வெளியே விட்டால், இவர் சாட்சியங்களை ஒன்று செய்ய மாட்டார், அதற்கான பிணையும் கொடுக்கப் பட்டுள்ளது, என்றெல்லாம் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதன் மீது திங்கள்கிழமை 07-02-2022 அன்று நடைபெற்ற விசா ரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூதனன் ஜாமீன் வழங்கினார்[5]. வக்கீல் ஜெயச்சந்திரன் மூலம் மனு தாக்கல் செய்யப் பட்டது[6]. ஜெனின் சகாய மேரி என்று குறிப்பிடுவது திமுக ஊடகங்கள், அந்த அளவுக்கு விவரங்கள் தெரியும் போலிருக்கிறது.

பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி: இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் என பெற்றோர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[7]ராக, இதெல்லாம் அவர்களுக்கு அத்துப் படி என்று தெரிகிறது. இதே நேர்த்தில், அந்த கேரளா பிஷப்பும் ஜாமீனுக்கு மனு போட்டுள்ளார். அந்த அளவுக்கு வேகமாக வேலை செய்கின்றன. நீதிமன்றங்களும், இருக்கின்ற எல்லா முக்கிய வழக்குகளையும் விட்டுவிட்டு, இவற்றை எடுத்து உடனடியாக விசாரிக்கின்றன. இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ராக்கேல்மேரிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது[8].

ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)[9]: பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும்[10]. குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.

பச்ச முத்து பாரி வேந்தர் ஆனது போல, அவரது ஊடகங்களும் மாறியுள்ளன: ஒரு பக்கம் அரசியலாக்கப் படுகிறது என்று திமுக ஊடகங்கள் பிஜேபியைக் குற்றஞ்சாட்டுகின்றன[11]. கலைஞர் டிவி, முரசொலி என்று வெளுத்து வாங்குகின்றன. இன்னொரு புறம், இதுவரை தெரியாத ஊடகங்கள் கிளம்பியுள்ளன[12]. லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், மாணவியின் பூப்படைதல் சடங்கு இந்து முறைப்படி நடந்ததாக சாட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[13]. மேலும், மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக ஒரு தரப்பினரால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட விடுதி வார்டன் சகாய மேரியே அந்த சடங்கை ஊர் மக்கள் சிலரது உதவியுடன் நடத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் பிரபல செய்தி நிறுவனமான ‘த ஃபெடெரல்’ இடம் தெரிவித்துள்ளனர்[14].  அந்த வகையில் சிறுமி லாவண்யாவுக்கு வார்டன் சகாய மேரி சடங்கு ஏற்பாடு செய்தது இருவருக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது” என பவுலின் கூறினார்[15]. மேலும், லாவண்யாவுக்காக சகோதரி சகாய மேரி நடத்திய பூப்படைதல் சடங்குக்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளதாக ‘த ஃபெடெரல்’ வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது[16]. இதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. உள்கலாச்சாரமயமாக்கல் என்ற திட்டத்துடன் செயல்படும் வாடிகன், வாடிகன் அடிவருடி சர்ச்சுகள், இந்தியாவில்-தமிழகத்தில் வேடம் போடும் கூட்டங்கள் பல காரியங்களை, இந்துமுறைப்படித் தான் செய்து வருகின்றன.

© வேதபிரகாஷ்

09-02-2022


[1] தினத்தந்தி, கைதான விடுதி பெண் வார்டனுக்கு தஞ்சை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது, பதிவு: பிப்ரவரி 08,  2022 03:13 AM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/02/08031304/bail-for-hostel-warden.vpf

[3] தீக்கதிர், மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் காப்பாளருக்கு ஜாமீன், நமது நிருபர் பிப்ரவரி 8, 2022.

[4]https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/in-the-case-of-student-suicide-bail-for-the-caretaker-of-the-inn

[5]விகடன், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: விடுதி வார்டனுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு, கே.குணசீலன், Published: 09-02-2022, at 7 AM; Updated: 09-02-2022 at 7 AM.

[6] https://www.vikatan.com/news/crime/in-student-suicide-case-court-granted-bail-to-the-hostel-warden

[7] தமிழ்.ஏபிபி.நியூஸ், தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் வார்டன் சகாயமேரிக்கு ஜாமீன், By: சிஎஸ் ஆறுமுகம், தஞ்சாவூர் | Updated : 08 Feb 2022 12:15 PM (IST).

[8]  https://tamil.abplive.com/news/thanjavur/hostel-warden-sakayamari-granted-bail-in-thanjavur-student-suicide-case-39078

[9] விகாஷ்பீடியா, ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)

[10] https://ta.vikaspedia.in/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/b95bc1b9fbbfbaeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b9abc7bb5bc8b95bb3bcd/b9cbbebaebc0ba9bcd-bail-baebc1ba9bcd-b9cbbebaebc0ba9bcd-anticipatory-bail

[11] கலைஞர் செய்தி, அண்ணாமலையின் அசிங்க அரசியல்.. பா... அரசியல் செய்ய மாணவி மரணம்தான் கிடைத்ததா?” : முரசொலி கடும் தாக்கு!, Lenin, Updated on : 28 January 2022, 08:56 AM

[12] https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2022/01/28/murasoli-editorial-questions-bjp-for-politicizing-student-death

[13] சமயம், தஞ்சை மாணவி: விடுதியில் இந்து முறைப்படி நடந்த பூப்படைதல் சடங்கு! எங்கே பிழை..?, Divakar M | Samayam TamilUpdated: 8 Feb 2022, 1:22 pm

[14] https://tamil.samayam.com/latest-news/crime/more-important-information-has-come-out-in-the-lavanya-suicide-case/articleshow/89425114.cms

[15] The Federal, Warden performed puberty rituals of TN teen as per Hindu customs: witnesses, Prabhakar Tamilarasu, 4:34 PM, 7 February, 2022Updated 5:37 PM, 7 February, 2022

[16] The Federal is a digital platform disseminating news, analysis and commentary. It seeks to look at India from the perspective of the states. We are a division of New Generation Media Private Limited. https://thefederal.com/states/south/tamil-nadu/warden-performed-puberty-rituals-of-tn-teen-as-per-hindu-customs-witnesses/

லாவண்யா தற்கொலை வழக்கு – மாணவி விடுதியில் துன்புறுத்தப் பட்டது, ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தது, 19ம் தேதி இறந்தது, வழக்கில் முடிந்தது (2)

ஜனவரி 31, 2022

லாவண்யா தற்கொலை வழக்குமாணவி விடுதியில் துன்புறுத்தப் பட்டது, ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தது, 19ம் தேதி இறந்தது, வழக்கில் முடிந்தது (2)

விடுதி வார்டன்கள் துன்புறுத்தியது: விடுதி வார்டன் சகாயமேரி, சிஸ்டர் ராக்லின்மேரி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம் செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  விடுதிகளில் இவ்வாறு பெண்களை, சிறுமிகளை துன்புறுத்துவது என்பது தெரிந்த விசயமே[1]. அடிக்கடி செய்திகளாகவும் விவரங்கள் வெளிவந்துள்ளன. இதனால், சில பெண்கள் தப்பித்து ஓடிப் போவதும் உண்டு[2], வீட்டிற்கே சென்று விடுவதும் உண்டு. லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்[3]. இதுசம்பந்தமாக மாணவிப் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது[4].

வீடியோ உரையாடல் விவரம்: தொடர்ந்து, வீடியோ பதிவு செய்தவர், மாணவியிடம் கேள்விகள் கேட்கிறார்[5].

மொபைல் நபர்: சிஸ்டர் பெயர் என்ன?

மாணவி: சகாயமேரி

மொபைல் நபர்: பள்ளி தலைமையாசிரியர் பெயர் என்ன?

மாணவி: தலைமையாசிரியர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் பெயர் ஆரோக்கியமேரி.

மொபைல் நபர்: என்ன வேலை செய்ய சொல்லுவார்கள்?

மாணவி: காலையில் எழுந்த பின் கேட் திறப்பது போன்ற வார்டன் செய்ய வேண்டிய எல்லா வேலையும் செய்ய சொல்லுவார்.

மொபைல் நபர்: பள்ளியில் பொட்டு வைக்க கூடாது என கூறினார்களா?

மாணவி: அப்படி எல்லாம் இல்ல.

மொபைல் நபர்: பொங்கலுக்கு ஊருக்கு வந்தாயா?

மாணவி: இல்லை, படிக்கணும்னு கூறி அனுப்பல.

மொபைல் நபர்: நீ மருந்து சாப்பிட்டது தெரியுமா?

மாணவி: தெரியாது, உடம்பு சரியில்லைனு தான் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.

இப்படி உரையாடல் நடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அப்படியென்றால், முதலில் சிகிச்சை அளிக்கப் பட்டபோது, ஒருவேளை விசம் / பூச்சி மருந்து சாப்பிட்டதால், மாற்று மருந்து கொடுக்கப் பட்டதா, என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை.

22-01-2022 – ஒரு போலியான வீடியோவை பா...வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[7], “தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தூய இருதய மேரி பள்ளியில் 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவி லாவண்யா, விடுதியில் தொடர்ச்சியாக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய அளிக்கப்பட்ட நிர்பந்தம்தான் காரணம் என்பதாக ஒரு போலியான வீடியோவை பா...வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்[8]. ஏழை மாணவியான லாவண்யாவின் மரணத்தை, மதமாற்ற நிர்ப்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பா...வின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது வலுவான கண்டனத்தை தெரிவிப்பதோடு, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.”

அனிதா விசயத்தில் ஆர்பாட்டம், அமர்க்களம் செய்தவர்கள், இப்பொழுது அமைதியாக இருப்பது திகைப்பாக இருக்கிறது: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதா வீட்டிற்கே சென்று தூக்கம் விசாரித்த நடிகர் விஜய், ஜி.வி.பிரகாஷ், தங்களை சமூக நல விரும்பிகளாக காட்டி கொள்ளும் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் மற்றும் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் ஆகியோர் இது குறித்து வாய் திறக்கவில்லை. சமூக ஆர்வலர்கள் பக்கம்-பக்கமாக எழுதி தள்ளீனார்கள். சமூக ஊடகங்களில் தாராளமாகவே அள்ளி வீசி, ட்ரென்டிங் செய்தனர். அனிதாவுக்கு நீதி கிடைத்ததோ இல்லையோ, இவர்களுக்கு நிதி, விளம்பர, வியாபாரம், பிரபலம் முதலியவை தாராளமாக- அதிகமாகவே கிடைத்தன. ஆளுக்கு ஏற்றபடி ஆதரவு, பிரச்சாரம் செய்வது, செய்திகளை வெளியிடுவது என்றேல்லாம், தமிழகத்தில் சாதாரண விசயமாகி விட்டது. திமுக வந்தவுடன், அதிமுகவையே ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத் தக்கது.

23-01-2022 அன்று பெற்றோரிடம் வாக்குமூலம் பதிவு: வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்[9]. அது 24-01-2022 அன்று விசாரணைக்கு வருகிறது. இதற்குள் போலீஸார் தமது விசாரணையை துரிதப் படுத்தியுள்ளனர். அதன்படி இன்று 23-01-2022, ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.50 க்கு அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையிலான பாஜகவினர் முருகானந்தம் மற்றும் சரண்யாவை தஞ்சை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். தனி அறையில் தனித்தனியாக நீதிபதி பாரதி வாக்குமூலம் பெற்று பதிவு செய்தார்[10].

24—01-2022 மதுரை கிளையில் நீதிபதி முன் வந்த வழக்கு: இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 24-01-2022 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும், வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நாளை 25-01-2022 அன்று அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நீதிபதி முறையாக விசாரித்து ஆணையிட்டது வரவேற்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] India Today, 6 schoolgirls flee school hostel after being forced to clean toilets, Asian News International, New Delhi, July 23, 2019UPDATED: July 23, 2019 14:32 IST

[2] https://www.indiatoday.in/education-today/news/story/6-schoolgirls-flee-school-hostel-after-being-forced-to-clean-toilets-1572592-2019-07-23

[3] டாப்.தமிழ்.நியூஸ், மாணவி மரணத்தில் பெண் வார்டன் கைது,  By KATHIRAVAN T R Thu, 20 Jan 202211:54:46 AM.

[4] https://www.toptamilnews.com/thamizhagam/female-warden-arrested-in-student-death/cid6275911.htm

[5] தினமலர், பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு; மற்றொரு வீடியோ கசிந்தது எப்படி?, Added : ஜன 28, 2022  06:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2947480

[7] தினமணி, மாணவி லாவண்யா மரணத்தில் மதமாற்ற சாயம் பூசுபவர்கள் மீது நடவடிக்கை: கே.பாலகிருஷ்ணன், பதிவு: ஜனவரி 23,  2022 03:01 AM.

[8] https://www.dailythanthi.com/News/State/2022/01/23030110/Action-against-Religion-in-the-death-of-student-Lavanya.vpf

[9] நக்கீரன், மாணவி லாவண்யாவின் பெற்றோர் நீதிபதியிடம் தனித்தனியாக வாக்குமூலம் அளிப்பு!, பகத்சிங்  நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 23/01/2022 (20:21) | Edited on 23/01/2022 (20:49).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/student-lavanyas-parents-give-separate-confession-judge

செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளிக்கு போலீஸார், அரசு அதிகாரிகள் ஏன் சலுகைக் காட்டுகின்றனர்? மற்ற பள்ளிகளை விரட்டி-விரட்டி கைது-விசாரணை என்றெல்லாம் நடக்கும் போது, இங்கு ஏன் மெத்தனம்?

ஜூன் 10, 2021

செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளிக்கு போலீஸார், அரசு அதிகாரிகள் ஏன் சலுகைக் காட்டுகின்றனர்? மற்ற பள்ளிகளை விரட்டிவிரட்டி கைதுவிசாரணை என்றெல்லாம் நடக்கும் போது, இங்கு ஏன் மெத்தனம்?

ராஜகோபாலனுக்கும், எபி. ஜார்ஜுக்கும் என்ன வித்தியாசம்?: “பாலியல் புகாருக்கு ஆளான செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆசிரியர் குறித்த விசாரணைக்குப் பள்ளி நிர்வாகிகள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை,” என்று ஊடகங்கள் குறிப்பிட்டு செய்தியை முடித்துக் கொண்டுள்ளன. ராஜகோபாலனை கவனித்த விதத்தில், இங்கு எபி. ஜார்ஜ் கவனிக்கப் படவில்லை. தொலைக் காட்சிகளும் கண்டுகொள்ளவில்லை, விவாதங்கள் நடத்தவில்லை.  பாலியல் விவகாரத்தில், இப்பள்ளி ஆசிரியரின் மீதும் புகார் கொடுக்கப் பட்டுள்ளது[1]. ஆனால், அந்நிர்வாகம், அசைவதாகத் தெரியவில்லை. மூன்று பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தாலும், இப்பள்ளி சார்பில் யாரும் ஆஜராக வில்லை[2]. கைதும் செய்யப் படவில்லை. இதனையடுத்து, மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்துக்குச் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

07-06-2021 அன்று செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை: முன்னதாக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளியின் மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜே.எபி.தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.ஶ்ரீதர் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். மேலும், 2017-ம் ஆண்டு நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களை ஆணையத்திடம் வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் 7-ம் தேதி (திங்கள் அன்று) ஆஜராகி விளக்கமளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், பள்ளி நிர்வாகி பிரான்சிஸ் நேற்று ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை[3]. மேலும், உடற்கல்வி ஆசிரியர் தாஸ் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆணையம் முன்பாக ஆஜராகி, புகார் குறித்து விளக்கமளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்[4].

சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜரானார்: மீண்டும், பள்ளி நிர்வாகிகளிடம் வரும் 15ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது[5]. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜராகி, மாணவிகளிடம் இருந்த ஆவணங்களை ஆணையத்தில் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதர், “பள்ளி நிர்வாகம் மற்றும் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ஆகியோருக்கு ஆணையத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி பள்ளி நிர்வாகிகள், வழக்கறிஞரை அனுப்பி வைத்திருந்தனர்[6]. பள்ளியில் குற்றங்கள் நடந்ததற்கு என்னிடம் இருந்த ஏழு ஆதாரங்களை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளேன். பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அனுப்பிய விளக்க கடிதத்தில், ’பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளீர்கள்என கூறியுள்ளது. அதற்காக அவரின் சம்பளத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாய்யை பிடித்தம் செய்துள்ளது. இது குறித்து அவரின் பணிப்பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களையும் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளேன்[7]. பள்ளியின் சார்பில், மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆஜராக முடியவில்லை,” என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறது தினமலர்[8].. 

கமல் ஹஸன் தெரிவித்த கருத்து[9]: சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பிஎஸ்பிபி பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகார் குறித்து இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்[10]. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாதரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்வை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது . தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் திகழ்ந்த நிகழும் பாலியல் துன்பறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விராரிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வது[11]: “இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தமகாநதிஇன்றும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்வைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நமது பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரி பார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி துணையாக இருக்கவேண்டும். இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச்சமூகமாக நாம் அனைவரும் போராடி நீதியை நிலை நாட்ட வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்[12].

ஜாதியம்மதம் என்று சொல்லி செக்யூலரிஸமாக்கப் படும் பாலியல் விவகாரங்கள்: ஊடகங்கள் இவற்றை செக்யூலரிஸமாக்க முயற்சிக்கின்றன, அதாவது, ஜாதியம், மதம் என்று இரண்டிலும் இணைத்து, அதன் மூலம் திரிபு விளக்கம் கொடுத்து திசைத் திருப்பப் பார்க்கின்றனர். சிக்கியுள்ள எல்லா பள்ளிகளும் சாதி அடிப்படையிலானது, அல்லது மத அடிப்படையிலான பள்ளிகளாகவே இருக்கிறது[13]. செயின்ட் ஜார்ஜ் போன்றவை மத அடிப்படையிலான பள்ளிகளாகவும், பிஎஸ்பிபி போன்ற பள்ளிகள் சாதி அடிப்படையிலானதாகவும் இருக்கிறது[14]. இன்று வரையில், இதனை, ஜாதி ரீதியில், குறிப்பாக “பிராமண எதிர்ப்பு” முறையில் கடுமையாக, சாடி விமர்சங்கள், சமூக மற்றும் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. 09-06-2021 அன்று “டைம்ஸ்.நௌ” தொலைக்காட்சி பேட்டியில், முதலில் பேசிய பெண்-வழக்கறிஞர் குறிப்பிட்ட பள்ளியை விமர்சித்தேப் பேசி முடித்தார். பிறகு சின்மயி,  “செக்யூலரிஸ” முறையில் விமர்சித்தாலு,ம், அரசியலாக்குவதைக் கண்டித்தார். வைரமுத்துவை பெயர் சொல்லியே தாக்கினார். அவர் எவ்வாறு  பெரிய ஆட்களால் காப்பாற்றப் பட்டு வருகிறார் என்று எடுத்துக் காட்டினார். இதனால், கடையாக பேசிய சுப்ரமணியன் சுவாமி எவ்வாறு லயோலா கல்லூரி ஏழு பாலியல் புகார்களை மூடி மறைக்கப் பார்க்கிறது, கிருத்துவ சதி இதன் பின்னணியில் இருக்கிறது என்று கனிமொழியையம் குறிப்பிட்டு பேசினார். நேரியாளர் திடீரென்று பேட்டியை முடித்துக் கொண்டதிலிருந்து, மற்ற கருத்துகள், உண்மைகள் வெளி வர ஊடகங்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

10-06-2021


[1] பாலிமர் செய்தி, பள்ளியல் பாலியல் தொந்தரவு: 900 முன்னாள் மாணவர்கள் கூட்டாக புகார், மே.30, 2021 06:06:19:18 PM. https://www.polimernews.com/dnews/147236

[2] https://www.polimernews.com/dnews/147236

[3] தமிழ்.இந்து, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகிகள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை, Published : 08 Jun 2021 03:13 am; Updated : 08 Jun 2021 06:35 am..

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/679722-st-george-school-teacher.html

[5] ஈநாடு.டிவி.செய்தி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி மீதான பாலியல் புகாரின் விசாரணை ஒத்திவைப்பு, Published on: Jun 7, 2021, 4:01 PM IST.

[6] தினமலர், பள்ளி நிர்வாகிகளுக்கு மீண்டும், ‘சம்மன், Added : ஜூன் 08, 2021  10:07

[7] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/scpcr-postponed-investigation-of-sexual-abuse-allegations-on-st-george-school/tamil-nadu20210607160138357?fbclid=IwAR0BeGRkB498q_4hAg7oXF4shfqhv48iyQImxbH0–kXSwE-KNU4wE0Gilc

[8]  https://www.dinamalar.com/news_detail.asp?id=2780932

[9] ஏசியா.நெட்.நியூஸ், தப்பு செஞ்சவங்க எந்த ஜாதியாக இருந்தாலும் தண்டிக்கணும்இரண்டு பெண்களின் தகப்பனாக பொங்கி எழுந்த கமல்…!, Kanimozhi Pannerselvam, Chennai, First Published May 26, 2021, 3:08 PM IST.

[10] https://tamil.asianetnews.com/politics/makkal-needhi-maiam-leader-kamal-hassan-condemnation-to-psbb-sexual-harassment-complaint-qtpk4q

[11] மாலைமலர், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை குழு அமைக்க வேண்டும்தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை, பதிவு: மே 27, 2021 10:05 IST.

[12] https://www.maalaimalar.com/news/district/2021/05/27100546/2675385/Tamil-News-Kamal-Haasan-request-to-TN-government-to.vpf

[13] ஏசியாவில், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் குழந்தை திருமணங்கள்நாம் மறந்து கடந்து செல்கிறோம்! நினைவில் கொள்ளுங்கள், By Abisha Bovas • 03/06/2021 at 11:03AM

[14] https://www.asiaville.in/article/women-and-child-against-issue-in-recent-time-detail-interview-with-shalin-maria-lawrence-71708

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

கேரள பாதிரி எட்வின் பிகுரெஸ் மீது கற்பழிப்பு புகார்: பாவ மன்னிப்புக்கு வந்த இளம்-மாணவி பலி கடா ஆனாள்! (2)

ஜூலை 30, 2015

கேரள பாதிரி எட்வின் பிகுரெஸ் மீது கற்பழிப்பு புகார்: பாவ மன்னிப்புக்கு வந்த இளம்மாணவி பலி கடா ஆனாள்! (2)

Edwin Figarez with friends, relatives

Edwin Figarez with friends, relatives

இந்திய நீதிமன்றத்தை விட வாடிகன் பெரியதா?: கோட்டப்புரம் டையோசிஸ் (Kottappuram Diocese) சார்பில், ஒரு பாதிரி, எட்வின் பிகுரெஸ் தற்காலிகமாக பதவி-விலக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ராக்கி ராபி கலதில் என்ற பாதிரி, “அறிக்கை வாடிகனில் உள்ள நம்பிக்கை சித்தாந்தின் குழுமத்திற்கு [the Doctrine of the Faith (CDF)] அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய செக்ஸ்பாலியல் புகார்களை அதுதான் கவனித்து வருகிறது. இதற்காக தனியாக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, பிறகு விசாரணை நகக்கும். அதனால், நாங்கள் வாடிகனிலிருந்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற அறிவுரைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்”, என்று பி.டி.ஐக்கு விளக்கியுள்ளார்[1]. “கத்தோலிக்க இறையியல் சட்டத்தின் படி தற்காலிக பதவிவிலக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் பாதிரிதான். மேற்கொண்டு, நம்பிக்கை சித்தாந்தின் குழுமம் தான் முடிவெடுக்க வேண்டும். வாடிகனிலிருந்து பதில் வந்து, சர்ச் ஒன்றும் வேகமாக நடவடிக்கை எடுத்து விடாது”, என்று அதிரடியாக தெரிவித்தார்[2].  அதாவது, கற்பழித்தாலும், எத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர் பூஜாரிதான், பூஜை செய்து கொண்டே இருப்பார் என்கிறார் போலும்! இது அந்த ஊட்டிப் பாதிரியார் விவகாரம் போலவே இருக்கிறது[3].

Edwin Figarez, the Catholic priest with children

Edwin Figarez, the Catholic priest with children

நாட்டுக்குள் நாடு என்ற சித்தாந்தத்தில் வாடிகன் செயல்படுகிறது, அதே போல நாங்களும் வாடிகனுக்குத்தான் கட்டுப்பட்டவர்கள் என்கிறார்களா?: அதாவது “State within State” நாட்டுக்குள் நாடு என்ற சித்தாந்தத்தில் வாடிகன் செயல்படுகிறது என்று குறிப்பிடுவது உண்டு. ரோமில் வாடிகன் இருந்தாலும், வாடிகன் தனி நாடு ஆகும். ரோமின் சட்டதிட்டங்களுக்கு வாடிகன் அடிபணியாது. வெளிநாடு பயணம் குறித்தும், பாதிரி போலி பாஸ்போர்ட் உபயோகித்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். இவனது பற்றிய புகார் வாடிகனுக்கும் தெரிவிக்கப்பட்டது[4]என்று பிஷப் மற்ற பாதிரியார்கள் வாதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. வாடிகனோ இத்தகைய செக்ஸ்-கற்பழிப்பு கத்தோலிக்க சாமியார்கள் மீது எந்த நடவடிக்கையினையும் எடுக்காமல், சாதாரணாமாகவே செயல்பட்டு வருகின்றது. இதில் கூட கைது செய்யப்படாமல் இருக்க தடை உத்தரவு வாங்கியிருக்கிறார் இந்த “தியான குரு”! அதாவது, உடனிருக்கும் பாதிரிகள் பிரான்சிஸ் தனியாடது மற்றும் நிக்ஸன் கட்டசேரி [Francis Thaniyadathu and Nixon Kattassery] தான் சதி செய்து இத்தகைய பொய் வழக்கை போட வைத்துள்ளனர் என்று பெயில் வாங்கிருக்கிறார்[5]. அதனால், மே.5 வரை இவர் கைது செய்யப்படக் கூடாது என்று கேரள உச்சநீதி மன்றம், எர்ணாகுளம் போலீஸாருக்கு ஆணையிட்டது[6]. உடன் இருப்பவர்கள் அவ்வாறு சதி செய்து தூண்டியுள்ளார்கள் என்றால், அதனையும் சர்ச் விசாரித்து விசயங்களை வெலிப்படுத்தியிருக்கலாமே, ஆனால், ஏன் செய்யாமல், இப்பொழுது சதி என்கிறார்கள்? ஊட்டிப் பாதிரியார், பணம் கொடுத்து, அமெரிக்காவில் தன் மீது சுமத்தப் பட்ட கற்பழிப்பு வழக்கை சரிசெய்து விட்டான். அதுபோல, இவரும் இறங்குவார் போலும்.

Edwin Figarez,  with dancing girls

Edwin Figarez, with dancing girls

ஒரே பாதிரி, ஒரே குற்றம் ஆனால் இரண்டு டையோசிஸ் வக்காலத்து வாங்குவது ஏன்?: முதலில் வெரோபொலி டையோசிஸ் (Verapoly diocese) சார்பில் ஒரு பாதிரி “அப்புகார் ஆதாரமற்றது, பழிவாங்கும் விதத்தில் உள்ளது, அப்பாதிரிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது”, என்று அறிக்கை விடுத்தார்[7]. பிறகு கோட்டப்புரம் டையோசிஸ் (Kottappuram Diocese) சார்பில், மேற்குறிப்பிட்டபடி, விளக்கம் அளித்தார். ஒஇறகு, இப்பாதிரி யாருடைய கட்டுப்பாட்டில் வருகிறார், ஏன் இரண்டு டையோசிஸ் வக்காலத்து வாங்குகிறது என்று தெரியவில்லை.  ஒரே பாதிரி, ஒரே குற்றம், குற்றச்சாட்டு, வழக்கு இத்யாதிகள், பிறகு, இரண்டு பாதிரிகள், இரண்டு டையோசிஸ்களிலிருந்து, ஏன் அவனுக்கு ஆதரவாக விளக்கம் கொடுக்க வேண்டும்? இவ்விசயத்தில், இப்பாதிரியில் செக்ஸ் விவகாரங்கள் தெரிந்திருந்தே, உரிய அதிகாரிகளிடம் அறிவிக்காமல் பொறுப்புள்ளவர்கள் இருந்திருக்கின்றனர் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[8].

Edwin Figarez, the Catholic priest singing with girls

Edwin Figarez, the Catholic priest singing with girls

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கும் பாதிரி: எட்வின் பிகுரெஸ் ஜோசப் [ Edwin Figarez] எர்ணாகுளத்தில், புதேன்வெளிக்கர என்ற இடத்தில் உள்ள லூர்து மாதா சர்ச்சில் பாதிரியாக வேலை செய்து வருகிறார்[9]. 40 வயது மேல் ஆனாலும், நவீன உடைகள் அணிந்து கொண்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அழகான, பாடும் திறமைக் கொண்ட பாதிரி, பாட்டுகள் கொண்ட சிடிகளையும் வெளியிட்டுள்ளார். நீதிமன்றத்தில் கூட, இவர் மிகவும் பிரபலமானவர் என்பதற்கு, இவரது சிடிக்கள் ஆதாரமாகத் தாக்கல் செய்யப்பட்டது. இணைதளத்தில் ஜீன்ஸ் சகிதம் இருப்பது போன்ற புகைப்படங்கள், இவரது பாட்டுடன் “யு-டியூப்பில்” வெளியிடப்பட்டுள்ளன[10]. இளம் பெண்களுடன் சேர்ந்து பாடுவது, நடன நிகழ்சிகளை ஏற்பாடு செய்வது, அவர்கள் ஆடும் போது, இவர் பாடுவது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒரு தடவை மேளம் கூட வாசித்துள்ளார். இவ்வாறு, இளம்பெண்களுடன் பழகுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ள போது, அவர்களது பெற்றோர்கள் ஏன் விழிப்புடன் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு இளம்பெண்களுடன் பழகி வரும் போது, நிச்சயமாக, இப்பாதிரி பாலியல் காரியங்களில் ஈடுபடுவார் என்பது, கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வரும் பாலியல் குற்றங்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

Edwin Figarez, priest singing with girls

Edwin Figarez, priest singing with girls

கேரள பாதிரிகள், பாஸ்டர்கள், கிருத்துவ சாமியார்கள் ஏன் தொடர்ந்து கற்பழிப்புக் குற்றங்களுக்காக கைது செய்யப்படுகின்றனர்?: கேரள பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் கடந்த 60 ஆண்டுகளாக, இவ்வாறு கற்பழிப்பு, பாலியல் வன்குற்றங்கள், பிடோபைல் என்று பல செக்ஸ் குற்றங்களில் சிக்கி வருகின்றனர். அபயா கற்பழிப்பு கொலை விவரங்கள் பல ஆண்டுளாக இழுக்கப்பட்டு, முடிக்காமல் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு கன்னியாஸ்திரியின் புத்தகமும் இத்தகைய விவரங்களைக் கொடுத்துள்ளது. ஆனால், ஊடகங்கள் அவற்றைப் பெரிது படுத்தாமல், செய்திகளை வெளியிட்டு அமைதியாகி விடுகின்றன. பிறகு எல்லோரும் மறாந்து விடுகின்றனர். ஜெபிக்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன், தனியாக வா என்றால், எப்படி பெண்கள் செல்கின்றனர் என்பதும் விசித்திரமாக இருக்கிறது. முதலில் தாராளமாக தமது மகள்களை அப்படி அனுப்பி வைத்து விட்டு, பிறகு கற்பழித்துவிட்டார்கள் என்று புகார்கள் கொடுப்பதும், வழக்குகள் சமரசத்துடன் முடித்துக் கொள்வதும் மர்மமாகவே இருக்கின்றது. கேரளாவில் படித்தவர்களின் சதவீதம் இந்தியாவிலேயே அதிகம் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். பிறகு அம்மாநிலத்தில் பெண்கள் இவ்வளவு ஏமாளிகளாக, அப்பாவிகளாக இருப்பார்களா என்று வியப்பு மேலிடுகிறது.

© வேதபிரகாஷ்

30-07-2015

[1] “The report has been sent to the Congregation for the Doctrine of the Faith (CDF) in Vatican which looks into the cases of sexual abuse of minors by priests. They may appoint another Commission to further probe the matter. We are waiting for directions from the Vatican,” Kottappuram Diocese Spokesman Fr Rocky Roby Kalathil told PTI.

[2] “He (Figarez) is still a priest. For the time being he is suspended based on Canon law. Further decision will be taken by the Congregation for the Doctrine of the Faith in Vatican,” he said.  Kalathil, however, said the Church is not expecting a “sudden decision” from the Holy See.

[3] ஊட்டி பாதிரியார் விசயத்தில், வாடிகன் கற்பழித்த பாதிரிக்கு தண்டனை கொடுக்க சொன்னால், ஊட்டியில் நிர்வாக வேலை கொடுத்து பத்திரமாக தங்க வைத்துக் கொண்டுள்ளனர். பிறகு, அமெரிக்கா இன்டர்போல் மூலம் “தேடுதல்” அறிக்கையை விடுத்ததும், கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளான்.

[4] http://www.ndtv.com/kerala-news/lookout-notice-for-catholic-priest-who-allegedly-raped-teenager-in-kerala-763932

[5] Justice Babu Mathew P Joseph issued the interim order while considering the anticipatory bail plea of Figarez. The prosecutor sought time to get instruction from the police regarding the case. Hence the court granted time and ordered not to arrest the petitioner till the next posting date. Figarez submitted that the offences have been falsely foisted and have been incorporated with a malafide intention of ruining his future. The petitioner is a very famous priest of the Christian community and is well known for his retreats all over the world, the petition stated. He alleged that it was his co priests Francis Thaniyadathu and Nixon Kattassery, who had been inimical towards him, who cooked up the false case. In fact, his co-priests, had insisted the mother of the girl to file a case against him because they were envious of the wide acceptance of the petitioner as a ‘dhyana guru.’ Their intention was to harm his reputation. These priests had earlier threatened the petitioner that his reputation would be tarnished. The allegation is that the priest raped the 14-year-old girl at the parsonage of the Church from January till March 28, 2015.

http://www.newindianexpress.com/states/kerala/Rape-Charge-HC-Breather-for-Priest/2015/04/25/article2781654.ece

[6] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/court-directive-not-to-arrest-accused-priest/article7140273.ece

[7] http://www.thehindu.com/news/cities/Kochi/priest-held-on-charge-of-assault/article7060402.ece

[8] https://rapevictimsofthecatholicchurch.wordpress.com/category/father-edwin-figarez/

[9] Rev. Fr. Edwin Figarez; E-mail: edwinfigarez@gmail.com; Telephone : Mob: 9447268228; http://www.latincatholickerala.org/component/mtree/diocese-of-kottappuram/940-rev-fr-edwin-figarez.html

[10] https://www.youtube.com/watch?v=OGtz80XTiDU

கேரள பாதிரி எட்வின் பிகுரெஸ் மீது கற்பழிப்பு புகார்: பாவ மன்னிப்புக்கு வந்த இளம்-மாணவி பலி கடா ஆனாள்! (1)

ஜூலை 30, 2015

கேரள பாதிரி எட்வின் பிகுரெஸ் மீது கற்பழிப்பு புகார்: பாவ மன்னிப்புக்கு வந்த இளம்மாணவி பலி கடா ஆனாள்! (1)

Edwin Figarez, the Catholic priest with teen-girl during confession session

Edwin Figarez, the Catholic priest with teen-girl during confession session

சர்ச்சிற்கு சென்ற மாணவியைக் கற்பழித்த பாதிரி, போலீஸாரிடம் புகார்: எட்வின் பிகுரெஸ் ஜோசப் [ Edwin Figarez a priest with the Lourdes Matha Church, Puthenvelikkara] எர்ணாகுளத்தில், புதேன்வெளிக்கர என்ற இடத்தில் உள்ள லூர்து மாதா சர்ச்சில் பாதிரியாக வேலை செய்து வருகிறார்[1]. அழகான இளைஞர் போல் காட்சியளிக்கு இவர் பல நிகழ்சிகளில் இஅள்ம்பெண்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடுவது, நடனம் போன்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். இந்நிலையில் 14 வயதான, ஒன்பதாவது வகுப்புப் படிக்கும் ஒரு இளம்பெண் இவரிடத்தில் “ஒப்புக்கொண்டு பிரயாசித்தம் செய்தல் / பாவ-மன்னிப்பு” (Confession) என்ற நம்பிக்கை சடங்கிற்கு வருவதுண்டு. அத்தகைய தொடர்பினால், அப்பெண்ணை மயக்கி, பலமுறை உடலுறவுக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து அத்தகைய தொந்தரவு கொடுத்ததினால் மார்ச்.28 அன்று தனது தாயிடம் உண்மையினை கூறியிருக்கிறாள். இதனால், ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை தனது மகளை ஐந்து முறை கற்பழித்ததாக, மீது, அப்பெண்ணின் தாயார் ஏப்ரல்.1ம் தேதி போலீஸாரிடம் புகார் கொடுத்தார். (கடைசியாக மார்ச்.28 அன்று செய்ததால், சில நாட்களுக்குப் பின்னர் அப்பெண் தனது உறவினர்களிடம் சொல்லியிருக்கிறாள். அதன் பிறகு தாயார் போலீஸாரிடம் புகார் கொடுத்தார், என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுகின்றது[2]).

Edwin Figarez - missing, look out notice

Edwin Figarez – missing, look out notice

காணாமல் போன பாதிரி, “காணவில்லைஎன்று என்று அறிக்கையும் போலீஸார் வெளியிட்டது: இப்பாதிரி இதற்குள் கைதுக்கு எதிராக, நீதிமன்றத்தில் கைது-தடுப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. பிறகு மருத்துவ பரிசோதனை செய்ததில் அப்பெண் கற்பழிக்கப்பட்ட உண்மை வெளியானது. நீதிமன்றமும், அவனது மனுவை மே.5ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனால், போலீஸார் விசாரணைக்காக அவனை ஆஜராகுமாறு அழைத்தனர். ஆனால், மே.5 2015 முதல் காணாமல் இருப்பதால், போலீஸார் தேடி வருகின்றனர்[3]. “காணவில்லை” என்று அறிக்கையும் போலீஸார் வெளியிட்டனர்.  அவனது வீட்டிற்குச் சென்று தாயார், சகோதரர்களிடம் விசாரணை செய்துள்ளனர். ஆனால், அவர்கள், ஒத்துழைப்புக் கொடுக்காமல், சப்தம் போட்டு அனுப்பியுள்ளனர். தங்களை அளவுக்கு அதிகமாக தொந்தரவு செய்கின்றனர் என்று வழக்குப் போடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். வெரோபொலி டையோசிஸ் (Verapoly diocese) சார்பில், ஒரு பாதிரி, “அப்புகார் ஆதாரமற்றது, பழிவாங்கும் விதத்தில் உள்ளது, அப்பாதிரிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது”, என்று பதிலளித்துள்ளார்[4]. உண்மையில் தவறு செய்யவில்லை என்றால், அப்பாதிரி மறையவேண்டிய அவசியம் இல்லை. போலீஸ் தேடுவது, “காணவில்லை” என்ற நோட்டீஸ் விடுத்தது, முதலியவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

Edwin Figarez, the Catholic priest accused for raping teen-girl

Edwin Figarez, the Catholic priest accused for raping teen-girl

எட்வின் பிகுரெஸ்ன் தாய் மற்றும் சகோதரர்கள் நீதிமன்றத்தில் கைதுதடுப்பு மனு தாக்கல் செய்தது[5]: எட்வின் பிகுரெஸ்ன் தாய் மற்றும் சகோதரர்கள் கேரளா உயர் நீதிமன்றத்தில் போலீஸார் தங்களை விசாரிக்கிறார்கள், தங்களது மகனையும் போலீஸ் ஷ்டேசனுக்கு வரவேண்டும் என்று கட்டயப்படுத்துகிறார்கள், என்று கைது-தடுப்பு மனு ஒன்று தாக்கல் செய்தார்கள்[6]:

1.       ரோசிலி பிகாரெஸ் (74) [ஜோசப் பிகாரெஸ்ன் மனைவி, எட்வின் பிகுரெஸ்ன் தாயார்],

2.       எம். ஸ்டான்லி பிகாரெஸ் [ஜோசப் பிகாரெஸ்ன் மகன், எட்வின் பிகுரெஸ்ன் சகோதரர்],

3.       சில்வெஸ்டர் பிகாரெஸ் [ஜோசப் பிகாரெஸ்ன் மகன், எட்வின் பிகுரெஸ்ன் சகோதரர்],

4.       கிளாரென்ஸ் டி கௌதா [செபாஸ்டியன் டி கௌதாவின் மகன்],

5.       ஹெர்மி பிகாரெஸ் [ஜோசப் பிகாரெஸ்ன் மகன், எட்வின் பிகுரெஸ்ன் சகோதரர்],

முதலியோர், எட்வின் பிகுரெஸ்ன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் [Crime No.135/2015 of Puthenvelikara Police Station] புதென்வெளிகர போலீஸார் தங்களை தொந்தரவு செய்வதாகவும், மிரட்டுவதாகவும், மனுவில் உறிப்பிட்டனர். தனது மகன் மீது இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் குழந்தைகளை செக்ஸ் குற்றங்களிலிருந்து காப்பாற்றும் சட்டப் பிரிவுகளில் [Section 376(2)(i) of Indian Penal Code and Sections 4 and 5(1) read with 6, 9 (1), 10, 11(ii)(iii) and 12 of the Protection of Children from Sexual Offences Act, 2012] குற்றன்சாட்டப் பட்டுள்ளான். மேலும் குடும்பத்தார், இந்தியாவிலிருந்து செல்ல உதவியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நீதிபதிகள் எல்லாவற்றையும் கேட்ட பிறகு, போலீஸாரின் விசாரணையில் எந்த பிரச்சினையும் இல்லை அதனால், பெயில் கொடுக்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்தனர்[7].

எட்வின் பூஜாரி

எட்வின் பூஜாரி

பூஜாரி தாக்கியதற்காக கைது”  செக்யூலரிஸ ஊடகங்களின் வினோதமான செய்திகள்: இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி மேலே எடுத்துக் காட்டப்பட்டது. தி ஹிந்து, “பூஜாரி தாக்கியதற்காக கைது” என்று தலைப்பிட்டு, செய்தியை வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

Priest held on charge of assaultThe Hindu, Updated: April 2, 2015 05:39 IST; KOCHI, April 2, 2015

 

The Puthenvelikkara police on Wednesday booked a priest for alleged sexual assault of a minor girl several times in the past few months. According to the police, the mother of a Class 9 student lodged a complaint against Fr. Edwin Figares, a priest with the Lourdes Matha Church, Puthenvelikkara.

“The mother, in her complaint, stated that the accused sexually assaulted her 15-year-old daughter several times over the past couple of months. A case has been registered and the probe has begun,” said sub inspector M.S. Shibu. According to the complaint, the girl revealed her ordeal to her mother on March 28. However, a spokesperson of the Verapoly diocese termed the charges “baseless and an act of revenge, done with an intent to tarnish the image of the priest who is well known for his service”. — Staff Reporter

  • பூஜாரி யார்? எந்த மதத்து பூஜாரி என்று குறிப்பிடவில்லை!
  • பூஜாரி தாக்கினார் என்றால், யாரை, எதற்காக என்ற கேள்விகள் எழுகின்றனவே!
  • தாக்கப்பட்டது யார்?
  • sexual assault – என்று பிறகு குறிப்பிடப்படுகிறது! செக்ஸுவலாக எப்படி ஒரு பூஜாரி தாக்கினார் என்பதை விளக்கவில்லை!!
  • several times in the past few months – என்று தெரியாத மாதிரி போட்டிருப்பதும் வேடிக்கைதான்! சிற்சில மாதங்களில் சிற்சில சமயங்களில் அவ்வாறு செக்ஸுவலாக எப்படி ஒரு பூஜாரி தாக்கினார் என்பதும் விவரிக்கப்படவில்லை.

தி ஹிந்துவின் செய்தி, ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டப் பட்டது. இதே சாமியார் என்றால், எல்லா செனல்களிலும் இச்செய்தி ஓடியிருக்கும். நித்தியானந்த விவகாரம், வழக்குகள், ஊடகங்களின் அதிரடி 24×7 ஒலி-ஒளி பரப்புகள் முதலியவற்றை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

எட்வின் பாதிரி

எட்வின் பாதிரி

எட்வின் பிகுரெஸ் இந்தியாவில் உள்ளானா, துபாய்க்குச் சென்று விட்டானா?: இவன் இந்தியாவில் இருக்கிறானா இல்லையா என்பது பற்றி கூட முரண்பாடான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன. ஏப்ரல்.2, 2015 அன்று இவன் துபாய்க்குத் தப்பிச் சென்று விட்டதாக வடக்கேகர சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பி.கே.மனோஜ்குமார் தெரிவித்தார். இவனது பாஸ்போர்ட் எண்ணை வைத்து, விமானநிலையங்களில் உள்ள விவரங்களை சோதித்த போது, இவன் பெங்களூரு விமான நிலையம் வழியாக துபாய்க்குச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிந்ததாக மனோஜ்குமார் தெரிவித்தார்[8].  ஆனால், “ஆசியா-நெட்-நியூஸ்”, போலீஸார் ஏற்கெனவே அவனது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து விட்டதால், அயல்நாட்டிற்குச் சென்றிருக்க முடியாது, வாய்ப்பில்லை என்கிறது[9]. அப்படியென்றால், இவன் இரண்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறானா அல்லது ஏப்ரல்.2ந்தேதி சென்று, பிரச்சினை அதிகமாகும் என்று தெரிந்து, திரும்பி வந்து விட்டானா என்பதனை ஊடகங்கள் விளக்கவில்லை. இல்லை, “எமிக்ரேஷன்” பிரிவு அந்த அளவுக்கு பொய்யான விவரத்தை போலீஸாருக்குக் கொடுத்திருக்க முடியாது. எனவே, ஊடகங்கள் அரசு துறைகளின் மீதே சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் செய்திகளை ஏன் வெளியிடுகின்றன என்று கவனிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

30-07-2015

[1] Rev. Fr. Edwin Figarez; E-mail: edwinfigarez@gmail.com; Telephone : Mob: 9447268228; http://www.latincatholickerala.org/component/mtree/diocese-of-kottappuram/940-rev-fr-edwin-figarez.html

[2] The police said the minor girl had been exploited several times since January. The last incident was on March 28. The girl revealed the trauma to her family a few days back, after which her mother complained to the police.

http://indianexpress.com/article/india/crime/booked-for-raping-minor-kerala-priest-on-the-run/

[3] http://indiankanoon.org/doc/81866488/

[4] http://www.thehindu.com/news/cities/Kochi/priest-held-on-charge-of-assault/article7060402.ece

[5] http://indiankanoon.org/doc/81866488/

[6] Kerala High Court – Mrs.Rosily Pigarez Aged 74 Years vs The State Of Kerala on 28 April, 2015; WP(C).No. 12682 of 2015 (I)

[7] http://www.thenewsminute.com/article/kerala-hc-denies-bail-priest-sexual-harassment-case-says-cruel-people-using-kids-satisfy

[8] “The accused fled to Dubai on April 2, a day after the girl’s mother filed a complaint. When we checked his passport number with emigration sections in different airports, we found that the accused had flown to Dubai from Bengaluru airport,” Vadakkekara circle inspector P K Manoj Kumar, who leads the investigation had earlier informed TNM.

http://www.thenewsminute.com/article/lookout-notice-issued-against-catholic-priest-accused-molesting-child

[9] However, an Asianetnews report indicates that it is highly unlikely that the priest must have fled abroad, considering that the police have confiscated his passport.

http://www.thenewsminute.com/article/lookout-notice-issued-against-catholic-priest-accused-molesting-child