லாவண்யா தற்கொலை வழக்கு – மாணவி விடுதியில் துன்புறுத்தப் பட்டது, ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தது, 19ம் தேதி இறந்தது, வழக்கில் முடிந்தது (2)

லாவண்யா தற்கொலை வழக்குமாணவி விடுதியில் துன்புறுத்தப் பட்டது, ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தது, 19ம் தேதி இறந்தது, வழக்கில் முடிந்தது (2)

விடுதி வார்டன்கள் துன்புறுத்தியது: விடுதி வார்டன் சகாயமேரி, சிஸ்டர் ராக்லின்மேரி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம் செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  விடுதிகளில் இவ்வாறு பெண்களை, சிறுமிகளை துன்புறுத்துவது என்பது தெரிந்த விசயமே[1]. அடிக்கடி செய்திகளாகவும் விவரங்கள் வெளிவந்துள்ளன. இதனால், சில பெண்கள் தப்பித்து ஓடிப் போவதும் உண்டு[2], வீட்டிற்கே சென்று விடுவதும் உண்டு. லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்[3]. இதுசம்பந்தமாக மாணவிப் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது[4].

வீடியோ உரையாடல் விவரம்: தொடர்ந்து, வீடியோ பதிவு செய்தவர், மாணவியிடம் கேள்விகள் கேட்கிறார்[5].

மொபைல் நபர்: சிஸ்டர் பெயர் என்ன?

மாணவி: சகாயமேரி

மொபைல் நபர்: பள்ளி தலைமையாசிரியர் பெயர் என்ன?

மாணவி: தலைமையாசிரியர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் பெயர் ஆரோக்கியமேரி.

மொபைல் நபர்: என்ன வேலை செய்ய சொல்லுவார்கள்?

மாணவி: காலையில் எழுந்த பின் கேட் திறப்பது போன்ற வார்டன் செய்ய வேண்டிய எல்லா வேலையும் செய்ய சொல்லுவார்.

மொபைல் நபர்: பள்ளியில் பொட்டு வைக்க கூடாது என கூறினார்களா?

மாணவி: அப்படி எல்லாம் இல்ல.

மொபைல் நபர்: பொங்கலுக்கு ஊருக்கு வந்தாயா?

மாணவி: இல்லை, படிக்கணும்னு கூறி அனுப்பல.

மொபைல் நபர்: நீ மருந்து சாப்பிட்டது தெரியுமா?

மாணவி: தெரியாது, உடம்பு சரியில்லைனு தான் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.

இப்படி உரையாடல் நடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அப்படியென்றால், முதலில் சிகிச்சை அளிக்கப் பட்டபோது, ஒருவேளை விசம் / பூச்சி மருந்து சாப்பிட்டதால், மாற்று மருந்து கொடுக்கப் பட்டதா, என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை.

22-01-2022 – ஒரு போலியான வீடியோவை பா...வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[7], “தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தூய இருதய மேரி பள்ளியில் 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவி லாவண்யா, விடுதியில் தொடர்ச்சியாக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய அளிக்கப்பட்ட நிர்பந்தம்தான் காரணம் என்பதாக ஒரு போலியான வீடியோவை பா...வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்[8]. ஏழை மாணவியான லாவண்யாவின் மரணத்தை, மதமாற்ற நிர்ப்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பா...வின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது வலுவான கண்டனத்தை தெரிவிப்பதோடு, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.”

அனிதா விசயத்தில் ஆர்பாட்டம், அமர்க்களம் செய்தவர்கள், இப்பொழுது அமைதியாக இருப்பது திகைப்பாக இருக்கிறது: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதா வீட்டிற்கே சென்று தூக்கம் விசாரித்த நடிகர் விஜய், ஜி.வி.பிரகாஷ், தங்களை சமூக நல விரும்பிகளாக காட்டி கொள்ளும் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் மற்றும் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் ஆகியோர் இது குறித்து வாய் திறக்கவில்லை. சமூக ஆர்வலர்கள் பக்கம்-பக்கமாக எழுதி தள்ளீனார்கள். சமூக ஊடகங்களில் தாராளமாகவே அள்ளி வீசி, ட்ரென்டிங் செய்தனர். அனிதாவுக்கு நீதி கிடைத்ததோ இல்லையோ, இவர்களுக்கு நிதி, விளம்பர, வியாபாரம், பிரபலம் முதலியவை தாராளமாக- அதிகமாகவே கிடைத்தன. ஆளுக்கு ஏற்றபடி ஆதரவு, பிரச்சாரம் செய்வது, செய்திகளை வெளியிடுவது என்றேல்லாம், தமிழகத்தில் சாதாரண விசயமாகி விட்டது. திமுக வந்தவுடன், அதிமுகவையே ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத் தக்கது.

23-01-2022 அன்று பெற்றோரிடம் வாக்குமூலம் பதிவு: வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்[9]. அது 24-01-2022 அன்று விசாரணைக்கு வருகிறது. இதற்குள் போலீஸார் தமது விசாரணையை துரிதப் படுத்தியுள்ளனர். அதன்படி இன்று 23-01-2022, ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.50 க்கு அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையிலான பாஜகவினர் முருகானந்தம் மற்றும் சரண்யாவை தஞ்சை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். தனி அறையில் தனித்தனியாக நீதிபதி பாரதி வாக்குமூலம் பெற்று பதிவு செய்தார்[10].

24—01-2022 மதுரை கிளையில் நீதிபதி முன் வந்த வழக்கு: இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 24-01-2022 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும், வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நாளை 25-01-2022 அன்று அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நீதிபதி முறையாக விசாரித்து ஆணையிட்டது வரவேற்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] India Today, 6 schoolgirls flee school hostel after being forced to clean toilets, Asian News International, New Delhi, July 23, 2019UPDATED: July 23, 2019 14:32 IST

[2] https://www.indiatoday.in/education-today/news/story/6-schoolgirls-flee-school-hostel-after-being-forced-to-clean-toilets-1572592-2019-07-23

[3] டாப்.தமிழ்.நியூஸ், மாணவி மரணத்தில் பெண் வார்டன் கைது,  By KATHIRAVAN T R Thu, 20 Jan 202211:54:46 AM.

[4] https://www.toptamilnews.com/thamizhagam/female-warden-arrested-in-student-death/cid6275911.htm

[5] தினமலர், பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு; மற்றொரு வீடியோ கசிந்தது எப்படி?, Added : ஜன 28, 2022  06:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2947480

[7] தினமணி, மாணவி லாவண்யா மரணத்தில் மதமாற்ற சாயம் பூசுபவர்கள் மீது நடவடிக்கை: கே.பாலகிருஷ்ணன், பதிவு: ஜனவரி 23,  2022 03:01 AM.

[8] https://www.dailythanthi.com/News/State/2022/01/23030110/Action-against-Religion-in-the-death-of-student-Lavanya.vpf

[9] நக்கீரன், மாணவி லாவண்யாவின் பெற்றோர் நீதிபதியிடம் தனித்தனியாக வாக்குமூலம் அளிப்பு!, பகத்சிங்  நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 23/01/2022 (20:21) | Edited on 23/01/2022 (20:49).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/student-lavanyas-parents-give-separate-confession-judge

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.