லாவண்யா வழக்கு – வீடியோ ஆதாரம், மதமாற்ற வலுகட்டாயம், பெற்றோரின் உறுதியான வாக்குமூலம், நீதிமன்ற ஆணை, போலீஸார் விசாரணை (3)

லாவண்யா வழக்குவீடியோ ஆதாரம், மதமாற்ற வலுகட்டாயம், பெற்றோரின் உறுதியான வாக்குமூலம், நீதிமன்ற ஆணை, போலீஸார் விசாரணை (3)

22-01-2022 – பெற்றோர் மதமாற்றம் பற்றி உறுதியாகச் சொன்னது: விசாரணை முடிந்ததும் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் சித்தி மற்றும் தந்தை, ‘எங்க பொண்ணை கட்டாயமா மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி இருக்காங்க. பாத்ரூம் கழுவுறதுன்னு ரொம்ப துன்புறுத்திட்டாங்க. எங்க பொண்ணுக்கு நியாயம் வேணும். சம்பந்தப்பட்ட ரெண்டு பேரையும் அர்ரெஸ்ட் பண்ணாதான், நாங்க உடலை வாங்குவோம். எங்க பொண்ணுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்கக்கூடாது. எங்க பொண்ணு தான் முதலும், முடிவா இருக்கணும்.வேற எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி அநியாயம் நடக்கவே கூடாது. கடந்த 2 வருடமாக இந்த கொடுமை நடந்துருக்கு. மதமாற சொன்ன ராக்லின் மேரி, சகாயமேரி இருவரையும் கைது செய்யனும்’ என்று கூறினார்கள்.  ஏற்கனவே மகள் இறந்த துக்கத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு வலுக்கட்டாயமாக வேண்டுமென்றே, அநாவசிய கேள்விகளை மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்குள் மதுரை பிஷப் அறிக்கை விட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது.

23—01-2022 – கத்தோலிக் பிஷப் அமைப்பு தலைவர்அந்தோணி பாப்புசாமி அறிக்கை: தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதச்சாயம் பூசக்கூடாது என்று தமிழக கத்தோலிக்க ஆயா் பேரவைத் தலைவா் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்[1]. இதுதொடா்பாக அவா் 23-01-2022, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை[2]: “தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மிக்கேல்பட்டியில் நடைபெற்ற மாணவியின் மரணத்துக்கு கத்தோலிக்க ஆயா் பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. மாணவியின் மரணத்துக்கு மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டது தான் காரணம் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. மாணவியின் மரணத்துக்கு மதத்சாயம் பூசக்கூடாது. மாணவியின் இறப்புக்கு காரணமாக யார் இருந்தாலும் அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. மாணவியின் மரணம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எடுத்துள்ள துரித நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினா் ஆற்றிவரும் கல்விப் பணிகளை அனைவரும் அறிவா். இந்த பள்ளிகளில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் பெண்களுக்காகவே நடத்தப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ மறை சார்ந்த பெண் துறவியரால் அா்ப்பணிப்பு உணா்வோடு நடத்தப்படும் பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பிலும் அவா்களின் வளா்ச்சியிலும் தனிக்கவனம் செலுத்தப்படுவதையும் அனைவரும் அறிவா். …….”

23—01-2022 – பிஷப் அந்தோணி பாப்புசாமி அறிக்கை: அந்தோணி பாப்புசாமி தொடர்ந்து கூறியது, கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினரால் நடத்தப்படும் இப்பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையினா் மதப்பெரும்பான்மையினா் என்பதையும் ஊரறியும். பள்ளிகளை நிர்வகிக்கும் துறவிகள் எப்போதும் மதமாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதே இல்லை என்பதே உண்மை. ஆனால் உண்மைக் காரணத்தை காண முயலாத மதவாத அரசியல் சக்திகள்மதமாற்றம்என்ற பொய்யான குற்றச்சாட்டைக் கையிலெடுத்து பிரச்னையை திசை திருப்பி சமய நல்லிணக்கத்தைக் கெடுக்க முயல்கின்றன. மேலும் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மாணவியின் மரணம் தொடா்பாக உரிய சட்டப்பூா்வ விசாரணையைத் தேடாமல் மதமாற்றம் எனும் முழக்கத்தை கையில் எடுத்திருப்பது வேடிக்கையானது. எனவே மாணவி மரண விவகாரத்தில் அரசும், காவல்துறையும் வழக்கை நடுநிலையோடு நடத்தி முடிக்க வேண்டும்,” என்றார்.

திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு கத்தோலிக்க தமிழக ஆயர் பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி[3]: 2016ல் வெளியிட்ட அறிக்கை: “கிறிஸ்தவ மதச் சிறுபான்மை யினர் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளிடம் சில கோரிக்கைகளை முன் வைத்து ஏற்கும் கட்சிக்கு ஆதரவு தருவதென முடிவெடுக்கும்.இந்த தேர்தலில் இக்கோரிக் கைகளுக்கான ஒப்புதல் தமிழக ஆயர்களிடம் இருந்து பெறப்பட் டன. திமுக பொருளாளர்ஸ்டாலின் தொடர்புகொண்டு எங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்கும் படி கோரினார். அதன்படி கோரிக்கைகளை முன்வைத் தோம். மத சார்பின்மையைக் காக்கவும், ஜனநாயக மதிப்பீடு களை வளர்க்கவும் திமுககாங் கிரஸ் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாம் அறிந்த கூட்டணிக் கட்சிகளில் குறைவான தீங்குகளை உடையன என்பதால் இந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்[4]. இப்பொழுதைய 2021 தேர்தலிலும், ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஜார்ஜ் பொன்னையாவும் வெட்ட வெளிச்சமாக எல்லாவற்றையும் தெரிவித்தாகி விட்டது. பிறகு என்ன மதசாயம், வெங்காய எல்லாம். ஏற்கெனவே திட்டம் போட்டுதான் நடந்து கொள்கின்றனர் என்றாகிறது.

ஊடகக் காரர்களின் அடாவடித்தனம்: தற்கொலை செய்த மாணவியின் சித்தி பேசும் போது, மதமாற்றம் நடந்து 2வருசமா பன்றாங்கன்னு சொல்றீங்க, அப்போ ஏன் கேட்கல ? நீங்க ஏன் கேட்கல? மதமாற்றம் பண்ணாங்கன்னு சொல்றீங்களே டிசி வாங்கியிருக்கலாம்ல’ என்று மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஊடகக் காரகளுக்கு, இதெல்லாம் பொழுது போக்கு அம்சமாகி விட்டது. டிவிக்களில், இதைப் பற்றி ஒலி-ஒளிபரப்புவது மூலம், அவர்கள் பணம் பெறுகிறார்கள், அதே நேரத்தில், இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்த்து, மக்களுக்கும் மரத்து போகிறது. சமூக பிரக்னை / உணர்வு குறைந்து போகிறது. இதைத்தான், இக்காலத்து, ஊடகங்கள் செய்து வருகின்றன. சிசிடிவி காட்சிகள், வீடியோக்கள் என்று, மக்கள் இறப்பது, குற்றங்கள் நடப்பது இவற்றை வைத்தே, கதைகளை உருவாக்கி, நேரத்தை விரயமாக்கி வருகின்றனர். அதாவது மக்களின் மனங்களை கெடுத்து வருகின்றனர்.

24-01-2022 – வீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு: இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 24-01-2022 அன்று விசாரணைக்கு வந்தது[5]. அப்போது, மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை 25-01-2022 காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்[6], வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[7]. அதன்படி நாளை அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்[8]. மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

27-01-2022 போலீஸார் ஆதாரங்கள் தாக்கல் செய்தனர்: மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.  தற்போது மாணவியின் பெற்றோர் அளித்த 2-வது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார். இவ்வாறு ஆட்சியாளர், போலீஸார் முதலியவர்களிடமும், இருநிலை தெரிந்தது. முறையாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அவ்வாறான இரட்டைத் தன்மை இருந்திருக்காது. இதிலிருந்தே, அவர்களும் ஆட்சியளர்களின் அழுத்தத்தில்-தாக்கத்தில் இருக்கின்றனர் என்றாகிறது. முதலமைச்சர்-அமைச்சர் ஒருமாதிரி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், இவர்கள் அதற்கு மாறான காரியங்களை செய்ய முடியாது. இங்குதான், பின்னணியில் உள்ள கிருத்துவர்களின் தாக்கத்தை அறியலாம். அதற்கேற்ற போல, பீட்டர் அல்போன்ஸும், விசயத்தை விட்டு, பிஜேபி அரசியல் செய்கிறது என்று பேட்டி கொடுக்கிறார்.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] தினமணி, தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதச்சாயம் பூசக்கூடாது, By DIN |   Published on : 23rd January 2022 10:32 PM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/jan/23/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3778894.html

[3] தமிழ்.இந்து, திமுக கூட்டணிக்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவு,  செய்திப்பிரிவு, Published : 05 May 2016 09:29 AM; Last Updated : 05 May 2016 09:30 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/82860-.html

[5] தினத்தந்தி, மாணவி தற்கொலை விவகாரம்: வீடியோ பதிவு செய்தவர் நாளை விசாரணைக்கு ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு: ஜனவரி 24,  2022 18:23 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2022/01/24182323/Student-suicide-case-Madurai-High-Court-orders-video.vpf

[7] மாலைமலர், மாணவி லாவண்யா தற்கொலை வழக்குவீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு, பதிவு: ஜனவரி 24, 2022 17:47 ISTமாற்றம்: ஜனவரி 24, 2022 18:10 IST.  

[8] https://www.maalaimalar.com/news/district/2022/01/24174738/3414176/Lavanya-committed-suicide-The-person-who-recorded.vpf

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.