லாவண்யா தற்கொலை வழக்கு – மதமாற்றம் போன்றவை பெயர் மாற்றங்களிலிருந்தே ஆரம்பிக்கின்றன (1)

லாவண்யா தற்கொலை வழக்குமதமாற்றம் போன்றவை பெயர் மாற்றங்களிலிருந்தே ஆரம்பிக்கின்றன (1)

திருக்காட்டுப் பள்ளிபாடல் பெற்ற ஸ்தலத்தில் நடந்தது என்ன?: திருக்காட்டுப்பள்ளி (Thirukattupalli), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட அக்னீஸ்வரர் திருக்கோவில் இங்கு உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து தான் காவிரி ஆற்றிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிகிறது. திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியிலிருந்து, தஞ்சாவூர் 30 கி.மீ; திருச்சி 32 கி.மீ; திருவையாறு 17 கி.மீ; பூதலூர் 8 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த பாடல் பெற்ற ஸ்தலத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி, இப்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 47)[1]. இவரின் முதல் மனைவி கனிமொழி. அவரது மகளுக்கு வயது 17. கனிமொழி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்[2]. இதனால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். மகள் லாவண்யா, தஞ்சை அருகிலுள்ள திருக்காட்டுப் பள்ளியில் – தூய இருதய மேல்நிலைப் பள்ளி (Sacred Heart Higher Secondary School) மைக்கேல்பட்டி செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி, 12-ம் வகுப்பு படித்துவந்தார். இம்மாணவி, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருக்காட்டுப் பள்ளி, மைக்கேல்பட்டி ஆனதே கிறிஸ்தவ மதமாற்றத்திற்குச் சான்று: இன்றைய செக்யூலார் மற்றும் நாத்திக-இந்து விரோத ஆட்சியில், தமிழக புராதன இடங்கள், ஊர்கள், கிராமங்கள் முதலியவற்றின் பெயர்க்ள் மாற்றப் படுவதிலிருந்தே, அங்கே எவ்வாறு துலுக்கர் மற்றும் கிருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில், திடீரென்று தஞ்சாவூர், கும்பகோணம், திருநெல்வேலி, கன்யாகுமரி போன்ற இடங்களில் அல்லாப்பேட்டை, மொஹம்மது நகர், அஹமது நகர், பெத்தேல் நகர், மைக்கேல் பட்டி என்றெல்லாம் தோன்றி விட முடியாது. இது, மக்கள் தொகை, ஜனத்தொகை மாற்றம், புவியியல், சரித்திரம் மற்றும் உள்ளூர் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் என்று எல்லாவற்றியும் மாற்றும், மறைக்கும் வேலைகள் ஆகும்[3]. இதற்கு உள்ளூர் அதிகாரிகளும் ஒத்துழைத்துள்ளார்கள் என்று தெரிகிறது[4]. பத்திரப் பதிவுகளில், 200 ஆண்டுகளாக இருந்து வரும் பெயர்களை இன்றும் உபயோகப் படுத்தப் படுகிறது. இல்லையென்றால், மூல்ங்களை அறிய முடியாது, சரிபார்க்கவும் முடியாது. இல்லையென்றால், அவ்வாறேல்லாம் பெயர்களை மாற்றி விட முடியாது. அவை அரசு ஆவணங்களிலும் இடம் பெற முடியாது.

09-01-2022 முதல் 15-01-2022 வரை நடந்தது: தற்போது பிளஸ் 2 படித்து வந்த அவர், ஜன.9-ம் தேதி விடுதியில் இருந்தபோது வாந்தி எடுத்துஉள்ளார்[5]. அப்போது, அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மிஷினரிகள் உள்ளனர்[6]. அந்த சிகிச்சை விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து, மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை மைக்கேல்பட்டி வந்து தன் மகளை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஜன.15-ம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது, மாணவியை பரிசோதித்த மருத்துவர்களிடம், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதால், ஏற்பட்ட மன உளைச்சலால் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸார் அங்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

லாவண்யா 09-01-2022 அன்று பூச்சி மருந்து எடுத்துக் குடித்துவிட்டேன் என்றார்: “இதற்கிடையே மாணவி அளித்த இறுதி வாக்குமூலத்தில், கடந்த ஆண்டுகளாக விடுதியில் தங்கி படித்து வருகிறேன். விடுதி வார்டன் என்னை மட்டும் கணக்கு வழக்குகளை பார்க்கச் சொல்லுவார். இதனால் விடுமுறைக்கு கூட என்னை வீட்டிற்கு அனுப்ப மாட்டார். வீட்டில் இருந்து யார் கேட்டாலும் ஒழுங்காக படிப்பார் என்று சொல்லி விடுவார். உடம்பு சரியில்லை என்றால் கூட என்னை விட்டுவிட மாட்டார். இதனால் விரக்தி அடைந்த நாள் கடந்த 9ஆம் தேதியன்று பூச்சி மருந்து எடுத்துக் குடித்துவிட்டேன்”. இது மருத்துவர்களுக்கு தெரிந்துள்ளது. இதனால் தான், போலீஸாரிடம் புகார் கொடுக்கப் பட்டது. ஒருவேளை, தந்தைக்கும் அதன் தீவிரம் புரிந்திருக்கலாம். சந்தேகமும் எழுந்திருக்கலாம்.

19-01-2022 காலை அன்று லாவண்யா இறந்தார்: இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா கடந்த 19-ந் தேதி மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 20-01-2022 அன்று லாவண்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.  ஆனால் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர்.  தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மாணவி லாவண்யாவின் உடலை பெற பெற்றோர், உறவினர்கள் வருவார்கள் என போலீசார் காத்து இருந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்கி கொள்வோம் என பெற்றோர் கூறியதுடன் உடலை பெற்றுச் செல்ல வரவில்லை. இதனால் பிரேத பரிசோதனை முடிந்து 2 நாட்கள் ஆகியும் உடலை ஒப்படைக்க முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள். எனினும் தொடர்ந்து மாணவியின் பெற்றோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

22-01-2022 அன்று மாணவியின் தந்தை முருகானந்தம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவை சந்தித்து கொடுத்த மனு: மேலும் மாணவியின் தந்தை முருகானந்தம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவை சந்தித்து மனு அளித்தார்[7]. அந்த மனுவில், “எனது மகளை மதம் மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, அவரை திட்டி, அதிகமாக வேலைவாங்கியதால் மன உளைச்சளுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என குறிப்பிடப்பட்டிருந்தது[8]. ஆனால் சிகிச்சையின்போது லாவண்யா அளித்த வாக்குமூலத்தில் மதமாற்றம் குறித்த தகவல் இல்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை. தற்போது லாவண்யாவின் பெற்றோர் அளித்த 2-வது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார்.  இதெல்லாம் முரண்பாடா, செய்திகள் வெளியிடுவதில் குறைபாடா, அல்லது பள்ளி நிர்வாகத்தினர் அழுத்தம் கொண்டு வந்தனரா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] புதியதலைமுறை, தஞ்சையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை: வார்டன் கைதுஉடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம், தமிழ்நாடு, Jnivetha, Published : 20,Jan 2022 05:57 PM.

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/127496/Hostel-Warden-arrested-in-Thanjavur-in-12th-class-student-commits-suicide

[3] Place name Society of India போன்ற அமைப்புகள் இத்தகைய சரித்திர மாற்றங்கள், மறைப்புகள் மற்றும் மோசடிகளை சுட்டிக் காட்டவேண்டும், தடுக்க வேண்டும். ஏனெனில், சொத்துக்களை ஏமாற்றிப் பறிக்கவும், பதிவு செய்யவும், இம்முறைகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. குறிப்பாக கோவில் நிலங்கள் இவ்வாற்று தான் கொள்ளையடிக்கப் பட்டு வருகின்றன.

[4]  வட்டாட்சிய அலுவலகங்களே ஊழலுக்கு பெயர் போனதால், அவர்கள் செய்யும் பதிவுகளில் அத்தகைய மோசடிகள் காணப் படுகின்றன. பலமுறை அத்தகைய செய்திகள் வெளி வந்தாலும் மறைக்கப் படுகின்றன.

[5] தமிழ்.இந்து, தஞ்சாவூர்: விடுதியில் அறைகளை சுத்தம் செய்யக் கூறி திட்டியதாக புகார்; மாணவி தற்கொலையில் பெண் வார்டன் கைது: மதம் மாற கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டி பாஜகவினர் மறியல், செய்திப்பிரிவு, Published : 21 Jan 2022 08:17 AM; Last Updated : 21 Jan 2022 08:17 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/759295-female-warden-arrested.html

[7] தினத்தந்தி, மதம்மாற கட்டாயப்படுத்தியதாக புகார்: தற்கொலை செய்த மாணவிஉடலை வாங்க மறுக்கும் பெற்றோர், பதிவு: ஜனவரி 22,  2022 07:23 AM மாற்றம்: ஜனவரி 22,  2022 07:32 AM.

[8] https://www.dailythanthi.com/Districts/Chennai/2022/01/22072328/Complaint-of-being-forced-to-convert-Student-who-committed.vpf

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.