Posts Tagged ‘சுப்ரமணியன் சுவாமி’

செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளிக்கு போலீஸார், அரசு அதிகாரிகள் ஏன் சலுகைக் காட்டுகின்றனர்? மற்ற பள்ளிகளை விரட்டி-விரட்டி கைது-விசாரணை என்றெல்லாம் நடக்கும் போது, இங்கு ஏன் மெத்தனம்?

ஜூன் 10, 2021

செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளிக்கு போலீஸார், அரசு அதிகாரிகள் ஏன் சலுகைக் காட்டுகின்றனர்? மற்ற பள்ளிகளை விரட்டிவிரட்டி கைதுவிசாரணை என்றெல்லாம் நடக்கும் போது, இங்கு ஏன் மெத்தனம்?

ராஜகோபாலனுக்கும், எபி. ஜார்ஜுக்கும் என்ன வித்தியாசம்?: “பாலியல் புகாருக்கு ஆளான செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆசிரியர் குறித்த விசாரணைக்குப் பள்ளி நிர்வாகிகள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை,” என்று ஊடகங்கள் குறிப்பிட்டு செய்தியை முடித்துக் கொண்டுள்ளன. ராஜகோபாலனை கவனித்த விதத்தில், இங்கு எபி. ஜார்ஜ் கவனிக்கப் படவில்லை. தொலைக் காட்சிகளும் கண்டுகொள்ளவில்லை, விவாதங்கள் நடத்தவில்லை.  பாலியல் விவகாரத்தில், இப்பள்ளி ஆசிரியரின் மீதும் புகார் கொடுக்கப் பட்டுள்ளது[1]. ஆனால், அந்நிர்வாகம், அசைவதாகத் தெரியவில்லை. மூன்று பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தாலும், இப்பள்ளி சார்பில் யாரும் ஆஜராக வில்லை[2]. கைதும் செய்யப் படவில்லை. இதனையடுத்து, மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்துக்குச் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

07-06-2021 அன்று செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை: முன்னதாக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளியின் மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜே.எபி.தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.ஶ்ரீதர் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். மேலும், 2017-ம் ஆண்டு நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களை ஆணையத்திடம் வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் 7-ம் தேதி (திங்கள் அன்று) ஆஜராகி விளக்கமளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், பள்ளி நிர்வாகி பிரான்சிஸ் நேற்று ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை[3]. மேலும், உடற்கல்வி ஆசிரியர் தாஸ் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆணையம் முன்பாக ஆஜராகி, புகார் குறித்து விளக்கமளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்[4].

சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜரானார்: மீண்டும், பள்ளி நிர்வாகிகளிடம் வரும் 15ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது[5]. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜராகி, மாணவிகளிடம் இருந்த ஆவணங்களை ஆணையத்தில் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதர், “பள்ளி நிர்வாகம் மற்றும் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ஆகியோருக்கு ஆணையத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி பள்ளி நிர்வாகிகள், வழக்கறிஞரை அனுப்பி வைத்திருந்தனர்[6]. பள்ளியில் குற்றங்கள் நடந்ததற்கு என்னிடம் இருந்த ஏழு ஆதாரங்களை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளேன். பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அனுப்பிய விளக்க கடிதத்தில், ’பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளீர்கள்என கூறியுள்ளது. அதற்காக அவரின் சம்பளத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாய்யை பிடித்தம் செய்துள்ளது. இது குறித்து அவரின் பணிப்பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களையும் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளேன்[7]. பள்ளியின் சார்பில், மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆஜராக முடியவில்லை,” என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறது தினமலர்[8].. 

கமல் ஹஸன் தெரிவித்த கருத்து[9]: சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பிஎஸ்பிபி பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகார் குறித்து இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்[10]. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாதரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்வை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது . தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் திகழ்ந்த நிகழும் பாலியல் துன்பறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விராரிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வது[11]: “இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தமகாநதிஇன்றும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்வைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நமது பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரி பார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி துணையாக இருக்கவேண்டும். இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச்சமூகமாக நாம் அனைவரும் போராடி நீதியை நிலை நாட்ட வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்[12].

ஜாதியம்மதம் என்று சொல்லி செக்யூலரிஸமாக்கப் படும் பாலியல் விவகாரங்கள்: ஊடகங்கள் இவற்றை செக்யூலரிஸமாக்க முயற்சிக்கின்றன, அதாவது, ஜாதியம், மதம் என்று இரண்டிலும் இணைத்து, அதன் மூலம் திரிபு விளக்கம் கொடுத்து திசைத் திருப்பப் பார்க்கின்றனர். சிக்கியுள்ள எல்லா பள்ளிகளும் சாதி அடிப்படையிலானது, அல்லது மத அடிப்படையிலான பள்ளிகளாகவே இருக்கிறது[13]. செயின்ட் ஜார்ஜ் போன்றவை மத அடிப்படையிலான பள்ளிகளாகவும், பிஎஸ்பிபி போன்ற பள்ளிகள் சாதி அடிப்படையிலானதாகவும் இருக்கிறது[14]. இன்று வரையில், இதனை, ஜாதி ரீதியில், குறிப்பாக “பிராமண எதிர்ப்பு” முறையில் கடுமையாக, சாடி விமர்சங்கள், சமூக மற்றும் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. 09-06-2021 அன்று “டைம்ஸ்.நௌ” தொலைக்காட்சி பேட்டியில், முதலில் பேசிய பெண்-வழக்கறிஞர் குறிப்பிட்ட பள்ளியை விமர்சித்தேப் பேசி முடித்தார். பிறகு சின்மயி,  “செக்யூலரிஸ” முறையில் விமர்சித்தாலு,ம், அரசியலாக்குவதைக் கண்டித்தார். வைரமுத்துவை பெயர் சொல்லியே தாக்கினார். அவர் எவ்வாறு  பெரிய ஆட்களால் காப்பாற்றப் பட்டு வருகிறார் என்று எடுத்துக் காட்டினார். இதனால், கடையாக பேசிய சுப்ரமணியன் சுவாமி எவ்வாறு லயோலா கல்லூரி ஏழு பாலியல் புகார்களை மூடி மறைக்கப் பார்க்கிறது, கிருத்துவ சதி இதன் பின்னணியில் இருக்கிறது என்று கனிமொழியையம் குறிப்பிட்டு பேசினார். நேரியாளர் திடீரென்று பேட்டியை முடித்துக் கொண்டதிலிருந்து, மற்ற கருத்துகள், உண்மைகள் வெளி வர ஊடகங்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

10-06-2021


[1] பாலிமர் செய்தி, பள்ளியல் பாலியல் தொந்தரவு: 900 முன்னாள் மாணவர்கள் கூட்டாக புகார், மே.30, 2021 06:06:19:18 PM. https://www.polimernews.com/dnews/147236

[2] https://www.polimernews.com/dnews/147236

[3] தமிழ்.இந்து, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகிகள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை, Published : 08 Jun 2021 03:13 am; Updated : 08 Jun 2021 06:35 am..

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/679722-st-george-school-teacher.html

[5] ஈநாடு.டிவி.செய்தி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி மீதான பாலியல் புகாரின் விசாரணை ஒத்திவைப்பு, Published on: Jun 7, 2021, 4:01 PM IST.

[6] தினமலர், பள்ளி நிர்வாகிகளுக்கு மீண்டும், ‘சம்மன், Added : ஜூன் 08, 2021  10:07

[7] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/scpcr-postponed-investigation-of-sexual-abuse-allegations-on-st-george-school/tamil-nadu20210607160138357?fbclid=IwAR0BeGRkB498q_4hAg7oXF4shfqhv48iyQImxbH0–kXSwE-KNU4wE0Gilc

[8]  https://www.dinamalar.com/news_detail.asp?id=2780932

[9] ஏசியா.நெட்.நியூஸ், தப்பு செஞ்சவங்க எந்த ஜாதியாக இருந்தாலும் தண்டிக்கணும்இரண்டு பெண்களின் தகப்பனாக பொங்கி எழுந்த கமல்…!, Kanimozhi Pannerselvam, Chennai, First Published May 26, 2021, 3:08 PM IST.

[10] https://tamil.asianetnews.com/politics/makkal-needhi-maiam-leader-kamal-hassan-condemnation-to-psbb-sexual-harassment-complaint-qtpk4q

[11] மாலைமலர், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை குழு அமைக்க வேண்டும்தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை, பதிவு: மே 27, 2021 10:05 IST.

[12] https://www.maalaimalar.com/news/district/2021/05/27100546/2675385/Tamil-News-Kamal-Haasan-request-to-TN-government-to.vpf

[13] ஏசியாவில், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் குழந்தை திருமணங்கள்நாம் மறந்து கடந்து செல்கிறோம்! நினைவில் கொள்ளுங்கள், By Abisha Bovas • 03/06/2021 at 11:03AM

[14] https://www.asiaville.in/article/women-and-child-against-issue-in-recent-time-detail-interview-with-shalin-maria-lawrence-71708

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் சுப்ரமணியன் சாமியின் பங்கு [3]

மார்ச் 18, 2019

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் சுப்ரமணியன் சாமியின் பங்கு [3]

Grail myth- books-Subramanian swami- 4

காஷ்மீரில் ஏன் ஏசு கட்டுக் கதைகளை வளர்க்கிறார்கள்?: காஷ்மீர் மக்களுக்கு அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்தால் தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால், 1980களில் ஆரம்பித்து வைத்த தீவிரவாதத்தால், அம்மாநிலமே அழிந்து வருகிறது. சரித்திர ரீதியில் பெயரில் பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருந்தாலும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் அவ்விடங்கள் அழிப்பிற்கு உட்பட்டுள்ளன. கோவில்கள் முழுக்கவே இடித்து தள்ளப்பட்டுள்ளன. ரோசா பெல் சொல்லப்படும் கூடிய ஒரு மசூதியானது பிரபலமாக இருந்து வருகிறது. ஏனெனில் இங்கு இயேசு இறந்த பின்னர் அவரது உடல் புதைக்கப் பட்டு அதன்மீது அந்த சமாதி கட்டப்பட்டதாக ஒரு கருத்து இருந்து வருகிறது. இதற்கு சரித்திர ரீதியில் எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தாலும் உள்ளூர் வாசிகள் இக்கதையை பிரபலப்படுத்த விரும்புகின்றனர்.

Mirza Ghulam Ahmad - Jesus in Kashmir

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய கட்டுக்கதைகளை நம்பிக்கொண்டு அல்லது வேண்டுமென்றே அவர்களுக்கே தெரிந்த சில திட்டங்களுடன், அதற்காக இத்தகைய ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை ஆராய்ச்சி என்ற பெயரில் வந்து, புகைப்படங்கள் பிடித்து, உள்ளூர்வாசிகள் சிலருடன் பேட்டி எடுத்து, ஏதோ புதியதாக கண்டு பிடித்ததைப் போல புத்தகங்களை வெளியிட்டு வருகின்றனர்[1]. ஒரு இஸ்லாமிய அஹ்மதியா பிரிவின் தலைவர் தான் இந்த கட்டுக்கதைக்கு காரணகர்த்தாவாக தெரிகிறது. உண்மையில் எந்த கிறிஸ்துவ விசுவாசிகள் இத்தகைய கட்டுக்கதையை நம்புவதில்லை. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மேரிமெக்டலின் உடன் தப்பி வந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு இங்கு தான் பிறந்து சமாதி ஆனார் என்பது அவர்களுடைய அடிப்படை நம்பிக்கைகளுக்கு அறவே ஒவ்வாதது, அது ஏற்றுக்கொள்ள முடியாதது. இருப்பினும் ஏன் இத்தகைய போதை பொருட்கள் மற்றும் சரித்திர ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை பரப்பப்படுகின்றன என்பது மிகவும் கவனமாக நோக்கத்தக்கது.Grail myth- books-Subramanian swami- 1

2006ல் குமுதம் பத்திரிக்கையில் வந்த கட்டுக்கதை[2]: ஏற்கெனவே ஆங்கில நாளிதழ்களில் வந்த விவரங்களை “குமுதம்” வெளியிட்டது. ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி என்றாலே அதிர்ச்சி, பரபரப்புச் செய்திகள்தான். அந்த வகையில், சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த அவர், ‘‘ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு அங்கேயே இறந்துவிடவில்லை. உயிர் தப்பி காஷ்மீருக்கு வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைத் தழுவி எண்பது வயது வரை வாழ்ந்து, அதன் பிறகே இறந்திருக்கிறார். வரலாற்றில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்காக ஒரு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி, ஓர் அறிஞர்கள் ‘குழு’வை வைத்து ஆராய உள்ளேன்’’ என்ற அதிர்ச்சிக் குண்டை வீசியிருக்கிறார். ‘தி டாவின்சி கோட்’ பட சர்ச்சை ஓய்வதற்குள் இப்படியரு விஷயத்தைச் சொல்லியிருக்கும் டாக்டர் சுவாமியைச் சந்தித்தோம். ‘‘கடந்த ஆறாம் தேதி எங்கள் கட்சிப் பொதுக் கூட்டத்திற்காக, காஷ்மீர் சென்றிருந்தேன். பேசிக்கொண்டிருந்த போது, ‘டாவின்சி கோட்’ பற்றி விவாதம் வந்தது. ‘ஏசுவுக்கு மனைவி உண்டா? இல்லையா? என்ற கலந்துரையாடலின்போது , ஒருவர் சொன்ன தகவல் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அதாவது, ‘காஷ்மீரில் ஏசு அவரது மனைவி மற்றும் மோஸஸின் கல்லறை இன்றும் இருக்கிறது. அதைச் சிலர் பராமரித்து வருகிறார்கள்’ என்றார்[3].

Grail myth- books-Subramanian swami- 2

நிக்கோலஸ் நோடோவிட்ச் கட்டுக் கதையை மறுபடி அவிழ்த்து விட்டதேன்?[4]: உடனே நான் அங்கேயிருந்த ஓர் அரசு உயரதிகாரியிடம் பேசினேன். ‘‘லடாக் பகுதியிலுள்ள ‘லே’ என்ற இடத்திற்கு முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில், ஹெமிஸ் கோம்பா  என்ற புத்த ஆசிரமம் உள்ளது. அங்கே தான் ஜீஸஸ் ஆரம்பக்காலத்தில் படித்திருக்கின்றார். யோகா, தியானம் உள்பட பலவும் கற்றுத் தேறியிருக்கின்றார். அதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன’’ என்று சொன்னார். பைபிளிலேயே, ‘ஜீஸஸ் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமில் பிறந்தார். யூத மன்னர்கள் மற்றும் மத குருமார்களுக்குப் பயந்து, பிறந்தவுடனேயே எகிப்துக்குத் தப்பி ஓடினார்கள். பிறகு பத்து வருடங்கள் கழித்துத்தான் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். பத்து வயது முதல் பதினான்கு வயதுவரை ஜீஸஸ் அங்கேயே இருந்தார்’ என்றெல்லாம் உள்ளது. பிறகு, அந்தப் பதினான்கு வயதிலிருந்து அடுத்த ஏழு ஆண்டுகள் அவர் எங்கே சென்றார் என்பது கூறப்படவில்லை. அது மர்மமாக உள்ளது. ஏழாண்டுகள் கழித்து இருபத்தொராவது வயதில்தான் மீண்டும் ஜெருசலேம் செல்கிறார். இடைப்பட்ட ஏழாண்டுகளில் அவர் எங்கே இருந்தார் என்பதுதான் கேள்வி. அந்தச் சமயத்தில்தான் ஏசு இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்கு வந்து பௌத்த மத ஆசிரமத்தில் பலவற்றையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்னொரு விஷயமும் உள்ளது. ஏசு பிறந்தவுடன் எகிப்துக்குத் தப்பிச் சென்றார்கள் இல்லையா? பத்து ஆண்டுகாலம் அங்கே இருந்த போது, எகிப்திலும் பௌத்த ஆசிரமத்தில் சேர்ந்து கற்றிருக்கிறார்.

Grail myth- books-Subramanian swami- 3

சாமி கட்டுக்கதையை பரப்புகிறாரா, மறுக்கிறாரா?[5]: ஏசு சொன்ன போதனைகளைக் கவனித்தால், அது இந்து, புத்த மதத்தோடு ஒன்றி வருவதைக் காண முடியும். இன்னொன்றையும் கூறலாம் ஏசுவுக்கு முன்பிருந்தவர்களோ அல்லது அவருக்குப் பின்பிருந்த சீடர்களோ அவரைப்போன்று ‘அதிசயங்களை’ செய்யவில்லை. குருடனுக்குப் பார்வையளித்தது, ஊனமுற்றவரை நடக்க வைத்தது, இறந்தவரை உயிர்ப்பித்ததென்று ஏசுதான் செய்தார். இந்த ‘சித்து’ வேலைகளும் இந்தியத் தன்மை கொண்டவையே. அதுமட்டுமல்ல, பைபிளில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு உள்ளது. புதிய ஏற்பாடுதான் ஏசுவின் போதனையைப் பற்றிக் கூறுகிறது. அது கூட ஏசு எழுதியது இல்லை. அவருக்குப் பின் வந்த சீடர் புனித செயிண்ட் பால் என்பவரால்தான் எழுதப்பட்டது. ஏசு சொன்னதாக பால் எழுதியது, எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும்?’’ மாறுபாடுகள் இருக்கலாம் அல்லவா?’’ என்று விளக்கங்களை முன் வைத்தார் சுவாமி[6].

Grail myth- books-1

பவிஷ்ய புராணம் ஒரு மோசடிபோலி புராணம்[7]: மேலும், ‘‘நமது பழைமையான புராணங்களில் ஒன்றானபவிஷியா மகாபுராணம்என்ற நூலில் கூட, சில சுலோகங்கள் ஏசு போன்ற ஒருவர் பற்றியும் கூறுகின்றன. அதாவது காஷ்மீர் பகுதி மன்னர் ஒருவர், அவரிடம்நீ யார்?’ என்று கேட்பதாக வருகிறது. அதற்கு அவர், ‘நான் கடவுளின் மகன். கன்னிப் பெண்ணுக்குப் பிறந்தவன். ஆழ்ந்த இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தலைவன். இடைவிடாத உண்மையைத் தேடுபவன் என்று கூறுவார்கள்என்றும், ‘என் பெயர் ஈஸா_மாஸிஎன்றும் கூறியிருப்பதாக உள்ளது.

பழங்கால காஷ்மீர் மன்னர்களான சாலிவாஹனா மற்றும் கனிஷ்கர் ஆகியோரின் அரசுப் பதிவேடுகள் கூட, ஏசு இங்கே இருந்ததைக் கூறுகின்றன. இப்படித் தெரியவரும் சில ஆதாரங்கள்படி பார்த்தால், ஏசு, காஷ்மீரில்கனியார்என்ற இடத்தில் வாழ்ந்து இறந்து, அடக்கம் செய்யப்பட்டார் எனத் தெரிய வருகிறது.

சுப்ரமணியன் சுவாமி சாமி வேண்டுமென்றே இக்கட்டுக் கதையைக் கிளப்பி பிரபலம் தேடுகிறார் என்றேதெரிந்தது. மேலும், டா வின்சி கோட் கதையைக் கட்டுப் படுத்த, அவ்வாறு கூறியிருக்கலாம், 300 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு தெரியாமலா போயிற்று?

இது ஆதாரபூர்வமானதல்ல. ஆனால், அதற்காக விட்டுவிடாமல், இதில் உள்ள உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும். விட்டுவிடக் கூடாது. ஒரு நிபுணர்கள் குழு மூலம் இவற்றை ஆராய வேண்டும்.

ஏசு கடைசிக் கட்டத்தில் சிலுவையில் அறையப்பட்டு மரணத்தைத் தழுவிய போது, அவரது உடலில் சுற்றியிருந்த ரத்தக்கறை படிந்த ஆடைகள் இன்னும் இத்தாலியில் உள்ளடூரின்சர்ச்சில் இருக்கிறது என்கின்றனர். அதுதான் உண்மை என்றால், அதை டி.என்.. சோதனைக்கு உட்படுத்த வேண்டும். காஷ்மீர்லேபகுதியில் உள்ள ஏசுவின் மனைவி சமாதி என்று சொல்லப்படுவதையும் தோண்டி எடுத்து ஆய்வு செய்து, டி.என்.. சோதனைக்கு உட்படுத்த வேண்டும்

இது ஆதாரபூர்வமானதல்ல. ஆனால், அதற்காக விட்டுவிடாமல், இதில் உள்ள உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும். விட்டுவிடக் கூடாது. ஒரு நிபுணர்கள் குழு மூலம் இவற்றை ஆராய வேண்டும்.,” என்றெல்லாம் சொல்வதிலிருந்தே, எதிர்மறை பிரச்சாரம் மூலம் கிரூத்துவர்களுக்கு உதவும் போக்கும் வெளிப்படுகிறது.

அதே போன்று சரியான வரலாற்று ஆய்வுகளையும் நடத்த வேண்டும். உண்மையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம்’’ என்று முடித்தார் சுவாமி[8].

© வேதபிரகாஷ்

17-03-2019

Grail myth- books-2

[1] Prophet, Elizabeth Clare. The Lost Years of Jesus: On the Discoveries of Notovitch, Abhedananda, Roerich, and Caspari. Summit University Press, 1984.

[2] THE ASIAN AGE. Tracing the ‘lost’ Israeli roots of Kashmiris, | YUSUF JAMEEL Published : Oct 30, 2017, 6:52 am IST Updated : Oct 30, 2017, 6:54 am IST.

[3] http://www.asianage.com/india/all-india/301017/tracing-the-lost-israeli-roots-of-kashmiris.html

[4] Nicholas Notovitch, The unknown life of Jesus Christ. Vol. 4. Health Research Books, 1996.

[5] ZeeNews, New interest in j&k ‘Jesus grave’: The Asian Age, Updated:Jun 12, 2006, 00:00 AM IST

[6] https://zeenews.india.com/home/new-interest-in-jandk-jesus-grave-the-asian-age_301657.html

[7] Sam Miller,  Tourists flock to ‘Jesus’s tomb’ in Kashmir, Srinagar, Page last updated at 12:08 GMT, Saturday, 27 March 2010.

[8] http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/8587838.stm