சி.எஸ்.ஐ / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆனதும், ஜாதியப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதும்! –மதமா, ஜாதியமா, இறையியலா, எது?

சி.எஸ்.ஐ / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆனதும் ஜாதியப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதும்! – மதமா, ஜாதியமா, இறையியலா, எது?

இறையியல் ரீதியாக கிருத்துவ மதமாற்றம் தோற்றது: கிருத்துவ மிஷினரிகள் இந்தியர்களை / இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற போக்கு, கொள்கை மற்றும் சமூக அடக்குமுறை போர்ச்சுகீசியர் காலத்திலேயே கொடியமுறையில் பின்பற்றப் பட்டு வந்தது. சுதந்திரம் பெற்றப் பிறகு, கோடிக் கணக்கில் இருக்கும் சொத்துக்களை அனுபவிக்க, கத்தோலிக்கம் மற்றும் கத்தோலிக்கர் அல்லாத என்ற பிரிவுகளாகப் பிரிந்து, ஆளுமையை, அதிகாரத்தை, கட்டுப்பாடுகளை தங்களுக்குள் தக்க வைத்துக் கொண்டனர். பெரும்பாலும், வெள்ளைக்காரர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள், உயர்ஜாதி-கிருத்துவர்கள் என்று தான் பெரிய பதவிகளில் தங்களை நிலைநிறுத்துக் கொண்டு, அனுபவித்து வந்தனர். எஸ்.சி, எஸ்.டி போன்றோரை ஏமாற்றி மதம் மாற்றினாலும், மறுபடியும், சர்ச்சிற்குள் இருக்கும் இறையியல் சித்தாந்த ரீதியில், இருக்க வேண்டிய கட்டுப் பாட்டை அறிந்து-புரிந்து கொண்டனர். “விடுதலை இறையியல்” எல்லாம் பொய்த்துப் போய், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் முடிந்தன. இதனால், சர்ச்சில் இருக்கும் அத்தகைய இறையியல்-ஜாதியினரை எதிர்க்க ஆரம்பித்தனர்.  கத்தோலிக்கக் கிருத்துவ ஆதிக்கத்தினர் மட்டும் ஆதிக்கம், பணம், அதிகாரம் முதலியவற்றை ஐத்துக் கொண்டு, இந்திய ஜாதியம், வர்ணாஷ்ரமம் என்றெல்லாம் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தது. ஆனால், உண்மை வெளிவந்தது. சூசை தீர்ப்புக் கூட அவர்களது முகமூடியைக் கிழித்தது. இருப்பினும், அம்பேத்கரின் ஆணையினையே எதிர்க்க முற்பட்டனர்.

பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் திருத்தம் கொண்டு வர முயற்சி: பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் உள்ள பிரிவை மாற்ற வேண்டும் என்று போலித் தனமாக போராட்டங்களை நடத்தி, திசைத் திருப்பப் பார்த்தது. ஆனால், அது இந்துக்களுக்கு என்பது சட்டரீதியாக எல்லோருக்கும் தெரியும். இதனால், எஸ்.சி மற்றும் மதம் மாறிய எஸ்.சி-கிருத்துவர்களிடையே துவேசம், எதிர்ப்பு, மோதல்கள் கூட ஏற்பட்டன.  இருப்பினும், ஆகஸ்ட் 10 அன்றை கருப்புநாள் என்று கொண்டாடுவோம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். இதனை, பொதுவாக யாரும் கண்டுகொள்வதில்லை என்றாலும், தங்களது அரசியல், பலம், பணம், அனைத்துலக சக்தி முதலியவற்றின் மூலம், இந்திய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன.. பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் திருத்தம் கொண்டு 2/3 எம்.பிக்களின் ஆதரவு தேவை. ஒரு முறை, பிஜேபி எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்து, கையெழுத்துப் போட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.  எஸ்ரா சற்குணத்திற்குப் பிறகு, இன்னொரு எஸ்.சி கிருத்துவர் பிஷப் ஆவது, அடக்கித் தான் வாசிக்கப் பட்டுள்ளது.

சி.எஸ். / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆகியுள்ளார்: தென்னிந்திய திருச்சபையின் அங்கமாக மதுரை- இராமநாதபுரம் மண்டல 7வது பேராயராக பாதிரியார் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் 17-07-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டார்[1]. மதுரை-ராமநாதபுரம் திருமண்டல பேராயா் ஜோசப்பின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவா் அண்மையில் ஓய்வு பெற்றார்[2]. இதைத்தொடா்ந்து புதிய பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் []Jeyasingh Prince Prabhakaran தோ்ந்தெடுக்கப்பட்டார்.  இவ்விழாவில், சிறப்புத் திருப்பலி ஆராதனையைத் தொடா்ந்து மதுரை-ராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருநிலைப்படுத்தப்பட்டார்[3]. தென்னிந்திய திருச்சபையின் தலைமைப் பேராயா் ஏ.தா்மராஜ் ரசலம் புதிய பேராயருக்கு அருட்பொழிவு செய்து திருநிலைப்படுத்தினார்[4]. முன்னதாக மதுரை நரிமேடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து தென்னிந்திய திருச்சபையின் மதுரை இராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் முறைப்படி ஆராதனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து திருச்சபையின் பேராயர்கள் அவருக்கு வெள்ளி செங்கோல் மற்றும் மோதிரத்தை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பிற மாநிலங்களை சேர்ந்த 11 பேராயர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்சி / தலித் பிரச்சினை கிருத்துவமத உள்விவகாரம் ஆகிவிட்டது: வின்சென்ட் மனோஹரன் ஒரு தலித் பிஷப்பாக பதவி ஏற்பதை பாராட்டி, அதே நேரத்தில், சர்ச்சிற்குள் இருக்கும் ஜாதீயத்தை ஒழிக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[5]. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இவ்விசயத்தில் போராட வேண்டும் என்று வற்புருத்தி பேசினார்[6]. ஏற்கெனவே மற்ற சர்ச்சுகளிலும் இப்பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது. மதம் மாறி எஸ்சி அந்தஸ்து இழப்பதால், பல கிருத்துவர்கள் அதம் மாறியும், சலுகைக்காக, இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அடிக்கடி அவர்களுக்குள் பிரச்சினை ஏர்ப்ட்டு மோதல்களில் முடிகின்றன. கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், ஏற்கெனவே எண்ணிக்கை ரீதியில் சலுகைப் பெற்று வருவதால், “உள்-ஒதுக்கீடு” கூட தேவையில்லை என்று அறிவித்துள்ளதை ஞாபகத்தில் கொள்ளலாம். எனவே, இந்துக்களாக இருந்தே எஸ்சி சலுகைகளை அனுபவிக்கலாம், சமூகப் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம் என்ற கருத்து கூட வலுப்பட்டு வருகிறது.

சர்ச்சிற்குள் இருக்கும் ஜாதியப் பிரச்சினைமே 2022: தலித் கிறிஸ்தவர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் மருத்துவர் மேரிஜான் தலைமையில் மே 15, 2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 18 மறை மாவட்டத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இயக்கத்தைச் சார்ந்த பல்வேறு வளர்ச்சி நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநில தலைவர் டாக்டர் மேரிஜான் கூறியதாவது[7]:- “தலித் கிறிஸ்தவர்கள் பிரச்சனை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக திருச்சபையில் இந்த இயக்கம் சமத்துவம் சம உரிமை பெற போராடிக் கொண்டிருக்கிறது. திருச்சபை அதிகாரிகள் இதுவரை தீர்வு காணவில்லை. இந்திய ஆயர் பேரவை, இந்திய கத்தோலிக்க பேரவையும் அறிவித்த கொள்கைப்படி தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், உயர்பதவிகளில், ஆயர் பதவிகளில் 64% வழங்காமல் இன்றும் ஏமாற்றி வருகின்றனர். சமீபத்தில் தலித் கிறிஸ்தவர்கள் இதுவரை யாரையும் நியமிக்கவில்லை அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். தற்போது கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மன்ற மாவட்டத்தில் காலியாக உள்ள ஆயர் பதவிக்கு தலித் ஆயிரை நியமனம் செய்யவேண்டும், தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் அரசியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது,” இவ்வாறு கூறினார்[8].

மதமா, ஜாதியமா, இறையியலா, எது?: இந்நிலையில் தான், ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருமவளவனை ஆதரித்துப் பேசியதை வைத்து, “குமுதம் ரிப்போர்ட்டர்”  இக்கதையினை உருட்டியுள்ளது[9]. கிருத்துவ மதத்தில் மாறியும் சமத்துவம் ஏற்படவில்லை என்றால், அது அம்மதத்தின் பிரச்சினை ஆகிறது. ஏனெனில், பைபிளின் படி சமத்துவம் கிடையாது, எல்லோரும் ஒரே மாதிரி கிடையாது. மரம் வெட்டுகிறவன், மாம் வெட்ட வேண்டும்; தண்ணீர் இழுத்த்க் கொட்டுகிறவன், அந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன………. ஆரம்பத்திலிருந்தே, கிருத்துவத்தில் வேறுபாடுகள், சமூகக் கட்டமைப்புகள், இந்திய-ஜாதியத்தை விட இறுக்கமாக கட்டமைக்கப் பட்டுள்ளன. இதனை உலகெங்கும், எல்லா கண்டங்களிலும் பார்க்கலாம். வெள்ளையர் மற்றவர்களை அல வழிகளில் அடக்கி ஆண்டுதான், வருகிறார்கள். கருப்பினத்தவர்கள் தங்களது உழைப்பினை கடினமான காரியங்களில் காட்டித்தான் முன்னேறியுள்ளனர், பிரபலமாகியுள்ளனர். தங்களது, சமூக நிலை அல்லது சலுகை வைத்து முன்னேறி விடவில்லை. இன்று ஐ.டி-தொழிற்நுட்பம் என்றெல்லாம் பார்த்தாலும், வெள்ளையர் அல்லாதவர்கள் முதலாளிகளாக இருப்பவர் சிலரே. எனவே, இந்திய, அதிலும், தமிழகத்து நிலையில், இப்பிரச்சினையை திசைத் திருப்ப வேண்டிய அவசியம் இல்லை. சமூக முன்னேற்றத்திற்கு எது தேவை என்பதை அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஜாதிதான், எஸ்சி-அந்தஸ்து தான், இல்லை மதம் தான் என்றால், அவ்வாறே நேர்மையாக நம்பிக் கொண்டு இருக்கலாம். கடவுளை, முன்னோர்களை, பெற்றோர்களை, சொந்தக்காரர்களை, சமூகத்தினரை ஏமாற்ற வேண்டாம்.

© வேதபிரகாஷ்

19-08-2022


[1] டாப்.நியூஸ்.தமிழ், மதுரை ராமநாதபுரம் தென்னிந்திய திருச்சபையின் ஏழாவது பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார், By admin, July 18, 2022

[2] https://www.topnewsthamizh.com/jayasinghe-prince-prabhakaran-assumed-office-today-as-the-seventh-archbishop-of-madurai-ramanathapuram-church-of-south-india/

[3] தினமணி, தென்னிந்திய திருச்சபையின் மதுரைராமநாதபுரம் திருமண்டல பேராயா் பதவியேற்பு, By DIN  |   Published On : 17th July 2022 11:08 PM  |   Last Updated : 17th July 2022 11:08 PM. 

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/jul/17/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3881887.html

[5] First Dalit Bishop is appointed for Madurai – Ramnad, CSI Diocese, Tamilnadu< By Dalit Christian Digest -July 18, 2022.

[6] The National Dalit Christian Watch (NDCW), a National Platform which is committed to cleanse the Church and Society by annihilating caste and its inhuman oppressive dynamics mainly to ensure equality, justice and rightful space for Dalit Christians within Church and its Institutions, looks forward to the serious interventions by the newly appointed Bishop, who held several positions in this Diocese already, not only to perform his pastoral services but also through his prophetic voice and deeds to uphold justice and peace both within Church and Society, especially for the dignified life and rightful space of the Dalit Christians.

[7] சமயம்.தமிழ், ஆயர் நியமனத்தில் ஏமாற்றப்படும் தலித் கிறிஸ்துவர்கள்பகீர் தகவல்!, Govindaraji Rj | Samayam Tami, Updated: 16 May 2022, 5:21 pm

[8] https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/dalit-christian-liberation-movement-slams-for-the-bishop-appointment-in-trichy/articleshow/91572892.cms

[9]  டி. பாலமுருகன், சர்ச்சையில் மதுரை பேராயர்மதம் கசக்குது, சலுகை இனிக்கிதா?, குமுதம் ரிப்போர்ட்டர், 19-08-2022, பக்கங்கள்.14-15.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.