Posts Tagged ‘இறப்பு’

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

மே 18, 2023

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

கத்தோலிக்கப் பையன் ஹிந்து பெண்ணை திருமணம் செய்ததை கத்தோலிக்கச் சர்ச் ஏற்ருக் கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே  கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது.  இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த  நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].  

கத்தோலிக்க போராளிகள் பெண்னியப் போராளிகள் வாய் திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி உடலை புதைக்க மறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு  முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர். 

தொடரும் மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது.  மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

போலீசார் சமரசத்திற்குப் பிறகு உடல் புதைக்கப் பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?

கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன,  பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2023


[1] இ.டிவி.பாரத், மதம் மாறி திருமணம் செய்த மகன்தந்தையின் சடலத்தை புதைக்க காலில் விழக் கூறிய ஊர்மக்கள், May 17, 2023, 07:09 PM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/christians-refused-to-bury-father-dead-body-since-his-son-married-inter-religious-at-theni/tamil-nadu20230517193953468468449

[3] மீடியான்.நியூஸ், ஹிந்து பெண்ணுடன் காதல் திருமணம்இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்து அராஜகம்!, Karthikeyan, Mediyaan News, 18 மே 2023 11:07 AM.

[4] https://mediyaan.com/theni-christian-youth-love-marriage-hindu-girl-objection-burial-dead-body/

[5] ஜீ.நியூஸ், தேனி: மகன் மதம் மாறியதால் தந்தையின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கல்லறை பொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-christians-refused-to-bury-dead-body-since-his-son-changed-his-religion-444804

[7] தினத்தந்தி, காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்..” இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்புசர்ச் விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம், By தந்தி டிவி, 18 மே 2023 8:07 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/if-you-fall-on-our-feet-we-will-allow-to-bury-objection-to-burial-of-the-dead-186876

[9] தினமாலை, தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!, By MALA RAJ Thu, 18 May 2023

[10] https://www.dinamaalai.com/news/the-son-who-converted-and-married-monsters-who-fell-on-his/cid10956003.htm

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

நவம்பர் 11, 2022

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

இந்து குடும்பம் மதம் மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5].  சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6].  போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.

பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8].  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர்.  இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.

உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.

மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].

2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12].  இங்கும், அது பொறுந்தும்..

© வேதபிரகாஷ்

11-11-2022


[1] மாலைமலர், இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர , Byமாலை மலர்11 நவம்பர் 2022 8:01 AM.

[2] https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-search-youth-for-harassment-case-535220?infinitescroll=1

[3] தினத்தந்தி, இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர், தினத்தந்தி நவம்பர் 11, 1:29 am.

[4] https://www.dailythanthi.com/News/State/the-doctors-family-was-with-the-dead-womans-body-for-2-days-834297

[5] விகடன், மதுரை: உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!, செ.சல்மான் பாரிஸ், Published: 11-11-2022- Today at 10 AM; Updated: Today at 10 AM

[6] https://www.vikatan.com/news/tamilnadu/family-members-kept-body-for-three-days-hoping-that-she-will-come-back-in-prayers

[7] பாலிமர் செய்தி, இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்…! மதுரையில் சம்பவம், நவம்பர்.11, 2022 06:28:51 AM; https://www.polimernews.com/dnews/191621

[8] https://www.polimernews.com/dnews/191621

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!, By Rajkumar R, Published: November 11 2022, 12:07 [IST].

[10] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/the-husband-prayed-for-3-days-that-the-dead-woman-would-come-back-to-life-484738.html

[11] வேதபிரகாஷ், இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?, ஜனவரி 1, 2021.

[12] https://christianityindia.wordpress.com/2021/01/01/would-the-dead-raise-again-christians-keeping-dead-bodies-tamilnadu-case/

இறந்த தாய் உயிர்த்தெழுவாள் என்று குழந்தைகளை நம்ப வைத்து, பாதித்து, ஒரு இந்து-குடும்பத்தைக் கெடுத்து, சீரழித்த ஆன்டர்சன் பாதிரி!

ஜனவரி 4, 2021

இறந்த தாய் உயிர்த்தெழுவாள் என்று குழந்தைகளை நம்ப வைத்து, பாதித்து, ஒரு இந்து-குடும்பத்தைக் கெடுத்து, சீரழித்த ஆன்டர்சன் பாதிரி!

மனைவி மதம் மாறியதால், பிரிந்து போன கணவர்: திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரசரி காலனியில் வசித்து வந்தவர் அன்னை இந்திரா (வயது 38). இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கணவர் பால்ராஜ் – இவர்களுக்கு ரட்சகன் (11), மெர்சி (8) என குழந்தைகள் உள்ளனர். 2018ல் இந்திரா, கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருக்கிறார்[1]. இதனால் பால்ராஜுக்கும் அன்னை இந்திராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது[2]. கிறிஸ்தவம் எவ்வாறு கணவன்  – மனைவி உறவுகளை உடைக்கிறது என்பது வெளிப்படுகிறது. இந்திராவிடமிருந்து பிரிந்த பால்ராஜ், தேனி மாவட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில், அன்னை இந்திரா, தனது இரண்டு குழந்தைகளுடன், திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஷரி காலனியில் வாடகை வீட்டில் வசித்துவந்திருக்கிறார். உடல் நிலை சரியில்லாத அன்னை இந்திராவுக்கு, ஜெபக் கூட்டங்கள் நடத்தி வரும் எரியோடு வெள்ளனம்பட்டியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக அன்னை இந்திராவுடன் சுதர்சனனும் தங்கியிருந்துள்ளார்.

பாதிரி ஆன்டர்சன் வாசுகியோடு, வீட்டிற்கு வந்து தங்கியது: இவர்களுடன், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனம் ஆகியோர் அதே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். கணவர் பிரிந்து வாழும் நிலையில், பாதிரியை வீட்டில் தங்க வைத்தது ஏன் என்று தெரியவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக, 2019ல்  விருப்ப ஓய்வுக்காக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் விண்ணப்பித்தார் அன்னை இந்திரா. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, அவரை திண்டுக்கல்லில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்தார்.கடந்த அக்டோபர் / நவம்பர்[3] 16-ம் தேதி 2020 மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார். ஊடகங்கள் இவ்வாறு வேற்பட்ட தகவல்களைக் கொடுக்கின்றன. 26-ந்தேதி / 31ம் தேதி பணியில் சேர வேண்டும். ஆனால் அவர் பணிக்கு வரவில்லை. மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பாத அன்னை இந்திராவைப் பற்றி விசாரிக்க, அவரது வீட்டுக்கு இரண்டு பெண் காவலர்கள் சென்றிருக்கிறார்கள்.

பூட்டிய அறைக்குள் பிணம் இருந்தது: பெண் போலீஸார் வந்த போது, வீட்டில் உள்ளவர்கள் அன்னை இந்திரா பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கிறார்கள். வீட்டில் இல்லை எனும் கூறினர். மேலும், வீட்டின் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு, அதிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த பெண் காவலர்கள், தாடிக்கொம்பு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்[4]. அருகில் உள்ளவரும் அவ்வாறே புகார் கொடுத்ததாகத் தெரிகிறது. தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு போலீஸார், பூட்டிய அறையைத் திறந்து பார்த்தனர்[5]. அங்கே, இறந்தநிலையில் அன்னை இந்திராவின் உடல் துணியால் மூடப்பட்டு அழுகிய நிலையில் இருந்திருக்கிறது. மேலும் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த இடத்திலேயே வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது[6]. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் குழுவும், அவர் 10 நாள்களுக்கு முன்னதாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது[7]. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது[8]. அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டு இருந்த தகவல் பலகையில் மத பிரசாரம் செய்யும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன[9]. அதாவது, அந்த அளவுக்கு, மத அடிப்படைவாதம் ஊக்குவிக்கப் பட்டுள்ளது.

மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல், பிரார்த்தனை செய்தது – 07-2-2020 அன்று இறந்தது: அதைத் தொடர்ந்து சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனிடம் விசாரித்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். கடந்த டிசம்பர் 7-ம் தேதி 2020 அன்று படுக்கையிலிருந்த இந்திரா சுயநினைவை இழந்திருக்கிறார். ஜெபம் சொல்லி சரிசெய்வதாகக் கூறி, மதபோதகர் சுதர்சன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்திருக்கிறார். கண்விழிக்காத உடலிலிருந்து இரண்டு நாள்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது. அப்போதும், அன்னை இந்திரா உயிர்தெழுவார் என்றும், இயேசு ரட்சிப்பார் என்றும் கூறியிருக்கிறார் சுதர்சன். மேலும், இரண்டு குழந்தைகள், சகோதரி வாசுகி ஆகியோர் தினமும் இந்திராவின் உடல் அருகே அமர்ந்து ஜெபம் சொல்லிவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. குழந்தைகளையும், அவ்வாறு நம்ப வைத்து, தாய் இறந்ததை மறைத்தது, திகைப்பாக இருக்கிறது.

தாய் இறந்ததை அறியாமல் இருந்த பாதிக்கப் பட்ட குழந்தைகள்: உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் முயன்றபோது, அதை வாசுகியும் சுதர்சனும் தடுத்திருக்கிறார்கள். இதுவும், அவர்களின் அடிப்படைவாதம் மற்றும் மூடநம்பிக்கையினை எடுத்துக் காட்டியது. “அன்னை இந்திரா இறக்கவில்லை. அவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம் உயிர்தெழுவார்,” எனக் கூறியிருக்கிறார்கள். இருவரையும் சமாதானம் செய்த போலீஸார், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இந்திராவின் இரண்டு குழந்தைகளும் தனது தாய் உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையோடு வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது[10].  குழந்தைகளையும் அந்த அளவுக்கு மூளைசலவை செய்திருப்பது தெரிகிறது.

01-01-2021 அன்று பாதிரி மற்றும் ஆதரித்த வாசுகி கைது: இதனையடுத்து வாசுகி மற்றும் சுதர்சனை போலீசார் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகியையும் மதபோதகர் சுதர்சனையும் போலீஸார் 01-01-2021 அன்று கைதுசெய்தனர்[11]. மேலும், 176வது பிரிவு பொது ஊழியருக்கு தெரிவிக்க வேண்டிய கருத்தை தெரிவிக்காமல் மறைத்தது, பிரிவு 304 (A) (கொலை ஆகாத மரணம்) சிகிச்சை அளித்தால் உயிர் பிழைத்து விடுவார் என்று தெரிந்தும் சிகிச்சை அளிக்காமல் வைத்திருந்தது, பிரிவு 406 நம்பிக்கை துரோகம் செய்தல், பிரிவு 420 ஏமாற்றி பொருளைப் பறிப்பது ஆகிய நான்கு பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்[12]. அன்னை இந்திராவின் குழந்தைகளைத் தற்காலிகமாக காப்பத்தில் சேர்ந்த போலீஸார், அவர்களின் தந்தை பால்ராஜுக்குத் தகவல் தெரிவித்தனர். உயிர்தெழுவார் என்று கூறி, இறந்த பெண் காவலரின் உடலை 22 நாள்கள் வீட்டில்வைத்து ஜெபம் சொன்ன சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆன்டர்சன் பாதிரி குடும்பத்தைக் கெடுத்து, குழந்தைகளையும் பாதித்துள்ளான்: இறந்த பிறகும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு இருந்தது கவனிக்கத் தக்கது. தங்களது நம்பிக்கை தவறு என்பதை அறிந்தும், மத-அடிப்படைவாத சிந்தனைகளால் குடும்பத்தை ஆன்டர்சன் பாதிரி பிரித்துள்ளான். அந்த வீட்டிலேயே வாழ்ந்து, குழந்தைகளை மூளைசலவை செய்துள்ளான். அதனால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, தனது “தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்தோடு, தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காமல், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். வீட்டு வாசலில் பைபிள் வசனங்களை எழுதி வைத்து, அந்த வீட்டை ஒரு ஜெபகூடம் போல மாற்ற முயற்சித்துள்ளான். இவ்வாறு தம்பதியரைப் பிடித்து, குழந்தைகளை பாதித்து, மருத்துவமனையில் சேர்க்காமல், ஜெபம் என்று சொல்லி வீட்டிலேயே வைத்து, ஒரு பெண்ணை சாகடித்து, குழந்தைகளிடமும் “தாய் உயிர்த்தெழுவாள்,” என்று நமிக்கையை வளர்த்து, ஒரு குடும்பத்தையே நாசமாக்கியுள்ளான். மூடநம்பிக்கை என்று பகுத்தறிவுவாதிகள், நாத்திகவாதிகள் இந்துமத நம்பிக்கைகளைக் கடுமையாக, கொடுமையாக, ஏன் குரூரமாக்க விமர்சித்து வருகின்றனர். ஆனால், இத்தகைய குரூரங்களைக் கண்டு கொள்வதில்லை. இங்கெல்லாம் பகுத்தறிவு மழுங்கி விடுகிறது, நாத்திகம் நமைத்து போய் விடுகிறது, விஞ்ஞான சிந்தனை உளுத்து விடுகிறது. இதைப் பற்றி யாரும் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. ஆகவே, இந்துக்கள் இத்தகைய அடிப்படைவாத கிறிஸ்தவர்கள், கிருக்கு-பாதிரிகள் முதலியோருட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

03-01-2021


[1] மாலைமலர், பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணம்உயிர்த்தெழுவார் என பிரார்த்தனை, பதிவு: ஜனவரி 01, 2021 08:56 IST.

[2]  https://www.maalaimalar.com/news/district/2021/01/01085655/2212939/Tamil-News-police-investigation-to-female-police-body.vpf

[3]  “நவம்பர் 16-ந் தேதி” என்கிறது தினத்தந்தி. 

[4] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலுயா“.. பிணத்துடன் பூட்டிய வீட்டிற்குள் ஜெபம்.. மொத்தம் 20 நாள்.. அலறி அடித்து ஓடிய போலீஸ், By Hemavandhana

| Updated: Friday, January 1, 2021, 15:34 [IST]

[5] https://tamil.oneindia.com/news/dindigul/dindigul-female-police-deadbody-inside-locked-room/articlecontent-pf511963-407579.html

[6] தினமணி, 20 நாள்களுக்கு முன்பு இறந்த பெண் காவலர் சடலத்துடன் வீட்டிற்குள் ஜெபம்: திண்டுக்கல்லில் பரபரப்பு, By DIN | Published on : 31st December 2020 07:23 PM

[7] https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/dec/31/prayer-inside-the-house-with-the-body-of-a-female-police-who-died-20-days-ago-3534963.html

[8] தினத்தந்தி, திண்டுக்கல் அருகே பரபரப்பு; பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணம்; உயிர்த்தெழுவார் என பிரார்த்தனை; பாதிரியாரிடம் விசாரணை, பதிவு: ஜனவரி 01, 2021 09:59 AM

[9] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/01/01095932/Unrest-near-Dindigul-Female-police-corpse-inside-locked.vpf

[10] விகடன், `ஓய்வில் இருக்கிறார், உயிர்த்தெழுவார்’ –இறந்த பெண் காவலர் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரி, மதபோதகர், எம்.கணேஷ், ஈ.ஜெ.நந்தகுமார், Published: 02-01-2021 at 11 AM, Updated: 02-01-2021 at 11 AM.

[11] https://www.vikatan.com/social-affairs/crime/female-police-was-kept-in-home-after-she-lost-consciousness-dies

[12]  பிபிசி.தமிழ், உயிர்த்தெழுவார்என்று நம்பி சடலத்தை 22 நாட்கள் வைத்திருந்தவர்கள் கைது, 3 ஜனவரி 2021

https://www.bbc.com/tamil/india-55519884

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?

ஜனவரி 1, 2021

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?

தலைமை பெண் காவர், குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்தது: தேனியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்துவந்தார். இந்திராவின் கணவர் பொன்ராஜ் (நக்கீரன்) /  பால்ராஜ் (என்கிறது NEWS18 TAMIL)[1]. இந்திரா-பொன்ராஜ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது குழந்தைகளுடன் இந்திரா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள, டிரஸ்சரி காலனி பகுதியில், தனது 12 வயது மகன் சுதர்சன், 8 வயது மகள் மெர்சி ஆகியோருடன் வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாகக் குடியிருந்து வந்தார்[2]. மகளின் பெயர் மெர்சி என்று குறிப்பிட்டு, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிடப் படவில்லை. குழ்ந்தைகளின் பெயர்கள் இந்து0கிறிஸ்தவ பெயர்களாக இருப்பதனால், ஒருவேளை மாற்றுமத திருமணத்தினால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு த்னித்து வாழ்கிறார்கள் போலும். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு அந்தப் பாதிரியாரின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது[3] என்று நக்கீரன் குறிப்பிட்டுள்ளது.


கிறிஸ்தவரான இந்திரா நோய்வாய்ப்பட்டது, சிகிச்சைப் பெற்றது, விடுமுறையில் சென்றது: இதற்கிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்திராவின் சகோதரியான வாசுகியும் இவர்களுடனேயே தங்கிவிட்டார். ஏற்கனவே சிறுநீரகத் தொற்றுக் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த காவலர் இந்திரா, காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால், அவர் விருப்ப ஓய்வு பெறுவது குறித்து எந்தத் தகவலையும் தனது மேலதிகாரிகளுக்கு முறையாகத் தெரிவிக்காமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 16.10.20 முதல் அன்னை இந்திரா மெடிக்கல் விடுமுறையில் சென்றுள்ளார். 25.12.20 அன்று அவர் பணிக்குத் திரும்பியிருக்க வேண்டும்[4]. ஆனால் அவர் 31ஆம் தேதி வரை பணிக்கு திரும்பாததால், அவர் அடிக்கடி விடுப்பு எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு, கடந்த 8-ஆம் தேதி இந்திராவின் வீட்டிற்கு, போலீஸார் / இரு பெண் காவலர்கள் சென்றுள்ளனர்[5].


விசாரிக்க வந்த போலீஸார், இந்திராவின் பிணத்தைக் கண்டது: ஆனால், இந்திரா வீட்டில் இல்லை எனக்கூறி இந்திராவின் குழந்தைகளும் அவரது சகோதரியும் போலீசாரை திருப்பி அனுப்பிவிட்டனர். இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அருகிலிருந்தோர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டி.எஸ்.பி மணிமாறன் தலைமையிலான போலீஸார், இந்திராணி வீட்டில் சோதனை செய்ததில், ஒரு அறையில் இந்திராவின் அழுகிய உடல் துணியால் சுற்றப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள் என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், ‘எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்’ என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார். உடல் மிகவும் அழுகிய காரணத்தினால் வீட்டிலேயே டாக்டர்கள் உடற்கூறாய்வு செய்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


சர்ச் பாதிரியாரிடம் ஏன், எப்படி பழக்கம் ஏற்பட்டது, யார் அந்த பாதிரி?: கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த பெண் காவலர் இந்திராவிற்கு சர்ச் பாதிரியார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[6]. அவரும் அடிக்கடி இந்திராவின் வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். மேலும், உடல்நலம் பாதித்த இந்திராவை, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல், வீட்டில் வைத்து குணமடைவதற்குப் பிரார்த்தனை செய்துள்ளனர். சர்ச் பாதிரியாரின் இந்தத் தொடர் நடவடிக்கையின் காரணமாக, இந்திராவின் இரு குழந்தைகளும் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்[7]. தந்தைக்குப் பதிலாக, பாதிரியுடன் பழகும் தாயைக் கண்டு, குழந்தைகள் குழம்பி, மனம் பாதிக்கப் பட்டிருக்கலாம். அந்நிலையில், பாதிரி வந்து அவர்களுக்கு போதனை செய்து, மூளை சலவை செய்ததால், இறந்தவர் உயிர்த்தெழுவர் போன்ற நம்பிக்கைகளைப் பெற்றிருக்கலாம். அப்படியென்றால், இறந்த தமது தந்தை ஏன் உயிரோடு வரக்கூடாது என்றும் நினைத்திருக்கலாம், பாதிரியாரிடம் கேட்டிருக்கலாம்.


20-22 நாட்களாக பிணத்துடன் இருந்ததால், போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருவது: அதிர்ச்சி தரும் இந்தச் சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். டிசம்பர் 7ம் தேதி இறந்த தாயின் உடலுடன் அவரது இரு குழந்தைகளும் 22 நாட்களாக (நக்கீரன்) / 20 நாட்கள் (தினமலர்) வீட்டில் இருந்த சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[8]. உயிரிழந்த காவலர் இந்திரா, கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு அந்தப் பாதிரியாரின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது[9]. தினமலர், வாசுகி, ஆன்டர்சனிடம் / சுதர்சன் என்று மற்ற ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர், என்று முடிக்கிறது[10]. திடீரென்று “ஆன்டர்சன்,” வந்தது என்று தெரியவில்லை. தினமலர் நிருபர், ஏதோ அடக்கி வாசிக்கின்றாரா அல்லது மறைக்கிறாரா என்று தெரியவில்லை[11]. ஊடகங்களும், உண்மையினை சொல்லாமல், மூடநம்பிக்கை என்றால், இதையும் விமர்சிக்காமல், கிறிஸ்தவ நம்பிக்கை என்பதால், அடக்கி வாசிப்பதுப் போலத் தெரிகிறது.

30 நாட்களுக்குப் பிறகு, உயிர்த்தெழுவார்களா?: இதே போல, கிறிஸ்தவ குடும்பத்தில் வயதான பெண் ஒருவர் இறந்து விட்டார். குடும்பத்தினர், இந்தத் தகவலை வெளியே சொல்லவில்லை. மாறாகச் சிறிய அறைக்குள் இறந்து போனவரின் சடலத்தை வைத்தனர். தினமும் சடலத்தின் அருகே மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தி வந்துள்ளனர்.  சடலத்தின் மீது  வாசனைத் திரவியங்களையும் தொடர்ந்து அடித்து வந்துள்ளனர்.  முப்பது நாள்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தால்  இறந்தவர் உயிருடன் வந்து விடுவார் என்பது அவர்களின் நம்பிக்கை[12]. ஐ.பி.எஸ் அதிகாரியே மூடநம்பிக்கையில் தந்தையின் உடலைப் பாதுகாத்து வந்ததைக் கண்டு போபால் நகரம் அதிர்ந்து போய் கிடக்கிறது. மத்தியப் பிரதேச மாநில கூடுதல் டி.ஜி.பியாக இருப்பவர் ராஜேந்திரக் குமார். இவரின் தந்தை 84 வயது கல்முனி மிஷ்ராவின் இறந்த உடலை வைத்து பிரார்த்தனை செய்தார்[13]. இத்தகைய நம்பிக்கைக் கொள்வது, திகைப்பாக இருக்கிறது.

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?:

இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு,ணவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது.

© வேதபிரகாஷ்

01-01-2021


[1] நியூஸ்.18.தமிழ், உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் 22 நாட்களாக பெண் காவலர் சடலத்தை வைத்திருந்த உறவினர், NEWS18 TAMIL, LAST UPDATED: DECEMBER 31, 2020, 10:11 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/dindigul-women-police-died-police-started-investigation-riz-387813.html

[3] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=643464

[4] நியூஸ்.டி.எம், மரணமடைந்த பெண் உயிர்த்தெழுவார் என சடலத்தை 22 நாட்கள் வைத்திருந்த கொடூரம்!, By Aruna NewsTM | Fri, 1 Jan 2021.

[5] https://newstm.in/tamilnadu/the-cruelty-of-keeping-the-corpse-for-22-days-as-the-dead/cid1954389.htm

[6] நக்கீரன், அம்மா உயிருடன் வருவார்…!” தாயின் சடலத்தோடு 22 நாட்கள் இருந்த குழந்தைகள்!, சக்தி, Published on 31/12/2020 (19:23) | Edited on 31/12/2020 (19:58)

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/shocking-incident-dindigul

[8] தினகரன், திண்டுக்கல்லில் சடலத்தை வைத்து 22 நாட்களாக பிரார்த்தனை, 2020-12-31@ 16:39:22.

[9] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=643464

[10] தினமலர், சடலத்துடன் 20 நாள் பிரார்த்தனை, Added : ஜன 01, 2021 00:26.

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2681276

[12] விகடன், “தந்தை உயிருடன் எழுவார்”- சடலத்துக்கு வீட்டில் ஒரு மாதமாகச் சிகிச்சை அளித்த .பி.எஸ் அதிகாரி, எம்.குமரேசன், Published:15 Feb 2019 8 PMUpdated:17 Feb 2019 3 PM

[13] https://www.vikatan.com/social-affairs/controversy/149796-father-dies-in-hospital-ips-officer-takes-body-home-starts-ayurveda-treatment-in-bhopal

“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (1)

மார்ச் 10, 2018

தாமஸ் கட்டுக் கதைமுதல்எலும்பு தாமஸ்வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (1)

Joseph Hospices-Thomas defient

தாமஸ் கட்டுக் கதைமுதல்எலும்பு தாமஸ்வரை: முன்னர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த போது, அந்த இல்லம் நடத்த லைசென்ஸ் இல்லை என்று தெரிய வந்தது. கேட்ட போது, அரசாங்கத்திலிருந்து பெறப்பட்ட உரிய ஆவணத்தை எதுவும் தாமஸால் காட்ட முடியவில்லை. கட்டிடத்திற்கு உண்டான, சான்றிதழும் காண்பிக்கப் படவில்லை. மாவட்ட கலெக்டர், எஸ்.ஏ. ரஹ்மான், லைசென்ஸ், உரிய ஆவணங்கள், தேவையான வசதிகள் முதலியன எதுவும் இல்லை என்பதால் சீல் வைக்க ஆணையிட்டார். முதியோர்களும் அங்கிருந்து வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஆரம்பம் ஆனது[1].    ஆனால் தாமஸ் அசையாமல், எதுவுமே நடக்காதது போல, தாமஸ் அழுத்தமாக இருந்தது விசித்திரமாக இருந்தது. எல்லாமே ஒழுங்குதான் என்பது போல, எலும்பு தாமஸ் பேசியதை இங்கு காணலாம்-கேட்கலாம்[2]. நிச்சயமாக, வலுவுள்ள கத்தோலிக்க சர்ச், முழு வீச்சில், இதனை அமுக்க திட்டமிட்டு விட்டது தெரிகிறது. கோடிகளில் புரலும், சர்ச், எதையும் சாதிலும் என்பதை முன்னர் “தாமஸ் கட்டுக்கதை” வழக்கிலும் வெளிப்படுத்தி கொண்டது. இனி “எலும்பு தாமஸை” காப்பாற்றாமலா இருப்பார்கள்?

Joseph Hospices-will be sealed -05-03-2018

05-03-2018 திங்கட்கிழமை எலும்பு தாமஸை ஆதரித்து கிருத்துவர்களின் ஆர்பாட்டம்: பலவித சட்டமீறல்களையும் மீறி, உண்மைகளை மறைத்து, கத்தோலிக்க சர்ச் மற்றும் தமிழ்நாடு பிஷப் கவுன்சில் [Catholic Church and the Tamil Nadu Bishops’ Council ] எலும்பு தாமஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது திகைப்படைச் செய்துள்ளது[3]. 05-03-2018 திங்கட்கிழமை அவருக்கு ஆதரவாக செங்கல்பட்டு டையோசிஸ் சார்பாக சேப்பாக்கத்தில் ஆர்பாட்டம் செய்வதற்கும் தீர்மானித்தது. அந்தோனிசாமி [S.J. Anthonysamy, vicar general of the Archdiocese of Madras Mylapore] அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்[4]. திட்டமிட்ட படி, பிரச்சார ரீதியில் எதிர்ப்பு கூட்டத்தை நடத்தினர். ஏ. நீதிநாதன், செங்கல்பட்டு ஆர்ச்பிஷப், பீட்டர் அல்போன்ஸ், ஜவாஹிருல்லா முதலியோர் கலந்து கொண்டனர்[5]. நிச்சயமாக, பெயிலில் வெளிவந்துள்ள இந்த ஆளை சேர்த்தது, “கிருத்துவ” என்ற முகமூடிக்குப் பதிலாக, “மைனாரிடி” என்ற முகமூடியை அணிவதற்காகவே என்று தெரிந்தத்து. கிருத்துவர்கள் தாக்கப்பட்டனர் போன்ற பாட்டு எல்லாம் பாடப்பட்டது. ஆனால், சட்டமீறல்கள் இறப்புகள் முதலியவற்றைப் பற்றி மூச்சுவிடவில்லை. எலும்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று சப்தம் போட்டனர்[6]. அந்தோனிசாமி ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் மறைத்து, ஊடகக்காரர்களிடம் பேசியது தமாஷாக இருந்தது- அவர் பேசியதை இந்த வீடியோவில் பார்க்கலாம்-கேட்கலாம்[7]. அவ்வழியாக சென்றவர்கள் என்ன இது, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இப்படி ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துகிறார்கள் என்று கமென்ட் அடித்துச் சென்றது, மக்கள் இன்னும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்பது தெரிந்தது.

Joseph Hospices-Thomas supported by catholic church-DEMO

07-03-2018 அன்று எலும்பு பாதிரிக்கு சாதக தீர்ப்பு: உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில், ஆதரவற்ற முதியவர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்து, அவர்களது உடல் உறுப்புகள், எலும்புகளை விற்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தை ஏன் மூடக் கூடாது என்று ஆர்டிஓ அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, கருணை இல்லத்தை நடத்தி வரும் பாதிரியார் தாமஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது[8]. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், தமிழக அரசின் உரிய அனுமதி பெற்றே கருணை இல்லத்தை நடத்தி வருவதாக வாதிடப்பட்டது. தமிழக அரசின் அனுமதியைப் பெற்று கருணை இல்லத்தை நடத்துவதாகக் கூறப்படும் போது, அதனை ஏன் மூட வேண்டும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தை மூட இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது[9]. செய்திகள் இந்த அளவுக்கு வெளிவந்து, போலீஸார் முதல் மாவட்ட ஆட்சியர் வரை சென்று ஆய்ந்த பிறகு, அரசுக்கு அவகாசம் தேவை என்பதே விசித்திரமாக இருக்கிறது.

Joseph Hospices-Thomas supported by catholic church

இடதுசாரி உண்மை அறியும் குழுக்களின் முரண்பட்ட அறிக்கை: பாலேஸ்வரம் கருணை இல்லப் பிரச்னைக்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம், அந்த இல்லத்தை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தொண்டு நிறுவன கள ஆய்வுக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்[10]. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதனை “இடது சாரி, முரண்பட்ட அறிக்கை” என்று குறிப்பிட்டது[11]. அப்படியென்றால் வாய் சவடால் அடிக்கும், வலதுசாரி கூட்டத்தினர் ஏன் அத்தகைய ஆய்வை மேற்கொள்ளவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் பெரிய போராளிகளாகக் காட்டிக் கொள்ளும் இவர்கள், இவ்விசயங்களில் பிந்தங்கியிருப்பது, அவர்களின் கையாகாலாத் தனத்தையே எடுத்துக் காட்டுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு மக்கள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜவாஹிருல்லா, எழுத்தாளர்கள் தியாகு, மார்க்ஸ் பிரபா.கல்விமணி, வழக்கறிஞர் ஆசீர், விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு, இயக்குனர் மு.களஞ்சியம் உள்ளிட்ட 13 பேர் கொண்ட உயர்நிலை களஆய்வுக்குழுவினர்கள் 07-03-2018, புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

Paleswaram supporting group-marx, jawahirulla etc

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: அதன்பிறகு, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது[12]:  “பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இறக்கும் தருவாயில் உள்ளோருக்கு யாருமே செய்யாத வகையில், சிறந்த சேவை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், யூகங்கள், புரளிகள், பொய்யான குற்றச்சாட்டுகளால் கருணை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோரை அரசு அதிகாரிகள் அத்துமீறி வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், இல்ல நிர்வாகி பாதிரியார் தாமஸ் கடந்த 2017-ஆம் ஆண்டு அனுமதியை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்தும் அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லைஇதேபோன்று அடக்கம் செய்யும் முறைக்கு அரசிடம் வழிகாட்டல், விதிமுறைகள் இல்லை. இறக்கும் தருவாயில் உள்ளோர் இறந்த பிறகு அடக்கம் செய்யும் முறைக்கு அரசு உரிய அனுமதி வழங்கவேண்டும்அதன்பிறகு, கருணை இல்லத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே அனுமதித்த பிறகு, ஏன் மீண்டும் அனுமதி வழங்கவில்லைபாலேஸ்வரம் கருணை இல்லத்தில் சேர்க்கப்படுவோர் காவல் துறை, மருத்துவமனை, அரசு அதிகாரிகள் உதவியோடுதான் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட ஆய்வில், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால்தான் கருணை இல்லப் பிரச்னை எழுந்துள்ளது”, என களஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால்தான் கருணை இல்லப் பிரச்னை எழுந்துள்ளது என்றது அப்பட்டமான பொய் என்பது தெரிந்த விசயமே, இருப்பினும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், அவர்கள் சொல்லியிருப்பது, அவர்களது அப்பட்டமான, நியாயமற்ற, அதர்ம மனப்பாங்கை எடுத்துக் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

10-03-2018

Joseph Hospices-inspection by authorities -03-03-2018

[1] Daily Pioner, CHURCH PLANS STIR EVEN AS CRACKDOWN UNEARTHS MORE ILLEGAL HOSPICES, Sunday, 04 March 2018 | Kumar Chellappan | Chennai | in Sunday Pioneer.

The district administration found that Father R V Thomas, who headed the St Joseph’s Hospice did not have a licence to run  the institution and he could not  furnish any official documents. He also failed to produce a building stability certificate.The Vellore district administration found that another hospice operated by Father Thomas was functioning from Thiruvalam. S A Raman, district collector, Vellore told reporters that the Hospice had no license, proper records, or proper sanitation amenities. The institution has been sealed since then. “A teachers training centre was functioning from here earlier. The authorities pf St Joseph’s Hospice took over the centre and converted it into a home for destitute. They did not have any registration to run such an establishment,” said the collector.

http://www.dailypioneer.com/sunday-edition/sunday-pioneer/nation/church-plans-stir-even-as-crackdown-unearths-more-illegal-hospices.html

[2] https://www.youtube.com/watch?v=0ljZoypeh8c

[3] The Hindu, Church backs St. Joseph’s hospice, Dennis S. Jesudasan, CHENNAI, MARCH 03, 2018 00:59 IST UPDATED: MARCH 03, 2018 00:59 IST.UPDATED: MARCH 03, 2018 00:59 IST

[4] http://www.thehindu.com/news/national/tamil-nadu/church-backs-st-josephs-hospice/article22912914.ece

[5] The Hindu, Minority groups come out in support of hospice, CHENNAI, MARCH 06, 2018 00:00 IST UPDATED: MARCH 06, 2018 03:51 IST

[6] Archibishop of Chengalpattu A. Neethinathan, Ex-MP Peter Alphonse, Manitha Neya Makkal Katchi H.M. H. Jawahirullah and other leaders participated in the agitation.UPDATED: MARCH 06, 2018 03:51 IST

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/minority-groups-back-paleswaram-hospice/article22938282.ece

[7] https://www.youtube.com/watch?v=Vm7-dFaD9o4

[8] தினமணி, பாலேஸ்வரம் கருணை இல்லத்தை மூட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை, By DIN  |   Published on : 08th March 2018 12:56 PM

[9]  http://www.dinamani.com/tamilnadu/2018/mar/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2876808.html

[10] ஐ.இ.தமிழ், பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் நடந்தது என்ன? : இடதுசாரி உண்மை அறியும் குழுக்களின் முரண்பட்ட அறிக்கை, 09-03-2018.

[11] https://www.ietamil.com/tamilnadu/paleswaram-hospice-inmates-death-fact-finding-teams/

[12] தினமணி, பாலேஸ்வரம் கருணை இல்லத்தை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும்: கள ஆய்வுக் குழுவினர் கோரிக்கை, By DIN  |   Published on : 08th March 2018 03:31 AM.

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (1)

பிப்ரவரி 26, 2018

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (1)

Bone export- Dinakaran- report submitted 26-02-2018

எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம்: பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து இறந்துபோன மனிதர்களின் உடல்களை புதைக்காமல் மக்க வைத்து அதன் எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் பி. பொன்னையா தெரிவித்தார்[1]. இதிலிருந்து, அரசு முறையில் இவ்வுண்மையினை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், அது பற்றிய விவரங்கள் வெளியிடப் படாதது, விசித்திரமாக உள்ளது. பிணம் கடத்தல் முதலிய விவகாரங்கள், வெளிவந்த பிறகு, தொடர்ந்து வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத் துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட ஆறு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மாவட்ட கலெக்டரிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கின்றனர்[2]. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கேட்டபோது, பாலேஸ்வரம் கருணை இல்லம் தொடர்பாக அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவத்துறை உள்ளடக்கிய வல்லுநர் குழு  மூலம் முழுமையான விசாரணை நடத்தி அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு அதே இல்லத்தில் குறைகளை சரிசெய்து  தொடர்ந்து பராமரிப்பது, அங்கு உள்ள ஆதரவற்றவர்களை வேறு இடத்துக்கு மாற்றி பராமரிப்பது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்தார்.

Joseph Hospise- Tikkathir 2015

2012 புகார் கொடுத்தும் 2015 வரை கண்டுகொள்ள வில்லை – 2018லும் அதே புகார் தான் எழுந்துள்ளது: எலும்புகளை  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம் 2015ல் கூட எழுப்பட்டது[3], “பின்னர் அந்ததொட்டிக்குள் நிற்கும் எலும்பு கூட்டை எடுத்து பாலிஸ் செய்துவெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக இந்த இல்லத்தின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது………… வெளிநாடுகளில் இருந்து இவர்களுக்கு வரும் நன்கொடை குறித்தும் முழு விவரம்தெரியவில்லை…... இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே..சண்முகத்திடம் கேட்டதற்கு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அந்த இல்லத்தில் நடைபெறுமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே 2012 ல் தெரியவந்தபோது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் மாவட்ட சமூகநலத்துறையும் இல்லத்தில் இறப்பவர்களை பொது சுடுகாட்டில் தான் புதைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது..[4]. ஆக, 2012, 2015 மற்றும் 2018 – முந்தைய காலகட்டத்தில் இருந்தவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது. அரசு அதிகாரிகளின் மெத்தனம், ஒத்துழைப்பு, அல்லது உடந்தை எது வேலை செய்தது என்று கண்டறியப்பட வேண்டும். ஏனெனில், –

  1. எலும்புகள் ஓரளவிற்கு சுத்தப் படுத்தி வண்டிகளில் ஏற்றப்பட்டது,
  2. வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டது [வழியில் எங்கும் அகப்படாமல்],
  3. தொழிற்சாலைகளில் சுத்தப்படுத்தியது [மனித எலும்புகளை],
  4. பொடியாக்கியது [அதற்கான மிஷினரிகள், தேர்ந்த வேலையாட்கள்],
  5. மூட்டைக் கட்டியது [அதற்கான மிஷினரிகள், தேர்ந்த வேலையாட்கள், பாக்கிங் சிலிப்புகள், விலைப்பட்டிகள்],
  6. துறைமுகத்திரற்கு அனுப்பியது [தொழிற்சாலையிலிருந்து],
  7. அதற்கான ஆவணங்களை ஏஜென்ட் மூலமாக பதிவு செய்தது,
  8. ஏற்றுமதி ஆனது [வெளியூர் வாங்குபவரின் விவரங்கள், பணம் கொடுத்தது…..],

என்றெல்லாம் ஆராய்ந்தால், நிச்சயமாக இவ்வேலைவ் தெரியாமல் போயிருக்க முடியாது. இல்லை, எல்லாமே பொய்யான விவரங்களுடன் சென்றிருக்க வேண்டும். ஆக எப்படியாகிலும், சட்டமீறல்களை மறைக்க முடியாது.

Export of Bones- Josepg Hospice

2011ல் கண்டெடுத்த எலும்பு கூடு, 2012ல் நடத்தப் பட்ட சோதனை முதலியன: சாலவாக்கம் அடுத்த, பரமேஸ்வரம் நாகமலை அருகே, புதர் ஒன்றிலிருந்து, மண்டை ஓடு, முதுகுத் தண்டு வடம், கால் எலும்பு ஆகியவை கிடந்தது[5]. இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் சசிகலாதேவி, சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்[6]. அதாவது அந்த ஊரில் சாதாரணமாக அவ்வாறு 2011ல் மண்டை ஓடு, முதுகுத் தண்டு வடம், கால் எலும்பு ஆகியவை கிடைப்பதும், அருகில் எலும்புகள் ஏற்றுமதி ஆவதும், அறிந்து அரசு அதிகாரிகள் அமைதியாக இருந்தனர் என்பதும் திகைப்பாக இருக்கிறது. அவர்களை சாலவாக்கம் அருகே, ஆதரவற்றோர் இல்லத்தில் இறந்த, 50 பேர் உடல்கள் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சாலவாக்கம் அடுத்த, பாலேஸ்வரம் கிராமத்தில், லைட் பார் தி பிலைண்டு என்ற தனியார் அறக்கட்டளை சார்பில், செயின்ட் ஜோசப் இறக்கும் தருவாயில் உள்ள அனாதைகள் கருணை இல்லம் செயல்படுகிறது. இதை, தாமஸ் என்பவர் நிர்வகிக்கிறார். கடந்த மார்ச்-2011-ல் துவக்கப்பட்ட கருணை இல்லத்தில், 46 பெண்கள் உட்பட, 86 பேர் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருந்து இறந்த, 50 பேர் உடல்கள், சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.

Notice to Josepg Hospice - 26-02-2018

அரசு அதிகாரிகள், போலீஸ் சென்று பார்வையிடல்– 2012: மாவட்ட சமூகநல அலுவலர் சற்குணா, மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி., ஸ்ரீதேவி ஆகியோர், நேரில் சென்று விசாரித்தனர். அவர்களிடம் தாமஸ் கூறுகையில், “நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாத, ஆதரவற்ற அனாதைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். நோயால் இறப்பவர்களின் உடல்களை, இங்கேயே அடக்கம் செய்கிறோம். பூமியில் புதைத்தால், சுகாதாரக் கேடு ஏற்படும் என்பதால், கான்கிரீட் கட்டடத்திற்குள் அடக்கம் செய்கிறோம். இதனால், சூரிய வெப்பத்தில் தசைகள் அழிந்து, எலும்பு மட்டும் மிஞ்சும். இம்முறை கேரளாவில் பின்பற்றப்படுகிறது. நாங்கள் திண்டுக்கலில் நடத்தும் கருணை இல்லத்திலும், இதேமுறையில் தான் அடக்கம் செய்கிறோம்” என்றார். “இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் இறந்தால், எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, விதிமுறையில் குறிப்பிட்டுள்ளோம். தகவல் தெரிவித்தீர்களா’ என, சமூகநல அலுவலர் கேட்டார். அதற்கு, கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிவித்து விடுவதாக, தெரிவித்தார்.  அதாவது, அதுவரை அறிவிக்கவில்லை என்றாகிறது. அறிந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததும் கவனிக்கத் தக்கது.

Paleswaram, dead bodies - news cutting-21-02-2018.DM

2012ல் எலும்புக்கூட்டை கண்ட அதிகாரிகள்: பின் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக, இல்லத்தின் பின்புறம் உள்ள, 20 அடி உயர கட்டடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு, சதுர வடிவில், 18 அறைகள் கொண்ட இரண்டு அடுக்குகளில், இறந்தவர்களின் உடல்கள் கான்கிரீட் சிலாப் மீது வைக்கப்பட்டு, சிலாப் போட்டு மூடப்பட்டிருந்தது. அதில், ஒரு சிலாப்பை உடைத்து காண்பித்தனர். அதில், ஒரு உடல் காகிதத்தில் சுற்றப்பட்டு, எலும்புக்கூடாக காணப்பட்டது. அதிகாரிகள், இல்லத்தில் தங்கியிருந்தவர்களிடம், அவர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து, டி.எஸ்.பி., ஸ்ரீதேவி கூறும்போது, “இல்லம் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படுகிறது. இறந்தவர்கள் குறித்து, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்து, முறையாக இறப்பு சான்றிதழ் பெற வேண்டும்; அப்படி செய்யவில்லை. ஆவணங்கள் மட்டும் இல்லத்தில் உள்ளன. அவற்றை சமூக நல அலுவலர், ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளார். அவர், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுப்பார்,” என்றார். எலும்பு கூட்டைப் பார்த்தார். இறப்பு சான்றிதழ் பெறவில்லை என்றால், இறந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை என்றாகிறது. அப்படியென்றால், இது மிகக்கொடுமையான சட்டமீறல் என்று கருதாததும், நடவடிக்கை எடுக்காததும் திகைப்பாக உள்ளது.

© வேதபிரகாஷ்

26-02-2018

St Joseph Hospice- Vault broken- dead body inside

[1] தினகரன், பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து மனித எலும்பு ஏற்றுமதி செய்தது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல், 2018-02-26@ 00:26:19

[2] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=379161

[3] தீக்கதிர், ஆதரவற்றோர் இல்லத்தில் இறந்தவர்களை சட்டத்திற்கு புறம்பாக வளாகத்திலேயே புதைப்புஎலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பதாக புகார், ஆகஸ்ட் 2015.

[4]https://theekkathir.in/2015/08/09/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/

[5] தினமலர், எலும்புக் கூடு கண்டெடுப்பு,  Added : நவ 12, 2011  23:47.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=348219

 

சாகும் தருவாயில் உள்ள கிழங்களை சாக வைப்பது, பிணங்களைப் பெட்டிகளில் அடைப்பது, அழுக வைப்பது, எலும்புப் பொடியை ஏற்றுமதி செய்வது – கிருத்துவ மரண திருவிளையாடல்கள் (2)

பிப்ரவரி 22, 2018

சாகும் தருவாயில் உள்ள கிழங்களை சாக வைப்பது, பிணங்களைப் பெட்டிகளில் அடைப்பது, அழுக வைப்பது, எலும்புப் பொடியை ஏற்றுமதி செய்வதுகிருத்துவ மரண திருவிளையாடல்கள் (2)

Dead bodies smuggled -enquiry-Thomas

பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் திடீர் ஆய்வு: இதை தொடர்ந்து, கண்ணாடி உடைப்பில் ஈடுபட்ட குரும்பறை கிராமத்தை சேர்ந்த கருணாகரன் (50), தாஸ் (42), சிலம்பரசன் (24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுனர் ராஜேஷிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு அவரை அனுப்பினர். இந்நிலையில் 21-02-2018 அன்று காலை 8 மணியளவில் ஆர்டிஒ ராஜூவ், மதுராந்தகம் டிஎஸ்பி மதிவாணன், மருத்துவ அலுவலர் உமாதேவி, மாசு கட்டுபாட்டு வாரியம், வருவாய் துறை, போலீசார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணை மாலை 4 மணியளவில் முடிவடைந்தது.  விசாரணைக்கு பிறகு, ஆர்டிஓ ராஜூ கூறுகையில், “துறைரீதியான அலுவலர்கள் 3 நாட்களுக்கு விசாரணை செய்து அறிக்கை தயார் செய்வார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.  இச்சம்பவத்தால், கலெக்டர் பொன்னையா உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

Dead bodies smuggled -Dainakaran, 20-02-2018

எலும்பை வெளிநாட்டுக்கு விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் சொல்கின்றனர்:  இதற்கிடையே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராஜிக்கு மனநல பிரிவு டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட கருணாகரன் கூறியதாவது: “சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரம் மலையடிவாரப் பகுதியில் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அதன் செயல்பாடு மர்மமாக உள்ளது.  இந்த கருணை இல்லத்தில் இறந்தவர்களின் உடல்களை கிடங்கில் அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் வைத்துவிட்டு அழுகி உடல் பாகங்கள் சிதைந்த பிறகு எலும்பை வெளிநாட்டுக்கு விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் சொல்கின்றனர்[1]எங்கிருந்தோ அழைத்துவரப்படும் முதியவர்களை சில காலம் வைத்திருந்து இறந்தவுடன் இங்கேயே அழுக விடப்படுகிறது[2]நோய்வாய்ப் பட்டவர்கள் உடல்கள் எரிக்கப்படுவதாலும், அழுக விடப்படுவதாலும் அருகில் உள்ள கிராம மக்களுக்கு இந்த நோய்த்தொற்று பரவி சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதுபோன்று அதிக அளவில் நடைபெறுவதால் சுற்றுச் சூழலில் பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்மந்தமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே, உடனடியாக ஆய்வு செய்து இந்தக் கருணை இல்லத்தை தடை செய்வதுடன், நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

Dead bodies smuggled -Jain Joseph

கருணை இல்லத்தை நிர்வகித்து வரும் தாமஸ் தலைமறைவு: இதையடுத்து இன்று காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜீவ், உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி மற்றும் சமூக நலத்துறையினர் என சுமார் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர்[3]. அசம்பாவிதம் ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அங்குள்ள முதியவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா, சரியான உணவுகள் வழங்கப்படுகின்றனவா, இறந்து விட்டால் அவர்களை எப்படி புதைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன[4]. மேலும் கருணை இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகிறார்கள்[5]. மனநலம் பாதிக்கப்படாதவர்களை வேறு இல்லத்திற்கு கொண்டு செல்ல ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்[6]. இந்த நிலையில் கருணை இல்லத்தை நிர்வகித்து வரும் தாமஸ் தலைமறைவாகி இருப்பதாக சொல்கிறார்கள்.

Dead bodies smuggled -enquiry-Daily Thanthi, 21-02-2018

தொண்டு நிறுவனத்தின் தாளாளர் பாதிரியார் கூறியதாவது[7]: கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்றோர், முதியோர்களுக்காக தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  காய்கறி வண்டியில் சடலம் கொண்டு செல்லப்பட்டது தற்செயலாக நடந்த நிகழ்வு.  பொருளாதார சிக்கலால் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான வண்டியில், காய்கறி மூட்டைகள், முதியவர்கள்  ஏற்றிவரப்பட்டனர் என பாதிரியார்  கூறினார்[8]. இவர் சப்பைக் கட்டுவது, அவர்களது கொடிய செயலே காட்டி விட்டது. தாமஸ் தலைமறைவானது அதனை மெய்ப்பிக்கிறது. அங்கிருக்கும் பிணம் பாதுகாக்கும் பெட்டி-போன்ற-அறை [ multi-tier vault] வங்கி லாக்கர் / அடுக்கறை போன்று இருக்கிறது[9]. அவை மறுபடியும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. அதை வைத்திருக்க அனுமதி உள்ளதா என்று தெரியவில்லை.

Saint Joseph,oldage-cremation-vault

இந்த இல்லத்திற்கு உண்டான லைசென்ஸே சில மாதங்களுகு முன்னர் காலாவதி ஆகியிருந்தது. 13 வருடங்களுக்கு ஒரு முறை, அந்த பிணப்பாதுகாப்பு பெட்டிகள் அப்புறப்படுத்தப் படவேண்டும் என்றுள்ளது. ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இறந்த பிணங்களுக்கு “இறப்பு சான்றிதழ்” பெறப்பட்டதா என்று கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது[10]. இவையெல்லாம் செய்யப்படவில்லை என்றால், சம்பந்தப் பட்ட தமிழக அரசு துறைகள் அவற்றில் வேலை செய்யும் ஊழியர்கள், அதிகாரிகள் முதலியோரின் ஊழல் தனமும் வெளியாகிறது. ஆக, கிருத்துவக் கொலை குரூரமும், ஊழல் பயங்கரமும் சேர்ந்து, நூற்றுக்கணக்கான பிணங்களுடன் விளையாடிருக்கிறது என்று தெரிகிறது. பிறகு, மனித உறுப்புகள், எலும்புகள், துகள்கள் எங்கு பிரிக்கப்படுகின்றன, தயாரிக்கப் படுகின்றன, என்று தெரியவில்லை. ஆக, இதற்கெல்லாம் காரணமாக இருப்பவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்வது சாதாரணமான விசயம் என்றாலும், சட்டம் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். வழக்கம் போல, சில நாட்களில் அச்செய்தியை அப்படியே மறந்தும் விடுவார்கள்.

© வேதபிரகாஷ்

22-02-2018

Dead bodies smuggled. enquiry -Vikatan, 21-02-2018

[1] தினகரன், உத்திரமேரூர் கருணை இல்லத்தில் ஆதரவளிப்பதாக தெரிவித்து முதியவர்களை கொன்று எலும்புகள் விற்பனை, 2018-02-22@ 01:43:16.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=378110

[3] விகடன், முதியவர்கள் கடத்தப்படுவதாக எழுந்த சர்ச்சை! தொண்டு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு!, பி.ஜெயவேல், Posted Date : 19:20 (21/02/2018); Last updated : 19:20 (21/02/2018)

[4] https://www.vikatan.com/news/tamilnadu/117110-state-revenue-department-officials-raid-at-kanchipuram-orphanage-over-various-allegations.html

[5] தி.இந்து.தமிழ், இறந்தவர் சடலத்துடன் முதியவர்களை அழைத்துச் சென்றதால் சர்ச்சையில் சிக்கிய கருணை இல்லம்: 6 துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு, Published :  22 Feb 2018  07:23 IST; Updated :  22 Feb 2018  07:23 IST.

[6] http://tamil.thehindu.com/tamilnadu/article22821834.ece

[7] தினத்தந்தி, காய்கறி வண்டியில் சடலம் கொண்டு செல்லப்பட்டது தற்செயலாக நடந்த நிகழ்வு பாதிரியார் விளக்கம் , பிப்ரவரி 21, 2018, 04:39 PM

[8] https://www.dailythanthi.com/News/State/2018/02/21163922/Vegetable-cart-The-body-was-taken-awayAccidental-event.vpf

 

[9] Indian Express, Questions over hospice with room for dead, By Express News Service  |   Published: 22nd February 2018 04:06 AM;  Last Updated: 22nd February 2018 04:06 AM

[10] They were surprised to find that the hospice did not just take care of the destitute elderly, but also had a multi-tier vault for storing corpses. The vaults appeared like bank lockers. After a certain number of years, the vaults were reused. While it is unclear if the hospice management obtained permission to build the vault, what raised concern among officials was the lack of monitoring on whose bodies were deposited there and how the remains were processed. The home’s licence expired a few months ago and its application for renewal has not yet been approved. “We raised concern about the absence of supervision on how the home handles bodies. We don’t even know if they obtain death certificates before depositing the corpses in the vault,” said a health department official. While rules mandate that the remains in the vault be cleared only once in 13 years, local residents claimed the management had been clearing them every few months. A representative of the home said they were open to a probe.

http://www.newindianexpress.com/cities/chennai/2018/feb/22/questions-over-hospice-with-room-for-dead-1777033.html

சாகும் தருவாயில் உள்ள கிழங்களை சாக வைப்பது, பிணங்களைப் பெட்டிகளில் அடைப்பது, அழுக வைப்பது, எலும்புப் பொடியை ஏற்றுமதி செய்வது – கிருத்துவ மரண திருவிளையாடல்கள் (1)

பிப்ரவரி 22, 2018

சாகும் தருவாயில் உள்ள கிழங்களை சாக வைப்பது, பிணங்களைப் பெட்டிகளில் அடைப்பது, அழுக வைப்பது, எலும்புப் பொடியை ஏற்றுமதி செய்வதுகிருத்துவ மரண திருவிளையாடல்கள் (1)

Saint Joseph,oldage-Thomas and two

ஜெயின் ஜோசப் ஹாஸ்பிக்ஸ் அல்லது செயின்ட் ஜோசப் ஹாஸ்பிக்ஸ்: செங்கல்பட்டு அருகே சென்ற காய்கறி வண்டி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த வண்டியில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என ஒரு பெண் குரல் கேட்டு உள்ளது[1]. உடனடியாக  பொதுமக்கள் சந்தேகம் அடைந்து  வாகனத்தை  பிடித்தனர். அப்போது வண்டியின் காய்கறிக்குள் மறைத்து கடத்தப்பட்ட ஆண் பிணத்தை, பொதுமக்கள் கைப்பற்றினர்[2]. உயிருடன் இருந்த 2 முதியவர்களும் மீட்கப்பட்டனர்[3].  சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து உள்ளனர். அந்த முதிய பெண்ணும் மீட்கப்பட்டார்[4]. வயதானவர்களை கொன்று எலும்புகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் கும்பல் என  தெரியவந்து உள்ளது. அந்த மினி லாரியில் இருந்த ராஜேஷ் என்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்[5]. தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்[6].  வாகனம் திண்டுக்கல்  ரிஜிஸ்ரேஷன் வாகனம். இரண்டு முதியவர்களும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஆதரவு அற்றவர்கள். என தெரியவந்து உள்ளது. அந்த வாகனம் ஜெயின் ஜோசப் ஹாஸ்பிக்ஸ்[7] [St. Joseph’s Hospice] என்ற தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த அமைப்பு ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ள முதியவர்களை  பராமறிக்கும் நிறுவனமாகும். இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் 7 ஆண்டுகளாக புகார் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Saint Joseph, Paleswaram

இறப்பவர்களை வைத்து செய்யும் ஊழியமும், குரூர வியாபாரமும்: ஹோஸ்பைஸ் என்ற அமைப்பு முதலில் 2006ல் மேட்டூர் கேட், கோடை ரோடு அருகில், திண்டுகல் மாவட்டத்தில் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு இறக்கும் தறுவாயில் சுமார் 325 பேர் [140 பெண்கள், 185 ஆண்கள்] இருக்கிறார்கள். வாரத்திற்கு எழு பேர், அதாவது தினமும் ஒருவர் இறந்து கொண்டிருக்கிறார்[8]. இரண்டாவதாக, செங்கல்பட்டில், பாலேஸ்வரத்தில் 2011ல், ஆரம்பிக்கப்பட்டது[9]. மூன்றாவது, 2014ல் தாம்பரத்தில், இரும்புலியூரில் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு 30 பேர் தங்கலாம்[10], அதாவது, தங்கி சாகலாம். நான்காவதாக, வேலூரில் தொடங்குவதாக திட்டம் உள்ளது. இவ்வாறு இறக்கும் தருவாயில் கைவிடப் பட்டவர்களை ஆதரித்து, வைத்து, பிறகு, இறந்த பிறகு, காரியங்கள் செய்வது நன்றாகத் தான் உள்ளது. ஆனால், அதன் பின்னணியில், இவ்வளவு குரூரம் இருப்பதை, யாரும் எதிர்பார்ந்திருக்க முடியாது. கிருத்துவர்கள் இவ்வாறெல்லாம் யோசிப்பார்களா என்று நினைத்துப் பார்க்கவே திகைப்பாக இருக்கிறது. இந்த அளவுக்கு குரூரம் வருகிறது என்றால், அவர்களுடைய வன்மம், ஆரம்பித்திலிருந்தே, அவ்வாறு வளர்த்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு மனிதனால் அவ்வாறு- அத்தகைய அரக்கத் தனமான காரியத்தை செய்யவே முடியாது.

Saint Joseph, Tambaram, Irumbiliyur

இரும்புலியூரிலிருந்து பாலேஸ்வரத்திற்கு பிணம் சென்றதேன்?: சாப்பாடு, தங்க இடம் மற்றும் பாதுகாப்பு அளிப்பதாக கூறி அழைத்து வந்து, பட்டினிப்போட்டு கொலை செய்து, அவர்களின் உடலில் உள்ள எலும்பு உள்பட பல உடல் பாகங்களை இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைக்கு கடத்தப்படுவதாக கருணை இல்லத்தின் மீது புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், கருணை இல்லத்தில் 8 மணி நேரம் ஆர்டிஓ தலைமையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.  சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பாலேஸ்வரம் கிராம மலையடிவார பகுதியில் தனியார் தொண்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் கடந்த 7 வருடங்களாக செயின்ட் ஜோசப் கருணை இல்லம் /  செயின்ட் ஜோசப் ஹாஸ்பைப் எனும் முதியோர் கருணை இல்லம், 16 ஏக்கர் பரப்பளவில் தாமஸ் என்பவர் நிர்வகித்து வருகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள், தெருக்களில் பிச்சை எடுப்பவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த கருணை இல்லத்தில் ஆண்கள், பெண்கள் என 369 பேர் தங்கியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இங்கு தங்கி வருகின்றனர். இதுதவிர, சமையல் செய்பவர்கள், முதியவர்களை பராமரிப்பவர்கள் உள்பட 30 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கருணை இல்லத்தின் கிளை தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் உள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் செயல்பட்டு வரும் கருணை இல்லத்தில் விஜயகுமார் (75) என்பவர் இறந்ததாக கூறப்படுகிறது. இவரது சடலத்தை பாலேஸ்வரம் கொண்டு செல்ல கருணை இல்லத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸில் ஏற்றி செல்லப்பட்டது.

Bones sold from dead bodies - Dinakaran ----21-02-2018

வேனில் இருந்து அலறல் சத்தம் கேட்டதும், பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர்:  ஆம்புலன்ஸ் உத்திரமேரூர் அருகே எடையார்பாக்கம் காட்டு சாலையில் வந்து கொண்டிருந்த போது, வேனில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் வேனை துரத்தி மடக்கி பிடித்தனர். வேனில் விஜயகுமார் சடலத்துடன் காய்கறி மூட்டைகளும், திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ்(72), திருவள்ளூரை சேர்ந்த அன்னம்மாள்(74) ஆகியோர் இருந்தனர். பிணத்துடன் பயணம் செய்ததால் பயத்தில் அலறியதாக அவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, கிராம மக்கள் சாலவாக்கம் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.  இதை தொடர்ந்து, போலீசார் மூதாட்டி அன்னாம்மாளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அன்னம்மாள்”  எனக்கு பயமாக உள்ளது. உடனே, எனது உறவினர் வீட்டிக்கு அனுப்பி விடுங்கள்’’ என்று அழுதப்படி கூறினார். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அன்னாம்மாளின் உறவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவரது உறவினர்கள் அன்னாம்மாளை நேற்று முன்தினம் இரவே அழைத்து சென்றனர்.

Old-men-Dead bodies smuggled -Dainakaran, 20-02-2018

ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டது: செல்வராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஒட்டுனர் ராஜேஷ் சடலத்தை பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது, அங்கு கூடியிருந்த மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலவாக்கம்- உத்தரமேரூர் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில், ஆம்புலன்சின் முன் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது.  சம்பவ இடத்துக்கு வந்த சாலவாக்கம் எஸ்ஐ கண்ணன், தாசில்தார் அகிலா தேவி மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து. அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து, ஆம்புலன்சில் பிணமாக இருந்த விஜயக்குமார், எலும்பு கூடுக்காக சாகடிக்கப்பட்டாரா, இயற்கையாக இறந்தாரா என்பது குறித்து ஆய்வு  செய்ய சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

© வேதபிரகாஷ்

22-02-2018

Dead bodies smuggled. elder released -Hindu tamil, 21-02-2018

[1] தினத்தந்தி, செங்கல்பட்டு அருகே காய்கறிக்குள் வைத்து பிணம் கடத்தல் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர், பிப்ரவரி 20, 2018, 03:47 PM.

[2] https://www.dailythanthi.com/News/State/2018/02/20154714/Near-Chengalpattu-Keep-it-in-the-vegetable-Corpse.vpf

[3] தமிழ்.வெப்துனியா, மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!, புதன், 21 பிப்ரவரி 2018.

[4] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/8th-international-womens-conference-by-the-art-of-living-118022000064_1.html

[5] தினகரன், செங்கல்பட்டு அருகே காய்கறி வண்டியில் முதியவர் பிணம் கடத்தல்: பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர், 2018-02-20@ 15:26:11

[6] http://www.dinakaran.com/latest_Detail.asp?Nid=377679

[7] St. Joseph’s Hospice, Paleswaram Village, Salavakkam(via), Uthirameroor (Tk), Kancheepuram District, Tamilnadu 603107;  +91­ 9360376678/+91­ 9976211721 /+91 9684307554;  fatherthomas1950@gmail.com

[8] Our first Hospice situated at Mettur Gate, near Kodai Road , in Dindigul District was started in 2006 and has now 325 dying destitute of which 140 are women and 185 men. Every week there is an average of 7 persons who die here in human dignity .

http://www.stjosephshospices.com/web/index.php?r=site%2Fabout

[9] We started a second Hospice not far from Chingleput, only 90 minutes drive away from Chennai airport in 2011. 16 acres of land was donated by a kind soul where 500 patients from the cities of Chennai,Pondichery,Vellore etc. can be accommodated. Situated 16kms.close to Vedanthangal, a world famous bird sanctuary, the second Hospice is a sanctuary for ill and homeless destitute who otherwise die on the pavements and gutters, uncared, unloved and unmourned.

http://www.stjosephshospices.com/web/index.php?r=site%2Fabout

[10] A third, small Hospice at Tambaram near the Chennai airport was started as a collection centre in December 2014 where only about 30 patients are accommodated. When the traffic is a bit calm,during the wee hours of the morning, we bring them to our bigger second Hospice in batches of 6 to 8 patients. We are looking forward to starting similar holding Hospices in the North Chennai area and the city of Pondichery. Our good news is that the Salesians of Chennai Province has come forward to give us a 3.75 acre plot of land with a building near Vellore. We hope to start a 4th Hospice there in April 2016 for about 150 dying destitute.

http://www.stjosephshospices.com/web/index.php?r=site%2Fabout

போப்பே பழைய போப்புகளுக்கு துறவி அந்தஸ்து கொடுக்கிறாராம்!

ஜூலை 6, 2013

போப்பே பழைய போப்புகளுக்கு துறவி அந்தஸ்து கொடுக்கிறாராம்!

துறவித்துவம் அல்லது துறவி அந்தஸ்து (Sainthood) அளிக்கப்படுவது என்பது கத்தோலிக்கக் கிருத்துவத்தில் ஒரு சிறப்பான நிகழ்சியாகக் கருதப் படுகிறது. ஒருவருக்கு அவ்வாறான நிலை, அந்தஸ்து அல்லது பதவி கொடுக்கப்படுவது பிரபலமாக அறிவிக்கப்படுகிறது. போப் 05-07-2013 வெள்ளிக்கிழமை அன்று இரண்டு போப்புகளுக்கு – போப் ஜான் பால் II [Pope John Paul II] மற்றும் போப் ஜான் XXIII [Pope John XXIII] துறவி அந்தஸ்து (Sainthood) கொடுக்கப்பட்டுவதாக அறிவித்தார்.

ஒன்றிற்கு மேற்பட்டஅற்புத / அதிசயநிகழ்சியை நடத்தியிருந்தால் துறவி அந்தஸ்து கொடுக்கப் படும்: அவ்வாறு அவர்கள் அறிவிக்கப்பட வேண்டுமானால், குறைந்த பட்சம் ஏதாவது ஒன்றிற்கு மேற்பட்ட அற்புத / அதிசய நிகழ்சியை நடத்தியிருக்க வேண்டும்[1]. போப் ஜான் XXIII 1958-1963 ஆண்டுகளிலும், போப் ஜான் பால் II 1978-2005 ஆண்டுகளிலும் போப்பாக இருந்தனர்[2]. ஆனால், இவ்விருவரும் இரண்டாவது அற்புத நிகழ்சியை (miracle) நடத்தவில்லையாம். இருப்பினும் போப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்து, சரத்துக்களைத் தளர்த்தி துறவி அந்தஸ்து (Sainthood) கொடுக்கத் தீர்மானித்துள்ளாராம்[3]. இப்பொழுது இரண்டு போப்புகள் இருப்பதால், இருவரும் துறவி அந்தஸ்து கொடுக்கும் நிகழ்சியில் பங்கு கொள்ளலாம். இது கிட்டத்தட்ட, கலைமாமணி விருது கொடுப்பது போல ஆகிவிட்டது எனலாம்.

கிழக்கத்தைய மதங்களில் துறவிகள் துறவிகளாகத்தான் அறியப் படுகின்றனர்: கிழக்கத்தைய மதங்களில் துறவிகள் அவர்களுடைய செயல்களால் அவர்கள் அறியப்படுகின்றனர். யாரும் அவர்களுக்கு அத்தகைய பட்டத்தையோ, சான்றிதழையோ, அங்கீகாரத்தையோ அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்கள் அவ்வாறு மதிக்கப்படுகிறார்கள், மரியாதை செய்யப் படுகிறார்கள். சில துறவியர், இறந்த பின்னரும் “ஜீவன் முக்தி” என்ற நிலையில் இறந்தும் இறவாமல், தமது சீடர்களுக்கு, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்கள். அத்தகைய அனுபவங்களை இந்தியாவில் இன்றும் பக்தர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

ஆதாரங்கள் இல்லையென்றல் உருவாக்கும் கத்தோலிக்கக் கிருத்துவம்: ஆனால், கிருத்துவத்தில் எல்லாவற்றிற்கும், விளம்பரம் செய்யப்படுகிறது, தேவைப்படுகிறது. ஒருவேளை, ஏதாவது இல்லை அல்லது தேவை என்றல் அவற்றை உருவாக்கி விடுகிறார்கள். இதனால் தான் போலிகள், கள்ளத்தனமான ஆவணங்கள், பொய்யான பொருட்கள், முதல்லியன்ன உருவாக்கப்பட்டுகின்றன. ஏனெனில், அவை இல்லையென்றால் நம்பிக்கையாளர்கள் நம்புவதில்லை. ஆரம்பத்திலிருந்து இப்படி பொய்யான விஷயங்கள் மீது ஆதாரமாக கிருத்துவ்ம் தோன்றியதால், உண்மை என்று அறிய முற்படும் போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தங்களது ஆதிக்கப்பலம், செல்வபலம், அரக்கத்தனமான சக்தி முதலியவற்றை வைத்துக் கொண்டு சமாளித்து விடலாம் என்ன்ற எண்ணம் தான் அவர்களை அப்படி தொடர்ந்து குற்றங்களை செய்யத் தூண்டுகிறது.

இந்தியக் கிருத்துவர்களின் இருதலைக் கொள்ளி எறும்பு நிலை: இந்தியாவில் இருப்பவர்களுக்கு உண்மை என்னவென்று நன்றாகவே தெரியும். அதனால் தான், தங்களது பொய்களை இங்கு விற்பதற்கு, ஆக்ரோஷமான யுக்திகளைக் கையாளுகின்றனர். புதிய பொருளை விற்பதற்கு எப்படி ஊற்பத்தியாளர் எல்லாவழிகளிலும் பொருளை விற்பதற்கு அதிரடி விளம்பரங்கள் முதலியவற்றை செய்வார்களோ, அதே பாணியில் இவர்களும் செயல்படுகின்றனர். மனம், ஆத்மா, உண்மை, உள்ளுணர்வு என்றெல்லாம் இருக்கும் இந்தியமதக் கொள்கைகளின் முன்பு அதனால்தான், ஒரு காலகட்டத்தில் செய்யலிழக்கிறது. இல்லையென்றால், இடைக்கால இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு, இந்து மதம் ஈடு கொடுத்திருக்க முடியாது. பிறகு வந்த ஐரோப்பிய கிருத்துவ அச்சுரத்தனத்திற்கு முன்பாகவும் நிலைத்திருக்க முடியாது. ஆனால், உலகத்தில் எங்குமே இல்லாத அளவிற்கு, இரண்டையும் எதிர்த்து இன்றும் இந்திய / இந்து மதம் தழைத்திருப்பதால், அவைகள் தாம், இந்துவேடமிட்டு, இந்துக்களை ஏமாற்ற முயல்கிறதே தவிர, இந்துக்கள் யாரும் அவர்கள் போல வேடமிட்டு ஏமாற்றுவதில்லை.

வேதபிரகாஷ்

© 06-07-2013


இந்திய / இந்து பெண்மணி கிருத்துவ / கத்தோலிக்க மருத்துவரால் கருகலைப்பு-மறுப்பு என்ற வாதத்தினால் கொல்லப்பட்டப் பின்னணி என்ன?

நவம்பர் 22, 2012

இந்திய / இந்துபெண்மணி கிருத்துவ / கத்தோலிக்க மருத்துவரால் கருகலைப்பு – மறுப்பு என்ற வாதத்தினால் கொல்லப் பட்டப் பின்னணி என்ன?

நான் கிருத்துவ மதத்தவள் அல்லள்,  நா ன்ஒரு இந்து,  என்னைக் காப்பாற்றுங்கள்”: திருமதி சவிதா (31 வயது) என்ற இந்தியப்பெண்மணி கருவுற்று பிரச்சினை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பிரச்சினை தீரவேண்டும் என்றால் கருக்கலைக்கப்பட வேண்டும் இல்லையென்றால், தாயின் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தது. உடனே சவிதாவின் கணவர் மற்றும் குடும்பத்தார் கருக்கலைப்பு அறுவைசிகிச்சைக்கு (அபார்ஷண் / abortion) ஒப்புக்கொண்டனர். வயிற்றில் வலி அதிகமனாதால், சவிதா, “நான் கிருத்துவ மதத்தவள் அல்லள்,  நான் ஒரு இந்து,  என்னைக் காப்பாற்றுங்கள்”, என்று கதறியும் அந்த கத்தோலிக்க மருத்துவர்கள் இரக்கம் கொள்ளவில்லை[1]. ஆனால், மருத்துவமனையினர், மருத்துவர்கள் முதலியோர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை[2]. பல்மருத்துவரான சவிதாவிற்கு 17 வார கர்ப்பம் (சுமார் நான்கு மாதம்) இருந்தது. செப்டிகேமியா (septicaemia[3]) என்ற அசுத்தமான ரத்தம் பரவியப் பிரச்சினையினால் இறக்க நேர்ந்தது[4]. இதுவே அவர் இறந்து இரண்டு நாட்கள் கழித்து சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதாவது, அவர் தனக்கு இயலவில்லை என்று சொன்னபோதே, ரத்தத்தில் பாக்டிரியா கலப்பதைக் கண்டுபிடித்திருந்தால், அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், “கருக்கலைப்பு” என்பதே அந்த கிருத்துவ மருத்துவர்களின் மனங்களில் ஆழமாக இடம் பெற்றிருந்ததால், இந்த பிரச்சினையை நினைக்க மறந்து விட்டார்கள் போலும். அதாவது, அந்த அளவிற்கு கிருத்துவ நம்பிக்கைகள், மருத்துவ அறிவின் மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளது, புத்தியை மழுங்கடுத்தியுள்ளது. மிகநாகரிகமான, அதிகமாக முன்னேறிய, மெத்த படித்த, மேனாட்டு கலாச்சாரம் கொண்டவர்களே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?

பெண் கருவுற்றால் ஏன் கருக்கலைப்புச் செய்யக் கூடாது?: அந்நாட்டில் கத்தோலிக்கமதச் சட்டம் அமூலில் உள்ளதால், ஒரு பெண் / தாய் கருவுற்றால், அக்கருவைக் கலைக்கக் கூடாது. பெண் / தாய் இறந்தால் கூட அக்கரு அதுவரை விட்டு வைத்திருக்க வேண்டும், அதற்குப் பிறகு, தாய் இறந்தால் கூட, கருவைக் காப்பாற்ற வேண்டும், இல்லை பெண்ணுடன் / தாயுடன் அது கலைந்து / இறந்து விட்டால் விட்டுவிடலாம். இது ஏதோ ஒரு சாதாரண பிரச்சினை என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போது, விவாதங்களில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை இந்த கருக்கலைப்பு (அபார்ஷண் / abortion) ஒன்றாகும். ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுபவர், தாங்கள் இதனை ஆதரிக்கின்றாரா இல்லையா என்று பதிலளிக்க வேண்டும்.

கருக்கலைப்பிற்கு ஆதரவாக கிளம்பியுள்ள வாதம்: உலகம் முழுவதும் இம்மரணத்திற்கெதிராக குரல் எழும்பியுள்ளது. குறிப்பாக, அத்தகைய சட்டத்தை விலக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குள், இந்த மரணத்தை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், சவிதாவின் மரணத்திற்குக் காரணமான மூன்று மருத்துவர்கள் இடம் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பரவீன் ஹலப்பனவர் என்ற சவிதாவின் கணவர் அவர்கள் நீக்கப்பட வேண்டும் என்று கோரினார்[5]. இப்பொழுது அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்[6].

கிருத்துவர்களின்அடிப்படைவாதம்வெளிப்படும்விதம்: ஜான் தயாள்[7] என்ற கிருத்துவ அடிப்படைவாதி (John Dayal, Member of National Integration Council of India and former president of All India Catholic Union), மருத்துவர்களை குறைசொல்லுங்கள், மதத்தைக் குறைகூறாதீர்கள், என்று வாதிட்டது வேடிக்கையாக இருந்தது[8].கர்நாடக பிஷப்புகள் அயர்லாந்து ஒரு கிருத்துவநாடு என்பதால் கிருத்துவத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை (Ireland being Catholic has nothing to do with Savita’s death: Church) என்று வாதிட்டனர்[9]. சுமார் ஒரு மாதம் கழித்து, ஐரிஷ்நாட்டு பிஷப், இது ஒரு துரதிருஷ்டமான நிகழ்ச்சி என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கர்ப்பிணி பெண்களுக்கு அயர்லாந்து பாதுபாப்பான இடமில்லை என்ற விமர்சனத்தை ஒப்புக்கொள்ளவில்லை[10].

மேரி கருக்கலைப்பு செய்திருந்தால் ஏசுகிருஸ்து பிறந்திருக்க மாட்டார்: சரி, அதென்ன பெண் / தாய் இறந்தால் கூட அக்கரு (fetus) அதுவரை விட்டு வைத்திருக்க வேண்டும் என்பதெல்லாம்? இதன் பின்னணியில் தான், முக்கியமான கிருத்துவ / கத்தோலிக்க நம்பிக்கை உள்ளது. அதாவது, கிருத்துவப் புராணத்தின் படி, மேரி மற்றும் ஜோஸப் அல்லது ஜோஸப் மற்றும் மேரி மனைவி-கணவன் ஆவர். அதாவது, மேரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அவ்வாறு “மேரி மற்றும் ஜோஸப்” என்றுதான் குறிப்பிடுவர். இருவரும் தம்பதியராக இருந்து வாழ்ந்து வந்தாலும், திடீரென்று மேரி கருவுற்றாள். ஆனால், அக்கரு கணவன் ஜோஸப்பினால் உண்டானது அல்ல. இருப்பினும், ஆவி வந்து புணர்ந்ததால் அல்லது கருவில் நுழைந்ததால், மேரி கருவுற்றாள் என்று கிருத்துவப் புராணம் கூறுகிறது. அந்த ஆவி “பரிசுத்தஆவி” (Holy Spirit) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தன்னால் உருவாகாத கருவை, தனக்குப் பிறக்காத குழந்தை என்று பிறகு பேசப்படும் என்று ஜோஸப் அதனை அழிக்க நினைத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால், ஏசு அல்லது கிறிஸ்து பிறந்திருக்க முடியாது. அதனால் தான், கருக்கலைப்புக் கூடாது என்று கத்தோலிக்கள் உறுதியாகக் கொண்டுள்ளனர்.

மிகச் சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception): அதுமட்டுனல்லாது, மேரி குழந்தையைப் பெற்றெடுத்தப் பிறகும், கன்னி (Virgin) என்றே அழைக்கப்படுகிறாள். அதாவது, ஜோஸப்பிற்கு ஏற்புடையதாக அவ்வாறான நம்பிக்கை ஏற்பட்டதா அல்லது “மிகச் சுத்தமான கருவுருவாக்கம” (Immaculate Conception) மற்றும் பெற்றெடுப்பு என்ற சித்தாந்தத்தில் அவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டதா என்பது கத்தோலிக்க இறையியலில் (Theology) தர்க்கத்திற்குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. நான் எந்த ஆணையும் அறிந்திலேன் (I know no man) என்பது, உண்மையில், நான் எந்த ஆணையும் புனையவில்லை என்று ஈப்ரூ / யூத மொழியில் இருந்தது, அதனை பிறகு மாற்றி விட்டனர் என்று இறையியல் வல்லுனர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆகவே மிகச்சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception) என்பது கத்தோலிக்கர்களின் மிகமுக்கியமான அடிப்படை இறையியல் கோட்பாடு, நம்பிக்கையாகும்.  போப் பயஸ் IX (Pope Pius IX) 1854ல் அறிவிக்கப்படாமல் இருந்தாலும், நூற்றுக்கணகான வருடங்களாக அந்நம்பிக்கை சர்ச்சில் இருந்துவந்துள்ளது என்று வாதிக்கப்பட்டது[11]. அதாவது டிசம்பர் 8, 1854ல் தான் மிகச்சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception) என்பது ஒரு இறையியல் கோட்பாடாக விவரிக்கப்பட்டு, பிரகடனப்படுத்தப்பட்டது[12].

கன்னித்தாய்கள் உருவாகும் விதம்: அமெரிக்காவில் “கன்னித்தாய்”க்கள் அதிகமாக இருப்பதற்கும் இதுதான் காரணம் என்கின்றனர்[13]. அதாவது, அமெரிக்காவில் இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே, ஒரு வாலிபனுடன் “டேடிங்” என்று வைத்துக் கொண்டு உடலுறவு கொள்வாள். அதனால் கருதரிக்கும். ஆனால், ஆசாரமான குடும்பங்களில் கருக்கலைப்பு செய்யாமல் குழந்தைப் பெற்றெடுத்துக் கொள்ள செய்வர்[14]. இதனால் “டீன்-ஏஜில்” உள்ள இளம்பெண்கள் எல்லாம் குழந்தைகள் வைத்திருப்பர். இப்பிரச்சினை அமெரிக்க சமூகவியல், மனோதத்துவ அறிஞர்கள் ஆய்ந்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

கிருத்துவ பிஷப்புகள்,  பாஸ்டர்கள் முதலியோர் கன்னியாஸ்திரிக்களை இவ்விஷயத்தில் தொந்தரவு செய்வது: கிருத்துவ சாமியார்கள் இதனை சாக்காக வைத்துக் கொண்டு, கன்னியாஸ்திரீக்களை மூளைச்சலவை செய்து உடலுறவுக் கொண்டுள்ளனர். அதனால், பல கன்னியாஸ்திரீக்களின் கற்பு கெட்டுள்ளது, வாழ்க்கையும் சீரழிந்துள்ளது. இருப்பினும், இறையியல்வாதத்துடன், அத்தகைய கற்பழிப்புகள் மறைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இத்தகைய வன்புணர்ச்சிகளைப் பற்றி ஏராளமான விவரங்கள் உலகம் முழுவதும் மட்டுமல்லாது, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலேயே விவரங்கள் வெளிவந்துள்ளன. வழக்குகள் நடைப் பெற்று வருகின்றன. கேரளாவில், ஒரு கன்னியாஸ்திரீ, இதைப் பற்றி ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார்.

இஸ்லாமிய மற்றும் கிருத்துவ நாடுகளுக்குச் செல்லும் இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது: இந்தியர்கள் குறிப்பாக, இந்துக்கள் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ நாடுகளுக்குச் செல்லும் போது, தங்கும்போது, குடிபெயரும்போது, தங்களது குடும்பத்தை எடுத்துச் செல்லும் போது, அங்கிருக்கும் மதரீதியிலான சட்ட-திட்டங்களை அறிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவர்கள் பைபிள் மற்றும் குரான் படித்து அவற்றின் அடிப்படை நம்பிக்கைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். வெறுமனே வேலை கிடைத்து விட்டது, பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் சென்றுவிட்டால், இத்தகையப் பிரச்சினைகளை, கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். இவ்வாறான கொடுமைகள் பல நடந்திருக்கின்றன. இன்றுகூட வளைகுடா நாடுகளில் இந்துக்கள் இஸ்காமிய சட்ட-திட்டங்களுக்குட்பட்டுதான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட இடங்களுக்கு, சாலைகளின் வழியாகச் செல்வதற்கு தடைகள், கட்டுப்பாடுகள் முதலிய உள்ளன. அவற்றை அவர்கள் சொல்வதில்லை, ஊடகங்களில் வருவதில்லை. இப்பொழுது உதாரணமாக ஒன்று வந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட மதத்தை குறைச்சொல்ல இவற்றை எடுத்துக்காட்டப்படவில்லை. எப்படி சம்பந்தப்பட்டவர்களே, இருவிதமாக பேசுகின்றனர், நடந்து கொள்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டவே சொல்லப்படுகிறது.

மேனாட்டு நவநாகரிகம், படோபட ஆடம்பர உடைகள், ஆங்கிலம் பேசி நடையுடை பாவனைகள், நற்பண்புகள் கொண்டவர் போன்ற நடத்தைகள், போலித்தனமாக வெளிப்படுத்தும் குணாதிசயங்கள், மணக்கும் வாசனைகளுடன் உலா, ……..என்று இந்தியர்களை, குறிப்பாக இந்துக்களை ஏமாற்றி வரும் கிறிஸ்தவர்கள், கிருத்துவர்கள், முஸ்லீம்கள்……..முதலியோர்களை  கண்டுகொள்ள வேண்டும். என்னத்தான் அவகள் அப்படி உலா வந்தாலும், அவர்களது மனங்களில் மதரீதியிலான

  • மதவாதம்
  • மததுவேஷம்
  • மதக்கொடுமை
  • மததண்டனை
  • கத்தோலித்துவம்
  • பழமைவாதம்
  • அடிப்படைவாதம்
  • தனிமைவாதம்
  • தீவிரவாதம்
  • பயங்கரவாதம்

முதலியவற்றில் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் மதசார்புள்ள நாடு (கிறிஸ்தவ, கிருத்துவ, முஸ்லீம், இஸ்லாமிய) எனும் போது அத்தகைய இடைக்கால, பழங்கால, இக்காலத்திற்கு ஒவ்வாதவை என்று போதிக்கப்படுபவையே அவர்களின் சட்டங்களின் வழியாக,

  • கிறிஸ்தவர்-அல்லாதவர்
  • கிருத்துவர்-அல்லாதவர்
  • முஸ்லீம்-அல்லாதவர்
  • இஸ்லாமியர்-அல்லாதவர்
  • காபிர்
  • ஜென்டைல்
  • ஐடிலேடர்
  • நம்பிக்கையில்லாதவர்

மீது தப்பாமல் பாயும். அவர்கள் மதவாத நீதுமன்றங்களுக்கு நீதி கிடைக்காது. ஏனெனில் அதுதான் நீதியாகும்! அப்படித்தான் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள்.

வேதபிரகாஷ்

© 22-11-2012


[3] Septicemia (also septicaemia or septicæmia [ˌsɛp.tə.ˈsi.miə]) is a related medical term referring to the presence of pathogenic organisms in the bloodstream, leading to sepsis. Sepsis (/ˈsɛpsɨs/; from the Greek σῆψις: the state of putrefaction and decay) is a potentially deadly medical condition characterized by a whole-body inflammatory state (called a systemic inflammatory response syndrome or SIRS) that is triggered by an infection.The body may develop this inflammatory response by the immune system to microbes in the bloodurinelungsskin, or other tissues. A popular term for sepsis is blood poisoning. Severe sepsis is the systemic inflammatory response, infection and the presence of organ dysfunction. http://en.wikipedia.org/wiki/Sepsis

[4] Savita Halappanavar (31), who was a dentist, was 17 weeks pregnant when she died from septicaemia, according to an autopsy carried out two days after her death on Oct 28, 2012.

[7] இந்த ஜான் தயாள் லக்ஷமணாந்தாவை கொலைசெய்யப்படுவார் என்று முன்னமே அறிவித்த கிருத்துவ அடிப்படைவாதி அதுமட்டுமல்லாது, ஒரு கன்னியாஸ்திரீ கற்பழிக்கப்பட்டாள் என்று பிரச்சாரம் செய்து, பிறகு ஆல்மாறாட்டம் செய்ய காரணமாக இருந்தார் என்ரும் ஊடகங்களில் சொல்லப்பட்டது. பிறகு அந்த விஷயம் அப்படியே அமுக்கப்பட்டது, ஏனெனில், மருத்துவ பரிசோதனை செய்தபோது, “கற்பழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கன்னியாஸ்திரீ ஏற்கெனவே உடலுறவுக் கொண்டுள்ளதாதாக” தெரிந்தது.

[10] http://www.thehindu.com/news/international/irish-church-breaks-silence-over-savitas-death/article4112860.ece

The Archbishop rejected criticism that Ireland was not a safe place for pregnant women and said he was “a little distressed at some of the reaction.” Despite international outrage, he was “not ashamed to be Irish”, he said.

[11] Cardinal Newman, Development of Doctrine, p.145.

[12] James J. McGovern (Compliler), The Catholic home Dictionary and Cyclopedia, Chapter.XVIII, p.371, in The Manual of the Holy Catholic Church, USA, 1900.

Differentiation is made between active and passice conceptions, where in the former human parents are involved, whereas in the latetr, only human woman and the Holy Ghost or Holy Spirit is involved according to the Christian theology.

[13]  U.S. states whose residents have more conservative religious beliefs on average tend to have higher rates of teenagers giving birth, according to a new study forthcoming in the journal Reproductive Health.

http://www.usnews.com/opinion/blogs/erbe/2009/09/18/too-much-religion-leads-to-high-teen-pregnancy-rates

http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0002484/#adam_001516.disease.causes