Posts Tagged ‘உயிர்த்தெழும் எஅம்பிக்கை’

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

நவம்பர் 11, 2022

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

இந்து குடும்பம் மதம் மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5].  சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6].  போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.

பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8].  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர்.  இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.

உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.

மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].

2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12].  இங்கும், அது பொறுந்தும்..

© வேதபிரகாஷ்

11-11-2022


[1] மாலைமலர், இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர , Byமாலை மலர்11 நவம்பர் 2022 8:01 AM.

[2] https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-search-youth-for-harassment-case-535220?infinitescroll=1

[3] தினத்தந்தி, இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர், தினத்தந்தி நவம்பர் 11, 1:29 am.

[4] https://www.dailythanthi.com/News/State/the-doctors-family-was-with-the-dead-womans-body-for-2-days-834297

[5] விகடன், மதுரை: உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!, செ.சல்மான் பாரிஸ், Published: 11-11-2022- Today at 10 AM; Updated: Today at 10 AM

[6] https://www.vikatan.com/news/tamilnadu/family-members-kept-body-for-three-days-hoping-that-she-will-come-back-in-prayers

[7] பாலிமர் செய்தி, இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்…! மதுரையில் சம்பவம், நவம்பர்.11, 2022 06:28:51 AM; https://www.polimernews.com/dnews/191621

[8] https://www.polimernews.com/dnews/191621

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!, By Rajkumar R, Published: November 11 2022, 12:07 [IST].

[10] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/the-husband-prayed-for-3-days-that-the-dead-woman-would-come-back-to-life-484738.html

[11] வேதபிரகாஷ், இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?, ஜனவரி 1, 2021.

[12] https://christianityindia.wordpress.com/2021/01/01/would-the-dead-raise-again-christians-keeping-dead-bodies-tamilnadu-case/