Posts Tagged ‘உயிர் தியாகம்’

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

மே 15, 2023

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

கென்யாவில் பட்டினி வழிபாடு நடத்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட கிறிஸ்துவ மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெக்கன்சி [Paul Mackenzie Nthenge] என்பவர் வசித்து வந்தார்[1]. அவருக்கு சொந்தமான, 800ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் ஏப்ரல்  26ம் தேதி தகவல் கிடைத்தது[2]. அப்பொழுதே போலீசார் விசாரித்து, சோதனை செய்த பொழுது, 45 உடல்கள் கிடைத்தன[3], 58 புதைக்குழிகள் கண்டெடுக்கப் பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. ‘பட்டினி கிடந்தால் இயேசுவை அடையலாம்’ என, பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது[5]. பைபிளில் வரும் இறுதி நாட்கள், இறப்பு, உயிர்த்தெழல் முதலியவற்றை விளக்கி, கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சங்கம் முதலியன சாத்தானின் ஏஜென்டுகள் என்று போதித்து வந்தார்[6].

பட்டினி கிடந்து இறந்தால் ஏசுவை சந்திக்கலாம், சொர்கத்திற்குப் போகலாம்: இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் [the Good News International Church ] பாதிரியாரான பால் தெங்கி மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்[7].  அவரது சீடர்களாகி உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி [Doomsday cult] அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது[8].  பட்டினி கிடந்தால் இறக்கும் நிலை ஏற்படும். ஆனால், இறக்காமல் கர்த்தர் நம்மை காப்பாற்றுவார். உயிர் கொடுப்பார், மீட்பார், சுவர்க்கத்திற்கு கூட்டிச் செல்வார் என்றெக்ல்லாம் போதித்து, அவர்களை மூளை சலவை செய்து வைத்தார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்[9]. அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர்[10]. இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்[11]. மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, பண்ணை முழுதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. இதில், 14-05-2023 அன்று மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது.

பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது: பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உடல் மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது. பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைளை குறி வைக்கும் இந்த குரூரக் கூட்டம்: கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி [Interior Cabinet Secretary Kithure Kindiki] சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறினார். தொடர்ச்சியான திகிலூட்டும் இதுபோன்ற வெளிவந்து கொண்டிருக்கும் விசயங்களை பற்றி பாதிரியார் டைட்டஸ் கடானா என்பவர் கூறும்போது, போலி மத சாமியார்களின் முதல் இலக்காக குழந்தைகளே இருந்து உள்ளனர். அவர்களை எளிதில் வசீகரித்து உள்ளனர். சூரியனின் முன் விரதம் இருக்கும்படி குழந்தைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி கூறப்பட்டு உள்ளது.

சீடர்களை, பக்தகளை துன்புறுத்திய விதம்: இந்த தற்கொலை திட்டத்தின் அடுத்த பகுதியாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடுத்தடுத்து இருந்தனர் என பாதிரியார் கடானா கூறியுள்ளார். இந்த கிறிஸ்தவ சமய மரபு சார்ந்த விசயங்களில் 2015-ம் ஆண்டில் கடானா இணைந்து உள்ளார். ஆனால், அது தவறான போக்கை கொண்டுள்ளது என உணர்ந்த அவர் எச்சரிக்கையுடன் விலகி இருக்கிறார். அதனால் தற்போது அவர், போலீசார் விசாரணைக்கு உதவி வருகிறார். அவர் கூறும்போது, குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்தனர். அதன்பின்னர், அவர்களை போர்வையில் சுற்றி புதைத்தனர். இதில், மூச்சு விட்டு கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார். மெக்கன்சியின் சீடர்களை, பாலித்தீன் சீட்டுகளால் தயாரான தற்காலிக வீடுகளில் தங்க வைத்த நிலையில், மெக்கன்சியோ நன்றாக மேற்கூரை போடப்பட்ட, நாற்காலி, தொலைக்காட்சி மற்றும் டைல்ஸ் பதித்த கழிவறை என ஆடம்பரத்துடன் வசித்து வந்து உள்ளார் என தி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் தொடர்பு உள்ளதா?: சில உடல்களின் கைகள் மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால், தண்டனையாக அவ்வாறு செய்திருக்கலாம். ஒரு சில உடலின் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இதனால், உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் செயலும் உள்ளது என கூறப்படுகிறது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், காடு முழுவதும் உடல்களை தேடி அதிகாரிகள் அலைந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கன்சி, அவரது மனைவி மற்றும் மெக்கன்சியின் பல்வேறு கூட்டாளிகளையும் போலீசார் 19-04-2023 அன்று செய்து கைது உள்ளனர். விசாரணை, தேடும் படலங்களும் தொடர்கின்றன.

© வேதபிரகாஷ்

15-05-2023


[1] தினமலர், கென்யாவில் பட்டினி வழிபாட்டில் பலி எண்ணிக்கை 201 ஆக உயர்வு, மாற்றம் செய்த நாள்: மே 15, 2023 05:33

[2] https://m.dinamalar.com/detail.php?id=3320972

[3] ஏபிபிலைவ், கென்யாவில் ஏசு கிறுஸ்துவை காண உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த 47 பேர்!,By: பாண்டிம்மா தேவி | Updated at : 24 Apr 2023 12:25 PM (IST);  Published at : 24 Apr 2023 12:25 PM (IST)

[4] https://tamil.abplive.com/news/world/to-meet-jesus-47-cult-members-in-kenya-allegedly-starve-to-death-5-facts-113425

[5] தினத்தந்தி, கடவுளை காணலாம்கென்யாவில் கொடூரம்; தோண்ட, தோண்ட குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு, தினத்தந்தி மே 15, 6:32 pm.

[6] Mackenzie’s apocalyptic narratives focused on the end of times, and were against the modern or western ways of life such as seeking medical services, education or music. His conspiracy theories emphasised the Catholic Church, the US and the United Nations as “agents of Satan.

https://theconversation.com/kenya-cult-deaths-a-new-era-in-the-battle-against-religious-extremism-205051

[7] https://www.dailythanthi.com/News/World/god-can-be-found-atrocity-in-kenya-201-bodies-including-children-were-dug-up-and-recovered-964949

[8] தந்தி டிவி, கடவுளை நேரில் பார்க்க ஆசைப்பட்டு – 201 பேர் பலி, By தினத்தந்தி, 15 மே 2023 2:02 PM.

[9] https://www.thanthitv.com/latest-news/desperate-to-see-god-in-person-201-people-died-186330

[10] குமுதம், கென்யா: இயேசுவை காண பட்டினி கிடந்த 90 பேர் மரணம் – 213 பேரை தேடும் பணி தீவிரம், S. Joseph Raj, மே 15, 2023.

https://www.kumudam.com/news/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-213-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

[11]

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

நவம்பர் 11, 2022

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

இந்து குடும்பம் மதம் மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5].  சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6].  போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.

பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8].  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர்.  இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.

உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.

மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].

2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12].  இங்கும், அது பொறுந்தும்..

© வேதபிரகாஷ்

11-11-2022


[1] மாலைமலர், இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர , Byமாலை மலர்11 நவம்பர் 2022 8:01 AM.

[2] https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-search-youth-for-harassment-case-535220?infinitescroll=1

[3] தினத்தந்தி, இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர், தினத்தந்தி நவம்பர் 11, 1:29 am.

[4] https://www.dailythanthi.com/News/State/the-doctors-family-was-with-the-dead-womans-body-for-2-days-834297

[5] விகடன், மதுரை: உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!, செ.சல்மான் பாரிஸ், Published: 11-11-2022- Today at 10 AM; Updated: Today at 10 AM

[6] https://www.vikatan.com/news/tamilnadu/family-members-kept-body-for-three-days-hoping-that-she-will-come-back-in-prayers

[7] பாலிமர் செய்தி, இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்…! மதுரையில் சம்பவம், நவம்பர்.11, 2022 06:28:51 AM; https://www.polimernews.com/dnews/191621

[8] https://www.polimernews.com/dnews/191621

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!, By Rajkumar R, Published: November 11 2022, 12:07 [IST].

[10] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/the-husband-prayed-for-3-days-that-the-dead-woman-would-come-back-to-life-484738.html

[11] வேதபிரகாஷ், இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?, ஜனவரி 1, 2021.

[12] https://christianityindia.wordpress.com/2021/01/01/would-the-dead-raise-again-christians-keeping-dead-bodies-tamilnadu-case/

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (1)

திசெம்பர் 31, 2011

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (1)


பி.பி.ஜாப் மற்றும் மைக்கேல் ஜாப் அனாதை இல்லம்: கிருத்துவ அனாதை இல்லங்கள் குழந்தை, சிறுவர்-சிறுமியர்களை கடத்துதல், வாங்கல்-விற்றல், சட்டத்திற்குப் புறம்பாக தத்து எடுத்தல், மதம் மாற்றுதல், செக்ஸ்-டூரிஸத்திற்கு உபயோகித்தல், அயல்நாட்டு கம்பெனிகளின் இயக்குனர்கள், மற்றவர்களுக்கு விபச்சாரத்திற்கு அனுப்பி வைத்தல் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுதல் முதலியன வாடிக்கையான விஷயங்களாக மாறியுள்ளது, அதைப் பற்றிய விவரங்கள் இப்பொழுது ஓரளவிற்கு வெளிவந்து விட்டன. இந்நிலையில் தான் நேபாளத்திலிருந்து, ஒரு சமூக நிறுவனம், உரிய தகவல்களைக் கொடுத்ததும், இந்தியாவின் “குழந்தைகள் பாதுகாப்பு” இயக்கம், தமிழ்நாட்டு சமூகத்துறைக்கு அறிவிக்க, அத்துறை அதிகாரிகள், சூலூரில் உள்ள மைக்கேல் ஜாப் அனாதை இல்லத்தை சோதனையிட்டு, சிறுமிகளை மீட்டுள்ளனர்.

கிருத்துவ மிஷனரிகளின் உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம்: பி.பி.ஜாப் அனாதை இல்லத்தைப் பற்றி வந்துள்ள விஷயங்களை சில வெளிநாட்டு நாளிதழ்கள், பத்திரிக்கைகள் வேறுவிதமாக திரித்து செய்திகளை வெளியிட்டுள்ளது.

A British NGO, a Christian lady and some spurious social activists were behind the “rescue” of the girls who were being fed, clothed and educated so that they could stand on their own legs. Words like “trafficking” were bandied about to drive Job to the wall. The “rescuers” have taken away 23 girls from the orphanage, who could have become engineers, doctors, teachers and nurses if they had remained at Coimbatore. What will happen to these children now? That is what bothers me.

அதுமட்டுமல்லாது, அந்தந்த செய்திதாள்களின் செய்திகளின் கீழ் சம்பந்தப் பட்ட கிருத்துவ மிஷினரிகள் அதற்கு ஆதரவாக எழுதியும் வருகிறார்கள்[1]. வழக்கம் போல, இந்தியா, நேபாளம் போன்ற கீழ்திசை நாடுகள் வறுமையில், ஏழ்மையில் உழல்கின்றன, கர்த்தரின் ஆணைப்பை, அவர்கள் தாம் அந்நாட்டு மக்களை உய்விக்கிறார்கள் என்பது போல பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளனர்[2].

பி.பி.ஜாபின் சொந்த கதை, சோகக் கதை: பி.பி.ஜாபின் சொந்த கதை, சோகக் கதையாகத்தான் உள்ளது. பாவம்! ஆனால், அதையும் இந்தியர்களின் மீது பழி போட்டு, காசு சேகரிக்கும் கீழ்தரமான யுக்தியைக் கண்டு தான் இந்தியர்களுக்கு வியப்பாக உள்ளது. இவரது மூன்று மகன்களும், எதேதோ காரணங்களுக்கு, பல இடங்களில், பல நாடுகளில், சாலை விபத்துகளில் அடிபட்டு இறந்துள்ளனர். ஆனல், அவர்கள் ஏதோ இந்தியாவில் கிருத்துவ ஊழியம் செய்து, அதனால், தண்டிக்கப் பட்டு, உயிர் தியாகம் செய்தது போல சித்தரிக்கப் படுகிறார்கள்[3]. இது அப்பட்டமான, அசிங்கமான, கேவலமான பொய். எந்த உண்மையான தந்தைக்கும், அப்படி பட்ட மோசமான எண்ணம் வராது. ஆனால், திருவாளர் பி.பி.ஜாப் அதை செய்து வருகிறர். மற்ற கிருத்துவர்களும் துணை போகிறார்கள்.

The Michael Job Center was started in 2001 by Dr. PP Job, an internationally known Evangelist, Preacher and Missionary to the persecuted church. The home was built in memory of Dr. Job’s martyred son, Michael.In 1999 an attempt was made on Dr. Job’s life by radical Hindus in India, who did not like his Christian work and influence. In June of 1999, following the failed attempt on Job’s life, radical Hindus killed his 21 year old son, Michael by running him down with a car where he studied at a medical school.The following year, a plot of land was donated in Coimbatore in southern India for a possible future orphanage. With no idea of God’s planning, Dr. Job proceeded to accept the small, seemingly worthless plot which didn’t even have fresh water (salt water only), and no access to electricity.

A small home was erected and 30 children of persecuted and martyred Christians were taken in. Shortly after, God miraculously provided fresh water, full electricity and enough concrete to build a large chapel, and a school building! Adjoining plots of land were secured, and a 5 acre soccer stadium was added.

Now the Center stands as a testimony of God’s incredible love and provision with over 50 acres of land, a secondary school, an auditorium/dining hall, a chapel, a B.ed college, a Science & Arts College, and a hostel for the girls that as of June 27th, 2008, now has an addition built on, giving the Michael Job Centre 90 more rooms for the girls.

The Michael Job Centre is an all-girl orphanage located in Coimbatore, in the state of Tamil Nadu, in India. Currently, it is home to 351 girls from all different parts of Asia.

There is GREAT news! Sponsoring a child costs just $25 a month!

$100 a month covers all four aspects of a childs needs for one month.

$75 a month covers three aspects

$50 a month covers two aspects

However, sponsoring a child for just $25 a month makes such a difference.

You can also sponsor multiple girls!

You can write them letters, and they will write you back.

It brings them SO much joy when they recieve letters from their sponsors!

The Jordan Foundation was founded in 2001 by Steve and Ginny Cleary, it is a non-profit organization that allows you to sponsor a child at the Michael Job Centre or to make a donation to the centre of any amount.

Whats great about The Jordan Foundation is…100% of your sponsorship money/donation goes towards the Michael Job Centre, none of it is kept by the foundation since all of the costs of running the foundation are paid for by the Cleary family.

Also, all donations or sponsorship money given is tax-deductable!!!!!!
So please, I encourage you all on behalf of the 351 orphaned girls at The Michael Job Centre, please, sponsor a child, or if you cannot do that, make a donation (or both =D) Make sure that you write your child letters, its REALLY important to them!

For more information about the Michael Job Centre and what you can do to get involved, Please visithttp://www.jordanfoundation.com/  and http://www.michaeljobcenter.com/

உதாரணத்திற்கு, அந்த அனாதை இல்லத்தைப் பாராட்டியும், பணம் கேட்டும் பிரச்சாரம் செய்யும் இணைத்தளத்தில் உள்ளவற்றை இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் காணலாம்[4].ஒரு பக்கம் லட்சக்கணக்கில் / கோடிக்கணக்கில் மிஷனரிகள் அந்நிய நாடுகளிடமிருந்து வாங்குகின்றன. பிறகு மறுபடியும், இப்படி விளம்பரங்கள் மூலம், ஒரு குழந்தைக்கு / சிறுமிக்கு இவ்வளவு என்று ரூ.1,250/-, 2,500/-, 5,000/- மற்றும் 10,000/- என்று கணக்கு போட்டு வாங்கிக் கொள்கிறார்கள்[5].உங்கள் குழந்தைகளுக்கு படிப்பு, உத்தியோகம், முதலியவை வாங்கிக் கொடுக்கிறோம். அதுவரை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம், உங்கள் குழந்தைகளைப் பார்க்கலாம், கடிதங்கள் எழுதலாம் என்றெல்லாம் ஆசைக் காட்டித் தான், இப்படி மோசடி செய்கிறார்கள். ஆனால், பத்து-பதினைந்து ஆண்டுகள் ஆகியும், பொற்றோர்களை குழந்தைகளுக்கும், குழந்தைகளை பெற்றோர்களுக்கும் காட்டாமல் அலைக்கழிக்கப்பட்டார்கள் / படுகிறார்கள்.

கிருத்துவர்கள் எந்த அளவிற்கு தங்களது அயோக்கிய தனத்தை, குற்றங்களை, குரூரங்களை வெள்ளையடித்து மறைக்க பார்ப்பார்கள் என்று, மறுபடியும் தம்மை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்கள். எனது நண்பர்[6] தனது இடுகையில் அதைப் பற்றி பதிவு செய்த போது[7], உடல்நலம் சரியாக இல்லாத காரணத்தால், உடனடியாக பதில் கொடுக்கவோ, எனது பதிவை செய்யவோ முடியாமல் போய்விட்டது. ஆனால், அந்நிய நாளிதழ்களில் இந்த அநியாயத்தை மறைக்கும் விதத்தில் செய்திகள் வெளிவந்ததைக் கண்டதும், அதை எடித்துக் காட்டவே, இந்த பதிவை இடுகிறேன்.

இந்தியர்களின் / இந்துக்களின் மனோபாவம்: இப்பொழுது கூட இவ்வளவு உண்மைகள் வெளிவந்தாலும், தங்களைப் புனிதர்கள் போல சித்தரித்துக் காட்டிக் கொள்கிறார்கள்[8]. இந்தியர்களுக்கு, பொதுவாக மற்றவர்கள் செய்த குற்றங்களை மறந்து விடுவார்கள், இல்லை குரூரங்கள் செய்தவர்கள் ராட்சதர்கள் / அரக்கர்கள் என்று சொல்லி புராண கதைகளாக்கி விடுவார்கள். இதனால், அமைதியாக இருந்து, ஏதோ கடவுள் மறுபடியும் அவதாரம் எடுத்து தங்களைக் காப்பாற்றுவர் என்று நினைத்துக் கொண்டு, பக்தியோடு, தங்களது வேலைகளை செய்து கொண்டிருப்பர். இல்லை, இதெல்லாம் சென்ற ஜென்பத்தின் விலை / பாவம் என்றும் நினைத்துக் கொண்டு அமைதியாக இருப்பர். அத்தகைய குணத்தை, மனபாவத்தை, பொறுமையை, கிருத்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் தவறாக புரிந்து கொண்டு, அதையே இந்துக்களின் மீது பிரச்சார யுக்திகளில் உபயோகப் படுத்துகிறார்கள். தங்களது 700 / 300 ஆண்டுகளில் செய்த அநியாயம், அட்டூழியம், கொலைகள், கொள்ளைகள், கோவில்களை இடித்தது, பெண்களை கற்பழித்தது, அடிமையாக்கியது என்ற அனைத்தயும் மறைக்கப் பார்க்கிறார்கள்.

வேதபிரகாஷ்

30-12-2011


[1] A. J. Philip, Theology of Prosperity: Heaven to Hell, INDIAN CURRENTS • 07 – 13 November 2011, http://www.indiancurrents.org/admin/upload/8934Page%2022,23,24,25.pdf

[3] The orphanage is named after Dr. Job’s son Michael who was allegedly murdered as retaliation for Job’s evangelistic activities.

http://in.christiantoday.com/articles/charity-accused-of-admitting-trafficked-children/6787.htm

[5] இப்பிரச்சினைக்குப் பிறகு இத்தளங்கள் வேலை செய்யாமல் இருப்பதும் விந்தையாக இருக்கிறது: http://www.jordanfoundation.com/

http://www.michaeljobcenter.com/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/