விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள்! (1)

விழிஞ்ஞம் துறைமுகம், கேரள கத்தோலிக்க சர்ச், மற்றும் தொடரும் வன்முறைகள்! (1)

15-08-2022 முதல் 23-08-2022 வரை: 15-08-2022 அன்று மீனவர்கள் தங்களது விழிஞ்ஞம் துறைமுகம்-எதிர்ப்புப் போராட்டத்தைத் துவங்கியதாகத் தெரிகிறது. கேரள கத்தோலிக்க சர்ச், இதற்கு கொடுக்கும் அதரவு பிரமிப்பதாக உள்ளது. ஆகஸ்ட் 23 அன்று, கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அதானி குழுமத்தின் வரவிருக்கும் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக மீனவர்கள் முள்ளூர் கிராமத்தில் உள்ள துறைமுக நுழைவாயிலில் இரவு பகலாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் எட்டாவது நாளாகப் போராட்டம் நடத்தினர். . மக்கள் வாயில்களில் இருந்த தடுப்புகளைத் தாண்டி, அணிவகுத்துச் சென்று கௌதம் அதானியின் உருவ பொம்மையை எரித்தனர்; இதற்கிடையில், மற்ற மீனவர்கள் தங்கள் சிறிய மீன்பிடி படகுகளில் தங்கள் எதிர்ப்பை கடலுக்கு எடுத்துச் சென்றனர்.

சுதந்திர தினத்தன்று போராட்டத்தை ஆரம்பித்த கத்தோலிக்க சர்ச், வன்முறையில் ஈடுபடுவது ஏன்?: கேரள கத்தோலிக்க சர்ச், விழிஞ்ஞம் துறைமுகம் விசயத்தில், இந்த அளவுக்குத் தீவிரமாக ஏன் செயல்பட்டு, மீனவர்களைத் தூண்டி விட்டி, வன்முறையிலும் இறங்கி போராடி வருகின்றது என்பது திகைப்பாக இருக்கிறது. முன்பு, “விடுதலை இறையியல்,” என்ற சித்தாந்தத்தை பின்பற்றுகிறேன் என ஆரம்பித்து, கொலை, கொள்ளை என்று மிகுந்த வன்முறை, குற்றங்கள் என்றாகி, அதில் கத்தோலிக்க பிஷப்புகள், பாஸ்டர்கள் கைதாகி, சிறைக்குச் சென்ற நிலையில், வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டது. ஆனால், இப்பொழுது நடக்கும் வன்முறைகளைக் கவனிக்கும் பொழுது, ஒரு வேளை, மறுபடியும் அந்த “விடுதலை இறையியல்,” சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்த ஆரம்பித்து விட்டனரா அல்லது சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்னொரு “அத்தகைய சித்தாந்தத்தை” உருவாக்கி செயல்படுத்துகின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது. சௌரி-சௌரா வன்முறைக்குப் பிறகு, ஒரு போலீஸ் ஷ்டேசன் தாக்கப் பட்ட பிறகு, மஹாத்மா காந்தியே, தனது “ஒத்துழையாமை” இயக்கத்தை நிறுத்தி வைத்தார். ஏனெனில், அது அஹிம்சையை மீறி, வன்முறையில் முடிந்தது. ஆனால், இங்கோ சுதந்திர தினத்தன்று போராட்டத்தை ஆரம்பித்தாலும், ஆர்ச்-பிஷப் முதல் மற்ற பிஷப்புகள் அகம்பாவத்துடன், ஆணவத்துடன் மற்றும் உறுதியாக  போராட்டத்தைத் தொடருவோம் என்று தான் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகள், பெண்கள், கன்னியாஸ்திரிக்களை முன்னிலை வைத்து, நடத்தப் படும் போராட்டம்: ஆரம்பம் முதல் உன்னிப்பாக கவனித்தாலோ, செய்திகளை படித்து வந்தாலோ, சர்ச்சின் பின்னணியை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம். கேரளவாவில், பல சர்ச்சுகள் [கத்தோலிக்கர் அல்லாத] இருந்தாலும், கத்தோலிக்கர் தமது ஆதிக்கத்தை செல்லுத்த விரும்புகின்றனர். இதற்கு, அவ்வப்பொழுது, ஏதாவது விவகாரம் கிடைத்தால், அதனை அரசியல் ஆக்கி, லாபம் பெற முயல்கின்றனர். வெற்றி பெறுகின்றனர், ஒதுங்கி விடுகின்றனர். இப்பொழுது பிஷப்புகள் முதல், பாஸ்டர்கள் வரை தீவிரமாக இருப்பது இதனை உறுதியாக்குகிறது. சர்ச்சிற்குள் இருந்து, பலி, போதனை என்றில்லாமல், தெருக்களில் இறங்கி, வன்முறைகளில் ஈடுபடுவது அதிர்ச்சியாக இருக்கிறது. அது மட்டுமல்லாது, குழந்தைகள், பெண்கள், கன்னியாஸ்திரிக்களை முன்னிலை வைத்து, ஊர்வலம் செல்வது, போராட்டம் நடத்துவது, மற்ற தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைக்களை ஞாபகப் படுத்துகிறது, ஒத்துப் போகிறது.

அதானி குழுமத்தின் கேரள அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் துறைமுகத்தை எதிர்த்து போராட்டம்:  திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான விழிஞ்ஞத்தில் அரசு-தனியார் பங்களிப்புடன் கேரள அரசு சார்பில் துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. அதானி குழுமம் இதற்கான கட்டுமானப் பணிகளைக் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. துறைமுக பணிகளில் இதுவரை 70 சதவீதம் பணிகள் முடிவடிவடைந்துள்ளன. கேரளாவின் கடற்கரையில் அதானி குழுமத்தால் கட்டப்பட்டுவரும் விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக மீனவர்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறினாலும், இந்த அதானியின் துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் ஆகியவை பாதிக்கப்படும் என போராடும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்[1]. கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவ்வித தடையையும் ஏற்படுத்த மாட்டோம் என கடந்த நவம்பா் 22-ஆம் தேதி கேரள உயா்நீதிமன்றத்தில் போராட்டக்காரா்கள் உறுதியளித்திருந்த நிலையில்[2], சனிக்கிழமை கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை அவா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது, போராட்டக்காரா்களுக்கும் துறைமுக திட்ட ஆதரவாளா்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

கடந்த ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கம்:

  1. கத்தோலிக்க சர்ச் விழிஞம் துறைமுக திட்டத்தை எதிர்த்து நேரிடையாக வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது…
  2. குழந்தைகள், பெண்கள் உட்பட…………………….மீனவர்களை முன்னிருத்தி நடத்துகிறது.
  3. கன்னியாஸ்திரிக்கள், பாஸ்டர்கள் …………………………………………..பிஷப் உடன் போராட்டம் நடத்தப் படுகிறது………………………..
  4. நீதிமன்ற உத்தரவையும் மீறி நடக்கிறது……………….
  5. நீதிமன்ற சட்டம்-ஒழுங்குமுறை ஏன் இல்லை…….என்றெல்லாம் கேட்கிறது…………………….
  6. அஹமது தேவர்கோவில், துறைமுக அமைச்சர், இவ்விசயம் மதரீதியில் எடுத்துச் செல்லக் கூடாது என்று உறுதியாகக் கூறுகிறார்………………………………….
  7. கத்தோலிக்கச் சர்ச் இப்போராட்டம் தொடரும் என்கிறது…………………

26-11-2022 மற்றும் 27-11-2022 அன்று நடந்தேறிய வன்முறை சம்பவங்கள்: திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் பகுதியில் அதானி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அங்குள்ள மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் துறைமுகம் கட்ட ஆதரவு தெரிவித்ததாக தெரிகிறது. அதானி துறைமுகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். விழிஞ்சம் துறைமுகத்தில் நடைபெறும் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்து நடத்த, 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆயர் கடிதம் அனுப்பப்பட்டு, லத்தீன் பேராயர் வலுப்படுத்த வலியுறுத்தி முடிவு செய்துள்ளது. போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த சமர சமிதி முடிவு செய்துள்ளது[3]. லத்தீன் மறைமாவட்ட முன்னாள் பேராயர் எம்.சூசபாக்கியம் எதிர்வரும் திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் பல்வேறு ஆயர்களும், மதத் தலைவர்களும் இணைந்து கொள்வார்கள். அதானி குழுமத்துடன் கைகோர்த்து போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக சமர சமிதியின் பொது அழைப்பாளர் யூஜின் எச் பெரேரா தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

30-11-2022


[1] தினமணி, விழிஞ்ஞம் துறைமுக எதிர்ப்பு போராட்ட வன்முறை:15 பாதிரியார்கள் மீது வழக்கு, By DIN  |  Published On : 28th November 2022 05:49 AM  |   Last Updated : 28th November 2022 05:49 AM.

[2]https://www.dinamani.com/india/2022/nov/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8815-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3957371.html

[3] The Samara Samithi has also decided to hold an indefinite hunger strike from Monday as part of intensifying the protest measures. Former archbishop of Latin archdiocese M Soosapakyam will undergo a hunger strike on Monday 28-11-2022 and various bishops and religious leaders will join in the coming days.
The general convener of Samara Samithi, Eugine H Pereira said that some people have made attempts to sabotage the stir by joining hands with the Adani Group

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.