Posts Tagged ‘மதமாற்றத் தடைச் சட்டம்’

மதமாற்றத் தடைச் சட்டம் யார் ஆட்சியில் கட்டாய ரத்து?: ஜெயலலிதா விளக்கம் இப்பொழுது தேவை என்ன?

திசெம்பர் 29, 2010

மதமாற்றத் தடைச் சட்டம் யார் ஆட்சியில் கட்டாய ரத்து?: ஜெயலலிதா விளக்கம் இப்பொழுது தேவை என்ன?

கிருத்துவர்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டம்: ஜெயலலிதாவின் விளக்கம் எதற்கு? சிறுபான்மையினரின் வால் பிடித்துக் கொண்டு செல்லவும், கால்களில் விழவும், ஏன் அவர்களது காலணியை நக்கவும் (உருவகமாக ஆங்கிலத்தில் “பூட்லிக்கிங்” என்பார்கள்) கருணாநிதியும், ஜெயலலிதாவும், ஏன் நேற்று வந்த விஜய்காந்த் கூட போட்டிப்போடுவது[1] நன்றகவே தெரிகிறது. இருவரும் சமீபத்தில் கிருஸ்துமஸ் விழாவில் பேசிய பேச்சுகளை, ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் கேட்டும், பார்த்தும் இருக்கிறார்கள்[2]. ராமதாஸ் தான் ஏதோ கட்டாய மதமாற்றம் கூடாது[3] என்று கொஞ்சம் தெளிவாக பேசியிருப்பது போல இருக்கிறது. ஏனெனில், இவரும் நாளைக்கு நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று விளக்கம் அளிக்கலாம்! பிறகு இத்தகைய விளக்கங்கள் கொடுப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. மாறாக, இந்துக்கள் இவர்களது கோமாளி நாடகங்களை புரிந்து கொள்வார்கள்.

கருணாநிதி, ஜெயலலிதா மாறி-மாறி கிருத்துவர்களை காக்கா பிடிப்பது, தாஜா செய்வது முதலியன: ஜெயலலிதா கதை சொன்னதும்[4], கருணாநிதி கதை சொன்னார்[5]. இப்பொழுதுதான் கருணாநிதி, அவர்கள் சொன்னால் ஆடத்தயாராக இருக்கிறேன்[6] என்று சொன்னது ஜெயலலிதாவிற்கு என்னமோ ஆகிவிட்டது போல இருக்கிறது போலும். ஆக நானும் ஆடத்தயார் என்கிறாரா அல்லது அதற்கு விளக்கம் அளிக்கிறாரா? 2003ல் கொண்டுவரப்பட்டு, 2004ல் ரத்து செய்யப்பட்டது குறித்து இப்பொழுது விளக்கம் அளிக்கவேண்டிய அவசரம், அவசியம் இல்லை. தங்கத்தாரகை விருது கொடுத்ததும்[7], சட்டம் ரத்தானது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்!

யார் ஆட்சியில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து?: ஜெயலலிதா விளக்கம்[8]

சென்னை, டிச.29: கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அதிமுக ஆட்சியின்போது 2004-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்துசெய்யப்பட்டது என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றி மக்கள் மத்தியில், குறிப்பாக சிறுபான்மை இன மக்களிடையே தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

“தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்” 18.5.2004 அன்று எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்[9].

நடைமுறையில் உள்ள ஒரு சட்டம், ஓர் அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த அவசரச் சட்டத்திற்கு சட்டப்பேரவையின் அனுமதி பெறப்படாவிட்டாலும் கூட, அவசரச் சட்டத்தின் மூலம் ரத்தான சட்டம் தொடர்ந்து ரத்தானதாகவே இருக்கும்; மீண்டும் உயிர் பெறாது.  இது தான் சட்ட நிலைப்பாடு.  சட்டப்பேரவைக்கு கொண்டு வந்தால் தான் ரத்தாகும் என்றில்லை.  இது 1985-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து ஏற்கெனவே நான் முதல்வராக இருந்த போது, 21.5.2005 அன்று தெளிவுபட எனது அறிக்கையின் வாயிலாகவும், 2006 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போதும், அதற்குப் பின்பும் பல சூழ்நிலைகளில் தெரிவித்து இருக்கிறேன்.

2006-ல் கருணாநிதி ஆட்சி அமைத்த பிறகு இந்த அவசரச் சட்டத்தை மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டு வந்து அதனை அவரது அரசு தான் ரத்து செய்தது என்று கூறுவது, ஏற்கனவே ஒருவரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பிரேதத்தை தோண்டி வெளியே எடுத்து, மீண்டும் அதில் வேலை பாய்ச்சி “நான் தான் கொன்றேன்” என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை 2006-லேயே தெளிவுபடுத்தி இருந்தேன்.  ஆகவே, இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்தது எனது தலைமையிலான அதிமுக அரசு தான் என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்[10]

அதையே மீண்டும் கூறுகிறேன் என ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமதர்மம் பேசும் இவர்கள் ஏன் எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்ள முடிவதில்லை அல்லது நடந்து கொள்ளமல் இருக்கிறார்கள்? முஸ்லீம்களின் கஞ்சி / கிருத்துவர்களின் கேக் இனிக்கும், இந்துக்களின் தின்பண்டங்கள் / பிரசாதங்கள் கசக்குமா? கருணாநிதி கஞ்சி குடித்துக் கொண்டே இந்து மதத்தை கேலி பேசி, நக்கல் அடித்து, முஸ்லீம்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். குல்லா போட்டுக் கொண்டு, “இந்துமதத்தில் கூட ஏகாதசி போன்ற உபவாசங்கள் கொண்டாடுவார்கள், ஆனால் வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள்”, என்றெல்லாம் பேசியிருக்கிறார். அவரைப் பின்பற்றி, அதே வேலையை அன்பழகனும், பிள்ளை ஸ்டாலினும் தப்பாமல் செய்து வருகிறார்கள். இப்பொழுது ஜெயலலிதா, விஜய்காந்த் எல்லோரும் கிளம்பிவிட்டார்கள் போலும்.

வேதபிரகாஷ்

© 29-12-2010


[1] வேதபிரகாஷ், கௌரவ டாக்டர் பட்டம், சர்ச், அரசியல், செக்யூலரிஸம்: சீரழியும் மதிப்புகள், மரியாதைகள், நாணயங்கள்!, https://christianityindia.wordpress.com/2010/12/04/doctorates-conferred-on-politicians-by-church/

[2] வேதபிரகாஷ்,குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (1)!, https://christianityindia.wordpress.com/2010/12/25/elections-change-tn-politicians-change-ideology-also/

[3] வேதபிரகாஷ், கட்டாய மதமாற்றம் கூடாது: கிருத்துமஸ் விழாவில் பேசிய ராமதாஸ்!, https://christianityindia.wordpress.com/2010/12/22/there-should-not-be-forced-compelled-conversions-ramdoss/

[4] வேதபிரகாஷ்,குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (2)!, https://christianityindia.wordpress.com/2010/12/25/elections-change-tn-politicians-change-ideology-also/

[5] வேதபிரகாஷ்,குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (3)!, https://christianityindia.wordpress.com/2010/12/25/591/

[6] வேதபிரகாஷ்,குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!, https://christianityindia.wordpress.com/2010/12/25/appeasing-christians-dravidian-way/

[7] வேதபிரகாஷ், சர்ச்சுகளிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் விருதுகள் வாங்குவது! , https://christianityindia.wordpress.com/2010/11/25/doctorates-conferrerd-by-the-churches-on-indians/

[8] தினமணி, யார் ஆட்சியில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து?: ஜெயலலிதா விளக்கம், First Published : 29 Dec 2010 11:03:33 AM IST;  Last Updated : 29 Dec 2010 11:08:25 AM IST, http://dinamani.com/edition/story.aspx?Title=……=164&SEO=&SectionName=Latest

[9] தங்கத் தாரகை விருது வழங்கும் நிகழ்ச்சியில் உலக தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பின் தலைவர் 23-10-2004 அன்று டாக்டர் விஜய் பிரபாகரன் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய உழைப்புக்காகவும், சிறந்த ராஜதந்திரத்திற்காகவும் இந்த விருது அவருக்குவழங்கப்படுகிறது.

[10] தினமணி, கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அதிமுக அரசுதான் ரத்து செய்தது ஜெயலலிதா அறிக்கை , First Published : 29 Dec 2010 12:17:59 PM IST; Last Updated : 29 Dec 2010 12:20:57 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=353446&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=