குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!
தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, கிருத்துவர்கள் இப்படி விழா நடத்துவது, கருணாநிதி-ஜெயலலிதா கோஷ்டிகளுடன்[1] தனித்தனியாக கூட்டம் போடுவது, தொப்பிப் போடுவது, கேக் வெட்டுவது, தின்பது, கோரிக்கைக்களை வைப்பது, “ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம்” என்று கன்டிஷனுடன் சொல்வது முதலியன விளக்கப்பட்டது[2]. ஆனால் ராகுல் காந்தி சாமர்த்தியமாக சண்டை மூட்டி[3] சென்றுவிட்டார்! இன்னொரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். ரௌல் ராபர்ட் என்கின்ற ராகுல் சென்னைக்கு வந்தால், கருணாநிதியைப் பார்ப்பதே கிடையாது. ஒருமுறை நிருபர் கேட்டபோது, வழிந்து கொனண்டே சமாளித்துவிட்டார்!
மத்தியஅரசைஆட்டிவைப்பவன்அல்ல: முதல்வர்கருணாநிதிபேச்சு[4]: கருணாநிதி விடுவாரா, எத்தனை ஆண்டுகள் குல்லா போட்டு கஞ்சி குடித்த
தொப்பி போட்டதும் ஒருமாதிரியாகி விட்டார்! பிறகு சமாளித்துக் கொண்டு இடது கையால் சரிசெய்து கொள்வது மாதிரி போஸ் கொடுத்து எடுத்துவிட்டார். மாட்டிவிட்டது சின்னப்பாவும், எஸ்ரா சற்குணமும் தான்! முன்பு அன்பழனுக்கு குல்லா விசேஷமாக வாங்கிவந்தேன் என்றார், இது எப்படியோ? |
வல்லுனர் ஆயிற்றே, தொப்பிப் போட்டால் குறைந்தா விடுவார்? அந்த குரங்குக் கதை ஞாபகத்தில் வந்து விட்டது போலும், “மத்திய அரசை நான் ஆட்டி வைப்பவனும் அல்ல; ஆடுபவனும் அல்ல”, என்று கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார். மேலும் தமிழுக்கும், வாக்குறுதிகளுக்கும் பஞ்சமா, அள்ளிவீச ஆரம்பித்து விட்டனர்!
நீங்கள்கேட்டதையும்கொடுப்பேன்; நீங்கள்தந்ததையும்ஏற்றேன். நீங்கள்சொல்லும்படிநடப்போம்: இப்படி கருணாநிதி பேச்சைத் தொடர்கிறாறர், “கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில், சென்னையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் வரவேற்றார். முதல்வர் கருணாநிதி, கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி, நலத்திட்ட உதவிகள், புத்தாடைகள் வழங்கி பேசியதாவது:
நீங்கள் சொல்லியபடி ஆடுவோம் என்று நாஜுக்காக சொல்லிவிட்டார்! தொப்பிப் போட்டதும், இப்படியான எண்ணம் – ஆடுவது-ஆட்டுவது-ஆட்டி வைப்பது- வந்துவிட்டது போலும்! |
“இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய போது, அதைப் பெறும் சமுதாயத்தினர் பெருமகிழ்ச்சி அடைவர் என நான் எண்ணியதுண்டு. ஆனால், இடஒதுக்கீடு கொடுத்ததை வேண்டாம் என, கிறிஸ்தவர்கள் சொன்ன காரணத்தைப் புரிந்து, அதை நான் ஏற்றுக்கொண்டேன். நீங்கள் கேட்டதையும் கொடுப்பேன்; நீங்கள் தந்ததையும் ஏற்றேன். நீங்கள் சொல்லும்படி நடப்போம் என்பதற்கு இந்த அரசு சான்றாக உள்ளது.
கிறிஸ்தவசமுதாயத்துடன்நீண்டகாலதொடர்புண்டு: இப்படியொரு ரகசியத்தையும் போட்டு உடைத்தார். “சிறுபான்மை மக்களின் கோரிக்கையை நாங்கள் அலட்சியப்படுத்த மாட்டோம். கிறிஸ்தவ சமுதாயத்துடன் நீண்ட கால தொடர்புண்டு. தி.மு.க.,வை வழி நடத்திச் சென்றவர்களில் பெரும்பகுதியினர்
ஜெயலலிதா சொல்லியாகிவிட்டது, இனி இவர் சொல்லவேண்டாமா? ஆக, இவர் கதைவிட ஆரம்பித்துவிட்டார். . |
கிறிஸ்தவர்கள் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ராஜாஜி பிரீமியராக இருந்தபோது, எதிர்க்கட்சி வரிசையில் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.டி.பன்னீர்செல்வம் இருந்தார். “தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக ராமசாமி நாயக்கரும், சோமசுந்தர பாரதியாரும் போராடுகின்றனர்‘ என ராஜாஜி கூறினார். இதற்கு பன்னீர்செல்வம், “எதிர்ப்பவர்கள் இருவர்; ஆனால், இந்தியை கொண்டு வருபவர் ஒருவர்; எதிர்ப்புக்கு மெஜாரிட்டி அதிகம்‘ என்றார். அவர் என்னோடு நெருக்கமாக இருந்தார். பீட்டர் காலத்தில் மட்டுமல்ல, பன்னீர் காலத்திலும் கிறிஸ்தவர்களுடன் எனக்கு நீண்ட தொடர்பு உண்டு என்பதற்கு இது உதாரணம். அந்த தொடர்பை அலட்சியமாகக் கருத மாட்டேன். இதை நம்பி தான் மூன்று கோரிக்கை வைத்துள்ளீர்கள்.
நீங்கள்என்னைஆட்டிவைக்கிறகாரணத்தால், ஆடத்தயாராகஇருக்கிறேன்: இவ்வளவு கேவலமாக கருணாநிதி, அதுவும் இத்தனை வயதில் பேசியது, படு அசிங்கமாக இருந்தது. “மத்திய அரசை ஆட்டி வைப்பவர்‘ என்று, என்னை
தொப்பிப் போட்டதுமே குரங்கு புத்தி வந்துவிட்டது போலும்!. “நீங்கள் என்னை ஆட்டி வைக்கிற காரணத்தால், ஆடத் தயாராக இருக்கிறேன”, என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்! சொன்னதையும் செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற வசனம் எல்லாம் போய்விட்டது போலும், கோலை எடு, ஆடத்தயார்! |
பேராயர் சின்னப்பா கூறினார். நான் மத்திய அரசை ஆட்டி வைப்பவனும் அல்ல; ஆடுபவனும் அல்ல. நீங்கள் என்னை ஆட்டி வைக்கிற காரணத்தால், ஆடத் தயாராக இருக்கிறேன். தமிழகத்தில் கிறிஸ்தவ பெரியவர்கள் ஆற்றிய தொண்டுகளை தி.மு.க., நன்றியுடன் நினைக்கும். சென்னை கடற்கரையில் கிறிஸ்தவ பெரியவர்களுக்கு சிலை வைக்கப்படடுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த கால்டுவெல், நெல்லை மாவட்டத்தில் தங்கி 50 ஆண்டு தமிழுக்குத் தொண்டாற்றினார். அதை பாராட்ட, அவர் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றுகிறோம். இதற்கான விழா, நெல்லையில் அடுத்த மாதம் நடக்கிறது.
எந்ததியாகமும்செய்யத்தயாராகஇருக்கிறேன்: பிறகு இப்படி தனக்கேயுரித்த
இது வழக்கமான டயலாக்தான்! இது மாதிரி நூற்றுக்கும் மேலாக சொல்லியாகி விட்டது. உயிரைவிடவும் தயார் என்றெல்லாம் வேறு சொல்லியிருக்கிறார்! |
வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்துவிட்டார். “ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள், உரிமைகள், ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது. பார்லிமென்டில் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பை தி.மு.க., ஏற்றுக்கொள்ளும். காங்., துணையுடன் நிறைவேற்றி வைக்கப்படும்[5]. கோரிக்கையை நிறைவேற்ற போராடவும் தயங்க மாட்டேன். இதற்காக எந்த தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறேன். அரசு பொறுப்பில் இருந்தாலும், அதிகாரத்தில் இருந்தாலும், இன்னொரு அரசின் தயவு வேண்டுமென்றால், அறிவை, அணுகுமுறையை பயன்படுத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இரண்டிலும் முடியாமல் கோரிக்கைக்காக போராட்டம் நடத்த வேண்டுமென்றால், அந்த போராட்டத்திற்கு தலைமை வகிக்கவும் தயங்க மாட்டேன்.
போராட்டத்திற்குதலைமைவகிக்க, என்னைகிறிஸ்தவமக்கள்தான்கேட்டுள்ளனர்: ஒருவேளை “லிபரேஷன் தியோலஜிக்கு” மாறிவிட்டாரோ என்னமோ, இப்படியும் பேசிவிட்டார். இனி ஏசு சித்தரிக்கப் பட்டது போல,
நானும் சிலுவையை ஏற்கத் தயார் என்றுதான் சொல்லவில்லை. ஏனெனில் சுற்றியிருந்த பாதிரிகள், இவரை ஏசுவிற்கு ஒப்பிட்டு பேசியதுதான் காரணம். இருப்பினும் அடக்கியே வாசிக்கப்பட்டது! |
ஏ.கே.47ஐத்தான் கைகளில் ஏந்த வேண்டும். அதையும் நாஜுக்காக கூறிவிட்டார், இப்படி, “கிறிஸ்தவ மக்களை போராட்டத்திற்கு கருணாநிதி அழைக்கிறார் என, பீட்டர் தவறாக கருதக்கூடாது. போராட்டத்திற்கு தலைமை வகிக்க, என்னை கிறிஸ்தவ மக்கள் தான் கேட்டுள்ளனர். நியாயத்திற்காக கடைசி வரை குரல் கொடுத்து, பழியை ஏற்று சிலுவையைச் சுமந்தார் ஏசு. அவரது திடகாத்திர உள்ளத்தையும், எதற்கும் பணியாத எதையும் தாங்கும் உள்ளத்தையும் பெற வேண்டும்”, இவ்வாறு கருணாநிதி பேசினார். விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், பேராயர் சின்னப்பா, எஸ்ரா சற்குணம் மற்றும் வின்சென்ட் சின்னதுரை, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ், ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியின் முதல்வர் ஜெசிந்தா குவாட்ரஸ், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமை போதகர் பால் தினகரன்[6] உட்பட பலர் பங்கேற்றனர்.
இப்படி கிருத்துவர்கள் கருணாநிதியை குரங்குபோலவே தொப்பிப் போட்டு, அவரும், “நான் மத்திய அரசை ஆட்டி வைப்பவனும் அல்ல; ஆடுபவனும் அல்ல”, என்று வீராப்பாக பேசிவிட்டு, பிறகு, “நீங்கள் என்னை ஆட்டி வைக்கிற காரணத்தால், ஆடத் தயாராக இருக்கிறேன்“, என்றது தான் ஆட்டத்தின் உச்சம்! ஆக,
குல்லா போய், தொப்பி வந்தது டும், டும், டும்,
கஞ்சி போய், கேக் வந்தது அம், அம், அம்
அல்லா போய் கர்த்தர் வந்தார் டம் டம் டம்
ராஜா போய் ராஜகுமாரன் வந்தான் கும் கும் கும்
அந்த அம்மா போய், “அம்மா” வந்தது ஜம் ஜம் ஜம்
அரிசி போய் வெங்காயம் வந்தது ஜிங் ஜிங் ஜிங்
ஆட்டிவைத்தது போய், ஆட்டவந்தது சம் சம் சம்
ஆட்டியது போய், ஆடவந்தது தம் தம் தம்
வேதபிரகாஷ்
© 25-12-2010
[1] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது…… ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (2)!., https://christianityindia.wordpress.com/2010/12/25/elections-change-tn-politicians-change-ideology-also/
[2] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது…… ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (3)!., https://christianityindia.wordpress.com/2010/12/25/591/
[3] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (1)!, https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebration/
[4] தினமலர், மத்தியஅரசைஆட்டிவைப்பவன்அல்ல: முதல்வர்கருணாநிதிபேச்சு, பதிவு செய்த நாள் : டிசம்பர் 23, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=151836
குறிச்சொற்கள்: ஆடவைத்தது, ஆடியது, ஆடுவது, ஆட்டியது, கஞ்சி, கிருஸ்துமஸ், குல்லா, கேக், கோல், கோல் எடுத்தால், கோல் எடுத்தால் குரங்கு, கோல் எடுத்தால் குரங்கு ஆடும், சின்னப்பா, ஜெயலலிதா, ஜெயா, தொப்பீ, பிஷப், பேதி, வாந்தி
7:17 முப இல் திசெம்பர் 29, 2010 |
[…] […]
4:50 முப இல் திசெம்பர் 31, 2010 |
These people only talk about self-respect and all and they only talk now all this non-sense.
Karunanidhi being an elderly person, reportedly matured politicians, now appears to have become totally senile and talks idiotic.
When he is not able to stand independently but sits and rolls on in a wheelchair, it is ridiculous that he would dance to the tune tune of Xians, if the order so!
He can die like a “Kavar-man”, if at all, he has any hair!
5:20 முப இல் ஏப்ரல் 11, 2011 |
[…] [3] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (1)!,https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebration/ […]
5:20 முப இல் ஏப்ரல் 11, 2011 |
[…] [2] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது…… ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (3)!.,https://christianityindia.wordpress.com/2010/12/25/591/ […]
4:42 பிப இல் திசெம்பர் 28, 2011 |
[…] [1] https://christianityindia.wordpress.com/2010/12/25/appeasing-christians-dravidian-way/ […]
2:19 முப இல் ஜூலை 26, 2013 |
[…] [10] https://christianityindia.wordpress.com/2010/12/25/appeasing-christians-dravidian-way/ […]
2:25 முப இல் ஜூலை 26, 2013 |
[…] [10] https://christianityindia.wordpress.com/2010/12/25/appeasing-christians-dravidian-way/ […]
2:51 முப இல் திசெம்பர் 16, 2013 |
[…] [1] https://christianityindia.wordpress.com/2010/12/25/appeasing-christians-dravidian-way/ […]
2:55 முப இல் திசெம்பர் 16, 2013 |
[…] [1] https://christianityindia.wordpress.com/2010/12/25/appeasing-christians-dravidian-way/ […]