கஞ்சி குடித்த கருணாநிதியும், கேக் சாப்பிட்ட ஜெயலலிதாவும்: கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல அரசு மானியம் – ஜெயலலிதா அறிவிப்பு
சென்ற வருடமே இவ்வாறேல்லாம் நடக்கும் என்று ஊகித்து கீழ் கண்ட இடுகைகள் என்னால் இடப்பட்டன:
1. குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும்[1], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!
2. குல்லா…………..மிரட்டல்களும்[2] (3).
3. குல்லா…………..மிரட்டல்களும்[3] (2).
4. குல்லா…………..மிரட்டல்களும்[4] (1).
அப்பொழுது தான் விஜயகாந்திற்கு, கிருத்துவர்களால் “டாக்டர்” பட்டமும் கொடுக்கப் பட்டது[5]. துணையில்லாத ராமதாஸோ, கட்டாய மதமாற்றாம் கூடாது என்றேல்லாம் பேசினார்[6]. கருணாநிதி கிளறிவிட, யார் ஆட்சியில் மதமாற்றட் தடைச் சட்டம் வந்தது என்ற விவாதம் வேறு[7]. தேர்தல் வந்த நேரத்தில், பேச்சுகளும் மாறின[8]. சன் டிசவியில் வெளிப்படையாக கிருத்துவர்கள் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும் என்றே பேசப்பட்டது[9]. ஆனால், கிருத்துவ மடங்களோ கொலை[10], கொள்ளை, கற்பழிப்பு[11], பாலியல்[12], பலாத்காரங்கள், சிறுவர்-சிறுமியர் செக்ஸ்[13], பலான விவகாரங்கள், நிலமோசடி[14] என்று நாறிக்கொண்டிருந்தன. ஆனால், பிரச்சாரத்தில் கைதேர்ந்த கிருத்துவர்கள், எதற்கும் கவலைப்படவும் இல்லை, வெட்கப்படவும் இல்லை. எல்லாவற்றையும், மூடி மறைக்க பிஷப் மாநாட்டை சென்னையிலேயே நடத்தியும் காட்டினர்[15].
திராவிட அரசின் அறிவிப்பு[16]: ஜெருசலம் புனித பயணம் செல்லும் 500 கிறிஸ்தவர்களுக்கு இந்த ஆண்டு தலா ரூ.20 ஆயிரம் நிதி வீதம் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பு கிறிஸ்துமஸ் தினமான நேற்று அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது[17].அதில் கூறப்பட்டிருப்பதாவது: “இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு அரசு உதவி செய்வதைப் போன்று கிறிஸ்துவ மக்கள் மேற்கொள்ளும் ஜெருசலம் புனித யாத்திரைக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என்று கிறிஸ்துவ சமுதாயத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
அன்று சென்னையில் நடந்த 25
கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் இது குறித்து ஏற்கனவே தான் அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்து கிறிஸ்துவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலம் சென்று வருவதற்கு அரசு நிதியுதவி அளிக்கும்
The Government Order relating to the Jerusalem pilgrimage scheme has been announced based on the recommendations of the Minorities Welfare commission. Under this, a subsidy of 20,000 rupees each to 500 pilgrims would be provided by the state government to take up the holy trip for the year 2011-2012 The Minorities Commission has been entrusted with the task of placing advertisement calling for applications for the pilgrimage, screening the applications and selecting those who qualify for the pilgrimage subsidy. |
“20.12.2011 என்றும், இத்திட்டம் அனைத்து கிறிஸ்துவ பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும் என்றும், முதற்கட்டமாக 500 கிறிஸ்துவர்கள் ஜெருசலம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்[19].
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பிரிவினரும் இஸ்ரேலில் உள்ள புனித ஸ்தலமான ஜெருசலம் சென்று வர அரசு நிதியுதவி அளிக்கும் புதிய திட்டம் ஒன்றினைச் செயல்படுத்த அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது. முதற்கட்டமாக 20112012 ஆம் ஆண்டில் 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வருவதற்கு பயணிகளைத் தேர்ந்தெடுத்து ஒரு பயணிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 500 பயணிகளுக்கு நிதியுதவி வழங்க மொத்தம் ரூ.1 கோடி அரசு ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது.
ஜெருசலம் புனிதப் பயணத்திற்கு நிதி உதவி வழங்கும் இத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து பயணிகளைத் தேர்வு செய்யும் பணியினை மேற்கொள்ளுமாறு சிறுபான்மையினர் நல ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்”, இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கீழ்பாக்கத்தில் நடத்திய கிருஸ்துமஸ்: ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள அனைத்துப் பிரிவு கிறிஸ்தவர்களுக்கும் மானியம் வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக 500 பேருக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்[20]. ஜெயலலிதா நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் அவருக்கு கேக் ஊட்டிவிட்ட சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயரும் தமிழக ஆயர் பேரவைத் தலைவருமான ஏ.எம். சின்னப்படுருகிவிட்டாராம். அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சென்னை கீழ்ப்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விழாவை நடத்தினார். இதில் அவர் பேசியது:
இந்த அறிவிப்பால், வாடிகனே மயங்கி விட்டது. வாடிகன் ரேடியோ, பிரத்யேகமாக இதைப் பற்றி அறிவித்தது. மற்ற கத்திஓலிக்கப் பத்திரிக்கைகள், நாளிதழ்கள் பற்றி கேட்கவே வேண்டாம். சோனியா மெய்னோ மட்டும் இல்லையென்றால், அடுத்த பிரதமர் ஜெயலிதா என்றே அறிவித்து விடுவர் போன்ற தோற்றத்தை உண்டாக்கின, கிருத்துவ ஊடககங்கள்.. |
சின்னப்பா ஊட்டி அம்மா ரசித்து சாப்பிட்ட கேக்: “ பேராயர் சின்னப்பா கரங்களால் கேக் ஊட்டப்பெறுவது என்பது ஒரு முறை நடந்தாலே மிகப் பெரிய பாக்கியம். அவர், முதல் துண்டை எடுத்து எனக்கு ஊட்டி
விட்ட பிறகு, 2வது துண்டை என் கரங்களில் எடுத்தேன். அவருக்கு ஊட்டிவிடலாம் என்று தான் எண்ணினேன். ஆனால், அதற்குள் புகைப்படம் பிடிப்பவர்கள் முதலில் பேராயர் உங்களுக்கு கேக் ஊட்டிய காட்சியை சரியாக படம் பிடிக்க முடியவில்லை. இன்னொரு முறை ஊட்டச் சொல்லுங்கள் என்றார்கள். ஆகவே, புகைப்படம் பிடிப்பவர்களின் தயவால் இந்த பெரும் பாக்கியம் எனக்கு 2வது முறையாக கிட்டியது[21].
பகைவனுக்கும் அருளுங்கள், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு போன்ற இயேசுபிரானின் அருள் வசனங்கள் அழியாப் புகழ் பெற்றவை. இயேசு பெருமானின் காந்த விழிகளும், அவரது அன்பு ததும்பும் மொழிகளும் உலகப் புகழ் பெற்றவை. தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக்கூட மன்னிக்கும்படி மன்றாடியவர் அவர். மன்னிப்பதன் மூலம் மன்னிக்கிறவர் மட்டுமல்லாமல், மன்னிக்கப்படுகிறவரும் உயருகிறார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் மன்னிக்கும் கொள்கையில் உறுதியாக இருந்தார்.
நீதிமன்றங்கள் தண்டனை விதித்தாலும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை குறைத்து விடுவார்.
ஒருமுறை அவர் போர்க்களத்தை பார்வையிட்டபோது, ஒரு ராணுவ வீரர் தன் கழுத்தில் இருந்த செயின் பேழையை முத்தமிட்டபடி இறந்து கிடந்ததைப் பார்த்தார். அதில் அவரது மனைவி அல்லது காதலி படம் இருக்கலாம் என்று பார்த்தவருக்கு அதிர்ச்சி. அந்த செயினில் லிங்கனின் படம் இருந்தது. விசாரித்ததில் அந்த ராணுவ வீரர் மரண தண்டனை பெற்ற குற்றாவளி. லிங்கனால் மன்னிக்கப்பட்டு சிறைத் தண்டனை பெற்றிருந்தார். போர் வந்ததும் சிறைக் கைதிகளுக்கு ராணுவப் பயிற்சி தரப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டனர். போரில் அந்த வீரர் நாட்டுக்காக தன் உயிரைத் துறந்து தியாகி ஆகிவிட்டான் என்பது தெரிந்தது. அனைவரும் பழியுணர்ச்சி, பகை, சுயநலம் இன்றி அன்பு, அமைதி, தியாக உணர்வுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்தச் சம்பவத்தை குறிப்பிடுகிறேன். சுய நலத்துடன் வாழும் வாழ்க்கை ஆரம்பத்தில் இனிக்கும். பின்பு கசக்கும். சுய நலமின்றி பிறருக்காக வாழும் வாழ்க்கை, விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை ஆரம்பத்தில் கசப்பாக இருந்தாலும் முடிவில் இனிப்பாக இருக்கும். இயேசுநாதரின் போதனைகளான தியாகம், மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
வாக்கு-தத்தம் கொடுத்த அம்மா: தமிழகத்தில் அமைதி நிலவவும், தொழில், விவசாய உற்பத்தியில் புரட்சி ஏற்படுத்தவும், மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்கவும் எனது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சில வாக்குறுதிகளை அளித்திருந்தேன். அதன்படி ஜெருசலேம் நகருக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ள அனைத்துப் பிரிவு கிறிஸ்தவர்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படும். முதல் கட்டமாக 500 கிறிஸ்தவர்கள் அங்கு சென்றுவர ஏற்பாடுகள் செய்யப்படும். உங்களின் இதர கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.
கணக்குப் போட்டு கொடுத்த மானியம்: இஸ்ரேல் ஏர்லைன் நிறுவனத்தினரால் மும்பையிலிருந்து அம்மான் வழியாக இஸ்ரேலுக்கு சென்று வர இரு வழி விமானக் கட்டணங்களாக ரூ.32,640/ அல்லது ரூ.35,524/ வசூலிக்கப்படுகின்றன என்றும், சென்னையிலிருந்து மும்பை சென்று வர தனியார் விமான நிறுவனங்கள் ரூ.12,000/ வரை கட்டணம் வசூலிக்கின்றன என்றும், எனவே சென்னையிலிருந்து ஜெருசலேம் சென்று வர இரு வழி பயணக் கட்டணம் மட்டும் ரூ.45,000/ முதல் ரூ.47,000/ வரை வசூலிக்கிறார்கள் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் தெரிவித்துள்ளார். மேற்சொன்ன குறிப்புகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் செல்வதற்காக பயணி ஒருவருக்கு விமானக் கட்டண உதவித்தொகையாக ஹஜ் புனிதப் பயணத்திற்காக இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அதனுடைய நிதித் தொகுப்பிலிருந்து வழங்குவது போன்று, தமிழக அரசு தனது நிதியிலிருந்து ரூ.20,000/ முதல் ரூ.24,000/ வரை வழங்கலாம் என்றும், இந்த பயணக் கட்டண உதவித்தொகை ஜெருசலேம் புனிதப் பயணத்தை ஏர் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஏர் விமான சேவைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமே பொருந்துமாறு செய்யலாம் என்றும், இதற்கென முதற்கட்டமாக 1000 நபர்களுக்கு ரூ.2 கோடி மாநில அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யலாம் என்றும், சிறுபான்மையினர் நல ஆணையரகத்தின் மூலம் இது குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து குலுக்கல் முறையில் பயணிகளைத் தேர்வு செய்யலாம் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்[22].
ஜெயலலிதாவின்சுவிஷேசபிரசங்கம்: எல்லோருக்கும் நன்மை: ஒவ்வொரு மனிதனும் என் நண்பன், சகோதரன் என்ற பாச உணர்வோடு பயணிப்போம். இயேசுபிரான் தன் பிறப்பிலும், வாழ்விலும் நமக்குக் கூறும் நற்செய்தியின்படி வாழ்ந்து உலகை மகிழ்ச்சி பூங்காவாக மாற்றுவோம். யார் எனக்கு எதைச் செய்தாலும், நான் எல்லோருக்கும் நன்மையே செய்வேன் என்ற அர்ப்பணிப்பு உள்ளத்தோடு வாழ்வோம் என்பதுதான் எனது கிறிஸ்துமஸ் செய்தி”, என்றார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை மயிலை உயர் மறை மாவட்ட போராயர் ஏ.எம். சின்னப்பா, தென்னிந்திய திருச்சபை பேராயர் வே. தேவசகாயம், தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபை பேராயர் எச்.எம். மார்ட்டின், இந்திய சுயாதீன திருச்சபை பேராயர் மா. பிரகாஷ், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பி.எச். பாண்டியன், வில்லிவாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, எம்.எல்.ஏ.க்கள் ஜி. செந்தமிழன், வி.பி. கலைராஜன், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்[23].
முஸ்லீம்களுக்கு அடுத்து கிருத்துவர்கள்: முஸ்லீம்களுக்கு எப்படி அரசு சார்பில், அரசு செலவில் ரம்ஜான் விருந்து / ஈத் முதலிய முகமதிய பண்டிகைகளுக்கு விருந்து / பார்டி கொடுக்கப்படுகிறதோ, அதே போல இப்பொழுது போட்டி போட்டுக் கொண்டு, கிறுஸ்துமஸ் விழா நடத்த ஆரம்பித்தாகி விட்டது. பொது மக்களின் வரிப்பணம் அரசியல் காரணங்களுக்காக, அதே நேரத்தில் தேர்தல், ஓட்டு வங்கி போன்றதை மனதில் வைத்துக் கொண்டு செய்யப்படும் இக்காரியங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை. இதனால், கிருத்துவ-முஸ்லீம் மக்களுக்கும், மற்ற இந்துக்களுக்கும் விரிசல்கள் ஏற்படும். ஏனெனில், பெருபான்மையான வரிப்பணம் இந்துக்களிடமிருந்து தான், அரசு கஜானாவிற்குச் செல்கிறது. ஆனால், “பற்றாக்குறை பட்ஜெட்” என்று கோடிக்கணக்கில் அந்த “பற்றாக்குௐஉறையை” வளர்த்துக் கொண்டே பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றது ஆள்கின்ற காங்கிரஸ் கட்சி. செக்யூலரத்தைப் பேசிக்கொண்டே இத்தகைய மதவாதத்தை அதிகமாகவே வளர்த்துக் கொண்டு வருகிறது. இது முஸ்லீம்களுக்கோ, கிருத்துவர்களுக்கோ, இந்துக்களுக்கோ எந்தவித பலனையும் கொடுக்கப் போவதில்லை, மாறாக, நாளுக்கு நாள் அம்மக்களிடம் பிரிவினை, வெறுப்பு, முதலியவற்றை வளர்த்டு வருவதுதான் அதிகமாகிக் கொண்டு வருகிறது.
பிஷப் கேக் வெட்டி ஜெயலலிதாவின் வாயிலேயே ஊட்டுகிறார். அவ்வளவுதான், சொல்ல வேண்டுமா? கஞ்சி குடித்த கருணாநிதியையே மிஞ்சி விட்டார்: தமிழர் சயம் என்று வேடமிட்டு நடத்திய மாநாட்டில், “மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்” என்று பாடியாடிய சின்னாப்பா, இன்று கேக் வெட்டி ஜெயலலிதாவின் வாயிலேயே ஊட்டுகிறார். காதலா, காமமா அல்லது வேறு ரசமா, மதமாதமா, செக்யூலரிஸமா என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியும், ஆண்டவனுக்குத் தெரியும், ஆனால், பகுத்தறிவு பகலவன் பால் குடிட்த்தவர்களுக்கு தெரியாது போலும். கேக்கை வாயில் வைத்துவிட்டார், அவ்வளவுதான், சொல்ல வேண்டுமா? செக்யூலரிஸ போதை உச்சிக்கு ஏறிவிட்டது போலும். கஞ்சி குடித்த கருணாநிதியையே மிஞ்சி விட்டார்:
ஜெருசலேம் போக மானியம்: ஜெருசலேம் போக மானியம் என்று அறிவித்து விட்டார். பகுத்தறிவுகள் அமுங்கி விட்டன, பொத்திக் கொண்டு விட்டன. இப்படியாக அரசியல்வாதிகள் “செல்யூலரிஸம்” போர்வையில், இந்துக்களுக்கு குல்லா போட ஆரம்பித்து விட்டனர். 60 ஆண்டுகள் என்ன, 600 ஆண்டுகள் கடந்தாலும், இவர்கள் புத்தி மாறாது. 700 ஆண்டுகள் முஸ்லீம்கள் மற்றும் 300 ஆண்டுகள் கிருத்துவர்கள் (போர்ச்சுகீசிய, டச்சு, பிரென்சு, ஆங்கில மிஷனரிகள் / கம்பெனிகள்) ஆண்ட காலங்களில் இந்துக்கள் அனுபவுஇப்பதைவிட, மிக கடுமையான விளைவுகளையே அவர்கள் கண்டு வருகிறார்கள். இப்பொழுது, இந்துக்களே “இந்துக்கள்” போர்வையில், இந்துக்களுக்கு எதிராக வேறு செயல்பட்டு வருகிறார்கள்.
[3] https://christianityindia.wordpress.com/2010/12/25/elections-change-tn-politicians-change-ideology-also/
[4] https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebration/
[5] https://christianityindia.wordpress.com/2010/12/04/doctorates-conferred-on-politicians-by-church/
[6] https://christianityindia.wordpress.com/2010/12/22/there-should-not-be-forced-compelled-conversions-ramdoss/
[7] https://christianityindia.wordpress.com/2010/12/29/revocation-of-anti-conversion-act-appeasing-christians/
[8] https://christianityindia.wordpress.com/2011/03/07/permission-to-build-churces-in-tamilnadu-elections-promises/
[9] https://christianityindia.wordpress.com/2011/04/11/all-christians-should-vote-for-dmk/
https://christianityindia.wordpress.com/2011/04/11/746-vote-for-dmk-bishops-demand-2011-secularism/
[10] https://christianityindia.wordpress.com/2011/02/17/another-catholic-priest-found-murdered-in-the-church-campus/
https://christianityindia.wordpress.com/2011/02/18/christian-priest-found-dead-in-nude-condition/
[13] https://christianityindia.wordpress.com/2011/03/21/christianity-pedophile-orphanages-pornography/
[14] https://christianityindia.wordpress.com/2011/01/04/christian-fraud-forgery-activities-continue-in-thomas-case/
https://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/
[15] https://christianityindia.wordpress.com/2011/01/11/catholic-bishop-conference-of-india-2011-chennai/
[16] Monday, 26 December, 2011 02:30 PM
குறிச்சொற்கள்: ஊட்டு, கஞ்சி, கேக், சின்னப்பா, ஜெயலலிதா, ஜெயா, ஜெருசலேம், பிரச்சாரம்ன், மானியம், லலிதா, லீலவசம், வாடிகன்
11:57 முப இல் மார்ச் 10, 2012 |
[…] https://christianityindia.wordpress.com/2011/12/28/dravidian-secularism-jeya-karu-competition/ […]
2:19 முப இல் ஜூலை 26, 2013 |
[…] [9] https://christianityindia.wordpress.com/2011/12/28/dravidian-secularism-jeya-karu-competition/ […]
2:25 முப இல் ஜூலை 26, 2013 |
[…] [9] https://christianityindia.wordpress.com/2011/12/28/dravidian-secularism-jeya-karu-competition/ […]
2:51 முப இல் திசெம்பர் 16, 2013 |
[…] [5] https://christianityindia.wordpress.com/2011/12/28/dravidian-secularism-jeya-karu-competition/ […]
2:55 முப இல் திசெம்பர் 16, 2013 |
[…] [5] https://christianityindia.wordpress.com/2011/12/28/dravidian-secularism-jeya-karu-competition/ […]